பொருளடக்கத்திற்கு தாவுக

ஸ்ரீமத் பாகவதம்

மூன்றாவது ஸ்கந்தம்- கபிலரின் உபதேசம்

அத்யாயம்25

ஆத்ம ஞானம் என்பதை உலகுக்கு தெரிவிக்க தானே தன் மாயையால், கபிலராக பிறந்தார் என்பது தெரியும். அவருடைய உபதேசம் என்ன என்பதைச் சொல்லுங்கள், சூதரே என்று சௌனகர் வினவினார்.  சூதரும் தொடர்ந்தார்.

தந்தை வனம் சென்றதும், பிந்து சரஸ் என்ற அந்த இடத்தில் தாயுடன் கபிலர் இருந்தார்.  தத்வ மார்கத்தை பிரசாரம் செய்வதாகச் சொன்ன மகனிடம் தேவஹூதி கவலையுடன் சொன்னாள்.  ப்ரும்மாவின்,  பகவானே உன் மகனாக பிறப்பான் என்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.  நீ சாக்ஷாத் பகவானே என்று அறிவேன்.  தமோ குணத்தால்  அறிவு என்ற கண் பார்வை மறைக்கப்பட்ட மனிதர்களுக்கு நீ சூரியன் போல ஒளியை அருள்வாய். அதனால் என் மோகத்தையும் தீர்த்து வை. என் வாழ்க்கையில் இதுவரை நான் உலகியலைத் தவிர எதையும் அறியவில்லை. நான், என்னுடையது என்பது மட்டுமே எனது அறிவின் எல்லை. அதனால் உன்னை சரணடைகிறேன். உன் அடியார்களின் சம்சாரம் என்ற பெரிய மரத்தை அடியோடு சாய்க்கும் கோடாலி நீ.  நான் இப்பொழுது என் போன்றே அறியாதவர்களின் சார்பாக உன்னை வணங்கி ஞானத்தை யாசிக்கிறேன்.

மைத்ரேயர் விவரித்தார். தன் தாயார் இவ்வாறு சொல்லவும், சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்.  அவரே அபவர்க வர்தனன் என்று சொல்லப் படுபவர்- முன் ரிஷிகளுக்குச் சொன்ன அதே விஷயம் தான். யோகம் உடல் அங்கங்களுக்கு நல்லதைச் செய்யும்.  பந்தத்தில் ஆழ்வது மனதின் காரணமாகவே.  மூன்று குணங்கள், சத்வ ரஜஸ் தமஸ் என்பவை மனதை ஆட்டுவிக்கின்றன.  நான், என்னுடைய என்ற அபிமானம்.  காமம் லோபம் முதலானவைகளுக்கு அடிப்படை.  மனம் சுத்தமானால் சுகமும் துக்கமும் சமமாக ஆகும்.  ப்ரக்ருதி அல்லது இயற்கை என்பதற்கும் மேலான ஆத்மா நிரந்தரமானது. ஸ்வயம் ஜோதி ரூபமானது. அணுவைப் போல பிளக்க முடியாதது.  ஞானம், வைராக்யம் இவைகளுடன் பக்தியும் சேர்ந்து  தன்னிலிருந்து வேறாக உலகியலை தானே பார்த்துக் கொண்டிருக்கிறது.  தூண்டுகோலாக ஆத்மா இல்லாதவரை  ப்ரக்ருதி தானாக எதையும் செய்வதில்லை.  அகிலாத்மாவான பகவானிடத்தில் பக்தி இல்லாத இடத்தில், ப்ரும்ம சித்தியை அடைய  வேறு வழி கிடையாது.

ஆத்மாவை  மூப்பில்லாதது, அழியாதது, என்று  கவிகள் அறிவார்கள்.  அதனால் ஆத்மாவை அறிவதே முக்திக்கு வழி என்று அவர்கள் வகுத்தார்கள்.  அப்படி முக்தி பெற விரும்புபவர்கள் தயை உடையவர்கள். அனைத்து உயிரினங்களிடமும் நட்பாக இருப்பவர்கள்.  இவர்களுக்கு சத்ரு என்று எவரும் இல்லை. சாந்தமாக, சாதுவாக இருப்பவர்கள். இந்த சாதுவான அமைதியான குணமே ஆபரணமாக இருப்பார்கள்.

மாற்று எண்ணம் இன்றி என்னையே திடமாக நம்பி பக்தி செய்பவர்கள், என் காரணமாக தன் செயல்கள், பந்து ஜனங்கள்  இவர்களைக் கூட தியாகம் செய்பவர்கள். என்னையே ஆசிரயித்து, என் கதைகளில் மகிழ்ந்து, தானும் சொல்லி, சொல்பவர்களிடம் கேட்டும், பலவிதமாக விரதங்களைச் செய்து, என்னையே நம்பி இருப்பவர்கள்  எந்த தாபத்தையும்- கஷ்டத்தையும் அடைவதில்லை. இவர்கள் தனித்து இருப்பார்கள்.  அப்படி கூட இருப்பவர்களையும் தங்கள்  நல்ல குணத்தால் குற்றம் இல்லாதவர்களாகச் செய்து விடுவர். அவர்களையும் ஞான மார்கத்தில் கொண்டு வந்து விடுவர்.  புலன்களின் வசம் ஆவதில்லை. கண் பார்த்தும், செவி கேட்டும் உணர்வது என் செயல் என இருப்பர். யோக மார்கத்தில் மனதை செலுத்துவர். ஞான வைரக்யம் நிரம்பிய குணம், என்னிடம் அர்ப்பித்த யோகம், அதனுடன் பக்தியும் சேர்ந்து என் போலவே ஆவார்கள்.

தேவஹூதி கேட்டாள்: எந்த விதமான பக்தி? என் கண்களுக்கு தெரிந்த அல்லது நான் அறிந்து அனுசரிக்க கூடிய  பக்தி மார்கம் எது?  எந்த விதத்தில் நான் நீ சொல்லும் முக்தி என்பதை அடைய முடியும்? யோகம் என்பது என்ன? நிர்வாணம் அல்லது முக்தி என்று நீ எதைச் சொல்கிறாய்? அதன் தன்மை என்ன? அதன் பகுதிகள் என்ன என்ன? தத்வ அவபோதம்- உண்மையை அறிதல் என்று சொன்னாய்- அந்த உண்மைப் பொருள் எது?  மந்த புத்தி நான். எனக்கு புரியும்படி சொல்லு.  ஹே ஹரே!  கடினமான இந்த ஞான மார்கம் உன் அனுக்ரஹத்தால் நான் சுலபமாக அறிந்து கொள்ளும் படி சொல்லு.

மகனிடம் தாய் இவ்வாறு சொன்னதும், அன்புடன் திரும்பச் சொல்ல ஆரம்பித்தார். சாங்க்யம் அல்லது ஞான மார்கம் என்பது என்ன என்று இன்னமும் தெளிவாக சொல்லலானார்.  பக்தியுடன் இணைந்த யோகம் என்று வேதங்களில் சொல்லியிருப்பதை விவரமாக சொல்லானார்.  

தேவர்கள் இயல்பாகவே சத்வ குணம் மிக்கவர்கள்.  அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை செய்பவர்கள்.  உண்மையான நம்பிக்கையும் அளவில்லாத பக்தியும் சித்திகள் என்பனவற்றை விட சிறந்தவை.  ஜடராக்னி- வயிற்றில் உள்ள நெருப்பு உண்ட உணவை  விழுங்குவது போல, சேர்ந்து வரும்  பந்த பாசங்களால் அடைந்த சரீரம் என்ற உருவை ஞானம் உடனடியாக அழித்து விடும். ஆத்மாவை அறிந்த ஞானிகளை பந்த பாசங்கள் பாதிப்பதில்லை.  என் பாதங்களை சேவித்தவர்கள்.  தங்களுக்குள் என் பக்தர்கள் பேசி விமரிசித்துக் கொள்வார்கள்.  சாயுஜ்யம், மோக்ஷம் என்பது பற்றி கூட ஆசைப் படுவதில்லை. என்னைப் பற்றி என்ன சொல்வார்கள் தெரியுமா அம்மா?  ப்ரசன்னமான முகம், அருணன் போல சிவந்த கண்கள், அழகான உருவம், கைகள் வரம் கொடுப்பதே காரியமாக  இருப்பவை, என் பேச்சு ரசிக்கத் தகுந்ததாக இருப்பதாகச் சொல்வார்கள்.  அவர்கள் என் அவயவங்கள் காணத் தகுந்தவை என்பர்.  கண்களால் சிரிப்பதாக, நகைப்பும், உல்லாசமும் நிறைந்த சொற்களால் விளையாட்டாக பேசி விரும்பாதவர்களையும் என் பால் கொண்டுவந்து விடுவதாக சொல்வர்.   என் மாயையால்  ஐஸ்வர்யம், அஷ்டாங்கம்- எட்டு விதமான செல்வங்களையும் அடைவர்.  சிறந்த செல்வம் என்று பாகவதர்களையே விரும்புவர்.  ஒரு போதும் என் நினைவின்றி இருக்க மாட்டார்கள். நான் அவர்களுக்கு பிரியமான ஆத்மா, மகன், சகா, குரு, நண்பன், இஷ்ட தெய்வமும் ஆவேன்.

இந்த உலகம், அதே போல பரலோகம் இரண்டிலும் ஒரே விதமாக பற்றின்றி இருப்பர்.  சரீரத்தில் பற்றில்லாததால், இந்த தனம், தன் வீடு, பசுக்கள் என்ற சாதாரண விஷயங்களில் ஈடுபாடு இருக்காது. இவ்வாறு என்னையே சகலமும் என்று நம்பி இருப்பவர்களை நான் ம்ருத்யு பயத்திலிருந்து காப்பேன்.  மறு பிறவி அவர்களுக்கு கிடையாது.  பயம் அவர்களை அண்டாது.  என்னிடம் உள்ள மரியாதையால் அவர்களை காற்று அலைக்கழிக்காது.  சூரியன் தபிக்காது. இந்திரன் தவறாது வர்ஷிப்பான். அக்னி தஹிக்காது. மரணமும் அண்டாது.  ஞான வைராக்யம் இவற்றுடன் பக்தியும் சேர்ந்து இருப்பதே பக்தி யோகம் என்பது.  இவர்கள் என்றும் க்ஷேமமாக,  எதிலும் பயம் என்பதே இல்லாமல், என் பாத மூலம் அடைகிறார்கள்.  இது போன்ற மனிதர்கள் தான்  திடமான நம்பிக்கையால் இந்த உலகில் நன்மைகளை கொண்டு வருவார்கள். 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், இருபத்து ஐந்தாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-44 

 அத்யாயம்-26

பகவான் தொடர்ந்தார்.  இப்பொழுது இன்னமும் ஆழ்ந்த தத்வங்கள் என்ற விஷயங்களைச் சொல்கிறேன்.  தனித் தனியாக விவரிக்கிறேன். இதை அறிந்தவர்கள்,  உலகியல், இயற்கையாக உள்ள பல விஷயங்களை பற்றி தெளிவாக இருப்பார்கள்.  வேதம் சொல்லும் மூன்று மார்கங்கள், ஞானம், யோகம், பக்தி என்பவை.  மனிதனின் ஆத்ம தரிசனம் ஞானம். இது பற்றி முதலில் சொல்கிறேன்.  அஹங்காரம் என்பதை அழிக்கும் ஞானம் ஆத்ம தரிசனத்திற்கு வழி வகுக்கும்.

ஆத்மா அழிவற்றது. புருஷன் என்பவன் (பரமாத்மா) குணங்களால் பாதிக்கப் படாதவன். (உடல் தன் அவயவங்கள் அனைத்தும் சரியாக இருந்தாலும் அதை இயக்க பரமாத்மாவின் அம்சமாக ஆத்மா வேண்டும். பூரயதி இதி புருஷ: – வெற்றிடத்தை நிரப்பி இயக்குவதால் புருஷன் என்பது பொருள்) அந்த பரமாத்மா  தனக்கென்று ஒரு பிரகாசம் உடையவன், தனக்கென்று இருப்பிடம் உள்ளவன், தானே ஒளியாக உலகில் பரவியிருப்பவர்.   எதேச்சையாக தானே வந்து சேர்ந்த  இயற்கை தத்வங்களை  (பஞ்ச பூதம் -ஆகாயம்,வாயு முதலானவை)விளையாட்டாக ஏற்றுக் கொண்டார்.  இவை சூக்ஷ்மமானவை, இவை உண்டானது பகவானிடத்திலிருந்து என்பதால் தெய்வீகம்.   குணங்கள் என்பவைகளும் பகவானிடமிருந்து தோன்றியவையே.  விசித்ரமாக குணங்களுடன் பஞ்ச பூதங்களுடனும் சேர்ந்து ஒரு நிலையில்   பிரஜைகள் உருவங்களோடு வெளிப்பட்டார்கள்.  அதில் ஏற்பட்ட குதூகலத்தால், மேலும் அறிந்து கொள்ள விழைந்தார்.  இயற்கை தத்துவங்களைக் கொண்டு பலவிதமாக மாற்றி மாற்றி அமைத்து பார்த்தார்.

மனிதன் தன்னிலும் வேறாக இயற்கை தானாகவே செய்வதையும் தான் செய்வதாக எண்ணுகிறான். அதனாலேயே சம்சார பந்தம், அதன் விளைவாக அதிலேயே கட்டுப்படுகிறான்.   ஈஸ்வரனின் செயல் என்று ஞானிகள் விலகி இருப்பர்.  கார்யம்-செயல், காரணம்-இயற்கை, கர்த்ருத்வம்- செய்பவன், இந்த மூன்றில் காரணம் என்பது ப்ரக்ருதி.  சுக துக்கங்களின் அனுபவம் என்பதில் புருஷன் என்றபரமாத்மா, ப்ரக்ருதி என்ற இயற்கை தத்வங்களுக்குள் வருவதில்லை.  அந்த அனுபவங்கள் பரமாத்மாவுக்கு இல்லை.

தேவஹூதி கேட்டாள்: ப்ரக்ருதி, புருஷன் இரண்டையும் பற்றி விவரமாகச் சொல்லு, புருஷோத்தமா!.  என்ன காரணம் ? எதனால், நல்லது,  நல்லதல்ல  என்று அறியப் படுகிறது.  இரண்டுமே ஒரே பகவானிடம் தானே தோன்றியவை என்றாய்.

மூன்று குணங்கள், இவை கண்களால் காண முடியாத உணர்வுகள்.  இயற்கையை ஸ்தூலம் என்றும், ப்ரதானம் என்ற பகவானின் அம்சத்தை , சூக்ஷ்மம் என்றும் சொல்வர். இருபத்து நாலு தத்வங்கள். பஞ்ச பூதங்கள் ஐந்து, நிலம்,நீர்,அக்னி,வாயு,ஆகாசம் என்ற ஐந்து – தன் மாத்ரைகள், கந்த-வாசனை ரசம்-ருசி, ரூபம், ஸ்பர்ஸ-தொடு உணர்வு, சப்தம் என்பன. – செவி,கண் முதலிய 5,   கை,கால் முதலிய அவயவங்கள் பத்து, கண்,காது,நாசி,வாய், சருமம், கைகல்-2,கால்கள்2, வாய், மேட்ரம்,பாயு  என்ற கர்மேந்திரியங்கள் பத்து, மனம், புத்தி, அஹங்காரம்,சித்தம்  என்ற ஐந்தும் அந்தராத்மா வில் அடங்கும். இவர் நான்கு விதமாக அதன் செயல்கள், லக்ஷணங்கள், ரூபம் என்ற அடிப்படையில் பிரிக்கப் பட்டுள்ளது.  இவ்வளவு தான் கணக்கு, ப்ரும்மாவுடையதும், குணங்களுடன் உள்ள மனிதர்களுக்கும்.  இருபத்தைந்து விதமான காலங்கள். சன்னிவேசம் எனப்படும்.

ப்ரபாவம், பௌருஷம் என்பவை  ஒரு காலன் –   அதுவும் இயற்கை தான் என்றாலும் மனிதனின் அறிவின்மை,  அவனிடத்தில் பயம்.  உள்ளே புருஷ ரூபம், வெளியில் காலன் இதை பகவான் தன் திறமையால் சமமாக நிர்வகித்து வருகிறான்.  காலன் என்ற இந்த தேவனும் பகவானின் ஸ்ருஷ்டியே.  தன்னுள்ளேயே விஸ்வம் என்பதை யோசித்து தயார் செய்து கொண்டு தான் பகவான் உலகின் பீஜமாக இருந்து தன் தேஜசால், சத்வம் என்ற  தெளிவான, சாந்தமான சத்வ குணத்தால் வாசுதேவன் என்ற பெயருடைய சித்தம் என்பதுடன் மஹத் என்பதை ஸ்ருஷ்டி செய்தார்.  தெளிந்த நீரைப் போல  மிகத் தெளிவானது, மாறாதது, சாந்தமாக இருப்பது என்பவை புத்தியின் செயலுக்கு லக்ஷணமாக சொல்லப்படுகிறது.

இந்த மஹத் என்ற தத்துவத்தை பகவானுடைய வீர்யமும் சேர்ந்து க்ரியா சக்தி, அஹங்காரம் (தன்னியல்பு) மூன்று விதமான தோன்றின.  அதன் பின் மேலும் தாமசத்துடன் சேர்ந்து மனம் இந்திரியங்கள், பஞ்ச பூதங்கள் இவை உண்டாயின.

ஆயிரம் தலைகளுடன்  அனந்தன் என்று சொல்லப் படுபவர், சங்கர்ஷணர் என்பவர், பஞ்ச பூதங்கள்,மனம், இந்திரியங்கள் இவைகளுடன் சேர்ந்த பரம புருஷன்.   அஹங்காரம் என்பதன் விளைவுகள், செயல்களை (கர்தா-செய்பவன்) செய்தல், செயலுக்கு காரணமாக இருத்தல், (கரணத்வம்)., செயல் (கார்யத்வம்) என்பவை.  சாந்தம், கோரம்,  விமூடம் (மூடத்தன்மை)  வைகாரிகம் என்ற மாற்றத்தால், மனம் என்ற தத்வம் வந்தது. இதனுடைய சங்கல்பம், விகல்பம் என்பவைகளால் காமம் என்பது உண்டாயிற்று.  இதை அனிருத்தன் என்பர். நீல மேக ஸ்யாமளனாக அனிருத்தனை யோகிகள் சொல்வர்.

{ஸங்கர்ஷணர் என்ற ஹரி சூக்ஷ்மமான அஹங்காரம். ஸ்தூலமான அஹங்காரம் ப்ரத்யும்னன். அனிருத் என்பவன் மனத்தை நிர்வஹிக்கும் ஹரி ரூபம். }

 தேஜஸ் (அக்னி) என்பதன் திரிபினால், புத்தி என்பது உண்டாயிற்று. த்ரவ்யம், உணர்ச்சி, விக்ஞானம் என்பவை- பொருள்களை அடையாளம் காணுதல், தானாக உணருதல், மேம்பட்ட அறிவுத்திறன், அதாவது தானாகவே புது விஷயங்களை  கண்டறிவது என்பன புத்தியின் செயல்.

சந்தேகம் என்பது ஒரு பொருளை பலவிதமாக காணுதல். அதுவும் மனதின் வேலையே. பொதுவான அறிவு வேறு விதமாகவும் நினைக்கும்.  தூங்கும் போதும் புத்தி செயல்படும் (நன்றாக தூங்கினேன் என்பது சாதாரணமாக நாம் சொல்வது) தேஜஸ் இந்திரியங்களோடு சேர்ந்து செயல், அறிவு, என்ற இரண்டு விதம். ப்ராணன் -க்ரியா சக்தி, புத்தி- தானே உணரும் சக்தி என்பதாக.

தாமஸ குணத்தோடு   பகவானின் வீர்யமும் சேர்ந்து சப்தம் உண்டாயிற்று. அதனுடன் ஆகாயம் (ஓலியை பரப்புவதாக),  காது சப்தத்தைக் கேட்கும் அவயவமாக,  உண்டாயின.  அர்த்தம் சப்தத்தின் அடிப்படை. கண் பார்வைக்கு உருவம். தன்மாத்ரம் (ஓலி)  என்பது ஆகாயத்தின் அடையாளம் என்று அறிஞர்கள் சொல்வார்கள்.

பஞ்ச பூதங்களின் சேர்க்கை பலவிதமாக (அளவில்)  ஏற்படுத்துவதால், உள்ளும் புறமும் ப்ராண, இந்திரிய, ஆத்ம சக்தி என்பவை ஆகாயத்தின் செயல்கள்.  ஆகாயத்தின் சப்தம் என்ற தன்மாத்ரம் கால கதியில் பட்டு மாறுபடுவதால், ஸ்பர்ஸம் என்பது ஏற்பட்டது. ஸ்பர்ஸம் வாயுவின் குணம். சருமம் என்பது வாயுவின் இடம். ஸ்பரிசம்- தொடுகை என்ற உணர்வை அறிவது உயிரினங்களின் சருமத்தாலேயே.  ம்ருதுவோ, கடினமோ,குளுமை, உஷ்ணம் என்பதை உணர்வது தொடுகை உணர்வால், அதை நிர்வகிப்பது ஆகாயத்தின் தன்மாத்ரம்- உட்பொருள். 

சலனம், அசைவது போன்ற  இந்திரியங்களின் செய்கைகள் வாயுவின் அடையாளம். வாயுவின் தொடுகை என்ற தன்மாத்ரம், 

ரூபம் என்ற ஒரு தத்துவம் தெய்வ தொடர்பால் புதியதாக தோன்றியது. கண் என்ற அவயவம் ருபத்தைக் காண்பதாக தோன்றியது.  

தேஜஸ் என்ற அக்னியின் குணமும் சேர்ந்து உருவம் என்பதின் பல செயல்களை செய்யலாயின.   நான்கு விதமான உண்ணும் வழக்கம், மெல்லுதல், கடித்தல், குடித்தல், விழுங்குதல் – என்பவை இவை அக்னியின் காரியங்கள். இவைகளின் பலன் பசி தாகம் முதலியன.  உருவம் என்ற தன்மாத்திரையோடு, சேர்ந்து மாறுதல் அடைந்து, அக்னியும், தெய்வ சங்கல்பமும் சேர்ந்து, ரஸம் என்ற தன்மாத்திரை உண்டாயிற்று.  அதிலிருந்து நீர் என்பது வந்தது. 

 நாக்கு ரஸத்தை அறியும் அவயவமாயிற்று.  கஷாயம் (கடுப்பு), மதுரம், புளிப்பு, கட்வம்ல- கடுமையான புளிப்பும் கசப்பும் சேர்ந்தது பல ருசிகள், பௌதிகமான மாறுதல்களால் ரஸம் என்பது பலவகைப் படும். மேலும் பல நீரின் செயல்கள்.

 ரஸம் என்ற தன்மாத்திரையோடு செய்வ சங்கல்பமும் சேர்ந்து கந்தம்-வாசனை என்ற புதிய தத்வம் உண்டாயிற்று.  இதன் இருப்பிடம் பூமி, மூக்கு என்ற அவயவம் வாசனையை நுகர்வதாக ஆயிற்று. வித விதமான வாசனகள், தீவிரமாக, சுகமாக என்ற வேறு பாடுகளை முக்கு அல்லது நாசி என்ற அவயவம் உணரும்.ஸ்தானம், தாரணம் -தாங்குதல், என்பவை விசேஷ குணங்கள். சத்வ குணங்களின் பல பேதங்கள், ப்ருதுவீ என்ற பூமியின் அடையாளங்கள். 

நபோ-ஆகாயம் என்பதன் விசேஷமான பொருள் ஸ்ரோத்ரம்- கேள்வி என்பது போல வாயுவின் விசேஷமான பொருள் ஸ்பரிசம் என்றும்,   அக்னி-தேஜஸ் என்பதன் விசேஷமான பொருள் பார்வை -கண் என்பதும், நீரின் விசேஷமான பொருள் ரசனம்- நாக்கு என்பதும், பூமியின் விசேஷமான பொருள் நுகர்தல், அதன் அவயவம் நாசி, நுகருதல் என்பதும், விளங்குகிறது. மஹத் எனும் ஏழு தத்வங்களும் கால,கர்ம,குண எனும் மூன்று தத்வங்களுடன் இணைந்தும் பிரிந்தும் உலகங்கள் என்ற ரூபத்தை அடைந்தன.அசேதனமான அந்த அண்டத்தில் இருந்த (நித்ரையில் இருந்த) பகவான் எழுந்தார்.  அது தான் விராட் ஸ்வரூபம். அண்டம் என்ற இந்த விசேஷ பொருளை, கிரமமாக தண்ணீரால் சூழ்ந்து இருந்ததை,பிளந்து,   பிரதான புருஷனான ஸ்ரீ ஹரி தன் சங்கல்பத்தால் லோகங்களை  உண்டாக்கினார்.பொன் மயமான அந்த அண்டகோசத்திலிருந்து எழுந்து நீரிலிருந்து அதை வெளிக் கொணர பிளந்தார். அப்படி பிளந்த பொழுது ஏற்பட்ட சப்தத்தால் (வாணி), முகம் (வாய்) தோன்றியது.  வாணியிடமிருந்து அக்னி வந்தது. அதன் பின் நாசியில் பிராணன் என்பதும் தோன்றின. அதன் அவயவமாக மூக்கு எழுந்தது. நாசி-க்ராணம் என்பதிலிருந்து வாயுவின் தாக்கத்தால்  இரண்டு கண்கள் தோன்றின.  அதில் சூரியன் நுழைந்து அதன் தாக்கத்தால், காதுகள், ஸ்ரோத்ரம்-கேட்கும் அவயவம், அதன் பின் திசைகள் என்று வரிசையாக வந்தன.இவ்வாறு த்வக்-சருமம்,  ரோமம்-மேல் தோலில் மயிர்கால்கள்,  மீசை முதலியன தோன்றின. அதன் பின் ஜனன உறுப்புகளும் உடல் நீர்களும் வந்தன. ரேதஸ் என்பதில் தண்ணீர் இருந்தது.  குதம், அதிலிருந்து அபான வாயு, இது ம்ருத்யு எனப்படும். பிராணன் பிறப்பு -ஆரம்பம்- இது முடிவு 

கைகளை இணைத்தார். அவைகளில் பலம் என்பதை கூட்டினார். சுயம்பூ-ஸ்வராட் -என்ற பகவான் கால்களை இணைத்தார். அவைகளுக்கு கதி-நடை என்பதை குணமாக கூட்டினார்.  பின் நாடிகள், அவைகளில் லோஹிதம் என்ற ரத்தம்- இது அம்ருதம் எனப்பட்டது -இதைக் கூட்டினார். வெளியுலகில் நதிகள் தோன்றின.  மனித உடலில் உதரம் என்ற வயிற்று பாகம், வெளி உலகில் சமுத்திரம்.  பசி தாகம் இவை தோன்றின.

அதன் பின் ஹ்ருதயம் என்ற அவயவம். அவருடைய ஹ்ருதயத்திலிருந்து மனம் என்பதும் உண்டாயிற்று. மனதில் இருந்து சந்த்ரமா  வந்தான்.  புத்தியும், புத்திக்கு அதிபதியாக வாக்பதி என்ற ப்ரும்மா.  அஹங்காரம் என்பது ருத்ரனாக, சித்தம் அதனுடன் வந்தது.  இவ்வளவும் வந்த பின்னும் தேவர்களால் இதை எழுப்ப முடியவில்லை. தாங்களே பொறுப்பு ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு அவயவத்தையும் அசைக்க முயன்றனர்.

அக்னி முகத்தில் சொல் என்பதாக,  முகத்தில் குடியேறியது.  விராட் ஸ்வரூபம் அசையவில்லை.

வாயு நாசியில் அமர்ந்தது. விராட் ஸ்வரூபம் அசையவில்லை. 

இரண்டு கண்களிலும் சூரியன் நுழைந்தான், விராட் ஸ்வரூபம் அசையவில்லை.

கேள்வி என்பதன் காதுகளில் திசைகள் நுழைந்தன, விராட் ஸ்வரூபம் அசையவில்லை.

சருமத்தில், ரோமங்களில் ஓஷதிகள் நுழைந்தன, விராட் ஸ்வரூபம் அசையவில்லை.

ரேதஸ் என்ற பீஜ ஸ்தானத்தில் ஆப: என்ற நீர் இடம் கொண்டது, விராட் ஸ்வரூபம் அசையவில்லை. குதத்தில் அபான வாயு ம்ருத்யுவாக இடம் கொண்டது, விராட் ஸ்வரூபம் அசையவில்லை.,

இந்திரன் கைகளில் பலம் என்பதாக வந்தான், விராட் ஸ்வரூபம் அசையவில்லை.

விஷ்ணு தானே கதியாக பாதங்களில் வந்தார், விராட் ஸ்வரூபம் அசையவில்லை,

நாடிகளில் நதிகள் ரத்தமாக ஓடின, விராட் ஸ்வரூபம் அசையவில்லை,

பசி, தாகம் என்று உதரத்தை சமுத்திரம் ஆட்கொண்டது, விராட் ஸ்வரூபம் அசையவில்லை,

சந்திரன் மனம் என்பதாக  ஹ்ருதயத்தில் வந்தமர்ந்தான். விராட் ஸ்வரூபம் அசையவில்லை,

ப்ரும்மாவும் ஹ்ருதயத்தில் புத்தியாக வந்தமர்ந்தார். விராட் ஸ்வரூபம் அசையவில்லை,

அபிமானம் அல்லது அஹங்காரம் (தன்னியல்பு) என்பதாக ருத்ரன் வந்து அதே ஹ்ருதய்த்தில் இடம் பிடித்தார், விராட் ஸ்வரூபம் அசையவில்லை,

சித்தத்தில் மனசாட்சி என்பது குடியேறியது. விராட் ஸ்வரூபம் அசையவில்லை. 

அச்சமயம் விராட் புருஷன் சூழ்ந்திருந்த தண்ணீரிலிருந்து எழுந்தார்.

மனிதன் தூங்கி விழிப்பது போல இருந்தது.  அவரே ப்ராணன், இந்திரிய, மனம்,புத்தி  -அவர் இல்லாமல் வேறு யாரால் விராட் புருஷனை எழுப்ப முடியும்?  ஆத்மானம் -தன்னுடையதே ஆன யோக முறையால் பக்தி, விரக்தி, ஞானம் என்பவைகளைக் கொண்டு யோசித்தார். 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற மூன்றாவது  ஸ்கந்தத்தின், இருபத்து ஆறாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -72

அத்யாயம்-27

ஸ்ரீ பகவான் சொன்னார்.

ப்ரக்ருதி என்ற உலகியலில் இருந்தாலும் புருஷ என்ற பரமாத்மா, உலகியல் இயல்புகளை ஏற்றுக் கொள்வதில்லை.  குளத்து நீரில் சூரியனின் பிம்பம் தெரிவது போல – குளத்து நீரில் பிம்பம் அசைவது உண்மையில் சூரியனின் அசைவு இல்லை என்பதை நாம் அறிவோம்.  அதே போல நீரின் குணமான குளுமை அந்த சூரியனை பாதிக்காது. 

அதே போலத்தான் பரமாத்மா உயிரினங்களில் இருப்பதும்- மாறுதல்கள் அதற்கு இல்லை. செயல்களும் அதற்கு இல்லை. அதற்கு தனியாக ஒரு குணம், அதாவது அடையாளம் என்பதும் இல்லை. உடலுக்கு ஏற்படும் சுக துக்கங்கள் அதை பாதிப்பதும் இல்லை.  ஆனால் மனிதன் பரமாத்மாவின் அனுக்ரஹத்தை உணராமல் நான் செய்கிறேன் என்று சொல்வது அபத்தம்.  பின், ஏன் சம்சார பந்தத்தில் ஈடுபடவேண்டும்?   பரமாத்மா இன்றி இயக்கமே இல்லை. அவனன்றி அணுவும் அசையாது என்பது ஆன்றோர் வாக்கு.  உயிரினங்களின் உடலை இயக்குவது இந்திரியங்கள் மட்டுமாக செய்வதில்லை,  ஆத்ம சக்தி என்பது பகவானின் அம்சம்.  அதை மனிதன் உணர வேண்டுமானால்  முன் சொன்ன பக்தியோ, ஞானமோ, கர்ம  யோகமோ (வேதோக்தமான யாகாதிகள் செய்வது) செய்து சாதனகள் செய்யவேண்டும்.

தேவஹூதி கேட்டாள். ப்ரக்ருதியும் புருஷனும் அன்யோன்யமாக இருந்து தான் உலகமே வந்தது.  இரண்டும் நித்யமானதே, ஒன்றையொன்று சார்ந்து இருப்பதே என்று சொன்னாய். பூமிக்கு கந்தம், நீருக்கு ரஸம் என்பது போல புத்திக்கு பரமாத்மா என்ற புருஷன் என்ற வகையில்  சுக துக்கங்கள், மற்ற செயல்களின் விளைவுகள்  ப்ரக்ருதிக்கு மட்டுமே,  நான் சம்பந்தப் படவில்லை என்று புருஷன் எப்படி விலகி இருக்க முடியும்?  அப்படி சம்சாரம் என்ற உலகியலில் மூழ்கி இருக்கும் ஜீவன்கள், கைவல்யம் என்று எப்படி அறிவார்கள்? அதை அடைவது என்பது என்ன?  ஏதோ காரணத்தால், குணம் பற்றிய விவரங்கள் அறியாததால், இயற்கையின் தாக்கத்தால் பயம்-ஆபத்து ஏற்பட்டால், எப்படி மீள்வது?

பகவான் சொன்னார்: கனவில் காண்பதை நிஜம் என்று எண்ணி பயப்படுவதோ, கலங்குவதோ போலத் தான் சம்சாரமும்.  புத்திமானாக இருப்பவன் என்னை நம்புகிறான்.  பக்தி மார்கத்தில் ஈடுபடுவான். ஞானம் உள்ளவன் மனோ பலத்தால் வைராக்யத்தால், தவத்தால்,  என்னை அடைவான். யோக மார்கம் ஆத்ம சமாதி போன்ற நியமங்களால் என்னை அடைய வழி வகுக்கிறது. இவ்வகையில் தன்னையே உயர்த்திக் கொள்ள உள்ள வழிகள் பயத்தைப் போக்கும். ஈஸ்வர சகாயம் அவர்களை நல்ல கதியில் சேர்க்கும். தானாக விழித்துக் கொள்ளாத மனிதனை எழுப்புவது சுலபமல்ல. அதே சமயம் விழித்துக் கொண்டிருக்கும் மனிதனை மோகமும் அண்டாது.  இவ்வாறே, உண்மையை உணர்ந்தவன் இயற்கை என்பதையும், அதில் என் பங்கையும் தெரிந்து கொள்வான்.  அத்யாத்மம் என்பதில் லயித்தவர்கள், பல ஜன்மங்களில் தொடர்ந்து சாதனைகளைச் செய்து ப்ரும்ம பதத்தையே அடைவார்கள்.  பக்தி செய்பவன் என் அருளால் என் இருப்பிடமான கைவல்ய பதவியை அடைவான்.  ஞானியோ தானே பல விஷயங்களை கண்டும் கேட்டும் தெரிந்து கொண்டு அனுபவ பூர்வமாக என்னை அடைவான். இது போன்ற எந்த முயற்சியிலும் மனதை செலுத்தாமல், மாயையான உலகையே சாஸ்வதமாக நம்புபவன் அவனும் காரணமின்றியே, ம்ருத்யு பயம் இல்லாத நிலையை கடைசியாக அடைவான்.

 (இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த    காபிலேயோபாக்யானம்  – என்ற மூன்றாவது  ஸ்கந்தத்தின், இருபத்து ஏழாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -30

அத்யாயம்-28

ஸ்ரீ பகவான் சொன்னார்:   யோகத்தின்  லக்ஷணம் என்பதைச் சொல்கிறேன்.  அதன் பீஜங்களோடு விவரிக்கிறேன். அதன் மூலம் மனிதன் நல் கதியை அடைவான்.

தன் தர்மத்தை கடை பிடித்தலும், பர தர்மத்திலிருந்து விலகி இருப்பதும் முதல் படி. தெய்வ அனுக்ரஹத்தால் கிடைத்ததில் சந்தோஷமாக இருப்பது அடுத்தது.  அவரிடம் பக்தியுடன் இருப்பது.  உலக வாழ்க்கையில் அதிகம் உழலாமல், மோக்ஷம்  என்பதை அறிந்து கொள்ளுதல். அதை அடைய மிதமான ஆகாராதிகள், மற்ற உலகியல் அனுபவங்கள் அந்தந்த தேவைகளுக்கு மட்டுமாக, இதற்கு மேல் ஒரு விஷயம் உள்ளது என்பதை சதா நினைவில் இருத்திக் கொள்ளுதல்.

அஹிம்சை, சத்யம், திருடாமை, தன் செல்வம் தானே ஈட்டியது போதும் என்று இருப்பது, ப்ரும்ம சர்யம், தவம், ஒழுக்கம், உடலும் மனமும் சுத்தமாக இருத்தல், தன் கல்வி, அறிவை மேம்படுத்திக் கொள்ளுதல், பகவானை வணங்குதல்- இவையே தினசரியையாக இருக்க வேண்டும். .அளவாக பேசுவதும் மௌனம் என்பதும் நல்லது. ப்ராணாயாமம் செய்வதும், (ப்ராணாயாம், ப்ரத்யாஹாரம் என்ற இரண்டும்) மனதை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.  அனாவசிய சபலங்கள் அலைக்கழிக்காது.  இவ்வாறு மெள்ள மெள்ள யோக சாதனையைச் செய்து வந்தால் சில நாட்களில் தியானம் செய்வது சுலபமாகும்.   சுத்தமான இடத்தில், சுகாசனத்தில் அமர்ந்து ப்ராணனை பூரக, கும்பகம், ரேசகம் என்ற முறைகளில் தன் வயப் படுத்திக் கொண்டு,  தியானம் செய்து வர, மனம் சீக்கிரமே தன் வசப் படும். இவ்வாறு சுவாசத்தை ஜயித்தவர்கள் தான் யோகிகள்.  காற்றையும் அக்னியையும் கொண்டு லோஹம்-இரும்பை சுத்தம் செய்வது போல இது. 

ப்ராணாயாமத்தால், உடல் சுத்தமாவது போலவே, தாரணை என்பதும் ப்ரத்யாஹாரம் என்பதும் பயிற்சிகள். ஈஸ்வரனை நினைத்து தியானம் செய்யும் பொழுது, ப்ரத்யாஹாரத்தால், சம்சர்கம்- பற்றுதல்  என்பது விலகும். இந்த நிலை வந்தபின், உடலை கட்டையாக நிலையாக வைத்துக் கொண்டு நாசி யில் கண் பார்வையை ஸ்திரமாக வைத்து, யோக சாதனையை செய்வது அடுத்த படி.   ப்ரசன்ன வதனன், பத்ம கர்பன், அருண லோசனம், நீலோத்பலதள ஸ்யாமளன்,  சங்க சக்ர தா தாரியான பகவானை, பங்கஜ த்தின் மகரந்தத்தின் நிறத்தில் ,பீதாம்பர தாரியாக, ஸ்ரீவத்ஸ, கௌஸ்துப மணிகள் பிரகாசிக்க,  வனமாலை, உயர்ந்த ஹாரம், அங்கத வளையங்கள், கிரீட, நூபுரங்கள் காஞ்சி முதலிய ஆபரணங்களுடன் அவரது உருவையே த்யானம் செய்து  வேறு எந்த நினைவும் இல்லாமல் சர்வ லோகமும் வணங்கும் குழந்தையாக,  அவரது முழு  உருவையும் நினைத்து மனம் சிறிதும் சிதறாமல் ஒரே நிலையில் இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும். அண்டியவர்களை காக்கும் அவர் அருளால்  தானாகவே  அந்த நினவு  உடல் முழுதும் வியாபித்து விடும்.  நடப்பதாகவோ, அமர்ந்து இருப்பதாகவோ, சயனித்த கோலமோ, நின்ற கோலத்தில் பாத பத்மங்களோ, த்யானிக்கலாம்.

மேலும் விவரமாக ஒவ்வொரு அங்கமாக சொல்லி, மனதில் நிறுத்திக் கொண்டு முழுமையாக பகவானின் உருவத்தை மனதில் உருவாக்கிக் கொண்டு, த்யானம் செய்வதைச் சொல்கிறார்.

பாதங்கள்: வஜ்ர, அங்குசம்,த்வஜம், சரோருஹ என்ற சின்னங்களுடன் இருக்கும். நகங்கள்-சற்றே உயர்ந்து அதன் ஒளியால், மனதின் அறியாமை என்ற அந்தகாரத்தை நீக்கும். அதில் பாவனமான கங்கையை தியானம் செய்ய வேண்டும். இந்த பாதத்திலிருந்து தோன்றிய கங்கை நீரை பரமேசனும் தலையில் தெளித்துக் கொள்வார்.

ஜானுத்வயம் – இரண்டு முழங்கால்கள்:  ஜலஜ லோசனா- பத்மம் போன்ற கண்களுடைய ஜகஜ் ஜனனி, அனைத்து தேவர்களும் வணங்கி நிற்க, லக்ஷ்மி தேவி, அவர்கள் பார்த்து இருக்கையிலேயே இந்த முழங்கால்களில் கால் வைத்து ஏறி பகவானின் மார்பில் அமர்ந்தாள். 

கருடனின் புஜங்களில் பதிந்த தொடைகள். அதசீ குஸுமம் என்ற மலர்-(க்ருஷ்ண வர்ணம்) போல பிரகாசமாக விளங்கும், பீதாம்பரம் மறைக்க காஞ்சி எனும் இடையாபரணம் மறைந்து, இருக்கும்.

நாபி பிரதேசம். இதில் புவனகோசமே அடங்கும் லோக பத்மத்தை ஆத்ம யோனியாக இருந்து, ப்ருமாண்டத்தின் அனைத்து சர அசர எனும் ஜீவ ராசிகளின்  விதைகளை, பத்மத்தின் மகரந்தம் போல வைத்துள்ள ப்ரதேசமாக தியானிக்க வேண்டும்.

வக்ஷஸ் என்ற மார்பு பிரதேசம். இங்கு வ்ருஷபாரூடனாக  பகவானை தியானிக்க வேண்டும். 

கழுத்து  கௌஸ்துப மணியின் இடம். அகில உலகும் வணங்கும் தேவனாக தியானம் செய்து வணங்க வேண்டும். அடுத்து புஜங்கள். மந்தர மலையைத் தாங்கிய பொழுது மலை அசைந்து அசைந்து வடுக்களை தோற்றுவித்ததே வளையங்கள் என்ற ஆபரணங்கள் எனத் தியானிக்க வேண்டும்.

ஆயிரம் ஆரங்களுடைய சக்கரமும், சங்கமும் தாங்கிய கரங்கள், கௌமோதகி என்ற ஆயுதமும், எதிரிகளை விரட்டிய சமயம் அவர்களின் ரத்தம் தோய்ந்து கறையானதோ எனும் படி இருக்கும்.

வனமாலை – விசேஷமான அவரது மணியும், மலர்களாலும் ஆன மாலை, தன் அடியார்களை அரவணத்துச் செல்லும் அவர் குணத்தை எண்ணி தியானிக்க வேண்டும்.

மகர குண்டலங்கள் பளிச்சிட முகம் என்ற தாமரை மலரை தியானிக்க வேண்டும். குண்டலங்களால் ஒளியூட்டப் பட்ட கன்னங்களும், நிமிர்ந்த நாசியும், லக்ஷ்மீ கரமான கேச சுருள்கள், அதில் மலர்கள் நிறைந்து முகத்தை சுற்றி இருப்பதாக எண்ணி தியானம் செய்ய வேண்டும்.

இரண்டு மீன்களோ, இரண்டு பத்மங்களோ எனும் படி உள்ள கண்கள்.  உல்லாசமான மனோ மயன் (மன்மதன்) தோன்றும் இடம் புருவங்கள்.  கண்கள் அதை விட்டு விலகவே விலகாது. தாப த்ரயம் என்பதிலிருந்து விமோசனம் அளிக்க வேண்டி புருவ ப்ரதேசத்தை தியானம் செய்ய வேண்டும்.  கருணையுடன் மென் முறுவலோடு கூடிய வதனத்தை வெகு நேரம் தியானித்து மன குகையில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவருடைய முறுவல் வணங்கும் ஜீவன்களின் தாபத்தை உடனடியாக போக்கி விடும். தன் மாயையால் அடியோடு மோகத்தில் ஆழ்த்தும் இந்த மோகன ரூபம், மகர த்வஜன் என்ற மன்மதனின் உதவிக்காக உள்ளதோ எனும்படி உள்ளவை.புருவத்திலிருந்து முகம் முழுவதும் பரவும் முறுவல்.

அதரங்களும், இடையில் பளிச்சிடும் முல்லை மலர் போன்ற பல் வரிசையும், தன் இதய குகையில் ஸ்தாபித்துக் கொண்ட விஷ்ணுவின் ரூபத்துடன் சேர்த்து தியானிக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்ரீ ஹரியின் முழு உருவத்தையும் மன குகையில் வைத்துக் கொண்டு பக்தியுடன் மனம் ஒன்றி, கசிந்த கண்களுடன் உடல் புல்லரிக்க, தொண்டை உணர்ச்சி வசத்தால் அடைபட, மெள்ள மெள்ள தன் இதயத்தில் நமஸ்கரித்து தெளிவை அடைவார்கள்.

இப்படி மனதில் பகவானை நிலை நிறுத்திக் கொண்ட சாதகன் திடுமென தன்னை ஏதோ ஒளி சூழ்ந்ததாக உணர்வான்.  முடிவான இந்த மன ஓட்டம் அடங்கியவனாக, அவருடைய மஹிமை என்பதில் மூழ்கி உலகியலான சுக துக்கங்களை அறவே மறந்தவனாக , கட்டையாக யோக சித்தியை அடைவான். 

தன் தேகத்தையே வெளியிலிருந்து அன்னியனாக பார்க்கும் நிலை வந்து சேரும். தெய்வ வசமாக வந்த தேகம், தெய்வத்தாலேயே மறைக்கப் பட்டு விட்டது. மதுவை குடித்தவன் தன் உடையை துச்சமாக எண்ணுவது போல இந்த நிலையை அடைந்த பின் தேகமும் பொருளற்றதாக ஆகும்.  செயல்களுக்கான கருவியே காயம் என்ற இந்த உடல்.  தன்னையே அறிந்த பின், தன் தோற்றத்துக்கான காரணமான ப்ரும்ம ஸ்வரூபத்தையே அறிந்த பின், அதை கனவில் கண்டது போல உணர்கிறான்.

தன் புத்ரனே ஆனாலும் தன் உடல் வேறு, மகன் உடல் வேறு என்று பொதுவான அறிவு அனைவருக்கும் உண்டு.  அதுவே செல்வம், மற்ற விஷயங்கள் வேறு என்ற எண்ணமும் அதில் தனது என்ற பற்றும் விலகும். 

தீயிலிருந்து வெளிப்படும் தீப்பொறிகள், புகை இவைகளை தீ உரிமை கொண்டாடுமா, அது போல தனது என்ற அபிமானம் விலகும்.

பஞ்ச பூதங்கள், புலன்கள்,அந்த:கரணங்கள் இவை சேர்ந்து உயிரினம் -ஜீவன் என்பது உருவாயிற்று. இதில் ஆத்மா என்ற ப்ரும்மா தள்ளியிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் அவ்வளவே.

அனைத்து ஜீவன்களிலும் தன்னையும்,  தானும் அவைகளை தன்னில் காண்பதாகவும் சொல்வதாக பகவானை சொல்வர். 

(सर्व भूतेषु चात्मानम्, सर्व भूतानि च आत्मनि – )  சம பாவம் என்பதை காண்கிறார். பல விதமான பிறவிகள். அவைகள் தோன்றும் இடத்தைப் பொறுத்து உருவமும் குணமும் மாறுவதே அன்றி  ஒரே பகவானின் அம்சமாக தோன்றியவையே. 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற மூன்றாவது  ஸ்கந்தத்தின், இருபத்து எட்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் – 44

அத்யாயம்-29 

தேவஹூதி கேட்டாள்:  மஹத் முதலானவைகளின் லக்ஷணம், ப்ரக்ருதி, பரம புருஷன்  என்று விவரித்தாயே, அதில் பாரமார்த்திகம் எங்கே எப்படி வரும்?  ஞான யோகம் என்று சொன்னாய். அதன் பின் பக்தி யோகம் என்றாய். அதையே விஸ்தாரமாகச் சொல்லு.  விராகம்- பற்றின்மை என்பது உலக வாழ்க்கையில் எப்படி சாத்யம்? எதை தெரிந்து கொண்டால் சாதாரண ஜனங்களுக்கு சௌக்யமோ அதைச் சொல்லு.  பகவானே! நீ தோன்றியதன் காரணமே, உலகில் மக்கள் தவறான  அறிவுடன் , கண்கள் இருந்தும் தூக்கத்திலேயே பொழுதை கழிக்கிறார்களே, எதை நம்பலாம், எதை நம்பக்கூடாது என்ற விவேகம் இல்லாமல், ஓய்ந்து போய் இருக்கிறார்களே, அந்த  ஜனங்களுக்கு நல்லதைச் சொல்லவே.  யோக பாஸ்கரனாக நீ வந்தாய்.

தாயார் இவ்வாறு கேட்டதும், அவளுக்கு புரியும்படியாக, அவளுக்கு பிடித்த விஷயங்களையே சொல்ல ஆரம்பித்தார்.  பக்தி யோகம் பலவிதமாக, அவரவர் ஸ்வபாவம், குணம், அவரவர்களுக்கு பிடித்த மார்கம் என்று மாறும். பொதுவாக, ஹிம்சையில் நாட்டம்,  அடம்பரம் , பொறாமை . பரபரக்கும் தன்மை, இத்துடன் பக்தி செய்கிறேன் என்றால் அது தாமசமானது. தன் புலன் இன்பத்திற்காக, புகழோ, ஐஸ்வர்யமோ கிடைக்கும் என்பதால் பகவானின் மூர்த்திகளை வைத்து பூஜைகள் செய்பவன், ராஜஸன்.  பரம புருஷனிடமே  மனதை அர்ப்பித்து, யாக காரியங்களை செய்பவன் சாத்விகன்.   என்னைப் பற்றி கேட்பதும், அனைத்து            உயிரினங்களிலும் அந்தர்யாமியாக  இருப்பவன் என்ற பாவனையோடு, மனத் தடுமாற்றம் இன்றி கங்கை நீர் கடலில் சேருவது போல, தொடர்ந்து ஒரே கதியில் செல்லும் மனோ பாவம் – பக்தி யோகத்தின் லக்ஷணம். 

காரணமேயின்றி புருஷோத்தமனிடத்தில் பக்தி என்பதே உயர்வு.  சாலோக்யம், சாமீப்யம், சாரூப்யம், அல்லது பகவானுடன் ஒன்றாக ஆதல், இவைகளைக் கூட உயர்வாக எண்ண மாட்டார்கள்.  முக்குணங்களையும் கடந்து என் பாவமே பெரியதாக உணருவார்கள்.   ஸ்வ தர்மத்தை விடாமல் செய்து கொண்டு இருப்பார்கள்.  சுலபமான கர்ம யோகம்- யாக காரியங்கள் அல்லது சாஸ்திரங்களில் விதிக்கப் பட்ட காரியங்கள் மட்டுமே. அதிலும் அளவுக்கு மிஞ்சி போகாமலும்,  உடல் வருத்திக் கொள்வதும் இல்லாமல், நித்யமும் என் தியானம், தர்சனம், ஸ்பர்ச, பூஜா விதிகள், துதி, வந்தனைகள், சகல உயிர்களிடமும் என்னையே காண்பது, சத் சங்கம் இவற்றுடன், பெரியவர்களிடம் மரியாதை, சிறியோர்களிடம் பரிவு, சமமானவர்களிடம் நட்பு, மற்றும் யம நியமங்கள், என்று இருப்பார்கள்.  ஆத்யாத்மிக  சொற்பொழிவுகளைக் கேட்கலாம், நாம சங்கீர்த்தனைகளில் கலந்து கொள்ளலாம், நேர்மையாக உள்ள மக்களுடன் இணைந்து செயலாற்றலாம்,  தான் செய்கிறேன், தனது என எண்ணாமல் பொது வேலைகளில் ஈடுபடலாம், இவைகள் என் தர்மத்தைப் பேசுபவை, என் நாமத்தை கேட்டுக்கொண்டிருந்தாலே இந்த குணங்கள் வந்து சேரும்.  எங்கோ காற்றில் கலந்த மணத்தை நம் நாசி இழுத்துக் கொள்வது போலத்தான். யோகத்தில் கவனம் உள்ள மனம் தன் ஆத்மாவை அறிந்து கொள்ளும்.  நான் எல்லா உயிரினங்களிலும் எப்பொழுதும் இருப்பவன். இதை அறிந்த மனிதர்கள் என்னை அர்ச்சா வடிவில் வணங்குகிறார்கள்.  அனைத்து உயிரினங்களிலும் உள்ள என்னை அர்ச்சா (சிலை, படங்கள்) என்று பார்ப்பதும் ஒரு வழி.. மனதில் தனக்கும் மற்றவர்களுக்கும் தாரதம்யம் பார்க்காமல்  இருப்பவன் நல்ல கதியடைவான். எல்லா ஜீவன்களுமே ஸ்ரேஷ்டர்கள்- சிறந்தவர்கள் தான்.  அதில் சித்தம்-மனம் புத்தி இருப்பவன் சற்றே மேலானவன். அதிலும் ஸ்பர்ஸ வேதி களைவிட, ரஸம் அறிந்தவர்கள் மேல்.  அதை விட கந்தம் நுகர முடிந்தவர்கள் மேல். அதை விட சப்தம் அறிந்தவர்கள் மேல்.  ரூப பேதங்களை அறிபவர்கள் சிறந்தவர்கள்.  நிறைய பாதங்களை உடைய ஜீவன்களை விட, நான்கு கால்களுடைய  ஜீவன்கள் மேல்., அதை விட மேல் இரு கால்கள் உடைய மனிதன்.

அதே போல வர்ணங்கள் நான்கு. அதில் ப்ராம்மணன் முதல், அவர்களிலும் வேதம் அறிந்தவன், அதை விடவும் அதன்  பொருளை உணர்ந்தவன் மேல். பொருள் அறிந்தவர்களிலும் சந்தேகங்களை சரியாக விவரித்து தகுந்த பதில் சொல்ல அறிந்தவன் மேல். அதைவிட தானே தன் வேலையைச் அல்லது தொழிலைச் செய்பவன்.  கூட்டம் சேர்க்காமல் தானே தர்மத்தை உணர்ந்து செய்பவன் அதிக பலன் பெறுவான்.

பகவான் ஒரு அம்சமாக என்னுள் உள்ளது போலவே அனைத்து உயிரினங்களிலும் இருக்கிறான் என்பதை திடமாக உணர்பவன் தான் சிறந்தவன். பக்தி யோகம், கர்ம யோக மார்கம்  இரண்டுமே மனிதர்களுக்கு உகந்தது. ஏதோ ஒன்றில் நம்பிக்கை வைத்து அனுசரித்து வந்தாலே பகவானை அடையலாம்.

ப்ரும்மன் என்றும் பரமாத்மா என்றும் ப்ரதானம் என்றும், புருஷன், என்றும் சொல்லப்படுபவன். தைவம் என்பது கர்மா அல்லது செயலை குறிக்கும்.  ரூப பேதங்கள் அடிப்படையில் தெய்வம்,  காலம் எனப்படும்.

பஞ்ச பூதங்கள், மஹத் முதலானவை, இவையும் பகவானால் படைக்கப் பட்டவையே.  யாரும் தன்னைச் சார்ந்தவன் என்றோ, த்வேஷி என்றோ , எளியவன் என்றோ, பலவான் என்றோ பேதங்கள் பகவானுக்கு இல்லை.

அவரிடம் பயந்து வாயு வீசுகிறது, சூரியன் தபிக்கிறான், மழை காலத்தில் பொழிகிறது, நக்ஷத்திர  கூட்டங்கள் பிரகாசிக்கின்றன. காட்டில் மரங்கள் வளருகின்றன, லதா, செடி கொடிகள், புதர்கள்  ஔஷதிகள் தங்கள் பருவ காலங்களில் தவறாமல் பூக்கின்றன, பழுக்கின்றன.

அவருடைய கண்காணிப்பில் ஆறுகளில் நீர் ப்ரவஹிக்கிறது.  சமுத்திரம் தன் எல்லையை கடக்காமல் இருக்கிறது. அக்னி எரிபொருளில் மறைந்தே இருக்கிறது. மலைகளையும், மரங்களையும் தாங்கும் நிலம் மூழ்குவதில்லை. ஆகாயம் மூச்சு விடும் உயிர்களுக்கு தன் உடலைத் தருகிறது. – பிராணிகள் விடும் உள்மூச்சு வெளி மூச்சு ஆகாசத்தில் கலக்கிறது. அகங்காரத்துடன் கூடிய மஹத் தத்வம் ப்ரும்மாண்டத்தில்  ஏழு ஆவரணங்களுடன் விஸ்தரிக்க இடம் கொடுக்கிறது.

காலம் என்ற நியமத்தால், விஷ்ணு முதல் படைப்புத் தொழிலில் உள்ள அனைவரும், சராசரங்களில், ஜகத் ரசனா- உலகை உருவாக்குதல் என்ற காரியத்தை செய்ய முடிகிறது.  மற்றவர்களுக்கு தடை விதித்தும், முடித்தும் வைக்கும்  காலன் ஸ்வயம் அனாதி எனப்படுகிறான்.  (ஓரு ஜீவனின் காலத்தை முடிக்கும் பொழுதே மற்றொன்று பிறக்கச் செய்கிறான்- தந்தையிடமிருந்து புத்திரனை உத்பத்தி செய்கிறான் என்பதாக)  தன்னுடைய சம்ஹார சக்தி – ம்ருத்யு என்பதை கொண்டு, யமராஜன் முதல் அனைவருக்கும் முடிவைத் தர வல்லான். 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற மூன்றாவது ஸ்கந்தத்தின், இருபத்து ஒன்பதாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் – 45)

அத்யாயம்-30

கபிலர் சொன்னார்: பொதுவாக ஜனங்கள் காலத்தின் சக்தியை உணருவதில்லை.  மேகத்தை வாயு அலைக்கழிக்கிறது. அதன்  சக்தியை அறியாத மேகம், காற்றினால் தான் தள்ளப் படுவதை உணருவதில்லை. அது போலத் தான்.  பின்னால் சுகமாக இருக்க இப்பொழுது உழைக்கிறார்கள்.  தன் தேகம் சுற்றத்தார் அனைவரும் சாஸ்வதம்- அழிவில்லாமல் இப்படியே இருப்போம் என்ற எண்ணம். வீடு, நிலம், செல்வம் எல்லாமே நிலை பெற்று என்றும் இருக்கும் என அறிவில்லாமல் நம்புகிறார்கள். எந்த விதமான உடலோ, ஜீவன் அதிலேயே லயித்து வாழ்கிறது.  மிக வருத்தமான சூழ்நிலையிலும் உடலைத் தியாகம் செய்ய முன் வருவதில்லை.   தான், தன் மனைவி, மகன்,வீடு, பசுக்கள், செல்வம், உறவினர் இவர்களிடம் பற்றுதல் -அதன் காரணமாக தன்னை பெரியதாக எண்ணிக் கொள்கிறான்.  சிறு குழந்தையின் கல கலவென்ற பேச்சு , பெண்களின் சகவாசம் தரும் சுகம்,  வீட்டின் துக்கம் தரும் செயல்களையும் சுகமாகவே நினைக்கிறான். செல்வத்தை நிறைய சேர்த்தால் சுகம் என்று நம்புகிறான்.  வெட்டி பேச்சு, காரணமின்றி மற்றவர்களிடம் பொறாமை,  குடும்ப பொறுப்பு, அதைச் சார்ந்த வேலைகளால் ஓய்ச்சல்,  செலவு அதிகம், வரவு குறைவு, பற்றாக்குறை,  அதனால்  கவலை. இப்படி உலக வாழ்க்கையில் தான் தன்னைச் சேர்ந்தவர்களை காப்பாற்றவே திணறுகிறான்.  அப்படி செய்தாலும் வயதான காலத்தில் தன் உடலும் சக்தி இழந்து, அவர்களிடமும் மதிப்பு இல்லாமல் போகிறது.   வயதான பசு போல.  தவிர, முதுமை பலவிதத்திலும் சிரமத்தையே தருகிறது. மரணத்தை எதிர் நோக்கி, பயத்துடனே வாழ வேண்டியிருக்கிறது.  வியாதி காத்திருக்கிறது. கபம், ஆயாசம், இருமல் என்று பல வித தொல்லைகள்.  யம தூதர்கள் வருவார்கள்.  ராஜ சேவகர்கள்  போல, கட்டி இழுத்துச் செல்ல வருவார்கள். நரகமா, அந்ததாமிஸ்ரம் என்ற இருட்டு குகையா, எங்கு செல்லப் போகிறோம் என்பது தெரியாது.  எங்கு செல்வோம் எப்படி இருப்போம் எந்த உறவினர்கள் உடன் வருவார்கள், எதுவுமே தெரியாது. இந்த ஜன்மத்திலேயே நரகம் போன்ற துக்கத்தையும் ஸ்வர்கம் போல சுகங்களையும் அனுபவித்து விடுகிறார்கள்.  குடும்பத்தை நிர்வக்கிக்கவும், தன் உதர நிமித்தமோ செய்த செயல்களை, சேமித்தவைகளை விட்டுப் போகும் ஜீவன் இந்த ஜன்மத்தின் கர்ம பலனை அனுபவிக்கிறான்.  அதர்மமாக தனக்கு, தன் சுற்றத்தார்களுக்கு மட்டுமாக செய்த செயல்களின் பலன் அந்ததாமிஸ்ரம் என்ற  மிக தாமசமான இடத்தையடைகிறான்.  இந்த லோகத்துக்கு கீழே நரகம் இன்னமும் கடுமயான அந்த் தாமிஸ்ரம் என்ற நிலைகள்,  இவைகளில் யாதனைகள்- தண்டனைகளை அனுபவித்து விட்டு மீண்டும் பிறக்கிறான்.  

மேலும் விவரமாக கர்ம பலனாக நரகத்தை அடைவதை சொல்கிறார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற மூன்றாவது ஸ்கந்தத்தின், முப்பதாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் – 34)

அத்யாயம்-31

வினைப் பயனை அனுபவித்து முடிந்தவுடன்  புது உடலுடன் பிறப்பதை சொல்கிறார்.   முன் சொன்னபடி, பிறப்பும் இறப்பும் தெய்வ சங்கல்பம் .  அதன் படி, புருஷ ஜீவனின் ரேதஸ், ஒரு துளி, ஸ்த்ரீ தேகத்தில் புகுந்து புது ஜீவனை உருவாக்குகிறது.  ஆரம்பத்தில் இரண்டும் சேர்ந்து ஐந்து இரவுகளில் உருண்டையான  சேறு போல குழம்பி இருக்கும். அதன் பின் பத்து நாட்களில் இலந்தை பழம் (பதரீ) அளவு வளரும். இந்த சமயம் கடினமாக உருவம் பெறும். ஒரு மாதத்தில் தலை, இரண்டாவது மாதம் கைகள், மூன்றாம் மாதம் நகம், ரோமம், அஸ்தி (எலும்புகள்) மேல் தோல், ஆண், பெண் குறி, நாலாவது மாதம் தாதுக்கள், (ஏழு) ஐந்தாவது மாதம் பசி தாகம், ஆறாவது மாதம் உயிர் வருவதால் இடது பக்க  வயிற்றினுள் வளைய வரும்.   தாயின் உண்ணும் உணவில் அந்தந்த பிறவியின் இயல்புக்கு ஏற்ப,  பிறக்கும் புது ஜீவன் தன் உணவைப் பெறும். ஆயனீ என்ற நாடியால் தாயின் நாபியுடன் இணக்கப்படும்.

இந்த நிலையில் உணர்வுகள் பசி, தாகம் தவிர, புத்தி (மூளை) செயல்படுவது, பல முன் பிறவிகளின் நினைவுகள், அதனால் கூண்டில் அடைபட்ட பறவை போல தவிக்கும்.  ஏழாவது மாதத்தில் மேலும் அறிவு வளரும். பூர்வ ஜன்ம வாசனை இருந்தால் பகவானை துதிக்கும்.  கர்பத்தில் தங்குவதற்காக ஏழு விதமான பந்தங்களால் கட்டுபட்டிருக்கும் ஜீவன் ஆவலுடன்  கர்பாவாசம் முடிந்து பூமியில் பிறப்பதை எதிர் நோக்கி இருக்கும்.  தாயின் ஒவ்வொரு அசைவினாலும் பாதிக்கப் படும் ஜீவன்  வருந்தி அழும். ஸ்ரீ க்ருஷ்ணரை வணங்கி இனி பிறவியே வேண்டாம் என்று வேண்டிக் கொள்ளும்.

ஜந்து வேண்டுதல்:  பல சரீரங்களில் இருந்து புறப்பட்டு வந்த பின்னும், இந்த ஜகத்தில் பிறக்க ஆசைப்பட்டேனே.  இனி பிறவியே வேண்டாம் , உன்னையே சரணடைகிறேன்.  என் வினைகளே தான் தற்சமயம் இந்த தளைகள் என்று அறிந்து கொண்டேன்.  இந்த மாயா மயமான சரீரத்திலும் நீ என் ஹ்ருத்யத்தில் வசிக்கிறாய்.  உன்னை வணங்குகிறேன்.  பஞ்ச பூதங்களால் ஆன இந்த சரீரத்தில் மறைந்திருக்கும் அளவற்ற மகிமையுடைய ப்ரக்ருதி புருஷன் என்ற இரண்டு விஷயங்களுக்கும் மேலான பர புருஷனை வணங்குகிறேன். இவ்வாறு பலவாறாக துதிக்கும்.  பிறந்த பின் தன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற பயம் ,மற்றொரு முறை இந்த கர்ப வாசம் வேண்டவே வேண்டாம் பகவானே என்று கதறி அழும்.

பத்து மாதம் ஆனவுடன், சூதி மாருத:- ப்ரசவத்தை நடத்தி வைக்கும் வாயு வந்து கீழே தள்ளிவிடும். திடுமென பிறப்பு – வாக்கும் இன்றி, கவலையுடன் கஷ்டப்பட்டு- மூச்சு விட கூட சிரமத்துடன்  மெள்ள நகரும். இதுவரை இருந்த ஞானம் எங்கே போயிற்று?  மல மூத்திரங்களின் இடையில்  மனதில் நினைப்பதை வெளியில் சொல்ல முடியாமல் வாய் மூடி கிடக்கும்.  தூங்கப் பண்ணுவார்கள். படுக்கை பிடிக்காது. ஏதேதோ, வேர்வை முதலான பழக்கமில்லாத நெடி  இது ஒரு வாதனை. சற்றே வளர்ந்த பின் வேறு விதமாக அவஸ்தைகள்.  கேட்டது கிடைக்காது. அறியாமை, சம்பந்தமில்லாத கோபம், ஆத்திரம். வருத்தம். காம க்ரோத லோபங்களுடனேயே வளரும் மனித ஜீவன். பஞ்ச பூதங்களாலான சரீரம் என்பதெல்லாம் மறந்து,  நான் எனது என்றே நினைத்திருக்கும். திரும்பவும் வினைப் பயங்கள்,  புதிய கர்ம பந்தனங்கள், யாருடன் நட்பு, எது  கூடா நட்பு என்பது தெரியாது.   உடல் உபாதைகள், இதற்கிடையில் சிறிய சிறிய சந்தோஷங்கள், முன் போலவே வாழும். சத்யம், தயா, மௌனம், ஒழுக்கம், புத்தி, ஸ்ரீ, ஹ்ரீ, புகழ், பொறுமை, சம தமம், பகம் என்ற ஆறு குணங்கள்  இவைகள் அசத் சங்கத்தால் கெடும். 

இவ்வாறு உலக வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களையும், சங்கத்தால் உயர்வதும் தாழ்வதும், காம க்ரோதாதிகளை அடக்க முடியாமல் தவிப்பதுமான  உலக வாழ்கையை விவரித்து, பின் சமாதானமாக சொல்கிறார்.  புத்தியால், நல்ல விஷயங்களை அறிந்து,  இது தான் ஜீவ கதி என்று தெரிந்தபின் முக்தியை அடையும் வழியில் மனதை செலுத்தி  யோக வைராக்யங்களுடன் ,மாயையால் பாதிக்கப்படாமல் இந்த உலகில் வாழ்ந்து பரகதியை அடையலாம். அதனால் கவலையோ, பயமோ, பதட்டமோ வேண்டாம்.  என்றார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  என்ற மூன்றாவது ஸ்கந்தத்தின், முப்பதாவது ஒன்றாவதுஅத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் – 34)

அத்யாயம்-32

மனிதனாக பிறந்தவன் வளர வளர, பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறான்.   குடும்ப வாழ்க்கை, குழந்தைகள், முதியவர்கள், சுற்றத்தார் என்று பலருக்கும் அவன் உதவி செய்வதும்  அந்தந்த வயதுக்கான தர்மத்தை பாலனம் செய்வதும் இயல்பாக அமைகிறது.  பொருள் ஈட்டவும், பல செயல்களைச் செய்யும் பொழுதும்,  நல்லதும் நன்மை அல்லாததுமான இருவிதமான வினைகள் தொடருகின்றன. பகவத் பக்தி மட்டுமே என்றிருந்த நிலை மாறி, யாக காரியங்கள், தேவ காரியங்கள், பித்ரு காரியங்கள் என்று அவனுடைய கவனம் சிதறுகிறது. குடும்பஸ்தனுக்கு இவை தேவையே. இதில் ஏற்படும் சிரத்தை பகவானிடத்தில் மனம் ஒன்றி பக்தி செய்யும் நேரத்தையும், ஈடுபாட்டையும் குறைக்கிறது.  அதனால் இந்த பிறவி முடிவில் மரணித்த பின் சாந்த்ரமஸம் என்ற லோகம் செல்கிறான். இந்த இடத்திற்கு சென்றவர்கள் வினைப் பயனுக்கு ஏற்ப சுகமாக இருந்துவிட்டு  திரும்ப பிறப்பார்கள்.   பாம்பணையில் துயிலும் பகவான் போல இந்த குடும்பஸ்தர்களுக்கு இக வாழ்க்கை முடிகிறது. தீரர்களாக இருப்பவர்கள், காமார்தங்களில் மூழ்காமல், தர்மம் மட்டுமே என்று இருப்பவர்கள், இவர்கள் சுத்தமான மனதுடன் தனிமையில் சாந்தமாக யோக சாதனைகளோ, தியானங்களோ செய்வர்.

ஞான மார்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள், தான், தனது என்ற மமதை இல்லாமல், தன் தர்மத்தை செய்வதிலும் சாத்விகமாக சுத்தமான மனதுடன் செய்வார்கள். இவர்கள் சூரியனின் வழியில் மேலுலகை அடைகிறார்கள். அனந்தனான பகவானிடத்தில்  சென்று. அழியாத தன்மையை அடைவார்கள். மறு பிறப்பு இவர்களுக்கு இல்லை. தன் இக லோக வாழ்க்கையில் பற்றின்றி இருந்ததன் பலனாக,  நிலம்,நீர்,காற்று,தீ,காற்று, வானம் எனும் ஐந்தும் மனம் இந்திரியங்கள் என்பவைகளும் சேர்ந்து உண்டாகும் அழியும் தன்மையுடைய  பூத உடல் இவர்களுக்கு வராது.  வைகுண்ட லோகம் எனும் பரமாத்மாவின் உலகிலேயே சாஸ்வதமாக பகவானின் பணியில்,  ஈடுபட்டவர்களாக இருப்பர்.

தாயே! அந்த சர்வ ஜீவன்களின் ஹ்ருதயத்திலும் வசிக்கும் நாம் கேட்டு அறிந்த பகவானையே சரணம் அடைவாயாக. இவர்  ஆதி – முதல் முதல்வர். வேத கர்ப:- வேதத்தை அறிந்த ரிஷிகளுடன் இருப்பார்.  யோகேஸ்வர்கள்.  குமாரர்கள், சித்தர்கள், யோக சாதனையில் வென்றவர்கள் இவரை சூழ்ந்து இருப்பர்.  

அபிமானம் முதலான தன் பிறர் என்ற உணர்வு இல்லாமல் தனித்து சாதனைகள செய்ய, சகுணமாக -உருவத்துடன் புருஷோத்தமன் ப்ருஷர்ஷபன்- என்றெல்லாம் அழைக்கபடும் ப்ரும்ம தத்வம்  இவற்றைஅந்த ஈஸ்வர மூர்த்தியில் கண்டு, வழிபடுவதும் ஒரு முறை. இவர்களுக்கும் மறு பிறவி உண்டு.

தர்ம வழியில் உழைத்து சேர்த்த செல்வம், அதையும் தர்ம வழியிலேயே பலருக்கும் உதவுமாறு செலவழித்த நன் மக்களும் மறு பிறவியடைவார்கள். யாக கரியங்களை செய்பவர், கர்ம யோகிகள், இவர்கள் செய்யும் செயலில் ஈடுபாட்டுடன் செய்வதுடன், பலனை எதிர் பாராமல் செய்கிறார்கள்.  சிரத்தை – செய்யும் தொழிலில் நம்பிக்கையும், திறனும் தான் செய்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் செய்வது-  இவர்கள் குறைகளுக்கு அப்பாற்பட்டவர்கள். பொது மக்களுக்கு அனுகூலமாக இருப்பவர்கள். இவர்களுக்கும் மறு பிறவி உண்டு.

ராஜஸ குணமே மேலோங்கி இருப்பவர்கள்.   இந்திரியங்களை அடக்க முடியாதவர்கள், காமமே பெரிதென்று வாழ்பவர்கள். இவர்கள் பித்ரு லோகத்தை அடைகிறார்கள்.  அதன் பின்னும் தன் குடும்பத்தாரை நேசிப்பார்கள்.

ஹரியை எதிர்ப்பவர்கள்,  அவரை வணங்காத பலர் தெய்வ நிந்தனை செய்பவர்களாக, அச்யுத கதையின் ருசி தெரியாதவர்களாக, வேண்டாத கதைகளை கேட்பவர்களாக, விஷத்துக்கு சமமான மட்டமான ஆகாரங்களை உண்பவர்கள், தென் திசை நோக்கிச் செல்வர். பித்ரு லோகம் செல்வர்.  இவர்கள் திரும்ப பிறந்து,  இறந்து என்று,  மரணம் வரையிலான வாழ்க்கையையே திரும்ப வாழ்வர்.  இவர்கள் செய்த சுக்ருதங்கள், நல்ல காரியங்களின் பலன் தீரும் வரை,  தேவ லோகமோ, பித்ரு லோகமோ அதில் இருந்து, புண்யம் தீர்ந்தவுடன் , மறுபடியும் பூமியில் விழுவார்கள்.  

அதனால், பரமேஷ்டி என்ற பகவானை மனம் ஒன்றி பூஜை செய்.  அவருடைய அருளால் நல்ல கதியை அடைவாய். வாசுதேவன்  தான் பகவான். அவனிடத்தில் செய்வது தான் பக்தி யோகம். அதை செய்யும் பொழுது சீக்கிரமே வைராக்யம் கை கூடும்.  ப்ரும்ம தர்சனம் என்ற ஞானம் வரும்.   தனக்கு பிரியமானவன், மற்றவன் வேறு என்ற எண்ணம் மாறும்.  அனைவரையும் சமமாக பார்க்கும் , தள்ளத் தகுந்தது, இது ஏற்கத் தகுந்தது என்ற பாகுபாடுகள் அவனிடத்தில் இல்லை.  மாறு பட்ட கொள்கையுடையவன் என்பதால் ஒருவனை வெறுக்காத அவன் பதம் தான் நமக்குத் துணை.  பர ப்ரும்மம் – ஞானமே உருவானவன்- அறிவே அவன். பரமேஸ்வர:- பலவிதமான பாவனைகளுடன் பார்த்தாலும் பகவான் ஒருவனே.

இந்த நிர்குணமான ப்ரும்மத்தையே, சிலர் அர்த்த ரூபத்தில் காண்பர்.  மகானான இவன் ரூபம், மூன்று விதமாக விரியும். ஐந்து விதமாக  விரிந்து ஸ்வராட்- , பதினோறு விதமாக விரிந்து ப்ரும்மாண்டம் என்று பார்த்தோம். இதை சிரத்தையுடனும், பக்தியுடனும் தியானம் செய்.

இது தான்  ப்ரும்ம தரிசனம் – இந்த பிறவியில் நாம் பெறக் கூடிய பெரிய அறிவு, செல்வம் எல்லாம். ப்ரக்ருதி, புருஷன் என்ற தத்வங்கள்.  முடிவாக நாம் அறிவது, ஞானமோ, கர்மமோ, யோகமோ,  அதனதன் சிறப்புகளையுடையதே.   , சகுணமோ, நிர்குணமோ, தன்னையறிதல் என்பதோ ஆத்ம தத்வம் என்பதை காலக்ரமத்தில்  தெரிந்து கொள்ள உதவும்.  பலவிதமான வழிகள், ஜீவனின் கதிகள்,  எந்த உடலில் பிரவேசித்து உயிர் வாழ்கிறதோ.  ஆத்மாவை அறிய மனிதனுக்குத் தான் வழிகள் உள்ளன. இந்த உண்மையை வினயம் இல்லாதவன் நிம்பிக்கையில்லாதவன் புரிந்து கொள்ள முடியாது. அசடானவன், முற்றிலும் மாறான எண்ணம் உடையவனும் புரிந்து கொள்ள முடியாது.  அவர்களுக்கு இவற்றைச்  சொல்லவே வேண்டாம்,   லோபம் உடையவனுக்கும், என்னை எதிர்க்கும்  மூடர்களுக்கும்  சொல்ல வேண்டாம். தெரிந்து கொள்ள விரும்புபவன்,  உண்மையான அறிவு தாகம் உடையவனுக்கு சொல்லுங்கள். அவன் தன்னை மேம்படுத்திக் கொள்ள உதவும்.  பொறுமையாக கேட்க விரும்பும் தன் ஒழுக்கத்துடன் இருப்பவனுக்குச் சொல்லுங்கள். வெளி வேஷம் போடுபவனிடம் விழிப்புடன் இருங்கள்.  அவனால் கெடுதலே.

தாயே! இதை கேட்பவனுக்கும் நன்மைகள் வந்து சேரும். சிரத்தையுடன் கேட்பவன் என் அருளைப் பெறுவான்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  என்ற மூன்றாவது ஸ்கந்தத்தின், முப்பதாவது  இரண்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் – 43)

அத்யாயம்-31

மைத்ரேயர் சொன்னார்:   கபிலர் இதுவரை சொன்ன விஷயங்களக் கேட்ட பின் தாயான தேவஹூதி, கர்தம தர்ம பத்னி,  தன் மோகம் விலகியதாக உணர்ந்தாள். கபிலரை வணங்கினாள். மகனிடம் சொன்னாள்.  நீயே தான் அந்த அஜன்.   பூமியில் பிரஜைகள், மற்றும் சகல உயிரினங்களின் நன்மைக்காக பிரளய ஜலத்தில் உறங்கிய ஆத்ம மயமான உருவம்.  குணங்களே ப்ரவாஹமாக உள்ளவன். அனைத்து உயிரினங்களுக்கும் பீஜமாக இருப்பவன் என் வயிற்றில் பிறந்தாய்.

ஆத்மேஸ்வரன்,  ஆயிரக் கணக்கான சக்திகளை  உடையவன். உலகுக்கே தந்தையாக இருப்பவன் என் வயிற்றில் பிறந்தாய்.  என்ன பாக்கியம் செய்தது என் வயிறு.  யுக முடிவில் வடபத்ர சாயியாக இருப்பவன் என் மகனாக, விரலை சூப்பிக் கொண்டு தூங்கினாய்.  இந்த தேகமே நீ அளித்தது.  ஸூகரன் முதலான அவதாரங்கள் உன் அடியார்களை உய்விக்கவே. இந்த அவதாரமோ, உன்னை அடையும் வழியைச் சொல்ல மட்டுமே. எவருடைய நாம ஸ்ரவணம்- பெயர்களை கேட்பதும், தானும் சொல்வதும், வணங்கி, சதா மனதில் எண்ணி இருப்பதும் உடனடியாக பலனளிக்க கூடியதோ.அதைச் சொன்னாய்.   கண்ணெதிரில் கண்டவர்களின் பாக்கியத்திற்கு அளவேது?  உன்னை நமஸ்கரிக்கிறேன்.  நீயே  பரப்ரும்மம் ,   உன் தேஜஸால் முக்குணங்களையும் ஆள்பவன்,  நீயே  வேதத்தை   தன்னுள் வைத்திருக்கும் அந்த மஹா விஷ்ணு, கபிலனாக வந்துள்ளாய், 

கபிலர் தாயை சமாதானப் படுத்தினார்.  தாயே! என்னுடைய உபதேசங்கள் அனைவருக்கும் ஆனாலும், உனக்கு நல்ல கதியைத் தரவே. இந்த கொள்கை ப்ரும்ம வாதிகளுக்கானது.  அவர்கள் விரும்பியபடி உடலை தியாகம் செய்யக் கூடியவர்கள்.  நீயும் இதில் நம்பிக்கை வத்து சிரத்தையாக அனுசரி.  அதற்காகவே தான் நான் அவதாரம் செய்ததும்.  இப்பொழுது எனக்கு விடை கொடு. 

தாயாரிடம் அனுமதி பெற்று கபிலர்  வட திசையில் மறைந்தார்.  அவளும் சரஸ்வதி நதி தீரத்தில் தவம் செய்து, யோக சாதனைகளை முறையாக செய்து, தீவிரமாக தவத்தில் ஈடுபட்டாள்.  ப்ரஜாபதி கர்தமருடன், தனது இக லோக குடும்ப வாழ்க்கையை நினைத்து பெருமை பட்டாள். அவருடன் விமானத்தில்  சென்றதும், ஒப்புவமை இல்லாத இல்லறம்.  கர்தமருடைய அன்பும், தன் தேஜஸால் விமானத்தில் அழைத்துச் சென்றதும். அதில்  இருந்த வசதிகளையும் நினைத்துப் பார்த்தாள்.  மகன் சொன்ன வழியிலேயே தற்சமயம்  தன் தேவைகளைக் குறைத்து, பகவத் தியானமாகவே இருந்து சித்தர்கள் அடையும் உயர் பதவியை அடைந்தாள். 

இந்த கதையை கேட்பவர்களும் நல்ல அறிவை அடைவார்கள்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  என்ற மூன்றாவது ஸ்கந்தத்தின், முப்பத்து மூன்றாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் – 37

 மூன்றாவது ஸ்கந்தம் நிறைவுற்றது.

|| ஸ்ரீமத் பாகவதத்தில் காபிலோபாக்யானம் என்ற மூன்றாவது ஸ்கந்தம் நிறைவுற்றது || 

ஓம் தத் சத் ||

 || ஸ்ரீமத் பாகவதம்  – ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஏழாவது ஸ்கந்தம். ||

|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||

அத்யாயம்-1  

 பரீக்ஷித் ராஜா வினவினான்:  ப்ரும்மன்!  நீங்களே பகவான், அனைவரிடமும் சமமாக நடந்து கொள்வார்.  அனைவருக்கும் நண்பனாக பிரியமாக இருப்பவர். என்று  சொன்னீர்கள். இந்திரனுக்கு சாதகமாக தைத்யர்களை கொன்றார் என்றும் கதை சொன்னீர்கள். அது ஏன்?  சுரகணங்கள் எந்த விதத்தில் உயர்வு. அசுர்கள் மட்டுமே தண்டிக்கப் படுகிறார்கள்.   குணமில்லாத தேவர்கள் கூட அவருடைய கோபத்துக்கு ஆளாவதில்லையே.  நாராயண குணங்களை சொல்லிக் கேட்டபின் இந்த சந்தேகமும் வருகிறது.  தாங்கள் தான் இதற்கு  சமாதானம் சொல்ல வல்லவர்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: மஹாராஜா! நல்ல கேள்வி.  ஸ்ரீ ஹரியின் சரித்திரம், பாகவத மாஹாத்ம்யம் பக்தியை வளர்க்கும் அத்புதமான சரித்திரம். நாரதர் முதலிய ரிஷிகள் பாடி பரவச் செய்த  புண்ய கதை. ஸ்ரீ க்ருஷ்ணனை வணங்கி மேலும் ஹரியின் கதையை சொல்கிறேன்.  பாரபக்ஷம் இல்லாமல் நாம் அறிந்த இயற்கையின்  நன்மை தீமைகளைக் கடந்தவர். பிறவியற்றவன். நம்மால் அவருடைய செய்கைகளை விமரிசிக்க முடியாது. முக்குணங்கள் சத்வ, ரஜஸ் தமஸ் என்பவை உயர்வும் தாழ்வும் நாம் அதில் காண்பது தான்.  ஸ்ரீஹரி அதற்கு அப்பாற் பட்டவர்,  அதனால் வருத்தமோ, மகிழ்ச்சியோ அவருக்கு இல்லை. பிறவியில் சத்வம் மேலோங்கி இருந்த பொழுது தேவ ரிஷிகள் தோன்றினர். ரஜஸ் மேலோங்கி இருந்த சமயம் அசுரர்கள் தோன்றினர். தாமசம் மேலோங்கி இருந்த சமயம் யக்ஷ, ராக்ஷஸர்கள் தோன்றினர்.  

ஆதித்யனிடம் வெளிச்சம், கட்டைகளில் நெருப்பு, பாத்திரங்களில் நீர், கடத்திலும் வெளியிலும் ஆகாசம், வாசனை மூலம் காற்று  என்று சுட்டிக் காட்டுவது போல பகவானை சுட்டிக் காட்டவழியில்லை.  கவிகள், அறிஞர்கள் தாங்கள் அனுபவத்தால் கண்டறிந்து சொன்னார்கள்.  அசுர்களிடம் பக்ஷபாதம் காட்டி வதம் செய்வதாக நினைப்பது தவறு.   ப்ரும்ம சாபத்தால் அசுர குலத்தில் பிறக்க நேரிட்ட ஜீவன்களை, மீட்கவே வதம் செய்தார்.

ராஜன்! முன் ஒரு சமயம் அஜாத சத்ரு என்று பெயர் பெற்ற தர்ம புத்திரர், யாகம் செய்த பொழுது நடந்த சம்பவம். சேதி ராஜன் என்ற சிசுபாலனுக்கு  வாசுதேவன் சாயுஜ்யம் எனும் தன் அருகிலேயே வாசம் செய்யும்படியான அனுக்ரஹத்தை அளித்தார்.  தர்மபுத்திரர் ஆச்சர்யப் பட்டார்.  அந்த யாக சபையில் கூடியிருந்த ரிஷி முனிவர்களை கேட்டார்.  ‘அஹோ! அத்புதம்.  தனிமையில் தவம் செய்பவர்களுக்குக் கூட கிடைக்காத நல்ல கதி. வாசுதேவன் என்ற பர தத்வத்தில் இந்த சேதி ராஜா சேர்ந்து விட்டான். வாசுதேவனை சதா நிந்தித்துக் கொண்டே இருந்தவன்.   பகவானை நிந்தித்த  வேன ராஜா, தண்டனையை அடைந்தான்.  இந்த தமகோஷ சுதன்- சிசுபாலன்,  நிந்திக்கும்  வார்த்தைகளையே பேசினான்.  தந்த வ்க்த்ரனும் கோவிந்தனிடம் அவன் மேன்மையை  பொறுக்க மாட்டாமல் சபித்துக் கொண்டே இருந்தான்.  ப்ரும்மரூபன் பரம் பொருள், அழிவில்லாதவன் என்று நாம் போற்றும் க்ருஷ்ணனை வாய்க்கு வந்தபடி  தூஷணைகளையே செய்தான்.  இப்படி பொது இடத்தில் அனைவரும் காண தவறாக பேசியவனைக் கூட பகவான் பொறுத்துக் கொண்டது மட்டுமல்ல தன்னிடமே சேர்த்துக் கொண்டார் என்பது நம்மால் நினைக்க கூட முடியவில்லை.  பகவன்! இதற்கு என்ன காரணம்? தயவு செய்து சொல்லுங்கள்’  என்றார்.

ஸ்ரீ சுகர் சொன்னார்:  நாரதர் பதில் சொன்னார்.   இது நிந்தனை, இது புகழ்ச்சி, இது நல்லது, இது கெட்டது என்று மனிதர்கள் கல்பித்துக் கொண்டவையே.  சிலரை உயர்ந்தவர், என்றும் மற்றவர் தாழ்ந்தவர் என்றும்  தங்களுக்குள்ளேயே பேதம் பார்ப்பதும் ,ஹிம்சையும், அபிமானத்தால் தண்டிப்பதும், கடுமையாக பேசுவதும்,  ஜீவன்களுக்குள் நம்மவர் பிறர் என்று பிரித்து வித்தியாசம் பார்ப்பதும்  இவர்கள் அறியாமையே.  அகில லோகமும் பரமாத்மாவில் அடக்கம். எனவே அவர் ஜீவன்களில் தாரதம்யம் பார்ப்பதுமில்லை. தண்டிப்பதும் அந்த ஜீவனின் நன்மைக்காகவே.  பயத்துடன் அணுகுபவரும், அன்புடன் நெருங்குபவரும், காமத்துடன் – தன் தேவையை முன்னிட்டுக் கொண்டு வேண்டுபவரும்,  எப்படியோ அதே போலவே விரோதமாக நினைத்து வருபவரும், அவர் அருகில் சென்றபின் தனித் தனியாக நினைப்பதேயில்லை.  ஒருவர் பக்தி யோகத்தால் அனவரதமும் நினைப்பது போலவே, விரோதியாக நினைப்பவனும் அனவரதமும் அதே நினைவாக இருக்கிறான். குளவி ஒரு புழுவை கொண்டு வந்து தன் கூட்டில் வைத்து   தன் போல ஆக்குமாம். அந்த சிறு ஜீவன் குளவியையே பார்த்து பார்த்து தானும் அதுபோல ஆகுமாம், அது போல பகவானும் தன்னை விரோதிப்பவனையும் அருகில் தன் நினைவோடு இருக்கும்படி வைத்துக் கொள்கிறார்.  நாளடைவில் விரோதியும் பக்தனாவான் என்பதாக சொல்கிறார். இவ்வாறு மாயையால் மனிதனாக வந்த ஈஸ்வரன், ஸ்ரீ க்ருஷ்ணன்,  விரோதியையும் தன்னை நினைக்கச் செய்து அவன் பாபங்களைத் தீர்க்கிறார். 

காமத்தால், த்வேஷத்தால், பயத்தினால் ஸ்னேகத்தால், பக்தியால் என்று பலவிதமாக மனித மனதில் ஏற்றி, அவனை பாபங்களிலிருந்து விடுவிக்கிறார்.  கோபிகள் காமத்தால்,  கம்சன் பயத்தினால், சேதி அரசன் போன்றவர்கள் துவேஷத்தால், வ்ருஷ்ணி குலத்தவர் சம்பந்தம் செய்து கொண்டதால், உங்களைப் போன்றவர்கள் நட்பினால், பக்தியினால் நாங்கள் . வேனன் போன்றவர்கள் கடைசி நிலையில் உள்ளவர்கள். ஏதோ ஒரு உபாயத்தால் அவனையும் ஸ்ரீ க்ருஷ்ணனிடத்தில்   மனம் லயிக்கச் செய்யவேண்டும். 

பாண்டவா!  தாய் வழி உறவினன் சேதி அரசனும், தந்த வக்த்ரனும். இவர்கள் இருவரும் மஹா விஷ்ணுவின் அணுக்க தொண்டர்கள், வாசல் காவலர்கள். சாபத்தினால் அந்த பதத்திலிருந்து தள்ளப் பட்டனர். 

யுதிஷ்டிர் கேட்டார்: எப்படி சாபம் வந்தது? யார் சாபம் கொடுத்தது?   ஸ்ரீ ஹரியின் அருகிலேயே இருந்தவர்கள் என்ன செய்து சாபத்துக்கு ஆளானார்கள்.  வைகுண்ட புர வாசிகள், தேக சம்பந்தமான தொடர்பே இல்லாதவர்கள் என்று கேட்டிருக்கிறோம்.

நாரதர் சொன்னார்: ஒரு சமயம், ப்ரும்மாவின் புதல்வர்கள் சனகன் முதலானோர் மூவுலகையும் சுற்றிக் கொண்டு  வரும் வழியில் வைகுண்டம் சென்றார்கள்.   முன்னோர்களுக்கும் முன்னோர்கள். அவதூதர்கள், ஆறு ஏழு வயது வளர்த்தியிலேயே இருந்தனர். குழந்தைகள் என்று எண்ணி துவாரபாலகர்கள் தடுத்தனர்.  அவர்களை இந்த வைகுண்ட வாசத்துக்கு ஏற்றவர்கள் அல்ல, ரஜஸ் தமஸ் இல்லாத இந்த இடத்தில் யாரென்று கூட வினவாமல் கடுமையாக பேசுகிறீர்கள். உங்களுக்கு ஏற்ற அசுர குலத்தில் பிறக்கக் கடவீர் என்று சபித்தனர். ஆனாலும், கருணயுடன் மூன்று ஜன்மங்கள் அங்கு இருங்கள், பின் ஸ்ரீ ஹரியின் பாத சேவையில் திரும்பி வந்து சேருங்கள் என்றனர்.  அப்படி வந்தவர்கள், மூத்தவன் ஹிரண்ய கசிபு, ஹிரண்யாக்ஷன் இளையவன்;  ஹிரண்ய கசிபுவை சிம்ஹ ரூபம் எடுத்து வதம் செய்தார். ஹிரண்யாக்ஷனை வராகமாக வந்து வதம் செய்தார்.  ஹிரண்ய கசிபு தன் மகன் ப்ரஹ்லாதன், கேசவ பிரியன் என்பதற்காகவே, மகன் என்றும் பாராமல் கொல்லத் துணிந்தான். பலவிதமாக முயன்றும், தர்ம பிரியனான ப்ரஹ்லாதன் பகவத் பக்தன், அமைதியானவன். சம தர்சனம் – அனைவரையும் ஒரே போல காணும் குணம் அவனுக்கு சர்பூதாத்ம பூதனான பகவான் அருளால் வாய்த்திருந்தது. 

அடுத்ததாக கேசினீ என்பவளுக்கு விஸ்ரவஸர் மகனிடம் ராவண கும்பகர்ணர்களாக பிறந்தனர். ராமர் கையால் ராவணன் மாண்டான்.  ராம வீர்யம் பற்றி உனக்கு மார்க்கண்டேயர் சொல்வார்.  அவர்களே தற்சமயம் க்ஷத்திரியர்களாக, தாய் வழி உறவினர்களாக வந்து ஸ்ரீ க்ருஷ்ணரின் சக்ரத்தால் வதம் செய்யப் பட்டு நல் கதியடைந்து விட்டனர்.   விஷ்ணு பார்ஷதர்கள் என்ற துவார பாலகர்கள், திரும்பவும் தங்கள் பதவியை அடைந்தனர்.

யுதிஷ்டிரர் திரும்பவும் கேட்டார்:  தன் மகனிடமே எப்படி அந்த அளவு துவேஷம் வந்தது?  பகவன்! ப்ரஹ்லாதன் கதையைச் சொல்லுங்கள்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின்,    முதல் அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-47 

அத்யாயம்-2

நாரதர் சொல்லானார்:

தன் தம்பி ஹிரண்யாக்ஷனை வதம் செய்து விட்டார் என்று அறிந்து ஹிரண்யகசிபு அதிக கோபமும்  வருத்தமும் அடைந்தான்.  கண்கள் சிவக்க, பல்லை கடித்தபடி, க 3தையை உயரத் தூக்கி   தன் பக்கத்து தானவ தைத்தேயர்களை அழைத்தான். ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்து, பங்காளி வந்து என் சகோதரனை கொன்று விட்டான்.  மாயாவி, காட்டு மிருகம் போல க்ரூரமாக, சற்றும் குணமின்றி, சிறு பிள்ளைத் தனமாக செய்த செயலுக்கு அவனை என் ஸூலத்தால் பிளந்து கொட்டும் உதிரத்தை வைத்து என் தம்பிக்கு தர்ப்பணம் செய்யப் போகிறேன்.   வேரோடு குலத்தையே அழிக்கிறேன்.  அதன் பின்  தேவலோகத்தவர், விஷ்ணு ப்ராணர்கள் – விஷ்ணுவே அவர்களின் மூச்சு- என்று சொல்லிக் கொள்கிறார்களே அவர்கள் ஒட்டு மொத்தமாக அழிவார்கள்.  நீங்களும் தவம் ஸ்வாத்யாயம் என்று செய்து உங்கள் பலத்தை பெருக்கிக் கொள்ளுங்கள்.  ஏனெனில் விஷ்ணு, அந்தணர்கள் செய்யும் யாகத்தால் வளருகிறான்.  யாகம் தர்ம மயமான  பரம புருஷனே. தேவ, ரிஷி, பித்ருக்கள் அனைவரும் தர்மத்தை அறிந்து அதன் படி நடப்பவர்களே. எங்கெல்லாம், அந்தணர்கள், பசுக்கள், வேத பாராயணம் , வர்ணாஸ்ரம காரியங்கள் நடக்கின்றனவோ, அங்கெல்லாம் சென்று தீயிட்டு கொளுத்துங்கள்.  அதைக் கேட்டு   சுயமாகவே கலவரத்தை விரும்பும்  அவனுடைய அடியாட்கள், சென்ற இடம் எல்லாம் கலஹம் செய்தனர் தீ மூட்டினர், மக்களை பயமுறுத்தினர்.  புரங்களை, கிராமங்களை உத்யானவனங்கள், க்ஷேத்ரங்கள், ஓய்வு எடுக்கும் இடங்கள்,  மாட்டுக் கொட்டில்கள், குதிரை லாயங்கள், சேனை தங்குமிடம் எதையும் விடவில்லை தீக்கிரையாக்கினார்கள்.   பாலங்கள், ப்ராகாரங்கள், கோபுரங்கள் இவைகளை  சுத்தியலால் தாக்கினர்.  நெடுங்காலமாக வளர்ந்த மரங்களை சிலர் கோடாலிகளால் வெட்டினர்.  இவர்கள் படுத்திய பாட்டில், தேவர்கள் தேவலோகத்தை விட்டு வெளியேறினர்.

ஹிரண்ய கசிபு, இனி இங்கு தைத்யர்களின் ஆதிக்கம் தான். நானே அழிவில்லாத ஆத்மா, சுத்தன், எங்கும் வியாபித்து இருப்பவன், என்றவன், மேலும் பல நல்ல குணங்களை தன்னிடம் இருப்பதாக சொல்லிக் கொண்டு, திரிந்தான். வேகமாக செல்லும் நதியின் நீரில், மரங்களும் உடன் செல்வது போல தோற்றம் தருவது போல, பூமியே தன் இஷ்டத்துக்கு ஆடுவது போல உணர்ந்தான்.  தன்னிடம் இல்லாத தெய்வத் தன்மையை தானே தன்னிடம் இருப்பதாக பறை சாற்றிக் கொண்டு உலவினான்.

தன் தாயிடமும், பெண் உறவினர்க்ளிடமும், புதல்வர்களையும் கவலைப் படாதீர்கள்.  சண்டைக்கு பயப்படவேண்டாம். எதிரியின் கையால் அடிபட்டு மாய்வது சிறப்பான மரணம் என்றான். வழிப் போக்கர்களுக்காக தண்ணீர் பந்தல் வைத்திருப்பர்.  அங்கு வருபவர்கள் தாகம் தீர தண்ணீரை குடித்துவிட்டு போவர். அவர்களுக்கும், அந்த தண்ணீர் பந்தலுக்கும் என்ன உறவு- சில நிமிடங்கள். தாகம் தீரும் வரையே-அதே போலத் தான் ஜீவன்கள் உலகில் வாழும் வாழ்க்கையுடன் தொடர்பும்.  நித்யமான ஆத்மா   அழிவில்லாதது.  சுத்தமானது, எங்கும் பரவி இருப்பது, அனைத்துக்கும் மேலானது. இந்த ஆத்மா ஒரு உடலில் தங்கி அந்த உடலுக்குரிய ஜீவனின் குணங்களை ஏற்றுக் கொள்கிறது.  நதிக் கரையின் மரங்கள் அதன் ஓட்டத்தோடு இயைந்து நகருவது போல தோற்றம் தருவது போலவே, கண்களால் பார்த்து  பூமி  நகருவதாக நினைக்கிறார்கள்.  இந்த ஓட்டத்தோடு ஓடினாலும், தன்னையறிந்தவன், மனதில் கல்மஷம் இல்லாதவன், தானும் அந்த பரமாத்மாவுக்கு இணையாக ஆகிறான்.  நிரந்தரம்  இல்லாத உடலை தனது என்று நினைப்பதும், உறவினர் அன்புடையவர், மற்றவர் என்று பிரித்து சொல்வதும், அவர்கள் பிரிவுக்கு வாடுவதும் வினைப் பயன்.

ஒரு செயல் நடப்பதும், அது முடிவதும், சோகமும்,  விவேகமும் அவிவேகமும், கவலையும்  மறதியும் நிறைந்த இந்த கதையை யமராஜனின் பந்துக்கள் பேசிக் கோள்வதை வைத்து சொல்கிறேன் கேள்.

உசீனரன் என்ற இடத்தில் ஒரு அரசன், சுயக்ஞன் என்பவன், தன் தாயாதிகளுடன் யுத்தத்தில் கொல்லப் பட்டான். அவனை யுத்த களத்தில் பார்த்தவர்கள் மிகவும் வருந்தினர்.  ரத்ன கவசம் உடைந்து, ஆபரணங்கள் சிதறி எங்கும் இறைந்து கிடந்தன.  ஹ்ருதயம் அம்புகளால் துளைக்கப் பட்டு,  தரையில் கிடந்தான்.  பத்னிகள் இந்த நிலையில் கணவனை பார்த்து ஹா நாதா! என்று மிகவும் வருந்தி அழுதனர்,   பெரும் குரலில் அழுது, அஹோ, விதாதா! படைத்தவனே, கருணையில்லையா, எங்கள் பிரபு உசீனர எனும் ராஜத்தின்  ப்ரஜைகளுக்கு வாழ்வின் ஆதாரமாக இருந்தவன்,  இப்பொழுது அவர்களுக்கு துக்கத்தை அளிப்பவனாக மாற்றி விட்டீர்கள்.  எங்கள் அரசன், எங்கள் கணவன் இல்லாமல் எப்படி வாழ்வோம்?  எங்களையும் அவனுடன் சேர்த்து அழைத்துச் செல்லுங்கள் என்று முறையிட்டனர்.  சூரியனும் மறைந்தான்.

விடிந்த பின் சிறு பையனாக வேடம் தரித்து யம ராஜா அவர்களிடம் வந்தார்.  ‘அஹோ! இது உலக நியதி தான் என்று அறிந்தும் இப்படி பரிதவிக்கிறீர்களே.  எங்கிருந்து வந்தார்களோ, அங்கேயே திரும்பிச் செல்வது தான் மனித தர்மம்.   அதை மறந்து இறந்தவனுக்காக எவ்வளவு துக்கம், அழுகை, ப்ரலாபம்.  நாம் எப்படி வந்தோம் இந்த பூவுலகத்துக்கு. நம் முன்னோர்கள் நம்மை நினைக்கிறார்கள். மற்ற ஓநாய் போன்ற மிருகங்கள் விழுங்கிவிடாதபடி கர்பத்தில் வைத்து தாய் காக்கிறாள். பிறந்த குழந்தையை அழிவில்லாத பகவான் காப்பாற்றுகிறார். தண்டித்தும் அரவணைத்தும் தந்தையாக வளர்க்கிறார்.  வழியில் விழுந்து அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைக்கிறது. வீட்டில் பாதுகாத்து வைத்திருப்பது அழிந்தும் போகிறது.  விதியால் காப்பாற்றப் பட்டு, அநாதையாக காட்டில் திரியும் ஜீவனும் உயிர் வாழ்கிறது.   உயிரினங்கள் தாங்கள் பிறக்க காரணமான உடல்- பிறவியை அனுசரிக்கின்றன.  ஒரே விதமான வினைப்பயன் என்பது எப்பொழுதும் இருப்பதில்லை.  சரீரம் பரம புருஷனின் மனதில் தோன்றியது.  ஜீவனுக்கு சில காலம் தங்க ஒரு இடம்-  வாடகை வீடு போல.  காலம் தான் வாழ்வை நிர்ணயிக்கிறது. நீரும், ஸூரியனின் தாபமும் சேர்ந்து வளரும் தாவரங்கள் நாளடைவில் முற்றி உருவழிந்து தானே மறைகின்றன.   மரத்தினுள் நெருப்பு மறைந்திருப்பது போல காற்று  ஜீவன்களின் உள் உறைகிறது,  ஆகாயம் எங்கும் பரவி இருப்பது தெரிவதேயில்லை அதே போல பரம புருஷன் நம் அறிவுக்கு புலனாவதில்லை. இந்த சுயக்ஞன் தூங்குவது போல கிடக்கிறான், இவனை எண்ணி வருந்த வேண்டாம்.  உடல் இருக்கும் வரை ஜீவன் அதற்கான வேலைகளை செய்து தான் ஆக வேண்டும்.  வாழ்க்கையே மனதின் கற்பனை போலவோ, கனவில் வருவது போலவோ, ஒரு தோற்றமே.  அது நிச்சயமல்ல என்று விழித்தவுடன் நாம் உணர்வது போல என்று  விஷயம் அறிந்தவர்கள் சொல்வார்கள்.  எனவே வருந்த வேண்டாம்.

ஒரு வேடன், ஆங்காங்கு வலை விரித்து காத்திருந்தான். பக்ஷிகள் தானாக அதில் சிக்க ஆசை காட்டுவது போல அதில்  தானியங்களை இறைத்திருந்தான்.   குருவி தம்பதிகள், அதைக் கண்டன. பெண் குருவி அதில் மாட்டிக் கொண்டது. ஆண் குருவி மிகவும் வருந்தியது.  கடவுளே, கருணையில்லையா?   இந்த பெண் குருவி  தனித்து எப்படி வாழும், வேடனே என்னையும் ஏற்றுக் கொள்,  எங்கள் கூட்டில் இன்னும் இறக்கை முளைக்காத குஞ்சுகள் உள்ளன. இந்த தாய் குருவி இல்லாமல் அவைகளை நான் எப்படி போஷிப்பேன்.  என்னை எடுத்துக் கொள். அவளை விட்டு விடு- குஞ்சுகள் தாயார் இல்லாமல் பரிதவிக்கும். என்றது. இதைக் கேட்ட பின்னும் அந்த வேடன் அந்த குருவியையும் தன் அம்பால் அடித்து வீழ்த்தி விட்டான்.  அது அவனுக்கு உணவு,  எனவே, அந்த செயல் தவறல்ல. இயற்கை நியதி.   இது உங்களுக்கும் பொருந்தும். உங்கள் அரசன், உறவினன் என்று பரிதவிக்கிறீர்கள், இதே நிலை தான் உங்களுக்கும் காத்திருக்கிறது, காலத்துக்கும் ஏதோ ஒரு காரணம் கிடைக்கும், மரணம் அனைவருக்கும்  பொதுவானதே. நூறு ஆண்டுகள் அழுது புரண்டாலும் இறந்த மன்னன் திரும்பி வரமாட்டான். 

ஹிரண்யகசிபு சொன்னான்: அந்த சிறுவன் சொன்னதைக் கேட்டு அனைவரும் வியந்தனர்.  தாயாதிகள், உறவினர்கள்,  உலக வாழ்க்கையே அனித்யம் தானே என்று உணர்ந்து சமாதானம் அடைந்து  திரும்பினர்.

நாரதர் தொடர்ந்தார்: தைத்ய ராஜன் சொன்னதைக் கேட்டு, திதி தன் மருமகளுடன் திரும்பிச் சென்றாள். புத்ர சோகம் விலகி மனம் அடங்கியது. 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், இரண்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-61

 அத்யாயம்-3

நாரதர் சொன்னார்.  ஹிரண்யகசிபு தன்னை யாரும் வெற்றி பெற முடியாதவனாக, முதுமையோ, மரணமோ அண்ட முடியாதவனாக, தன்னிகரற்ற வீரனாக,   தன் ராஜ்யத்தை ஆள தீர்மானித்தான்.  மந்தர மலையை அடைந்து கடுமையாக தவம் செய்தான். கைகளை உயர தூக்கி, பாதங்களின் கட்டை விரல் பலத்தில் நின்று கொண்டு ஜடை முடி தரித்தவனாக பல காலம் அசையாமல் தவம் செய்தான்.  ஸுரியன் தன் கிரணங்களுடன் தகிப்பது போல அவன் தலையிலிருந்து புகை கிளம்பலாயிற்று.  மேல், கீழ், இடை பாகம் என்று மூவுலகையும் தகிக்கலாயிற்று.  திசைகள் அந்த வெப்பத்தால் பள பளத்தன.  தாரகைகளும் க்ரஹங்களும் விழுந்தன.  பூமியே நடுங்கியது.  அந்த நிலை தேவலோகத்திலும் பரவியதும், தேவர்கள் ப்ரும்மாவை சரணடைந்தார்கள்.  தேவதேவா! தைத்யன் தவம் செய்கிறான்.  எங்களால் தேவலோகத்தில் இருக்க முடியவில்லை தகிக்கிறது.  உலகமே அழியும் முன் பகவானே, காப்பாற்றுங்கள் என்றனர்.  அவனுக்கு என்ன தேவை? எதற்காக தவம் செய்கிறான்? அவனுடைய சங்கல்பம்,  சராசரத்தையும் ஜயித்து நானே தலைவனாவேன்.  பரமேஷ்டி (அதிக யாகங்கள் செய்தவன்) என்று என் சிம்மாசனத்தை அடைவேன்.  காலத்தை என் ஆதீனத்தில் கொள்வேன்.  கல்பங்கள், வைஷ்ணவ சக்திகள் இவைகளை ஒழிப்பேன். நானே மூன்று உலக நாயகனாக த்ரிபுவனேஸ்வரன் என்று கொண்டாடப் படுவேன் என்பது.  உங்கள் பதவிக்கே ஆபத்து என நினைக்கிறோம். அதனால் விண்ணப்பிக்கிறோம்.

ப்ரும்மாவும் ப்ருகு முனிவர், தக்ஷன் முதலானோரோடு தைத்ய ராஜனின் இருப்பிடம் சென்றார்.  தவம் செய்வதில் கவனமாக ஒரே நினைவுடன் இருந்த அசுரனை எறும்பு, கரையான், பூச்சிகள் சூழ்ந்திருந்தன. உலகில் ஸூரிய ஒளி பரவி இருப்பது போல அசுரனைச் சுற்றி ஒரு ஒளி படர்ந்திருந்தது. ப்ரும்மா வியந்தார்.

காஸ்யபா! எழுந்திரு. எழுந்திரு. உன் தவம் சித்தியாயிற்று. வரம் அளிக்க நான் வந்திருக்கிறேன். என்ன விருப்பமோ, கேள்.   உன் தவத்தை மெச்சினேன். அத்புதமான மன அடக்கம். பூச்சிகள், எறும்புகள் உண்ட சரீரத்தில்  உயிர் எலும்புகளில் மட்டுமே தங்கி உள்ளன.  இது போல யாரும் இதுவரை தவம் செய்ததும் இல்லை, இனி செய்யப் போவதும் இல்லை. கடினமான இந்த தவத்தால் நீ என்னை பிரமிக்கச் செய்து விட்டாய். திதி நந்தன! என் ஆசிகள்.

நாரதர் சொன்னார்: இவ்வாறு சொல்லி, ப்ரும்மா தன் கமண்டலு ஜலத்தை தெளித்து, எறும்பு முதலானவை அரித்து இருந்த உடல் பாகங்கள் பழைய படி ஆகச் செய்தார்.  முன்னிலும் அதிக பலசாலியாக, இளைஞனாக புடமிட்ட பொன் போன்ற வர்ணத்தினனாக, ஹுரண்ய கசிபு எழுந்தான்.  வானத்தில் ஹம்ஸ வாகனத்தில் நின்ற ப்ரும்மாவைப் பார்த்து வணங்கினான். நால் திசைகளையும் பார்த்து கண்களில் நீர் பள பளக்க தழதழத்த குரலில் வேண்டினான்.

ஹிரண்ய கசிபு:  கல்ப முடிவில் கால சிருஷ்டி இருட்டில் கண் தெரியாதவன் போல இருக்கிறேன். என் முன்னால் ஸ்வயம் ஜோதி ஸ்வரூபமான நீங்கள் உங்கள் காந்தியால் உலகைக் காணச் செய்து விட்டீர்கள்.  மூவுலகை படைத்து, காத்து, பின் கலைக்கும் உங்களுக்கு நமஸ்காரம்.  சத்வ,ரஜஸ் தமஸ் என்ற முக்குணங்களே இருப்பிடமாக உள்ள மஹான் உங்களுக்கு நமஸ்காரம். ஆதியான, பீஜமான, ஞான விக்ஞான  மூர்த்தி, ப்ராண, இந்திரிய, மனம், புத்தி, இவைகளை பலவிதமாக பயன் படுத்தி உயிர்களின் உருவங்களை படைத்தவர், உங்களை வணங்குகிறேன்.  ப்ரஜைகளுக்கு ப்ராணனாக,  உலகை  படைத்து அதை இயக்குபவர், சித்தம் என்பதன் சித்தம், மனம், இந்திரியங்கள், இவைகளை ஆட்டுவிப்பவர், பஞ்ச பூதங்களுக்கும் தலைவன் உங்களை வணங்குகிறேன்.  மூன்று வேதங்கள் ஸ்வரூபியான நீங்களே, ஏழு விதமான  அக்னி ஹோத்ரம் முதலான யாகங்கள், இவைகளில் நான்கு ஹோதாக்கள்,  (யாகத்தில் நான்கு பக்கமும் அமர்ந்து யாகத்தை செய்பவர்கள்)   சாதுர் ஹோத்ரம் என்ற வித்யை விதிப்படி, செய்விக்கிறீர்கள். அதே சமயம், உயிரினங்கள் அனைத்திலும் உறையும், ஒரே ஆத்மாவான உங்களை, அந்தராத்மா என்றும்  கவி என்றும் அனந்தன் என்றும் போற்றுகிறார்கள். 

ஜீவ லோகத்தின் ஜீவன், அவர்களின் ஆயுள், –  கால ரூபன்- ஒவ்வொரு நொடியாக கணக்கிட்டு இறுதியில் ஜீவனின் ஆயுளை முடிப்பதும் நீங்களே. ஆத்மா, ஞான ரூபி, பரமேஷ்டி- பரமேஸ்வரனிடத்தில் உதித்தவன், பிறவியற்றவன், மஹான் என்றும் உள்ள ஹிரண்யகர்பன் நீங்களே.     

உலகில் உங்களை மிஞ்சி ஒரு சக்தி என்பது எதுவும் இல்லை. எதிர்ப்பதும் எதுவும் இல்லை. கல்வி, கலைகள், உயிர்களின் உடல், என்று அனைத்தும் உங்களுள் அடக்கம்- ஹிரண்யகர்பன் – மற்ற அனைத்தும் உங்களுக்கு பிறகே. இந்த ஸ்தூலமான ப்ரும்மாண்ட சரீரம்,  அழிவில்லாத ஆதி புருஷன் – அவ்யக்தன். வ்யக்தன் சித் அசித் என்ற எதிர்மறைகளும் உங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்டவையே. பகவானே, நமஸ்காரம்.  வரதோத்தமா! எனக்கு வரம் தருவதானால், பஞ்ச பூதங்களால் ஆன இந்த ஸ்ருஷ்டியில் எனக்கு மரணம் வராமல் இருக்கும்படி வரம் அருள வேண்டும்.  உள்ளேயோ, வெளியிலோ,  பகலும் கூடாது, இரவும் கூடாது, ஆயுதங்கள் எதுவும் என்னைக் கொல்லக் கூடாது. பூமியிலோ, அம்பரம்- ஆகாயத்திலோ  என் மரணம் சம்பவிக்க கூடாது. மனிதனாலோ, மிருகத்தாலோ எனக்கு மரணம் வரக் கூடாது.  உயிரற்ற, கல் போன்றவைகளோ, ப்ராணன் உள்ள முதலைகள் முதலிய பிராணிகளாலோ, மரணம் வரக் கூடாது.  தேவர்களோ, அசுர்களோ, என்னை எதிர்த்து த்வந்த யுத்தம் செய்ய எவருமே இருக்க கூடாது. லோகபாலர்களுக்கு சமமாக இருக்க வேண்டும்.

மொத்தத்தில், அமரனாக, மரணம் அற்றவனாக இருக்கவே வரம் வேண்டுகிறேன். 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், ஹிரண்ய கசிபு வர யாசனம் என்ற மூன்றாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-38 

அத்யாயம்-4

ஹிரண்ய கசிபுவின் தவத்தால் மகிழ்ந்திருந்த ப்ரும்மா அவ்வாறே வரங்களை அளித்தார்.  மகனே, இவை மிகவும் அரிய வேண்டுகோள்கள். என்னிடம் வரம் என்று கேட்டு விட்டாய். அதனால் துர்லபமானவை என்று அறிந்தே சம்மதிக்கிறேன்.  இவ்வாறாக  ப்ரும்மா அசுரனை அனுக்ரஹம் செய்து விட்டு மறைந்தார்.

வர பலத்தினால், அசுரன் பொன் மயமான சரீரத்தை அடைந்தான். மனதினுள், பகவானிடம் த்வேஷத்தை வளர்த்துக் கொண்டான். தன் தம்பியை கொன்றவர் என்று அவரை வெறுத்தான். மூன்று உலகிலும் திக்விஜயம் செய்து தன் வசம் ஆக்கிக் கொண்டான்.  தேவாசுர, மனிதர்கள், இந்திர லோகத்தினர், கந்தர்வ, கருட, பாம்பு தலைவர்கள், சித்த சாரணர்கள், வித்யாதர, ரிஷிகள், பித்ருக்கள், மனு முதலானோர், யக்ஷ, ரக்ஷ, பிசாச, ப்ரேத பூதங்கள், யாரையும் விடவில்லை. இப்படி வெற்றி கொண்ட பின், லோக பாலர்களின் ஸ்தலங்களையும் கைப் பற்றினான்.  விஸ்வகர்மாவினால் கட்டப் பட்ட தேவர்களின்  அழகிய உத்யான வனங்கள் சூழ்ந்த  த்ரிவிஷ்டபம் என்ற மகேந்திரனின் பவனம் ,மரகத பச்சை வர்ணத்தில் இலைகளுடன் மரங்கள், ஆங்காங்கே வரிசையாக ஸ்படிக தூண்கள்,  அழகிய வேலைப்பாடமைந்த விரிப்புகளுடன் ஆசனங்கள்,  தேவலோகத்து ஸ்த்ரீகள், அங்கும் இங்குமாக நடமாடிக்கொண்டிருக்கும் சமயம்,  அவர்களின் நிழல் தரையில் தெரிவதை காண முடியும், அதை கைப்பற்றினான். குபேர பவனத்தையும் தனதாக்கிக் கொண்டான்.

அதன் பின் தன் ராஜ்யத்தை செவ்வனே நிர்வகித்தான்.  யாகங்கள் செய்து யாகத்தில் அமர்ந்து செய்யும் அந்தணர்களுக்கும்,  பங்கேற்ற மற்றவர்களுக்கும் நிறைய தக்ஷிணைகள் கொடுத்தான்.  அந்த ஹவிர் பாகங்களை தேவர்களுக்கு கொடுக்காமல் தானே ஏற்றுக் கொண்டான்.  சப்தத்வீபவதி- ஏழு தீவுகளைக் கொண்டவள் என்று பெயர் பெற்ற பூமி உழவு, நடவு என்ற செயல்கள் இல்லாமலேயே விளைந்தது.  வானம் தேவையானதை அளித்தது.   ரத்னாகாரம் என்று அழைக்கப் படும் சமுத்திரம்,    உப்புக் கடல், சுரா என்ற மது (கள்) நிறைந்த கடல், நெய் நிறந்த கடல், பாற்கடல், தயிர் நிறைந்த கடல், கரும்பு ரஸம் நிரம்பிய கடல்,  சுத்தமான நீர் உடைய கடல் என்றவை தவிர அவைகளின் மனைவிகளான நதிகளும் ரத்னங்களை தன் அலைகள் மூலமே கொண்டு வந்து கொடுத்தன.  மலைகள், மலைச் சரிவுகள், அழகிய மலை வாசஸ்தலங்கள், எல்லா பருவகாலங்களிலும் பழங்கள், புஷ்பங்கள் இவைகளைத் தந்தன.  தான் ஒருவனாக, இந்திரன் முதலான தேவர்களின் செயல்களான, மழை பொழிதல், ஸுரியனின் வெப்பம், வாயுவின் சலனம் என்றவைகளை நிர்வகித்தான்.  எட்டு திசைகளையும் ஆக்ரமித்து அதிகாரம் செலுத்தி வந்தவன், தன் போகங்களையும் இஷ்டப்படி அனுபவித்தான். அதர்மாக செய்த பல காரியங்களால், உலகில் வருந்திய மக்களைக் கண்டு, சனகாதி முனிவர்கள் அவனை சபித்தனர்.   அவன் ஆட்சியும் அக்ரமங்களும் நீடித்தன. 

 காலம் செல்லச் செல்ல ஐஸ்வர்ய மதம் அவன் தலைக்கேறவும்,  தாங்க முடியாமல் தேவர்கள் பகவான் ஸ்ரீ ஹரியை சரணடைந்தார்கள். சாந்தமான அமலமான சன்யாசிகள் அந்த இடத்திற்கு சென்றவர்கள் திரும்புவதில்லை.  அவர்களுக்கு அசரீரியாக ஒரு வாக்கு கேட்டது.  மேகம் இடி இடிப்பது போல கம்பீரமான குரல்.  பயப்படாதீர்கள், எல்லோருக்கும் நன்மையே உண்டாகட்டும்.  என் தரிசனம் உங்களுக்கு எல்லா ஸ்ரேயஸ்களையும் தரட்டும். இந்த தைத்யனின்  அத்து மீறிய செய்கைகளை அறிவோம்.  சரியான காலம் வர காத்திருங்கள்.   இவனுடைய செயல்கள் எப்பொழுது, தேவர்களுக்கு எதிராக, வேதங்களை தூஷிப்பதாக, பசுக்களையும் அந்தணர்களையும், சாதுக்களையும் துன்புறுத்துவதாக ஆகிறதோ,தர்மத்தையும் என்னையும் துவேஷிக்கிறானோ, உடனே அழிவான்.  அவன் மகன் ப்ரஹ்லாதன் சாந்தமாக, அனைவருடனும் நட்பும்  நல்ல குணமுமாக அவனை விரோதிப்பான். அந்த சமயம் தான் ஏற்றது, அவனை தண்டிக்க.

இவ்வாறு லோக குருவான ஸ்ரீ ஹரி சொன்னதும், தேவர்கள், திரும்பி தங்கள் இருப்பிடம் சென்றனர்.  அசுரனின் அழிவு அதிக தூரத்தில் இல்லை என்ற நம்பிக்கை பிறந்தது.  

அசுரனுக்கு நான்கு புதல்வர்கள் பிறந்தனர். ப்ரஹ்லாதன், அவர்களுள் குண சாலியாக இருந்தான்.  ப்ரும்ம நம்பிக்கை உள்ளவனாக, சீலம் உடையவனாக, இருந்தான்.  சத்யசந்தன், ஜிதேந்திரியன், தன்னையறிந்தவன், அனைத்து உயிர்களிலும் உறையும் ஒரே ஆத்மா என்பதை அறிந்து அனைவரிடமும் சமமாக நடந்து கொண்டான்.  என்றும் பிரியமான நண்பனாக இருந்தான்.  தந்தையிடம் பெரு மதிப்பு வைத்து அவரிடம் தாஸனாக இருந்தான்.  ஒரு தந்தையை போல  தீன வத்சலன், சகோதரன் போல அருகில் இருப்பவன், குருவை ஈஸ்வரனாக மதித்தான், கல்விகள் அவனைத் தானே வந்தடைந்தன  பல பிறவிகளில் கற்றது போல, இருந்தும் கர்வமோ, தான் உயர்ந்தவன்  என்ற உணர்வோ இல்லாதவன் என்றனர்.  எப்பொழுதும் உத்சாகமாக இருப்பான்.  வேதங்கள், தர்சனம் என்ற தத்வங்கள்,  இவைகளைக் கற்றுத் தேர்ந்தான். அவன் சாந்தமும், புத்தியும், திருப்தியும், அசுரனுக்கு பிறந்தவனா எனும் படி இருந்தன.  கவிகள் சொல்லும் நல்ல குணங்கள் ஒருமித்து அவனிடம் இருந்தன.  அது போல குணங்களின் சங்கமம் பகவானிடம் மட்டுமே இருக்க முடியும் என்று பேசிக் கொண்டனர். சபைகளில் எதிரிகள் கூட அவனை புகழ்ந்தே பேசினர்.   வாசுதேவனிடத்தில் பிறவியிலேயே ஈடுபாடு தோன்றி விட்டது தான் இவை அனைத்துக்கும் சிகரமாக ஆயிற்று. 

விளையாட்டுப் பருவத்திலேயே,  விளையாட பொருட்களை நாடவில்லை.  மனதில் கோவிந்த எண்ணத்துடனேயே, அமர்ந்தான், நடமாடினான், உண்டான், தூங்கினான், குடித்தான், பேசினான்

வைகுண்டவாசியை பஜித்து வந்தான்,  பாகவதர்கள் போலவே, சிரிப்பான், ஆனந்தமாக பாடுவான்,  நடனம் ஆடுவான், தன்மயமாக அவரை நினைத்து தியானத்திலும் இருப்பான்.   உத்தம ஸ்லோகன் எனும் ஸ்ரீ ஹரியின் பதாரவிந்தங்களில் திடமான நம்பிக்கையுடன்,  மன அடக்கம் வரப் பெற்றவனாக இருந்தான்.  இதையறிந்த ஹிரண்யகசிபு  திகைத்தான்.  ப்ரஹ்லாதனை குற்றவாளியாக அறிவித்தான்.

யுதிஷ்டிர் கேட்டார். தன் மகன் தானே – குணவானாக இருந்தால் தந்தை மகிழ்வது தானே வழக்கம்.  குற்றம் காண்பது எதற்காக? தன் சொல்லை மீறிய புதல்வர்களையும் ஏதோ ஒரு வகையில் தண்டித்தோ, வசைச் சொற்கள் சொல்லியோ திருத்தவே முயலுவார்கள்.  துவேஷம் வருமா?  குற்றமே ஆனாலும் மரண தண்டனை வரை செல்வார்களா? எனக்கு தோன்றவில்லை. ப்ரும்மன், விவரமாக சொல்லுங்கள். 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின்,  நான்காவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-46

 அத்யாயம்-5

 அசுர ராஜன், ஹிரண்யகசிபு, அசுர் குல குருவான சுக்ராசார்யரை  தன் அரச புரோஹிதராக நியமித்தான்.  அவருடைய புதல்வர்கள், ஷண்டன், அர்கன் என்ற இருவரும் அருகிலேயே வசித்தனர்.  அவ்விருவரும் அரசன் அழைத்து வந்து சேர்த்த மாணாக்கனான ப்ரஹ்லாதனுக்கு கற்பிக்கலாயினர்.  மற்றும் சில அசுர பாலகர்களும் அங்கு வந்து சேர்ந்தனர்.  ப்ரஹ்லாதன், ஆசிரியர் சொன்னதை கேட்டு திரும்பச் சொல்லி நல்ல மாணவனாகவே இருந்தான். ஒரு சமயம் அசுர ராஜன் வந்து, தன் மகனை மடியில் அமர்த்திக் கொண்டு என்ன கற்றுக் கொண்டாய்? உனக்கு பிடித்ததைச் சொல்லு என்று கேட்கவும், ப்ரஹ்லாதன் பதில் சொன்னான். அசுரவர்ய!  மனிதர்கள் அசத்தான விஷயங்களை விலக்கி, மனதில் ஹரியை தியானித்து வனம் சென்று தன் பாபங்களை போக்கி கொள்ள வேண்டும்.

நாரதர் சொன்னார்: மகன் சொன்னதைக் கேட்டு பலமாக சிரித்தான். பின் ஆசிரியர்களைப் பார்த்து இது என்ன என் கொள்கைகளுக்கு எதிராக இவன் ஏதோ சொல்கிறான்.  சரியாக சொல்லிக் கொடுங்கள்.  விஷ்ணு பக்ஷத்திலிருந்து யாராவது இங்கு வந்து விட்டீர்களா?

தைத்யனின் புரோஹிதர்கள்,  வீட்டிற்கு அழைத்து வந்து அவனிடம் நயமாக விசாரித்தனர்.  குழந்தாய், ப்ரஹ்லாதா, உண்மையைச் சொல், பயப்படாதே,  சின்னஞ் சிறுவன் உனக்கு இந்த விபரீதமான புத்தி எப்படி வந்தது?  யாரது உன்னிடம் பலவந்தமாக இப்படி ஒரு எண்ணத்தை விளைவித்தது?நீயாகவே சொல்கிறாயா?  எதுவானாலும் சொல் குழந்தாய், பெரியவர்கள் கேட்கிறோம்.

நீ எங்கள் குலநந்தனன் அல்லவா?

ப்ரஹ்லாதன் சொன்னான்:  தான், மற்றவன் என்று மனிதர்கள்  தவறாக நினைக்கிறார்கள். அதுவே பகவானின் மாயை தான்.  இப்படி மனித மனதை ஆட்டுவிக்கும் பகவானுக்கு நமஸ்காரம்.  மனிதர்கள், மிருகங்கள், இவைகளுக்கிடையில் புத்தியில் வித்தியாசம் வைத்தவன் அவனே.   இவர் வேறு.நான் வேறு என்று பேதம் காண்பது அறியாமை. வேதம் அறிந்தவர்கள்,  பல விதமாக நிரூபிக்க முயன்றிருக்கிறார்கள்.  காந்தத்தின் முன் இரும்பு தானாகவே ஆகர்ஷிக்கப் படுவது போல என் மனம் சக்ரபாணியின் சன்னிதியில் தானாகவே இழுக்கப் படுகிறது.  எப்படி நான் மட்டும் அந்த சன்னிதிக்கு அருகில் சென்றேன்,  அதுவோ, தவம் விரதம் இவைகளை  பல காலம் அனுஷ்டித்து அடையும் தகுதி அது என்பது உண்மையே. ஏதோ காரணத்தால்,  எதேச்சையாக நான் அடைந்துள்ளேன்.  

இதைக் கேட்டு, ராஜ சேவகர்கள், அரசனால் நியமிக்கப் பட்ட ஆசிரியர்கள்  திகைத்தனர்.  கோபித்தனர்.  எங்கள் பெயரைக் கெடுக்கிறான், இந்த குலத்துக்கு அங்காரம் போல (சிறு நெருப்பு பொறி) போல வந்து வாய்த்திருக்கிறான்.  நான்காவது தான் இவனிடம் பிரயோகிக்க வேண்டும் (ஸாம, தான், பேத, தண்டம் என்பதில் தண்டம் ) என்று சேவகர்களைக் கொண்டு கசையால் அடித்தனர்.  இவன்,  அசுர ராஜன் என்ற சந்தன வனத்தில் முள் செடி போல வந்து பிறந்திருக்கிறான்.  வேரோடு பிடுங்கக் கூடிய விஷ்ணுவின் பரசு – கோடாலி

யாக இந்த இளம் பாலகன் பேச்சு இருக்கிறதே.  இவ்வாறாக நினைத்து அவனைத் திருத்த, பலவிதமாக உபாயங்களை முயன்றனர்.  பயமுறுத்தி, தங்கள் வழிக்கு கொண்டு வர முயன்றனர்.  அப்படியும் ப்ரஹ்லாதனை தங்கள் வழிக்கு கொண்டு வர முடியாமல், அவன் தாயாரிடம் கொண்டு விட்டனர். ஸ்னானம் செய்வித்து அலங்கரித்து மகனை தந்தையின் முன் கொண்டு நிறுத்தினர்.  தன் காலில் விழுந்து நமஸ்கரித்த மகனை ஆவலுடன் ஹிரண்ய கசிபு தூக்கி மடியில் இருத்தி, உச்சி முகர்ந்து, மகன் என்று பாசத்தினால் கண்கள் பனிக்க, கண்ணீரால் அவனை மகிழ்ச்சியுடன் நனைத்தவனாக, முகம் மலர, ப்ரசன்னமானவனாக,  ஹே ப்ரஹ்லாதா! என்றழைத்தான்.  மகனே, நீண்ட ஆயுளுடன் இரு என்று ஆசிர்வதித்தான்.  மகனே, சுக்ராசார்யாரின் புதல்வர்களிடம் என்ன கற்றுக் கொண்டாய்? என்றான்.ப்ரஹ்லாதன் சொன்னான்:

श्रवणं कीर्तनं विष्णोः स्मरणं पादसेवनम् ।अर्चनं वन्दनं दास्यं सख्यमात्मनिवेदनम्

கேள்வி, பாடுதல், விஷ்ணுவை மனதார நினைத்தல்,  பாதங்களில் வணங்குதல், பூஜை, வந்தனம், அடியாள் போல சேவை செய்தல், சகாவாக இருத்தல், ஆத்ம நிவேதனம்.

மனிதர்கள் இந்த பத்து விதமாக விஷ்ணு பகவானிடம் பக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த விதமாக பகவானிடம் தன்னை சமர்ப்பிக்கும் ஒன்பது வழிகளை அறிவது தான் உத்தமமான கல்வி என்று நினைக்கிறேன்.  இதைக் கேட்ட ஹிரண்ய கசிபு குரு புத்திரர்களிடம் வெகுண்டான். பற்களைக் கடித்தவாறு, ப்ரும்மபந்தோ! – (இது ஒரு வசைச் சொல்) என்ன இது இப்படி விபரீதமாக எதிரியை புகழும் படி  கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள்.  என்னையே மதிக்காமல் சாரமில்லாத எதையோ என்னிடமே என் மகன் சொல்கிறான்.  துர்மதி.  சாதுக்கள் அல்லாத பலர் இருக்கிறார்கள்.  வஞ்சனையாக நண்பன் போல அருகில் வந்து பேசுபவர்கள் என்றான்.  குரு புத்திரர்கள், ‘ இந்த்ரசத்ரோ! நீ இந்திரனுக்கு சத்ரு.  உன் மகன் சொல்வது நாங்கள் கற்பித்தது அல்ல.  தானாக சொல்கிறான். பிறவியிலேயே இவனுக்கு இந்த குணம் வந்துள்ளது. எங்களை கோபிக்காதீர்கள்.  எங்கள் குற்றம் அல்ல.   ஹிரண்யகசிபு மகனிடம் திரும்பினான். குரு இவர்கள் சொல்லவில்லையெனில் எப்படி உனக்குத் தெரியும்? 

ப்ரஹ்லாதன் சொன்னான்:  தந்தையே, உலக வாழ்க்கையே நிரந்தரம் என்று நினைத்து தினசரி உணவும், மற்ற தேவைகளுமே முக்கியமானவை என்று உழைக்கும் சாதாரண மக்கள் க்ருஷ்ண பரமாகவோ, தன் மேன்மை பற்றியோ நினைக்கவே முடிவதில்லை.  குருடனால் வழி காட்டப் படும் மற்றொரு குருடன் போல ஒரே ரீதியில் வாழ்க்கையை நடத்திச் செல்கின்றனர்.  ஒரே அச்சில் கட்டப் பட்ட கயிற்றின் நீளத்தை பொறுத்து அவர்களின் வாழ்க்கையின் செயல்கள் நிர்ணயிக்கப் படுகின்றன. இவர்கள் இதிலிருந்து மீள வேண்டுமானால் அறிவு மிக்க பெரியவர்களின் அருகில் இருந்து உபதேசம் பெற வேண்டும். 

ஹிரண்யகசிபு தன் கோபத்தை அடக்க மாட்டாமல், மகனை தன் மடியிலிருந்து வீசியெறிந்தான்.  கண்கள் சிவக்க உத்தரவிட்டான். அசுர்களே, இந்த சிறுவனை கட்டுங்கள்.  இவன் என் சகோதரனைக் கொன்றவனை உயர்வாகச் சொல்கிறான்.  அவன் காலில் விழுகிறான்.  ஐந்து வயது சிறுவன். எந்த தந்தை இப்படி ஒரு மகனை தியாகம் செய்வான்.  தன்னை சாராத யாரோ ஒருவனுடைய மகன்  கூட மருந்துகள் நோயை தீர்ப்பது போல ஹிதம் செய்யலாம். உடன் பிறந்த நோய் தனக்கு பிறந்தவனே கூட அஹிதமாக இருக்கலாம்.  நோய் முற்றினால் அந்த அங்கத்தை வெட்டி விடுவதே மேல்.  மற்ற அங்கங்கள் பாதிக்கப் படாதவரை சுகமாக இருக்கலாம்.  எல்லா விதமான உபாயங்களையும் பயன் படுத்தி இப்படி உடன் பிறந்தே கொல்லும் வியாதியை ஒழிக்கத் தான் வேண்டும்.   கூடவே அமர்ந்து விருந்துண்ணும், ஆசனங்களில் சமமாக அமர்ந்தும், நல்ல நண்பன் போல காட்டிக் கொண்டே துரோகம் செய்யும் சத்ரு அழிக்கப் பட வேண்டும்.  சாதகனுக்கு இந்திரியங்களே துஷ்டர்களாக ஆவது போல.  

இவ்வாறு அரசனே அனுமதித்தபின் அசுரர்கள் கூட்டமாக, ஆயுதங்களோடு, வெட்டு, கொல் என்று பயங்கரமக கோஷமிட்டுக் கொண்டு வந்தனர்.  காணவே பெரிய பற்களும், தாமிர நிற கேசமும், மீசை, உடல் ரோமங்களோடு பயங்கரமாக  இருந்தவர்கள், ஆட்டமும் பாட்டமுமாக, அமர்ந்திருந்த ப்ரஹ்லாதனை ஸூலங்களால் அடித்தனர்.  பரப்ரும்மத்தில் மனம் லயித்திருக்க, அசையாது தியானத்தில் இருந்த சிறுவனை அவை அசைக்க முடியவில்லை. பலனின்றி போயிற்று.  கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்னதான் சத் காரியங்கள் செய்தாலும் எடுபடாமல் போவது போல.  இந்த வீரர்களின் முயற்சி பலிக்காமல் போனதும், ஹிரண்யகசிபு யோசித்தான்.  பல விதமாக யோசித்து பின்,  திக் கஜங்களை, விஷ நாகங்களை  ஏவினான். அபிசாரம் என்ற தந்த்ரம் அறிந்தவர்களை அழைத்தான்.  மலையிலிருந்து தள்ளச் செய்தான். பல விதமான மாயா ப்ரயோகங்களைச் செய்தும் உணவே இல்லாமல் பட்டினி போட்டும், விஷம் கொடுத்தும் பலனில்லை.  பனிக்கட்டி சூழ வைத்தும், தண்ணீரில் மூழ்க வைத்தும்,  வாயு, அக்னி, இவைகளால் சீண்டியும் சிறுவனை எதுவும் பாதிக்கவில்லை. பாறைகளை புரட்டி விழச் செய்தான்.  ஒரு நிலையில்,  தானே தன்னை நொந்து கொண்டான். இது என்ன நான் செய்வது சரியல்லவே. கண் எதிரில் இருக்கும் என் மகன், விஸ்வாமித்ர முனிவர் காப்பாற்றிய சுன:ஸேபன் (शुन:शेप:)  போல திடமாக நிற்கிறான்.  இவன் அளவில்லாத அனுபாவம் உள்ளவன்.  பயமே இல்லை. அமரன்- மரணமே இல்லாதவன் போலும்.  இவனை விரோதித்துக் கொள்வதால் எனக்கு ஆபத்தே.  எனக்கே அழிவைத் தந்தாலும் தரும்.  என்று யோசித்தான். சற்றே வாடிய முகத்துடன், குழம்பி இருந்தவனிடம் குருபுத்திர்களான, ஷண்டன், அர்கன் என்ற இருவரும்  சமாதானமாக சொன்னார்கள். ‘அரசே! மூவுலகையும் புஜ பலத்தால்  ஜயித்தவர் நீங்கள்.  உங்கள் குரலைக் கேட்டே நடுங்கினர் அனைத்து வீரர்கள் குழாமும்.  உங்கள் மகன், இளம் சிறுவன் இவனுடைய குண தோஷங்களை பெரிது படுத்த வேண்டாம்.  வருண பாசத்தால் கட்டி, எங்கும் ஓடி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.  குரு பார்கவர்(ஸுக்ராசார்யர்) வரும்வரை பெரியவர்கள் சிலர் அவனுக்கு நல்ல புத்தி சொல்லட்டும்.   அசுரனும் சரி என்று அந்த உபாயத்தை ஏற்றுக் கொண்டான்.   தானே மகனுக்கு, தர்மம், அர்த்தம் (பொருளாதாரம்), காமம் என்ற உலகியல் விஷயங்களை உபதேசித்தான்.  ஆரம்பத்திலிருந்து பாடம் கற்பித்தான். ப்ர்ஹ்லாதன் வணக்கத்துடன் அமர்ந்து கவனமாக கேட்டுக் கொண்டான்.  தனக்கு குரு உபதேசித்த பரமார்த்தமான விஷயங்களை சொல்லும் முன் பாலகர்கள் அழைக்கவும் ப்ரஹ்லாதன் விளையாட ஓடி விட்டான். அசுர அரசன் அந்த குழந்தைகளிடம் பிரியமாக பேசி, அவர்களையும் அருகில் அமரச் செய்தான். அரசன் என்ற மதிப்பினால் அமர்ந்திருந்த சிறுவர்கள், சுக துக்கம் என்ற இரட்டைகளான துன்பங்கள், என்ற அறிவுரையை கண் கொட்டாமல் அரசனைப் பார்த்தபடியே கேட்டுக் கொண்டிருந்தனர்.  சிறுவர்களிடம் பாகவதனான அசுர சிறுவன் கருணையுடன் சொன்னதையே மனதில் நினைத்துக் கொண்டிருந்தனர்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின்,  ஐந்தாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-57

 அத்யாயம்-6 

ப்ரஹ்லாதன் சொன்னான்: குமாரர்களாக உள்ள வயதில் தர்மம் என்பது பாகவதர்கள்- பகவானிடம் ஈடுபாடு கொண்ட அறிவுடையோர்,  அனுசரிப்பதே.  மனித பிறவியே அரிதானது.  அதுவும் நிரந்தரமல்ல. மனித பிறவி மட்டுமே நன்மை பயப்பதுமில்லை.  ஸ்ரீ விஷ்ணுவின் பாதங்களில் மனதை செலுத்தி சரணடைய வேண்டும். அவர் தான் நண்பனாக, பிரியமானவனாக இருப்பவர். சர்வ ஜீவன் களுக்கும் ஆத்மேஸ்வரன்- ஆத்மாவில் உறையும் ஈஸ்வரன்.   தைத்யர்களுக்கு உடல் சுகமே சுகம். அதற்கு மேல் சிந்திப்பதில்லை. அதற்கு உழைக்கிறார்கள். ஆனால் ஒரு ப்ரயத்னமுமின்றி துக்கம் வந்து சேருகிறது.  அதனால் ஆயுள் முழுவதும் பயனின்றி போகிறது.  அதில் எந்த க்ஷேமும் இல்லை. முகுந்த சரணாம்புஜ சேவையே முக்தியைத் தரும்.  உடல் நலத்தை பேணுவதிலேயே பயத்துடன் செயல்களை செய்ய வேண்டாம்.  மனித சரீரம் நூறு ஆண்டுகளே நீடிக்கும்.  அதில் பாதி ஐம்பது ஆண்டுகள் தூக்கத்தில் போகும். இளம் வயதில், பாலகனாக விளையாடி இருபது ஆண்டுகள் போகும். பின்னால் முதுமை வந்து உடல் தளர்ந்த பின், இருபது ஆண்டுகள். உடல் பலத்தை பெருக்குவதிலும், காமத்திலும், மோஹத்திலும், குடும்ப பொறுப்புகளிலும், பல காலம் செலவழியும்.  குடும்பஸ்தனுக்கு உறவுகள், பாசம், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் இவை பாரமாக கவனத்தை ஈர்க்கும். இதில் செல்வத்திலும், அதைச் சேர்ப்பதிலும்  உயிரை விட அதிக ஆசை.  அதற்காக சேவகனாக, வியாபாரியாக, சில சமயம் திருடனாக கூட மாறுவான்.  அன்புடைய மனைவி, தன்னிடம் மிகுந்த பாசம் உடையவள், அவளைச் சார்ந்தவர்கள், தங்கள் வம்சத்தில் வரும் குழந்தைகள் என்று அந்த பந்தம் வளரும்.  புதல்வர்கள், புதல்விகள், சகோதர்கள், தந்தையர்,  மற்ற உறவினர்கள், அழகான வீடு, பணியாட்கள்,  நல்ல தொழில், பசு பக்ஷி வர்கங்கள் என்று பகிர்ந்து கொள்ள நிறைய வந்து சேரும். செல்வம் சேர்க்கும் ஆசையால் லோபம், திருப்தியின்மை, தன் வீட்டைக் கட்டும் பூச்சி, தான் வெளிவர கூட முடியாதபடி வாசலை அடைத்து விடுவது போல ஆவர்.  தன் மனைவி, குடும்பம் இவற்றை காப்பாற்ற ஆயுள் முழுவதும் உழைக்கிறார்கள்.  செல்வம் எவ்வளவு தான் சேர்த்தாலும்  பற்றாக்குறை. குடும்பஸ்தன் சதா கவலையுடனே இருக்கிறான். இது மட்டுமே உலகம் என்று நினைக்க வேண்டாம் அசுர குழந்தைகளே.  அதைத் தாண்டி பரமார்த்தமாக  ஒரு இடம்- எந்த இடத்தில் யாரும், எங்கிருந்தாலும், தீனனாக  உணரமாட்டான். சக்தியுடையவனாக தன் ஆத்ம பலத்தை அறிந்து கொள்வான். கட்டுப்படாமல் சுதந்திரமாக இருங்கள்.  ஆதி தேவனான ஸ்ரீமன் நாராயணனை பரம் பொருளை அறிந்து கொள்ள அதிக சிரமம் கூட தேவையில்லை. அவரே நம் ஆத்மாவிலும் இருப்பவர். எங்கும் பரவி இருப்பவர். பஞ்ச பூதங்களிலும், ப்ரும்மாண்டத்தில் உள்ள அனைத்து இயற்கை சாதனங்களிலும். மிகச் சிறியதிலிருந்து மிகப் பெரியவைகளிலும் இருப்பவர்.  அவர் தான் அழிவில்லாத பரமேஸ்வரன்.  ஆத்ம ஸ்வரூபம், அனுபவத்தால் காணக்கிடைக்கும். ஆனந்தமே உருவானவர். தன் மாயையால்,  உலகில்  பரவியும் விலகியும் இருப்பார்.  அதனால், குழந்தைகளே, இந்த அசுர குணம்  வேண்டாம். அனைவரிடமும் நட்பாக இருங்கள், அதிலேயே அதோக்ஷஜன் மகிழ்வார்.  அவர் மனம் குளிர்ந்தால் எது தான் கிடைக்காது.     குணங்களின் வேறு பட்ட சேர்க்கையால் தர்மம் என்றும்  அதர்மம் என்றும் சொல்வர்.   இவைகளினால் அடையும் பலன்களும் நமக்குத் தேவையில்லை.  ஆத்யன், அனந்தன் என்று  அந்த பெயர்களை மறக்காமல் அவரடி பணிவோம்.   தர்மம், அர்த்தம், காமம் என்ற மூன்று தேவைகள். தர்க்க சாஸ்திரம்,  வேதங்கள், நயதம- என்ற தண்ட நீதி- அரசர்கள் அனுஷ்டிக்க வேண்டியவை இவை அனைத்தும் சத்யமே.  இவற்றை விவரிக்கும் பலவிதமான விளக்கவுரைகள்.   இவைகள் சொல்வதும் கடைசியில் ஸ்வாத்மார்ப்பணம்- தன்னையே பர புருஷன் பாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றே வலியுறுத்துகின்றன.  நாராயணன் நரசகன்-  ஸ்ரீமன் நாராயணன் மனிதர்களுக்கு சகா போன்றவன் என்பதை அவர் நாரதருக்கு உபதேசம் செய்ததில் இருந்து அறியலாம். மிக உயர்வாக சொல்லப்படும் ஞானம் எளிதில் கை வராது. சகலத்தையும் துறந்து, தனிமையாக, பகவானையே நினைத்து தவம் செய்பவர்கள்  அடைவதை அதே பகவானின் பாதம் பணிந்து அவர் தம் பாதங்களின் தூளியை தலையில் தரித்தவர்களும் அடைவர்.  இந்த விஷயங்களை முன் ஒரு சமயம் நாரதர் வாயிலாக கேட்டறிந்தேன். சுத்தமான  பாகவதம் என்ற தர்மம்  ஞானம் அதை விட மேலான விக்ஞானம் என்பதை அவரிடம் அறிந்தேன்.

மற்ற சிறுவர்கள் சொன்னார்கள்; ப்ரஹ்லாதா, நம் குருவையன்றி வேறு யாரையும் நாமறியோம்.  அந்த:புரத்து வாசியான உனக்கு கிடைத்த பெரியவர்களுடனான  உபதேசமும், அனுபவமும் எங்களுக்கு எப்படி எட்டும்? அதனால் நீயே சொல், எங்கள் சந்தேகத்தை தீர்த்து வை. என்றனர்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின்,  ஆறாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்- 30

 அத்யாயம்-7 

குருகுல சிறுவர்கள் வேண்டிக் கொண்டபடி ப்ரஹ்லாதன் அவர்களுக்கு உபதேசம் செய்தான். நாரதரிடம் தான் கற்றதை அப்படியே சொன்னான்.

என் தந்தை தவம் செய்ய மந்த்ராசலம் சென்றபின், பெரும் போர் மூண்டது.   தானவர்களுக்கும் மற்றவர்களுக்கும்  வாசவன் முதலான தேவர்களுக்கும் இடையே பல பரீக்ஷையாக அந்த யுத்தம் அமைந்தது.   தேவ சைன்யத்துக்கு எதிராக நிற்க முடியாமல் அசுரர்கள்  பல திசைகளிலும் ஓடி மறைந்தனர்.   மனைவி மக்கள், மித்ரர்கள், ஆப்தர்களானவர்கள்,  வீடு வாசல், பசுக்கள், பணியாட்கள் அனைத்தையும் விட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே ஓடினர்.   தந்தையின் அரண்மனையை  அவர்கள் ஸூரையாடிய பொழுது இந்திரன் என் தாயாரை பிடித்து விட்டான்.  அழ அழ அவளை தூக்கிக் கொண்டு போகும் சமயம் நாரதர் எதிரில் வந்தார். சுரபதே! வேண்டாம். இவள் என்ன தவறு செய்தாள்.  மாற்றான் மனைவி, சதி, அவளை விடு. விட்டு விடு.  இந்திரன் உடனே கேட்கவில்லை. இவள் வயிற்றில் அசுரனின் குழந்தை வளருகிறது அதுவும் தேவர்களின் எதிரி தானே.  பிரசவம் ஆகும் வரை இருக்கட்டும், பிறக்கும் மகனை கொன்று விட்டு விட்டு விடுகிறேன் என்றான்.

வயிற்றில் வளரும் சிசு என்ன கண்டது ? நல்லதா, பொல்லாதா என்ன அறியும். களங்கமில்லாத பாலகன். அவன் பரம பாகவதனாக இருப்பான். அனந்தனை பஜிப்பவனாக வளருவான். உன்னை எதிர்க்க மாட்டான். கவலைப் படாதே என்று நாரதர் சொன்னார்.   இந்திரனும் சம்மதித்து அவளை விட்டு விட்டு தன் இருப்பிடம் சென்றான்.  ரிஷி  என் தாயாரை, தன் ஆசிரமத்திற்கு அழைத்து வந்தார்.  மகளே!   உன் கணவன் வரும் வரை  இங்கு நிம்மதியாக இரு என்று அபயம் அளித்தார்.  அவளும் தேவேந்திர பயம் இல்லாமல் அங்கு வசித்தாள்.   ரிஷிக்கு வேண்டிய பணிவிடைகளை செய்தாள்.  தன் கர்பத்தில் உள்ள சிசுவின் நன்மைக்காக அல்லும் பகலும் பகவானை  வேண்டிக்கொண்டபடி நாட்களை கடத்தினாள். ரிஷி கருணை மிக்கவர். அவளுக்கு தர்மம், தத்வம், ஞானம் முதலியவைகளை உபதேசித்தார். என்னையும் உத்தேசித்தே சொன்னார்.   அவள் நினைவில் இருக்கிறதோ இல்லையோ, நான் மறக்கவில்லை.   அதைத் தான் சிரத்தையுடன் கேட்கும் உங்களுக்கு சொல்லப் போகிறேன். 

பிறப்பிலிருந்து ஆறு உணர்வுகள் தேகம் உடைய ஜீவன்களுக்கு சொல்லப் படுகின்றன.  ஆத்மா தனி. பருவகாலம் வந்தால் மட்டுமே பழுக்கும் பழம் போல ஈஸ்வரனின்  செயல்.   ஆத்மா, உடலின்  உள் உறைகிறது. இந்த ஆத்மா நித்யமானது, அழிவில்லாதது.   சுத்தமானது. க்ஷேத்ரக்ஞன் என்ற பகவானின் அம்சம்.  தானாக எதுவும் செய்யாது, அதை காணவும் முடியாது. பரவி இருக்கும் –  எதனாலும் மறைக்கவும் முடியாது. இந்த பன்னிரண்டு லக்ஷணங்களால் ஆத்மாவை அறியலாம்.  எங்கும் இருப்பது ஒரே ஆத்மா தான் என்பதால், நான், என்னுடையது, மற்றவன் அவனுடையது என்ற எண்ணங்கள் பொருளற்றவை.  இது தன் உடலில் தனக்கு ஏற்படும் மோகமே. அந்த எண்ணத்தை தவிர்க்க வேண்டும்.   தங்க சுரங்கத்தில் மண் மூடி கிடக்கும் ஸ்வர்ண துகள்களைப் பிரித்து ஸ்வர்ணகாரன் என்ற ஆசாரி (பொன் நகை செய்பவண்) முழுமையான நகையாக செய்வதைப் போல அத்யாத்மம் அறிய யோக சாதனைகள் உள்ளன.  க்ஷேத்ரம் என்ற இந்த உடல், இதில் ஆத்மவித் என்ற ப்ரும்ம ஞானத்தை அறிந்து கொள்ள வேண்டும்.  எட்டு விதமான ப்ரக்ருதிகள்- இயற்கை சாதனங்கள்.   மூன்று குணங்கள்.  இவை ஒன்றோடொன்று இணைவதால் பதினாறு விதமாகும்.  இப்படி உருவான உடலில், ஒன்றேயான பரபுருஷன் தன் அம்சத்தை இட்டு நிரப்பி உடல் செயல் பட செய்கிறான்.  இவ்வாறு இயற்கையும், குணங்களும் சேர்ந்து உருவானாவை, அசையும், அசையாதவை என்று இருவகைப் படும்.  தாவரங்களுக்கும் உயிர் உண்டு ஆனால் இடம் விட்டு இடம் செல்வதில்லை.   பிராணிகளும் நடமாடினாலும் புத்தி ஓரளவே.  மனிதர்களுக்குத் தான் யோசித்தல்,  தானே கண்டு கொள்ளுதல் என்பது சாத்யம்.  இவர்கள் ஆத்மாவை இது அல்ல, இது அல்ல என்று ஒவ்வொன்றையும் ஆராய்ந்து (வாசனையா, ருசியா, எது உடலில் உறையும் ஆத்மா  )  என்று தேடுவர்.   விவேகமும், ஆராய்ந்து அறியும் திறமையும் இருப்பதால், மனிதர்கள் பலவித சித்தாந்தங்களை, வேத வாக்யங்களை, என்று பலவிதமாக தேடிக் கண்டு கொள்வர்.   புத்தியும் மூன்றுஅவஸ்தைகள்-நிலைகளில் செயல்படும். விழிப்பு, கனவு (தூக்கம்), இடைபட்ட தூங்கி விழிக்கும் முன் முழுவதுமாக நினைவு வராத இடைபட்ட நிலை- சுஷுப்தி –   எனப்படும்.  புத்தியின் ப்ரயோகத்தால், தன் செயல்களின் பலனாக நடப்பதை கொண்டும், ஆராய்ந்து, வாயுவின் வாசனையை வைத்தே எங்கிருந்து வருகிறது என்று கண்டு கொள்வது போல ஆத்மாவை அறிவர்.  இவைகளின் முதல்படி சம்சாரம் என்ற இந்த பூமியில் வாழ்வு.  இது குணங்கள் வினைப் பயன்கள் இவற்றால் கட்டுண்டு இருக்கின்றன.  அறியாமை இதன் அடிப்படை.  கனவு போல என்று தெரிந்தாலும் உலகியல் மனிதர்களுக்கு விருப்பமானதாகவே உள்ளது.

நீங்கள் செய்யக் கூடியது, இந்த அடிப்படை அறியாமையை களைந்து ஞானம் பெற யோக சாதனைகளைச் செய்ய வேண்டும்.  பல உபாயங்கள், ஆயிரக் கணக்காக இருக்கின்றன.  அதில் பகவானே (கீதையில்) சொன்னது, (யத்கரோஷி -யதஸ்னாசி, யஜ்ஜுஹோஷி, என்ற ஸ்லோகம்) உன் செயல்களை யாவையும் எனக்கு அர்ப்பணமாக செய்து விடு )  குருவுக்கு பணிவிடை செய்தும், பக்தியாலும், கிடைத்ததை அர்ப்பணம் செய்தும், சாது ஜனங்களின் சங்கத்தில் இருந்து அறிந்து கொண்டும்,  ஈஸ்வர ஆராதனை, பூஜை முதலியவைகளை செய்தும்,  சிரத்தையுடன் பகவானின் கதைகளைக் கேட்டும், பாடியும்,  தியானம், மூர்த்தி பூஜைகள், ஸ்ரீ ஹரி எல்லா ஜீவன் களிடமும் சமமாக இருக்கிறான் என்பதை திடமாக நம்பி இருப்பதும் அவசியம்.  உலகியலில் நாட்டம்  குறைந்து, வாசுதேவனான பகவானிடம் பக்தி செய்து வந்தாலே, போதுமானது.  பாடல்களை அனுபவித்து பாடும் பொழுதே, பகவானின் லீலைகளை மனதில் நினைக்கலாம். ஆடியும் பாடியும், ஏதோ நேரில் கண்டது போல உத்வேகத்துடன் நடந்து கொள்வதும் பக்தர்களின் செயல் பாடுகள்.  ஹரே! ஜகத்பதே நாராயணா!  என்று பஜனை செய்வர்.  இப்படிச் செய்ய கூச்சமடைய மாட்டார்கள். இந்த நிலையில் பக்தியாலேயே அதோக்ஷஜனை அடைகிறார்கள்.

அவரை நினைப்பது சீக்கிரமே, இந்த சம்சார சக்கரத்திலிருந்து விடுபடச் செய்யும்.  ப்ரும்ம நிர்வாணம் என்ற நிலை என்று அறிந்தவர்கள் சொல்வார்கள்.  எனவே மனதில் ஸ்ரீ ஹரியை நினைத்து பஜனை செய்யுங்கள்.  பாலகர்களே! இதில் அதிக கஷ்டம் இல்லை. பகவான் எங்கோ தூரத்தில் இல்லை. நம் ஹ்ருதயத்திலேயே வசிக்கிறான்.  நம் சகாவாக சமயத்தில் சரியான வழியைக் காட்டுவான்.  அரச பதவி, மனைவி, மக்கள், பசுக்கள், பூமி, நிறைந்த பொக்கிஷம், அனைத்தும் பொருளாதாரம், காமம் என்பவைகளே. க்ஷணத்தில் விழக் கூடியவையே.  மனிதனுக்கு என்னதான் இவைகளில் பற்று இருந்தாலும், சமயத்தில் உதவாது.  மகா யாகங்கள் செய்வர்.  அதிசயமான செயல்களைச் செய்வர்.  நம்மால் எந்த வித்திலும் குறை சொல்ல முடியாத, நாம் கண்டதில்லை, கேட்டது தான் என்ற பரமாத்மாவான ஸ்ரீ ஹரியை பக்தியுடன் ஆராதிப்போம்.  சுகத்திற்காகவும், துக்கத்திலிருந்து விடுபடவும், சங்கல்பம் செய்து கொண்டும் வேதம் விதித்த செயல்களைச் செய்யும்  கர்ம மார்கிகள், கர்ம பலனை தியாகம் செய்வதால்  சுகம் அடைவார்கள்.  பலனை எண்ணியே செய்பவர்கள் பந்தத்தில் சிக்கிக் கொள்வர்.

பொருள்களில் ஆசை, மற்றவர்களால் விரும்பப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு,  நிரந்தரமில்லாத இந்த உடலில் பற்றுதல்  இவைகளால் அலைக்கழிக்கப் படுகிறார்கள்.  தன் உடலுடனே அழியக் கூடிய இந்த விஷயங்களுக்காக இந்த சிரமம் படுவானேன்?  அசுரா:!   இதில் தன்னலம் அன்றி வேறு ஏதாவது தெரிகிறதா?

உடலை வருத்தி சுகம் என்று தேடி அதைக் காண முடிந்திருக்கிறதா? 

அனைத்து ஜீவன்களுக்கும் ஸ்ரீ ஹரியே, பிரியமான ஆத்மேஸ்வரன்.  மஹத் முதலான பஞ்ச பூதங்கள், இவற்றால் பெற்ற உடல், தேவர்களோ, அசுரர்களோ, மனிதர்களோ, யக்ஷ, கந்தர்வர்களோ, ஸ்ரீ முகுந்தனை பஜனை செய்து நற்கதி பெற முடியும்.  அசுராத்மஜா:! ஹே அசுர புதல்வர்களே,  இந்த தேவன், அசுரன், ரிஷிகள் என்று மட்டும் ஸ்ரீ ஹரியை திருப்தி படுத்த முடியாது. நன்னடத்தை, நிரம்ப அறிவு, தானங்கள், தவம், யாகங்கள், ஒழுக்கம், விரதங்கள், இவை அனைத்தையும் விட திடமான பக்தி பெரியது.  எனவே, ஹரியிடம் பக்தியுடன் பஜனை செய்யுங்கள்.  தன்னைப் போலவே உலகில் அனைவரையும் மதிக்க தெரிந்து கொள்ளுங்கள்.  கோவிந்தனிடத்தில் ஏகாந்த பக்தியே உய்வடைய வழி, அதையே செய்யுங்கள். 

 இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின்,  ஏழாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்- 30

 அத்யாயம்-8

அசுர சிறுவர்கள்,  ப்ரஹ்லாதனின் அறிவுரையைக் கேட்டு, குருவிடம் கற்ற பாடங்களை  விட அதுவே உயர்வாக இருப்பதாக  உணர்ந்தனர்.  இவர்கள் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட குரு புத்திரர்கள்,  ஏதோ தவறு என்று பயந்து அரசனிடம் தெரிவித்தனர்.  தன் மகனே தனக்கு அனுகூலமாக இல்லை என்ற செய்தியால் வெகுண்ட  கோபவேசத்தால்  உடல் நடுங்க, உடனடியாக மகனை கொல்லும் எண்ணத்துடன் விரைந்து வந்தான்.  ப்ரஹ்லாதனை கடுமையாக திட்டினான்.  கண்கள் சிவக்க,கைகூப்பி வணங்கி நின்றவனை, இயல்பாகவே கடுமையானவன், காலால் மிதிபட்ட சர்ப்பம் போல சீறியபடி, ஹே! துர்விநீத!  வினயம் இல்லாதவனே,  மந்த புத்தி, குல நாசகனாக வந்த அதமன், என் ஆட்சியை குறை கூறும் உன்னை இதோ யமலோகம் அனுப்புகிறேன் என்று பலத்த குரலில் அதட்டியவன்,  சிறுவன் நீ, என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்.  என் சொல்லை மீறினால் என்ன தண்டனை தெரியுமா? நான் வெகுண்டால் மூவுலகும் நடுங்கும்.   மூவுலக  தலைவர்களும் நடுங்குவர்.   பயமின்றி, ஹே! மூடா!   என் கட்டளையை ஏன் மீறினாய்?

ப்ரஹ்லாதன் சொன்னான்: ராஜன்!  எனக்கு மட்டுமல்ல, அது தான் பலம். பலசாலி என்று உள்ள அனைவருக்கும் அது தான் பலம்.  கடந்த, நிகழ்,வரும் காலங்களிலும்   சராசர -அசையும் அசையா பொருட்கள் அனைத்தும், ப்ரும்மா முதலானவர்களையும் தன் வசம் வைத்திருப்பவர்,  அவர் தான் பலம்.

அந்த ஈஸ்வரன்   மஹா ப்ராக்ரமம் உடைய காலன், அவனே  உயிரினங்களில் புலன்களுடன் உள்ள வடிவம் செயல் பட செய்பவன்.  அதன் மனதின் சக்தி, தைர்யம், பலம்.   தேக சக்தி, இந்திரியங்களுடன் அவர்களின் ஆத்மா.  அவன் தான் பரம ஸ்ரேஷ்டன்.  முக்குணங்களையும் ஆளுபவன்.  அத்துடன் மற்ற தத்வங்களுடன், உலகை படைத்தும், காத்தும், பின் கலைக்கிறான்.  தந்தையே, இந்த அசுர குணத்தை விடுங்கள்.  மனதை சாந்தமாக வைத்துக் கொள்ளுங்கள், எதற்கு மற்றவரிடத்தில் துவேஷம்? அனைவரையும் சமமாக பாருங்கள்.   மன அடக்கம் இல்லாத இடத்தில் தான் துவேஷம் போன்ற கெட்ட எண்ணங்கள் வரும்.   அனைத்து ஜீவன்களையும் சமமாக எண்ணுவதே பகவானுக்கு செய்யும் பெரிய ஆராதனை.  தன் இந்திரியங்களே தான் ஒருவனுக்கு சத்ரு. அது திருடன் போல ஐஸ்வர்யம், செல்வம் இவைகளை மற்றவர்களிடமிருந்து அபகரித்து தான் வெற்றி பெற்றதாக எண்ண வைக்கிறது.   பத்து திசைகளையும் தானே வென்றதாக பெருமை பேச வைக்கிறது.  இந்த அபிமானம் கண்களை மறைக்கிறது.  இன்னமும் எதிரிகள் இல்லாமல் இல்லை.  சரீரம் தான் வெவ்வேறு, ஆத்மா ஒன்றே என்ற அறிந்த பெரியவர்கள்,  சமதர்சிகள்.  அனவரும் ஒன்றே என்று தெரிந்ததால் எவரையும் எதிரியாக சொல்வதில்லை.  

ஹிரண்ய கசிபு பதிலுக்கு ஆத்திரத்துடன், நிச்சயம் நீ மரணத்தை எதிர் கொண்டு நிற்கிறாய்.  அளவுக்கு மிஞ்சி உளறுகிறாய்.  மந்த புத்தியே!  என்னையன்றி ஜகதீஸ்வரனாக ஒருவன் இருக்கிறான் என்றால், எங்கே இருக்கிறான், இந்த கம்பத்திலா? காணவில்லையே என்றான்.  இதோ நான்  அதிகப்ரசங்கித் தனமாக பேத்தும் உன்னை தலை வேறு உடல் வேறு என்று ஆக்குகிறேன், உன் பகவான் வந்து காப்பாற்றுகிறானா பார்க்கலாம் என்று சொல்லியபடி,  தன் சிம்மாசனத்திலிருந்து இறங்கி, கையில் வாளுடன் வந்தவன் அந்த கம்பத்தை ஓங்கி அடித்தான்.  அந்த கம்பத்திலிருந்து பயங்கரமான சப்தம் எழுந்தது.  அண்டங்கள் நடுங்கின.  கட கடவென்ற சப்தம் ப்ரும்மா முதலான தேவர்கள் தங்கள் முடிவு வந்து விட்டதாகவே பயந்தனர்.  புத்திரனை கொல்ல கிளம்பியவன்,  முன் கேட்டறியாத  பயங்கரமான ஓசை,  அத்துடன் அத்புதமான அபூர்வமான ஒன்றை சபை நடுவில் கண்டான்.  தேவர்களின் எதிரிகளான அசுரர்களை அலறச் செய்தவன்.

सत्यं विधातुं निजभृत्यभाषितं व्याप्तिं च भूतेष्वखिलेषु चात्मनः ।अदृश्यतात्यद्भुतरूपमुद्वहन् स्तम्भे सभायां न मृगं न मानुषम् ॥   

தன் பக்தன் சொன்னதை நிரூபிப்பதற்காக, அனைத்து உயிர்களிலும் ஆத்மாவாக இருப்பவன், முன் கண்டிராத அத்புதமான ரூபத்தை எடுத்துக் கொண்டவனாக, சபையின் கம்பத்தில் மனிதனுமல்ல, மிருகமுமல்ல என்பது போன்ற உருவம் எடுத்துக் கொண்டு வெளிப்பட்டான்.

திகைத்து, இது என்ன உருவம் என்று பார்த்தபடி இருந்த ஹிரண்யகசிபுவின் முன்னால் ஸ்ரீ ஹரி, நரசிங்கமாக தோன்றினார்.  பயங்கரமான ரூபம் என்று வர்ணிக்கிறார்.  தகிக்கும் நெருப்பில் புடமிட போட்ட தங்கம் போல பள பளத்த சிவந்த கண்கள்,  சிங்கத்தின் பிடரி பயிர்,  ஜடையுடன் முகத்தை மறைக்க,  பயங்கரமான பற்கள், சிங்கத்தின்  கத்தி போன்ற கூர்மையான நாக்கு,  அடர்ந்த புருவங்கள், சங்கு போன்ற மேல் நோக்கி உயர்ந்த காதுகள், மலை குகை போல ஆழமான வாயும், மூக்கும்,  கன்னங்களும் முகவாயும் பயங்கரமாக காது வரை நீண்டிருக்க, வானளாவிய சரீரம், அடங்கிய கழுத்து, அதனடியில் விசாலமான மார்பு பிரதேசம், சிறுத்த இடைகள்,  சந்திரனின் கிரணம் போன்ற வெளுத்த கூர்மையான ரோமங்கள், நாலு திசைகளிலும் பரவி நின்ற எண்ணற்ற புஜங்கள், நூற்றுக் கணக்கான நகங்கள், இவைகளே ஆயுதமாக,  தன்னுடைய இயல்பான ஆயுதங்கள் எதுவும் இன்றி, இருந்தவரைப் பார்த்து ஹிரண்யகசிபு இதுவும் ஸ்ரீஹரியின் மாயா தோற்றமே, என்னைக் கொல்ல வந்திருக்கிறான் என்று சொல்லியபடி,  தன் கதாயுதத்துடன் போருக்குத் தயாராக

சிங்கத்தின் முன்  குட்டி யானை போல எதிர்த்தான்.   பதங்க:- விட்டில் பூச்சி தானாகவே வந்து நெருப்பில் வீழ்ந்து உயிரை விடுவது போல ந்ருசிங்கத்தின் ஆற்றலின் முன் விழுந்தான்.

அதில் என்ன ஆச்சர்யம். சத்வ ப்ரகாசமான ஸ்ரீ ஹரியிடத்தில் தாமசமான இருள் மறைவது இயல்பானதே.

ஸ்ரீ ஹரியோ, முன் தாமசமான ப்ரளய கால இருட்டையே தான் விழுங்கியவர் தானே.   அசுரன் கதையால் அடிப்பதைப் பார்த்த தேவர்கள் திகைத்தனர்.  அசுரனால் அவர்களுடைய இருப்பிடமும் அக்ரமிக்கப் பட்டு விட்டதால், மேகக் கூட்டங்களில் மறைந்து நின்றபடி திகிலுடன் பார்த்தபடி இருந்தனர். அசுரன் கையிலிருந்து விடுபட்ட ந்ருஹரியைக் கண்டதும் ஆஸ்வாசமடைந்தனர்.  ஆஹா, என்னிடம் பயந்து விட்டான் என்று ஆர்பரித்தபடி, தன் வாளை அதன் உறையிலிருந்து உருவி எடுத்துக் கொண்டு,  அசுரன் கழுகின் வேகத்துடன்.   முன்னேறினான். ஸ்ரீ ஹரியின் அட்டஹாஸமும், தேஜசும் அவன் கண்களைக் கூசச் செய்தன.  புலி பதுங்கி இருந்து மூஷிகத்தை பிடிப்பது போல, அல்லது பாம்பை கருடன் கொத்திக் கொண்டு போவது போலவும், உலகை நாலா திக்குகளிலும் ஆக்ரமிக்கும் க்ரஹம் போல, அசுரனை மடக்கி பிடித்தார்.  சபையின் சபா த்வாரத்தின் உள்ளும் அல்ல, புறமும் அல்ல,  பூமியிலும் அல்ல, வானத்திலும் அல்ல என்பது போல தன் தொடையில் போட்டுக் கொண்டு,  நகங்களால், உயிரை எடுக்கும் ஆயுதங்களும் அல்ல, இரவும் அல்ல, பகலும் அல்ல என்ற சந்த்யா காலத்தில், தன் நீண்ட நாக்கினால் அவன் உயிரை எடுத்தார்.  ரத்தம் தோய்ந்த சிங்க முகம்  எதிர்த்து நின்ற யானையை த்வம்சம் செய்தபின் இருப்பது போலவே இருந்தது. 

தன் நகத்தின் நுனியால்,    ஹிரண்யாசுரனின்  ஹ்ருதய கமலத்தை கிழித்து எடுத்தார்.   அதை விட்டு விட்டு, மற்ற அசுர வீரர்களை நோக்கி திரும்பினார். ஆயிரக் கணக்காக ஓடி வந்த அசுர வீரர்களையும் நகத்தாலேயே தாக்கி, மடியச் செய்தார்.

வானளாவி நின்றதால் அவருடைய மூச்சுக் காற்றுப் பட்டு மேகங்கள் பாதிக்கப்பட்டன.  திக் கஜங்கள் பயந்து அலறின.  ஆகாயத்தில் சென்று கொண்டிருந்த விமானங்கள், ஆட்டம் கண்டன.   ந்ருஹரியின் பாதங்களால் மிதிக்கப் பட்ட பூமி திணறினாள்.  அவருடைய வேகத்தில் மலைகள் தூக்கி வீசப் பட்டன. ந்ருஹரியின் தேஜஸின் முன் வானமோ, திசைகளோ,  அடுத்து அண்டாண்டங்களோ இருப்பதே தெரியவில்லை.  சபையில் சிம்ஹாஸனத்தில் அமர்ந்தவரை யாரும் நெருங்கவே பயந்தனர்.  சர்வ லோகத்துக்கும் தலைவலியாக இருந்த ஹிரண்ய கசிபு அந்த முதல் தைத்யன் ந்ருஹரியால் யுத்தத்தில் ஹதம் செய்யப் பட்டதையறிந்து அனைவரும் மகிழ்ந்தனர். மகிழ்ச்சியில் தேவர்கள், தேவ ஸ்த்ரீகள் அனைவரும் முக மலர்ச்சியுடன் புஷ்பங்களை வர்ஷித்தனர்.  வானம் அவர்களின் வாகனங்களால்  நிரம்பியது. வாத்யங்களின் வாத்யம் குதூகலமாக எங்கும் கேட்டது.  கந்தர்வர்களின் ஆட்டமும், அந்த ஸ்த்ரீகளின் பாட்டும் பரவியது.  சற்று நேரம் பயந்து ஒதுங்கி இருந்த ருத்ரன், ப்ரும்மா முதலியோர்கள் தைரியமாக அருகில் வந்தனர்.  தலை யில் வைத்த அஞ்சலியுடன் ஒவ்வொருவராக வந்து துதி செய்தனர்.  ரிஷிகளும் பித்ருக்களும், சித்தர்களும், வித்யாதர, மஹோரகர்களும் , ப்ரஜாபதியும், கந்தர்வ அப்சரஸ் சாரணர்கள், யக்ஷ, கிம் புருஷர்களும் வேதாளங்களும், சித்த கின்னர்களும், விஷ்ணு பார்ஷதர்கள் அனைவரும், சுனந்த குமுதன் முதலியோரும், அதே போல தலைக்கு மேல் கைகூப்பி வணங்கியபடி தீவிர தேஜசுடன் அமர்ந்திருந்த நரசிம்மரை அதிகம் நெருங்காமலே வணங்கினர்.

ப்ரும்மா சொன்னார்:   வணங்குகிறேன்.  அனந்தன், அளவில்லாத சக்தியுடையவன், விசித்ர வீர்யன், பவித்ர கர்மாவை செய்பவன், விஸ்வத்தின்  யுகம் தோறும் காத்தும் , பின் லயமாகச் செய்தும் தன் குணங்களால், லீலையால்,  சேர்த்து இயங்கச் செய்யும் அழிவற்ற  உங்களுக்கு நமஸ்காரம்.

ஸ்ரீ ருத்ரன் சொன்னார்: யுகாந்தத்தில் வெளிப்படும்  உங்கள் கோபம்  தற்சமயம் இந்த அசுரனை அழிக்க வந்துள்ளது.  அவன் மகனை காப்பாற்றுங்கள். பக்த வத்சல! அவன் உங்கள் பக்தனே.

இந்திரன் சொன்னான்: எங்களுக்கு உரித்தான யாக பாகங்கள்  திரும்ப பெற்றோம்.   இந்த தைத்யன் தானே இந்திரனாகவும் மற்ற தேவர்களுமாக  தோன்றி யாக ஹவிசை அபகரித்துக் கொண்டு விட்டான்.   அதனால் எங்கள்  ஹ்ருதய கமலம் – உள்ளத்தை உங்களிடமே ஒளித்து வைத்து இருந்தோம். இப்பொழுது அசுரன் அழிந்தான், எங்கள் பயமும் நீங்கியது.  நரசிங்கனாக வந்த உன் செயலால் எங்கள் இயல்பான உரிமைகளைப் பெற்றோம்,

ரிஷிகள் சொன்னார்கள்: நீ தான் எங்கள் தவத்தின் பலன். பரமன், ஆதி புருஷன், ஆத்ம தேஜஸால் ஸ்ருஷ்டிக்கிறாய். ஆதி அந்தம் இல்லாத சரணடைந்தவர்களைக் காப்பவனே,  இந்த அசுரனால் சேதமான இந்த மூவுலகையும் புனருத்தாரணம் செய்ய வேண்டும்.  அதற்காகவே இப்படி ஒரு ரூபம் எடுத்து வந்தாயா?

பித்ருக்கள் – எங்கள் வம்சத்தினர் செய்யும் ஸ்ரார்தங்கள் எங்களுக்கு வந்து சேரவில்லை.  அவர்கள் அளித்த எள்ளும் நீரும் இந்த அசுரனின் வயிற்றில் இருந்ததோ, அதை உன் நகங்களால் கிழித்து காட்டினாயோ, ந்ருஹரே! அகில தர்ம பாலனான உனக்கு நமஸ்காரம்.

சித்தர்கள்: எங்களுக்கு நீயே தான் கதி.  யோக சித்திகளை இந்த அசாது –(ஸாது எதிர்பதம்  அசாது) தன் தவ வலிமையால் அபகரித்துக் கொண்டான்.   அந்த துஷ்ட காரியத்தைத் தான் உன் நகங்களால் கீறி, அழித்தாயா, ந்ருசிம்ஹ, உன்னை வணங்குகிறோம்.

வித்யாதரர்கள்:  எங்கள் வித்யைகளை இடை மறித்தான்.  பல காலமாக நாங்கள் தாரணை என்ற முறையில் கற்றுத் தேர்ந்த கலைகள், வித்தைகள்,  இவைகளை, பலம் வீர்யம் இவைகளால் கர்வம் கொண்டவனாக அவைகளை தடுத்தான்.  யுத்தம் செய்து துஷ்ட மிருகத்தைக் கொல்வது போல அழித்தாய், எங்கள் வித்தைகள் காப்பாற்றப் பட்டன,  ந்ருசிம்ஹ,   வணங்குகிறோம்.

நாகர்கள்: பாபி இவன். எங்கள் ரத்னங்களை, அத்துடன் ஸ்த்ரீ ரத்னங்களையும் அபகரித்தான்.  இவனை என்ன செய்தால் என்ன என்று தவித்தோம். அவன் மார்பை பிளந்தது எங்களுக்கு மிக்க மிகிழ்ச்சியே.  உனக்கு நமஸ்காரம்.

மனுக்கள்: நாங்கள் மனுக்கள். உங்கள் கட்டளைப் படி நடப்பவர்கள்.  திதி மகனான இவனால் அவமானப் பட்டோம்.  அந்த துஷ்டனை அடக்கி விட்டீர்கள் ப்ரபோ!  எப்படி உங்களுக்கு கைம்மாறு செய்வோம், உங்கள் கிங்கரர்கள் நாங்கள், கட்டளையிடுங்கள். 

ப்ரஜாபதிகள்: ப்ரஜாபதிகள் நாங்கள். உங்களால் ப்ரஜா பாலனத்திற்காகவே ஸ்ருஷ்டிக்கப் பட்டோம்.  இது வரை தடை பட்ட எங்கள் செயல்களை செய்வோம். இதோ உங்களால் மார்பு உடைக்கப் பட்டு கிடக்கிறானே, இனி ஜகத்துக்கே மங்களம் தான். சத்வ மூர்த்தே, நன்று இந்த அவதாரம்.

கந்தர்வர்கள்: ப்ரபோ! நாங்கள் நட,நாட்ய காயகா: –  நாடகம்- அபிநயம் செய்பவர்கள், நாட்யமாடுபவர்கள், பாடுபவர்கள்.   தன் பலம் அதிகாரம் இவைகளைக் கொண்டு அதிகாரம் செய்தான். இவன் இந்த தசையை அடைந்து கிடக்கிறானே,  அது எங்கள் நன்மைக்கே.

சாரணர்கள்:  உலக வாழ்க்கை தொடர  வேண்டாம், என்றும், அபவர்கம்  எனும் உன் பாத சேவையையே வேண்டும் என்று உன் பாதங்களை ஆஸ்ரயித்த சாரணர்கள் நாங்கள்.  நன்றே செய்தாய். இந்த அசுரன் ஹ்ருதயம் பிளந்து விழுந்தான்.

யக்ஷர்கள்: நாங்கள் உன் அணுக்கத் தொண்டர்கள்.  உன் அருகில் இருந்து மனதுக்கு பிடித்த செயல்களை செய்து வந்தோம். அந்த திதி சுதன் எங்களை பல்லக்கு தூக்கிகளாக ஆக்கி விட்டான்.  ஜனங்களுக்கு சொல்லொணா தாபத்தைக் கொடுத்த இந்த அசுரன் உன்னால்  பஞ்சதாம்- மரணத்தை அடைந்தான்.  

கிம்புருஷர்கள்: நாங்கள் கிம் புருஷர்கள். தாங்களோ மஹா புருஷன் எனும் ஈஸ்வரன்.  எங்களை அலட்சியம் செய்தான்.  இந்த மட்டமான மனிதன் மரித்தான்.

வைதாளிகர்கள்:  எங்கள் குலத்தினர், சபைகளில், யாகங்களில், உங்களூடைய அமலமான புகழை பாடுவோம். அதனால் மக்களிடையே பெரும் மதிப்பை பெற்றோம். இந்த துர் ஜன்மா அதை ஒட்டு மொத்தமாக நிறுத்தச் செய்து விட்டான். எங்கள் நல்ல காலம், உன்னால் ஹதம் செய்யப் பட்டான்.  பகவன்!  வியாதி நிவாரணமானால் பத்ரம்- நிம்மதி வருமே அது போல நாங்கள் துயர் நீங்கினோம்.

கின்னர்கள்: உங்கள் அனுசரர்கள், உடன் வரும் கின்னர கூட்டத்தினர்.   இந்த தைத்யன் எங்களுக்கு ஊதியம் எதுவும் தராமலே வேலை வாங்கினான்.  ஹரே! இந்த பாபாத்மா உன்னால் அழிந்தான்.  ஹரே! நரசிம்ஹ நாதா! எங்களுக்கு நன்மையை செய்.

விஷ்ணு பார்ஷதர்கள்:  அத்புதமான உங்கள் நரஹரி ரூபத்தை பார்த்து வியக்கிறோம்.  சரணம் அடைந்தவர்களை காப்பதைக் கண்டிருக்கிறோம்.  இது இவர் விதி ஈசனே! விப்ர- அந்தணனால் சபிக்கப் பட்டவன்.  இந்த மரணமே இவனுக்கு அனுக்ரஹம் என்று அறிகிறோம்.  

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின்,  எட்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்- 56

 அத்யாயம்-9

இவ்வாறு ப்ரும்மா, ருத்ரன் முதல் அனைத்து தேவர்களும் வந்து வணங்கியும் நரசிங்கருடைய  ஆச்சர்யமான கோபத்தை குறைக்க முடியவில்லை.  தேவர்கள் லக்ஷ்மி தேவியையே அனுப்பினார்கள்.  அத்புதமான ரூபம், அந்த காணக் கிடைக்காத மிகப் பெரிய உருவத்தை லக்ஷ்மி தேவி சமாதனப் படுத்த முடியும் என்று நினைத்தனர்.  அவள் முன் கண்டறியாத, கேட்டறியாத உருவம் என்பதால் சந்தேகம் கொண்டு மறுத்து விட்டாள்.  ப்ரஹ்லாதனையே அனுப்பினர். அருகில் ப்ரும்மா உதவிக்கு நின்றார்.  மகனே!  உன் தந்தையிடம் கோபித்துக் கொண்டு இருப்பவரை  நீயே போய் சமாதனம் செய் என்றனர்.   சம்மதித்த ப்ரஹ்லாதன் அருகில் சென்று வணங்கினான்.  தன் காலில் விழுந்த சிறுவனைப் பார்த்து தேவன் கருணையுடன் எழுப்பி, அவன் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார்.  காலடியில் சர்ப்பத்தைக் கண்டு  பயந்தவர்களுக்கு அபயம் அளிப்பது போல.  அந்த கை மேலே பட்டவுடனே தன்னை ஸூழ்ந்திருந்த  அசுபங்கள் விலகி விட்டதாக ப்ரஹ்லாதன்  உணர்ந்தான்.  பரிசுத்தமான மனதுடன் அவர் பாத பத்மங்களை தன் மனதில் இருத்திக் கொண்டான். கண்களில் நீர்பெருகியது. மனதின் மகிழ்ச்சி உடலில் தெரிந்தது.  ஆழ்ந்த தியானத்தால் தன் மனதை ஒருமுகப் படுத்திக் கொண்டான். வாயில் வார்த்தைகள் வெளி வராமல் குரல் தழ தழத்தது.  அவரையே பார்த்தபடி துதி செய்தான்.

ப்ரஹ்லாதன் சொன்னான்: ப்ரும்மா முதலான தேவர்கள், முனிவர்களும் சித்தர்களும், ஒரே குரலில் மனப் பூர்வமாக சொற்களின் ப்ரவாகமாக ஆராதித்தனர்.   பகவானை பூஜை செய்ய,  உயர் குல பிறப்போ, தனம் நிறைந்த உறவினர் கூட்டமோ,  தவ சீலர்களோ, தேஜஸால் வரும் ப்ரபாவமோ, பலம் பௌருஷம் புத்தி, இவைகள் இணைந்து இருப்பதோ,  பர புருஷனுக்கு ஆராதனையாக முடியாது. பக்தியால் பகவான் சந்தோஷப் படுகிறார்.  கஜேந்திரனுக்கு அருளியதே சாட்சி.  பன்னிரண்டு குணங்கள் அந்தணர்களுக்கு விதிக்கப் பட்டதாகச் சொல்வர்.  (தர்மம், சத்வம், தமம், தவம், சங்கோசம், அஸூயை இல்லாமை, அறிதலில் ஆர்வம், யாகம், தானம், உறுதி, வேத ஞானம், விரதங்கள்) இந்த குணங்கள் இருந்தும் அரவிந்த நாபன் என்ற பகவான் விஷ்ணுவிடம் துவேஷம் இருந்தால் என்ன பலன்?   சுய கர்வம் உள்ள ஒருவர் என்னதான் அறிவாளியானாலும் அவரால் மற்றவர்களுக்கு நன்மை இல்லை.  முகத்தில் இட்ட திலகம் ப்ரதி பிம்பத்தில் தானே காண முடியும். 

பகவான் பக்தியினால் மட்டுமே மகிழ்ச்சியடைகிறார்.  இந்த குலத்தில் பிறந்தேன் என்பதால் நான் அசுரன். எனக்கு தெரிந்த வரை பகவானை துதிக்கிறேன்.  விதியின் வசம் தான் பிறப்பும், நல்ல குலத்திலோ, மற்றதிலோ அதை மாற்ற முடியாது.  இந்த க்ரோதமும் உங்கள் அவதாரமும் உலக க்ஷேமத்திற்காக,  எவரையும் பயப்படுத்த இல்லை என்று அறிகிறேன்.  அதனால் ப்ரபோ! இந்த ரூபத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.  உலகை ஹிம்சித்த அசுரன் மடிந்தான்.  இந்த க்ரோதத்தை விட்டு உங்களுடைய சௌம்யமான ரூபத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.  மற்றவர்களுக்கு உபத்ரவமே செய்யும் தேள் போன்ற ஜந்துக்கள்  போன்ற சில பிறவிகள். இவைகளை வதம் தான் செய்ய வேண்டும். சாதுக்கள், சாதாரண  ஜனங்கள்  உங்களை இந்த ரூபத்தில் கண்டதில்லை  எனவே, அவர்களுக்காக இந்த பயங்கர உருவத்தை விடுங்கள். . அவதார காரியம் அசுரன் மடிந்ததில் ஆகி விட்டது.  உலகமே நிம்மதியடைந்துள்ளது. ந்ருசிம்ஹ, இந்த ரூபத்தை உலக நன்மைக்கானது  என்பதை என்றும் நினைத்திருப்பார்கள்.

நான் பயப்படவில்லை. இந்த பயங்கரமான தோற்றம்- சிங்க முகமும், நீண்ட நாக்கும், தீயின் ஜ்வாலை போல சிவந்த கண்களும், புருவங்களும், உக்ரமான பற்களும்,  அசுரனின் குடலை மாலையாக தரித்திருப்பதும், ரத்தம் தோய்ந்த சிங்கத்தின் பிடரி மயிர்களும்,  சங்கு போன்ற நீண்ட காதுகளும்,  அட்டகாசமான சிரிப்பால் பயந்த திக் கஜங்கள்,  வாளின் கூர்மையுடன் நகங்கள், இவைகளைக் கண்டு நான் பயப்படவில்லை.  , எளியவர்களுக்கு இரங்கும் குணவானே!   உலகியலில் உள்ள துன்பங்களைக் கண்டு பயப்படுகிறேன். உன் சரண கமலங்களில் என்னை ஏற்றுக் கொள்.  இந்த பிறவி, மறு பிறவி என்ற சுழலில்  திரும்ப திரும்ப புதுப் புது ஜீவன்களின் கர்பத்தில் பிறப்பதை, பிரியமானது அப்ரியமானது என்ற உறவுகள், அவைகளின் அருகாமை சுகம் என்றால் பிரிவு மிக துன்பம், என்று சோகம் அக்னியாக தகிக்கும் இந்த சம்சார பந்தம் வேண்டாம். இப்படி அலையாமல் எனக்கு உன்னடி நிழலைத் தர வேண்டுகிறேன். 

ந்ருசிம்ஹ! ப்ரும்மா முதலானோர் புகழ்ந்து பாடும் உன் அவதார லீலைகளை கேட்டபடி,  உங்களருகில் சேவகனாக இருக்க வரம் தர வேண்டும்.  இந்த பாலகனுக்கு வேறு அடைக்கலம் இல்லை.  வியாதியுடையவனுக்கு ஔஷதம்- மருந்தே சரணம். கடலில் மூழ்கியவனுக்கு கிட்டிய படகே சரணம்.

 என் தந்தையும் தாயும் நீங்களே.   ஒரு வேளை,   இது போன்ற கஷ்டமான சமயங்களில், எப்படியோ, யாராலோ, ஏதோ ஒரு சமயத்தில், முன் பின் அறியாத ஒருவன் உதவிக்கு வருவான் என்பது நியதி என்று வைத்துக் கொண்டாலும் அந்த ரக்ஷகன் நீங்களே தானாக இருப்பீர்கள்.  சந்தர்பத்துக்கு தகுந்த வேடத்தில் வந்து சேருவாய். எப்படி தீர்மானமாகச் சொல்கிறாய் என்றால்,  உலகில் தாய் தந்தையை,  அதையும் விட மேலான ப்ரும்மா போன்றவர்கள், அவரவர் செயல்களை குறைவற செய்ய முடிவதும் உன் அனுக்ரஹத்தலேயே. அடிப்படையான சக்தி நீயே. அதனால் எந்த சமயத்தில், என்ன காரணத்தால், எந்த கருவியினால்,  எவரை தூண்டி விட்டு, அந்தசூழ்நிலைக்கு ஏற்ற சாதனங்களையும்,   யாருக்கு தர வேண்டும் என்பதும்,  தன்னைச் சார்ந்தவர்களொ, மற்றவர்களோ, அவர்களைக் கொண்டு செய்விக்கிறாய்.  யாரானாலும் சமயத்தில் உதவி செய்பவன்  உன் ஸ்வரூபமே, நீயே.   

மற்றவர்களுக்கு உதவி செய்வது பொதுவாக மனித குணமே இல்லை என்ற விதிப்படி, எனக்கு ரக்ஷகன் நீயே. உன் அனுக்ரஹத்தால், மாயை மனத்தை ஆட்டுவிக்கிறது.  காலத்தால் தூண்டப்பட்டு செயல்களைச் செய்ய தூண்டுகிறது.  வேத சாரமான  பதினாறு ஆரங்கள் உடைய  சம்சார சக்ரம். இதை யார் தவிர்க்க முடியும்.  நீயே தன் ஆற்றலால் ஆத்ம குணங்களை வென்றவனாக, காலத்தை தன் ஆளுமைக்குள் வைத்திருப்பவன்,  அணைக்கவும், தண்டிக்கவும்  சக்தியுடையவன்,  ப்ரும்மாவினால் இந்த சக்ரத்தில் தள்ளப் பட்ட உன் தாஸன் என்னை காப்பற்றுங்கள் பிரபோ!.

உலகில் மனிதர்கள், ஆயுள், செல்வம், பதவி இவைகளைத் தான் அதிகமாக வேண்டுகிறார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன்.  இவையனைத்தையும் நிரம்ப பெற்றிருந்த என் தந்தை உங்கள் அட்டகாசமான சிரிப்பு, புருவங்களின் நெரிசல் இவைகளால் ஹதம் செய்யப் பட்டதை நேரில் கண்டேன்.  எனவே அனித்யமான போகங்கள், தேவலோகமே ஆனாலும் எனக்கு வேண்டாம்.  என்னை உங்கள் அருகில் பணிவிடை செய்யும் தாஸனாக வைத்துக் கொள்ளுங்கள்.

வேத வாக்யங்களால் சொல்லும் ஆசிகள் கானல் நீரைப் போன்றதே.   அனைத்து நோய்களுக்கும்  இடம் கொடுக்கும் இந்த சரீரம், இதையறியாத மனிதர்கள்   நெருப்பின் ஜ்வாலையை தேன் துளிகளால் அணைக்க முயலுவது போல அல்ப சுகங்களில், காமத்தை திருப்தி செய்ய பாடு படுகிறார்கள். 

தாமசமே அதிகமான இந்த அசுர குலத்தில் பிறந்த எனக்கு, ப்ரும்மா முதலானவர்களுக்கு கூட கிடைக்காத உங்கள் சரீர ஸ்பரிசம், என் தலையில் உங்கள் பத்ம கரத்தை வைத்து அனுக்ரஹித்தீர்கள்.  என்னே உங்கள் அனுகம்பம்- பரிவு.    பிறவிகளில்  உயர்வு தாழ்வு என்று மற்றவர்கள் நினைக்கலாம்.  தாங்கள்  அனைவருக்கும் நண்பனானவன். சிருஷ்டியில் ஏற்றத் தாழ்வு காண்பது அறியாமை. பல விதமாக சாதனைகள் செய்து உங்கள் அனுக்ரஹத்தை அடைய முயற்சிகள், தவம் விரதங்கள் செய்கின்றனர்.  அங்கும் அவர்களின் சாதனைகளுக்கு ஏற்ற பலன்களே கிடைக்கின்றன. வேண்டியதை கொடுக்கும் கல்ப தரு  கூட வேண்டியதைத் தான் தரும். அதற்கு மேல் தராது.

எதுவுமில்லாத எனக்கு உங்கள் அனுக்ரஹம் கிடைத்தது என் குரு ஸ்ரீ நாரதரின் அருளால் என்று நினைக்கிறேன்.  உங்கள் பக்தன் நாரதர் முதலில் எனக்கு தரிசனம் தந்து உபதேசம் செய்தார். அவர் கிணற்றில் விழுந்தவனை தூக்கி விடுவது போல எதுவுமறியாத என்னை ஞானோபதேசம் செய்து தூக்கி விட்டார். அவரோ உங்கள் பக்தன், தாசன், எனவே எனக்கு கிடைத்த இந்த அனுக்ரஹம் அவர் காரணமாக கிடைத்தது என்பதில் சந்தேகம் இல்லை.

அனந்த! என் தந்தையின் வதமும், என் ப்ராண ரக்ஷணமும்,  உங்கள் பக்தனான ரிஷியின் வார்த்தையை சத்யமாக்கவே. வாளைத் தூக்கிக் கொண்டு என்னிடம்,   என்னை தவிர வேறு யார் ஈஸ்வரன்? என்று அசட்டுத் தனமாக கொல்வேன், என்று வந்த என் தந்தையிடமிருந்து என் உயிரை  காத்தவர் நீங்கள்.  ஆதி அந்தம் மத்யம் என்று எங்கும் பரவி இருப்பவர்,  தன் மாயையால் குணங்களின் வேறு பட்ட பிரயோகங்களால் பல விதமாக ஸ்ருஷ்டி செய்த பின்,  தானே அவைகளின் உள் உறைபவர்.  இந்த அசுர அரசனின்  நிதனம் காலத்தினால் நிர்ணயிக்கப் பட்டது.  மரத்திற்கு காரணம் விதை என்றும், பூமி அதன் இருப்பிடம் மட்டுமே, அந்த விதையை மரமாக்குவது பூமியே என்றாலும், காரணங்கள் இரண்டு வகையாக – ஒன்று வெளியில் தெரிவதாக, விதை போல சூக்ஷ்மம் பூமி போல மறைந்திருந்து வளர்ப்பது –  இந்த இரண்டு வகையாகவும் உலகங்களை  நீங்களே  பூத, ஸூக்ஷ்ம என்ற இரண்டுமாக இருந்து இயங்கச் செய்கிறீர்கள்.  ப்ரளய ஜலத்தில்  தூங்குவது போல தெரிந்தாலும்,  யோக முறையில், கண்களை மூடி  தன்னைத் தானே பரமானந்தமாக அனுபவித்துக் கொண்டு தாமசமோ, குணங்களோ இல்லாத நான் காவது நிலையில் விழித்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள். 

உங்கள் சரீரம் நீரில் மூழ்கி அனந்த சயனத்தில்  ஆத்மாராமனாக செயலற்று  கிடந்ததால் கால சக்தி இயற்கை தர்மங்கள் மூலம் எழுப்பினாள்.    சமாதி நிலை கலைந்து உங்கள் நாபியில் ஆல மரத்து  மிக சூக்ஷ்மமான விதையிலிருந்து பெரிய ஆல மரம் வளர்வதைப் போல , மகா பத்மம் தோன்றியது. அது போலவே ஒரு காரணம் காட்டி  இந்த பத்மத்திலிருந்து சுத்த சத்வமான ப்ரும்மா பிறக்கச் செய்தீர்கள்.  அதிலிருந்து பீஜம்-விதை தான் காரணம் என்று உலகில் காட்டி உங்கள்  உள்ளேயே பரவியிருந்த சத்வ குணத்தை காட்டிக் கொள்ளவேயில்லை.  துளிரைக் கண்டதும் அதனடியில் விதை இருந்திருக்கும் என்று மனிதர்களை  ஊகிக்க வழி வகுத்தது.  கடுமையான  தியானத்தாலும், தவம் செய்தும் அந்த ப்ரும்மா தனக்குள்ளேயே உங்களைக் கண்டு கொண்டார்.   உபாதானம் என்ற அதி ஸூக்ஷ்மமான தரிசனம் அவருக்கு கிடைத்தது.  விவேகியானவன் பூமியில் வாசனையைக் கொண்டு அதன் காரணத்தை கண்டு கொள்வது போல.  பகவானாக ஆயிரக் கணக்கான முகங்கள், கரங்கள், பாதங்களோடு அவருக்கு தரிசனமாயிற்று.   அதனால் மிக்க மகிழ்ச்சியடைந்தார்.  அவருக்கு தாங்கள் ஹயசிரன்- குதிரை முகம் கொண்டவனாக வேதங்களை எதிர்த்த பலசாலிகளான மது கைடப என்பவர்களை வதம் செய்து, ஸ்ருதி கணங்களை காத்த உங்களை சதா,ரஜஸ்,தமஸ் சேர்ந்த ரூபமாக சொல்கிறார்கள்.

இது போல ஒவ்வொரு யுகத்திலும் அரசனாக,மிருகமாக, தேவனாக, நீர் வாழ் ஜந்துவாக, அவதாரங்கள் செய்து உலகில் ப்ரதி கூலமாக- எதிராக செயல்படும் அசுரர்கள் போன்றவர்களை அழித்து,   தர்மத்தை நிலை நிறுத்துவதை வழக்கமாக கொண்ட நீங்கள் கலி யுகத்தில் மறைந்து இருப்பீர்கள்.  வைகுண்ட நாதனே!  உங்கள் கதைகளை கேட்டு மனம் மகிழ்ச்சியடைகிறது. ஹர்ஷ, சோக,பயம் என்ற உணர்ச்சிகளால் நிறைந்த கதைகள், இவற்றை கேட்டபின் என் தீனமான நிலையை எப்படி விமரிச்சிப்பேன்.  உங்களை துதி செய்ய மனம் விழைகிறது.  உடல் இந்திரியம் காமத்தை நாடுகிறது.  புலன்களின் சபலம் என்னை மட்டுமல்ல அனைத்து மனிதர்களையும் தடுமாற வைக்கிறது.  இப்படி தன் செயல்களால், தன்னை கட்டுப் படுத்த முடியாமல் அடுத்தடுத்து பிறப்பு இறப்பு.  வைதரணியில் யாத்திரை என்று தவிக்கும் ஜனங்கள் இன்னமும்,  தான், மற்றவன், மித்ரன், விரோதி என்ற வித்தியாசங்களை விடவில்லையே. 

அகில குரோ! ஆர்த்த பந்தோ! – எளிய மக்களின் துன்பங்களை துடைக்கும் உறவினன் நீயே-  மறு பிறவி வேண்டாம் என்று ப்ரார்த்திக்க கூடத் தெரியாத எளிய ஜனங்கள்,  அவர்களுக்கு அனுக்ரஹம் செய்.  தேவா! முனிவர்கள் சாதாரணமாக தங்கள் முக்தியை வேண்டுவார்கள்.  அவர்களால் மௌனம் காக்கவும், நிர்ஜனமான இடத்தில் தனித்து இருந்து யோக சாதனைகளைச் செய்யவும், புலனடக்கி தவம் செய்யவும் முடிகிறது.   அந்த சுய கட்டுபாடு இல்லாத பொது ஜனங்கள் வாழ்க்கையில் எதுவும் சாதிக்க முடியாத அறியாமை சூழ்ந்தவர்கள் தான் பெரும்பாலோர்.  இவர்களுக்கு சரணாகதி பற்றி என்ன தெரியும்? நீ சரணடைந்தவர்களை காப்பாய் என்பதும் தெரியாது.  வெற்று வாழ்க்கை நடத்தி மடிந்து போக ஒரு பிறவியா, உங்களைத் தவிர வேறு யார் அவர்களின் நிலையை அறிவர், அவர்களை நல் வழிப் படுத்து.  உங்களால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

வாயுவாக, அக்னியாக, அவனி-நிலமாக, வானமாக, நீராக இருப்பவன், ப்ராண இந்திரியங்களை ஆட்டுவிப்பவன், ஹ்ருதயம், சித்தம் அனுக்ரஹம்- இவையனைத்தும் உங்கள் குணங்கள். சகுணமாகவும், விகுணமாகவும் இருப்பவர். அதற்கும் மேல், மனம் வாக்கு இவைகளுக்கும் எட்டாத பரப்ரும்மம்.  பூரணமாக உங்களின் பெருமையை அறிந்தவர் யாருமில்லை.  மூன்று குணங்களோ, மஹத் முதலானவைகளோ, மனதின் செயல்பாடுகளோ, தேவர்களோ, மனிதர்களோ, ஆதியும் அந்தமும் இல்லாத உங்களை விமரிசிக்க துவங்கினாலும் போதுமான வார்த்தைகள் இல்லை, வாய் விட்டுச் சொல்ல சக்தி இல்லை, என்று அறிவுடைய பெரியோர்களே நிறுத்திக் கொள்கின்றனர்.  அதனால், அர்ஹத்தம- இந்த அளவு அனைத்துமாக விளங்கும் பெருமைக்கு உரியவன் நீங்களே-   உங்களுக்கு நமஸ்காரம்.   துதிகள், பூஜா காரியங்கள், நினைவில் இருத்தி தியானங்கள், பாத சேவனம் எனும் விழுந்து வணங்குதல், கதைகளைக் கேட்டல் முடிந்தவரை சேவைகள்,  என்று ஷடங்க பூஜைகள், பக்தி செய்பவர்களுக்கும் பரம ஹம்ஸ கதியை கொடுங்கள்.  பக்தி இல்லாமல் மோக்ஷம் இல்லை.

நாரதர் சொன்னார்: இப்படி வர்ணித்து வணங்கிய ப்ரஹ்லாதனை, பிரியமுடன், தானே வருவித்துக் கொண்ட கோபம் உடையவரான நரசிங்க ரூப பகவான் பதில் சொன்னார்.

ஸ்ரீ பகவான் சொன்னார்: ப்ரஹ்லாத, பத்ரம் தே! ப்ரஹ்லாதா, உனக்கு நன்மை உண்டாகட்டும்.  அசுரோத்தமன் நீ. வேண்டும் வரம் கேள் என்றார்.  ஆயுஷ்மன்! துர்லபமான என் தரிசனம் கிடைக்கப் பெற்றாய்.  என்னைக் கண்ணால் கண்டபின் துயரம் என்பதே இராது.   சாதுக்கள் பல விதமாக சாதனைகள் செய்கிறார்கள். ஸ்ரேயஸ் – நன்மையை அடைந்து மற்றவர்களுக்கும் உதாரணமாக இருக்கிறார்கள்.   பகவானே இப்படி சொன்ன பின்னும் ப்ரஹ்லாதன் வேறு எதையும் வேண்டவில்லை.  பகவானிடத்தில் ஆழ்ந்த பக்தியுடையவன்.  அசுரர்களில் சிறந்தவன்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின்,  ‘பகவத் ஸ்தவோ ‘என்ற ஒன்பதாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்- 55

அத்யாயம்-10

நாரதர்  சொன்னார்:  பக்தி யோகமே அனைத்து விதமான யோகங்களுக்கும் அடிப்படைஎன்று நம்பிய சிறுவன், மேலும் ஹ்ருஷீகேசனைப் பார்த்து பேசினான். ‘எனக்கு ஆசை காட்டாதீர்கள்.  வரம் கிடைத்த தரியத்தில், காமமும், மோகமும் அதிகமாகும். எனக்கு மோக்ஷம் தான் வேண்டும்.  உங்களையே ஆஸ்ரயித்து இருக்கும் நான் வேண்டுவது அதுவே.  உலகியல் சங்கமே எனக்கு பயத்தை தருகிறது.  உங்கள் அடியார்கள்  பற்றி தெரிந்து கொள்ளவே ஆசைப் படுகிறேன்.  அகில குரோ! கருணை நிறைந்த உங்கள் ஆசிகளையே வேண்டுகிறேன்.  பதிலுக்கு எதையும் எதிர்பார்த்து வேண்டுபவன் வணிகன்.  வியாபாரத்தில் பண்டமாற்று செய்யும் வணிகன் போல ஆவேன்.   பணிவிடை செய்பவன் பலனை ஆசீர்வதமேயானாலும், எதிர்பார்த்தால் அவன் அணுக்கத் தொண்டன் அல்ல.  அவனிடம் தனக்கு  ஏதோ செயல் நடக்க வேண்டும் என்று ஆசீர்வதிப்பவன் ஸ்வாமியும் அல்லன். எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. உங்கள் பக்தன். அரசனும் சேவகனும் போல அல்ல நாம் இருவரும்.   நமக்குள்  தேவைகள் என்று எதுவும் இல்லை.   இந்த இருவருக்கும் இடையில் பொருள், தேவை என்பவைகள் உண்டு.  நமக்குள் நான் பக்தன், நீங்கள் ஸ்வாமி.  உங்களிடம் அடைக்கலமானான்.  எனக்கென்று எந்த ஆசையும் இல்லை.   எந்த நிலையிலும் என் மனதில் காமாதிகள் வர விடாமல் காப்பதையே வரமாக கேட்கிறேன்.   இந்திரியங்கள்,மனம், ப்ராணன், ஆத்மா, தர்மம், த்ருதி, மதி, ஹ்ரீ: ஸ்ரீ,  தேஜஸ், ஸ்ம்ருதி: சத்யம் இவை அனைத்தையும்  தொடர்ந்து  வரும் பிறவி சக்கரத்தில் அழிகிறது.

மனிதன் தன மனதிலிருந்து எப்பொழுது முழுமையாக காமத்திலிருந்து விடுபடுகிறானோ, அப்பொழுது தான் பகவானுக்கு சமமானவனாக ஆகிறான்.  

ओं नमो भगवते तुभ्यं पुरुषाय महात्मने ।हरयेऽद्भुतसिंहाय ब्रह्मणे परमात्मने ॥

பகவான் சொன்னார்: நீ சொல்வது போல ஞானிகள் என்னிடம் எதையும் எதிர் பார்ப்பது இல்லை. ஆனாலும் இந்த மன்வந்தரம் தைத்ய குல அரசர்களுக்கானது.  அதனால் அதன் சுகங்களை நன்மைகளை அனுபவி. என்னைப் பற்றி பாடுபவர்கள், பிரியமானவர்கள் இவர்களுடன் சேர்ந்து இரு. நல்ல மனிதனாக அனைத்து ஜீவன்களிடமும் பிரியமானவனாக இரு.  அதியக்ஞம் என்ற யாகத்தைச் செய்.  விதிகளை அனுசரித்து அந்த யாகத்தை செய்.   போகங்களை அனுபவித்து உன் புண்யங்களையும், பாபங்களையும் தொலைத்து விட்டு காலக்ரமத்தில் பவித்ரமான தேவலோகம் பாடும் பந்தங்களில் இருந்து விடுபட்டவனாக என்னை வந்தடைவாய்.  இந்த சரித்திரத்தை, உன்னையும் என்னையும் நினைத்தே, கர்ம பந்தத்திலிருந்து விடுபடுவார்கள்.

ப்ரஹ்லாதன், மகேசனே! ஒரு வரம் கேட்கிறேன்.   என்னையும் உங்களையும் நிந்தித்த என் தந்தை தான் செய்த பாபங்களீல் இருந்து விடுபட வேண்டும்.  குற்றம் செய்தவர் தான், கோபத்தால் கடுமையாக சொன்ன வார்த்தைகள்,   உங்களை என் தம்பியைக் கொன்றவன் என்று ஏசினதையும், என்னிடம் வெறுப்பும், ஆத்திரமுமாக பேசியதையும் பொருட்படுத்தாமல், அவரை இந்த தவறுகளிலிருந்து விடுவித்து புனிதமானவராக ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன். 

ஸ்ரீ பகவான் சொன்னார்:   இந்த குடும்பத்தில், உன் பிறப்பால் உன் தந்தை அவரது இருபத்து ஏழு தலை முறையினர் பாவனமாகி விட்டனர்.  சாதோ!  நீயே உன் குலத்தை விளங்க வைத்து விட்டாய்.  எங்கெல்லாம் என் பக்தர்கள் அமைதியாக, சம நோக்கு உடையவர்களாக, நல்ல ஆசாரம் உடையவர்களாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களின் வாகனங்கள் குதிரை முதலியவை கூட பாவனமாகிவிடும்.  என்னிடமே மனதை வைத்தவர்கள் எந்த ஏற்றத் தாழ்விலும் கலங்க மாட்டார்கள்.  எந்த சிறு ஜீவனையும் கொல்ல மாட்டார்கள்.  அவர்களுக்கு அல்ப ஆசைகள் எதுவுமே இராது.  என் பக்தர்கள் உலகத்தில் நிரம்பி இருக்கின்றனர். நீ அவர்களுக்கு உதாரணமாக இரு.

உடனடியாக உன் தந்தைக்கு அபர காரியங்களைச் செய்.  என் சரீர ஸ்பரிசம் பெற்றவன்,  அவன் நல்ல கதியை அடைவான் என்று நம்பிக்கையோடு செய்.  தயங்கவே வேண்டாம்.  உன் தந்தையின் பதவியை அடைவாய். ப்ரும்ம வாதிகளான  அரசியல் ஆலோசகர்கள், மந்திரிகள் சொல்வதைக் கேட்டு நட.  அரச காரியத்தை கவனமாக செய்வதையே என் நினைவோடு செய். 

நாரதர் சொன்னார்:  ப்ரஹ்லாதன் அதன் படியே செய்தான். பகவான் கட்டளைப் படியே, அந்தணர்களால் அபிஷேகம் செய்யப் பட்டு சிம்மாசனத்தில் அமர்ந்தான். 

தனது பயங்கரமான அவதார ரூபத்தை விட்டு சௌம்யமாக ஆன பகவான் நரஹரியை அனைவரும் துதி செய்தனர். 

ப்ரும்மா: தேவ தேவ!, அகிலத்துக்கே தலைமை தாங்குபவனே.  தானே பஞ்ச பூதங்களாகவும் இருப்பவன், ஆதி மனிதன், நல்ல வேளையாக உலகை துன்புறுத்திய அசுரனை அழித்து உலகை காத்தீர்கள். என்னிடம் வரம் பெற்றவன்.  என் ஸ்ருஷ்டியில் வந்த யாராலும் மரணம் கூடாது என்று வரம் வேண்டினான்.  தவம் செய்து பெற்ற பலம், அது அவனுக்கு கர்வத்தை தான் தந்தது.  வேதங்களை தடுத்தான்.  நம் நல்ல காலம் அவன் மகனே, சாதுவாக, பாகவதனாகவே பிறந்த குழந்தை, அவன் கொல்லப்படாமல் . காப்பதற்காகவே எடுத்த இந்த அவதாரம்.  இதனால் நாங்கள் அனைவருமே பிழைத்தோம்.  தற்சமயம் உங்களைக் காணும் பேறு பெற்றோம்.  இந்த அவதார சரீரம், பகவானே, யார் நினைவில் வந்தாலும் தவறு செய்யாமல் திருந்தச் செய்யும்.  வெளியில் தெரியாத ஒரு தூண்டுதல் கிடைக்கும்.

நரசிங்கர் சொன்னார்:  பத்ம சம்பவ! இது போன்ற வரங்களை யாருக்கும் கொடுக்காதே.  அதுவும் இயல்பாக க்ரூரமான குணம் உடையவர்களுக்கு பாம்புக்கு அம்ருதமே கொடுத்தது போல ஆகும்.

 இப்படி சொல்லிவிட்டு பகவான் அந்தர்தானமானார்.

ப்ரஹ்லாதன் அனைவரையும் வணங்கினான்.  அசுர குல குருவான சுக்ராசாரியார், அவனை  தைத்யர்களுக்கும் தானவர்களுக்கும் அதிபதியாக நியமித்தார்.  தேவர்கள்  பாராட்டி ஆசிர்வதித்தனர்.   ப்ரும்மா முதலானோர் முறையாக வழி அனுப்பி வைக்கப்பட்டனர். 

இவ்வாறாக திதி புத்திரர்களான விஷ்ணு பார்ஷதர்கள், அணுக்கத் தொண்டர்களாக இருந்த சமயம் பெற்ற சாபத்தால் ஸ்ரீ ஹரியிடமே விரோதம் கொண்டு அவராலேயே அழிக்கப் பட்டனர்.

அவர்களை அந்தண சாபம் தொடரும்.  அடுத்து கும்பகர்ண ராவணனாக பிறப்பர்.  

 ராமரின் அம்புகளால் யுத்த களத்தில் உயிரை விடுவர்.  யுதிஷ்டிரா!  அதன் பின் சிசுபால தந்த வக்த்ரனாக வந்து ஸ்ரீ ஹரியிடம் விரோதம் கொண்டு  உன் கண் முன்னே மடிந்தனர்.  அதைக் கண்ட பின் க்ருஷ்ண விரோதிகளான அரசர்கள்  குளவிகள் மாறுவது போல,  சிசுபாலனின் வதத்தைக் கண்டு தங்கள் துவேஷத்தை மாற்றிக் கொண்டனர். 

நீ கேட்டபடி எனக்குத் தெரிந்த இந்த சரித்திரங்களை விவரமாக சொல்லி விட்டேன். தர்மா!  இது தான் மஹாத்மாவான ஸ்ரீ க்ருஷ்ணனின் அவதார சரித்திரம்.  ஆதி தைத்யர்களை உத்தாரணம் செய்யவே எடுத்த அவதாரம். ப்ரஹ்லாதனுடைய சரித்திரமும், மஹா பாகவதர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை சொல்கிறது. பக்தியும் வைராக்யமும் ஹரியின்  வர்ணனையும் யுகாந்த காலத்தில் உலகை காக்கவே முனைந்து இருப்பதையும்,  காலத்தின் பிடியில் எந்த உயர்ந்த பதவியில் இருப்பவரும் ஒரு நாள் மறைவதையும் சொல்கிறது. விஷ்ணுவின் வீர்யத்தைச் சொல்லும் பொழுதே, அத்யாத்மிகம் என்பதை வலியுறுத்துகிறது. சிரத்தையுடன் பாடுங்கள்.  வினைப் பயன் விலகும். 

இது தான் ஆதி புருஷனின் ம்ருகேந்திர – வன விலங்குகளின் அரசன்- லீலை.  இரு தைத்யர்களையும் வதம் செய்தும், அவன் மகன்  நல்ல குணவான்களில் முக்யமாக ஆனதையும் கேட்டு பயம் விலகி லோகம் நிம்மதியடைந்ததையும்,  கேளுங்கள். பூலோகத்தில் பிறந்த நீங்கள் பாக்யசாலிகள்.  தர்மராஜா! உனக்கு மாமன் மகனாக வீட்டிற்குள்ளேயே வளைய வந்தவன்.  அவனே கைவல்யம் எனும் பரம பதத்தை தரும் பர ப்ரும்மா.

த்ரிபுரங்களை எரித்த பகவான் ஸ்ரீ ருத்ரன் அறிவார், இவருடைய மகிமைகளை. 

தர்மபுத்திரர் வினவினார். எதற்காக மயன் என்ன செய்தான் என்று வதம் செய்யப் பட்டான்?

நாரதர் சொன்னார்: ஒரு சமயம் அசுரர்கள் தேவர்களுடன் விடாது போரிட்டுக் கொண்டிருந்தனர்.  அவர்களை வெற்றி கொள்ள மயன் என்ற தேவ சில்பியை அணுகினர்.  அவரும் மூன்று புரங்களை, ஒன்று பொன்னால், இரண்டாவது  வெள்ளியால், மூன்றாவது இரும்பால் என்று மூன்று கோட்டைகளைக் கட்டிக் கொடுத்தார்.  , உள்ளே  நகரம்-புரம் என்ற  வசிக்கும் இடமும் யாராலும் நுழைய முடியாதபடி, பாதுகாப்பாக இருந்தன.  அசுரர்கள் நிம்மதியாக இருக்காமல், பழைய வைரத்தை நினைத்து ஊரோடு சஞ்சரித்து தேவர்களுக்கு இடையூறு செய்தனர்.  தேவர்கள் பகவானிடம்  முறையிட்டனர்.  (புரம் என்பதே ஆயுதமாக)  பகவானும் பயப்படாதே என்று அனுக்ரஹித்தார். தன் வில்லில் அம்பை பூட்டி புரங்களின் மேல் எய்தார். அக்னி வர்ணமான அம்புகள் ஸூர்ய மண்டலத்திலிருந்து விழுந்தன. அதன் எண்ணிக்கையில் புரங்களே மறைந்தன. அம்புகள் பட்டு விழுந்த அசுர்களை மயன் அம்ருதம் நிறைந்த கிணற்றில் தள்ளி காப்பாற்றி விட்டான். அதிலிருந்தது சித்தாம்ருத ரஸம் என்பதால் வஜ்ரம் போன்று மகா பலசாலிகளாக எழுந்து வந்தனர். மேகங்கள் பரவி இடியும் மின்னலுமாக தோன்றுவது போல கணக்கில்லாத அசுரர்கள் எழுந்தனர்.   வ்ருஷத்வஜன் இதை கண்டு திகைத்தார். அந்த சமயம் பகவான் தான் பசு ரூபம் எடுத்து கிணற்றினுள் புகுந்து சித்தாம்ருத ரஸம் முழுவதையும் குடித்து விட்டார்.  கன்றாக உடன் ப்ரும்மா சென்றார். பசுவையும் கன்றையும் அசுரர்கள்  தடுக்கவில்லை. ஆனால் இது பகவானின் செயல் என்பதை மயன் அறிந்தான்.  அசுரர்களைப் பார்த்து, யாரானாலும், தேவனோ, அசுரனோ, மனித மற்ற பிறவிகளோ,  பகவானின் சங்கல்பத்தை மீற முடியாது என்று சொன்னான்.  அதன் பின் பகவான் தன் சக்திகளையும் அளித்து சம்புவை- மஹேஸ்வரனை முன் நிறுத்தினார்.அவரும், தர்மம், ஞானம், விரக்தி, ருத்தி, தவம், வித்யா, க்ரியா இவைகளுடன், ரதம், சாரதி, த்வஜம், வாகர்கள் (தூக்கும் பணியாட்கள்)  தனுஷ், அஸ்திரங்கள், சரங்கள் இவைகளுடன் தயாராக ரதத்தில் அமர்ந்து அபிஜித் முஹூர்த்தில், சரத்தை வில்லில் பூட்டி அந்த புரங்களின் மேல் எய்தார்.  குறி தவறாத அந்த சரங்கள், புரங்களை எரித்தன.  மூன்று புரங்களும் சாம்பலாகின.  உடனே தேவலோகத்தில் துந்துபிகள் முழங்கின.  கூட்டம் கூட்டமாக தங்கள் விமானத்தில் தேவர்கள் ஜய ஜய என்றபடி ஆரவாரமாக வந்தனர்.  தேவர்களும், ரிஷிகளும் சித்தர்களும் பித்ரு தேவதைகளும் புஷ்பங்களை வர்ஷித்தனர்.  அப்சர கணங்கள் மகிழ்ச்சியுடன் பாடினர்.  புராரி என்று புகழ்ந்தனர்.  ப்ரும்மா முதலானோர் துதி செய்தனர். அவரும் தன் இருப்பிடம் சென்றார்.

இவ்வாறாக ஸ்ரீ ஹரி தன் மாயையால் மூவுலகையும் காக்கும் பொறுப்பை நிறைவேற்றுகிறார்.  எனவே ஜகத் குரு என்று ரிஷிகள் போற்றுகின்றனர்.  

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின்,  ‘பகவத் ஸ்தவோ ‘என்ற பத்தாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்- 71

 அத்யாயம்-11

யுதிஷ்டிர் மேலும் வினவினார்.  பகவன்!  மனிதனுக்கு எது தர்மம் என்றும் அதை மீறக் கூடாது என்றும் விதிகள் சொல்லப் படுகிறது.   ஆசாரம், வர்ணாஸ்ரம தர்மம்  என்பவை முக்கியமானவை என்று அறிவேன்.பிரஜாபதியின் புதல்வர், தவம் யோகம் சமாதி என்ற சாதனைகளைச் செய்தவர் என்ற முறையில், சொல்லுங்கள். எல்லோரும் சாதுக்களாக நல்லவர்களாக இருப்பதில்லை. உங்களைப் போல ஒரு சிலர் இருக்கலாம்.   அந்தணர்கள், ஸ்ரீமன் நாராயணனை துதிப்பதே பரம தர்மம் என்பர்.  

நாரதர் சொன்னார்: சனாதன  தர்மம்  ஸ்ரீ மன் நாரயணன் தானே சொல்லிக்  கேட்டதைச் சொல்கிறேன்.  உலக நன்மைக்காக சில நியமங்கள் தர்மம் என்று அறிவோம். அவரையே வணங்கி ஆரம்பிக்கிறேன். அவர் தன் அம்ச அவதாரமாக தாக்ஷாயணியிடம் பிறந்தார். இன்னமும் உலக க்ஷேமத்திற்காக பதரிகாஸ்ரமத்தில் தவம் செய்து கொண்டு இருக்கிறார்.   பகவான் தான் தர்மத்தின் பிறப்பிடம்.  ஸ்ரீ ஹரி தான் வேத மயமானவன். என்று இவர்களை ஸ்மரித்தாலே, மனதுக்கு இதமாக இருக்கும். சத்யம், தயா, தவம், சுத்தம்-ஒழுக்கம்- அறிந்து கொள்ளும் ஆவல், சமம், தமம் , அஹிம்சா, ப்ரும்ம சர்யம், த்யாகம், ஸ்வாத்யாயம், ஆர்ஜவம்- நேர்மை.

சமமாக காணும் குணம் உள்ள மகான்களை மதித்து சேவை செய்தல், க்ராம்யமான உலகியல் விஷயங்களில் நாட்டமின்மை,  (இவைகளால் மனிதன் பெறும் சாஸ்வத நன்மை எதுவுமில்லை என்பதால்) மௌனம், தன்னையே விமரிசனம் செய்து கொள்ளல், பகிர்ந்து உண்ணுதல்,  மற்ற ஜீவன் களிடம், சக மனிதர்களிடம் தயை, இது தவிர, பெரியவர்கள்  எப்படி ப்ரச்னைகளை கையாண்டனர் என்பதை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளலாம். இவை பொதுவான தர்மம் எனும் முப்பது தர்மங்கள்.  அனைவருக்கும்,  பொதுவானது என்றாலும் அரசனுக்கு அவசியமானவை. ப்ரும்மா அந்தணர்களுக்கு விதித்த தர்மங்கள்: யாகம் செய்தல், அத்யயனம்- கற்றல்.  ஜன்ம கர்மாவிலிருந்து கடைசி வரை செய்யவேண்டிய கர்மாக்கள் செய்தல், செய்வித்தல். இரண்டும்.   க்ஷத்திரியர் தானம் செய்ய வேண்டும் வாங்கிக் கொள்ள கூடாது,  அரசனுக்கு: ப்ரஜைகளைக் காப்பது.  அந்தணனைத் தவிர மற்றவர்களிடம் வரி வசூலிக்க வேண்டும்.  வைஸ்யனுக்கு வியாபாரம், அந்தணனை அனுசரித்து நடக்க வேண்டும்.  ஸுத்ரனுக்கு, மற்ற மூன்று வர்ணத்தாருக்கும் உதவுவது.  அந்தணன் தன் சுய தேவைக்காக மட்டுமே பொருள் தேட வேண்டும்.   யாசிக்காமல் தானாக மற்றவர் தரும் பொருள், கற்பித்து குரு தக்ஷிணை என்று பெறலாம்,   பொது இடங்களில் உள்ள உதிர்ந்த தானியங்களையும், பழம் முதலியவைகளையும் பெறலாம்.   ஆபத்து காலத்தில் அரசனின் பொறுப்பை அனைவரும் ஏற்க வேண்டும்.  சத்யம், பொய் சொல்லாமை, வியாபாரம்,  ஏவிய வேலைகளைச் செய்யும்  சேவகன் எனும் வேலைகள், அரசனுக்கும் அந்தணனுக்கும் ஏற்றதல்ல.  சர்வ வேத மயன் அந்தணன், சர்வ தேவ மயன் அரசன்.

சமம், தமம், தவம், சௌசம், சந்தோஷம், க்ஷாந்தி, ஆர்ஜவம் என்ற நேர்மை, ஞானம், தயை, அழியாத ஆத்ம சக்தி, சத்யம் இவை ப்ரும்ம லக்ஷணம்.  சௌர்யம், வீர்யம், த்ருதி- உறுதி, தேஜஸ், த்யாகம், ஆத்மஜயம், பொறுமை, ப்ரும்மண்யதா, ப்ரசாதம் , காப்பாற்றுதல், இவை க்ஷத்ர லக்ஷணம்.

தேவ, குரு,அச்யுதன் இவர்களிடத்தில்  பக்தி , மற்ற மூன்று வர்கத்தினரையும் பரிபோஷணம், அவர்கள் தேவைகளை நிறைவேற்றுதல், கடவுள் நம்பிக்கை, உத்யமோ- ஏதோ ஒரு தொழில், உழைப்பு,  நிபுணத்வம்-திறமை, இவை வைஸ்ய லக்ஷணம். 

ஸூத்ரன் பணிவாக இருப்பது, சௌசம், சேவை செய்தல், ஸ்வாமியிடம் நம்பிக்கை, யாகங்கள் மந்த்ரம் இன்றி செய்யலாம், திருட்டு குணம் இல்லாமை, உண்மையாக இருப்பது, பசுவையும் அந்தணர்களையும் ரக்ஷிப்பது என்பவை லக்ஷணங்கள்.

பெண்கள், கணவன், அவன் தேவைகளை அறிந்து செய்தல், அனுகூலமாக இருத்தல், அவன் பந்துக்களிடம் அன்பாக இருத்தல், விரதங்களை அனுஷ்டித்தல். தன்னையும் வீட்டையும், சுற்றுப் புரத்தையும் அலங்கரித்து வைத்து கொள்வதும்,  அன்புடனும் சமயோசிதமாகவும் பேசி, கணவனின் செயல்களில் உதவ வேண்டும். ஹரி என்ற பாவத்துடன் கணவனை மதித்து, தானும் மகிழ்ச்சியாக, சுற்றத்தாரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.  பலவிதத்திலும் குடும்பத்தை கட்டிக் காப்பது தன் கடமையாக நினைத்து செய்ய வேண்டும்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், சதாசா நிர்ணயோ  என்ற பத்தாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்- 35.

அத்யாயம்-12

நாரதர் மேலும் சொன்னார்:   ப்ரும்மசாரியாக குருகுலத்தில் படிப்பவன், குருவிடம் உள்ளார்ந்த அன்புடனும் மதிப்புடனும் அவருக்கு தாஸனாக இருந்து கல்வியைக் கற்க வேண்டும்.  அவருடனேயே வசித்து அடக்கம் உடையவனாக, குருவின் நன்மைக்கானதை செய்பவனாக இருக்க வேண்டும்.  காலையும் மாலையும் அவருடன் அக்னி உபாசனைகளைச் செய்து வருவதும்,  இரு சந்த்யா காலங்களிலும் அவர் சொல்லிக் கொடுத்த ஜபங்களைச் செய்வதும்,  வேத மந்திரங்களை சொல்லிச் சொல்லி மனதில் உருவேற்றிக் கொள்வதிலும்,  கூப்பிட்ட குரலுக்கு ஏன் கேட்கும் மாணவனாக, சிறு உதவிகளைச் செய்வதும்,  பாடம் ஆரம்பிக்கும் சமயமும், முடிவிலும் விழுந்து நமஸ்கரிப்பதும்  அவனது கடமைகள்.  மேகலை, மரவுரி ஆடைகள், ஜடை, தண்டம், கமண்டலு, உபவீதம் இவைகளை தரித்துக் கொண்டு, விடியற்காலையில் தர்பையை கையில் வைத்துக் கொண்டு, காலையிலும் மாலையும் பிக்ஷைக்கு போக வேண்டும்.  அவர் அனுமதித்த பின் தான் உண்ண வேண்டும். உபவாசங்கள் இருக்க பழக வேண்டும்.  நல்ல சீலனாக, மிதமாக உண்டும், சிரத்தையுடன் கேட்டும் கல்வியை கற்க வேண்டும்.  அவசியம் இன்றி பெண்களுடன் பேசுவதையும், அவர்களுடன் இருப்பதையும் தவிர்க்க வேண்டும்.  இல்லற தர்மத்தை ஏற்கும் வரை, அவர்களுடன் பாடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆசை  இழுத்துச் செல்லும்.  கடமையிலிருந்து நழுவச் செய்யும். பெண்களை நெய் நிரம்பிய குடமாகச் சொல்வார்கள். எளிதில் பற்றிக் கொள்ளும். ஈஸ்வர ஸ்ருஷ்டி தான், அவர் படைத்த பெண்களே ஆனாலும் அளவோடு   இருத்தல் நலம்.

இது இல்லறத்தில் உள்ளவர்களுக்கும், யதிகளுக்கும் சொல்லும் உபதேசமே.  குரு குலத்தில் இருக்கும் வரை முடிந்தவரை கற்பதிலேயே கவனமாக இருந்து வேதங்களை அதன் அங்கங்களுடன், பொருள் அறிந்து முடிந்தவரை கற்றுத் தேற வேண்டும்.  அவரிடம் கற்று முடிந்த பின் அவரே அனுமதித்த பின்னர் வீடுகளுக்கு செல்லலாம் அல்லது அங்கேயே இருந்து மேலும் அறிவை பெருக்கும் செயல்களைச் செய்யலாம்.  அக்னி காரியங்கள், குரு, பஞ்ச பூதங்கள், ஸ்ரீ ஹரி, இவைகளுக்கான தினசரி பூஜைகளை செய்ய வேண்டும்.  இது ப்ரும்ம சாரியாக இருந்த பழக்கம், பின்னால் வான ப்ரஸ்தனாக, (இடையில்  குடும்பஸ்தனாக இருந்து காலம் சென்ற பின்) விக்ஞானம் என்ற மேம்பட்டு ஞானத்தை பெற சாதனைகள்  செய்யலாம்.  பரம் ப்ரும்மா என்ற பதவியை அடைவான்.

வான ப்ரஸ்த நியமங்கள்:  உணவு கட்டுபாடுகள், நிறைய சொல்கிறார்.  ஒவ்வொரு நாளும் தானே தயாரித்து புது அன்னத்தை மட்டுமே ஏற்க வேண்டும்.  வசிப்பதற்கு மலை குகைகளோ, குடிசைகளோ போதுமானது. கமண்டலு, மான் தோல் ஆடை, தண்டம், வல்கலைகள், அக்னி இவை மட்டுமே அவனுக்கு தேவையாக இருக்கும்.  ஓராண்டு அல்லது பதினெட்டு மாதங்கள் ஓரிடத்தில் தங்காமல் பயணித்த படி இருக்கையில் உடல் நலம் குறைந்தாலோ, வியாதி வந்தாலோ அன்றி ஓரிடத்தில் தங்க கூடாது. அது ஓரு நிலையில் மட்டுமே மேற் கொண்டு படிக்கும் அல்லது கற்பிக்கும் செயல்களை ஏற்று குரு குலத்தில் தங்கலாம். 

படைப்புக்கு உதவிய பஞ்ச பூதங்களை அதே க்ரமத்தில் விடுவித்து, அக்னி அக்னியுடன் வாயு வாயுவுடன் என்ற முறையில் யோக முறையை பயின்று அத போல தேகத் தியாகமும் செய்யவேண்டும்.

( இது வரை ஸ்ரீமத் பாகவத த்தில், ஏழாவது ஸ்கந்தத்தில், சதாசார நிர்ணயம் என்ற பன்னிரெண்டாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்-31

அத்யாயம்-13

மேலும் கடுமையான நியமங்களுடன் ஒரு கிராமத்தில் ஒரு இரவு மட்டுமே தங்குவதாக உறுதி பூண்டு சுற்றிக் கொண்டே யிருக்க வேண்டும். தனியாக, எல்லா உயிரினங்களிடமும் அன்புடன், நாராயண பரமாகவே பார்த்து  எதையும் அதிகமாக வெறுக்கவும் வெறுக்காமல், புகழ்ந்தும் சொல்லாமல் தன் வழி செல்வான்.

அஜகரன் என்ற முனிவருடன் ப்ரஹ்லாதன் செய்த சம்பாஷணயைச் சொல்கிறார். தன் மந்திரிகளுடன் சென்று கொண்டிருந்த ப்ரஹ்லாதன்,  காவேரி ப்ரவஹிக்கும் சஹ்யாசலம் என்ற மலைச் சாரலில் தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ஒரு முனிவரை, யார் என்று அறிய விரும்பி விசாரித்தான். இருவரும் ஒருவரையொருவர் அறிந்தவரில்லை.

 அசுரனானாலும் பாகவதனான ப்ரஹ்லாதன் அந்த மனிதரை வணங்கி விசாரித்தான். பகவன்! யார் நீங்கள். பருத்த உடலுடன், போகமே ப்ரதானமாக இருந்தவர் போல காணப் படுகிறீர்கள். உழைப்பு மனிதனுக்கு செல்வத்தை அளிக்கிறது. செல்வம் அவனை போகத்தில் ஈடுபடச் செய்கிறது. போகங்கள் உடலை பருக்க வைக்கின்றன.  வேறு விதத்தில் உடல் பருமனாவதில்லை.  ஒரு உடலுழைப்பும் இன்றி தூங்கிக் கோண்டிருக்கிறீர்கள் போல தெரிகிறது. ப்ரும்மன்! இதில் என்ன பயன்?  இந்த நிலையில் செல்வமும் இல்லை, போகமும் இல்லை. என்ன காரணத்திற்காக, ஏன் இப்படி தரையில் விழுந்து கிடக்கிறீர்கள்.  ப்ரும்மா, கல்பங்கள், நிபுணர்களின் அறிவு, சித்ரங்கள், ப்ரிய கதைகள், இப்படி உலகில் பல உள்ளன என்று அறிவீர்களா?  கண்ணால் கண்டிருக்கிறீர்களா? செயல்கள், அதன் பலன்கள் என்பவையாவது அறிவீர்களா?

நாரதர் சொன்னார்:  மகா முனியான அந்த மனிதன், தைத்யராஜனுக்கு பதில் சொன்னார்.

ப்ராம்மணர் சொன்னார்: அசுர ஸ்ரேஷ்டனே! அறிவேன். நீ உத்தமான அரசன், மதிக்கத் தகுந்தவன்,இங்கு உள்ள அரசர்களில் சிறந்தவன் என்பதை என்னுடைய அத்யாத்ம கண்களால் கண்டு அறிந்து கொண்டேன். எவனுக்கு பகவான் நாராயணன் ஹ்ருதயத்தில் இருக்கிறானோ, அவனுடைய பக்தியால், ஸூரியன் இருட்டை அழிப்பது போல அறியாமை விலகி நல்ல ஞானியாக ஆவான் என்பது நீயும் அறிந்ததே. ஆனாலும் சொல்கிறேன், கேள்.

அரசனே! பல கேள்விகளைக் கேட்டாய். அனைத்துக்கும் பதில் சொல்ல வேண்டியது என் கடமை. கேட்டபடி சொல்கிறேன். என் தூய்மையை, என் தற்போதைய நிலையை நானே தான்  விளக்கிச் சொல்ல  வேண்டும்.

 ஆசை. அது உலகை சதா சுற்றி சுற்றி ஓட வைக்கிறது. வ வாஹிணி- ப்ரவாஹமாக ஒடும் நதி போல உலகியலை சென்று கொண்டே – செயல் பட வைத்து- அலைக்கழிக்கும் சக்தி.  நானும் பலவிதமான செயல்களைச் செய்து வினைப் பயனாக பல பிறவிகளை அடைந்தவன்.  எதேச்சையாக இந்த உலகில், இந்த இடத்தில் பிறவி பெற்றேன். சுவர்கம் வரைச் சென்று, வினைப் பயன் தீர, மறு முறை மறுமுறை என்று விலங்குகள் என்று பல பிறவிகள்- நல் வினைப் பயனாக ஒரு தம்பதிகளின், ஆசை தீர மகனாக பிறந்தேன். 

இங்கும் ஒரு துக்கம் தீர்ந்தால் மற்றொன்று என்று கண்டபின் வெறுத்து போனேன்.  சுகம் என்பது வருமா  என்ற சிந்தனையே மனதில் நிறைந்தது. யோசிக்க யோசிக்க என் ஸ்வரூபமே தான் சுக ஸ்வரூபம் என்று புரிந்து கொண்டேன். எல்லா விதமான எதிர் பார்ப்புகள், அதற்கான செயல்கள், ஆசைகள் இவைகள் மனிதனின் உடலுக்கே. அதே சமயம் உடல் இல்லையெனின் சுகமாவது துக்கமாவது எதுவும் எப்படி அனுபவிக்க முடியும்.  போகங்கள் இயல்பானவை, அதை அறிவது மனமே.  ஸ்பர்சத்தால், மனதின் கல்பனையால் மனம் சுகமோ, துக்கமோ அடைகிறது.  க்ஷண பங்குரான்- நீர் குமிழி போல வினாடியில் உடையக் கூடியது, என்று அறிவு சொன்னாலும் மனது கேட்பதில்லை.  இது நிலைத்து நிற்காது என்று தெரிந்தும், உண்கிறேன், உறங்குகிறேன்.  வித்ருஷ்ணா- ஆசை என்ற உத்வேகம் இன்றி, கிடக்கிறேன் இதுவே என் உடல் பருக்க காரணம்.  அப்படியானால் இதையறிந்தவர்கள் ஏன் உங்களை பின்பற்றி கிடப்பதில்லை என்ற வினாவிற்கு பதில் அளிப்பது போல மேலும் சொன்னார்.

அவரவர் விருப்பங்கள், சுகம் என்று துக்கம் என்றும் அறியும் உணர்வுகள், வெவ்வேறாக இருப்பது தான் காரணம். தண்ணீர்- நாம் கான்பதும், அந்த ஜலத்தில் தோன்றிய புல் பூண்டுகளில் இருப்பதும் அதுவே என்பது போல ஆத்ம சுகம் என்பது உள்ளூற இருப்பதே.  அதை அறிந்தவர்கள் மிக சிலரே.  யதேச்சையாக தோன்றும் அந்த சிலர், அத்யாத்மிகர்கள், உள்ளுறை பொருளை அறிந்தவர்கள் ஆவர்.  இரட்டைகளான சுக துக்கங்கள் பாதிக்காமல் இருப்பர்.  தான், தன் செல்வம், தன் உலகம் என்று அதிக ஈடுபாட்டுடன் இருப்பவர்களுக்குத் தான் ப்ராண பயம்.  செல்வந்தர்கள் அதிக மனக் க்லேசத்துடன் வாடுகிறார்கள். பேராசை, பயம், அதனால் தொலைத்த தூக்கம், அனைவரிடமும் அவனம்பிக்கை. அரசனுக்கு திருடர்கள், சத்ரு, தன் ஜனங்களிடமே பயம். யாசிப்பவர்களிடம் கூட பயம்.   காலம் செல்லச் செல்ல தன் உறவினர்களிடம் இருந்தே தன் ப்ராணனை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் என்று இடர்கள்.  சாதாரணமாக மனிதர்கள், தேனீயைக் கண்டு கூட பயப்படுவர். மகா சர்ப்பம் என்றால் கேட்கவே வேண்டாம். இப்படி நான் தூங்குவதே இது போன்ற பயங்கள் எனக்கு இல்லாமையால் தான்.  ஆசையோ, தேவைகளோ இல்லாமையால் கிடைத்ததை உண்கிறேன்,  பல நாட்கள் அஜகர சர்ப்பம் போல கிடக்கிறேன்.  சில சமயம் சிரத்தையுடன் யாராவது ருசியான உணவு வகைகளை தருவதையும்,  சாரமில்லாத உணவைப் போலவே ஏற்றுக் கொள்கிறேன்.  இரவோ, பகலோ, பட்டாடையோ, மான் தோலோ, என் மனம் நிறைந்து வாழ்கிறேன்.

தரையில், புல் வெளியில், சில சமயம்  அரண்மனையில் படுக்கையில், படுத்தாலும் பொருட்படுத்துவதில்லை. விகல்பம் என்ற மாற்றம் மனதிற்கு மட்டுமே என்று சொன்னேனே அது தான் தற்போதைய என் நிலைக்கு காரணம்.  உனக்கு தெரியாததா?  பாகவதன் தானே நீ. 

நாரதர் சொன்னார்:  பரமார்த்தமான தர்மம், பாரமஹம்ஸ்யம் என்பர்- இதைக் கேட்டு அசுர ராஜன் ப்ரஹ்லாதன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவரை நமஸ்கரித்து விட்டு தன் வழி சென்றான். 

(இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஏழாவது ஸ்கந்தத்தில்,  பதின் மூன்றாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்-43 

அத்யாயம்-14

யுதிஷ்டிரர் கேட்டார்:  என் போன்ற சாதாரண பிறவிகள், அதிக அறிவு இல்லாத இல்லறத்தார்கள், இது போன்ற ப்ரும்ம நிலையை எப்படி அடைவர்? 

நாரதர் சொன்னார்:  இல்லறத்தில் இருப்பவனுக்கு தன் குடும்பத்தைப் பேணுவதும், அதன் கடமைகளைச் செய்வதுமே போதுமானது. வாசுதேவார்ப்பணம் என்று சொல்லி மஹா முனிகள் கூட வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.  பாகவத கதைகளை கேட்கவும், அம்ருத மயமான பாடல்களாக பாடியும் வரலாம்.  சிரத்தையுடன் பெரியவர்கள் செய்யும் ப்ரவசனகளைக் கேட்கலாம்.  உடன் இருப்பவர்கள் அதே குணம் உள்ளவர்களாக இருந்தால் நல்லது. குடும்பத்தில் தன் கடமைகளைச் செய்த பின் , மனைவி மக்களிடம் பொறுப்பை ஒப்படைத்து தன்னை மேம்படுத்திக் கொள்ள வகை செய்து கொள்ளலாம்.  தூங்கி எழுந்தவன் போல புது வழி இது.  

தேவைக்கு செல்வம் சேமிப்பது அவசியம். தன் உடலுக்கும், வீட்டில்  மற்றவர்களுக்கும் வேண்டிய அளவு பொருள் சேர்த்த பின் மேலும் மேலும் ஆசைப் பட வேண்டாம்.  பகவானைப் பற்றிய அறிவை, ஏதோ ஒரு கலையை வளர்த்துக் கொள்ளலாம்.   உறவுகள், பந்துக்கள், தனயர்கள், நண்பர்கள் இவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்த பின் நகர்ந்து விடுவது நல்லது.  தேவ, பூலோக,அந்தரிக்ஷம் என்பது பகவானின் ஏற்பாடு.  அது போலவே செல்வமும். அவை அனைத்தும் பூவுலக வாசிகளின் நன்மைக்கே.

பசி அடங்க உண்பதே உணவு. அதிகமானால் அதுவே உபத்ரவம். ஒரு விதத்தில் அதிகம் உண்பவன் திருடன் போல என்கிறார்.  தண்டிக்கப் பட வேண்டியவன்.

வளர்ப்பு மிருகங்கள், மற்றும் மான்,ஒட்டகம், கழுதை,குரங்கு பாம்புகள் வானத்தில் ப்றக்கும் பறவைகள் அனைத்தும் பகவானின் ஸ்ருஷ்டியே என்று உணர பழக வேண்டும்.

செல்வத்துக்காக குடும்ப உறுப்பினர்கள் யாரானாலும் அதிக ஆசைப் பட்டாலும்  அதற்காக நெருக்கடி கொடுத்தாலும் பொருட் படுத்த வேண்டாம்.  தன் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும்.  யாகம், பூஜைகள் செய்து நிவேதனமாக மீதியை சாப்பிடுவதே போதும்.  சேமித்த செல்வத்துக்கு தகுந்தபடி விருந்தினர்களை, தேவ, பித்ருக்களை எண்ணி செய்யும் செயல்களை செய்யவும்.  முடிந்த வரை அக்னி ஹோத்ரம், வைதானிகம் என்ற விதியில் செய்வதே போதும்.  பெருமளவில் செய்ய முடியாமைக்காக வருந்த வேண்டாம். அதை முடிந்தவர்கள் செய்யட்டும். பகவான் சர்வ யக்ஞபுக் எனப்படுகிறார்.  அக்னியில் ஹவிஸ் அளித்து, அந்தணர்களுடன் வேத கோஷங்களோடு செய்வது உயர்ந்தது. முடிந்தவரை அந்தணர்களுக்கு தேவையானதை கொடு.

பித்ருக்களுக்கு சிரார்தம் ப்ரோஷ்டபதம்( புரட்டாசி மாதம்) செய்ய வேண்டும் பந்து மித்திரர்களுடன்  உணவளித்து செய்யலாம்.

விஷு காலத்தில் கிரஹண சமயங்களில், த்வாதசியும் ஸ்ராவணமும் வரும் நாளில், சுக்ல பக்ஷத்து த்ருதீயை, நவமி, கார்த்திகை, அஷ்டமி ஹேம்ந்த, சிசிர மாதங்களிலும், மாக வளர் பிறை சப்தமி, என்று

அனுஷமும் த்வாதசி திதியும்  சேர்ந்த நாட்கள், ஸ்ராவண திருதீயை, பங்குனி உத்தரா  , ஏகாதசி,  இவை நன்மை தரும் நாட்கள். ஜாத கர்மா, போன்ற நற்காரியங்களை செய்ய ஏற்றவை. ஆயுளை தரும். 

ஸ்னானம் , ஜபம், ஹோம், விரதம், தேவ, அந்தணர்களுக்கு செய்யும் மரியாதைகள், இவை நீடித்து பலன் தருபவை.  முற்பகலில் செய்வது நலம்.

தர்மாதி ஸ்ரேயஸ் எனப்படும் தேசங்கள் பற்றிச் சொல்கிறேன்.  பகவானுடைய சன்னிதி இருக்கும் இடங்கள், தவமும், கல்வியும் நிறைந்த இடங்கள், கங்கை போன்ற நதிகள் ப்ரவஹிக்கும் ப்ரதேசங்கள், குளங்களோ, ஏரிகளோ நிறைந்துள்ள இடங்கள், குரு க்ஷேத்ரம், கஜாஹ்வயம், ப்ரயாகை, புலஹாஸ்ரமம்,  நைமிஷம், பால்குணம், சேது, ப்ரபாஸம், குசஸ்தலீ, வாரணாசி, மது புரி, பம்பா, பிந்து சரஸ், நாராயணாஸ்ரம், நந்தா, சீதாராமாஸ்ரமம், குலாசல ப்ரதேசம் முழுவதும், மஹேந்திர, மலய மலைகள், இவை புண்ய தம- மிக சிறந்த புண்ய ஸ்தலங்கள் ஆகும்.  இந்த இடங்களில் வசிப்பது சிறந்தது. 

தகுதியான பாத்ரம் என்பது  கவிகள் சொல்வதில்லை. ஹரியின் சந்ததிகளே சராசரமும் என்பது ஒரு காரணம். எந்த மனிதன் அக்ர பூஜைக்கு ஏற்றவன் என்பது அவனுக்கும் மற்ற மனிதர்களுக்கும் இடையில் உள்ள சம்பந்தத்தை பொறுத்தே அமையும்.  தகுதியை அவரவர் தானே வளர்த்துக் கொள்ளவேண்டும்.

இவையெல்லாம் பழைய ரிஷிகள் சொல்லி அனுசரிக்கப் பட்டு வருபவை.  தாரதம்யம் தோன்றுவது இயல்பே. மனிதர்கள் தங்களுக்குள் நடந்து கொள்வதை பொறுத்து மதிப்பை பெறுவார்கள்.   வித்யை, ஒழுக்கம் தவம் உள்ள அந்தணனை நல்ல பாத்ரம் என்பர்.  ஸ்ரீ க்ருஷ்ணனை வணங்கும் யாரானாலும் சத்பாத்ரமே. 

(இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஏழாவது ஸ்கந்தத்தில், சதாசார நிர்ணய என்ற பதிநான்காவது  அத்யாயம்.)

அத்யாயம்-15

நாரதர் சொன்னார்: அந்தணர்கள், த்விஜா:- இரண்டு பிறவியுடையவர் , சிலர் கர்ம மர்கத்தை அனுஷ்டிப்பவர், மற்றவர்கள் தவம் செய்வர். மற்ரும் சிலர் ஸ்வாத்யாயம் எனும் தான் கற்ற கல்வியை மேம்படுத்திக் கொள்வர், ப்ரவசங்கள் செய்வர், ஒரு சிலர் ஞான மார்கத்தில் செல்வர். 

ஞானம் பெறுவதையே கொள்கையாக எண்ணி அதில் ஈடுபடுபவர்களுக்கு தருவது கவ்யம்.  அது தவிர அவர்கள் வேறு எதையும் எதிர் பார்க்க மாட்டார்கள். (ஹோமத்தில் இடுவது ஹவ்யம், இது கவ்யம்)

தெய்வ சன்னிதிகளில் , தகுதி வாய்ந்த நபர்களுக்கு கொடுக்கலாம்.

தேவ காரியங்களில் இருவர், பித்ரு கார்யங்களில் மூவர், என்று உணவளிக்க வேண்டும். செல்வந்தராக இருந்தாலும் சிரார்தத்தில் விஸ்தாரம் செய்யக் கூடாது. தேச காலங்களை அனுசரித்து சிரார்தங்கள் செய்வதும், அதற்கான திரவியம்-பொருள், பாத்ரங்கள் இவை தகுதியானவைகளாக இருந்தால் நன்றாக நடக்கும். இவை இல்லாத பக்ஷத்தில், தன் மக்களுடனேயே செய்தால் போதுமானது. 

தேவ, ரிஷி,பித்ரு, பூதங்கள், தனக்கு, தன் உறவினர் பந்துக்களுக்கு, அன்னத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் அனைத்தும் பகவானுக்கே அர்ப்பணமாகும். சிரார்த்த காரியங்களில் மாமிசம் கூடாது.  பசு ஹிம்சை செய்வதை விட தானியங்களை சமைத்து அளிப்பது அவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும். சத் தர்மம் என விரும்பி செய்பவர்களுக்கு தண்டத்தை தவிர்ப்பது – எவரையும் நோகும்படி அடிக்காமல் இருத்தல்- சிறந்த து. மனம், வாக்கு, காயம் இவைகளால் அனைத்து உயிரினங்களையும் பகவானின் ஸ்ருஷ்டியாக பார்ப்பது நலம் தரும். 

கர்ம காண்டத்தின் முக்யமான ஒன்று யாகங்கள் செய்வது.  அதையறிந்த ஞானிகள், அந்த செயல்களில் திடமான அனுபவம் உள்ளவர்கள், இயல்பாக தன்னடக்கம் அடைவர். ஞான ஒளியில் ப்ரகாசிப்பர்.

த்ரவ்ய யக்ஞம்- எதையோ விரும்பி வேண்டிக் கொண்டு செய்யும் யாகங்கள்,  இவைகளிலும் ஹிம்சை இல்லாமல் அன்னமே அளித்து செய்வதால் பஞ்ச பூதங்கள் மகிழ்கின்றன.

நித்ய, நைமித்திக காரியங்களில் தானியங்கள், தாவரங்களில் கிடைக்கும் பொருட்களிலேயே திருப்தி அடைய வேண்டும்.

தர்ம பாதம் – தன்னுடைய தர்மத்திற்கு மாறானது விதர்மம் எனப் படும். மற்றவர்கள் தலையிட்டு மாற்றுவது பரதர்மம். அதர்மம் – பாகண்டம் எனப்படும்.  அதில் தம்பமும், வெற்று வார்த்தைகளுமே, ஏமாற்றும்.

தானே விரும்பி தன் ஆசிரம வாழ்க்கையை தேர்ந்தெடுத்த பின்,  அந்த (க்ருஹஸ்தாஸ்ரம ம், வானப்ரஸ்தமோ, சன்யாசமோ) அந்த தர்மத்தை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.   அவரவர் ஸ்வபாவத்துக்கு ஏற்றதாக வர்ணாஸ்ரமம் அமையும்.

யாத்திரைகள் போக செல்வமில்லாதவனுக்கு தனம் தருவது தர்மமாகாது.  மஹா சர்ப்பத்துக்கு தருவது போல என்கிறார்.  எந்த எதிrபார்ப்பும் இன்றி தன்னிடம் உள்ளதில் திருப்தியாக இருப்பவன் எந்த சுகத்தை காண்கிறானோ, அது தனத்துக்காக பல இடங்களில் கை ஏந்தி பெற்று நாலா திசைகளிலும் அலைவது ஒரு பலனையும் தராது.  திருப்தியுடையவன் வெறும் தண்ணீர் மட்டும் குடித்து கூட வாழ்வான்.  சுலபமாக கிடைப்பதை வைத்து தன் இல்லறத்தில் மற்றவர்களையும் சந்தோஷமாக வைத்திருப்பான்.
என்ன தான் தவம், தேஜஸ், வித்யா தவம், புகழ் எல்லாம் இருந்தாலும் மனதில் போதும் என்ற எண்ணமும், திருப்தியும் இல்லையெனில் அவை அனைத்தும் வீணே.

பசி தாகம், காம, க்ரோதங்கள் லோபம் இவைகளை அடக்கத் தெரிந்தவனே வெற்றி பெறுவான். ராஜன்! பண்டிதர்கள் பலர் இருப்பர்.  பல வித கல்விகளை கற்றவர்கள், வெற்றியடையாமல் போக இந்த போதும் என்ற மன அடக்கம் இல்லாமையாலே தான்.  காமத்தை சங்கல்பத்தால் ஜயிக்கலாம். க்ரோதத்தை காமத்தை அடக்கி ஜயிக்கலாம். பொருள் மேல் ஆசைகளை உழைத்து பொருள் ஈட்டி ஜயிக்கலாம். லோபத்தையும் பயத்தையும் அடக்க தத்வ விமரிசனம் செய்து ஜயிக்கலாம்.

கற்றதை நினைவில் இருத்தி மேலும் அதை மேம்படுத்திக் கொள்வது ஆன்வீக்ஷிகி எனப்படும்.  இதனால் சோகமும் மோகமும் அழியும். தம்பம் பகவானை உபாசனை செய்வதால் அடங்கும். யோகமும், மௌனமும் உடலை சீராக வைக்கவும், ஹிம்சையில் மனம் போகாமல் தடுக்கும்.  ரஜஸ் தமஸ் அறிவு வளர்ந்தால் மறையும். தன்னடக்கம் சத்வ குணத்தை தரும்.  இவையனைத்தும் குருவிடம் வணங்கி அன்புடன் இருந்தாலே பெறலாம்.  குரு என்பவர் அறிவை தருபவர். ஞானம் என்ற ஓளி வீசும் தீபமாக இருப்பவர்.  அவரிடம் மரியாதை இன்றி கல்வி மட்டும் கற்றவன் யானை குளித்து விட்டு வந்து மண்ணை அள்ளி மேலே போட்டுக் கொள்வது போல, பயனின்றி போகும்.   இவ்வாறு மேலும் பல தர்மங்களை விவரித்து விட்டு,

தேகம் என்பது ரதம், இந்திரியங்கள் குதிரைகள்,  மனம் அதன் தலைவன்,  செயல்கள் யாத்திரை, புத்தி தான் சாரதி, சத்வம் நெருங்கிய பந்து, என்பது ஈசனின் ஸ்ருஷ்டி.

அக்ஷம் என்பது பத்து.   தர்ம அதர்மங்கள் சக்ரங்கள், அபிமானம் ரதத்தை உடையவனின் ஜீவன், வில் தான் அதன் ப்ரணவம், ஸரங்கள் பரமார்த்தமே லக்ஷ்யம். ராகமும் த்வேஷமும், லோபமும், சோக மோகமும் பயம், மதம், மான அவமானகளும் அஸுயை, மாயா ஹிம்ஸா மத்சரம், ரஜஸ், மறதி, பசி நித்ரை சத்ருக்கள், இவை அனைத்தும் இடர்களே.  ரத எஜமானன் போல, தன் வசத்தில் வைத்துக் கொண்டு ஞானம் என்ற வாளும், அச்யுதன் சகாயமும் கொண்டவன் தன் ராஜ்யத்தில் திருப்தியாக இருக்க இந்த இடர்களை களைய வேண்டும்.

மேலும் தர்மத்தை அனுசரிப்பது பற்றி விவரங்கள் சொன்ன பின் தேவ ரிஷி விடை பெற்றார். அவருக்கு உரிய சத்காரங்கள் செய்து விடை கொடுத்து அனுப்பினார்.  அவர் சென்ற பின்னும் அவர் சொன்ன விஷயங்களை தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.

இது தாக்ஷாயணீ என்பவர்களின் தனி வம்சத்தின் சரித்திரம். தேவா சுரம், மனுஷ்யர்கள் இருக்கும் சராசரங்களிலும், பரவி இருப்பவர்கள் இவர்களே.

( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஏழாவது ஸ்கந்தத்தில், யுதிஷ்டிர நாரத சம்வாதம் என்ற பதினைந்தாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள் -80 

|| இத்துடன் ஏழாவது ஸ்கந்தம் நிறைவுறுகிறது ||

|| ஓம் தத் சத் ||

||  ஸ்ரீமத் பாகவதம்  ஆறாவது ஸ்கந்தம் || – அஜாமிளோபாக்யானம்  

ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||

அத்யாயம்-1   

அரசன் வினவினான்:  நிவ்ருத்தி மார்கம் என்ற ஆத்யாத்மிகம் – பரலோகம் பற்றிய விஷயங்களை விவரமாக வரிசை கிரமமாக ப்ரும்மா சொன்னபடியே விவரித்து சொன்னீர்கள். இகலோக வாழ்க்கையின் பொருள், எப்படி வாழ வேண்டும் என்பதிலிருந்து, முக்குணங்கள்,  இவற்றைச் சொல்லுங்கள். உயிரினங்கள் பிறப்பதும் இறப்பதும், மறுபடி பிறப்பதும் தானே கண்ணெதிரே காண்கிறோம்.  அதர்மம், நரகம் மன்வந்தரம் இவற்றைக் கேட்டு அறிந்து கொண்டோம். முதல் ஸ்வயம்புவ மனுவைப் பற்றி, பிரியவ்ரத, உத்தான பாத சரித்திரங்கள், தீவுகள், வர்ஷங்கள், சமுத்திரம் மலை நதி உத்யானங்கள், தாவரங்கள் பற்றியும் தரா என்று பூமியின் மண்டலம், அது எப்படி நிலை  நிற்கிறது, மேலும் ஜோதிட சாஸ்திரம் பற்றியும், இவைகளை பகவானே ஸ்ருஷ்டித்தார் என்பதை சொல்லிக் கேட்டோம். அடுத்து, நரக வேதனை இல்லாமல் மனிதன் வாழ்வது பற்றிச் சொல்லுங்கள்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: இகவாழ்வில் தான் தவறு செய்து விட்டோம் அல்லது அதர்மமாக அறிந்தோ அறியாமலோ செய்து விட்டோம் என்று தோன்றினால் உடல் நலத்துடன் இருக்கும் பொழுதே ப்ராயச்சித்தம் செய்யலாம். உடனடியாக செய்வது நலம். வியாதி முற்ற முற்ற மருந்தும் அதிகமாக தேவைப் படுவது போல நாட்களைக் கடத்தக் கடத்த பிராயச் சித்தம் செய்வதும் அதிகம் தேவைப் படும்.  இந்த பிறவியில் மனோ, வாக்கு, காயம்- மனம், சொல், உடல் இவற்றால் செய்யும் பாபங்கள்  விலக, மனு முதலிய தர்ம சாஸ்திரங்களில் விதித்துள்ள பரிகாரங்களைச் செய்யலாம்.  வயதாக ஆக உடல் நலிவினால்,  நற்காரியங்களை விட அதிகமாக தவறுதல்களே அதிகமாக போக வாய்ப்புள்ளது.

அரசன் வினவினான். தவறு என்று தெரிந்தும், சூழ்நிலையின் நிர்பந்தங்கள்,  தன் சக்திக்கு  மீறிய சில செயல்கள்,.செய்ய நேர்ந்து விட்டால், அதற்கு பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?  நடந்து விட்டதை திருப்ப முடியுமா?  தனக்கு சம்மதமில்லை, இது தவறு என்று தெரிந்த பின்னும் அதர்மத்தைச் செய்வது யானை குளித்து விட்டு வந்து தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதை போல அல்லவா?

ஸ்ரீ சுகர் சொன்னார்: சாப்பிடாதவனுக்கு அன்னமே வைத்யம். மருந்தாக இருப்பது நித்யம் உண்ணும் உணவே என்பது தன் செயல்களை சாஸ்திரப் படி செய்பவன் தவறு செய்தால் அவனுக்கு பரிகாரம் எளிது. அறிவுடையவன் தவம், தன்னடக்கம், ஒழுக்கம், சத்யம், நியமங்களை அனுசரித்தல் இவற்றால் தன்  உடல், சொல், புத்தி இவற்றால்  தவறுகள் வராமல் பார்த்துக் கொள்ள முடியும். அப்படியும் தவறு என்று தோன்றினால் தைரியமாக அதற்கான பரிகாரமும் செய்து கொள்ளவும் முடியும். மூங்கில் காட்டை அக்னி அழிப்பது போல தன் பாபங்களை போக்கிக் கொள்வான்.

ஒரு சிலர் வாசுதேவனை பக்தியுடன் ஆராதித்து தன் பாபங்களை போக்கிக் கொள்வர். வாசுதேவனிடத்தில் பக்தி சூரியன் பனித்துளியை விரட்டுவது போல பாபத்தை விலக்கும் என்பது நம்பிக்கை. இந்த சிறிய காரியத்திற்கு இவ்வளவு பெரிய சகாயம் வேண்டுமா என்று கேட்கலாம்.  முடிந்தவரை தவம் அனுசரிக்கலாம்.  அல்லது ஸ்ரீ க்ருஷ்ணனிடத்தில்  மனப் பூர்வமாக பக்தி செய்யலாம்.  நாராயண பராயணராக  ஆசார சீலராகவும் உள்ள சாதுக்கள் பிராயச்சித்தம் என்பதை ஏற்பதில்லை.  பரிகாரம் பலிப்பதும் பகவானின் அருளால் என்பது இவர்கள் கருத்து. அரசனே,  ஒரு கதை சொல்கிறேன். விஷ்ணு படர்களும், யம படர்களும் விவாதிக்கிறார்கள். கேள்.

கான்யகுப்ஜம் என்ற இடத்தில் ஒரு அந்தணன்.  அஜாமிளன். அவன்  சந்தர்ப வசத்தால் நன்னடத்தை இல்லாத ஒரு பெண்ணுடன் வாழ்ந்தான்..  விலை மாது என்பர். அவளுடன் இருந்ததாலேயே, அதுவரை கௌரவமாக இருந்த அஜாமிளன் தன் பெயரையும், ஒழுக்கத்தையும் இழந்தவனாக அறியப் பட்டான்.   அவளுடன் வாழ்ந்ததால் குலமே அவனை எதிர்த்தது.  அதை பொருட்படுத்தாமல் அஜாமிளன் அவளிடம் புதல்வர்களைப் பெற்றான்.  காலம் சென்றது. அஜாமிளன்  தன் பத்து புதல்வர்களில்  மிகவும் பிரியமான கடைசி புதல்வனான  நாராயணன் என்பவனை  மிகவும் கொண்டாடி வளர்த்தான். அவனுடைய மழலையை விரும்பி கேட்டான்.  உண்ணும் சமயம் அருகில் இருந்து பார்த்து ஊட்டி,  விரும்பியதை வாங்கி கொடுத்து சதா நாரயணா, நாராயணா என்றே நினைப்பதும் வாய் உச்சரிப்பதும் ஆனது.  அறிவில்லாதவன். மரணத் தறுவாயிலும், அதை உணராமல் நாராயணா என்று அழைத்தபடி இருந்தான்.  பாசத்துடன் வந்த பார்வைக்கே பயங்கரமாக இருந்த மூன்று புருஷர்களைப் பார்த்து பலமாக நாராயணா என்று அழைத்தான். பாலகன் சற்று தொலைவில் தன் விளையாட்டில் ஈடு பட்டிருந்தான்.  ஹரி கீர்த்தனம்,  அதுவும் மரணத் தறுவாயில் கேட்டதும் யம படர்கள்  குழம்பினர்.  என்ன செய்வது?   தன் யஜமானிடம் சென்றார்கள்.  என்ன செய்வது? ஹரி நாமத்தை ஆத்மார்தமாக சொல்வதை கேட்ட விஷ்ணு தூதர்கள், அங்கு வந்தனர். யம கிங்கரர்களைத் தடுத்தனர்.  வைவஸ்வத புரஸ் சரா:-யமனுடைய சேவகர்கள், கேட்டனர், எங்களை ஏன் தடுக்கிறீர்கள்? தர்ம ராஜனின் சாஸனம் இது என்பது  தெரியாதா உங்களுக்கு?  யாருடைய சேவகர்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்ன காரணத்தால் தடுக்கிறீர்கள்?  தேவர்களா? உப தேவர்களா?  சிறந்த சித்தர்களா? நீங்கள் யாவர்?  அனைவரும் பத்மத்தின் இலை போன்ற விரிந்த கண்களுடன், பீதாம்பரம் தரித்து, கிரீடமும் குண்டலமும் பள பளக்க,  அழகிய பூமாலை அணிந்தவர்களாக, இளம் வயதினர், அழகிய சதுர் புஜங்கள், அதில் வில், அம்பு, வாள், கதை, சங்க சம்ர, அம்புஜம் என்று ஆயுதங்களும், ஆபரணங்களும்,  திசைகளை வெளிச்சமாக காட்டும் ஆபரணங்கள் பிரகாசிக்க இங்கு வந்து தர்மபாலரின் கிங்கரர்கள் நாங்கள், எங்களை தடுக்க என்ன காரணம்?  

ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு சொன்ன யமதூதர்களைப் பார்த்து வாசுதேவனின் சொல்படி ஏவல் செய்பவர்கள், கம்பீரமான குரலில், மென்னகையோடு பதில் அளித்தனர்.

விஷ்ணு தூதர்கள் சொன்னார்கள்:  நீங்கள் தர்மராஜனுடைய ஆணையை மேற் கொண்டு வந்துள்ளீர்கள் என்பதை அறிவோம். சொல்லுங்கள், தர்மம் எது?  அதன் தத்வம் என்ன? தர்மத்தின் லக்ஷணம் என்ன ? எப்படி தண்டத்தை சுழற்றிக் கொண்டு வருவீர்கள். இந்த தண்டத்தை பயன் படுத்த ஏற்ற இடம் எதுவென்று எப்படி அறிவீர்கள்?  தண்டிக்கப் படுபவர்கள் என்ன செய்ததால் தண்டிக்கப் பெறுவார்கள்?  அல்லது அரச ஆணை என்ற மாத்திரத்தில் அணைவரும் தண்டிக்கப் படுவார்களா?

யமதூதர்கள் சொன்னார்கள்: வேதத்தில் சொல்லப் பட்டது  தான் தர்மம்.  அதற்கு எதிரானது அதர்மம்.  வேதம்  சாக்ஷாத் நாரயணனே. ஸ்வயம்பூ என்று கேட்டிருக்கிறோம்.  அவர் தன்னுள் ரஜஸ், சத்வம், தமஸ்  என்ற குணங்களையும்,   தனக்கென்று குணம், பெயர், ஒரு செயல் என்று பிரித்து தானே அதற்கு ஏற்ப நடப்பவர்.

ஸூரியன், அக்னி, வானம், காற்று, பூமி, சந்திரன், சந்த்யா, நாட்கள், திசைகள் , பூமி, நீர்  இவை தவிர,  தானே தர்மம் என்றும் இருப்பவர்.  இந்த தேஹி – தேகமுடையவன், உயிரினம் அதற்கு சாக்ஷி.  

இவர்களுக்கு அதர்மம் எது என்று தெரியும். எது தண்டிக்க தகுந்த இடம் என்று தெரியும். தங்கள் வினைகளுக்கு ஏற்ப அனைவருமே தண்டத்துக்கு தகுதியானவர்களே.  சில சமயம் நல்லவர்களும், அதற்கு விபரீதமாக தீயவர்களும் சேர்ந்து தான் உலகம். காரியம் செய்யாமல் எந்த பிறவியும் இருப்பதில்லை. இவர்கள் குணத்துக்கு ஏற்ற வாறுதான் உடன் வசிக்கும் உற்றார் உறவினர் அமைவர்.  யாரால், எந்த அளவு, எப்படி -அதர்மமோ, தர்மமோ, என்பது பொருட்டல்ல-. அதன் பலனை அனுபவித்தே ஆக வேண்டும். இந்த உலகிலோ. பரலோகத்திலோ. ஸூரியனே பிறவிகளின் வினைகளுக்கு சாக்ஷி. அதை பிரமாணமாகக் கொண்டு தான் தண்டனையும்.  தேவர்களில் சிறந்தவர்கள், அறிஞர்கள்,  நிகழ் காலத்தில் ஒருவனது நடவடிக்கைகளை வைத்து அவன் தார்மிகனா, அதர்மியா என்பதையும், அவனது முக்காலத்தையும் கணிக்கிறார்கள். நிகழ் காலத்தில் பூர்வ ஜன்ம தொடர்பு வெளிப்படுவதாக குணங்களை வைத்து நிர்ணயிக்கிறார்கள். அதே போல மறு பிறவியையும் எதிர்பார்த்து ஊகித்து சொல்கிறார்கள். இதற்கு உதாரணமாக வசந்த காலத்தைச் சொல்கிறார். வசந்த காலத்தில் பூக்கள் பூக்கும் என்பதும், பருவ காலங்களையொட்டி பழங்கள் கிடைப்பதையும் நினைவில் வைத்து இருப்பது போல பிறவிகளின் செயல்பாடுகளும் ஒரு ஒழுங்கில் இருப்பதாகவும், கால நிலை மாறுதல்களை வைத்து அடுத்த சில மாதங்களில் பூக்கும் அல்லது துளிர்க்கும் என்பதை அந்த தொழிலில் உள்ளவர்கள் அறிவது போல என்கிறார்.  இவர்கள் மனதால் பூர்வ ஜன்மத்தை அறிகிறார்கள். மற்றதை அதே அளவு கோலால் அனுமானிக்கிறார்கள்.  கனவில் கண்டதை அறிவில்லாதவன் உண்மையாக நினைப்பான். அதே உறக்கம் கலைந்து எழுந்தவுடன் மறப்பான். பிறவிகளும் அவ்வாறே. நிகழ் காலம் இந்த பிறவி முடிந்தவுடன் மறந்து போகிறது.

ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள், சப்தம் முதலிய ஐந்து, இவற்றுடன் மனமும் சேர்ந்து பதினாறு இதனுடன் அந்த பிறவியில் அடைந்த சரீரம், ஆக மொத்தம் பதினேழு.  இவைகளால் சுகம், துக்கம், இரண்டும் சமமாக இருக்கும் மத்யமம் சமநிலை என்ற மூன்று,  மகிழ்ச்சி, வருத்தம், பயம் போன்ற உணர்வுகள், இவை தவிர  உருவமாக இருந்து உடல் அனுபவிப்பது என்று விரியும்.  எனவே  உணர்வுகள் இல்லாத மற்ற பிறவிகளுக்கு தேகமே அனைத்தும்.  இந்த பதினாறும்  சக்தி த்ரயம் என்ற முக்குணங்களால் மாறுதலுக்கு உள்ளாகும்.  இந்த குணங்களின் பாதிப்பால், தேஹி-தேகம் உடைய ஜீவன் தான் விரும்பாவிட்டாலும் சில செயல்களை தர்மமோ, அதர்மமோ செய்கிறான்.  பட்டுப் பூச்சி போல தன்னைத் தானே வலைக்குள் சிறைப் படுத்திக் கொள்கிறான்.  வினைப்பயன் வலையாக அவனை சூழ்ந்து கொள்கிறது.  யாருமே, எந்த ஒரு சமயத்திலும் செயலின்றி இருப்பதில்லை. “ ந ஹி கஸ்சித் க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத் | கார்யதே ஹ்வஸ: கர்ம குணை: ஸ்வபாவிகைர் பலாத்||”

न हि कश्चित्क्षणमपि जातु तिष्ठत्यकर्मकृत् । कार्यते ह्यवशः कर्म गुणैः स्वाभाविकैर्बलात् ॥ 

வினைப் பயனால் சரீரம் அமைகிறது. என்ன சரீரம் என்பது முன் கூட்டியே தெரியாமல் போனாலும், பிறந்தபின் அந்த சரீரத்தின் குண தோஷங்கள் தான் அந்த ஜீவனுக்கு கிடைக்கிறது.   ஸ்தூலமோ, ஸூக்ஷ்மமோ, எந்த விதமான பிறவி என்பதோ, தாய் தந்தைகளிடம் பெறும் குண தோஷங்கள், அறிவோ, மற்றதோ, பிறவிக் குணமாக ஹிம்சையோ, சௌம்யமான குணமோ வந்து சேருகிறது.  இதில் ஜீவனின் விருப்பு வெறுப்புக்கு இடம் இல்லை.

பூமியில் பிறந்த பின் ஜீவனின் சுற்றுப் புறம், இயற்கையின் தாக்கம் இவற்றால் அதன் குணமும் உடல் வளர்ச்சியும் கூடவே புத்தியும் வளருவதால் நல்லது கெட்டதை தானே அறிந்து கொள்கிறது.  ஈசனின் சம்பந்தம் குறைகிறது.  

அஜாமிளன் பற்றி சொல்கிறார். அஜாமிளன் என்ற இந்த அந்தணன் சீல சம்பன்னனாக – நற்குணம், நல்ல நடத்தை உள்ளவனாக, வேத சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்து,  சதாசாரமும், நல்ல குணங்களுமாக பொறுமை முதலிய குணங்களுக்கு இருப்பிடமாக வாழ்ந்தான். குரு, அக்னி, அதிதி, மூத்தோர், முதியவர் அனைவருக்கும் சேவை செய்தவன். தான் என்ற எண்ணமின்றி அனைவருக்கும் உரிய நண்பனாக மிதமாக மென்மையாக பேசுபவனாக, அசூயை இல்லாமல் இருந்தான்.  ஒருசமயம், தந்தையின் தூண்டுதலால் வனம் சென்றவன்,  பழங்கள், புஷ்பம், சமித் என்று சேகரித்துக் கொண்டு வரும் சமயம், காமினியான இந்த பெண், மதுவை குடித்து மயங்கிய நிலையில் இருப்பவளைக் கண்டான்.  தன்னிலை மறந்து, ஆடை கலைந்து,  வெட்கத்தை தொலைத்தவளாக, மிதமிஞ்சிய மது பானத்தால், பித்து பிடித்தவள் போல பிதற்றிக் கொண்டிருந்தாள்.  ஏனோ, அவளை காப்பாற்றப் போனவன் அவள் வசம் வீழ்ந்தான்.   தன்னைத் தானே விடுவித்துக் கொள்ள முயன்றான். ஆயினும் அவளிடம் ஈடுபாடு கொண்ட மனம் மதனனால் ஆட்கொள்ளப் பட்டு விடுவித்துக் கொள்ள முடியாமல் அவளையே விரும்பினான்.  அவளே சகலமும் என்று ஆனான். தன் வீடு, எதற்கு வந்தோம் என்பது, தன் புத்தி, தர்மம் அனைத்தும் விலகின.  அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதே தன் தர்மம் என்று நினைத்தான்.  தந்தை வழி வந்த சொத்து முழுவதும் அவளுக்கே செலவழித்தான்.  அவளுக்காக தன் நிலையிலிருந்து இறங்கி சாதாரண அறிவில்லாத மனிதனாக அவளுடன் நாட்களைச் செலவழித்தான்.  தன் பிரிய மனைவி, நல்ல குலத்தில் பிறந்தவள், தன் குறிப்பறிந்து சேவை செய்தவளை கை விட்டான்.  இதுவரை சேர்த்த செல்வம் கரைந்தது.  தவறு என்று தெரிந்தும்  மோகத்தால் பல காலம் இருந்து முதியவனாக, இறுதி காலம் அடைந்தவனை, நாங்கள் யம படர்கள், கொண்டு செல்கிறோம். இவன் உரிய தண்டனையைப் பெற்றால் தான் இவனுடைய  வினைப் பலன் விடுபடும். சுத்தமாவான்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்த்தின்,    முதல் அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-68

 

அத்யாயம்-2

ஸ்ரீ சுகர் சொன்னார்:  இவ்வாறு யம படர்கள், தங்கள் பக்கத்து நியாயத்தை சொன்னதும், நயமாக பேசத் தெரிந்த விஷ்ணு படர்கள் தங்கள் தரப்பு வாதங்களைச் சொன்னார்கள்.

விஷ்ணு தூதர்கள் சொன்னார்கள்: அஹோ! கஷ்டம். தர்மம் என்ற பெயரில் அதர்மம் உயர்வாக சொல்லப் படுகிறது. தண்டனைக்கு உரியவன் அல்லாத ஒருவனை  அநியாயமாக தண்டிப்பதை நியாயப் படுத்துகிறார்கள்.   பிரஜைகளுக்கு பிதாவாக இருந்து பாலனம்  செய்ய வேண்டியவனே தண்டித்தால் பிரஜைகள் யாரிடம் சரணமடைவார்கள்.  தலைமை  பதவியில் இருப்பவர்கள் செய்வதை மற்றவர்களும் பின்பற்றுவார்கள். அதையே எடுத்துக் காட்டாக சொல்வர்.  எவருடைய மடியில் தலை வைத்து கவலையின்றி இருக்கிறார்களோ, அந்த பிரஜைகள்,  தர்மம் அதர்மம் என்று எதையும் அறியார்.  அந்த தலைவன், அரசனோ, குடும்பத் தலைவனோ, காப்பாற்றுவான் என்று இருப்பர்.  பசுக்கள் இருப்பது போல. அப்படி தன்னையே ஒப்படைத்து விட்டது  அந்த பசு இடையனை நம்புவது போல, பகவானை நம்பும் ஒருவனை தண்டிப்பதில் தீவிரமாக  முனைந்து இருப்பது நியாயமா?  இந்த மனிதனும் அப்படி பகவானை நம்பி இருப்பவன். கோடி ஜன்மத்து பாபத்தையும் கரைத்து விடும் அளவு நாம ஜபம் செய்தவன் என்பது தன் நினைவு இன்றி மரணத் தறுவாயிலும் பகவானின் பெயரைச் சொல்கிறான். இதிலிருந்தே, இவன் குற்றமற்றவன் என்று ஊகிக்க முடியவில்லையா? நாராயணாய என்று அஷ்ட அக்ஷர மந்திரத்தை உச்சரித்திருக்கிறான்.  பாபம் செய்பவர்கள் என்ற பட்டியலில், திருடன், மதுவை குடித்து மயங்குபவன், நண்பனை துரோகம் செய்தவன், ப்ராம்மணனைக் கொன்றவன், குருவிற்கு துரோகம் செய்பவன் (குரு மனைவியை அபகரிப்பவன்)  பெண்களை, அரசனை, தந்தையை, பசுவைக் கொல்பவன்,  இவர்கள் தான் வருகிறார்கள்.   இந்த மனிதன், உண்ணும் போதும் ஹே நாராயணா என்று சொல்லிய பின் உண்டவன்.   ஹரி நாம சங்கீர்த்தனம் பாபத்தை போக்கும், என்பது வெறும் வெற்று வாதமல்ல.  அனுபவம் மிக்க ஞானிகளின் வாக்கு அது. எப்படி விரதங்கள் உடலை தூய்மையாக்குமோ, அதே போல மனதை தூய்மையாக்குவது ஹரி கீர்த்தனம் என்பது பலரும் அனுபவித்து சொல்லியிருக்கிறார்கள்.  உத்தமஸ்லோகன் (உயர்ந்த அறிவாளி)  என்பதற்கான ஆதாரம்.

இப்படி சொல்வதால், காகம் உட்கார பனம் பழம் விழுந்தது என்ற நியாயம் போல எதேச்சையாக அமைவது அல்ல. குற்றம் செய்தவன் ஒருமுறை நாராயணா என்று சொல்லி விட்டு திரும்ப அதே குற்றத்தைச் செய்ய ஒப்புதல் கொடுப்பது போல ஆகாதா என்று கேட்கலாம்.  இந்த மனிதன் விஷயத்தில் அப்படியல்ல.   வாழ் நாள் முழுவதும்  பக்தி பாவம் தான் இவன் மனதில் இருந்திருக்கிறது.   உயிர் போகும்  தறுவாயில் ஹரி நாமம் வாயில் வருவதற்கு அது தான்  பின் பலம்.   எனவே, இவனை அழைத்துச் செல்லாதீர்கள். குற்றம் செய்தவன் என்று நீங்கள் கருதினாலும் ஹரி நாமத்தைச் சொன்னதால் அந்த பாபத்திலிருந்து விடுபட்டு விட்டான்.  சந்தர்ப வசமோ, பரிகாசமாக சொன்னதோ, காரியார்த்தமாக, பாடலை பூர்த்தி செய்ய ஹரி நாமத்தை போட்டாலும், ஏளனம் செய்வதே ஆனாலும்,  வைகுண்ட நாமத்தைச் சொல்வது பாபத்தை போக்கும் என்று சொல்வர்.  கீழே கால் தடுக்கி  விழுந்தவன், அடிபட்டு உடல் பாகம் இழந்தவன், விஷ ஜந்துக்களால் கடிக்கப் பட்டவன், நெருப்பில் காயப் பட்டவன், அடி பட்டவன், ஹரி என்று சொன்னால் அந்த மனிதன் அதிக கஷ்டப் பட மாட்டான்.   அபராதம் எப்படிப் பட்டது என்பதை பொறுத்து, பெரிய  தவறுக்கு, பெரிய பரிகாரம், சிறியதானால் அதற்கேற்ப சிறிய பரிகாரம் போதும்  என்பது மஹரிஷிகளின் வாக்கு. இவர்களுக்கு அந்த பாபங்கள் போக தவம், தானம், ஜபம் என்பன பரிகாரமாக சொல்லப் பட்டன. பகவானை நம்பியவனின் இதயம் அதர்மத்தில் செல்லாது.  தெரிந்தோ, தெரியாமலோ, உத்தம ஸ்லோகன் என்ற பகவானின் பெயரை சொன்னால், மனிதர்களுடைய பாபத்தை போக்கும். எரி பொருள்-விறகு போன்றவை அருகில் இருந்தால் அக்னி தகித்து விடுவது போல.  வியாதியஸ்தன், நெடு நாட்களாக வருந்தியவன், அறியாமல் ஔஷதம்- அதற்கான மருந்தை தெரியாமல் உட்கொண்டால் கூட மருந்து அவனை குணப்படுத்துவது போல,   மந்திரமும் அதே போல சக்தி வாய்ந்தது என்று சொல்கிறார்கள். 

ஸ்ரீ சுகர் சொல்கிறார்:  இவ்வாறு பாகவதன்- பகவானை நம்பியவன் – என்பதன் தர்மம் என்பதை சொல்லி, அரசனே! அந்த யம படர்களிடமிருந்து அந்தணனை மீட்டனர்.  இவ்வாறு திருப்பி அனுப்பட்ட யம தூதர்கள் தங்கள் தலைவனிடம் போய் முறையிட்டார்கள். நடந்ததை நடந்தபடி சொன்னார்கள். 

யமபாசத்திலிருந்து விடுபட்ட அந்தணன், பயம் தெளிந்து, நினைவு வரப் பெற்றான்.  விஷ்ணு கிங்கரர்களையும், பகவான் விஷ்ணுவையும் வணங்கினான்.  திடுமென விஷ்ணு பார்ஷதர்கள் மறைந்தனர்.  அஜாமிளன் கேட்டுக் கொண்டிருந்த சம்பாஷனைகளை நினைவு கூர்ந்தான். யம படர்களும், நாராயண சேவகர்களும் பேசியதை,  தார்மிகமான ,சுத்தமான, மூன்று வேதங்களையும், தன் முந்தைய சாந்தமான வாழ்க்கையையும் நினைத்தான். பக்திமானாக, ஹரி மாஹாத்ம்யம் கேட்டதால் வந்த புது அறிவுடன், தன் வழி தடுமாறலை நினைத்து வருந்தினான். என்ன காரியம் செய்தேன்,  அந்தணனாக பிறந்து அதே நியமங்களுடன் வாழ்ந்தவன் என் கடமைகளிலிருந்து நழுவி விழுந்தேனே. எனக்கு நல்ல இள வயது மனைவி அன்புடையவளாக இருந்தாள்.  அவளைத் துறந்து சென்றது என்ன நியாயம். வயது முதிர்ந்த தந்தை, தாய் இருவரும். வேறு பந்துக்களும் இல்லை. நன்றி மறந்தவன் நான். அவர்களைத் தவிக்க விட்டேன்.   நீசன் நான்.  எனக்கு நரகம் தான் சரி. அதுவும் பயங்கரமான நரகம். தர்மத்தை மீறியவர்கள், காமமே பெரிதென்று நினைப்பவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை அனுபவிக்கப் போகிறேன்.  ஆ, இது கனவா? உண்மையாக நேரில் கண்டேனா? அத்புதம். பாசங்களை கையில் வைத்துக் கொண்டு வந்த யம படர்கள் எங்கு சென்றார்கள்?  அழகிய தோற்றம் கொண்ட சித்தர்கள், என்னை பாசக் கயிற்றிலிருந்து விடுவித்தவர்கள் எங்கு சென்றார்கள்?  என்னதான் நான்  தகுதியற்றவன் என்றாலும் அந்த உத்தம புருஷர்களைச் சந்தித்தது வீண் போகாது.  மங்களமே நடக்கும். என் மனம் மகிழும்படி ஏதோ நன்மைகளே பெறுவேன்.  இல்லாவிடில், முன் பின் அறியாத  அந்த காட்டு வாசியான பெண்ணிடம் வாழ்ந்தவனின் நாக்கில் வைகுண்ட பதி ஸ்ரீமன் நாராயணன் பெயர் வருமா?

மஹா மட்டமானவன் நான். பாபி. ப்ரும்ம குலத்தில் பிறந்தவன் என்று சொல்லிக் கொள்ளவே அருகதையற்றவன்.  வெட்கம் அறியாதவன். இப்படிபட்ட   எனக்கும் மங்களமான ஸ்ரீமன் நாரயணனின் பெயர் சரியான சமயத்தில் வழி காட்டவே நினைவு வந்ததோ.  இனி நான் திருந்தியவனாக குல வழக்கப் படி நடப்பேன். புலன்களை அடக்கி வாழவே முயல்வேன்.  இனியும் என் மனதில்   தாமஸமான எண்ணங்கள் வர விட மாட்டேன்.  அவை இருட்டில் மூழ்கடிக்கும்  என அறிந்து கொண்டு விட்டேன்.  இந்த பந்தத்திலிருந்து என்னை விலக்கிக் கொள்வேன். எதுவும் அறியாத அக்ஞானி  போல காமம் என்னை ஆட்டுவிக்க விட மாட்டேன். இனி என் வாழ்க்கை அனைத்து பிறவிகளையும் நேசிக்கும், நண்பனாக உதவும், சாந்தமானவனாக, கருணையுடன் ஆத்மாவை உணர்ந்தவனுடையதாக இருக்கும்.  மிருகத் தனமான இச்சையுடன் அதமனாக வாழ்ந்த வாழ்வைத் தொலைத்து மூழ்கி விட்டேன்.   நான், என் உடல், என் சுகம் என்ற நினைவுகள் என்னை விட்டு அகலட்டும். பொய்யான பொருள் ஆசை விலகட்டும். நல்ல புத்தி வரட்டும். என் மனதை பகவத் தியானத்தில், அவனுடைய கீர்த்தனத்தில் செலுத்தி பவித்ரமானவனாக ஆவேன்.  

ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு தன்னையே நொந்து கொண்டு, எஞ்சிய நாட்களைக் கழிக்க,  சாதுக்களுடன்  கங்கைக் கரையை அடைந்தான்.  அனைத்து பந்தங்களையும் துறந்தவனாக வாழ்ந்தான்.  அங்கு யோகங்களைக் கற்று, சாதனைகளைச் செய்தான். தன்னையே அறிவது என்ற பெரும் நிலையை அடைந்தான். காலம் வந்ததும் இயற்கை எய்தினான்.  ப்ரும்மானுபவத்தை அடைந்தான்.  அங்கு முன்பு கண்ட விஷ்ணுவின் சேவகர்களை அடையாளம் கண்டு வணங்கினான்.  ஸ்ரீயின் பதியான ஸ்ரீமன் நாராயணனின் வைகுண்ட லோகத்தில் கிங்கர்களோடு சேர்ந்தான்.

இவ்வாறு தன் தர்மத்தை விட்டு, கடமையை மறந்தவனாக வாழ்ந்தவன் கூட, பகவானின் நாமத்தை சொன்னதால், தன்னுணர்வை அடைந்து மேலும் பாபத்தை செய்வதில் இருந்து மீண்டான்.  அதை விட கர்ம பந்தனத்தை விலக்க ஏற்ற சாதனம் வேறு எது உள்ளது?  திரும்பவும் உலக வாழ்க்கையின் ரஜோ, தமோ குணங்களுடன் குழம்பிய நீரில் நிற்பது போன்ற நிலை வராமல் அந்த நாம ஸ்மரணமே உதவியது.

இதிகாசம் இது. நடந்த கதை. ஸ்ரத்தையுடன் கேளுங்கள். மனதின் சஞ்சலம் நீங்கும்.  பக்தியுடன் பாடுங்கள். யம கிங்கரர்கள் நரகத்துக்கு அழைத்துச் செல்ல அருகில் கூட வர மாட்டார்கள்.  இறக்கும் தறுவாயில் ஹரி நாமத்தை, புத்ரனை நினைத்து சொன்னதே, அஜாமிளனுக்கு நல்வழி காட்டியது எனும் பொழுது,   சிரத்தையுடன் அன்புடன் சொல்பவர்கள் பற்றி சொல்வானேன்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின்,  இரண்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-49.

 அத்யாயம்-3 

பரீக்ஷித் ராஜா வினவினான்.  இவ்வாறு திரும்பி வந்த யம தூதர்களை யம தர்மராஜன் எப்படி எதிர் கொண்டான். ஆணையை மீறியதற்காக தண்டிக்கவில்லையா?  அவர்கள் வர்ணித்த முராரியின் அணுக்கத் தொண்டர்கள் அவர்கள் வசத்தில் அந்தணனை எடுத்துக் கொண்டதை ஒத்துக் கொண்டானா?  யமதேவன் நியாயமாக அளித்த தண்டம் அதை மீறுவது என்பது கேட்டதேயில்லையே.  உலகில் அனைவருக்கும் இந்த சந்தேகம் வரும். ரிஷியே, உங்களையன்றி இதற்கு யார் பதில் சொல்ல முடியும் ?

ஸ்ரீ சுகர் சொன்னார்:  யம தூதர்கள், தங்கள் தலைவனான யம ராஜனிடம் நடந்ததைச் சொன்னார்கள். சம்யமனீ என்ற திக்கின் பதி யமன்.  ப்ரபோ! ஜீவ லோகத்தில்  ஆணயிடக் கூடியவர்கள்  பலர் இருக்கிறார்கள்? த்ரிவித்யா என்ற வேத மார்கத்தை பயிலுபவர்கள்  மனிதனின் வினைப் பயன்கள் தொடரும், அதை தவிர்க்க முடியாது என்று அறியாதவர்களா?  இப்படி பலர் ஆணையிட முனைந்தால், மரணமோ, மரணமற்ற நிரந்தரம் எனும் நிலையோ, யாருக்கு, எப்படி, எதனால் அளிக்கப் படுகிறது என்பதே கேள்விக்குரியதாகாதா? சாஸ்திரம் என்பது உண்மையில் சக்தியின்றி, பேச்சளவில் இருக்குமா?  தாங்கள் தான் மனிதர்களின், தேவர்களின், பூதங்களின் அதீஸ்வரர் என்ற பதவியில் திடமாக நின்று அனைத்து ஜீவ ராசிகளின் சுப, அசுப செயல்களை கணித்து தண்டனை வழங்குபவர்.  ஆணையிடுபவர். யமதண்டம் யாராலும் மீற முடியாது என்பது தான் இதுவரை நடந்து வந்திருக்கிறது. இந்த நான்கு விஷ்ணு  சேவகர்களால்  மீறப்பட்டது. அவர்கள் அத்புதமாக, சித்தர்களாக  இருந்தனர். நயமாக பேசி, எங்கள் கைகளிலிருந்து, உங்கள் ஆணையின் பேரில் யாதனா க்ருஹம் என்ற இடத்திற்கு அழைத்துச் செல்லப் பட இருந்த,  தவறு செய்த பிரஜையை பலவந்தமாக பாசக்கயிற்றிலிருந்து விடுவித்து விட்டார்கள்.  எங்கள் மேல் தவறு இல்லை என்று நீங்களும் நினைத்தால் விவரமாக சொல்லுங்கள். ‘நாராயணா” என்று சொன்னவுடன், பயப்படாதே என்று காப்பாற்ற ஓடி வந்து விட்டார்கள்.

ஸ்ரீசுகர் சொன்னார்:  ப்ரஜைகளை சம்யமனம் – பிறவித் தளையிலிருந்து விடுவிப்பவன் என்ற பெயரில், உலகில் பிறப்பு இறப்புகளை கட்டுக்குள் வைத்திருப்பவன் என்ற பதவியில் நியமிக்கப் பட்ட யமராஜன்  பதில் சொன்னார்:  எனக்கும் மேல் ஒருவன் உலகை நடத்திச் செல்பவன் இருக்கிறான். என் வேலை அசையும் உயிரினங்களில் மட்டுமே.  அதிலும் மனிதர்கள் தான் பிரதானம். அதிலும் பாபம் செய்தவர்களை தண்டிக்க மட்டுமே எனக்கு அதிகாரம் உள்ளது. சர்வேஸ்வரன் என்பவன் யார் தெரியுமா?  ஊடும் பாவுமாக நெய்து வைத்த வஸ்திரத்தால் சுற்றி வைத்தது போல தானே  அனைத்து உலகங்களுக்கும் ஒரே  வஸ்திரமாக முழுவதுமாக பரவி நிற்கிறான்.   அதன் ஒரு பகுதி பிறப்பும், இறப்பும்.  அவன் வசத்தில் இருப்பது தான் உலகம். கம்பத்தில் கட்டி வைத்த பசுக்கள் போல ஜனங்களை தன் வசத்தில் ஆட வைக்கிறான்.  வாயால் அவன் புகழை பாடுபவர்கள், அவனைச் சுற்றியே வளைய வருகிறார்கள்.  நான், இந்திரன், நிர்ருதி, ப்ரசேதஸ் என்பவர்கள்,  சந்திரன், அக்னி, ஈசன், பவன், ஸூரியன், விரிஞ்சி, ஆதித்யன்,  உலகில் வசுக்கள், மற்றும் சாத்யர்கள், மருத் கணங்கள், ருத்ர கணங்கள் சித்தர்கள்,  விஸ்வத்தை படைத்தவன், அமரேசன், ப்ருகு முதலான ரிஷிகள்- இவர்களை தமஸ், ரஜஸ் என்ற குணங்கள் நெருங்க கூட முடியாது அந்த அளவு சத்வமே உருவானவர்கள், இவர்கள் அனைவரும் சத்வ ப்ரதானமாக இருந்தும், பகவானின் மாயைக்கு அடங்கியவர்களே.  எப்பொழுது, எதை, எந்த விதமாக செய்யப் போகிறார் என்பதை அறிய மாட்டார்கள். மற்றவர்களைப் பற்றி சொல்வானேன்.  அந்த:கரணத்தில் சாக்ஷியாக இருப்பவன், பரமாத்மா.  எந்த ஜீவனும் இதுவரை கண்டதில்லை, கேட்டதும் இல்லை.  மனம், ப்ராணன், ஹ்ருதயம் அல்லது குரலில்  எதிலுமே காட்டிக் கொள்ளாமல் இருக்கிறான் அந்த ப்ரபு.  சுதந்திரமானவன்.  அந்த மயாவியின் தூதர்கள் அவரைப் போலவே வேஷ தாரணங்கள், உருவம் இவற்றுடன் இருப்பர்.  இவர்களைக் காண்பதே கூட துர்லபம்.  இவர்கள் தான் பக்தர்கள் படும் கஷ்டங்களைத் தீர்க்க ஓடோடி வருவார்கள். பகவானே தான் தர்மம் என்பதை வரையறுத்தார். நானும் அவர் ஆணைக்கு உட்பட்டவனே.  பாகவத தர்மம் என்று அவரே சொல்கிறார். அது என்ன  என்று எங்களில் யாருக்கும் தெரியாது. அதை அறிந்தவர்கள் பகவான் அருகில் இருப்பவர்கள் மற்றும் ப்ரும்மா, நாரதர், பகவான் சங்கரன், சனத்குமாரன், கபிலர், ஸ்வாயம்புவ மனு, ப்ரஹ்லாதன், ஜனகர், பீஷ்ம பிதாமஹர், பலி, சுகதேவர் இவர்களுடன் நான்.

பக்தியோகம் தான் உலகில் சிறந்த தர்மம் என்பர்.  ஹரியின் நாம உச்சாரணமே ம்ருத்யு பாசத்தை விட மேலானது என்று அஜாமிளன் சரித்திரம் சொல்கிறது.  போதும். அஜாமிளன் எந்த விதத்தில் உயர்வு இந்த தகுதியைப் பெற என்றால், எதுவுமில்லை. அவன் மரணத் தறுவாயில் ஹரி நாமத்தை நினைத்தான் என்பது ஒன்றே. அதனால் தூதர்களே! ஹரி சங்கீர்த்தனம் இருக்கும் இடத்தில் பார்த்து கவனமாக நடந்து கொள்ளுங்கள்.  அவர்கள் பக்தர்கள் என்றால் கவசமாக பகவானின்  3தை இருக்கும். என் தண்டம் அதற்கு முன் ஒன்றுமேயில்லை.

குணமில்லாதவர்கள், முகுந்த பாதாரவிந்தத்தை  தவிர்த்து தன் விருப்பம் போல செய்பவர், எவருடைய வாய் பகவானுடைய புகழை பாடவில்லையோ, எவருடைய மனம் அவர் சரணாரவிந்தத்தை நினைப்பதில்லையோ,  க்ருஷ்ணா என்று சொல்லி எந்த  தலைகள் வணங்குவதில்லையோ, அவர்களை அழைத்து வாருங்கள்.

அதனால் விஷ்ணு தூதர்கள் தடுத்தார்கள் என்பதை மன்னித்து விடுங்கள். புராண புருஷன் ஸ்ரீமன் நாராயணன், தானே தன் ஏவலர்களைக் கொண்டு இப்படி ஒரு செயலை செய்வித்திருக்கிறான். நாம் கை கூப்பி வணங்கி விட்டு நம் வழியே செல்வோம், அதுவே நன்மை.

ஜகன்மங்களம் என்பது விஷ்ணுவின் கீர்த்தனமே.  குருவம்சத்து அரசனே, அதுவே அனைத்து பலன்களையும் தரும். அந்த அளவு  விரதம் முதலியவைகள் கூட மனிதனை பவித்ரமாக்குவதில்லை, ஹரி கீர்த்தனமோ, கேட்பதோ, பக்தியுடன் நினைப்பதோ அதை விட மேல்.  க்ருஷ்ண பாத பத்மத்தில் மனப் பூர்வமாக வணங்கினாலேயே காம, மோகங்கள் விலகும்.  இவ்வாறு தங்கள் தலைவன் சொன்னதைக் கேட்டு யம தூதர்கள் வியந்தபடி, அதன் பின் அச்யுதனை ஆஸ்ரயித்த ஜனங்கள் உள்ள இடங்களில் தங்கள் வேகத்தைக் காட்டாமல் பார்த்து நடந்து கொள்ளலாயினர். 

அரசனே! இந்த கதையை அகஸ்தியர் மலய மலையில் ஒரு நாள் பூஜை முடிந்து அமர்ந்திருந்த பொழுது சொன்னார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், மூன்றாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் )  ஸ்லோகங்கள்-35.

 

 

 

 அத்யாயம்-4

அரசன் பரீக்ஷித் வினவினான்.  பகவன்!  ஸ்வாயம்புவ ஆட்சியில் தேவாசுர சர்கம், நாகங்கள், மிருகங்கள், பக்ஷிகள்  இவற்றைப் பற்றியும் சொன்னீர்கள்.  அதையே மேலும் கேட்க விரும்புகிறேன்.  மனிதனுக்கு அடுத்த நிலையில் இவைகள் எப்படி எந்த சக்தியால் எப்படி பகவான் படைத்தார்? 

சூதர் சொன்னார்: இப்படி கேட்கும் அரசனைப் பார்த்து வியாச பகவான் அவனை பாராட்டி விட்டு, விவரமாக சொல்கிறேன் என்று ஆரம்பித்தார்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: ப்ராசீன பர்ஹிஷரின் பத்து பிள்ளைகள்,  நீருக்குள் இருந்தபடி தவம் செய்தார்கள். அங்கிருந்தபடியே, பூமியை காண முடியாமல் மரங்களே நிறைந்திருக்கக் கண்டனர்.   பார்வையை மறைத்தன என்று மரங்களை வெறுத்தனர்.  தவம் செய்து வந்ததால் அடங்கியிருந்த கோபம் வெடித்து  எழுந்தது போல  அவர்கள் வாயிலிருந்து தீயும், வாயுவும் வெளிப்பட்டன.  மரங்களை எரித்தது அந்த தீ ஜ்வாலைகள்.  அதைக் கண்ட சோமன்- சந்திரன் திகைத்து அவர்களை சமாதானப் படுத்தினான். (தாவரங்கள் சந்திரனின் பொறுப்பில் என்பதால்)  பெரியவர்களே! உங்கள் கோபத்தை இந்த மரங்களிடம் காட்ட வேண்டாம். பாவம், அவைகள் என்ன செய்தன.  நீங்கள் பிரஜைகளை பெருக்குவதற்காக தோன்றியவர்கள். அஹோ! ப்ரஜாபதி பகவான் ஹரி இப்படி ஆகும் என்று நினைத்திருக்க மாட்டார். காட்டு மரங்களும் ஔஷதிகளும்   ஜீவன்களின் களின் நன்மைக்காக அவர் உருவாக்கி கொடுத்தார்.  மனிதர்களுக்கு அன்னம், அசைய முடியாத, பாதம் இல்லாத இவைகள் பாதங்களுடன் நடமாடும்  பிறவிகளுக்கு உணவு. கைகள் இல்லாத இந்த தாவரங்கள் கைகளுடன் உள்ள மனிதர்களுக்கும், இரண்டு கால் பிராணிகளுக்கும், நான்கு கால் பிராணிகளுக்கும் உதவ என்றே படைக்கப் பட்டன. நீங்கள் உங்கள் பெற்றோரால் ப்ரஜைகளை பெருக்குங்கள் என்று ஆணையிடப் பெற்றவர்கள். இந்த மரங்களை ஏன் தகிக்கிறீர்கள் ? நல்லவர்களின் வழியில் செல்லுங்கள். கோபத்தை அடக்கிக் கொண்டு, உங்கள் தந்தை, பாட்டனார், முப்பாட்டனார் சொன்னதையும், செய்ததையும் அனுசரியுங்கள். குழந்தைகளை பந்துவானவன் பாதுகாப்பது கடமை. ஞானியானவன் அறிவு உள்ளவனை ஆதரித்து கண்களை இமைகள் காப்பது போல காக்க வேண்டும். மனைவியை கணவன் பாதுகாக்க வேண்டும் பிரஜைகளை அரசன் பாதுகாக்க வேண்டும். துறவிகளை, யாசிப்பவர்களை குடும்பஸ்தன் காக்க  வேண்டும்.  இவ்வாறு பிற ஜீவன்களிடம் தயையுடன் இருக்க வேண்டும் என்பது தான் பகவானின் நோக்கம் என்பது உங்களுக்கு நினைவில்லையா?  பிற ஜீவன்களை துன்புறுத்துவது பகவானையே துன்புறுத்துவதற்கு சமம்.  போதும் மரங்களை எரித்தது. வார்க்ஷீ அல்லது மரீஷா என்ற இந்த பெண் கண்டு ரிஷியின் மகள்.  ப்ரமலோசனி என்ற அப்சரஸ்  தாய். மரங்களில் வளர்ந்தவள். இவளை மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.   சோமன் சொன்னதால், ப்ராசீன பர்ஹிஷின் பத்து புதல்வர்களும் அவளை ஏற்றுக் கொண்டனர்.  அவர்களிடம் அவள் பிரஜைகளை பெருக்குவதே நோக்கமாக கொண்ட  ப்ராசேதஸர்களை பெற்றாள்.  இவர்களின் வம்சம் வளர்ந்து உலகை நிரப்பியது.

2)

தக்ஷ பிரஜாபதி தன் புத்ரிகளை மிகவும் நேசித்தான். தக்ஷன், இயல்பாக பெற்ற சந்ததிகள் தவிர, மனதால், பலரை ஸ்ருஷ்டித்தான்.  அதைக் கேள்.  மனதால் சங்கல்பம் செய்தே  தேவர்கள், அசுர்கள், மனிதர்கள் என்று ஸ்ருஷ்டியைச் செய்தான்.  அப்படியும் திருப்தி இல்லை என்று  விந்த்ய மலைக்குச் சென்று தவம் செய்யலானான்.  அங்கு அகமர்ஷணம் என்று தீர்த்தம் இருந்தது.  பாபங்களைப் போக்கும் பரம பவித்ரமான நதி.  அங்கு தங்கி தினமும் அதில் ஸ்னானங்களை செய்தபடி தவம் செய்து ஹரியை மகிழ்வித்தான்.. அவர் சொன்ன துதிகளைச் சொல்கிறேன் கேள்.  

“ நம: பராய – என்று ஆரம்பித்து,   தஸ்மை மஹேஸாய நமஸ்கரோமி மகேசனுக்கு நமஸ்காரம். உடன் இருக்கும் ஆப்தமான சகா போல இருப்பவன்.  இதை நற்குணம் குணங்கள் நிறைந்த சாதகர்கள் தான் அறிவர். நண்பனுக்கு நண்பனாக விளங்கும் அந்த மகேசனுக்கு நமஸ்காரம். , 

 தன்னில் பரமாத்மாவை அறிந்தவன் தான் அறிவாளி. அவனும் சர்வக்ஞன் என்ற பகவானை முழுமையாக அறிந்தவனா, சந்தேகமே. அனைத்தும் அறிந்த பரம புருஷனான பகவானை வணங்குகிறேன்.

 மரத்தில் அக்னி போல உயிரினங்களின் இதயத்தில் இருப்பவன்.  அவனே சர்வ நாமா- எந்த பெயர் சொல்லி அழைத்தாலும் அவனையே குறிக்கும் – விஸ்வ ரூபன், தயை செய்ய வேண்டும். 

வேதங்கள் பரம் பொருளைப் பற்றி நிரூபிக்க முயன்றிருக்கின்றன. எங்கு, எங்கிருந்து வந்தது, யாரால் அறியப்பட்டது, எதில் நாம் காணலாம், என்ன உருவம் இது தான் என்று எப்படி அறிவோம், என்ன செயல் செய்கிறது, செய்விக்கிறது, என்று கேள்விகள் தானே கேட்டு,  நாமென்ன அறிவோம், அந்த பரம் பொருளின் சித்தம், பரத்திற்கும் பரமானது, அதுவே ப்ரும்மம், அதுவே தேகங்கள் தோன்ற காரணம், இது தான் அதன் சக்தி என்று விவாதிப்பவர்கள், எல்லையில்லாமல் விவாதித்து முடிவே காண முடியாத பரம் பொருள், இதோ கண்டு கொண்டேன் என்று சொல்லி முடிக்கும் முன் அவர்கள் தங்கள் விவாதம் ஒர் பலனையும் தரவில்லை என்பதை உணர்வார்கள்.  ஒரு முஹூர்த்த மோகமே. 

அஸ்தி என்று சிலரும், நாஸ்தி-இல்லை என்று சிலரும் சொல்வர். வித விதமான தர்மங்கள் பற்றி பேசுவர்.  சங்க்யம், கர்யோகம், என்று பெயர்கள் சொல்வர். கண்டவர் எவருமில்லை. 

என்னையும் ஒரு கடமையைக் கொடுத்து உலகில் பிறக்கச் செய்தவன் என்னை காக்கட்டும்.  பாமரனான கிராம வாசி உலக வாழ்க்கையில் எதை அறிவான்.  அனைத்தும் தேகமே, உடல் சம்பந்தப் பட்டதே என்று இருப்பான். பகவானே, எதை நான் செய்யவேண்டுமோ, அதற்கான மனோ பலத்தைக் கொடுங்கள். “

 ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு துதி செய்யவும், மனம் மகிழ்ந்து பக்த வத்ஸலனான பகவான் எதிர்ப்பட்டார்.  பாதம் சுபர்ணனின் மேல் இருக்க, நீளமான அஷ்ட புஜங்களும், சக்ர, சங்க, வாள், தனுஷ், பாணம்,  க3தை இவற்றை ஏந்தியவராக , பீதாம்பரமும், கரு மேகம் போன்ற நிறமும்,  ப்ரஸன்னமான கண்களும், முகமும், வனமாலையும், ஸ்ரீ வத்ஸம், கௌஸ்துப மணிகள் பிரகாசிக்க, பெரிய கிரீடமும், கடகமும், மகர குண்டலங்களின் ஒளிச் சிதற, இடையில் காஞ்சி, விரல்களின் வளையங்கள், நூபுரம்,அங்கதம் என்ற பூஷணங்களும் அலங்கரிக்க, மூவுலகிலும் ப்ரசித்தமான மோகன ரூபனாக,   புவனேஸ்வரன், நாரதர், நந்தன் முதலானோருடனும்,  உடன் இருக்கும் ஏவலர்களுடனும் தேவர்கள் கூட்டத்தோடும், துதி செய்வோர் பாட, மற்றவர் உடன் பாடும் கோஷ்டியாக,திடுமென வரவும் சித்த கந்தர்வ சாரணர்கள்,  ஆச்சர்யமான அந்த ரூபத்தைப் பார்த்து மனம் மகிழ்ந்து   நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினர்.  ப்ரஜாபதி தக்ஷன் எதுவும் பேசக் கூட முடியாதபடி மகிழ்ச்சியில் திக்கு முக்காடினார்.  அருவியிலிருந்த நீர் வேகமாக  வந்து விழுந்து நிரம்பிய தடாகம் போல மனம் நிறைந்தது.  ப்ரஜைகளை பெருக்குவது தான் அவருடைய விருப்பம் என்பதை அறிந்திருந்த பகவான் ஜனார்தனன் பேசலானார்.

ஸ்ரீ பகவான் சொன்னார்:  என்னிடம்   மனப் பூர்வமான ஈடுபாடு, கவனம் இவற்றுடன் ப்ராசேதஸ! உன் தவத்தை முறையாக சரியாக செய்து முடித்து விட்டாய்.  அதில் எனக்கு மகிழ்ச்சியே.  நீ விரும்பியபடி ப்ரஜைகள் பெருகட்டும்.  எனக்கும் அது சம்மதமே. ஏனெனில், ப்ரும்மா, பவன், நீங்கள், மனு, என் அம்சமே ஆவீர்கள்.   உலகத்தில் வளம் நிறையட்டும்.

ப்ரும்மன்! தவம் எனது ஹ்ருதயம்,  வித்யா என் உடல். காரியங்கள் என் உடல் வாகு. அங்கங்கள் க்ருதுக்கள் என்ற யாகங்கள்.  தர்மமே என் ஆத்மா.. என் உடலில் உள்ள திரவங்கள் சுரா: தேவர்கள்.  உலகில்  ச்ருஷ்டி ஆரம்பத்தில்  நான் மட்டுமே இருந்தேன். சைதன்யம் ( உள்ளுணர்வு) மாத்திரமாக வெளியில் தெரியாத உருவுடன் பரவி இருந்தேன்.  என்னிடம் ஸ்வயம்பூ அனந்தமான குணங்களின் சேர்க்கையால் தோன்றினார்.  அவரே அஜன். மஹாதேவனும் என் வீர்யத்தில் தோன்றினார்.  ஒன்பது புதல்வர்களை அவர் படைத்தார். அதில் ஒருவரான நீங்களும் அஸிக்னீ என்ற பராஜாபதியின் மகளை மணந்து கொண்டு தம்பதிகளாக தர்ம வழியில் பிரஜைகளை பெருக்குவீர்களாக. உங்களுக்குப் பின் உலகில்  தாம்பத்யம் தான் ப்ரஜோத்பத்திக்கு காரணம் என்பது நிலைக்கட்டும். என் மாயையும் உதவும்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: இப்படி சொல்லி விட்டு அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே மறைந்தார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், நான்காவது அத்யாயத்தின்  தமிழாக்கம் )  ஸ்லோகங்கள்-54

 அத்யாயம்-5

பஞ்சஜனன் என்ற பிரஜாபதியின் மகள் பாஞ்சஜன்யா- அவளை தக்ஷன் மணந்தார்.  ஹர்யஸ்வன் முதலான பிரஜைகள் பிறந்தனர்.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சீலம் உடையவர்கள். தந்தையின் சொல்படி மேற்கு திசை நோக்கிச் சென்றனர். சிந்து சமுத்திரங்கள் சேரும் இடத்தில் நாராயண ஸரஸ் எனும் குளம் அருகில் பல முனிவர்களும் சித்தர்களும் வசித்து வந்தனர்.  அந்த ஜலத்தை தொட்டவுடனே புத்துணர்ச்சி பெற்றவர்களாக ஆயினர். தர்மத்திலும் பரம ஹம்ஸ எனும் ஆன்மீக தேடலில் மனம் லயித்தது.  அந்த இடத்தில் தவம் செய்ய முனைந்தனர்.  தேவரிஷி நாரதர்  அவர்களைக் கண்டார்..  ஹர்யஸ்வா:! (ஹர்யஸ்வன் முதலானவர்கள்)  பிரஜைகளை உத்பத்தி செய்ய தவம் செய்ய முனைந்தீர்கள். நல்லது. ஆனால்  நீங்கள் இன்னும் உலகையே பார்க்கவில்லையே.  ஜீவ  ஆத்மா போன்ற தத்வங்களை அறியாமல், ஈஸ்வரனின் ஆதிக்கத்தில் தான் ராஜ்யங்கள், தேசங்கள் உருவாயின என்ற விவரங்கள் தெரியாமல், அறியாமையை விலக்கும் உபதேங்களைக் கேளாமல், ஹ்ருதய பிலத்தில் ஈஸ்வரனைக் காணாமல், பெண்களின் ஆகர்ஷணம்,  அந்த சபலத்திலிருந்து விடுபடாமல்,  இரு பக்கமும் ஓடும் நதி போல ஐந்தாக ஐந்தாக தத்வங்கள், தவிர சிருஷ்டியின்  மாயை சூழ்ந்துள்ள உடலைப் பற்றி அறிந்து கொள்ளாமல் நீங்கள் என்ன செய்யப்  போகிறிர்கள்? கால சக்கரம் கூரான ஆரங்களுடன் வேகமாக சுழலும் தன்மையுடையது.

நன்மை தீமை எதையும் அறியாமல் என்ன செய்வீர்கள் சொல்லி விட்டு போய் விட்டார்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: தந்தை வாக்கை நிறைவேற்றுவதாக எண்ணி ஊரை விட்டு வெளியேறிய போதும் என்ன செய்ய வேண்டும் எப்படி என்று எதுவும் அறியாத அந்த தக்ஷனின் புதல்வர்கள் நாரதரின் வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியாமல் யோசித்தனர்.  தங்களுக்குள்  விவாதித்தனர். 

பூ:- நிலம் பூமி, அனாதி – இந்த பதம் மனித சரீரம் நிலையற்றது என்று சொல்கிறாரா?   எப்படி சரீரம் உண்டாயிற்று என்று தெரிந்து கொள்ளாமல் மோக்ஷம் பற்றி யோசிக்கிறோம்.  அதையறியாமல் செய்யும் தவம் முதலியவை பலனற்றது.

ஒன்று தான் என்றார். சாக்ஷியாக இருப்பது   பகவான் ஒருவரே. அவர் சுதந்திரமானவர். அவரை அறியாமல் நாம் செய்யும் செயல்கள் பொருளற்றவை.

பில ஸ்வர்கம் என்றார்- பள்ளத்தில் உள்ள சுவர்கம். பாதாள சுவர்கம் அதிலிருந்து மீளவே முடியாது. நல்ல வினைப் பயனால் சுவர்கம் போகலாம் என்று எண்ணி யாக காரியங்கள் செய்பவர்கள், உண்மையில் பெறுவது என்ன? சுவர்க வாசம், வினைப் பயன் தீர்ந்த பின்  தன் வினைக்கேற்ப மனிதனோ, மற்றதோ ஒரு  பிறவி. இந்த பிறவிச் சுழலில் இருந்து விடுபடவே முடியாது. எனவே, அதை விட பிறவியைத் தீர்க்கும் ப்ரும்மவிதர்கள் என்ற ப்ரும்ம ஞானிகள் சொல்லும் சாஸ்வதமான நிலையை அடையத் தான் நாம் முயற்சிக்க வேண்டும்.

பெண் மோகம் பற்றிச் சொன்னார்.  பெண்களின் சங்கத்தால் சுகம், துக்கம் இரண்டும் உண்டு.  மோகத்தால் தன்னையிழக்காமல் இருக்கும் வரை நல்லது.  புத்தியை குண சம்பன்னமான பெண்ணாகச் சொன்னார். புத்தி நன்மையும் செய்யும். தவறான வழியையும் காட்டும்.  குணமில்லாத பெண் போல, அந்த புத்தியே தவறான சங்கத்தால் கெடும்.  புத்தியை சரியாக பயன்படுத்த தெரியாதவரை அந்த புத்தியால் என்ன பலன்?

ஸ்ருஷ்டி என்பது நதி சமுத்திரத்தை அடையும் போது இரு விதமான வேகம், ஒன்று நதியின் சமுத்திரத்தைஅடையும் வேகம், மற்றொன்று ஆழ் கடல் அந்த நீரை இழுக்கும் வேகம் –  இது போலத்தான் ஆத்மா உடலில் அலை பாயும் என்றார்.  புது யுகம் அல்லது புது படைப்பு எனும் சமயம், பழைய தத்வங்களை விலக்குவதும் புதியனவற்றைச் சேர்ப்பதுமான செயல் என்றார்.  அதைத் தான் மனிதனின் ஜனனமும் மரணமும் இருபக்கமும் பாயும் நதியாக சொன்னாரா?

இருபத்து ஐந்து தத்வங்கள் உடைய புருஷன் அத்புத தரிசனம் என்றார்.   இவை பகவானால் உண்டாக்கப் பட்டவையே. இவைகளால் பிரபஞ்சம்  உண்டாயிற்று பிறிவிகள் தோன்றின. அவரை நாம் எப்படி காண்போம். அத்புதம் என்கிறார். நம் ஆத்மாவிலேயே இருப்பவர், அவரை அறிய தன் ஆத்மாவை அவருக்கு சமர்ப்பித்து விடு என்கிறார்.  முக்தி தரும் என்று நினைத்து செய்வதை ஹரியை நினைத்தே செய், தன்னையே அறிந்து கொள் என்கிறார். “வேதை: சர்வைரஹமேவ வேத்ய:” கீதை.  கற்று அறிவதில் சாரபூதமான பரமாத்ம வஸ்து என்று அறிவதே பரமானந்தம்.

சாஸ்திரங்கள் தருவது ஐஸ்வர்யம், சுக ஜீவனத்துக்கானவை. சாஸ்திரங்கள் வழி காட்டுவன.  அவை தாய் போல ரக்ஷிக்கும்.   புராணங்கள் கதைகளாக ஞானம் பெறச் செய்கின்றன.  இவைகளை கற்றுத் தேர்ந்து தன் வழி நடப்பதும், அனுபவத்தால் அதன் சார பூதமான ஹம்ஸம் சாரமான பாலை மட்டும் பிரித்து எடுத்துக் கொள்வதைப் போல தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.

கால சக்கரம் பற்றிச் சொன்னார். காலம் தன் வழிச் செல்லும் மிகவும் சுதந்திரமானது, யாராலும் கட்டுபடுத்த முடியாது.  பன்னிரண்டு மாதங்கள், வருஷங்கள் என்பது அதனை அறியும் வழி அவ்வளவே.

சாஸ்திரங்கள் தந்தை போல ஆணையிடும். அதுவும் ஜீவனுக்கு எது நன்மை என்பதையே சொல்கிறது. அதை முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.

ராஜன்! அந்த தக்ஷ புதல்வர்கள்  தங்களுக்குள் விவாதித்து நிரந்தரமான தீர்வைத் தரும் வழி எது என்பதைப் பற்றி யோசித்தனர்.

நாரதரை ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று வினவினர்.  ஸ்ரீ ஹரியை  நினைத்து யோக மார்கத்தில் ப்ரும்மத்தை அறியலாம், என்று சொல்லி தான் உபாசிக்கும் நாராயண மந்திரத்தை உபதேசித்தார்.  பின் சப்த ப்ரும்மமாக  சங்கீதம் மூலம் ஆராதிக்கும் நாரதர் தன் வாத்யத்தை மீட்டிகொண்டு தன் வழி சென்றார்.

தக்ஷன் இதைகேட்டு மிக வருந்தினார்.  ப்ரஜா வ்ருத்தி வேண்டும் என்று என் புதல்வர்களிடம் சொல்லியிருந்தேன், இந்த நாரதர் உபதேசம் செய்து அவர்கள் மனதை மாற்றி விட்டாரே.   திரும்ப குடும்ப வாழ்க்கையில் அவர்கள் நாட்டம் செல்லாது. என் வம்சம் எப்படி வளரும்? ப்ரும்மா சமாதானப் படுத்தினார். திரும்பவும் பாஞ்சஜன்யா என்ற மனைவியிடம் ஸபலாஸ்வான் என்ற பெயரில், நிறைய  புதல்வர்களைப் பெற்றார்.  அவர்களும் தந்தையின் ஆணையை ஏற்று நாராயண ஸரஸ் என்ற தங்கள் முன் பிறந்தோர் சென்ற இடத்துக்கே சென்றனர்.  அவர்களும் அந்த பவித்ரமான நீரைத் தொட்டதுமே சாந்தமான குணமும் தங்கள் மன அழுக்கெல்லாம் விலகி பவித்ரமாக ஆகி விட்டதாகவும் உணர்ந்தனர்.  பர ப்ரும்மத்தை குறித்து தவம் செய்யலானார்கள்.  தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு சில மாதங்கள், வாயுவை உணவாகக் கொண்டு சில மாதங்கள், தவம் செய்தனர். நாராயண மந்திரத்தை ஜபித்தபடி-

 ओं नमो नारायणाय पुरुषाय महात्मने । विशुद्धसत्त्वधिष्ण्याय महाहंसाय धीमहिநாரதர்  திரும்பவும் அதே இடத்துக்கு வந்தார்.   தாக்ஷாயணர்களே! கேளுங்கள்.  உங்கள் சகோதர்களைத் தேடி வந்தீர்களா? சகோதரர்கள் தன் முன் பிறந்தோர்களை பின் பற்றி தர்மத்தை அறிந்து கொள்வதே சிறந்தது.  அவர்கள் தான் புண்ய பந்துக்கள்.   சொல்லிவிட்டு நாரதர் சென்று விட்டார்.

சபலாஸ்வர்கள் என்ற அந்த தக்ஷணின் புதல்வர்களும் தவம் செய்யலாயினர்.  முன் பிறந்தோர்களைப் போலவே ப்ரும்ம தத்வம் என்பதை அறிவது என்ற ஆன்மீக வழிலேயே சென்றனர்.  மேற்கு திசையில் சென்றவர்கள் அஸ்தமித்த பின் காண முடியாத சூரியன் போல தென் படாதவர்களாக மறைந்த பின் தக்ஷன் செய்வதறியாது தவித்தான்.   பழையபடி நாரதர் அவர்களுக்கு உபதேசம் செய்தார் என்றறிந்து மிக கோபம் கொண்டான்.  இந்த சமயம் நாட்டில் பல கெட்ட நிமித்தங்கள் தோன்றின.   

மிகுந்த கோபத்துடன் நாரதரைத் தேடிக் கண்டவர் உதடுகள் துடிக்க அஹோ அசாதோ! சாது வேஷம் போட்டு என் புதல்வர்களுக்கு, பிக்ஷு வாழ்க்கையை உயர்ந்ததாகச் சொல்லி கெடுத்து விட்டீர் என் புதல்வர்கள் எனக்கும் என் முன்னோர்களுக்கும் பித்ரு காரியங்களை செய்ய வேண்டியவர்கள், அவர்களைத் தடுத்து விட்டீர்கள் என்று குற்றம் சாட்டினான்.  இரக்கம் இல்லாதவர் நீங்கள், சிறு பிள்ளைகளை தவறாக தூண்டி கெடுத்து விட்டு ஸ்ரீஹரியின் அணுக்கத் தொண்டர்களுடன் திரிகிறீர். வெட்கம் இல்லயா?  அவருடைய புகழுக்கே இழுக்கு. சாதாரணமாக பாகவதர்கள் ஜீவன்களின்  நன்மைக்காக உபதேசிப்பார்கள். நீங்கள் எனக்கும் என் புதல்வர்களுக்கும் இடையில் பகையை கிளப்பி விட்டு என்ன அடைந்தீர்கள்?  உங்களைப் போல இருவரிடையே இருக்கும் பாசத்தை நல்லெண்னத்தைக் கெடுப்பவரை கண்டதில்லை.  என் புதல்வர்கள் என் வார்த்தையை மீறும்படி செய்து விட்டு உலகில் என்ன சாதிக்கப் போகிறீர்கள்.  குடும்பம் தன் மக்கள் என்று வாழும் க்ருஹஸ்தர்கள் நாங்கள்.  சாஸ்திர சம்மதமான கர்ம மார்கிகள். யாகம் முதலான கர்மங்களை செய்பவர். அமைதியாக எங்கள் வழியில் நல்லதையே செய்கிறோம். நீங்கள் செய்வது சாதுக்களாக, க்ருஹஸ்த தர்மத்தை பாலனம் செய்யும் என் போன்றோர்களுக்கு நன்மையைச் செய்யவில்லை.  சந்ததியை தடைபடாமல்  காக்கவே புதல்வர்களைப் பெறுகிறோம். அதைக் கெடுக்க வந்த மூடனே! உலகில் ஒரு இடத்திலும் உன் பாதங்கள் நிலைக்காமல் போகட்டும். சுற்றிக் கொண்டே இரு”  

ஸ்ரீ சுகர் சொன்னார்: நல்லது என்று தலை குனிந்து அந்த சாபத்தை நாரதர் ஏற்றுக் கொண்டார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், ஐந்தாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் )  ஸ்லோகங்கள்-44

 அத்யாயம்-6 

அதன் பின் தக்ஷ பிரஜாபதி ஸ்வயம்பூ சொன்னதன் பேரில் அசிக்னி என்பவளிடம் அறுபது பெண்களைப் பெற்றார்.  அவர்களும் தந்தையிடம் பாசத்துடன் இருந்தனர். பத்து பெண்களை  தர்ம தேவதைக்கும், பதிமூன்று  பெண்களை காஸ்யபருக்கும்,  சந்திரனுக்கு இருபத்து ஏழு பெண்களை,  க்ருத்திகா, ரோஹிணி என்ற தாரகைகள், பூத, ஆங்கிரஸ,க்ருஸாஸ்வ என்பவர்களுக்கு தலா இரண்டு இரண்டு பெண்கள், நான்கு பெண்களை தார்க்ஷ்யர் என்பவருக்கும் கொடுத்தார்.  இவர்கள் மூலம் உலகில் பலவிதமான பிறவிகள் தோன்றின என்பதால் விவரமாக சொல்கிறேன், கேள். 

தர்மன் – பாநு, லம்பா , ககுபு, ஜாமி, விஸ்வா,சாத்யா, மருத்வதீ, வசு, முஹூர்தா, சங்கல்பா

பானு மகன் தேவருஷபன், இந்த்ரஸேனன்;  லம்பாவின் புத்திரர்கள்- வித்யோதன், மேக கூட்டம் என்ற பொருளில் ஸ்தனயித்ன என்பவர்கள் (மின்னலும், இடியும்) ககுபா என்பவளின் மகன் சங்கடன், அவன் வழியில் கீகட்- சிறு பூச்சிகள், , அவன் மகன் உலகில் உள்ள அனைத்து துர்கம்-கிலம் என்பதன் அதிபதிகள்.  ஜாமியின் மகன் ஸ்வர்கன். அவன் மகன் நந்தி;  விஸ்வாவிடம் விஸ்வதேவன் என்பவன் அவனுக்கு சந்ததி இல்லை.  ஸ்ந்த்யா என்பவளின் மகன் சாத்யகணன் என்பவன், அவன் மகன் அர்த சித்தி;  மருத்வதி என்பவளுக்கு இருவர் மருத்வான், ஜயந்தன் என்போர். ஜயந்தன் உபேந்திரன் என்றும் சொல்லப் படுவான், பகவானின் அம்சம் உள்ளவன்.

முஹூர்தா என்ற பத்னியிடம் மௌஹர்திகா என்ற தேவ கணங்கள் பிறந்தன. இவைகள் தான் ஜீவன் களின் தங்கள் பிறந்த கால பலன் அளிப்பவர்கள்.  (பிறந்த சமயத்தை வைத்து அதன் அனுபங்கள் – ஜோதிடம்)

சங்கல்பா என்பவளிடம்- சங்கல்பம், காமன் இவள் மகன். ( மற்றொரு யுகத்தில்)

வசு என்பவளிடம் எட்டு புத்திரர்கள்- த்ரோண, ப்ராணன், த்ருவன், அர்கன், அக்னி, தோஷோ, வசு, மற்றும் விபாவசு.  த்ரோண அபிமதி என்ற மனைவியிடம், – ஹர்ஷ, சோக, பயம்  என்ற மூவர்.  (தரா என்ற மனைவி- (  யுகம் வேறு)   ப்ராண புத்திரர்கள்- ஊர்ஜஸ்வதி என்ற மனைவி, ஆயுள், புரோஜவன், ; த்ருவனுடைய மனைவி தரணி, பல புரங்கள் (நகரங்கள்)  ;  அர்கனுக்கு வாசனா என்ற மனைவி.  அக்னி மனைவி வசோர்தாரா த்ரவிணகர்கள் புதல்வர்கள்.  ஸ்கந்தன் க்ருத்திகா புத்ரன்.  விசாகா முதலானோர்.  தோஷன் என்பவன் மனைவி ஸர்வரீ புத்ர: சிசுமாரன் என்ற ஹரியின் அம்சமாக பிறந்தான்.  வசு என்பவனின் மனைவி ஆங்கிரசின் புத்ரி. ஆக்ருதீ,  விஸ்வகர்மா,  சாக்ஷுஸன் என்பவனிடம், மனுவும், மனுவிற்கு விஸ்வன், சாத்யன் என்ற புதல்வர்கள்; விபாவசு மனைவி உஷா,  வ்யுஷ்டன், ரோசிஷன், ஆதபன், பஞ்சயாமன் என்பவர்கள். இவர்களால் ஜீவன்கள் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

சரூபா பூதனின் மனைவி ருத்ர்களை கோடி கணக்காக பெற்றாள்.  ரைவதன், பவன்,பீமன், வாமன், உக்ரன், வ்ருஷாகபி என்பவர்கள் தவிர ருத்ரனின் அணுக்கத் தொண்டர்கள். (பார்ஷதர்கள்)

ஆங்கிரஸ ப்ரஜாபதியின் பத்னி ஸ்வதா.  அதர்வா மகன் வேதன் க்ருசாஸ்வோ, அர்சி என்பவளிடம் தூம்ரகேசம், திஷணா  என்பவளிடம் வேதசிரோ, தேவலம், வயுனம் மனு,

 தார்க்ஷ்யன் (மரீசி) இவருக்கு நான்கு மனைவிகள். மனைவி வினதா கத்ரூ, பதங்கீ, யாமினீ என்பவர்கள். பதங்கீ- பக்ஷிகளை, யாமினீ   பூச்சிகளை, சுபர்ணா கருடன்,  ( பகவானின் வாகனம்), கத்ரூ- நாகங்கள்.

க்ருத்திகா முதலான நக்ஷத்திரங்கள் சந்திரனின் மனைவிகள்.  தக்ஷனின் சாபத்தால் சந்ததி இல்லை.

கஸ்யபரின் மனைவிகள் லோக மாதா எனப்படுவர்.

திமி என்பவளிடம், நீர் வாழ் ஜீவன்கள்.   சரமா என்பவளிடம் நால்கால் புலி, பூனை போன்ற  மிருகங்கள் (நான்கு நகங்கள்)  ;  சுரபி என்பவளிடம் மகிஷம், பசு போன்றவை; தாம்ரா என்பவளிடம், கழுகு, க்ருத்ரம்; முனி என்பவளிடம் அப்சர கணங்கள்; தந்தசூ என்பவளிடம் சர்ப்பங்கள், க்ரோதவசா என்பவளிடம்  கந்தர்வர்கள், இலா என்பவளிடம் மரங்கள், எல்லா யாதுதானர்களும் சௌரஸா என்பவளிடம், அரிஷ்டா என்பவளிடம் கந்தர்வர்கள், காஷ்டா என்பவளிடம் வீட்டு மிருகங்களில், மகிஷம்,பசு தவிர மற்றவைகள்;  தனு என்பவளிடம் பலர். த்விமூர்தா, சம்பரன், அரிஷ்டன், ஹயக்ரீவன், விபாவசு, அயோமுகன், சங்குசிரன், ஸ்வர்பானு,(ராகு அல்ல) கபிலன், அருணன். முக்கியமானவர்கள்.   இவர்களில் வ்ருஷபர்வன் என்பவனின் மகள் சர்மிஷ்டா என்பவளை  நகுஷனின் மகன்  யயாதி மணந்தான். 

வைஸ்வானரனின் பெண்கள் நால்வர் அழகிகள். உபதானவி என்பவள் ஹிரண்யாக்ஷனின் மனைவியானாள். க்ருது என்பவள் ஹயக்ரீவனின், புலோமா என்பவளும் காலகா  என்பவளும், ப்ரும்ம புத்திரரான கஸ்யபரின் பத்னிகள் ஆனார்கள்:   பௌலோமா, காலகேயா: என்று அழைக்கப்பட்ட இவர்கள் புதல்வர்கள் யுத்தம் செய்வதில் நாட்டம் உடையவர்கள்.

விப்ரசித்தி என்பவர் சிம்ஹிகா என்பவளிடம் நூற்றி ஒன்று புதல்வர்களைப் பெற்றார்.  மூத்தவன் ராகு, கேது என்பவர்கள் க்ரஹங்கள் ஆனார்கள்.  

அதிதியின் வம்சம் பற்றிச் சொல்கிறேன்.  இதில் பகவான் நாராயணன்  தன்னுடைய அம்சமாக அவதரித்தார். விவஸ்வான், அர்யமா, பூஷா, த்வஷ்டா, சவிதா, பக:. தாதா, விதாதா, வருணன், மித்ரன், சக்ர, உருக்ரமன்  என்பவர். இந்த பன்னிருவரும் ஆதித்யர்கள் எனப்படுவர்.

விவஸ்வான் மனைவி சங்க்ஞா ஸ்ரார்த தேவன் என்ற மனுவையும்,  யமதேவனையும் யமுனா என்ற மகளையும் இரட்டையர்களாகப் பெற்றாள். இந்த சங்ஞா என்பவள் பின்னால் அஸ்வினீ என்பவளாக அஸ்வினி குமார்களைப் ஈன்றாள். சாயா என்பவள் சனைச்சரம் என்ற க்ரஹத்தையும்,  சாவர்ணி மனு, தபதீ என்ற கன்யா  இவர்களை ஈன்றாள். அர்யமா என்பவர், மனைவி மாத்ருகா என்பவளிடம், கர்ம சீலர்களான புல்வர்களைப் பெற்றார்.  இதன் பின் மனித இனம் ப்ரும்மாவால் படைக்கப் பட்டது.            

பூஷனுக்கு சந்ததி இல்லை.  தக்ஷ யக்ஞத்தில் பல் உடைந்தவர் இவர் தான்.  த்வஷ்டாவின் மனைவி தைத்யர்களின் சகோதரியான ரசனா. இவர்கள் மகன் விஸ்வரூபன்.  இந்திரன் ஒருமுறை தேவ குரு ப்ருஹஸ்பதியை அவமதித்ததால் அவர் விலகிய பொழுது தேவர்கள் சேர்ந்து இந்த விஸ்வரூபனை இந்திரனாக நியமித்தனர்.   தைத்யர்களிடம் பகை இருந்தாலும் சகோதரி, அவள் மகன் என்பதால். 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், ஐந்தாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் )  ஸ்லோகங்கள்-45

அத்யாயம்-7

பரீக்ஷித் அரசன் வினவினான்:  ஆசார்யர் ஏன் தேவர்களை விட்டு விலகினார். சிஷ்யர்களை விட்டு குரு விலகுவது என்பது நியாயமாக இல்லையே? சொல்லுங்கள்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: இந்திரன் மூவுலகிலும் ஐஸ்வர்யம் பெற்று மகோன்னதமாக இருந்த சமயம்.   தேவர்கள், சித்த சாரணர்கள் என்று அனைவரும் அவனை போற்றி புகழ்ந்தனர். வெண் சாமரமும் குடையும் மற்றும் சாமரங்கள் என்று அரச மரியாதைகளுடன் பௌலோமி என்ற மனைவியுடன் மகிழ்ந்து அமர்ந்திருந்த சமயம் தேவ குரு சபையில் நுழைந்தார். அவரைக் கண்டதும் காணாதது போல எழுந்திருக்கவோ, வணங்கவோ இல்லை. அவர் முனிகளுள் சிறந்தவர். வாசஸ்பதி, நல் வாக்கு உடையவர் என்று புகழப் படுபவர்.  தேவர்கள் அசுரர்கள் அனைவருமே அவரிடம் மரியாதையாக நடந்து கொள்வர்.  கண்ணால் பார்த்த பின்னும், அவர் வந்ததைக் கண்டு கொள்ளவில்லை என்பதை அவர் மரியாதைக் குறைவாக எடுத்துக் கொண்டார்.  எதுவும் பேசவில்லை. மௌனமாக தன் வீட்டிற்கு திரும்பி விட்டார்.  

 அதன் பின் இந்திரனுக்கு உறைத்தது.  சபையிலேயே தன்னையே நொந்து கொண்டான்.  அஹோ! தப்பு செய்து விட்டேனே.  அரச  சபையில் குருவை அவமதித்து விட்டேனே  வீட்டுக்கு வந்த லக்ஷ்மியை விரட்டியது போல தர்மத்தை மறந்தவனாக,  குருவை வரவேற்று உபசரிப்பது என் கடமையாக இருக்க, காணாதது போல் இருந்து விட்டேன்.   தவறு என்று அறிந்து செய்பவன், பெரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப் படும் கூழாங்கற்கள் போல வலிமையற்றவன் ஆவான்.  எனவே, ஆசார்யரை இப்பொழுதே சென்று  அவர் சரணங்களில் தலை பட வணங்கி மன்னிப்பு கேட்கிறேன் என்று கிளம்பினான்.  ஆனால் அவர் தன் வீட்டிலும் இல்லை. எங்கு சென்றார் என்பதை யாரும் அறியவுமில்லை.  அத்யாத்ம மாயை என்ற வழியில் அவர் தன்னை கண்களுக்கு புலனாகாதவராக மாற்றிக் கொண்டு விட்டார்.  இதனால் மேலும் அதிகமாக இந்திரன் மனம் கலங்கினான்.  தேவர்கள் அனைவருமாக என்ன செய்வது என்று யோசித்தனர்.

இதையறிந்த அசுரர்கள்  குருவான சுக்ராசாரியரின் அனுமதி பெற்று இது தான் சமயம் என்று படையெடுத்து வந்தனர்.   அவர்களின் நுண்ணிய அஸ்திரங்களால் அடிபட்டு கை கால்கள் முறிந்தவர்களாக  ப்ரும்மாவை சரணடைந்தனர்.  அவர்களின் துன்பத்தை சகிக்க முடியாதவராக, ப்ரும்மா சமாதானப் படுத்தி, விவரங்களை கேட்டறிந்தார். என்ன காரியம் செய்தீர்கள்? ப்ரும்ம நிஷ்டரான உங்கள் குரு ப்ருஹஸ்பதி சாந்தமானவர்.  அவரை அவமதிக்க காரணம் ஐஸ்வர்யத்தால் வந்த மதம் தவிர வேறு என்ன இருக்க முடியும்?  வெளியிலிருந்து உங்களைத் தாக்க காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இதுவே சரியான சமயம்.   இந்திரனே, அசுரர்கள் முதலில் ஆசார்யரான சுக்ரரிடம் அனுமதி பெற்று தாக்கி இருக்கிறார்கள். ப்ருகு போன்றவர்கள் மந்த்ர சித்தி அடைந்தவர்கள்,  இவர்களை நானும் வணங்குகிறேன். அதனால் தற்சமயம் செய்ய வேண்டியது என்ன பார்ப்போம். விஸ்வரூபன் தவம் செய்து பலம் பெற்றவன். த்வஷ்டாவின் மகன்.  அவன் அசுரன் மகனே என்று யோசிக்காதே.  வெகுமதிகள் கொடுத்தும் மரியாதைகள் செய்தும் வேண்டினால் மறுக்க மாட்டான்.

அவர்களும் அவ்வாறே விஸ்வகர்மாவை வணங்கி வேண்டினர். உங்களின் அதிதியாக வந்துள்ளோம்.  புதல்வர்களுக்கு பித்ருக்களை பூஜிப்பது முக்கியம். அதே அளவு ஆசார்யனையும், குருவையும் பூஜிக்க வேண்டும்.  பிதாவை ப்ரஜாபதியாக, சகோதரனை மருத்பதியாக, தாயை பூ மாதாவாக, சகோதரியை தயையே உருவானவளாக, அதிதியாக வந்தவனை தர்ம ரூபனாக  காண வேண்டும். அனைத்து உயிரினங்களும் பகவானின் அம்சங்களே.   நாங்கள் தற்சமயம் மிகவும் சங்கடத்தில் இருக்கிறோம்.  உறவினர்களான எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று பிரார்த்தித்தனர்.  உங்களை  எங்கள் ஆசார்யனாக ஏற்றுக் கொள்கிறோம்.   ப்ரும்ம நிஷ்டரான நீங்கள் எங்களை வழி நடத்தக் கூடிய தகுதியுடையவர், எங்கள் குருவாக வந்து ஆசிர்வதிக்க வேண்டும் என்று பவ்யமாக வேண்டினர்.  வயதில் சிறியவன் ஆயினும் அறிவிலும் அனுபவத்திலும் சிறந்தவன்.  வயது மட்டும் மூத்தவனாக்குவதில்லை.  

ரிஷி சொன்னார்:  இவ்வாறு வேண்டிக் கொண்டதைக் கேட்டு, விஸ்வரூபன்  யோசித்து பதில் சொன்னார்.  இந்த பதவியை ஏற்பதால் என் தவ பலன் குறையும் என்பது ஒரு பக்கம் இருக்க,  தர்ம சீலம் அறிந்த லோகேசன் என்ற பதவியில் இருப்பவர்,  சொல்வதால் ஏற்றுக் கொள்கிறேன்.   வேதம் அறிந்தவர்கள் புரோஹிதம் என்ற இந்த பதவியை உயர்வாக எண்ணுவதில்லை.  இதை வயலில் வேலை செய்பவர்களுக்கு உதிர்ந்த தானிய மணிகளை கொடுப்பது போல சொல்வார்கள்.  ஆயினும் பெரியவர்கள், நீங்கள் வேண்டிக் கொண்டதால் ஏற்கிறேன்.   மனப் பூர்வமாக என் கடமையைச் செய்வேன் என்று வாக்களிக்கிறேன்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: விஸ்வரூபன் தேவ குருவாக இருக்க சம்மதித்து மிகவும் நேர்மையாக தன் பதவியை நிர்வகித்தான்.  இதுவரை சுக்ராசார்யருடைய மாணவனாக இருந்து அறிந்த வித்தைகள், அவரிடம் கற்ற  நாராயண கவசம் இவற்றை மகேந்திரனுக்கு கொடுத்தான்.  மிகவும் அரியதான இந்த நாராயண கவசத்தை அடைந்த இந்திரன் அசுர படையை வென்றான்.  இழந்த தன் செல்வத்தை அடைந்தான்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், ஏழாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-40

அத்யாயம்-8

அரசன் நாராயண கவசம் பற்றி விவரமாக சொல்ல வேண்டினான். இதனால் இந்திரன் தான் இழந்த செல்வத்தைப் பெற்றான்  என்று சொன்னீர்கள். அவன் சைன்யங்கள், வாகனங்கள் கூட அவனிடம் வந்து சேர்ந்தன, விளையாட்டாக போரில் வெற்றி பெற்று மூவுலக சாம்ராஜ்யத்தை அடைந்தான் என்று கேட்டேன்.  அந்த நாராயண கவசத்தை எனக்கும் உபதேசியுங்கள்.  ஒருவருக்கொருவர் தாயாதிகளாக (பங்காளிகள்) சண்டையிட்டுக் கொண்டவர்கள் – இந்த நாராயண கவசம் மூலம் இந்திரன் தன் பங்காளிகளையும் வென்றான் என்பது ஆச்சர்யம், என்றான். 

ஸ்ரீ சுகர் சொன்னார்: புரோஹிதன் என்ற பதவியை ஏற்றுக் கொண்ட த்வஷ்டாவின் மகனான விஸ்வரூபன் தான் ஏற்றுக் கொண்ட பதவி பிரமாணத்திற்கு ஏற்ப பங்காளியானாலும் இந்திரனுக்கு நாராயண கவசம் என்ற மந்திரத்தை உபதேசித்தான். அதைச் சொல்கிறேன், கேள். 

விஸ்வரூபன் சொன்னார்: கைகால்களை சுத்தமாக கழுவிக் கொண்டு, ஆசமனம் செய்து பவித்திரனாக கிழக்கு நோக்கி அமர்ந்து தன் கை,உடல், வாய் இவைகளை மந்திரங்களால், தொட்டு, தூய்மையாகி,  வாக்கினால்  நாராயண மயமான இந்த வர்மம் என்பதை ந்யாசம் என்பதை செய்து கொள்ள வேண்டும்.  அஷ்டாக்ஷரம்  என்பதை ப்ரணவத்துடன்  ஒவ்வொரு அக்ஷரமாகச் சொல்லி வலது கட்டை விரலில் தொடங்கி ஜபம் செய்ய வேண்டும்.  ஓம் நமோ நாராயணாய – என்பது மந்திரம்.  பன்னிரண்டு அக்ஷரம் உள்ள, ஓம் நமோ பகவதே வாசுதேவாய- என்ற மந்திரத்தால்  ப்ரணவத்துடன் கர ந்யாசம் என்பதையும், ஹ்ருத்யத்தில் ஓங்காரம், என்ற ஹ்ருத்யாதி ந்யாசம் என்பதையும் செய்து கொள்ள வேண்டும்.  ஓம் விஷ்ணவே நம என்ற மந்திரம்.  ஆறு சக்திகளுடன் ஆத்மாவை தியானம் செய்து வித்யா, தவம், தேஜோ  மயமான இந்த மந்திரத்தை சொல்லி ஜபம் செய்ய வேண்டும்.

தன்னையே  – ஆறு சக்திகள் கொண்ட தன்  ஆத்மாவையே  –  வித்யாவித்யா, தேஜஸ், தபோ மூர்த்தி என்று பரமாத்மாவை தியானம் செய்து மந்திர ஜபம் செய்ய வேண்டும். 

ओं हरिर्विदध्यान्मम सर्वरक्षां न्यस्ताङ्घ्रिपद्मः पतगेन्द्रपृष्ठे ।  கருட வகனத்தில் பகவான் காக்கட்டும்.

दरारिचर्मासिगदेषुचाप- पाशान् दधानोऽष्टगुणोऽष्टबाहुः ॥ १२॥ வாள், முதலிய எட்டு ஆயுதங்களுடன், எட்டு புஜங்களுடன் இருப்பவர்.

जलेषु मां रक्षतु मत्स्यमूर्ति-र्यादोगणेभ्यो वरुणस्य पाशात् । நீரில் மத்ஸ்த்ய -மீனாகி வந்து வருணனின் பாசத்திலிருந்தும், கடல் வாழ் பிராணிகளிடம் இருந்தும் காக்கட்டும்.

स्थलेषु मायावटुवामनोऽव्या-त्त्रिविक्रमः खेऽवतु विश्वरूपः ॥ १३॥ பூமீயில் வாமனனாக வந்து த்ரிவிக்ரமனாக

दुर्गेष्वटव्याजिमुखादिषु प्रभुः पायान्नृसिंहोऽसुरयूथपारिः । – வளர்ந்த பகவான் காக்கட்டும். வானத்தில்

विमुञ्चतो यस्य महाट्टहासं दिशो विनेदुर्न्यपतंश्च गर्भाः ॥ १४॥ விஸ்வரூபனும்,  கோட்டைகளில், காடுகளில்

அட்டஹாஸமாக கர்ஜனை செய்த நரசிம்மனாக, காக்கட்டும்.

रामोऽद्रिकूटेष्वथ विप्रवासे सलक्ष्मणोऽव्याद्भरताग्रजोऽस्मान् ॥ १५॥ மலை குகைகளில், விட்டிற்கு வெளியே பிரயாணம் செய்யும் சமயம் லக்ஷ்மணனோடு பரதனின் முன் பிறந்த ஸ்ரீ ராமன் காக்கட்டும்.

रक्षत्वसौ माध्वनि यज्ञकल्पःस्वदंष्ट्रयोन्नीतधरो वराहः ।-  அத்வானமான இடங்களில் நீண்ட பற்களுடன் வராக மூர்த்தி காக்கட்டும்.

मामुग्रधर्मादखिलात्प्रमादा-न्नारायणः पातु नरश्च हासात् ।  கடுமையான தர்மானுஷ்டானங்களில் ஸ்ரீமன் நாராயணனன், நரன் என்பவர்களாக காக்கட்டும்.

दत्तस्त्वयोगादथ योगनाथः-पायाद्गुणेशः कपिलः कर्मबन्धात् ॥ १६॥ தத்தாசார்யன், தவறான சகவாசம் வராமல் காக்கட்டும். கபிலாவதார பகவான் கர்ம பந்தங்களை விலக்கட்டும்.

सनत्कुमारोऽवतु कामदेवा-द्धयशीर्षा मां पथि देवहेलनात् । சனத் குமாரன் காம தேவனிடமிருந்தும்,

ஹயக்ரீவன் அவமானம்  தலை குனிவுகள் வரமலும் காக்கட்டும்.

देवर्षिवर्यः पुरुषार्चनान्तरा-त्कूर्मो हरिर्मां निरयादशेषात् ॥ १७॥ உயர்ந்த ஞானிகளான ரிஷிகள் மாற்றுமதங்களிலிருந்து காக்கட்டும். கூர்மமாக வந்த பகவான் ஹரி,  செல்வமோ, மற்றதோ இழப்புகளில் இருந்து காக்கட்டும்.

धन्वन्तरिर्भगवान् पात्वपथ्या-द्द्वन्द्वाद्भयादृषभो निर्जितात्मा । பகவான் தன்வந்திரி அபத்யங்கள் – ஒவ்வாத உணவுகள் – உடலைத் தாக்காமல் காக்கட்டும்.

यज्ञश्च लोकादवताज्जनान्ता-द्बलो गणात्क्रोधवशादहीन्द्रः ॥ १८॥ வேற்று ஜனங்கள் யாக கர்மாக்களில் நம்பிக்கை இல்லாதவர்களிடமிருந்து ய்க்ஞ வராக ரூபியான பகவான் காக்கட்டும். 

द्वैपायनो भगवानप्रबोधा-द्बुद्धस्तु पाखण्डगणप्रमादात् । வியாச பகவான் அறியாமையை விலக்கட்டும்.  புத்தர் வீண் விவாதம் செய்யும் ப்ரமையான கொள்கைகளில் இருந்து காக்கட்டும்.

कल्किः कलेः कालमलात्प्रपातु – धर्मावनायोरुकृतावतारः ॥ १९॥ கல்கி அவதாரத்தில் கலியின் காலத்தால் வரும் அசம்பாவிதங்களைத் தடுக்கட்டும். இந்த அவதாரம் தர்மத்தை நிலை நாட்டவே என்பதால்.

मां केशवो गदया प्रातरव्या-   கதையுடன்  கேசவனாக என்னை விடியலில், காக்கட்டும்

द्गोविन्द आसङ्गवमात्तवेणुः ।- கோவிந்தனாக வேணுவை ஏந்தி மாலை வரை காக்கட்டும்.

नारायणः प्राह्ण उदात्तशक्ति- நாராயணனாக பிராணனில் சக்தியை கூட்டட்டும்.

र्मध्यन्दिने विष्णुररीन्द्रपाणिः ॥ २०॥– மத்யான வேளையில் விஷ்ணுவாக அரிந்த்ரன்- வாளை ஏந்தியவன்

देवोऽपराह्णे मधुहोग्रधन्वा – பிற் பகலில் மதுவை வென்ற தேவன், உக்ரமான தண்டத்தால் காக்கட்டும்.

सायं त्रिधामावतु माधवो माम् । மாலையில் த்ரிதாமன் – மாதவன் காக்கட்டும்.

दोषे हृषीकेश उतार्धरात्रे -निशीथ एकोऽवतु पद्मनाभः ॥ २१॥ தோஷங்கள் தாக்காமல் இரவு ஆரம்பத்தில் ஹ்ருஷீகேசன் காக்கட்டும்- நடு  இரவில் பத்மனாபனாக காக்கட்டும்.

श्रीवत्सधामापररात्र ईशः- பின் இரவில்  ஒளிர்விடும் ஸ்ரீவத்ஸம் அணிந்த  ஸ்ரீவத்ஸ தாமன், ஈசன் காக்கட்டும்

प्रत्यूष ईशोऽसिधरो जनार्दनः । இளம் காலையில் கையில் வாளேந்திய ஈசன், ஜனார்தனன் காக்கட்டும்

दामोदरोऽव्यादनुसन्ध्यं प्रभाते – இரு சந்த்யா காலங்களில் தாமோதரன் காக்கட்டும்.विश्वेश्वरो भगवान् कालमूर्तिः ॥ २२॥விடியலில் கால மூர்த்தியான பகவான் விஸ்வேஸ்வரன் காக்கட்டும்.

चक्रं युगान्तानलतिग्मनेमि -भ्रमत्समन्ताद्भगवत्प्रयुक्तम् । யுகாந்த காலங்களில் சுழற்றும் அவர் கை சக்ரம்

दन्दग्धि दन्दग्ध्यरिसैन्यमाशु- எதிரி சைன்யங்களை பொசுக்கி அழிக்கட்டும்.

कक्षं यथा वातसखो हुताशः ॥ २३॥ வீடுகளை வாயு உதவியுடன் நெருப்பு அழிப்பது போல.

गदेऽशनिस्पर्शनविस्फुलिङ्गे- கதையை வீசும் போது தீப்பொறிகள் பறக்குமே, அது போல.

निष्पिण्ढि निष्पिण्ढ्यजितप्रियासि ।-  மண்ணை  மிதித்து பிசைவது போல கூழாக்கி விடு. உன்னை யாரால் ஜயிக்க முடியும்?

कूष्माण्डवैनायकयक्षरक्षो-  भूतग्रहांश्चूर्णय चूर्णयारीन् ॥ २४॥- கூஷ்மாண்டம், வைனாயக என்ற யாகங்கள், இவைகளை ரக்ஷிப்பவன் நீ, இவைகளைத் தாக்கும் எதிரிகளை பூத க்ரஹங்களை பொடிப் பொடியாக்கி விடு.

त्वं यातुधानप्रमथप्रेतमातृ-पिशाचविप्रग्रहघोरदृष्टीन् ।

दरेन्द्र विद्रावय कृष्णपूरितो भीमस्वनोऽरेर्हृदयानि कम्पयन् ॥ २५॥ யாது தானர்கள், ப்ரமத்த, ப்ரேத, மாத்ரூ, பிசாச, விப்ரக்ரஹ-ப்ராம்மணனை  தாக்குபவன், காணத் தகாத கொடிய உருவம் உடையவன் இவர்களை, தரேந்திர,  வாளேந்திய க்ருஷ்ணனே, பெரும் நாதத்தால் எதிரிகளின் இதயத்தை துளைத்து ஆட்டம் காணச் செய்.

त्वं तिग्मधारासिवरारिसैन्य- मीशप्रयुक्तो मम छिन्धि छिन्धि । ஈசனே! கூர்மையான உன் வாளினால் என் எதிரிகளை தூள் தூளாக்கு   

चक्षूंषि चर्मञ्छतचन्द्र छादय –  द्विषामघोनां हर पापचक्षुषाम् ॥ २६॥ – கண்களின் மேல் இமையாக பாதுகாக்கும் சந்திரனே! என்  எதிரிகள் கண்ணில்  படாமல் முழுவதுமாக மூடி வைத்துக் கொள்.

यन्नो भयं ग्रहेभ्योऽभूत्केतुभ्यो नृभ्य एव च ।सरीसृपेभ्यो दंष्ट्रिभ्यो भूतेभ्योंऽहोभ्य एव वा ॥ २७॥ எங்களுக்கு யாரிடமெல்லாம் பயமோ, க்ரஹங்கள், பூதங்கள், கேது (கொடிகள்) அரசர்கள், ஊர்வன, பற்களால் கடிக்கக் கூடிய பிராணிகள், பெரிய நாகங்கள் இவைகளிடமிருந்தும்

सर्वाण्येतानि भगवन् नामरूपास्त्रकीर्तनात् ।प्रयान्तु सङ्क्षयं सद्यो ये नः श्रेयःप्रतीपकाः ॥ २८॥ இவைகளின் பெயரைச் சொன்னாலே பயம். எங்கள் நலனை கெடுக்கும் எதுவானாலும்- அவைகளிடமிருந்து காப்பாய்.

गरुडो भगवान् स्तोत्रस्तोभश्छन्दोमयः प्रभुः ।रक्षत्वशेषकृच्छ्रेभ्यो विष्वक्सेनः स्वनामभिः ॥ २९॥ கருடன் மஹான். வேத, சாஸ்திரங்கள், ஸ்தோத்ரங்கள் இவைகளே உருவானவன். அவர் எங்களை காக்கட்டும். விஷ்வக்சேனர், தன் பெயரை உச்சரித்தாலே காப்பவர், அவர் காக்கட்டும்.

सर्वापद्भ्यो हरेर्नामरूपयानायुधानि नः ।बुद्धीन्द्रियमनःप्राणान् पान्तु पार्षदभूषणाः ॥ ३०॥ ஹரி நாமமே ஆபரணமாக உடைய உன் வாகனங்கள், ஆயுதங்கள், எல்லா ஆபத்துக்களிலிருந்தும் எங்களைக் காக்கட்டும். உன் அணுக்கத் தொண்டர்கள் எங்கள் புத்தி, இந்திரிய , மனம், ப்ராணன் இவைகளைக் காக்கட்டும்.

यथा हि भगवानेव वस्तुतः सदसच्च यत् ।सत्येनानेन नः सर्वे यान्तु नाशमुपद्रवाः ॥ ३१॥ அனைத்து நல்லதும், நல்லது அல்லாதவைகள் எல்லாமே பகவானே தான் என்பது சத்யம்.  ஆகவே உபத்ரவம் செய்யும் அனைத்தும் தானாகவே விலகிச் செல்லட்டும்.

यथैकात्म्यानुभावानां विकल्परहितः स्वयम् ।भूषणायुधलिङ्गाख्या धत्ते शक्तीः स्वमायया ॥ ३२॥ ஏகாத்ம்யபாவம்- ஆத்மா பரமாத்மா என்ற இவைகளின் நிலைப் பாட்டை தெரிந்து கொண்ட பெரியவர்களிடம்  தானே விகல்பமின்றி தன் பூஷணங்கள், ஆயுதங்கள், உருவங்கள் மூலம் தன் மாயையால்  சக்தியை அளிக்கிறாய். 

तेनैव सत्यमानेन सर्वज्ञो भगवान् हरिः ।पातु सर्वैः स्वरूपैर्नः सदा सर्वत्र सर्वगः ॥ ३३॥ அதனால் தான் உன்னை சர்வக்ஞன், எல்லாம் அறிந்தவன், பகவான் ஹரி: என்பர்.   எங்கும் நிறைந்த உன் ஸ்வரூபங்கள் எங்களை எப்பொழுதும் எல்லா இடங்களிலும், காக்கட்டும்.

विदिक्षु दिक्षूर्ध्वमधः समन्ता-दन्तबर्हिर्भगवान् नारसिंहः ।

प्रहापयँल्लोकभयं स्वनेन स्वतेजसा ग्रस्तसमस्ततेजाः ॥ ३४॥ எப்படி பகவான் நரசிம்ஹாவதாரத்தில், திசைகள் அதிரும் படி, அட்டஹாசம் செய்தாரோ, அந்த த்வனி காக்கட்டும். அந்த சமயம் வெளியில் நீண்டு தெரிந்த பெரிய பற்கள், காக்கட்டும். அதைக் கண்டு அனைவருக்கும் தோன்றிய பயம் காக்கட்டும். உலகம் முழுவதும் பரவிய அவரது தேஜஸ் காக்கட்டும்.

 

இந்திரனே!, இது நாராயண கவசம் என்ற மந்திரம். இதை ஜபித்து பலம் பெறுவாய். அசுர படைகளை ஜயிப்பாய்.  இதை ஜபித்து சித்தி அடைந்தவர்கள், கண்களால் ஒருவரைப் பர்த்தாலும், சரீரம் பட்டாலும் அவர் முக்தியடைவார்.  இந்த வித்யையை அறிந்த பின் எதிலும் பயம் தோன்றாது.  யோக தாரணையால் தானே தன் சரீரத்தை விடும் அளவு சக்தி பெறுவர்.

இந்த வித்தையை முன்பொரு காலத்தில் கௌசிகரான ஒரு முனிவர் இவ்வாறு தன் தேகத்தியாகம் செய்வதை சித்ர ரதர் என்பவர், தன் மனைவி மார்களுடன் ஆகாயத்தில் சென்று கொண்டிருந்தவர், கண்டார்.  திடுக்கிட்டு விமானத்துடன் பூமியில் விழுந்து விட்டார்.  அதன் பின் அங்கிருந்த மாணவர்கள் சொல்லி தெரிந்துகொண்டு, அந்த ரிஷியின் அஸ்தியை மரியாதையுடன் சரஸ்வதி நதியில் கரைத்து விட்டு தன் இருப்பிடம் சென்றார்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: இதை நன்றாக கற்று, ஜபித்து பலன் அடைவீர்களாக.  இதைக் கற்றவர்களையே  பயம் தெளிய நமஸ்கரிப்பார்கள்.

சதக்ரது என்ற இந்திரன் இந்த மந்திரத்தைக் கற்றுக் கொண்டு யுத்தத்தில் அசுர்களை ஜயித்து மூவுலக சாம்ராஜ்யத்தை திரும்ப பெற்றான்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், ஏழாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-40

 

அத்யாயம்-9

ஸ்ரீ சுகர் சொன்னார்: விஸ்வரூபனுக்கு மூன்று தலைகள் இருந்தன என்பர்.   சோமபீதம், சுராபீதம், அன்னத்தை சாப்பிடும் அன்னாதம் என்பன.   யாகங்களில் இந்த்ராய இதம் – இது இந்திரனுக்கு என்பது போலவே, அசுர்களுக்கும் யாக பலன் கிடைக்குமாறு செய்து வந்தான்.  தாமதமாக இதையறிந்த தேவர்களும் பித்ருக்களும்  கவலையடைந்தனர்.   விஸ்வரூபன்  யஜமானனாக யாகம் செய்யும் சமயம் அவன் தன் தாய் வழி மாமன் போன்ற உறவினர்களுக்கு செய்வதை தடுக்கவும் இயலாது என்பதால் பயந்தனர்.   தேவர்களுக்கு அவமானம், தர்மத்தை மீறிய செயல் என்று தேவராஜன் இந்திரன் அவன் தலைகளை வெட்டி விட்டான்.  சோம பீதம் என்ற தலை கபிஞ்சலம் என்ற பக்ஷி ஆயிற்று.  சுராபீதம் என்ற தலை கலவிங்க என்ற பக்ஷி யாகவும், அன்னதம் என்ற தலை தித்திரி என்ற பறவையாகவும் ஆயின.  இந்த செயலால் இந்திரன் ப்ரும்மஹத்தி என்ற தோஷத்தையடைந்தான்.  ஓராண்டுகாலம் ஆன பின் தன்னை சுத்தப் படுத்திக் கொள்ள அந்த தோஷத்தை நான்கு பாகமாக நால்வருக்கு கொடுத்து விட்டான்.   பூமிக்கு தோஷம் உவர் நிலமாக ஆகும். அதற்கு பரிகாரமாக வெட்டினாலும் பள்ளம் நிரம்பும் பூமி சமமாக ஆகும் தன்மையை வரமாக அளித்தான்.  மரங்களுக்கு  வெட்டுப்பட்ட இடங்களில் பால் வடிவது  தோஷம், வெட்டினாலும் வளரும் தன்மையை வரம். பெண்களிடம் தோஷம் மாதவிலக்காக தோன்றுவது தோஷத்தின் பலன்,  கர்பம் தரித்திருக்கும் காலத்திலும் தாம்பத்யம் தடைபடாமல் இருப்பது வரமாகவும், கடலில் நுரை தோஷத்தின் பலன்,  அருவிகள் மூலம் இடைவிடாது நீர் வரவு கடலுக்கு வரம். 

தன் மகனை இந்திரன் கொன்றதை பொறுக்க மாட்டாமல் விஸ்வரூபனுடைய தந்தை த்வஷ்டா இந்திரசத்ரோ! வர்தஸ்வ என்று தன் மகனை உயிர்ப்பித்தார். கோரமான உருவத்துடன் நிமிஷத்திற்கு நிமிஷம் வளர்ந்து மலை போல நின்ற அந்த அசுரன், மூன்று தலைகளையும் சூலத்தில் ஏந்திக் கொண்டு, நடனமாடினான்.   க்ருதாந்தன் யுக முடிவில் ஆடுவது போல.  தீ பிரகாசமாக ஜ்வாலை மலையளவு வளர்ந்தாற்போல வளர்ந்தான். சந்த்யா கால வானம் போல உடல் வர்ணம்   புடமிட்ட தாம்ரம் போல கேசமும், மீசையும்,  நடுப்பகல் சூரியன் தகிப்பது போல் சிவந்த கண்கள், பூமியையே புரட்டிப் போடுவது போன்ற நடை,  கம்பீரமான  முகத்தால் வானத்தையே வளைத்து வாயில் போட்டுக் கொண்டும்,  க்ரஹ நக்ஷத்திரங்களை நாக்காலேயே நக்கியும், மூவுலகையும்  வாயிலிட்டு சுவைத்தும் , அடிக்கடி வாயால் பயங்கரமாக எக்காளமிட்டபடியும்  திரிந்தான்.  உலகில் உயிரினங்கள் நடுங்கி இலக்கின்றி ஓடின.  த்வஷ்டாவின் மகன் அவனை விருத்திரன் என்றனர்.  ஒரு நிலையில் அவன் தவிர உலகில் எதுவுமே மீதி இராது என்பது போல பயந்தனர்.  பயங்கரமான உருவம் நடுங்கச் செய்தது.  கொல்வதற்காக, கூட்டம் கூட்டமாக திவ்யாஸ்திரங்களை எடுத்துக் கொண்டு சக்தியுள்ள ரிஷிகளும் மற்றவர்களும் முயன்றனர். எதற்கும் பலனில்லாமல் போகவே பகவானை சரணடைந்தனர். 

தேவர்கள் துதி செய்தனர்:  இவன் அந்தகனே தானோ என்று பயப்படுகிறோம்.  வானம், வாயு மண்டலம், அக்னி, பூமி, நீர் அனைத்தையும் தன் வசம் ஆக்கிக் கொண்டு விட்டான்,  எங்களால் இவனை ஜயிக்க முடியாது.  அதனால் பகவானே சரணம்.   பரிபூர்ண காமனாக எதையும் எதிபார்க்காதவனாக, மிகவும் சாந்தமாக இருப்பவனை ஆசை காட்டி தன் வசப் படுத்த வழியில்லை.  எதிர்த்து போரிடுவது குட்டி நாய் தன் வாலால் சமுத்திரத்தை ஆழம் பார்ப்பது போலத் தான்.  பகவானே, நீங்கள், பல்லின் நுனியில் பூமியைத் படகாக்கி பிரளய காலத்தில் காத்தவர்.   மஹா மீனமாக வந்து அண்டியவர்களை காத்தீர்கள். தற்சமயம் அதே நிலையில் த்வஷ்டாவின் மகனிடம் பயந்து நடுங்குகிறோம்.  ப்ரளய காலத்தில் பயங்கரமான அலைகள்  முட்டி மோதின. அதன் வேகத்தில் ஸ்வயம்பூ  தான் அமர்ந்திருந்த பத்மம் ஆட, விழப் பார்த்தார்.  அந்த சமயம் பகவானே, நீங்கள் தான் காப்பற்றினீர்கள். அதே கருணையோடு தற்சமயம் எங்களையும் காக்க வர வேணும்.  நீங்கள் தான் எங்களை படைத்து எங்களுக்கு பொறுப்புகளையும் கொடுத்தீர்கள்.  உங்கள் அனுக்ரஹ பலத்தால் உலகத்தை சிருஷ்டி செய்ய முனைந்திருக்கிறோம்.  உங்களைக் காணாமல் தவிக்கிறோம், பகவானே! எதோ ஒரு அவதார ரூபத்தில் எங்கள் எதிரில் தரிசனம் தர வேண்டுகிறோம். (உபேந்திர, பரசுராம, ராம, மத்ஸ்ய, பல ராம என்ற உருவங்கள்)

பகவானே, எங்கள் பங்காளிகள் உபத்ரவம் செய்த போதெல்லாம், தேவ, ரிஷி, கால் நடைகள்,மனிதன் என்று அவதாரங்கள் செய்து உங்கள் மாயையால்  ஒவ்வொரு யுகத்திலும் காப்பாற்றியது போலவே இப்பொழுதும் எங்கள் ஆத்ம தெய்வமான உங்களிடம் பிரார்த்திக்கிறோம்.  வேறு யாரிடம் சரணடைவோம். சரணம், சரணம், எங்களுக்கு நன்மையைச் செய்யும் மகாத்மாவே! 

ஸ்ரீ சுகர் சொன்னார்: இப்படி தேவர்கள் வந்து வேண்டிய பொழுது, மேற்கு திசையில் பகவான் சங்க, சக்ர, கதா சமேதமாக ப்ரசன்னமானார்.   தன்னைப் போன்றே தோற்றம் உடைய பதினாறு அனுக்கத் தொண்டர்கள், ஸ்ரீவத்ஸ கௌஸ்துபம் மட்டும் இல்லாமல், உடன் வர, அப்பொழுதே மலர்ந்த சரத் கால தாமரை மலர் போன்ற கண்களுடன்  காட்சி தந்தார்.  கண்டவுடன் அனைவரும் தண்டம் விழுவது போல தடாலென்று விழுந்து நமஸ்கரித்தனர்.  மெள்ள எழுந்து துதி செய்தனர்.

தேவர்கள் துதி:  யக்ஞ வீர்யனான உனக்கு நமஸ்காரம். கையில் சக்கரத்துடன் விளங்கும் புரூஹூதனே, நமஸ்காரம்.   முக்குணங்களையும் அடக்கி ஆளும்  உன் பரம பதத்தை  முழுமையாக அறிந்தவர் எவருமில்லை.  உனக்கு நமஸ்காரம். இதன் பின் பகவானின் பல நாமங்களையும் சொல்லி பாடுகின்றனர்.

ओं नमस्तेऽस्तु भगवन् नारायण  वासुदेवाऽऽदिपुरुष महापुरुष महानुभाव परममङ्गल परमकल्याण परमकारुणिक केवल जगदाधार लोकैकनाथ सर्वेश्वर लक्ष्मीनाथ परमहंसपरिव्राजकैः परमेणात्मयोगसमाधिना परिभावित-परिस्फुटपारमहंस्यधर्मेणोद्घाटिततमः-कपाटद्वारे चित्तेऽपावृत आत्मलोके स्वयमुपलब्धनिजसुखानुभवो भवान् ॥ ३३॥

உன் மாயை, விளையாட்டாக நீ செய்வதை புரிந்து கொள்ள சக்தியில்லை,   சரணடைகிறோம், காப்பாற்று..

நீயே தான் படைத்தாய். நீயே தான் எங்களை காக்கவும் வேண்டும்.  உனக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது. உன் அடியார்களுக்குள்ளேயே,  சிஷ்டன்-நல்லவன், துஷ்டன்- கெட்டவன் என்ற பாகுபாடு செய்வது ஏன்? அனைத்திலும் வஸ்து ஸ்வரூபமாக இருப்பவன் நீயே. சர்வேஸ்வரன், ஜகத் காரண பூதன். நீ அறியாததா?

வீடு கட்ட வரும் கொத்தனார் அறிவார்.  எது, எந்த அளவு, எந்த சமயம் வேண்டும் என்பதை.  ப்ரும்ம ஸ்வரூபனான நீ, உன் அவதார காலத்தில் மூவுலகின் தேவைகளையும், அதற்கான பரிகாரங்களையும் அறிவாய்.  அனுக்ரஹம், நிக்ரஹம் இவைகளை உன் மாயா பலத்தால் அந்தந்த சமயம் நீ ஒருவனே செய்து விடுகிறாய்.   சாதாரண மனித மனம் கயிற்றில் பாம்பைக் கண்டால் நடுங்குவதும், பின் உண்மையை உணர்ந்துகொள்வதும் போலவும் உன் மாயாமயமான ஆற்றலில் வெளிப் படுவதை எளிதில் தெரிந்து கொள்வதில்லை.  ஆகவே, பரமேஸ்வரா! உன்னிடம்  பக்தியுடன் சரணடைவதே எங்களால் முடிந்தது.  அம்ருத மதனம் செய்ததை நினைவு கூர்கிறோம்.  தேவர்கள், அசுரர்களும் அனைவரும் ஒன்றாக உன் தலைமையில் கடைந்தனர்.  அவரவர் சுயநலம் காரணமாகத் தான் கூடினர்.  இருந்தாலும்  அனைவரையும் ஒன்றாக கூட்டி வைத்து பெரிய செயலை நடத்த உன்னையன்றி வேறு எவராலும் முடியாது என்று அறிவோம்.

த்ரிபுவனாத்மபவன், த்ரிவிக்ரம, த்ரி நயன, த்ரிலோக மனோஹரானுபாவ, உன்னுடைய விபூதிகளே, திதி மைந்தர்களான தேவர்கள், தனு மைந்தர்களான தானவர்கள், (முன் செய்தது போலவே) இப்பொழுதும் த்வஷ்டாவின் மகனை அடக்கு.  உன் அவதார காலத்தில் தரித்த ஆயுதங்களை தரித்து எங்களுக்கு அனுக்ரஹி, ஏனெனில் நாங்கள் தாவகா:- உன்னைச் சார்ந்தவர்கள்.  (முதல் உரிமை எங்களுக்கு) 

உங்களை வணங்கி வந்து நிற்கும் எங்கள் மேல் கருணை செய். எங்கள் தாபத்தை தீர்த்து வை. எந்த நேரமும் உன் நினைவாகவே இருந்து, உன் புகழையே பாடுவதும், உன் குணங்களையே கேட்பதுமாக இருக்கிறோம்.

பகவன்! தவாஸ்மி- உன்னையே சரணடைகிறோம்.  தேச காலங்களை அறிந்தவன். ஆகாசமே சரீரமாக உடையவன். சாக்ஷாத் பரப்ரும்மன். ஹே பரமாத்மா! இதைத் தவிர,  வேறு என்ன கேட்போம்.  ஒளி மயமான உன்னிடம், சிறு நெருப்பின் தீச் சுடரை யாசிப்பது போல  இருக்கும் எது கேட்டாலும்.

பரமகுரோ! நீயே தீர்மானித்துக் கொள். எங்கள் தேவை என்ன என்பதை கூட யாமறியோம். உன்  பாத  நிழலை அண்டி வந்து நிற்கிறோம். நூறு நூறு பலாச மரங்கள் தரும் சாயை போன்ற குளிர்ந்த பாதங்கள்.  சம்சார சாகரத்தில் உழலும்  பலவிதமான ஜீவன்களின், சார்பாக இங்கு வந்து வேண்டுகிறோம்.

எனவே, ஈசா!  த்வஷ்டாவின் மகனை வதம் செய். அவன்  மூவுலகத்தையும்  ஆக்ரமிக்கிறான். க்ருஷ்ணா! ஏற்கனவெ, எங்கள் அஸ்திரங்களை, எங்கள் ஆயுதங்களை, எங்கள் தேஜஸை க்ரஹித்துக் கொண்டு விட்டான்.

எங்கள் இதய கமலத்தில் விளங்கும் ஹம்ஸம் நீ, க்ருஷ்ணா, உன்னை காணவா முடியும்? உன் எல்லையற்ற புகழ் ஒன்றே நாங்கள் அறிந்தது, சத்யத்தை க்ரஹிக்கும் (ஹம்ஸம் போல) சம்சார பாதையைக் கடந்து மீள முடியாமல் ஓய்ந்து உன்னை அண்டியவர்களுக்கு ஆப்தமானவனே!  சாயுஜ்யம், சாலோக்யம் என்ற பதவிகளைத் தருபவனே, ஹே ஹரே! நமஸ்தே.

ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்விதம் வேண்டியதைக் கேட்டு,  எழுந்து வந்து ஆதரவுடன் பார்த்து  ஸ்ரீ ஹரி பதில் சொன்னார்.

ஸ்ரீ பகவான் சொன்னார்:   சுரஸ்ரேஷ்டர்களே!   பக்தியுடன் இங்கு வந்து சரணடைகிறோம் என்று சொன்னதை ஏற்கிறேன்.  இங்கு வந்ததே உங்கள் நிலைமையையும், தேவைகளையும் தெரிவித்து விட்டன. ரோகம் இல்லாதவன் ஏன் மருந்தை நாடிப் போகிறான்.  மகவன்! தைரியமாக போய் வா,  சுத்தமான, ப்ரும்ம ஞானம் அறிந்த ஒருவரைத் தேடிக் கண்டு பிடி.  நாராயண கவசம் த்வஷ்டாவின் மகன் உனக்கு கொடுத்திருக்கிறான். அவனிடமும் அந்த கவசம் இருக்கிறது.  எனவே, மந்திரங்கள் சொல்லி உருவேற்றிய சரீரம் உடைய ஒரு ரிஷியின் சரீர அஸ்தியை யாசித்து பெறுங்கள்.  அதைக் கொண்டு விஸ்வகர்மா ஆயுதம் தயாரித்துக் கொடுப்பார். நீ வ்ருத்திரனின் தலைகளைக் கொய்தாய் அல்லவா? அதற்கு ஈடான ஆயுதம் வேண்டும்.

(ஞானியும், வேதமறிந்தவனும், நன்னத்தையுடையவனுமான விஸ்வரூபனை, கொன்றதற்கு பரிஹாரம் அதே போல ஞானியும், வேத விற்பன்னரும், நடத்தைகளும் உடைய முனிவரால் மட்டுமே இயலும் என்பதாக )

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், ஒன்பதாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-55

அத்யாயம்-10

ஸ்ரீ சுகர் சொன்னார்:  இந்திரனுக்கு இவ்வாறு உத்தரவிட்டு விட்டு பகவான் அந்தர்தானமானார்.   தேவர்களும் ஆதர்வண  என்ற ரிஷியை சந்தித்து வேண்டினர்.  கூட்டமாக பகவான் சொன்னார் என்பதற்காக யாசிக்க வந்துள்ளீர்கள்.  உலக வாழ்க்கை, சரீரம், அதன் முடிவான மரண பயம் இவற்றை நீங்கள் அறிய மாட்டீர்கள்.  ஜீவன்கள்  வாழவே விரும்புபவர்கள்.  ஆத்மா வேறு என்று உணர்ந்தாலும் தன் சரீரத்தில் பற்று உடையவர்களே. சரீரத்யாகம் செய்ய எளிதில் சம்மதிக்க மாட்டார்கள்.  யாசிப்பது ஸ்ரீ விஷ்ணு பகவானே என்றாலும்.

தேவர்கள் சொன்னார்கள்: ப்ரும்மன், நீங்கள்  உலகில் அனைத்து உயிர்களிடமும் அனுதாபம் உள்ள மகான் புண்யஸ்லோகனை எண்ணி கர்ம மார்கத்தில் ஈடுபட்டவர்.  உங்களால் முடியாதது என்று எதுவும் இல்லை. சுயனலமே பெரிதாக எண்ணுபவர்  உலகில் பிறர் கஷ்டத்தை உணர மாட்டார்கள்.  நீங்கள் அப்படி அல்லவே. அறியாமல் உங்களை யாசியுங்கள் என்று பகவான் சொல்வாரா?

ரிஷி சொன்னார்:  உங்களுக்கு நன்மை என்பதால் நான் தேகதியாகத்தைச் செய்கிறேன்.  பூத தயை – பிற உயிர்களிடம் அன்பு உள்ள மனிதன் தானே தன் ஆத்மாவுக்கு நாதனாகிறான். ஸ்வதந்திரன் ஆவான். தர்மமோ, புகழோ அந்த சுதந்திரத்தைத் தராது. தாவரங்களைப் பாருங்கள். தன்னை அழித்தவனுக்கும் நன்மையையே  செய்யும். அது தான் அழியாத தர்மம். பகவான் தானே அனுசரித்த தர்மம். எவனுடைய மனம் மற்ற ஜீவன்களின் துக்கத்தில் தானும் துக்கமடையுமோ, அவர்கள் சுகத்தில் தானும் பங்கேற்கிறானோ,  அவனே அழிவற்றவன். அஹோ! என்ன கஷ்டம். என்ன தீனமான நிலை. தங்கள் பங்காளிகளிடையே தோன்றியுள்ள இந்த பயம். 

ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு தர்மத்தை உபதேசித்து விட்டு, தத்யங்க் – அதர்வணர்-  என்ற அந்த ரிஷி, (ததீசி) பரம் பொருளான பகவானிடத்தில் தன் ஆத்மாவை வைத்தவராக உடலைத் தியாகம் செய்தார்.  யோக  மார்கத்தில், தன் வசப்படுத்தியிருந்த இந்திரியங்கள், ப்ராணன் முதலான வாயுக்கள், மனம், புத்தி இவற்றை உதறி  விட்டவர்,  தேகத்தை விட்டு வெளியேறும் கடைசியான யோக நிலையை அடைந்தபின் தேகம் தானே கழண்டு விழுந்து, அதைச் சற்றும் அறியாதவராக பரமனடி சேர்ந்தார்.

அதன் பின் இந்திரன் விஸ்வகர்மாவைக் கொண்டு  ரிஷியின் அஸ்தியிலிருந்து வஜ்ராயுதம் தயாரிக்கச் செய்து பகவானின் ஆசியைப் பெற்று,  தேவகணங்கள் சூழ, தன் பட்டத்து யானை மேலேறி உடன் வந்த தேவ கணங்கள் வாழ்த்த மூவுலகையும் மகிழ்விப்பவன் போல கிளம்பினான்.  அசுர்களின் பாசறை சென்றவன். வ்ருத்திரனை போருக்கு அழைத்தான். ருத்ரன் கோபத்துடன் அழைப்பது போல இருந்தது.

அதன் பின் சுர, அசுர்களிடையேயான  யுத்தம் நர்மதா நதிக் கரையில், த்ரேதா யுகத்தில் பயங்கரமாக நடந்தது.  கையில் வஜ்ராயுத்துடன், ருத்ர கணங்கள், வசு, ஆதித்ய கணங்கள், அஸ்வினி குமார்கள், பித்ருக்கள், அக்னி, மருத்துகள், ரிஷிகள் சாத்யர்கள், விஸ்வே தேவர்கள்,  மருத்பதி என்று அனைவரும் புடை சூழ போருக்கு அழைத்தவனை வ்ருத்திரனும் எதிர்கொண்டான்.  அவனுக்கு சகாயமாக நமுசி, சம்பரன், அனர்வா, த்விமூர்தா, ருஷபன் என்ற அசுரன், ஹயக்ரீவன், சங்கு சிரஸ், விப்ரசித்தி, அயோ முகன், புலோமா, விருஷபர்வா, ப்ரஹேதி, ஹேதி, உத்கலன், தைத்ய தானவர்கள், யக்ஷ ரக்ஷர்கள், ஆயிரக் கணக்கானவர்கள்,  சுமாலி, மாலி முதலியோர், கார்த்த்ஸ்வர வம்சத்தினர்,  தாங்களே ம்ருத்யு போல இந்திரனின் சேனையை எதிர்கொண்டனர்.

சற்றும் தயக்கமின்றி சிம்ஹ நாதம் செய்தபடி, மதம் கொண்ட யானைகளுடன், அளவில்லாத அம்புகள், ப்ராஸங்கள், முத்கர, தோமரங்கள், சூலங்கள், பரஸ்வதங்கள், கட்கம் எனும் வாள், சத்க்னீ, புசுண்டீ முதலியன,

அந்த பிரதேசமே, இவ்வாறான ஆயுதங்கள் இரைந்து காணப்பட்டன.  கூர்மையான சரங்கள், ஆகாயத்திலிருந்து ஜோதி கணங்களே விழுந்து விட்டாற் போல பிரகாசமாக நிறைந்து காணப் பட்டது.

சுர சைன்யத்தினர் ஆசுர அஸ்த்ர., சஸ்திரங்களின் தாக்குதலை தாங்க முடியாமல் சிதறினர். கை கால் உடைந்து ஆங்காங்கு விழுந்தனர்.  இதற்குள் அஸ்திர சஸ்திரங்கள் தீர்ந்து போனதாலோ, மலை முகடுகளையும், பாறைகளையும், அடி மரங்களையும் அசுரர்கள் அவர்கள் மேல் வர்ஷித்தனர்.   அதன் பின்னும் அதிக சேதம் இல்லையென்பதை அறிந்து, வ்ருத்திரனின் ஆட்கள், மேன் மேலும் மரங்களையும், கற்களையும் வீசினர்.   யுத்தமுடிவு என்ன ஆனாலும் சரி, இனி நம்மால் தாக்கு பிடிக்க முடியாது என்று தோன்றியதாலோ, அசுர சைனிகர்கள் ஓட்டம் பிடித்தனர்.  வ்ருத்திரன் அவர்களை பெயர் சொல்லி அழைத்து, வீரர்களே, பிறந்தவன், இறப்பது நிச்சயம் என்பதை அறியாதவர்களா? ஓடாதீர்கள் என்று அழைத்தான்.  இதுவே எளிய வழி ம்ருத்யுவை எதிர்கொள்ள.  யுத்த பூமியில் விழுந்தால் ஸ்வர்கம் செல்வீர்கள்.  அதிர்ஷ்டவசமாக நம்மை ம்ருத்யு தேடி வருகிறான். ரண பூமியில் மரணம், ப்ரும்ம யோகத்தால் மரணம் இரண்டும் ஒன்றே என்றான். 

 (இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், பத்தாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-33

 

அத்யாயம்-11 

ஸ்ரீ சுகர் சொன்னார்:   இது தான் தர்மம்-  நம் கடமை என்று தலைவன் சொன்னதைக் கேட்டாலும், பயத்தால் நடுங்கிய சேனை வீர்கள் ஓடி விட்டனர்.  யுத்தபூமியில் புற முதுகிட்டு ஓடுபவர்களை அழைத்தும் அவர்கள் வராததை வ்ருத்திரன் கண்டான்.  ஆயினும் கலங்கவில்லை. வ்ருத்திரனின் பயங்கரமான கர்ஜனை போன்ற போர் அறைகூவலிலேயே, தேவ சைன்ய வீர்கள் பாறைகளால் அடிபட்டது போல விழுந்தனர்.   கோபத்துடன் கையில் சூலத்துடன் பாதங்களால் ரணபூமியை மிதித்தபடி, அட்டகாசமாக முன்னேறியவன், இந்திரனை, தன் இடது கையால் பிடித்தான்.  தன் கதையால் இந்திரனின் ஐராவதத்தை தாக்கினான். அதன் முகத்தில் ஓங்கிஅடித்தான்.  பார்த்தவர்கள் அனைவரும் திகைத்தனர்.  ஐராவதம் ஏழு வில் தூரம் பின்னடைந்தது.  இந்திரனை நேருக்கு நேர் நின்று வசை பாடினான்.  உன் கையில் வஜ்ராயுதமும் சாதாரண கதை போலவே செயல் இழக்கும். உன் பராக்ரமத்தாலா அதை அடைந்தாய், முனிவர் சந்தோஷமாக தன் உடலையே தந்தது. அவருடைய தவமும், நேர்மையும் யோகமும் நீ எப்படி அறிவாய்.  சகோதரன், உனக்கு சமயத்தில் உதவியவன் என்பதை மறந்து கொல்ல வந்து நிற்கிறாய். அற்பனே! என்ன சாதிக்கப் போகிறாய்.  கருமியின் கையில் கிடைத்த தனம் பயனின்றி போவது போல வஜ்ராயுதத்தின் அருமை தெரியாத உன் கையில் பயனின்றி போகக் கூடாது. பிரயோகி இந்த வஜ்ராயுதம் ஸ்ரீ ஹரியின் தேஜஸால், ததீசியின் தவத்தினால் வந்த தேஜசும் கூடியது. அமோகமான ஆயுதம் இது.  ஸ்ரீ ஹரி இருக்குமிடத்தில் நிச்சயம் வெற்றி இருக்கும் என்ற நியதி படி நீ வெற்றி பெறலாம். உன் சாமர்த்யத்தால் அல்ல.   வஜ்ராயுதத்தை பிரயோகி. சங்கர்ஷ்ண மூர்த்தியான பகவானிடம் நான் மனதால் அடைந்து விட்டேன். இந்த அஸ்திரம் என்ற வியாஜத்தால் புனிதமாகி நல்ல கதியடைவேன். – என்றான். அதன் பின் நேரடியாக துதி செய்யலானான்.

ஹரே! நான் உன் பாதங்களை சரணடைகிறேன்.  முன் போலவே உன் தாஸானுதாஸனாக சேவை செய்வதையே வேண்டுகிறேன். என் மனம், வாக்கு, உடல் அனைத்தும் உன் சேவையிலேயே ஈடுபடட்டும்.

சுவர்கமோ, பாரமேஷ்டி என்ற நிலையோ, ராஜாதி ராஜன் எனவோ, பாதாள உலகங்களின் அதிபன் என்றோ,   யோக சித்தியோ, பிறவியில்லாத  தன்மையோ, வேண்டேன். சற்றும்  உன்னை விட்டு விலகாத இடத்தையே வேண்டுகிறேன்.

அரவிந்தாக்ஷ!  எப்படி, இறக்கை முளைக்காத பறவைகள் தாயை எதிபார்த்து பசியுடன் காத்திருக்குமோ, வெளியில் சென்ற கணவன் திரும்பி வருவதை மனைவி  எப்படி எதிர்பார்த்து காத்திருப்பாளோ, அதே போல என் மனம் உன்னைக் காணவே தவிக்கிறது.

 சம்சார சக்ரத்தில் தன்  வீடு, மனைவி என்று உழலாமல், நல்ல நடத்தையுள்ள பாகவதர்கள் நட்பு வேண்டும், அதுவே நான் வேண்டுவது.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின்,  இந்திரனுக்கு வ்ருத்ஹிரனின் உபதேசம் என்ற பதினொன்றாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-27  

 

அத்யாயம்-12

ரிஷி சொன்னார்:  அசுர உடலைத் தியாகம் செய்த பின், யுத்தத்தில் வெற்றி பெறுவதை விட மரணமே மேல் என்று எண்ணிய வ்ருத்திரன், இந்திரனை             க 3தையால் அடித்தான். முன் ஒரு முறை கடலுக்குள் கைடபன் , மகா  புருஷனை அடித்தது போல.   அழிந்தான் இந்திரன் என்று சொல்லி அட்டகாசமாகச் சிரித்தான்.   அடி எதிர்பாராமல் படவும் இந்திரன் கால் இடறி தலகீழாக  எரிந்து கொண்டிருக்கும் க்ரஹம் விழுந்தது போல குப்புற விழுந்தான்.  வஜ்ரம் வ்ருத்திரனின் கையை துண்டித்த படி கீழே விழும் முன் விருத்திரன் தன் பரிகத்தால் (परिघम्)  எடுத்துக் கொண்டு அதாலேயே இந்திரனை தாடையில் அடித்தான். சுராசுரர்கள் திகைத்து ஹா ஹா காரம் செய்தனர்.  விருத்திரனை சிலாகித்தனர்.  வெட்கம் மேலிட இந்திரன் தன் கையிலிருந்து விழுந்த வஜ்ரத்தை திரும்ப எடுக்கவில்லை. விருத்திரன், மூடனே, ஹரியே தயாரித்துக் கொடுத்த வஜ்ரம் அதை ஏன் பிரயோகிக்க தயங்குகிறாய் என்றான்.   பார்க்கப் போனால்,  உத்பத்தி ஸ்திதி லயம் என்று தன் வசத்தில் வைத்திருக்கும் சனாதனமான புருஷனின் சங்கல்பம் அன்றி,  ஜயமோ பராஜயமோ, யுத்தகளத்தில் போரிடும் இருவரிடையில் முடிவாக வெளிப்படாது.  இறுக்கி முடித்த சிகை போல காலனின் வசத்தில் ஜீவன்களில் காலம் கட்டுபட்டுள்ளது.  தன் சரீரம், பலம், ப்ராணன், அம்ருதம், ம்ருயு இவைகளுக்கு தானே பொறுப்பு என்று நினைப்பவன் அக்ஞானி – அறிவற்றவன். மரத்தில் யந்த்ரம் சுயமாகவா  உண்டாகும்? பெண் பதுமை தானாகவா வரும் இவைகளை செய்யும் சிற்பியின் கை வண்ணம் என்பது எப்படி நிதர்சனமோ அதே போலத் தான் உலகில் ஜீவன் களின் தோற்றமும். சத்வ,ரஜஸ், தமஸ் என்ற குணங்களும் ஆத்மா வின் அதீனத்தில் இல்லை. அது சாக்ஷி மட்டுமே.

இந்திரனே! என்னையே உதாரணமாக எடுத்துக் கொள். என் சூலம், கை இரண்டையும் இழந்தபின்னும் உன் உயிரை எடுக்கும் அதே உத்வேகத்தோடு போர் முனையில் நிற்கிறேன்.  ஜயிக்க முடியுமானால் மட்டுமே போரில் ஈடுபடுவேன் என்பது சூதாட்டமாக சொல்வர். பணயமாக யானை. குதிரைகளை வைத்து ஆடுவது போல.

ஸ்ரீ சுகர் சொன்னார்: இருவரும் அன்யோன்யமாக நண்பர்கள் போலவே மதித்தனர். இந்திரன் பதில் சொன்னான்:  அஹோ, தானவ, சித்தோ(அ )ஸி.  பிறப்பில் தானவனாலும் விருத்திரனே, நீ உன் புத்தியால் ஜகதீஸ்வரனை பக்தியால் உணர்ந்த சித்தனாகவே இருக்கிறாய்.   எல்லா உயிர்களுக்கும் நண்பனாக உள்ள பகவானைப் போலவே நீயும் நண்பனே. வைஷ்ணவீ மாயையும் அறிந்தவன். அசுரன் அல்ல மஹாபுருஷனே. அசுர குணம் ரஜஸ் பிரதானமானது என்பது உலக வழக்கு. ஆனால் நீ வாசுதேவனித்தில் திடமான அன்பை உடையவனாக இருக்கிறாய். அம்ருதமயமான சமுத்திரத்தில் விளையாடும் உனக்கு , பள்ளத்தில் தங்கிய குட்டை ஜலம் எதற்கு? 

இருவரும் ஒருவரையொருவர்  தர்மத்தை அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு பேசிக் கொண்டபின், யுத்தத்தை தொடர்ந்தனர்.  வ்ருத்திரன் தன் பரிகத்தை எடுத்துக் கொண்டான்.  இடது கையால் அதை இந்திரனை நோக்கி வீசினான். அவனும் வஜ்ராயுத்தால், விருத்திரனின் கையை தாக்கினான்.  இரு கைகளும் இல்லாத நிலையில் பிரவாகமாக ரத்தம் சொட்ட,  இறக்கைகளை இழந்த பறவை ஆகாயத்திலிருந்து விழுவது போல விருத்திரன் விழுந்தான். அதன் பின்னும் தாடையின் ஒரு பகுதி பீமியிலும், மேல்பகுதி சுவர்கத்திலுமாக வளர்ந்து, அதன்

பலத்தில் வானளாவி இருந்த தன் வாய், நாக்கினால் கிடைத்தவரை, பூமி, மலைகள் என்று மூவுலகையும் இழுத்து பயங்கரமான பற்களால் கடித்து, வஜ்ரதாரியான இந்திரனையும்.  அவன் வாகனங்கள், ஆயுதங்களோடு, உடன் இழுத்து  முழுங்குபவன் போல வாயில் போட்டுக் கொண்டான்.  மஹாப்ராணன், மஹாபலம் உடையவன், மஹாவீர்யோ, மஹா ப்ரபாவ: என்று கண்டவர் வியந்தனர்.  அஜகரம் எனும் மலைப் பாம்பு, யானையை விழுங்குவது போல இருந்தது.  அசுரனின் பெரிய வயிற்றுக்குள் விழுந்த இந்திரன் யோக மாயா பலத்தால், (நாராயண கவசம் சொல்லி உருவேறியிருந்ததால்)  வஜ்ரத்தால் அவன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளி வந்தான்.  மலையின் சிகரம் போல இருந்த அவன் தலையை வஜ்ரத்தால் அடித்தான். சட்டென்று திரும்பிய விருத்திரன் இந்திரனின் தோள்களைப் பற்றிக் கொண்டான்.  பலமாக இந்திரனின் தோள்களைத் தாக்கியபடியே வேகமாக சுழன்றான். சூரியனின் கதியில் உத்தராயண, தக்ஷிணாயனங்கள் மாறி வருவது போல  இருவரும் அந்தரிக்ஷத்தில் சுழன்றனர்.  உயிர் பிரிந்த விருத்திரனின் உடல் விழுந்ததும் தேவர்கள் துந்துபியை முழங்கினர்.  தேவ கந்தர்வ, சித்தர்கள், புஷ்பங்களை வர்ஷித்தனர்.  விருத்ரனின் ப்ராணன் அனைவரும் காண ஜ்யோதி மயமாக அகார பொருளான வாசுதேவனின் வைகுண்டம் சென்றடைந்தது. 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், விருத்திர வதம் என்ற பன்னிரண்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-35

அத்யாயம்-13

ஸ்ரீ சுகர் சொன்னார்: விருத்திரனின் வதம் ஆனதில் லோகபாலர்கள், தேவ, ரிஷி, பித்ருக்கள், தேவர்கள் பக்ஷத்தில் இருந்த அனைவரும் மகிழ்ந்தனர். இந்திரனைக் காணவில்லை என்பதை கூட பெரிதாக நினைக்கவில்லை. 

அரசன் பரீக்ஷித் கேட்டான்:  முனிவரே! இந்திரன் ஏன் மறைந்தான். வெற்றி பெற்றவன் மகிழ்ச்சியாக இருந்திருக்க வேண்டுமே.

ஸ்ரீ சுகர் சொன்னார்: விருத்திரனின் வளர்ச்சியால் தனக்கு ஆபத்து வரலாம் என்று பயந்த இந்திரன் அவன் தலையைத் துண்டித்தான்.  அந்த தோஷத்தை உலகில் நால்வரிடம் பகிர்ந்து அளித்தான். தற்சமயம் அவனைக் கொன்றதால் ஏற்பட்ட ப்ரும்மஹத்தி, குருத்ரோஹம் என்ற தோஷங்கள்  இவற்றை எப்படி பரிகாரம் செய்வேன் என்று வருந்தினான். ரிஷிகளிடம் விசாரித்தான்.    அவர்களும் யாகம் செய். அஸ்வமேத யாகம் செய்து பகவானை திருப்தி செய்.  பகவான் ஸ்ரீமன் நாராயணனை வேண்டிக் கொள். எந்த பாபமும் அவரால் தான் போக்க முடியும் என்றனர்.  

ரிஷிகள் சமாதானமாகச் சொன்னாலும்,  ப்ரும்மஹத்யா என்ற தோஷம் உருவெடுத்து ஒரு பெண்ணாக இந்திரனைத் துரத்தியது.  சண்டாளி போல வெளிறிய உடலும்,  க்ஷயரோகத்தால் பீடிக்கப் பட்ட நோயாளி போன்ற தோற்றமும் கலைந்த  நரைத்த கூந்தலும், சிவப்பு வஸ்திரமும் வாயிலிருந்து அழுகிய மீன் வசனையும் கொண்ட பெண் உருவம். அவள் பின் தொடர தொடர இந்திரன் ஓடினான். அவள் சென்ற இடமெல்லாம் துர்கந்தம் வீசியது.  கிழக்கில் ஆறம்பித்து உலகம் முழுவதும் சுற்றியபின் வடக்கு திசையில் தப்பிக்க மானஸ சரோவரத்தில் தாமரைத் தண்டில் ஒளிந்து கொண்டான்.  பல காலம், ஆயிரம் வருஷங்கள் அதில் இருந்தபடி அன்ன ஆகாரம் இன்றி இருந்தான். ஹவ்ய வாஹநன் என்ற அக்னி தான் அவனுக்கு உணவு அளிப்பவன். அவன்  குளத்தின் உள் வர இயலாமல் உணவும் இல்லை.  மனதினுள் தியானம் செய்தபடி இருந்தான்.  விஷ்ணு பத்னியான மஹாலக்ஷ்மியின் அருளால் உயிர் வாழ்ந்தான்.

இந்திரன் காணவில்லை என்றதும், நகுஷன் வித்யாதி பலத்தால், தேவலோகத்தை ஆளத் தகுதியானவனாக இருந்ததால், இந்திர பதவியை அடைந்தான். தானே இந்திரன் என்ற மதம் கண்களை மறைக்க, இந்திராணி என்னை ஏற்க வேண்டும் என்று உரிமை கொண்டாடினான். இந்திராணி அகஸ்திய முனிவரின் சாபம் என்ற வியாஜத்தால் அவனை தேவலோகத்திலிருந்து சர்ப்ப ரூபத்தில் பூமியில் விழ வைத்தாள்.

அந்த சமயம் தான் ரிஷிகள், இந்திரன் இருக்குமிடம் அறிந்து அவன் இருக்குமிடம் வந்து அஸ்வமேத யாகம் செய்யச் சொல்லி உபதேசித்தனர்.  பல காலம் செய்த தவத்தினால் சுத்தமாகி விட்டாய், இந்திர பதவியை திரும்பப் பெறுவாய் என்றனர்.

இந்திரனின் விருத்திர வதமும், அதன் பின் அவன் அனுபவித்த கஷ்டங்களும் லக்ஷ்மீ கடாக்ஷத்தால் மீண்டதும் பற்றிய இந்த சரித்திரம் படிப்பவர்களுக்கு நன்மைகளைத் தரும் என்று பலஸ்ருதி சொல்லி முடிக்கிறார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், இந்திர விஜயம் என்ற பதின்மூன்றாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-23

 

அத்யாயம்-14

பரீக்ஷித் ராஜா வினவினான். வ்ருத்திரன்  ராஜஸ தாமஸ குணங்கள் நிறைந்த குலத்தில் பிறந்தவன்.  அவனுக்கு ஸ்ரீமன் நாராயண ஸ்மரணம் இருந்தது எப்படி?  தேவர்கள், சாதுக்கள், நிர்மலமான மனதுடைய ரிஷிகள் தான் சாதாரணமாக முகுந்த பாதங்களில் பக்தி செய்வதை அறிந்திருக்கிறோம்.  மனிதர்களில் சிலர் தான் மோக்ஷம் வேண்டி சாதனைகள் செய்வர், அவர்களிலும் சிலரே சித்தியடைவர்.  அந்த சித்தர்களிலும், ஸ்ரீமன் நாராயண பராயணர்களாக இருந்து, அமைதியான குணமும் உடையவர்கள் கோடியில் ஒருவர் இருந்தால் அதிகம்.  வ்ருத்திரன் எப்படி பாபி என்றானான். க்ருஷ்ணனிடத்தில் திடமான பக்தியுடையவன்,  நியாயமாக போர் புரிந்தான், தன் ஆற்றலால் சஹஸ்ராக்ஷன் என்ற இந்திரனை மகிழ்ச்சியுடன் எதிர் கொண்டான். இந்திரன் அவன் நல்ல குணத்தை அறிந்து கொண்டு தனக்கு சமமாக  மதித்தான்.

ஸ்ரீசுகர் சொன்னார்: ராஜன்! இந்த கதையைக் கேள்.  வியாசர் சொல்லி, நாரதர் கேட்டார்.   ஸூரசேன வம்சத்தில் ஒரு சக்ரவர்த்தியான அரசன் இருந்தான்.  சித்ரகேது என்பது அவன் பெயர்.  அவன் ஆட்சியில் பூமியில்  பொன் விளைந்தது.  நிறைய மனைவிகள். ஆயினும் சந்ததி இல்லை என்று வருந்தினான்.  அனைவரும் ருபம், குணம், நற்குடி பிறப்பு, வித்யை, ஐஸ்வர்யம் என்று எல்லா விதமான செல்வமும் நிறைந்தவர்கள். அவர்கள் சக்ரவர்த்தினிகள் சந்தோஷமாகவே இருந்தனர். ஒருசமயம் யதேச்சையாக ஆங்கிரச முனிவர் தன் பரிவாரங்களோடு வந்தார்.  அரசனும் அவரை பூஜித்து,  விருந்தினராக வந்த அவருக்கு வேண்டிய உதவிகளை குறைவில்லாமல் செய்தான்.  மகரிஷி தானே அரசனிடம் வினவினார்.

அரசனே! நலமாக இருக்கிறாயா? உன் பிரஜைகள் நலமா? அரச காரியங்கள், நல்லபடியாக நடக்கின்றனவா?  அரசன் எப்பொழுதும் ஏழு ரகசியமான உளவாளிகளை வைத்திருக்க வேண்டும் என்பது ஒரு நியதி. ஜனங்களுடைய கஷ்ட நஷ்டங்கள் அரசனுக்கு தெரிந்திருக்க வேண்டும்.  அரசன் தங்களுக்கு தேவையானதை செய்வான் என்ற நம்பும் பிரஜைகள் உள்ள அரசன் உயர்ந்தவன்.  உன் மனைவிகள், மந்திரிகள், ஏவலர்கள், சேனை வீர்கள், ஊர் மக்கள், ஜனபத தலைவர்கள், உன் பிள்ளைகள், உனக்கு அடங்கி இருக்கிறார்களா?  இவர்கள் உன்னை அனுசரித்து இருந்தால் தான் ஆட்சியை சரிவர செய்ய முடியும்.  அரசன் சற்று நேரம் பதில் சொல்ல யோசித்து விட்டு மெதுவாக சொன்னான். முனிவரே, உங்களுக்கு தெரியாததா? எனக்கு சந்ததி இல்லை என்பது மட்டுமே மனக் குறை என்றான்.  என்னைச் சுற்றி உள்ளவர்கள் அனைவரும் என்னிடம் அனுசரித்து இருக்கிறார்கள். உலகில் லோகபாலனோ, சாம்ராஜ்ய அதிபதியோ முக்கியமல்ல. புத்ர பௌத்ரர்கள் உள்ளவன் அதிகம் மதிக்கப் படுகிறான்.  சந்ததி இல்லாதவன் என்று என்னிடம் இவர்களுக்கு மனத்தாங்கல் உள்ளது என்பதை அறிவேன். அதனால் முனிவரே! என் முன்னோர்களை கரையேற்ற எனக்கு பிரஜை வேண்டும்.

ஸ்ரீ சுகர் சொன்னார்:  முனிவர் கருணையுடன் தன் அறிவாலும், தவ வலிமையாலும் த்வஷ்ட்ரு என்ற தேவதையை ஆராதித்து  சரூ என்ற பாயசத்தை வரழைத்து அரசனுக்கு கொடுத்தார்.  அரசனும் முதல் மனைவியும் பட்ட மகிஷியுமான க்ருத த்யுதி என்பவளுக்கு அந்த பாயசத்தைக் கொடுத்தான்.  முனிவரும் உன் மகன் பிறப்பான், நலமாக இரு என்று ஆசிர்வதித்துச் சென்றார்.  க்ருத த்யுதி என்ற அரசியும் க்ருத்திகா தேவதை அக்னியை தாங்கியது போல அரசரின் கர்பத்தை தாங்கினாள்.  நாள் ஒரு மேனி என்று நாட்கள் செல்லச் செல்ல அந்த குழந்தை நன்றாக வளர்ந்து, சூரசேன குலத்தோருக்கு மன மகிழ்ச்சியைத் தரும் சுகுமாரனாக பிறந்தான்.  அரசன் மகிழ்ந்து, குழந்தைக்கு ஸ்னானம் செய்வித்து, அலங்கரித்து, அந்தணர்களைக் கொண்டு ஆசிகள் பெற வைத்து, ஜாதகர்மா என்பதையும் செய்தான்.   அந்தணர்களுக்கு தங்கம், வெள்ளி, ஆடைகள் ஆபரணங்கள் என்று நிறைய தானமாக கொடுத்தான்.  பலருக்கு நிலங்கள், க்ராமங்கள், குதிரை, யானை என்றும் கணக்கில்லாத பசுக்களையும் தானம் கொடுத்தான்.   அவர்களும் ஆசிர்வதித்தனர். தன்யம், புகழ், ஆயுஷ் என்று மந்திரங்கள் சொல்லி மனப் பூர்வமாக ஆசிகளை பொழிந்தனர்.

தவமிருந்து பெற்ற மகன், அரசன் தினமும் பெரும் பகுதியை மகனுடனேயே செலவழித்தான்.  செல்வமற்றவன் பாடு பட்டு சேர்த்த தனத்தை பாதுகாப்பது போல பாதுகாத்தான்.  தாயாரும் அவ்வாறே, புத்திரனிடத்தில் அதிக பாசத்துடன், அருகிலேயே இருந்தாள்.  க்ருத த்யுதியின் சபத்னிகளுக்கு தங்களுக்கு மகன் இல்லாதது பொறாமையை கிளப்பி விட்டது.   சித்ரகேது தன் மகனின் தாய் என்று க்ருத த்யுதியிடம் அதிக அன்புடன் நடந்து கொள்வதையும், குழந்தையை கொஞ்சுவதையும்  கண்டவர்கள் பொறாமையால் தவித்தனர்.  சந்ததி இல்லை என்பதை விட அரசனின் பராமுகம் அவர்களை கோபமடையச் செய்தது. தாசிகள் கூட அவர்களை மதிக்காமல் க்ருத த்யுதியிடம் அதிகமாக செவை செய்தனர்.  அவர்களின் தாபம் தலைக்கேறிய நிலையில் குழந்தைக்கு யாருமறியாமல் விஷத்தைக் கொடுத்து விட்டனர்.  இதையறியாத க்ருத த்யுதி தூங்குவதாக நினைத்து வீட்டுக்குள் நடமாடிக் கொண்டிருந்தாள்.  நெடு நேரமாக தூங்குவதைக் கண்டு சந்தேகம் வர குழந்தையைக் கொண்டு வரச் சொல்லி தாத்ரி என்ற பணிமகளிடம் சொன்னாள்.  அந்த பெண் கையில் எடுத்தவள், பிராணன் இல்லாததைப் பார்த்தவள் ஹா ஹதாஸ்மி என்று அலறியபடி  மயங்கி விழுந்து விட்டாள்.  அந்த கதறலைக் கேட்டு ஓடி வந்த ராணி தன் மகனின் சடலத்தை  கண்டாள்.   அவளும் மயங்கி விழுந்தாள்.  இந்த விவரம் அந்த:புர வாசிகள் அழும் குரலைக் கெட்டு விசாரிக்க வந்தவர்கள், ஓடிச் சென்று அரசனுக்கும் சபையினருக்கும் தெரிவித்தனர்.

இந்த துஷ்ட காரியத்தைச் செய்த மற்ற மனைவிமார்களும் பொய்யாக அழுதனர். அரசனால் தாங்கவே முடியவில்லை. பாலனின் காலடியில் கதறியவன் பேசக் கூட முடியாமல் தொண்டையடைக்க வருந்தினான்.ராணி மூர்ச்சை தெளிந்து எழுந்தவள், அரசனை என்ன சொல்லி சமாதனப் படுத்துவாள்?  ஓவென்று கதறியழுதாள். கண்ணிரால் உடல் நனைய, ஹே விதாதா! உனக்கு கண் இல்லையா?  சிருஷ்டியை செய்பவன் நீ என்பார்களே, ஒருவன் ஜீவிப்பதும், மற்றவனுக்கு ம்ருத்யும் தருவதா உன் கருணை?  மனிதனின் பிறப்பும் இறப்பும் ஒரு ஒழுங்கில் இல்லையேன்றால்,  எதற்கு தன் மகன் என்று பாசமும் பந்தமும்.  என் குலம் வளர வேண்டும் என்ற ஆசை ஏன்?   மகனே! இதோ பார், உன் தந்தை தவிக்கிறார்.  பிள்ளையில்லை என்ற துக்கத்தை விட இந்த துக்கம் கொடிது.  யம லோகம் போக உனக்கு ஏன் இந்த அவசரம்?  மகனே, எழுந்திரு, இன்னும் எதையுமே அனுபவிக்கவில்லையே. உன் வயது குழந்தைகள் வருவார்கள். உன்னுடன் விளையாட – என்று இவ்வாறு பலவாறாக புலம்பி அழுதுதாள்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: அவளாவது  அழுது அரற்றினாள். அரசனுக்கு குரலே எழும்பவில்லை. பிரமித்தவன் போல பேச்சின்றி இருந்தவன், நினைவு வந்தவன் போல ஓவென்று கதறி அழுதான்.  மற்றவர்கள் செய்வதறியாமல் திகைத்தனர்.  பெற்ற மகனை இழக்கும் துக்கம் என்ன என்பதை உணர்ந்தவர்கள் போல் அழுதனர். இதையறிந்த ஆங்கிரஸ முனிவர் நாரதரோடு அங்கு வந்தார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், சித்ரகேது விலாபோ என்ற  பதி நான்காவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-61

 

அத்யாயம்-15 

இறந்த மகன் அருகில் தானும் இறந்தவன் போல விழுந்து கிடந்த அரசனை இருவருமாக சமாதானப் படுத்தினர்.  ராஜேந்திரனே! உன் மகன் யார்? அவனுக்கு இது ஒரு ஜன்மம். தன் வினைப் பயனை கழிக்க உன் பிள்ளையாக வந்தானோ?  பெருகி ஓடும் நீரில் அடித்துச் செல்லப் படும் சருகுகள் போலத்தான் பிறவியும்.  காலம் தான் மனிதர்களை பிராணிகளை ஆட்டுவிக்கிறது. சேர்த்து வைப்பதும், பின் பிரிப்பதும் அதன் விளையாட்டு.  தானியங்கள் விதையாகி முளைக்கும் – வேறு தானியங்கள் வரும் – சில தானியங்கள் விதையாவதில்லை.  அதே போலத் தான் மனிதர்களிலும் சிலருக்கு சந்ததிகள்  தோன்றுவதில்லை. ஈசனுடைய சங்கல்பம் என்பதைத் தவிர வேறு காரணமேயில்லை.  நீயும், நாங்களும் தற்காலத்தில் இருக்கிறோம். முன் ஜன்மத்தில் எப்படி இருந்தோம், மறு பிறவியில் எப்படி இருக்கப் போகிறோம் என்பதற்கு எந்த வித உத்தரவாதமும் இல்லை.  ஈஸ்வரனும் தன் மாயையால் ஸ்ருஷ்டியைச் செய்தான்.  தன் மகன் என்ற பாசம் நியாயமானதே. பிறந்த குழந்தை தன் பேச்சாலும், விளையாட்டாலும் பெற்றோரை மகிழ்விக்கிறான், அதற்கு ஈடே இல்லை.  தந்தையிலிருந்து மகன் என்று வம்சம் வளருகிறது. பீஜத்திலிருந்து பீஜம் என்பது போல. தாயார் தேஹத்திலிருந்து பிறப்பது அந்த வம்சத்தின் பீஜமே. அப்படி பார்க்கப் போனால் தேஹி, தேஹமுடையவன் அழிவதேயில்லை. 

ஸ்ரீ சுகர் சொன்னார்: மேலும் பலவிதமாக சமாதானப் படுத்துகிறார்.  அழுது சிவந்த கண்களையும், முகத்தையும்,துடைத்துக் கொண்டு சித்ரகேது முனிவரிடம் கேட்டான்.

யார் நீங்கள்?  துறவி வேஷத்தில் இருக்கிறீர்கள், அறிவுடைய ஞானிகள், ரகசியமாக இங்கு எப்படி வந்தீர்கள்? பூமியில் பலர் பாகவதர்கள் என்றும் அந்தணர்கள் என்றும் உலவுகிறார்கள். என் போன்ற மந்த புத்திகளுக்கு உபதேசம் செய்ய வருவார்கள்.  குமாரன், நாரதர், அங்கிரஸ், தேவலன், அசிதன், எல்லையில்லாத பெருமை உடைய வியாசர், மார்கண்டேயன், கௌதமர், வசிஷ்டர், பகவான் ராமன், கபிலோ, பாதராயணி,   துர்வாசர், யாக்ஞவல்க்யர்,  ஜாது கர்ணி, ஆருணி, ரோமஸ:. ச்யவனோ, தத்த, ஆசுரி, பதஞ்சலி, ரிஷி வேத கிரா என்பவர், போத்ய:, பஞ்சசிரஸ் என்பவர், ஹிரண்ய நாப:, கௌசல்ய:, ஸ்ருத தேவ, ருதத்வஜ:, இன்னும் பல சித்தர்கள் உலகில் சஞ்சரிக்கின்றனர்.  ஞானிகள், இவர்களில் நீங்கள் யார்? என் துக்கம் பெரிது தாமஸமான இருட்டில் மூழ்கியவன் போல, பாமரனாக இருக்கிறேன். எனக்கு அறிவு என்ற ஒளியைத் தாருங்கள்.

அங்கிரஸ் சொன்னார். பிள்ளையில்லை என்று தவித்த உனக்கு புத்திரனைத் தந்த அங்கிரஸ் நான்.  இவர் ப்ரும்மாவின் மகன் நாரதர்.  நீ புத்ர சோகத்தில் வாடுவதை பார்த்து உன்னை சமாதானப் படுத்த வந்தோம். சாமர்த்யசாலியான நல்ல அரசன்.  மற்றவர்கள் கண்களுக்கு புலனாகாமல் உன்னைக் காண வந்தோம். உனக்கு அனுக்ரஹம் செய்யவே வந்தோம். நீ பகவானின் பக்தன், ப்ரும்ம மார்கத்தில் செல்பவன், இவ்வாறு வருந்துவது அழகல்ல. மற்ற செல்வங்கள் நிறைந்தவன், அனைத்துக்கும் மேல் புத்திரனை வேண்டுகிறானே என்று புத்திரனை தந்தோம். அதனால் மிகுந்த தாபத்தை அனுபவிக்க நேர்ந்து விட்டது  ராஜன், இதே போலத்தான் மற்ற மனைவி, ராஜ்யம்,., வீடு என்று நீ ஐஸ்வர்யமாக  நினைக்கும் அனைத்தும் பிரிவினால் துன்பத்தையே தரும்.  சப்தம் முதலான உணர்வுகள், ராஜ்ய பரிபாலனம் தரும் நிறைவு, நிரம்பியுள்ள பொக்கிஷம், நண்பர்கள், மந்திரிகள்,  அனைவருமே ஸுரசேனா! கனவில் வருவது போன்ற பாத்திரங்களே. எனவே சோகத்தை விடு.  சந்தாபம் தரும் இவை மனிதர்களின் உடலைச் சார்ந்தவை, மனதால் அறிபவை மட்டுமே.  இவை சாஸ்வதமல்ல.  ஆரோக்யமான சிந்தனைகள் உன் மனதில் நிறையட்டும்.  சமாதானப் படுத்திக் கொள். எவருடைய பாதங்களை ஆஸ்ரயித்து மஹாதேவன் முதலானோர்,  நிலையான பலன்களை  அடைந்தனரோ அந்த வழியில் நீயும் நற்கதி அடைவாயாக.   

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், சித்ரகேது சாந்த்வனம் என்ற பதினைந்தாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-28

 

அத்யாயம்-16

தேவரிஷி நாரதர்  அரசனுடைய இறந்த மகனைக் காண செய்தார்.   அந்த ஜீவனிடம் நாரதர், ஜீவாத்மன்! இதோ பார்,  உன் தந்தை, தாய், உறவினர்கள், அனைவரும் உன் பிரிவால் வருந்துகிறார்கள்.  திரும்பவும் இந்த சரீரத்தில் நுழைந்து போகங்களையும், அரச பதவியையும் அனுபவிப்பாய் என்றார்.

அந்த ஜீவன் கேட்டது: எந்த ஜன்மத்தில் இவர்கள் என் தாய் தந்தையராக இருந்தனர்.  விணைபயனால் நான்   தேவனாக, மிருகமாக, மனிதனாக என்று பல வித பிறவிகள்.  பந்துக்கள், பங்காளிகள், நண்பர்கள், கண்டு கொள்ளாத மற்றவர்கள், பலர் இருந்தனர்.   கடைகளில் விற்கப் படும் தங்கம் போன்ற பொருட்கள் கை மாறிக் கொண்டே இருப்பது போல ஜீவன்கள் தாய்மார்களின் கர்பத்தில் தோன்றி பிறந்து இறந்து மறுபடி எங்கோ பிறக்கின்றன.  அந்த பொருள்களின் சம்பந்தம் வாங்குபவர், விற்பவர் இடையே இருப்பது போலவே மனித உறவுகளும் அனித்யமானவையே.  தன் கையில் இருக்கும் வரை விலை மதிப்பற்றதாக இருக்கும் ஆபரணம் போல.  உறவும்  ஒட்டுதலும் அவ்வளவே.   நித்யமானது இந்த உலகை ஸ்ருஷ்டி செய்த பகவான் ஒருவரே. அவருக்கு எவரும் மிக பிரியமானவர் என்றோ, பிரியமே இல்லாதவன் என்றோ பாகுபாடு கிடையாது.  தன் பிறர் என்று எண்ணாமல் மனிதனின் காரியங்களில் குண தோஷங்களை மட்டுமே பார்க்கிறார்.  ஆத்மாவுக்கு குணம் தோஷம் க்ரியையின் பலன் என்பது இல்லை.  அது சாக்ஷி மாத்திரமே.

ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு சொல்லிவிட்டு அந்த ஜீவன் மறைந்து விட்டது.  அரசன் ஆச்சர்யத்துடன் இதைக் கேட்டு தன் மனதை சமாதானப் படுத்திக் கொண்டான். பித்ரு காரியங்களைச் செய்து விட்டு,  தன் ராஜ்ய காரியங்களை கவனிக்கச் சென்று விட்டான்.

குழந்தையை கொன்றவர்கள் வெட்கம் தாளாமல், பிராயச் சித்தங்கள் செய்தனர். யமுனை நதிக் கரையில் அந்தணர்களைக் கொண்டு தானங்கள் செய்வித்தனர்.   சித்ரகேதுவும் தன் மனச் சிறையிலிருந்து  யானை குளத்தின் சேற்றில் மாட்டிக் கொண்டு தவித்தது வெளி வந்தது போல இருந்தான்.  காலிந்தீ நதிக் கரையில் விதிகளை அனுசரித்து ஸ்னானம் முதலானவைகளைச் செய்து  முனிவர்களை வணங்கினான். நாரதர் அவருக்கு உபதேசம் செய்தார்.

ओं नमस्तुभ्यं भगवते वासुदेवाय धीमहि ।प्रद्युम्नायानिरुद्धाय नमः सङ्कर्षणाय च ॥ १८॥

नमो विज्ञानमात्राय परमानन्दमूर्तये ।आत्मारामाय शान्ताय निवृत्तद्वैतदृष्टये ॥ १९॥

आत्मानन्दानुभूत्यैव न्यस्तशक्त्यूर्मये नमः ।हृषीकेशाय महते नमस्ते विश्वमूर्तये ॥ २०॥

वचस्युपरतेऽप्राप्य य एको मनसा सह ।अनामरूपश्चिन्मात्रः सोऽव्यान्नः सदसत्परः ॥  यस्मिन्निदं यतश्चेदं तिष्ठत्यप्येति जायते । मृण्मयेष्विव मृज्जातिस्तस्मै ते ब्रह्मणे नमः 

यन्न स्पृशन्ति न विदुर्मनोबुद्धीन्द्रियासवः ।अन्तर्बहिश्च विततं व्योमवत्तन्नतोऽस्म्यहम् ॥  देहेन्द्रियप्राणमनोधियोऽमी यदंशविद्धाःप्रचरन्ति कर्मसु। नैवान्यदा लोहमिवाप्रतप्तं स्थानेषु तद्द्रष्ट्रपदेशमेति 

ओं नमो भगवते महापुरुषाय महानुभावाय महाविभूतिपतये, सकलसात्वतपरिवृढ-निकरकरकमलकुड्मलोपलालितचरणा-रविन्दयुगल परम परमेष्ठिन् नमस्ते ॥  

நாரதரின் உபதேச மந்திரம் தவிர அவர் சொன்ன விஷயங்களை புரிந்து கொண்டு ஏழு நாட்கள்  நீரை மட்டும் குடிப்பவனாக தவம் இருந்தான்.  வித்யாதர பதி என்ற பதவியை அடைந்தான்.  அதன் பின்  தாமரைத் தண்டு போல வெண்மையான, நீல வஸ்திரம் தரித்த கிரீடம் முதலிய ஆபரணங்களுடன், ப்ரஸன்ன முகமாக இருந்த பிரபுவை சித்தர்கள் சூழ இருந்தவராக கண்டான்.  வாயால் எதையும் சொல்ல முடியாமல் தவித்தவன், சமாளித்துக் கொண்டு துதி செய்தான்.

நீ மற்றவர்களிடம் அஜிதனாக- தோல்வியறியாதவனாக இருந்தாலும், சாதுக்களாலும், பக்தர்களாலும் தோற்கடிக்கப் படுகிறாய். ஏனெனில் நீ   கருணை மிக்கவன்.  பகவன் ! உன்னுடைய விபவம் படைப்பதும், காப்பதும், பின் கலைப்பதும்,   அவர்களுக்கும் ஆசையே இல்லையென்றாலும் நீ உன் ஆத்மாவையே தருகிறாய். உன் அம்சம் அவர்களிடத்திலும் காணக்  கிடைக்கிறது.  பரமாணு, பரம மஹத்  ஆனவன் நீ, வேத ரூபி, பொருள்களின் ஆதி அந்தம் நடுவில் எது சாஸ்வதமோ அதுவும் நீயே.  பூமி முதலானவைகளை சூழ்ந்து இருப்பது ஏழு, அதே போல பத்து மடங்கு பெரிதான ப்ரும்மாண்டம் என்ற அண்ட கோசம்- இதில் அணு அளவு உன் கடாக்ஷம் விழுவதே, கோடி கோடி அண்டங்களுக்கு சமம்.  மனிதர்கள் இன்பங்களை நுகர்வதில் ஆசை மிக்கவர்கள்.  உன்னை உபாசிப்பதில் நாட்டம்  கொள்வதில்லை.  ராஜ குலத்தில் நம்பிக்கை வைத்தவர்கள், வசதிகள் பெற்றவர்கள், அந்த குலம் அழிந்தால் தாங்களும் அழிவார்கள்.  பலனை வேண்டி உன்னை பஜித்தவர்கள் அந்த பலனைப் பெறுவதோடு, உன்னிடம் பக்தியும் வளர்த்து கொள்கிறார்கள்.

எனவே, பகவன்! தேவ ரிஷி நாரதர் உபதேசம் பெற்ற பின்,  உங்கள் தரிசனமும் கிடைக்கப் பெற்று பரிசுத்தமானேன்.  வேறு விதமாக  எப்படி இருக்க முடியும்?

இங்கு நடந்ததும் தாங்கள்  அறிந்திருப்பீர்கள்.  பரமகுரோ ! எது தேவையென்று பிரார்த்திப்பேன்.  ஞானம் என்ற ஸூரியனே  கிடைத்தபிறகு, தாரகைகள் எதற்கு. நமஸ்துப்யம் பகவதே!  பரம ஹம்ஸாய நம: – துரவசித ஆத்ம கதயே நம:,  சகல ஜகதீசாய நம:.

பூ மண்டலத்தை தாங்கி நிற்கும்  ஆயிரமாயிரம் தலைகளுக்கு நமஸ்காரம்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு துதி செய்தபின், பகவானும் ஆசிர்வதித்தார். நாரதன், ஆங்கிரஸ் உபதேசத்தால்  சித்தனானாய்.  ராஜன்! நல்ல வித்யை கிடைக்கப் பெற்றாய். என் தரிசனமும்.  நானே சகல பூதாத்மா. பூத பாவனன்.  சப்த ப்ரும்மும் நானே. பர ப்ரும்மம் என்ற சாஸ்வதமானவனும் நானே.  என் ஆத்மாவை லோகத்திலும் என்னிடத்தில் லோகத்தையும் காணலாம்.  பாதி கனவில் விழிப்பது போலத்தான் வாழ்க்கையில் நடப்பதும் நடந்ததும்.  இளமை, முதுமை என்ற அவஸ்தைகள்  வரும். பற்றின்றி இவைகளைக் கடந்து ப்ரும்ம ஞானத்தை அடைவாய்.   ராஜன்!  இந்த விஷயங்களை சிரத்தையாக மனதில் கொண்டு, நல்ல ஞானம், மேலும் மேலும் அதை வளர்த்துக் கொண்டு விக்ஞானியாக ஆவாய். இவ்வாறு பகவான், சித்ரகேதுவை சமாதானம் செய்து விட்டு மறைந்தார்.  

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், சித்ரகேதுவின் பரமார்த்த தரிசனம்  என்ற பதினைந்தாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-65

அத்யாயம்-17

அதன் பின்  வித்யாதரன் என்ற ஆகாயத்தில் சஞ்சரிக்கும்  நிலைக்கு உயர்ந்த சித்ரகேது பகவான் இருந்த திக்கை நோக்கி வணங்கி விட்டு ஆகாயத்தில் சஞ்சரிக்கலானான்.  முனிவர்கள், சித்த சாரணர்களைக் கண்டும், குலாவியும், அவர்களுடன் பல லக்ஷ வருஷங்கள்,  குறைவில்லாத பலத்துடன்  பல க்ஷேத்ரங்களை  தரிசித்தான். குலாசலம், என்ற மலையின் சரிவுகளில், ஹரி பஜனையை வித்யாதர ஸ்த்ரீகளுடன் சேர்ந்து பாடியபடி அனுபவித்தான். இந்த இடம் பலவிதமான சங்கல்பங்களை நிறைவேற்றும் என்பது ப்ரசித்தம்.  ஒரு முறை பகவானே கொடுத்த ப்ரகாசமான விமானத்தில், பகவான் கிரீசனை தரிசித்தான். உடன் சித்த சாரணர்களும் இருந்தனர்.   தன் சரீரத்தில் ஒரு பாகமாக அங்கீகரித்த தேவியை அணத்தபடி முனிவர்களுடன் பேசிக் கொண்டிருந்தவரைப் பார்த்து தேவி பார்த்திருக்கையிலேயே பலமாக சிரித்தான்.

சித்ரகேது சொன்னான்: இவர் லோக குரு.  மனிதர்களுக்கு தர்மத்தை உபதேசிப்பவர்.  இந்த முக்யமான சபையில் மனைவியுடன் தம்பதியாக  அணைத்தபடி, ஜடாதாரி, தீவிரமான தவம் செய்தவர், பாமரன் போல வெட்கம் இன்றி மனைவியுடன்  பொது இடத்தில் இருக்கிறாரே,  பாமரன் கூட யாருமறியாமல் தான் பெண்ணுடன் கூடுவான். மஹா வ்ரத தரன் என்று பெயர் பெற்றவன், சபையில் பெண்ணை மடியில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்றான்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: பகவானும் அதைக் கேட்டு மெல்ல சிரித்து விட்டு பேசாமல் இருந்தார். சபையினரும் எதுவும் சொல்லவில்லை.  அசோபனமான இந்த வார்த்தைகளைக் கேட்டு, தேவி வெகுண்டாள். வீர்ய விதுஷி எனப்படும் அவள், தன் எல்லையைக் கடந்த த்ருஷ்டன்- தன்னைப் பற்றி உயர்வாக எண்ணுபவன்- அவனைப் பார்த்து கோபத்துடன், யார் இவன், உலகில் தண்டிக்கும் தகுதி பெற்ற ப்ரபுவோ?  இவனைப் போன்ற துஷ்டர்கள், விபரீதமாக அடக்கமின்றி பேசும் வீணர்கள் எதையும் அறியாமல் பிதற்றுகிறார்கள்.  பத்மயோனியான  ப்ரும்மாவுக்கு ஏதாவது தெரியுமா?  ப்ரும்ம புத்திரரான நாரதர், ப்ருகு போன்றவர்கள் தான் அறிவார்களா? குமாரர்கள், கபிலர், மனு இவர்கள் தான் ஏதாவது அறிவார்களா?  இவர்கள் ஹரன் செய்வது அநியாயம் என்று  ஏன் தடுக்கவில்லை?  இவர்கள் ஹரனின் பாதங்களை ஜகத்குரு என்று வணங்குபவர்கள். ஹரன் தானே மங்கள மங்களமானவன் என்பதை அறிந்தவர்கள்.  இந்த க்ஷத்ரபந்து (வசைச் சொல்) த்ருஷ்டன் சொல்கிறான் – இவனே தண்டிக்கப் பட வேண்டியவன். இவன் வைகுண்ட பதவியை அடைய தகுதியுடையவன் அல்லன்.  மதிப்புக்குரிய ஒரு பெரியவரை அவமதித்த இவன் பாபம் செய்தவர்கள் அடையும் ஒரு அசுர குலத்தில் பிறக்கட்டும்.  மகனே, துர்மதியுடையவனே,  போ,  மேலும் ஏதாவது தவறாக செய்யும் முன் விலகு என்றாள்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு சபிக்கப் பட்ட சித்ரகேது தன் தவற்றை உணர்ந்தவனாக, விமானத்திலிருந்து இறங்கி தேவியிடம் மன்னிப்பு கேட்டான்.  விழுந்து வணங்கினான். அம்பிகே, தங்கள் சாபத்தை ஏற்றுக் கொள்கிறேன்.  என் அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்.  மனிதர்களுக்காக சொன்னதை அறியாமல் மோகத்தால் சொல்லி விட்டேன்.  சுக துக்கங்களுக்கு ஆத்மா காரணமல்ல.  அதை மீறிய பரமாத்மாவின் செயல்களில் சாபம் என்ன, அனுக்ரஹம் என்ன இரண்டுமே ஒன்றுதான்.  சுத்த சத்வனான பகவான் ஆத்ம மாயையால் ஜீவன்களை ஸ்ருஷ்டிக்கிறார்.  பந்தமோ, மோக்ஷமோ, சுகமோ, துக்கமோ, நிரஞ்சனான அவர் செயலில் ஆசையோ, ரோஷமோ ஏது?   அதனால் தேவி, நான் சாப விமோசனம் கேட்கவில்லை. என் தவறு, அதற்கான தண்டனையை அனுபவிக்கிறேன்.   தேவி, என் செயலை மன்னித்து அருள வேண்டும்.

ஸ்ரீ சுகர் சொன்னார்:  சித்ரகேது தன் விமானத்தில் புறப்பட்டு சென்றபின், கிரீசன், தேவியிடம்  இந்த  சித்ர கேது ஹரி பக்தன், அவருடைய உயர்ந்த குணம் அவனடியார்களிடமும் தென்படுகிறது.  நாரயணனை நம்பியவன் யாரிடமும் எதற்கும் பயப்படுவதில்லை. சுவர்கம், நரகம் இரண்டையுமே சமமாக எண்ணத் தெரிகிறது.  கனவில் காணும் கயிற்றில் பாம்பு போல மனித மனம் உண்மையை உணர்ந்த பின் சமாதானம் அடையும்.   

தேவியின் சாபத்தை ஏற்று, சித்ரகேது  தானவனான த்வஷ்டாவின் மகனாக பிறந்தான்.  நீ கேட்டாயே, விருத்திரன் எப்படி அசுரன் ஆனான், அவனுக்கு ஹரி ஸ்மரணம் வர என்ன காரணம் என்று, அந்த வரலாறு தான் இது.  ஹரி பக்தனாக இருப்பவன் நன்மையே அடைவான் என்பதற்கு இந்த இதிகாசம் ஒரு சான்று.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், சித்ரகேது அடைந்த சாபம்  என்ற பதினேழாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-41

 

அத்யாயம்-18

தக்ஷனின் மகளான ப்ருஸ்னீ என்பவள் ஸூரியனின் மனைவியானாள்.   சாவித்ரி, வ்யாஹ்ருதி, த்ரயீ, அக்னிஹோத்ரம், பசு, சோமன், சாதுர்மாஸ்யம், மஹா மகான் (பெரிய யாகங்கள்) சித்தி என்பவள் பகனின் மனைவி, அங்க மஹிமானம், ஆசிஷம் என்ற பெண் மகவும், பெற்றாள்.

ப்ரும்மாவுக்கு, குஹோ, சினீவாலி, ராகா, அனுமதி, சாயம், தர்சம், ப்ராத:, பூர்ணமாஸம் அனுக்ரம படி,

அக்னிகளை புரீஷ்யான் என்பவர்களுக்கும், சர்ஷணீ வருணனுக்கும், இவளிடம் ப்ருகு திரும்பவும்  பிறந்தார்.

வால்மீகி மஹா முனிவர்  வல்மீகம் என்ற புற்றிலிருந்து தோன்றினார்.  அகஸ்தியரும், வசிஷ்டரும் மித்ர வருண என்பவர்களிடம் தோன்றினர்.  (இவர்கள்  ஒரு சமயம் ஊர்வசியை கண்டதுமே வீர்யம் வெளிப்பட அதை கடம்- மண் பானையில் வைத்ததாகவும், அதிலிருந்து வசிஷ்டரும், அகஸ்தியரும் தோன்றியதாக வரலாறு)  இந்திரன் தன் மனைவி பௌலோமி என்ற சசியிடம் ஜயந்தன்,  ருஷபன், மீடுஷன்  என்றவர்களை பெற்றான்  என்பர்.    மாயா வாமன ரூபம் எடுத்த பகவான், கீர்தி என்ற பத்னியிடம் ப்ருஹஸ்லோகன் என்பவனையும் அவனுக்கு சௌபகா என்ற சிலரும் பிறந்தனர்.  காஸ்யபருடைய சரித்திரத்தை பின்னால் சொல்கிறேன்.  கஸ்யப தாயாதிகள், திதி புத்திரர்கள் கதையைச் சொல்கிறேன். இதில் பாகவதனான ஸ்ரீமான் ப்ரஹ்லாதன், பலி என்பவர்கள் தோன்றினர்.

திதி புத்திரர்கள் இருவர், ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்று பெயர்கள்.  ஹிரண்யகசிபுவின் மனைவி கயாது என்ற தானவி. ஜம்பனுடைய மகள். அவளுக்கு நான்கு குமாரர்கள்.   சம்ஹ்லாதம், அனுஹ்லாதம், ஹ்லாதம், ப்ரஹ்லாதம் என்பது அவர்கள் பெயர்கள். அவர்கள் சகோதர் சிம்ஹிகா ராஹுவை பிடித்தாள்.  ராஹுவின் தலையை ஹரி, அம்ருதத்தை குடித்துக் கொண்டிருக்கும் சமயம் தன் சக்ரத்தால் துண்டித்தார்.  சம்ஹ்லாதன் மனைவி க்ருதி பஞ்சஜனம் என்பவனையும், ஹ்லாதனின் மனைவி தமனி வாதாபி இல்வலன் என்பவர்களையும்,  இவர்கள் இருவரும் அகஸ்தியர் அதிதியாக வந்த சமயம் அவரால் வயிற்றில் ஜீரணிக்கப் பட்டனர்.  அனுஹ்லாதன் மனைவி ஸூர்மி- பாஷ்கலன், மஹிஷன் என்பவர்களையும், விரோசனன் ப்ரஹ்லாதன் மகன், அவன் மகன் பலி.

பாணன் நூறு பிள்ளைகளை அஸ்னா என்பவளிடம் பெற்றான்.   பாணன் கிரீசனை ஆராதித்து, அவர் கணங்களின் தலைவனாக ஆனான்.  சாக்ஷாத் பகவான் கிரீசன் அவருடைய நகர பாலகனாக இருந்தார். 

திதியின் மற்ற புத்திரர்கள்: மருத் என்பவர்கள் நாற்பத்து ஒன்பது பேர்.  இவர்கள் இந்திரனுக்கு சமானமாக இருந்தாலும் இவர்களுக்கு வாரிசு இல்லை.

பரீக்ஷித் ராஜா வினவினான்: ஏன்? எதனால் அசுரத்வம் என்பதாலா? இந்திரனுக்கு சமமாக எப்படி ஆனார்கள்?  முனிவரே! மற்றவர்களும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். அந்த சரித்திரத்தைச் சொல்லுங்கள். அவரும் சொல்ல தயாரானார்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: திதியின் மகனை, இந்திரனுடன் அருகில் இருந்து பகவான் விஷ்ணு வதைத்தார். கோபமும் வருத்தமும் மேலிட திதி என்ன செய்வது என்று யோசித்தாள்.  சகோதரனைக் கொன்றவன் இந்திரன்.  சற்றும் இரக்கம் இல்லாமல், கொன்றதுமல்லாமல், பச்சாதாபமும் இல்லாமல் தன் சுகமே பெரிதாக இருக்கிறான்.  மரணமடைந்த உடலை கிருமிகள் தின்று தீர்த்தால், க்ருமய என்றும், நாய் போன்ற பிராணிகள் அழித்தால் விஷ்டய என்றும்,  நெருப்பில் தகித்தால், பஸ்மம் என்றும் சொல்லப்படும் தன் தேக சுகத்துக்காக, மற்ற ஜீவன்களிடம் விரோதம் பாராட்டுகிறான், அழிக்கிறான். அவன் தன்னலம் தவிர வேறு என்ன அறிவான், (தானும் அதே போன்ற தேஹி- உடலையுடையவன் தானே, இதே கதி தானே நமக்கும்வரும் – என்பதாக ) இந்த இந்திரனுடைய மதம்- கர்வம் இதை அடக்கக் கூடிய புத்திரன் எனக்கு வேண்டும் என்று கணவன் காஸ்யபரை நச்சரித்தாள்.  அவரும் சம்மதித்தார்.  மனதுக்கு இசைந்த மனைவி, கேட்பதை பொதுவாக கணவன்மார் மறுப்பதில்லை. என்ன வரம் வேண்டுமோ கேள் என்றவரிடம், இந்திரனைக் கொல்லும் மகன் வேண்டும் என்று திதி யாசித்தாள்.   என் இரு பிள்ளைகளயும் கொன்றவன் அவன்.  இதைகேட்ட காஸ்யபர் திடுக்கிட்டார்,  என்ன வேண்டும் கேள், என்று வாக்கு கொடுத்தபின் மீறவும் முடியாது. இந்திரனும் பிழைக்க வேண்டும் – என்ன செய்யலாம் என்று யோசித்து, அவளிடம் ‘ அப்படியே ஆகட்டும். உன் விருப்பப்படியே மகன் பிறப்பான். ஒரு வருஷம் விரதம் மேற்கொள்.   அவளும் சம்மதித்து,  விரத நியமங்களை முழுவதுமாக கேட்டுத் தெரிந்து கொண்டாள்.

காஸ்யபர் சொன்னார்: எந்த பிராணியையும் ஹிம்சிக்க கூடாது. யாரையும் சபிக்க கூடாது. பொய் சொல்லக் கூடாது. நகங்களை, ரோமங்களை வெட்டக் கூடாது.  அமங்களமான பொருட்களைத் தொடக் கூடாது. நீரில் மூழ்கி ஸ்னானம் செய்யக் கூடாது. துர்ஜனங்களேயானாலும் அவர்களை கோபிக்க கூடாது, பேசவும் வேண்டாம்.  மீந்து போன பழைய உணவை சாப்பிடக் கூடாது. மாமிசமோ, சாதாரணமாக நல்லதல்ல என்று சொல்லப் படும் பொருட்களை சாப்பிடாதே.  அஞ்சலியால் தண்ணீர் குடிப்பது, சந்த்யா காலங்களில் விரித்த கேசத்துடன் வெளியில் நடமாடாதே,  கால்களை அலம்பாமல் தூங்கப் போகாதே, சந்த்யா காலங்களில் தூங்காதே, விடியுமுன் எழுந்து தினசரி நியமங்களை, ப்ராம்மணர்கள், பசு, லக்ஷ்மீ, ஸ்ரீமன் நாராயண பூஜை  முதலிய பூஜைகளை விடாமல் செய்.  இவ்வாறு ஒரு ஆண்டு முழுவதும் ஸ்ரத்தையுடன் செய், உன் விருப்பப் படி மகன் பிறப்பான் என்று சொல்லி, அவளுக்கு கர்பாதானம் என்பதை செய்து விட்டு, புறப்பட்டு போனார். இந்திரனும் அவர் எண்ணத்தை புரிந்து கொண்டவனாக ஆஸ்ரமத்தில் திதிக்கு பணிவிடைகள் செய்து வந்தான்.

தினமும் வனத்திலிருந்து பூவோ, பழங்களோ, சமித், குசம் முதலிவைகளோ, இலைகளோ, நீரோ, அந்தந்த சமயம் தேவையறிந்து கொண்டு வந்து கொடுத்தான்.   எந்த விதத்திலாவது அவள் தன் விரதத்தில் தவறு செய்வதையே எதிர் நோக்கி காத்திருந்தான்.  வேட்டையாடுபவன் வஞ்சனையாக மிருகத்தை தொடருபவன் போல பரிசாரகனாக நாடகமாடினான்.  ஒருநாள், களைத்தவளாக, சந்த்யா காலத்தில் தூங்கி விட்டாள். கால்களை அலம்பாமல் தூங்குவதைக் கண்ட இந்திரன் யோக மாயையால் பரகாய ப்ரவேசம் எனும் – வேற்று உடலில் பிரவேசிப்பது எனும் செயலை செய்து அவள் உதரத்தில் புகுந்தான்.  பொன் போல பிரகாசமாக இருந்த சிசுவை தன் வஜ்ராயுத்தால் ஏழாக சிதைத்து விட்டான்.   சிதைக்கப் பட்ட பின்னும் , அம்மா என்று அழுத குழந்தைகளை சமாதானப் படுத்துபவன் போல ஒவ்வொன்றையும் ஏழு ஏழாக சிதைத்தான். அதன் பின்னும் அந்த சிசுக்கள், இந்திரனிடம் சொல்லிற்று.  ஹே இந்த்ர! நாங்கள் மருத்- காற்றின் சகோதர்கள்.  ஏன் பயப்படுகிறாய் என்றன.  அதைக் கேட்ட இந்திரன், அடிப்பதை நிறுத்தினான்.  நீங்கள் என் சகோதரர்கள், என்னுடனேயே இருங்கள் என்று மருத் கணங்கள் என்று அவர்களை ஏற்றுக் கொண்டான்.  அதுவும் பகவான் ஸ்ரீநிவாசனின் கருணையே.  த்ரோண புத்திரனின் அஸ்திரத்திலிருந்து நீ பிழைத்தது போலவே அந்த சிசுக்களும் பிழைத்தன.  அவைகளும்  நாற்பத்தொன்பது மருத் கணங்களாக இந்திரனுக்கு சமமான அந்தஸ்தை பெற்றன. ஓராண்டுக்கு சிறிதே குறைவான நாட்கள் திதி ஸ்ரீ ஹரியை ஆராதித்து வந்ததன் பலன் அவள் குழந்தைகள் பிழைத்தன.

விழித்து எழுந்த திதி  இந்திரனிடம் வினவினாள். கடினமான விரதத்தை அனுசரித்து ஒரு மகனை பெற நினைத்தேன். இந்த குழந்தைகள் எப்படி வந்தன? இந்திரன் தான் செய்ததைச் சொல்லி ‘தாயே உன் சங்கல்பம் எனக்கு எதிரான மகன் என்று இருந்ததால் நான் அருகிலேயே இருந்து உன் விரதத்தை கெடுக்கவே முயன்றேன். சந்த்யா காலத்தில் தூங்கிய சமயம் விரத பங்கமானதைக் கண்டு கர்பத்தைக் கலைத்தேன். தர்மம் அல்ல – புத்தியில்லாமல் நான் செய்த செயல்.  ஏழாக சிதைத்த பின்னும் அவை அம்மா என்று அழுதன.  திரும்பவும் ஏழாக துண்டித்தேன். பகவானை நீங்கள் ஆராதித்து வந்தது வீணாகுமா? அவைகள் அழியவில்லை.  ஸ்ரீ ஹரியின் க்ருபையால் எனக்கு சமமான அந்தஸ்துடன் மருத் கணங்களாக இருப்பார்கள். தாயே! என்னை மன்னித்து விடுங்கள்.  சுய நலமே பெரிதாக எண்ணி அல்பனாக நான் செய்த செயல்.  நல்ல வேளையாக இந்த சிசுக்கள் உயிருடன் இருக்கின்றன.  திதியும் அனுமதித்து விடை கொடுக்க இந்திரன் கிளம்பிச் சென்றான்.

இது தான் அரசனே! மங்களமான மருத் கணங்கள் பிறந்த கதை.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், மருதுத்பத்தி கதனம்  என்ற பதினெட்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-78

 

அத்யாயம்-19

பரீக்ஷித் ராஜா வினவினான்.   ப்ரும்மன்! பும்சவனம் என்ற விரதம் பற்றிச் சொல்லுங்கள்.    இந்த விரதம் ஸ்ரீ விஷ்ணு பகவானின் அனுக்ரஹத்தை தரும் என்பதால் அதை நன்றாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: மார்கழி மாதம் சுக்ல பக்ஷத்தில் பெண்கள் கணவன் அனுமதி பெற்று, இந்த விரதத்தைச் செய்யலாம்.  விரும்பிய வரம் அளிக்கும். இந்த மருத் கணங்கள் பிறந்த கதையை கேட்டுவிட்டு,  பல் துலக்கி, குளித்து, வெண் நிற ஆடையணிந்து அலங்கரிக்கப் பட்ட மண்டபத்தில் ஸ்ரீ தேவியுடன் பகவான் விஷ்ணுவை ஆராதிக்க வேண்டும்.  

अलं ते निरपेक्षाय पूर्णकाम नमोऽस्तु ते । महाविभूतिपतये नमः सकलसिद्धये ॥ ४॥

यथा त्वं कृपया भूत्या तेजसा महिमौजसा ।-जुष्ट ईश गुणैः सर्वैस्ततोऽसि भगवान् प्रभुः ॥ ५॥

विष्णुपत्नि महामाये महापुरुषलक्षणे ।प्रीयेथा मे महाभागे लोकमातर्नमोऽस्तु ते ॥ ६॥

ओं नमो भगवते महापुरुषाय महानुभावाय-महाविभूतिपतये सह महाविभूतिभिर्बलिमुप-

हराणीति अनेनाहरहर्मन्त्रेण विष्णोरावाहना-र्घ्यपाद्योपस्पर्शनस्नानवासौपवीतविभूषण-

गन्धपुष्पधूपदीपोपहाराद्युपचारांश्च-समाहितोपाहरेत् ॥ ७॥

அதன் பின் பன்னிரண்டு ஆஹுதி இந்த மந்திரங்களுடன் சொல்ல வேண்டும். 

ओं नमो भगवते महापुरुषाय महाविभूतिपतये स्वाहेति ॥

வேண்டும் வரங்களை நினைத்துக் கொண்டு  ஸ்ரீ தேவி, பகவான், இருவரையும், பக்தியுடன் பூஜிக்க வேண்டும். விழுந்து நமஸ்கரித்து பத்து முறை இந்த மந்திரத்தைச் சொல்லி, துதிகளையும் சொல்லவேண்டும்.

நீயே விஸ்வம் உண்டாக காரணமான விபு. இந்த ப்ரக்ருதி, இயற்கை உன் மாயையே. இதை மீற முடியாது.  இதன் அதீஸ்வரன் நீயே.  பர புருஷனான நீ தான் யாக மூர்த்தி என்று வணங்குகிறேன்.  செய்பவனும் நீயே, செயலின் பலனும் உனதே. தேவி, நீயே சரீரத்தில் ஆத்மாவாக நிறைந்துள்ளாய்.  இருவருமாக உலகில் வரம் அருளும்  பரமேஷ்டி எனப்படுகிறீர்கள். எனவே, எனக்கு உங்கள் ஆசிகள் பரிபூர்ணமாக கிடைக்கட்டும்.

இவ்வாறு ஸ்ரீநிவாசனை தேவியுடன் சேர்த்து பூஜித்து,  உபசாரங்கள் செய்து ஆசமனீயம் செய்து முடிக்க வேண்டும்.  தெரிந்த துதிகளைச் சொல்லி,  இருவருமாக பூஜித்தல் நலம்.  இது ஒரு விரதம் விஷ்ணுவை வேண்டி செய்வது.  இந்த பூஜையை பன்னிரண்டு மாதங்கள் அனுசரிக்க வேண்டும்.  கார்த்திகை மாதத்தின் கடைசி நாள் முடிக்க வேண்டும்.  மறுநாள் புனர் பூஜை செய்து பாயசம் நைவேத்யம் செய்து பந்துக்களுடன் விருந்துண்ண வேண்டும். மீதியான பாயசத்தை கணவன் மனைவிக்கு கொடுத்து இருவருமாக நல்ல புத்திரனை வேண்டி சாப்பிட வேண்டும்.

விதிகளுடன் இந்த பூஜையை செய்து விரும்பியதை அடையலாம். பெண்கள் இந்த விரதத்தை அனுசரித்து, நல்ல கணவன், செல்வம், நீண்ட ஆயுள், புகழ், வீடு வாசல்கள் என்பவைகளைப் பெறலாம். கன்யா பெண்கள் நல்ல பதியை வேண்டியும்,  அழகிய லக்ஷணம் வேண்டியும், மகன் நீண்ட ஆயுளுடன் இருக்கவும், தன தான்யங்கள் நிறைந்த சுகமான வாழ்க்கையையும் பெறலாம்.  ப்ரசன்னமாக ஆன ஸ்ரீதேவி யுடன் கூடிய பகவான் எல்லா நன்மைகளையும் அருளுவார்கள். அரசனே!   இது தான் திதி செய்த விரதம்.  

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், பும்சவன விரத கதனம்  என்ற பத்தொன்பதாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-18

இத்துடன் ஆறாவது ஸ்கந்தம் முடிவடைகிறது

 ||ஓம் தத் ஸத்  ||

ஸ்ரீமத் பாகவதம்  –

ப்ரிய வ்ரத விஜயம் என்ற  ஐந்தாவது ஸ்கந்தம் || ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||

அத்யாயம்-1

ராஜா பரீக்ஷித் தன் சந்தேகத்தைச் சொன்னார்:  ப்ரியவ்ரதன், ஆத்மாராமன்- இல்லற வாழ்கையை துறந்தவன் என்று கேள்வி. குடும்பஸ்தனாக, கர்ம பந்தனாக  மாறியது எப்படி? அது அவருக்கு தலை குனிவு இல்லையா?   துறவி என்று ஆனபின், திரும்ப குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொள்வது முடியுமா?  அவர்கள் வழியே வேறு. மனம் ஒன்றி குடும்பத்தில் ஈடுபடுமா?

சந்தேகம் தான். மனைவி குழந்தைகள் வீடு என்று பற்றுடன் இருப்பவர்கள் அதிலிருந்து விடுபட்டு ஸ்ரீ ஹரியிடம் பக்தி செய்து மனம் மாறியது கேட்டிருக்கிறோம்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: சரியான கேள்வி. உத்தமஸ்லோகன் என்று வர்ணிக்கப் படும் பகவானின் சரணாரவிந்தங்களில் முழுமையாக ஈடுபட்டவர்கள்,  வேறு எதையும் விரும்ப மாட்டார்கள். அந்த ராஜகுமாரன் ப்ரியவ்ரதன்,  பரம பாகவதரான நாரதரிடம் பயின்றவன்.  பரமார்த்த தத்வத்தை உள்ளபடி அறிந்தவன்.  ப்ரும்மசத்ரம்- என்ற ஒரு யாகம், அதைச் செய்ய தீக்ஷை எடுத்துக் கொண்டான். பூமியை ஆள தேவையான எல்லா குண நலன்களையும் குறைவற பெற்றவன். தன் தகப்பனார் சொன்னதின் பேரில், பகவான் வாசுதேவனிடம் அனைத்தையும் சமர்ப்பித்தவனாக,  அவரை முன்னிட்டு, அல்லது அவரது வழிகாட்டலில், தன் அனைத்து ராஜ காரியங்களையும் செய்து வந்தான். தனக்கு தலை குனிவு என்று நினைக்கவில்லை. வாசுதேவனின் கட்டளை என்று எடுத்துக் கொண்டான்.

ஆதி தேவனான பகவான் ஸ்வாயம்புவ மனு ஏன் இந்த மாறுதலுக்கு அனுமதித்தார், என்றால், உலக அபிப்பிராயம் அது போல இருந்தது.  ஒரு சமயம் அவர்  தன் பரிவாரங்கள், நிகமங்கள் ஸூழ தன் வாசஸ்தலத்திலிருந்து தான் ஸ்ருஷ்டித்த உலகங்களை காண வந்தார்.

ஆங்காங்கு வானவெளியில் பறவை ராஜன் போல வரிசை வரிசையாக விமானங்களில் மற்றவர்களும் உடன் வர பவனி வந்தார்.  வழியில் சித்த, கந்தர்வ,சாதுக்களான முனிவர்கள் வந்து புகழ் பாட கேட்டு ரசித்தபடி, கந்தமாதன மலை சிகரத்தில் இறங்கினார்.

அங்கு,அவரை தேவ ரிஷிகள், ஹம்ஸ வாகனத்தில், உலக தந்தையான பகவானை ஹிரண்ய கர்பன் என்று போற்றப் படும் அவரை வரவேற்க தந்தையும் தனயனுமாக பரபரப்புடன் கை கூப்பியபடி வந்தனர்.

அவரும் அந்த உபசரிப்பை ஏற்றுக் கொண்டார்.  அரசவை பாடகர்கள் துதி செய்து பாடியதைக் கேட்டவர் தயையுடன் ப்ரியவ்ரதனைப் பார்த்து, சிரித்தபடி சொன்னார்.

ஸ்வாயம்புவ மனு  சொன்னார்:   மகனே, நான் சொல்வதை கேள். இது உலகில் நடைமுறையில் உள்ள சத்யமான சொல்.  புவியில் பிறந்த பின் நமக்கு நம் வாழ்வின் போக்கு எப்படியிருக்கும் என்பது முன்பே தெரிவதில்லை.  அந்தவகையில் மனிதர்கள் பராதீனர்கள் தான். அதற்காக தெய்வத்தை நிந்திக்கவும் வேண்டாம். மஹரிஷிகள் முதல் நாங்களும் முன்னமே விதிக்கப் பட்டதைத்தான் அனுபவிக்கிறோம். உடல் எடுத்தவன்,(மனிதன்) தனக்கு பிடிக்கவில்லை என்று உதறவும் முடியாது.  தவமோ, வித்யை என்ற கல்வியோ, யோகமோ, புத்தியோ, அர்த்த தர்மம்- பொருளைக் கொடுத்தோ, மற்றவர் உதவியாலோ மாற்ற முடியாது.  தேகம் அமைந்த விதம், அது வளரும், அழியும், செயல்களைச் செய்யவும், சோகம், மோஹம், சதா பயம், என்றும், சுகம், துக்கம் என்றும், எது எந்த விதத்தில் வரும், அதை அனுபவிக்க மட்டுமே முடியும், முன்னெச்சரிக்கையாக தடுக்கவோ, நல்லதானால் அனுபவிக்கத் தயாராகவோ முடியாது. மகனே, நமது, உடல்,  வாக்கு, இவற்றால் கண்களுக்குத் தெரியாத கயிற்றால் கட்டப் பட்டிருக்கிறோம்.  கால் நடைகளில் மூக்கின் வழியாக கட்டப்படும் கயிறு-மூக்கணாங்கயிறு- அது நம் வசதிபடி உடன் வரவேண்டும் என்று கட்டுகிறோமோ, அதே போலத்தான் இந்த  வேத சாஸ்திரம், மற்றும் சத்வம் முதலான குணங்கள்  என்ற கயிற்றினால் கட்டப் பட்டு .ஈஸ்வரனுடைய பலி கடாவாக இருக்கிறோம். கண்ணால் பார்க்க முடிந்தவன் கண்ணில்லாத ஒருவனை அழைத்துச் செல்வதைப் போல. ஈஸ்வரனால் ஸ்ருஷ்டிக்கப் பட்டதை, சுகமோ, துக்கமோ, அந்தந்த காலத்தில் அனுபவிக்கிறோம்.   தூங்கி விழித்தவன் போல, முன் தினத்தை முற்றிலும் மறந்தவனாக, உண்டு உடுத்து நாளைக் கழிக்கிறோம்.  பயந்தவனுக்கு அரண்யத்திலும் பயம் தான். ஆறு குணங்கள், இவைகளுடன் பிறந்தவன், அதை கட்டுக்குள் வைக்கத் தெரிந்தவன் வீட்டில் இருந்தால் என்ன? வனத்தில் இருந்தால் என்ன? (பிறப்பு, இறப்பு, பயம்,சோகம்,காம,மோகம் என்றவை) நீ பத்மநாபனுடைய சரணாரவிதங்களை ஆஸ்ரயித்தவன், இந்த ஆறு உடன் பிறந்த குணங்களை ஜயித்தவன், மனிதனுக்கு  விதிக்கப்பட்ட போகங்களை அனுபவி. பற்றின்றி இயல்பாக வாழ்கையை நடத்து.  இவ்வாறு மூவுகத்திற்கும் குரு எனப்படும் குல மூத்தவரான பகவான் சொன்னதை சரியென்று ஏற்றுக் கொண்டான்.

மனு பகவானும், நல்ல முறையில் தனது  உபதேசங்களை ஏற்றுக் கொண்டதால் மகிழ்ந்து, ப்ரியவ்ரத நாரதர் இருவரையும் ஆசீர்வதித்து, அவரவருக்கு உரிய வாழ்க்கை முறைகளை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை அடைந்தார்.  சுர ரிஷிகளில் சிறந்தவரான நாரதரை, தன் வம்சத்தினான ப்ரியவ்ரதனுக்கு ராஜ காரியங்களில் உதவ ஏற்பாடு செய்தார்.  இல்லறம், போக வாழ்க்கை என்பவைகள் விஷ ஜலம் நிரம்பிய தடாகம் போன்றது என்று தோன்றினாலும், நாரதர் சரியான குருவாக இருந்து வழி நடத்துவார் என்று நம்பினார். 

ப்ரியவ்ரதனும், ஜகதீபதி-  மஹா ராஜா என்ற பெரிய ராஜ்யாதிபதியானான்.  ஈஸ்வரன் விட்ட வழி என்று தன் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.  பகவான் ஆதி புருஷன், அவர் பாத சேவைகளை விடாமல் செய்து வந்ததால், தெளிவான மனதுடன், எந்த ஸூழ்நிலையிலும் தன் கொள்கைகளை கை விடாமல் அந்த பெரிய ராஜ்யத்தை ஆண்டு வந்தான்.

ப்ரஜாபதி விஸ்வகர்மா என்பவரின் மகள் பர்ஹிஷ்மதி என்பவளை மணந்து தனக்கு சமமான குணம்,  சீலம், செயல் திறம், ரூபம், வீர்யம் உதார குணம் இவைகளுடன் பத்து பிள்ளைகளும், இளையவளாக உர்ஜஸ்வதி என்ற பெயருடன், மகளையும் பெற்றார். ஆக்னீந்த்ரன், இத்ம ஜிஹ்வன்,யக்ஞ பாஹு, மகாவீர,ஹிரண்யரேதஸ், க்ருத ப்ருஷ்ட, சவனமேத, அதிதி, வீதி ஹோத்ர, கவய என்று அனைத்தும் அக்னியின் பெயர்களே.

இவர்களில், கவி, மஹாவீரன்,சவனன் என்ற மூவரும் பாரமஹம்ஸ்யம் எனும் துறவு வாழ்க்கையே ஏற்றனர்.

அவர்கள் சாந்தமாக பரம ரிஷிகளுக்கு சமமான  வாழ்கையை வாழ்ந்தனர்.

பயந்தவர்களுக்கு அபயம் அளிக்கும் வாசுதேவனையே அனவரதமும் தியானிப்பவராக ப்ரியவ்ரதன்  பொது மக்களின் நன்மையே நினைத்து அரச காரியங்களை கவனமாக செய்தார்.   மற்றொரு மனைவியிடம் மூன்று புத்திரர்கள் உத்தம, தாமசோ, ரைவத என்ற பெயர்கள்.  அவர்கள் மன்வந்தராதி பதிகள் ஆனார்கள்.

பல ஆண்டுகள் இவ்வாறு இல்லறத்தை நல்லறமாக வாழ்ந்து வந்த அரசன் சிறிதும் பாதிக்கப்படாத தன் குண நலன்களால்  குறைவற்ற நிறைந்த செல்வம்,  வளமான பூமி, தர்மம் தவறாத ஆட்சி, பர்ஹிஷ்மதியுடன் இனிய தாம்பத்யம், என்று சந்தோஷமாக இருந்தான்.

ஸூரியன் எவ்வாறு சுர கிரியைச் சுற்றி வந்து பாதி உலகை தபிப்பவனாகவும், பாதி உலகை மூடி இருட்டாக்குபவனாகவும் உலகில் அறியப் படுகிறானோ, அதே போல பகவதுபாசனா பலத்தால், சீரான ஒரே வேகம் கொண்ட பிரகாசமான ரதத்தில் ராஜ்யத்தில் சுற்றி வந்து இரவையும் பகலாக்குவேன் என்று முனைந்தான்.

அந்த ரத சக்ரத்தில் ஏழு சமுத்திரங்களும் ஆரமாக இருந்தன.  ஜம்பூ, ப்லக்ஷ, சால்மலீ, குச, க்ரௌஞ்ச,சாக, புஷ்கர என்ற பெயருடைய  தீவுகள். இவை கிழக்கின் கிழக்கிலும், வடக்கின் வடக்கிலும் இரண்டு மடங்காகிக் கொண்டே சென்றன. க்ஷாரோத (உப்புக் கடல்), இக்ஷு ரஸ கரும்பு ரசம் நிறைந்த கடல்) , சுர (மது) ரசம்,(மது-தேன்)  க்ருதோத (நெய்), க்ஷீரோத (பால்) ததி மண்டோத (தயிர்) சுத்தோத (சுத்தமான நீர்)  என்று ஏழு கடல்கள், அந்த ஏழு தீவுகளைச் ஸூழ்ந்து அமைந்திருந்தன. தன் மகன் அக்னீந்திரன் முதலானவர்களை ஒவ்வொரு தீவுக்கும் அதிபதியாக்கினார். ஊர்ஜஸ்வதி என்ற மகளை உசனஸ் (சுக்ராசார்யர்) என்ற முனிவருக்கு கொடுத்தார். தேவயானி என்ற  அவர் மகள் ப்ரசித்தமானாள்.  

இவ்வளவும் செய்தபின் ப்ரியவ்ரதன் மனம் கலங்கினான். இது என் இயல்பு இல்லை என்று உணர்ந்தான். புலனடக்கி அத்யாத்ம வாழ்க்கை வாழ நினைத்தவன் தன் புத்திரர்கள், மனைவி என்று வாழ்ந்தது சரியா என்று சந்தேகம் வந்தது. நாரதரிடமே சரணடைந்தான்.

ஸ்லோகங்கள்:

பகவான் அருள் இல்லாமல் ப்ரியவ்ரதனால் இவைகளை செய்திருக்க முடியுமா? சமுத்திரங்கள் முன்பே பகவானால் தோற்றுவிக்கப் பட்டன.  ப்ரியவ்ரதன் அந்த தீவுகளில் தன் புத்திரர்களை அரசர்களாக்கி அங்கு நகரங்கள், உயிரினங்கள், மனிதன் உட்பட வாழ வகை செய்தனர்.  ஒவ்வொரு தீவும், நதிகளும் , மலைகள், காடுகள் இவைகளுடன் எல்லைக்கு உட்பட்டு இருந்தன.  பூமியை இவ்வாறு வசதிகள் நிறைந்ததாகச் செய்தவன் என்று பாராட்டப் பட்டான்.   

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரியவ்ரத விஜயம்  என்ற ஐந்தாவது  ஸ்கந்தத்தில், முதல் அத்யாயத்தின்  தமிழாக்கம் )  வசன நடையில் உள்ளது.

அத்யாயம்-2

இவ்வாறு தந்தையால் நியமிக்கப் பட்ட ஆக்னீந்திரன்  ஜம்பூ த்வீப தீவில் ப்ரஜைகளை தங்கள்  சொந்த மகன்கள் போல பாலித்தான். தர்மம் தவறாமல் ஆட்சியைச் செய்தான்.  புத்ரனை விரும்பி தவம் செய்ய தேவ லோக பெண்கள் நடமாடும் மலையின்  சிகரத்தில், பூஜைக்கான த்ரவ்யங்களோடு வந்து சேர்ந்தான்.  மனம் ஒன்றி தான் செய்யப் போகும் தவம் பலன் தர வேண்டும் என்று  பகவானை வேண்டியபடி பூஜைகளைச் செய்த பின் தியானத்தில் ஆழ்ந்தான்.  அதை அறிந்த பகவான் ஆதி புருஷன், தன் சபையில் பாடிக் கொண்டிருந்த பூர்வசிதி என்ற அப்சர ஸ்த்ரீயை அழைத்து, அங்கு செல்ல பணித்தார். அவளும் அழகான அந்த ஆசிரமத்தில், பலவிதமான மரங்கள், சிறு தாவரங்கள் நிறைந்த இடத்தில்,  கொடிகள் ஸூழ்ந்து மண்டபமாக இருந்த இடத்தில்,  பறவைகள் ஜோடியாக இருப்பதையும்,  அவைகள் கூக்குரலே வேத மந்திரம் போல ஒலிப்பதையும் ரசித்தவளாக, அருகில் நீர் நிலையில் நீர் கோழிகள், காரண்டவ, கல ஹம்ஸ, இவைகள் வளைய வரும் தாமரைத் தடாகத்தை பார்த்தாள். மென்மையான, நடையுடன்,  அவள் அங்கு சுற்றி வந்த சமயம் கால்களின் நூபுரம் கண கண வென்று ஒலி எழுப்பியது.  அந்த ஓசையால் கவரப் பட்டு நர தேவ குமார:- ராஜ குமாரன், சமாதி யோகம் கலைய, கண்களை சிறிதே திறந்து  நோக்கினான். 

சற்று தூரத்தில், பூக்களை முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவளைக் கண்டான்.  தேவதையா, மனித பெண்ணா மனதை கவரும் அழகுடன் இருக்கிறாள் என்று எண்ணினான்.  வெட்கமும் வினயமுமாக அவள் அங்கு நடந்து செல்வதைக் கண்டவன் மனதில் மன்மதனின் அம்புகள் ஆழப் பதிந்தன.  மென் முறுவலோடு அவள் பேச ஆரம்பித்ததும், தன்னையே மறந்தான்.  மதுவில் மயங்கிய தேன் வண்டைப் போல வேகமாக நடந்து அருகில் சென்றான்.  அவளின் மயில் தோகையை ஒத்த கேசத்திலிருந்து, ஒவ்வொரு அங்கமாக பார்த்து வியந்தான். அவள் திரும்பி பார்த்த சமயம், பகவான் மகரத்வஜன்- மன்மதன் வலையில் வகையாக அகப்பட்டவனாக ஆனான்,  ஜடம் போல தன்னை மறந்து பேசலானான்.

யார் நீ? என்ன வேண்டும்? இது சிறந்த முனிவர்கள் வசிக்கும் மலை. பரதேவதையின் மாயையே உருவெடுத்து வந்தவளா? கையில் எதற்கு வில்? இங்குள்ள சாது மிருகங்களை வேட்டையாடவா?  பகவானின் பாணங்கள்- நூறு இலைகள் வடிவில் உள்ள ஆயுதம், இவை. உன் பற்களா?  யாரைத் தேடுகிறாய்?  சாதுவான என் புத்திக்கு எட்டவில்லை. உன் விக்ரமம் எங்கள் நன்மைக்கே என்று இருக்கட்டும்.   இங்கு பல பெண் மாணவிகள் படிக்கின்றனர். ரகசியத்துடன் கூடிய அஜஸ்ரன்- ஈஸ்வரனை மகிழ்விக்க சாம கானம் பாடுகிறார்கள். உன் கேசத்திலிருந்து விழும் பூக்கள், வேத சாகைகள் பகவானை அர்ச்சிப்பது போல இருக்கின்றன.  தித்திரி- கௌதாரி என்ற பறவை கொஞ்சுவது போல உன் வாக்கை கேட்க விரும்புகிறேன்.  கதம்ப புஷ்பம் போன்ற அங்கங்கள். செதுக்காத சிலை போன்ற உடல், இதில் ரிஷிகளின் வல்கலம் பொருந்துமா? எந்த ஆஸ்ரமத்தை நீ ஒளி பெற செய்கிறாய்? இந்த இரண்டு மலைகளின் நடுவில், சிறுத்த இடம் இதில்,  எதைக் காண வந்தாய்? அருணனின் நிற இந்த பத்மம் போன்ற கண்கள் எந்த ஆசிரம விளக்கை ஒளி பெற செய்கின்றன.  உன் இருப்பிடத்தைக் காட்டு, நண்பனே!   (அல்லது உன்னையே காட்டு)  உன் எழில் நிறைந்த ரூபத்தை நான் முழுதும் காணும் படி நீயும் உன் சம்மதத்தை கண்களால் தெரிவிப்பதாக உணருகிறேன். . அத்புதம். சரஸமான ராஸம் என்ற மது நிரம்பிய உன் முகம்.

அங்கம் அங்கமாக வர்ணிக்கிறான்.  தபோதன! இவைகளை என்ன தவம் செய்து கிடைக்கப் பெற்றாய்?  என்னுடம் தவம் செய்ய வருகிறாயா? எனக்கு அனுக்ரஹம் செய்.  தெய்வமே அனுப்பியது போல வந்திருக்கிறாய். உன்னை விட மாட்டேன். உன்னைக் கண்ட என் கண்கள் அகலவேயில்லை.  அழகிய ஸ்தனங்களை உடைய பெண்ணே!  நீ என்னுடன் இணை பிரியாமல் இரு.  என் தவமும் பலிக்கட்டும். ப்ரும்மா அனுக்ரஹிக்கட்டும்.  

ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு பெண்னை சம்மத்திக்க வைக்கத் தெரிந்த சாதாரண பொது ஜன பரிபாஷைகளால் பேசியே அந்த உயர் குலமான அப்சர ஸ்த்ரீயை தன் வசப் படுத்திக் கொண்டான்.  அவளும் அந்த வீரனான ராஜகுமாரன், புத்தி.சீலம், சம வயது, செல்வம், உதார குணம் இவைகளால் மனம் மகிழ்ந்து பலகாலம் அவனுடன் பூவுலகின் போகங்களை குறைவற அனுபவித்தாள்.ஒன்பது பிள்ளைகளைப் பெற்றாள்.

நாபி, கிம்புருஷ, ஹரிவர்ஷ,இலாவ்ருத,ரம்யக,ஹிரண்மய,குரு, ப்த்ராஸ்வ, கேது மால என்று பெயர்கள். இவர்களைப் பெற்ற பின், அந்த அப்சரஸ்த்ரீ தன் இருப்பிடம் சென்று விட்டாள்.

ஆக்ரீந்திரனின் பிள்ளைகள் தாயின் தொடர்பாலேயே, மிகுந்த பலமும், தந்தை பகிந்து அளித்த ஜம்பு தீபத்தின் பகுதிகளை பல வருஷங்கள் ஆண்டனர்.

ஆக்னீந்திரன் மனைவியை மறக்க முடியாமல் தவித்தான்.  சீக்கிரமே அவன் காலம் முடிந்தது.  அதன் பின் ஒன்பது சகோதரர்களும் மேருதுஹித்ரு, மேரு தேவீம், ப்ரதிரூபா,உக்ரதம்ஷ்ட்ரீம், லதா, ரம்யா, ஸ்யாமா, நாரீ, பத்ரா தேவவதீ என்று ஒன்பது பெண்களைப் மணந்தனர்.  

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரியவ்ரத விஜயம்  என்ற ஐந்தாவது  ஸ்கந்தத்தில், இரண்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் )  வசன நடையில் உள்ளது.

அத்யாயம்-3

ஸ்ரீ சுகர் சொன்னார்: நாபி  , மேரு தேவியை மணந்து, பிரஜைகள் இல்லாமையால், புத்ர வரம் வேண்டி யக்ஞ புருஷன் எனும் பகவானை வேண்டினான்.  சிரத்தையுடன், உள்ளன்புடன் வேண்டுதல்களை செய்தான். அரிதான த்ரவ்யங்கள், சரியான தேச காலங்களை அறிந்து, மந்த்ரங்கள், ருத்விக் தக்ஷிணைகள் என்று சாஸ்திரங்களில் சொல்லியபடி செய்தான்.  அதனால், சாதாரணமாக மனிதனின்  மனம் வாக்குக்கு எட்டாத பகவான், மகிழ்ந்து, தன்னை நம்பியவர்களை எப்பொழுதும் காப்பவன் எனும் தன் வார்த்தையை நிறைவேற்றுபவன் போல,  அவனுக்கு பார்த்த மாத்திரத்தில் மனதை கவரும் அழகிய அங்கங்களுடன் மகனாக பிறந்தார். நான்கு புஜங்களும், நாவல் நிற, பட்டு வஸ்திரமும், மார்பில் பிரகாசமான ஸ்ரீவத்ஸம் எனும் மணியும், வன மாலையும், கதையும், கிரீடமும், குண்டலமுமாக, தக தகக்க, கைகளில் கடகமும், இடையாபரணமும், ஹார கேயூரங்களும் நூபுரம் முதலிய மற்ற பூஷணங்களும் பிரகாசிக்க, ரிஷிகள், அரச சபையினர், குடும்பஸ்தர்கள், கௌரவம் மிக்க அதிகாரிகள், அனைவருமே,  பரம ஏழை மிகப் பெரிய செல்வத்தை அடைந்தது போல மகிழ்ந்தனர்.  தலை குனிந்து வணங்கியபடி காண வந்தனர். 

ரித்விக்குகள் சொன்னார்கள்:  உங்களுடைய அடியார்கள் நாங்கள். எங்கள் வணக்கம் உங்களுக்கு உரியதாகுக. நல் உபதேசம் பெற்றவர்கள்  கூட உலக வாழ்கையில்  மூழ்கி இருப்பவர்கள் ஈசன், ஈசன் அல்லாதவன் ,  இவைகளுக்கும் மேம்பட்ட புருஷன், தன் வசத்தில் இயற்கையை வைத்திருப்பவன், தன் விருப்பப்படி படைப்புத் தொழிலைச் செய்பவன், இருந்தும் ப்ரக்ருதி, புருஷன் என்ற இரண்டிற்கும் அப்பாற்பட்டவன்  ஆயிரக் கணக்கான பெயர்களில் துதி செய்யப் படுபவன்,   என்றுள்ள உங்கள் ரூபத்தை முழுமையாக எடுத்துச் சொல்லவா முடியும்?

உடன் இருப்பவர்கள் அன்புடன்  புகழ் பாடுவார்கள்.  அதனுடன் இணைந்து  துளசி தளங்கள். மணம் வீச பலவிதமான பூக்களும் , துளிர்களும் கொண்டு பூஜை செய்வர்.   இதில் தாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறீர்கள். அதை விட அதிகமாக கடினமான யாக காரியங்கள் செய்து, உங்கள் அருள் செல்வத்தை அடைகிறோம். தங்களைப் போலவே, ஒவ்வொரு யாகத்திலும், அனாயாசமாக பல மாறுதல்கள், மேம்பாடுகள் செய்து, அனேக புருஷார்தங்கள் என்ற நன்மைகளை அடைகிறோம். உங்கள் ஆசிகளும், நல் வாழ்த்துக்களும் எங்களுக்கு பூரணமாக இருக்க வேண்டும்.

 அறியாமயால் சிலர் தன் நலனுக்காக வரம் வேண்டுபவர்களாக இருக்கலாம். விஷயம் அறிந்தவர்கள், பரம புருஷனை அறிந்தவர்கள்.  அவர் கருணையை உணர்ந்தவர்கள் ஆதலால் அபவர்கம் என்ற மிகச் சிறந்த வரத்தை அவராகவே அளிக்கும் சமயம், வேறு எதையும் யாசிக்க மாட்டார்கள். ஆகையால், அர்ஹத்தம- மகானான தாங்கள் தரிசனம் கிடைத்த பின் வேறு என்ன வேண்டும்? நன்மைகள் தானே வந்து சேரும். எனவே, பர்ஹிஷ ராஜ ரிஷிக்கு, வரத ரிஷபனான  உங்கள் தர்சனமே பரம மங்களம்.  தீயில் பொசுக்கியது போல எங்கள்  குணக் குறைவு  லவ லேசமும் மீதியில்லாமல் பொசுக்கி விட்டது.   தூய்மையானவர் தாங்கள்.  முனிவர்கள் அனவரதமும் மனதில் எண்ணி துதிக்கும் மரம மங்களமான சரித்திரங்கள் உடையவர்.எதோ  விதத்தில் கவனக் குறைவோ, பசி, தாகம் இவற்றாலோ, உடல் உபாதையாலோ, தவறு நேர்ந்தாலும் , ஜுரம், மரண தசையால் செய்யாமல் விட்டாலும் எங்கள் ஸ்மரணம் தவறாமல் இருக்க வேண்டும். உங்கள் நாமங்கள் மறக்காமலும், பெரியவர்களின் பஜனைகள் காதுகளில் ஒலித்துக் கொண்டும் இருக்க வரம் வேண்டும்.

அது தவிர, இந்த ராஜ ரிஷி மகனை வேண்டுகிறான். ப்ரஜைகளை ஆளும் தகுதியுடன் இவனுடைய சந்ததியினர் பிரஜைகளுக்கு தேவையானவைகளை செய்யவும் தனதன் போல செல்வ செழிப்புடன் இவன் பிரஜைகளும் இருக்க வேண்டும், உங்களுடைய ஆசிகளும், அனுக்ரஹமும் ஸ்வர்க ப்ராப்தியை விட மேலானது.

 யார்தான் மீற முடியாத உங்கள் மாயையை தாண்டி, உலகியல் இன்ப துன்பங்களை கடந்து உங்கள் சரணத்தை நினைப்பார்கள்.  பொருளையே உயர்வாக நினைக்கும் மந்த மதிகள், அறியாமல் செய்த சிறு குறைகளையும் மன்னித்து ஏற்றுக்  கொள்ள வேண்டுகிறோம்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: இந்த துதிகளைக் கேட்டு தேவர்கள் தலைவனான (அனிமிஷ ருஷபோ- தேவர்கள் கண்கள் இமைப்பதில்லை என்பதால் அனிமிஷ – அவர்கள் தலைவன்) வர்ஷ தரன்- மழை பொழிபவன் -இந்திரன்- அவனால் வணங்கப் பட்ட சரணங்கள் உடையவர் தயையுடன் சொன்னார்:  அஹோ! ரிஷிகளே, சொல்லுங்கள்.  நீங்கள் தெளிவான உங்கள் சொற்களால், கஷ்டமான வரங்களை யாசித்திருந்தாலும், என் வம்சத்தினன் எனக்கு சமமாக ஆவான் கைவல்யம் என்ற ப்ரும்ம பதவியை தரக் குறைவாக எண்ணக் கூடாது. என் முகத்திலிருந்து வந்தது தானே, அந்தணர்கள், தேவர்கள் குலமும்.  ஆக்னீந்த்ரனின் மகனுக்கு மகனாக நானே அவதரிக்கிறேன்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு வரமளித்து விட்டு மறைந்து விட்டார்.

விஷ்ணு தத்தன் என்ற பெயருடன், மகிழ்ச்சியுடன் நாபி என்ற அந்த அரசனுக்கு பிரியமாக எதாவது செய்ய நினைத்தவர்,  மேரு தேவியிடம் பிறவியிலேயே  யோக சாதனைகளைச் செய்யும் ரிஷிகளைப் போல அவதரித்தார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  இரண்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் )  வசன ஸ்லோகங்கள்-22

அத்யாயம்-4

பகவானுடைய அவதாரம் என்பது பிறந்த பொழுதே பார்த்தவர்களுக்கு தெளிவாக தெரிந்தது.  பகவானுடைய சிறப்பான குணங்கள், அமைதி, அடக்கம், வைராக்யம், ஐஸ்வர்யம், மஹா விபூதி இவைகளைக் கண்ட பொது மக்கள் வியந்தனர்.  தேவதைகளும் பூமியில் இறங்கி வந்தது போலவும், அந்தணர்களுடன் பிரஜைகளும் பிறந்த சிசுவை துதி செய்தனர். இப்படி பிறவியிலேயே அதிசயமாக இருந்த குழந்தைக்கு தந்தை ரிஷபன் என்று பெயர் ஸூட்டினார்.  பகவானுக்கு சமமான காந்தியுடன், பலம், ஸ்ரீ, கண்டவர் பாராட்டினர்.  இதைக் கண்டு இந்திரன் பொறாமை கொண்டு அந்த ஆண்டு மழையை வர்ஷிக்கவில்லை.  யோகேஸ்வரர் ரிஷப தேவர் சிரித்தார். தன் யோக சாதன பலத்தால் அஜ நாபம் என்ற அந்த தேசம்  முழுவதும் மழை பொழியச் செய்து விட்டார்.

அரசன் நாபியின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.  சுபுத்ரனை வேண்டியதில் பகவானே வந்ததில் நா தழதழக்க பகவானை துதித்தார். அழகான சொற்களால், உடனே நரலோகம் வந்த புராண புருஷனின் கருணையை தன் மகனை கொஞ்சி குலாவுவதில் வெளிப் படுத்தினார். மகனே என்றும், தந்தையே என்றும் அன்புடன் அழைத்தார்.  மகனை குலாவுவதில் அதிக இன்பம் அடைந்தார்.

உரிய வயது வந்ததும், நாபி ராஜா, பிரஜைகளும் சம்மதிக்க, ருஷபரை ராஜ்யத்தில் அமர்த்தினார்.  தன் நம்பிக்கைக்கு உகந்த அந்தணர்களை உதவியாக நியமித்து விட்டு மேரு தேவியுடன் விசாலா என்ற இடத்தில் தவம் செய்ய சென்று விட்டார்.  நர நாராயணன் எனும் பகவான் வாசுதேவனை ஆராதித்தார். காலம் வரவும் அவர் பதம் அடைந்தார்.

பாண்டவர்கள், நாபி என்ற அந்த அரசனின் செயல்களை உதாகரணமாக சொல்வர். அப்படி என்ன விசேஷம் என்றால், அந்த அரசன் சத்புத்திரனை பெற்றான், தூய்மையான மனதுடன் செயல்களைச் செய்தான், அந்தணனர்களை கௌரவித்தான், தன் தவ வலிமையால் அவர்களும் யோகேசனான பகவானை தரிசிக்க வழி செய்தான் என்பர்.

அதன் பின் ருஷப தேவர், இந்த பூமி கர்ம க்ஷேத்ரம் என்பதை அறிந்து,  குருகுல வாசம் செய்தார். வயது வந்ததும் குரு ஜனங்கள் அனுமதி பெற்று, இந்திரன் தன் மகளான ஜயந்தியை அளிக்க, அவளை மணந்து குடும்ப வாழ்க்கையை ஏற்றுக் கொண்டார்.  தன் குடும்ப நலன், தேச நலன், தேவதைகள், பித்ருக்களுக்கு செய்ய வேண்டியவை இவற்றை குறைவற செய்தார்.  தன் குலம் விளங்க தனக்கு சமமான நூறு பிள்ளைகளையும் பெற்றார். 

இவர்களுள் மகா யோகியான பரதன் முதல்வன்.  ஸ்ரேஷ்ட குணங்கள் நிரம்பியவன். அவனால் இந்த தேசமே பாரதம் என்று பெயர் பெற்றது.

குசாவர்தன், இலாவர்தன், ப்ரும்மாவர்தன், மலயகேது, பத்ரசேன, இந்த்ரஸ்ப்ருக், விதர்பன், கீகட என்று மற்ற ஒன்பது பேர் பிரதானமானவர்கள்.  கவி, ஹரி, அந்தரிக்ஷன்,ப்ரபுத்தன், பிப்பலாயன், ஆவிர்ஹோத்ரோ, த்ருமிலன், சமச:, கரபாஜனன், என்பவர்கள் பாகவதர்களாக, பாகவத தர்மத்தை ப்ரசாரம் செய்பவர்களாக ஆனார்கள்.  வாசுதேவ நாரத உரையாடலாக அதை பின்னால் வர்ணித்துச் சொல்கிறேன்.  ஜயந்தியின் மற்ற பிள்ளைகளும், தந்தையை அனுசரித்து நடந்தனர். இயல்பாகவே பெற்ற சிறந்த  சீலம் , நல்ல கல்வி, வேத அறிவு, யாகங்களை செய்யும் திறன், செயல்களை ஆற்றலுடன் செய்து முடிப்பவர்கள், இவை தவிர  ப்ரும்ம ஞானம் உள்ளவர்களாகவும் ஆனார்கள்.

ருஷப என்ற பெயருடன் பகவான், தானும், புவியில் மற்ற ஜீவன்கள் படும் சிரமங்களை தவிர்த்து, கேவலானந்தம் என்பதே பிரதானமாக, ஈஸ்வரன் தான் என்பதை உணர்த்த,  காலத்தை அனுசரித்து வேத கர்மாக்களை, ஊக்குவித்தார். தர்மத்தை செய்வதில் தேவையான மாறுதல்கள் செய்தார்.  அறிஞர்களுடன் சமமாக நட்புடன் தர்மார்த,  புகழ்,  ப்ரஜைகளின் நன்மை க்ருஹஸ்தாஸ்ரமத்தின் சிறப்பை வெளி படுத்துபவராக வாழ்ந்தார்.  எதை தலைவன் செய்கிறானோ, அதை பொது மக்கள் அனுசரிப்பார்கள். அதனால் தான் அறிந்த எல்லா தர்மங்களையும்,  ரகசியமானவை, ப்ரும்ம மார்கத்தில் செல்பவர் காட்டிய வழிகள், சமாதி என்ற வழிகளில் ராஜ்யத்தை ஆண்டான்.

த்ரவ்யம், தேச கால, வயது, ஸ்ரத்தா. இவற்றுடன் ருத்விக் எனும் பெரியவர்கள் உபதேசித்தபடி நூறு யாகங்களை செய்தான்.

ருஷப ராஜாவால் பரிபாலிக்கப் பட்ட இந்த தேசத்தில்,  யாருமே, தேவை என்பதை உணரவில்லை. கிடைக்காது என்று எந்த பொருளும் இல்லை. எப்பொழுதும், எதுவானாலும் எதோ விதத்தில் கிடைத்தது.   அரசனின் யாகங்களில் அன்புடன் கலந்து கொண்டனர்.

ஒரு சமயம் ப்ரும்மாவர்தம் என்ற இடம் சென்ற சமயம் தன்னிச்சையாக சுற்றிக் கொண்டிருந்த பொழுது, ப்ரும்மரிஷிகள் நிறைந்த சபையில்  ப்ரஜைகள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த தன் புத்திரர்களை கண்டான். மிகுந்த ஆஸ்ரய- அடைக்கலம் தரும் குணம் உடையவர்களாக, விநயம் நிறைந்த கட்டுப்பாடான ஏற்பாடுகளை செய்து வருபவர்களாகவும் இருப்பதை பார்த்து மகிழ்ந்தான். தானும் உபதேசங்கள்  செய்தான்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  நான்காவது அத்யாயத்தின் தமிழாக்கம் )  வசன ஸ்லோகங்கள்-19

அத்யாயம்-5

தன் புதல்வர்களைப் பார்த்து ரிஷபர் என்ற ராஜ ரிஷி, சில உபதேசங்களைச் செய்தார். உலக வாழ்க்கையில் தான், தன் குடும்பம் அதன் சௌக்யங்களே ப்ரதானம் என்று இருக்க வேண்டாம். ஆத்மார்த்தமாக அறிவு வளர வேண்டும். ப்ரும்ம ஞானம் தான் சௌக்யம் என்றும் சொல்கிறார்.  இதற்கு முதல் படி பெரியவர்களை, அறிவிற் சிறந்தவர்களை அண்டி சேவை செய்வது தான்.  சம சித்தமாக, அமைதியாக,  கோபம் இல்லாத சாதுக்களின் நட்பு வேண்டும்.  பகவானிடத்தில் ஈடுபாடு கொண்டவர்களும்,  வீட்டு நிர்வாகத்தில், மனைவி மக்களிடத்தில் ப்ரீதியுடனும், அதற்கான பொருள் ஈட்டுவதும் அவர்கள் கடமை என்பதால் அனுமதிக்கப்பட்டதே.  அது அவர்கள் தன்னடக்கம் இன்றி அது மட்டுமே என்று, பரமார்த்த அறிவு இன்றி இருப்பது தான் கெடுதல்.  அவமானம் என்று எண்ணுவது கூட அறியாமையே.   ஆத்ம தத்வம் அறிந்தவர்கள், தான் மனதை கட்டுக்குள் வைக்கத் தெரிந்தவர்கள். கோப தாபங்கள் அவர்களிடம் நெருங்காது, அதன் எல்லை உடல் அளவிலேயே, மனதை பாதிக்க விடக் கூடாது.  லௌகிகமான செயல்கள் சரீர தேவைகளை தீர்க்க செய்ய வேண்டியதும் அவசியமே.  வாசுதேவனிடத்தில் ப்ரீதியுடையவனாக இருப்பது தான் முக்கியம்.   அவித்யா-அறியாமை அகலும். அதனால் விவேகம் வளரும், மன்யு என்ற கோபம் விலகி விடும். மனதை கெடுக்கும் முதல் எதிரி மன்யு தான்.  அடுத்தது சுயநலம், இது கண்களை மறைக்கும். நினைவையே மழுங்கச் செய்து விடும். மற்றவர்களிடம் குறையே தெரியும், அதனால் மனக்லேசம் என்று இதன் பாதிப்புகள் விரியும்.  சாஸ்திரங்கள் சொல்லும் நித்ய கர்மாகளைக் கூட செய்யவிடாமல் தடுக்கும்.

தாம்பத்யமும், மிதுனீ பாவம் என்ற ஆண் பெண் உறவு ஒருவருக்கொருவர் அன்புடன் இருப்பதை இயற்கை என்று ஏற்றுக் கொள்கிறோம். இதன் நீட்சியாக, க்ருஹம், நில புலங்கள், புதல்வர்கள் பெறுதல், அதற்கான பொறுப்புகள்,  என்று தொடர்ச்சியாக கவனம் செல்வதால், ப்ரஜைகளில், தான் தனது என்ற எண்ணத்தை விளைவிக்கிறது.  இது உலகியலில் தவிர்க்க முடியாத  பந்தம். 

தகுந்த குரு, ஜனங்களின் கஷ்டங்களை தீர்க்க எப்பொழுதும் எங்கும் மன அமைதிக்கு தவத்தையே உபாயமாக சொல்வார்கள்.  யோக சாதனைகள், பகவத் பக்தி இவைகளே  இல் வாழ்ழ்கையில் அமைதி சேர்க்கும். இவ்வாறு, பக்தியையும், யோக சாதனைகளையும்  உயர்வாக சொல்கிறார்.

தேஹம் தேஹி – உடல், அதனுள் உள்ள ஆத்மா இரண்டும் வெவ்வேறு – உடல் பௌதிகமானது, அழியக் கூடியது. ஆத்மா அதை இயக்குவது, அழியாதது என்ற அறிவு அத்யாத்ம யோகத்தால் வரும். இதை குருவை ஆசிரயித்து உடன் இருந்து சேவை செய்வதால் பெறலாம்.  ப்ராணாயாமம்  செய்து மூச்சு பயிற்சிகளை விடாமல் செய்து வருவதும்,  சிரத்தையுடனும், நன்னத்தையுடனும், -உடல், உள்ளம் இரண்டும் சுத்தமாக இருக்கச் செய்து கொள்ளுதல்- தவிர வார்த்தைகளை அளந்து பேசுதல், சொல்லடக்கம் என்பது மிகச் சிறந்த குணம். இதை பகவானைப்  பற்றிய உள்ளுணர்வு இருந்தால் மேம்பட்ட ஞானமாகும் (விக்ஞானம்). யோக சாதனைகளால் ஆற்றல் பெருகும். த்ருதி என்ற வைராக்யம், சத்வம் என்ற நல்ல குணம் இவை வளரும்.  நான் என்ற அஹம்பாவம் விலகும். 

கர்ம மார்கிகள், கற்றதால் வரும் பெருமிதத்தால் தவறு செய்யலாம். அவர்களும் யோக சாதனைகள் மூலம்  தன்னையறியலாம்.  புதல்வர்களோ, சிஷ்யர்களோ, அரசனே! குருவேயானாலும், பகவானின் அனுக்ரஹம் வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள்,  முதல் காரியமாக, தன்னை திருத்திக் கொள்வார்கள். மன்யு என்ற கோபம் அண்ட விடாமல், சிஷ்யர்களிடம் பரிவுடன், ‘தத்’ என்ற உயரிய ஞானத்துடன் கர்ம மார்கங்களில் ஈடுபட செய்வார்கள்.  ஏனெனில் கர்ம மார்கத்தில் வரும் யாக காரியங்கள் உலக நன்மைக்காக ஏற்பட்டவையே. இப்படி உணர்ந்து செய்யாதவர்கள் தான் வீழ்வார்கள்.  இவ்வளவும் அறிந்தும் ஏதோ சுய நலத்துக்காக, பொறாமையாலோ,  செய்பவன் கண் இருந்தும் குருடனாவான்.

மோக்ஷம் என்ற பிறவியிருந்து விடுபடும் அறிவைப் பற்றி சொல்லாத, குரு குருவல்ல. தன் உறவினர் என்றாலும் உறவே இல்லை. தந்தையோ, தாயோ கூட இல்லை.  பதியோ, பத்னியோ கூட இல்லை. ம்ருத்யு பயம் என்பதை போக்காத தெய்வமும் இல்லை.

இந்த சரீரம் எனக்கு அமைந்து விட்டது, இதை தவிர்க்க முடியாது.  என் ஹ்ருதயம் சத்வமயமாக இருக்கிறது, தர்மம் இதில் குடி கொண்டிருக்கிறது. அதர்மத்தை பின் தள்ளி விட்டதால் என்னை ருஷபன்- உயர்ந்தவன் என்கிறார்கள்.   உங்கள் அனைவரையும் என் ஹ்ருதயத்தால் பெற்றேன்.  எல்லோருமே மகான்களாக வளர்ந்து விட்டீர்கள், இந்த நாபனும் தான். பரதனை (பாரத) புத்தி பூர்வமாக பார்த்து, அதை ஆளுவதும், ப்ரஜைகளை காப்பதையும் செய்யுங்கள்.

பஞ்சபூதங்களின் சேர்க்கையால் உண்டான படைப்பில் மரங்கள், தாவரங்களில் உயர்வு. அசையும் பொருட்களில் புழு பூச்சிகளைவிட சிறிது ஞானம் உள்ள பசுக்கள், அவற்றைவிட மனிதன் மேலானவன், மனிதர்களை விட ப்ரமத கணங்கள், அடுத்து கந்தர்வர்கள்,சித்தர்கள், கின்னர்கள் என்ற தேவர்களில் அனுயாயி அதாவது பரிவாரங்கள், என்று அந்த வரிசை செல்லும். மற்றும் அசுரர்களை விட தேவர்கள் சிறந்தவர்கள். இந்திரன் அவர்களிலும் மேன்மையானவன். இந்திரனை விட ப்ரம்ம புத்திரர்களான  தக்ஷ பிரஜாபதிகள், அவர்களிலும் ருத்ரன் அனைவரிலும் மேலானவன், ஆனாலும் இவர்கள் அனைவரும் வணங்கும் பகவான் சர்வ வல்லமையுள்ளவன்.  வேத சாஸ்திரங்களை கற்ற ப்ராம்மணன் வேத ரூபமான பகவானை நிலை நிறுத்துகிறான்.   எட்டு நல்ல குணங்களும் உடைய ப்ராம்மணன் ஸ்ரேஷ்டன் எனப்படுவான். (ஸம, தம,சத்ய, தயா, தவம், கல்வி, ஞானம் )

பகவான் அறியாத பொருள் இல்லை.  பக்தி உள்ளவனுக்கு பொருள் பொருட்டல்ல.  அசையும் அசையா பொருட்கள், புதல்வர்கள், நிரந்தரம் என்று நினைக்கும் பொருட்கள், சம்பாவிதானி- பின்னால் என்றோ  நடக்க கூடும் எனும் உத்தேசங்கள், இவைகளை விக்ஞானிகள் சிறிது சிறிதாக விசேஷமான கண்கள் அதாவது சாதனைகளால் கண்டு கொள்ளக் கூடும். இவர்கள் மனம், வாக்கு, கண், அந்த:கரண சுத்தமாக என் அம்சமாக  இருப்பவர்கள்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு தன் வம்சத்து புதல்வர்கள், மற்றும் இளையவர்களுக்கு உபதேசம் செய்தார். தன்னுடன் இருந்து ராஜ்யம் ஆளுவதை அறிந்திருந்தாலும், உலகை அனுசாஸனம் ஆளும் கலையை, அவர்களுக்கு விவரித்தார். தானே மஹானுபாவன் எனும் ருஷபன் என்ற பெயரில் பகவதம்சமாக தோன்றியவர், மகா முனிவர்கள் கூட மதிக்கும் பரதனை தன் நூறு புத்திர்களிலும் ஸ்ரேஷ்டன் பரம பாகவதன் என்று அறிவித்து அவனுக்கு முடி ஸூட்டி, தான் ப்ரும்மா வர்த்தத்திலிருந்து கிளம்பி விட்டார்.  அதன் பின் உன்மத்தனாக, ஆடைகளை கூட துறந்து, விரித்த கேசமும், அவதூதர் என்ற நிலையில் அனைத்தையும் துறந்தவராக பேச்சையும் நிறுத்தி, தன்னிடம் பேசுபவர்களுக்கும் எந்த பதிலும் சொல்லாமல், மௌன விரதம் பூண்டவராக ஆனார். போகும் வழியில், புரங்கள், கிராமங்களில் அறியாத இடங்களில் மதிக்கப் படாமல் ஈயை விரட்டுவது போல விரட்டினாலும் எதிர் விணையின்றி அந்த இடத்திலிருந்து அகன்று விடுவார். வனங்களில் துஷ்ட மிருகங்கள் அவரை பயமுறுத்தவில்லை. வன கஜங்கள் எதிரில் வந்தாலும் நடுங்கவில்லை. எந்த ஜீவனும் அவரை துன்புறுத்தவில்லை. எதிலும் கவனம் செலுத்தாமல் தன்னிச்சையாக நடந்து கொண்டேயிருந்தார்.

அதி சுகுமாரனாக வளர்ந்தவர். இயல்பிலேயே அழகியவர். தேவ லோக பெண்கள் கூட மயங்கும்படியான தோற்றம் கொண்டவர். இப்பொழுது புழுதி படிந்து ஏதோ க்ரஹ கோளாறினால் துர் தேவதைகள் ஆட்கொண்டுவிட்டதோ எனும்படி இருந்தார்.  உலகமே துச்சம் என்றேண்ணி எதற்கும் பர்தி க்ரியா- பதில் வினையாற்றாமல், விழுந்து கிடக்கும் மலைப் பாம்பு போல, படுத்தபடியே சாப்பிட்டு, குடித்து, மற்ற உடல் இயக்கங்களும் படுத்தபடியே  அந்த அஜகரம்- மலைப் பாம்பு போலவே கிடந்தார்.  அந்த நிலையிலும் தன் யோக சாதனைகளைச் செய்தார்.  அவர் அறியாத யோகமே இல்லை. வைஹாச,-ஆகாயத்தில் சஞ்சரிப்பது,  மனோஜவ – வாயு வேகத்தில் செல்வது, , அந்தர்தானம் திடுமென மறைவது,  பரகாய ப்ரவேச- வேறு சரீரத்தில் ப்ரவேசிப்பது, தேசாந்தரத்தில் உள்ள பொருட்களை எடுப்பது,  தூரத்தில் உள்ளதை எடுப்பது, என்ற பல சாதனைகள் அவருக்கு அனாயாசமாக கை வந்தன. 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  ஐந்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் )  வசன ஸ்லோகங்கள்-19

 

அத்யாயம்-6

பரீக்ஷித் ராஜா இதுவரை கேட்ட நிவிருத்தி மார்கம் பற்றிய உபதேசங்களை கேட்ட பின் ஸ்ரீ சுகரிடம் “பகவன்! க்ரமமாக யோக சாதனைகளச் செய்த நீங்கள்  ப்ரும்மம்  பற்றியும் உலக வாழ்க்கைக்கு அப்பால் உள்ள விஷயங்களையும் சொன்னதைக் கேட்டு தெரிந்து கொண்டேன்.  ப்ருவ்ருத்தியின் லக்ஷணங்கள், முக்குணங்கள், அவைகளின் ஆளுமை இவை யுகம் தோறும் தொடர்ந்து வருபவை.  அதர்ம லக்ஷணங்களும் சொன்னீர்கள்.  நரகம், மன்வந்தரம் பற்றி ஆதி ஸ்வயம்பூ முதல் விவரமாக கேட்டறிந்தேன். ப்ரிய வ்ரத உத்தான பாத சரித்திரங்கள், தீவுகள், மழை, சமுத்திரங்கள் , மலைகள், நதி, உத்யான, உப வனங்கள் காட்டு மரங்கள்  – எவ்வளவு விஷயம் – உலகில் இந்த அளவு விவரங்கள் உள்ளன என்பதையே இப்பொழுது தான் அறிந்தேன்.பூமி, பூ மண்டலம் இவைகளின் இருப்பு,  ஜோதிடம் பற்றி, ப்ரபு இவ்வாளவு ஸ்ருஷ்டி செய்திருக்கிறார் என்று மலைப்பு தோன்றுகின்றது.   பகவானே, நரக யாத்திரையைப் பற்றி மேலும் சொல்லுங்கள்.

அதர்மம் என்று தெரிந்தும் அதை செய்ய நேரிட்டால், அதற்கான ப்ராயச்சித்தம் செய்யலாம்.  பகவானை ஸ்மரித்து வேண்டிக் கொள்ளலாம். எப்பேர்பட்ட பாபமானாலும். தவற்றை உணர்ந்து பகவானிடம் மன்னிப்பு கேட்கலாம்.  திரும்பத் திரும்ப பாகவதர்களுடன் சேர்ந்து நாம ஸ்மரனைகள், பஜனைகள் செய்வதாலும், கைங்கர்யங்கள் செய்வதாலும் கதைகளை கேட்பதாலும் நாளடைவில் பக்தி பாவம் மனதில் வேறூன்றும்.  அதுவே தவறு செய்யாமல் காக்கும். விரதங்களை முறையாக செய்வதும், எண்ணங்களின் போக்கை நேராக்கும்.  இது போல நெறி முறையை வழக்கப் படுத்திக் கொண்டு விட்டால், பகவானை அன்றி வேறு எவரையும் உயர்வாக எண்ணாமல், தன்னை மேம்படுத்திக் கொள்ள வழி பிறக்கும்.  இதை விட்டு, புலன்கள் போன வழியே வாழ்ந்து கெட்ட பின், பிராயச்சித்தம் என்று செய்தால்  அதற்கு பலனும் அதற்கு தகுந்த படி தான் இருக்கும்.  கர்ம பலன் குறைந்தாலும் வாசனை விடாது.  வைத்யர் உடலின் நோயின் தன்மையை கணித்து அதிகமாகவோ, குறைவாகவோ மருந்துகளைத் தருவது போல செய்த குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப நரக வாசமும் அமையும்.  பகவானே அவனை திருத்தினால் கூட, யானை குளித்துவிட்டு வந்து சேற்றை பூசிக் கொள்வது போல அவனுடைய கர்ம வாசனை திரும்பவும் அதே தவறுகளை செய்யத் தூண்டும்.

 அத்யாயம்-6

 பரீக்ஷித் ராஜா வினவினான்: பகவன்!  ஆத்மாராமன் என்றும், சாதனைகள் செய்து யோக மார்கத்தில் பல படிகளை கடந்தவர்கள், ஞானிகள் என்றும், அதன் மூலம் வினைப் பயன்கள் இவர்களை பாதிக்காது என்ற நிலையில், இவர்களுக்கு  எதிர்பாராமல் தானாக வந்து சேரும் யோக ஐஸ்வர்யங்கள் இடையூறாக இருக்காது  தானே.   

ரிஷி சொன்னார்: உண்மைதான்.  அதற்குத் தான் மனப் பூர்வமாக இல்லாமல் யாரிடமும் நட்பு பாராட்டக் கூடாது. வியாபார நோக்கத்தோடு பிராணிகளை வேட்டையாடும் வேடன் போல என்று சொல்வார்கள். (வேடனானாலும் தன் உணவுக்கு மட்டுமே பிராணிகளைக் கொல்லலாம் என்பது நியதி) ஒரு சிறிய இடம் (இடுக்கு) இருந்தாலும் காமம்  சௌபரி போன்ற ரிஷிகளையே ஆட்டி வைத்து விட்டது போலாகும்.  வெகு காலமாக  தவம் செய்தவர், காமத்தை ஜயித்து விட்டோம் என்று அவர் மனம் நம்பியது. மனம் யோகிகளைக் கூட கைவிடுகிறது. காமம் என்ற ஆயுதம் அவ்வளவு கொடியது. மனதை வென்றவர்கள் தானே, இந்த யோகிகள் என்று கேட்பாயோ, சக்கரத்தின் ஆரங்கள் நடுவில் உள்ள இடைவெளி போலவும் அதில் ஊடுருவி செல்லும் ஒளி போலவும் காமம் நுழைந்து விடும்.

காமம் மன்யு, மதம், லோபம், சோக, மோஹம், பயம் தவிர வினைப் பயன், இவை தான் அடிப்படையில் மனதைக் கெடுக்கும்.

விட்ட இடத்திலிருந்து ருஷபரின் கதையைச் சொல்கிறார்.  இவ்வாறு லோகபாலனாக, பிரஜைகள் விரும்பும் சக்ர வர்த்தியாக நாடாண்ட ருஷப ராஜன், ஏதோ காரணத்தால், ஜடம் போல, அவதூத வேஷமும், தொடர்பில்லாத பேச்சும், பார்த்தவர் நகைக்கும் படியான நடத்தையும் , அவர் பகவானுடைய அம்சமாக பிறந்தவர், மிகச் சிறந்த பிரபாவம் (ஆற்றல்) உடையவர் என்பதை வெளிக்காட்டாத தோற்றமுமாக  யோகிகளின் சம்ப்ரதாயங்களை மீறி தன் உடலைத் தியாகம் செய்தார். குயவனுடைய சக்கரம் போல சுழலும் ஜீவனின் வாழ்க்கை.    யோகிகள் உ.டல் தியாகம் செய்ய பல வழிகள், அதில் ஒன்று உன்மாதனாக திரிவதும்.

இவ்வாறு தான், தன் உடல் என்ற பற்று நீங்கிய பகவான் ருஷபருடைய யோக மாயா முடிவில், இந்த உலகில் ஏற்றுக் கொண்ட தேகத்தை துறக்க, இந்த உலகில் அபிமானம் இல்லாமல் தான்தோன்றியாக அலைந்த சமயம், கொங்க, வேங்க, குடகான், தக்ஷிண கர்னாடக தேசங்களை யதேச்சையாக சென்றடைந்தார். குடகாசல உபவனத்தில், சின்னஞ்சிறு பாலகன் மண்னை வாயில் போட்டுக் கொள்வதைப் போல.  ஆகாரம் என்ற கவலையின்றி, கிடைத்ததை உணவாக நினைத்து, கேசம் காற்றில் பறக்க, நடந்து கொண்டே இருந்தார்.  அச்சமயம் காற்றின் வேகத்தில் மூங்கில் காட்டில், மூங்கில்கள் உரசுவதால் ஏற்பட்ட தீ, காட்டுத்தீயாக பரவி அவரையும் விழுங்கியது.

இவரைப் பற்றி கேள்வியுற்ற அர்ஹன் என்ற பெயருடைய கொங்க, வெங்க,குடக தேசங்களின் அரசன்,  ப்ரும்ம, யக்ஞ புருஷன், என்பவைகளை ஏற்றுக் கொள்ளாத சிலர், கலியின் ப்ரபாவத்தால், தேவ மாயை புத்தியை மறைக்க, ஸ்னானம் முதலிய சௌசம்- சுத்தம் உடல் ஆடைகள் நடத்தை இவைகள் தூய்மையாக இருக்க வேண்டிய அவசியத்தைச் சொல்லும் செயல்களை நிராகரித்தும் கேசத்தை மழித்துக் கொள்வதையும், அபவ்ரதானி- தர்ம சம்ஸ்காரங்கள் கூடாது என்று சொன்ன விஷயங்கள் மட்டுமே ப்ரதானமாக ஒரு மதம் தோன்ற காரணமாக இருந்தான்.  வேத சாஸ்திரங்களை நம்பாத இவர்களின் கூட்டம் தன்னிச்சையாக, கலி காலத்தை அதர்மம் நிறைந்ததாக செய்வார்கள்.  கண்ணில்லாத கபோதிகள் ஒருவரை ஒருவர் வழி நடத்துவது போல  இவர்களும் தமஸ்- அந்தகாரத்தில் வாழ்ந்திருந்து, அந்தகாரத்திலேயே மறைவார்கள்.

இந்த அவதாரம், ரஜோ குணத்தால் ஆட்கொள்ளப்பட்டவர்களுக்கும் கைவல்யம் என்பதை சொல்ல ஏற்பட்டது.

ஏழு சமுத்திரங்களையுடைய இந்த பூலோகம், ஏழு தீவுகளையும் உடையது. இதன் மத்தியில் பாரத தேசம் மிக புண்யமானது. இங்கு ஜன ங்கள் முராரியை பாடுகிறார்கள். அவருடைய அவதாரங்கள் இங்கு தான் போற்றப்படுகிறது. ப்ரியவர்தனுடைய வம்சத்தில் புராணபுருஷன் அவதரித்தான். அவன் முதன் முதலாக வேத சாஸ்திரம் சொல்லும் கர்மத்தை (யாகாதி கர்மாக்களைச் செய்யும்) நிராகரித்த ஒரு மதம்-தர்மம் – என்பதை ஸ்தாபித்தான். சிறந்த யோகியானவன், தன்னிச்சையாக உன்மத்தனானான் அவனை எவர், ஏன் பின் பற்றுகிறார்கள்?  மகா யோகியானவர் அதைத் துறந்தார் என்றால், யோக மார்கத்தில் எப்படி நம்பிக்கை வரும்? உன்மத்த நிலையில் அவரை கண்டவர்கள் அவரை பின் பற்றத் துணிவார்களா?  அந்த வேத, யோக மார்கத்தில் செல்ல சக்தியற்றவர்கள், சம்சாரத்தின்  கட்டாயங்களிலிருந்து விடுபட முடியாதவர்கள், தங்களுக்கு முன்னுதாரணமாக ஒருவராக இவரை அங்கீகரித்தார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதுவும் வாசுதேவனின் அவதாரமே.

பல ஸ்ருதியோடு இந்த அவதார கதையை முடிக்கிறார்.

எவர் மாற்று தர்மங்கள் பற்றி யோசிக்கிறார்களோ, அவர்களுக்கு இதுவும் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமே என்ற ஆறுதல்.

அரசனே! யது குலத்தில் வந்த வாசுதேவன் தான் உங்களுக்கு வழிகாட்டி, தெய்வம் எல்லாம். ஒரு அவதாரம் ருஷப யோகீஸ்வரராக.  சம்சாரத்தின் கஷ்ட நஷ்டங்களுக்கு யாகம் , யோகம் முதலியவைகள் பரிஹாரமாக சொன்னது பரபுருஷார்த்தம்-  பகவானிடம் சேர்க்கும் என்ற ஒரு கொள்கை. இது வேறு வழி ஆயினும் பகவத் தியானமே பரமார்த்தம் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

உங்கள் குல தெய்வம் வாசுதேவனே. யதுகுல தேவன், பிரியமான குலபதி. நாம் அவர் கிங்கரர்கள்-ஏவலர்கள்.  கருணையுடன் அபயம் அளிப்பவர். “ நமோ பகவதே ருஷபாய தஸ்மை “

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  ஆறாவது அத்யாயத்தின் தமிழாக்கம் )  வசன ஸ்லோகங்கள்-16

அத்யாயம்-7

ஸ்ரீ சுகர் சொன்னார்:  அடுத்து வந்த பரதனும் மஹா பாகவதன் என்று புகழ் பெற்றான்.  பகவானால் பூமியை ஆள நியமிக்கப் பட்டிருக்கிறேன், அதனால் ராஜய பரிபாலனத்தை நேர்மையாக செய்வதில் கவனமாக இருப்பேன் என்று எண்ணினான். அவன் மனைவி பஞ்சஜனீ, விஸ்வரூபன் என்பவரின் குமாரி.  அவர்களுக்கு அனுரூபமான பஞ்ச பூதங்கள் போல ஐவர்,  சுமதி, ராஷ்ட்ரப்ருத், சுதர்சன், ஆவரணன், தூம்ரகேது என பெயர்கள். அதுவரை அஜனாபம் என்று இருந்த தேசத்தின் பெயர்   இந்த பரதனின் ஆட்சிக்கு பின் பாரதம் என்று ஆனது.

மாகாராஜாவாக இருந்த பரதன் பல கலைகளையும் அறிந்தவன். தங்கள் குலத் தொழிலோ, கலையோ, அந்தந்த துறையில் ஈடுபட்டிருந்த பிரஜைகள் அரசனின் நேரடி கண்காணிப்பையும் ஆதரவையும் பெற்றனர். 

யக்ஞ புருஷன் பகவானை  எண்ணி பல யாகங்களை சிரத்தையுடன் செய்து வந்தான். உச்சாவசு, அக்னிஹோத்ர, தர்சபூர்ணமாச, சாதுர்மாஸ்ய. விரதங்கள், பசு சோம என்ற ஒவ்வொரு யாகத்தையும் சாதுர்ஹோத்ர விதிகள் படிமுறையாகச் செய்தான்.

பிரபலமான யாகங்கள் தவிர,  தர்ம பலன்களை உத்தேசித்து செய்யும் யாகங்களையும் அதன் அங்கங்களுடன் அர்த்த நியமங்களுடன் பரபுருஷனான யக்ஞ நாராயணனே சர்வ தேவதா என்று சொல்லும் மந்திரங்களையும் பொருள் உணர்ந்து சொல்வதால் சாக்ஷாத்தாக வந்து பகவான் வாசுதேவனே அனுக்ரஹித்ததால் தானே தன் திறமையினால் அத்வர்யூ என்ற ஸ்தானத்தை ஏற்று, யஜமானனாக, தேவர்களை திருப்தி செய்தான். (ஸ்ருஷ்டி காலத்தில் எவ்வாறு பரம புருஷனின் அவயவத்தில் தோன்றினார்களோ அதே க்ரமத்தில்  த்யானம் செய்து) 

இவ்வாறு  சிறப்பாக செய்த யாகத்தால், பரிசுத்தமான மனிதனின் ஹ்ருதயத்தில் வசிக்கும் ப்ரும்மம் வாசுதேவனிடத்தில் மஹா புருஷன் என்ற உபலக்ஷணம் உள்ளவர் என்பவரை ஸ்ரீவத்ஸ, கௌஸ்துப, வனமாலை சகிதமாக வாள், கதை முதலிய ஆயுதங்களுடனும், தன் மனதில் எழுதி வைத்தது போல கண்டான். அனுதினமும் பக்தி பாவத்துடன் வணங்கி வந்தான்.

இவ்வாறு பல காலம் ஆண்ட பின், தன் புத்திர்களுக்கு ராஜ்யத்தை பிரித்து கொடுத்து விட்டு புலஹாஸ்ரமம் என்ற இடத்துக்குச் சென்று விட்டார்.

அந்த இடத்தில் பகவான் வாத்சல்யத்துடன் தன்னை அண்டியவர்களுக்கு அவர்கள் விரும்பும் விதத்தில் காட்சியளிப்பதாக சொல்வார்கள்.  பாறைகளின் இடையிலிருந்து பெருகி சக்ர நதி என்ற பெயரில் நதி அசிரமத்தை இருபுறமும் அணைத்தவாறு செல்லும்.  தனித்து வாழும் ரிஷி, முனிவர்கள் ஆசைகளைத் துறந்து எளிமையாக வாழ்கிறார்கள். சாந்தமாக பூஜை, தங்கள் யோக சாதனைகள் என்று இருப்பவர்கள் தாங்களும் சுத்தமாக இருந்து அந்த இடத்தையும் சுத்தமாக வைத்திருப்பர். புலஹாஸ்ரமம் என்ற அந்த இடத்தின் உபவனம் பலவிதமான பூக்கள், துளிர் இலைகள் துளசி போன்ற சிறு செடிகள், கந்த மூல பலம் – கிழங்குகள், கீரைகள், பழங்கள் இவைகளுடன் நிரம்பி இருந்தது. அது அவர்கள் உணவு தேவையை நிறைவு செய்தது. நன்றாக வாழ்ந்து அனுபவித்தவர்களே அங்கு இருந்தனர். அதனால் உபசமம் – தானாகவே அடங்கி விட்ட ஆசைகள் – உடையவர்களாக இருந்தார்கள்.   அந்த பவித்ரமான நதியில் ஸ்னானம் செய்து பகவானைத் தியானமோ, மலர்களால் அர்ச்சனையோ செய்வதிலேயே திருப்தி அடைந்தவர்களாக இருந்தனர்.  ஸூரியோதயத்திலேயே ஸூரியனை வேத மந்திரங்களால் துதித்தனர். இந்த மந்திரத்தை காயத்ரி சகோதரன் என்பர். “த்யேய: சதா சவித்ரு மத்யவர்தீ நாராயண: சரஜிசாஸன சன்னிவிஷ்ட:  | கேயூரவான் மகர குண்டலவான் கிரீடீ ஹாரீ ஹிரண்மய வபு: த்ருத சங்க சக்ர: “ |

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  ஏழாவது அத்யாயத்தின் தமிழாக்கம் )  வசன ஸ்லோகங்கள்-14

அத்யாயம்-8

 ஒரு சமயம் மகா நதியில் ஸ்னானம் செய்த பின், அதன் பின் செய்ய வேண்டிய ஜப தபங்களை, ப்ரும்மாக்ஷரத்துடன் சேர்த்து செய்து கொண்டு மூன்று நாழிகள் (ஓரு முஹூர்த்த காலம் )  நதிக் கரையில் அமர்ந்திருந்தார். அந்த சமயம் ஒரு மான் தாகத்தால் தண்ணீரை குடிக்க அங்கு வந்தது.  பாதி குடிக்கும் பொழுது எங்கோ தூரத்தில் ம்ருகபதியான சிங்கம் பலமாக கர்ஜனை செய்வது கேட்டது.  

அதைக் கேட்டு அந்த பெண் மிருகம் இயல்பாகவே பயந்த குணம், சிங்கத்திடம் பயம், பர பரப்பில் கண்கள் மயங்க, ஹ்ருதயம் துடிக்க,  தாகம் தணியாமலே தண்ணீரை விட்டு வெளியேற முயன்றது.  கர்பத்தை தாங்கியிருந்த அந்த பெண் மான் குதித்து ஏறுகையில் அதன் வயிற்றிலிருந்த சிசு வெளி வந்து தண்ணீரில் விழுந்தது. ஏற்கனவே பயம், பிரசவ வேதனை சேர்ந்து கொண்டது, நீரில் விழுந்த குட்டியை பற்றிய தாயின் கவலை,  க்ருஷ்ண சார என்ற ஜாதியைச் சேர்ந்த பெண் மான், அதன் கூட்டத்தார் யாரும் அருகில் இல்லாமல் தனித்து விடப் பட்ட நிலையில் அந்த க்ஷணத்திலேயே உயிரை விட்டது.

மான் குட்டி, நதியில் விழுந்து தவித்தது.  கரையில் ஜபம் செய்து கொண்டிருந்த ராஜ ரிஷி பரதன் பரிவுடன் அதை காப்பாற்றி, தாய் இல்லாத குட்டி என்ற நிலையில் ஆசிரமத்திற்கே கொண்டு வந்தார்.  அதனிடம் அவருக்கு தன் குழந்தையிடம் தோன்றுவது போன்ற பாசம் மிகுந்தது.  அதை ஆஹாரம் கொடுத்து, தூக்கி வைத்துக் கொண்டு, கொஞ்சியும், விளையாடியும் பாலனம் செய்தார்.  ஒவ்வொருவராக அருகில் உடன் இருந்த தபஸ்விகள் சிலர் காலம் முடிந்தும், மற்றவர்கள் வேற்றிடமும் சென்று விட்டனர்.  மான் கூட்டங்களும் இந்த குட்டி மானை ஏற்றுக் கொள்ளவில்லை.  தனித்து விடப் பட்ட குட்டி மானை பார்த்து “அடடா, இதற்கு யாருமேயில்லை. என்னையே தாய் தந்தையாக எண்ணுகிறது என்று பூரித்து போனார்.  இதற்கு உடன் பிறந்தார்களோ, உறவினர்களோ எல்லாமே நான் தான் என்று அதனிடம் மிகுந்த வாத்சல்யத்துடன் வளர்த்தார். அதுவும் அவரிடம் ஒட்டிக் கொண்டது.

இவ்வாறு அதனிடம் அன்பு கொண்டு அதிலேயே தன் நேரம் முழுவதும் செலுத்தியபடி இருந்தவர், கண் மூடித் தனமான பாசத்தால் தன்னுடன் தவம் செய்த ஆசிரம வாசிகளைக் கூட மறந்தார். அதனுடன் நடந்து, அதற்கான தேவைகளை பார்த்து பார்த்து செய்து வந்தவர் மனம் முழுவதும் இந்த மான் குட்டியே நிறைந்தது. புல்லைத் தேடி போனால் கரடிகள் அடித்து விடுமோ, தானே விழுந்து விடுமோ என்ற பயத்தால் வளர்ந்த பின்னும் அதனுடன் சுற்றினார்.  தோளில் தூக்கிக் கொண்டு நடப்பார்.  மார்பில் போட்டு தூங்க வைப்பார். இதில் என்றுமில்லாத சந்தோஷமும் அடைந்தார்.  தன் செயல்களின் நடுவில்  அது என்ன செய்கிறது என்ற கவலையுடன் எழுந்து வருவார்.  இயல்பாக இளகிய மனதுடையவர், அதன் நலனில் அளவுக்கு மீறி கவலைப் பட்டதும், தன் புதல்வனுக்கு செய்வது போல் நன்றாக இரு என்று ஆசீர்வதிப்பதுமாக காலம் சென்றது.  கண் மூடி ஜபம் செய்யக் கூட பயம்.  அந்த சமயம் துஷ்ட மிருகங்கள் வந்து அடித்து விடுமோ, செல்வமே குறியான லோபி, தன் சேமிப்பான  தனத்தை பாதுகாப்பது போல பாது காத்தார். தன் தவம், ஜப தபங்கள் பற்றி சில சமயம் நினைத்தாலும், ஒத்திப் போட்டுக் கொண்டே வந்தார்.  ஒருநாள் அதைக் காணவில்லை.

பரதன் என்ற அந்த ராஜரிஷி பரிதவித்தார். இந்த பிரிவை அவரால் தாங்கவே முடியவில்லை. தேடினார். புல் வெளிகளில், தினமும் செல்லும் வழியில், எங்கும் அதைக் காணவில்லை. தேடி அலைந்த  சமயம் எண்ணம் முழுவதும் அந்த குட்டி மானே இருந்தால், அவருடைய நித்ய சாதனைகள், செயல்கள் எதிலுமே கவனம் இல்லாமல் ஆயிற்று.   தான் ஆரம்பித்த தவம், யோகம், பகவதாராதனம், எதுவுமே நினைவில் இல்லை. வளர்ப்பு மிருகம் , தன் பிறவிக்கும், வாழ்க்கைக்கும், சாதனைகளுக்கும் சம்பந்தமே இல்லாத ஒட்டுதல், அதன் பிரிவால் தன்னையே மறந்தவராக தன் தகுதிக்கு சற்றும் பொருந்தாத ஒரு மனக்லேசத்தை அடைந்தார்.  முன்னால் தானே முனைந்து கைவிட்ட ஆசைகள், காம, மோஹங்கள் இவைகளே அவர் மனதில் நிறைந்தது. தனது, தான் என்ற எண்ணங்கள் அழிவை கொடுக்கும் என்று அறியாதவரா? எலி வளைக்குள் புகுந்த பாம்பு போல இந்த பரிவும், மோகமும் அவரை துளைத்தெடுத்து விட்டன. காலன் வந்தான். அப்பொழுதும் அருகில் இருந்த  பாசம் மிகுந்த  தன் மக்களை, புதல்வர்களை விட்டு வளர்ப்பு மானையே நினைத்து உடலை விட்டார். அதன் பலனாக மிருக பிறவியை அடைந்தார்.  மறு பிறவியில்  மானாகவே பிறந்தார்.

அஹோ கஷ்டம், நான் நிலையழிந்தேன்.  ஆத்ம ஞானம் அடையவே வாழ் நாள் முழுவதும் பாடு பட்டேன், சத் சங்கத்திலேயே இருந்தேன், பலவிதமான  நன்மைகளைத் தருபவனும்,  சரணம் என்று வந்தவர்களைக் காப்பவனுமான வாசுதேவனிடத்தில் அனவரதமும் பக்தி செய்து வந்திருக்கிறேன். அனுஸ்ரவணம், மனனம், சங்கீர்த்தனம்,ஆராதனம்,அனுஸ்மரணம் என்ற பக்தி மார்கத்தில் சொல்லியுள்ள அனைத்தையும் கடை பிடித்தேன். மனதை துடைத்தது போல சுத்தமாக வைத்திருந்தேன். \அதனுள் நுழைந்து என்னை அறிவில்லாதவனாக ஆக்கி, மான் குட்டியைக் காட்டி தடுமாற வைத்தது விதி என்று புலம்பினார். பூர்வ ஜன்ம நினைவு இருந்ததால் மான் தாயை விட்டு ரிஷிகளின் ஆசிரமங்களின் அருகிலேயே சுற்றி வந்து ஒரு நாள் உயிரை விட்டார்.  

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  ஆறாவது அத்யாயத்தின் தமிழாக்கம் )  வசன ஸ்லோகங்கள்-31

அத்யாயம்-9

ஸ்ரீ சுகர் சொன்னார்:  ஆங்கிரஸ கோத்ரத்தில் பிறந்த ஒரு அந்தணன் தன் நித்ய கர்மாகளை சிரத்தையாக செய்து வந்தவன்.  சமம், தபம்,ஸ்வாத்யாய, அத்யனம் இவைகளில் சந்தோஷமாக இருந்து வந்தவன் அஸூயை இல்லாமல் தன் வித்யையும். ஞானமே பிரதானமாக உள்ள விஷயங்களைக் கேட்பதிலும், மற்றவர்களுக்குச் சொல்வதிலும் காலம் கழித்து வந்தார்.    ஒன்பது புதல்வர்கள்  அவரைப் போலவே குணம், சீலம் உடையவர்களாக பிறந்தனர். இளைய மனைவியிடம் இரட்டையர்.  அவளும் பிறந்த சிசுக்களை விட்டு பரலோகம் சென்றாள்.

 பரம பாகவதரான ராஜ ரிஷி பரதனே ம்ருக சரீரத்தை விட்டபின் அந்தணனாக பிறந்தார் என்பர். 

இந்த பிறவியிலும் தனித்து இருப்பதிலும், பகவானின் நினைவிலும், தன் முந்தைய கர்ம பந்தங்களை முற்றிலும் அழிக்க உதவும் ஸ்ரவண, ஸ்மரண என்ற வழிகளையே அனுசரித்து வந்தார்.  முன் பிறவி வாசனையால் தன்னை ஜடமாகவும், செவிடனாகவுமே மக்கள் மத்தியில் வெளிப் படுத்திக் கொண்டு வாழ்ந்தார். அந்தணரோ, ஏன் தன் மகன் இப்படி இருக்கிறான் என்று கவலை கொண்டார். அவனுக்கு உரிய சம்ஸ்காரங்களை செய்வித்தார். உபநயனம், காலம் காலமாக வந்த நியமங்கள், அவன் அதில் நாட்டம் கொள்ளாவிடினும் உபதேசித்தார். அனுஷ்டானங்கள்  அவனை தெளிவாக்கும் பின்னால் அவன் தந்தையாகும் பொழுது உதவும் என்று நம்பினார். அவனும் அவர் எதிரில் அவைகளை சிரத்தையாகச் செய்தான். வேதங்களை முறையாக கற்றான்.  ப்ரணவத்துடன் த்ரிபதி என்ற காயத்ரி மந்திரத்தை ஜபம் செய்தான்.  வேணிற்காலம், வசந்தம் என்று பருவ காலங்களில் கற்க வேண்டியவைகளை க்ரஹித்துக் கொண்டான்.

தந்தை இறந்த பின் சகோதரர்கள் வேத அத்யனம் செய்வதில் மட்டுமே ஈடுபாடும் மற்ற எதுவுமே அறியாதவன் போல ஜடமாக இருந்த இளையவனை கைவிட்டனர். அவனும் இயல்பாக  பசுக்களிடம் அதிக நேரம் செலவழித்தான். அவைகளைப் போலவே மந்த மதி,  நடவடிக்கைகள் என்று மற்றவர் ஏளனம் செய்தனர். பொருள் ஈட்டவோ, மற்றவர்களுக்கு சமமாக உடையோ, உணவோ வேண்டாமல் கிடைத்ததை, மீந்த உணவு எதைக் கொடுத்தாலும் உண்டு வாழ்ந்தான். தனக்குள் பூர்வ ஜன்ம வாசனையால் அமைந்த சித்தியும் திருப்தியுமாக ஆனந்தமாகவே இருந்தான்.  சுகமோ, துக்கமோ எதுவுமே பாதிக்காமல், தேஹ அபிமானமே இல்லாமல் வாழ்ந்தான். மற்றவர்கள் அவனை சீண்டினர். காளை மாடு போல குளிரோ, வெய்யிலோ உறைக்காத உடல் வாகு, கொழுத்த உடலும், புல்லில் படுத்தாலும் , புழுதியில் படுத்தாலும் யாரும் கவனிக்கவில்லை. மறைந்திருந்த  ப்ரும்ம வர்சஸ்- சாதனைகளின் பலனான தேஜஸ் மஹாமணி போல அழுக்கு வஸ்திரத்திலும், உபவீதத்தினால் மட்டுமே அந்தணன் என்று தெரியும்படியாக இருந்தவனை ப்ரும்மபந்து (வசைச் சொல்) என்று பழித்தனர். அந்த அவமானங்களை பொருட்படுத்தாமல் வளைய வந்தான். வயலில் வேலை செய்யச் செய்தனர்.  அதையும் செய்தான். அங்கு காளைகளுக்கு கொடுப்பது போலவே பிண்ணாக்கு போன்றவைகளை உண்ணக் கொடுத்தனர். அதையும் எந்தவித உணர்வும் இன்றி உண்டான். ஒரு சமயம்  ஏதோ ஒரு சமையல் வேலை செய்பவன், தனக்கு குழந்தை வேண்டும் என்று வேண்டி பத்ரகாளிக்கு பலி கொடுக்க நினைத்தான்.  பசுவை தேடி வந்தவனை பசுக்களின் உரிமையாளர்கள் விரட்டினர்.  இரவில் திருடிக் கொண்டு செல்ல வந்தவன், வயற்காட்டு வளர்ப்பு மிருகங்களின் இடையில் ஆனந்தமாக தூங்கிக் கொண்டிருந்த அந்தண மகனைக் கண்டான்.  அவனை பலி கொடுக்க ஏற்றவனாக நினைத்து கயிற்றால் கட்டி சண்டிகா கோவிலுக்கு கொண்டு சென்றான். சரியான பலி என்று மகிழ்ந்தான். தங்கள் குல விதிப் படி அவனை பசுவாக நினைத்து முழுக்காட்டி, நல்ல வஸ்திரங்கள் அணிவித்து, பூஷணங்கள் வாசனை திரவியங்கள் பூசி, திலகம் இட்டு, உணவுக்குப் பின் தூப தீபங்கள் காட்டி, இலைகள் பழங்கள் கொடுத்தும் ம்ருதங்க பணவ வாத்யங்கள் வாசித்து புருஷ பசு என்று பத்ரகாளியின் முன் நிறுத்தினர்.  அந்த சமையல்கர்களின் தலைவன் புருஷ பசுவை வெட்டி தேவிக்கு சமர்ப்பிக்க, அதற்கான மந்த்ரங்களை சொல்லி, கொடூரமான ஒரு வாளைத் தூக்கினான். ஏராளமான தனம், அதனால் விளைந்த மதம், ராஜஸ் என்ற குணமே பிரதானமான கூட்டம், ஹிம்சையே பழகிப் போனதால் இதை பயங்கரமாக எண்ணவே முடியாத மனோபாவம்,  ப்ரும்ம தேஜஸ் கண்ணில் படவில்லை, தங்கள் தேவை நல்ல ஜாதி பசு, அது கிடைத்தது என்று  எண்ணி மகிழ்ந்தனர்..  

சர்வ பூதங்களையும் சமமாக நட்புடன் பார்க்கும், ஸூன்யமான இடத்திலும் தன்னுள் லயித்து ஆனந்தமாக இருப்பவன், மிக அரிதாக சாதனைகள் மூலம் அடைந்த  ப்ரும்ம ஞானம், சரீரத்தின் காந்தியே நெருப்பாக சுடர் விட இருந்தவனைக் கண்ட  பத்ரகாளி திடுமேன வெகுண்டெழுந்தாள்.

பெரும் கோபத்துடன் ஆவேசமாக பேசலானாள்.  புருவங்கள் நெரிய, பற்களை நற நறவென கடித்த படி, கண்கள் பயங்கரமாக சிவக்க, அட்டஹாச ஆர்பாட்டங்களுடன் கொல்லத் தயாராக இருந்த கொலையாளிகளை அதே வாளால் வெட்டித் தள்ளி, தன் பரிவாரங்களுடன் ஆடிப் பாடி, வெட்டிய தலையை பந்து போல உருட்டி விட்டு மறைந்தாள்.

விஷ்ணு தத்தா !(பரீக்ஷித்)  தலையை வெட்ட கூட அனுமதித்து சிறிதும் கவலைபடாமல் ஆயத்தமாக இருந்த போதிலும், அந்தந்த சமயத்திற்கு ஏற்ப ரூபம் எடுத்து வரும் பகவான் பத்ரகாளியாக வந்து தன் பக்தனை ரக்ஷித்தான். 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  ஒன்பதாவது அத்யாயத்தின் தமிழாக்கம் )  வசன ஸ்லோகங்கள்-20

அத்யாயம்-10

ஸ்ரீ சுகர் சொன்னார்: சிந்து சௌவீர நாட்டு அரசன் ரகூகணன்  என்பவன்  இக்ஷுமதி  நதிக் கரையோரமாக சென்று கொண்டிருந்தான். அவனது சிவிகையை தூக்க ஆட்களைத் தேடிக் கொண்டிருந்தவர்களின் பார்வையில் இந்த அந்தணன் பட்டான். தெய்வமே அனுப்பியது போல தடிமனான இளைஞன்,  பாரத்தை தூக்க சரியான ஆள் என்று எண்ணி அவனை அழைத்து சிவிகையை தங்களுடன் சேர்ந்து  தூக்க செய்தனர்.  பாரத்தை தூக்குவது அந்த இளைஞனுக்கு பழக்கம் இல்லாததால் சிறிது தூரம் செல்லும் முன் சிவிகை ஆடுவதையும், சீராக தூக்காததால் சரிந்து விழுவதையும் அறிந்த ரஹோகணன், சிவிகை தூக்கிகளை திட்டினான்.   என்ன ஆயிற்று உங்களுக்கு, என்றவன் புது மனிதனைப் பார்த்து ஏய், சரியாக  தூக்கு என்று அதட்டினான்.  எஜமானன்  திட்டும்படியாயிற்றே என்று பழைய சிவிகை தூக்கிகள், அவரிடம் காரணம் இவன் தான் என்று சுட்டிக் காட்டினர்.  அரசனே! நாங்கள் வழக்கமாக சிவிகைத் தூக்கிகள் சரியாகத் தான் தூக்குகிறோம், இவன் புதியவன்,  இப்பொழுது தான் நியமித்தோம், வேகமாக போகிறான், எங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை என்றனர்.

பலர் இணைந்து செய்யும் தொழிலில் ஒருவனின் தவறு அனைவரையும் பாதிப்பது தெரிந்தது தானே. ராஜா ரஹோகணன் விசாரிக்க பல்லக்கிலிருந்து இறங்கினார்.  வயதானவர் ஆனதால் கோபத்தை அடக்கிக் கொண்டு  புழுதி மூடிய ப்ரும்ம தேஜஸன், ஜாதவேதன் என்ற வேதம் அறிந்தவன்,  என்பதெல்லாம் அந்த தோற்றத்தில் தெரியவில்லை.  அவனை பார்த்து கேட்டார்.

சகோதரனே! அஹோ, கஷ்டம். இது கடினமான தொழில், உடல் உழைப்பைக் கோருவது.  அத்வான வழியில் வெகு தூரம் செல்ல வேண்டும். சகே! நீ பலசாலியாக, திடகாத்திரனாக தெரிகிறாய். இளைஞன் தான், உடல் ஊனம் எதுவும் இல்லை. ஏன் இவ்வாறு ஒத்துழைக்காமல் நடந்து கொள்கிறாய்?  பாராட்டுவது போல வார்த்தைகள், அதில் தொனித்த அவமதிப்பு புரிந்தாலும்,  பதில் சொல்லாமல் முன் போலவே சிவிகையை தூக்க முனைந்தான்.  ஆத்ம தத்வம்அறியாதவன் கடைசி காலத்தில் பஞ்ச பூதங்களும், இந்திரியங்களும், புண்ய பாபங்களும், அந்த: கரணமும்  தான்  பிறவிக்கு காரணம் என்பதை அறியாதவன். தண்டபாணியான யமன் போல தன் மக்களை ஆளுகிறான். நர தேவன் என்ற அபிமானம். என்னை ஜடம் என்று நினைக்கிறான் போலும் என நகைத்தவாறு சென்றான்.

திரும்பவும் ஆட்டம் கண்ட தன் சிவிகையிலிருந்து இறங்கிய ரகூகணன் ஏகமாக கோபத்துடன் கத்தினான்.

என்ன இது, நீ உயிருடன் இருக்க வேண்டுமா, இல்லையா? என்னை தவிக்க விட்டு,அரச ஆணையை மீறுகிறாய். மூடன், மன நலம் இல்லாதவன் உனக்கு தண்டபாணி, யமன் போல தண்டனை கொடுக்கிறேன். நான் யார் என்று தெரிந்து கொள், என்றான்.

நாட்டை ஆளும் தகுதியால் எல்லாம் அறிந்தவன் போல பேசுகிறான்.  அபிமானம்- கர்வம் பேச வைக்கிறது. ராஜஸமும், தாமஸ குணமும் மேலோங்கி இருந்தால் இப்படித்தான் பேசுவார்கள். தானே பண்டிதன் என்பர். பகவானைக் கூட துச்சமாக நினைப்பர்.  சர்வ பூத சுஹ்ருதன், அனைவரிடமும் நட்பாக இருப்பவன் என்று புகழப் படும் பகவான், யோகேஸ்வரனின் செயல்களை அதிகமாக அறிந்திராத அரசனிடம், நகைப்பது போலவும் அதை வெளிக் காட்டாமல் அடக்கிக் கொள்வது போலவுமான குரலில் பதில் சொன்னார்.

அந்தணர் சொன்னார்: அரசனே, நீ சொன்னது சரியே.  நான் ஆள்பவன், நீ எளிய ஏவலன் என்றாய். உன் சொல்லை மதிக்காமல் அவமதித்து விட்டேன் என்கிறாய். 

நீ ஞானி. அதில் சந்தேகமில்லை. ஹே வீர! பாரம் என்பது உடலுக்குத்தான், உயிரினங்களில் அந்தர்யாமியாக இருக்கும், சித்ரூபமான பகவானுக்கு இல்லை. அதனால் என்னால் சுமக்க முடியாது என்ற சொல்லில் பொருள் இல்லை.  வெகு தூர பயணம் என்கிறாய். வாஸ்தவம் தான். என்னை ஸ்தூல சரீரி- கொழுத்த உடல் உடையவன் என்றாய். அதுவும் சரியே.  ஸ்தூலம், க்ருசம், ஆதி வியாதி, பசி தாகம், ஆசை மோஹம், முதுமை, நித்ரை, ரதி, கோபம், மதம் இவை தேஹிகளுக்குத் தான்.   ப்ரும்ம ஸ்வரூபனான எனக்கு என் உடலில் தேவையில்லாத வஸ்து எதுவுமே இல்லை. உயிர் உள்ளவனா இல்லையா என்பது ஆதி அந்தம் உள்ள பிராணிகளுக்குத் தான். ஸ்வ,ஸ்வாம்ய – தானும் பரமனும்- என்ற திடமான கொள்கை உள்ளவனுக்கு தேவைகளும் இல்லை.

விதி வசத்தால் சிவிகையை தூக்குதல் என்ற செயல் எனக்கு அதுவும் யோகமே. என்ன செய்கிறேன் பார் என்றாய். ராஜஸ குணம் மிகுந்த க்ஷத்திரியன் நீ.  இப்பொழுது நான் கேட்கிறேன்? யார் ஈஸ்வரன் , அதாவது ஆணையிட யோக்யதை உள்ளவன்? உன் உடலாலும், வாக்கினாலும், தண்டத்தாலும் இதுவரை என்ன சாதித்து இருக்கிறாய்?  பிசைந்த மாவை மேலும் பிசைந்தால் என்ன மாறுதல் இருக்கும்? அது போல ப்ரமத்தன் என்றாய்-மூளை பிசகியவன்- அவனை தண்டித்தால் அவனிடம் என்ன எதிர் பார்க்க முடியும், மேலும் ப்ரமத்தனாவான். ராஜன்! ஞான உபதேசம் பெற கபிலாஸ்ரமம் செல்பவன் வழியில் எதற்கு ஒரு அந்தணனை சிவிகை தூக்கியாக வைத்திருக்கிறாய்? அவனுக்கு அது குறைவில்லை. ப்ராரப்த கர்மாவை குறைக்க பாரம் தூக்குதல் ஒரு வழி.  பாண்டவனே! உன் மூதாதையர் வனத்தில் வசிக்கின்றனர்.  (அரசனாக இருந்து மான் பிறவி எடுத்து, தற்சமயம் உன் முன் அந்தணனாக இருப்பவன் என்று என்னை அறிவாயா?) இந்த ப்ரமத்தன் என்ன கண்டான், தத்துவ அறிவு வேண்டும் என்று நினைக்க கூட முடியுமா? நான்கு வித சாதனைகள் என்ன என்று தெரியுமா? வேதாந்தம் அறிவானா? என்று தானே நினைக்கிறாய்?  எல்லா பாத சுவடுகளும் யானையின் காலடி சுவட்டில் மறையும் என்று ஒரு விதி- அதன் படி, சிரத்தையுடன் செய்வதே பலன் தரும் சிரத்தையில்லாமல் செய்யும் யாகமோ, தானமோ பலன் தராது என்பது நியதி. சிரத்தை உள்ளவனுக்கு ஞானம் பெற தகுதி வருகிறது. (ஸ்ரத்தாவான் லபதே ஞானம் -கீதை) அதன் பின் மற்றவையும் தொடரும். 

அரசன் திகைத்தான். பாண்டவ வம்சத்தின், சிந்து ரஹோகண ராஜ்யாதிபதி தான் ஆத்ம தத்வம் அறிய விரும்பியதை அதை ஏற்கனவே அடைந்தவனாக அந்த அந்தணன் பேசியதை கேட்டபின் வேகமாக இறங்கி வந்தான்.  தலையால் அவர் பாதத்தில் வணங்கி, மன்னிப்பு கேட்டான்.

தாங்கள் யார்? உங்கள் தகுதியை மறைத்துக் கொண்டு சேவகனாக வந்துள்ளீர்கள்.  எந்த ரிஷியின் வழித் தோன்றல்?  எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கள் நன்மைக்காக, எங்கள் மனதில் தெளிவை அளிக்க வேண்டும்.  தேவேந்திரனின் வஜ்ரம் ஒரு பொருட்டல்ல.   முக்கண்ணனின் ஸூலத்திற்கும் பயப்படமாட்டோம். யமனுடைய தண்டமும் அக்னி, ஸூரியன், சந்திரன், வாயு, நீர் இவைகளிடமும் பயமில்லை, அந்தணர்களின் குலத்தை அவமதிக்க பயப்படுவோம். எனவே ப்ரும்மசங்க!  ஜடம் போல வெளித் தோற்றம்.  உங்கள் விக் ஞானம்- தெளிவான ஞானம் – அதை மறைத்து நடமாடுகிறீர்கள்.  அதனால் உங்களைத் தெரியவில்லை.  சாதோ! மனதால் கூட எங்களை கோபிக்காதீர்கள். மன்னிக்க வேண்டுகிறேன். நான் இந்த யாத்திரையை துவங்கியதே, பரம குரு, முனிவர்களின் தலைவன். அவரிடம் பாடம் கேட்கவே.  சாக்ஷாத் ஹரியைப் பற்றி அவருடைய ஞான உபதேசம் பற்றி, அவர் அவதரித்த கதையைக் கேட்க கிளம்பினேன்.  உலகை சுற்றி பார்க்க வந்தீர்களா, யோகேஸ்வரர் நீங்கள்.   உங்களைப் போன்ற யோகேஸ்வரர்களின் போக்கு சாதாரண உலகியலில் உள்ள எங்களால் எப்படி ஊகிக்க முடியும்?  பாரம் தூக்குவதின் சிரமத்தை அறிவேன்.  உடல் நோக வேலை செய்பவன் படும் பாடு எனக்கு புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் வேறு வழி இல்லை. இது உலகத்தின் நடை முறை. ஸ்தூலத்வம்-உடல் பருமன்-  ஸ்தூலமான பாத்திரத்தை அடுப்பில் வத்து நீரை விட்டு  கீழே அக்னியை மூட்டினால், அக்னியின் ஸூடு பாண்டத்தில் உள்ள தண்ணீரை சுடவைக்கிறது, அது அதில் இருக்கும் தான்யத்தை வேக வைத்து உணவாக்குகிறது.  மனித சரீரம் ஸ்தூலமானால் இந்திரியங்களின் செயல்களில் ப்ரதி பலிக்கும்,  உள்ளிருக்கும் புருஷனின் அனுரோதம்- தூண்டுதலால் என்பது ஒரு நியதி.  சாஸ்தா, அபிகோப்தா – சாஸனம் செய்பவன், பரி பாலனம் செய்பவன் என்பது அரசன் பெயர். அவன் கடமை. ஒரு விதத்தில் அவன் பிரஜைகளின் கிங்கரனே-அடியாளே.  பிசைந்த மாவை பிசைவது- செய்த காரியத்தையே செய்வது ராஜாவாக என் குலதர்மம். அச்யுதனின் கட்டளையாக நினைத்து செய்யும் பொழுது  தவிர்க்க முடியாமல் செய்யும் குற்றங்கள், பாபங்கள்  தானே கரைந்து விடும். 

அதனால், தாங்கள் என்னிடத்தில் நரதேவ அபிமானம்-கர்வம் , அதனால் உங்களை பொருட்டாக நினைக்கவில்லை  என்று சொன்னதில் பொருள் இல்லை.. ஆர்த பந்தோ!  (கஷ்டத்தில் இருப்பவனுக்கு பந்துவாக இருந்து உதவுபவர்)  என்னை நட்புடன் பாருங்கள். உலகத்துக்கே சகாவாக இருக்கும் ப்ரும்ம ஸ்வரூபனுக்கு அது ஏற்றதே.  ஸூலபாணியை போல அறியாமையால் செய்த என் தவறை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  பத்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் )  வசன ஸ்லோகங்கள்-25

அத்யாயம்-11

அந்தணன் சொன்னான். அரசனே! நீ அறிந்ததைச் சொன்னாய்.  அது போதாது, அறிந்து கொள்ள வேண்டியது இன்னமும் நிறைய உள்ளன.  க்ருஹஸ்தன், தன் குடும்பம், தன் நாடு, பிரஜைகள் என்பதை நல்ல முறையில் நிர்வஹிக்க வேண்டிய நிலையில் உள்ளவன்,  இந்த பிரச்னைகளே உன் மனதை ஆக்ரமித்து இருக்கிறது. அதனால் நீ என் கேள்விக்கு பதில் அந்த நிலையிலேயே சொன்னாய். அது சாதாரண மனிதனுக்கு சரி. .வேதங்களில்  கூட தத்துவ வாதம் என்பதை  சாதுக்கள்  சரியென்று சொல்வதில்லை.  தத்துவங்களை புரிந்து கொள்ள சாதாரண சொற்கள் போதும்.  கனவில் கண்ட சுகமான காட்சிகளை விழிப்பு வந்த நிலையில் நாம் அது வெறும் தோற்றமே என்பதை அறிவதில்லையா ?  மனம் ராஜஸ குணத்தால் நிரம்பியிருக்கும் சமயம் அங்குசத்தால் கட்டுபடுத்த முடியாத யானையின் மதம் போன்று மற்ற சத்வ, தாமஸ குணங்களுக்கு இடமளிக்காது.  அவனுடைய புர்வ ஜன்ம வாசனை விஷயங்களில் – உலகியல் சுக துக்கங்களிலேயே இருக்கும். மாயையே உண்மை என்றேண்ணி மாற்று கருத்தின்றி தேகத்தையே நிரந்தரமாக எண்ண வைக்கும்.

  பலவிதமான பெயர்களுடன் பதினாறு விதமாக ஆத்மா தன்னை வெளிப் படுத்திக் கொள்ளும். பூர்வ ஜன்ம வாசனையின் பலனாக விருப்பு வெறுப்புகள் வரும். க்ஷேத்ரக்ஞன் – பரமாத்மா சக்ஷியாக இருப்பான்.  பருமனான உடலோ, மிகவும் சிறிய உடலோ,  நான் தேவன் அல்லது மனிதன் என்ற பேதமோ,  உடல் சம்பந்தப்பட்டது, வெளியில் தெரிவது.  மனம் குணங்கள் (ஸத்வ,ரஜோ,தாமஸ)  ஆட்டுவித்தபடி ஆடுகிறது. -அதனால் பந்த மோக்ஷத்திற்கு அதுவே காரணமாகிறது.  பொருள்களில் நல்லது தீயது என்றும், விரும்புவது, வேண்டாதது என்று அது காட்டும் சித்திரமே அல்லது உருவமே. . ஞானம் உதயமானால் உண்மை தெரியும். 

மனதை தான் விரும்பியபடி செய்யச் செய்யும் குணங்கள் துன்பத்தையே தரும். ஆகவே  மனதை அடக்கி தன் வசம் ஆக்கிக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான்  பஞ்சால் ஆன திரி நெய்யை தான் உள் வாங்கி, அக்னியின் உதவியோடு தீபமாக ஒளி விடுவது போல மனமும்  புத்தியும் நிர்குணம் என்ற ப்ரும்மத்தை அறிந்து கொண்டு சத்புத்தியாக சுடர் விடும்.

பதினோரு செயல்கள்.  உடல் செய்யும் வேலைகள், இந்திரியங்கள் செய்பவை, ஞானம் மற்றும் அபிமானம். வாசனை முதலான  விஷயங்கள் நுகர் பொருட்கள்.  அகூதி- ரூபம். கர்மேந்தியங்கள் செய்யும் ஐந்து விஷயங்கள்.  நடப்பது முதலியவை

ரஹூ கணனுக்கு ஞான உபதேசம்

முன் சொன்ன பல ஆத்ம விசாரங்களை விவரமாகச்  சொல்லி முடிக்கிறார்.  …….மேலும் பல ஸ்லோகங்கள்.

 (இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற ஐந்தாவது ஸ்கந்தத்தில் பதினொன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம் )  வசன ஸ்லோகங்கள்- 17 

அத்யாயம்-12

ரகூ கண ராஜா துதி செய்தார்;

நமோ நம: காரண விக்ரஹாய, ஸ்வரூப துச்ச்சீ க்ருத விக்ரஹாய. அவதூதனான அந்தணனாக வந்து ரகசியமான அரிய தத்வங்களை எனக்கு விளக்கிச் சொன்ன  நித்யானந்த ரூபமாக விளங்கும் உங்களுக்கு நமஸ்காரம்.  வெப்ப நோயால் தவிக்கும் நோயாளிக்கு  குளுமையான பனிக் கட்டி நிறைந்த நீரால் உடலை நீராட்டியது போலவும், தவறான தான் தனது என்ற அபிமானம் என்ற பாம்பின் விஷம் தாக்கி, மயங்கி , இருண்ட கண் பார்வையுடன் இருந்த எனக்கு ப்ரும்மன்! உங்கள் வாக்கு அம்ருதம் போலவும் விஷத்தை முறியடிக்கும் மருந்தாவும் அமைந்து விட்டது. ஆகவே, உங்களை, என் சந்தேகங்களை நீக்கும் பொருட்டு வணங்குகிறேன். அதன் பின், நல்ல அறிவும், அத்யாத்ம  யோகம் பற்றியும் விவரமாக சொல்லுங்கள். என் மனம் தற்சமயம் அதை மிக மகிழ்ச்சியுடன் கேட்க  விழைகிறது.  யோகேஸ்வர! தாங்கள் சொன்னீர்கள்.  கண் முன் தெரியும் நற் பலன்கள் முன் செய்த வினைகளின் பலனே.  எதிர்பாராமல் வந்தது அல்ல. இதன் விவரங்களை அலைபாயும் என் மனதிற்கு விளங்கும்படி சொல்லுங்கள்.

அந்தணர் சொன்னார்: இந்த ஜனங்கள் என்பதும், இவர்களுக்கு அரசன் என்றும் சொல்வது எதை குறிக்கிறது? யார் யாருக்கு என்ன காரனத்தால் இந்த பெயர் அல்லது பதவி வருகிறது. அந்த அரசனுக்கும் மற்றவர்களைப் போலவே தான், கால்கள், கனுக்கால்கள், முழங்கால்கள், மார்பு மத்ய பகுதி,  தலை என்ற அமைப்பு உள்ளது.   தானாக நடக்க கால்கள் இருந்தும் என்ன காரணத்தினால் உன்னை சிவிகையில் வைத்து வேறு சிலர் தூக்கிச் செல்கிறார்கள்.  சௌவீர ராஜன் என்ற பெயர் அத்துடன்  நான் இந்த ஜனங்களை ஆளுகிறேன் என்ற உன் எண்ணம்  உன் பதவியுடன் சேர்ந்து வந்தது.   இந்த பூமி என்பது சிறு மணல் துகள்கள், சிறு கல் முதலியவைகளின் சேர்க்கையே.  இவைகளை பிரித்தால் என்ன தேறும்? அணு, பரமாணு எனும் சின்னஞ்சிறு துகள் தானே. எந்த பரமாணு உன்னுடையது? மனம் தான் காரணம் இவைகளைக் கூட்டி வைத்து பூமி என்று பெயரிட்டு அதற்கு நாயகன் என்று உன்னை அழைத்து எதனால் அல்லது எது செய்கிறது?  இதில் எந்த துகள் ஸ்தூலம்,(பருமன்)  எது க்ருசம் (மெலிந்தது) என்று பிரித்தறிய முடியுமா?  அணு அல்லது ப்ரும்மாண்டம் எது? சத் அசத் , நல்லது, அல்லாதது எவை?  எதற்கு உயிர் , எதற்கு இல்லை என்று இந்த துகள்களில் எப்படி அறிவாய்?  இதை செய்தது அஜன்- என்ற ஆதி அந்தமில்லாத, பிறப்பு இறப்பு இல்லாத முதல் புருஷன் -அவன் தான் செய்தான் என்பதை உணர்ந்து கொள்.

பரமார்த்தமான ஞானம்- நாம் அறியாத ஒரு பரம் பொருள் உலகை இயக்கும் சக்தி அதை அறிவது தான் உண்மையான அறிவு. சத்யமான ப்ரும்மா ஒன்றாக பலவாக, உள்ளும் வெளியுமாக பரவியிருக்கும்  அதன் பெயர் தான் பகவான்.  கண் எதிரில் பார்க்கும் பொழுது ப்ரசாந்தனாக, அமைதியாக இருக்கும். அதை கவிகள் வாசுதேவன் என்பர். ரஹூ கணா! அதை தவம் செய்து மட்டும் அறிய முடியாது.  வீட்டைத் துறந்து, மற்ற வசதிகளை அழித்துக் கொண்டால் மட்டும் கண்ணுக்கு புலப்படாது. வேத பாராயணத்தை முழுமையாக செய்தவனும் அறிந்ததாக தெரியவில்லை.  தனித்தனியாக நீரை, அக்னியை.ஸூர்ய சந்திரர்களை , பூஜித்து தெரிந்து கொள்ள முடியாது. (நாயமாத்மா ப்ரவசனேன லப்யோ, ந மேதஸா, ந பஹுனா ஸ்ருதேன- கீதை)

வாசுதேவனை அறிய வேண்டுமானால் அவனை அறியவே சாதனைகள், பஜனைகள் செய்பவர்களுடன் இணைந்து இருப்பது பலன் தரும்.  கேட்பதும்,நினைப்பதும் வாசுதேவன் என்ற பெயர், அதுவே பகவான், பூஜ்ய: என்ற சம்பந்தமாகவே ஆகும்.

நான் முன்பு பரதன் என்ற அரசனாக இருந்தேன். வயதானதும் பகவானின் ஆராதனம், முழுமையாக செய்ய எண்ணி, துறவியாகி  வனம் வந்தேன்.  மானின் மேல் வைத்த பற்றினால் ம்ருகமாக ஒரு ஜன்மம் எடுத்தேன். அந்த பிறவியிலும் என் நினைவு ஸ்ரீ க்ருஷ்ணன் அருளால் அழியவில்லை. மனிதனாக இந்த என் பிறவியில் என் மனம் ஜனங்களின் நடுவில் அமைதியாக இல்லை. அதனால் தனித்து தோன்றியபடி அலைகிறேன். எனவே, பல விதமான அனுபவங்களின் பலனாக விரக்தனாக அத்வானமான இடங்களில் செல்கிறேன். என் மனதில் மோஹம் இல்லை. ஞானம் என்ற வாளினால் என் மோகம் என்ற குணத்தை அடியோடு வெட்டி வீழ்த்தி விட்டேன். நான் முன்பு கேட்டு என்  நினைவில் உள்ள ஸ்ரீ  ஹரியின்  கதைகள்,  அத்வானமான இடங்களிலும் எனக்கு துணையாக உள்ளன. 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற ஐந்தாவது ஸ்கந்தத்தில்  பன்னிரண்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் )  வசன ஸ்லோகங்கள்-12

அத்யாயம்-13

அந்தணர் (பரத முனி) சொன்னார்: கடினமான வழி இது. இதில் நுழைந்தவன் இருட்டும், ரஜஸ், தமஸ், சத்வம் இவைகளின் பலனாக பிறவி பெற்று செயல் ஆற்றுபவன்.  இதில் தனமே முக்யமானதாக நினைத்து அலைகிறான், சிரமப்பட்டு தனத்தை சேர்கிறான்.  பலன் அவன் விரும்பியபடி அமைவதில்லை. இருந்தாலும் விடாமல் உழைக்கிறான்.

மனிதனுக்கு உடன் பிறந்த பத்து திருடர்கள் (இந்திரியங்களே திருடர்கள் போல துன்பம் விளைவிக்கும் என்பதால்).  கோமாயு, ஓனாய்கள் போல அவனிடம் இருந்து பிடுங்குதிலேயே குறியாக இருப்பவை. ஆனாலும் சில சமயம் கந்தர்வ புரம் என்பதை காண்கிறான். ரசிக்கிறான். பலவிதமான இன்னல்கள் கொசு கடிப்பது போல இருந்தாலும், சில சமயம் கிடைத்த நன்மையை நினைத்து தொடர்ந்து உழைக்கிறான். 

வீடு வேண்டும், குடிக்க நீர், செல்வம், இவைகளை தன் புத்தியால் சம்பாதிக்கிறான்.   காட்டில் அலந்து திரிவது போல இதற்கும் பல இடங்களில் அலைந்து திரிகிறான். பலமான காற்று வீனாலும், புழுதி மண்டினாலும், திசை தெரியாமல் திணறினாலும் கண்களை மறைக்கும் புழுதி, பூச்சிகள் சப்தமிடுவதைக் கேட்டும், ஆந்தை அலறுவதைக் கேட்டும் திசையறிந்து கொண்டு பசித்தாலும், பாலைவனத்தின் கானலைக் கண்டு மயங்கி அதன் பின் ஓடினாலும், வேறு வழியின்றி தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறான். வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்ற.

எதிர்பாராமல் ஒரு நீர் நிலையை அல்லது நதியைக் கண்டால் ஆஹா என்று மகிழ்வான். தாவாக்னி எதிர்ப்படுவது போல உடலை வதைக்கும் இடங்கள்.  யக்ஷர்கள் வந்து அடிப்பார்களோ என்ற பயம். இந்த நிலையில் சேமித்ததையும், பிடுங்கி திருடிக் கொண்டு போக பலசாலிகளான திருடர்கள் எதிர் படலாம். சிரமப்பட்டு சேமித்த செல்வம் பறி போக பல வழிகள்.  இதனிடையில் முஹூர்த்த நேரம் கந்தர்வ நகரம் எதிப்பட்டால், மனம் மகிழ மாட்டானா?  வழி நடையில் முள் குத்திய வலி அவனுக்குத் தானே தெரியும். நகங்களில் பட்டு வலி தெறிக்கும். சற்றும் அமர்ந்த்து விட்டு பின் தொடர்ந்து செல்வான்.  குடும்பஸ்தனுடைய கஷ்டம் அவனுக்குத் தான் தெரியும். 

அதைவிட கஷ்டம், வழியில் மலைப் பாம்புகள் இருந்து விழுங்கி விட்டால் என்று பயம்.  தந்த சூகம் என்ற அந்த ஜீவன்களில் பல்லில் விஷம்.  குருடன் இருண்ட பாழும் கிணற்றில் விழுவது போல. அந்த சமயம் சிறிதளவு தேனீக்களின் கூட்டில் இருந்து வழியும் தேன் நாக்கில் படுமானால் மகிழ்ச்சி அடைவதும் இயல்பே. அனைத்து துன்பங்களையும் ஒரு வினாடி நேரம் மறக்கச் செய்யும் சுகானுபவம்.

மழை, கடும் குளிர் அல்லது கோடை வெய்யில் என்று பருவ காலங்களினால் உடல் வருத்தம் வரும். சூதாடி நண்பர்களோடு விளையாடி தொலைப்பது போன்ற தாங்களே அறிவின்மையால் வகுத்துக் கொண்ட நஷ்டங்கள்.  தனம் இல்லை, அல்லது போதவில்லை என்றால் தூக்கத்தை தொலைப்பான்.  யாசித்து ஏதோ சிறிது பெற்றாலும் தொடர்ந்து யாசித்தால் அவமானம் தான் மிஞ்சும். அதனாலும் வைரம், நன்பர்களே விரோதிகள் ஆவார்கள்.  இப்படி துன்பம் வரும் என்று முன் யோசனை வராது.

இதை எண்ணித்தான் பெரியவர்கள், மனதை அடக்கு என்றார்கள். தன்னை அறிந்து கொள். ஆசை படாதே என்ற அறிவுரைகள்.   பல விதமாக மனித வாழ்க்கையின் நிரந்தமின்மையைச் சொல்லி விட்டு, ரஹூ கணா! நீயும் இந்த அனுபவங்களை பெற்றிருக்கலாம். நட்பும், வைரமும் தெரிந்திருக்கும். அதனால் தான் ஞானம் பெற உபதேசம் பெற கிளம்பி இருக்கிறாய்.  ஹரி சேவையால் நன்மை அடைவாய். தாண்ட முடியாத இந்த சம்சாரம்  என்ற தளையை நீக்கி வெளி வர அது தான் வழி. ஞானம் பெறுவாய்.

அரசன் ரஹூ கணன் பதில் சொன்னான். அஹோ!  அந்தணரே நீங்கள் பாக்யசாலி. ஹ்ருஷீகேசனிடம் மனதை செலுத்தி மஹாத்மாவாக ஆனவர்.  க்ருதாத்மானம், மாஹாத்மானம் என்று உங்களை வணங்குகிறேன்.  உங்களை சந்தித்தால் என் வாழ்வே பயனுடையதாக ஆயிற்று.  உங்களை வணங்கி அமலமான அதோக்ஷஜனை வணங்கிய பலனுக்கு சம மான நன்மையை அடைந்து விட்டேன்.  தர்க்கம் செய்த எனக்கு விவேகம் கிடைக்கச் செய்து விட்டீர்கள்.

மஹானான உங்களுக்கு வணக்கம். இந்த அறிவு உடையவன் யாரானாலும், குழந்தையோ, யுவனோ, மாணவனோ, படித்து முடித்த அறிவாளியான அந்தணனோ, அனைவருக்கும் வணக்கம்.  பேதமின்றி அந்த அறிவை வணங்குகிறேன்.  இப்படி ஓரிடத்தில் நில்லாமல் சுற்றும் மாபெரும் அறிவாளிகளால் அரசர்கள் பெருமை நிலைக்கிறது.

ஸ்ரீ சுகர் சொன்னார்:  இவ்வாறு பதில் சொன்ன அரசனுக்கு ரிஷி பரதன் ஆத்ம தத்வம் என்ற உபதேசம் செய்தார்.  சிந்து தேச அரசனுக்கு கருணையுடன், அன்யோன்யமாக அன்புடன் ப்ரும்மரிஷியின் மகன் உபதேசிக்கவும் அந்த அரசன் மேன் மேலும் பணிவுடன் வணங்கியும், மகிழ்ச்சி கடலில் திக்கு முக்காடியவன் போல உணர்ந்தான்.  உடல் தரையில் பட அவரை விழுந்து வணங்கினான்.  அரசன் என்ற பெருமிதமும், உடலே பிரதானம் என்ற எண்ணமும், விலகின. இப்படித்தான் பகவானை நம்பி அதே நினைவாக வாழும் பெரியவர்களை அடைந்தால், அவர்கள் அருளுக்கு பாத்திரமாகி தாங்களும் நல் கதி அடைவர்.

மஹா பாகவதரே! பரமார்த்தமான விஷயங்களை புரியும்படி சொல்லி எனக்கு அறிவை புகட்டி விட்டீர்கள். என் கண் திறந்து கொண்டது போல தெளிவாக உலகியலை காண்கிறேன். ஆர்யா! புத்திமானான தாங்கள் எனக்கு அளித்த அறிவு, சாதாரணமாக எளிதில் கிடைக்காது. மேலும் சொல்லுங்கள். நான் உய்யும் வழியை காட்டுங்கள், என்று வேண்டினான்.

இதுவரை ஐந்தாவது ஸ்கந்தத்தின், பதின் மூன்றாவது அத்தியாயம்.

அத்யாயம்-14

அவர் மேலும் உபதேசித்தார்:  வசன நடையில் அலங்காரமான சொற்களுடன் அழகாக அமைந்த இந்த பகுதியில், தான், தன் தேகம் , தன்னுடைய என்ற குணங்களே பிரதானமாக வாழ வேண்டாம்,  பகவானை நினைத்து அவர் பாதார விந்தங்களில் சரணடைவாயாக. அவரே, குரு, அவரே  உலகியல் தாபங்களை தீர்க்க கூடியவர் என்று சொல்கிறார்.

இந்த ஐந்து புலன்களும் திருடன்கள் போல- எப்படி என்றால், சிரமப் பட்டு ஈட்டிய செல்வத்தை விரயமாக்கும் வழிகளில் மனதைச்  செலுத்தும்.  தர்மத்தைச் செய்ய எண்ணினாலும், கண் பார்த்தும், செவிகள் கேட்டும், நாக்கு ருசித்தும், தொடு உணர்ச்சியால் கவரப் பட்டும், பகவானை ஆராதிக்க விடாமல் இழுத்து வழி மாற்றி இழுத்துச் செல்லும். அதனால் மனதை அலை பாயாமல் திடமாக வைத்துக் கொள்.

இல்லறத்தில் இருப்பவனுக்கு, மனைவி  மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் மிக அதிகம். அவர்கள் அனு கூலமாக இல்லையென்றால் நாய்களும், குள்ள நரிகளும் அபகரிப்பது போல செல்வம் கரையும். அதைத் தவிர எந்த நன்மையும் இல்லை.

ஆண்டு தோறும் உழுது பயிரிட்ட விளை நிலம், ஒரு காலத்திற்குப் பின் வறண்டு போகும் அபாயம் உள்ளது. அந்த சமயம் விதைகள் உலர்ந்து முளைக்காமல் போகும். இதையறியாமல் விதைத்து விட்டு வருந்துவது அறியாமையே.   அது போலத்தான் இல்லறமும்.  தொடர்ந்து போஷித்துக் கொண்டு உறவினரை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள வேண்டும். காலம் செல்லச் செல்ல உறவுகளின் நெருக்கம் குறையும், தேவைகள் அதிகமாகும், அதனால் மனம் வருந்த நேரிடும்.

விட்டில் பூச்சி, சகுந்த என்ற பறவை, எலிகள், இவைகள் பயிரை நாசம் செய்வது போலவே, அறிவில்லாத மனிதர்கள், மற்றவர்களால் பாதிக்கப் படுவர்.  கந்தர்வ நகரம் என்று தாங்கள் வாழும் இடத்தை ரசிப்பதும் காலம் செல்லச் செல்ல அதுவும் மன பிரமையே என்று உணருவர்.

பானங்கள், நல்ல உணவுகள் என்று தேடி தேடிச் செல்வார்கள். வெகு தூரத்தில் கோடைக் காலத்து கானல் நீர் போன்று எதையோ நம்பி ஏமாறுவர்.  வெளி வேஷம், தோற்றங்கள் பொன் போலவும், உண்மை போலவும் கண்களை மயக்கும்.  அதனால் தான் சம்சாரத்தை அடவி, காடு என்றனர். அலைந்து திரிந்தாலும் வேண்டி வந்த பொருள் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்.

பலவிதமான அவமானங்கள் தன் மனிதர்களிடமே அடைய நேரிட்டால் அதிக துக்கம். ஆனால் அதை மறந்து அவர்களையே நம்புவது தான் மனித இயல்பு. முன் செய்த நல்வினையால், நல்ல பொருளும், சுகங்களும் நிறைய இருந்து விட்டால், சுற்றத்தார், உறவினர் அது தீரும் வரை உடனிருப்பர்.  எதேச்சையாக நல்ல உபதேசம் பெற்று மனம் மாறி வந்தால், மன நிலை சரியில்லாதவன் என்பர்.  ஒரு அளவுக்கு மேல், செல்வத்தில் உள்ள ஆசையால் தந்தை மகனுக்கிடையில் கூட மன வேற்றுமை வரும்.

இவ்வாறே, நரை, திரை, மரண பயம் என்று இல்லறத்தில் வரக் கூடிய துன்பங்களைச் சொல்லி, எச்சரிக்கிறார்.

ஈஸ்வரனான பகவான் அருளால், நல்ல எண்ணங்களும், வாழ்க்கையை வீணே செலவழிக்காமல்,  பரமாணு முதலான பகவானின் ரூபங்களை  தெரிந்து கொண்டு தானே தன்னை உய்வித்துக் கொள்ளவும் முடியும். ப்ரும்மத்திலிருந்து, புல் பூண்டுகள் வரை பகவானின் அம்ச பூதமே என்ற அறிவும், கால சக்கரம் என்ற தன் ஆயுத த்தால், யக்ஞ புருஷனான பகவான் நம்மை காக்கிறான் என்ற ஞானம் பெறலாம். மிக கவனமாக  இருந்து கழுகு போலும், ஆந்தை போலும், கவடன் போலும் கலைக்க வரும் கும்பல்கள் ஆத்ம ஞானம் அடைவதை தடுக்கவே வரும் என்பதையும் அறிந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் வேதங்களும், சாஸ்திரங்களும் சொல்வதை மறுப்பார்கள்.  தங்கள் கடமைகள், ஒழுக்கங்களை, தர்ம சாஸ்திரங்களை மறுத்து பேசுவது தவிர தாங்களும் எந்த நன்மையும் அடைவதில்லை.  பகவானை நம்பி ஆராதனை செய்து சாஸ்திர கர்மாக்களை சரிவர செய்து வருபவன், உயர்வு அடைவதால், அவர்களைப் பார்த்து பொறாமை மட்டுமே அவர்கள் செயலுக்கு காரணமாகும்.  

வானரங்கள் போல வாழ்வார்கள்.  தன்னிஷ்டம் போல சுற்றும் விலங்குகள் போல உண்பதும், வம்சத்தை பெருக்குவதும் மட்டுமே வாழ்க்கை.   தன் மகன், மனைவி இவர்களை காப்பது என்ற செயல் கூட இராது. எந்த விதம் செல்வத்தை சேர்ப்பது என்று மட்டுமே அறிவை பயன்படுத்தும் இது போன்ற மக்களிடம் விலகியே இருக்க வேண்டும்.

எனவே தான், யோக முறையில் சாதனைகள் செய்யும் பெரியவர்களை உயர்வாக சொல்கிறோம். முனிவர்கள் என்ற இவர்களால் மற்றவர்களுக்கு இடையூறோ, துக்கமோ இல்லை.  மாறாக அமைதியான அவர்கள் குணமும் நடத்தையுமே அண்டியவர்களுக்கு ஆறுதல் தரும்.  ராஜ ரிஷிகள், திக்குகளை ஜயித்து, வெற்றி வலம் வந்தவர்கள் கூட,  யாகங்கள் செய்தும், தானங்கள் கொடுத்தும் தன் ப்ரஜைகளை சுகமாக இருக்கச் செய்வார்கள்.  கர்ம காண்டம் என்பதும் முக்கியமான ஒரு விதி.  அதனால் சாஸ்திர விதிகளின் படி நடப்பர்.

ராஜரிஷியே! இது பெரியவர்கள், சாதித்தவர்கள் சொல்லும் அறிவுரை. மகன், மனைவி, உற்றார் உறவினர் அனைவரையும் அனவணைத்துச் செல்லும் இல்லற வாழ்க்கையிலும், தன் மனக் கட்டுப்பாடும், தன்னை உயர்த்திக் கொள்ளும் முணைப்பும் இருக்க வேண்டும்.  பகவான் ஸ்ரீமன் நாராயணனே யாக புருஷன். தர்மத்தின் அதிபதி. விதி என்ற வேதங்களில் நிபுணன். சாங்க்யம் என்ற ஞான மார்கத்தை அருளியவன்.  யோகம் என்பதையும் சொல்லும், இயற்கையின் ஈஸ்வரனான நாராயணனை நமஸ்கரிப்போம். உலகை காக்க மிருகமாக கூட அவதரித்தவன். 

இவ்வாறு பரத ரிஷி,    ஏற்கனவே பாகவதனாக, அறிவுத் தாகம் உடையவனாக இருந்ததால் அரசன் ரஹூ கணனை ஆசீர்வதித்து,  , ஆயுள், செல்வம், புகழ், சுவர்க பதவிகள் கிடைக்கவும் வாழ்த்தி அருளினார்.  

இதை கேட்பவர்களுக்கும் நல்ல பகுத்தறிவும் – இது காஞ்சனம்  இது தோற்றமே என்று பிரித்து அறிந்து கொள்ளும் திறமை- வரும் என்று பலன் சொல்லி முடிக்கிறார்.

(இதுவரை ஸ்ரீமத் பாகவத்தின் ஐந்தாவது ஸ்கந்தத்தில், பதி நான்காவது அத்யாயம்.)

அத்யாயம்-15

ஸ்ரீ சுகர் சொன்னார்: பரதனுடைய மகன் சுமதி என்பவனை,  ஒரு சில நாஸ்திகர்கள், ருஷப ராஜனை அனுசரிப்பதாக சொல்லிக்  கொண்டு வேத சம்ப்ரதாயத்திற்கு மாறான ஒரு வழியை  தங்கள்  புத்திக்கு எட்டியவரை புதிதாக  ஒரு சம்ப்ரதாயத்தை ஆரம்பிப்பார்கள்.

சுமதிக்கு விருத்த சேனா என்பவளிடம் தேவதாஜித் என்ற பெயரில் ஒரு மகன் பிறந்தான். ஆசுர குணம் கொண்ட அந்த மகன் அசுர ஜாதி பெண்ணிடம் தேவத்யும்னன்  என்ற மகனை பெற்றான். அந்த வம்சம், தேனுமதி மகன் பரமேஷ்டி, அவன் மகன்  ப்ரதீஹ என்பவன் என்ற வரை வளர்ந்தது.

ப்ரதீஹன் ஆத்ம வித்யையை கற்றான். தானும் பரி சுத்தமாக இருந்து மஹா புருஷர்களை அனுசரித்து நடந்து கொண்டான். சுவர்சலா அவன் மனைவி. அந்த வம்சம் வளர்ந்தது.

அத்யாயம்-16

அரசன் வினவினான்.  பூமண்டலம் பற்றிச் சொன்னீர்கள்.  ஆதித்யனின் வெப்பம் உலகில் உயிர்களை வாழ வைக்கிறது.  சந்திரனுடனும், தாரகைகளுடனும் இருப்பதை ஜோசியம் என்ற அறிவியல் உடன் இருந்து உலகின் நன்மை தீமைகளை உறுதி செய்வதாக சொல்வர். அது பற்றிச் சொல்லுங்கள்.

அதிலும், ப்ரிய விரதன்  தன் ரதத்தில் ஏழு கடல்களை தாண்டினான் என்று சொன்னீர்கள். அதை விவரித்துச் சொல்லுங்கள். சப்த த்வீபம்- ஏழு தீவுகள் என்பவை யாவை? அவைகளின் தனித் தன்மை என்ன?  அவைகளின்  இருப்பையும், பயனையும் விவரமாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன், என்றான்.  அதிலும், பிரியவ்ரதனின் ரதம் சென்ற வழியில் ஏழு கடல்கள் ஸூழ இருந்தன என்ற பூ பாகங்கள் பற்றிச் சொல்லுங்கள்.  விரிவாக இவைகளின் இருப்பு, இவைகளின் சிறப்புகள் இவற்றைச் சொல்லுங்கள். 

பகவன்! நீங்கள் பொதுவாக அதன் வெளி உருவத்தை மட்டும் சொன்னால் போதாது. நீங்கள் மனதை அடக்கியவர்கள். மனதின் ஆற்றலை சூக்ஷ்ம மான ஆத்மஜோதி என்பதில், அதுவே பர ப்ரும்மான பகவான் வாசுதேவன், அவரிடம் முழுமையாக ஈடுபாட்டுடன்  வைக்கத் தெரிந்தவர்,  அதனால் குரோ! இவைகளை விளக்கிச் சொல்ல உங்களால் தான் முடியும்.

ரிஷி சொன்னார்:  மகாராஜ! பகவானின் மாயா குணங்கள் அளவற்றவை அல்லவா. முழுவதும்  அறிவது மனித யத்தினத்தில் முடியுமா? ஓரளவு, வாக்கு, மனம், உடல் இவைகளால் தெரிந்து கொண்டோமானால் அதுவே போதுமானது. மிகச் சிறந்த அறிவாளிகள் அறிந்து சொன்ன விவரங்களையே, முக்யமான பூகோளத்தின் அமைப்பு, அதன் சிறப்பு, பெயர்கள், அடையாளங்கள் இவற்றைச் சொல்கிறேன்.   

இவைகளின் மத்தியில், இளாவ்ருத்தம் என்ற பூப் பகுதி, ப்ரும்மாண்டமே உருவானால் அதன் நாபி-மத்ய ப்ரதேசத்தில் இருப்பது போல அமைந்துள்ளது.  குல கிரி எனப்படும் மலையரசன், பொன் நிறத்தினனாய், இத்தீவின் காதுகளில் வைத்த கர்ணிகாரம் பளீரென்று தெரிவது போல பரவி நிற்கிறான்.  குவலய கமலம் – இந்த பூப் பகுதி,  அதன்  உச்சி, தலை போன்ற பாகத்தில், முப்பத்து இரண்டு ஆயிரம் யோஜனை தூரம், அடிப் பகுதி, பதினாறு ஆயிரம்  வரை பூமிக்குள் வேரூன்றியவனாக இருக்கிறான்.

வடக்குக்கும் வடக்காக, இளா விருத்தம் நீலன், ஸ்வேதன், ஸ்ருங்கவான் (நீல மலை, வெண் மலை, சிகரம் உடையவன்) என்று முன்று விதமானவை  ரம்யக, ஹிரண்மய, குரூ  என்ற பூமிகளின் பாதுகாப்பு அரண்களாக, எல்லைகளாக  உள்ளன.  இரு புறமும், பாற்கடல், இரண்டாயிரம் ப்ருதவ- பூ பாகங்கள், ஒவ்வொன்றும் கிழக்கு, அதற்கும் கிழக்கில், வடக்கிலிருந்து வடக்காக பத்திற்கும் மேலான பகுதிகளாக நீண்டு செல்கிறது.

தென் பகுதியில் இளா வ்ருத்தம் நிஷத, ஹேமகூட, ஹிமாலய என்று சிறப்பு பெயர்களால் அழைக்கப் படும்.  முன் சொன்ன நீலம் முதலானவை இரண்டு யோஜனை தூரம் இடைவெளிகளில்  ஹரிவம்சம், கிம்புருஷ, பாரதம் என்று கிரமமாக பெயர் பெற்றவை. 

அதே போல, மற்ற திசையில், மால்யவான், கந்த மாதனன், அவானீல, நிஷாயதன் என்பவைகள் இரண்டாயிரம் பூப்ரதது: சற்றே சிறிய பூ ப்ரதேசங்கள், கேதுமால, பத்ராஸ்வ இவைகளின் எல்லைகளாக இருக்கின்றன.

மந்தரம், மேரு மந்தரம், சுபார்ஸ்வ:, குமுத என்று இவைகளும் இரண்டாயிரம் இடைவேளிகளில் விஸ்தாரமாக உயர்ந்து மேருவின் நால் திசைகளுக்கும் பாதுகாவலாக நிற்கின்றன.

இந்த நான்கிலும், சூத-மா,  ஜம்பூக-நாவல், கதம்ப, ந்யக்ரோத, என்ற நால் விதமான மரங்கள் ப்ரசித்தம். மலையின் உச்சியில்  கட்டப் பட்ட கொடிகள் போல, கிட்டத்தட்ட ஆயிர யோஜனைகள் உயர்ந்து மரங்களின் அடர்த்தியால் நூறு யோஜனை தூரம் பரவி உள்ளன.

பரதர்ஷபா!  இதில் நான்கு குளங்கள், பயோம, (பால் நிறைந்த), இக்ஷுரஸ (கரும்பின் ரசம்), இவைகளின் ருசியுடன் நீர் நிறைந்தவை. இதைத் தொட்ட மாத்திரத்தில் தேவர்களின் உபதேவ கணங்கள்,  சாதகர்கள்,  யோக ஐஸ்வர்யங்களை  சுலபமாக பெறுவர். 

தேவ உத்யான வனங்களும் உள்ளன. அவையாவன- நந்தனம், சைத்ர ரதம், வைப்ராஜகம், சர்வதோ பத்ரன் என்பவை.

இவைகளில் தேவர்களின் கூட்டம் மற்றும் தேவ லோக பெண்கள், சேனைத் தலைவர்கள், உபதேவ கணங்கள், பாடிக் கொண்டு மகிழ்ச்சியாக வலம் வருவர். 

மந்தர மலையின் சாரல்களில், பதினோரு நூறு – ஆயிரத்து ஒன்று யோஜனை உயரங்களில் தேவ சூத, தேவ லோக மாமரம்,  மலைகளின் சிகரங்களுக்கு இணையாக வளர்ந்து பழங்கள் நிரம்பி, அடர்த்தியாக இருக்கும்.

அவைகளின் அதி மதுரமான பழங்களின் மணம், அருண வர்ணத்தில் நிரம்பி வழியும் ரஸம், ப்ரவாகமாக ஓடும் அருணோதா என்ற நதியில் விழ, மந்தர கிரியின் சிகரத்திலிருந்து பாய்ந்து விழுவது போல கிழக்கு திசையாக ஓடி இளா விருத்தம் என்ற பகுதியை வளமாக்கும்.

பவானியின் அனுக்கத் தோழிகள்,   இந்த நீரில் நீராடி, இந்த மணத்தையும் தங்கள் உடலில் பரவப் பெற்று செல்லும் இடங்களில் எல்லாம் முகர்ந்து மகிழ்வர்.

இவ்வாறு ஜம்பூ பழங்களின் மரங்கள் உயரமாக வளரும் தன்மையவை. உயரத்திலிருந்து விழும் பழங்கள், பரவலாக இரண்டாயிரம் யோஜனைகள் நிலப்பரப்பில் விழுந்து, அங்கு ப்ரவஹிக்கும் ஜம்பூ என்ற நதியில் அதன் மணம் நிறைந்திருக்கும் படி செய்கின்றன. மேரு மந்தர சிகரத்திலிருந்து வேகமாக இரண்டு யோஜனை தூரம் பூமியில் விழுவது போல அருவியாக வருபவள், தென் பகுதியிருந்து இளா விருத்த பூ பிரதேசத்தை நனைக்கிறாள். 19 

இந்த நதிகளின் இடையில் சேரும் வண்டல் மண், அதனுடன் வாயுவும், அர்க்க எனும் ஸுரியனின் வெப்பமும் சேர அமரர்களும் என்றும் விரும்பும் பொன் என்ற தாதுவாக பரிணமிக்கிறது.  ஜாம்பூனதம் எனும் உயர்ந்த வகை பொன் சுவர்ணம் என்றும் அழைக்கப் படுகிறது.  இதை விவரம் அறிந்தவர்கள், பெண்களுக்கான கடகம், இடையில் அணியும் ஒட்டியானம், கழுத்தில் அணியும் மாலைகள் என்ற ஆபரங்களைச் செய்ய அறிவர்.   

மகா கதம்பம் சுபார்ஸ்வ என்ற மலை சிகரத்திலிருந்து தோன்றி அருவியாக விழுந்தவை அருகில் இருக்கும் குகைகளுக்குள்  நுழைந்து ஐந்து விதமான மது தாரைகளாக, பெருகி வந்து இளா விருத்தம் என்ற இந்த பூமியை வளமாக்குகின்றன.  அதன் மணத்தை காற்று பல நூறு யோஜனைகளுக்கு எடுத்துச் சென்று அந்த இடத்தையே சுகந்தமாக்குகிறது.

அதே போல, குமுத சிகரத்திலிருந்து விழும் சதவல்ஸோ என்ற மரத்தின் கிளைகளின் அடியில் பெருகி சுற்றி வந்து, பால் கடலாக, மது, நெய், வெல்லம் கலந்த அன்னம் மற்றும் ஆடைகளுக்கான, படுக்கை, ஆசனங்களுக்கான, ஆபரணங்களூக்கான எல்லா விதமான தேவைகளையும் நிறை வேற்ற பயனுள்ள பொருட்களை நதியாக, நதா: (நதியின் ஆண்பால், மேற்கிலிருந்து கிழக்காக பாய்பவை)   குமுத சிகரத்திலிருந்து அருவியாக வடக்கு பகுதியிலிருந்து இளா விருத்த தேசத்தை வளமாக்குகிறது. 

இவைகளை பயன் படுத்தும் ப்ரஜைகள், ஒரு பொழுதும், நரை, திரை, சோர்வு, வியர்வை பெருகி துர்கந்தம் வீசுதல், வயது முதிரும் சமயம் தோன்றும் மாறுதல்கள், வியாதிகள், அதனால் ம்ருத்யு, சீதோஷ்ணம் – குளிர், வெப்பம் என்பவைகளால் உடல் வர்ணத்தை இழத்தல், உபசர்கம் என்ற துன்பங்கள் வரா.  இவை பெயர்களாக கேட்டவைகளாக மட்டுமே இருக்கும். உயிர் உள்ள வரை சுகமாக இருப்பர். இது ஒரு நிரந்தரமான அதிசயமே.    

இவை தவிர, இருபது மலைச் சிகரங்கள், மேருவின் இருபக்கமும், மலையை ஒட்டியே அணைப்பது போல் ஒட்டியே நிலைத்து நிற்கின்றன. அவையாவன:  குரங்க, குரர, குசும்பவ, ஏக, கங்க, த்ரிகூட, சிசிர, பதங்க, ருசக, நிஷத, சினீவாச, கபில, சங்க2, , வைதூர்ய, ஜாருதி, ஹம்ஸ, ருஷப, நாக காலஞ்ஜர,நாரத என்பவை. 

தேவகூட என்பதன் மத்திய பகுதியில், மேருவை கிழக்கிலிருந்து பதினெட்டு ஆயிரம் யோஜனைகள், இரண்டாயிரம் பெரிய சிகரங்கள், சூழ்ந்து, தனித் தனி சிகரங்களாகவே, இருந்து மற்றொரு விதமான காற்றும், தென் திசையிலிருந்து கைலாஸ, கரவீர என்பவை, பாடல் பெற்ற ஸ்தலங்கள்,  அதே போல வடக்காக த்ரிஸ்ருங்க, மகராவஷ்ட என்பவைகளுடன் சுற்றிலும் அக்னி ஸூழ்ந்தது போல கஞ்சன கிரி என்ற பெயரில் பொன் வண்ணமாகவே பிரகாசமாக விளங்குகின்றன. 

மேருவின் உச்சியில், ஆத்மயோனி என்படும் பகவானின்  நகரம், இரண்டாயிரம் யோஜனைகள் அதன் நால் சதுர மடங்கு தூரம் பரவி ஸாதகும்பம் என அழைக்கப்படுகிறது. 

அதைச்சுற்றிலும் லோக பாலர்கள் எட்டு பேர், திசைகளுக்கு அதிபதிகளாக எட்டு திசைகளையும்  ஒரே விதமான ரூபம், நகரத்தை எட்டு திக்கிலும் நிலைத்து நின்று பாலிக்கிறார்கள்.

 (இது வரை ஸ்ரீமத் பாகவதத்தின் ஐந்தாவது ஸ்கந்தத்தில், பதினாறாவது அத்யாயம்)  

அத்யாயம்-17

ஸ்ரீ சுகர் தொடர்ந்தார்: பகவானின் யாக ஸ்வருபத்தில் விஷ்ணுவின் இடது பாத நகத்தின் வழியாக ப்ரவாஹமாக வந்த நீர்,  ப்ரும்மாண்டத்தில் மேல் பகுதியில் விழுந்தது.  அதன் பின் எங்கோ மறைந்தவள்,  பின் நதியாக உற்பத்தியாகி அவருடைய சரணங்களின் காந்தியுடன் கூடிய அருண வர்ணமாக ப்ரவஹித்தாள்.  அவளே கங்கை.  அகில ஜகத்தையும்  பரிசுத்தமாக்கும் தன்மையுடன் அமலா சாக்ஷாத் பகவதி – பகவானின் பாதத்தில் பிறந்தவள்-  காலம் காலமாக ஆயிரம் யுகங்களுக்கும் மேலாக தென்படாமல் பெயரளவில் அறிந்தவளாக இருந்தவள்   மேரு மலையில் இறங்கினாள்.  அதுவே கங்கை நதியானது.  அவள் வெளிப்பட்ட இடம் விஷ்ணு பாதம் என்று  போற்றப் படுகிறது.  உத்தானபாதரின் வம்சத்தில் வந்த பரம பாகவதர்களான எங்கள் முன்னோர் அவளை குல தேவதை என்று வணங்கினர்.  பகவானின் பாதத்தில் தோன்றியவள் புண்யமான நீர் என்று யாகங்களில் பயன் படுத்துவோம். அவளை என் முன்னோர்கள் மிக்க மரியாதையுடன் தலையில் தெளித்துக் கொள்வர்.

அதன் பின் ஏழு ரிஷிகளும் அதன் பிரவாஹத்தில் மூழ்கி எழுவதை புண்யமாக நினைத்து தவம் செய்வதை அவள் கரைகளிலேயே மேற்கொண்டனர்.  வாசுதேவனிடத்தில் இருந்த பக்தி விசேஷத்தால் கங்கை நதியை அவர் அனுக்ரஹம் பெற்றவள்  என்று இன்றளவும்  முக்தியை வேண்டுபவர் பகுமானத்தோடு பார்க்கின்றனர்.  அதன் பின் பல சஹஸ்ர கோடி விமானங்களில்   வந்த தேவர்களுடன், சந்திர மண்டலத்தைச் சுற்றி வந்து, ப்ரும்ம சதனம் என்ற இடத்தை அடைந்தாள்.  இங்கு நான்காக பிரிந்து சீதா, அலகநந்தா, சக்ஷு:, பத்ரா என்ற பெயர்களுடன் நான்கு திசைகளிலும் பரவி நத, நதீ பதி எனும் சமுத்திரத்தை சென்றடைகிறாள். சீதா என்ற நதி ப்ரும்ம சதனத்திலிருந்து கேஸர முதலிய சிகரங்களில் இருந்து கீழ் நோக்கி ஓடி, கந்தமாதன பர்வதத்தின் முடியில் இறங்கி,   பத்ராஸ்வ வர்ஷம் என்ற இடத்தில் நுழைந்து கிழக்கு நோக்கி பிரவஹித்து உப்பு சமுத்திரத்தை அடைகிறாள்.  அதே போல சக்ஷு: என்பவள் மால்யவானின் சிகரத்தில் இறங்கி, கேது மாலா என்ற சிகரத்தை தழுவிக் கொண்டு இறங்கி உவமிக்க முடியாஹ வேகத்துடன் ஓடி, மேற்கு திசையில் சமுத்திரத்தில் கலக்கிறாள். பத்ரா மேரு சிகரத்தில் இறங்கியவள்,  நீல கிரி மலையின்,ஸ்வேத கிரி என்று  சிகரத்திற்கு சிகரம் தாண்டி பிரவகிக்கிறாள். ஒவ்வொரு சிகரத்தின் உச்சியிலும் இருந்து விழுபவளாக குரு க்ஷேத்ரத்தை சுற்றி வளைத்து ஓடி வந்து வடக்கு திசையில் ஹேமகூட மலைகளின் நடுவில்  புகுந்து புறப்பட்டு சமுத்திரத்தில் கலக்கிறாள்.  அதே போல அலகநந்தா தென் திசையில் ப்ரும்மசதனத்திலிருந்து கிளம்பி பல விதமான மலை சிகரங்களைக் கடந்து ஹேம கூடத்திலிருந்து வெகு வெகமாக பிரவஹித்து ஓடி, பாரத வர்ஷத்தின் நில பகுதி வழியாக தக்ஷிண சமுத்திரத்தை அடைகிறாள். இங்கு ஸ்னானம் செய்ய வருபவர்கள், வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் அஸ்வமேத, ராஜஸூய யாகங்கள் செய்த பலனுக்கு குறையாத நற்பலனை அடைகிறார்கள்.  

இவை தவிர நதிகள், (கிழக்காக ஓடி சமுத்திரத்தில் கலப்பவை) நதங்கள் (மேற்காக ஓடி சமுத்திரத்தில் கலப்பவை)  மேரு மலையின் பெண்களாக நூற்றுக் கணக்காக  பாரத வர்ஷத்தின் ஒவ்வொரு பகுதியையும் வளமாக்குகின்றன.  பாரத வர்ஷம்- பாரத தேசம் தான் கர்ம பூமி.  மற்ற எட்டு கண்டங்கள், ஸ்வர்கத்தில் வசிப்பவர்களின் புண்ய சேஷம்- அனுபவித்தது போக மீதியான புண்யங்களை அனுபவிக்க போக பூமிகள்.

(திவ்ய, பௌம,பில- தேவ, பூமி,பாதாளம் என்று  ஸ்வர்க போக பூமிகள்.) நீண்ட ஆயுள், திடமான உடல் வாகு, சமமான மனைவியிடம் முதல் ஆண்டிலேயே பெறும் சந்ததியுடையவர்கள், த்ரேதாயுகத்தினர்.       க்ருத யுகத்தினர் தியான நிஷ்டர்கள். த்வாபரம் முதல்  அதிக துக்கம்.  தேவ பதிகள் உல்லாசமாக வனங்களையும், நதிக் கரைகளிலும், சுற்றுபவர்களாக அனுபவிப்பதே நோக்கமாக கொண்ட தம்பதிகள்.

ஒன்பது கண்டங்களிலும் பகவான் நாராயணன், மனிதர்களை தன் அனுக்ரத்தால் காக்கிறார். அவர்கள் சுக சௌக்யங்களை அனுபவிக்க வசதியாக தானே கவனமாக கண்காணிக்கிறார்.

இலா விருத்தம் எனும் இடத்தில் பகவான் பவன் மட்டுமே புருஷன், பவானி மட்டுமே ஸ்த்ரீ.   வேறு எந்த புருஷன் அங்கு வந்தாலும் பவானியின் சாபத்தால் பெண் ஆவார்கள். அது பற்றி பின்னால் சொல்கிறேன். ஏராளமான பெண்கள் அவரை தெய்வமாக துதித்து வணங்கி இருந்தாலும் பவன் தன் தியானத்திலேயே மூழ்கி இருப்பார்.

ஸ்ரீ பகவான் சொன்னார்:

’ ஓம் நமோ பகவதே மஹாபுருஷாய சர்வ குண சங்க்யாய, அனந்தாய, அவ்யக்தாய நம:’  

அனைத்து குணங்களும் எவரிடமிருந்து பிரகாசமாக வெளிப் படுகின்றனவோ,  அறியமுடியாத  அரிய பொருள் எவரோ, போற்றத்தகுந்த மாஹாபுருஷனான அவருக்கு நமஸ்காரம்.

வணங்கத் தகுந்தவர் அவரே. முக்தி அளிப்பவர். பக்தர்களுக்கு போதும் போதும் எனுமளவு அனுக்ரஹம் செய்யும் பூத பாவனன்.  பவம் என்ற சம்சாரத்திலிருந்து விடுதலை அளிப்பவர். ஈஸ்வரனான உன்னை வணங்குகிறேன்.  உன் லீலைகளை மாயா குண சரித்திரங்களை பக்தர்கள் கண் கொட்டாமல் பார்ப்பர். உன் கோபம் கூட அவர்களுக்கு ரசிக்கத் தகுந்ததே.  தன்னை அறிய விரும்பும் அடியார்களுக்கு நீயே கதி. மற்றவர்களிடமிருந்து வேறு பட்டவனாக உன்னைக் காணும் பக்தர்கள் உன்னை ஸூழ்ந்து இருக்கும், மற்ற நாகம் முதலியவைகளைக் கண்டு பயப்படுவதில்லை.

உலகத்தில் ஸ்திதி, சம்ரக்ஷணம், சம்ஹாரம் என்பதில் சம்ஹார மூர்த்தியான உன்னை பிறப்பு இறப்பு என்ற தொடரை நிலை நிறுத்துபவனாக வணங்குகிறார்கள்.  ஆயினும் இந்த செயல்களுக்கும் அப்பாற் பட்டவன் நீ. சித்தார்த்தனாக- ஞானமே உருவானவனாக உன்னை சிலரே அறிவர்.  ஆயிரக்கணக்கான பூமண்டலங்களைத் தலையால் தாங்குபவன்.  மஹான் என்றும், விக்ஞானி- அனைத்து அறிவுகளுக்கும், கலைகளுக்கும் இருப்பிடம் என்றும், ஆதி அந்தம் இல்லாதவன் என்றும், தன் தேஜஸால் உலகை சிருஷ்டிக்கும் சக்தியை உடையவன் என்றும்,  உன் புகழ் பாடுகிறார்கள்.  பறவைகள் கூடு கட்டுவது போல ஸ்ருஷ்டியை ஒரு ஒழுங்காக செய்பவன். மிகப் பெரிய காரியம் அது. மஹத்,(இயற்கை)  குணங்கள்- சத்வ ரஜஸ் தாமஸ குணங்கள்) இந்திரியங்கள் இவைகள் சரடாக  ஊடும் பாவுமாக ஊடுருவி இருக்க,  உங்கள் அனுக்ரகத்தால் படைப்புத் தொழிலை செய்கிறோம். 

கர்ம பந்தனத்திலிருந்து காப்பவன் என்று அறிந்தாலும், உன் மாயையை நீ நிர்வகிக்கும் விதத்தை உணர முடியாத சாதாரண ஜனங்கள்,  உன்னிடமே அனைத்தையும் ஒப்படைத்தவர்களாக பரமேஸ்வரன் என்று வணங்கினாலே போதும் என்று திருப்தியடைகிறார்கள். அப்படிப் பட்ட  உனக்கு நமஸ்காரம்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற ஐந்தாவது ஸ்கந்தத்தில்  பதினேழாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-24

ஸ்ரீமத் பாகவதம்  –  ப்ரிய வ்ரத விஜயம் என்ற  ஐந்தாவது ஸ்கந்தம் || ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||

அத்யாயம்-18

ஸ்ரீ சுகர் சொன்னார்:  அதன் பின் பத்ரஸ்ரவா என்ற தர்மனின் புதல்வர்கள், அந்த குலத்தின் மூத்தோர்களுடன், பத்ராஸ்வ வர்ஷம்- பத்ராஸ்வம் என்ற நாட்டில்,  சாக்ஷாத் பகவான் வாசுதேவனின் ஹயக்ரீவ என்ற அவதார  வடிவை வணங்கினர்.  ஹயக்ரீவனே தர்ம மயமானவன் என்ற கொள்கையுடன் அவரை மிக அன்புடன், பற்றுதலுடன் ஏற்றுக் கொண்டவர்கள் அவர்கள்.

பத்ரஸ்ரவஸன் என்பவன் சொல்லலானார்: ‘ஓம் நமோ பகவதே!  தர்மாய ஆத்மவிசோதனாய நம:’

அஹோ! விசித்ரம் பகவானுடைய செயல்கள்.  இந்த ஜனங்கள் கொல்கிறார்கள். அவர்களை கண்டும் காணாமல் இருக்கிறான்.   தந்தை வாழ பிள்ளையை பலி கொடுக்கிறார்கள்.  அசத் – நன்மையில்லாதது என்று நாம் சொல்வதையே தியானமாக, வேண்டாத வேலைகளே முக்கியமாக நினைத்து, வயதான தந்தைக்காக மகனை கொல்கிறார்கள்.  அதை தவறாகவே எண்ணுவதில்லை.

கவிகள் உலகை அழியக் கூடியது எங்கிறார்கள். அத்யாத்ம வழியில் செல்பவர் விவரித்து சொல்லியும் இவர்கள் மோஹம் போகவில்லை. அஜ! பிறப்பற்றவனே! உன் மாயை தான் இதுவும்.  உன் செயல்கள் ஆச்சர்யமானவை. உனக்கு நமஸ்காரம்.

உன் செயல்  விஸ்வ ஸ்ருஷ்டி, அதில் ஒன்றுக்கொன்று முரணான பல வித மாற்றங்கள் இருப்பதை ஆச்சர்யத்துடன் பார்க்கிறோம்.  அதுவும் உன் மாயையே. உனக்கு நமஸ்காரம்.  ந்ரு துரங்க- மனிதனும் அஸ்வம் என்ற மிருகமுமாக (ஹய க்ரீவன்)  நீ யுகாந்தத்தில் வந்தாய்.  தாமஸ புத்தியால் வேதங்களை திரஸ்காரம் செய்த சிலரால் பாதாளத்தில் மறைத்து வைக்கப் பட்ட ஸ்ருதி-வேதங்களை மீட்டுத் தருமாறு கவிகள் வேண்டினர். அவர்கள் வேண்டுதலை ஏற்று வேதங்களை மீட்டுத் தந்தாய்.  அமோகமான  அந்த செயலைச் செய்த உனக்கு நமஸ்காரம். (மது என்ற  அரக்கன் வேதங்களை பாதாளத்தில் ஒளித்து வைத்து விட்டான். அதை மீட்ட கதை)

ஹரி வர்ஷத்திலும் பகவான் நரஹரி ரூபனாக வந்தான்.  அந்த ரூபத்தை எடுத்த கதையை சொல்கிறேன். மிகவும் விரும்பத்தக்க ரூபம். மஹா புருஷ குணங்கள் உடைய பாகவதர்கள் தைத்ய தானவ குலம் இரண்டையும் பவித்ரமாக்கிய சரித்திரம்.  ப்ரஹ்லாதன் என்பவன் தூய பக்தியால் பகவானை வேண்டினான் என்பதை இந்த தேச பக்தர்கள் சிலாகித்து சொல்கிறார்கள்.

ஓம் நமோ பகவதே நரசிம்ஹாய, நமஸ்தேஜஸ்தேஜஸே, ஆவிராவிர்பவ  வஜ்ரநக, வஜ்ர தம்ஷ்ட்ர, கர்மாஸயான்.  ரந்தய ரந்தய தமோ க்ரஸ க்ரஸ ஓம் ஸ்வாஹா – அபயமபயம் ஆத்மனி பூயிஷ்டா ஓம் க்ஷ்ரௌம்

ஸ்வஸ்த்யஸ்து விஸ்வஸ்ய – உலகில் நன்மை விளங்கட்டும்.  அறிவில்லாத கொடியவர்களும் சந்தோஷமாக இருக்கட்டும். ஜீவ ஜனங்கள் தியானம் செய்யட்டும். புத்தியில் மங்களமான எண்ணங்களே நிறையட்டும். மனம் தூயதாக விளங்கட்டும். அதோக்ஷஜனான பகவானை துதிக்கட்டும்.  எந்த எதிர்பார்ப்பும் இன்றி பகவானிடத்தில் எங்கள் மனம் ஈடுபடட்டும்.  வீடு வாசல், தாரம், புதல்வர்கள், உறவினர் என்று எப்பொழுதும்  நினைத்துக் கொண்டிராமல்,  அறிவும் பக்தியும் உள்ள பெரியவர்கள் அருகாமையில் இருக்க வேண்டும்.  சத் சங்கத்தில் தான் நல்ல விஷயங்களை அறிந்து கொள்ள முடியும். உன் வீர தீர கதைகளை கேட்கலாம். மனம் தெளிவடையும்.  திரும்பத் திரும்ப நினைப்பதும், ஹரி தியானமும் மனதில் காம வாசனையை அழிக்கும்.  யார் தான் அந்த முகுந்தனின் விக்ரமத்தை விரும்பாதவர்கள்? 

ஒரு சிறிதளவு பகவானிடத்தில் பக்தி இருந்தால்,   மற்ற தேவர்கள் பல நல்ல குணங்களையும் அங்கு கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள்.  ஹரியிடம் பக்தி இல்லாதவர்களுக்கு உயர் குணங்கள் எப்படி வரும்? அவர்கள் மனம் வேண்டாத விஷய போகங்களை நோக்கியே ஓடும்.  சாக்ஷாத் பகவான் ஹரியே.   நீர் வாழ் ஜந்துக்களுக்கு இன்றியமையாத நீர் போல உடல் தரித்த மனித குலத்துக்கு ஆத்மாவானவன்.  அவ்வாறின்றி தன் வீடு, குடும்பம் என்றே இருப்பவன் சுகமாக இல்லையா என்றால், அதுவும் தான், தம்பதிகள் சேர்ந்து வாழ்ந்து வயதாகி முதியவர்கள் ஆவது தான் இயற்கை.  அதில் ஆசை, அனுராகம் , வருத்தம், கோபம், மான அவமானங்கள்,  ஏதோ ஒன்றில் அதிக பற்று, பயம், தீனமான தன்மை, மனோ வியாதி இவைதான் அதிகமாக இருக்கும். இந்த சக்ரத்தை விட்டு வெளி வந்து ந்ருசிம்ஹ பாதத்தை சேவியுங்கள்.  பயமின்றி இருக்கலாம்.

கேதுமாலா என்ற தேசத்தில், பகவான், காம தேவ ஸ்வரூபனாக லக்ஷ்மியின் விருப்பத்தை நிறைவேற்ற, அந்த தேச அரசர்களான  ப்ரஜாபதியின் பெண்களின் புதல்வர்களை   அவர்களுக்கு புருஷாயுஷ் என்ற நீண்ட ஆயுளை அளித்தார்.  அதுவும் பகவானின் மாயா மயமான ரூபம்.

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஓம் நமோ பகவதே ஹ்ருஷீகேஸாய, சர்வ குண விசேஷைர் விலசிதாத்மனே,ஆகூதீனாம் சித்தீனாம், சேதஸாம், விசேஷாணாம் சாதிபதயே, ஷோடஸ கலாய சந்தோ மயாய அன்ன மயாய, அம்ருத மயாய சர்வமயாய சஹஸே, ஓஜஸே, பலாய காந்தாய காமாய நமஸ்தே உபயத்ர பூயாத்.

பெண்கள் ஹ்ருஷீகேசனான உன்னை தாங்களே ஆராதித்து, நல்ல பதியை அடைகிறார்கள்.  அவர்களிடம் நல்ல புதல்வர்களைப் பெறுகிறார்கள். அன்பான பந்துக்கள், தனம், ஆயுள் இவைகளை அடைகிறார்கள். அவர்களின் பதியும் பயமின்றி, தானே மற்றவர்களை காக்கவும் ஆற்றல் பெறுகின்றனர்.  பிறர் நலனும் தன் பொறுப்பே என்பது போல நினைப்பார்கள் அதனால் பொறாமை படுவதில்லை.

பகவானுடைய பாத சரோருஹம் அதிலேயே லயித்தவன், மற்ற அல்பமான  உலகியல் இன்பங்களை நாடுவதில்லை.  விரும்பியது கிடைக்கவில்லை என்ற வருத்தமும் வாட்டாது.  அஜன், ஈசன் இவர்களும் என்னைப் பூஜிக்கின்றனர்.  மனப் பூர்வமாக பஜித்தாலே போதுமானது. என்னையடைய உக்ரமான தவங்கள் விரதங்கள் தேவையில்லை.

ஆகவே, அச்யுதா!  வணங்கியவர்களுக்கு அபயம் அளிக்கும் உன் கரங்களை என் தலையில் வைத்து ஆசீர்வதி. உன் அருளின்றி நான் விபு என்றும் ஈஸ்வரன் என்றும் உன்னை அறிந்து கொள்ளவா முடியும்? 

ரம்யக தேசத்தில் பகவானுடைய மத்ஸ்ய அவதார ரூபத்தை அந்த தேச புருஷன் ஓரளவு காட்டியதை இன்றளவும் மிக பக்தியுடன் ஆராதித்து வருகிறார்கள். ‘ஓம் நமோ பகவதே முக்யதமாய நம: சத்வாய ப்ராணாயௌஜஸே சஹஸே பலாய மஹாமத்ஸ்யாய நம “ இதி

உள்ளூம் புறமும் அகில லோக பாலகர்கள் கண்ட ரூபம்.  மத்ஸரம்- பொறாமை போல மற்றொரு ஜுரம் இல்லை. முயற்சி செய்பவர்கள் கூட இதனால் பாதிக்கப்பட்டு,  கால் நடைகளோ, மனிதர்களோ, ஊர்வன, அசையாத ஜங்கம பொருட்கள் அனைத்திலும் உன்னைக் காணலாம் என்பதை மறந்து விடுகிறார்கள்.  தாங்கள் அலை வீசும் யுகாந்தார்ணவ – யுக முடிவிலான ப்ரளய ஜலத்தில், படகு ரூபத்தை எடுத்துக் கொண்டு,  ஔஷதிகள்-தாவரங்கள் அனைத்தையும் காப்பாற்றி தன்னிடம் வைத்துக் கொண்டு,  உன் ஓஜஸ் என்ற சக்தியால் உலகை காத்தாய். அந்த ஜகத்ப்ராண கணாத்மனே நம: வணக்கம்.

ஹிரண்மய தேசத்தில்  பகவான் கூர்ம -ஆமை உருவம் எடுத்து வந்தார்.  அது அவருடைய மிக பிரியமான உருவம். ஸூரியன் முதலான வர்ஷ புருஷர்கள், பித்ரு கணங்கள், இந்த மந்த்ரத்தை ஜபிக்கிறார்கள். ‘ ஓம் நமோ பகவதே அகூபாராய சர்வ சத்வ குண விசேஷணாய அனுபலக்ஷித ஸ்தானாய நமோ வர்ஷ்மணே நமோ பூம்னே நமோ நமோ அவஸ்தானாய நமஸ்தே’  இந்த ரூபம் உன் மாயையால் தானே ஏற்றுக் கொண்ட ரூபம். அர்த ஸ்வரூபம் – பொருள் மிக்கது. கணக்கிலாத சத்வ குணம் ஞானாந்தம் என்று பலவிதமாக புகழப்படுகிறது. உண்மையான உன் உருவம் அல்ல, மாயையால் நீ ஏற்றுக் கொண்டது என்றும் சுத்த சத்வ மூர்த்தி, மஹாப்ராணன் என்றும் போற்றுகின்றனர். (வைகுணடவாசியான நீ, மஹா சமுத்திரத்தின் அடியில் கூர்மமாக வந்து உலகை காத்தது உன் அருள்)  இந்த சராசரத்தில் வித விதமான உயிரினங்கள், வியர்வையில் பிறக்கும் ஜீவன்கள், முட்டையிட்டு பொரிக்கும் சில, தேவ ரிஷி, பித்ரு பூதம், இந்திரியங்கள், ப்ரும்மாண்டம் , வானம், பூமி, மலைகள், நதிகள், சமுத்திரங்கள், தீவுகள், க்ரஹ, ருக்ஷ என்று சொல்லப் படுவது எல்லாம் ஒன்றே,  இப்படி கணக்கில்லாத விசேஷ நாமங்களைக் கொண்ட உருவமாக கவிகள் காண்கின்றனர். அந்த ஞான ரூபியான உனக்கு நமஸ்காரம்.

வட குருக்ஷேத்ரத்தில் பகவான் யக்ஞ புருஷன்,  வராகனாக அவதரித்தார். அங்கு பூமியே தேவி.  உபனிஷதங்கள் அவள் பக்தியை வர்ணிக்கின்றன. ‘ஓம் நமோ பகவதே மந்த்ர தத்வ லிங்காய யக்ஞ க்ரதவே மஹாத்வராவயவாய மஹா புருஷாய நம: கர்ம சுக்லாய த்ரியுகாய நமஸ்தே’   எவருடைய ஸ்வரூபத்தை பலவித ரசிகர்களான கவிகள், மரத்தினுள் மறைந்திருக்கும் ஜாதவேதஸ் என்று வர்ணிக்கிறார்களோ, மனதால் மத்தால் கடைந்தது காண முயலுகிறார்களோ.  மிக அரிதான அந்த காட்சியை காணவும், ப்ரகாசமாக வெளிப்பட்ட அந்த பரமாத்மாவை வணங்குகிறேன்.

இந்திரியங்களில் செயல், தேவதைகள் அதன் காரணம், தேகம் தான் ஈசன், காலம் செய்பவன், அஹங்காரம் இவை மாயா குணங்கள்.  இவைகளை கார்ய ரூபமாக, தனித்தன்மையுடன், வஸ்துவாக காண்பது ஆத்மா. அதற்கு நமஸ்காரம். அன்வீக்ஷிகீ- விசாரித்து ஆராய்ந்து அறிந்து கொள்வது, அங்கம்- சாதனைகள், ஆத்ம புத்தி, தன்னுடைய புத்தியை பயன்படுத்தி அறிதல், என்ற பல விதங்களில் அறியத் தகுந்த உனக்கு நமஸ்காரம்.  விஸ்வத்தை தோற்றுவித்து, நடத்திச் செல்வது உன் விருப்பம்.  சாதாரணமாக காணும் பொழுது உன் மாயை சுற்றி சுழன்று வருவதை அறிய முடியாது. குண கர்ம சாக்ஷியான உனக்கு நமஸ்காரம். 

தைத்யனை வீழ்த்தி,  உன் மூக்கின் நுனியில் பூமியைத் தாங்கியபடி மிகப் பெரிய யானை போல நீரிலிருந்து வெளிப்பட்ட ஆதி ஸூகரன் உனக்கு நமஸ்காரம்.  

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  பதினெட்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்- 39

ஸ்ரீமத் பாகவதம்  –  ப்ரிய வ்ரத விஜயம் என்ற  ஐந்தாவது ஸ்கந்தம் || ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||

அத்யாயம்-19

ஸ்ரீ சுகர் சொன்னார்:  கிம்புருஷ வர்ஷம்- கிம்புருஷ தேசத்தில்  பகவானான ஆதி புருஷன், லக்ஷ்மணனின் மூத்த சகோதரன், சீதாபிராமம் ராமம், அவன் அருகில் இருப்பதையே புண்யமாக நினைத்தவர், பரம பாகவதரான அனுமான்,  இவர்கள் மற்ற கிம்புருஷர்களுடன் ராம பக்தியை பரப்பினார்.   தன் இனத்து முக்கியமான அறிவுடைய பெரியோர்களுடன் சேர்ந்து ராமர் புகழை பாடினர்.  ‘ஓம் நமோ பகவதே உத்தம ஸ்லோகாய நம ஆர்ய லக்ஷண சீல வ்ரதாய நம உப சிக்ஷிதாத்மன உபாசித லோகாய நம: சாது வாத நிகஷணாய நமோ ப்ரும்மண்ய தேவாய மஹா புருஷாய மஹா ராஜாய நம இதி’

யத்தத் விசுத்தானுபவ மாத்ரமேகம் ஸ்வ தேஜஸா த்வஸ்த குண வ்யவஸ்தம் ப்ரத்யக் ப்ரஸாந்தம் சுதியோபலம்பனம் ஹ்னாமரூபம் நிரஹம் ப்ரபத்யே ||

மனிதனாக பிறந்த இந்த அவதாரம், மனிதனுக்கு உபதேசிக்கவே.  ராக்ஷஸனின் வதம் நிமித்த மாத்ரமே. அப்படியானால், சீதா விரஹத்தால் வருந்தியது எப்படி ஆத்மாராமன், ஜிதேந்திரியன் – தன்னடக்கம் உடையவன், என்ற உயர் நிலையில் இருந்ததாகச் சொல்லப்படும்  ஸ்ரீ ராமனுக்கு  பொருந்தும்?  

(ஆத்மவான் என்றும், ஞானிகளின் நண்பன் என்றும் போற்றப்படும் பகவான் வாசுதேவன், ஒரு பெண்ணுக்காக மனம் உடைந்து போனதாகவோ, உடன் பிறந்த சகோதரன் லக்ஷ்மணனைத் துறந்ததையோ, ஏற்றுக் கொள்ள முடியவில்லையே என்ற கேள்விக்கு பதிலாக, உலகியலில்   மனிதனாக சம்சாரத்தில் இருந்தால், இது போன்ற இடர்களும் தவிர்க்க முடியாது என்பதைக் காட்டவே  என்று உரையாசிரியர்கள் கருத்து. )

லக்ஷ்மணனின் மூத்தவன், ஸ்ரீ ராமன், குலமோ, பெருந்தன்மையோ, செல்வச் செழிப்போ நல்ல வாக்கோ, நல்ல புத்தியோ, செயற்கரியன செய்து காட்டியதாகவோ உயர்வாக சொல்ல முடியாத ஒரு காட்டு வாசிகள், வானரங்கள் அவர்களுடன் சக்யம் செய்து கொண்டான்.  எதற்காக, (சுமித்திரையின் மகன், உடன் பிறந்தான் லக்ஷ்மணன் தாஸனாக இருக்க,) இந்த வானரத்தோடு சக்யம் செய்து கொண்டான்.  தேவனோ, அசுரனோ, வானரமோ, மனிதனோ, எவன் மனப் பூர்வமாக நல்லதைச் செய்கிறான் என்றால், அவன் ஸ்ரீ  ராமனுக்கு உகந்தவனாகிறான். மனித ரூபத்தில் வந்த ஸ்ரீ ஹரி, கோஸல வாசிகள் அனைவருக்கும் மோக்ஷத்தைக் கொடுத்தார். அனைவரையும் தன்னுடன் வைகுண்டத்துக்கு கூட்டிசென்றார்.

பாரத வர்ஷத்தில், பகவான் நர நாராயணனாக வந்து, அந்த  கல்பம் முடியும் வரையில், தர்மத்தை உபதேசித்து, ஞான வைராக்ய, ஐஸ்வர்ய, உபசமம் மற்றும் பரமாத்மாவின் அனுக்ரஹம் பெற விரும்பி தவம் செய்யும் சாதகர்களிடம்  இரங்கி, மறைந்திருந்து அருளினார்.

அந்த சமயம் பகவான் நாரதர் வந்தார். பாரதத்தில் வர்ணாஸ்ரமம் நடை முறையில் இருந்த காலம் அது.  பகவானே உபதேசித்த சாங்க்யம்- என்ற ஞான மார்கம் அனைவருக்கும்  பொதுவானது, இதில் வர்ண பேதம் இல்லை என்பதை தெளிவாக்கி, பரம பக்தி என்பதன் மேன்மையை எடுத்துச் சொன்னார். அவருடைய உபதே மந்திரம்:- ஓம் நமோ பகவதே உபஸம சீலாய,  உபரதானாத்ம்யாய நமோ, அகிஞ்சன வித்தாய ரிஷி ருஷபாய, நர நாராயணாய பரம ஹம்ஸ பரம குரவே ஆத்மாராமாதிபதயே நமோ நம இதி.

பாட்டாகவும் பாடினார்.  உலகின் கர்த்தா – உலகை படைத்தவன்,.  இவன் எதிலும் கட்டுப்படுவதில்லை, யாரையும் வதைப்பதில்லை, தேகத்தில் இருந்தாலும், தேகம் இல்லாதவர்களுக்கும் (தேவர்கள்) தரிசனம் கொடுப்பவன்,  இவருடைய பார்வையில் ஏற்றத் தாழ்வு இல்லை,  அந்த தேவனுக்கு நமஸ்காரம். உலக வாழ்வில்  பற்றுதல் உள்ளவன், பற்றைத் துறந்தவன் என்ற அனவருக்கும் சாக்ஷியாக இருப்பவன், அவனுக்கு நமஸ்காரம்.

இது தான் யோகேஸ்வரனுடைய யோக நிபுணத்வம்.  ஹிரண்ய கர்பனான பகவான் சொன்னது. ஆயுள் முடியும் நேரத்தில் நிர்குணமான உன்னிடத்தில் எவனுடைய மனம் பக்தியுடன் நினைக்கிறதோ,  அவனை அது வரை வாழ்ந்த வாழ்வையோ தாழ்வையோ கணக்கில் கொள்ளாமல் கை தூக்கி விடுகிறான்.   ஒருவன், வித்வானாக இருந்த போதிலும்,  செயல் வீரனாக வாழ்ந்திருந்தாலும்,  இந்த உலக வாழ்வின் முடிவில் இறக்கும் தறுவாயிலும்,  மகன், மனைவி, தனம், என்று நினைத்தபடியே  இருந்தால், என்ன பயன்? வெறும் சிரமம் மட்டுமே. அதனால் ப்ரபோ! இந்த சரீரம் எடுத்ததும் உன் மாயையால், நான், எனது என்ற பற்றுதல்கள் தானாக வந்து சேர்ந்தவை, அதோக்ஷஜ, இதிலிருந்து என்னை விடுவித்து விடு. மிக கஷ்டமான செயல் இது. தன்னைத்தானே உயர்த்திக் கொள்வது சாதாரண மனிதர்களுக்கு இயலாத செயல். பக்தி யோகம் என்பதை எங்களுக்கு அருள்வாய். உன்னருளால் தான் உங்களை வணங்குவதையும் மனதால் உணர்ந்து செய்ய முடியும்.

இந்த பாரதத்தில்,  நதிகள், மலைகள் நிறைய உள்ளன. பல மலய மங்கள ப்ரஸ்தங்கள். – மென்மையான காற்றுடன் மங்களமாக விளங்கும் இடங்கள்.  மைனாகம், த்ரிகூட,ருஷப, கூடகம், கொல்லகம், சஹ்யோ, தேவகிரி, ருஷ்யமூக: ஸ்ரீசைலம்,  வேங்கட, மஹேந்திர, வாரிதார, விந்த்ய, ஸுக்திமான், ருக்ஷகிரி,பாரியாத்ர, த்ரோண, சித்ரகூட, கோவர்தன, ரைவதகம், ககுபம், நீலம், கோகாமுகம், இந்த்ரகீல:, காமகிரி  என்றும் மேலும் பல நூறு ஆயிரம் மலைகள், அதன் மடியிலிருந்து இறங்கும் ஏராளமான நதிகள், நதங்கள் இவைகளை கணக்கிடவே முடியாது.

பாரத நாட்டு மக்கள், இவைகளை புண்ய நதிகளாக நினைக்கின்றனர். இதன் பெயர்களை மரியாதையுடன் உச்சரிக்கின்றனர்.

இவையாவன: சந்த்ரவஸா, தாம்ரபர்ணி, அவடோதா, க்ருதமாலா, வைஹாயஸீ, காவேரி, வேணி, பயஸ்வினீ, சர்கராவர்த்தா, துங்கபத்ரா, க்ருஷ்ணா, வேண்யா, பீமரதீ, கோதாவரி, நிர்விந்த்யா, பயோஷ்ணீ, தாபி (தபதி) ரேவா, சுரஸா, நர்மதா, சர்மண்வதீ, சிந்துரந்த:, சோணா,  என்ற நதிகள்.

 நதங்களாவன: மஹானதி, வேதஸ்ம்ருதி, ருஷிகுல்யா, த்ரிஸாமா, கௌஸிகீ, மண்தாகினீ, யமுனா, சரஸ்வதீ, ருஷத்வதீ, கோமதி, சரயூ, ரோதவதீ, சப்தவதீ, சுஷோமா, ஸதஸ்சந்த்ர பாகா, மருத்வ்ருதா, விதஸ்தா, அஸிக்னீ, விஸ்வா என்ற மஹா நதிகள். (மேற்கிலிருந்து, கிழக்கு நோக்கி பாய்பவை நதங்கள்.)

இந்த பாரத வர்ஷத்தில் தான் பிறந்தவர்கள், வெண்மை, லோஹிதம் என்ற வர்ணம் (இளம் சென்னிறம்) க்ருஷ்ண வர்ணம், தன் வினைகளுக்கு ஏற்ப, திவ்ய, மானுஷ, நாரக கதிகளுடன், பலர் தங்கள் முன்னோர்கள் காட்டிய வழியிலேயே நம்பிக்கையுடன் குல தர்ம அனுஷ்டானங்கள் செய்தே நற்கதி அடைகின்றனர்.  இவர்கள் பரமாத்மா, சர்வ பூதங்களுக்கும் ஆத்மாவானவன் என்று  பகவான் வாசுதேவனை கொண்டாடுகிறார்கள்.  அதனால் மாற்று எண்ணமின்றி பகவானிடம் பக்தி செலுத்துகின்றனர். பக்தி யோக லக்ஷணமும் அதுவே.  பலவிதமான தொழில்கள், கல்வி முறைகள், வாழ்க்கை நியதிகள் என்று தினசரி வாழ்க்கை முறைகள், எதுவானாலும் மஹா புருஷன் எனும் பகவானிடத்தில் ஈடுபாடு அவர்களை இணைக்கிறது. இதை தேவர்களும்  பாடுகின்றனர். “அஹோ! இவர்கள் என்ன பாக்கியம் செய்தனர்! இவர்களிடம் ஸ்ரீ ஹரி ப்ரஸன்னமாக இருக்கிறான். பாரத தேசத்தில் ஜன்மம் எடுத்தவர்கள் புண்யம் செய்தவர்கள். முகுந்த சேவை இவர்களுக்கு பிறவியிலேயே அமைந்து விடுகிறது. நாங்கள் சிரமப்பட்டு யாகங்கள் செய்தும், தவம் விரதம் அனுசரித்தும், தானங்கள் கொடுத்தும் ஸூதாட்டதில் ஜயித்தும் அடைவதை மிக அதிகமான போக உத்ஸவங்கள், ஸ்ரீமன் நாரயணனின் நினைவு இல்லாமல் செய்வதால் வீணாகிறது.  கல்ப ஆயுள் எங்களுக்கு.  அதோடு ஒப்பிட்டால் மறு பிறப்பு என்பதால் மனிதர்களுக்கு க்ஷணம் தான் ஆயுள். பாரத பூமியின் வரம், அந்த க்ஷண நேர வாழ்வில் மனிதர்கள் செய்வதும் பெறுவதும் ஹரி பதத்தில் திடமான நம்பிக்கை வைத்து அபயம் என்பதை பயமற்ற தன்மையை பெறுகிறார்கள்.

எந்த இடத்தில் வைகுண்ட கதை என்ற அம்ருதம் நதியாக ப்ரவஹித்து ஓடவில்லையோ,  பாகவதர்கள் எந்த இடத்தில் உண்மையான பக்தியுடன் வழிபடுவது இல்லையோ,  எந்த இடத்தில் யாகங்கள், மஹோத்ஸவமாக நடக்கவில்லையோ,  அந்த இடம் தேவலோகமே ஆனாலும் அதனால் எந்த நன்மையும் இல்லை.   

இங்கு அரச பதவி அடைந்தவர்கள், அல்லது ஏதோ ஒரு சாதாரண பிறவி,  ஞானம், கர்ம யோகம், செல்வ செழிப்பு இவை இருந்தும் மறு பிறப்பு இல்லாமல் போகும்படி நடந்து கொள்ள வேண்டியதும் அவசியம். இல்லையெனில், திரும்பவும் வன வாசிகளான கால்நடைகள் போல் பிறப்பு எடுப்பர். திரும்ப அதே ஸூழல், பிறவி, மறு பிறவி என்று பந்தனம்.  

ஸ்ரத்தையுடன்  மந்திர, மற்ற விதிகளை மீறாமல் செய்யப் படும் யாகங்களில் பங்கு கொண்டு அதன் பிரஸாதங்களை உண்டு,  தன்னால் முடிந்த அளவு உதவிகளையும் செய்து வருகிறானோ, அவன் பூர்ணமான ஆசிகளைப் பெறுகிறான்.   அரசர்களுக்கு செல்வத்தை, வேண்டாமலே தன் பக்தர்களுக்கு தேவையானதை ஸ்ரீ ஹரி ஆசிர்வதிக்கிறான். சுவர்க சுகம் என்று பிரமாதமாக வர்ணிப்பதை அஜனாப வர்ஷத்தில் (பாரத நாட்டில்) ஸ்ம்ருதி,   மனப் பூர்வமாக நினைப்பதாலேயே, ஸ்ரீ ஹரி அவர்களுக்கு கிடைக்கச் செய்கிறான்.  

ஸ்ரீ சுகர் சொன்னார்:  ஜம்பூத்வீபம், எட்டு  உப தீவுகள் உடையது. சகர புதல்வர்கள், அஸ்வத்தை தேடித் தேடி நிலத்தை வெட்டிக் கொண்டு சென்ற பொழுது இவ்வாறு பிரிந்தன.  அவையாவன: ஸ்வர்ண ப்ரஸ்தம், சந்த்ர சுக்ல ஆவர்தனோ, ரமணக, மந்தர, ஹரிண:, பாஞ்ச ஜன்ய: சிம்ஹள: லங்கை என்பன.

பாரத வம்சத்தவனே! இதில் இதுவரை நாம் வர்ணித்தவை பாரத வர்ஷம்-ஜம்பூத்வீபம் என்பது மட்டுமே.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  பத்தொன்பதாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-31

 ஸ்ரீமத் பாகவதம்  –  ப்ரிய வ்ரத விஜயம் என்ற  ஐந்தாவது ஸ்கந்தம் || ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||

அத்யாயம்-20

 ஸ்ரீ சுகர் சொன்னார்:  அடுத்ததாக, ஜம்பூத்வீபத்தைத் தாண்டியும் உள்ள நிலப் பரப்புகளைப் பற்றி விவரமாகச் சொல்கிறேன்.  இந்த ஜம்பூத்வீபம் எவ்வளவு விஸ்தீர்ணம், உப்பு சமுத்திரத்தால் ஸூழப் பட்டதோ, மேரு மலை இங்கு உள்ளதோ, அதே போல இரண்டு மடங்கு விஸ்தாரமான உப்பு சமுத்திரம் ஸூழ்ந்து  உள்ள பிரதேசங்கள், கோட்டைகளும், வெளிப் புரத்தில் உபவனங்களும்,  இந்த ஜம்புத்வீபம் போலவே அதே அளவு விஸ்தீர்ணம் உள்ள பொன் நிற, ஏழு நாக்குகள் உள்ள அக்னியை உபாசிக்கிறார்களோ, அதன் அதிபதி ப்ரிய வ்ரதன் மகன் இத்மஜிஹ்வன் , தன் நிலத்தை ஏழாக பிரித்து ஏழு பெயர்களுடன் தன் புதல்வர்களுக்கு கொடுத்து விட்டு தான் ஆத்ம யோகம் செய்வதில் ஈடுபட்டான்.

அவர்கள் பெயர்கள்: சிவன், யவஸன், சுபத்ரன், சாந்தன், க்ஷேமன், அம்ருதன், அபயன் – ஏழு தீவுகளிலும் நிலப்பரப்பும் நதிகளும், மலைகளும், ஏழு ஏழாகவே இருந்தன.

மணி கூடோ, வஜ்ரகூட்ட, இந்த்ரசேனோ, ஜ்யோதிஷ்மான், சுபர்ணோ, ஹிரண்யஷ்டீவோ, மேக மால என்று மலைகள் அரண்களாக இருந்தன. அருணா, ந்ரும்ணா , ஆங்கிரஸி, சாவித்ரி, சுப்ரபாதா, ருதம்பரா, சத்யம்பரா என்று மகா நதிகள். இதன் நீரை தொட்ட மாத்திரத்தில் தவறான எண்ணங்கள் விலகி ஓடும். ஹம்ஸங்கள், உயர பறக்கும் சத்யாங்க, முதலிய நான்கு பிரிவுகளுள்ள ஆயிரம் ஆண்டுகள் வாழ் நாள் உடைய  தேவர்கள் போல தோற்றம் உடைய ஜனங்கள்,  சுவர்க த்வாரத்தை அடைய வேத வித்யா அறிவினால், பகவானான வேத புருஷனாக, ஸூர்யனை தங்கள் தெய்வமாக பூஜிக்கிறார்கள். அவர்கள் ஜபிக்கும் மந்திரம்:

‘ ப்ரத்னஸ்ய விஷ்ணோ ரூபம் யத் சத்யர்தஸ்ய ப்ரஹ்மண:| அம்ருதஸ்ய ச ம்ருத்யோஸ்ச ஸூர்யமாத்மானமீமஹீதி ||” – ப்ரத்ன- விஷ்ணு.  சத்யம், உண்மை, ப்ரும்மம், அம்ருதம்,ம்ருத்யு, இவைகளின் அதிகாரியாக இருக்கும் ஸூரியனை வணங்குகிறேன்”

ப்லக்ஷாதி ஐந்து தேசங்களில்புருஷர்களின் ஆயுள், இந்திரியம், ஆற்றல்,பலத்துடன்  புத்தி, விக்ரமம்  இவை பிறவியிலேயே சிறப்பாக அமைந்து விடுகின்றன.   அதற்கு சமமான  கரும்பு ரஸம் நிறைந்த கடல் இந்த தேசத்தை ஸூழ்ந்துள்ளது.  இதைப் போல இரண்டு மடங்கு விசாலமான த்வீபம் சால்மலீ.  அதைச் ஸூழ்ந்து மது நிறைந்த கடல் உள்ளது. சால்மலீ ப்லக்ஷ தேசத்தின் அங்கமாக சொல்வதும் உண்டு. இது பக்ஷி ராஜனான கருடனின் ப்ரதேசம்.   அந்த தீவின் அதிபதி,  ப்ரியவ்ரதனின் மகன் யக்ஞபாஹு என்பவன். தன் ஏழு புதல்வர்களுடன் வசித்து வந்தான். அவர்களுக்கு அந்த ராஜ்யத்தை பிரித்து கொடுத்து விட்டான். சுரோசனம், சௌமனஸ்யன், ரமணகன், தேவர்ஷன், பாரிபத்ரன், ஆப்யாயனன், அவிக்ஞாதன் என்று பெயர்கள்.

அந்த தேசங்களில் மலைகள், நதிகள், ஏழு. ஸ்வரஸ:, சதஸ்ருங்கோ, வாமதேவன், குந்தன், முகுந்தன், புஷ்பவர்ஷன், சஹஸ்ரஸ்ருதி, என்ற மலைகள், அனுமதி, நினீவாலீ, சரஸ்வதி, குஹூ, ரஜனீ, ந்தா, ராகா என்பவை.  அந்த தேசத்து ஜனங்கள்,  ஸ்ருத தர, வீர்யதர, வசுந்தர, இஷுந்தர – என்ற நான்கு வேத பிரிவுகளுடன்  அறியப் படும் பகவானை ஆராதிக்கிறார்கள்.  சந்திரனை வேத மந்திரங்களால் ஆராதிக்கின்றனர். சந்திர தேவன் சுக்ல, க்ருஷ்ண பக்ஷங்கள் மூலம் தன் கிரணங்களால், கால நிர்ணயம் செய்கிறான். தேவதா, பித்ருக்கள், தவிர அனைத்து உயிரினங்களுக்கும் அன்னம் அளிக்கிறான். – தாவரங்கள் வளரச் செய்வதால்.  எனவே சந்திரன் எங்கள் அரசன்.  – லோக பரிபாலனம் என்ற அரசனின்  கடமையை செய்ய உதவுவதால்.  இந்த மது நிறைந்த கடலுக்கும் அப்பால் அதே போல இரண்டு மடங்கு விஸ்தீர்ணமுள்ள குச த்வீபம் உள்ளது. (புல் வெளி) இதைச் ஸூழ்ந்து இருப்பது நெய் நிறைந்த கடல்.  இங்கு ப்ரும்மாவால் நிர்மாணிக்கப் பட்ட குசஸ்தம்பம் உள்ளது.  இது மிக பிரகாசமாக இருப்பதால் மற்றொரு அக்னி எனப்படுகிறது.  கோமளமான இந்த குசம் என்ற புல் பத்து திசைகளையும் ப்ரகாசமாக்கும். இந்த தீவின் அரசன் ஹிரண்ய ரேதன் என்ற ப்ரியவ்ரதனின் மகன். இவனும் தன் ஏழு புதல்வர்களுக்கு ராஜ்யத்தை பிரித்துக் கொடுத்து விட்டு வனம் சென்றான். வசு, வசுதான, த்ருடருசி,நாபிகுப்த, ஸ்துத்ய வ்ரத, விவிக்த, வாமதேவன் என்பர்.

இந்த தேசங்களுக்கு மலைகளே அரண்கள். நதிகள் ஒவ்வொன்றிலும் ஏழு ஏழாகவே உள்ளன. சக்ர, சதுஸ்ருங்க:, கபில, சித்ரகூடோ, தேவானீக, ஊர்த்வரோமா, த்ரவிண என்பன.  ரஸ்குல்யா, மதுகுல்யா, முத்ரவிந்தா, ஸ்ருதவிந்தா, தேவகர்பா, க்ருத ச்யுதா,  மந்த்ரமாலா என்பன.  இவைகளில் நீர், குஸத்வீபவாசிகள் சௌக்யமாக, நல்ல ஆறிவுடையவர்களாக, குலகன் என்ற பெயரில் பகவானை ஜாதவேதஸ்ன்- அக்னி என்ற ரூபத்தில் கர்ம கௌசலம்,- செய் நேர்ந்தி – சிறந்த கை வேலைகள்- இவற்றுடன் பூஜிக்கின்றனர்.

பர ப்ரும்மாவுக்கு இணையான ஜாதாவேதன் என்றும் ஹவ்ய வாட்- ஹவிஸை கொண்டு செல்பவன் என்றும் சொல்லப் படும் அக்னி,  பரம புருஷனின் அங்கமான தேவர்களுக்கு ஹவிஸை கொண்டு சேர்க்கிறான் என்பதால் யாகங்கள் செய்து பகவானை ஆராதிக்கிறார்கள்.

அதே போல நெய் கடலுக்கு அப்பால், க்ரௌஞ்சத்வீபம்-  அதன் விஸ்தீர்ணத்தின் இரண்டு பங்கு அதிகமான க்ஷீரோதம்- பாற்கடல் ஸூழ்ந்துள்ளது.  க்ரௌஞ்ச என்ற பக்ஷி ராஜனின் இடம் அது. இந்த மலையைத் தான்  குஹன்- முருக பெருமான்,  பிளந்ததார். அதில் இருந்த அசுரனை வதைத்தார்.  அதன் பின் பாற்கடலின் வளத்தால் வருண பகவானின் உதவியாலும், பக்ஷி ராஜன் பயமின்றி வாழ்கின்றான்.  அதை தனக்குரிய பங்காக பெற்ற ப்ரியவ்ரதனின் புதல்வன், க்ருதப்ருஷ்டோ என்பவன், தன் ராஜ்யத்தை ஏழாக பிரித்து சந்ததிகள் சொத்தின் பாகத்தை பெறுகிறார்கள் என்ற நியாயப் படி கொடுத்து விட்டான்.  அதன் பின் தன் எஞ்சிய நாட்கள் பரம கல்யாணன் என்றும், சர்வ  ஆத்ம பூதன் என்றும் ஸ்ரீ ஹரியை பாடியபடி  சரணத்தை பஜித்தபடி சென்றது. 

க்ருதப்ருஷ்ட அரசனின் புதல்வர்களுக்கு  ஆமோ, மதுருஹோ, மேகப்ருஷ்ட:, சுதாமோ, ப்ராஜிஷ்டோ, லோஹிதார்ணோ, வனஸ்பதி என்ற பெயர்கள்.  அவர்களுக்கும் ராஜய்த்தில் ஏழு ஏழு மலைகள், நதிகள் இருந்தன. சுக்ல, வர்தமான, போஜன, உப பர்ஹிணோ, ந்தோ, ந்தன:, சர்வதோ பத்ர என்று மலைகளும்,  அபயா, அம்ருதௌகா, ஆர்யகா, தீர்தவதீ, ரூபவதீ, பவித்ரவதீ சுக்லா என்பன நதிகள்..  இந்த நதிகளின் நீர், பவித்ரமானது.  இதை பயன்படுத்தும் ப்ருஷ ருஷபர், த்ரவிண தேவக என்பவர்கள்,  பகவானை ஆபோமயன்- ஜல ரூபமாக எண்ணி,  கை நிறைய ஜலம் எடுத்து, அஞ்ஜலி செய்து வழிபடுகிறார்கள்.  ஜலம் மனிதனை சுத்தமாக்கும்.  “ ஆப: புருஷவீர்யா:ஸ்த புனந்தீர் பூர் புவ: சுவ: | தா ந: புனீதாமீவ க்னீ: ஸ்ப்ருஸதாம் ஆத்மன புவ இதி||” – ஹே ஆப:  ஹே தண்ணீரே!  நீங்கள் பரமபுருஷனின் வீர்யமாக இருக்கிறீர்கள்.  சக்தி ரூபமாக இருப்பவர்கள். அவருடைய சரீரத்தில் நிரந்தரமாக இருப்பவர்கள்.  பூர்பூவ:ஸ்வ:- பூ முதலிய மூவுலகையும் பவித்ரமாக்குபவர்கள்.  எனவே, உங்களை தொடுபவர்கள் பாபங்கள் நீங்கி பவித்ரமாகிறார்கள்”

இவ்வாறு முன் புறம் க்ஷீரோதம்- பாற்கடலால் ஸூழப் பட்ட  சாகத்வீபோ- கறி காய்கள் நிறைந்த தீவு-  முப்பத்திரண்டு லக்ஷ யோஜனை தூரம் பரவியிருந்தது.   அதற்கு சமமான தயிர்  போன்ற ஜலம் ஸூழ்ந்திருக்க அதில் சாகோ (शाको)  என்ற மரம் தன் பூமியின் அடையாளமாக , மஹாசுரபி – மிகச்சிறந்த வாசனையை தீவு முழுவதும் பரப்புவதாக அமந்துள்ளது.

அந்த தீவும் ப்ரியவ்ரதனின் புதல்வன் மேதாதிதி என்பவனின் ஆளுமையில் இருந்தது.. முதுமையில் தன் புதல்வர்களுக்கு ஏழு ஏழாக பிரித்து கொடுத்து விட்டு தான் பகவானின் சேவையில் காலம் கழிக்கச் சென்று விட்டான்.  புதல்வர்கள் பெயர்களாவன: புரோஜவ, மனோஜவ, பவமான , தூம்ரானீக, சித்ர ரேப, பஹு ரூப, விஸ்வதார என்பன.  இவர்களுக்கு தேசம் என்பதற்கான மலைகள், நதிகள் ஏழு ஏழாக இருந்தன. ஈஸான, உருஸ்ருங்க, பலபத்ர, ஸதகேஸர:, சஹஸ்ர ஸ்ரோதோ, தேவபாலோ, மஹானஸ என்ற மலைகள். அனகா, ஆயுர்ட்கா, உபயஸ்ப்ருஷ்டி, அபராஜிதா. பஞ்சபதீ, சஹஸ்ரஸ்ருதி, நிஜத்ருதி என்பன நதிகள்.  அந்த தேசத்து ஜனங்கள்,  பகவானை, ருதவ்ரதன், சத்யவ்ரதன், தானவ்ரதன், அனுவ்ரதன் என்று பகவானை வாயு ரூபமாக ப்ராணாயாமம் செய்து சுத்தமான மனமும் உடலுமாக, பரம சமாதி என்ற சாதனகளால் பூஜிக்கின்றனர்.

“ஆந்த்: ப்ரவிஸ்ய பூதானி யோ பிபர்த்யாத்மகேதுபி: அந்த்ர்யாமீஸ்வர: சாக்ஷாத்பாது நோ யத்வஸே ஸ்புடம்”

உயிரினங்களின் உள்ளே புகுந்து தன் வசம் ஆக்கிக் கொண்டுள்ளானோ,   அந்தர்யாமியாக உள்ள  அந்த ஈஸ்வரன்  எங்களை எப்பொழுதும்   காக்கட்டும்”

ததி மண்டலத்துக்கு அப்பால், புஷ்கரத்வீபம் உள்ளது.  அதன் விஸ்தீர்ணம் போல இரண்டு மடங்கு அதிகமான விஸ்தீர்ணம் உள்ள தேசத்தை, சுத்தமான் ருசியுடன் கூடிய ஜலம் நிறைந்த சமுத்திரம் ஸூழ்ந்திருக்கிற்து. இங்கு உள்ள மிகப் பெரிய புஷ்கரம்- குளம் இதில் தான் தீயின் ஜ்வாலை  போல ஜ்வலிக்கும்,  பொன் மயமான இலைகளுடன் பகவானுடைய கமலாஸனம் அமைந்துள்ளது.

அந்த தீவின் மத்தியில், மானஸோத்தர என்ற பெயரில், (மானஸ ஏரிக்கு வடக்கில்) அர்வாசீன, பராசீன, என்ற தேசங்கள். மர்யாதாசல இரண்டு யோஜனை தூரம் உள்ள இடம் நான்கு திசைகளிலும் நான்கு பழமையான இந்த்ராதி லோக பாலர்கள்,  இவர்களுக்கும் மேல் ஸூர்ய ரதம் மேருவை சுற்றி வரும் சம்வத்ஸர என்ற பெயருடைய சக்ரம், தேவர்களுக்கு இரவு பகல் என்பதை  தெரிவிக்கிறது.

அந்த தீவின் அதிபதி ப்ரியவ்ரதனின் ஒரு புதல்வன் வீதீஹோத்ரோ என்பவன்.  அவன் புதல்வர்கள், ரமணக, தாதகி என்பவர்கள்- இவர்களி ராஜ்யத்தில் நியமித்து விட்டு தன் மூத்த சகோதரர்கள் போலவே பகவானின் சேவையில் ஈடுபட்டான். அந்த தேசத்து ஜனங்கள், ப்ரும்ம ரூபியான  பகவானை சகர்மகம்- கர்ம மார்கத்துக்கு அதிகாரியாகவும் எண்ணி, ஆராதிக்கின்றனர். அவர்கள் துதி:

“யத் தத் கர்ம மயம் லிங்கம் ப்ரும்மலிங்கம் ஜனோ அர்சயேத், ஏகாந்தம் அத்வயம், ஸாந்தம், தஸ்மை பகவதே நம இதி”   கர்ம மயமான ரூபம் ப்ரும்ம லிங்கம். இதை ஜனங்கள் அர்ச்சிக்க வேண்டும்.  ஏகாந்தமானது. அத்வயம், சாந்தம், அந்த பகவானுக்கு நமஸ்காரம்.

ரிஷி சொன்னார்: அதன் பின் பூவுலகம் தவிர மற்ற உலகங்களும் அதன் மலைகள், இயற்கை பற்றியும், லோகங்களுக்கு இடயிலான பல விஷயங்களைப் பற்றியும் விவரித்தார்.

மானஸ ஏரியின் வடக்கு பகுதி வரை உள்ள பூமி பொன் நிறமானது.  அதை எல்லையாகக் கொண்ட பூ பிரதேசம் ஏழரை லக்ஷம், ஏழரை கோடி பரிமாணம் உள்ள  சுத்த ஜலம் நிரம்பிய கடலுக்கு அப்பால் உள்ளது.

மேரு மலையிலிருந்து மானஸ ஏரியின் வட பகுதி வரை  எந்த அளவு பூமியின் விஸ்தீர்ணம்  உள்ளதோ, அதே  அளவு விஸ்தீர்ணம் காஞ்சன -பொன் நிறமான- பூமி கண்ணடி போன்று தெளிவான சுத்த உதகம் உள்ள சமுத்திரம் வரை.  . அதில் விழுந்த பொருள்கள் திரும்பக் கிடைப்பதில்லை என்பதால் பொது ஜனங்கள், கால் நடைகள் அங்கு போவதை தவிர்ப்பார்கள்.

(ஏழரை லக்ஷத்து பதினைதாயிரம் கோடி யோஜனை தூரம் என்றும் அதுவே மானஸ மத்தியிலிருந்து, சுத்த ஜல சமுத்திரம் வரையில் அறுபத்து ஒன்பது லக்ஷ யோஜனை தூரம், அதன் பின் காஞ்சன பூமி – ஏழரை லக்ஷத்து பதினைதாயிரம் கோடி யோஜனை  தூரம் பரவியுள்ளதாக உரையாசிரியர் சொல்கிறார்.) 

லோகாலோகம் என்று சொல்லப் படுவது இந்த மலையிலிருந்து  மற்ற லோகங்களின் இருப்பிடத்தை வைத்து நிர்ணயிக்கப் படுகிறது.  லோக த்ரயம் என்று ஈஸ்வரனால் சொல்லப் பட்டதும் ஸூரியன், துருவ நக்ஷத்திரம் , மற்ற க்ருஹங்கள்,  நக்ஷத்திர கூட்டங்கள் – ஜ்யோதிர்கணங்கள் – ஒளி வீசும் தாரகைகள்- கபஸ்திகள், அர்வாசீன என்ற மூன்று உலகங்கள்.

இது வரை லோகங்கள் பற்றிச் சொல்லிய பின், லக்ஷண, அனுமானம் , இயற்கை நிலையில் அதன் ஸ்திதி இவைகளைக் கோண்டு கவிகள்,  பூ கோளத்தை  ஐம்பது கோடி யோஜனை என்று கணித்து அதன் கடைசி கால் பாகம் லோகாலோக அசலம் என்று கணிக்கிறார்கள்.  அதற்கு அப்பால், நான்கு திசைகளிலும் ஆத்ம யோனி- அகில ஜகத் குரு  ப்ரும்மாவினால்,  பெரிய யானைத் தலைவன்,  ருஷப:, புஷ்கர ஸூடோ, வாமனோ, அபராஜித என்று சகல லோகத்தின் இருப்பை நிர்ணயிக்கின்றன.  தன் ஆற்றலால் லோக பாலர்களுக்கு பலவித சக்திகளை அடைய வசதியாக, பகவான், பரம மஹா புருஷன், மஹா விபூதிபதி, அந்தர்யாமியாக இருக்கும் ஆத்மாவின் மிக விசேஷமான சத்வம் – (பொருள்) , தர்ம, ஞான, வைராக்ய, ஐஸ்வர்ய முதலிய எட்டு மஹா சித்தி களுக்கு உதாஹரணமாக விஷ்வக் சேனர் முதலான தன் பார்ஷத –(bodyguard) முதன்மை பாதுகாலர்களால் ஸூழப்பட்டவராக, நிஜ தன்னுடைய புஜங்களில்  சிறப்பான ஆயுதங்களுடன்  அந்த உயர்ந்த கிரியில், உலக நன்மைக்காக எப்பொழுதும் சித்தமாக இருக்கிறார்.

ஒரு கல்பம் முடியும் வரை இந்த ரூபத்தில் இந்த பகவான் தன் யோக மாயையால், பல வித லோக யாத்திரைகளை மேற் கொள்கிறார்.

இப்படி லோகங்களுக்கு இடையிலான தூரம், பரிமாணம் இவைகளை விவரித்திருப்பது, பூவுலகுக்கு அப்பால் உள்ள லோகாசலம் என்பதிலிருந்து கணக்கிடப் பட்டுள்ளது. அதன் பின் யோகேஸ்வரனின் கதியை தெளிவாக சொல்கிறார். அண்த்தின் மத்தியில் உள்ளடு ஸூரியன். வானத்திற்கும் பூமிக்கும் உள்ள இடைவெளி. ஸூரியன் அண்ட கோளத்தின் மத்தியில்  இருக்கிறான்.  மேரு மலை பூமியின் மத்தியில் இருப்பது போல. ஸூரியனுக்கும் அண்ட கோளத்தின் வடக்கு,   அல்லது மேல் பகுதி,  தேகு அல்லது கீழ் பகுதி இரண்டுமே,  இருபத்தைந்து கோடி யோஜனைகள் தூரம்.  நிலையில்லாத பூகோளம், அதில் இருப்பதால் – நிரந்தரமில்லாத ம்ருத அண்டம் – ம்ருதாண்டம் – அதன் மத்தியில் இருப்பவன் மார்த்தாண்டன் என்று ஸூரியனுக்கு  ஒரு பெயர்.  ஹிரண்ய கர்பன் என்று மற்றொரு பெயர்.  ஹிரண்ய- பொன் மயமான கோளத்தில் உண்டானவன் என்பதால்.

ஸூரியனிடமிருந்து தான் திசைகள் கணக்கிடப்படுகின்றன.   அவ்வாறே. அண்ட வெளி, வானம், பூமி, தவிர ஸ்வர்க அபவர்கங்கள்.  நரகம், ரஸௌகா -பாதாளம் என்ற லோகங்களும் அறியப் படுகின்றன.  தேவர்கள், கால் நடைகள், மனிதர்கள், ஊர்வன, வேர்களுடைய மரங்கள், தாவரங்கள் என்று அனைத்து உயிரினங்களுக்கும் ஆத்மாவாக இருப்பது ஸூரியனே.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  இருபதாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-46

ஸ்ரீமத் பாகவதம்  –  ப்ரிய வ்ரத விஜயம் என்ற  ஐந்தாவது ஸ்கந்தம் || ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||

அத்யாயம்-21

ஸ்ரீ சுகர் சொன்னார்:  இதே போல பூமியைச் சுற்றி உ ள்ளவையும் ப்ரமாண லக்ஷணங்களால் அறிந்து சொல்லப் படுகிறது.

தேவ மண்டலம் இரண்டு பாகமாக வர்ணிக்கப் படுகிறது.  பூ மண்டலத்தின் இருப்பும், ஸூர்யனின் கதியையும் வைத்து அதன் விஸ்தீர்ணம்  ஐம்பது கோடி யோஜனை என்று சொல்லியதை போலவே, அதே கணக்கில் தேவ லோகம் பற்றியும் கணக்கிட்டுள்ளார்கள்.  எப்படி என்றால், கோதுமை போன்ற தானியங்களை மூடியிருக்கும்  தோலை (உமி) அதைப் பிளந்து ஒன்றை அளந்தால் மற்றொன்றும் அதே அளவு தான் இருக்கும் என்பது எப்படி நிச்சயமோ,  அந்த நியாயத்தின் அடிப்படையில்,  பூலோகத்தின் அளவே தேவலோகமும் கணக்கிடப் படுகிறது. இரண்டுக்கும் இடையில் அந்தரிக்ஷம் என்ற உலகம். இது பூலோகத்தையும், தேவலோகத்தையும் இணைக்கிறது.  இந்த பகுதியில் க்ரஹங்கள், நக்ஷத்திரங்கள், உள்ளன. ஸூரிய பகவான் வெப்பமும், பிரகாசமும் அளித்து மூவுலகையும் காக்கிறார்.  உத்தராயணம், தக்ஷிணாயனம் என்ற பிரிவுகள், ஸூரிய பகவானுடைய கதியின் அளவைக் கொண்டு, மந்த,சீக்ர, சமான  என்ற கதிகளின் வேகத்தை வைத்து பிரிக்கப்பட்டுள்ளன. மகரம் முதலிய ராசிகளில், மேலும் கீழுமாக மற்றும் நேராக ரதம் செல்லும் சமயம் பகலும் இரவும், அதிகமாகவோ, குறைவாகவோ அல்லது சீராகவோ இருப்பது போலத் தெரியும்.   ஸூரிய பகவான் மேஷம் அல்லது துலா ராசிக்கு வரும் சமயம், தினமும், இரவும் சமமாக இருக்கும்.  வ்ருஷப முதலான ஐந்து ராசிகளில் செல்லும் சமயம்,  ஒவ்வொரு மாதமும் இரவு நேரம் ஒவ்வொரு மணிநேரம் குறைந்து கொண்டே வரும்.  அதே அளவு பகல் கூடும்.  வ்ருச்சிகம் முதலான ஐந்து மாதங்கள், இரவு  பகல் விகிதம் நேர் மாறாக இருக்கும்.  இரவு அதிகமாகவும், பகல் குறைவாகவும் இருக்கும்.  

இவ்வாறு  ஸூரியனின் சஞ்சாரம்  ஒன்பது கோடி ஐம்பத்து ஒன்று லக்ஷம் யோஜனைகள் மானஸ கிரியின்  சுற்றுப் புறத்தில் அமையும். இதில் ஐந்த்ரீபுரி- இந்திரனின் நகரம் மேருவின் கிழக்கில் தேவதானி என்ற பெயரில், தென் திசையில் யமனுடைய ஸம்யமனி என்ற பெயரில், மேற்கில் வருணனின் நிம்லோசனீ என்ற பெயரில், வடக்கில் சௌம்யமான விபாவரீ என்ற பெயர்- இவைகளில் உதய, மத்யான்ன, அஸ்தமய இரவு என்பவை உயிரினங்கள் தங்கள்  நடவடிக்கைகளுக்கான  சமயத்தை  சரியாக அறிந்து கொள்ள முடிவதால். மேருவின் நான்கு முகங்களாக சொல்லப் படுகின்றன.  இங்குள்ளவர்கள்  தினம்  நடுப்பகல் வரை ஸூரியன் தபிக்கிறான் என்றும் பின் மேருவின் பின் மறைந்ததாகவும், இரவு என்றும்  நினைப்பது, மற்றொரு பாகத்தில் விடியலாகவும்  புதிய ஒரு தினம் காலை. நடுப்பகல்  என்று விரிவதாகவும் அறியப்படுகிறது. பூ கோளத்தின் மேற்கு திசையில், நிம்லோசனி என்ற யமனின் நகரத்தில்,  தன் ரதத்தில் செல்லும் சமயம்  முற்றிலும் மறைந்து விடுகிறான்.

எந்த நகரத்தில் ஸூரிய பகவானின் உதயம் ஆகிறதோ, அதற்கு நேர் எதிர் பாகத்து நகரில் அஸ்தமனம் ஆகியிருக்கும். ஒரு பக்கம் உயிரினங்கள் ஸூரியனின் தாபம் தாங்காமல் தவிப்பர். அதே சமயம், எதிர் பக்கத்தில் இரவாகி தூங்கிக் கொண்டிருப்பர். ஒரு சிலர் மத்யான்னம் என்ற நடுப்பகல்,  ஸூரியனை கண்ணால் காண்பர். அதே சமயம் சௌம்ய திசையில் ஸூரியனை காண முடியாது.  இந்திர புரியிலிருந்து யம ராஜனின் நகர் நோக்கி ஸூரியனின் ரதம் செல்லும் சமயம், பதினைந்து கடி घडि நேரத்தில், இரண்டேகால் கோடி பன்னிரண்டரை லக்ஷ  யோஜனைகளை விட இருபத்தைந்து யோஜனை தூரம் அதிகமாக செல்வார். அதே க்ரமத்தில் வருணன், சந்திரன் நகரங்களைக் கடந்து இந்திரனின் நகரம் வந்து சேருவார். இதே போல சந்திரனின், நக்ஷத்திரங்களின் உதயமும், அஸ்தமனமும் நடந்து கொண்டேயிருக்கும்.  வேதமயமான ஸூரிய பகவானின் ரதம் ஒரு முஹூர்த்த நேரத்தில், முப்பத்து லக்ஷத்து எண்ணூறு யோஜனை என்ற வேகத்தில் நாலு திக்கிலும் உள்ள நகரங்களைக் கடந்தபடி சுற்றி வருகிறது.

சம்வத்சரம் என்பது ஒரு ஆண்டு. அதை ஒரு சக்கரமாக சொல்கிறார். அதற்கு மாதங்கள் என்பன பன்னிரெண்டு ஆரங்கள்.  பருவங்கள் ஆறும் நேமி (नेमि) நான்கு மாதங்களாக மூன்று பிரிவுகள்.  இதை ஆங்கன் (आंगन्) என்பர்.  (சக்கரத்தின் உள் வட்டம்) இந்த ரதத்தின் மேல் பகுதியின் ஒரு சிகரம் மேரு பர்வதத்தின் உச்சியில் உள்ளது.   மற்றொன்று மானஸத்திற்கு வடக்கில் உள்ள ஒரு மலையில் உள்ளது.  இதன் மேல் அமைந்த சக்கரம் எண்ணெய் எடுக்கும் செக்கின் சக்கரம் போல் சுற்றும்.  இரண்டு மலைகளும் வாணியன் (கடுகு,எள் போன்ற தானியங்களிலிருந்து எண்ணெய் எடுப்பவன்) சக்கரத்தின் நடு பாகம் போல இணைந்து இருக்கும் (சக்கரத்தின் அச்சு)  மற்றொரு அச்சு உயரமாக, இதைபோல நான்கு மடங்கு இருக்கும்.  அது எண்ணெய் செக்கின் நடுவில் உள்ள தண்டு போல நீண்டு த்ருவ மண்டலத்தை எட்டும்.  இந்த ரதத்தில் அமரும் இடம்  முப்பத்தாறு லக்ஷம் யோஜனை  நீளமும், ஒன்பது லக்ஷ யோஜனை அகலமும்  உள்ளது.  जुवा என்ற பகுதியும் முப்பாத்தாறு லக்ஷம் யோஜனை தூரமேயாகும்.  அதில் அருணன் என்ற சாரதி, காயத்ரி முதலான பெயர்களுடன்- வேத மந்திரங்கள் போன்ற பெயர்களுடன் – ஏழு குதிரைகளை பூட்டி வைத்திருக்கிறான்.  இந்த ரதத்தில் அமர்ந்து ஸூரிய தேவன் பவனி வருகிறான்.  அவர் எதிரில் அவருடைய முகத்தை பார்த்தபடி அமர்ந்து அருணன் சாரத்யம் செய்கிறான். அவருக்கும் முன்னால் ஸ்வஸ்தி வாசகங்களை சொல்லிய படி, பாலகில்யர்கள் என்ற ஆறாயிரம் ரிஷிகள், -இவர்கள் கட்டை விரல் அளவே உள்ளவர்கள்)  (பௌருவ?) செல்கின்றனர். இவர்கள் தவிர, ரிஷிகள், கந்தர்வர்கள், அப்சரா, நாக, யக்ஷ, ராக்ஷஸ, மற்றும் தேவர்கள், பதினான்கு பேரும் தங்கள் துணைவர்களுடன் பின் தொடருகின்றனர். ஜோடியாக இருப்பதால் ஏழு கணங்கள் எனப்படுவர்.  மாதந்தோறும் இவர்களுக்கு சில  செயல்கள் உண்டு.  இருவருமாக சேர்ந்து செய்வர். அந்த சமயம் இவர்கள் பெயர்களும் மாறும். (ஏழு நாட்கள்)  இப்படியாக ஒரு க்ஷணத்துக்கு இரண்டாயிரத்து இரண்டு யோஜனை தூரத்தை கடந்து விடும் வேகத்தில், ஒன்பது கோடி, ஐம்பத்தோரு லக்ஷ யோஜனை உள்ள பூ மண்டலத்தின் சுற்றளவை ஸூரிய பகவான் கடக்கிறார்.  

இவ்வாறு ஸூரியனின் கிரணங்களுக்கு மேல் லக்ஷ யோஜனை தூரம் வேகமாக செல்லும் சந்திரன்,  ஸூரியனுடைய வர்ஷம் என்ற காலத்தை பக்ஷங்கள், வளர் தேய் பிறைகளாலும், மாதம் கால் (நான்கில் ஒரு பாகம்) ருக்ஷம் என்ற கணக்கிலும், பக்ஷம் என்பதை ஒரு தினமாகவும் அடைகிறான்.  இந்த இரண்டு வளர், தேய் பிறைகளுக்கும் இடைப்பட்ட கலைகளால் அமரர்கள் என்ற தேவர்களுக்கும், குறைந்து கொண்டு வரும் கிரணங்களால் பித்ருக்களையும், இரவு பகல், பூர்வ பக்ஷம் அபர பக்ஷம் என்பவைகளால் நிர்வகிக்கிறான். அந்த விதமாக அனைத்து உயிரினங்களையும் காத்து, முப்பது முஹூர்தங்களாக ஒவ்வொரு நக்ஷத்திரத்தையும் பிரித்து ஆள்கிறான். பதினாறு கலைகள் உடைய  பகவான் சந்திரன், மனோ மய, அன்னமய , அம்ருத மயன், தேவ பித்ரு மனுஷ்ய மற்ற பிறவிகள், பசு, பக்ஷி, ஊர்வன, பறவைகளுக்கும் ப்ராணனை தருவதால் சர்வமயன் என்று வர்ணிக்கப் படுகிறான்.

இதற்கும் மேல், மூன்று லக்ஷ யோஜனைகள் தூரத்தில், நக்ஷத்திரங்கள், மேருவை வலது புறமாக கால அயனங்கள்  பகவானே செய்த வகையறை, அபிஜித் என்பதோடு சேர்த்து இருபத்தியெட்டு என்பர்.

அதற்கும் மேல் உசனா என்ற ரிஷி இரண்டு லக்ஷண யோஜனை தூரத்தில் காணக் கிடைக்கிறார்.  கிழக்கு, மேற்கில், சில சமயம் சேர்ந்தும் ஸூரியனோடு பயணம் செய்கிறார்.  அவருடன் வேகமாகவும், மந்தமாகவும், சமமாகவும் ஸூரியன் போலவே சஞ்சரிக்கிறார்.  உலக மக்களுக்கு எப்பொழுதும் அனுகூலமாக மழை வரச் செய்வதும், தன் ஏவலர்களுடன் மழையின் அளவு, மழையை தடுப்பது, தவிர  கிரஹங்களின் போக்கையும் கண்காணிக்கிறார்.

உஸனஸ் ரிஷிக்கும் பிறகு புதன் பற்றி சொல்கிறார்.  உஸனஸ் க்கும் மேல், இரண்டு லக்ஷ யோஜனைகள் ( பூமியிலிருந்து ஒன்பது லக்ஷ தூரத்தில், ) புத க்ரஹம் – பொதுவாக சுபமானது. சில சமயம் ஸூரிய கதியின் இடையில் வரும் சமயம் அசுபமாகவும் செயல்படும்.  அந்த சமயம் அதிக காற்று, அதிக மழை என்று பூமியில் இடர்கள் தோன்றும்.   அதற்கும் மேல் இரண்டு லக்ஷ யோஜனை, பூமியிலிருந்து  பதினோறு -11- லக்ஷ யோஜனை தூரத்தில் அங்காரகன்.  பொதுவாக கெடுதல் விளைவிப்பவன் என்று சொன்னாலும், நன்மையும் உண்டு. “தசமே அங்காரகோ யஸ்ய ஸ ஜாத: குல தீபக:- எவனுடைய ஜாதகத்தில் பத்தாவது இடத்தில் அங்காரகன் இருக்கிறானோ, அவன் குல தீபகனாவான்” என்ற படி. வக்ரனாக சஞ்சரிக்கும் சமயம் ஒரே இடத்தில் பல காலம் இருப்பான் என்றும் சொல்லப் படுகிறது.  அங்காரகன் தன் வக்ர கதியில் செல்லும் சமயம் அந்த ஸ்தான விசேஷத்தால், தீங்கு விளையும் என்பது நம்பிக்கை.

அங்காரகனைவிட இரண்டு லக்ஷம், பூமியிலிருந்து பதின்மூன்று-13- லக்ஷ தூரம் ப்ருஹஸ்பதி. ஒவ்வொரு ராசியிலும் மூன்று மூன்று பக்ஷங்கள் பரிவத்ஸரம் பரிவத்ஸரமாக கடப்பதாக சொல்லப் படுகிறது. பொதுவாக ப்ராம்மண குலத்துக்கு அனுகூலமானவன்.   பொதுவாக சாந்தியை தருபவன்.

அதற்கும் மேல், இரண்டு லக்ஷ யோஜனைகள் தாண்டி சனைச்சரன் என்ற பெயரில் ஒவ்வொரு ராசிக்கும் மூன்று மாதங்கள் பதின்மூன்று மாதங்கள் மெதுவாக செல்வதால் சனைச்சரன் என்று பெயர்.   

அதற்கும் வடக்கில், பதினைந்து லக்ஷ தூரத்தில், பூமியிலிருந்து 11-பதினொன்று லக்ஷ தூரத்தில் இருப்பது  உலகத்தின் சம நிளையை நிலை நிறுத்தும் விஷ்ணு பதம். அதை ப்ரதக்ஷிணமாக கடப்பர்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  இருபத்தொன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-17

ஸ்ரீமத் பாகவதம்  –  ப்ரிய வ்ரத விஜயம் என்ற  ஐந்தாவது ஸ்கந்தம் || ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||

அத்யாயம்-22

அரசன் வினவினான். பகவன்!   ஆதித்யன், மேருவையும், துருவ நக்ஷத்திரத்தையும் ப்ரதக்ஷிணமாக சுற்றி வருவதும், ராசிகளின் திசைகளில் பார்வை படும் படி, வருவதும், அதன் பின் அப்ரதிக்ஷணம் – மறு திசையில் சுழன்று செல்வதாகவும் வர்ணித்தீர்கள்.  அதை நாங்கள் காண முடியுமா? எப்படி?

அவர் பதில் சொன்னார்:  குயவனின் சக்கரம் சுழலும் சமயம் அத்துடன் சில எறும்புகள் வேறு இலக்கை நோக்கிச்  செல்கின்றன.  அதே திசையிலோ, எதிர் திசையிலோ கூட அதன் கதி இருக்கலாம்.  அது போல நக்ஷத்திர மண்டலம் கால சக்கரத்தில் உடன் வந்தாலும், அவை துருவனை, மேருவை ப்ரதக்ஷிணமாக சுற்றும் சமயம் உடன் அதே போல ப்ரதக்ஷிணமாக வந்தாலும் அவைகளின் கதி வேறே.  நக்ஷத்திரங்களுக்கும், ராசிகளுக்கும் இடையில் உள்ள சம்பந்தத்தால் மாறும் தன்மையுடையன.

ஆதி புருஷனான பகவான் நாராயணனே,  தன்னுடைய வேதங்களில் சொன்ன கர்ம விதிகளை சிறப்பாக நடைமுறைக்கு கொண்டு வர,  ப்ரும்மா முதலானவர்களும் சேர்ந்து வேத்தை நன்றாக அறிந்தவர்கள் மேலும் அதன் பொருளை விவரமாக ஆராய்ந்து, பன்னிரெண்டாக பிரித்து ஆறு வசந்தம் முதலான பருவகாலங்கள் (ருதுக்கள்) அவை அந்தந்த  சமயங்களில் எப்படி இருக்கும் என்பதையும் விளக்கி உள்ளார்கள்.

அதையே மனிதர்கள் வேத அறிவினால், வர்ணாஸ்ரம விதிகள், அதே போல கர்ம மார்கத்தை அனுசரித்தும், யோக மார்கத்தை சாதனைகள் செய்தும், சிரத்தையுடன் யாகங்கள் செய்து, அல்லது பயிற்சிகள் செய்து, முடிவாக எது நன்மை என்பதை அறிந்து கொள்வார்கள்.

 எனவே, இந்த ஆத்மா வானத்துக்கும், பூமிக்கும் இடையில் வானத்தின் வட்டத்தில், கால சக்கரம் செல்லும் சமயம், பன்னிரெண்டு மாதங்கள் என்று அறிந்தார்கள்.  ராசிகளின் எண்ணிக்கையை ஒரு ஆண்டின் பகுதிகளாக  மாதம், அதில் இரண்டு பக்ஷங்கள், (வளர் பிறை, தேய் பிறை) , இரவு, பகல் பாதி ருக்ஷம் என்பதன் இரண்டாக சொன்னார்கள். அதனால் ஆறு பகுதிகளாக ருதுக்களின் எண்ணிக்கை வந்தது.  இவை ஆண்டு என்பதன் அவயவங்கள்- பாகங்கள்.

வான வெளியில் பாதி வரை ஸுரியனின் கதி செல்லும் காலம் அயனம் எனப்படும். அதனால் எதுவரை ஸுரியனின் கதி வானத்திற்கும் பூமிக்கும் இடையில் மண்டலமாக, வளையமாக  முழு சுற்று முடித்தால் அது சம்வத்ஸரம்- ஆண்டு, பரி வத்ஸரம், இடா வத்ஸரம், அனு வத்ஸரம், வத்ஸரம் என்று பானுவின் தாக்கம், அதிகமாக, மந்தமாக, சம மான கதிகள் இவற்றை அனுசரித்து பெயர்கள் ஸூட்டினர். .

இவ்வாறு சந்த்ரமா அர்க்கனின்- ஸூரியனின் கிரணங்களால் மேலாக லக்ஷ யோஜனை தூரத்தில் இருப்பதால், சூரியனுடைய கதியை வைத்து சொன்ன சம்வத்சரங்கள்,  தான் வளர் பிறை, தேய்பிறை என்பதால் இரண்டும் ஒரு முறை கடந்தால் மாதம் என்றும், மாதங்கள் என்பதையும் நாட்களாக பிரித்தும்,  பாதி பாதியாக பிரித்த ஒரு நாளின் இரவு பகலை, தன் பிரயாண காலத்தை கணக்கிட்டுக் கொண்டு முன்னும் பின்னுமாக, செல்லும் வேகத்தையும் அமைத்துக் கொள்ளும்.

அதன் பின்  வளரும்  வளர் கலைகள், அமரர்களின்,  தேய் பிறை கலைகள் பித்ருக்களின்  காலம் என்றனர்.  இரவும் பகலும் பூர்வ பக்ஷ-வளர் பிறை, அபர பக்ஷ -தேய் பிறை என்பதன் காரணமாக உலகில் ஒட்டு மொத்த ஜீவன்களின் ப்ராணன் , ஜீவனின் ப்ராணன் ஒரு நக்ஷத்திரம் என்று முப்பதாக முஹூர்த்தங்களாக பிரிக்கப் பட்டன.

அது பதினாறு கலைகள் கொண்ட பகவான் மனோ மயன், அன்ன மயன், அம்ருத மயன், தேவ, பித்ருக்கள், மனுஷ்ய, பூத, பசு, பக்ஷி,சரீ ஸ்ருப ஊர்வன, வீருத-பறப்பன  என்பவைகளின் ப்ராணங்களால் ஸூழப் பட்டு இருப்பதால், அவைகளின் தாக்கமும் சேர்ந்து, சர்வமய என்று வர்ணிக்கின்றனர்.

அதன் பின், மேற் கொண்டுமூன்று லக்ஷ யோஜனைகள் நக்ஷத்திரங்கள் மேருவை தக்ஷிண கால – தக்ஷிணாயனம் என்ற காலத்தில்,  ஈஸ்வரனால் ஒருங்கிணைக்கப்பட்டு அபிஜித் என்பதையும் சேர்த்து இருபத்தெட்டு.

மேலும், உசனா- சுக்ரன் என்பது இரண்டு லக்ஷ யோஜனை தூரத்தில் காணப் படும். முன்னாலும், பின்னாலும் ஸூரியனுடைய வேகம் அதிகமாவதும், மந்தமாவதையும், சமமாக இருப்பதையும் வைத்து ஸூரியனுடன் சேர்ந்தே செல்கின்றன, உலகங்களுக்கு  எப்பொழுதும் அனுகூலமாக இருப்பதே ப்ரதானமாக இருந்து, காலங்களில் மழை பொழிவதும், பயிர்கள் செழிப்பதும், மழை குறைவதும் இந்த க்ரஹங்களின் செயல்.

சுக்ரனின் இருப்பிடத்திலிருந்து மேல் இரண்டு லக்ஷ யோஜனைகளுக்கு அப்பால் சோமசுதன்- சந்திரனின் மகனான புதன் இருப்பதாக சொல்கின்றனர்.  புதன் பொதுவாக சுப க்ரஹம். எந்த சமயங்களில் ஸுரியனுடன் முரண் படுகிறானோ, அந்த சமயங்களில் வாத- காற்றின் போக்கு,, வானம் இவைகளின் கதியில் இடறி, அதிக மழை போன்ற ஆபத்துக்கள் நேரும் என்று கணிக்கிறார்கள்.

அதற்கும்  மேல் இருப்பது அங்காரகன்.  இரண்டு லக்ஷ யோஜனைகளுக்கு அப்பால் இருந்து கொண்டு, மூன்று மூன்றாக பாதங்கள்-பக்ஷங்கள் (15 நாட்கள் – ஒரு பக்ஷம் ) ஒவ்வொரு ராசியையும் பன்னிரண்டு ராசிகளையும் ஆளுகிறான். வக்ரமாகச் செல்லும் காலத்தில், பொதுவாக, அசுபம்- நன்மையல்லாத க்ரஹம் என்று கணிப்பு.

அங்காரனுக்கும் மேல் இரண்டு லக்ஷ யோஜனைகளுக்குள், பகவான் ப்ரஹஸ்பதியின் ஸ்தானம்.  ஒவ்வொரு ராசியிலும் பரிவத்சரம், பரிவத்சரம் இருந்து தன் பிரயாணத்தை செய்வார்.  வக்ரமாக கதி இருந்தாலும் அந்தணர்களுக்கு அனுகூலமாகவே இருப்பார்.

அதற்கும் மேல், இரண்டு லக்ஷ யோஜனைகளில் காணப்படும் சனைச்சரன், ஒவ்வொரு ராசியிலும் முப்பது மாதங்கள் தங்குபவனாக, அனைவரையும் பின் தொடர்ந்த்து  செல்வான். அவர்களுடன் அனு வத்சரங்களில் பொதுவாக அனைவருக்கும் அசாந்தி- கெடுதலைச் செய்பவன். 

வடக்கில், ரிஷிகள் பதினோரு லக்ஷ யோஜனைகள் தூர இடைவெளிக்குள், இருப்பர். இவர்கள் உலக நன்மையை எண்ணி செயல் படுபவர். பகவான் விஷ்ணுவின் பரம பதம் என்பதை ப்ரதக்ஷிணமாக சுற்றி வருவர். 

(இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஐந்தாவது ஸ்கந்தத்தின், இருபத்து இரண்டாவது அத்யாயம்)

அத்யாயம்-23 

ஸ்ரீ சுகர் சொல்கிறார்.  அதற்கும் அப்பால், பதின் மூன்று-13- லக்ஷ யோஜனைகளுக்குள், விஷ்ணுவின் பதம் என்று சொல்வார்கள் அங்கு தான் மஹா பாகவதனான துருவன் அக்னி, இந்திரன், கஸ்யப ப்ரஜாபதி, தர்மன் முதலிய சமகாலத்தினருடன்  கௌரவமாக  கல்ப ஜீவிகளுக்கு ஜீவனோபாயமாக  கருணையுடன் இருப்பதாக சொல்வர். அதை வர்ணிக்கிறேன்.

துருவன் தான் எல்லா ஜோதி ரூபமான க்ரஹ நக்ஷத்திரங்கள், சிமிட்டாத ஒளி வீசும் தாரகைகள்,  பகவான் காலத்தின் ஆதிக்கத்தில் செல்லும் அனைத்தின் இடையில் அசையாது ஸ்திரமாக நிற்கும்படி பகவானால் ஸ்தாபிக்கப்பட்டவன், அதை அதே விதமாக செயல் படுத்துகிறான்.

நீளமான கயிற்றால் கட்டப்பட்டு  ஸ்திரமான ஒரு தூணில் கட்டபட்ட மாடுகள் சுதந்திரமாக நடமாடுவது போல இருந்தாலும், அந்த கயிற்றின் அளவே அவைகள் செல்லும் தூரம் என்பது போல கீழும் மேலும், பக்கங்களில் என்று சுழலும் கிரஹ நக்ஷத்திரங்கள் அசையாத ஸ்தம்பமாக இருக்கும் பகவானின் ஆணையால் ஒரே சீராக அவைகளுக்கு விதிக்கப்பட்ட பாதைகளில் செல்கின்றன, அதை விட்டு விலகுவதில்லை.  வானத்தில் சஞ்சரிக்கும் க்ரஹங்கள் இதே போல உள்ளும் புறமும் செல்வது கால சக்கரத்தின் சக்தியும் துருவ நக்ஷத்திரத்தின் ஆளுமைக்கு உட்பட்டதே.  அதே போல வான மண்டலத்தில் வாயுவால் அலைக்கழிக்கப் படும் மேகங்கள், கல்பம் முடியும் வரை சுற்றி வந்து கொண்டிருப்பதும் துருவனின் ஆகர்ஷணத்தாலேயே. கழுகு முதலிய பறவைகள் வாயுவின் உதவியால்  உயர உயர பறக்கும்.  அதே காற்றின் அதீதமான வேகத்தால்   விழாமல் தடுப்பதும்,  ஜோதிர்கணங்கள்,  ஓளியுடன் (கண்) சிமிட்டும், சிமிட்டாத தாரகைகள், இவை இயற்கையும், இறைவனும் சேர்ந்து அனுக்ரஹிக்கப்பட்டவை, தங்களுக்கு விதிக்கப் பட்ட பாதையில் மட்டுமே சஞ்சரிப்பதும் பூமியில் விழாமல் இருப்பதும் துருவனின் ஆகர்ஷணத்தினால் தான்.  சில தாரகைகள் திமிங்கிலம் –(dolphin) உருவில் உள்ளவை, இவை பகவானின் யோக தாரணையை அனுசரிக்கின்றன. இவைகளின்   தலைகீழாக, உடலை சுருட்டிக் கொண்ட வடிவில், வால் போன்ற பகுதியின் ஆரம்பத்தில் துருவன் வசிப்பதாக சொல்வர். அந்த வால் பகுதியில் ப்ரஜாபதி, அக்னி, இந்திரன், தர்மன் இருப்பர். வால் நுனியில் தாதா, விதாதா (धाता,विधाता) இடுப்பு பகுதியில், சப்த ரிஷிகள் அதன் வலது பக்கம் வளைந்த குண்டலீயான  (சக்கர வடிவ) சரீரத்தின் தென்பகுதியின் கீழ் சில நக்ஷத்திரங்கள் (அபிஜித், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, அஸ்வினி, பரணி, காரித்திகை, ரோஹிணி, மிருகசீர்ஷம், திருவாதிரை, புனர்வசு இவை உதக யானானி எனப்படும்) பதினான்கு நக்ஷத்திரங்களும், இடது புறத்தில், புஷ்யம், ஆஸ்லேஷம்(ஆயில்யம்), மகம், பூர்வ பால்குனி(பூரம்,) உத்தர பால்குனி(உத்திரம், )ஹஸ்த, சித்திரை, ஸ்வாதி, விசாகம், அனுராதா (அனுஷம்)  ஜ்யேஷ்டா (கேட்டை) மூலம், பூர்வாஷாட, உத்திராஷாட (பூராட, உத்திராட) இவை தக்ஷிணாயன நக்ஷத்திரங்கள், பதினான்கும், திமிங்கில வடிவின் இரு பக்கமும், அவயவங்களாக அறிஞர்கள் விவரிக்கிறார்கள்.  திமிங்கிலத்தின் வயிற்று பாகத்தில் ஆகாச வீதி என்றும் அதில் ஆகாச கங்கா என்றும் இருப்பிடங்களை சொல்கிறார்கள்.

புனர்வசு,   உத்தராயனத்தின் முடிவாகவும், புஷ்ய நக்ஷத்திரம் , தக்ஷிணாயனத்தின் ஆரம்பமாகவும் இருப்பதாக சொல்கின்றனர்.  சிசுமார- திமிங்கில வடிவின் உடல் பாகங்களில் இருபத்தெட்டு (அபிஜித் உட்பட) நகத்திரங்களின் ஸ்தானம் விவரமாக சொல்லப்பட்டுள்ளது.  அதன்,

வலது பக்கம்  -கிழக்கு –          இடது பக்கம்- மேற்கு.

வலது பாதம் – திருவாதிரை,ஆயில்யம்,    –   அபிஜித் – உத்திரட்டாதி,

மூக்கு-  திருவோணம், பூராடம்

கண்கள்- சதயம், மூலம்                                                              

காதுகள்- மகம் முதலிய எட்டு நக்ஷத்திரங்கள்.                                    

இடது பாதம்- மிருகசீர்ஷம் முதலான எட்டு  

 சதயம், கேட்டை தோள்கள்,

மேல் பாகத்தில் அகஸ்திய தாரகை, கீழே யமன், வாயில் அங்காரகன் (பௌம)தாரகை, ஜனன உறுப்பில் சனி, ககுத்-திமில் (விலங்குகளில் முதுகில் ஒரு பாகம்) என்ற பகுதியில் ப்ருஹஸ்பதி, மார்பில் ஆதித்யன், ஹ்ருதயத்தில் நாராயணன், மனதில் சந்திரன், நாபியில் உசனா, சுக்ர தாரகைகள், ஸ்தனங்களில் அஸ்வினி, தாரகைகளான அஸ்வினி குமாரர்கள், ப்ராண அபான வாயுக்களின் இடத்தில் புதன்,  கழுத்தில் ராஹு, மீதி உள்ள எல்லா இடங்களிலும், கேது,  ரோமங்களில் மற்ற தாரகைகள் என்று அறியவும்.          

பகவான் விஷ்ணுவின் சர்வ தேவதாமயமான ரூபம். தினந்தோறும் கண்களால் பார்த்து, வணங்க,” நமோ ஜ்யோதிர் லோகாய, கால, அயன  அனிமிஷ பதயே மஹா புருஷாய அபிதீமஹி “ என்ற வாசகம்.  க்ரஹ, ருக்ஷ, தாராமயமான  தெய்வீகமான பாபத்தை போக்கும், மந்திரம். இதை மூன்று வேளையும் நினைப்பதால், உடனடியாக பாபங்கள் விலகும்.                   

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  இருபத்து மூன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) வசன ஸ்லோகங்கள்-9

 அத்யாயம்-24 

ஸ்ரீ சுகர் சொன்னார்: ஸூரியனின் கீழ் பாகத்தில், ஒரு யோஜனை தூரத்தில், ஸ்வர்பானு நக்ஷத்திரம் போலவே செல்லும் ஒரு க்ரஹம் உள்ளது என்று சிலர் சொல்கிறார்கள்.  அது ஒரே சமயத்தில் அமரத்வம்-நிரந்தரமான நிலையையும், க்ரஹமாகவும் மதிக்கப் படுகிறது. தகுதியின்றி இருந்தாலும், பகவானுடைய அருளால், உண்மையில் அசுரன். சிம்ஹிகா புதல்வன்.  தாரா மண்டலத்திலிருந்து  தாபம் தாங்காமல், ஒரு யோஜனை தூரம் விழுந்தவன்.  சந்திரனிடமிருந்து. இருபத்திரண்டு ஆயிரம், பதின்மூன்றாயிரம் ராஹுவிடமிருந்தும் விலகி இருக்கும்.  ஒரு பருவ காலத்தில் ஸூரிய சந்திரர்களை பின் தொடர்ந்து மறைத்தது. அதைக் கேட்ட பகவான் தன் சக்கரத்தை அனுப்ப, அதன் வேகத்தை தாங்க முடியாமல், ஒரு முஹூர்த்தம் மட்டுமே ஆன நிலையில் ஸுரியனுடைய ஒளி வட்டத்திலிருந்தே விலகி விடும் என்பர்.

அதற்கும் கீழ் சித்த சாரணர்களின் இருப்பிடம்.  அதற்கும் கீழ் யக்ஷ ரக்ஷ ப்ரேத பூத கணங்களின் நடமாட்டம் உள்ள அந்தரிக்ஷம் – இங்கு வாயு வீசும், மேகங்கள் உலவும்.  அதற்கும் கீழே, நூறு யோஜனை தூரத்தில், இந்த பூமி – இங்கு ஹம்ஸங்கள், பாஸ, கழுகு, சுபர்ணன் என்ற கருடன் முதலிய பறவைகள் பறக்கும் இடம். பூமிக்கும் கீழே, ஏழு நிலங்கள் இரண்டு யோஜனை தூர இடைவெளியில், விஸ்தாரமாக வர்ணிக்கப் படும், அதலம், விதலம், சுதலம், தலாதலம்,மஹா தலம், ரஸாதலம், பாதாளம் என்பவை.  பூமியின் அடியில் பள்ளம் போல இருந்தாலும், ஸ்வர்க்கத்தை விட அதிகமான போக ஐஸ்வர்யங்கள், ஆனந்தங்கள், மற்றும் விபூதிகள்  நிறைந்த பவனங்கள், உத்யான வனங்கள், க்ரீடா விஹாரங்கள், இவற்றுடன் தைத்ய தானவ  வம்சத்தினர், மனைவி மக்கள், புத்ர பௌத்ர்கள் என்று க்ருஹஸ்த ஜீவனத்தை  சுகமாக தொடர்ந்து வருவதாக சொல்லப் படுகிறது. இவர்கள், ஈஸ்வர பக்தி, மாயா விநோதங்கள் இவைகளிலும் ஈடுபாடு உடையார்களாக உள்ளார்கள். 

அரசனே!  இங்கு மாயாவியான மயனால் கட்டப் பட்ட நகரம். பலவிதமான  உயர் மணிகள் அழகுற பதிக்கப் பெற்ற பவனங்கள்.  ப்ராகாரங்கள், கோபுரங்கள். சபைகள், சிறு உத்யான வனங்கள்.  நாற்கால் மண்டபங்கள். நாகாசுர்கள்,  இரட்டையர்களாக சஞ்சரிப்பர். உத்யான வனங்கள் அமர லோகம் போலவே அழகுடன் பராமரிக்கப் படுகின்றன.  பழங்கள், கொத்து கொத்தாக மலர்களும், தனி மலர்களும், தளிர்களுமாக, தலை வணங்கி நிற்பது போன்ற மரங்கள், அவைகளை சுற்றிப் படர்ந்து இருக்கும் கொடிகள், இவைகளுடன் அழகிய காட்சியளிக்கும். அருகில்  குளங்கள், நீர் நிலைகள்.  எப்பொழுதும்  இணைபிரியாத இரட்டையர்களாக சக்ரவாகங்கள்,  அந்த சுத்தமான நீரில் மிதந்தபடி இருக்கும். துள்ளும் மீன் கூட்டங்களும் மற்ற நீர்வாழ் ஜந்துக்களும் விளையாடும்.  நீரில் மலரும் பூக்கள், அனேக நிறங்களில் கமலங்கள் நிறைந்த இடங்கள்.  அந்த பூக்களிடையில் வசிக்கும் சிறு பறவைகளும், பூச்சிகளும் ஆர்பரிக்கும் சத்தம் மதுரமாக கேட்கும்.  அனைத்துமே லக்ஷ்மீ கடாக்ஷம் பெற்றவை,       பகலா இரவா என்று கூட தெரியாதபடி உல்லாசமான வாழ்க்கையை வாழ்பவர்கள்.  பெரும் நாகங்கள் தலையில் உள்ள மணிகளின் பிரகாசம் இருட்டை விரட்டி விடும். 

இங்கு வசிப்பவர்கள் திவ்யமான ஔஷதி ரஸம், அன்ன பானாதிகள், ஸ்னானம் முதலியவைகள், மனோவியாதி, உடல் வியாதி, முதுமையால் தேஹ வர்ணம் இழந்து, துர்கந்தம், வியர்வை, அலுப்பு, ஓய்ச்சல் என்று பலவிதமன  இடர்களையும் அனுபவிப்பதில்லை.     இவர்கள் எப்பொழுதும்  நன்மைகள், அழகிய  பலசாலியான உடல்  இவற்றுடன் வாழ்கின்றனர். பகவானுடைய சக்கரம் அன்றி வேறு எதனாலும் மரணம் இல்லை என்பது இவர்கள்  பெற்ற வரம்.  அதனால் சுதர்ஸன சக்கரத்தைக் கண்டாலே அசுர பெண்மணிகளின் கர்பம் கலையும், அவர்கள் பயத்தால் அழிவர்.  அசுர நகரில் மயன் என்ற தானவனின் மகன் பல என்பவன் வசிக்கிறான். தொன்னூற்று ஆறு விதமான மாயைகளை அறிவான்.  அவற்றில் சில இன்றளவும் மாயை என்ற கண்கட்டி வித்தை செய்பவர் அறிவர்.  ஒரு சமயம் கொட்டாவி விட்ட சமயம் மூன்று விதமான பெண்கள் வெளி வந்தனர்.  சுவர்ண வர்ணமான, காமினி, பும்ச்சலி என்பவர்கள். ஹாடக எனும் மதுவினால் மயக்கி இங்குள்ள ஆண்களுடன் காலம் கழிப்பர். அந்த மதுவினால் மயங்கி அவர்களும் நானே கடவுள், நானே சித்தன் என்று பிதற்றுவர்.

அதற்கும் கீழ், விதலம் எனும் இடத்தில்,  பகவான் ஹாடகேஸ்வரர் என்ற பெயரில் மகேஸ்வரன்,  பவானி எனும் தன் பத்னியுடன் வசிக்கிறார். உடன்.  பார்ஷதர்கள் எனும் ஏவலர்கள் பூத கணங்கள், இவர்களுடன் ஹாடகீ என்ற நதிக் கரையில்  ப்ரும்மாவின் வேலையான பிரஜைகளை பெருக்குவது என்பதை ஊக்குவிக்கிறார்.  பவனும் பவானியும் இணைந்தே இருப்பர்.  இந்த நதியின் நீரிலிருந்து பொன் விளைகிறது. பெண்கள் யாரானாலும், தேவ, மானிட, ஆசுர ஜனங்கள் விருப்பமுடன் பொன்னை விரும்பி,  நகைகளாக அணிகின்றனர்.

இதையும் அடுத்து சுதலம். இதில் விரோசனன் என்பவரின் மகனாக பலி என்ற அசுர ராஜன் குணசாலியாக, உத்தம ஸ்லோகன் என்று அறியப் பட்டார்.   மகேந்திரனின்  வேண்டுகோளுக்கு இரங்கி பகவான், வாமனனாக  அதிதி மகனாக பிறந்தார்.  பலியிடம் மூவடி நிலம் தானமாக பெற்று, ஓங்கி உயர்ந்து வளர்ந்து  மூவடியால்  மூவுலகையும் அளந்து கொண்டார்.  அதன் பின் பகவானின் அருளாலேயே, இந்திரன் முதலான தேவர்களுக்கும் கிடைக்காத செல்வத்தை லக்ஷ்மீ கடாக்ஷத்தினால் ராஜா பலி கிடைக்கப்  பெற்றான்.  அதன் பின் தன் இயல்பான குணம் சற்றும் மாறாமல், இன்றளவும் வாழ்கிறான்.  சுதல லோக ஐஸ்வர்யம் அரசனான அவனிடம் இருந்தது. அதை  பூமியுடன் தானம் செய்ததன் பலனாக என்றும் அழியாத ஐஸ்வர்யமாக மோக்ஷ ப்ராப்தி அடைந்தான்,

யதேச்சையாக, , கீழே விழும் போதோ, வேறு ஏதோ ஆபத்தோ எனும் பொழுது தன்னையறியாமல் கூட பகவன் நாமாவை சொல்பவர்  நல்ல கதியை அடைவர்.  தன் பூர்வ ஜன்ம வினைப்பயன் நீங்கப் பெறுவர் என்கிறார்.  அவரே தன் பக்தர்களின் ஆத்மாவில் ஆத்மாவாக இருப்பவர்.  அவரே, இப்படி பலியின் நல்ல எண்ணத்துடன் அளித்த மூன்றடி நிலத்தை மூவுலகமாக ஏற்றுக் கொண்டது  நியாயமா ? என்ற கேள்வியும் -பலியின் பக்திக்கே பகவான் தண்டனை கொடுத்தார் என்பது போன்ற சந்தேகங்களும் வருவது இயல்பே.   பலியின் தந்தை வழி தாத்தா ப்ரஹ்லாதனின் தந்தை மோக்ஷத்தை கூட வேண்டவில்லை. பகவானின் அருகில் இருக்கும் நிலையையே வேண்டினார்.  பலி எதையும் கேட்கவில்லை.  அதனால் பகவான் பலியின் ராஜ்யத்தில், தன் கதையை கையில் ஏந்தி காவலாக நின்றார்.  ராவண ராஜா சுதலம் வந்தபொழுது அவனை விரட்டியடித்தார் என்பது வரலாறு என்கிறார்,  ஸ்ரீ சுகர்.  

பொருளே பெரிதென்றி எண்ணிய இந்திரன் என்ன செய்தான்?  இந்திரனின் மந்திரி ப்ருஹஸ்பதி. அவரையே அவமதித்தான்.  பகவானிடம் இந்திரலோக சௌக்யங்களையே வேண்டினான். இந்த இந்திர பதவியும் ஒரு மன்வந்தரமே – சாஸ்வதமான பகவானின் அருகாமையை விட இந்த பதவிகள் துச்சம், ப்ரஹ்லாதன் ஹிரண்யகசிபு வதத்தின் பின் அகண்டமான ராஜ்யத்தை பகவானே கொடுத்த பொழுது கூட ஏற்கவில்லை. பகவானின் அருகாமையே வேண்டினான். மஹானுபாவன்  ப்ரஹ்லாதன்.   பலிக்கும் அவர் அனுக்ரஹமே செய்தார். அவருடைய மனம் தயையால் நிறைந்தது. இவைகளைப் பற்றி நான் பின்னால் விவரமாக விளக்கம் அளிக்கிறேன்.

சுதலத்தின் கீழ் இருப்பது தளாதளம்.  அங்கு தானவ ராஜன் மயன் வசிக்கிறான். அங்கு தான் பகவான் ஸ்ரீ சங்கரன் உலக நன்மைக்காக மூன்று புரங்களையும் எரித்தார்.  அதன் பின் மயன் அவருடைய அருளால் இந்த இடத்தில் வசிக்கிறான்.  மயன் என்பவன் மாயாவிகளின் பரம குரு.  இங்கு உள்ள மயனின் பிரஜைகளுக்கு  சுதர்ஸன சக்கரத்திடம் கூட பயம் இல்லை. ஏனெனில் பகவான் மஹாதேவனின் ஆசியால்  மயன் காக்கப் படுகிறான்.

அதற்கும் கீழ் காத்ரவேயர்கள் என்ற சர்ப்பங்களின் நகரம். பல தலைகள் உள்ள, நாகங்களின் கூட்டம், குஹக, தக்ஷக, காலிய, சுசேஷணன் முதலிய பெரிய சர்ப்பங்கள், பகவானின் கருட வாகனத்தைக் கண்டு அசூயை உடையவர்கள், இந்த இடத்தில் தன் நண்பர்கள், மனைவி மக்களுடன் குடும்பமாக சந்தோஷமாக வாழ்கின்றனர்.

இதற்கும் கீழே, ரஸாதளம் எனும் இத்தில் திதி புதல்வர்கள் தைத்ய தானவர்கள், பணய என்பவர்கள், காற்று புகாத கவசங்களுடன், மகா சாகஹ பிரியர்கள்,  பிலங்களில் வசிப்பவர்கள், இந்திரனிடம் பயந்து வாழ்கின்றனர்.

அதற்கும் கீழ், நாக லோகம். வாசுகி முதலானோர் வசிக்கும் இடம். சங்க, குலிக, மஹா சங்க, ஸ்வேத, தனஞ்ஜய, த்ருதராஷ்டிர, சங்கசூட, கம்பல, அஸ்வதர, தேவதத்தன் என்பவர்கள், கடும் கோப குணம் கொண்ட நாகங்கள்.  ஐந்து ஏழு, பத்து, நூறு, ஆயிரம்  என்ற அளவில் தலைகளும்,  படம் எடுக்கும் வல்லமையும் உள்ள நாகங்கள். அவர்களின் தலையின் நடுவே உள்ள படத்தில் மாணிக்கம் என்ற உயர் மணி பிரகாசிப்பதால், அந்த லோகமே இருளின்றி ஒளி மயமாக இருக்கும்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  இருபத்து நான்காவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) வசன ஸ்லோகங்கள்-31 

அத்யாயம்-24 

ஸ்ரீ சுகர் சொன்னார்:  அதன் பின், பதின்மூன்று ஆயிரம் யோஜனைகள் தூரத்தில், இருப்பது பகவானுடைய தாமஸமான கலை.  சாத்வீக – சத்வ குணம் நிரம்பிய சமயம் ஸ்ருஷ்டியில் வந்தவர்கள் சங்கர்ஷணன் என்று பகவானை சொல்வதை, இவர்கள்  நாங்கள் தான் சாங்கர்ஷணர்கள் – சங்கர்ஷணிடம் தோன்றியவர்கள் என்று சொல்லிக் கொள்வர்.  இங்குள்ள அனந்தன் எனும் நாகம், பூ மண்டலத்தை தன் தலையில் தாங்குவதாக சொல்லப் படுகிறது.   பகவான்  ஆதி புருஷன், சங்கர்ஷணன்.   ஸ்ருஷ்டி ஆரம்பத்தில்  தெளிவாக தெரிந்த தெரியாத தத்வங்களை  இணைத்ததால் வந்த பெயர்.  அவர் புருவம் கோபத்தால் நெரிந்த சமயம் உண்டானவர் ருத்ரன். அவரே சாங்கர்ஷணர்.  பதினொன்று வித ரூபங்கள்,  மூன்று கண்கள், மூன்று தலைகள், சூலத்தை ஏந்தியபடி வந்தார். அவருடைய பாத கமலங்கள், அதன் நகங்கள், மின்னும் பலவித மணிகளை விட அதிக ஓளியுடையவை..  பாதாள லோக தலைவர்கள், பல ரிஷிகளுடன் ஏகாந்தமான பக்தி யோகத்தால் இவரை வணங்குகின்றனர்.  அப்படி வணங்கும் சமயம் இந்த நகங்களின் ஒளி தங்கள் முகங்களில் படுவதே மனோஹரமாக இருப்பதாக மகிழ்ந்து நோக்குகின்றனர்.   நாகராஜ குமாரிகள் வெட்கத்துடன் அவரை அங்கம் அங்கமாக ரசிக்கின்றனர்.  அங்குள்ள வெள்ளியிலான ஸ்தம்பங்களில் ப்ரதி பலிக்கும் ஒளியில் ருத்ரனின் புஜங்களில் அணிந்துள்ள வலயம் எனும் ஆபரணம் மேலும் ஒளி கூடியதாக ஆகிறது. சந்தனம், அகரு, குங்குமம், முதலிய வாசனை திரவியங்கள் மணத்தால் அந்த இடமே  நிரம்பியுள்ளது போல மயங்குகின்றனர். அதற்கும் மேல் மகரத்வஜன்  (திமிங்கிலம் அல்லது ஏதோ ஒரு கடல் வாழ் பிராணியை  தன் கொடியில் உடையவன்)  சிரிப்பில், மற்றும்  அவருடைய கருணை நிரம்பிய பார்வையில்  மயங்குகிறார்கள்.

பகவான் அனந்தன், ஆதி தேவனாக அனைத்தையும் தன்னுள் நிரப்பி வைத்துக் கொண்டிருந்த ஆதி புருஷன்,  லோக அமைதி ஒன்றே குறியாக இருந்தார்.   சுரர்கள், அசுரர்கள், உரக, சித்த, கந்தர்வ வித்யாதர, முனி கணங்கள் அனவரதமும்  தொழுத பொழுதும், சற்றும் மாறாத புன்னகையுடனே ஆசீர்வதித்தார்.  அச்சமயம் அங்கு வந்த நாரதர்  பகவானை வர்ணித்து துதி செய்தார்.

உத்பத்தி, ஸ்திதி, லயம் என்ற செயல்களை தன் பார்வையாலேயே நடத்திச் செல்லும் சங்கர்ஷணன் தான் தனியாகவே இந்த பரந்த உலகை பாலிக்கிறார். இந்த சங்கர்ஷணன் என்பதையே சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாது.  மிருகபதியான  சிங்கம் இவருடைய பராக்ரமத்தை தானும் பெற முயற்சிக்கிறது.  சேஷன் தவிர மற்றவர்களால் இவருடைய கருணையை, சத்வ குணத்தை பாட முடியாது.  எதேச்சையாக கேட்டாலே இவருடைய மகிமையை உணர்ந்து சஹஸ்ர சீர்ஷா புருஷன் என்று வணங்கி நலம் பெறுவர். மலைகள், நதிகள், சமுத்திரங்கள் நிறைந்த சம்பூர்ண மண்டலம் இவர் சிரசில் ஒரு துகளாக தெரியும்.  அதனாலேயே அனந்தன். எனவே இவருடைய பராக்ரமத்தைச் சொல்ல யாராலும் ஆகாது.  தங்கள் விருப்பங்கள் நிறைவேற  பொது ஜனங்கள் , அரசர்கள் அனைவருமே வேண்டிக் கொள்கிறார்கள்.  அது இயல்பே.  இது, இவருக்கு, இவ்வளவு என்று விதிக்கும் வினைப் பயனையும் இவரது அருள்  மாற்றியமைக்கும் என்ற நம்பிக்கை.   

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  இருபத்து நான்காவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) வசன ஸ்லோகங்கள்-15

அத்யாயம்-25

பரீக்ஷித் அரசன் கேட்டான்:  மஹரிஷியே, உலகத்தில் ஏன் இந்த வேறு பாடுகள்?

ரிஷி சொன்னார்: முன்று குணங்கள்.  செய்பவனின் ஈடுபாடு, அறிவு இவற்றின் பலனாக பல வழிகள்.   அனைத்துமே தனிதனியானவை. அனவருக்கும் பொதுவாக ஒன்று சாத்யமில்லை. அதனால் தார தம்யங்கள் – வேறு பாடுகள் தோன்றுகின்றன. ப்ரதிஷித்தம்- செய்யாதே என்று அறிவுறுத்தினாலும், அதர்ம காரியங்களை சிலர் செய்கிறார்கள்.  ஈடுபாட்டுடன் செய்வதிலும், அவரவர் மனப் பான்மைக்கு ஏற்ப அதிகம், மிதம், மிக குறைவு என்று பாகுபாடு தானாகவே வந்து விடுகிறது.  அறியாமலோ, விவரம் தெரியாமல் அவித்யை காரணமாகவோ, அவரவர் அறிவுக்கு ஏற்ப செய்யும் செயலின் தன்மையும் மாறுபடுகிறது. ஸ்ரூதய:? सृतयःபல தோன்றி விட்டன.

 ரிஷி சொன்னார்: மூவுலகுக்கும் தென் திசையில், பூமியை சூழ்ந்து ஜலம், அக்னி வாயு இவை இருக்கும் இடத்தில் யோகம், சாதனகள் என்று நியாயமாக வாழ்ந்தவர்கள் தங்கள் முன்னோர்கள் உடன் இருப்பார்கள்.

வைவஸ்வதன் என்ற பித்ருராஜன்,   தன்னிடம் வந்து சேர்ந்த  அந்த உயிரினங்களின், கர்மாவசேஷம், வினைபலன் எந்த அளவில் மீதமுள்ளது என்பதை தன் ஏவலர்கள் உதவியால், கவனிக்கிறார்.  தோஷம் இருந்தாலும், சட்டத்தை மீறாதவரை அனுமதிக்கிறார்.

இதன் பின் நரக வர்ணனை. ஐந்தாவது ஸ்கந்தம் இத்துடன் முடிவடைகிறது.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  இருபத்து ஐந்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) வசன ஸ்லோகங்கள்-15

ஸ்ரீமத் பாகவதம்

|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய || 

தக்ஷ சாபோ  என்ற நான்காவது ஸ்கந்தம் 

அத்யாயம்-1

மைத்ரேயர் சொன்னார்:  மனுவிற்கு சதரூபாவிடம், ப்ரியவ்ரத, உத்தானபாத என்ற இரு  மகன்கள் தவிர ஆகூதி,தேவஹூதி, ப்ரசூதி என்ற மூன்று பெண்களும் பிறந்தனர். 

ஆகூதி என்பவளை ருசி என்பவருக்கு மணம் செய்து கொடுத்தனர்,   (உறவு முறையால்  சகோதரன் என்றாலும் எல்லோருடைய சம்மதத்துடனும் மணம் செய்து கொடுத்தனர்) தவபலம் நிறைந்தவர் அவர். அவர்களுக்கு  யக்ஞஸ்வரூபியான பகவானே மகனாகவும், தக்ஷிணா என்பவள் மகளாகவும் பிறந்தனர்.  அவர்களுக்கு பன்னிரண்டு குழந்தைகள். தோஷ, ப்ரதோஷ, சந்தோஷ, பத்ரன், சாந்தி, இடஸ்பதி, இத்ம: கவி, உசஸ்வன:, சுதேவோ, ரோசனோ த்விஷட்.  தீஷிதா என்ற தேவர்களாக ஸ்வாயம்புவ மன்வந்தரத்தில் இருந்தனர்.

கர்தம புத்ரிகளை ஒன்பது ரிஷிகளுக்கு மணம் செய்து கொடுத்ததை முன்பே சொன்னேன். அதில் ப்ரசூதியின் குழந்தைகள் பற்றி சொல்கிறேன், கேள்.  மரீசியின் மனைவி கலா, கஸ்யபர் என்ற முனிவரையும், பூர்ணிமானம் என்பவரையும் பெற்றாள்.  பூர்ணிமான்  , விரஜ, விஸ்வக என்ற பிள்ளைகளையும், தேவகுல்யா என்ற மகளையும் பெற்றார். இந்த தேவகுல்யா என்ற மகள் தான் அடுத்த ஜன்மத்தில்  ஹரியினுடைய பாதங்களை அலம்பிய ஜலமாக உலகை பாவனம் செய்யும் நதி கங்கையாக  ப்ரவஹித்தாள். 

அத்ரியின் மனைவி அனசூயா,  மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். மூவருமே ப்ரசித்தமானவர்களாக ஆனார்கள். தத்த, துர்வாஸர், சோமன்.  ஈசனின், விஷ்ணுவின், ப்ரும்மாவின் தேஜசுடன் பிறந்தனர்.

விதுரர் கேட்டார்.  குருவே, அத்ரியின் வீட்டிற்கு, மூன்று தேவர்களும், ஸ்திதி, உத்பத்தி, லயம்  எனும் செயல்களுக்கு பொறுப்பானவர்கள், ஏதோ உத்தேசத்துடன் சென்றார்களே, அந்த கதையை சொல்லுங்கள்.

அத்ரி முனிவர், நான் முகனான ப்ரும்மா முதன் முதல் ஸ்ருஷ்டி செய்த முனிவர்களுல் ஒருவர்.  அவர் மனைவி அனசூயாவுடன் குலாசலம் (ருக்ஷாசலம்) என்ற இடத்தில் தவம் செய்து வந்தார். அந்த இடம்  விந்த்ய மலையடிவாரத்தில் மிக ரமணீயமாக இருந்தது.  கொத்து கொத்தாக மலர்ந்த பலவித மலர்கள், பலாச, அசோக போன்ற மரங்கள், நீர் நிறைந்த குளங்கள், நதி, என்று   தவம் செய்ய அமைதியான இடம். ப்ராணாயாமம் செய்து பலவருஷங்கள் மனம் உடல் இரண்டையும் தன் வசப் படுத்திக் கொண்ட முனிவர் ஒரு பாதத்தில் நின்று தவம் செய்தார்.  காற்றே போஜனம்.ஜகதீஸ்வரனை வணங்குகிறேன். தனக்கு சமமான மகனை எனக்கு அருள வேண்டும் என்று பிரார்த்தித்தார்.  அவரது தீவிரமான தவம் அவரது மஸ்தகத்திலிருந்து வெப்பமான புகையாக வெளி வந்து மூவுலகையும் தகிக்கலாயிற்று.  அப்சர, கந்தர்வ, முனி ஜனங்கள் அவரது ஆசிரமத்தில் வந்து கூடினர். அவர்களைப் பார்த்த முனிவர், ருஷபம்,ஹம்ஸ,சுபர்ண என்ற வாகனங்களில் வந்த மும்மூர்த்திகளையும் வணங்கினார்.  கண்களைத் திறந்து அவர்களை வணங்கி துதித்தார்.

அத்ரி சொன்னார்: விஸ்வ உத்பத்தி, ரக்ஷணம், லயம் என்று உலகில் ஒவ்வொரு யுகத்திலும் மாயா குணத்தால் தேகம் தரிக்கும் மூவரும் இந்த இடத்திற்கு வந்த காரணம் என்னவோ? ப்ரும்மா என்னை பிரஜைகளை ஸ்ருஷ்டி செய் என்று ஆணையிட்டார்.  சாதாரண மனிதர்களின்  மனதால் கூட அண்ட முடியாத தூரத்தில் இருப்பவர்கள், ஒன்றாக வந்தது எனக்கு ஆச்சர்யமே. தயவு செய்து சொல்லுங்கள். 

தேவர்கள் சொன்னார்கள்;  நீ என்ன காரணத்திற்காக தவம் செய்கிறாயோ, அது கண்டிப்பாக நடக்கும்.  எங்களை இங்க வரவழைத்தது  அந்த சத்சங்கல்பமே. ப்ரும்மன், அதனால், எங்கள் அம்ச பூதமாக புகழுடன் உலகில் உன் பெருமையை பறை சாற்றியபடி  வாழ்வார்கள் உன் மகன்கள்.  இவ்வாறு வரம் கொடுத்தவர்கள் உடனே மறைந்தனர்.

அத்ரி-அனசூயா தம்பதிக்கு, ப்ரும்மாவின் அம்சமாக சோமன் (சந்திரன்) பிறந்தான். விஷ்ணுவின் அம்சமாக தத்தன் எனும் தத்ராத்ரேயர், சங்கரனின் அம்சமாக துர்வாசரும் பிறந்தனர்.

ஆங்கிரஸ் என்றமுனிவரின் மனைவி ஸ்ரத்தா. நான்கு புத்திரிகளைப் பெற்றாள். சினீவாலி, குஹூ, ராகா, அனுமதி என்பவர்கள். வசிஷ்டரும், ப்ருஹஸ்பதியும் மகன்கள். 

புலஸ்தியர் என்ற ரிஷி, ஹவிர்பூ என்ற மனைவியிடம், அகஸ்தியர் என்பவரை பெற்றார். அடுத்த பிறவியில்,  ஜடராக்னி,விஸ்ரவா  என்ற மகன்கள். மற்றொரு ,மனைவி கேசினி என்பவளின் மகன்கள் ராவண, கும்பகர்ண,விபீஷணன் என்பர்.  யக்ஷபதியான குபேரன், இட்விடா என்பவளின் மகன்.

புலஹருடைய மனைவி கதி என்பவளுக்கு. கர்மச்ரேஷ்டன், வரீயாம்சன், சஹிஷ்ணு என்ற மூன்று மகன்கள்.

க்ரது என்பவரின் மனைவி க்ரியா வாலகில்யான் என்ற  ஆறாயிரம் ப்ரும்ம தேஜஸால் பிரகாசித்த  ரிஷிகளைப் பெற்றாள்.

வசிஷ்டர் ஊர்ஜா என்பவளிடம் சித்ரகேது முதலான ஏழு ரிஷிகளைப் பெற்றாள். சித்ரகேது, சுரோசி, விரஜா, மித்ரன், உல்பனோ, வசுப்ருத், த்யுமான், சக்தி என்பவர்கள்.

அதர்வண ரிஷி சித்தி என்பவளிடம், த்ருதவ்ரதன் என்பவனைப் பெற்றாள்.

தத்யஞ்சமன், அஸ்வசிரஸ் – இவர்கள் ப்ருகு வம்சத்தினர்.  க்யாதி என்ற மனைவியிடம் ப்ருகு தாதாரன், விதாதாரன்,ஸ்ரீ -இவள் பகவானின் பத்னியானாள்),ஆயதி, நியதி என்ற பெண்கள்  -இவர்கள் மேருவை மணந்தனர்.  அவர்களுக்கு ம்ருகண்டு, ப்ராணன் என்று மகன்கள்.   மார்கண்டேயன் ம்ருகண்டு மகன். ப்ராணன் மகன் வேதசிரஸ். கவி என்ற ப்ருகு புத்திரனுக்கு பகவானே உசனா என்ற முனிவராக பிறந்தார். சுக்ராசார்யர் இவரே.

இந்த முனிவர்கள், தாங்களும் நல்லவர்களாக இருந்து, பிரஜைகளையும் வளர்த்தார்கள். கர்தமருடைய மகள் வயிற்று சந்ததிகள், பற்றிச் சொன்னேன். ப்ரும்மாவின் மகனான தக்ஷன் ப்ரசூதி, மானவி என்பவர்களை மணந்தான். அவர்களிடம் அழகிய கண்களுடைய  பதினாறு பெண்களைப் பெற்றான். பதிமூன்று  பெண்களை தர்மனுக்கு கொடுத்தான். அக்னிக்கு ஒன்று, மற்றவளை பவனுக்கு கொடுத்தான். தர்மனுடைய பத்னிகள்: ஸ்ரத்தா, மைத்ரீ, தயா, சாந்தி, துஷ்டி:, புஷ்டி:, க்ரியா, உன்னதி:, யுத்வித், மேதா, திதிக்ஷா, ஹ்ரீ, மூர்த்தி என்பவர்கள்.

ஸ்ரத்தாவின் மகன்கள்: சுபன்  மைத்ரீ, ப்ரஸாதன், அபயன், தயா,சாந்தி, சுகம், முதன்,ட துஷ்டி: ஸ்மயம்,புஷ்டி

புத்தி என்பவள், யோகம், க்ரியா, உன்னதி, தர்பம்,அர்த்தம், இவர்களையும்,

மேதா என்பவள், ஸ்ம்ருதி, திதிக்ஷா, க்ஷேமம், ஹ்ரீ:, ப்ரஸ்ரயன் என்ற மகனையும்,

மூர்த்தி என்பவளுக்கு,    நர நாராயண என்ற ரிஷிகள்.  இவர்கள் பிறந்ததால், உலகமே மகிழ்ந்த து.   அனைவரும் மகிழ்ந்தார்கள்.  திவ்ய வாத்யங்களை இசைத்தும், பூ மாரி பொழிந்தும் தேவர்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். தேவர்கள் துதித்தனர்.

 இருவரும் அதன் பின் கந்தமாதனம் எனும் இடத்தையடைந்தனர்.  பின் ஒரு காலத்தில் இவர்கள் இருவரும் பூவுலகத்தில் அவதரித்த காரணமே, பூ பாரத்தை குறைப்பதே. க்ருஷ்ணனாக, பலராமனாக வந்தனர்.

ஸ்வாஹா, அபிமானி என்ற அக்னியின் குழந்தைகள், மூன்று பெண்களைப் பெற்றனர். பாவகம், பவமானம், சுசி,- இவர்களை  ஹுத போஜனர்கள் என்பர். இவர்கள் மூலம் நாற்பது நான்கு அதன் பின் மேலும் ஐந்து விதமான அக்னிகள் தோன்றின. மொத்தம் நாற்பத்து ஒன்பது விதமான அக்னிகள். வைதானிய கர்மாக்களில், அக்னியுடன் செய்யும் யாகங்களில் இவர்கள் இருப்பர்.

பவனுடைய மனைவி சதீ பவன் என்ற தேவனை மணந்தாள். தங்களுக்கு சமமான புத்திரனைப் பெறவில்லை. ஒரு சமயம் தந்தை அழைக்காததால் பவன் வரவில்லை என்ற விஷயத்தில் ஏற்பட்ட கோபத்தில், தன்னையே யோக மார்கத்தில் எரித்துக் கொண்டாள்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷ சாபோ  – என்ற நான்காவது  ஸ்கந்தத்தின், முதல் அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -66

அத்யாயம்2

வன் எனும் மகேஸ்வரன் நல்ல சீலமுடையவர், ஸ்ரேஷ்டன் என்று அறிவோம். தக்ஷனும் தன் மகளிடம் அன்புடையவர். எதனால் விரோதம் சொந்த மருமகனிடம்?  தன் மகள் சதீயையே அலட்சியம் செய்யும் அளவு கோபம் வரக் காரணம்? சராசர குரு, அவருக்கு விரோதிகளே கிடையாது, சாந்த மூர்த்தி, ஆத்மாராமன் என்று உலகமே மதிக்கும்  ஒருவரிடம் அதுவும் அவர் தன் மகளை மணந்தவர் என்ற உறவும் சேர்ந்து இருக்க, அவரை அலட்சியம் செய்யலாமா? அதுவும் மகள் தன் உயிரையே தியாகம் செய்யும் அளவிற்கு விரோதமா?  சொல்லுங்கள் என்று விதுரர் கேட்டார்.

மைத்ரேயர் சொன்னார்: ஒரு சமயம், விஸ்வஸ்ருட் என்ற ப்ரும்மாவின் யாகத்தில் சிறந்த ரிஷிகள், தேவதா கணங்கள் என்று அனைவரும் கூடியிருந்தனர்.  அந்த சபையில் தக்ஷன் நுழைந்த பொழுது, ப்ரும்மாவையும், சங்கரனையும் தவிர  அக்னி முதலான தேவர்களும், மற்றவர்களும் எழுந்து மரியாதை செய்தனர். முன்னாலேயே அமர்ந்து விட்ட சங்கரனைக் கண்டதும் தக்ஷனுக்கு தன்னை அவமரியாதை செய்து விட்டதாக கோபம் வந்த து. இவன் என் மகளை மணந்தவன் எனக்கு சிஷ்யனாவான்.  மரியாதையே அறியாத மூடன். தரம் அறியாது என் மகளை இவனுக்கு கொடுத்து விட்டேனே –  வானரம் போன்ற கண்கள் இவனுக்கு – என் மகள் அழகிய மான் விழியாள், எழுந்து நின்று எனக்கு மரியாதை செய்ய வேண்டியதிருக்க, வாய் மூடி மௌனியாக அமர்ந்திருக்கிறான்.  விரித்த சடையும், உடலில் பூசிய பஸ்மமும் – எனக்கு பிடிக்கவேயில்லை. இருந்தும் என் மகளை தாரை வார்த்து கொடுத்தேன். மரியாதை தெரியாதவன், சூத்ரனுக்கு வேத மந்திரங்களை கற்றுத் தருவது போல. பூத கணங்கள் சூழ வலம் வருபவன். கோரமான ப்ரேதங்கள் இவைகளுடன் சிரித்துக் கொண்டும் ஆடிக் கொண்டும் திரிபவன்.  உடல் முழுவதும் பஸ்மம் , அசிவன்- மங்களமே இல்லாதவன் சிவன் -மங்களன் என்று பெயர்.  மதம் கொண்ட ஜனங்களுக்குத் தான் இவனை பிடிக்கும்.  ப்ரமத பூதங்களின் தலைவன்.  தமோ குணமே உருவானவன்.  இந்த மன நோயாளிக்கு என் மகளைக் கொடுத்து விட்டேன், ப்ரும்மா சொன்னார் என்பதற்காக.  என்றிவ்வாறு கிரீசனை  பலவிதமாக நிந்தனை செய்து கொண்டே போனார்.  கையில் நீரை எடுத்துக் கொண்டு சபிக்கவும் தயாரானார். மற்றவர்கள் தடுத்தும் கேளாமல், இந்த பவன், தேவர்களின் யாகங்களில் மற்ற தேவர்களுடன் தன் பாகத்தை பெறாமல் போகட்டும் என்று சபித்தார். (சாபம் உண்மையில் வன் மற்ற தேவர்களுக்கு முன்னால் தன் பாகத்தைப் பெறட்டும் என்றோ, மற்ற தேவர்கள் தங்கள் பாகத்தை பெற்ற பின் பெறட்டும். ஏனெனில் இவர் போஷகர் என்ற ஸ்தானத்தில் இருப்பவர், கொடுப்பது தான் இவரது செயல், தான் முன்னதாக பாகத்தை பெற மாட்டார் என்பதாகவோ பொருள் கொள்ளப்பட்டது)  சபித்து விட்டு தக்ஷன் வேகமாக வெளியேறி விட்டார்.

கேட்டுக் கொண்டிருந்த நந்திதேவர், பொறுக்காமல், தக்ஷனுக்கு சாபம் கொடுத்தார். சங்கர த்ரோஹியான தக்ஷனும், சாபம் கொடுப்பதை அனுமோதித்த ப்ராம்மணர்களும் தத்வ ஞானம் என்பதை பெறாமலே, சம்சாரம் என்ற பந்தத்திலேயே உழலட்டும்.  அறிவு சார்ந்த எதுவும் இல்லாத பசு அந்த தக்ஷனுடைய முகம் ஆட்டு முகமாக ஆகட்டும்.  இவனை ஆதரித்த ப்ராம்மணர்கள், செல்வம் இன்றி, யாசகர்களாக வாழட்டும்.

ஒட்டு மொத்தமாக ப்ராம்மண குலத்தை சபிக்கத் துணிந்த  நந்தியை ப்ருகு முனிவர் தடுத்தார். தன் ப்ரும்ம தண்டத்தின் மேல் ஆணையிட்டு ப்ரதி சாபம் – நந்தியின் சாபத்திற்கு எதிர் சாபம் கொடுத்தார்.  இந்தவனை நம்புபவரும், அவனை அனுசரிப்பவர்களும் பாகண்டினர்  (ஆசாரம் இல்லாதவர்கள்) ஆகட்டும். அசுத்தமாக, மந்த புத்தியாக, ஜடையும் பஸ்மமும் தரித்தவர்களாக, சிவதீக்ஷை எடுத்துக் கொண்டும் அலையட்டும். ப்ரும்மத்தையும், ப்ராம்மணர்களையும் நிந்திக்கும் நீங்கள், மனித குலத்துக்கே கெடுதல் செய்தவர்கள்.  சனாதனமான நேர் வழி, ஜனார்தனனை ஆராதித்து நற்கதியடைந்தார்களே, அதுவே பிரமாணம்.   ப்ரும்மம் தான் பரமம்.தூய்மையானது. நல்லவர்களின் வழி அதுவே. இந்த பூத கணங்கள் சூழச் செல்லும் பாகண்ட தேவனை பின் பற்றிச் செல்லுங்கள், என்றார்.

மைத்ரேயர் சொன்னார்:  ப்ருகு சாபம் கொடுத்ததை கண்டு கொள்ளாமல் வனும் வெளியேறினார். அவரை தொடர்ந்து அவருடைய பரிவாரங்களும் வெளியேறின.  விஸ்வஸ்ருஜ யாகம், அது பகவான் ஹரியை குறித்து செய்யபடும் யாகம் பல வருஷங்கள் நீடிக்கும்.  குறையாக நிறுத்தக் கூடாது என்பதற்காக நடந்த சம்பவங்களால் அதில் உத்சாகம் குறைந்தாலும், பெயருக்கு யாகத்தை முடித்து கங்கை யமுனை நதிகளில் அவப்ருத ஸ்னானம் செய்து அனைவரும் தங்கள் இருப்பிடம் சென்றனர்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் இரண்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -35

அத்யாயம்3

காலம் கடந்தும் மருமகன், மாமனார் இடையில் துவேஷம் குறையவே இல்லை. தக்ஷனை ப்ரும்மா ப்ராஜபதிகள் அனைவருக்கும் தலைவனாக நியமித்தார்.  ப்ருஹஸ்பதி யாகம் என்று ஆரம்பித்து வசிஷ்டர் முதலான ரிஷிகள் அனைவரையும் அழைத்து மிக விமரிசையாக செய்ய ஆரம்பித்தான் தக்ஷன். ப்ரும்ம ரிஷிகள் தேவ ரிஷிகள், பித்ரு தேவதைகள் என்று அனைவரும் மனைவிகளுடனும் வந்தனர். அவர்களை முகமன் சொல்லி வரவேற்று, ஆசனங்களில் அமரச் செய்து தக்ஷன் உபசாரம் செய்தான்.  இதைப் பற்றி வானத்தில் சஞ்சரிக்கும் சிலர் பேசிக் கொள்வதைக் கேட்டு சதீ தாக்ஷாயணி விசாரித்தாள். தந்தை வீட்டில் மகோத்ஸவம் நடப்பதும், அனைத்து திக்குகளிலிருந்தும் உப தேவ பெண்களும், ஆகாயத்தில் விமானத்தில் பலரும், அலங்கரித்துக் கொண்டு செல்வதைப் பார்த்தாள். வீட்டு வாசலில் நின்று அவர்களின் குண்டலங்களையும், உடைகளையும் பார்த்து வியந்தவள், பூதபதியான கணவனிடம் வந்து சொன்னாள்.

உங்கள் மாமனார் ப்ரஜாபதி ஏதோ யாகம், மஹோத்ஸவமாக செய்கிறார் போலும்.  எல்லோரும் போகிறார்கள். என் சகோதரிகளும் தங்கள் கணவர்மாருடன் நிச்சயம் போவார்கள். உறவினர், சினேகிதர்களைப் பார்க்கலாம், நாமும் போய் கலந்து கொள்ளலாமா?  கொடியேற்றி விட்டார்கள் போல.  என் தாயாரை பார்க்கலாம்.  மற்ற சகோதரிகளின் புகுந்த வீட்டு உறவினர்கள் வந்திருப்பார்கள்.  பாருங்கள், மற்ற பெண்கள் எல்லோரும் அலங்கரித்துக் கொண்டு கணவன் மாருடன், கூட்டம் கூட்டமாக போகிறார்கள். பிறந்த வீட்டு விசேஷம் என்றால் எந்த பெண் தான் போக ஆசைப் பட மாட்டாள்?  கணவன், குரு, தந்தை வீடுகளுக்கு அழையாமலே போகலாம் என்பது தானே வழக்கம்.   அதனால், தயவு செய்து, என்னை அழைத்து போங்கள். உங்களில் பாதி தானே நான். என் வேண்டுகோளை நிறைவேற்றுங்கள், என்று கெஞ்சினாள்.

ரிஷி சொன்னார்: இவ்வாறாக ப்ரியாவான மனைவி கேட்டதும்,  கிரீசன் சிரித்தார்.  ப்ரும்மா இருந்த சபையில் மட்டமான வார்த்தைகளால் அவமதித்ததை, நினைத்து தயங்கினார். அவளை சமாதனப் படுத்தும் விதமாக மெதுவாக சொன்னார். சோபனே! அழையாத விருந்தாளியாக கூட பந்துக்கள் வீடுகளுக்குப் போகலாம் தான். அவர்கள் உண்மையாக நம்மிடம் அக்கறையுடன் இருந்தால் போகலாம். நம்மிடம் குற்றம் குறை சொல்லாமல் கோபம் கொள்ளாமல் இருந்தால் போகலாம் தான். வித்யா, தவம், செல்வம்,உடல் வாகு, சம வயது, குலம், இந்த ஆறு குணங்களும் நல்லவர்களிடம் இருந்தால் பிரகாசிக்கும், அதுவே துஷ்டர்களானால் அவர்களது , கர்வத்தைத் அதிகரிக்கும்.  யாருக்கும் எந்த பயனும் இல்லை.  இவர்களை தன் உறவினன் என்றெண்ணி நெருங்குவது யோசிக்க வேண்டிய விஷயம்.  இவர்கள் பார்வையே கோணல். எதிலும் குற்றமே தெரியும். க்ரோதம் வெளிப்படையாக தெரிந்தால், சொந்தமேயானாலும் எப்படி பொறுக்க முடியும்?  அதனால் நம்மை வெறுப்பவர்கள், எதிரிகளே. அவர்கள் வெறுப்புடன் அவச்சொல் சொன்னால் நம்  மனது தாங்குமா? ராத்திரியும் பகலும் அந்த சொல்லே குடையும். மேன்மேலும் உயர் பதவிகளை வகிக்கும் உன் தந்தை முக்கியமான ப்ரஜாபதி என்பது வாஸ்தவம். நீ அவருடைய ப்ரியமான மகள் என்பதும் வாஸ்தவம். ஆனால் என்னை  மணந்த பின் அதே போல எதிர் பார்க்க முடியாது.  அசுரர்கள் ஹரியை எதிர்ப்பது போல அவர் என்னை எதிர்க்கிறார்.  நீ ஏன் அப்பா வந்த பொழுது மரியாதை செய்யவில்லை என்று கேட்கிறாயா? என்னைப் போன்றோர் ஹ்ருதயத்தில் இருக்கும் பரம புருஷனான வாசுதேனுக்கு மட்டும் தான் மரியாதை செலுத்துவோம், அபிமானியான மனிதர்களுக்கு அல்ல.  அந்த:கரணம் சுத்தமாக இருந்தால் தான் வாசுதேவன் தெரிவான். ப்ரியே! உனக்கு பெற்ற தந்தை. ஆயினும் என் பத்னியாக ஆன பின் அவரையோ, அவரை பின் பற்றும் மற்றவர்களையோ நீ சொந்தமாக நினைக்க வேண்டியதில்லை. அதையும் மீறி  நீ போவாயானால் உனக்கு நல்லதல்ல.  அவமானப்படுவாய். வேண்டாம், உன்னால் தாங்க முடியாது.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் மூன்றாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -25)

அத்யாயம்4

மைத்ரேயர் தொடர்ந்தார்: இவ்வளவு சொன்னபின் சங்கரர்  சிந்தனையில் ஆழ்ந்தார். நடக்கப் போவதை அறிந்தவர் போல, தன் மனைவியின் விருப்பத்தையும், அதன் விளைவுகளையும் நினைத்தோ, கவலையில் ஆழ்ந்தார். அவள் கிளம்புவதை பார்த்துகொண்டு வாளா இருந்தார்.  தன் கணவன் சாதாரணமனவன் அல்ல,பரமபுருஷன் என்பதையும் மறந்தவளாக பிறந்த வீட்டு உத்சவத்திற்கு போக விடாமல் தடுக்கும் கணவனாக மட்டுமே நினைத்து கண்கள் குளமாக கோபத்துடன் ஏறிட்டாள். வருத்தமும், ரோஷமும் அவளை அலைக்கழிக்க கிளம்பினாள்.  பவனின் ஏவலாட்கள் பலர் அவளை பின் தொடர்ந்தனர்.  ஆயிரக் கணக்கான யக்ஷர்கள், மற்றும் வீரர்கள் பாதுகாவலாக பரபரப்புடன் பின் தொடர்ந்தனர். ரிஷப வாகனம், முன்னால் நந்திகேஸ்வரர், மற்றும் வெளியில் செல்லும் பொழுது செய்யும் ஏற்பாடுகள், முன்னும்  பின்னும் வழக்கமான பரிவாரங்கள், மங்கள பொருள்களை ஏந்திச் செல்பவர், நல்ல  சகுனங்கள் முதலியவைகளையும் சோதித்து உடன் சென்றனர். (நடக்கப் போவது நன்மையாக இருக்காது என்று ஊகித்தவர்கள் போல)

யாக சாலையிருந்து ப்ரும்ம கோஷம் கேட்டது. ப்ராம்மணர்களும், ரிஷிகளும் நிரம்பியிருந்தனர்.  மண் பாண்டங்கள் முதல் தங்கத்தாலான பாத்திரங்கள், மற்றும் யாகத்துக்கு தேவையான பொருள்கள் தென்பட்டன. யாகசாலையில் நுழைந்தனர். உள்ளே நுழைந்தவளை யாருமே வரவேற்கவில்லை.  அவள் முகம் வாடியதைக் கூட கண்டு கொள்ளாமல் யாகம் செய்பவரின் கோபத்தை நினைத்து பேசாமல் இருந்தனர்.  அவள் தாயும், சகோதரிகளும் ஆதரவுடன் அனைத்தனர்.  அவர்கள் கண்களில் நீருடன் பேசியதோ, தாயார் அவளுக்கு உயர்ந்த ஆசனத்தைக்  கொடுத்ததோ சதிக்கு நிறைவைத் தரவில்லை. தந்தையின் பராமுகம் வருத்தமாக இருந்தது.

ருத்ரனுக்கான பாகம் அளிக்கப்படாமலேயே யாக காரியங்கள் நடந்தன. தந்தையின் வெளிப்படையான துவேஷம், அதைக் கண்டிக்க வேண்டிய  பெரியவர்கள் அந்த சபையில் பேசாமல் இருந்தது, அந்த யாகத்துக்கே தலைவியாக அமர்ந்திருக்க வேண்டிய சதி, கோபத்தால் கொதித்தாள். சிவபெருமான் இல்லாத இந்த யாகம் வெறும் புகையை கிளப்பும் அக்னி என்று வசை பாடினாள்.  பூத கணங்களை தடுத்து, தானே பேசலானாள்.

சதி “ அனைவரையும் அரவனைத்துக் கொண்டு செல்லும்  ஸ்ரீ ருத்ரன், அவரையே எதிர்த்து விரோதம் பாராட்டும் ஹே, ப்ராம்மணர்களே, எது சரி, அல்லது தவறு என்று சொல்ல வேண்டிய நீங்களே சிவ நிந்தைக்கு துணை போவது போல கூடியிருக்கிறீர்கள். எவருடைய பெயரைச் சொன்னாலே மனிதனுடைய பாவங்களே மறையுமோ, அவரையே தூஷித்துக் கொண்டு என்ன சாதிக்கப் போகிறீர்கள்?  மங்களமான சிவனை அலட்சியம் செய்யும் அமங்களமான உங்கள் செய்கை.  ப்ரும்ம ஞானம் வேண்டுவோர் வணங்கும் பாத பத்மம், உலகில் வேண்டுபவர்க்கு ஆசிகளை வர்ஷிக்கும் விஸ்வ பந்து, அவரிடமா விரோதம் ? சிவ தூஷனையை கேட்காமல் காதுகளை மூடிக் கொண்டு விலக வேண்டியிருக்க யாகத்தில் பங்கு கொள்ள வந்துள்ள உங்கள் நாக்கிலிருந்து தர்மம் தானே விலகி ஓடிவிடும்.  சிதிகண்டனை தூஷிக்கும்  உன்னிடம் உண்டான இந்த சரீரம், நான் தரித்திருக்க மாட்டேன்.  ஒவ்வாத உணவை உண்டவன் அதை வெளியேற்றினால் தான் உடல் நிலை சரியாகும் என்பது போல இந்த சரீரத்தை விடுவேன்.

உன் கோத்ரம், அதனால் தாக்ஷாயணி என்று விருஷத்வஜன் அழைப்பார்.  அந்த என் பெயரை விடுகிறேன். இப்படி அந்த யாக சாலையில் தக்ஷனை நேருக்கு நேர் நின்று சொல்லி விட்டு, கிழக்கு நோக்கி அமர்ந்து,ஆசமனீயம் செய்து, மங்களமான மஞ்சள் நிற உடையில், கண்களை மூடி யோகத்தில் ஆழ்ந்தாள். ப்ராணனை சமன் செய்யும் ப்ராணாயாமம் செய்து, நாபி சக்ரத்திலிருந்து சக்தியை கிளப்பி, மெதுவாக  கொண்டு சென்று, கழுத்திலிருந்து புருவ மத்தியில் நிறுத்தினாள். அன்புடன் தன் தேகத்தை பகிர்ந்து கொண்ட மகேசனை நினைத்து, தக்ஷனிடம் கொண்ட கோபத்தால் அதை விடுவித்துக் கொண்டு மனஸ்வினி, தன் உடலில் அந்த யோகத்தால் விளைந்த அக்னியை ஏற்றுக் கொண்டாள்.  தன் கணவனின் பாத ஸ்மரணம் மட்டுமே மனதில், தானே தன் தேகம் எரிவதை பார்த்தாள்.

பூ உலகிலும், தேவ லோகத்திலும் அனைவரும் இந்த அத்புதத்தைப் பார்த்து திகைத்தனர்.  ஆ, சதீ, தன் கணவனிடம் உள்ள அன்பினால் என்ன காரியம் செய்து விட்டாள் என்று அலறினர்.  ஆஹா, என்ன சொல்வோம், ப்ராஜாபதியின் மகள், உலகமே அவன் ப்ரஜைகள், அவனிடம் கோபம், மனஸ்வினீ, தன் தன்மானமே பெரிது என்று எண்ணி விட்டாள். தக்ஷ பிராபதி என்ன செய்யப் போகிறார். அவருக்கு வரப் போகும்  அளவில்லாத அபகீர்த்தியை எப்படி தாங்குவார்.  ஜனங்கள் பலவிதமாக பேசி விமரிசனம் செய்து கொண்டனர். ஆனாலும் ஒரு பெண், தந்தைக்கு எதிராக, தன் கணவனுக்காக பரிந்து பேசி உயிர்த் தியாகம் செய்து கொள்வாளா என்று அதிசயித்தனர்.

இதற்குள் சதியின் கூட வந்த பரிவாரங்கள், ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தாக்க வந்தனர். கூட்டத்தில் இருந்த ப்ருகு முனிவர், யாக அக்னியை அணைய விடாமல் தடுத்து, சோம மந்த்ரம் என்பதால் ருபவோ என்ற தேவதைகளை வரவழைத்து, பூத கணங்களை துரத்தினார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் நான்காவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -34)

 அத்யாயம்5

நடந்த விஷயங்களை நாரதர் சொல்லி வன் தெரிந்து கொண்டார். பவானி தானே தன்னை மாய்த்துக் கொண்டதையும், உடன் சென்ற பரிவாரங்களை ப்ருகு முனிவர் விரட்டியதையும் கேட்டு கோபம் கொண்டார்.  அக்னியே மழையாக பொழிகிறதோ என்று ஐயப்படும் வகையில் விரித்த சடையும்,  கம்பீர நாதமும் சிரிப்புமாக, தன் உடலை ஆகாயத்திற்கும் பூமிக்குமாக வளர்த்துக் கொண்டு, ஆயிரம் கைகளுடன், மூன்று சூரியன் எழுந்தாற்போல  கபால மாலையும் மற்ற ஆயுதங்களுடனும் கிளம்பினார். பூதகண தலைவன் அவனை என்ன செய்ய என்று கேட்க,  தக்ஷனை அவனுடைய யாக பூமியோடு சேர்த்து அழி என்று உத்தரவிட்டார்.

அவரும், ருத்ரனின் பரிவாரங்கள் சூழ, சூலத்தை ஏந்திக் கொண்டு உலகை முடிவுக்கு கொண்டு செல்லும் (ஜகதந்தகாந்தகம்) பலமாக கூச்சலிட்டுக் கொண்டு தாக்கினர்.  அந்த யாகத்தின் யஜமானன், கூடியிருந்தோர், மேற்கு திசையில் ஏராளமாக புழுதி பறந்ததைக் கண்டு என்ன இது என்று திகைத்தனர்.  எங்கிருந்து இந்த அளவு புழுதி வருகிறது என்று அனைவரும்,  யாகத்தில் பங்கு கொண்ட ப்ராம்மணர்களும், மற்றும் கூடியிருந்த ஆண்களும் பெண்களுமாக இருந்த சபை கவலையடைந்தது.

புயல் காற்று வீசவில்லை. திருடர்கள் கூட்டம் போலவும் இல்லை,  உச்சி வெய்யில் தகிக்கிறது, பசுக்களும் அலையவில்லை.  எங்கிருந்து புழுதி ? பிரளய ஆரம்பமோ என்று நடுங்கினர். ப்ரசூதியும் மற்ற பெண்டிரும் உணர்ந்தனர்.  இது ப்ரஜாபதியின் செயலுக்கு எதிர் விளைவே. மற்ற சகோதரிகள் கண் முன்னாலேயே, சதீ மறைந்ததை தந்தையாக இருந்தும் பார்த்துக் கொண்டு வாளா இருந்தாரே, அவள் கணவர் யார் என்று தெரியாதா?    யுக முடிவில் ஜடையை விரித்து போட்டுக்கொண்டு, கையில் சூலத்தை ஏந்தி திக் கஜங்களை விரட்டிக்கொண்டும்,  ஆடுபவன். அட்டாட்ட ஹாஸத்தினாலேயே குலை நடுங்கச் செய்பவன்.  கேட்கும் நிறை மாத கர்பிணிகள், அந்த க்ஷணமே ப்ரசவித்து விடுவர்.  தாமஸ தேஜஸ் அவருடையது. அதை கிளப்பி விட்டு, அவரை ஆத்திரமூட்டியதும் இவரே. இவருடைய புருவ நெரிப்பில், பயங்கரமான பற்களை நெரிப்பதில், சூரிய சந்திரர்களே ஒளியிழப்பர். இந்த ப்ரும்மா எதற்கு அவரை கோபமூட்ட வேண்டும்?

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையிலேயே, மேலிருந்து ஏதோ விழுவது போல ஆயிரக் கணக்கில் ஹரனின் பரிவாரங்கள் பயங்கரமான தோற்றத்துடன்  விண்ணளாவிய உடலினராக  யாக பூமியை நிறைத்தனர். எதிர் பட்டதையெல்லாம் த்வம்சம் செய்து கொண்டு முன்னேறினர்.  யாகத்திற்கான ப்ரும்மாண்டமான ஏற்பாடுகள் நொறுங்கின. யாக பாத்திரங்களா, அக்னி குண்டங்களா, வேதி வளையங்களா எது என்ன என்று யோசிக்க கூட இல்லை. அக்னியை அணைத்தனர்.  முனி பத்னிகளை விரட்டி அனுப்பி விட்டு, வந்திருந்த சில தேவர்களை பிடித்துக் கொண்டனர்.

மணிமான் எனும் வீரபத்ரன், ப்ருகு ப்ரஜாபதியை  கட்டி வைத்தான். சண்டேசன் என்பவன் பூஷணம் என்ற முனிவரை, நந்தீஸ்வரர் பகன் என்பவரை  பிடித்து  கட்டினார்.  கூடியிருந்த ருத்விக் எனும் யாக அதிகாரிகளும்,  காண வந்திருந்த பிரஜைகளும், தேவர்களும் ஓட்டம் எடுத்தனர்.  ப்ருகுவின் மீசையை பிடுங்கினர், பகனுடை கண்களை குத்தினர்,  பூஷணனின் பற்கள் விழுந்தன, பல்லைக் காட்டி சிரித்தார் சதியின் கோபத்தைக் கண்டு என்பதால்,  தக்ஷனுடைய மார்பில் ஏறி நின்று தன் சூலத்தால் குத்தினர். தக்ஷனுடைய தடித்த தோலில் அவை இறங்காததைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தனர். அவர் யோக சக்தியை அறிந்து யஜமான பசு என்று அவன் தலையை கொய்தனர். எங்கும் ஆஹா என்ற சப்தம் நிறைந்தது. அந்த தேவ யாகத்தை எரித்து ஊழித்தீ போல நின்றவர், பின் தன் இருப்பிடம் சென்றார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் ஐந்தாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -26)

 அத்யாயம்6

ஸ்ரீ ருத்ரனின் பரிவாரங்களின் சூல, பட்டிச, நிஸ்த்ரிம்ச, கதை என்ற ஆயுதங்களால் தாக்கப் பட்டு தோல்வியடைந்த தேவர்கள் உடல் முழுதும் காயங்கள் அல்லது உடல் அங்க முறிவு என்று தவித்தார்கள். மிகவும் வேதனையுடன் ப்ரும்மாவிடம் முறையிட்டார்கள்.  நீங்களோ, அல்லது பகவான் நாராயணனே தலையிட்டோ இந்த யாக காரியத்தை முழுமையாக  நிறைவேற்றுங்கள்.  விபு சொன்னார். க்ஷேமத்தை தரும் தேஜஸ்வி, வணங்கத் தக்கவள்,  அவளிடம் தவறு செய்திருக்கிறான்.  நீங்களும் தவறு செய்தீர்கள்.  அவனுடன் சேர்ந்து இந்த காரியத்தில் அமர்ந்து நீங்களும் உடந்தையாக இருந்திருக்கிறீர்கள்.  போய் அவரிடமே மன்றாடுங்கள். அவர் எளிதில்  அருளக் கூடியவர்.  சமாதானப் படுத்துங்கள்.   யாகம் பாதியில் நிற்கக் கூடாது என்று விரும்பினால்,   லோகபாலர்கள் எல்லோருமாக, பிரியமான மனைவியை இழந்த துக்கத்திலும், அவமானகரமான வார்த்தைகளை பேசி ஏசியவரிடம்  கோபித்துக் கொண்டும் உள்ளவரிடம் போய் யாசியுங்கள். மன்னிப்பு கேளுங்கள்.

நானோ, இந்த யாகமோ, நீங்களோ அல்லது ஏதோ ஒரு  உடல் தரித்த ஜீவனோ, முனிவர்களோ, ஞானிகளோ, பலசாலிகள், வீர்யம் உள்ளவர்கள் என்றோ பெருமை பட்டுக் கொள்ளும் எவரும், அவருடைய ஆத்ம சக்தியை உணர்ந்தவர்கள் இல்லை.  இவ்வாறு சொல்லி, ப்ரும்மா, தானும் தேவர்கள், ப்ரஜாபதிகள், பித்ருக்கள், இவர்களுடன் கைலாசம் சென்றார்.  அந்த உயர்ந்த மலை ப்ரபுவுக்கு பிடித்தமான இடம். ஔஷதிகள் பெற, தவம் செய்ய, மந்திரங்கள் பலன் அளிக்க சாதனைகள் செய்ய,ஏற்ற இடம்.  சித்தர்களும், மனிதரல்லாத பலரும் அங்கு பிறந்தவர்கள்.  கின்னர கந்தர்வ அப்சரஸ்கள் என்றும் கூடியிருக்கும் இடம்.  உயர்ந்த சிகரங்கள், சிகரங்களின் மேல் பாகம் மணிமயமாக காட்சியளிக்கும்.   விசித்திரமான தாதுக்கள் நிறைந்த மலை அது. பலவிதமான மரங்கள், செடி கொடிகள், பலவிதமான மான்கள் போன்ற மிருகங்கள் வளைய வரும் இடம்.  நிர்மலமான ஜலத்துடன் அருவிகள், பலவிதமான குகைகள், மலைச் சாரல்கள், அங்கு வரும் பயணிகள் உல்லாசமாக உணர ஏற்ற இடம்.  சித்தர்கள் மனைவிமாருடன் உலவும் இடம்.  மயில்கள், கோகிலங்கள், கிளிகள் மற்றும் பல பறைவகளுக்கு இணையாக  வண்டுகள் தேனைப் பருகி மயங்கி ரீங்காரம் செய்யும் இடங்களும்,

இந்த இடத்துக்கு வாருங்கள், என்று அழைப்பது போல இந்த பறவைகளின் கூச்சலும், அவர்கள் விரும்பும் பழங்களுடைய மரங்கள் நிறைந்த இடம்.  யானைகள்  சாவகாசமாக நடந்து அருவிகளைத் தேடிப் போகும்.  மந்தார, பாரிஜாத, தமால, சாலதாலங்கள், கோவிதார, அர்ஜுன  மாமரங்கள்  போன்ற புஷ்பங்கள் மணம் வீசும். பெரிய மரங்கள்,  கதம்ப, நீப மரங்கள், நாக புன்னாக சம்பக பூ மரங்கள், பாடல, அசோக , பகுள மரங்கள்,  குந்த புஷ்பம்- மல்லிகை-  குரவகம் , ஸ்வர்ணார்ண,  சத பத்ர மரங்கள்,  சிறந்த ரேணுக ஜாதி மரங்கள், குப்ஜம், மல்லிகை, மாதவீ கொடிகளும் மண்டி கிடக்கும். பனசம், உதும்பர, அஸ்வத்த, ப்ளக்ஷ,   ந்யக்ரோத, ஹிங்கு மற்றும் பூர்ஜம், ஔஷதிகள், பூகம், ராஜ பூகம், நாவல் போன்ற மரங்களும், கர்ஜூர-பேரீச்சம் பழம், மாம்பழம்,ப்ரியால, மதுக, இங்குதி மரங்கள், மூங்கில் காடுகள்- உள்ள இடம் – இவைகளிலிருந்து வேணு கானம் கேட்கும். 

நீர் நிலைகளில், குமுதம், உத்பலம் கல்ஹார, சத பத்ர போன்றவை, மற்றும் நளினீ, கல ஹம்ஸம், கூவும் பறவைக் கூட்டங்கள்,  இவைகளுடன்,  அழகூட்டும். மான்களும், வானரங்களும், வளர்ப்பு மிருகங்களும், மிருகேந்திரனும், கரடி, குள்ள நரிகள்,  பசு போன்ற சில மிருகங்கள், சரபம், வ்யாக்ரம் எனும் புலி, ருரு எனும் மிருகம், எருமை மாடுகள், முதலியன.  தவிர காது வரை நீண்ட வாய் உடைய வ்ருகனாபி – கஸ்தூரி மான்கள்,   என்பவைகளும், மற்றும் தாமரை தடாகங்களும் நிறைந்த இடம்.

அந்த இடத்தில் கங்கை நதி சூழ்ந்து பவானி ஸ்நானம் செய்ததால் பவித்ரமான ஜலம், நறு மணத்துடன் அழகாக இருந்தது.   அங்கு  அலகா என்ற நகரைக் கண்டனர்.  சௌகந்திகம் என்ற வனத்தையும், அங்கிருந்த குளத்தில் பங்கஜ மலரின் மணத்தை வைத்து அந்த காட்டிற்கே சௌகந்திகம் என்று பெயர் வந்ததாகச் சொல்வர்.  கங்கையும் அலகநந்தா என்ற நதியும் வெளிப்புறத்தில் ஊரைச் சூழ்ந்து சென்றன. தீர்த பாதர் என்ற வனுடைய  பாத தூளியால் பாவனமான  நதிகள் அவை. தேவ லோகத்து பெண்கள் அந்த நதிகளில் மூழ்கி   பதி பத்னிகள் ஒருவர் மேல் ஒருவர் நீரை வாரியடித்து விளையாடி மகிழ்வர்.  அவர்கள் குளித்தபின் குங்கும வண்ணமாக சுழித்து ஓடும் நீரில் யானை கூட்டம் தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீரைக் குடிக்க வரும்.

பொன், வெள்ளி நிறங்களில் மணி மயமான விமானங்களில் நூற்றுக் கணக்காக அந்த நகரின் மேல் பறப்பதைக் கண்டனர். குபேரனுடைய நகரம். செல்வ செழிப்புக்கு கேட்க வேண்டுமா?  சௌகந்திக வனத்தில் பலவிதமான பழ மரங்கள், கிளிகளும், மற்ற பறவைகளும், கூச்சலிட, இணயாக வண்டுகளின் ரீங்காரமும் இனிமையான நாதம்,  கல ஹம்ஸங்கள் உலவும் நீர் நிலைகள், அடர்ந்த காட்டின் ஊடே வெளிவரும் காற்று சுகமான மணங்களை ஏந்தி வந்தது மனதை கவர்ந்தது.  கிணறுகளில் கீழிறங்க படிகள் வைடூரியமென மின்னின. உள்ளே உத்பல பூக்கள் தொடுத்து வைத்த மாலை போல நிறைந்து இருந்ததை கிம்புருஷர்கள் பார்த்து வணங்கினர். நூறு யோஜனை தூரம் பரவிய வெட்டவெளி, மலையின் நிழலில் குளுமையாக, வெய்யிலின் தாபம் தெரியாமல் இதமாக இருந்தது. அந்த இடத்தில்  மோக்ஷத்தை விரும்பி சாதனை செய்ய ஏற்றதாக, மஹா யோகமயமாக  இருந்த இடத்தில்  தேவர்கள்,  சாந்தமாக  அமர்ந்திருந்த பரமசிவனைக் கண்டனர்.

(ஹர ஹர நம: பார்வதீ பதயே ஹர ஹர மஹா தேவ)

சாந்தமான சனந்தனன் முதலிய மஹா சித்த புருஷர்களும், குபேரனும், அவன் பரிவாரங்களும் வணங்கினர். மஹாதேவன் பரம சாந்தமாக இருக்கக் கண்டனர்.

வித்யா தவம் யோகம் என்ற வழிகளில் காண கிடைக்கும் அதீஸ்வரன், விஸ்வ சுஹ்ருதன்-  உலகங்களில் உள்ள அனைவருக்கும் நண்பன்.  வாத்சல்யன்- பரிவுடையவன், லோக மங்களன், மங்களமானவன்,

தவம் செய்பவர்களுக்கு பிடித்தமான உருவம் உடையவன்,  பஸ்மம், தண்டம் ஜடை இவை அடையாளங்கள்.  சந்த்யாகாலம் போன்ற கண்களைக் கவரும் நிறம், சந்திர கலையை தரித்தவன்,  அந்த

சனாதனமான ப்ரும்மனை தர்ப்ப ஆசனத்தில் அமர்ந்திருக்க கண்டனர்.   நாரதர்  ஏதோ கேட்க பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.  சின்முத்ரை (கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் சேர்த்து) அக்ஷமாலை கையிலுமாக இருந்தவரை லோகபாலர்களுடன்,கிரீசனை முனிவர்களும், மனு என்பவர்களில் முதலான ஆதி மனுவானரை,  கை கூப்பி வணங்கினர்.

அவரோ, அங்கு வந்திருந்த விஷ்ணு,ப்ரும்மா  முதலியவர்களைக் கண்டதும் ஆசனத்திலிருந்து எழுந்து வணங்கி வரவேற்றார்.  சித்தர்களும், மகரிஷிகளும், எதிரில் நீல லோஹிதன்- பரம சிவன், அவரை நமஸ்கரித்து, துதி செய்தனர்.

ப்ரும்மா சொன்னார்:  ஜகத் ப்ரும்மா தாங்கள் தான் என்பதை அறிவேன். விஸ்வ ஈசன், விஸ்வம் – அனைத்து உலகங்களுக்கும் தலைவர் நீங்கள்.  ஜகத் காரணர்- உலகம் தோன்றவே காரணமான பீஜம் நீங்கள்.  சக்தி

என்றும், சிவன் என்றும் நாங்கள் அறிந்தவர்களை விட மேலான அழியாத ப்ரும்மம்

பகவன்! சிவ சக்தி என்று நீங்களே ஏற்றுக் கொண்ட ரூபங்கள். ஸ்ருஷ்டிக்கவும், காக்கவும், கலைக்கவும் -இது உங்கள் விளையாட்டு. சிலந்தி தானாக வலையை கட்டி பின் கலைப்பது போல.

தர்மார்த்தங்கள்  முதலியவைகளை மதிக்காத தக்ஷனை யாகம் செய்ய வைத்தீர்கள்.  நீங்கள் ஏற்படுத்திய வேதத்தின் வழிகள் தான், அதையே சாஸ்திரங்களை அறிந்த ப்ராம்மணர்கள் சிரத்தையுடன் அனுசரிக்கிறார்கள்.

வேத மார்கம் அதாவது கர்ம மார்கம் அதை அனுசரிப்பவர்களுக்கு மங்கள மங்களமானவன்.  உடல் எடுத்த ஜீவன், தன் பிறர் என்று அறியும் உணர்வை தந்தவரே தாங்கள் தான்.  அமங்களமான தாமசமானவைகளுக்கு  நெருப்பு போன்றவர்.   உங்களின் அடியார்கள்  மனதில் உறைபவர் தாங்கள். அவர்கள் உலகில் அனைத்தையும் உங்கள் ஸ்வரூபமாகவே காண்கிறார்கள்.  ஒவ்வொரு உயிரினத்தையும் உங்கள் ஆத்மாவின் அம்சமாக இருக்க, யாருக்கு யாரிடம் த்வேஷம் ? யார் அயல், யார் தன்னை சார்ந்தவன்?  ஜீவன்கள் தான் பசுக்கள், நீங்கள் பசுபதி அல்லவா?

கர்ம மார்கம், யாகாதி வேதம் விதித்த கர்மாக்களை செய்பவர்கள்  பலர்.  மற்றவர் உயர்ந்தால் அசூயை படுபவர்.  மனம் முழுதும் ரோஷமே ஆனவர்களும் இருப்பர். வார்த்தைகளாலேயே உத்வேகம் கொள்வர். அவர்களை தயவு செய்து அழிக்காதீர்கள், பிரபுவே. 

இதுவும் நாபியில் புஷ்பத்தை ஏந்திய பரம் பொருளின் மாயையே.  ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமான புத்தி, பார்வை, அனுமானம் என்று பல விதமாக செயல் பட வைக்கிறது.  அது தெய்வ செயல். அதை பரிவுடனும் தயையுடனும், பாருங்கள்.

அத்வரம்- யாகம் அதை அழியவிடாமல்  நிலை நிறுத்துங்கள் ப்ரபோ! முடியாத ப்ரஜாபதியின் யாகம் நல்லபடியாக முடியட்டும்.  உங்கள் பாகத்தை தராமல் நிறுத்த அவர்களுக்கு அதிகாரமும் இல்லை, அவசியமும் இல்லை. விவரம் அறியாத அல்பர்களின் செயல்.

யாக யஜமானன் (தக்ஷன்) பிழைக்கட்டும். பகன் என்ற முனிவரின் கண்கள் நேராகட்டும்.  ப்ருகு முனிவரின் மீசை முளைக்கட்டும். பூஷணரின் பற்கள் முன் போல ஆகட்டும்.  உடல் ஊனம் அடைந்த தேவர்களின் உடல்கள் நேராகட்டும். ருத்விக்குகளின்  தூசி மண்டிய உபகரணங்கள் சுத்தமாகட்டும்.  உங்கள் அனுக்ரஹத்தால் அனைவருக்கும் கோப தாபங்கள்  மறையட்டும்.  ருத்ரனாக உங்களுக்கு உரிமையான உங்கள் பங்கை அவர்கள் தானாகவே தரட்டும். யாகத்தை கெடுத்தவர்கள் மனம் திருந்தட்டும்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் ஆறாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -53)

 அத்யாயம்7

மைத்ரேயர் சொன்னார்: இவ்வாறு ப்ரும்மா சமாதானம் செய்யவும் பவனும் சமாதானமாகி, கேளுங்கள் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

ப்ரும்மாவே! சிறுவர்களின் செயலை நான் பெரிதாக நினைக்கவில்லை.  அவர்கள்  தேவமாயை என்பதால் கட்டுப் பட்டிருந்தார்கள். அதற்குரிய தண்டனையைத் தான் அனுபவிக்கிறார்கள்.  தலை துண்டிக்கப் பட்ட தக்ஷ ப்ரஜாபதியின் தலை ஆட்டு முகமாக இருக்கட்டும்.   மித்ரன் கண்கள் சரியாகட்டும்,  பூஷன் யாகம் செய்பவருடைய பல்லில் அமரட்டும். மீந்ததை சாப்பிடுபவனாக.  தேவர்கள்  இதுவரை தங்கள் யாகங்களை முறையாக செய்தவர்கள், அவர்களுடைய அங்கங்களில்  அஸ்வினி தேவர்களின் புஜங்களும், பூஷ்ணனின் கைகளும் யாகத்தின் அத்வர்யூ என்ற இடத்தில் இருக்கும் சமயம் உதவும்.  (யாகத்தை செய்பவர்)  ப்ருகு முனிவருக்கும் ஆட்டு மீசையும், தாடியும் வளரட்டும்.

மைத்ரேயன் சொன்னார்: மீடுஷ்டமன் என்று அழைக்கப் படும் மஹாதேவன், சொல்லியதைக் கேட்டு அனைவரும் திருப்தியடைந்தனர்.  தேவர்களும், மகரிஷிகளும், பாதியில் நிறுத்தியிருந்த யாகத்தை முடித்தனர்.  பகவான் சொன்னபடியே யாகத்தின் பசு ஆட்டின் தலையை தக்ஷனுக்கு பொருத்தினர். தூங்கி எழுந்தது போல தக்ஷனும் எழுந்து நேரில் வ்ருஷத்வஜன் என்ற சிவபெருமானைப் பார்த்து, சாந்தமாக பேசினான். துதி செய்ய முயன்றாலும், மகளின் நினைவில் உணர்ச்சி தொண்டையை அடைக்க எதுவும் சொல்ல முடியவில்லை. தன்னை சமாளித்துக் கொண்டு பேசலானான்.

“ஆஹோ! எனக்கு நிறைய அனுக்ரஹம் செய்து விட்டீர்கள் ப்ரபோ!  ஏற்றுக் கொள்கிறேன்.  ப்ரும்மார்த்த  தத்வத்தை போதிப்பவர் தாங்கள். அதனால் ப்ராம்மணர்களை பசுவை காக்கும் இடையன் போல கையில் தண்டத்துடன் காக்க வேண்டுகிறேன்.  தவறு செய்யாமல் இருக்க தண்டனை தேவைதான்.  சபையில் உங்களை அவமதித்து கண்டபடி பேசியதையும் மறந்து மன்னிக்க வேண்டுகிறேன்.

மைத்ரேயர் சொன்னார்:  அதன் பின் ப்ரும்மா அனுமதித்து எல்லா ப்ராம்மணர்களும் கலந்து கொண்டு யாகத்தை முடித்தனர்.  பாதியில் நிறுத்தியதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொண்டனர். சங்கரனின் தண்டனையாக பெற்ற ஆட்டு தலையுடனேயே தக்ஷ பிரஜாபதி இருந்தார். விஷ்ணு பகவான், தன் கருட வாகனத்தில் வந்து பாகத்தை ஏற்றுக் கோண்டார்.  வழக்கம் போல சங்க, சக்ர, கதா தாரியாக, வனமாலை, கௌஸ்துபம்  முதலிய ஆபரணங்களுடனும் வந்தார்.  அனைவரும் அவரை வரவேற்று விழுந்து வணங்கினர். அவருடைய தேஜஸால் வாயடைத்து கூப்பிய கரங்களுடனும் அவரை பார்த்தபடியே திகைத்து நின்றனர். தக்ஷன் தன் சுய உணர்வை பெற்று துதி செய்தான்.  சபையில் இருந்த மற்றவர்களும் உன் சரணம் தான் எங்களை காப்பாற்றி வருகிறது  எங்கள், பிழைகளை பொறுத்தருள வேண்டும் என்று பணிந்து வணங்கினர்.

ப்ருகு சொன்னார்.  இதுவும் உன்  மாயையே.  எங்கள் அறிவை மறைத்து, திரை போட்டது போல  இருட்டில் தூங்குவது போல உன்னை நினைக்காமலும், உன் தத்வங்களை உணராமலும் இருந்து விட்டோம்.  பகவானே, பொறுத்தருள வேண்டும்.  வணங்குகிறோம்,

ப்ரும்மா சொன்னார்: நீ முக்குணங்களுக்கும் அப்பாற் பட்டவன். சாதாரண ஜீவன்களிடம் பேத பாவம் பார்ப்பதில்லை.  ஞானி என்றோ, செல்வந்தன் என்றோ, குணமுடையவன் என்றோ உன்னை நீ அண்டியவர்களை எடை போடுவதில்லை.  உனக்குத் தெரியும்.

இந்திரன் சொன்னான்: அச்யுதா! இது கூட உன் லீலையே.  மனதை ஆளத் தெரிந்தவர்களுக்கு  ஆனந்தரூபன், விஸ்வ பாவனன்  அதே சமயம், உன் அஷ்ட புஜங்களிலும்  புத்தியின்றி த்வேஷம் பாராட்டுபவர்களுக்கு எச்சரிக்கை விடுவது போலவே ஆயுதங்கள் தரித்திருக்கின்றன.

மனைவிமார் சொன்னார்கள்: இந்த யாகம் என்பது யாரால் உண்டாக்கப் பட்டது?   நல்ல காலம், பசுபதியின் கோபத்திலிருந்து தப்பினோம். இந்த யாகசாலை பலரும் விழுந்து அழுது அபவித்ரமாகி விட்டது.  தயாளுவான நீ  உன் அருள் பார்வையால் புனிதமாக்கு. நீயே  தானே யக்ஞாத்மா

ரிஷிகள் சொன்னார்கள்: பகவன், உன் செயலை நாங்கள் கணிக்கவா முடியும்?  உன் மனம் போல் செய்கிறாய். செல்வம் வேண்டும் என்று தனியாக லக்ஷ்மி தேவியை வேண்டுகிறோம், அவளோ உன்னை  பின் தொடர்ந்து தான் வருகிறாள்.

சித்தர்கள் சொன்னார்கள்: உன் கதையை அம்ருதமாக நினைத்து பருகி,  மத யானை போல மனதை அடக்க முடியாதவர்கள் ஆகி விட்டார்கள்.  க்லேசம் என்ற தாவாக்னி அவர்களை தகிக்கிறது. தாகம் என்று கதாம்ருதம் என்ற குளத்தில் இறங்கியவர்கள் தவிக்கிறார்கள். வெளி வர முடியவில்லை. ப்ரும்ம ஞானம் உள்ளவர்களால் அது முடிகிறது. எங்களால் முடியவில்லை.

யாகத்தின் யஜமானர்கள் சொன்னார்கள்:  ஸ்ரீனிவாசா! உனக்கு ஸ்வாகதம்.  உன் காந்தாவான ஸ்ரீ யுடன் எங்களை காப்பாற்று.   நீங்கள் இல்லாமல் இந்த யாகம் சோபிக்கவில்லை, நீங்கள் தான் தலைவர். தலை இல்லாத மனிதன் எப்படி இருப்பான்?

லோக பாலர்கள் சொன்னார்கள்: உங்களுக்கு தெரியாததா? நேர் எதிரில் பார்த்தால் தானா, உங்கள் உள்மனம் காணாததா?  உங்கள் மாயையே. நீங்களே ஆறு, எட்டு என்று உலகை இயக்கும்  பூதங்களுடன் விளையாடுகிறீர்கள்.

யோகேஸ்வரர்கள் சொன்னார்கள்:  ப்ரபோ! நாங்கள் வேறு யாரிடம் போய் கேட்போம். எங்களை வேறாக எண்ணாமல், பக்தியை தவிர வேறு எதுவும் தெரியாத எங்களுக்கும் அனுக்ரஹம் செய்ய வேண்டும்.

ப்ரும்மா சொன்னார்: வணங்குகிறேன்.  சத்வ குணமே ப்ரதானமாக இருப்பவர், தர்மம் முதலானவற்றை தன்னிடம் வைத்திருப்பவர், நிர்குணன், இவரைப் போல மற்றொருவரை நானறியேன்.

அக்னி சொன்னார்:எவருடைய தேஜசால்  ஆஜ்யத்தில் முக்கிய  ஹவ்யம் என்பதை நான் கொண்டு செல்கிறேனோ, அவர் ஐந்து விதமான யாகங்களின் ஐந்து விதமான பரிமாணங்களுக்கு  அதிகாரி. அந்த யக்ஞ பூதமானவரை வணங்குகிறேன்.

தேவர்கள் சொன்னார்கள்: முன்பு கல்பம் அபாயத்தில் இருந்த சமயம், தன் வயிற்றில் அனைத்தையும் வைத்துக் கொண்டு நீங்கள் தான் தண்ணீரில், பாம்பு படுக்கையில் கிடந்தீர்கள். பரம புருஷன் நீங்களே. சித்தர்களின் ஹ்ருதயத்தில் பலவிதமாக அத்யாத்ம விசாரங்களை செய்வார்கள். அதே பரம புருஷன் இன்று எங்கள் கண்களுக்கு எதிரில் வந்து நிற்கிறான். அடியாட்கள் நாங்கள், பகவானே,   உங்கள் ஏவலர்களாக எங்களை பாருங்கள்.

கந்தர்வர்கள், வித்யாதரர்கள், ப்ராம்மணர்கள், அனைவரும்  வரிசையாக வந்து வணங்கி துதி செய்தார்கள். பகவானும் தக்ஷனைப் பார்த்து,  நானே ப்ரும்மா,  பரமசிவனும் நானே. உலகம் தோன்ற காரணமாக இருந்தவன். அத்யாத்மேஸ்வரன், – பிராணிகளின் உள் ஆத்மாவாக அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பவன், எனக்கு என்று எதுவும் விசேஷமாக இல்லை.

என் மாயையால், நான் முக்குணங்களைக் கொண்டு இந்த ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் என்ற செயல்களை செய்கிறேன்.  அதற்கு தகுந்தாற் போல என் பெயரும் அடையாளமும் மாறும். அதனால் ப்ரும்மா என்ற அத்வைதமான ஒன்றை, ப்ரும்ம,ருத்ரன்,விஷ்ணு என்று பேதப் படுத்தி அறிகிறார்கள். அது எப்படி இருக்கிறது என்றால், மனிதன் தன் தலையிலிருந்து கால் வரை பேத புத்தியோடு பார்ப்பது போலத் தான்.  எங்களுக்குள் பேதம் இல்லை.  உயிரினங்களில் ஆத்மாவாக இருந்து ரக்ஷிப்பது எங்கள் செயல். ருத்ரனுக்கு அவருக்கு உரிய பாகத்தை கொடுங்கள். யாக கார்யம் முடிந்தவுடன், அவப்ருத ஸ்னானம் செய்து ருத்விக்குகளை கௌரவியுங்கள்.  போகும் முன் பொதுவாக தர்மம்  என்பதை கடைபிடியுங்கள், என்று சொல்லி சென்று விட்டனர்.

இப்படித்தான் தாக்ஷாயணி தன் பழைய உடலை விட்டாலும், ஈஸ்வரனையே பதியாக அடைய வேண்டும் என்று  ஹிமவானின் புத்ரியாக மேனா என்பவளிடம் பிறந்தாள் என்பது வரலாறு.  அதே தியானமாக இருந்தாள் என்பர், அவளைப் பொறுத்தவரை அவள் கணவன்  என்றுமே அவளைப் பிரியாதவன்.,  .

பகவான் சம்பு செய்ததையும்,   தக்ஷ யாகத்தில் நடந்த  விஷயங்களையும் சிஷ்யரான  உத்தவரிடமும் என் தந்தை கேட்டு எனக்குச் சொன்னார். இதை பக்தியுடன் கேட்பவர் நற்கதியடைவர் என்றும் சொன்னார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் ஏழாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -60)

 அத்யாயம்8

மைத்ரேயர் சொன்னார்:  சனகர்களும், நாரதரும்  இல்லறத்தில் ஈடுபாடு இல்லாததால் மணம்  செய்து கொள்ளவில்லை.  இவர்களும் ப்ரும்மாவின் புத்திரர்களே.  ஞான மார்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள். அதனால் அவர்களை விடுவோம், அடுத்த வம்சத்தைப் பற்றிச் சொல்கிறேன்.

ப்ரியவ்ரத, உத்தானபாதன் என்பவர்கள், ஸ்வாயம்புவ மனுவின் புத்திரர்கள்.  இந்த ஸ்வயம்புவ மனு ஹரியின் ஓர் அம்சத்தைக் கொண்டவர்.  சதரூபா  அவர் மனைவி. அவர்களின் மகன்கள்.  அரசர்களாக இருந்தனர். உத்தான பாதருக்கு இரு மனைவிகள், சுருசி, சுநீதி என்று.   இருவரில் சுருசி அரசனுக்கு பிரியமானவள், சுநீதியின் மகன் துருவன்.   ஒரு சமயம் சுருசியின் மகன் உத்தமனை  மடியில் வைத்து கொஞ்சிக்  கொண்டிருந்த அரசன், துருவனிடம் அலட்சியமாக இருந்தார்.  தானும் தந்தை மடியில் அமர விரும்பிய துருவனை சுருசி தடுத்தாள்.  அரசன் எதிரிலேயே அவனை கண்டித்தாள். மகனே உனக்கு அரசனின் மடியில் அமர தகுதி இல்லை. என் வயிற்றில் பிறந்த மகன் தான் அரசனுக்கு வாரிசு, நீ என் குழந்தை  அல்லவே, இதுபோல அனாவசிய ஆசைகள் படாதே. தவம் செய்து பகவானை வேண்டி என் மகனாக பிறந்து வா. அரசனின் அன்புக்கு பாத்திரமாகி, அரியணையில் அமரலாம் என்று நிஷ்டூரமாகச் சொன்னாள்.

தாயின் சபத்னி- இவ்வளவு கொடூரமாக பேசியவுடன்  தடியால் அடிபட்ட  நாகம் போல,  மனம் வாடி சுருண்டு தந்தை பார்த்துக்  கொண்டிருக்கையிலேயே அந்த இடத்தை விட்டகன்று, தாயிடம் சென்றான். உதடுகள் துடிக்க, பெருமூச்சு விட்டபடி அழும் குழந்தையை அனைத்து மடியில் இருத்தி சுநீதி என்ன நடந்தது என்று கேட்டறிந்தாள்.   சக்களத்தியின் நடத்தையால் மனம் உடைந்து அழுதாள். தன்னை சமாளித்துக் கொண்டு, தவிர்க்க முடியாத இடர் இது என்று அறிந்து, குழந்தாய், அழாதே. மற்றவர்களை துன்புறுத்தி யாரும் வாழ்ந்ததில்லை.  சுருசி சொன்னது ஒரு விதத்தில் சரியே.   அரசனின் அன்பை பெறாத  மனைவி நான்.  என் வயிற்றில் பிறந்து நான் பாலூட்டி வளர்த்ததால் தானே உனக்கு இந்த அவமானம்.  உத்தமனைப்  போல மதிப்புடன் வாழ விரும்பினால்  அதோக்ஷஜன்- பகவானை ஆராதித்து வா. கோப தாபங்கள், அசூயை இல்லாமல் அவருடைய பாத பத்மங்களை ஆராதித்து வா. அவர் அருளால் உத்தமமான குணங்களையும்  உயர்வான பதவிகளையும் அடைவாய். வருத்தப் படாதே.  உனக்கும் மனு தான்  பிதாமஹர் (தந்தையின் தந்தை).  அவரும் முழு மனதோடு பகவானை ஆராதித்து, யாகங்கள் செய்து, பூலோகத்தில் மற்றவர்கள் நினைத்து கூட பார்க்க முடியாத நன்மைகளை அடைந்தார்.  அந்த பகவானையே துதி மகனே.  அவர் தன் பக்தர்களிடம் வாத்சல்யம் உடையவர்.  மோக்ஷம் விரும்பும் சாதகர்களும் அவரை வணங்கி வேண்டியதை பெறுவர். வேறு எதையும் யோசிக்காதே. இவருடைய சரணங்களே துணை என்று ஏகமனதாக தியானம் செய்.  அவருடைய கண்கள் பத்மம் போன்று இருக்கும். அதுவே உன் துக்கத்தை போக்கும். கையில் தாமரை பூவை வைத்துக் கொண்டிருப்பவர், அவருடைய பத்னியான ஸ்ரீயுடன் இருப்பார்.

இவ்வாறு தாயாரால் சமாதானமாக சொன்ன வார்த்தைகளின் பொருளை சிறுவன் துருவன் உணர்ந்தான்.  தன்னைத் தானே அறிந்து கொள்ள, தந்தையின் ஊரை விட்டே விலகிச் சென்றான்.

நாரதருக்கு இந்த சிறுவன் வீட்டைத் துறந்து சென்றது தெரிய வந்ததும் அவனிடம் வந்தார்.   துருவனை அணைத்து தலையில் தூய்மையாக்கும் நீரை தெளித்து உபதேசம் செய்தார்.  அஹோ! என்ன தன்மானம் இந்த அரச குமாரனுக்கு.  ஒரு சொல் பொறுக்க முடியாத ரோஷம்.பாலன் இவன். இவனுக்கு மாற்றாந்தாயின் அவச் சொல் மனதை காயப் படுத்தி விட்டது.

புத்ரக! குழந்தாய், இனி மானமோ, அவமானமோ உன்னை வாட்டாது. விளையாட்டுச் சிறுவன்,  நீ. வேற்றுமைகள் இருக்கலாம், ஆனால் அதனால் துயரப் படக் கூடாது.  தன் வினையை அனுசரித்து மனிதர்கள் உலகில் மோகத்தினால், வேறுபடுகிறார்கள்.  கிடைத்ததில்  திருப்தி அடைவது தான் புத்திசாலித்தனம்.   உன் தாய் சொன்னது சரியே. அவள் உபதேசித்தபடியே யோக சாதனைகளைச் செய்.  மனிதர்களுக்கு அந்த பரபுருஷனின் ப்ரசாதம் தான் முக்யம் என்று சொல்வேன்.   பிறர் உதவியின்றி, தானே தீவிரமாக தவம் செய்து,  யோகசமாதிகளின் மூலம் தன்னறிவை வளர்த்துக் கொண்டு, தேடித் தேடி தான் கண்டு கொள்ள வேண்டும். அதனால்,  இந்த அல்பமான ஆசையை விட்டு விலகி வா. அதில் எதுவும் உயர்வு இல்லை. உனக்கு கிடைத்த வாய்ப்பு, முயற்சி செய்.  காலம் வரும் பொழுது நன்மைகளை அடைவாய்.   யாருக்கு எது என்பது, தெய்வத்தின் கையில், சுகமோ, துக்கமோ, மனிதர்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும்.  அதற்காக பல பிறவிகள் எடுக்க வேண்டி வந்தாலும் வரலாம்.  தாமசமான உடல் சம்பந்தமான ஆசையை விடு. ஆத்மாவின் நல்கதியைப் பற்றி சிந்தனை செய்.  நல்ல குணங்களை வளர்த்துக் கொள். அதனால் உனக்கும் மகிழ்ச்சி.  குணம் இல்லாதவர்களிடம் நட்பும் தேவையில்லை.  சமமானவர்களிடம் தேடிச் சென்று நட்பாக இரு. தாபம் உன்னை வாட்டாது.  

துருவன் சொன்னான்: தங்கள்  அன்பான உபதேசத்தால் சுகம் துக்கம் இரண்டையும் சமமாக பாவிக்கும்  शमम्   – மனப்பாங்கு- என்பதை அடைந்தேன்.  எங்களைப் போன்றவர்கள் தாங்களாக அறிந்து கொள்வது இயலாது. ஆயினும் எனக்கு இன்னமும் வினயம் என்பது வரவில்லை. அவ்வளவு கோபம் அடைவானேன். சுருசி சொன்னதும் ஊசி குத்தினாற் போல என் இதயத்தில் வலிப்பானேன். வார்த்தை தானே, ஏதோ பாணத்தால் அடிபட்டது போல ஏன் வருந்தினேன்.  இந்த லௌகிகமான சுகம் வேண்டாம். மூவுலகிலும் உத்க்ருஷ்டமான பதவியைத் தரும், முனிவர்களின் சாதுவான வழிகளைச் சொல்லுங்கள். என் தந்தையோ, அவரை சார்ந்தவர்களோ இதுவரை அறியாத வழி அது. அதை சொல்லுங்கள் ப்ரும்மன்.! நீங்கள் நிச்சயம் பகவானின் அங்கத்தில் பிறந்தவர். வீணையை மீட்டிக் கொண்டு உலக நன்மைக்காக சூரியன் உலகை சுற்றுவது போல போல சுற்றி வருகிறீர்கள்.   (ப்ரதி பலன் கருதாமல்)

நாரதர் விவரமாக பதில் சொன்னார்.  உன் தாய் சொன்ன வழி தான் உனக்கு நன்மை தரும். பகவான் வாசுதேவனை நம்பிக்கையுடன் வணங்கு,  தனக்கு தர்மம், அர்த்தம், காமம்,மோக்ஷம் – இந்த நாலும் தான் உலகில் மக்களுக்கு வேண்டியவை, என்று விரும்புபவர் ஹரியின் பத சேவையை மனதார செய்ய வேண்டும். அதனால், யமுனைக் கரையில் மதுவனம் என்ற இடம் உள்ளது. அந்த இடத்தில் ஹரி நித்யவாசம் செய்கிறார். அங்கு ஓடும் நதியின் பெயர் காலிந்தீ. அதில்  மூழ்கி ஸ்னானம் செய். உனக்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்து கொண்டு நீயே ஒரு ஆசனத்தை தயார் செய்து கொள்.  மூன்று முறை ப்ராணாயாமம்  செய்து  ப்ராண, இந்த்ரிய, மனோ பலம் இவைகளைக் கூட்டிக் கொள். மெள்ள தியானம் செய். குருவுக்கு குருவானவர், அவர் எப்படி இருப்பார், பார்த்ததில்லையே என்கிறாயா?  கருணை ததும்பும் முகம், கண்களும் முகமும், காண்பவர்  மனம் மகிழும் படி எப்பொழுதும் ப்ரசன்னமாகவே இருக்கும்.   அழகான நாசி, சீரான புருவங்கள், அழகிய தலை, தெய்வீகமான அழகு. கச்சிதமான வாலிப உடல் வாகு,  கண்களும் உதடுகளும் அருணனின் கிரணங்கள் போல சிவந்திருக்கும், கருணையே உருவானவர், தன்னை அண்டியவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்,

ஸ்ரீவத்ஸம் என்ற மணியை அணிந்திருப்பார், மேகம் போன்ற நீல நிறத்தினன், வன மாலையை அணிந்திருப்பார்,  கைகளில் சங்க சக்ர கதா பத்மம் இவைகளை வைத்திருப்பார்,  கேயுரம், வலயங்கள் அணிந்த நான்கு புஜங்கள். கிரீடமும் குண்டலமும், கௌஸ்துப மணி அலங்கரிக்கும் கழுத்தும், பீதாம்பரமும், இடுப்பில் காஞ்சி என்ற ஆபரணமும், நூபுரம் எனும் காலணிகளும்,  சாந்தமான காணத் தகுந்த உருவம் மனதுக்கும் கண்களுக்கும் இதமான உருவம் இப்படி தியானம் செய்து கொள். அவருடைய கால் நகங்களில் உயர் மணி போன்ற ஒளி காலில் வணங்கி நிற்பவர்களை ஆசீர்வதிப்பது போல இருக்கும். ஒவ்வொரு அங்கமாக மனதில் பதிந்து கொண்டு ஒரே உருவமாக மென் முறுவலோடு இருப்பவராக தியானம் செய். இப்படி பகவானின் உருவத்தை நினைத்து நினைத்து அவனையன்றி வேறு எதுவுமே மனதில் இல்லாமல் செய்து கொள்.  சுபத்ரம்- மிகவும் சுபமான உருவம்- பரம ஞானி, எங்கும் நிறைந்தவர் நிவ்ருத்தி என்ற மேலான மார்கத்திற்கு  இட்டுச் செல்பவர்  இவரை ஜபம் செய்.  ஏழு இரவுகள் ஜபம் பண்ணி மனிதர்கள் வான வெளியில் செல்லும் தேவ கணங்களை காணுவர். அந்த மந்திரம் “ஓம் நமோ பகவதே வாசுதேவாய” இதை ஜபித்து வா. இந்த மந்திரத்தை உருவேற்றிக் கொண்டு, பல விதமான பொருள்களை அர்ப்பணம் செய். கிடைத்ததை,   சுத்தமான நீர்,  பூ மாலைகள், காட்டில் கிடைக்கும் பழங்கள், கிழங்குகள், பச்சை காய்கறிகள், சில தளிர்கள்,  துளசி தளம் இவைகளால் அர்ச்சனை செய்.  பூமியில் அல்லது ஜலத்தில் அர்ச்சனையை செய்யலாம். மிதமாக உண்டு சாந்தமாக ஜபம் செய். தன் விருப்பம் போல பூமியில் அவதாரம் செய்பவர், ஏதோ ஒரு அவதாரத்தை நினைத்துக் கொள். பரிசாரகம் என்ற அர்க்யம் தருதல், மலர் தூவி அர்ச்சனை செய்வது இப்படி உடலால் செய்வதை மானசிகமாகவும் செய்யலாம்.  மந்திரத்தை சொல்லி மனதினுள் உருவாக்கிக் கொண்ட பகவத் ஸ்வரூபத்திற்கு மானசிகமாக செய்யலாம். உடல், வாக்கு, மனம் இவற்றால் பக்தி பூர்வமாக செய்வது உகந்தது.

மனிதர்கள் மமதையில்லாமல், உணர்ந்து செய்யும் பூஜைகள், அவர்களுக்கு எல்லா நன்மைகளையும் செய்யும். வேண்டியதை வேண்டியவாறு கொடுக்கும்.  மனிதர்கள், காம,அர்த்த,ஞானம், மோக்ஷம் -இதில் எதை விரும்பினாலும் இந்த பக்தியால் அடைவர்கள். மற்றொரு வழி, விரக்தி-துறவு.  நிரந்தரமாக பாவ பூர்வமாக செய்யும் மானசிக பூஜையால் முக்தியடைவர்.  துருவனும் அவரை வணங்கி மதுவனம் சென்றான். ஸ்ரீஹரி வாழ்ந்து  கால் தடம் பதிந்த இடம் என்பதால் பாவனமான இடம்.

அவன் தபோ வனம் சென்றபின் நாரதர் அரசரை சந்தித்து அவர் மரியாதையுடன் அளித்த சுகமான ஆசனத்தில் அமர்ந்தார். ராஜன்! ஏன் முகன் வாடியிருக்கிறது? என்ன வருத்தம்? அரச காரியங்களில் எதுவும் கஷ்டம் இல்லையே, செல்வமோ, தர்மமோ, காமமோ குறைவின்றி உள்ளனவா ?  அரசன் சொன்னான்: ப்ரும்மன்! என் மகன், சிறுவன்,என் மனைவி   எதோ சொன்னாள் என்பதற்காக என் எதிரிலேயே, வீட்டைத் துறந்து சென்று விட்டான்.  ஐந்து வயது பாலகன்.  அவன் தாயும் எங்கோ சென்று விட்டாள்.  அனாதையாக காட்டில் உடல் ஓய்ந்து,பசியுடன் களைத்து தூங்கும் பொழுது ஓனாய்கள் தின்று விடாமல் இருக்க வேண்டும் அவனுடைய சாந்தமான முகம், வருந்தி, வாடியதே,  கண் முன்னால் நிற்கிறது.  அஹோ! என்ன துர்பாக்கியம், மனைவி சொன்னால் என்ன, நான் ஏன் செயலற்று நின்றிருக்க வேண்டும். பாலகன்  என் மடியில் அமர வேண்டும் என்பதைத் தானே கேட்டான், ஏன் வாளா இருந்தேன், வடி கட்டிய மூடன் நான்.” என்று சொல்லி கதறிய அரசனைப் பார்த்து நாரதர் சொன்னார்.  நடந்ததை நினைத்து  வருந்தாதே.  உன் மகன் சாதாரண பிறவி இல்லை. பகவானின் அருள் பெற்றவன். உலகில் பெரும் புகழை அடைவான். அவனுடைய ப்ரபாவம் தெரியாமல் மனம் வருந்துகிறாய். உன் மகன் மிக கடினமான செயலைச் செய்து முடித்து, சீக்கிரமே லோக பாலர்களுக்கும் தலைவனாக உயர்வான்.  உன் புகழையும் பரப்புவான்.

தேவ ரிஷி நாரதர் இவ்வாறு சொல்லவும், அரசன்  சமாதானமானாலும், அரச வாழ்க்கையை துறந்து மகனையே அனவரதமும் நினைத்து வருந்தியபடி இருந்தார்.  நாரதர் அவருக்கும் உபதேசம் செய்து, அரசன் கடமையை விடக் கூடாது , நீயும் விரதங்கள் அனுசரி, பூஜைகளைச் செய் என்றார். 

வனத்தில் துருவன் அவர் சொன்னபடியே,  மூன்று இரவுகள் முடிவில், நாவல் பழம் அல்லது அந்த நிறத்து பதரி – இலந்தை பழம் – மட்டும் உண்டு ஒரு மாதம் விரதம் இருந்தான். அடுத்த மாதம், ஆறு ஆறு இரவுகளின் முடிவில் புல், இலைகள் மட்டும் உண்டு ப்ரபுவை நினைத்து தியானம் செய்தான். மூன்றாவது மாதம் ஒன்பது இரவுகளின் முடிவில் நீரை மட்டும் அருந்தினான்.  அதன் பின் சமாதியில் ஆழ்ந்து விட்டான்.  நாலாவது மாதம் பன்னிரண்டு நாட்களுக்கு ஒருமுறை, வாயுவை மட்டுமே உண்பவனாக ஆனான்.  தன் சுவாச கதிகளை தன் வயப் படுத்திக் கொண்டு தேவனை ஆராதித்தான். ஐந்தாவது மாதம் அந்த சுவாச பயிற்சியால், கட்டையாக ஸ்தாணுவை போல், அசையாது ஒரு காலில் நின்றான்.  மனதின் அலைச்சல்களை முற்றிலும் நிறுத்தி பகவானுடைய ரூபத்தை நாரதர் சொன்னபடியே நினைத்து, வெளி உலகில் எதையுமே காணாதவன் ஆனான். மஹத் என்ற இயற்கைகளுக்கும் ஆதாரமான புருஷேஸ்வரன், ப்ரும்ம ஸ்வரூபம் மட்டுமே அவன் மனதில் என்று ஆன சமயம் உலகமே நடுங்கியது.

அந்த அரசகுமாரன் ஒரு காலில் நின்ற சமயம், அவன் கட்டை விரல் பட்ட பூமி, திசைகளைத் தாங்கும்  யானைகளின் அரசன் நடனமாடுவது போல இடதும் வலதுமாக ஆடியது.  தன் உயிர் மூச்சையே தடுத்து நிறுத்தி, விஸ்வாத்மன் என்ற பகவானை தியானம் செய்த பொழுது, மூவுலகிலும் உயிரினங்கள் தாங்க முடியாத  மூச்சு திணறலை அனுபவித்தனர். லோக பாலர்கள் ஸ்ரீ ஹரியிடம் ஓடினர்.

தேவர்கள்”   பகவன்!  நாங்கள் மூச்சு விட முடியாமல் தவிக்கிறோம்.  சராசரத்திலும் ப்ராணிகளின் ப்ராணன் தடைபடுகிறது.  எங்களை காப்பாற்று.  இந்த கஷ்டம் தாங்க முடியவில்லை.  அடைக்கலம் நீயே” என்றனர்.

பகவான் சொன்னார்: பயப்பட வேண்டாம்.  கடுமையான விரதங்களுடன் பாலன் ஒருவன் தவம் செய்கிறான். நான் கவனிக்கிறேன். நீங்கள் உங்கள் இருப்பிடம் திரும்பிச் செல்லுங்கள்.  உத்தான பாதரின் மகன், ப்ராணனை நிறுத்தி தவத்தில் இருக்கிறான். என்னையடையவே விரும்பிகிறான்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் எட்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் – 82)

அத்யாயம்-9

மைத்ரேயர் சொன்னார்:  பயம் விலகி லோகபாலர்கள் வணங்கி விடை பெற்றனர். பகவானும் கருட வாகனத்தில் மது வனம் சென்றார்.  மனதினுள் யோக நிலயில் மின்னல் போல ஒளி வீசிக் கொண்டிருந்த பகவத் ஸ்வரூபம் மறைந்தது போல இருக்க சட்டென்று கண் விழித்த துருவன் எதிரில் அவர் நேரில் தெரியக் கண்டான்.  திடுமென எதிரில் வந்து நின்றவரை திகைப்புடன் பார்த்தவன், கீழே விழுந்து வணங்கினான். என்ன செய்வது தெரியவில்லை. கண்களால் பருகுபவன் போல பார்த்தான். புஜங்களால் அணைத்து உச்சி முகர்வது போல இருந்தது. அப்படி திகைத்து நின்றவனின் கன்னத்தில் ப்ரும்ம மயமான சங்கால் தடவினார். அதன் மூலம் வாய் பேசும் சக்தியை திரும்ப பெற்றவன் போலவும், தெய்வீகமான  பர தத்வத்தை அறிந்தவன் போலவும், பக்தி பாவம் நிரம்பப் பெற்றவன் போலவும்,  தன்னுணர்வுடன் பேசலானான்.

துருவன் சொன்னான்: நமோ பகவதே புருஷாய துப்யம் – பரம புருஷனான பகவானே, உனக்கு நமஸ்காரம். என்னுள் நிறைந்து உறங்கிக் கொண்டிருந்த என் வாக்கு -என் பேசும் சக்தியை திருப்பிக் கொடுத்தாய்.   உன் பெருந்தன்மையால், அனைத்து சக்திகளையும் தர வல்லவன் நீ. என் மற்ற அவயவங்களையும் கை கால்கள், காது, சருமம், மற்றும் பிராணங்களையும் தட்டி எழுப்பும் பரம புருஷனான பகவானே உனக்கு நமஸ்காரம்.

உன் ஆத்ம சக்தியால், மாயை என்பதையும், முக்குணங்களையும் மஹத் முதலானவைகளையும் ஸ்ருஷ்டி   செய்த பின் அதனுள் நீயே ப்ரவேசித்தாய். 

ஆர்த்த பந்தோ! வருந்தும் அடியார்களுக்கு உடனே உதவ விரைந்து வரும் உற்ற உறவினனே!-   உன் அன்பர்கள் யாருமே கஷ்டம் என்று தவிக்க மாட்டார்கள்.  நீ கொடுத்த அறிவு, அதனால் உலகம்  தூங்கி எழுந்தவன் போல எழுந்தது.  உன் பாதம் தான் சரணம் என்பதை யார் தான் மறக்க முடியும். அப்படி மறந்தவன்  யாராவது இருந்தாலும் அதுவும் உன் மாயையே. கல்ப தருவான உன்னிடம் தவிட்டை யாசிப்பது போல உலக இன்பத்தை யாசிக்கிறார்கள். உன்னிடம் என் பக்தி பெருகட்டும். மஹாத்மாக்கள் சங்கத்தில் நானும் இருக்க வேண்டும்.  சம்சார பந்தம் என்னை வாட்டாமல் இருக்கட்டும். உன்னை பஜனை செய்து பாடுபவர்கள் மத்தியில் நானும் இருக்க வேண்டும்.  மனிதன் அறிவை பெறவே உன்னை வணங்குகிறான்.  உன் பாத த்யானத்தாலோ. உன் அடியார்களுடன் இருந்து அவர்கள் சொல்லும் உன் சரித்திரத்தைக் கேட்டோ, பெறுவது  ப்ரும்ம லோகத்தில் கூட கிடைக்காது. என்னுள் உன்னிடம் பக்தி பெருகட்டும்.  உன் பக்தர்கள் போலவே நானும் குடும்பம், புத்ர தார எனும் சம்சார சூழலில் மூழ்காமல் இருக்க வேண்டும். கல்ப முடிவில் உலகம் முழுவதும் உன் வயிற்றில் வைத்து காப்பாற்றி,  அனந்த சயனத்தில் உறங்கினாய்.  உன் நாபியிலிருந்து பொன்மயமான பத்மம் மூலம் உலகை தோற்றுவித்தாய். அப்படிப்பட்ட  உனக்கு நமஸ்காரம். நீ பரிசுத்தமான நித்ய முக்தன். உயிரினங்களில் உள்ளும் மறைந்து இருக்கும் ஆத்மா.  அதியக்ஞன்- யக்ஞ புருஷன் என்று உன்னைச் சொல்வார்கள்.  நீ தனித்து தெரிகிறாய். உன்னிடம் த்வேஷம் பாராட்டுபவர் தோற்பர்.  வித்யை , பலவிதமான சக்திகள், வரிசை கிரமாக உன்னிடம் தோன்றியவையே. அந்த ப்ரும்ம, விஸ்வபவன், ஏகனாக- ஒருவனாகவே இருக்கும், அனந்தன்- தோற்றம் – முடிவு என்ற சுழற்சி இல்லாத ஆனந்தமே உருவான உன்னை வணங்குகிறேன்.

என்று இவ்வாறு துதி செய்தவனைப் பார்த்து சந்தோஷமாக பகவான் பதில் சொன்னார். “அரச குமாரனே! நீ எதை விரும்பி தவம் செய்ய வந்தாய் என்பதை நான் அறிவேன்.   அரிதான வேறு ஒன்றைத் தருகிறேன்.  யாராலும் எட்ட முடியாத உயர் பதவி. அதை தருகிறேன். க்ரஹ நக்ஷத்திர ஜோதிகளின் மத்தியில், அசையாது நிற்கும் துருவம் என்ற நக்ஷத்திரமாக ஒளி விசிக் கொண்டு இருப்பாய். அச்சில் சுழலும் சக்கரம் போல நக்ஷத்திர க்ரஹ மண்டலங்கள் சுழலுகின்றன. ஒரு சிலர் அதைத் தாண்டி ஸ்திரமாக இருக்கின்றனர்.  தர்மம், அக்னி, கஸ்யபர், சுக்ரன், முனிகள், இவர்கள்  அந்த வட்டத்தில் நித்யமாக வசிக்கின்றனர்.  தென்திசை நோக்கி நக்ஷத்திரங்களுடன் சேர்ந்து செல்கின்றனர்.

உன் தந்தை ராஜ்யத்தை உன்னிடம் ராஜ்யத்தைக் கொடுத்துவிட்டு வனம் செல்வார்.  நீண்ட காலம் நீ ராஜ்யம் செய்வாய். உன் சகோதரன் உத்தமன் அகால மரணம் அடைவான், அவன் தாயும் காட்டுத் தீயில் மாய்வாள். அது தவிர்க்க முடியாதது. அவர்கள் வினைப் பயன்.  யாகங்கள் செய்து நாட்டை சுபிக்ஷமாக வைத்திருப்பாய். பின் சங்கல்பம் செய்து  தான தர்மங்கள் நிறைய செய்வாய்.  சாதாரண மக்களுக்கு பல ஜன்மங்களில் அடைவதை நீ இந்த ஜன்மத்திலேயே பூர்த்தி செய்து என்னை அடைவாய். அதன் பின் பிறப்பற்ற நிலையில் த்ருவ நக்ஷத்திரமாக வானில் தெரிவாய், என்று சொன்ன பகவான்  தன் கருட வாகனத்தோடு திடுமென மறைந்தார்.

துருவனும் அவ்வாறே நகரம் திரும்பி, ராஜ்யத்தை ஏற்று, நல்லபடியாக வாழ்ந்து, பக்தனாகவே இருந்து மறைந்தான். விதுரர் ஆச்சர்யப் பட்டார்.  அரியதான பதவியை அடைந்தான் துருவன்.  கிடைத்த ராஜ்யத்தையும் பற்றின்றி ஏற்றான். எப்படி ஊரார் அவனை எதிர்கொண்டனர்.?

மைத்ரேயர் சொன்னார்: அது மட்டுமல்ல, மாற்றாந்தாயும், அவள் மகனும் அகால மரணமடைந்ததால், நல்ல கதி கிடைக்காமல் போகுமே என்றும் கவலைப் பட்டான்.  சனந்தன் முதலானோர், பல காலம் சமாதியில் இருந்து அடைந்ததை ஆறு மாதங்களில் அடைந்தேன்.   மந்த புத்தி நான்,  உன்னிடம் அல்பமாக எதையோ யாசித்தேன்.  என் மனதை கலைத்தது எது? நாரதர் சொன்னதை முழுவதுமாக என் மனம் அறியவில்லை போலும். இப்பொழுதும் சகோதரனின் கதியை நினைத்து வருந்துகிறேன். உயிர் போன பின் சிகித்சை செய்வது போல, இப்பொழுது ராஜ்யம் எனக்கு தருகிறாய். வேண்டாம். ஜகதாத்மாவான உன்னை ஸ்மரித்து ராஜ்யத்தையா கேட்பேன். தனம் இல்லாதவன் பகவானை நேரில் கண்ட பொழுதும் அல்பமான சிறு பொருளை யாசிப்பது போல.

மைத்ரேயர் சொன்னார்: துருவன் வனம் சென்றபின் அரசன் உத்தானபாதன் ராஜ்யத்திலோ, மற்ற சுக போகங்களிலோ நாட்டமில்லாதவனாக நாரதர் சொன்னபடி  ஏராளமாக தனம் தானம் செய்து விட்டு நம்பிக்கையான ப்ராம்மணர்களிடமும், மந்திரிகளிடமும் ராஜ்ய நிர்வாகத்தை ஒப்படைத்து விட்டு .குதிரையில் ஏறி, யாத்திரை கிளம்பினான். சங்க துந்துபி நாதங்கள், ப்ரும்ம கோஷம் இவைகளுடன் வழியனுப்பப் பட்டான். சுநீதியும், சுருசியும் கூட  தங்கள் நகைகளை அணிந்து உடன் சென்றனர். உபவனத்தின் அருகில் மகனைப் பார்த்து மகிழ்ந்தவராக, ரதத்திலிருந்து இறங்கி மகனை அணைத்து கதறினார். கடந்த சில நாட்களாக நாரதர் உபதேசித்த படி, விஷ்வக் சேனரை ஆராதித்து,வந்திருந்ததால் அவருடைய குணமும் மேன்மையடைந்திருந்தது. கண்ணீராலேயே மகனை அபிஷேகம் செய்தார்.  துருவனும் தந்தையை வணங்கி அவருடைய ஆசிகளை பெற்றான். தாய் மார்களையும் வணங்கி அவர்களுடன் நகரம் சென்றான். சுருசியும் தன் காலில் விழுந்து வணங்கிய துருவனை அணைத்து உச்சி முகர்ந்து நீண்ட ஆயுளுடன் ஆரோக்யமாக இரு என்று நாத்தழதழக்க வாழ்த்தினாள்.  உத்தமனும் சகோதரனை அன்புடன் அணைத்து வரவேற்றான். தாயார் சுநீதி புத்துயிர் பெற்றதாக உணர்ந்தாள். கண்களில் நீர் வழிய அவனை ஆசீர்வதித்தாள். மகனே, நீண்ட காலம்  சுகமாக இருப்பாய். அண்டியவரைக் காக்கும் பகவான் உனக்கு நல்லதையே செய்வார். ம்ருத்யுவை ஜயித்து வந்துள்ளாய், என்றாள். இவ்வாறு அனைவராலும் வரவேற்கப்பட்டு நகரம் வந்தான். பூர்ண கும்பமும், பலவிதமான மலர் மாலைகளாலும் நகரமும்,  அரண்மனை வாசலும்  அலங்கரிக்கப் பட்டிருந்தது.  வழியெங்கும் சந்தனம் தெளித்து,  மங்கள அக்ஷதைகள் வீசி,  பூவிதழ்களும், மங்களப் பொருட்களும் நிறைத்து பெண்கள் ஆரத்தி எடுத்து, அன்புடன் ஆசிகள் அளிக்க, பலவிதமான  வாத்ய இசைகள் முழங்க, மந்திர கோஷங்களுடனும் அரண்மனையில் நுழைந்தான்.  தந்தையின் வீட்டில் ராஜ போகமாக இருந்த பல சௌக்யங்களுடன் தேவன் போல நடத்தப் பட்டான். கடல் நுரை போன்ற படுக்கைகள், பொன் மயமான ஆசனங்கள், ஸ்படிகமும், மஹா மரகதமும், மணிகளின் ஒளி சிதற இருந்த மாளிகை. பெண் பணியாட்கள்  கூட மனம் கவரும் வண்ணம் ஆடை அணிகளுடன் இருந்தனர். அழகான உத்யான வனம். பறவைகளின் இனிய கூக்குரலும் ஜோடி ஜோடியாக தென்பட்ட பறவைகளும், மிருகங்களும்,கூடவே பறக்கும் வண்டின் ரீங்காரமும் ரம்யமாக இருந்த உபவனம். கிணறுகளும் அழகான படிக்கட்டுகளுடன், உத்பல, தாமரை மலர்களுடன், சக்ரவாஹம், சாரஸம் என்ற பறவைகளும்  நிரம்பி இருந்தன. உத்தானபாதர் ராஜரிஷி என்று அழைக்கப் பட்டார். தனயனுடை ப்ரபாவம் அவனே நடந்ததைச் சொல்லக் கேட்டு ஆச்சர்யம் அடைந்தார்.  வயதான காரணத்தாலும், பிரஜைகளும் சம்மதித்ததாலும்,, ப்ரஜைகளுக்கு இதற்குள் துருவனிடம் ஏற்பட்ட ஒட்டுதலாலும் துருவனை ராஜ பதவியில் அமர்த்தினார்.

தானும் வயதான காரணத்தால், அந்த நாளைய வழக்கப்படி வனம் சென்றார். 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் ஒன்பதாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் – 67)

அத்யாயம்-10

மைத்ரேயர் தொடர்ந்தார்: ப்ரஜாபதியின் மற்றொரு மகன் சிசுமாரன் என்பவருடைய மகள் ப்ரமி என்பவளை துருவன் மணந்தான்.  அவளிடம் கல்பன், வத்சரன் என்று மகன்கள். இலா என்ற வாயுவின் மகளிடம், புஷ்கலன் என்ற மகனும் ஒரு மகளுமாக அவன் சந்ததி வளர்ந்தது.   உத்தமன் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒரு சமயம் காட்டில் வேட்டையாடச் சென்றவன், ஒரு யக்ஷனால் கொல்லப் பட்டான். மகனைத் தேடிச் சென்ற சுருசியும் அதே போல மறைந்தாள். ( உத்தமனைத் தேடிச் சென்ற சமயம் தாவாக்னி எனும் காட்டுத் தீயில் விழுந்தாள் என்பர்)  சகோதரன் இறந்த செய்தி கேட்டு துருவன் யக்ஷனுடன் போரிடச் சென்றான்.  கிழக்கு நோக்கிச் சென்றவன் ருத்ரனின் பரிவாரங்கள் நடமாடிக் கொண்டிருப்பதைக் கண்டான். ஹிமயமலையின் அடிவாரத்தில் அழகான அலகா  நகரம்  தென்பட்டது.  தன் சங்கத்தை எடுத்து ஊதினான். அமைதியான அந்த இடத்தில் அந்த சங்கின் சப்தம் மிகப் பெரியதாக கேட்டதால் யக்ஷ ஸ்த்ரீகள் பயந்தனர்.  ஆயுதங்களோடு  யக்ஷ வீரர்கள் ஓடி வந்தனர்,  த்ருவன் போரைத் துவங்கினான். பெரும் பாலான யக்ஷ வீரர்கள் காயமடைந்தனர்.  இரு தரப்பிலும் ஆயுதங்கள் சத்தமும், சங்க நாதமும் அட்டஹாஸமாக நடந்த யுத்தம் திடுமென ஓசையின்றி அமைதியாகியது. துருவன், அவன்  சாரதி சித்ர ரதனுடன் எதிரில் யாருமே இல்லாத யுத்தகளத்தில் செய்வதறியாது திகைத்தான். அதன் பின் எங்கிருந்தோ மண்னை வாரியடிப்பது போலவும், சிவந்த மழைநீர் மழையாக பொழிவதே ரத்தமாகத் தெரிய, கல் மழை போலவும் விழவும்,  மாயா யுத்தம் செய்கிறார்கள் என்பது புரிந்தது.துருவனின் சேனை வீரர்கள் படு காயமடைந்தனர். துருவனும் இந்த தாக்குதலை எதிர்க்கத் தெரியாமல் திகைத்தான்.  அங்கு வந்த முனிவர்கள் துருவனிடம், சார்ங்க தன்வனான பகவானை வேண்டிக் கொள் என்றனர். அவர் தான் உன்னை காப்பாற்ற முடியும் என்றனர்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  பத்தாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -30 )

அத்யாயம்-11

ரிஷி முனிவர்கள் சொன்னபடி, துருவனும்,  தன் வில்லை எடுத்து,  பகவான் நாராயணனை நினைத்து, அவரால் தயாரிக்கப் பட்ட அஸ்திரத்தால் அடிக்கத் துவங்கும் முன்பே, யக்ஷர்களின் மாயா மறைந்தது. ஞானம் வந்தவுடன் சாதகனின் க்லேசங்கள் மறைவது போல மறைந்தன.  பொன் மயமான இறக்கைகளுடன் கல ஹம்ஸங்களில் வசிக்கும் குளத்திலிருந்து பக்ஷிகள் பறப்பது போல, துருவனின் சரங்களும் அவர்களைத் தாக்கின. மயூரங்கள் அலறுவது போல ஓசை எழுந்தது.  அதை முறியடிக்க நாகங்கள் போல தன் அஸ்திரங்களை எடுத்து துருவன் அடித்தான். (கவியின் வார்த்தை ஜாலம்)  அவை ஸூரிய மண்டலத்தை துளைத்துக் கொண்டு சென்றது.  

அதே சமயம் மனு பிதாமகர் அங்கு வந்து துருவனை அழைத்து, போதும், குழந்தாய், சகோதரனுக்காக ஆரம்பித்த இந்த போரை நிறுத்து. குற்றம் செய்யாதவர்களை அடிக்க கூடாது என்று துருவனை தடுத்தார்.  உபதேவதைகளான இவர்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. இவர்களை எதிர்த்து போர் செய்வது தகாது. நம் குலத்திற்கு பெருமை சேர்க்காது.  உன் சகோதரன் உனக்கு ப்ரியமானவன் தான். யாரோ ஒருவன் அவனுக்கு கெடுதல் செய்தான் என்பதற்காக இவ்வளவு பேரை காயப் படுத்தி என்ன காரியம் இது?  இந்த இடம் சாந்தமானது. தன்னை உயர்த்திக் கொள்ளும் பொருட்டு குறைந்த வசதிகளுடன், ஹ்ருஷீகேசனை தியானித்து சாதனைகள் செய்து வரும் அவருடைய அனுசரர்கள், அவரை பின்பற்றும் சாதுக்களின் மார்கம்.  சர்வ பூதங்களிலும் இருக்கும் பகவான், கண்களால் காணவும், மனதால் அறியவும் முடியாத துராராத்யன் எனும் பகவானின்  பரமபதம். அவருடைய பரிவாரங்கள், சாதுக்களின் வழியில் செல்லும் இவர்களை எப்படி வதம் செய்ய துணிந்தாய்?  சர்வாத்மாவான பகவானுக்கு அவனுடைய படைப்பில் அனைவரும் ஒன்றே.  அவருடைய கருணையும், நட்பும் அனைவரிடத்திலும் ஒரே விதத்தில் தான் வெளிப்படுகிறது. பகவான் ப்ரசன்னமாக இருந்தால் மனிதர்கள் அல்பமான  தாமச குணங்களிலிருந்து விடுபடுவார்கள்.  இங்குள்ளவர்கள் ஜீவன் முக்தர்கள். ப்ரும்ம லோகம் செல்லவும், நிர்வாணம் எனும் உயர் நிலையை அடைவதுமே இவர்களது இலக்கு. பஞ்ச பூதங்களில், யோஷித்- பெண்பால், புருஷனாக, அவர்களின் முயற்சியால், அல்லது உழைப்பால், யோஷித்புருஷர்கள்  தோன்றினர்.  ராஜன்! உனக்கு தெரிந்திருக்காது. பகவானின் மாயையால், முதன் முதலில், குணங்களையும் மஹத் என்ற இயற்கை தத்துவங்களையும்  கொண்டு உலகை படைத்தல் என்பதை  ஆரம்பித்த சமயம், ஒன்றுடன் ஒன்று இணைத்து புது புது பிரஜைகளை, உயிரினங்களை தோற்றுவித்தார்.   அதனால், கண்ணுக்குத்  தெரிந்தும் தெரியாமலும் இந்த உலகம் ஏதோ (அயஸ்காந்தம்)  காந்தத்தின்  சக்தியால், இரும்பால் ஆன பொருள் அசைவது போல அவர் எதிரில்  சுற்றிக் கொண்டிருக்கிறது, இதன் பின்னால். நிமித்த மாத்திரமாக பகவான் இருந்தார்  (உலகை சுழல விட்டு, இயற்கையில் தானாக ஏற்படும் மாறுதல்கள் புது உயிரினங்களை,  பொருள்களை தோற்றுவிப்பதைக் கண்டு கொண்டிருந்தார் ) கால சக்தியும் குணங்களின் பல சேர்க்கைகள், மூலம் அவரது வீர்யம்-சக்தி அல்லது அம்சம் பிரிபட்டு,  அவைகளை செயல் திறம் உடையதாக செய்கின்றது, தான் எதுவுமே செய்யாமல் இருப்பது போல காட்டிக் கொண்டே, உள் நின்று இயங்கச் செய்கிறார்.  பகவானின்  இச்செயலுக்கு காரணம் யாருக்குத் தெரியும். அவருடைய விருப்பம் – {சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம், கர்தாரம் அகர்தாரம் அபி மாம் வித்தி – என்ற கீதா வாக்யம், ஹந்தா- அடிப்பவன், என்று நினைத்தால் அவன் ஹந்தா, ஹத: அடிபட்டவன் என்று நினைத்தால் ஹத:– கடைசியில் யாரும் அடிபடவுமில்லை, அடிக்கவும் இல்லை  இருவருக்குமே தெரியாத விஷயம், இருவருமே   அடிபடவும் இல்லை,  அடிக்கவும் இல்லை -அடி உடலுக்குத் தான், ஆத்மா அழிவில்லாதது போன்ற உபதேசங்கள் }

உன்னைச் சார்ந்தவர்கள், மற்றவர்கள் என்று நினைத்து அடித்தாலும், இறப்பது அல்லது அழிவது பகவானின் ஸ்ருஷ்டி.  ஓடுபவனை துரத்தி அடித்து,புழுதி துகள்களை காற்று தள்ளிச் செல்வது போல, அந்த துகள் இடம் தான் மாறும், இங்கிருந்து சற்று தூரம் செல்லும், அவ்வளவே.  ஒரு ஜந்துவின் ஆயுசை குறைப்பது பிரபுவின் செயலை குறை சொல்வது ஆகும்.  இதை சிலர் வினை என்பர் சிலர் ஸ்வபாவம் என்பர்.  உன் சகோதரனை ஒரு யக்ஷன் கொன்றதாக நீ சொல்கிறாய். ஜீவனின் பிறப்பும் இறப்பும் அவன் தோன்றும் பொழுதே நிச்சயமாகிறது. இந்த யக்ஷன் அடிக்காவிட்டாலும் கூட உன் சகோதரன் ஆயுள் முடிந்திருக்கும்.  மூன்று செயல்களையும் ஸ்ருஷ்டி,ஸ்திதி,லயம் என்பதைச் செய்யும் பகவான் அவன் தான் ஜகத் என்பதில் நடக்கும் அனைத்து செயல்களுக்கும் காரணம். அவனை வணங்கு.  பசுக்கள் கயிற்றினால் ஒரு தண்டத்தில் கட்டப் பட்டால் அது கயிறு எட்டிய தூரம் மட்டுமே செல்வது போல ஜீவன்கள்.  அவன் அனுமதித்த அளவு தான் வாழ்வும் தாழ்வும்.

உன்னையே எடுத்துக் கொள். ஐந்து வயது பாலகன், மாற்றந்தாயின் சுடுசொல் பொறுக்காமல் வனம் சென்றாய், பகவானின் அருளால் எட்டாத உயரம் சென்றாய்.  அவருடைய அனுக்ரஹத்தால் நல்ல நிலமையில் அரசனாக வாழ்கிறாய்.  நிர்குணமான, அழிவற்ற அந்த பரமாத்மாவை நினை.  தன் சக்தியை வெளிக் காட்டாமல் ஆனந்தமே உருவாக இருப்பவனை பக்தி செய்.  சரியான மருந்தால் ரோகம் விலகுவது போல மெள்ள மெள்ள இந்த அறியாமையிலிருந்து விடுபடுவாய். தான் தனது என்ற மோகம் அகலும்.  

தவிர, தனதன்-குபேரன், கிரீசனின் சகோதரன். அவனை அவமதித்து விட்டாய். குழந்தாய்! அவர் தான் புண்ய ஜனங்கள் என்று அழைக்கப்படும் இந்த யக்ஷர்களை தோற்றுவித்தார்.  அவரை சமாதானப் படுத்து. அவரிடம் போய் வினயமாக, உன் தவற்றை உணர்ந்தவனாக, உண்மையான பச்சாதாபத்துடன்  பேசு. அவருடைய மகத்தான குலம் மேலும் வளர வேண்டும், அது தான் நமக்கும் நல்லது.

இவ்வாறு பிதாமகரான மனு தன் வம்சத்தில் அந்த சிறுவனுக்கு உபதேசம் செய்து விட்டு அகன்றார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  பதினொன்றாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -35 )

அத்யாயம்-12

துருவன் போரை நிறுத்தியதை அறிந்த தனதன், -குபேரன்,  சாரணர்களுடனும், யக்ஷ கின்னரர்களுடனும் வந்து அவனை சந்தித்தான்.

குபேரன்: “ அரசகுமாரனே!  பிதாமஹர் சொன்னதன் பேரில் போரை நிறுத்தியது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.  நல்லது.  நீயும் யக்ஷர்களை அழிக்கவில்லை, எந்த யக்ஷனும் உன் சகோதரனைக் கொல்லவில்லை. காலம் செய்யும் வேலை.  உயிரினங்களின் வாழ்நாளை நிச்சயிப்பது காலன் தான் – அந்த செயலுக்கு அவன் தான் ப்ரபு, தலைவன்.  நீ, நான் என்று பேதங்கள்  தீவிரமாக ஞான மார்கத்தில் இருப்பவர் எண்ணுவதில்லை. உலக வாழ்க்கை என்பதே  ஜீவன்கள் உறக்கத்தில் காணும்  கனவு போல – விழித்ததும் கலைந்து போகும். அது போலத்தான்  உறவுகளும். அதனால், துருவா! பத்ரமாக போய் வா.  நல்லதே நடக்கட்டும். உன் வழி பகவான் அதோக்ஷஜனை வழி படுவது தானே. அதையே செய்.  அனைத்து ஜீவன்களின் உள்ளும் உறைபவன்,  அசையும், அசையா பொருட்கள் யாவையும் அவனே. அவனையே பூஜித்து வா.  வணங்கத் தகுந்தவன், நமது இவ்வுலக  நன்மைக்கும்,  மறுபிறவி என்பதை இல்லாமல் செய்ய பரலோக சாதனமும்  அந்த பகவானே. அவரது  ஆத்ம மாயை- தன்னிச்சையான செயல், இணைப்பதும், பிரிப்பதும், அவருடைய மேற்பார்வையில் முக்குணங்களும் சக்தி பெறுகின்றன.

உத்தான பாதரின் மகன் நீ, எது வேண்டுமோ கேள். விரும்பியதை தயங்காமல் கேள்.  நீ அம்புஜ நாபனின் வரம் பெற்றவன் என்பது தெரியும். அதை விட மேலாக வேறு என்ன வேண்டும்.  எங்கள் நன்மைக்காக ஏதாவது தர விரும்புகிறேன்.  துருவனும் தன் தவறை உணர்ந்து, அவருடைய பெருந்தன்மையை மதித்து, பகவானிடத்தில் அசையாத பக்தியையே வேண்டினான்.  ஒரு பொழுதும் தான் அதிலிருந்து விலகாமல் இருக்க வேண்டும் என்றான்.  குபேரனும் மகிழ்ந்து அந்த வரங்களை கொடுத்து விட்டு மறைந்தார், துருவனும் நாடு திரும்பினான்.

ஊர் திரும்பியவன் யாக யக்ஞங்கள் செய்தான். தாராளமாக தானங்கள்,  யாகத்தை நடத்திக் கொடுத்தவர்களுக்கு சன்மானங்கள், தேவதா ப்ரீதிகள் என்பதையும் குறைவற செய்தான்.  தனதனின் உபதேசங்கள் அவனை அனைத்து ஜீவன்களையும் சமமாக எண்ணும் உயர்ந்த குணத்தை அளித்திருந்தது.பல ஆண்டுகள் நியாயமாக ராஜ்யத்தை ஆண்டான். பிரஜைகள் அவனிடம் அன்புடன் இருந்தனர். காலம் வந்ததும்  தன் சந்ததியிடம் ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு சமாதியில் மூழ்கி உயிர் துறந்தான்.  அவனை அழைத்துச் செல்ல வானத்திலிருந்து விமானம் வந்தது.  வானத்து நக்ஷத்திர கூட்டங்களைப் பார்த்து வியந்தான். சந்திரன் போல தானும் பிரகாசமாக இருப்பதை உணர்ந்தான்.  அங்கு நான்கு கைகளுடனும், ஸ்யாமள வர்ணமும், கொண்ட சிறுவர்கள், விரிந்த தாமரை போன்ற கண்களுடனும்  கைகளில் கதையுடன், நல்ல ஆடைகளுடனும், கதை , கிரீடம், அங்கத குண்டலங்களுடனும் சேவை செய்ய இருந்தனர். பரிவாரங்களின் தலைவன்  வந்து வணங்கி தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான்.  சுனந்த,நந்த என்பவர்கள் புன்னகையுடன் வரவேற்றனர். “ராஜன்! நல்வரவாகுக.  தாங்கள்  ஐந்து வயதில் செய்த தவம் எங்கள் பகவானை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்து விட்டது. எங்களுடைய தேவன், சார்ங்க தன்வன் என்ற பெயருடைய பகவானின் பார்ஷதர்கள், பரிவாரங்கள் நாங்கள் இருவரும்.  பகவானின் விஷ்ணுபதம் என்ற இடத்திற்கு உங்களை அழைத்துப் போக வந்தோம் என்றனர்.  இந்த விமானத்தில் ஏறிக் கொள்ளுங்கள். மற்றவர்களால் எண்ணிக் கூட பார்க்க முடியாத விஷ்ணுவின் இருப்பிடம் அழைத்து வர எங்களுக்கு உத்தரவு என்றனர். “

மைத்ரேயர் சொன்னார்:   வைகுண்ட சேவகர்களின் தலைவன், மதுரமாக சொன்னதைக் கேட்டு, துருவன் மகிழ்ந்து, ஸ்னானம் செய்து மங்களமாக முனிவர்களை வணங்கி விமானத்தில் ஏற தயாராகும் போது தானும் ஸ்வர்ண மயமாக இருப்பதை அறிந்தான்.  அந்தகன் வந்ததைக் கண்டு, சேவகர்கள் சொன்னபடி அவர் தலையில் காலை வைத்து விமானத்தில் ஏறினான்.  துந்துபிகள் முழங்கின. ம்ருதங்க, பணவம் என்ற வாத்யங்கள் இசைக்கப் பட்டன.  கந்தர்வர்கள் பாடினர். புஷ்ப வ்ருஷ்டி உண்டாயிற்று.  ஸ்வர்லோகத்தில், தன் தாய் சுநீதியைக்  கண்டான்.  தாயை விட்டுச் செல்வதா என்று தயங்கியவனிடம் சேவகர்கள் அவள் முன்னால் வாகனத்தில் செல்வதைக் காட்டினர்.  மூவுலகையும் சுற்றி வந்து முனிவர்களையும், மற்றவர்களையும் பார்த்தபடி விஷ்ணு பதமான வைகுண்டம் வந்து சேர்ந்தான்.  வைகுண்டத்தின்  அழகை வியந்தபடி சாந்தமே உருவாக இருந்த அச்யுத ப்ரிய பாந்தவர்களையும்,  ஆத்ம தத்துவங்களை அறிந்த  தஸ்விகளையும் கண்டான்

இவ்வாறாக உத்தான பாதரின் மகனாக பிறந்த துருவன்  மூவுலகிலும் சூடாமணி போல பிரகாசிக்கும் கம்பீர வேகமும்,  நிமிஷம் விடாமல் சுழலும் சக்கரத்தில், ஜோதிட சாஸ்திரங்களில் சொல்லியபடி,  சக்கரத்தின் மேட்ரம் எனப்படும் தண்டம் – சக்கரத்தின்  நடுவில் திடமாக நடப்படும் அச்சில் – கட்டப்பட்ட மாடுகள் போல வளையவரும் வானத்து நக்ஷத்திர கூட்டங்களின் நடுவில், த்ருவனாக, அசையாதவனாக  பதவியை அடைந்தான்.

நாரதர் இதைக் கண்டு மிக மகிழ்ந்தார்.  சுநீதியின் மகன், அவள்  செய்த தவப் பயன்.  வேதம் அறிந்தவர்களும்  மற்ற சாதகர்களும் நினைத்து கூட பார்க்க முடியாத நன்மை அவளுடைய நல் எண்ணத்தால், மகனால் கிடைக்கப் பெற்றாள்.  ஐந்து வயது மகனுக்கு பக்தியை உபதேசித்தாள். யதேச்சையாக அங்கு சென்ற நானும் வாசுதேவ மந்திரத்தை உபதேசித்தேன், சிரத்தையாக அதை ஏற்று தவம் செய்து நல் கதியடைந்தான் என்று பெருமையுடன் சொன்னார்.

மைத்ரேயர் சொன்னார்: குரு வம்சத்து பெரியவரே (விதுரர்) நீங்கள் கேட்டபடி துருவனின் கதையைச் சொன்னேன்.  விளையாட்டுச் சிறுவன், தாயார் உபதேசத்தால் விஷ்ணுவின் சரணத்தையடைந்தான் என்ற இந்த கதை கேட்பவர்களுக்கும், சொல்பவர்களுக்கும் நன்மையைத் தரும். 

 (இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  பன்னிரெண்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் 52)

அத்யாயம்-13

விதுரர்  துருவன் கதையைக் கேட்டு சற்று நேரம் அதிலேயே லயித்து இருந்தார்.  மைத்ரேய முனிவரிடம் கேட்டார். ப்ரசேதஸ் என்பவர்கள் யாவர்? அவர்கள் வம்சத்தில் வந்தவர்கள் யாவர்?  எந்த விதத்தில், என்ன செய்ததால் புகழ் பெற்றார்கள் ¿ யாக காரியங்களை எந்த இடத்தில் இருந்து செய்தார்கள்?  மகாபாகவதம் என்பது மிகப் பெரிய நூல். பகவானையே கண்ட நாரதர் அவர் எப்படி கர்மயோகம், பணிவிடை செய்வது போன்ற விஷயங்களைத் தெரிந்து கொண்டார்?  பகவான் யாக புருஷன். தர்ம சீலரான ஜனங்களால் வேதம் சொன்னபடி யாக காரியங்களைச் செய்வர். பக்தி என்பதை நாரதர் தானே பரப்பினார்.  தேவரிஷி நாரதர். பகவத் கதை என்பது எப்படி வந்தது. அவர் வர்ணித்து சொன்னபடியே, முனிவரே! எனக்கும் சொல்லுங்கள், என்றார்.

மைத்ரேயர் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்.  த்ருவன் மகன் உத்கலன் ஏனோ அரசு பதவியையும்,  புகழையும் விரும்பவில்லை. பிறவியிலேயே சாந்தமானவன், தந்தை வழியில் அனைத்து உயிரினங்களையும் சமமாக காணும் குணத்தை அடைந்தான்.  ஆத்ம தத்வம்- பகவானின் அம்சமாக உலகம், உலகம் அவருள் அடக்கம் என்பது அவனுக்கு இயல்பாக புரிந்திருந்தது.  யோக சாதனைகளில் தீவிரமாக ஈடுபட்டான். எதிலும் பற்றில்லாத அவனை உலகத்தார், ஜடம் என்றும் உன்மத்தன் என்றும் ப்ரமியின் மகன் தானே என்றனர்.  (ப்ரமம் என்பது உலக வழக்கில் அறியாமை சார்ந்ததாக கருதப் படுகிறது)  அவனுக்கும் ஆறு பிள்ளைகள் பிறந்தனர்.  புஷ்பார்ணன் என்பவன் மனைவி ப்ரபா,தோஷா என்ற இருவர். ப்ராத:, மத்யம்தினம், சாயம் என்று அவர்கள் பிள்ளைகள்.  தோஷாவின் மூன்று பெண்கள்: ப்ரதோஷோ, நிசீதோ,வ்யுஷ்ட என்று அவர்கள் பெயர்கள்.  அந்த வம்சத்தில் வந்தவன்  மனு, அவன் வம்சத்தில் அங்கன் என்பவனின் மகன் வேனன்.  இந்த வேனன்  என்பவன் அதி துஷ்டனாக இருந்தான்.  ப்ரஜைகள் மிகவும் வருந்தினார்கள்.  அங்க ராஜா அவனை திருத்தவும் முடியாமல் தானே ஊரை விட்டு வெளியேறினான்.  வேனனை முனிவர்கள் சபித்தனர்.  உயிர் பிரிந்த உடலில் அவன் வலது கையில் கடைந்தனர்.  வேனனின் அராஜகமான ராஜ்யத்தில், திருடர்கள் அதிகரித்தனர். மேலும் பலவிதமாக மக்கள் வருந்திய சமயம் ஸ்ரீமன் நாராயணனின் அம்சமாக ப்ருது பிறந்தான். அரசனான்.

விதுரர் சொன்னார்:  நல்ல சீலம் உடையவர் என்றும் சாது, மஹாத்மா என்பர். அவருடைய காலத்தில் எப்படி துஷ்டர்கள், வந்தனர், ஜனங்கள் வருந்தும் படியாக. வேனனின்  கையில் ப்ரும்ம தண்டத்தால் கடைந்ததாகச் சொன்னீர்கள்?  அரசன் துறவு மேற்கொண்டபின், தர்மம் அறிந்த முனிவர்கள்  ஏன்  அவனை தண்டித்தனர். சாதாரணமாக அரச குலத்தைச் சேர்ந்தவர்களை குற்றம் செய்திருந்தாலும் கொல்வதில்லை.

மைத்ரேயர் சொன்னார். அங்க ராஜன் அஸ்வமேத யாகம் செய்தான். பெரிய யாகம். தேவதைகளை அழைத்த பொழுது யாரும் வரவில்லை. ருத்விக்குகள் திகைத்து, அரசனிடம் சொன்னார்கள். ராஜன், நாங்கள் சிரத்தையாக  சாஸ்திரத்தில் சொன்னபடி தான் யாக காரியங்கள் செய்து வருகிறோம். பொருள்களையும் சுத்தமாக தேடி கொண்டு வந்திருக்கிறோம். சந்தஸ் என்ற வேதத்தை  அத்யனம் செய்த, விரதங்களை அனுஷ்டிக்கும் வேத விற்பன்னர்களை அழைத்து வந்திருக்கிறோம்.  தேவர்களை  கர்மசாக்ஷிகள் என்பர். அவர்கள் வராமல் ஏன் எங்களை அவமதிக்கிறார்கள் ?

இதைக் கேட்டு யாகத்தின் யஜமானானஅங்க ராஜா மிக வருந்தினான். சபையைக் கூட்டி தன் மந்திரிகளை விசாரித்தான்.  அழைத்தும் தேவர்கள் வரவில்லை. சபையோர்களே, சொல்லுங்கள்,நான் செய்த தவறு என்ன?

 அரசவையின் மந்திரிகள் சொன்னார்கள்:  நரதேவா! இதில் நீங்கள் எதுவும் தவறு செய்யவில்லை. குற்றம் என்று சொல்ல வேண்டுமானால், உங்களுக்கு மகன் என்ற சந்ததி இல்லை. புத்ரகாமனான நீங்கள் புத்ரகாமேஷ்டி என்ற யாகத்தை செய்யுங்கள்.  அதன் பின் தேவர்கள் உங்கள் யாகத்தில் பங்கு ஏற்பார்கள். அங்கராஜனும் அவ்வாறே ஹரியை தியானம் செய்து  வேண்டினான். யாகத்தை நடத்திய ப்ராம்மணர்களும் விஷ்ணுவை குறித்த யாகத்தைச் செய்தனர்.  அந்த யாக குண்டத்திலிருந்து பொன்னால் ஆன ஆடையும், கைகளில் பொன்னால் ஆன பாத்திரத்தில் பாயசம் என்பதையும் வைத்துக் கொண்டு ஒரு திவ்ய புருஷன் எழுந்தான்.  அந்த ப்ராம்மணர்கள் அனுமதியுடன் தானும் தன் பத்னிகளுமாக பாயசத்தை அருந்தினான்.

அரசி கர்பம் தரித்து சரியான காலத்தில் மகனைப் பெற்றாள்.  அவன் தன் தாய் வழி பாட்டனார்  அதர்மத்தில் வளரும் ம்ருத்யு. அவர் வழியில் இந்த மகனும் அதர்மமே உருவானான். வளர வளர, அவனது மூர்க்கம் அதிகமாயிற்று. வேட்டையாடச் சென்றால் சாதுவான  மிருகங்களையும் முனிவர்களையும் அடிப்பான். வேனன் என்றே அழைக்கப் பட்டான். விளையாடும் சிறுவர்களை இளம் வயதினரை பிடித்து, கொடூரமாக அடிப்பான். துஷ்டனான இந்த மகனை பலவிதமாக திருத்த முயன்றும் பலனில்லை. ப்ரஜைகள் இல்லாத குடும்பஸ்தர்கள், தேவனை வேண்டி மகனைப் பெறலாம். ஆனால் அதே மகனால் துன்பப்படும் பொழுது, யாரை வேண்டுவது?  துஷ்டனான மகனால் ஜனங்கள் பெற்றவரை தூற்றுகிறார்கள். எல்லோரிடமும் அந்த மகனால் விரோதம் வருகிறது.  இதைத்தான் மோஹம் என்றும் பந்தனம் என்றும் சொன்னார்கள். சம்சாரம் க்லேசம் தருவதே என்று பண்டிதர்கள் சொல்வார்கள். மகன் பிறப்பது, தன் மகன், தன் குலம் வளர்ப்பவன் என்பதால்  வரம் என்று நினைத்தோம். நல் வழியில் செல்லாத மகன் குடும்பத்தில் துன்பத்தைத் தான் தருகிறான்.  வீடே வசிக்க முடியாததாக ஆகிறது. என்று இப்படி பலவாறாக நினைத்து குழம்பியவன் விடியற் காலையில் வீட்டைத் துறந்து வெளியேறினான்.

அரசன் வெளியேறியதை அறிந்த ஊர் மக்களும், மந்திரிகளும் தேடக் கிளம்பினர். எங்கும் தேடியும் கிடைக்காமல் திரும்பிவந்து யாக சாலையில் இருந்த ரிஷிகளிடம் சொன்னார்கள்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  பதின்மூன்றாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்  41)

அத்யாயம்-14

ப்ருகு முதலான முனிவர்கள் லோக க்ஷேமத்தை நினைத்து,  நாடு அரசன் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதால், சுநீதீ யை அழைத்து ப்ரஜைகளுக்கு சம்மதம் இல்லையென தெரிந்தே வேனனை ராஜ்யத்தில் அரசனாக அமர்த்தினர்,  திருடர்கள் சர்பத்தால் கடிபட்ட மூஞ்சூறு போல ஓடி விட்டனர். அவன் உக்ரமாக தண்டனை கொடுப்பவன் என்று பயந்தனர். உடனே,தன்னை மிக சக்திசாலியாக கல்பித்துக் கொண்டு அஷ்ட விபூதிகளும் தன்னை வந்தடைந்து விட்டது என்றும் தன்னைத் தானே பெருமையாக நினைத்துக் கொண்டான். அங்குசம் இல்லாத மதயானை போல கட்டுக்கடங்காதவன் ஆனான். ரதத்தில் ஏறி ஊரைச் சுற்றினான். பூமி நடுங்கியது.

யாக யக்ஞங்கள், தானம், ஹோமம் எதுவும் செய்யக் கூடாது என்று ஆணையிட்டான்.  பேரீ வாதங்களுடன் எப்பொழுதும் அட்டஹாஸமாக வலம் வந்தான். யாகம் செய்பவர்களும், முனிவர்களும், துஷ்டத்தனம் அளவு மீறி போகிறதே என்று வருந்தி தங்களுக்குள்  பேசிக் கொண்டனர்.   விறகின் இரு பக்கமும் தீ வைத்தது போல குணமில்லாத அரசனால் துன்பமே என்றனர்.  அராஜக பயம் என்று இவனை அரசனாக்கினோம். தகுதியில்லாதவன், இவன் அரசன் ஆனதாலேயே அதிக பயம் என்றாகி விட்டது.  இப்பொழுது மக்களுக்கு என்ன பதில் சொல்வோம். பாம்புக்கு பால் வார்த்து வளர்த்தால் அது வளர்த்தவனே என்று கடிக்காமலா இருக்கும்.  சுபாவமாகவே வேனன் துஷ்டன்.  அதை நிரூபித்து விட்டான். ப்ரஜைகளை கொல்லுகிறான்.

சுனீதீ யின் வம்சத்தினன் என்பதால் அரசனாக்கினோம்.  சொல்லி பார்க்கலாம். சமாதானமாக சொன்னால்  ஒருவேளை சம்மதிக்கலாம்.  திருந்தலாம். அப்படி நமது சொல்லை ஏற்காவிட்டால், லோக நன்மைக்காக நாம் நமது தேஜஸாலேயே தகித்து விடுவோம்.  சாது மிரண்டால் என்பது போல, தங்களை அடக்கி பழகிய முனிவர்களுக்கு கோபமும் அடங்கியே இருக்கும்.  எல்லோருமாகச் சென்று வேனனிடம்  சமாதானமாக  பேசிப் பார்த்தனர்.

“அரசகுமாரனே! உன்னிடம் உள்ளதை எடுத்துச் சொல்கிறோம்.  உன் ஆயுள், ஸ்ரீ, கீர்த்தி இவை வளரட்டும்.வாக்கு,மனம், உடல்,புத்தி  இவைகளால் தர்மத்தை அனுசரிப்பதால் மனிதர்கள் சோகமில்லாமல் வாழ்வார்கள். இவற்றை மறுத்தால் அடைவது எல்லையில்லாத  சோகம் மட்டுமே. பிரஜைகளுக்கு க்ஷேமம் என்று செய்வதை மறுக்காதே, தடுக்காதே. இவை நஷ்டமானால், அரசன் ஐஸ்வர்யம் இழப்பான், பதவியிலிருந்து இறங்குவான்.

ராஜன்! உன் மந்திரிகள் யாருமே உனக்கு நன்மையைச் சொல்லும் நிலையில் இல்லை. அவர்களே துஷ்டர்கள். உன் செல்வத்தை அனுபவிக்கவே உன்னை சூழ்ந்து நிற்கிறார்கள். எந்த ராஜ்யத்தில், பகவான் யாக புருஷன், என்று எண்ணி மக்களால் தங்கள் குல வழக்கப்படி பூஜிக்கப் படுகிறாரோ, அங்கு அவர் சந்தோஷப் படுகிறார். விஸ்வாத்மா அவர். தன் சாஸனம்- தன் ஆளுமை மதிக்கப் படுகிறது என்பது அவருக்கு திருப்தியைத் தரும். அவர்  திருப்தியடைந்தால் எது தான் கிடைக்காது. வரி வசூல் செய்யும் அரசர்கள், லோகபாலர்கள். அவர்கள் கடமை அதை மக்கள் நன்மைக்காக செலவழிப்பது.  அவர்கள்  உலகம் முழுவதும் யாக யக்ஞங்கள் செய்வது, மூன்று வேதங்களும் அவனே,  தவமே உருவானவன் அவனிடத்தில் மூவுலகத்து செல்வங்களும் உள்ளன என்பர். உன் தேசத்தினர் செய்யக் கூடாது என்று தடை விதிக்காதே.  ப்ராம்மணர்களைக் கொண்டு யாகம் யக்ஞம்  செய்விப்பதால்,   பகவானின் அம்ச பூதமான தேவர்கள் மகிழ்கிறார்கள். அவர்கள் உலகுக்கு நன்மையே செய்வார்கள். அதை அவமரியாதை செய்யாதே.

வேனன் சொன்னான்: அறிவிலிகளே! நீங்கள் தான் அதர்மத்தை தர்மமாகச் சொல்கிறீர்கள். அரசனை கடவுளாக மதிக்க வேண்டியது இருக்க,  தன் பதியை விட்டு ஜார பதியை விரும்பும் பெண் போல பேசுகிறீர்கள். யார் இந்த யக்ஞ புருஷன்?   விஷ்ணு,விரிஞ்ச்சி,கிரீசன், இந்திரன், வாயு, யமோ, சூரியன், மழை, சந்திரன், குபேரன் பூமி, அக்னி  வருணன், யாவரும் மேலும் பலரும் அரசனின் சரீரத்தில் இருக்கிறார்கள். வரமோ, சாபமோ தருவது அரசனே.  சர்வதேவமயன் அரசன்.  யாக யக்ஞங்கள் எதுவும் வேண்டாம், பலி என்று தருவதை என்னிடம் கொடுங்கள்.  என்னை விட உயர்ந்தவன் யாருண்டு?

புத்தி கெட்டவன், இவனுக்கு புத்தி சொல்ல வந்தோமே என்று ரிஷி முனிவர்கள் வருந்தினர்.  தன்னை பண்டிதனாக எண்ணி கர்வத்தின் உச்சியில் இருக்கும் இவனுக்கு சமாதானமாக நாம் பேசுவது உகந்ததல்ல. ஹன்யதாம், கொல்லுங்கள்,  ஹன்யதாம், இவன் பிறவி துஷ்டன் இவனைக் கொல்லுங்கள். கொடியவன் உயிருடன் இருந்தால் உலகை சீக்கிரமே பஸ்மமாக ஆக்கி விடுவான் என்றனர்.

ஹரி நிந்தையை செய்பவன் இவன்.  இவன் அரசனின் வராசனம் என்பதில் அமர தகுதியில்லாதவன். நரதேவன் என்று அரசர்களைச் சொல்லுவோம். வெட்கம் இன்றி விஷ்ணுவை யக்ஞபதி என்றால் நிந்திக்கிறான். ஒரு குணமுமில்லாத வேனன்- உலகையே நாசமாக்குவான். இந்த ஐஸ்வர்யத்தைப் பெற்று நியாயமாக இருப்பவனுக்கு அனுக்ரஹம் செய்வது போல அநியாயமாக இருப்பவனுக்கு தண்டனையும் தரத்தான் வேண்டும். இவ்வாறு எண்ணிய ரிஷிகள், ஹூங்காரத்தாலேயே அவனை தகித்து விட்டனர். அச்யுதனை  நிந்தை செய்து வாழவா முடியும்? 

ரிஷிகள் திரும்பிச் சென்றவுடன் தாயான சுநீதா, வித்யா யோகம் என்ற ஒரு முறையால்  அவன் உடலை காப்பாற்றி வந்தாள். ஒரு சமயம், முனிவர்கள் சரஸ்வதி நதியில் ஸ்னானம் செய்து விட்டு கரையில் தங்கள் நித்ய அக்னி காரியங்களை செய்து விட்டு பேசிக் கொண்டிருந்தனர். ஏதோ கெடுதல் வரும் போலத் தெரிகிறது. பயங்கரமான உத்பாதம் வர இருக்கிறது.  பூமி திருடர்களால் கெடுதல் செய்யப் படுவாள். இப்படி பேசிக் கொண்டிருக்கையிலேயே, திருடர்கள் புழுதிப் படலம் வீச ஓடுவதைக் கண்டனர்.  செல்வத்தை சுரண்டுவதே காரியமாக இவர்கள் அலைவதைக் கண்டு  வருந்தினர். தலைவன் இல்லாமையால் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதைக் கண்டனர். அராஜகம். நல்லதே இல்லையென்றாகி விட்டது. தடுக்க யாரும் இல்லை.

பாத்திரம் ஓட்டையானால், அதில் விடும் பாலும் ஒழுகுவது போல ப்ராம்மணர்களின் வீர்யமும் குறைந்தது.

அங்க ராஜன் ராஜ ரிஷியாக இருந்தவன். அவன்  வம்சமே வீணாவதா ?  இந்த வம்சத்து அரசர்கள் அனைவரும் நன்றாகத் தான் ஆண்டார்கள். இவ்வாறு யோசித்து, ரிஷிகள் இறந்த அரசனின் துடையை கடைந்தனர். அதிலிருந்து பாஹுகன் என்ற நரன் வந்தான்.  காகம் போன்று கரு நிறத்துடன், சிறு உருவமாக, சிறுத்த புஜங்கள், பெரிய கூனல் முதுகில், வளைந்த நாசியும், ரத்தம் போல சிவந்த கண்களுடன், முடி தாமிர நிறமாக குச்சி குச்சியாகவும் இருக்க, வணங்கி நின்றவன், நான் என்ன செய்யவேண்டும் என்று தீனமாக கேட்டான்.  நிஷீதத- உட்காரு என்று என்றனர்.  பின்னர் அவன் வம்சமே நிஷாதர்கள் எனப்பட்டனர்.  மலைகளிலும் காடுகளில் மட்டுமே தென்படுபவர்களாக இருந்தனர்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  பதிநான்காவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்  46)

அத்யாயம்-15

மைத்ரேயர் சொன்னார்:  மறு முறை அரசனுக்கு சந்ததியை உருவாக்க ரிஷிகள் முயன்றனர். புஜங்களில் அதே போல கடையவும் ஒரு ஜோடி வந்தனர். ரிஷிகள் மகிழ்ந்தனர்.  பகவானுடைய சங்கல்பம் என்றனர். இது விஷ்ணுவின் கலை-ஒரு பகுதி.  உலகை காக்கவே வந்துள்ளது.  ஸ்ரீ தேவியான லக்ஷ்மியின் கடாக்ஷமே.  என்றும் அருகில் இருக்கும் மஹா விஷ்ணுவின் பத்னி ஸ்ரீ தேவி.  இவன் அரசர்களில் முதல்வன் என்று பெயர் பெறுவான்.   உலகெங்கும் இவன் புகழ் பரவும் ப்ருது என்றே அழைப்போம். (ப்ருதுஸ்ரவஸ்-எங்கும் பரவிய புகழ்) இவளும் சுததி (ஆழகிய பற்களையுடையவள்)  அர்சி என்ற பெயருடன் ப்ருதுவுடனேயே வந்தவள்.  இவளும் லக்ஷ்மி தேவியின் அம்சமே.

மைத்ரேயர் சொன்னார்: அந்த ரிஷிகள் சந்தோஷமாக இருவரையும் பாராட்டினர்.  கந்தர்வர்கள் பாடினர். புஷ்பவ்ருஷ்டி உண்டாயிற்று. சித்தர்கள் தங்கள் ஸ்த்ரீகளுடன் நடனம் ஆடினர்.  சங்கம், துர்யம், ம்ருதங்கம் முதலிய வாத்யங்கள் முழங்கின.  தேவர்கள், ரிஷிகள், பித்ரு கணங்கள் எல்லோரும் அந்த காட்சியைக் காண வந்து சேர்ந்தனர்.  ப்ரும்மா பார்த்தவுடன், வேனனின்  வலது  கையில் கதையுடன், பாதத்தில் அரவிந்தம், இவைகளைப் பார்த்து வியந்து நிச்சயமாக இது ஸ்ரீ ஹரியின் அம்சமே என்றார்.  பரமாத்மாவின் அழிவில்லாத சக்கரம்  -அதன் அம்சம் என்றார். 

அதன் பின் அபிஷேக ஏற்பாடுகள் ஆரம்பித்தன. பல இடங்களிலிருந்தும் ஜனங்கள் தேவையான பொருட்களைக் கொண்டு வந்து சேர்த்தனர்.  ஆறுகள், நதிகள், மலைகள், கிராமங்கள், பறவைகள், மிருகங்கள், வானம், பூமி என்று அனைவரும் எதோ ஒரு பொருளைக் கொண்டு வந்தனர். ப்ருது அரசனாக அபிஷேகம் செய்யப் பட்டான்.  பத்னி அர்சியும் அலங்கரிக்கப்பட்டு உடன் இருந்தாள்.  உயர்ந்த ஆடைகள், ஆபரணங்கள் என்று பலவும் அவர்களுக்கு  தனதனால் அளிக்கப் பட்டன.  பொன்னாலான ஆசனத்தையும் தனதன் அளித்தான். வருணன் வெண் குடையை, வாயு சாமரங்களை, தர்மன் புகழ் வாய்ந்த கீர்திமதி என்ற மாலையை,இந்திரன் உயர்ந்த கிரீடத்தை, யமன் சம்யமனம் என்ற தண்டம், ப்ரும்மா ப்ரும்ம மயமான கவசம், பாரதி அழகான ஹாரம், ஹரி சுதர்ஸன சக்கரம், அவர் மனைவி குறைவில்லாத செல்வ செழிப்பு, ருத்ரன் தச சந்த்ரம் என்ற வாள்,  நூறு சந்த்ரம் என்ற வாளை அம்பிகா.  சோமன் அம்ருத மயமான குதிரைகள், த்வஷ்டா அழகிய வேலைப் பாடமைந்த ரதம், அக்னி, ஆஜவகம் என்ற வில், சூர்யன் ஒளி வீசும் அம்புகள், பூமி யோக மயமான பாதுகை,  வானம் புஷ்பங்களின் மாலைகள்  என்று பரிசளித்தனர்.  வானத்தில் சஞ்சரிக்கும் தேவ கன்னிகைகள் நாட்யம், சுஸ்வரமான கீதம், வாத்யங்கள், இவைகளைக் கொடுத்தனர். அந்தர்தானம் என்பதை வானத்தில்  சஞ்சரிக்கும் பறவைகள், ரிஷிகள் ஆசிர்வாதங்களை, சமுத்திரம் தன்னிடத்தில் தோன்றும் சங்கு, கடல்கள், பர்வதங்கள், நதிகள், ரத வீதிகளை கொடுத்தனர்.  சூதர்கள், மாகதர்கள், வந்தீ என்று பலர் அரசவையில் பாடவும்,  ( துதிப் பாடல்கள், கட்டியம் கூறுதல் போன்ற வேலைகள் செய்பவர்)  வந்தனர்.  அரசனின்  வம்சாவளியை சொல்லும் வழக்கப்படி,  வேனன்  மகன் என்றே சொன்னார்கள்.

அபிஷேகம் முடிந்து ப்ருது பேசலானான்: அனைவருக்கும் வணக்கம், சூதர்களே, மாகதர்களே, வந்தி எனும் துதி பாடுபவர்களே,  உலகில் நான் இன்னும் அறியாதவன், அறியப் படாதவனே.  உங்கள் புகழ் பாடல்களை எப்படி ஏற்றுக் கொள்வேன்?  எதுவுமே நான் செய்ய ஆரம்பிக்கவில்லையே.  எனவே, உங்கள் வார்த்தைகள் பொருளற்றவை.  சபையோர்களே, உள்ளபடி சொல்லுங்கள்.  உத்தம புருஷர்களாக இருந்த  பெரியவர்களின்  குணங்களை நினைத்து பாடாதீர்கள். மஹத்தான குணங்களையுடைய பகவான்,  அவனை போற்றும் பாடல்கள் சாதாரண ஜனங்களுக்கு ஏற்புடையது அல்ல.  இன்னமும் நான்  நீங்கள்போற்றும் படி எதுவும் செய்யவில்லை. செய்த பின் பாராட்டுங்கள். இப்பொழுது புகழ்ந்து சொல்லி நானும் ஏற்றுக் கொண்டால் பிற் காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் அது எனக்கு தர்ம சங்கடத்தையே உண்டு பண்ணுகிறது.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  பதினைந்தாவது  அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-26

 

அத்யாயம்-16

மைத்ரேயர் சொன்னார்:  இப்படிச் சொன்ன அரசனைப் பார்த்து  அரச சபையில் பாடுவதை கௌரவமாக நினைத்திருந்த பாடகர்கள்,  மகிழ்ந்தனர்.  எங்கள் பாடலை விட தற்சமயம் நீங்கள் பேசியது அம்ருதமாக இருக்கிறது, அரசே.  நாங்கள் பாடியதும் வெற்று வார்த்தையல்ல.  பகவான் தன் மாயையால் அவதரித்து இருப்பதை அறிவோம். வேனனின் அங்கஜாதன் (மகன்), நல்ல வீரமும், ஆண்மையுடனும் வருவாய். வாசஸ்பதி கூட நினைத்து பார்க்க முடியாத ஆற்றலுடன் வளருவாய்.  எங்கள் திருப்திக்காக பாடுகிறோம்.  தற்சமயம் ப்ருதுவாக வந்திருப்பது  ஹரியே என்றே முனிவர்கள் சொன்னார்கள்.   சிலாக்யமான செயல்கள்  செய்வான் என்றனர். இந்த அரசன் தர்மத்தைக் காப்பான். நல்ல முறையில் ஆட்சி செய்வான், வரப் போகும் அரசர்களுக்கும் முன்னோடியாக இருப்பான் என்றனர். இவன் ஒருவனே, லோகபாலர்கள் அனைவரையும்  தன்னுள் வைத்தவன்.  அந்தந்த காலங்களில் இரு லோகத்திற்கும் நன்மையானதை குறைவின்றி செய்வான் என்றனர்.

சூரியன் போல அனுகூலமாக இருப்பான்.  எட்டு மாதங்கள் சூரியன் பூமியிலிருந்து ஜலத்தை உறிஞ்சி,  பின், மழை காலத்தில் மழையாக பொழிவது போல. வசூல் செய்வதும் காலத்தை அனுசரித்து, மக்கள் சிரமப்படாமல் இருக்கும்படி, அதிகமாக விளையும் சமயம் அதிகமாகவும், மற்ற நாட்களில் முடிந்தவரையும் வசூலிப்பான்.  பூமியைப் போல பொறுமையாக இருப்பான்.  இந்திரனைப் போல ரக்ஷிப்பான். காலத்தில் இந்திரன் வர்ஷிப்பது போல இவனும் குடி மக்களை ரக்ஷிப்பான். அனுகூலமாக பேசி, அன்புடன் நோக்கி, மென் முறுவலுடன் குறைகளைக் கேட்டறிந்து ஆட்சி செய்வான்.   ஆடம்பரமாக தன்னை வெளிப் படுத்திக் கொள்ளாமல் அவசியமான செயல்களை முன் கூட்டியே செய்து விடுவான்.  அருகில் இருப்பது போலவே இருந்தாலும் எவரும் மிக நெருங்கி அவனது கொள்கைகளில் தலையிட விடாமல் தள்ளியிருப்பான். வேன- மூங்கில் – மூங்கில் காட்டில் தீ தோன்றுவது போல நெருங்க முடியாதவனாகவும் இருப்பான்.

சாரணர்களைக் கொண்டு மக்களை உள்ளும் புறமும் எடை போட்டு வைத்திருப்பான்.  தலைமை பொறுப்பை அலட்சியமாக ஏற்று நடத்துவான். வாயுவும் ஆத்மாவும் உடலில் இருந்து செயல் படுவது போல.  தண்டனை கொடுப்பதில் நியாயமாக இருப்பான். எதிரியானாலும் அவன் மகனை தண்டிக்க மாட்டான். தன் மகனேயானாலும் குற்றவாளி எனத்தெரிந்தால் தண்டிப்பான்.   இவனுடைய தர்மசக்கரம் தடையின்றி மானஸாசலம் வரை செல்லும்.  பகவான் சூரியன் உள்ளவரை இவனது புகழும் இருக்கும்.  இவர் தான் அரசன் என்று  மக்கள் மகிழ்ந்து கொண்டாடும் வகையில் இருப்பான். 

திடமான விரதங்கள் உடையவன். , சத்யசந்தன், ப்ரும்ம தேவர்களான ப்ராம்மணர்களுக்கு ஆதரவாக இருப்பான். முதியவர்களிடம் மரியாதையாக இருப்பான்.  அடைக்கலம் அளிப்பவன்.  அனைவரையும் மதிக்கத் தெரிந்தவன்.  தீனர்களை அன்புடன் காப்பான்.   தன் மனைவியை தன்னில் பாதியாக மதிக்கத் தெரிந்தவன், பிற பெண்களைத் தாயாக காண்பான். பிரஜைகளிடம் தந்தை போல இருப்பான். ப்ரும்ம வாதிகளான ரிஷிகளிடம் கிங்கரன் போல சேவை செய்வான். மனிதர்களை தன்னைப் போலவே எண்ணி நடத்துவான். நண்பர்களிடம் ஆனந்தமாக இருப்பான்.  கூட்டங்களில் தெளிவாக பேசுவான்.  துஷ்டன்  என்றால் தண்டிக்கத் தயங்க மாட்டான். த்ரயீ என்ற வேத புருஷனின் அவதாரம் இவன்.  உள்ளுறை ஆத்மாவே இவன். பரமாத்வானின் ஒரு பகுதியாக அவதரித்தவன்.  உலகை ஆள வந்தவன். ஆதலால் பலவிதமான பொருளற்ற புகழுரைகள் இவனுக்கு தேவையேயில்லை.

 அரசர்களின் தலைவன். சூரியன் போல கைகளில் அம்பு வில் இவற்றுடன் தென் திசை நோக்கி யாத்திரை செல்வான். ஆங்காங்கு இருந்த சிற்றரசர்கள், தாங்களாகவே வரி செலுத்த வந்தனர்.  ஆதி ராஜன்  சக்ராயுதம் வைத்திருப்பவன் என்று அனைவரும் மதிப்பும் மரியாதையுமாக எண்ணினர். 

நூறு அஸ்வமேத யாகங்கள் சரஸ்வதி நதிக் கரையில் செய்வான்.  அங்கு இவனது குதிரையை தேவேந்திரன் அபகரிப்பான்.  சனத் குமாரரை தன் மாளிகையில் சந்தித்து ஞானோபதேசம் பெறுவான்.  யாராலும் எதிர்க்க முடியாத பராக்ரமத்தோடு ராஜ்ய பாலனம் செய்பவனை  விமரிசிக்க பயப்படுவார்கள்.  தடையின்றி  உலகை சுற்றி வரும் பொழுது தன் தேஜஸால் அனைவரிடமும் சுமுகமாக இருப்பான். அதனால் தேவர்கள் மட்டுமல்ல, அசுரர்களும் புகழும்படி இருப்பான்

இவ்வாறு அரச சபையில் பாடும் வந்திகள்- பாடகர்கள். சொன்னார்கள்.

அதே போல ப்ருது என்ற அந்த அரசன் பிரஜைகள் போற்றும் படி இருந்தான்.  நாளடைவில் பூமியை சீராக்கி, பயிர்கள் நன்கு வளர தேவையானவைகளை  விவசாயம் செய்பவர்களுக்கு கொடுத்து, மேலும்  பல உதவிகளைச் செய்தான்.  பயிர் செழித்ததால் ராஜ்யத்தில் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். . மேட்டு நிலங்களை தன் வில்லால் பிளந்து சமமாக்கித் தந்தான்.  பாறைகளை அகற்ற உதவினான். ஆஜகவம் என்ற வில், அதை மீட்டி நாதம் வரச் செய்வான்.  வில்லை தோளில் தரித்தபடி செல்லும் சமயம், வாலை தூக்கிக் கொண்டு ம்ருகேந்திரனே உலாவுவது போல இருக்கும்.  பல சமயங்களில் தானே நிலத்தை உழுது சமன் செய்து விடுவான்.  

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  பதினாறாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-26

அத்யாயம்-17

மைத்ரேயர் தொடர்ந்தார்: இவ்வாறு அந்த வேனன் மகன், தன் குணங்களாலேயே பிரசித்தி பெற்றான்.  வேண்டியவர்களுக்கு, தேவையானதைக் கொடுத்து, மரியாதைக்குரியவர்களை மதித்து வணங்கியும், முக்கியமான ப்ராம்மணர்களை , மற்ற வர்ணத்தினர், தன்னிடம் ஏவிய வேலைகளை செய்யும் பணியாளர்கள், முதல் மந்திரிகள், அரண்மனை ஆலோசகர்கள்,  ஊர் ப்ரமுகர்கள், ஜான பத தலைவர்கள், அவர்கள் வரிசைக் கிரமப் படி மதித்து நடந்து கொண்டான்.

விதுரர் கேட்டார்:   பூமி பசு ரூபம் எடுத்தது ஏன்?  பல விதமான ரூபம் உடையவள் தரித்ரீ என்ற பூ தேவி. அவளிடம் ப்ருது ராஜா என்ன கிடைக்கப் பெற்றான், கறந்தான் என்று சொன்னீர்கள்.  எதை கறந்தான்? எது கன்றாக இருந்தது? கறக்கப் பட்டது என்ன? இயற்கையிலேயே மேடும் பள்ளமுமாக இருந்தவள் பூ தேவி, அவளை எப்படி சமமாக்கினான்?  அரசனுடைய யாக குதிரையை தேவர்கள் எதற்காக அபஹரித்தார்கள்?

ப்ரும்மன்!  நீங்கள் ப்ரும்ம வித் – ப்ரும்மத்தை அறிந்தவர்களில் சிறந்த சனத் குமாரன்   என்பவரிடம் கற்றவர்கள். ஞானம் விக்ஞானத்துடன் அறிந்தீர்கள்.  ராஜ ரிஷியாக இருந்த ப்ருது என்ன கதியடைந்தான்?

அதுவும், மற்றும் ஸ்ரீ க்ருஷ்ணர் சம்பந்தப் பட்ட பாகவத கதைகளையும் சொல்லுங்கள்.  நல்ல முறையில் சுவாரஸ்யமாக சொல்பவரிடம் கேட்பதே உயர்வு.  விருப்பமுடன் கேட்கும் பக்தன் நான். உங்களுடைய, மற்றும் அதோக்ஷஜனுடைய கதைகளைச் சொல்லுங்கள். வேனன் மகனாக வந்த பகவான் பசுவை கறந்தான் என்பது பற்றி சொல்லுங்கள். 

மைத்ரேயர் சொன்னார்:  ப்ருது அங்க ராஜ்யத்தில் அரச சபையில் முக்கியஸ்தர்களான ப்ராம்மணர்களால், அரசனாக  அபிஷேகம் செய்து வைக்கப் பட்டான்.  ஜனங்களும் ஏற்றுக் கொண்டார்கள்.  ப்ருது ராஜ்யத்தை ஏற்றுக் கொண்ட சமயம், நாட்டில், பயங்கர பஞ்சம் வந்தது.  பிரஜைகள், பசி, ஆகாரம் இல்லாமை, முதலியவற்றால் உடல் இளைத்து, அவரிடம் முறையிட்டனர்.

“அரசனே! நாங்கள் பசி கொடுமையால் மிகவும் தவிக்கிறோம். மரத்தின் உள்ளே அக்னி தகிப்பது போல. உங்களை சரணடைகிறோம். எங்களுக்கு உதவும் பதியாக எண்ணி எங்கள் கஷ்டங்களைச் சொல்கிறோம்.முதலில் எங்களுக்கு அன்னம் வேண்டும்.  பசி தாங்கவில்லை. எங்கள் உடலில் உயிர் வர, சக்தியை அளியுங்கள். லோகபாலன் நீங்கள்” என்றனர்.  ப்ருது திகைத்தான். பிரஜைகளின் இந்த நிலையை எப்படி சரி செய்வது? என்று சம்பந்தப் பட்டவர்களிடம் வினவினான்.  கலந்து ஆலோசித்து கையில் வில்லை எடுத்து பூமியை துளைக்க முயன்றான்.  அவன் கை வில்லை பார்த்து  நடு நடுங்கி பூ தேவி துரத்தப் பட்ட மான் போல ஓடினாள்.  அவளை அரசன் துரத்திச் சென்றான்.  அவளைக் கண்டவர்கள் ம்ருத்யுவைக் கண்டது போல பயந்தனர்.  நானா திசைகளிலும் ஓடி யாரும் உதவ முன் வராததால்,  அரசனிடமே முறையிட்டாள். அவளும் தர்மம் அறிந்தவள் தானே. அதனால் “அரசனே உன் ப்ரஜைகளைக் காக்க என்னை அடிக்க வருகிறாய். என் குறையையும் கேள். என்னையும் நீ பாலிக்க வேண்டியவனே” என்றாள்.   நான் என்ன குற்றம் செய்தேன் என்று அடிக்க வருகிறாய்? தீனமான பெண் என்றும் பாராமல் கொல்லத் துணிகிறாய்? உன்னை தர்மம் அறிந்தவன் என்று சொல்கிறார்களே , அதற்கு தகுந்தவன் தானா?  குற்றமே செய்திருந்தாலும், உடனடியாக பெண்களை துன்புறுத்த மாட்டார்கள். தீன வத்ஸலன் என்று பெயர் பெற்றவன், இப்படி செய்யலாமா?  என்ன நினைத்து என்னை துளைக்க முயன்றாய்? என்னை துண்டாக்கி என்ன செய்யப் போகிறாய்? என்னை என்றும் அழியாத நாவம்- படகு, அதன் மேல் விஸ்வம்-உலகம்  நிலைத்திருக்கிறது என்பர்.   மஹா பிரளய நீரின் மேல்   நிலையாக நிறுவப் பட்டிருக்கிறது என்பதை அறியாதவனா?  என்னை அழித்தால்,  உன்னுடன், உன் பிரஜைகளையும் அலை மோதும் நீரில் தான் தள்ளப் போகிறாயா? 

ப்ருது சொன்னான்:  வசுதே! என் சாஸனத்தில் உள்ளவள், என் உத்தரவை மீறுபவர்களை தண்டிப்பது என்ற முறையில் உன்னை தண்டிக்க வந்தேன்.  பூ லோக உயிரினங்களுக்கு உணவைத் தருவது உன் செயல். வசு- செல்வம் உன்னிடம் தான் இருக்கின்றன. தினமும் புல்லைத் தின்கிறாய், பால் தருவதில்லை. அதனால் துஷ்டை- அத்து மீறியவள் தண்டனைக்குரியவள்.  ஸ்வயம்பூ, அனைத்து ஔஷதிகளின்  (தாவரங்கள்) விதைகளையும் உன்னிடம் ஒப்படைத்தார். நீ அதை வளர விடாமல் வைத்திருக்கிறாய்.  இதோ பார், இவர்கள் உணவு இல்லாமல் வாடி வதங்கி இருக்கிறார்கள்.  இவர்கள் கஷ்டத்தை போக்க நான் என்ன செய்வேன். அதனால் உன்னிடம் ஒளித்து வைத்திருப்பதை என் பாணங்களால் வெளிக் கொணரப் போகிறேன்.  பெண் என்று சொல்கிறாய். யாராயிருந்தாலும் மற்றவர்களிடம் இரக்கம் இல்லாமல் நடந்து கொண்டால், என் போன்றவர்கள் வதைக்கத்தான் செய்வார்கள். பசு வேடம் போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். உன் மாயையை அறிவேன். என் பிரஜைகளை காப்பாற்ற உன்னை துளைத்து எடுக்கப் போகிறேன்.

ஆத்திரத்துடன் க்ருதாந்தன் -யமன்- போல பேசும் அரசனை விட்டு பூமி பகவானை துதி செய்தாள்.

‘நம: பரஸ்மை புருஷாய ‘  முதல் தேவனான பரம புருஷனை வணங்குகிறேன். உன் மாயையால் பலவித உருவங்கள் எடுத்துக் கொள்கிறாய்.  குணமயமானவன் நீ. உன் ஸ்வரூத்துக்கு ஏற்றபடி செல்வமோ, செயலோ, செய்வித்தலோ, மாற்றுவதோ  உன் வழக்கம்.

உன்னால் நான் நியமிக்கப் பட்டேன்.  ப்ரும்மாவால் என்னிடத்தில் பொருள்கள் சேமித்து வைக்கப் பட்டன.   இந்த அரசன் வில்லும் கையுமாக வந்து மிரட்டுகிறான். உன்னையன்றி வேறு யாரிடம் சரணடைவேன்?

முன்னொரு சமயம், உலக ஸ்ருஷ்டிக்காக, சராசரத்தையும் தன் மாயையால் என்னிடம் ரகசியமாக வைத்து பாதுகாக்கச் சொல்லி ஆணையிட்டாய். அதைத் தான் நான் செய்கிறேன். தர்ம பரமாக நான் செய்வதை இந்த அரசன் அழிக்கப் பார்க்கிறான்.

ஈசன் தாங்கள் சேமித்த செல்வம் தானே இது..  விவரம் தெரியாத இந்த ஜனங்கள்  ஜயிக்க முடியாத உன் மாயையை  அறியாமல்,  நீதான் செய்கிறாய், செய்விக்கிறாய், நீயே ஏகன், நீயே அனேகன்  மேலான பரமேஸ்வரன் என்பதை தெரிந்து கொள்ளாமல், என்னை குற்றம் சொல்கிறார்கள்.

 யுகங்கள் தோறும் ஸ்ருஷ்டிக்காக திரும்பவும் தேவையானவற்றை என்னிடம் பாதுகாப்பாக வைத்திருந்து, உன் சக்தியால், த்ரவ்ய, க்ரியா, காரக, சேதன, ஆத்மா இவைகளைக் கொண்டு பழையபடி உலகை உருவாக்குகிறாய். அந்த அளவற்ற சக்திக்கு நமஸ்காரம். அந்த பர புருஷனான வேத ரூபமான உனக்கு நமஸ்காரம். 

விபோ!  தாங்களே நிர்மாணித்த இந்த உலகம் பூத,இந்திரிய, அந்த:கரண இவைகளின் கூட்டால் அமைந்தது. என்னை ரஸாதளத்திலிருந்து காப்பாற்றி கொண்டு வந்து ப்ரளய ஜலத்தில் ஸ்தாபித்தாய்.  ஆதி வராகனாக வந்த உனக்கு நமஸ்காரம்.  ஜலத்தில் தடுமாறிய என்னை நிலை நிறுத்திய தாங்கள் தான் என்னை தற்சமயம் காக்கவும் வேண்டும்.  அதே வீர மூர்த்தி இப்பொழுது  ராஜ்ய பாலகனாக உக்ர மூர்த்தியாக கொடிய அம்புகளல் அடிக்கத் தயாராக நிற்கிறாய்.

புகழ் பெற்ற வீரர்கள், உன் குணங்களை பாடுபவர்கள், ஈஸ்வரனாக வணங்குபவர்கள்,  என்னைப் போலவே மனம் கலங்கி நிற்பார்கள். இந்த யுகத்தின் மாயை இது என்பதா. அந்த வீரர்களுக்கு நமஸ்காரம்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  பதினேழாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-36

 அத்யாயம்-18 

இவ்வாறு பகவானை துதி செய்த பின் பூதேவி, பயம் நீங்காதவளாக  தன்னை சமாளித்துக் கொண்டு மேலும் ப்ருதுவைப் பார்த்து சொன்னாள்:  உன் கோபத்தை அடக்கிக் கொள்.  நான் சொன்னதை யோசித்துப் பார். தேன் வண்டு போல நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்வது தான் பெரியோர்களுக்கு அழகு.  இந்த உலகில், அல்லது பரலோகத்தில், தத்வ தரிசிகளான முனிவர்கள்  மனிதர்கள் நன்மை பெற யோகம் என்பதே சிறந்த  வழி என்று சொன்னார்கள்.  முன் சென்றவர்கள் காட்டிய வழி, அதில் தனக்கு பயன்படும் உபாயங்களை கண்டு கொள்ளலாம்.  சிலர் சிரத்தையுடன் தாங்களே  முனைந்து எது நல்லது என்று அறிந்து கொள்கிறார்கள்.  இவைகளைக் கண்டு கொள்ளாமல் தானாக தான்தோன்றித் தனமாக செய்ய ஆரம்பிப்பவர்கள் திரும்பத் திரும்ப ஆரம்பித்து முடிவைக் காணாமல்  பாதியில் நிறுத்தி, நேரமும் பொருளும் நஷ்டமாகும்,

அரசனே! முன் ப்ரும்மா ஔஷதிகள் (பச்சிலையுடைய செடி கொடிகள்) உணவிற்காக ஏற்படுத்தினார். அதை சில மூடர்கள் முறையின்றி பயன் படுத்தி அழித்தார்கள். நான் அதை பார்த்தேன்.  அனாவசியமாக திருடப் படுகிறது, முக்கியமான சில செடி கொடிகள், விளை பொருள்கள், யாக காரியத்தில் முக்கியமாக கருதப் படுபவை,  உங்களைப் போன்ற லோக பாலகர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அரசர்கள் கண்டு கொள்ளவேயில்லை.  காலப் போக்கில் அந்த விதைகள் க்ஷீணமடைந்து விட்டன. பல நாட்களாக நானும் அதை காக்கவே முயன்று வந்துள்ளேன். நீயே பார்.  எனக்கு ஒரு கன்றைக் கொடு. கன்றிடம் வாத்ஸல்யம் உடைய பசு நான். நான் பாலாக உன் தேவைகளைத் தருகிறேன். அனுரூபமான தோஹனம்- கறந்த பாலை வைக்கத் தகுந்த பாத்திரம்.  அதையும் கொடு.   கறப்பவனாக பகவானே இருக்கட்டும்.  பூவுலகில் அடைக்கலம் தருபவனாக விளங்கும் பகவான் விரும்பினால், வேண்டிய அளவு அன்னம், கறந்து கொள்.   தேவர்கள் மழை பொழியாமல் விட்டாலும் என்னிடம் நீர் இருக்கவேண்டும். தண்ணீர் தங்க வேண்டுமானால் நிலம் சமமாக இருக்க வேண்டும்.  . அதனால் நிலத்தை சமமாக்கு.  அதற்கு சமமாக என்னிடம் பாலையும் பெறுவாய். 

அரசனும் அவ்வாறே ஸ்வாயம்புவ  மனுவை கன்றாக வைத்து,  தன் கைகளாலேயே கறந்து ஔஷதிகள்- தாவரங்கள், செடி கொடிகள் முதலியவைகளைப் பெற்றான்.  (நிலத்தை சமன் செய்து, தண்ணீரையும் பெருமளவில் தங்கச் செய்து  செடி கொடிகளையும், தாவரங்களையும் வளரச் செய்தான் என்பது உட்பொருள் தன் கைகளே பாத்திரமாக, -தன் புஜ வலிமையே மூல தனமான பூமியை வளப்படுத்தினதாக )

மற்றும் சில அறிஞர்கள்,  ப்ருது கறந்து கொண்டபின் , தங்களுக்கு வேண்டிய அளவு கறந்து கொண்டார்கள்.

ரிஷிகள், ப்ருஹஸ்பதியை கன்றாக வைத்து, சந்தோ மயமான (வேத மயமான) சுத்தமான பாலைக் கறந்து கொண்டார்கள்.  ( அராஜகமான வேன ராஜ்யத்தில் வேத பரமான யாகங்கள் எதுவும் செய்ய முடியாமல் இருந்ததை  இதன் பின் தொடர்ந்தனர்)

தேவர்கள், இந்திரனை கன்றாக வைத்து பொன் மயமான பாத்திரத்தில் சோமம், வீர்யம், ஓஜஸ் என்ற பலம், இவைகளை பாலாக கறந்து கொண்டார்கள்.

தைத்யர்கள்- திதி புத்திர்கள், தானவர்கள்,  ப்ரஹ்லாதனை கன்றாக வைத்து, இரும்பு பாத்திரத்தில் தேவ மதுவை பாலாக கறந்து கொண்டனர். (ஓவ்வொரு யுகத்திலும் ப்ரஹ்லாதன் பிறப்பான் என்றபடி தங்கள் வம்ச நன்மையை விரும்பினர்)

கந்தர்வ அப்சரஸ் என்பவர்கள், விஸ்வாவசு என்பவரை கன்றாக வைத்து பத்ம மயமான பாத்திரத்தில், மது சௌபகம் காந்தர்வம் (கந்தர்வர்களுக்கு உரியதான மது சௌபகம்) என்ற பாலை கறந்து கொண்டனர்.

சிரார்த தேவதைகள் என்பவர்கள்,  மகா பாக்கியசாலிகளான சிலர், . பித்ருக்கள் சிரத்தையுடன்  சூரியனை கன்றாக வைத்து மண் பாத்திரத்தில் கவ்யம் (कव्यम्) என்ற பாலை கறந்து கொண்டனர்.

சித்தர்கள் கபிலரை கன்றாக வைத்து, சங்கல்பமே பிரதானமான  சித்திகளை, வான சாஸ்திர வித்தைகளை அவர்களும், வித்யாதரர்களும் பெற்றனர்.

மற்றும் சிலர் மாயா என்பதை மாயையை விரும்பும் மாயாவிகள், அந்தர்தானம், அத்புதம், இவைகளை செய்து காட்டும் அறிவை மயனை கன்றாக வைத்து தாரணையே (கற்றதை பலமுறை செய்து செய்து பார்த்தல்) பிரதானமாக உள்ளவைகளை கறந்தனர்.

யக்ஷ ராக்ஷஸர்கள் பூதங்கள் பிசாசங்கள், இரவில் நடமாடும் சிலர்,  பூதேசன்- சிவன் அன்பர்கள் கபாலம், ரக்தம் இவற்றை கறந்து கொண்டனர்.

பாம்புகள் சர்ப்பங்கள், நாகங்கள், தக்ஷகனை கன்றாக வைத்து விஷத்தை பில (பள்ளம்) பாத்திரத்தில் கறந்து கொண்டனர்.

பசுக்கள்,  காளையை கன்றாக்கி புல்லை,, பெரிய பற்களையுடைய  ம்ருகேந்திரன்   அரண்யமே பாத்ரமாக பற்கள் உடைய மிருகங்களை கறந்து கொண்டனர்.

மாமிசம் உண்ணும் ப்ராணிகள், மாமிசத்திற்கு ஏற்றவைகளை,  சுபர்ணனை கன்றாக வைத்து பறவைகள் அசையும் அசையா பொருட்களுடன் சராசரத்தை விரும்பின.

வட வ்ருக்ஷம் என்ற ஆல மரத்தை கன்றாக வைத்து காட்டு மரங்கள், தனித் தனி விதமான பாலை பெற்றன.  மலைகள் ஹிமவானை கன்றாக வைத்து,  பலவிதமான தாதுக்கள் தங்கள் மலைச் சாரல்களில் பெற்றன.

இவ்வாறு ஒருவருவரும், தாங்கள் உயர்வாக எண்ணுவதை வைத்து, பூ தேவியின் பால் (உதவியால்)  தங்களுக்கு ஏற்ற பாத்திரங்களில் சகல விருப்பங்களையும் தரும் பூதேவியின் அருளால் பெற்றனர். இதனால் மகிழ்ந்த ப்ருது அரசன்,  அன்புடன் பூதேயை தன் மகளாக ஏற்றுக் கொண்டான்.  அவள் சொன்னபடியே முடிந்தவரை மேடு பள்ளங்களை சீராக்கி தண்ணீர் தேங்கும்படி குளங்களை வெட்டி,  கிராமங்களை, சற்று பெரிய நகரங்களை நிர்மாணித்தான். கோட்டைகளை, தானியங்கள் சேகரிக்கும் இடங்கள், கோசாலைகள், வ்ரஜ எனும் கால் நடைகளை வளர்க்கும் இடங்கள், போர் வீரர்களுக்கான கூடாரங்கள், வேட்டையாடுபவர்களுக்கான கேடம்(खेट्म्) என்ற இடங்கள்,  வியாபாரிகளுக்கான தனி இடங்கள்,  முதலியவற்றை நிர்மாணித்தான்.  இது வரை இது போல பொதுமக்கள் நலத்துக்கான இடங்கள் இருந்திருக்கவில்லை என்பதால் ப்ருது முதல் அரசன் புரம்- நகரம் என்பதை நிர்மாணித்தான்.  மக்கள் பயமின்றி வாழ்ந்தனர்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  பதினெட்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-32

 அத்யாயம்-19 

அதன் பின் ப்ருது, அரசனாக பல யாகங்களை செய்தான்.  மனுவின்   ப்ரும்மாவர்தம் என்ற இடத்தில்,  கிழக்கு திசையில் சரஸ்வதி நதிக் கரையில், நூறு யாகங்கள் செய்தான்.  அதைப் பார்த்து, தன்னுடைய தனி சிறப்பு அது என்பதால் நூறு யாகங்கள் செய்தவன் என்று சிறப்பு பெயராக ‘சதக்ரது’ என்ற அழைக்கப் பட்ட இந்திரன் பொறாமை கொண்டான்.  யாக குண்டத்தில் தானே சாக்ஷாத் பகவான் ஸ்ரீ ஹரி, ஈஸ்வரன், தோன்றினான்.  ப்ரபு தானே சர்வ லோக குரு. 

இந்திரனுடன், ப்ரும்மா, முதல் லோகபாலர்கள், கந்தர்வர்கள் பாடிக் கொண்டு வர, முனிகளும் அப்சரர்களும், சித்தர்கள், வித்யாதரர்கள்,  தைத்ய தானவர்கள், பகவானின் பார்ஷதர்கள் (பிரதான காவலர்கள்) சுனந்த நந்தன் என்பவர்களும்,  மற்றும் முக்கிய அனுசரர்கள், (பணியாட்கள்)  கபிலர், நாரதர், தத்தர், யோகேசர்கள், சனகன் முதலானோர்,  அனைவரும் வந்தனர்.  பாகவதர்கள் இவர்களைப் பார்த்து உத்சாகமாக உடன் வந்தனர். 

ப்ருதுவின் ராஜ்யத்தில் பூமி சகல சௌக்யங்களையும், செல்வங்களையும் தருபவளாக இருப்பதைக் காணவே வந்தனர்.   எஜமானான அரசன் வேண்டிக் கொண்டான் என்று, செல்வங்களை பூ தேவி பாலாக வர்ஷிக்கிறாள், என்பது ஆச்சர்யம்.   நதிகள் அனைத்து ரஸங்களையும் – பால், தயிர், அன்னம், முதலியவைகளின் ருசியுடன்,  மரங்கள் பழங்கள் பெருமளவு தேன் வடியும் ருசியுடன் பழங்களுடன், என்று இருப்பதைக் கண்டனர்.  சமுத்திரங்கள், ரத்னங்களின்  பெட்டகம் போலவும், மலைகள் நான்கு விதமான ஆகாரங்களைத் தருவதாகவும், பொது மக்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய அதிகாரிகள்  இருப்பதையும் கண்டு அதிசயித்தனர்.

இதைக் கண்டு, இந்திரனின் அசூயை வளர்ந்தது அதோக்ஷஜன் தானே ப்ருதுவாக வந்திருக்கிறான் என்பது கூட நினைவில்லை. யாகத்தை தடுக்கவே முயன்றான்.   சத மேத என்ற அஸ்வமேத யாகத்தின்  யக்ஞ பசு எனப்படும் நூறாவதான  கடைசி அஸ்வம், அதை திருடிக் கொண்டு அந்தர்தானமானான்.  

வேகமாக கிளம்பிச் சென்றவனை அத்ரி மகரிஷி பார்த்தார். இது என்ன அக்ரமம் என்று நினைத்தார்.  தர்மம் அறியாதவனா, ஏன் இப்படி அதர்மத்தை அவிழ்த்து விட்டது போல செய்கிறான் என்று நினைத்தார்.   

அத்ரி மகரிஷி ப்ருதுவின் மகனிடம் இந்த விஷயத்தைச் சொன்னதும் அவன் நில் நில் என்று கத்தியபடியே இந்திரனை பின் தொடர்ந்தான். ஆனால் அவனுடைய தார்மிகமான உருவத்தை பார்த்து தயங்கினான். ரிஷிகள்  போன்ற உருவம், உடல் முழுவதும் பஸ்ம-விபூதி தரித்த கோலம், பாணத்தை பிரயோகிக்க யோசித்தான். திரும்பி வந்தவனைப் பார்த்து அத்ரி சொன்னார்:  மகனே! யாராயிருந்தாலும் யாகத்தை, அது  நடந்து கொண்டிருக்கும் சமயம் தடுப்பவன் மஹா அதமன். அவனை வதைக்கத் தான் வேண்டும்.  மஹேந்திரன் தான் ஆனாலும் இது பெரிய குற்றம்.  ராவணன் ஜடாயுவை அடித்தது போல, ப்ருது புத்திரன்,  இந்திரனை தொடர்ந்து சென்று தாக்கினான்.  இந்திரனை கொல்லாமல் சாமர்த்யமாக  வென்று, யாக பசுவை- அஸ்வத்தை  கவர்ந்து கொண்டு யாக சாலைக்குத் திரும்பினான். அத்ரி மகரிஷி மகிழ்ந்து அவனுக்கு விஜிதாஸ்வ – என்று பெயர் சூட்டினார்.

ப்ருதுவும் இந்திரனின் மாயா ரூபத்தை அடிக்க தன் வில்லை எடுத்தான். கூடியிருந்த ரிஷிகள் தடுத்தனர்.  யாகத்தை முடிக்காமல் யுத்தம் செய்ய வேண்டாம்.  ஏகோன சத க்ரது: – ஒன்று குறைய நூறு யாகம் செய்தவன் என்று இருக்கட்டுமே. நீயோ  மோக்ஷம் அடைவதையே விரும்புவாய், விடு, என்று சமாதானப்படுத்தினர்.  பகவானின் அம்சம் உடையவன் இந்திரன். அவனுக்கு சில பொறுப்புகள் பகவானே கொடுத்திருக்கிறார். இருவருமே உலக நன்மைக்காக செய்ய வேண்டியவை பல உள்ளன. நீயும் உத்தம ஸ்லோகன் – புகழ் வாய்த்தவன். அரசனே! இதை நினைத்து வருந்தாதே. நாங்கள் சொல்வதைக் கேள் என்றனர்.  இவ்வாறு நம்மை மீறி வரும் தடைகளை தெய்வ சங்கல்பம், என்று அத்துடன் விட்டு விடு.  அதிக ஆத்திரம் மனதை குழப்பும். இந்த யாகத்தை இத்துடன் முடிப்போம்.  இந்திரன் தான் பாஷாண்டியாக – அதர்மியாக செய்தால், நாமும் அதே போல அவனைத் தண்டித்து அதர்மத்தை செய்ய வேண்டாம். தர்மத்தை காக்க வந்தவன் நீ.  தர்மம் அந்தந்த நேரத்தை பொறுத்தது.  வேனனின் அக்கிரமத்தால் உலகம் கஷ்டப் படுவதைத் தடுக்க அவதரித்தாய், அவன் மகனே ஆனாலும் விஷ்ணுவின் பகுதியாக இந்த அவதாரம் என்பதை அறிவோம்.

மைத்ரேயர் சொன்னார்: இவ்வாறு லோக குரு சொல்லி அரசனை அவப்ருத ஸ்னானம் என்பதை செய்து யாகத்தை  முடிக்க வைத்தார்.  வந்திருந்த  அறிஞர்களும் அதை ஏற்றுக் கொண்டனர். அரசனுக்கு ஏராளமான ஆசிகளை அளித்தனர்.  அவர்களை கௌரவித்து, தானங்களை தாராளமாக செய்து அரசனும் அவர்களை சந்தோஷமாக அனுப்பி வைத்தான். பித்ருக்கள்,  தேவர்கள், ரிஷி, பொது ஜனங்கள் என்று அனைவருக்கும் செய்ய வேண்டியவைகளை குறைவறச் செய்தான்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  பத்தொன்பதாவது  அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-42

 அத்யாயம்-20

வைகுண்டத்திலிருந்து பகவான் இந்திரனுடன் ப்ருது ராஜனை  சந்திக்க வந்தார்.   நூறு யாகம் செய்ய முயன்றதையும் பாராட்டினார்.  யாக பதி யான பகவான் , ஒன்று குறைந்தாலும் நான் மகிழ்ந்தேன் என்றார்.  இந்த இந்திரன் அஸ்வத்தை கவர்ந்து சென்று  யாக காரியத்தை நிறுத்தி விட்டான் என்று அறிந்தேன். அவனை மன்னித்து விடு.  

மனிதர்களின் அரசன் குடி மக்களுக்கு  தேவ சமானமானவன்.  உத்தமர்கள் எனப்படும் நல்ல மனிதர்கள் பொறாமைக்கு இடம் கொடுப்பதில்லை. ஏனெனில் ஆத்மா வேறு, உடல் வேறு என்று அறிந்தவர்கள் தான்.  உன் போன்ற பதவியில் இருப்பார்கள் இப்படி  பொறாமைக்கு இடம் கொடுத்தால்  இதுவரை செய்த நல்ல காரியங்கள் மறந்து போகும்.  வித்வானாக இருப்பவன்  பற்றின்றி இருப்பான்.  தன் குழந்தைகள், செல்வம், இவைகளை தனது என்று ஒரு போதும் எப்படி நினைக்க மாட்டான். சுத்தமான ஸ்வயம் ஜோதி ஒன்றே. அது நிர்குணமானது. மறு பக்கம் குணங்களே நிரம்பியது. எதையும் தள்ளி நின்று சாக்ஷியாக மட்டுமே இருந்து பார்க்கும் பரமாத்மா. ஆத்மாவை விட மேம் பட்டது.  உயிரினங்களின் ஹ்ருதயத்தில் இருந்தும், பார்வையாளனாக  இருக்கும் பரமாத்மாவை அறிந்தவர்கள் கூட, என் உள்ளத்தில் பரமாத்மா இருந்து என்னை இயக்குகிறான், ஆனாலும் என் செயல்கள் அவனை பாதிப்பதில்லை என்பதை அறிவார்கள்.  தன் குல வழக்கப் படி தினமும் என்னை சிரத்தையுடன் பஜிப்பவன் நாளடைவில் சந்தோஷமாக இருப்பான்.  பர தத்வத்தை உள்ளபடி அறிவான்.  அவனது எண்ணங்கள் பரவலாகும். உலகில் அனைத்தும் ஒன்றேயான பர தத்வத்தின்  பல ரூபங்கள் என்பதை உணர்வான். அதனால் எந்த பற்றுதலும் இன்றி இருக்கும் உள்ளத்தில் சாந்தியே நிரம்பியிருக்கும்.  ப்ரும்ம கைவல்யம் அடைவான். (மறு பிறவி இராது)   செல்வம், ஞானம், க்ரியா  இவைகள் இந்த நிலையில் அவனை பாதிப்பதில்லை.  உள்ளிருக்கும் ஆத்மாவை அறிந்தவன் நல்ல கதியை அடைவான் என்பதில் சந்தேகமில்லை.  மற்றவர்களின் மேன்மையான குணங்களோ, சம்பத்துக்களோ, கண் எதிரே தெரியும் அவர்களின் சுக துக்கங்களோ,  உன் போன்ற ஸூரிகள்  – பெரும் பதவிகளில் இருப்பவர்கள், பொருட்படுத்தக் கூடாது. வீரனே! உன் கடமையை செய். லோக ரக்ஷணம் என்பது தான் உனக்கு விதிக்கப் பட்ட கடமை.   உனக்கு சமமாகவோ, உயர்வாகவோ, மட்டமாகவோ யார் எப்படி இருந்தாலும்   அரசனுக்கு தன் பிரஜை என்ற ஒரே அளவு கோல் தான் . அதன்படி சம மான பொறுப்புடன் அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரஜா பாலனம் அவன் தொழில்.

செழிப்பான காலத்தில் லாபத்தில் ஆறு அம்சம்(6%) வரி வசூலிக்க வேண்டும்.  மற்ற பிரஜைகளின் நன்மைக்காக இதை செய்ய வேண்டும்.  பிரஜைகளின் புண்யத்தில் அரசனுக்கான  பங்கை பெறுகிறான். அதனால், அவர்களை ரக்ஷிக்காமல் விட்டால் பாபத்திலும் பங்கை பெறுவான்.  அதனால் வரி வசூலிப்பது நாட்டிற்காகவே. அது போலவே  தன் குணத்தால் செயலால் உயர்வான். செய்தால் பாராட்டுவதை விட, செய்யாமல் விட்டால் அதிகமாக தூஷிக்கப் படுவான்.  அவனுக்கு விதிக்கப் பட்ட செயல்களை, ப்ராம்மணர்கள்,  ஊர் முக்யஸ்தர்கள், தர்மம் அறிந்தவர்கள், இவர்களின் வழி காட்டுதலில், தன் கொள்கையையும்  நிலை நிறுத்த வேண்டிய பொறுப்பில் இருப்பவன்.  அரசனே, என்னிடம் வேண்டும் வரம் கேள்.  உன் குண சீலம் இவற்றால் நான் மகிழ்ந்தேன். யாகமோ, தவமோ, யோகமோ  இவைகளால் மட்டும் என்னை சுலபமாக அடைய முடியாது.  சம சித்தன்- எந்த நிலையிலும் தன் சமமான-நியாயமான உணர்வை மீறாதவன் எனக்கு அருகில் இருக்கிறான்.

இவ்வாறு லோக குருவான பகவானால் அறிவுறுத்தப் பட்ட அரசன் ப்ருது, தலை வணங்கி அதை ஏற்றுக் கொண்டான்.   ஆணையிடுங்கள், நான் என்ன செய்ய வேண்டும் என்றான்.   மகேந்திரன், வெட்கி தலை குனிந்து நின்றிருந்தான்.  அவனை அணைத்து சமாதானப் படுத்தி  அவனை விரோதியாக எண்ணியதை விட்டு, விட்டான்.

அதன் பின் ப்ருது ராஜா செய்த மரியாதைகளையும், பக்தியுடன்  சரணங்களில் செய்த அர்ச்சனைகளையும் ஏற்றுக் கொண்டார்.   உடனே கிளம்பாமல் சற்று நேரம் அங்கு இருந்தார்.  கண்களில் நீர் வழிய ஆதி ராஜன் எதிரில் நின்ற ஸ்ரீ ஹரியை கை கூப்பியபடி பார்த்தபடி இருந்தான். எதுவும் பேச முடியாமல் குரல் தழ தழத்தது. உண்மை தானா, ஹ்ருதய குகையில் இருப்பதாக சொல்லப் படும் பகவான் எதிரிலா நிற்கிறேன் என்று நம்ப முடியாமல் திகைத்தவன் போல இருந்தான். 

ப்ருது “ ப்ரபோ! தங்களோ வேண்டிய வரங்களை தருபவர். உங்களிடம் என்ன யாசிப்பேன்?  இந்த மனித உலகின் போகங்களைக் கேட்பேனா?  தன்னை வசப் படுத்திக் கொண்டவனுக்கு இவைகளால் என்ன லாபம்? ஸ்வர்கம் வேண்டும் என்பேனா?  இங்கு பல அறிஞர்கள் கூடி பகவானின் பதாம்போஜத்தில் பக்தியுடன் பாடியும் பேசியும் அனுபவிக்கிறார்களே , எதேச்சையாக கேட்டவர்கள் கூட நன்மைகளை அடைகிறார்களே, அந்த சுகம் அங்கு இல்லையே, அதனால் அதுவும் எனக்கு உயர்வாக படவில்லை. அதனால் எனக்கு உன்னிடம் அசையாத பக்தியைக் கொடு. இந்த பூ உலகில் பூஜை செய்தும், உங்கள் அருளை எண்ணி பாடியும், பேசியும், மற்றவர்களிடம் கேட்டும் என் வாழ்வை நிறைவாக்கிக் கொள்வேன்.  லக்ஷ்மி தேவியைப் போல அனவரதமும் தங்கள் அருகிலேயே இருக்க வேண்டும்.  எந்த இடத்தில் சாதுக்கள், உன்னை பூஜிக்கிறார்களோ அங்கு லக்ஷ்மி தேவி கண்டிப்பாக இருப்பாள், அது போன்ற நிலையை எனக்கும் கொடு. ஜகஜ்ஜனனீ  என்று அவளைப் போற்றுகிறோம். எந்த செயலும் செய்யும் முன்  அவளை வேண்டி ஆரம்பிக்கிறோம்.  தீன வத்ஸலன் நீ உன்னை வணங்கினாலே அவள் அருளும் கிடைத்துவிடும். தந்தை தனயனுக்கு செய்வது போல என்றும் உங்கள் அருளும் ஆசியும் வேண்டுகிறேன்.

மைத்ரேயர் சொன்னார்: இப்படி ஆதி ராஜன் துதி செய்ததும், பகவான் அப்படியே ஆகட்டும். நல்ல காலம், உனக்கு இது போன்ற மெய்யறிவு அமைந்துள்ளது.  நாளடைவில் என் மாயையான இந்த பிறவி பெரும்கடலை கடப்பாய்.   ப்ரஜாபதே! நான் சொன்ன அறிவுரைகளின் படி ஆண்டு வருவாய். நல்லதே நடக்கும். என்றார்.

இவ்வாறு ராஜரிஷியான ப்ருதுவுக்கு ஆசீர்வாதம் செய்து விட்டு பகவான் கிளம்பினார்.  தேவரிஷிகளும், பித்ருக்களும், கந்தர்வ, சித்த சாரணர்களும், மற்றும் உலகில் பலரும், யக்ஞேஸ்வரனின்  சம்பாஷனையைக் கேட்க வந்தவர்கள் உடன் திரும்பிச் சென்றனர். அவர் கண்களிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு அரசனும் அவனது மந்திரிகள், ஆசிரியர்கள் திரும்பிச் சென்றனர்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  இருபதாவது  அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-38

அத்யாயம்-21 

பகவானின் அருள் வாக்கை பெற்றவன் என்று ஜனங்கள் ப்ருது அரசனை மிகவும் மதித்து மகிழ்ந்து வரவேற்றனர்.  ஆங்காங்கு  வரவேற்பு அலங்கார வளைவுகள், தோரணங்கள், பூக்கள், பூ மாலைகள், சுவர்ண தோரணங்கள் என்று ஊர்  முழுவதும் அலங்கரித்து விட்டனர்.  சந்தன, அகரு,வாசனை கலந்த நீர் தெளித்து  தெருக்களும், ராஜ வீதிகளும் மணத்தன.  உதிரி புஷ்பங்கள், அக்ஷதை, பொரி முதலியவைகளைக் கொண்டு வழியெங்கும் மங்களமாக செய்திருந்தனர்.  தூண்களில் வாழைக் குலைகளுடன்  வாழை மரங்கள் கட்டப் பட்டிருந்தன, பூக (பாக்கு) மரங்களின் சிறு செடிகள் நடப்பட்டன.  வரிசையாக விளக்குகள் ஏற்றி, சிறுவர் முதல் பல வயதிலும் உள்ள பெண்கள் ஆரத்தியுடன் தயாராக நின்றனர்.  சங்க, துந்துபி வாத்யங்கள் முழங்கின.

வேத கோஷம் செய்யும் பெரியவர்கள் முன் செல்ல அரசன் ப்ருது தன் நகரில் நுழைந்தான். அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.  பல துறைகளிலும் முன்னோடியாக இருந்து புகழ் பெற்ற பெரியவர்கள் வந்து ஆசீர்வதித்தனர்.  கிரமங்களிலிருந்தும், பெரிய நகரங்களிலிருந்தும் வந்திருந்த ஊர் மக்கள் முகத்தில் மகிழ்ச்சி தெரிய வந்தனர்.  செயற்கரிய செய்தவன் என்று கொண்டாடினார்கள்.  பல ஆண்டுகள் நல்லபடியாக ராஜ்யத்தை ஆண்டபின் பரம பதம் சென்றான்.

சூதர் சொன்னார்: ஆதி ராஜன் என்று பெயர் பெற்ற ப்ருதுவின் கதையைக் கேட்டபின்னும்  விதுரர் மேலும் வினவினார்.  குணவான் அதனால் புகழ் பெற்றான். அது மட்டுமல்ல. ஜனங்களின் அன்பையும் பெற்றான். முனிவரே! பூதேவியால்அனுக்ரஹிக்கப் பட்டான். வைஷ்ணவ தேஜஸ் உடையவன் , பூதேவியிடம் வேண்டிய பொருள்களைப் பெற்றான் என்று தெரிந்து கொண்டேன்.  என்ன பொருள்கள், எப்படி அவனுக்கு கிடைத்தன? அதையும் சொல்லுங்கள் என்றார்.  பின்னால் வந்த அரசர்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறான். எப்படி ராஜ்ய பரிபாலனம் செய்வது என்பதை அவன் சரித்திரம் சொல்கிறது.    இன்று வரை எல்லா அரசர்களும் ப்ருதுவின் பாதையில் தடங்கலின்றி செல்கிறார்கள்.

மைத்ரேயர் சொன்னார்: கங்கை யமுனை நதிகளின் இடைப் பட்ட நிலத்தை ஆண்டவன். ஏழுதீவுகள் உள்ள பூமியில் ஒருவனே சாசகனாக, செங்கோல் செலுத்தினான்.  ப்ராம்மணர்கள்,  அச்யுத கோத்ரர்கள், மற்றும் பலரும் அவன் ஆணையை ஏற்றுக் கொண்டனர்.   

ஒரு சமயம் பல அறிஞர்கள், ரிஷிகள், சாதுக்கள்,நிறைந்த  சபையைக் கூட்டி அவர்கள்  அபிப்ராயத்தைக் கேட்டான். “சபையோர்களே! கேளுங்கள்.  கேட்டபின் உங்கள் எண்ணத்தை சொல்லுங்கள். எதுவானாலும், அந்தந்த துறையில் உள்ளவர்கள் அனுபவம் மிக்கவர்களின் சொல் ஏற்க வேண்டியதே.  அறிந்து கொள்ளத்தான் கேட்கிறேன், அரசனாக ஆணையிடவில்லை.  மிகுந்த பிரயாசைகளுடன் என்னை வேனன் வம்சத்தினனாக ஏற்று அரசனாக்கினீர்கள். அதனால் என் கடமைகளும் ஏராளமாக இருந்தன. துஷ்ட நிக்ரஹம் என்று சிலரை தண்டித்தேன்.  தன் தர்மத்தை அனுசரித்து அமைதியாக வாழ விரும்பும் பிரஜைகளுக்கு அவ்வாறே வேண்டியவைகள் குறைவற கிடைக்கும்படி செய்துள்ளேன். தொழில் செய்யும் மக்களுக்கு அதற்கான சாதனங்களை, வசதிகளை செய்து கொடுத்தேன்.  அரசன் நியாயமாக செய்யவேண்டியதைச் செய்தால் பகவான் திருப்தியடைவான் என்று வேதம் அறிந்த பெரியவர்கள் சொல்வார்கள்.  மக்களிடம் வரியை வசூலித்துக் கொண்டு ப்ரதி பலனாக அவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டால், அரசன் அந்த மக்களுடைய  பாப கர்மாக்களின் பலனையும் ஏற்க வேண்டியிருக்கும் என்றும் சொன்னார்கள்.  பொது ஜனங்கள் தங்கள் குல தர்மப் படி தங்கள் செயல்களை செய்து வந்தாலே அரசனுக்கு நன்மை.  அதுவே அவர்கள் தங்கள் குல தர்மத்தை செய்ய முடியாமல் சிரமப்பட்டால், அதன் பலன்  எனக்கு தீமையாக முடியும்.ஹே! ப்ரஜா:! பிரஜைகளே நீங்கள் உங்கள் சுய நலத்திற்காக, குடும்ப நலனுக்காக  செய்யும் நல்ல காரியங்களில் எனக்கும் பங்கு உண்டு என்பதால், உங்கள் குல தர்மானுஷ்டானங்களை குறைவற செய்யுங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன்.

என் குல மூத்தோர்கள்,  மனுவிலிருந்து ஆரம்பித்து, உத்தானபாத, துருவ, ராஜ ரிஷி ப்ரியவ்ரதன், என் தாத்தா, அங்க ராஜா வரை, மற்றும் ப்ரும்மா, மகேஸ்வரன், ப்ரஹ்லாதன், பலி என்ற பலரும் , நான்கு வித புருஷார்த்தங்களும் (தர்மார்த காம,மோக்ஷம்)   பகவான் அருளால் மட்டுமே சாத்யம் என்று நம்பினர். கர்மம் தானாக பலன் தராது.  இதில் மாற்று கருத்து இல்லை. ஒரு சிலரே,  ம்ருத்யுவின் பெண் வயிற்று பேரன், வேனன்  போன்றோர், உண்மையை அறியாத மூடர்கள் தான் மறுப்பார்கள். நாம் அதை பொருட்படுத்த வேண்டியதில்லை.   நாம் நம்மை படைத்து, கங்கா ப்ரவாஹம் போல நன்மைகளை அளித்து வரும் பகவானையே நம்புவோம்.  குல வழக்கப்படி அத்யயனம் செய்யுங்கள், குலத் தொழில் செய்யுங்கள் எதுவானாலும் பகவத் தியானத்தோடு செய்யுங்கள். பின்னின்று இயக்குபவன் அவனே என்ற நினைவோடு  மனதால், சொற்களால், உடலால் செய்வதை அதே தியானமகச் செய்யுங்கள்.  நிச்சயம் பலன் பெறுவீர்கள்,

பகவான் தானே யக்ஞ ரூபனாக இருக்கிறான். “यज्ञो वै विष्णु:”  என்பது வேத வாக்யம். பலவிதமான பொருள்கள் யாகத்தில் பயன் படுத்தப் படுகின்றன.  உலக நன்மைக்கான சங்கல்ப மந்திரங்கள் அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்யும்.  பொது மக்களுக்கு பல வித தானங்கள் செய்யப்படும்.  இதை விவரமாக நல்ல அறிஞர்களைக் கொண்டு செய்யப் போகிறோம்.  பகவானே யாகரூபியாக இருப்பதால் அவரை மகிழ்விக்கும் வகையில் தான் யாகங்களை செய்ய நிறைய த்ரவ்யம், உபகரணங்கள் இவைகளை பயன் படுத்துவோம். பரமானந்த ஸ்வரூபியான பகவான் மரத்தினுள் அக்னி போல உயிரினங்களின் உள்ளும் உறைந்து இருப்பவர்.  அதனால் என்னுடன் இணைந்து இந்த யாக காரியங்களில் ஈடுபடுங்கள்.  பிரஜைகள், ப்ராம்மணர்கள் தங்கள் கல்வி, பயிற்சி இவைகளால் நாட்டுக்கு நன்மையை பயப்பதான இந்த யாகத்தை திறம்பட செய்யட்டும்.  மற்றவர்கள் அவர்களை மதிப்புடன் நடத்துங்கள்.   ப்ரும்ம நித்யம்- அழிவிலாத ப்ரும்மம் – அதை சிரத்தை, தவம், மௌனம் , சம்யமம் , சமாதி – இவை அந்த ப்ரும்மத்தை அடைய சாதனைகள்.  இதை செய்யும் தவ சீலர்கள் – இவர்களை நான் தலையின் அவர்கள் பாதத் தூளி பட வணங்குகிறேன்.   ப்ரும்ம குலம், பசுக்கள். என்னை அனுசரிப்பவர்கள், எல்லோரையும் ஜனார்தனன்  மகிழ்ந்து ஆசீர்வதிக்கட்டும்.

மைத்ரேயர் சொன்னார்: இவ்வாறு சொல்லும் அரசனை சாதுக்கள், பித்ரு தேவதைகள், அந்தணர்கள், மகிழ்ந்து சாது, சாது என்று சொல்லி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.  புத்ரேன ஜயதி-மகனால் நன்மை அடைவான்-  என்பது உண்மையான வார்த்தை.  ப்ரும்ம தண்டத்தால் வேனன் அடிபட்டான்.  தாமசமான குணமே பிரதானமாக பாபியாக இருந்தான். ஹிரண்ய கசிபு கூட பகவானை நிந்தித்து பாபத்தை சம்பாதித்தான். மகன் ப்ரஹ்லாதனால் நல்ல கதியடைந்தான்.  சர்வ லோகத்துக்கும் ஒரே பாதுகாவலானாக இருக்கும் ஸ்ரீ ஹரியிடம் பக்தியால், தங்கள் புத்திரர்களால் இந்த தந்தைகள் இருவரும் நல்ல கதியை அடைந்தனர்.  அஹோ! இன்று உன்னுடன் நாங்களும் ப்ரும்மண்ய தேவன், கதையை கேட்டு  ரசித்தோம். அரசனே! உன் ஆட்சியில் இது அதிசயமில்லை. சிரஞ்ஜீவ- நீடுழி வாழ்க.  பிரஜைகளிடம் அன்புடன் இருப்பவன்.  நாங்களும் எங்களை மேம்படுத்திக் கொள்ள உன் வார்த்தைகள் தூண்டுகோலாக இருக்கின்றன. உண்மையான பக்தன் தான் மற்றவர்களிடம் இது போன்ற மாற்றத்தை உண்டு பண்ண முடியும்.

नमो विवृद्धसत्त्वाय पुरुषाय महीयसे ।यो ब्रह्म क्षत्रमाविश्य बिभर्तीदं स्वतेजसा ॥

தன் தேஜஸால், ப்ரும்ம ஸ்வரூபியான பரம புருஷனே,  க்ஷத்திரியனுடைய செயலையும் நடத்துகிறான். அந்த மகானான பலவிதமான ஆற்றல்களை  உடைய  பகவானை வணங்குகிறேன்.

((இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  இருபத்து ஒன்றாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-53

 அத்யாயம்-22 

ஜனங்கள் ப்ருதுவின் அரிய செயல்களால் மகிழ்ந்து, தங்கள் அரசனை வாழ்த்தி வரவேற்றுக் கொண்டிருக்கும் பொழுது, குமாரர்களான  நான்கு முனிவர்களும் வந்தனர்.  சித்தர்களான அவர்களை  சூரியனே இறங்கி வந்தது போன்ற தேஜசுடன் இவர்கள் வருகை, அதைக் கண்டவர்களின் பாபம் என்ற இருட்டை போக்கி விடுவார்கள் என்பது போல இருந்தது.  தன் சபையினருடன் அவரை வரவேற்க எழுந்தான்.  சபையினரும் மிக்க மரியாதையுடன் தலை குனிந்து வணங்கியபடி அரசனைத் தொடர்ந்தனர்.  அர்க்யம் முதலியன கொடுத்து ஆசனங்களில் அமரச் செய்தனர்.  பாதத்தில் விட்ட நீரை புனிதமாக  எண்ணி தலையில் தெளித்துக் கொண்டனர்.   பொன் மயமான தன் அரியனையிலேயே அவர்களை அமரச்செய்தான்.  சிரத்தை, அடக்கம் இவைகளுடன் அன்புடனும் அவர்களை குசலம் விசாரித்தான்,

ப்ருது” அஹோ! என்ன பாக்கியம் செய்தேன். உங்கள் காலடி பட்ட என் தேசம் பாவனமாயிற்று. உங்களை காண்பதே முனிவர்களுக்கும் அரிது என்பர்.  குமாரர்கள் அனுக்ரஹம் செய்த என் ராஜ்யத்தில் வேறு எது தான் இவ்வுலகிலோ, பர லோகத்திலோ அடைய முடியாதது?   உங்கள்  அருள் கிடைத்தாலே, சிவன் விஷ்ணு மற்றும் தேவதைகள் தாங்களே ஆசீர்வதிப்பார்கள்.  உலகை சுற்றி சுற்றி வரும் நீங்கள் உலகியலில் எதையும் லட்சியம் செய்வதில்லை என்றும் அறிந்திருக்கிறோம்.  அனைத்தையும் கண்டும் அறிந்தும் ஆத்மாவாக உள்ளுறையும் பகவானே காரணம்.  செல்வம் இல்லாதவர்கள் கூட குடும்பஸ்தர்கள் பாக்கியசாலிகள்.  ஏனெனில் இவர்களுடைய வீடுகள், உள்ள பூமி, இங்குள்ள தண்ணீர், புல் பூண்டுகள், அனைத்தும் உங்கள் வரவால்  பாவனமாகிவிட்டன.   சாதுக்கள் (விருந்தினர்கள்) , பலரும் வந்து இருந்து அனைவருமாக அனுபவிப்பது  வீட்டுக்கு அழகு.  அந்தண  ச்ரேஷ்டர்களே, உங்கள் வரவு நல்வரவாகுக.  வயதான பின் மோக்ஷம் விரும்பி சிரத்தையுடன் செய்யும் பல சாதனைகளை நீங்கள் பால பருவத்திலேயே செய்தவர்கள்.  எங்கள் இந்திரியங்கள்,  இகலோக காரியங்களிலேயே மூழ்கி உள்ளன.  துக்கமோ சுகமோ அனுபவிக்கிறோம். அதைத் தவிர வேறு எண்ணமே இல்லை. ஆத்மா ராமர்கள்- தன்னிறைவு பெற்றவர்கள், சிறந்த ஞானிகள்,என்பதால் குசலம் விசாரிப்பதில் அர்த்தமில்லை.  நாம்  ஒருவருக்கொருவர் நலம் விரும்பும் நண்பர்கள் ஆதலால், கேட்கிறேன். என்ன காரியமாக வந்தீர்கள்?  எங்களுக்கு அனுக்ரஹம் செய்யவே வந்துள்ளீர்கள் என்பது வரை தெளிவாக தெரிகிறது. உருவம் தான் சித்தர்கள், ப்ரும்மாவே தாங்கள் என்று அறிவோம். 

மைத்ரேயர் சொன்னார். இனிமையாக சுருக்கமாக சொன்னாலும் தன் எண்ணத்தை அழகாக சொல்லி முடித்த ப்ருதுவைப் பார்த்து, மெல்ல சிரித்தபடி,  குமாரர் பதில் சொன்னார்..  

சனத்குமாரர் சொன்னார்.  நன்றாக கேட்டீர்கள் மகாராஜனே!  அறிவுடையவர்கள். உங்களைப் போன்றவர்கள் இப்படித்தான் எண்ணுவார்கள், பேசுவார்கள்.  பொது ஜனங்களின் நன்மையே உங்கள் முதல் பொறுப்பாக நினைப்பது தெரிகிறது.  கூடிப் பேசுவது இருவருக்கும் நல்லது. சம்பாஷனைகள், ஒருவருக்கொருவர் ப்ரச்னைகளை கேட்டுக் கொள்வதும் பரஸ்பரம் தீர்வாக கூட அமையும்.  ராஜன்! மதுவை வென்ற மாதவனின் பாதாரவிந்தங்களில் மனதை செலுத்துபவர், அவருடைய குண கதைகளில் ஈடுபாடு உள்ளவர் என்பதால், இயல்பாகவே உங்கள் மனத்தில் களங்கம் என்பதே இல்லாமல் தூய்மையாகி விட்டது.  

சாஸ்திரங்கள் சொல்வதும் இவ்வளவே. தன் பிரஜைகளின் க்ஷேமம் தான் அரசனின் முதல் கடமை. தன், தன்னுடைய என்ற எண்ணம் நிர்குணமான ப்ரும்மாவை நம்புவதால் அருகிலேயே வராது. நித்யம் யோகேஸ்வரனை உபாசித்து, தனிப்பட்ட சாதனைகளாலும், மேலும் மேலும்  தன்  அறிவை வளர்த்துக் கொள்வதில் மற்ற பெரியோர்களின் வரலாறும் வழி காட்டக் கூடும்.  தன்னைச் சுற்றி பலர் இருப்பதில் பெருமை கொள்வதற்கில்லை. அவர்களும் ஒத்த குணமுடையவர்களாக பகவானிடம் நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பது அவசியம்.

அஹிம்சை, பரமஹம்ஸ (யோகிகள்) பற்றிய வரலாறுகள், நிணைவாற்றல், எது செய்ய வேண்டியது எது தேவையில்லாதது என்ற பாகுபாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும்.   இயல்பாகவே ப்ரும்மத்தில் விருப்பம் உள்ளவன்,  நல்ல குருவிடம் ஞான மார்கத்தை கற்றுத் தேர்ந்து,  ஆசைகளைத் துறந்து ஐந்தாக உள்ள வீர்யமற்ற ஜீவ கோசம் என்பதை எரித்து விடுவான்.  அக்னி மூட்டப்பட்டால் கிடைத்ததை விழுங்கி எரிப்பது போல. (பஞ்ச பூதங்களால் சூழப்பட்ட ஜீவ கோசம்- ஹ்ருதயம், அதை சாதனைகளால் கட்டுக்குள் வைக்க, ஞானம், அதைப் பெற  குரு உபதேசம் இவை தேவை. இவை இரண்டையும் பெற்றாலும் சுபாவமாக ஈச்வர பக்தியுள்ளவன் தான் முழுமையாக பயன் பெறுவான்.   அவித்யை எனும் மனித பிறவியின் குணத்தை ஞானத்தால் எரித்து விடுவான்.)  சுகம் துக்கம் என்ற இரட்டைகளால் பாதிக்கப்படாமல் உள்ளும் புறமுமாக  சாந்தனாக பர தத்வத்தை அவன் தெளிவாக காண்பான்.  இக லோக வாழ்கை என்பதை கனவில் காண்பது போல காண்பதும், பின் அதை மறப்பதும், அது ஒரு தோற்றமே உண்மையல்ல என்று உணருவதும் அவனுக்கு சாத்தியமாகும். இல்வாழ்கை அவனுக்கு ஒரு சத்யமான  மார்கமே. இக பர லோகத்திற்கான சாதனமே. அவ்வளவுதான்.   நீரிலேயே இருந்தாலும் நாணல் போன்ற தாவரங்கள், அந்த நீரில் மூழ்காமல் தன் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்வது போல – ஆகவே, யாருடன் நாம் உரையாடுகிறோம், உடன் வசிக்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.  நான்கு வித புருஷார்த்தங்களில் மோக்ஷம் தான் இலக்கு, மற்ற மூன்றும் ஓரளவு தான், அவை உள்ளூற யம பயத்தையே கொண்டது- ஒரு நாள் அழியும் தன்மையது.  அதனால், நரேந்திரா!  இந்த பூமியில் உள்ளவரை, பலவிதமான மக்கள் சூழ இருக்கத்தான் வேண்டும். சிலர் தேஹமே அனைத்தும் என்ற கொள்கையுடையவர், ஒரு சிலர்  அது அழியக் கூடியதே என்ற உணர்வு உள்ளவர்கள்,  எப்படி இருந்தாலும் உன் கொள்கையில் மாற்றம் இல்லாமல் அவர்களுடன் அனுசரித்துக் கொள். அனைவரும் பகவான் ஸ்ருஷ்டியே.   “ஸோऽஸ்மி” என்ற ப்ரும்ம வாக்கியம்  அது தான் தாரக மந்திரம். இவ்வாறு பலவிதமாக உபதேசித்தார்.

மைத்ரேயர் சொன்னார்: இவ்வாறு சிறந்த ஞானியான குமாரர் உபதேசிக்கவும்,  ஆத்மகதி என்பதை காட்டி,நன்றாக விவரித்தும் சொன்னதைக் கேட்டு அரசன் பதில் உரைத்தான்.

“ எனக்கு உங்கள் அனுக்ரஹம் கிடைத்தது என் பாக்கியம்.  முன் பகவானே உபதேசித்தார். அதைத் தொடர்ந்து

நீங்களும் வந்துள்ளீர்கள்.  என் உள்ளத்தில் நன்றாக வேரூன்றி நிலைத்து நிற்கும்படி நன்றாக சொன்னீர்கள். வேறு என்ன வேண்டும், என்  ப்ராணனோ, தாரம்-மனைவி, புத்திரர்கள், ப்ரும்மன்! வீடு வாசல், பரிவாரங்கள், ராஜ்யம், பலம், பூமி, பொக்கிஷம் எல்லாமே இந்த உபதேசங்களுக்கு முன் ஒரு பொருட்டும் இல்லை. சேனாபதி என்றும், ராஜ்யம் என்றும், தண்டம், தலைமை என்பவைகளாலும், சர்வ லோக அதிபதி என்றும் சொல்லப் படுபவைகளுக்கு வேத சாஸ்திரம் அறிந்தவனும் தகுதியுடையவனே.   அந்தணன் தன் உழைப்பில் கிடைப்பதை தானே அனுபவிக்கிறான். அன்னமோ, வஸ்திரம், தனம் என்பவை க்ஷத்திரியன் முதலானவர்கள்,  அந்தணனின் ஆசியினால் பெறுகிறார்கள்.  தானம் செய்வதில் சுதந்திரம் க்ஷத்திரியனுக்கு இல்லை.  நிகமம் – வேத சாஸ்திரங்களின் பொருளை சொல்லி, எங்களுக்கு பகவானைப் பற்றியும் சொல்லி, எதை செய்தால் மேன்மை என்பதை சொல்லி, அதிலேயே திருப்தி அடையும்,  அந்தண உத்தமரே, உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்?  

மைத்ரேயர் சொன்னர்: இவ்வாறு சொல்லி மகா ராஜா ப்ருது அவர்களுக்கு செய்ய வேண்டிய மரியாதைகளைச் செய்தான். அவர்களும் அரசனை ஆசிர்வதித்து கண் முடி திறக்கும் முன் மறைந்தனர்.  மகாராஜா வைன்யன்-ப்ருது, பூமியை நல்ல படியாக ஆண்டான். அத்யாத்ம சிக்ஷா- ஆத்ம தத்வம்- ஆத்மா, பரமாத்மா என்ற விஷயங்கள் பற்றி அறிந்து  கொண்டது அவனுக்கு மகிழ்ச்சியளித்தது.. அந்தணர்களை மதித்து அவர்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டான்.  தன் செயல்களை திட்டமிட்டு, கால, தேசம், தன் சக்தி, இவற்றுடன் எது உசிதமோ, எந்த அளவு செலவழிக்க முடியுமோ, என்பதையும் யோசித்தே செய்தான். எது செய்தாலும் அதை ப்ரும்மார்ப்பணம் என்று சொல்லி, தான் அந்த செயலை செய்ய நியமிக்கப் பட்டவன் மட்டுமே என்பது போல தன் பிரஜைகளின் பிரதி நிதியாகவே எண்ணி நடந்து கொண்டான்.  மனதளவில் பற்றின்றி, வீட்டில் இருந்தாலும்,  சாம்ராஜ்ய லக்ஷ்மி அவனிடம் இருந்தாலும், போகங்களில் ஈடுபடாமல், சூரியன் போல பாரபக்ஷம் இன்றி அனைவருக்கும் உகந்தவனாக இருந்தான்.  தனக்கு அனுகூலமான ஐந்து பிள்ளைகளைப் பெற்றான். விஜிதாஸ்வன், தூம்ரகேசன், ஹர்யக்ஷன், த்ரவிணன், வ்ருகம் என்று பெயர்கள்.

தன் காலத்தில், சோம ராஜன் போலவும், சூரியன் போல கொடுத்தும், தான் பெற்றும், எப்படி பூமியிலிருந்து நீரை உறிஞ்சி, மழையாக திருப்பி தருகிறதோ, அது போல வரி வசூலித்தும், வசதிகள் செய்து கொடுத்தும், சமயங்களில் உறுதியாக தண்டித்தும், பூமியின் செல்வத்தை பெருக்கினான்.  எதிர்க்க முடியாத பராக்ரமம் உடையவனாக, மகேந்திரன் போல இருந்தான்.  வானம் பொழிவது போல மக்களுக்கு தராளமாக கொடுத்தான். சமுத்திரம் போல ஆழ்ந்த குணம், தன் சக்தியை வெளிக் காட்டாமல் அடக்கம், தன் கொள்கைகளில் மலை போல உறுதி, தண்டிப்பதில் தர்ம ராஜன், ஹிமவான் போல அளவிட முடியாத ஆச்சர்யங்கள் நிறைந்தவனாக,   குபேரன் போல நிறைந்த பொக்கிஷம் உடையவனாக, வருணன் போல மற்றவர்களால் கணிக்க முடியாதவனாக, மாதரிஸ்வா போன்று அனைத்து இடங்களிலும் பரவலாக அறிந்தவனாக, பகவான் பூத நாதன் போல எதிர்க்க முடியாத பலசாலி,  மன்மதன் போன்ற உடலும், கம்பீரத்தில் சிங்கம், வாத்சல்யம் மனு போலவே, ப்ரபுத்வம் என்பதில் ப்ரும்மாவே எனும்படியும்  ப்ரும்ம வாதம் செய்வதில் ப்ருஹஸ்பதி, தன்னையறிவதில் தானே ஸ்ரீ ஹரி, குரு, பக்தியில் விஷ்வக்சேனர், மற்ற தன் முயற்சி,  லஜ்ஜை, சீலம் இவைகளில் தனக்கு ஈடு தானே என்றும் இருந்தான். அவன் புகழை கேட்டவர்கள் மயங்கினர்.   குணவான்களில் ஸ்ரீ ராமர் போலவும் இருந்தான்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  இருபத்து இரண்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-63

அத்யாயம்-23

ஒரு சமயம் திடுமென நினைத்துக் கொண்டாற் போல தனக்கு வயது ஆகி விட்டது என்பதை உணர்ந்தார்.  தன் மகன்களிடம் ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு அந் நாட்களில் பெரியவர்கள் வயதான காலத்தில் வீடு வாசல்களைத் துறந்து வனம் செல்லும் வழக்கத்தையொட்டி தானும் வனம் செல்ல நினைத்தார்.  அந்த நினைவு வந்ததே ஈஸ்வரனுடைய கட்டளை என்று நம்பினார்.   மகளை மகன்களிடம்  ஒப்படைத்து விட்டு,  மனைவியுடன் கிளம்பி விட்டார்.  வைகானஸ என்ற முறைபடி உக்ர தவத்தில் ஈடுபட்டார். சில சமயம் பழங்கள், கிழங்குகள் என்று ஆகாரம், அதன் பின் உலர்ந்த இலைகள், அதன் பின் நீர் மட்டுமே,அதன் பின் வாயு மட்டுமே என்று ஆகாரத்தைக் குறைத்துக் கொண்டே வந்தார்.  வேணிற் காலத்தில் பஞ்ச தபஸ், ஐந்து விதமான வெப்பம், குளிர் காலத்தில் கழுத்து வரை நீரில் அமிழ்ந்து இருந்து என்று அதன் நியமங்களை அனுசரித்தார். ப்ராண வாயுவை அடக்கி பேச்சையும் குறைத்து, ஸ்ரீ க்ருஷ்ண தியானம் மட்டுமே என்று தவம் செய்தார். ப்ராணாயாமம் தொடர்ந்து செய்து ஆறு வித பிராணன் களையும் தன் வசம் செய்து  யோக சாதனையின் முடிவில் கமலாசனம் – என்பதில் நிறுத்தினார்.   சனத் குமாரர் உபதேசித்த படியே யோக சாதனைகளைச் செய்து ஆத்யாத்மிகம் என்ற உயர் நிலையில் பகவானை ஆராதித்தார்.  சாதுக்கள் பகவானையே நம்பி இருப்பவர்கள், சிரத்தையுடன் சாதனைகளைச் செய்து மனதை தன் வசம் வைத்துக் கொள்வார்கள்.  தன் இக லோக கடமைகளை செய்து முடித்து விட்ட திருப்தியுடன் பர லோக சாதனமான தவம், சுய கட்டுப்பாடு என்பதியும் குறைவற செய்து ஞானம், விரக்தி இவைகளுடன் தன் ஜீவகோசம் என்பதை பிளந்தார்.  இந்த நிலையை அடைய, யோக சாதனைகளும் தவமும் மட்டும் போதாது, பகவானிடம் அசலமான- முறையாத நம்பிக்கையும் வேண்டும். இவ்வாறு வீரனான அந்த அரசன், தன் ஆத்மாவை பரமாத்மாவில் ஐக்யபடுத்தி, ப்ரும்மமாகவே ஆனார். சரீரத்தையும த்யாகம் செய்தார். . குண்டலினி யோக முறைப்படி, வாயுவை குதத்திலிருந்து மேலேற்றி, மெள்ள மெள்ள நாபி,ஹ்ருத் கண்ட , புருவ மத்தி, உச்சந்தலை கொண்டு சென்று வாயுவை வாயுவுடன், பூ என்ற மண் அம்சமான உடலை (உடலின் கடினமான பகுதிகளை)நிலத்துடன்,  தேஜஸ் என்ற அம்சத்தை அதன் மூலப் பொருளுடன்,  ஆகாசத்தில்  உயிர் தத்வத்தை, த்ரவம் என்பதை (சரீரத்தின் ருதிரம் முதலான திரவங்கள்) , நீரில் அதனுடைய அம்சமாக மனித உடலில் இருந்ததை நீருடன்  என்று பிரித்து வெளியேற்றி விட்டார். க்ஷிதி-பூ தத்வம் (மண் அல்லது நிலம்) இதை நீருடன்,  அதை தேஜஸை -அக்னியுடன், அக்னியை வாயுவுடன், வாயு ஆகாசத்தில் என்று முதலில் தோன்றிய கிரமத்திலேயே அவரிடமிருந்து விடுபட்டன.  மற்றும் இந்திரியங்கள், உடல் இயங்க காரணமாக இருந்தவை மனம், தன்மாத்ரைகள் இவைகளை பௌதிகமான பஞ்ச பூதங்கள் விலகியபின், மஹத் என்ற தத்வத்துடன்  இணைந்து கொண்டன. 

மாயாமயமான உலகில் வாழ்ந்த காலத்திலும் தன் குணங்களுடன் எப்படி வாழ வேண்டும் என்று காட்டுவது போலவே வாழ்ந்து, பின் ஞான வைராக்ய மார்கங்களை அனுசரித்து ப்ரபு தன் லீலையை முடித்து தன் இருப்பிடம் சென்று விட்டார். 

அர்சி என்ற மஹாராணி, அவருடன் வனம் வந்த அவருடைய பத்னி, கோமளமான சரீரம் உடையவள், கால்கள் பூமியை ஸ்பர்சித்தாலே வாடும் என்பது போன்ற உடல் வாகுடையவள், அவள் அறிந்தெல்லாம், தன் பதியின் சேவையே, அவருடைய தேவைகளை பூர்த்தி செய்வதே என்று வாழ்ந்தவள்,  அவர் பிரிவினால் பாதிக்கப் பட்டாலும், தன் துக்கத்தை வெளிக் காட்டவில்லை, அவருக்கு உதக க்ரியா – நீர் வார்த்தல் என்ற அபர கார்யத்தை தானே செய்து விட்டு, முப்பத்து மூன்று தேவதைகளையும் , மூன்று முறை ப்ரதக்ஷிணம் செய்து வணங்கி கணவனையே நினைத்தபடி  தானும் சிதையில் வீழ்ந்தாள்.  

தேவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.  பூமாரி பொழிந்தனர்.  பதியுடன்  மரணத்திலும் கலந்த  அவர் மனைவியைக் கொண்டாடினர்.  ஆஹா, இந்த  பெண் தன்யா- பாக்யம் செய்தவள்  என்றனர்.  புகழ் பெற்ற அரசனின் பத்னியாக வாழ்ந்தாள்.  யக்ஞ மூர்த்தியான பகவானுக்கு ஸ்ரீ தேவி போல . – நம் கண்ணெதிரிலேயே அவள் பர லோகத்திலும் ப்ருது மகா ராஜனை அடைந்து விட்டாள் என்று போற்றினர். அவருடைய சீலத்திற்கும், பகவானிடத்தில் பக்திக்கும் இது ஏற்றதே என்றும் பலவாறாக பேசிக் கொண்டனர்.

மைத்ரேயர் சொன்னார்:  ஆத்ம ஞானம் பெற்ற ப்ருது ராஜா தனக்குரிய கீர்த்தியை அடைந்தான். உடன் அவன் மனைவியும்  உடன் சென்றாள், என்ற இந்த கதையை படிப்பவர்களூம், கேட்பவர்களும் ப்ருது போலவே புகழை அடைவார்கள்.  பலவிதமான பலஸ்ருதிகளைச் சொல்லி முடித்தார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  இருபத்து  மூன்றாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-39

 அத்யாயம்-24 

மைத்ரேயர் தொடர்ந்தார்: ப்ருதுவின் மகன் விஜிதாஸ்வன் பட்டத்துக்கு வந்தான்.  தன் இளையவர்களையும் தனக்கு சமமான பதவிகளில் அமர்த்தினான்.  ஹர்யக்ஷனுக்கு கிழக்கு, தூம்ரகேசனுக்கு தெற்கு, வ்ருகனுக்கு மேற்கு, துர்யோ என்பவனுக்கு வடக்கு என்று பிரித்து கொடுத்தான்.  சிகண்டி என்ற மனைவியிடம் மூன்று குழந்தைகள் பிறந்தன. முன் ஒரு சமயம் வசிஷ்டர் சாபத்தால் மறைந்திருந்த பாவக, பவமான, சுசி என்ற மூன்று அக்னிகளும் உயிர் பெற்றன.  ராஜ்ய காரியங்களான வரி வசூலித்தல் முதலியவைகளை மற்றவர்களிடம் விட்டு விட்டு தான் நீண்ட யாகம் செய்ய முனைந்தான்.  அதை வெற்றிகரமாக முடித்து சமாதி நிலையில் நற்கதியடைந்தான்.

அந்த வம்சம் ஹவிர்தானன் என்பவன் மூலம் வளர்ந்தது. ஹவிர்தானனுக்கு ஏழு பிள்ளைகள்.  பர்ஹிஷ்பதன், கயன், சுக்லன், க்ருஷ்ணன், சத்யன், ஜிதவ்ரதன் என்பவர். இவர்களில் பர்ஹிஷ்பதன் வேத்தில் சொன்ன கர்ம காண்டத்தையும், யோக மார்கத்தையும் ஒரு சேர அனுசரித்தான். விடாது யாகம் செய்து வந்தவன் ராஜ்யத்தில் கிழக்கு பகுதி யாகத்தில் பயன்படும் குசம் என்ற புல் மூடிய ப்ரதேசமாக ஆகி விட்டது. பின்னால் அவன் பெயரே, ப்ராசீன பர்ஹிஷி என்று மாறியது.  சமுத்திரத்தின் மகளான சதத்ருதிம் என்பவளை மணந்து பத்து பிள்ளைகள் பிறந்தன.

அதிக அளவில் பிரஜைகளை உத்பத்தி செய்யச் சொல்லி தந்தை சொன்னதைக் கேட்டு, அவர்களும் சமுத்திரத்தில் இருந்து தவம் செய்தனர். எதேச்சையாக  பகவான் கிரீசனை வழியில் சந்தித்தனர்.  அவரை மகிழ்வித்து ஜபம், பூஜைகள் செய்தனர்.

விதுரருக்கு ஆச்சர்யம். அது எப்படி பகவான் கிரீசனை வழியில் சந்தித்தனர்.  அவரும் அனுக்ரஹம் செய்தாரா? அவரை எப்படி ப்ரசேதசர்களூக்கு அனுக்ரஹம் செய்தார். முனிவரே, விவரமாக சொல்லுங்கள்.  மனித பிறவியில் அவரை காண்பது முனிவர்களுக்கே சிரம சாத்யமம்.  ஆத்மாராமர் தான். ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் ப்ரும்மாவினால் ருத்ரன் என்று பெயரிடப் பெற்றார். சக்தியுடன் தான் எப்பொழுதும் சஞ்சரிப்பார். பகவான் பவன் என்று அறிந்திருக்கிறோம்.

மைத்ரேயர் சொன்னார்: ப்ரசேதஸ் ப்ருது மகாராஜாவின் மகன். தந்தை சொல்லை ஏற்று கிழக்கு திசையில் பொறுப்பு ஏற்றுக் கொண்டான்.  தவம் செய்வது தான் அவன் எண்ணமாக இருந்தது.   எல்லையற்ற பரந்து விரிந்து இருந்த சமுத்திரத்தைக் கண்டு அதிசயித்தான். பலவித வர்ணங்களில் தாமரைகளும், நீல நிற உத்பல புஷ்பங்களும் கண்களைக் கவர்ந்தன.,  கல்ஹார, இந்தீவர புஷ்பங்கள்.  ஹம்சங்களும், சாரஸ. சக்ரவாக, காரண்டவ என்ற பக்ஷிகளும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தன. ப்ரமரங்கள்-வண்டுகள்,  சுருதி பிசகாமல் ரீங்காரம் செய்வதாக எண்ணினான். பலவித கடலில் வளரும் தாவரங்கள்.  பத்மங்கள் காற்றில் ஆடும் பொழுது விசிறிய மகரந்த மணம் எங்கும் நிறைந்து இருந்தது. காற்று அதனுடன் விளையாடுவது போல இருந்தது.  கந்தர்வர்கள் பாடுவது கேட்டது. பணவம், ம்ருதங்கம் என்ற வாத்யங்கள் இசைப்பதை முதல் முறையாக  கேட்டனர். 

இவ்வாறு மெய் மறந்து ரசித்துக் கொண்டிருக்கும் சமயம் ஒரு தேவ புருஷன்  தன் பரிவாரங்களோடு சமுத்திர ஜலத்திலிருந்து வருவதை ப்ரசேதஸும், அவன் உடன் இருந்த மற்றவரும் கண்டனர்.  புடமிட்ட பொன் போன்ற நிறம். சிதிகண்டம்.மூன்று கண்கள். பார்க்க பார்க்கத் தெவிட்டாத சுமுகமான முகமும் உருவமும்.  மரியாதையும் மகிழ்ச்சியும்  மேலிட விழுந்து வணங்கினார்கள். அவர் தான் ப்ரணதார்திஹரன் என்று புகழ் பெற்ற (தன்னை வணங்கும் பக்தர்களின் தாபத்தைத் தீர்ப்பவன்)  பகவானான, தீன வத்ஸலன்.  இவர்களைப் பார்த்து தர்மம் அறிந்தவர்கள், நேர்மையான குணம் உடையவர்கள் என்று முன்னமே அறிந்தது போல அன்புடன் வினவினார்.

ருத்ரன் சொன்னார்: நீங்கள் யாரென்று அறிவேன்.  நீங்கள் நினைப்பதையும் தெரிந்து கொண்டே, அனுக்ரஹம் செய்யத்தான் வந்தேன் என்றார். வாசுதேவன் எனக்கு பிரியமானவன்.  உங்கள் தந்தை வாசுதேவன் பக்தன். அதனால் எனக்கும் பிரியமானவர்களே.  நூறு ஜன்மங்களில் தன் குல வழக்கப் படி தர்ம காரியங்களைச் செய்து வருபவன் , விரிஞ்சி என்ற ப்ரும்ம பத்தை அடைவான். அதன் பின்  உலக வாழ்க்கையின் முடிவில் என்னைக் காண்பார்கள்.  பகவான் விஷ்ணுவின் பதமான வைகுண்டம்  தான்  பாகவதர்களின்  இலக்கு.   பாகவதர்கள் எனக்கும் பிரியமானவர்கள்.  என்னை வணங்குபவரோ, விஷ்ணு பக்தரோ என்பதில் பேதமில்லை.

உங்களுக்கு ஒரு மங்களமான ஜபத்தை சொல்லித் தருகிறேன். பவித்திரமான இந்த மந்திரத்தை குறைவில்லாத செல்வம் பெற கேட்டுக் கொள்ளுங்கள்.

மைத்ரேயர் சொன்னார்: இவ்வாறு மனம் கனிந்து பகவான் பரம சிவன் அவர்களுக்கு உப்தேசித்தார்.  கைகளைக் கூப்பி நின்றிருந்த ராஜ குமாரர்களுக்கு பகவான் நாராயண பரமான சொல்லை அருளினார்.

ருத்ரன் சொன்னார்:   नमः पङ्कजनाभाय भूतसूक्ष्मेन्द्रियात्मने ।वासुदेवाय शान्ताय कूटस्थाय स्वरोचिषे- பங்கஜ நாபன், அணுவிலும் அணுவானவன், மகத்திலும் மகத்தானவன், பெரியவன், இருளாகவும், ஒளியாகவும் இருக்கும் வாசுதேவனுக்கு நமஸ்காரம்.  என்று ஆரம்பித்து பல ஸ்லோகங்களில் வாசுதேவனை துதித்தார்.

சங்கர்ஷணன், சூக்ஷ்மமானவன், மனிதர்களின் வாழ்வை நிறைவு செய்யும் அந்தகன் அவனே, தான் முடிவில்லதவன். உலகையே முதலில், உணர்வு கொள்ளச் செய்த அந்தராத்மாவான ப்ரத்யும்னன் என்ற பெயரில் அறியப்பட்டவன்.

நமோ நம: அனிருத்தாய, : ஹ்ருஷீகேசாய இந்திரியாத்மனே,; நம: பரம ஹம்ஸாய, பூர்ணாய, நிப்ருதாத்மனே||

 மேலும் பலவாறாக துதி செய்கிறார். இளைஞர்களான அரச குமாரர்களுக்கு, தகுந்த உபதேசம் செய்தார். கடமையை செய்யும் பொழுதே பகவத் தியானமும், நல்ல குணமும் அவசியம் என்று வலியுறுத்தினார். பிரஜைகளை பெருக்குங்கள். அதுவும் பகவானின் கட்டளையே என்றார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  இருபத்து  நான்காவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-79 

அத்யாயம்-25 

மைத்ரேயர் சொன்னார்: இவ்வாறு சொல்லி பகவானை, பார்ஹிஷதர்கள் பூஜித்தனர். அவரும் கண் முடி திறக்கும் முன் மறைந்தார். ருத்ர கீதம் என்ற இந்த துதி மிக ப்ரபலமானது.  பகவான் விஷ்ணுவை துதி செய்து மகேஸ்வரன் செய்தது.  நியமத்துடன் அதை அந்த ராஜகுமார்கள் ஜபித்தும், பலகாலம் தவம் செய்தும் வந்தனர். ப்ராசீனபர்ஹிஷன் என்ற அந்த ராஜ குமாரன்,  கர்ம மார்கத்தையே பெரிதாக எண்ணி இருந்தான். ஒரு சமயம் நாரதர் வந்தார்.  இதுவும் சரிதான் ராஜன்!. துக்கம் விலகும், சுகமாக இருக்க வழி கோலும். ஆயினும் இது அனைத்திலும் ஸ்ரேயஸ்- உயர்வு  என்று சொல்ல முடியாது.

ராஜா கேட்டான்: மஹாபாக!  பெரியவரே, எனக்கு இது தவிர வேறு மார்கம் தெரியவில்லையே.  இதற்கும் மேலான ஒன்று இருக்கிறதா? அதை எனக்குச் சொல்லுங்கள், என்றான்.

சம்சாரி, வீட்டில் புத்ர தாராதிகள், அவர்களுக்கு தேவைகள், அதற்கான செல்வம் சம்பாதிப்பது என்றே என் பொழுது செல்கிறது.

நாரதர் சொன்னார்: ப்ரஜாபதியான அரசனே!  இதுவும் தான் வாழ்க்கை. ஒரு கதை சொல்கிறேன் கேள். ஒரு சமயம் புரஞ்சனன் என்று ஒரு அரசன் இருந்தான்.  அவனுக்கு ஒரு சகா. அவன் உலகை சுற்றி யாத்திரை செய்தான்.  எதைத் தேடி அலைந்தானோ அது கிடைக்கவில்லை. அவனுக்கே தான் எதைத் தேடுகிறோம் என்பதை சொல்லத் தெரியவில்லை போலும்.  பல ஊர்களைச் சுற்றியவன், எங்கும் நன்மையே தான் அவன் கண்ணில் பட்டது.  ஒரு சமயம் இமய மலையின் தென் பக்கத்து சரிவில் ஒரு ஊர். அதற்கு ஒன்பது வாசல்கள்.

ப்ராகாரங்கள், உபவனங்கள், மாடி  வீடுகள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வீதிகள்,  பொன்னும், வெள்ளியும் வீடுகளின் மேற் பகுதிகளில் அலங்காரமாக பயன் படுத்தப் பட்டிருந்தன. போகவதி என்ற நகரம் போல நீல மணிகளும் , வைடூர்ய,ஸ்படிக , முத்துக்கள், மரகதம், சிவந்த மணிகள் இவைகளாலும் மாளிகைகள் பிரகாசித்தன.  நான்கு வழி வீதிகள், ரத வீதிகள், விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடைகள், சிறு உபவனங்கள், கொடிகள் கட்டப் பெற்ற யாக சாலைகள்., புரங்களின் வெளியே பலவித மரங்கள், செடி, கொடிகள்  நிறைந்த உபவனம், மிருங்கங்கள் துள்ளி விளையாடின, கோலாஹலமான நீர் நிலைகள்,  பனித் துளிகள் அருவியாக பெருகி இருக்க, ஒருபுறம்,  பூக்களின் மணத்தை சுமந்து வந்த வாயு, ஆங்காங்கு பாத்திகளில் சிறு செடிகளும், நளினி எனும் நீரில் மலரும் பூக்களும்,  காட்டு ம்ருகங்கள் நிறைந்து இருந்தாலும் அவைகளால் பாதிக்கப் படாத முனி விரதர்கள், கோகிலங்களின் கூவலைக் கேட்டு தங்களை கூப்பிடுகிறதோ என்று எண்ணி வழிப் போக்கர்கள் தங்களாகவே வந்து பார்த்துச் செல்வர்.   அங்கு சுற்றி வந்த பொழுது ஒரு பெண்ணைப் பார்த்தான்.  தன்னுடன் பணியாட்களும், தவிர ஏவலர்களுமாக பல பேருடன்  வந்து கொண்டிருந்தாள். ஐந்து தலை நாகம் ஒன்று பாதுகாவலாக உடன் வந்தது.

தனக்கு அனுகூலமான பதியைத் தேடுபவள் போல இருந்தாள். அழகிய நிறமும், விசாலமான கண்களும், எடுப்பான நாசியும், வரிசையான பற்களுமாக கவர்ச்சிகரமாக இருந்தாள்.  குண்டலங்கள் காதுகளை அலங்கரித்தன. தேவதை போல இருந்தாள். கால்களில் நூபுரங்கள் சப்தமிட்டன.  இளம் வயதினள் என்பது உடல் வளர்ச்சியில் தெரிந்தது.  வெட்கத்துடன் வஸ்திரத்தால் தன்னை மறைத்துக் கொண்டவளைப் பார்த்து புரஞ்சனன் சகா மயங்கினான்.  மிகுந்த ப்ரேமையுடன், யார் நீ, பத்ம பலாசம் போன்ற கண்கள், யாருடையவள் நீ, எங்கு வசிக்கிறாய், இந்த வெளிப் புறத்தில் என்ன தேடுகிறாய்? சொல் என்றான்.  யார் இவர்கள். பதினோரு போர் வீரர்கள் உன்னைத் தொடர்ந்து வருகிறார்கள்.  இந்த பெண்கள் யாவர்? எதற்கு இந்த ஐந்து தலை நாகம் உன்னை முன் சென்று வழி காட்டுகிறது?  நீ ஹ்ரீ, பவானீ அல்லது ரமாவா? பதியைத் தேடுகிறாயா? உன்னைப் பார்த்தால் செல்வ செழிப்பில் இருப்பவள் என்று தோன்றுகிறது.  கமலா தேவியா? கையில் இருந்த பத்மங்கள் விழுந்துவிட்டன என்று தேடுகிறயா? சுபகே! பாக்கியசாலியான பெண்ணே,   இந்த தேவ மகளிரில் நீ ஒருவளாகத் தெரியவில்லை. பூமியில் பாதங்கள் இருப்பதால் மனிதப் பெண்தான் என்று ஊகிக்கிறேன்.

பகவான் விஷ்ணுவின் லக்ஷ்மி தேவி போல நீயும் என் மனைவியாகி இந்த ராஜ்யத்தை அலங்கரிப்பாய். சோபனே! என்னை ஏற்றுக் கொள்.  உன்னைக் கண்டதிலிருந்து மன்மதனால் வாட்டப் படுகிறேன்  உன் முகம், அழகிய புருவம், கண்கள், கருங்கூந்தல்,  நிமிர்ந்து என்னைப் பார், அழகிய உன் வாயால் ஒரு சொல் சொல்வாயாக.  வெட்கத்தினால் என்னைப் பார்ப்பதை தவிர்க்கிறாய் போலும்.

நாரதர் சொன்னார்: இவ்வாறு யாசிக்கும் புரஞ்சன சகா வை பார்த்து சிரித்துக் கொண்டே அவள் பதில் சொன்னாள்.  “என் பெற்றோர்  யார் என்பது தெரியாது. என்ன குலம் என்பதும் தெரியாது.  இந்த ஊரில் இருக்கிறேன்.  இதை நிர்மாணித்தவன் தான் எனக்கு சரணம். இந்த சகிகள் தான் எனக்கு துணை, , உதவி செய்பவர்கள். இந்த நாகம் என் பாதுகாப்புக்காக என்னுடன் வருகிறது.  இந்த நாட்டையும் காவல் காக்கிறது.அதிர்ஷ்டவசமாக வந்துள்ளாய். பத்ரம் தே- உனக்கு நன்மை உண்டாகட்டும்.   உலகியலான வாழ்க்கையை விரும்புகிறாய்.  நான் சம்மதிக்கிறேன்.  இந்த நகரையும் பாலனம் செய்வாய். இது ஒன்பது முகம் கொண்டது. வேறு எவரை நான் மனம் விரும்பி ஏற்றுக் கொள்வேன் – புத்தியோ, ரசிகனோ இல்லாத ஒரு மனிதன், பசு போன்றான். சம்ப்ரயங்களை அறியாதவன் எனக்கு ஈடு ஆவானா?

( விளக்கம்- ஓன்பது வாசல்கள் உள்ள கோட்டை- மனிதனின் உடல். குலம்- நான், எனது என்ற புத்தி- வரும் காலம்- ஈஸ்வர ஞானம் – அதுவும் தெரியாது.  வினைப் பயன் என்னை எவ்வாறு ஆட்டுவிக்கப் போகிறது என்பதும் தெரியாது. பந்துக்கள்- இந்திரியங்கள்.  மனித ஆயுள் நூறு என்பது சங்கேதம். புத்தி மனிதனின் சிறப்பு. அதனால் பசுக்களுக்கு இக- பர லோக சாதனைகள் என்பது கிடையாது. புத்தி மனிதனை ஆஸ்ரயித்து இருப்பது, ஈஸ்வரனை அடைய வழி சொல்கிறது.  பரமாத்மாவை அறியாத மனிதர்களும் அகோவிதா: அறிவு இல்லாதவர்கள்.  ஆத்மரதி- ஆத்ம திருப்தன் அல்லது தான் யார் என்று அறிந்தவன்- மனித பிறவியில் தான் இது சாத்யம்- ஞானம் மோக்ஷத்துக்கு வழி காட்டும்-  தர்மாதி அனுஷ்டானம், புத்ர சுகம் இவைகளுடன் இல்லற வாழ்க்கையே சிறந்தது. )

அதன் பின் இருவரும் தம்பதிகளாக அந்த நகரத்தில் பல காலம் வாழ்ந்தனர். ஆடலும் பாடலுமாக அவர்கள் வாழ்க்கை இனிதே சென்றது.  மேல் வாசல்கள் ஏழு, கீழே இரண்டு –  ஒவ்வொன்றும் ஒரு வித செயலுக்கானது.

மனித சரீரமும் அதன் பாகங்களும், செய்யும் செயல்களுமே அந்த நகரத்தின் கோட்டைகளாகவும், அதன் பெயர்களாகவும் அமைக்கப்பட்டிருந்தன.  

ஒன்றாக உண்டும், குடித்தும், உறங்கியும் ஒன்றாக காலம் கழித்தனர்.  சில சமயம் பாடினாள். சிரித்தாள். சில சமயம் அழவும் செய்தாள். ஜல்பம் என்ற வேண்டாத பேச்சிலும் காலம் சென்றது.  தூக்கத்திலும், பேச்சிலும் காலம் சென்றதே தெரியவில்லை.  அதிலேயே முழ்கி இருந்தவன் மிருகம் போல தன் கடமைகளை மறந்தவனாக ஆனான்.  தான் செய்து வந்த யாகங்கள், தினசரியைகளை கூ ட மறந்தான்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில்இருபத்து  ஐந்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-62

 அத்யாயம்-26 

ஒரு சமயம் வேகமாக செல்லக் கூடிய ஐந்து குதிரகள் பூட்டிய ரதத்தில் கிளம்பினான். கையில் பொன் அம்புகள், ப்தினோரு போர் வீர்கள் கொண்ட சேனைத் தலைவனாக, வனம் சென்றான். என்ன நினைத்தோ, வனத்தில் மிருகங்களை கண்டபடி அடித்தான்.  வேட்டைக்குச் செல்பவர்கள் சில நியதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பது வழக்கில் உள்ள சட்டம்.  அசுரன் போல கருணையின்றி பேராசையுடன் வேட்டையாடுபவன் தண்டிக்கப் பட வேண்டியவன். குணமில்லாதவன் அறிவிழந்தவன் என்று அவர்களை குற்றம் சாட்டுவர்.  முயல்கள், பன்றிகள். எருமைகள், பசுவால் கொண்ட மிருகங்கள், ருரூ, சல்யன் எனும் சிறு மிருகங்கள், இவைகள் சில இறந்தன, பல அடிபட்டு உடல் அங்கம் இழந்தவைகளாக துடித்தன.  அரசன் தானும் களைத்து சோர்ந்து விட்டான். பசி தாகம் வாட்டினாலும், சாப்பிடாமல், குளித்து முடித்து நேரே படுக்கைக்குச் சென்றான். தூபங்கள், வாசனைப் பொருட்களால் அலங்கரித்து கொண்டு மனைவியைத் தேடினான்.  வீட்டில் தாயாரோ, மனைவியோ இல்லையெனில் சூன்யமாக தெரிவது இயல்பே.  எங்கே போனாள் என்று துக்கத்தில் ஆழ்ந்தான். பணிப் பெண்கள் “அரசனே! ஏன் வருந்துகிறாள் என்பது தெரியவில்லை. பூமியில் படுக்கையின்றி படுத்து கிடக்கிறாள்” என்றனர். புரஞ்ஜனன் அவளை சமாதானப் படுத்த முனைந்தான்.  வழக்கம் போல அவள் இயல்பாக இல்லை.  எந்த சமாதானமும் எடுபடாமல் போகவே, கால்களில் விழுந்தான்.  என்ன தண்டனை கொடுப்பாயோ, ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் இப்படி பாராமுகமாக இருக்காதே என்று கெஞ்சினான். நல்ல ஆடையோ, ஆபரணமோ இன்றி நீ கிடப்பதை என்னால் சகிக்க முடியவில்லை என்று அரற்றினான். எதற்கும் அவள் அசையவில்லை.

( மனித சரீரமும், அதன் அங்கங்களும் கோட்டையாகவும் வனமாகவும் குணங்களாகவும் இந்த பகுதி முழுவதும் உருவகப்பட்டுள்ளன) 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில்இருபத்து  ஆறாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-26 ||

 அத்யாயம்-27 

நாரதர் சொன்னார்: இவ்வாறு முழுமையாக  அவள் வசம் ஆனவனாக ஆகி விட்ட  புரஞ்சனன்,  இரவு பகல் எதையும் உணரவில்லை. ஒருநாள் ஸ்னானம் செய்து விட்டு வந்தவளை அணைத்து சரஸமாக பேசிக் கொண்டிருந்தான். அவளும் அதை ரசித்தபடி திருப்தியாக இருந்தாள். தம்பதிகள் ஒருவருக்கொருவர்  விரும்பி உடல் சுகமே பெரிதாக காலம் கழித்தனர்.   உயர் தரமான படுக்கை, மற்ற வசதிகளுடன் அருகில் மனைவியும்  அவளும் விரும்பி தன்னை அர்ப்பணித்தவளாக இருக்கையில் வாழ்க்கையின் பொருளே அது தான் என்பது போல காலம் சென்றது. அந்த நேரத்தில் எது நல்லது, எது உண்மை எது மற்றது என்று எண்ணமே எழவில்லை. இளமை ஒரு நொடியாக அகன்றது. நூற்று பதினோரு புத்திரர்கள் பிறந்தனர்.  ஆயுளில் பாதியும் நிறைந்தது. புரஞ்சன பிரஜாபதியின் மகள்கள் அதே போல நூற்று பத்து பேர்,  அழகும், சீலமும், ராஜ குமாரிகள், என்பதற்கேற்ப உதார குணமுள்ளவர்களாகவும் இருந்தனர்.  அந்த பாஞ்சால அரசன், சரியான வரன் களைப் பார்த்து பெண்களுக்கு மணமுடித்தான். புத்திரர்களும் அதே போல குடும்ப வாழ்கையில் ஈடுபட்டு நிறைய புத்திர புத்ரிகளைப் பெற்றனர்.   புரஞ்சன வம்சம் பாஞ்சால தேசத்தில் பல்கி பெருகியது. வீட்டுச் சொத்திலேயே வாழ்ந்து வளர்ந்தவர்கள், பொறுப்பில்லாமல் திரிந்தனர். மமதையும்,  உழைப்பை அறியாத சுக வாழ்க்கையும் கண்டபடி செலவழித்தனர். யாகங்கள், ஏராளமான பலிகள் கொடுத்து,கோரமான தீக்ஷைகள், தேவர்கள், பித்ருக்கள், பூத பதிகள் இவர்களிடம் வேண்டுதல்கள் என்று பலவிதமாக. செலவழித்தனர். நாளடைவில் அவன் பிரிய மனைவிகளுக்கே அவனிடம் வெறுப்பு வந்தது.

சண்ட வேகன் என்று கந்தர்வ ராஜா. அவனிடம் மிகப் பெரிய படை இருந்தது.  ஆறாயிரத்துக்கும் மேல் பலசாலிகளான சிறந்த வீர்கள்.  அவர்கள் புரஞ்சன நகரை ஆக்ரமித்தனர்.  கூட்டம் கூட்டமாக புரஞ்ஜனனின் படை வீர்கள் போரில் ஈடுபடுத்தப் பட்டனர். போரில் தோல்வியை எதிர் பார்த்து பந்துக்கள் கவலைப் பட்டனர்.  உடல் பலம் தளர்ந்தது. உடன் மன வலிமையும் குறைந்தது (வயதானதால் பந்துக்களாக இருந்த புலன்களே ஒத்துழைக்கவில்லை)   காலத்தின் மகள் நரை – வந்து ஆக்ரமித்தாள். முதுமையின் முதல் அடையாளம்.  முதல் முறையாக ம்ருத்யு பயம் வந்தது.  இதுவரை உல்லாசமாக மனைவியே எல்லாம் என்ரு இருந்தவனுக்கு தாங்க முடியாத முதுமை தவிர்க்க முடியாதது. காலத்தின் மகள் ஒருசமயம் என்னையும் தாக்க வந்தாள்.  அந்த சமயம் யதேச்சையாக நான் பூ லோகம் சென்றிருந்தேன். நான்  நைஷ்டிக ப்ரும்மசாரி, விரதங்கள் செய்பவன் ஜரா மரணங்கள் எனக்கு கிடையாது என்று வரம் பெற்றவன் என்பதையறியாமல். வேறு யாரும் அவளை ஏற்றுக் கொள்ளவில்லை.  என்னிடம் அவள் விரும்பியது நடக்கவில்லை என்பதால் பெரிய சாபம் கொடுத்தாள்.  என் ஆசையை மதிக்காத நீ ஒரு இடத்திலும் நிலைத்து இருக்க மாட்டாய், அலைந்து கொண்டேயிருப்பாய் என்று சாபமிட்டாள்.   அதன் பின் அவள் யவன ராஜா (-சுக்ர பகவானால் சபிக்கப் பட்ட யயாதியை சென்றடைந்தாள். பயம் – என்பதை (நரை கண்டவுடன் மனதில் தோன்றுவது பயம் என்பது பொருள்)   

(சாபத்தால் முதுமை அடைந்தவன் ராஜரிஷி யயாதியிடம் பயம் இருந்ததால், அங்கு அடைக்கலம் பெற்றாள். ) 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  இருபத்து  ஏழாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-30

 அத்யாயம்-28 

யயாதியின் சைன்யம் பயம் என்பது    .ப்ரஜ்வரம், கால கன்யா -ஜரா (நரை )- இவ்விருவருடனும்  உலகை ஆக்ரமித்தான். ஒரு சமயம் புரஞ்சனனின் போகமே பிரதானமக இருந்த நகரை ஆக்ரமித்தனர்.  வயதான நாகங்களால் சூழப்பட்ட நகரம். கால கன்யா சந்தோஷமாக அந்த நகரை தன் வசப் படுத்திக் கொண்டாள். அவள் ஆளுமையில் ஊர் மக்கள் சாரமில்லாமல் துவண்டு போனார்கள்.  அவளின் பசிக்கு ஈடு கொடுக்கமுடியாமால் யவன தேசத்தவர். நாலா புறமும் சிதறி ஓடினர்.  அவள் வெற்றி நடை போட்டாள். வீட்டு வாசல் வழியாகவே தைரியமாக சென்றாள்.  ஊருக்குள் தடுப்பவர் எவருமில்லை. இதுவரை நினைத்தே பார்த்திராத தாக்குதல்.  வளர்ந்து விட்ட பெரிய  குடும்பம் – தான், தன்  என்பதே  நினைவாக இருந்தவன். நிலை குலைந்து போனான். ராஜ்யம் தொலைந்தது. காலத்தின் மகள் நாலாபுறமும் சூழ்ந்து  அவனது பலத்தை அழித்தாள்.  கந்தர்வர்களும் யவனர்களும் சூறையாடினர்.  மனைவி முன் போல அன்புடன் இல்லை. புத்ர பௌத்ரர்களும் எதிர்த்தனர்.  மந்திரிகள் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். தனித்து விடப் பட்டவன், ஜரையால் பலம் இழந்தவன், பாஞ்சால ராஜன், எதிரிகளால் வேட்டையாடப் பட்டவன், சிந்தனை வயப் பட்டான். என்ன செய்வது என்று யோசித்தான். இன்னமும் மனதில் காமம் அடங்கவில்லை. மனைவியோ பெற்ற பிள்ளைகளோ கூட மறுத்த போது கூட அவர்களையே விரும்பினான்.  சீக்கிரமே கந்தர்வ வசம் ஆனது ராஜ்யம். முதுமை மேலும் வாட்டியது. ஊரை விட்டு வெளியேற முயன்றான். அதற்குள்,   பயம் என்ற மூத்தவன் வழிகாட்ட, ப்ரஜ்வார: அந்த நகரை எரித்தான்.  எரியும் ஊரில், தன் சந்ததிகளோடு, மனைவி மக்களோடு அழிந்தான்.  மரத்தின் பொந்துகளில் வாழும் நாகங்கள், மரம் காட்டுத் தீயால் பாதிக்கப் பட்ட சமயம் வெளியே திணறுவது போல திணறினான்.  அழுதான்.  எரியும் வீட்டில் அகப்பட்டது லாபம் என்று  கந்தர்வர்கள் மற்ற எதிரிகள் பிடுங்கிக் கொண்டனர்.

வாழ்நாள் பூராவும் சுய நலமே பெரிதாக வாழ்ந்தவன், இப்பொழும் பரலோகம் சென்று விட்ட என் மனைவி எப்படி வாழ்வாள் என்று கவாலைப் பட்டான்.  தன் புத்ர, பௌத்ரர்களை பற்றி எண்ணி கவலைப் பட்டான்.

பெண் நினைவாகவே உயிரை விட்டவன், விதர்ப தேச அரசனின் மகளாகப் பிறந்தான்.  அந்த பெண் விவாக வயதடைந்தவுடன், சுயம் வரம் நிச்சயித்தான். பராக்ரமியான அரசனுக்குத் தான் என் மகள் என்று கோஷித்தான். அந்த நாட்களில் பிரசித்த அரசனான பாண்ட்ய ராஜா போட்டியில் அனைத்து அரசர்களையும் ஜயித்து அந்த பெண்ணை மணந்தான்.  மலயத்வஜ ராஜாவுக்கு, மிக அழகான ஸ்யாமள நிற கண்களுடன் புத்ரியும் ஏழு புத்திரர்களும் பிறந்தனர்.  அவர்கள் தன் நாட்டின் பிரதான அரசர்களாக ஆட்சி புரிந்தனர்.  நாளடைவில் அவர்கள் வம்சம் புத்திரர்கள், பௌத்திரர்கள் என்று பெருகியது.

அகஸ்தியர்  அந்த குடும்பத்து பெண் ஒருவளை மணந்தார்.  அவர் புத்திரர்கள்,  த்ருடஸ்யுதன், இத்மவாஹன் என்று இருவர்.  மலயத்வஜன் தன் மகன்களிடம் ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு குலாசலம் சென்று விட்டான். ராஜ ரிஷியாக இருந்த அவனுடன் அவன் மனைவி வைதர்பி என்பவளும் சென்றாள்.   தாம்ரபர்ணி, சந்த்ரவஸா என்ற நதிகளில் ஸ்னானம் செய்து உடலும் உள்ளமும் தூய்மையாக இருவரும் பகவத் தியானத்தில் நாட்களை கழித்தனர்.   தவம் செய்வதன் நியமங்களை அனுசரித்து, பழங்கள், பச்சை காய்கறிகள், என்று மிதமாக உண்டு, தவம் செய்தனர்.  யோக சாதனைகளை மேற்கொண்டு ப்ரும்மத்தில் மனம் ஒன்றி, பற்றின்றி ஸ்தாணுவைப் போல ஸ்திரமாக வாசுதேவனை துதி செய்தனர்.   மலயத்வஜன் உயிர் போன  பின் செய்வதறியாது தவித்து புலம்பி, தானும் தீயில் விழ யத்தனித்தவளை, ஒரு காலத்தில்  குடும்ப சகாவாக இருந்த ஒரு ப்ராம்மணன் கண்டான். அவளைத் தடுத்து அன்புடன் பேசி, அவளிடம் சமாதானப் படுத்தி, அழாதே, என்று சொல்லி உலகியலைச் சொன்னான்.” பெண்ணே! யார் நீ, யாருடையவள், இதோ தூங்குவது போல கிடக்கிறானே, இவன் யார்? இவனுக்காக நீ ஏன் வருந்துகிறாய்? , என்னைத் தெரிகிறதா? நான் உங்கள் குடும்பத்தின் நண்பன், முன் பல காலம்  உங்களுக்கு ஆலோசகனாக இருந்திருக்கிறேன்.   நினைவு இருக்கிறதா?  அதன் பின் பல பிறவிகள்.  மனம் போனபடி வாழ்ந்தீர்கள். உலக சுகமே நிரந்தரம் என்று நம்பி இருந்தீர்கள். நான் அவிக்ஞாத சகா.  புரஞ்சனன் என்ற அரசனாகவும், அவன் மனைவியுமாக ஒரு பிறவி.  புருஷன், மனைவி என்ற பந்தமே பகவானால் ஸ்ருஷ்டிக்கப் பட்டது.  பிரஜைகள் பெருக வேண்டும் என்பதற்காக.  என்று பலவிதமாக  தத்வ    உபதேசங்கள் செய்தான். ஒன்றே இரண்டாகி முதன் முதலில் பர புருஷன் ஸ்ருஷ்டியை ஆரம்பித்ததிலிருந்து தொடர்ந்து உலகம் இயங்கி வருவதைச் சொல்லி, மானசமான ஹம்ஸம், மற்றொரு பரமாத்மான ஹம்ஸத்தால் தட்டி எழுப்ப பட்டது போல இருந்தது. அவளும் உண்மையை   உணர்ந்து, சோகம் நீங்கி தன் உணர்வை அடைந்தாள். 

பர்ஹிஷ்மான் என்ற இந்த சரித்திரம், அத்யாத்மம் என்ற விஷயத்தை, கதை ரூபமாக, ஒருவனின் வாழ்க்கையாக சொல்லப் பட்டிருக்கிறது.  இப்படியும் கற்பனையாக சொன்னது சிலருக்கு பிடிக்கும் என்று பாகவதம் சொல்கிறது. .

 (இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  இருபத்து  எட்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-65

அத்யாயம்-29 

நாரதரிடம் கதை கேட்ட ப்ராசீன பர்ஹிஷ், பகவன், நீங்கள் சொன்ன கதை எனக்கு புரியவில்லை.  நாங்கள் கர்ம மார்கத்தை அனுசரித்தாலும் அதுவே எல்லாம் என்று நினைக்கவில்லை.   கவிகள், அறிவுடையோர் அறிவார்கள்.

நாரதர் விவரித்தார்.  எல்லா உயிரினங்களுக்கும் தன் தேகத்தை போஷித்துக் கொள்ள அறிவு இருக்கிறது. அது போல மனிதனும் தன்னை போஷித்துக் கொள்ள அறிவுடன், ப்ரக்ஞா- என்ற மேம்பட்ட அறிவையும் உடையவன்.  அதிலும் அரசனாக இருப்பவனுக்கு பொறுப்புகள் அதிகம். மனித பிறவி அடைந்தவன், இக லோகத்தை விட்டு பரலோகம் அடைய வேண்டும். மறு பிறவி, மறுபடியும் அதே வாழ்க்கை என்று இருக்காமல் பகவானை நினைக்க வேண்டும். …….

அத்யாயம்-30

விதுரர் சொன்னார்.  ப்ரும்மன்!  ப்ராசீன பர்ஹிஷனின் பிள்ளைகள் ருத்ர கீதம் பாடினார்கள்.  அது   ஹரியை குறித்த துதி என்பது வரை புரிகிறது. என்ன பலன் அடைந்தார்கள்.  எதேச்சையாக பகவான் கிரீசனைக் கண்டு அனுக்ரஹம் பெற்றார்கள் என்று சொன்னீர்கள். அது பற்றி விவரமாகச் சொல்லுங்கள்.

ப்ரசேதஸ் தந்தை சொன்னபடி, தவம் செய்ய முனைந்தனர்.  இடையூறின்றி, சமுத்திரத்தின்  உள்ளே ருத்ர கீதத்தை  ஜப யக்ஞம் என்பதாகச் செய்யலானார்கள்.  புரஞ்சனனும் மகிழ்ந்தான். பல காலம் இவ்வாறு சென்ற பின், பகவான் சனாதனான பரம புருஷன், அவர்கள் எதிரில் கருட வாகனத்தில் வந்தார்.   மேருவின் சிகரம் போல கருடனின் உருவம்ஆகாயத்தில் பரவி நின்றது. மணி ஒளி வீசும் கழுத்தும், பீதாம்பரமும் திசைகளில் தக தகத்தன.  இருளை அகற்றும் அருணனின் கிரணங்கள்  போல அவருடைய பொன் ஆபரணங்கள் ஜொலித்தன.  கிரீடம், அஷ்ட ஆயுதங்கள்,  உடன் வந்த பரிசாரகர்கள், முனிவர்கள், சுரேந்திரன் இவர்கள் கூட்டமும்,  எட்டு புஜங்களின் மத்தியில் ஸ்ரீ தேவியும், வனமாலையும், கண் கொள்ளா காட்சியாக இருந்தன. வணங்கி நின்ற பர்சிஷத புத்திர்களிடம்  இடி முழக்கம் போன்ற குரலில் பேசலானார். 

ஸ்ரீ பகவான் சொன்னார்:  என்ன வரம் வேண்டுமோ, கேளுங்கள்.  பத்ரம் தே – உங்களுக்கு நன்மை உண்டாகட்டும். அரச குமாரர்களே,  உங்கள் தவத்தை மெச்சினேன். என்றார். சந்த்யா காலத்தில் உங்களை நினைப்பவர்கள் உங்கள் சகோதரர்களுக்கு இணையாக ஆவார்கள்.  ருத்ர கீதத்தை காலையும் மாலையும் ஜபித்து வந்தீர்கள்.  உங்களுக்கு வேண்டிய வரங்களைத் தருகிறேன். நல்ல அறிவையும் அருளுகிறேன். என்றார். தந்தை சொல்லை மதித்து தவம் செய்ய முனைந்தீர்களே அது சாலவும் நன்று.  அதுவே உங்கள் குணத்துக்கு சான்று, குலத்துக்கு பெருமை. தந்தையின்  மற்றொரு ஆணை பிரஜைகளை பெருக்குங்கள் என்பது. அது அவர் பெருமையை உலகில் பரவச் செய்யும் என்றார். என்ன வரம் கேட்பது ?. என்று அறியாமல் அவர்கள் தயங்க, அவரே மேலும் சொன்னார்.

 கண்டு என்பவரின், ப்ரம்லோசா என்ற பெண்னிடம் பிறந்த பெண் கமல லோசனா,   

(கண்டு என்ற முனிவரின் தவத்தைக் கலைக்க இந்திரன் ப்ரம்லோசா என்ற பெண்னை அனுப்பினான். அவளுடன் முனியர் பல காலம் கழித்தார்.  பின் சுவர்கம் செல்லும் முன் தன் கர்பத்தை மரங்களுக்கு கொடுத்து விட்டு அந்த பெண் சென்றாள். பெண் மகவு பிறந்தது.  கண்டு முனிவரன் ப்ரும்ம தேஜசுடன் பிறந்த பெண் அழகியாக இருந்தாள். மரங்களின் அரசன், சோமன்- சந்திரன்.  பிறந்த குழந்தையின் பசிக்கு எதைக் கொடுப்பது என்று யோசித்து தன் சுட்டு விரலை அதன் வாயில் கொடுத்து சூப்ப வைத்தான். மரங்களின் கனி அம்ருதமாக இருப்பது அவன் செயலால் என்பதால் அது அம்ருதம். அதை குடித்து வளர்ந்த அப்சர ஸ்த்ரீயின் பெண். பல விதத்திலும் உங்கள் வம்சம் வளர உதவுவாள் என்றார்.   ஒரு பெண், எல்லோருக்கும் எப்படி மனைவி ஆவாள் என்ற கேள்விக்கு, அவள் அனுசரித்து நடந்து கொள்வாள்.   பல காலம் சந்தோஷமாக வாழ்ந்து பல தனயர்களைப் பெற்ற பின் என்னை வந்தடைவீர்கள் என்று அனுக்ரஹித்தார்.  ருத்ர கீதம் பாடி தவம் செய்த உங்களை இந்த இக லோக வினைகள் தொடராது. என்றார்.

இதைக் கேட்டு ப்ரசேதஸர்கள் திகைத்தனர். துதி செய்தனர்.

 உங்கள் உதார குணம் வேண்டுபவரின் க்லேசத்தை போக்கக் கூடியது.  மனம், வாக்கு, இவைகளை விட வேகமாக செல்லக் கூடிய உங்கள்  கருணை கடாக்ஷம் பெரும் பாலை நிலத்தையும் கடக்கச் செய்து விடும். உங்களுக்கு நமஸ்காரம். தூய்மையே உருவானவர், சாந்தன்- அமைதியானவர் என்று வணங்குகிறோம்.  எங்கள் ஹ்ருதயத்தில், மனிதன் அல்லாத ஆத்மாவாக உள் உறைந்து காப்பவர் என்று வணங்குகிறோம்.

உலகை படைத்து, காத்து, கலைக்கும் உங்கள் மாயை. அதை வைத்து ஆட்டுவிக்கும் குணத்துக்கு நமோ நம:- பல நமஸ்காரங்கள்..

விசுத்த சத்வர், ஹரி, ஹரிமேதஸ், வாசுதேவன் , க்ருஷ்ணன் என்று பல பெயர்கள்.  எப்பொழுதும், அனைவருக்கும் நன்மையே செய்பவர்.   பத்மனாபனான உங்களை நமஸ்கரிக்கிறோம்.  கமல மாலையை தரித்தவர், கமலம் போன்ற பாதங்கள், கண்களும் கமலம் போன்றவையே- உங்களை நமஸ்கரிக்கிறோம். கமலத்தின்  மகரந்தம் போன்ற மஞ்சள் நிற வஸ்திரம் தரித்தவர், பீதாம்பர தாரி,  அனைத்து பூதங்களிலும் இருப்பவர், ஆயுளை தரும் உங்களுக்கு நமஸ்காரம்.

எங்களுக்கு வேறு என்ன வேண்டும்?    மானிட ஜன்மத்தில் கண்களால் காண அரிதான உங்களுடைய இந்த ரூபத்தைப் பார்த்த பின் எதுவுமே தேவையில்லையே. இந்த தரிசனமே எல்லா கஷ்டங்களையும் நீக்கி விடும். தீன வத்ஸலன் நீங்கள்.  பெரியோர்கள் விரும்புவது கூட இந்த அளவே, இதற்காக தவம் செய்கிறார்கள், அனுதினமும் ஸ்மரிக்கிறார்கள், நன்மையல்லாததை எங்கள் அருகில் கூட வராமல் காப்பவர் நீங்கள். சின்னஞ்சிறு ஜீவன் முதல் மிகப் பெரிய ஜீவன்கள் வரை உள்ளிருந்து இயக்குபவர் உங்களுக்கு தெரியதா எங்களுக்கு எது நன்மை என்று, எதுவானாலும் ஏற்றுக் கொள்கிறோம்.   ஜகத்பதே! நாங்கள் வேண்டுவது இது தான்.  பகவான் ப்ரஸன்னமாக இருந்து எது பரகதிக்கு நல்லதோ அந்த வழியைக் காட்டுங்கள்.  பாரிஜாதம் தாராளமாக கிடைக்கும் பொழுது  அதன் ருசியில் திளைக்கும் வண்டுகள் அருகிலேயே இருந்தாலும் மற்ற மரங்களை நாடிச் செல்வதில்லை.  அது போல அனந்தனான உங்கள் தரிசனம் கிடைத்தபின், எங்களுக்கு வேறு எதிலும் நாட்டமிலை. இந்த பிறவியில் மட்டுமல்ல, வினைப் பயனாக வரும் பிறவிகளிலும் பாகவதர்களான உங்கள் பக்தர்களுடன் எங்கள் வாழ்க்கை அமையட்டும். சுவர்கம் கூட இதற்கு பின் தான்.  ஏனெனில் கூடி பாடுவதும், கதைகள் கேட்பதும், பஜனைகள் செய்வதும் தரும் ஆனந்தம் அங்கு இருக்காது என்கிறார்கள்.

சாக்ஷாத் பகவான் பவனை- சங்கரனை,  க்ஷண நேரம் கண்டாலும்,  சிறந்த வைத்யனான அவர் உபதேசித்த கீதம்,எங்களுக்கு இந்த உயர்வை தந்துள்ளது.  குரு ஜனங்களின் அருளால் கற்றதும்,  தங்கள் நடத்தைகள் மூலமே சிக்ஷித்த பெரியவர்களும், அந்தணர்களும், எங்கள் நண்பர்களும், அனசூயாவை போலவே அசூயை இல்லாதவர்கள்.  என்ன தவம் செய்தோம்? கடல் நீரில் மூழ்கி,  அன்ன ஆகாரமின்றி நாங்கள் பல காலம் செய்த தவத்தின் பலன், இந்த அனைவரும் உங்களுடைய அனுக்ரஹத்திற்கு பாத்திரமாக வேண்டும் என்று வேண்டுகிறோம்.  மனு, ஸ்வயம்பூ, பகவான், பவன், என்று  தவம் ஞானம் உடைய விசுத்த சத்வா: தூய்மையானவர்கள், எல்லையில்லாத தங்கள் மகிமையை துதிக்கிறார்கள்,   அவர்களுடன் சேர்ந்து வணங்குகிறோம்.

नमः समाय शुद्धाय पुरुषाय पराय च ।-वासुदेवाय सत्त्वाय तुभ्यं भगवते नमः ॥ ४२॥

மைத்ரேயர் சொன்னார்: இவ்வாறு துதி செய்யவும் மகிழ்ந்த ஸ்ரீ ஹரி, ப்ரீதியுடன் அனுக்ரஹித்து விட்டு, தன் இருப்பிடம் சென்றார்.

கடல் நீரின் ஆழத்திலிருந்து ஊர் திரும்ப நினைத்து கடல் மட்டத்திற்கு வந்தவர்கள்,  மரங்களே நிறைந்து ஊரே தெரியாமல் இருந்ததைக் கண்டார்கள். அதனால் கோபம் கொண்டு மரங்களை விலக்க எண்ணி தங்கள் வாயால் ப்ரசண்ட மாருதம் என்ற காற்றை வரவழைத்து அழித்தனர்.  பிதாமகர் ஓடி வந்தார். பேரன்களான பர்ஹிஷ்மதி ராஜ குமாரர்களை சமாதானப் படுத்தினார்.  மீதி இருந்த மரங்கள் பயந்தன.  பயந்து  தங்களுடன் ஒண்டி கொண்டிருந்த  ரிஷியின் மகளை கொண்டு வந்து ஒப்படைத்தனர்.  அவளை ஸ்வயம்பூ  அவர்களுக்கு மணம் செய்வித்தார்.  அபூர்வமான பிறவி அவள்.  மாரீஷா- மரங்களில் பிறந்தவள்.   

அந்த யுகம் காலத்தின் வசம் ஆகி முடிந்த பின், நாலாவது யுகம் ஆரம்பித்தது.  அந்த யுகத்தில் தெய்வ சங்கல்பத்தால்  ப்ரும்ம புத்ரனாக தக்ஷன்  தோன்றினார்.  

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  இருபத்து  ஒன்பது, முப்பதாவது அத்யாயங்களின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-51

 அத்யாயம்- 31

ப்ராசேதஸர்கள், முதுமை அடைந்தனர்.  மனைவியை பிள்ளைகளிடம் விட்டு தாங்கள் மட்டும் வனம் சென்றனர்.  ப்ரும்ம தீக்ஷை எடுத்துக் கொண்டு மேற்கு திசையில் யோக சாதனைகளில் ஈடு பட்டனர்.  அங்கு நாரதர் வந்தார். எழுந்து நின்று அவரை வரவேற்று உபசரித்த பின் ப்ராசேதஸர்கள் வினவினர். 

“ஸ்வாகதம் முனிவரே!  சுர ரிஷியே, உங்களக் கண்டது எங்கள் பாக்கியம்.  எங்கும் சுற்றிக் கொண்டிருப்பவர், சூரியன் போலவே லோகத்தில் அபயம் அருளுபவராக நீங்களும் சுற்றி வருகிறீர்கள்.   நீங்கள் சொல்லியபடியும், ஸ்ரீ பரமேஸ்வரன்  சொல்லியபடியும் நடத்திய என் வாழ்க்கை அனேகமாக முடியும் தறுவாயில் இருக்கிறது, ப்ரபோ!  அத்யாத்ம ஞானமும், தத்வார்த  தரிசனமும் என்னை அனாயாசமாக இந்த பவ சாகரத்திலிருந்து கரையேற உதவியுள்ளது.

மைத்ரேயர் சொன்னார்: இவ்வாறு ப்ரசேதஸ் சொன்னதைக் கேட்டு நாரதர் சொன்னார்.  அவர்கள் அனைவரையும் பார்த்து பதில் சொன்னார். நான் யார் உபதேசம் செய்ய- பகவான் ஸ்ரீஹரி செயல்- உலகில் அரசர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னாரோ அதே போல வாழ்ந்து காட்டியிருக்கிறீர்கள். நல் குடி பிறப்பு, நேர்மையான செயல்கள், நீண்ட வாழ்நாள் (அல்லது உடல் நலம்), மனப் போக்கு, ஆளுமையோடு கூடிய சொல் -இவைகள் அரசனுக்கு இருக்க வேண்டிய குணங்கள் என்றார்.  தாய் வயிற்றில் பிறப்பது ஒரு பிறப்பு, பின் உபனயனம் அல்லது ப்ரும்மோபதேசம் பெறுவது இரண்டாவது பிறப்பு, யாகங்கள் செய்து வேத கர்மாக்களை விதிப்படி செய்வது மூன்றாவது பிறப்பு.   கல்வி கற்றலும், தவம் செய்வதும் – பயிற்சிகளை விடாமல் செய்வதும், வார்த்தைகளை பொருள் பட சொல்வதும், நல்ல மனப் போக்கும், புத்தி, நிபுணத்வம்- திறமை, நல்ல பலம், புலனடக்கம் இவையனைத்தும் இருந்தாலும் விஸ்வாத்மா ஸ்ரீ ஹரியின் அனுக்ரஹம் இல்லாமல் பிரகாசிக்காது.  

ஜீவன்கள் நன்மைகள் என்று கருதுவது தன் நலம் (தன் ஆத்ம க்ஷேமம்) வரை தான்.   ஸ்ரீ ஹரிதான்  அனைவருக்கும்  விரும்பும் பலனைத் தரும் பிரிய பந்து.  மரத்தின் வேருக்கு நீர் பாய்ச்சினாலேயே மரத்தின் கிளைகள், தண்டுகள், துளிர்கள் வரை மகிழ்ச்சியடைகின்றனவோ, அது போலத்தான்.  இந்திரியங்களுக்கு ப்ராணன் – உயிர்,  தருவது போல ஸ்ரீ ஹரியின் சேவை  ஒன்றே போதும்.   சூரியனிடமிருந்து நாட்களை கணக்கிடுகிறோம், வாரங்கள், மாதங்கள் என்று காலக் கணக்கு.  பூமியில் ஜனித்த, அசையும் அசையா பொருட்கள் அனைத்தும் பூமியில் சங்கமம் ஆகின்றன.  குணங்கள் அனைத்தும் ஸ்ரீஹரியிடம் சங்கமம்  ஆகின்றன.  ஜகதாத்மா ஸ்ரீ ஹரியின் இடம் என்பது சூரியன்  பிரபை  தூங்கிய உயிர்களை எழுப்புவது  போல். த்ரவ்ய (மூலப் பொருள்), க்ரியா, ஞானம் என்ற வேறுபாடுகளுடன் சுழலுகிறது.   ஒரு சூரியன் வானம் முழுவதும் வெளிச்சம் தருவது போல, பூமியில் வாழும் அனைத்தும் தங்கள் முயற்சியின்றியே, ப்ரும்மத்திடம் சக்தியைப் பெறுகின்றன.  ரஜஸ், தமஸ், சத்வம் என்ற பேதங்கள். (மூன்று அளவு கோல்கள்) கொண்டவையாக. உயிரினத்தின் ஒரே ஆத்மா, அனைத்திலும் பரவியிருக்கும் ப்ரதான புருஷன், தன் தேஜஸால் குணங்களை இந்த அளவு கோலால் பகிர்ந்து அளித்து அதனதன் தனித் தன்மையை நிலை நிறுத்துகிறான்.   அவனது தயையோ,  திருப்தியோ, என்று ஏதோ ஒன்று, அசையும் அசையா உலகை காக்கிறது.  அனைத்து ஜீவன்களின் நன்மையில் தானும் மகிழ்ச்சியடைகிறான். அதனால் தான் ஜனார்தனன்.   பாரபக்ஷம் இல்லாமல் இருப்பதாக தெரிந்தாலும், தன்னிடம் பக்தி கொண்ட, தன் செயல்களில் நேர்மையாக இருப்பவன், தனம், உடல் பலம் இவை இல்லாதவன் என்றாலும் இவர்களுக்கு அதிக அனுக்ரஹம் செய்கிறான்.  தன் குலம், தனம் என்று கர்வத்துடன் செய்யும் செயல்களுக்கு பலனும் அதற்கு தகுந்த அளவிலேயே அமையும்.  ஸ்ரீ தேவி ஹரியினுடனேயே அனுசரித்து இருப்பவள். அவளைத் தனியாக வேண்டுவதே தேவையில்லை.

மைத்ரேயர் சொன்னார்: நாரதர் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அரசர்களை  ஆசீர்வதித்து தன் இருப்பிடம் சென்றார். அவர்களும் தங்கள் சாதனைகளைத் தொடர்ந்து செய்பவர்களாக, காலம் வந்த பின் நல்ல கதியை அடைந்தனர்.  பெரியவரே, இது தான் நீங்கள் கேட்க விரும்பிய நாரத-ப்ரசேதஸ கதை.

ஸ்ரீ சுகர் சொன்னார்: விதுரர் அதன் பின்  அவரை வணங்கி விடைபெற்றார்.  கஜஸாஹ்வயம் என்ற  இடத்தில், தன் உறவினர்களின், சுற்றத்தார்களை  காண கிளம்பினார்.  இந்த கதையை கேட்பதின் பலனாக, ஆயுள், தனம், சௌக்யம், ஈஸ்வர பக்தி இவை அமையும் என்று பலஸ்ருதி சொல்லி முடிக்கிறார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  முப்பத்து  ஒன்றாவது அத்யாயங்களின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-39

இத்துடன் நான்காவது ஸ்கந்தம் நிறைவுற்றது

|| ஹரி: ஓம் தத்சத்||

ஸ்ரீமத் பாகவதம்

Subscribe to continue reading

Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.

ஸ்ரீமத் பாகவதம்

||ஓம் நமோ பகவதே வாசுதேவாய || இரண்டாவது ஸ்கந்தம் -ஸ்ரீ சுகர் சொல்கிறார்

அத்யாயம்-1 

அரசனே! நல்ல கேள்வி. உலகத்திற்கே நன்மை பயக்கும் விஷயம்,  தன்னைத் தானே விரும்புவது போல         ஜனங்களுக்கு மிக பிடித்தமான,  சம்மதமான மேலும் கேட்கத்தகுந்த விஷயம் வேறு என்ன இருக்க முடியும்?

கேட்பதற்கு விஷயங்கள் பல உண்டு. ராஜன்! அதுவும் அரசனுக்கு பல விஷயங்கள் தெரிந்து கொள்ள கேள்வி அவசியம்.  ஆயிரக் கணக்காக உள்ளன. ஆனால் சாதாரண மக்கள்,  தான், தன் குடும்பம் என்று இருக்கும் பொது அந்த ஜனங்கள், ஆத்ம தத்வம் பற்றி எதுவுமே தெரியாதவர்கள். அவர்கள் வாழ்க்கை எப்படி போகிறது.  பாதி நாளை, நித்ரை அபகரிக்கிறது.  வேலை, நாளில் பெரும் பகுதியை, சம்பாதிக்க வேண்டும் என்றும்,  வயதுக்கேற்ப,  குடும்பத்தைக் காப்பாற்ற என்றும் சென்று விடுகிறது. தன் உடலை, தன் குழந்தைகள், பரிவாரங்கள், அரசனானாலால் சேனை,  தேவையற்ற பல செலவினங்கள், கூடவே நகர்ந்து வரும் ம்ருத்யு கண்ணுக்கு புலப்படுவதில்லை. ஆதலால், பாரதா! சர்வாத்மாவான பகவான் தான் ஈஸ்வரன், ஹரி என்று அழைக்கப் படுகிறான்.  அபயம் வேண்டுமானால், அவனைத் தான் கேட்கவேண்டும், அவன் புகழைத் தான் பாட வேண்டும், நினைவில் இருத்தி வைத்து தியானம் செய்ய வேண்டும். ஞான யோகம் அதைத் தான் சொல்கிறது. தன் தர்மத்தை அனுஷ்டி.  ஜன்ம லாபம் என்பது மனிதனாக பிறந்தவர்களுக்கு கடைசியில் நாராயண தியானம் தான்.   முனிவர்கள் ஹரி கதையில் லயித்து இருப்பது அவர்கள் பிறவி விசேஷமே. இந்த பாகவதம் என்ற புராணம் ப்ரும்மாவிடமிருந்து கேட்டு என் தந்தை எழுதியது. அவரிடம் நான் பாடம் கேட்டேன்.   முக்குணங்களை த்யாகம் செய்த துறவி நான். ராஜரிஷியே!  உத்தம ஸ்லோகன் எனும் ஹரி கதையில் என் மனம் ஈடுபடுகிறது.   நீ  மகாபுருஷன்- பரந்த மனமுடைய அரசன்.  சிரத்தையுடன் கேட்பதால்,    நான் கற்ற படியே சொல்கிறேன்.  உன் மனம் எளிதில் முகுந்தனின் பாதத்தில் லயிக்கும்.  யோகிகளும் இதைக் கேட்டு பலனடைவர்.  யார் யார் ஹரி நாமத்தைக் கேட்டு பலனடைந்தார் என்பதில் ஏன் நேரத்தை வீணடிக்கிறோம். நல்லது செய்ய நினத்த நேரமே நல்ல முஹூர்த்தம் தான்.

கட்வாங்கன் என்ற ராஜ ரிஷி.  (இந்த கதை பின்னால் வரும்.) ஒரு முஹூர்தமே வாழ் நாள் என்று அறிந்தான்.  உடனே அனைத்தையும் துறந்து, ஸ்ரீ ஹரியே சரணம் என்று வெளியேறினான்.  எது  சம்ப்ரதாயம் என்பதை தெரிந்து கொள். அந்திம காலம் வரும் பொழுது அறிவுள்ளவர்கள்,  அசங்க சஸ்திரம்- சகவாசம் என்பதே ஒரு சஸ்திரம்- ஆயுதம்.  அதைக் கொண்டு ஆசைகளை ஒழித்து, வீட்டை விட்டு வெளியேறி, ஒரு புண்ய தீர்த்த கரையில் விதிப்படி சுத்தமான ஆசனத்தில் அமர்ந்து ஏகாக்ஷரம் என்றும் ப்ரும்ம பீஜம் என்றும் சொல்லப்படும்  ஓங்காரத்தை ஜபித்த படி, ( புண்ய தீர்த்த ஸ்னானம் தேகம் ஆத்ம சுத்தி தரும்.  ப்ராணாயாமம்-  வாயுவை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பர். இதன் பின் பாதத்தில் ஆரம்பித்து மனதை கட்டுபடுத்தும் யோக முறையை விவரிக்கிறார்.)  விவரமாக, அண்ட கோசம் எனும் இந்த சரீரம் -நீர்,நிலம்,அக்னி,வாயு, ஆகாசம், மனம், புத்தி என்று ஏழு கோட்டைகள். (ஆவரணங்கள்- சுற்றுக்கள்)

யோக முறையில் தன் சரீரத்தில் முழுமையாக ஹரி த்யானமே என்று ஆன பின், அவரது உருவத்தை தன்னுள் ஸ்தாபித்துக் கொண்டான். 

பக்ஷிகள் போல அண்டம்-  (முட்டையின் உள் பறவை இருப்பது போல)  பகவானின் விராட் ஸ்வரூபம் – சர்வ ஸ்ருஷ்டியும் அவருடைய பிரதி பிம்பமாக கிரமமாக உலகில் தோன்றுகிறது. )அது அவருடைய விராட் ஸ்வரூபம். இந்த பரிணாமத்தால் வரும் விஸ்வம் விராட்  என்ற பதத்தால் குறிப்பிடப் படுகிறது. பறவை போல என்றாலும்,  விராட் புருஷனுடைய அண்டத்தில் தோன்றுவது ஒரு இலையுடன் வரும் சிறு செடி போல வளரும் தன்மையது. மேலும் சர்ப்ப – பாம்பின் சரீரத்திலிருந்து பஞ்சு (அதன் சட்டை) வருவது போல, நீர், நிலம் என்ற பஞ்ச பூதங்களும், ஏழு ஆவரணங்களும் உத்பவிக்கின்றன.  ப்ரும்மாண்டத்தைப் போலவே மனித சரீரத்திலும் இதே வரிசைக் கிரமம் தான்.  இந்த ஏழு ஆவரணங்களுடன் பிறந்த ஜீவன், அந்தர்யாமியாக ஈஸ்வரனும் இருக்கிறான்.  பகவான் தாரணாஸ்ரய: உருவம் வந்தாலும் உயிர் தருவது பகவானே. . 

விராட் புருஷணின் அவயவங்களும் அதன் பெயர்களும்: 

இந்த விராட் புருஷனின் பாதம் பாதாளம், சிலர் ரஸாதலம் என்பர்.  இரண்டு முழங்கால்களும் சுதலம். துடைகள் இரண்டிலும் கீழ் பாகம் விதலம், மேல் பாகம் அதலம். 

 ஜகனம் என்ற பின்பகுதி மஹீ தலம்.  நபஸ்தலம் – (ஆகாயத்துடன் ) பூ லோகம். நாபி பகுதி – நீர் நிலைகள்.

மார்பு பகுதி ஜ்யோதி,  ஜோதிகள் அனைத்தும்- ஸ்வர்கம்.

மஹர் லோகம் என்பது கழுத்து பகுதி.  தபோ லோகம் என்பது நெற்றி. சத்ய லோகம் தலை. 

தேவர்கள் கைகள்.

விராட் ஸ்வரூபத்தின் காதுகளின் உள் பாகம்,  திசைகள்,   காது என்ற அவயவத்தின் மற்ற செயல்பாடுகள் சப்தம் த்வனி, உச்சரிப்பு முதலியன.  வாயு அதன் அதிபதி.

அதே போல மூக்கு இதில் அஸ்வினி குமாரர்கள் அதிபதிகள்.  வாசனை. எப்படியிருந்தாலும், அதிகமோ, குறைவோ, அது மூக்கு என்ற அவயவத்தின் செயல் பாடு.

 அக்னி முகம். ஆகாசம் கண்கள். இதில் கண்கள் என்ற புலன், அதன் அதிபதி சூரியன். விராட் ஸ்வரூபமான பகவானின் கண்கள் பகலும் இரவும் ஆகும்.

விராட் ஸ்வரூபத்தின்  புருவம் நான்கு முகமுடைய ப்ரும்மாவின் ஸ்தானம்.

 விராட் ரூபத்தின் முகவாய் தண்ணீர், அதன் அதிபதி வருணன். விராட் பதியின் நாக்கு ரஸம்.

சந்தஸ்,  சந்த ப்ரதானா: வேதா: செய்யுள் என்பதன்  கட்டுப் பாடுகள். எதுகை, மோனை என்று தமிழில்.  இந்த வகையில்  வேதம் சந்தஸ் ப்ரதானமாக, அதாவது சந்தஸ் என்ற சாஸ்திரம் வேதத்துக்கு மிக முக்கியம். ஓரெழுத்து கூட கூடவோ குறையவோ கூடாது என்ற நியமம்.   செய்யுளாக அமைந்ததால் வேதத்துக்கு  சந்தஸ் என்றே பெயர். கேட்டு, திருப்பி சொல்லியே வேதத்தை கற்றதால் சப்தமும், உச்சரிப்பும் மிக முக்கியம். சந்தஸ் என்பது மொழிக்கு இலக்கணம் போல செய்யுளின் அமைப்பை வரையறுக்கும் சாஸ்திரம். வேதத்தின் ஆறு அங்கங்களுள் ஒன்று.

 விராட் புருஷனின் தலை. ப்ரும்ம ரந்த்ரம் என்ற பகுதி ஆசா பாசங்கள். மகன் முதலான பற்றுதல்கள்.  உலகம் அனைத்தும் செயல் படுவது அவருடைய கடாக்ஷத்தால். 

 ஒவ்வொரு அவயவத்துக்கும் ஒரு அதிபதி, அதன் வேலைகள் என்று விஸ்தாரமாக சொல்கிறார்.  

நதிகள் விராட் புருஷனுடைய நாடிகள். உடலில் உள்ள ரோமங்கள் மரங்கள்.  மூச்சுக் காற்று மாதரிஸ்வா என்ற காற்று. அவரது நடை  சென்று கொண்டேயிருக்கும் காலம், வயது.  அவரது  குண ப்ரவாஹ: -, சத்வம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்கள்.  கர்ம – காரியம் என்பது உலகில் ஜீவன்களின் நடமாட்டம்.

பகவானின் கேசம் நீரை சுமந்து செல்லும் ,மேகங்கள்.  சந்த்யா காலங்கள் அவரது உடை.  அவரது ஹ்ருதயம் – மிக முக்கியமான அங்கம்.   அது சந்திரன்-  மனம் 

சூர்ய சந்திரர்கள் – இரண்டு பற்களில் தோன்றியதாக சொல்கிறார்கள். மற்ற பற்களில் நக்ஷத்திரங்கள்.

ஞான ரூபமான பகவானின் சக்தி மனிதனின் சித்தம். பூமியிலிருந்த மஹத் என்ற தத்வங்கள்.  (நீர்,நிலம்.அக்னி,வாயு,ஆகாசம்,மனம்,புத்தி என்பன).   அந்த:கரணம்- மன சாட்சி -இதிலிருந்து அஹங்காரம்- தன்னியல்பு (எந்த செடி என்பது விதைக்குள்ளும், எந்த பறவை என்பது பறவையின் முட்டைக்குள்ளும் இருப்பது –  ஹம்ஸங்கள் வெண்மையாக, கிளிகள் பச்சையாக, மயில்கள் விசித்ரமாக வர்ண கலவையாக என்பது மாறாமல் வர பயன்படும் தத்வம் )  வாக்கிலிருந்து ஸ்ரீ ருத்ரம்.  

எல்லா உயிரினங்களிலும் புத்தி, வாழ்க்கையின் தேவைகள் அனைத்தும் கிடைக்குமாறு செய்யும் அந்த பரமாத்மா ஒருவனே அந்தராத்மா – உள் உறையும் செய்வம்- அதுவே சத்யம் என்று பஜிக்க வேண்டும்.

நான் கற்ற படியே சொல்கிறேன்.

((இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் இரண்டாவது ஸ்கந்தத்தின், முதல் அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-39

||ஓம் நமோ பகவதே வாசுதேவாய || இரண்டாவது ஸ்கந்தம் -ஸ்ரீ சுகர் சொல்கிறார்

அத்யாயம்-2

ஆத்ம யோனி – ப்ரும்மா – ப்ரளயத்திற்கு பிறகு  ஸ்ருஷ்டியை ஆரம்பித்தார்.  அதற்கு முன் இருந்த பூவுலகை நினைவில் கொண்டு அதே போல உயிரினங்கள், தாவரங்கள், இயற்கை வளங்கள் என்று ஸ்ருஷ்டி செய்தார்.   

(ஓரு யுகத்தின் முடிவில் மஹா பிரளயம் என்பதும், ஜீவ ராசிகளின் அடுத்த சிருஷ்டிக்கான அடிப்படை தத்துவங்கள், விதை முதலியன மட்டும் பாதுகாக்கப் படும் என்பதும் பாகவத்தின் பிற்பகுதியில் விவரமாக சொல்லப் படுகிறது)

சப்த ப்ரும்மம் என்ற வேதம் நிரந்தரமாக இருக்கும்.  தூங்கி எழுந்தவுடன் முன் தின நினைவுகள் உடன் வருவது போல, ப்ரும்மா தன் தொடர்பை அறிந்தார்.   

நெல் முதலான தானியங்கள் உமியை நீக்கி விட்டு அரிசியை எடுத்துக் கொள்வது போல கற்பவர்கள்,சார பூதமான பகவானை அறிந்து கொள்ளவேண்டும்    இகலோக வாழ்க்கைக்கான  தேவைகளை பூர்த்தி செய்ய தனம் அவசியம். அதை சம்பாதிக்க உழைக்கும் போது பகவானை மறந்து விடுவதும் இயல்பே. அவர்கள் ஸ்வர்கம், மறு பிறப்பு என்பதை அதிகமாக, மேலானதாக அறிகிறார்கள்.  இது ஒரு நிலை. மாயாமயமான இந்த உலகில் கனவில் வாழ்வது போல அவர்களது வாழ்க்கை, விழித்தவுடன் மறையும். 

 அடுத்த நிலையில், உலகியலே துச்சம் என்று கருதுவது. இது மிக சிலரே அறிந்து கடை பிடிக்கவும் செய்கிறார்கள்.  அவர்களுக்கு தேவைகள் குறைவு. பூமி இருக்கும் பொழுது, கட்டில், படுக்கை என்பது எதற்கு?  கைகள் இருக்கும் பொழுது தலையணை எதற்கு ? கைகளை குவித்தல், அஞ்சலி இருக்க தனியாக பாத்திரம் எதற்கு தண்ணீர் குடிக்க, மரவுரி இருக்க பட்டு ஸ்திரங்கள் எதற்கு என்பது  அவர்களுடைய கொள்கை.  துறவிகள், இவர்கள் தன் சித்தத்தில் தானே ரமிப்பவர்கள்.  சம்சார வாழ்க்கையில் சாரமில்லை என்பார்கள். அனந்தனான பகவானை பஜிப்பார்கள்.   பொதுவாக வாழ்வின் பொருள் என்ன? எதற்காக பிறப்பு, அதன் முடிவு என்று அலசுவார்கள்.  தங்கள் தேடலில் ஒரு சிலரே தன்னுள் வசிக்கும் பரமாத்மாவை அறிகிறார்கள்.  

பகவான் விஷ்ணுவை வர்ணிக்கிறார். 

நான்கு  கைகள், அவைகளில் முறையே,  தாமரை மலர், சங்கு சக்ரம், கதை என்று உள்ள உருவை தியானிக்கிறார்கள். ப்ரசன்னமான முகம். தாமரை போன்ற கண்கள். கதம்ப புஷ்பத்தின் தளிர் போல மஞ்சள் நிற ஆடை- பீதாம்பரம்,  மகாரத்னங்கள் பதித்த பொன்னாலான அங்கதம், அதே போல ப்ரகாசிக்கும் ரத்ன மயமான கிரீடமும், குண்டலங்களும்,  ஹ்ருதய தாமரையில், யோகேஸ்வரர்கள் ஸ்தாபித பாத பல்லவம் (ப்ருகு முனிவரின் பாதங்கள்) ஸ்ரீ வாசம் செய்யும் மார்பு, கௌஸ்துப ரத்ன மாலை, என்றும் வாடாத வனமாலை, இடையில் மேகலை,கை விரல்களில் மோதிரங்கள்,  கைகளில் கங்கணங்கள், கால்களில் நூபுரங்கள், சுருள் சுருளான கேசம் மறைக்க மென் முறுவலோடு விளங்கும் முகம், தன் லீலையைத் தானே ரசிப்பது போல சிரிக்கும் கண்கள்,  தன்னுடைய அளவில்லாத அனுக்ரஹத்தை தெரிவிக்கும் புருவங்கள்,  மனம் கொண்டவரை இந்த உருவத்தை தியானிக்க வேண்டும்.  மனம் லயிக்கும் வரை திரும்பத் திரும்ப கண்டு ரசிக்க வேண்டும்.

ஒவ்வொரு அங்கமும் பார்த்து தியானிப்பதை சொல்கிறார். முதலில் பாதம்.  கதையை கையில் வைத்து இருப்பது வெற்றி கொள்வதற்காக.  மனதை சுத்தம் செய்யும் ( இந்த இடங்களில் பாகவத ஸ்லோகங்கள் மிக அழகான பதங்கள், பொருள் புரியாமல் படித்தால் கூட ரசிக்கத் தகுந்தவை) 

இந்த விஸ்வேஸ்வரனை பார்த்தவுடன்  மனதில் பக்தியோகம் வருவது நிச்சயம். யதி- துறவியானாலும் கூட, சரீரத்தை போஷிக்காமல் இருந்தாலும், தேஹத் த்யாகம் தானாக செய்து கொள்வதில்லை.  தேகம் என்ற பற்றுதல் இல்லாமல் இந்த உடலிலும் உள்ள இறைவன் அம்சத்தை மனதாலும், வெளி உலகில் மற்ற ஜீவன் களிலும் உள்ள இறையம்சத்தைக் காண்கிறார்கள்.  

க்ஷேத்ரக்ஞன்  – பகவானின் ஒரு பெயர்.  நிர்மலமான மனம் புத்தி இவற்றால்  தன்னுள் இருப்பது ஆத்மா , பரமாத்மாவின் அம்சமும் என் ஆத்மாவில் உள்ளது என்ற அறிவை அடைபவன் தீரன். அவனுக்கு நல்ல சாந்தமான குணமும் அமையும்.  அவன் இக பரமான செயல்களை விடுவதால் எதையும் இழப்பதில்லை. பரம் பதம் வைஷ்ணவம் – விஷ்ணுவே பரம் பொருள் என்று நிரூபிக்க மற்ற தன் தத்துவங்களை, (நேதி நேதி-) ஒவ்வொன்றாக ஆராய்ந்து இது இல்லை, இது இல்லை என்று அவைகளைத் தவிர்த்து,  “विज्ञानं ब्रह्म என்ற நியாயம் படி, அறிவில் சிறந்த, அனுபவம் வாய்ந்த முனிவர்கள் கண்டு கொண்டது  இதுவே. 

அஷ்டாங்க யோகம் என்பதை விவரிக்கிறார்.  ப்ராண வாயுவை ப்ராணாயாம பலத்தால் மூலாதாரத்தை தட்டி எழுப்பி,  நாபி முதலிய இடங்களில்  உள்ள  ஆறு சக்கரங்களை யோக முறையால் கடந்து  புருவ மத்தியை அடைய வேண்டும். புருவ மத்தியில் உள்ளது ஆக்ஞா சக்கரம். புலன் களை அடக்கி அதையும் தாண்டி உச்சந்தலையில் ப்ரும்ம ரந்த்ரம் என்ற சக்கரத்தை பிளந்து தன் தேகத்தையும் , புலன் களையும் விட்டு விட வேண்டும்

(இந்த யோக முறை பல இடங்களில், ஸ்லோகங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. குண்டலினி யோகம் – இதை குரு இல்லாமல் செய்ய முயற்சி செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது).

இது யோக சாதனைகளைச் செய்யும் சாதகர்களுக்கு. உள்ளும் வெளியிலும் அண்டத்தில் பவனன்- காற்று புகுவது போல ஆத்ம தத்வத்தை அறிந்தவர்கள். இவர்கள், வித்யா, தவம், யோகம், சமாதி என்று இருப்பவர்கள்.

கர்ம யோகிகள், வேதம் விதித்த யாக காரியங்களை செய்பவர்கள்.    இவர்கள் மறு பிறவி எடுக்கிறார்கள். விஷ்ணுவின் அருளால், ப்ரும்ம ஸ்ருஷ்டியில் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.  இவர்களும் ஞானிகளே. அனுபவத்தால் அறிவார்கள். அனந்தனின் முகத்திலிருந்து வரும் உஷ்ண வாயுவால் விஸ்வம்-பூவுலகம் எரிகிறது- உஷ்ணமாக உயிரினங்கள் வாழ ஏதுவாக இருக்கிறது என்பதை அறிகிறார்கள். சித்தேஸ்வரர்கள்.

மிகவும் அரிதான யோக சாதனைகளைச் சொல்கிறார்.  முடிவாக, பகவான் சர்வ பூதங்களிலும் எப்பொழுதும் இருக்கிறார்.  அதனால், ராஜன்! ஹரி எல்லா இடங்களிலும் எப்பொழுதும் பூஜிக்கப் பட வேண்டும். கேட்டு, தானும் உடன் பாடி, மனதால் நினைத்து மனிதர்கள் நல்ல கதியை அடைவார்கள். 

அறிந்தவர்கள், பக்தர்கள் சொல்ல, பகவத் கதையை கேட்பவர்கள், அவருடைய சரணாரவிந்தங்களை அடைவார்கள்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்துள்ள மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம்  என்பதில் இரண்டாவது ஸ்கந்தத்தின், இரண்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-39

அத்யாயம்-3 

அரசனே ! உன் கேள்விக்கு பதில் சொன்னேன்.  என்றோ ஒருநாள்  காலகதியடையப் போகும் மனிதர்கள் மத்தியில்  புத்திமானான அரசன் நீ. 

ப்ரும்ம வர்சசான (வேத சாஸ்திரங்களை கற்று வித்வானான )மகன் வேண்டும் என்று விரும்பும் பெண், ப்ரும்ம ஞானம் பெற்ற பதியை அடைய வேண்டும் என்பது உலக நியதி.  ப்ரஜைகள் வேண்டும் என்றால், ப்ரும்மாவை பூஜிக்க வேண்டும். அனுபவிக்க வேண்டும் என்றால் இந்திரனை பூஜிக்க வேண்டும்

ஐஸ்வர்யம் வேண்டும் என்பவர்கள் மாயாவான தேவியை பூஜிக்கவேண்டும். தேஜஸோடு மகன் வேண்டினால் அக்னியை, தனம் வேண்டுபவர் வசுக்களை, வீர்யம், ப்ரபாவம் வேண்டுபவர் ஸ்ரீ ருத்ரனை பூஜிக்க வேண்டும். 

போஜன பிரியன் என்றால் உணவு பண்டங்களை, ஸ்வர்கம் விரும்புபவன் அதிதியின் பன்னிரண்டு ஆதித்யர்களை பூஜிக்க வேண்டும்.  ராஜ்யம் வேண்டும் என்பவன் விஸ்வ தேவர்களை பூஜிக்க வேண்டும், அரசன், பிரஜைகளை தன் வசம் இருக்கச். செய்ய திக் பதிகளை பூஜிக்க வேண்டும். 

ஆயுள் வேண்டுபவன் அஸ்வினி தேவதைகளையும், உடல் புஷ்டியாக இருக்க இளா தேவி எனப்படும் பூ தேவியையையும், பிரதிஷ்டா- நிலைத்து இருக்க, லோக தாய் தந்தையர் எனப்படும் ஜீவாதாரமாக இருப்பவர்களான ரோதஸீ, வானமும் பூமியும் சேர்ந்த -த்யாவாப்ருதுவீ யை வணங்க வேண்டும்.

அழகிய ரூபம் வேண்டுவோர், கந்தர்வர்களான விஸ்வாவசு முதலியோரையும், மனைவி சுந்தரியாக வேண்டும் என்பவர்கள் அப்சர ரூபத்தில் ஊர்வசியை யாசிக்க வேண்டும்.  ஆதிபத்யம்- தலைமை பதவியை விரும்புபவர், பரமேஷ்டி என்றும் சர்வேஸ்வரன் என்றும் சொல்லப் படும் ப்ரும்மாவை வணங்க வேண்டும். 

புகழ் வேண்டுபவன், யக்ஞ புருஷனான விஷ்ணுவை வணங்க வேண்டும். பொக்கிஷங்கள், ஏராளமான பொருள் விரும்புபவன் ப்ரசேதஸ் என்ற வருணனை யாசிக்க வேண்டும். வித்யா-கல்வியை  வேண்டுபவன் கிரீசனான சம்புவை வணங்க வேண்டும். தம்பதிகளிடம் அன்யோன்யம் வேண்டுமானால் உமாவை, மஹாதேவ பத்னியாக வணங்க வேண்டும். 

தர்மத்தை விரும்புபவன் உத்தம ஸ்லோகனான விஷ்ணுவை யாசிக்க வேண்டும். தன் வம்சம் வளர புத்ராதிகள் வேண்டுவோர், பித்ருக்களை , பாது காப்பு வேண்டுபவன், யக்ஷர்களை, பலம், மதிப்பு வேண்டுபவன், மருத் கணங்களையும் தேவ கணங்களையும் யாசிக்க வேண்டும். 

ராஜாவாக வேண்டும் என்பவர்கள், மனு தேவர்களை, மன்வந்தர பாலகர்களை வணங்க வேண்டும்.

அகாமன் எந்த தேவையும் இல்லாதவன், பூர்ண புருஷனான பகவானை பூஜிக்க தன்னைப் போன்ற பக்தர்களுடன் ஹரி கதையில் ஈடுபடுவான். எப்படியிருந்தாலும்,  எந்த விதமான பலனை விரும்பினாலும் கடைசியில் மோக்ஷம் வேண்டும் என்று வேண்டுபவன்  உதார தீ: – பெருந்தன்மையுடையவன் என்கிறார். 

(‘யோ யோ யாம் யாம் தனும் பக்த:” என்று கீதையில் சொல்லியபடி, யார், யார், எந்த எந்த வித உருவத்தில் துதித்தாலும் அந்தந்த பலங்களை தருபவன் நானே. என்றபடி பரம புருஷனே முக்தியைத் தருகிறான் என்பது அபிப்ராயம். பகவானிடத்தில் திடமான பக்தியைத் த்ருவது பாகவத சங்கமே.)  

ஞானம் பெற தனிமையில் தவம் செய்ய வேண்டும் என்பது போல மோக்ஷம் விரும்புபவர்கள் பக்தியோகத்தில் ஈடுபட வேண்டும்.  துறவியானாலும் ஹரி கதையை விரும்பாமலா இருப்பான். 

சௌனகர் கேட்டார்: 

இப்படி சொன்னதைக் கேட்டு ராஜ ரிஷியான பரீக்ஷித், வியாசர் மகனிடம்  வேறு என்ன கேட்டான்?  வித்வான் சூதரே! இன்னும் கேட்கவே விரும்பும் எங்களுக்குச் சொல்லுங்கள். இந்த சபையில் எல்லோருமே ஒத்த மனத்தினரே. அரசன் பாகவதன் – பகவத் பக்தி உடையவனே. குழந்தை பருவத்திலேயே, மற்ற பாலகர்களோடு க்ருஷ்ணன் பற்றிய விளையாட்டுகளை விளையாடியவன். வியாசர் மகனும் வாசுதேவ பராயணன். நல்ல குணவான். அவன் பெருந்தன்மையை பலரும் பாடுவார்கள்.  சூரியோதயம், அஸ்தமனம் என்று. நாட்கள் ஓடுகின்றன. ஆயுள் குறைகிறது. உத்தம ஸ்லோகனை நினைத்து பேசும் பேச்சுக்களே பொருளுடையது.

மரங்கள் ஜீவிக்க வில்லையா?   ரோமம் அடர்ந்த மிருகங்கள்  சுவாசிக்க வில்லையா? கிராம பசுக்கள், உண்பதில்லையா, ? அது போல மாந்தர்கள் இருக்கலாமா? (உண்பதும் உறங்குவதும் மட்டுமா வாழ்க்கை?)

முகுந்தனை வணங்காத தலையில் கிரீடமும், அபிஷேக காலத்தில் கட்டிய பட்டும்  வெறும் பாரமே.  விஷ்ணு புகழை பாடாதவர்கள் கண்கள் மயில் இறகில் இருக்கும் கண்கள் போல பொருளற்றவையே. பாதங்கள் ஹரி இருக்கும் க்ஷேத்ரங்களுக்கு நடக்காதவரை, பெரிய மரங்களின் அடி பாகம், பாதங்கள் போல அசையாதவை. பகவானின் பாத தூளியை பெறாதவனும், பூஜை செய்த மலர்களின் மணத்தை உணராதவனும் மனிதனாக இருப்பதே வீண். பாடல்களை கேட்டு மயிர் கூச்சல் வராதவனும், கண்களில் நீர் துளிக்க ரசிக்காதவனும் அசையாத கல்லைப் போன்றவர்களே. எனவே, சூதரே, மேலும் சொல்லுங்கள். பாகவதர்களைப் பற்றி சொல்கிறீர்கள். எங்கள் மனதுக்கு இசைவாக உள்ளது. வியாசர் மகன், ஆத்ம வித்யா விசாரதன். சாதுவான அரசன் கேள்விக்கு என்ன பதில் சொன்னான். 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் இரண்டாவது ஸ்கந்தத்தின், மூன்றாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-25

 அத்யாயம்-4

ஸ்ரீ சுகர்  சொன்னதை கேட்டு, பரீக்ஷித் ராஜா, ஸ்ரீ க்ருஷ்ணரை மனப் பூர்வமாக தியானித்தான்.  தன் மனைவி மக்களை, வீடு, உறவினர்களை, பரந்த ராஜ்யத்தை, முற்றிலும் மறந்தான். என்னிடம் நீங்கள் தற்சமயம் கேட்கும் விஷயங்களையே தன்னுள் விசாரித்து, வாசுதேவ பகவானிடம் முழு மனதையும் செலுத்தினான். சுகரைப் பார்த்து “ப்ரும்மன்!  சகலமும் அறிந்த தங்கள் வார்த்தைகளைக் கேட்டு என் உள்ளம் நிர்மலமாகியது.  திரும்பவும் பகவானின் மாயை, இந்த பூவுலகை ஸ்ருஷ்டி செய்தது பற்றியே அறிய விரும்புகிறேன்.  தானே மறைக்கிறான், பின் தானே திரும்பத் தருகிறான்,  எந்த சக்தியால் இது சாத்யமாகிறது.  தானே விளையாடியும், விளையாட வைத்தும், அத்புதமான செயல்.  கண்கட்டி வித்தை போல கண் முன்னே காட்டி மறைக்கிறானா? ப்ரக்ருதி-இயல்பான குணங்கள். சத்வ,ரஜஸ்,தமஸ்- இவைகள் அவன் கைபாவைகளாக இருக்க, உயிரினங்களில்  தனித் தனியாகவோ, கூட்டாகவோ, இந்த குணங்கள் வெளிப் படச் செய்வதும் அவனே.  நீங்கள் சப்த ப்ரும்மம் என்ற வேத சாஸ்திரத்தில் கரை கண்டவர்.  அதற்கும் மேல், வேதாந்தங்களையும் அறிந்தவர். “

இப்படி கேட்டவனைப் பார்த்து ஸ்ரீ சுகர், பரஸ்மை புருஷாய வணக்கம் என்று ஆரம்பித்து துதி செய்கிறார். 

மூன்று வித சக்திகளால், உலகில் தோன்றுதல்,  நிலையாக இருத்தல், பின்   மறைதல் என்ற செயல்களை செய்வது  அவனது லீலை. உள்ளும் புறமும் பரவி இருப்பவனை வணங்குகிறேன்.

திரும்பத் திரும்ப வணங்குகிறேன்.   பந்த பாசங்களில் இருந்து விடுவிப்பவன், அகில சத்வ மூர்த்தி, ஒரே ஹரி, வாசுதேவன் முதலிய அவதாரங்கள் எடுத்து, ஸ்ருஷ்டி முதலிய செய்ய, சத்வம், ரஜஸ், தமஸ் என்ற குணங்களை தனி தனியாகவோ, கூட்டாகவோ பயன்படுத்திக் கொள்கிறான். 

சாதுக்களை பாலனம் செய்பவன். துஷ்டர்கள் அவனிடம் விலகியே இருப்பார்கள். தன் ஐஸ்வர்யம், தன் இடம் என்று தனித்தே இருப்பவன்.  ப்ரும்ம ஸ்வரூபமான தன் ஸ்வரூபத்திலேயே ஆழ்ந்து இருப்பவன்.

 கீர்த்தனம்- பகவானை துதித்து பாடுவது, ஸ்மரணம்-மனதில் தியானிப்பது, கண்களால் காண்பது-ஈக்ஷணம், வந்தனம்- வணங்குவது, ஸ்ரவணம் – பகவத் கதைகளை கேட்பது- இவை உடனடியாக மனதில் கெட்ட எண்ணங்களை அழித்து விடும். அந்த மங்களமான கீர்த்தி உடையவனை,

விவேகிகள் இவருடைய சரணங்களை சேவித்து, பந்தங்களை விட்டு, சிரமம் இன்றி ப்ரும்ம பதம் அடைகிறார்கள்.  அவர்களுக்கு இரண்டு வகையிலும், இக பர சுகத்தை தரும் அந்த மங்களமான கீர்த்தி உடையவனை  நமஸ்கரிக்கிறேன்.

தபஸ்விகள், தானம் செய்பவர்கள், புகழ் உடையோர், மனஸ்வி எனும் அறிஞர்கள், மந்திரங்களை அறிந்தவர்கள், சுமங்களம் -சதாசார பரர்கள்-  ஆசார சீலர்கள், என்றாலும் எவரிடம் சரணடையாமல் க்ஷேமம் அடைய முடியாதோ, அந்த மங்களமான கீர்த்தி உடையவனை நமஸ்கரிக்கிறேன்.

கிராதர்கள்- காட்டு வாசிகள், வேட்டையாடுபவர்கள்,  குலத்தை மீறி மணம் செய்து கொண்டு பிறக்கும் குழந்தைகள் (ப்ராம்மண வைச்ய தம்பதிகளின் சந்ததி- அதே போல மற்ற குலங்களின் சேர்க்கையால் பிறக்கும் சந்ததிகள் குலமிலி – இவர்கள் எந்த குலத்திலும் சேர்க்காமல் வேறு பெயர்களில் அழைக்கிறார். சமூகத்தில் இவர்களுக்கு அந்தஸ்தோ, மதிப்போ கிடைப்பதில்லை.) இது போன்றவர்களும் கூட, எந்த பகவானை ஆஸ்ரயித்து நன்மை அடைகிறார்களோ, ப்ரபவிஷ்ணுவான அவனை வணங்குகிறேன். 

இந்த பகவான் தான் ஆத்மாவிலும் அம்சமாக இருப்பவன்.  வேதசாரன், தர்ம மயன், தபோமயன், பரிசுத்தமானவன், ப்ரும்மா, மகேஸ்வரர்களால் போற்றப்படுபவன், அவன் நம்மை காக்கட்டும்.

ஸ்ரீ பதி,யாகத் தலைவன், பரஜாபதி, ஞானத்தின் அதிகாரி, லோக பதி, பூபதி.  அனைவருக்கும் யமாதி தேவர்கள், யாதவர்கள், மற்றும் சாதுக்களின் பதி அனைவருக்கும் பதி. அவன் நம்மை காக்கட்டும். 

கவிகள் எவன் அருளால் உயர்ந்த தத்வங்களை புரிந்து கொள்கிறார்களோ, அந்த முகுந்த பகவான் நம்மை காக்கட்டும்.

नमस्तस्मै भगवते वासुदेवाय वेधसे ।

पपुर्ज्ञानमयं सौम्या यन्मुखाम्बुरुहासवम् 

அரசனே, இதைத் தான், ப்ரும்மா நாரதருக்கு உபதேசித்தார்.  வேதங்களின் உறைவிடமான  ஹரி முதலில் ப்ரும்மாவுக்கு போதித்தார். ப்ரும்மா நாரதருக்கு, நாரதர் வியாசருக்கு, வியாசர் எனக்கு, அதை தற்சமயம் நான் உனக்கு சொல்கிறேன். 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் இரண்டாவது ஸ்கந்தத்தின், 4வது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-25

அத்யாயம்-5

நாரதர்  ப்ரும்மாவிடம் சில கேள்விகளைக் கேட்டார். தேவ தேவனே, உலகில் முதல் மனிதன் தாங்கள், அதனால் அனைவருக்கும் மூத்தவர்.  ஆத்ம தத்வம் என்ற ஞானம் பெற்றவர்.  இந்த உலகை சிருஷ்டிக்க தங்களுக்கு உதவியது எது? என்ன ரூபம்? எது ஆதாரம்? எங்கிருந்து சிருஷ்டியை  ஆரம்பித்தீர்கள்? அதன் அடிப்படை லயம் அல்லது கட்டுபாடு யாரிடம் தெரிந்து கொண்டீர்கள்?

உள்ளங்கை நெல்லிக் கனி போல அனைத்தையும் அறிவீர்கள். இறந்த காலம், நிகழ் காலம், வரும் காலம் என்பதையும் தங்களைத் தவிர வேறு யார் அறிவார்கள்?  இந்த உலகை விக்ஞான பூர்வமாக, அதாவது ஒரு ஒழுங்குடன் ஸ்ருஷ்டிக்க எது உதவியது? என்ன ஆதாரம்? எது வெளியிலிருந்து தெரிந்து கொண்டது எது உங்கள் சுய அறிவினால்,  ஒருவராக ஸ்ருஷ்டி செய்தீர்களா, பஞ்ச பூதங்கள் மட்டுமா, உங்கள் மாயையுமா? ஊர்ண நாபி (வயிற்றில் நூலைக் கொண்டது என்ற பொருள்) சிலந்தி போல தாங்களே யார் உதவியும், வெளி உபகரணங்களும் இல்லாமல் படைப்புத் தொழிலைச் செய்தீர்களா? 

உங்களுக்கு சமமாக சொல்ல வேறு யாருமே இல்லை. நீங்கள் செய்த அளவு தவம் வேறு யாரும் செய்ததாக எனக்குத் தெரியவில்லை.  சகலேஸ்வரா! உங்கள் சிஷ்யன், இது வரை நான் அறிந்ததெல்லாம் தங்களிடம் கற்றதே. தானாக ஊகித்து அறிய என்னால் முடியவில்லை.

ப்ரும்மா சொன்னார். குழந்தாய்! நல்ல கேள்வி.  தெரிந்து கொள்ள ஆசைப் படுவது அவசியம். உன் காரணமாக பகவானுடைய எல்லையற்ற ஆற்றலை எண்ணியும், உனக்குச் சொல்லவும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதனால்  எனக்கு மகிழ்ச்சியே.  உன் அறிவுத் தாகத்தால் நீ கேட்டாலும், எனக்கும் உபகாரமே செய்திருக்கிறாய். 

நானாக செய்ததாக நினைக்கிறாய். என்னை பகவான் என்று நினைத்தாயா? முற்றிலும்  தவறு என்றும் இல்லை. இந்த படைப்புத் தொழிலைச் செய்ய என்னால் முடியும் தான். ஆனால், எனக்கு மேல் உள்ள ஈஸ்வரனை அறியாமல் சொல்கிறாய்.  நானாக சூர்ய சந்திர தாரகைகளை உண்டாக்க முடியுமா என்ன? பகவான் மனதில் உருவானவை, அதை நான் செயல் படுத்தினேன். அதற்கு முன்

न तत्र सूर्यो भाति न चन्द्र तारकम्, नेमा विद्धुतो भान्ति कुथोऽयमग्नि: | तमेव भान्तमनुभाति सर्वं तस्य भासा सर्वमिदं विभाति|| (kata.u.5-15)  

கடோபனிஷத் சொல்வதுஅதற்கு முன் சூரியனோ, சந்திரனோ, தாரகைகளோ இருக்கவில்லை. அக்னி எங்கிருந்து வரும்? இந்த ஒளியை தன்னுள் வாங்கி அக்னி ஒளிர்கிறது. அனைத்துமே அந்த பகவானின் ப்ரகாசத்தால் பிரகாசிக்கின்றன. (ஸுர்ய சந்திரர்களும் பகவானின் அருளால்,  ஒளியை பெறுகின்றன)

तस्मै नमो भगवते वासुदेवाय धीमहि ।

यन्मायया दुर्जयया मां ब्रुवन्ति जगद्गुरुम् || அந்த வாசுதேவனை வணங்குகிறேன். அவனுடைய மாயையால் என்னை ஜகத்குரு என்கிறார்கள். அதுவே எனக்கு லஜ்ஜையாக இருக்கிறது.  அறியாமல் ஜனங்கள் பேசுகிறார்கள். நான், எனது என்று தம்பட்டம் அடித்துக் கொள்வது அவர்களது அறியாமையே. 

உலகில்,  எந்த உருவத்திற்கும் அடிப்படையான மூலப் பொருட்கள், த்ரவ்யம் எனப்படும். அதை உருவாக்க தேவையான செயல்கள் (கர்ம) சரியான காலம், அதற்கான ப்ரத்யேக குணங்கள், அதன் ஆயுள், இவையெல்லாமே வாசுதேவனால் நிர்ணயிக்கப் படுகிறது.  அதை மீறி யாராலும் எதையுமே செய்ய முடியாது. 

नारायणपरा वेदा देवा नारायणाङ्गजाः ।नारायणपरा लोका नारायणपरा मखाः ॥ १५॥

नारायणपरो योगो नारायणपरं तपः ।नारायणपरं ज्ञानं नारायणपरा गतिः ॥ १६॥

நாராயணனே வேதங்களுக்கு  ஆதாரம். தேவர்கள் நாரயணனின் சரீரத்தில் தோன்றியவர்கள். உலகமே நாரயணனால் இயங்குகிறது. யாகங்கள் நாராயணனுக்காகவே. யோகமும், தவமும்  நாராயணனை குறித்தே செய்யப் படுகிறது. ஞானம் நாராயணனை அறிவதே. உலகியல் செயல் படுவதே நராயணனின் அருளால்.

 அந்த ஈஸ்வரனின் கண்காணிப்பில், படைப்புத் தொழிலைச் செய்கிறேன். அகிலாத்மாவான அவன் ரகசியமாக  உள்ளிருந்து  என்னை நடத்திச் செல்வதாக உணர்கிறேன்.  அவருடைய கண் அசைவில் எனக்கான உத்தரவை பெறுகிறேன். குணங்கள் அவனுக்கு இல்லை. எனினும் சத்வம், ரஜஸ், தமஸ் என்ற குணங்கள், இவை உலகில் பிறந்த மனிதர்களின் பாப புண்யங்களை நிர்வகிக்கின்றன , அதாவது சத்வ குணம்  மனதையும், ரஜோ குணம் புலன்களையும்,  தமோ குணம் உடலால் செய்யும் செயல்களையும் நிர்வகிக்கின்றன என்பதால். அவைகளையும் தன்னுள் வைத்திருக்கிறான்.  உலகில் மனிதனை உடலை வருத்தி செய்யும் செயல்களும்,  புலன்களால் அறிந்து செய்யும் செயல்கள், கண் முதலான  இந்திரியங்கள், அறிந்து செய்யும் செயல்களும்,  மனதால் அல்லது புத்தியால் அறிந்து செய்யும் செயல்களும் ,  ஜீவன் களின் அன்றாடத்  தேவைகளான,   மூல பொருட்கள், அறிவு, உடல் உழைப்பு  இவற்றை நிர்வகிக்கின்றன என்பதால் இன்றியமையாதனவை.   இவ்வகையில் பகவான்  தன்னால் படைக்கப் பட்ட உலகின் அசையும் அசையாத பொருட்களின் ஈஸ்வரனாக இருக்கிறான். 

காலம், கர்ம, ஸ்வபாவம் இவைகளை  தன் மாயையால் தன் வசத்திலேயே வைத்திருக்கிறான். காலம் பிறப்பு -அது ஜீவனின் அதீனத்தில் இல்லை. கர்ம- செயல் என்பது  தானாக அமைவது,அவனுடைய அத்ருஷ்டம் எனலாம்.  ஸ்வபாவ: பிறந்த பிறப்பின் இயல்பான ஸ்வபாவம்  இதையும் தன்னிடத்தில் வைத்துக் கொண்டிருக்கிறான்.   குணம் மாறுவதாலும், பரிணாமத்தால்  தன் இயல்பு மாறுவதும்  கர்ம – தன் செயலால் மறு பிறப்பும் அமைகிறது. 

அடுத்து இதே வரிசையில் அஹங்காரம்- தன்னியல்பு – என்பதையும் மூன்றாக, சத்வ, ரஜஸ் தமஸ் என்று சொல்கிறார்.  த்ரவ்ய சக்தி, க்ரியாசக்தி,ஞான சக்தி என்பதாக.

பஞ்ச பூதங்களில் முதலானது ஆகாசம். ஆகாசத்திலிருந்து,வாயு, வாயுவிலிருந்து அக்னி, அக்னியிலிருந்து நீர், நீரிலிருந்து பூமி என்பது ப்ரசித்தம். 

 தாமஸ அஹங்காரம் அதன் பிறப்பிடம். சப்தம்  சூக்ஷ்ம ரூபம்.  விரைவில் பரவும் தன்மையுடையது  – அதன் மூலம் ஆகாசம் உதயமாகியது.

சப்தம் வாயுவின்  குணம்.  ஸ்பரிசம், சப்தம் இவை அனுகுணங்கள். ஸ்பரிசம் -தொடுதல் – உடலில் படும் பொழுது உணருகிறோம். தொடுகையால் வரும் சப்தம் நபோ -ஆகாயத்தின் குணம்.

தேஜஸ். -சூடு, அக்னியின் குணம். ரூபமுடையது. இதற்கும் தொடுகையும், சப்தமும் உண்டு. 

நீர். ரசம்-ருசி, இதற்கு முந்தைய மூன்றும் அக்னி, வாயு, ஆகாசம் இவைகளின் தொடர்பும் உள்ளதால் அதன் குணங்களான, தொடுகை, சப்தம்,ரூபம் இவையும் உண்டு.

பூமிக்கு  ருசி, கந்தம்- வாசனை இவை பிரதான குணங்கள். ரூபம், தொடுகை, சப்தம் இவை அனுகுணங்கள்.  

இன்னும் விவரமாக நிறைய சொல்லப்பட்டிருக்கிறது. 

இதன் விளைவாக மனம் அதன் அதிஷ்டானமான சந்திரனும் தோன்றின. கூடவே பத்து தேவதைகள். திசை, காற்று, சூரியன், ப்ரசேதர்கள், அஸ்வினி என்ற இரட்டையர். இந்த ஐந்தும் முறையே, காது, தோல்,கண், நாக்கு,மூக்கு இவைகளின் ஆதாரமாக இருக்கிறார்கள்.  வஹ்னி, இந்திரன்,உபேந்திரன், மித்ரன், ப்ராஜாபதி -ப்ரும்மா. முறையே, வாக்கு, கைகள், பாதங்கள், குதம், ஜனன உறுப்பு இவைகளின் செயலுக்கு ஆதாரமாக இருக்கிறார்கள். 

இவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பகவானின் சங்கல்பத்தால், சத் என்றும் அசத் என்றும் உருவாகின்றன. 

ப்ரளய காலம் முடிந்தவுடன், பரம புருஷனான பகவான், ஜீவன் இல்லாத, உணர்வு இல்லாத, நீரில் மிதந்த அண்டம் என்பதை உயிரூட்டினார்.  நீரில் மிதந்த என்பதால் அதற்கு முன் அண்டம் நீரில் மிதந்தது என்பதன் மூலம், கர்பத்திலிருந்து பிறப்பது என்பது அறியப் படுகிறது.  நான்கு முகமுடைய புருஷனாக பரம புருஷன், அண்டத்தை பிளந்து, அதின் உள்ளிருந்து ஆயிரம் முகம், ஆயிரம் கண்கள், ஆயிரம் கைகள் ஆயிரம் பாதங்கள் இவற்றுடன் வெளி வந்தார்.  “சஹஸ்ர சீர்ஷா புருஷ: சஹஸ்ராக்ஷ: சஹஸ்ரபாத் (புருஷ சூக்தம்)”    

 सहस्र शीर्षा; पुरुष: सहस्राक्ष: सहस्रपात् “

புருஷன் என்று சொல்லப்படும் மஹாவிஷ்ணுவின் அவயவங்களிலிருந்து பதினான்கு உலகங்களும் தோன்றின.  பதினைந்து கோடி விஸ்தீர்ணமுள்ள ப்ரும்மாண்டத்தில் நீள வாக்கில்   (ஆயாமதோ)  விஸ்தாரமான அண்டத்திலிருந்து சிதறியவை அந்த புருஷனின் அவயவங்களோடு நிமித்த காரணங்களால் அறிஞர்களான முன்னோர்கள்  இணைத்து பதினான்கு லோகங்கள் உண்டாயின என்கிறார்கள். 

இடுப்பிலிருந்து மேல் ஐந்து, இடுப்பிற்கு கீழ் ஐந்து அவயவங்களிலிருந்து மற்றவை என்று பிரித்திருக்கிறார்கள். 

புருஷனுடைய முகத்திலிருந்து,ப்ரும்ம, இரு புஜங்களிலிருந்து க்ஷத்ர, துடைகளிலிருந்து வைஸ்ய, பாதங்களிலிருந்து சூத்ரன் தோன்றினர்.  

பூலோகம் பாதங்களிலிருந்து.  நாபியிலிருந்து புவர்லோகம்.  ஹ்ருதயத்திலிருந்து சுவர்கம், மார்பிலிருந்து மஹர் லோகம். கழுத்திலிருந்து ஜன லோகம், ஸ்தனங்களிலிருந்து தபோ லோகம், தலையிலிருந்து சத்ய லோகம்.  சத்ய லோகம் தான் ப்ரும்மலோகம் சனாதனமானது. 

இடுப்பிலிருந்து அதலம், இரண்டு துடைகளிலிருந்தும் விதலம், முழங்கால்களிலிருந்து  சுத்தமான சுதலம், பின் பகுதிகளிலிருந்து தலாதலம், குல்பத்திலிருந்து- முன் கால்களிலிருந்து ரஸாதலம், பாதத்திலிருந்து பாதாளம் என்று தானே லோக மயமாக ஆனான். 

ஒரு சிலர், பாதங்களிலிருந்து பூலோகம், நாபியிலிருந்து புவர்லோகம், தலையிலிருந்து ஸ்வர்லோகம் என்பர். 

இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் இரண்டாவது ஸ்கந்தத்தின், 5வது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-42

அத்யாயம்-6

ப்ரும்மா தொடர்ந்தார்.  இவ்வாறு ஆரம்பித்த ஸ்ருஷ்டியில், மஹத் என்ற  நிலையான இயற்கை தத்துவங்களான ஆகாசம்,வாயு, அக்னி,நீர், நிலம் என்று வரிசை , புருஷ சூக்தம் -என்பதில் ஓரளவு, அதன் தொடர்ச்சியாக விராட் புருஷனுடைய மற்ற ரூபங்களைப் பற்றி விவரிக்கிறார். 

வாக் என்ற நமது புலனுக்கு அதிஷ்டாதா அல்லது அதிகாரி வஹ்னி- தீ – அதற்கான இடம் க்ஷேத்ரம். முகம்-வாய்.   சந்தஸ் என்பது ஏழு  -காயத்ரி, உஷ்ணிக்,ப்ருஹதீ, பங்க்தி,ஜகதீ, த்ரிஷ்டுப்,அனுஷ்டுப் என்பது ப்ரதானமானவை.  த்வக் முதலான ஏழு தாதுக்கள்- இது வார்த்தைகளின் அடிப்படை உருவம் ,தாது என்பது  சுருக்கமான வடிவம்,  அதன் விரிவாக்கமே வார்த்தையாகும். இது இலக்கணம்.  வாயின் மற்றொரு செயலான உணவு- தேவர்களுக்கு தருவது ஹவ்யம், பித்ருக்களுக்கு- கவ்யம்,  இந்த இரண்டின் மீதி அம்ருதம் எனப்படும். மனிதர்கள் ஆறு விதமான ருசிகளை அறிய உதவும் இந்திரியம்- புலன் நாக்கு, இதன் அதிஷ்டாத்தா அதாவது அதிகாரி வருணன். 

பிராணவாயு முதல், வாயுவின் இடம் மூக்கின் உள்பகுதி. தாவரங்கள்- தானியங்கள், காய்,பழங்கள் அனைத்தும் அஸ்வினி தேவைதைகளின் ஆதீனம்.  உணவின் மணத்தை அனுபவிப்பது மூக்கு என்ற இந்த்ரியம்.  நல்லது, கெட்டது இரண்டுமே.  தன் புத்தியினால் நல்லதோ, கெட்டதோ ஜீவன்கள் உணருகின்றன. 

 கண் என்ற இந்திரியத்தின் வேலை,  உருவத்தைப் பார்ப்பது.  வெண்மை முதலான வர்ணங்களை அறிவது,  ப்ரகாசம் முதலியவற்றை உணருவது கண்.  சூரியன் கண்ணின் மணிகளின் ஸ்தானம்.  திசைகள்., தீர்த்தங்கள்  இவைகளை காது என்ற அவயவம் அறியும்.  காதின் உள் பகுதி, குகை போன்ற இடம், அதன் இருப்பிடம்.   கேட்கும் செயல், சப்தம் இவைகளுக்கு  மடல் போன்ற காதின் வெளிப் பகுதி என்ற அவயவம் இருப்பிடம்.  ஆகாசம் அதிகாரி.  

இவ்வாறு இந்திரியங்கள் செயல்பட அதை  உணர்ந்து கொள்ள என்று இருப்பது ஜீவன்களின்  உடல்.  

ஸ்பரிசம், வாயு இவைகளுக்கு, தோல் இருப்பிடம். அனைத்து யாகங்கள், செயல்கள் – மரங்கள் போன்ற அசையாத ஆனால் உயிருள்ளவைகளும் வளருதல் முதலான செயல்களுக்கும், விராட் புருஷனின் ரோமங்கள் இருப்பிடம்.  

ஹரியின் கேசம் மேகமாகவும், அவருடைய மீசை முதலியன மின்னலாகவும்,  (மின்னல் உருவம் உடையது, மாறிக் கொண்டே இருக்கும் என்பதால் வளரும் நகங்கள் அதன் ஆதீனம்).

மூன்றுலகமும், பூ:புவ:ஸ்வ: – என்பவை, ஹரியினுடைய விக்ரமம், பாதங்களின் செயல்பாடு. பாதம் , க்ஷேமத்தையும், மங்களத்தையும்  தரும் என்பதாலும், சரணம் அதாவது அடைக்கலம் அளிக்கும் என்பதாலும், மோக்ஷம் முதலான வரங்களைத் தரும், வேண்டினவற்றை வேண்டியவாறே தரும் என்பதும் அவரது குணம். சர்வ காம ப்ரத:, என்றவாறு  தானம் என்பது அவருடைய பாதங்களின் இயல்பு.  மோக்ஷம் என்பதே அவரது பாத மூலம் என்பது வசனம். 

தண்ணீர்- ரேதஸ், உலக ஸ்ருஷ்டிக்கு காரணமானவை. மழை, தக்ஷ ப்ராஜாபதியின் ஆதீனத்தில் உள்ளன. பிறப்புறுப்பு, ப்ரஜாபதி என்ற ப்ரும்மா, மைதுனம் அதன் சம்பந்தமான அனைத்தும் ஹரியின் ரகசிய உறுப்புக்கள்.  அவரே பீஜப்ரதா என்பது தாத்பர்யம். 

மற்ற இரண்டு மல மூத்திரங்களை விசர்ஜனம் செய்யும் அவயவங்கள், யமன் தேவதை. அபானத்வாரம் இருப்பிடம். நிர்ருதி என்ற அசுரன் ஆதீனம். ம்ருத்யு என்ற தேவதை, உயிர் பிரியவும், நரகத்திற்கும் இருப்பிடம் என்று சொல்லப்படுகிறது. 

தமஸ் என்ற அறிவின்மை, ப்ருஷ்டம் , நத நதிகள்  நாடிகளில், மலைகள் அந்த விராட் புருஷனின் எலும்புகளிலிருந்து  தோன்றுகின்றன. 

வெளியில் தெரியாத, அன்னம் முதலிய உணவுகளின் ரசம், கடல்கள், சமுத்திரங்கள்,  ஜீவன்கள் முதலானவைகள் தோன்றுவதும், மறைவதும் ஆன செயல்களுக்கு  அவரது வயிற்று பாகம் இருப்பிடம்.  அனைத்து ஜீவன்களின் மனம் அவரது ஹ்ருதயத்தில் இருப்பதாக சொல்லப் படுகிறது.

தர்மத்தின், நான்முகனான என், உன்,   குமாரர்கள் சனகாதிகள்,    பவ, ருத்ரன் இவர்கள், முந்தைய முனிவர்கள், சுர, அசுரர்கள், நாகங்கள், பறவைகள், ஊர்வன, மிருகங்கள், கந்தர்வ, அப்சரஸ்கள்,  யக்ஷ ராக்ஷஸர்கள்,  பூத கணங்கள், உரகங்கள், பசுக்கள், பித்ருக்கள், சித்தர்கள், வித்யாதரர்கள், சாரணர்கள், மரங்கள், தாவரங்கள், மற்றும் பல ஜீவன்கள், நீரில் வாழ்பவை, நிலத்தில், ஆகாயத்தில் இருக்கும் க்ரஹ, நக்ஷத்திர, ருக்ஷ -உபக்ரஹம், உதிரும் நக்ஷத்திரங்கள், மின்னல், மற்றும் பாலூட்டிகள் இவையனைத்தும் விராட் புருஷனே. (அம்சமே)  ப்ரும்மாண்டத்தை சூழ்ந்து இருப்பது அவனே. . “ச பூமிம் விஸ்வதோ வ்ருத்வா” – அவன், பூமியையும் அதன் வெளிப் பகுதியான ப்ரும்மாண்டத்தையும்  சூழ்ந்து – “

விக்ஞானம் -மேலான அறிவு என்ற தத்வம், மஹத் என்ற பஞ்ச பூதங்களுக்கும் மேலான பகவானின் ஆத்ம- தன் அந்த:கரணம்- மனசாட்சி என்பது ஸ்ரேஷ்டமான, சிறந்த இருப்பிடம். 

இவ்வாறு புல் பூண்டு முதல் நம் வரை இருந்தும், இருப்பதும், வருவதுமான அனைத்தும், விராட் புருஷனின் அதீனமே  – “புருஷ ஏவேதம் சர்வம், யத்பூதம் யச்ச பவ்யம்” என்றபடி உள்ளும் புறமும்,நடந்ததையும், வருவதையும்,  அவன் பார்க்கிறான், அறிந்து ரக்ஷிக்கிறான் .

அபயம்- பயத்தை போக்குதல், பயத்தை போக்குவதோடு மோக்ஷத்தை தருகிறான்.  என்ன காரணத்தால் அழியக் கூடிய அன்னம்  (கர்ம பலன்) தருகிறானோ, அதே காரணத்தால்  பிறப்பு, இறப்பு என்ற பயங்கள் இல்லாத அழியாத மோக்ஷத்தையும், தருகிறான்.  பரமானந்தம் எனும் மோக்ஷத்திற்கும் அவனே ஈஸ்வரன்.  அதனால் ப்ரும்மன்! நாரத! அந்த பரம புருஷனுடைய மஹிமை அளவிட முடியாதது, யாராலும் அதை மீற முடியாது. 

பூ:புவ:ஸ்வ: என்ற மூவுலகமும் க்ருஹஸ்தர்கள் என்ற குடும்பஸ்தர்களுக்கானது. இவற்றின்  தலை என்ற அவயவமாக மஹர் லோகம்,  அதற்கு மேல் ஜன, தப,சத்ய என்ற பெயருடைய லோகங்கள் வரிசையாக, அம்ருதம்-மரணமின்மை, க்ஷேமம்-வியாதிகள் இல்லாமலிருத்தல், அபயம்- பயமின்மை இவைகளை கொண்டுள்ளன.

இந்த மூன்று உலகமும், ஜன, தப,சத்ய லோகங்கள்,  முதல் மூன்றின் (பூ,புவ:ஸ்வ) புற வெளியில்  இருப்பவை. க்ருஹஸ்தர்கள் அல்லாத, ப்ரும்மசாரி, வானப்ரஸ்தம் என்ற வயதானவர்கள், இவர்களுக்கானவை. 

 வித்யா- இரண்டு வகைப்படும்.  பரம புருஷன் என்ற க்ஷேத்ரக்ஞன் – ஞானி

  साशनन – अनशनन – 

சாஸனன் -ஜீவன்,   –        -கர்ம பலனை அனுபவிக்க கூடியது.   அனசனன்  -கர்ம பலன் இல்லாதது  -தேவன். 

பரமேஸ்வரனிடமிருந்து அண்டம் ப்ரும்மாண்டம் தோன்றியது என்பதால், அதிலிருந்து, பஞ்ச பூதங்கள், இந்திரியங்கள் என்ற புலன்கள், சப்தம் முதலான ஐந்து  தன்மாத்திரைகள்.  இவைகளால் ஆன பூவுலகம் பிறந்தது.  அதன் உள்ளிருந்தாலும் சூரியன் தன் கிரணங்களால் உலகில் பரவி இருப்பதை போல விஸ்வம் என்ற உலகை பிரகாசிக்கச் செய்வதோடு, ஒரே சமயத்தில் தான் ப்ரும்மாண்டத்தில் இருப்பவனாகவும் அதை தாண்டி,  ப்ரும்மாண்டத்திலிருந்து   வேறு பட்டவனாகவும் இருக்கிறான் என்பது தாத்பர்யம். 

நான் அவருடைய நாபி பிரதேசத்திலிருந்து உண்டானவன்.  அந்த சமயம் எதையுமே அறியாதவனாக  பரம புருஷனின் அவயவம் மட்டுமே என்று இருந்தேன்.  உலகியலில் லோகம் என்றோ, யாகம் செய்வது என்பதோ எதுவும் தெரியாதவனாக. பின்னால் அக்னிஷ்டோமம், பசுக்கள், ஆடு முதலியன, தாவரங்கள், அஸ்வத்தம் போன்றவை,  கடைந்து அக்னியை உண்டாக்குவது போன்றவற்றை அறிந்தேன். தேவ யாகம், யாக பூமி. வசந்தம் முதலான காலங்கள். அதன் மாறுதல்கள். தர்மம் முதலானவைகளை அறிந்து கொண்டேன். 

காஞ்சனம்-தங்கம் முதலிய வஸ்துக்கள், ஓஷதிகள்- செடி கொடிகள், பல விதமான விதைகள், எண்ணெய், நெய் போன்ற வஸ்துக்கள், ரஸம்- பால், வெல்லம் போன்றவைகளின் ருசி, இரும்பு முதலிய தாதுக்கள், மண், புற்று, ஜலம், கங்கை முதலான நதி ஜலங்கள், பாதங்களாக பிரித்து ஓதும்  வேத மந்திரங்கள்,  கட்டுப்பாடில்லாத சந்தம்- வசன நடையில் இருந்தவை, விதி முறைகளுடன் யஜுர் வேதம்,   கான ப்ரதானமான சாம வேதம்,  நான்கு அத்வர்யூ -வேத விற்பன்னர்களுடன் செய்யப்படும் சாதுர்ஹோத்ரம் என்ற விசேஷமான யாகங்கள், இவைகளை அறிந்து கொண்டேன்.

அக்னி ஹோத்ரம் முதலானவைகளை  அதன் சாஸ்த்ர சம்ப்ரதாயங்களோடு கற்றுக் கொண்டேன்.  மந்திரங்கள் இரண்டு வகைப் படும். பீஜ மந்த்ரம், மாலா மந்த்ரம் என்பன. (இருபது எழுத்துக்களில் வாக் பீஜ மந்த்ரங்கள். அதை விட அதிகமான மாலா மந்த்ரங்கள். ) ஜபம் செய்ய தேவையானவை.  தக்ஷிணை- யாக காரியங்களில் உடன் ஈடுபடுபவர்களுக்கு தர வேண்டிய சம்பாவனைகள். ப்ரும்மசர்யம் போன்ற நியமங்கள்.  மந்த்ர தேவதைகள், அவர்களின்  தாரதம்யம் – முதல், அடுத்தது என்ற வரிசை கிரமம்-  போதாயனம் முதலிய கல்ப விதிகள், சங்கல்பம்- இதைச் செய்கிறேன் என்று ஆரம்பத்தில் எடுத்துக் கொள்ளும் மனம், வாக்கு, ஸ்மரண,  கீர்த்தனைகள்  இன்ன சூத்ரம் என்ற விதிகள் இவைகளை அறிந்து கொண்டேன்.  

 செய்யும் செயலுக்கான பலன்கள் எவை, சுவர்கம் முதல் பல வகை பலன்கள்,   பல விதமான அபிப்பிராயங்கள், சிரத்தை என்பதன் அத்யாவசியம்,  இது நமது நன்மைக்கே என்ற  நம்பிக்கையால் வருவது சிரத்தை.   பிராயச்சித்தம்- எதிர்பாராத இடையூறுகள், தவறுகளுக்கு மன்னிப்பு கோருதல், ப்ரும்ம சமர்ப்பணம் வரையிலான விதிகள். 

“யக்ஞேன யக்ஞம் அயஜந்த தேவா: “  என்று புருஷ சூக்த மந்த்ரம்.  

இவ்வாறு யாக சாதனங்களை அறிந்து கொண்ட நான் அந்த விதிகளின் படியே யாகம் செய்ய ஆரம்பித்தேன்.  நாராயணனின் நாபியில் உதித்தவன் என்பதால், அனைத்துமே நாராயண சரீர சம்பந்தமுள்ளவையே என்பதை அறிந்தேன்.  பகவானுக்கு சமர்ப்பணம் செய்வது என்ற நோக்கமே முக்கியமானதாக செய்யப் படுவதால் அந்த செயல் யக்ஞம் எனப்படுகிறது. பஸ்யந்தீ இதி பஸவ: என்பதன் பொருள் மனிதர்களின் மனம் அல்லது உணர்வு – பாணிபாதம் என்பது யூபம்- யாக மண்டபத்தின் தூண்- யக்ஞ பூமி மானவ தேகம், பாத்திரங்கள் தலை முதலான அவயவங்கள்,  நர ரூபத்தில் நாராயணன் தன் சரீரத்தையே, விஸ்வ மானவ ஜீவன ஆதாரமான, பழம், காய்கறிகள் முதலான ஔஷதிகள், (பச்சிலை முதலான தாவரங்கள்- மனித உணவுக்கானவை)  வளரவும், உபயோகமாகவும் யாகத்தில் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தார். (புருஷ சூக்தம் ) 

மரீசி முதலான ஒன்பது ப்ரஜாபதிகள்  தோன்றினர். பின் மனிதர்களில் முனிவர்கள், பித்ருக்கள், சுயமாக அறிவுடைய பெரியவர்கள், தேவர்கள், தைத்யர்கள், மனிதர்கள், யாகங்கள் செய்தனர். மனு முதலானவர்கள், தங்களுக்கு எதையும் வேண்டாமல் நாராயண ஸ்வரூபமே. உலகம் என்ற எண்ணத்துடன் யாகங்கள் செய்தனர். 

இவ்வகையில்  ஓரளவு தெரிந்து கொண்ட நான், பகவான் நாராயணன் அருளால், அவர் அனுமதியுடன், அவரது வழிகாட்டலில் இந்த ஸ்ருஷ்டி என்பதை ஆரம்பித்தேன்.  தற்சமயம் காணப்படும் விஸ்வம் என்பது உதயமாகியது.  பகவானின்  அதீனத்தில், ஹரன், ருத்ரனாக உலகை சம்ஹரதி- அழிக்கிறான், பின் தோற்றுவிக்கிறான்.  விஷ்ணு ரூபமாக, உலகை காக்கிறான், தானே ரக்ஷிக்கிறான். அவ்வாறே ரஜோ குண பிரதானமாக ஸ்ருஷ்டியைச் செய்ய ப்ரும்மாவாக, சத்வம் பிரதானமாக கொண்டு காக்கும் தொழிலையும், தமோ குண பிரதானமாக சம்ஹாரம் என்பதையும் செய்கிறான்.   

குழந்தாய்! நீ கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன்.  பகவான் அன்றி எதுவும் தோன்றாது. நல்லதோ, அல்லதோ, அவன் அன்றி  அணுவும் அசையாது என்பதே சத்யம். உண்மை.
என் மனதில் வியாபித்திருக்கும் நாராயணன் சாட்சியாக, நான் சொல்லும் சொல் எதுவும் தவறாகாது. என் மனம் எதையும் தவறாக எண்ணாது. என் இந்திரியங்கள் எந்த காலத்திலும் அசத்தான- தவறான வழியில் செல்லாது. 

பகவானின் நாபி கமலத்தில் தோன்றியதால், நானே வேத மயமாக, தவம் என்பதன் உருவமாக, அல்லது தவம் செய்வதில் நாட்டமுடையவனாக, கஸ்யபர் புதலான பிரஜாபதிகளால் வணங்கப் படும்  தலைவனாக, இருக்கிறேன். யோக சாதனையை அதன் விதி முறைகளோடு செய்து என் தகுதியை, சுய கட்டுப்பாட்டுடன் வளர்த்துக் கொள்கிறேன். பரம புருஷனால் என் தோற்றம் வந்தது என்பதால் என் பொறுப்புகளும் அதிகம். 

அந்த பகவானை நமஸ்கரிக்கிறேன். எவரது அருளால், பவம் என்ற ஜனன மரணம் என்ற வட்டத்துள் சுழலும் சம்சாரிகள், இந்த உலகில் மனைவி,மக்கள், வீடு வாசல், முதலான வசதிகளை அனுபவிக்கிறார்கள்.  அவரை சரணமடைந்து பர லோகத்திலும், பரமானந்தம் அடைகிறார்கள்.  ஆகாயம் போன்று எல்லையற்ற மாயா விலாசங்களை கொண்டவர் பகவான். அவரை நமஸ்கரிக்கிறேன்.  

அவரது சுய ரூபம் யாராலும் அறிய முடியாதது. ப்ரும்மாவாக நானோ,  நாரத, சனகாதிகளான நீங்களோ, வாம தேவனோ, மஹேஸ்வரனோ  கூட அறிந்து கொள்ள முடியாது.  மற்றவர்கள் எம்மாத்திரம்? 

அவருடைய அவதார கதைகளை பாடும் ஜனங்கள், நானும், என் போன்ற பிரஜாபதிகளும்  கூட,  அவருடைய உள் மனம், உத்தேசம் என்ன என்பதை அறிந்தவர்கள் இல்லை. அந்த பகவானை நமஸ்கரிக்கிறேன். 

அவர் தான் ஆதி புருஷன்.   தான் பிறவியற்றவனாக இருந்தும், கல்பம் தோறும் பிறவி எடுக்கிறான், ஆத்மாவை ஆத்மாவில், ஆத்மாவால் ஆத்மாவை தருகிறான், காப்பாற்றுகிறான். (தன் பொறுப்பில்,  அவதார காலத்தில், உபகரணமான தன் ஆத்மாவையே, கர்த்தாவான தானே ஸ்ருஷ்டித்துக் கொள்கிறான்,  தன்னையே தருகிறான் பிறகு மறைக்கிறான்) 

நாரத ரிஷியே!   அவரை, விசுத்தம்-விசேஷமாக தூய்மையானவன், அதனால் அவனைப் போல மற்றொன்று இல்லாமை.  அத்விதீயன் என்றும், கேவலம் ஞானம்- ஞானமே உருவானவன் என்றும், ஸ்திரமானவன் என்றும்,  சத்யம் – துக்க தோஷமில்லாத ஆனந்த ஸ்வரூபன் என்றும், தேசத்தாலும், காலத்தாலும் மாறாத பூர்ண ஸ்வரூபன் என்றும், அனாத்யந்தம் – ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்றும், நிர்குணன்,  அத்வயன் என்றும் முனிவர்கள் துதிக்கிறார்கள். 

பகவானின் முதல் அவதாரம்-  புருஷ சூக்தத்தில் விவரிக்கப் பட்ட சஹஸ்ர சீர்ஷ – ஆயிரம் தலைகளுடன் செய்த அவதாரம்.  தசாங்குல: தசம் பத்து என்பதில் உள்ள முதல் ஒன்று என்ற எண்ணிக்கை -ஒருவனே சர்வாந்தர்யாமி என்பதையும், அடுத்து வரும் பூஜ்யம் ப்ரக்ருதி என்பதையும்- பஞ்ச பூதங்கள், மனம், புத்தி அஹங்காரம், மாயா, பரம புருஷன் என்ற பத்து.  த்ரவ்ய-மூலப்பொருள், சக்தி, உணர்வு, என்பவைகளுடன் உலகை வியாபித்து நின்ற பகவானின் பத்து அங்குலங்கள் பத்தின் வர்கமான ஆயிரமாக, ஆயிரம் சீர்ஷம்- தலையாக பரிணமித்தது என்பது விளக்கம்.  

காலம், ஸ்வபாவம், கார்ய காரணம், ப்ரக்ருதியின் மூன்று சக்திகள், வைணவ கொள்கையில் ஸ்ரீ,பூ,நீலா என்றும், சாக்த கொள்கையில் இச்சா, ஞான, க்ரியா என்றும் ப்ரக்ருதியின் மூன்று சக்திகள் சொல்லப் படுகின்றன. 

 தக்ஷன் முத்லான ஒன்பது ப்ரஜாபதிகள் ஒன்பது எண்களின் அதி தேவதைகள். 

எண்களின் முதல் எண், அதன் தொடர்ச்சியாக இரண்டு மூன்று என்று எண்கள் பிறப்பதால், அதற்கான  

சாமர்த்த்யம் .  (தக்ஷத்வம்) உள்ளதால் அந்த பிரஜாபதிக்கு தக்ஷன் என்றே பெயர்.  

நாரத, சனக, சனந்தன,சனத்குமார, சனத்சுஜாத , ப்ரும்மாவின் மானஸ புத்திரர்கள்.  மனதில் உதித்தவர்கள். ஞானமே உருவானவர்கள், பக்தி யோகத்தை பரப்புகிறார்கள். 

லோக பாலர்கள் என்பவர்கள் இந்த்ராதி தேவதைகள்.  செயலுக்கு ஏற்ப பலன் என்பதாக, சத் காரியங்கள் செய்பவர்களுக்கு  சௌக்யம் முதலான பலன்களைத் தந்து நல்ல காரியங்களில் மக்களின் மனதை ஈடுபடச் செய்வார்கள். 

ஆகாயத்தில் சஞ்சரிக்கும் கருடன் போன்றவர்கள், மண்டல சாரிகள் எனப்படுவர்.  பானு மண்டலம், க்ரஹங்களின் சஞ்சாரம்,  பூமியின் சுழற்சி, சூரிய குடும்பத்தின் பரிவர்த்தனம்- சலனம் என்பதில் உதவியாக இருக்கின்றனர்.  அவர்களில் இரவு பகல் என்ற இரண்டு பக்ஷங்கள், இறக்கைகள் உள்ள, ப்ரும்மாண்ட ஸ்திதிக்கு காரணமாக விளங்கும்  வைனதேயன், சுபர்ணன், அக்ஷயன், கருத்மான், அகண்டமான கால ஸ்வரூபன்.  அதனால் தான், காலத்தைக் குறிக்கும் சூரியனுடைய முன் தோன்றலான அருணன், கருத்மதக்ரஜ -கருத்மானின் முன் பிறந்தோன் என்ற பொருளில் தினம் என்பதின் முன் பகுதி மட்டுமான பாதி சரீரி என்ற பொருளில், அனூரு என்ற பெயரும் பெற்றான். மேலும் பூமி ஆகாச மத்திய ரேகாவாக கருட மாதா வினதா சொல்லப் படுகிறாள். 

நரலோக பாலகர்கள் சூர்ய சந்த்ர முகமாக, பூமியில் அவதரிக்கும், மனு, மாந்தாதா என்பவர்கள்.

பாதாளம் முதலிய கீழுலகம், பூவுலகில் உத்தர துருவத்திலிருந்து, தக்ஷிண துருவம் வரையில் வியாபித்து இருக்கும் சர்ப்பம் போன்ற உருவம் உடைய குண்டலினி, பூமியின் ஸ்திர தன்மைக்கு காரணமாக இருப்பதால், அனந்த சக்தியுடையவன், அனந்தன், ஆதி சேஷன் என்று அறியப் படுகிறான்.  அதனாலேயே, அனந்தன் பூ பாரத்தை தாங்குகிறான் என்று புராணங்களில் வர்ணிக்கப் படுகிறான். வாசுகி என்ற மற்ற மூவரும் க்ரஹங்களுக்கு மத்தியில் பரஸ்பர ஆகர்ஷண சக்தி மார்க்கங்களை நிர்வஹிக்கிறார்கள். பூமியில் நதிகளின் ப்ரவாகத்தை, பிராணிகளின் சரீரத்தில் ரத்த நாளங்கள் தோன்றுவதில் உதவியாக இருக்கிறார்கள். 

கானம், வித்யா என இருப்பவர்கள் கந்தர்வர்கள்.  அவர்கள் ஜீவன்களின் கைகளில் உள்மூச்சு, வெளி மூச்சு இவைகளின் போக்கு, ஹ்ருதய  துடிப்பு,  இவற்றை நிர்வஹிக்கிறார்கள்.  வித்யாதரர்கள் என்பவர்கள், செல்வத்தை சம்பாதிக்க சாதனங்கள், மந்திர தந்திரங்கள், – இவர்கள் தான் ஜீவன்களின் கார்யசித்தி, பிராணிகளின் நடமாட்டம், கண்களில் தென்படும் ப்ரபஞ்சத்தின் பலவிதமான  பொருட்களின் தீர்கத்வம் நீண்ட ஆயுள், வைசால்யம்-பரப்பு, கனதா- அடர்த்தி, பரிமாண கோணங்கள் இவைகளின் விதிகள் இவற்றை நிர்வஹிக்கின்றனர். 

யக்ஷா: என்பவர்கள் மனித உடல் இன்றி, பர்வதங்களின் சாரலில், பெரிய மரங்களில், குகைகளில், பல தேசங்களிலும் பாறைகளின் அமைப்பிலும், இருக்கும்,  விஷய அறிவு உடையவர்கள்.இவர்களின் ஆகாரம், மரங்களில் கிருமி, கீடக முதலியவை. தன் ஸ்திதியை இடையூறு செய்யும் மனிதர்களை பயமுறுத்துவார்கள். அதே சமயம் தன்னுடன் இணங்கி இருப்பவர்களுக்கு பாரத்தை தூக்குவது போன்ற காரியங்களில் உதவியாக இருப்பார்கள். 

ராக்ஷஸர்கள்  சரீர நிர்மாண காரணமாகும் பிதாவின் வீர்யம், பிந்து இவைகளையும், ஜீவன் களின் எலும்புகளையும், ஸ்தூல சரீரம், கோசம் இவற்றின் அதி தேவதைகளாக இருப்பார்கள்.    ஊர்வன, உரக, நாகர்கள் என்பவர்கள்,  சாதாரணமாக கரு உருவாவதை நிர்வஹிப்பார்கள். பீஜம், துளிர் என்பவற்றை பித்ருக்கள் என்பவர்கள் நிர்வகிக்கிறார்கள்.

திதியின் மைந்தர்கள் தைத்யர்கள்.  இவர்களிலிருந்து சற்றே மாறுபட்டவர்கள் தானவர்கள்.  தேகம் இல்லாமல் உயிர் உள்ள ஜீவன்கள் ப்ரேதர்கள்.  மாமிச பக்ஷிணர்கள் பிசாசர்கள். உடல் இல்லாமல் ப்ரக்ருதி சக்தியுள்ளவை பூதங்கள். கூஷ்மாண்டவர்கள் இந்த ஜாதியினர்.  

இவையனைத்தும் மிகச் சிறிய அளவிலாவது பகவானின் அம்சம் உடையவர்களே.  பகவானின் ஐஸ்வர்யம், மஹத் என்பதிலிருந்து, தேஜஸிலிருந்து, ஓஜஸ் என்ற சக்தியிலிருந்து, உத்ஸாகம், சகிப்புத் தன்மை,  மற்றும், வேகம், தைர்யம், பலம், தாரணா என்ற பொறுத்துக் கொள்ளும் சக்தி (stamina) பொறுமை, சஹனம்- ஏற்றுக் கொள்ளும் குணம், ஸ்ரீ – சோபை-அழகு, ஹ்ரீ:-லஜ்ஜா, விபூதி நியாம என்பவை, ஆத்மா, புத்தி, யுக்தமான சொல், அத்புதமான சப்தங்கள், இவையனைத்தும் ரூபமாக வரும் சமயம்,  போற்றத்தகுந்தவையே.  தன் இச்சையால் எடுத்துக் கொண்ட, திவ்ய மங்கள ரூபமான பகவானின் விராட் புருஷனின், தனதேயான (SELF) விபூதியே இந்த ரூபங்களின் அடிப்படை என்பது தாத்பர்யம். 

அவதாரங்கள் அனேகம். அவைகளில் பிரசித்தமானவற்றை வர்ணிக்கிறேன்.  ப்ராதான்யமாக, முக்யமாக ரிஷி முனிவர்கள் சொல்லும் லீலாவதாரங்கள் – இவைகளை கேட்டு உன்னை புனிதப் படுத்திக் கொள்வாயாக. 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் இரண்டாவது ஸ்கந்தத்தின்,   ஆறாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-45

||ஓம் நமோ பகவதே வாசுதேவாய || இரண்டாவது ஸ்கந்தம் -ஸ்ரீ சுகர் சொல்கிறார்

அத்யாயம்-7

ப்ரும்மா தொடர்ந்தார்.   பூமி ஒரு சமயம் ஒரு அசுரனால் மறைத்து வைக்கப் பட்டாள். அதை மீட்க பகவான் வராகமாக அவதரித்தார்.  அந்த அவதாரம் யக்ஞாவதாரம் எனப்படும்.

ருசி என்ற பிரஜாபதி, அவர் மனைவி ஆகூதி. இவர்களுக்கு ஒரு மகன் சுயக்ஞன் – அவன் மனைவி தக்ஷிணா – அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் சுய என்ற தேவர்கள் ஆனார்கள்.  சுயக்ஞன் தேவேந்திரன் ஆனான். தாய் வழி பாட்டனார் அவனை ஹரி என்றே அழைத்தார். தேவனாக ஆனதும், உலகை தன் இஷ்டப்படி ஆட்டுவித்தான்.

அடுத்தது கபிலாவதாரம்.  கர்தமர் என்ற பிரஜாபதி. தேவஹூதி அவர் மனைவி.  ஒன்பது சகோதரிகளுக்கு பின் மகனாக பிறந்தார்.  தன் தாயாருக்கு ஆத்ம தத்வம்  என்ற ப்ரும்ம வித்யாவை உபதேசித்தார்.  அதனால் அவள் இந்த ஜன்மத்திலேயே முக்தியை அடைந்தாள்.

தத்தாத்ரேய அவதாரம்:  அத்ரி மஹரிஷி புத்ரன் வேண்டும் என்று வேண்டியதால் மகிழ்ந்த பகவான், என்னையே தந்தேன் என்று அவருக்கு மகனாக பிறந்தார்.  தந்தேன் என்ற பொருள் பட  தத்த- கொடுக்கப் பட்டவன் – என்றே இந்த அவதார பெயராகியது.  பக்தனுக்கு வேண்டியதை தருபவன் என்ற பகவானின் குணம் இதில் அறிகிறோம்.  அவரை பக்தி செய்த யது, ஹேஹயன் போன்றவர்களும் உலகிலும் பல நன்மைகளை அடைந்தனர்,  பின்னர்  அவரது பாத பங்கஜ பூஜா பலனாக மோக்ஷத்தையும் அடைந்தனர். யது வம்சத்தில் வந்தவன் தான்  யயாதி.

குமார அவதாரம்: ஒரு யுகம் முடிந்து ப்ரளயத்தில் நஷ்டமான பல விஷயங்களில் ஒன்று ஆத்ம தத்வம் என்ற  சம்ப்ரதாயம்.  ஆரம்பத்தில் ப்ரும்மாவாக செய்த தவங்கள், தானே செய்த தவங்கள் இதன் பலனாக ப்ரும்மாவின் புத்திரர்களாக நான்கு குமாரர்கள் பிறந்தனர்.   சனம்- தவம் – தவத்தின் பலனாக பிறந்தவர்கள் என்ற பொருளில்  சனத் குமாரர்கள் முறையே  சனத்குமாரன், சனகன், சனந்தனன், சனத் சுஜாதன் – என்று பெயர்கள். இவர்கள் பிறவி ஞானிகள். உலக வாழ்க்கையில் ஈடுபடாமல், ஞான மார்கத்தையே ஏற்றுக் கொண்டவர்கள். ஆத்ம தத்வம் என்ற சம்ப்ரதாயம் மறு மலர்ச்சி பெறச் செய்தார்கள்.

நர நாராயண அவதாரம்:  தர்ம என்ற பெயருடைய ப்ரஜாபதி. அவர் மனைவி தக்ஷன் மகளான மூர்த்தி என்பவள். அவர்களுக்கு நாராயணன், நர என்று இரட்டையர்களாக பிறந்தார்.  இந்த கதை பின்னால் சொல்லப் படுகிறது. அனங்கன் என்ற மன்மதன்   தேவ காரியமாக, தவம் செய்து கொண்டிருந்த பகவானின் தவத்தைக் கலைக்க பெண்களை அனுப்பினான்.  ஊர்வசியை சிருஷ்டித்து அவர்கள் முன் நிறுத்தி, அவர்களை திருப்பி அனுப்பினார் என்பது கதை. 

துருவன்: உத்தான பாதன் என்ற அரசன். அவன் மனைவிகள் இருவர்.   சுருசி, சுநீதி என்று பெயர்கள். .  அரசன் சுருசியிடம் அதிக பிரியமாக இருந்தான். அதனால் அவள் கர்வம் கொண்டாள். சுநீதி மகன் துருவன்.  ஒருநாள் அவள் சொன்ன கடுமையான சொல்லைத் தாளாமல் துருவன் அரண்மனையை விட்டு வெளியேறி,  தவம் செய்தான். பாலகனான அவனுக்கு பகவான்  அருள் புரிந்ததும் துருவன் என்ற நக்ஷத்திரமாக ஆனதும் பின்னால் சொல்லப்படுகிறது. 

வேனன் என்ற அரசகுமாரன் துஷ்டனாக இருந்தும் மந்திரி மற்றும் பிரஜைகளால் அரியணையில் அமர்த்தப் பட்டான். ஆயினும் அவன்  துன்புருத்தலால் மக்கள் அவதியுற்றனர். அவன் அகாலமாக மடிந்தான்.  ரிஷிகளின் வேண்டுதலின் மேல், அவனுக்கு புத்திரனாக ப்ருது என்ற பெயரில் பிறந்தார்.  அவன் பூமியை நல்ல முறையில் பாதுகாத்து விளைச்சல்,  பசுக்கள், இவற்றை வ்ருத்தி செய்தான் என்ற சரித்திரம் பின்னால் சொல்லப் படுகிறது.

நாபி என்பவரிடம் ருஷப என்பவராக பிறந்தார். சுதேவி என்று தாயார் பெயர். ஜடயோகம் என்பதை அனுசரித்தார்.  பரமஹம்ஸர்கள்  – ஸோஹம் – அதுவே நான் என்ற மந்திரமே ஹம்ஸ மந்திரம் – அதை ஜபித்து உயர் நிலையை அடைந்தவர்கள் பரம ஹம்ஸர்கள். இவர்கள் துறவிகள்.  ஹம்ஸ மந்திரமே  ஸ்வாசத்தால் பாடப்படும் சாமவேதம்.  அதனுடன் தொண்டையிலிருந்து உச்சரிக்கப் படும் நாதமே ருஷப என்பது. இந்த நிலையில் ஓங்கார தியானம் செய்யும் பொழுது ரிக் வேதத்தின்  தர்சன சித்தி அடைவர்.  – எனவே ருஷபர், ரிக்வேத மூர்த்தியான  ஹரி என்று ஆகிறது.   நாபியிலிருந்து நாதம் வருவது, தந்தையின் பெயரான நாபி என்பதாகவும், வாக்தேவியை நினைவு படுத்துவதாக தாயாரின் பெயர் சுதேவி என்பதாலும்,  ருஷபர் என்பது அவர் பெயராகவும் அமைந்துள்ளது.

என் (ப்ரும்மாவின்) யாகத்தில் வேத மயமான, பகவான் ஹயக்ரீவனாகத் தோன்றினார்.   அந்த குதிரை முகத்திலிருந்து, அழகிய வேத வாக்யங்கள் வெளி வந்தன.  பொன்னிறமாக, வேத மயன், யாகமயன், அகில தேவதாத்மா என்று துதி செய்தோம்.  ஹல் என்பது ஒரு சங்கேதம். அகாரத்திலிருந்து  ஹ காரம் வரை உயிர், மெய் எழுத்துகள் அனைத்தும் குறிக்கும் இலக்கண பரி பாஷை.  வாக் தேவியின்  உடலில் தோன்றியவை.    “அக்ஷராணாமகாரோ அஸ்மி” என்ற கீதா வாக்கின் படி பரமாத்ம சங்கேத மான ‘அ’ காரம் – அதில் ஆரம்பித்து மற்ற அக்ஷரங்கள், அதன் பின் சொற்கள், பதங்கள், வாக்கியங்கள்  என்று விரியும் மொழி.  அதாவது அகில வித்யா பூதமான ‘ஹ’ என்ற சப்தம். ( அ காரம் என்பதில் ஆரம்பித்து என்று சொல்ல ‘ஹ’  உச்சரிப்பு வசதிக்காக ‘அ’ ஹ என்று துவங்கும். அதே போல கடைசி எழுத்துடன்  சேர்த்து ‘ஹல் என்று  ஆகும். பாணினியின்  வியாகரண மாகேஸ்வர சூத்ரங்கள்  அ இ உண் என்று ஆரம்பிக்கும்.)

மேலும் தலை எல்லா அக்ஷர, ப்ரபஞ்ச அபிவ்யக்தி தோற்றத்திற்குமான ஸ்தானம் என்பதால் க்ரீவம்- கழுத்திற்கு மேல் உள்ள தலை, ஹயமாக,  அகாரத்தில் ஆரம்பித்து ஹ வில் முடியும் அக்ஷரங்களாக ஆவதால், ஹய – என்பது வித்யா ஸ்தானம். ‘ஹய’  ஸ்தூலமான பொருள்,  வெளியில் தெரியும் குதிரை முகம் என்பது அக்ஷர மயமான வாக் தேவதா என்பதும்,  ஆத்மா என்பது தேஹ. ப்ராண இரண்டும் சேர்ந்த பின் உள்ள உடலில் இருப்பதாக கொள்வதாலும், நிர்மலமான ஞானானந்த மயமான, சர்வ வித்யா ஆதாரமான பரமாத்மாவின் விக்ஞானமயமான்  ப்ரும்ம யக்ஞத்தில் ஹயசீர்ஷ: குதிரை முகன் அல்லது வாக்கின் தேவதா ஸ்வரூபம் ஹயஃக்ரீவ: என்று பொருள். (தலையையும் உடலையும் சேர்ப்பது க்ரீவம் என்ற கழுத்து)  தவிர ஸ்வாஸ நிஸ்வாஸ- மூச்சை உள் வாங்குவதும் வெளி விடுவதுமான செயல் ‘சோஹம் ‘ என்ற மந்திர த்தின் மற்றொரு பெயரான ப்ரணவாகாரம், ப்ரணவம் சந்தஸ் என்ற வேதத்தின் சாரபூதம் – அதன் சாரமானது என்று சொல்வது போல, ஹயக்ரீவனின் மூக்கின் வழி வெளி வரும் மந்திரம்  -உலக ஸ்ருஷ்டிக்கு ஆதாரமான வேத வாக்கியங்களின் உத்பத்தி ஸ்தானமாகவும், (ப்ரணவமாகவும்) இணைத்து சொல்லப் படுகிறது.  மேலும் ஹய என்ற சப்தம் உலக வழக்கில் குதிரை என்ற பிராணி என்பதாக ஆனதால்,  பகவானுடைய உருவம் அஸ்வம் என்ற குதிரை முகமாக ஆகி விட்டது. “ ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதீம், ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவமுபாஸ்மஹே “ என்ற பிரசித்தமான ஸ்லோகம் சொல்வது ஞான மயமான, வித்யா ஸ்வரூபமான யக்ஞ புருஷணான பகவானைச் சொல்கிறது.

 யுக முடிவில், ஒரு சமயம் ஸ்வாயம்புவ மனு ப்ரளய ஜலத்தில் (நதியில்)  நின்றவாறு இரு கைகளை குவித்து அஞ்சலி செய்து கொண்டிருக்கும் பொழுது,    உலகத்தின் அனைத்து உயிரினங்களின் இருப்பிடமான பூமியின் வடிவத்தில், மீனாக பகவான் காணப்பட்டார்.  அந்த ப்ரளய ஜலத்தில், அவரது வாயில் வேதங்கள், அதன் சாகைகளோடு பிடித்துக் கொண்டிருந்தார்.  யுகாந்தம் என்பதால், ஸ்தூலமான உலகம் காணப்படவில்லை. மீன் உருவம்  சகல உயிரினங்களுக்கும்  பீஜ ரூபம் (முதல் வடிவம்) என்று அறியப் படுகிறது.  உருவமற்ற உலகம். எங்கும் தண்ணீர், அதில் மூழ்காமல் வேத சாகைகள் அடுத்த யுகம் தோன்றும் சமயம் வேண்டியிருக்கும் என்பது போல், அவற்றை கெட்டியாக பிடித்துக் கொண்டு நீரில் விளையாடுவது போல பகவான் சஞ்சரித்ததாக பாகவதம்  வர்ணிக்கிறது.  திரும்பவும் ஸ்ருஷ்டியை ஆரம்பிக்க   தேவையாக இருக்கும் என்று நினைத்தோ, அவரிடம் சமர்ப்பித்தது போல புது உலகை நிர்மாணிக்கத் தயாரான பஞ்ச பூதங்கள் முதலியன, ஸ்ருஷ்டி ரகசியம் அடங்கிய வேத சாகைகளை அவரிடம் கொண்டு சேர்த்து விட்டன.  இது தான் வேதோத்தாரணம் என்று கவிகள் சொன்னது. (“வேதான் உத்தரதே” என்று அஷ்டபதி ஆரம்பம்.)

கூர்மாவதாரம்:  பாற்கடலில்,  தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து அம்ருதம் பெற கடைய நினைத்த பொழுது மத்தாக மந்தர மலையை கடலில் போட்டனர்.   அதை மூழ்காமல் பாதுகாக்க பகவான் கூர்மமாக ஆமையாக அவதாரம் செய்து தன் முதுகில் மலையைத் தாங்கினார்.  மலை கடையப் படும் பொழுது கடலைக் கலக்கி சேறாக்கியது.  பின் அத்தியாயங்களில் விவரமாக சொல்லப்படுகிறது.

நரசிம்ஹாவதாரம்:  தேவர்களை பயமுறுத்தி ஆட்டுவித்த அசுரன், ஹிரண்யகசிபு. அவனை சம்ஹாரம் செய்ய பயங்கரமான பற்கள், நகங்கள் இவற்றுடன்  நர சிங்கமாக அவதரித்தார். கையில் கதையுடன் அடிக்க வந்த ஹிரண்ய கசிபுவை தன் மடியில்  இருத்தி,  நகங்களால் வேகமாக கிழித்தார்.

கஜேந்த்ர மோக்ஷம்: குளத்தில் இறங்கிய கஜேந்திரனை,  ஒரு பெரிய முதலை,  காலைப் பிடித்து இழுத்தது.அதிலிருந்து விடுபட முடியாமல் தன் யானைக் கூட்டத் தலைவனான கஜேந்திரன், கையில் அந்த சமயம் பறித்த தாமரை மலரோடு,  “ஹே! ஆதி மூலமே!  அகில லோக நாதா! தீர்த்தங்களில் இருப்பவனே! பாவன கீர்த்தே!  காப்பாற்று என்ற கதறல் கேட்டவுடனே ஓடி வரும் நாராயணனே! என்னை காப்பாற்று என்று அலறியது.  உடனே, சக்கரத்தை எடுத்துக் கொண்டு, கருடன் மேல் ஏறி, அங்கு வந்து கையை பிடித்து மேலே இழுத்து காப்பாற்றினார்.  சக்கரத்தால் முதலையை வீழ்த்தினார்.

வாமனாவதாரம்: அதிதிக்கு பன்னிரெண்டு  மகன்கள். ஆதித்யர்கள் எனப்படுவர்.  கடைசி மகன்  யக்ஞாதிபதியான  பகவான்.   இளையவன் என்றாலும் குணங்களால் ஸ்ரேஷ்டன்.  அவரே வாமனன்.  ஏனெனில் தன் சிறு பாதங்களால் உலகனைத்தையும் ஆக்ரமித்து விட்டான்.  பலியிடம் ஏன் யாசிக்க வேண்டும்? என்ற கேள்விக்கு யாசிக்காமல், தர்ம மார்கத்தில் இருப்பவனுடைய செல்வத்தை யாராலும் அசைக்க முடியாது என்று சொல்கிறது பாகவதம்.  பகவான் யாசித்த மூன்றடி நிலத்தை தருவதாக  சொல்லி, உடனேயே தானம் செய்தான் பலி என்ற அந்த அரசன்.  அதனால் அவனுக்கு நஷ்டம் எதுவுமில்லை. விபுதாதி பதி, – மூவுலகிற்கும் அதிபதியான பகவான், தன் பாத கமலங்களை அவன் சிரசில் வைத்தார். ஓங்கி உலகளந்த பகவானின் பாத கமலங்களை ப்ரும்மாதி தேவர்கள் செய்த பாத ப்ரக்ஷாலனம்- கால்களில் விட்ட நீரும் அவன் தலையில் விழுந்தது. 

(போக மயமான அரச வாழ்க்கை, எவ்வளவு நன்மை செய்தாலும், ஏதோ ஒரிடத்தில் ஒரு ஜீவன் துன்பப்படுவதை தவிர்க்க முடியாது என்பதால், அந்த பிறவியில் அனுபவிக்கும் சுக சௌக்யங்கள் மட்டுமே என்று ஆகும்.  தியாகமே கொள்கையாக எளிய வாழ்க்கை வாழ்பவர்கள் சாஸ்வதமான வைஷ்ணவ பதங்களை அடைவார்கள் என்று பொருள்.- உரையாசிரியர்கள்)

நாரதரே! உங்களுக்கும் பகவான் யோக சாஸ்திரம் சொல்லிக் கொடுத்தார்.  மிகவும் மகிழ்ச்சியுடன் ஞானம், பாகவதம் என்ற இந்த ஆத்ம தத்வ தீபம் என்பதையும் அளித்தார்.  வாசுதேவனே சகலமும் என்று நம்பும் பக்தர்கள் இதை மிக உயர்வாக எண்ணுகிறார்கள்.

மனு வம்சத்தில் ஒவ்வொரு மன்வந்தரத்திலும் பகவான் அவதரிக்கிறார்.  பத்து திக்குகளிலும் தன் தேஜஸை பரவ விடுகிறார். அதுவே சக்ரமாக உலகை பாதுகாக்கிறது. அவருடைய சரித்திரம் மூன்று உலகிலும் பிரசித்தமானது. துஷ்டர்களான அரசர்களிடம் தண்டம்- தண்டனையையும் தருகிறார்.  தர்மம் தழைக்கவும், அதர்மம் அழியவும் அவதரிக்கிறார்.

தன்வந்திரி அவதாரம்:  ஜனங்கள் வியாதிகளால் அவதிப் படுவதை குணப்படுத்தும் ஔஷதிகளை வைத்துக் கொண்டு, தன்வந்திரி பாற்கடலில் அவதரித்தார்.  ரோகி- வியாதியஸ்தனை காப்பற்றுகிறார். ஆயுளை வளர்க்கும் ஆயுர்வேதம் என்ற சாஸ்திரத்தையும் அனுக்ரஹித்தார்.

பரசுராம அவதாரம்:  ப்ராம்மணர்களை துன்புறுத்தினால் வேத அத்யனமும், ஆசாரங்களும் வீணாகும் என்பதை உணர்த்த ப்ராம்மண விரோதிகளாக இருந்த அரச குலத்தை பகவான் பரசு என்ற கோடாலியை ஆயுதமாக கொண்டு அழித்தார்.  மூன்று ஏழு முறை- இருபத்தோரு முறை உலகை சுற்றி எங்கெல்லாம் வேத பாரயணமும், சிஷ்டாசாரமும் குறைந்ததோ, அங்கெல்லாம் தன் பரசுவால் அரச குலத்தை அழித்தார் என்பதால் பரசுராமன் என்று பெயர் பெற்றார். 

ராமாவதாரம்: ராம அவதாரம் அனைவருக்கும் பிடித்த அவதாரம்.  இக்ஷ்வாகு வம்சத்தில் சகோதரர்களுடன் பிறந்து, தந்தையின் கட்டளையை ஏற்று, மனைவி சீதையுடனும், லக்ஷ்மணனுடனும்  வன வாசத்தை மேற்கொண்டார்.  அனுகூலமான சுமுகன். சகல குணங்களும் உடைய,  அதிகமாக மக்களுக்கு இசைந்த அவதாரம். இவரிடம் விரோதித்துக் கொண்டு ராவணன் அழிந்தான்.  இவரிடம் சமுத்திரம் பயந்தது.  எதிரியான ராவண ராஜதானி செல்ல வழி விட்டது.  இந்த செயலால் ராமன் தன் சேனையுடன் இலங்கை, செல்லவும், அவன் வானர சேனை, இலங்கையை  ஒரு கலக்கு கலக்கி, போரிட்டு,  ஹரன் செய்தது போல ஊரையும் தீக்கு இரையாக்க வழி வகுத்தது. என்னைப் போல யாருண்டு? என்று கர்வத்துடன் நிமிர்ந்த ராவணன், செய்த சீதாபஹரணம் என்ற மிகப் பெரிய தவற்றினால், பகவான் ராமனின் கோபத்திற்கு ஆளானான். தன் தனுஷ்- வில் அம்பு மட்டுமே ஆயுதமாக அவனை போரில் வென்றார்.

க்ருஷ்ணாவதாரம்: பூமியில் அசுரர்கள்,   அசுர குணங்களுடன் அரசர்களாக ஆதிக்கம் செலுத்தவும், பலமில்லாத சாதாரண குடி மக்களை துன்புறுத்துவதும் அதிகமாகியது.  பூமி இவர்களின் பாரத்தால் திணறினாள். இந்த காரணத்தால், பகவான் அவதாரம் செய்தார், இருவராக- கருமையான கேசம் உடைய ஸ்ரீ க்ருஷ்ணர், வெண்மையான கேசத்துடன் பலராமன். 

குழந்தையாக இருந்த பொழுதே பூதனா, மூன்று மாதத்தில் சகடாசுர வதம்,  உரலில் கட்டப்பட்டு தளர் நடையாக நடந்து அர்ஜுன மரங்களை கீழே தள்ளியது போன்ற சாகஸ செயல்களை செய்தார்.

வ்ரஜ தேசத்தில் விஷமான நீரை குடித்து மயங்கிய  கோபால சிறுவர்களை காப்பாற்ற, காளிங்கன் மேல் நடனம் செய்தது – அந்த செயல் அசாதாரணமானது, மனித யத்தினத்தால் செய்ய முடியாத  தேவ கார்யம் என்று போற்றினர்.   தன் மகன் வாயில் ப்ரும்மாண்டத்தைக் கண்டு திகைத்த  தாயான யசோதா, வருண பாசத்திலிருந்து நந்த கோபனை மீட்டது, கோபர்களை குகையிலிருந்து மீட்டு வந்தது என்ற செயல்களால் கோகுலத்தையே வைகுண்டமாக்கிய அவதாரம்.

க்ருஷ்ணாவதார கதைகளை சுருக்கமாக சொல்லி முடிக்கிறார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் இரண்டாவது ஸ்கந்தத்தின்,   ஏழாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-53

||ஓம் நமோ பகவதே வாசுதேவாய || இரண்டாவது ஸ்கந்தம் -ஸ்ரீ சுகர் சொல்கிறார்

அத்யாயம்-8

பரீக்ஷித் மகாராஜா, மேலும்  கேட்க விரும்பியதால் ஸ்ரீ சுகர் தொடர்ந்து சொல்கிறார்.  

ஹரியின் சரித்திரம் மங்களகரமானது என்று தெரிந்து கொண்டே.ன்.  நாரதர் இன்னும் என்ன சொன்னார்?

மஹாபாகோ!  என் உடலை தியாகம் செய்யும் முன் ஸ்ரீ க்ருஷ்ணரிடம் என் மனம் லயிக்கும் படி காதால் கேட்கிறேன்.  சிரத்தையுடன் கேட்கிறேன்.  என் மனதில் வேறு எண்ணமின்றி அவரே என் மனதில் நிறையட்டும்.   சரத் காலம் வந்தால் குளங்களில் வண்டல் அடியில் படிந்து நீர் தெளிந்து இருக்கும்.  அது போல என் மனதின் குழப்பங்கள் தீர்ந்து நான் ஹரியை நினைக்கச் செய்ய  பரிசுத்தமான உங்கள் சொற்களால் தான் முடியும்

மனிதன் என்னதான் உலகில் சுற்றினாலும், தன் வீட்டிற்கு திரும்பி வருவது போல, பக்குவமான மன நிலை உள்ளவன் வித விதமான சாஸ்திரங்களைப் படித்தாலும் ஸ்ரீ க்ருஷ்ண பாதத்தை விடுவதில்லை.

பஞ்ச பூதங்களால் ஆன சரீரம் என்று சொன்னீர்கள். ப்ரும்மன்! எப்படி ஆரம்பித்தது? என்ன காரணத்தால் முதல் ஜீவன் உண்டானான். ஈஸ்வரன் இந்த பஞ்ச பூத சம்பந்தம் இல்லாதவன். ஈஸ்வரனின்   ப்ரக்ருதி முதலான உபாதானங்கள்- கருவிகள் எங்கிருந்து வந்தன.  அவருடைய இச்சா மாத்ரம்- அவருடைய விருப்பம் மட்டுமே காரணமா அல்லது வேறு நிமித்தங்கள் உண்டா?  உங்களுக்குத் தெரிந்திருக்கும்

பூதாத்மா, அஜன், (ப்ரும்மா) விஷ்ணுவிடம் பிறந்தார்.  அந்த பலத்தில் பஞ்ச பூதங்கள், அஹங்காரம் முதலிவைகள், மேலும் தேவையான தத்வங்களைச்  சிருஷ்டி செய்து கொண்டார். அவருடைய அனுமதியில்,  சுதந்திரமாக படைக்கும் தொழிலைச் செய்தார்.  நாபியில் இருந்து பிறந்ததால், பகவானின் ரூபத்தை  நேரடியாக கண்டவர். அதே அவயவங்களோடு படைத்தார்.

விஸ்வ ஸ்ருஷ்டிக்கு, அதன் இருப்புக்கு காரணமானாலும் அழியாத தன்மையுடையவர். (அவ்யய:) மாயாதீசன், (மாயை என்பவதை நிர்வஹிப்பவர்) தன் மாயையை விட்டு,  யோக நித்ரையில் – தூங்குவதாக சொன்னீர்கள். எங்கு? 

தன் அவயவங்களிலிருந்து இந்திரன் முதலான லோக பாலர்கள், பாதாளம் முதலான லோகங்களை   ஸ்ருஷ்டித்தார் என்று உங்களிடமிருந்துஅறிந்தோம்.  கல்பம், மஹா கல்பம், இடைப்பட்ட கல்பம் என்பதன்  கால அளவு என்ன?  இறந்த காலம், நிகழ் காலம், வரும் காலம் என்பவைகளை எந்த விதத்தில் கணக்கிடுவோம்?   தேவ, பித்ரு, மனுஷ்யர்களுடைய ஆயுள் என்பது எவ்வளவு? அதை கணக்கிடும் விகிதம் என்ன?

யோகி சுகரே!  அணு, கண் கொட்டும் நேரம் என்பவை மிகச் சிறிய கால அளவு. சம்வத்ஸரம், யுகம் முதலியன மிகப் பெரியவை. காலத்தை எப்படி அளப்பது? கர்ம பலனாக பிறவிகள் அமையும் என்பதானால், அவை என்ன? அதன் பெயர் என்ன? எப்படி எது உயர்வு, தாழ்வு என்று தீர்மானிப்போம். இதற்கு அளவுகோல் எது?

குணங்களில் சத்வம் என்பதை தீர்மானிப்பது எது? தேவ பதவி அடைய நினைக்கும் மனிதர்களில் எந்த செயல்கள் புண்ய பாபங்களை , அவற்றின் கூட்டு அல்லது பல செயல்களின் பரிணாமம் என்பது, யாரால், எப்படி, எந்த செயலால், கர்மங்கள் அளவில்லாதது எனும் பொழுது, இதில் தேர்வு செய்ய யார் அதிகாரி? எவர் இவ்வகையில் தேவ பதவியை அடைந்துள்ளார்கள்?

பூமி, பாதாளம், திசைகள்,  ஆகாயம், பெரு வெளி, க்ரஹங்கள், நக்ஷத்ர, மரங்கள், பர்வதங்கள், இவைகள், சிறிய ஆறு முதல் சமுத்திரங்கள், தீவுகள், வரை ஜீவன்களின் பிறப்பு நேரலாம் எனில், அதில் ஆகாய, பாதாளம் முதலிய இடங்களில் பிறந்தவர்களின் வாழ்க்கை முறை எப்படியிருக்கும்?

அண்டத்தின் வெளியில், என்ன வஸ்துக்கள், அதைச் சுற்றியுள்ள இடங்கள் பாகவதர்கள் என்ற பெரியவர்கள், வாழ்வது எப்படி? அங்கும் வர்ணாஸ்ரம, நியமங்கள் இருக்குமா? ஆச்சர்யமான ஒரு விஷயம், ஹரி ஒவ்வொரு யுகத்திலும் அவதரித்து அந்தந்த யுக தர்மத்தை அனுஷ்டிக்கிறார் என்பது.

வர்ணாஸ்ரம தர்மம்: தன் திறமைகளுக்கேற்ப பொருள் ஈட்ட  தொழில்களில் ஈடுபடுகிறார்கள். அதன் அடிப்படையில் வர்ணாஸ்ரமங்கள் தோன்றின. அதை கடைபிடிப்பது தர்மம் .  ராஜ தர்மம் எந்த காலத்திலும் பிரஜைகள் சுகமாக இருக்க வேண்டியவற்றைச் செய்வது. ஆபத்தில் காப்பாற்றுவது.  

இந்த ஈஸ்வரன், இவரும் உலகில் உள்ள மனிதர்கள் போலவே உடல் மற்ற அவயவங்கள் உள்ளவனாக சித்தரிக்கப் படுகிறார்.அதனால் இவரிடம் விசேஷமாக, சிறப்பாக வேறு என்ன இருக்கிறது? இவரை பஜிப்பதால் ஒவ்வொரு பதத்திற்கும் மோக்ஷம் என்று சொல்லப் படுகிறது.  விவரமாக சொல்லுங்கள்.  இவரிடமிருந்து உலகங்கள் வந்தன.  ஜகதாகாரம்- உலகத்தின் அளவு, (வடிவம் மற்றும் கொள்ளலவு) அவரிடமிருந்து தோன்றிய பத்மம் ப்ரும்மாண்டம் போலவே இருந்ததாகச் சொன்னீர்கள். மூன்று உலக அளவில் ஒரு பத்மம் ஒருவரின் வயிற்றில் இருந்து வர வேண்டுமானால், அவருடைய மற்ற அவயவங்கள் எப்படி இருந்திருக்கும்?  சாதாரண புருஷனின் அளவு அவயவங்கள் உடையவராக சொல்லப் படுகிறார் (தன் ஸ்ருஷ்டியில் உண்டான் ஜீவன் அளவு அந்த ஜலத்திலிருந்து “) என்ற வாக்கியத்திலிருந்து அறிகிறோம். அப்படியானால், ஜீவனை விட, பரம புருஷனுக்கு என்ன விசேஷம் என்பதைச் சொல்லுங்கள்.

யோகத்தை சாதகம் செய்த யோகீஸ்வரர்கள் அணிமாதி அஷ்ட சித்தியை அடைகிறார்கள். வேத, ரிக் வேதம் முதலியவை,  உபவேதங்கள்- ஆயுர்வேதம் முதலியவை, , தர்ம ஸாஸ்திரங்களை, இதிஹாஸ புராணங்கள்-முன் நடந்த சரித்திரங்கள், இவைகளை கற்றவர்கள், அவைகளில் சொல்லப் படும் தர்ம, அர்த்த, காமங்கள்  அதனால் பெறும் பலன்கள் பற்றியும்,

ப்ரளயமும், பின் புதிதாக தோன்றுவதும், யாக கர்மாக்கள், வைதிகமானவை,  பூர்தம், ஸ்ம்ருதிகளை ஆதாரமாக கொண்டவை, தர்ம, அர்த்த,  காமங்கள் – இதன் விதி முறைகளும், பூர்த்தம்-தடாகம்,கிணறு,ஆலயங்கள், அன்ன தானம் செய்வது இவைகளை நிர்மானிக்கும் பொது ஜனங்களுக்குக்கான செயல்கள்,

புண்ய பாபங்கள், கர்ம வாசனைகள் உள்ளவர்கள், இவர்களுக்கான நன்மை தீமைகளும், வேத மார்கத்தை நிராகரித்து பாகண்டர்கள் எனப்படும் மக்களின் வாழ்க்கை முறை என்ன? மோக்ஷம் பெற இவர்களின் தராதரத்தை அளப்பது எப்படி?

சுதந்திரமானவன் பகவான். தன் மாயையால் அதாவது தன் சக்தியால் விளையாடுகிறான், செயல் படுகிறான். மாயையை விட்டு விலகி, எந்த சமயத்திலாவது தான் சாட்சியாக இருந்து உலகை காண்கிறானா?

யோகீஸ்வரரே, சுகரே! உங்களை சரணம் அடைந்துள்ள நான் இதுவரை கேட்டதில் உண்டான  எனது  சந்தேகங்கள் இவை. அனைத்தையும் வரிசையாக, விவரமாக எனக்கு புரியும்படி சொல்ல வேண்டுகிறேன்.

உங்கள் சொல் தான் ப்ரமாணம். ஆத்மபூ: என்ற ப்ரும்மா.  ப்ரும்ம ரிஷியின் கோபத்துக்கு ஆளாகி உயிர் போகும் நிலையில் உள்ள  எனக்கு அச்யுதன் கதை என்ற அம்ருதம் தான் மருந்து.

சூதர் சொல்கிறார்:  இப்படி கேட்டவனிடம் ப்ரும்மராதன் என்ற ஸ்ரீ சுகர் விஷ்ணு ராதன் என்ற அரசனிடம் சொல்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் சொன்னார். கூடியிருந்த அனைவரும் கேட்கத் தயாராகினர்.

பாகவதம் என்ற புராணத்தை சொல்ல ஆரம்பித்தார். ப்ரும்மாவுக்கு பகவானே சொன்னது. ப்ரீக்ஷித் ராஜா என்ன என்ன கேள்விகளைக் கேட்டானோ, அதற்கெல்லாம் தகுந்த பதில்களைச் சொல்லலானார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் இரண்டாவது ஸ்கந்தத்தின்,   எட்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-29

||ஓம் நமோ பகவதே வாசுதேவாய || இரண்டாவது ஸ்கந்தம் -ஸ்ரீ சுகர் சொல்கிறார்

அத்யாயம்-9

ஞானாத்மாவான ஹரியினுடைய விருப்பம் இல்லாமல், அவருடைய  சத்வாதி குணங்கள் இல்லாமல், சுயமாக சரீரம் இல்லாத புதிய உயிர், ஒரு சரீரத்தை பெற முடியாது. கனவில்   யானை, குதிரைகளை பார்க்கும் மனிதன், அவைகளை அடையாளம் கண்டு கொள்வது எப்படி சாத்யமாகிறது?  நினைவில் அவைகளை கண்டும் தெரிந்தும் கொண்டது உள் மனதில் நினைவாக பதிந்து போய் உள்ளது. இதே போல வாசனா என்ற  பகவானின் விருப்பத்தால் மட்டுமே இயங்கும் மற்ற ரஜோ, தமோ குணங்கள்.  இவை இல்லாமல்  இதுவரை சரீரம் இல்லாத,  உலகில் பிறவி எடுக்கத் தயாராகும்  ஜீவன் ஏதோ ஒரு சரீரத்தை பெறுவதே ஈஸ்வரனின் அனுக்ரஹத்தாலேயே என்பது முதல் காரணம்.  பலரூபங்கள் – தேவ, அசுர, மனித, ம்ருக பக்ஷிகள் என்று பலவிதமான ரூபங்களில், இது நான் என்று உணருவது ‘அஹம் பாவம்’ தன்னியல்பு.  இது ஜீவனின் தேஹ ஆரம்பம்.

புருஷ- ப்ரக்ருதி என்ற முதல் இரண்டு பாகங்கள் ஒன்று  மஹத் – மாறாத ஆகாயம், வாயு முதலான ஸ்திரமான தத்வங்கள். ப்ரக்ருதி – மாறும் தன்மையுடைய கர்மேந்திரிய – கை கால் முதலானவை, ஞானேந்திரியங்கள்-கண் காது என்றவை, தன்மாத்திரைகள் என்ற பார்வை, கேள்வி என்ற அதன் செயல்கள், தவிர  மனம், புத்தி, அஹங்காரம் – இதில் ப்ரக்ருதி என்ற ஜீவன்கள்,  நான், என்னுடைய என்ற பாவனைகள், மற்றும் மூன்று குணங்களாலும் (சத்வ,ரஜஸ் தமஸ் ) மோகம் அடைகிறார்கள்.  நான் என்னுடைய  என்ற எண்ணத்தைக் கடந்த சாதகர்கள் சிறந்தவர்கள், மற்றவர்கள், மாயையில் கட்டுண்டு இருந்தாலும் பக்தி என்ற சாதனத்தால் உய்யக் கூடும் – நற்கதியை அடைவார்கள்.

ஆத்ம தத்வம்  என்பதை விவரித்து பகவானே சொன்னது தான் நமக்கு பிரமாணம். அது தான் சத்யம். அது என்ன? அது தான் தவம் செய்தல்,  தன்னை பஜித்தல் – என்று  ப்ரும்மாவுக்கு சொன்னார்.   பக்தி என்பதை முதலில் உபதேசித்தவரே பகவான் தான். 

ஆதி தேவன் அவர் தான் ஜகத்தின் குரு ப்ரும்மா.   பகவானின் நாபி கமலத்தில் தோன்றிய சமயம்,  தானே உலகை ஸ்ருஷ்டி செய்ய நினைத்தார்.  அப்படி புதிதாக உலகை ஸ்ருஷ்டிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை  அறிந்திருக்கவில்லை.  தப- தவம் செய் என்று யாரோ சொல்வதை கேட்டார்.  இரு முறை தப தப – தவம் செய் தவம் செய் என்று கேட்டபின்,  யாரது, குரலுக்கு உடையவரை காண விரும்பி நாலா பக்கமும் பார்த்தார்.  எதுவும் தென்படவில்லை.  தவம் செய்வதில் முனைந்தார். தான் அறிந்தவரை மூச்சை அடக்கி வசம் செய்து கொண்டு, கர்மேந்திரியங்கள், ஞானேந்தியங்கள் இவைகளையும் அடக்கி,  த்யானத்தில் ஆழ்ந்தார்.  பல காலம் தவம் செய்தபின், அவருக்கு தன் உலகமான வைகுண்டத்தை பகவான் காட்டினார்.  

எந்த இடத்தில் க்லேசம்- வருத்தம் என்பது இல்லையோ, மோகமோ மற்ற தயக்கமோ இல்லையோ அதைக் கண்ட பேரறிஞர்கள் போற்றிய இடம். ராஜஸமோ, தாமஸமோ இரண்டும் சேர்ந்தோ அந்த இடத்தில் காண முடியாது.   பகவானின் தொண்டர்கள் மட்டுமே புழங்கும் இடம். காலமோ, மாயையோ அங்கு இராது.  நிர்மலமான  ஞானம் சத்வ மயமானது.

இந்த்ர நீல மணி போல ஸ்யாம வர்ணத்தினர். சுகுமார சரீரம், தேக காந்தியும், கமல பத்ரம் போன்ற கண்களும், நான்கு கைகளுடனும்,   பீதாம்பரதாரிகளாக, மார்பில் அலங்காரமாக மாலைகளுமாக அவரைப் போலவே அவருடைய பார்ஷதர்கள் என்ற பலர் இருந்தனர்.   அனைவருடைய நீல நிற உடலும், பீதாம்பரமும் சேர்ந்து, மின்னல்களுடன் ஆகாயம் போல இருந்தது.  அங்கு லக்ஷ்மி தேவி தன் காந்தியை எங்கும் பரவ விட்டவளாக, தன் தோழிகளுடன் பாடிக்  கொண்டிருந்தாள். ப்ரும்மா அங்கு நன்மைகளின் நாயகனாக, ஸ்ரீய:பதி, லக்ஷ்மி தேவியின்  மணாளன், யக்ஞபதி, ஜகத்பதி என்று இருந்தவரைக் கண்டார். தன் அடியார்களிடமும் அன்புடன் பேசும் அவருடைய முகம், கிரீடம், குண்டலம், சதுர்புஜம், பீதாம்பரம், மார்பில் ஸ்ரீ தேவி, மிக உயர்ந்த ஆசனம்,  இவை தவிர, சூழ்ந்து இருந்தவை,  மஹத் அஹங்காரம் என்ற அனைத்து சக்திகளும்,  நற்குணங்கள், இவற்றுடன் சந்தோஷமாக இருந்த பகவானைக் கண்டார்.  

அவரை கண்ட ஆனந்தத்தில் மூழ்கி திக்கு முக்காடியவர், அவரை வணங்கினார். பரமஹம்ஸர் என்ற சொல்லுக்கு பொருளானவர்.  அவரைப் பார்த்து, உயிரினங்களை ஸ்ருஷ்டி செய்ய தன் ஆணைப்படி செய்யத் தகுந்தவன் என்பது போல சற்றே சிரித்தபடி, கைகளை பிடித்துக் கொண்டு பேசினார்.

ஸ்ரீ பகவான் சொன்னார்:  வேத கர்பமான உலகை படைக்கத் தகுந்தவன் நீ என்பதில் நான் சந்தோஷம் அடைகிறேன். வெகு காலமாக செய்த தவத்தால் மகிழ்ந்தேன். என்ன வரம் வேண்டுமோ, கேள் என்றார்.  மிகப் பெரிய வரம் என்பது என் தரிசனமே.  கடினமான தவங்கள் செய்தாலும், புத்தியுள்ளவர்கள் என் தரிசனத்தையே பெரிதாக எண்ணுவார்கள். என் வைகுண்ட லோகத்தை காண விரும்புவார்கள்,  தவம் என் ஹ்ருதயம். தவத்தின் ஆத்மா நானே.  என் தொழில்கள், படைத்தலும் காத்தலும் என் தவத்தாலே.

ப்ரும்மா சொன்னார்: பகவன்! நானும் என் விருப்பத்தை அறிந்து கொண்டேன். அனைத்து ஜீவன்களிலும்  உள் மனம் என்ற குகையில் இருக்கும் உங்களை கண்டு கொண்டேன்.  இருந்தாலும், யாசிக்கிறேன். ஸ்தூல சூக்ஷ்மங்களை நான் அறிய வேண்டும். அனுக்ரஹிக்க வேண்டுகிறேன். விளையாட்டாக, படைப்பு, காத்தல், அழித்தல் என்ற மூன்றையும் செய்யும் உங்களுடைய சக்தியை எனக்கும் அருள வேண்டுகிறேன். சிலந்தி தானாக தன் வலையை கட்டிக் கொள்வது போல யாருடைய உதவியும் இன்றி இந்த செயல்களைச் செய்கிறீர்கள். எனக்கு அந்த கலையை அருள வேண்டும், மாதவா!.  பகவானே எனக்கு கற்றுக் கொடுத்தார் என்ற தைர்யத்துடன் நான் செய்கிறேன். சற்றும் குறைவின்றி, ப்ரஜோத்பத்தி என்ற செயலை, உங்கள் அனுக்ரத்துடன் செய்கிறேன்.  பகவான் என் கைகளைப் பற்றி (சம மாக நினைத்து) இந்த பொறுப்பை ஒப்படைத்தார் என்பதால் , எனக்குள் கர்வம் வராமலிருக்கட்டும்.  ஒரு நண்பன் தன் நண்பனை அறிவுறுத்துவது போல, என்னை இந்த செயலில் அமர்த்தியிருக்கிறீர்கள்,  இதை முழு மனதுடன் பொறுப்பாக செய்கிறேன்.

ஸ்ரீ பகவான் சொன்னார். மிக முக்கியமான ஞானம் என்பதை, விக்ஞானம்- அதை விட மேம்பட்ட அறிவுரைகள், அதன் நுணுக்கங்கள், அதன் சம்பந்தமான மற்ற விஷயங்கள், இதோ பெற்றுக் கொள், தந்தேன் என்றார்.

என்னைப் போலவே ரூபம், குணங்கள், செயல்கள் உனக்கும் அமையட்டும் என்று அனுக்ரஹிக்கிறேன்.  படைப்பது நான் மட்டுமே என்று இருந்தது.  இந்த விஸ்வமே நான் தான். ப்ரளய காலத்திற்கு பிறகும் மீதம் இருப்பது நானே. சூர்ய சந்திரன் முதலிய பஞ்ச பூதங்கள்,  எப்படி உலகில் ஊடுருவி இருந்து அவைகளின் வளர்ச்சிக்கு உதவினாலும் வெளியே தெரியாமல்,  தான் தன் பூரணமான தன்மையை தக்க வைத்துக் கொள்கிறதோ, அது போல நான் அனைத்து ஸ்தாவர ஜங்கம பொருள்களிலும் இருக்கிறேன்.

இவ்வளவு தான் தெரிந்து கொள்ள வேண்டியது.   அன்வய:-  காரணத்தை தெரிந்து கொண்டு செயல்களில் ப்ரவேசி- இறங்கு. (எண்ணித் துணிக கர்மம்)  அதில் நன்மை தீமைகளை அலசி ஆராய்ந்து கொள்.  பின்னால் எதிர் மறையாக ஏதேனும் வரக் கூடுமா என்பதை யோசித்து அதற்கான மாற்று என்ன என்பதையும் தயாராக வைத்துக்கொள்.

எந்த பிரச்னையும் உன்னை பாதிக்காது.   த்யானம், சமாதி முதலான யோக பலத்தால், திடமாக இருந்து என் வழியில் நட. கல்பங்கள் அதன் பகுதிகள் எதிலும் நீ தடுமாற மாட்டாய்.

ஸ்ரீ சுகர் சொன்னார்:  தனக்குவமை இல்லாதான், பிறவியற்றவன், உலகில் தோன்றப் போகின்ற உயிரினங்களுக்கு பொறுப்பை ஏற்ற ப்ரும்மாவுக்கு, உபதேசங்கள் செய்துவிட்டு அவர் கண் முன்னே மறைந்தார். 

அனைவரது ஹ்ருதயத்திலும் நிறைந்து இருக்கும், ஹரியை நமஸ்கரித்து, அவர் உபதேசித்த வழியில் ப்ரும்மா ஸ்ருஷ்டி- படைப்புத் தொழிலை ஆரம்பித்தார்.

அவர் சொன்ன படியே த்யானம், யமம் முதிலிய யோக சாதனைகள் இவற்றை செய்தார்.  தன்னுள் ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டார். எதைச்  செய்தால்  பிரஜைகளுக்கு நன்மை உண்டாகும் என்பதை யோசித்து ஸ்தூலமாக ஒரு வரை படம் போல செய்து கொண்டார். அவருக்கு உதவி செய்ய,   ஏவிய வேலைகளைச் செய்பவராக அவருடைய மானச புத்திரன் நாரதர் வந்து சேர்ந்தார்.  தந்தைக்கு மகன் ஆற்றும் கடமை என்பது போல  உடன் இருந்தார்.  அன்புடனும், தன்னடக்கத்துடனும், உதவிகளைச் செய்தார்.

பகவான் தன்னிடம் சொன்ன பாகவத கதையை ப்ரும்மா நாரதருக்கு உபதேசித்தார். அவர், சரஸ்வதி நதி தீரத்தில் தவம் செய்து கொண்டிருந்த வியாசருக்கு அதை உபதேசித்தார்.  நீ கேட்ட கேள்விகளுக்கு பதிலும், மேலும் பல விஷயங்களையும் சொல்கிறேன்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் இரண்டாவது ஸ்கந்தத்தின்,  ஒன்பதாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-54

||ஓம் நமோ பகவதே வாசுதேவாய || இரண்டாவது ஸ்கந்தம் -ஸ்ரீ சுகர் சொல்கிறார்

அத்யாயம்-10

பத்து விஷயங்கள் – சர்கம், விசர்கம்,ஸ்தானம், போஷணம், ஊதய, மன்வந்தர, ஈசானுகதா:, நிரோத: முக்தி, ஆஸ்ரய: என்று சொல்கிறார்.

மாறாத இயற்கை சக்திகளான ஆகாசம் முதலியன, சர்கம் என்றும், மனித யத்னத்தில் உள்ளவை, அசையும் அசையா ஜீவன்கள் விசர்கம் என்றும் சொல்லப்படுகிறது.

பகவானுடைய இருப்பிடமான வைகுண்டம் ஸ்தானம் எனப்படும். அவருடைய அனுக்ரஹம், சாது ஜனங்களை அனுக்ரஹிப்பது முதலானவை போஷணம்.

பகவான் அனுக்ரஹித்த நல்லவர்கள் நடத்தை-ஆசார நியமங்கள், மன்வந்தர: என்றும், ஜீவன் செய்த நல்ல, கெட்ட செயல்களின் பலனாக தொடரும் கர்ம வாசனா என்பவை ஊதய: எனப்படும். 

ஹரியின் அவதார கதைகள், அவரை அனுசரிக்கும் சாதுக்களின் கதைகள், மற்றும் பல இதிகாசங்கள் ஈசானுகதா: எனப்படும்.

யுக முடிவில் யோக நித்ரையில் இருக்கும் பகவானிடத்தில் அனைத்து உயிரினங்களும், சக்திகளும்,  தத்துவங்களும் அவருள் ஐக்யமாவது நிரோதம் எனப்படும்.  இக லோக வாழ்க்கையை துறந்து, சிதானந்தமான பரம் பொருளை தியானித்து நற்கதியை அடைவது மோக்ஷம் எனப்படும்.

உலகம் தோன்றியதிலிருந்து யுக முடிவில் லயம் அடைவது வரை, அடைக்கலம் தரும் பகவான் ஸ்ரீமன் நாராயணனே ஆஸ்ரய: என்ற சொல்லால் குறிக்கப் படுகிறார்.

பரமாத்மா, அந்தர்யாமி என்று அழைக்கப்படும் இவர்,   இயற்கை எனும் மஹத் தத்வங்கள், சூரிய சந்திரர்கள், அக்னி வாயு முதலான மாறாத தத்வங்கள்,  இவற்றை இயங்க செய்யும் பொழுது ஆதி தைவிகர்-

கண்கள் முதலிய இடங்களில் அதை இயக்கும் சக்தியாக இருக்கிறார்.   கண் முதலிய உறுப்புகளுடன் இருக்கும்  உருவங்களில் இருப்பவர் ஆதி பௌதிகர்.  பார்வை, பார்க்கப்படும் பொருள்,பார்ப்பவன் இவை இருந்தும், அந்தர்யாமியாக பகவான் இல்லாதவரை இம்மூன்றும் மட்டும் இருந்தும் பயனில்லை. எனவே, உள்ளுறை பகவான் ஸ்வாஸ்ரயன்,- சுயமாக செயல்பட முடிந்தவன்,  ஜீவன் அன்யாஸ்ரய:.-தானாக எதையும் செய்ய முடியாதவன்.

பரம புருஷனாக, அண்டத்தை பிளந்து வெளி வந்த சமயம், தனக்கு படுக்க ஒரு இடம் தேடினார்.  தெளிவாக இருந்த நீரைப் பார்த்தார். அதை தன் இருப்பிடமாகக் கொண்டு அதில் சயனித்தார். அதனால் நாராயணன் எனப்படுகிறார்.

ஜீவன்  தன்  கர்ம பலனைப் பொறுத்து சுபமோ அசுபமோ அனுபவிக்கிறான்.  மஹத், பஞ்ச பூதங்கள் என்பவை ஜீவனுக்கு உதவும், ஆனால் காண முடியாதவை காலம் – சென்று கொண்டேயிருப்பதால் மாறுதல் அல்லது வளர்ச்சிக்கு காரணமாகிறது.  அனுபவிப்பவன் ஜீவன். இவைகளும் ஸ்ரீமன் நாரயணனின் அனுக்ரஹத்தால் செயல் திறன் உடையதாக ஆகின்றன.  இவருடைய அனுக்ரஹம் இல்லையெனில் அவைகளின் இருப்பே இல்லை.

ஒன்றாக இருந்த தேவன் பலவாக விரும்பி தன் யோக சயனத்திலிருந்து எழுந்தார். ப்ரகாசமாக ஹிரண்மயம்- பொன் மயமாக இருந்த வீர்யத்தினால், கர்ப ரூபமான சரீரத்தை அதி தைவம், அத்யாத்மம், அதிபூதம் என்று மூன்றாக பிரித்துக் கொண்டார். ஒரே பௌருஷம்- புருஷ சம்பந்தமான வீர்யம் மூன்றாக வெளிவந்தது. அந்த புருஷனின் க்ரியா சக்தியால், ஆகாயத்திலிருந்து இந்திர சக்தி, (ஓஜ:) மனஸ் சக்தி (ஸஹ:} தேக சக்தி {பலம்} என்பதும் பிறந்தன.  இந்த மூன்று சக்திகளும் சேர்ந்து சூக்ஷ்மமான அஸு: – ப்ராணன், உயிர் – { இதை சூத்ரம் என்றனர்} பிறந்தன.

ப்ராணந்தம்- எல்லா உயிர்களிலும் இயங்கும் ப்ராண: , அதை அரசர்களை பணியாளர்கள் பின் தொடர்வது போல, அனு ப்ராணா: என்ற மற்றவை அனுசரித்து தொடர்கின்றன.  

அவருடைய முகத்திலிருந்து . முகம்- வாய் என்ற அவயவம் அமைந்தது. தாலு- முகவாய் அதை தாங்குவதாக அமைந்தது. தாலுவின் உதவிக்கு நாக்கு என்ற அவயவம்- ருசியை அறிய அமைந்தது.

 அபானன் என்ற பெயரில், கீழ் நோக்கி ப்ராணன் வயிற்றின் மத்தியில் இயங்கி, பசி தாகம், தோன்றுகின்றன. பசித்தவனுக்கும், தாக சாந்திக்கும் முகத்திலிருந்து நாக்கு ருசியை அறிவதாகவும்,  அந்த ஜிஹ்வா- நாக்கு என்ற இந்திரியத்திற்கு உதவியாகவும் அமைந்தது.  இதற்கு வருணன் தேவதையானான். தொடர்ந்து பலவிதமான ருசிகளும் வந்தன.

பரம புருஷன் நுகர விரும்பும் போது, நாஸிக- மூக்கு என்ற அவயவம் தோன்றியது.   அதன் செயல், ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ப்ராணவாயுவை சுத்தம் செய்வது. அதற்கு  உதவும் விதமாகவும், அந்த அவயவம்  ஸ்திரமாக நிற்கவும், வாயு என்ற தேவதை, கந்த வஹன்- வாசனையை சுமந்து செல்பவன் என்ற பொருள்-பெயருடையவன் தேவதையாகவும், மூக்கு என்ற இந்திரியம் வாசனையை அறிவதாகவும் அமைந்தது.

ப்ரகாசம் இல்லாமல் சூன்யமாக இருந்த சமயம் தான் பார்க்க வசதியாக கண் என்ற அவயவத்தை உண்டாக்கினார். கண்கள் அதன் இடம். ஜோதி தேவதை. கண் என்பது இந்திரியம். ரூபம் என்பதை க்ரஹித்துக் கொள்ளும் தன்மை அதன் குணம்.  

ரிஷிகள் வேதங்களை அறிந்த பொழுது,  தானும் அவற்றை கிரஹித்துக் கொள்ள, காதுகள் என்ற அவயவங்களை தோற்றுவித்தார்.  இவைகளுக்கு திசைகள் என்பவை தேவதைகள்.  ஸ்ரோத்ரம்- காது என்ற இந்திரியம். சப்தத்தை க்ரஹித்துக் கொள்வது என்பது அதன் செயல்

பொருள்களின் மென்மை, கடினம், உருவம் சிறியன, பெரியவை, சூடு, அதிக சூடு, குறைவான சூடு என்றும், குளிர்ந்து இருப்பதை உணரும் அவயவம் தோல்.  தொடுதல்  – என்ற இந்த செயலுக்கு அவயவம் தோல்.அதில் முளைக்கும் ரோமங்கள், தேவர்கள். தொட்டவுடன் அது கனமா, லேசானதா என்று அறிவது த்வக் என்ற இந்திரியத்தின் செயல்.  அதன் உள்ளும் வெளியும் வாயு சஞ்சரிக்கிறது.  எப்படியெனில், ஸ்பர்சம் என்ற பெயரில்.  இது த்வக் என்ற இந்திரியத்தின் மற்றொரு குணம் அதாவது செயல்.  வாத என்ற காற்று தேவதை.

செயல்களை செய்ய பகவானின் விருப்பப் படி கைகள் முளைத்தன. இந்திரன் அவைகளின் அதிஷ்டான தேவதையானான்.

தன்னிஷ்டப்படி நடந்து செல்ல பாதங்கள் முளைத்தன.

ப்ரும்மா கண் பார்வை வேண்டி அதன் கண்களில் வட்ட வடிவமான கண் மணிகளை  வைத்தார். ஜோதியுடன் சூர்யனும் அதி தேவதையானான். ரூபம், குணம், இவற்றை கண் அறிந்து கொள்வதாக கண் என்ற இந்திரியமும், அதன் வெளி பக்க உருவங்களும் தோன்றின.

ப்ரஜைகளை உத்பத்தி செய்ய ஜனன இந்திரியங்கள், ஆண் பெண் சம்பந்தம் இவைகளுக்கு ப்ரஜாபதியான ப்ரும்மாவே அதி தேவதையானார். .

உண்ட உணவு உடலில் ஜீரணித்த பின் மீதியானது வெளியேற குதம்,பாயு என்ற உறுப்புகள் உருவாகின.

நாபி ப்ராண அபான என்ற வாயுக்களை கட்டுபடுத்துகிறது. அபானம் தான் ம்ருத்யுவுக்கு காரணம்.

அன்ன பானம் இவைகளின் சாரத்தை க்ரஹிக்க வயிற்றைச் சுற்றியும் நாடிகள் உண்டாயின.  குக்ஷி என்ற வயிறு தான்  இருப்பிடம்.

 अन्त्र नाडी -intestinal track – 

என்பவை அன்னத்தையும், நாடிகள் பானங்கள், நீரையும் சங்க்ரஹிக்கின்றன. – உறுஞ்சுகின்றன.  இந்த அன்த்ர, நாடி என்பவைகளுக்கு நதிகளும்  கடல்கள், சமுத்திரங்களும் தேவதைகள்.  வயிறு நிரம்பினால் துஷ்டி, ரஸம் அதிகமாகவோ  குறைந்தாலோ உடல் பருமன்-புஷ்டி, 

சிந்திப்பவர்களுக்கு, ஹ்ருதயம், மனம், சந்திரன், சங்கல்பம்  இவை அதி தேவதைகள்.

ஆண் பெண் உறவு, அதன் பலனாக புத்ர புத்ரிகள் பிறப்பதும், அதன் இந்திரியங்கள் செயல்பாடு. அதனால் பெறும் சுகத்திற்கு இரு பாலாருடைய இந்திரிய தேவதா அதி தேவதை.

ஜீவன்களின் உடலின் மேல் பாகமான தோல்  -இரண்டு வகைப் படும். ஸ்தூலமான எலும்புகளை மூடிய மேல் பாகம். மற்றொன்று சூக்ஷ்மமானது.  தோலின் அமைப்பில் பஞ்ச பூதங்களில்  நிலம், நீர்,அக்னி இவைகளும் இருந்தாலும் வாயுவும் ஆகாசமும் அதி தேவதைகள். ஸ்பர்சம்  என்ற உணர்வு.

மாமிசம், ருதிரம்,கொழுப்பு, தசை, எலும்பு மஜ்ஜை- (எலும்புகளுக்கு இடையில் இருப்பவை) இவை அனைத்திலும்  ஏழு தாதுக்களும் உள்ளன. இந்த தாதுக்கள் என்பன  நிலம், நீர், அக்னி, இவைகளின் சேர்க்கை. பஞ்ச பூதங்களில் இவை சரீரத்தில்  செயல்படுபவை. 

பிராணன் ஆகாசம், ஜலம், வாயு இவைகளின் சேர்க்கையால் பிறக்கின்றது.

ஜீவனின் கண் முதலான புலன்கள்  தனித் தனியாக சில குணங்கள்- உணர்வுகளை கொண்டுள்ளன. (  கண்-பார்வை, செவி-கேள்வி, மூக்கு-நுகர்தல்,நாக்கு-ருசி, உடல்- ஸ்பர்சம் என்பன)  அஹங்காரம்- தன்னியல்பு என்பது ஜீவனின் உருவம் வந்தபின் தோன்றுவது.  மனம் காம க்ரோதாதிகளின் பிறப்பிடம். ஆத்மா ஸ்வரூபம். புத்தியினால் பலவிதமான அறிவுகளைப் பெறவும், அவைகளை வளர்த்துக் கொள்ளவும், தானாக புதிய விஷயங்களைக் கண்டு கொள்ளவும் முடியும்.

பஞ்சபூதங்களுடன்,மனம், புத்தி, அஹங்கார, என்ற எட்டு மாறாத இயற்கை தத்துவங்கள், இவை வெளி கோட்டையாக உள்ள  பகவானின் ஸ்தூல ரூபம்.  சூக்ஷ்ம ரூபமானது, கண்களுக்கோ, மனதுக்கோ புலப்படாத, வார்த்தைகளால் விவரிக்க முடியாத, ஆதி அந்தமில்லாத, ரூபம். “அணோரணீயான், மஹதோ மஹீயான்” என்ற வேத வாக்யம்  பகவானை அணுவிலும் சிறியவன்,  பெரும் அண்டத்தை விட பெரியவன் என்று சொல்கிறது.  சங்க சக்கர, கதா தாரியாக காணுபவன் அதே போல காணலாம். ஆதி மத்யம்,அந்தம் இல்லாத பரம் பொருளாக மனதால் தியானிக்கலாம்.

ப்ரஜாபதிகள், மனு, தேவர்கள்,ரிஷிகள், பித்ரு கணங்கள், தவிர, சித்த சாரணர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள்,என்று பல ரூபங்கள்.  கின்னர, அப்சர, நாக, ஸ்ர்ப்பம், கிம்புருஷ என்ற வகையினர், ராக்ஷஸர்கள், பிசாச, ப்ரேத,பூதங்கள் என்றும் பசுக்கள், பக்ஷிகள், மரங்கள், மலைகள் ஊர்வன , நிலம் நீர் இரண்டிலும் வாழ்பவை, நிலம்,ஆகாயம் இரண்டிலும் வாழ்பவை என்று பலவிதமாக உயிரினங்கள்.

சத்வ ரஜஸ் தமஸ் என்ற குணங்கள், தேவ, மனித, அசுரர்கள்,  என்றாலும் ஒவ்வொருவருக்கும் தனித் தனியான நடையுடை பாவனைகள், உணவு முதலிய பழக்க வழக்கங்கள்.  இந்த பகவான் தான் தர்ம ரூபம். உலகை நிலை நிறுத்தி, உலகில், கால் நடைகள்,மனிதன், தேவர்கள் இவர்களை காக்கிறான்.  பின், காலாக்னி என்ற ரூபத்தில் தானே ஸ்ருஷ்டி செய்த இந்த உலகை காலத்தால்  காற்று, மேகத்தை கலைப்பது போல கலைத்து விடுகிறான். 

இது தான் பகவானின் இயல்பு.  இது தான், இப்படித்தான் இருப்பான் என்று யாராலும் அனுமானிக்க முடியாது.  ப்ரும்ம கல்பம் என்ற இதைப் பற்றி பொதுவாக சொன்னேன். அடுத்து பத்ம கல்பம் என்பதை பின்னால் சொல்கிறேன்.

 சௌனகர் இடை மறித்தார்.

சூதரே, விதுரர் என்ன ஆனார்?  தீர்த்த யாத்திரை போனவர் திரும்பி வந்தாரா? பந்துக்களை துறந்தது ஏன்? 

பரீக்ஷித் ராஜாவுக்கு மஹா முனி சொன்ன வரலாற்றை சொன்னபின் வரிசைக் கிரமமாக சொல்கிறேன், என்றார் சூதர். 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் இரண்டாவது ஸ்கந்தத்தின்,  பத்தாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-51

|| இத்துடன் இரண்டாவது ஸ்கந்தம் நிறைவுற்றது ||

||ஓம்  தத்ஸத் ||

அவதாரங்களைப் பற்றி ப்ரும்மா சொல்வதாக பாகவத சரித்திரத்திலிருந்து.:-

என் (ப்ரும்மாவின்) யாகத்தில் வேத மயமான, பகவான் ஹயக்ரீவனாகத் தோன்றினார்.   அந்த குதிரை முகத்திலிருந்து, அழகிய வேத வாக்யங்கள் வெளி வந்தன.  பொன்னிறமாக, வேத மயன், யாகமயன், அகில தேவதாத்மா என்று துதி செய்தோம்.  ஹல் என்பது ஒரு சங்கேதம். அகாரத்திலிருந்து  ஹ காரம் வரை உயிர், மெய் எழுத்துகள் அனைத்தும் குறிக்கும் இலக்கண பரி பாஷை.  வாக் தேவியின்  உடலில் தோன்றியவை. “அக்ஷராணாமகாரோ அஸ்மி” என்ற கீதா வாக்கின் படி பரமாத்ம சங்கேத மான ‘அ’ காரம் – அதில் ஆரம்பித்து மற்ற அக்ஷரங்கள், அதன் பின் சொற்கள், பதங்கள், வாக்கியங்கள்  என்று விரியும் மொழி.  அதாவது அகில வித்யா பூதமான ‘ஹ’ என்ற சப்தம். ( அ காரம் என்பதில் ஆரம்பித்து என்று சொல்ல ‘ஹ’  உச்சரிப்பு வசதிக்காக ‘அ’ ஹ என்று துவங்கும். அதே போல கடைசி எழுத்துடன்  சேர்த்து ‘ஹல் என்று  ஆகும். பாணினியின்  வியாகரண மாகேஸ்வர சூத்ரங்கள்  அ இ உண் என்று ஆரம்பிக்கும்.)

மேலும் தலை எல்லா அக்ஷர, ப்ரபஞ்ச அபிவ்யக்தி தோற்றத்திற்குமான ஸ்தானம் என்பதால் க்ரீவம்- கழுத்திற்கு மேல் உள்ள தலை, ஹயமாக,  அகாரத்தில் ஆரம்பித்து ஹ வில் முடியும் அக்ஷரங்களாக ஆவதால், ஹய – என்பது வித்யா ஸ்தானம். ‘ஹய’  ஸ்தூலமான பொருள்,  வெளியில் தெரியும் குதிரை முகம் என்பது அக்ஷர மயமான வாக் தேவதா என்பதும்,  ஆத்மா என்பது தேஹ. ப்ராண இரண்டும் சேர்ந்த பின் உள்ள உடலில் இருப்பதாக கொள்வதாலும், நிர்மலமான ஞானானந்த மயமான, சர்வ வித்யா ஆதாரமான பரமாத்மாவின் விக்ஞானமயமான்  ப்ரும்ம யக்ஞத்தில் ஹயசீர்ஷ: குதிரை முகன் அல்லது வாக்கின் தேவதா ஸ்வரூபம் ஹயஃக்ரீவ: என்று பொருள். (தலையையும் உடலையும் சேர்ப்பது க்ரீவம் என்ற கழுத்து)  தவிர ஸ்வாஸ நிஸ்வாஸ- மூச்சை உள் வாங்குவதும் வெளி விடுவதுமான செயல் ‘சோஹம் ‘ என்ற மந்திர த்தின் மற்றொரு பெயரான ப்ரணவாகாரம், ப்ரணவம் சந்தஸ் என்ற வேதத்தின் சாரபூதம் – அதன் சாரமானது என்று சொல்வது போல, ஹயக்ரீவனின் மூக்கின் வழி வெளி வரும் மந்திரம்  -உலக ஸ்ருஷ்டிக்கு ஆதாரமான வேத வாக்கியங்களின் உத்பத்தி ஸ்தானமாகவும், (ப்ரணவமாகவும்) இணைத்து சொல்லப் படுகிறது.  மேலும் ஹய என்ற சப்தம் உலக வழக்கில் குதிரை என்ற பிராணி என்பதாக ஆனதால்,  பகவானுடைய உருவம் அஸ்வம் என்ற குதிரை முகமாக ஆகி விட்டது. “ ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதீம், ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவமுபாஸ்மஹே “ என்ற பிரசித்தமான ஸ்லோகம் சொல்வது ஞான மயமான, வித்யா ஸ்வரூபமான யக்ஞ புருஷணான பகவானைச் சொல்கிறது.

ஸ்ரீமத் பாகவதம்

|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய || மூன்றாவது ஸ்கந்தம்  

காபிலேயோபாக்யானம்  

 அத்யாயம்-1

இதைத் தான் முன் ஒரு முறை மைத்ரேயன் என்ற முனிவரும் என்னிடம் கேட்டார்.  “எதற்காக அந்த ராஜ குலத்தை சேர்ந்தவன் காட்டுக்குப் போனார் ? வசதியாகத் தானே இருந்தார் ?”

ராஜா பரீக்ஷித், “மைத்ரேய முனிவரை அவர் சந்தித்தாரா? எந்த இடத்தில்? விதுரர்  நல்ல குணவான்.  பெரியவரான மைத்ரேயனிடம் என்ன பேசினார்?” – என்றார்.  ஸ்ரீ சுகர் பதில் சொன்னார்?

சகோதரனான கௌரவ அரசன், தன் புத்திரர்கள் செய்வது அதர்மம் என்று தெரிந்தும் அவர்களை தண்டிக்காமல், சுயோதன்  தன்னையே திட்டிய பொழுதும் பேசாமல் இருந்ததும் விதுரரால் பொறுக்க முடியவில்லை. அதனால், கஜாஹ்வயம் என்ற  தீர்த்த ஸ்தானத்திற்கு சென்று விட்டார்.   தியானம், யோகம் என்று நாட்களை கழித்தார்.  புதிய நகரங்கள், புண்ய தீர்த்தங்கள், மலை ப்ரதேசங்கள், தெளிவான நீருடன் குளங்கள், நதிக் கரைகள்,  கோயில்கள் இவற்றை தரிசித்துக் கொண்டு தனியாக சஞ்சரித்துக் கொண்டிருந்தார்.

நாடு முழுவதும் பாத யாத்திரை சென்றார்.  எந்த வசதியும் இல்லாமல், கிடைத்த இடத்தில் தங்கி, ஹரி பஜனை செய்து கொண்டு, பாரத வர்ஷம் முழுவதும் சுற்றியவர்  த்வாரகா அருகில் ஏக சக்ரம்  என்ற இடம் வந்தார்.  அங்கு தான், தன் நண்பனின் மறைவைப் பற்றி கேள்விப் பட்டார்.   பொறாமையால் மூங்கில் காடு பற்றி எரிந்ததும் கேட்டு வருத்தத்துடன் சரஸ்வதி தீரம் வந்தார்.  அங்கு முனிவர்கள் பலர் இருந்தனர். உஸனஸ், மனு, ப்ருது, ஆங்கிரஸ், ஸ்ரார்த தேவர் முதலானோர் குகைகளில் இருந்தனர்.  மேலும் பலர் பகவான் விஷ்ணு            ஸ்ரீ க்ருஷ்ணராக வந்த சமயம் அவர் பாதம் பட்ட இடங்களில் கோவில்களை கட்டியிருந்தனர்.  அவற்றைக் கண்களால் காணவே ஸ்ரீ  க்ருஷ்ண நினைவு வந்தது. 

அதன் பின் செழிப்பாக இருந்த சௌராஷ்டிரம் வந்தார். சௌவீரம், மத்ஸ்ய, குருஜாங்கலம், என்ற இடங்களை கடந்து உத்தவர் இருந்த யமுனா கரை வந்தார்.  உத்தவர், வாசுதேவர் கூடவே இருந்தவர், அமைதியானவர், ப்ருஹஸ்பதியின் முதல் மகனாக அறியப் பட்டவர்,  அவரை இறுகத் தழுவி குசலம் விசாரித்தார்.  தன் சுற்றத்தாரை பற்றி விசாரித்தார். 

புராண புருஷர்கள்,  தன் நாபியில் உதித்த ப்ரும்மா படைத்தது போல சூரசேனன் வீட்டில் அவதரித்தனர். உண்மையான காரணம் பூமிக்கு நன்மையைச் செய்ய. 

கௌரவர்களின் சிறந்த நண்பர் பாமன், சௌரி- சூர சேன வம்சத்தினன்- அவன் சகோதரிகளை தன் சொந்த புத்ரிகளைப் போல பாலித்தான்.  படைத்தலைவன், அவன் நலமா?

யது குல ப்ரத்யும்னன், சுகமாக இருக்கிறானா?   ஸ்ரீ க்ருஷ்ணருக்கும் ருக்மிணிக்கும் பிறந்த மகன்.  

சாத்யகி, வ்ருஷ்ணி, போஜ, மற்றும் தாஸார்ஹர்களின் அதிபதி, அவனை தாமரைக் கண்ணன் ஸ்ரீ க்ருஷ்ணன் தான் அபிஷேகம் செய்து வைத்தான்

ஹரியின் மகன், சாம்பன், ரதத்தில் முன் நிற்பவன், வீரன், நலமா? இவனைப் பெற ஜாம்பவதி ஏராளமான விரதங்களைச் செய்தாள்.  அம்பிகையின் மகன் குஹனை வேண்டினாள்.

அர்ஜுனனிடம் தனுர் வித்தை, அதன் ரகஸ்யங்களைக் கற்ற யுயுதானன் நலமா? இவன் அதோக்ஷஜனான ஸ்ரீ க்ருஷ்ண பக்தன். மற்ற யாதவர்களுக்கு கிடைக்காத அனுக்ரஹம் பெற்றவன்.

இவ்வாறு மற்ற குமார்கள், நண்பர்கள், அனிருத்தன், மற்றும் பலர், இவர்களைப் பற்றியும், நடந்த யுத்தம் அதன் பின் என்ன நடந்தது என்றும் வினவினார்.

அது நாள் வரை நடந்தவைகளை அறியாத விதுரர்,  ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு, நலம் விசாரிக்கிறார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் காபிலேயோபாக்யானம்  – என்ற மூன்றாவது  ஸ்கந்தத்தின்,  முதல் அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-51

 அத்யாயம்-2

விதுரரின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்று உத்தவர் திகைத்தார்.  ஸ்ரீ க்ருஷ்ணரின் உடன் இருந்தவர், அவரின் ஒவ்வொரு செயலையும் கூடவே இருந்து கவனித்தவர் ஆதலால் அவருக்கு பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைத்தது.

காலம் கடந்து, நடந்த விவரங்களை அறியாத விதுரர் அவரிடம்  ஊர் மக்களின் நலம் விசாரிக்கிறார். என்ன பதில் சொல்வது?

ஐந்து வயது சிறுவன், தாய் யசோதா, உணவை கையில் வைத்துக் கொண்டு சாப்பிட அழைத்து கெஞ்சுவாள், விளையாட்டு மும்முரத்தில் அந்த குழந்தை சாப்பிட மறுக்கும் – க்ருஷ்ணனின் கூடவே இருந்த உத்தவர் அந்த காட்சியை நினைவு கூறுகிறார்.  தன் காலம் முழுவதும் அந்த க்ருஷ்ணனுடன் கழித்த நாட்கள், இந்த வயதான காலத்தில் எதை சொல்வார், எதை விடுவார்?  சற்று நேரம் பேசாமல் இருந்தார்.  வந்தவரும் சாமான்யமானவரல்ல.  துறவியாக ஊரை விட்டுச் சென்றவர் எதையும் அறியாமல் விசாரிக்கிறார்.

தன்னை சமாளித்துக் கொண்டு, கண்களில் நீர் வழிய, ஒரு விநாடியில், வைகுண்டத்திலிருந்து பூமிக்கு இறங்கியவர் போல, (ஸ்ரீ க்ருஷ்ணரின் அருகாமையில் திளைத்தவர் தன்னை விடுவித்துக் கொண்டு) கண்களைத் துடைத்துக் கொண்டு பதில் சொல்லலானார்.

உத்தவர் சொல்கிறார்:  க்ருஷ்ணன் என்ற சூரியன் அஸ்தமித்தது.  அதை மலைப் பாம்பு போல காலம் விழுங்கி விட்டது. நலம் என்று எதைச் சொல்வோம்.  செல்வத்தை அளிக்கும் தேவியே விலகி விட்ட நிலையில், வீடுகளில் மீதமிருப்பது என்னவாக இருக்கும்?  உலகம் தன் வளமையை இழந்தது. கூட்டமாக இருந்த யாதவர்களும் போனார்கள். மீதி இருந்தவர்கள் ஹரியை உணரவேயில்லை. குளத்து  மீன்கள் விண் மீன்களை அறியாதது போல. 

அவரைச் சுற்றி பலவிதமாக இருந்தார்கள்.  கண்ணசைவில் புரிந்து கொள்ளக் கூடியவர்கள்,   தன்னம்பிக்கை மிக்கவர்கள், தன்னலமே உருவானவர்கள், தன் சுகமே பிரதானமாக இருந்தவர்கள்,  மற்றும் தூய்மையானவர்கள்,  என்ற அனைத்து விதமான ஜீவன்களையும் ரிஷபம் பாரத்தை தூக்குவது போல தன் தோளில் சுமந்தவன். 

தேவ மாயையால் என்றோ, அசத்தான – நன்மையில்லாத ஒன்றை நம்பியதாலோ, புத்தி தடுமாறுகிறது. அவர் சொல்லை மனிதர்கள் புரிந்து கொள்ளவில்லை. தன்னுள் தானே நிறைந்த ஹரி அவன்.

திருப்தியில்லாத அரசர்கள், தவமோ தகுதியோ இல்லாத அரசர்கள் அவர்களுக்கும் தன் உருவைக் காட்டினான். உலகுக்கே கண்ணானவன்.  அலங்காரத்துக்கே அலங்காரமானவன்,  அளவற்ற ஐஸ்வர்யம் உள்ளவன், தன் யோக மாயையால் தன்னை மறைத்துக் கொண்டு, மனித உலகத்துக்கு ஏற்ற வகையில் தன் உருவத்தை அமைத்துக் கொண்டான்.

தர்மபுத்திரனின் ராஜ சூய யாகத்தில், முதல் மரியாதையை பெற்ற சமயம் (பூர்ண கும்பம் கொடுத்து ), பார்த்த வேத விற்பன்னர்கள், அறிஞர்கள்,  நன்று என்றனர். புகழ்ந்து பேசினர். 

ராஸ லீலையில் அன்பையே கண்ட வ்ரஜ ஸ்த்ரீகள், தங்கள் வேலைகளை விட்டு, அவரது கண் பார்வையால் அழைக்கப் பட்டவர்களாக பின் தொடரவில்லையா?

சாந்த ஸ்வரூபி. மற்றவர்களின் வேண்டுகோளுக்காக இரங்கி ப்ரும்மாவை, அக்னியை தண்டித்தான். எனக்கு என்ன வருத்தம் என்றால், வசுதேவர் வீட்டில் பிறந்தவன் , வ்ரஜ தேசத்தில் வளர நேரிட்டது.  தன் பகவத் ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு பயந்தவன் போல தானே தன்னை அந்த நகரத்திலிருந்து வெளியேற்றிக் கொண்டான்.  அனந்த வீர்யன் அவன். அவனுக்கா பயம்?

அவன் தாய் தந்தையரை வணங்கி “அம்மா, அப்பா,  கம்ஸன் பொல்லாதவன்.  நான் வெளியேறியது அவனுக்குத் தெரிய வேண்டாம்” என்றானாம். இதைக் கேட்டு என் மனம் சொல்லொனா துக்கத்தை அடைந்தது.  இவனை அறிந்தவர்கள் மறக்கவா முடியும். புருவ அசைவினால் பூமியின் பாரத்தை குறைத்தவன்.

ராஜசூய யாகத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவனுக்கு விரோதிகளே இல்லை எனும் படி அனைவரும் நல்ல கதியை அடைந்தனர்.  யோகிகள் அவனை கொண்டாடினர். யாரால் இந்த பிரிவை பொறுக்க முடியும்?

யுத்த களத்தில் அவனைக் கண்டவர்கள் புண்யம் செய்தவர்கள்.   பார்த்தனின் அஸ்திரங்களால் பரிசுத்தமாக்கப் பட்டு அவனடி சேர்ந்தனர்.  தானே, தனக்கு உவமையில்லாதவன், மூன்று செயல்களையும் தானே முன்னின்று செய்பவன். அவனுடைய  ராஜ்ய லக்ஷ்மியால்  எல்லா நன்மைகளும் அவனை தேடி வந்தன, சிற்றரசர்கள் தங்கள் கிரீடங்களை அவன் காலடியில் சமர்ப்பித்து வணங்கினர்.

எங்களை பதவியில் அமர்த்தச் சொல்லி உக்ரசேனரிடம் ஆணையிட்டான். அவனுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்ததே எங்கள் பாக்கியம்.

அந்த பூதனா, கொல்லத்தானே நினைத்தாள். மடியில் விஷத்தை வைத்துக் கொண்டு பாலூட்ட வந்தாள்.அவளும் நல்ல கதியடைந்தாள்.  தயாளுவான கண்ணனின் கருணையால்.

போஜராஜாவின் சிறையில் வசுதேவர் தேவகிக்குப் பிறந்தான். தேவகியின் வேண்டுதலுக்கு இரங்கி அவர்கள் மகனாக வந்தான். கம்சனால் ஆபத்து வரும் என்று வசுதேவர் பயந்தார்.  அதனால் பதினோரு வயது வரை தன் பராக்ரமத்தை மறைத்துக் கொண்டு கோகுலத்தில் வாழ்ந்தான்.  கோபாலர்களோடு, யமுனைக் கரையில், உப வனங்களில் பறவைகளின் கூச்சலுக்கு இடையில் மகிழ்ந்து திரிந்தான். இள வயது பெண்களைச் சீண்டி விளையாடினான். கோகுலத்தில் செல்வம் நிறைந்தது. கோபால சிறுவர்கள் பின் தொடர வேணுவை இசைத்தபடி முன் செல்வான்.

எவ்வளவு பேரை அந்த போஜ ராஜன் அனுப்பினான். அவர்களை விளையாட்டாக பந்தாடினான்.  விஷ ஜலத்தை குடித்த தன் நண்பர்களை காக்க காளியன் என்ற பாம்பு அரசன், அவனை விரட்டி, கோகுலத்துக்கு நல்ல குடி நீர் கிடைக்கச் செய்தான்.  நந்த கோபனின் ராஜ்யத்தை செல்வம் கொழிக்கும் படி செய்தான். யாகங்கள் செய்வித்தான். சிறந்த வேத விற்பன்னர்கள் நிறைந்தனர்.

இந்திரன் யாகத்தை நிறுத்தியதால் கோபம் கொண்ட இந்திரன் அடாது வர்ஷித்தான்.  தன் லீலையால் மலையையே குடையாக்கி கோகுலத்தை காத்தான்.  சரத் காலம் வந்தால் போதும். கோகுலம் கொண்டாடும். பாட்டும், ஆட்டமும், கோகுலத்து சிறுவர்களும் சிறுமிகளும்  சந்தோஷமாக அவனுடன் கழித்தனர்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த   காபிலேயோபாக்யானம் என்ற மூன்றாவது  ஸ்கந்தத்தின், இரண்டாவது  அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-34

அத்யாயம்-3

உத்தவர் தொடர்ந்தார்:  அவர் எண்ணம் முழுவதும் ஸ்ரீ க்ருஷ்ணரிடமே இருந்ததால் நடந்த நிகழ்ச்சிகளையே தொடர்ந்து கூறலானார்.

அதன் பின் தந்தை இருந்த ஊருக்கே வந்து சேர்ந்தான். பலதேவனுடன்  சேர்ந்து  எதிரிகளை அழித்து, பூமியின் பாரமாக இருந்தவனைக் கொன்றார். சாந்தீபினி குருகுலத்தில் கல்வி கற்ற பின் அவர் விஸ்தாரமாக சொன்ன கதையைச் கேட்டு அவர் புத்திரனை மீட்டுக் கொடுத்தார்.

பீஷ்மக கன்யா (ருக்மிணி) அழைத்தாள் என்று ஸ்ரீ ரூபமான அவளை, காந்தர்வ விதியால் ,  கவர்ந்தான். தன் பங்கு என்று கருடன் செய்தது போல

காளைகளை அடக்கி நக்னஜித் என்ற பெண்னை மணந்தான். அதனால் கோபமடைந்த சிலர் எதிர்த்தனர். அவர்களை போரிட்டு வென்றான். 

தன் மகனை யாரோ கவர்ந்து செல்கின்றனர் என்று தரித்ரி -பூதேவி அலறினாள். தன் சுனாப என்ற சக்கரத்தால் பூமியை துளைத்து அவள் மகனை காத்தான். பின் அவள் மகளை மணந்தான்.

இவ்வாறு தனக்கு அனுரூபமான  எட்டு பெண்களை மணந்தான். ஒவ்வொருவரிடமும் தன்னைப் போலவே பத்து பத்து குமாரர்களைப் பெற்றான்.

போரிட வந்த கால, மாகத சால்வலி போன்றவர்களை வென்று, தன் மக்களின் வீரத்தை வெளிப்படுத்தினான். சம்பரன், த்விவிதன், பாணன், முரன், பல்வலன், மற்றும் தந்த வக்த்ரன், இவர்களையும் வென்றான்.

ஒரே குடும்பத்தின் இரு சகோதரர்களின் புத்திரர்கள் போரிட முனைந்த பொழுது இரு பக்கமும் அரசர்கள் சேர்ந்து கொண்டனர்.  குருக்ஷேத்ரம் என்ற யுத்த களம் – அவர்கள் அதில் தன் படைகளோடு வந்து வீழ்ந்தனர்.

கர்ணன், து:ஸாஸனன், சௌபலீ இவர்களின் தவறான வழிகாட்டலால், மதியிழந்த சுயோதனன் தன் ராஜ்யம், உயிர் இரண்டையும் இழந்து பூமியில் கால் (துடை) உடைந்து விழுந்து கிடப்பதைப் பார்த்து வருந்தினான். 

 த்ரோண, பீஷ்ம, அர்ஜுன, பீம என்ற வீரர்கள், மற்றும் என்னைச் சேர்ந்த யாதவ சேனை என்று அனைவரும் சேர்ந்து பதினெட்டு அக்ஷௌஹிணி  வீரர்கள்.

இந்த சகோதர்கள், மதுவினால் மதி மயங்கி, கண் சிவக்க,  தங்களுக்குள் விவாதித்தனர்.  பூ பாரத்தைக் குறைக்க இதை விட நல்ல வழி இல்லை என்று நினைத்தோ, அனுமதித்தான்.

உத்தரை-அபிமன்யுவின் மகன் கர்பத்தில் இருக்கும் பொழுது த்ரோண புத்ரனின் அஸ்திரத்தால் அடிக்கப் பட்டான். பகவான் தான் காப்பாற்றினார்.

தர்மபுத்திரன் மூன்று அஸ்வ மேத யாகங்கள் செய்தான்.  ஸ்ரீ க்ருஷ்ணரின் அறிவுரைகளின் படி ராஜ்யத்தை ஆண்டான். விஸ்வாத்மாவான பகவானும் உலகில் வேத சாஸ்திரங்களின் வழியில் வாழ்ந்து த்வாரவதி என்ற தன் நகரில், ஞான மார்கத்தை கை கொண்டான்.  மென்மையாக அன்புடன் பேசி, தூய்மையான தன் நடத்தையாலும், உடன் இருந்த ஸ்ரீ கடாக்ஷத்தாலும், இந்த உலகத்தையும் எங்களையும் சந்தோஷப் படுத்திக் கொண்டு, தானும் சுற்றத்தாரோடு சந்தோஷமாக இருந்தான். பல வருஷங்கள் இப்படிச் சென்றன. அவனும் இல்வாழ்க்கையில் நாட்டம் குறைந்து யோக மார்கத்தை அனுசரிக்கலானான்.  யோகேஸ்வரன் என்ற பெயர் பெற்றான்.

ஊருக்குள், ஒரு சமயம் விளையாட்டாக போஜ குமாரர்கள் ஏதோ செய்யப் போக, ஒரு முனிவரின் சாபத்துக்கு ஆளாகினர்.  அதன் பின் வ்ருஷ்ணி, போஜ, அந்தகன் முதலானோர், ப்ரபாஸ நகரம் வந்தனர். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து, பொன், வெள்ளி, வஸ்திரங்கள், படுக்கை போன்ற பல விதமான தானங்களைச் செய்து,  அன்னதானம்  பகவதர்ப்பணம் என்றும் செய்த பின், பூமியில் விழுந்து வணங்கினர்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த    காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், மூன்றாவது  அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-28 

அத்யாயம்-4

உத்தவர் சொன்னார்: ஏகமாக உண்டும், வாருணி என்ற மதுவை குடித்தும், மனம் தடுமாறி, ஒருவருக்கொருவர், தூஷித்துக் கொண்டு, உயிரை விட்டனர்.  மதுவை குடித்து பாதிக்கப் பட்டு மூங்கில் வனம் அழிவது போல ஒட்டு மொத்தமாக அழிந்தனர். 

பகவான் இதையறிந்து, சரஸ்வதி நதிக் கரையில் ஒரு மரத்தடியில் அமர்ந்து விட்டார்.  என்னைப்  பார்த்து நம் குலத்தைக் காக்க, நீ பதரிக்குப் போ என்று ஆணையிட்டார்.  ஆனாலும் அவருடைய எண்ணம் என்ன என்பது தெரிந்து,  அவர் இருப்பிடம் சென்றேன். மரத்தடியில்  லக்ஷ்மீ பதியான ஸ்ரீ க்ருஷ்ணன்,

 அமைதியாக  அருணன் போல (இளம் சிவப்பாக) கண்களுடன்,  நான்கு கைகளுடன், ஸ்யாமள வண்ணன், பீதாம்பரத்துடன், தூய்மையே உருவாக அமர்ந்திருந்தான்.  இடது மடியில் வலது கையை ஊன்றி, அஸ்வத்த மரத்தடியில் இருந்தார்.

அந்த சமயம், மஹா பாகவதரான  வியாசர்,  எதேச்சையாக வந்தார்.  வணங்கி நின்ற அந்த மகரிஷியிடம் பிரியமாக, மென் முருவலோடு சொன்னதை நானும் கேட்டேன்.

பகவான் சொன்னார்:  உன் மனதில் ஓடும் விருப்பத்தை புரிந்து கொண்டேன். யாருக்கும் கிடைக்காத அதை தருகிறேன்.  முன் ஒரு சமயம் வசுக்களின் விஸ்வஸ்ருஜ் என்ற யாகத்தில், நீ வசுவை விரும்பினாய்.  ஸாதோ!  என் அனுக்ரஹம் பெற்று,  இங்கு இரு, நான் உலகை துறப்பதை பார்.

முன்பு நான் ப்ரும்மாவுக்குச் சொன்னேன்.  ஆரம்பத்தில் என் நாபியில் அவர் தோன்றிய சமயம் உலக ஸ்ருஷ்டி ஆரம்பிக்க எண்ணியிருந்த நான், ஞான உபதேசம் செய்தேன்.  பெரியவர்கள் அதை பாகவதம் என்றனர். என் சரித்திரம், மகிமைகள் அடங்கிய செய்திகள். 

எனக்கு மெய் சிலிர்த்தது.  பரம புருஷனின் அனுக்ரஹம், ஒவ்வொரு க்ஷணமும் எனக்கு கிடைத்தது என் பாக்கியம். கண்களில் நீர் வழிய அவரிடம் கை கூப்பி, வினவினேன்.  ஹே! பகவன்! உன் பாத கமலங்களை சரணம் அடைந்தவர்களுக்கு எது தான் துர்லபம்? நான்கு தேவைகளும் தானே வந்து சேரும். (தர்மம்,அர்த்த (பொருள்), காமம், மோக்ஷம்)  இருந்தாலும் எனக்கு அவைத் தேவையில்லை. உன் காலடியில் கிடப்பதையே பெரிதாக நினைக்கிறேன் என்றேன்.

உலகில் இருந்து செய்ய வேண்டியது எதுவும் இல்லை,  என்றும் இருப்பவன் புதிதாக பிறப்பு என்பதும் உனக்கு இல்லை. அடைய முடியாத பொருள் என்பதோ, பெரும் விரோதி, அவனிடம் தப்பித்து ஓட வேண்டும் என்ற அவசியமோ இல்லை. ஏனெனில் நீயே காலாத்மா.  மற்றவர்களுக்கு சரணமாக இருப்பவன் நீ. 

மந்தராலோசனைகளில் என்னை அழைத்து விசாரிப்பாய்.  உனக்குத் தெரியாததையா நான் சொல்வேன்.  அறியாதவன் போல என்னை விசாரித்தாய், ப்ரபோ!  தேவா! அதை நினைத்தால் என் மனம் பெருமிதம் அடைகிறது. பரம ஞானம், யாருமறியாத உன் சரித்திரம் , அதை நீயே சொல்லிக் கேட்டோம், பகவானே! அதைப் பெற தகுதியுடையவனா நான்?  இந்த சம்சாரக் கடலை எப்படித் தாண்டுவோம், அதைச் சொல்லு.

ஆவேசத்துடன் நான் இப்படிச் சொன்னதைக் கேட்ட பகவான், ஆனையிடுவது போல சொன்னார்.  நான் மனப் பூர்வமாக ஆராதித்த தேவன், ஆத்ம தத்வம் என்பதை போதித்தான்.  அவரை வணங்கி, விடை பெற்று இங்கு வந்து சேர்ந்தேன்.  இதோ, பதரி செல்ல இருக்கிறேன். நண்பரே,  அங்கு பகவான் இருக்கிறார். நரனாக, பகவானாக, ரிஷியாக,  பலவிதமாக உலக நன்மைக்காக தவம் செய்கிறான். 

ஸ்ரீசுகர் சொன்னார்:  உத்தவர் வாயால் கேட்டு, மிக வருந்தினார் விதுரர்.   உலகியல் அறிந்தவர்,  தன்னை அடக்கிக் கொண்டு பாகவதரான, உத்தவருக்கு விடை கொடுத்தார்.  யோகேஸ்வரரே!  ஈஸ்வரன் உமக்கு அளித்த அந்த ரகசியமான ஆத்ம தத்வம் என்பதை எனக்கும் சொல்லுங்கள். நானும் விஷ்ணுவின் பக்தனே.  நமக்குள் சொல்லிக் கொள்வதில் தவறில்லை.

விதுரரே! உங்களுக்குத் தெரியாததா? பகவான் உலகைத் துறக்கும் முன் சொன்ன செய்திகளை அவசியம் சொல்கிறேன்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: இருவரும் பகவானின் கதைகளை பேசிய படியே இரவைக் கழித்தனர். 

ராஜா பரீக்ஷித் கேட்டான் – வ்ருஷ்ணி, போஜ வீரர்கள், அதி ரதர்கள் அனைவரும் போன பின்னும் உத்தவர் எப்படி உயிருடன் இருந்தார் ? பகவானே தானே உலகைத் துறந்ததாகச் சொன்னீர்கள்.

முனிவரின் சாபம் என்ற ஒரு காரணத்தால் யாதவ குலம் அழியும் என்று ஆன பொழுது, அவர்  காலனை வேண்டினார். நான் உலகை துறந்து போனாலும்  நான் உபதேசம் செய்த என் ஞானம் அழியக் கூடாது. உத்தவன் அறிவான். அவன் தான் என்னை முழுதும் அறிந்தவன். அவனை இந்த சாபம் அண்டாமலிருக்கட்டும் எனக்கும் உத்தவருக்கும் அணுவும் வித்தியாசமில்லை. குணமோ, திறமையோ என்னை விட எந்த விதத்திலும் குறைந்தவனில்லை.  அதனால் நான் இல்லாத இந்த உலகை பாதுகாக்க இங்கு இருக்கட்டும் என்றார்.

மூவுலக குரு  சொன்னதைக் கேட்டு,  பதரி ஆசிரமம் வந்து சமாதி யோகத்தால், பகவானை ஆராதித்துக் கொண்டு இருக்கிறார் உத்தவர்.

விதுரர், “ இதுவும் அவன் விளையாட்டு –அவர் செய்த  மற்ற அரிய காரியங்களை மனதில் நினைத்த படி, தேஹ ந்யாசம், உடலை விடுவது கூட, தீரனாக இருந்தால் தான் சாத்யம். மற்ற ஜீவன்களுக்கு இது நினைத்து கூட பார்க்க முடியாது. எதற்காக இப்படி செய்தான்?  மற்றவர்களுக்கு தைரியம் வரட்டும் என்றா? “ என்று நினைத்தார். நினைக்க நினைக்க அடக்கமாட்டாமல் வாய் விட்டு அழுதார்.  காலிந்தி நதிக் கரையில் சில நாட்கள் இருந்தார்.  மைத்ரேய முனிவரை சந்தித்தார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், நான்காவது  அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-36

அத்யாயம்5

 ‘த்யு நதி’ ஆகாயத்திலிந்து வந்த நதி கங்கை, அதன் கரையில் குரு வம்சத்து பெரியவரும், மைத்ரேய முனிவரும் ஸ்ரீ க்ருஷ்ணரின் பிரிவால் அடைந்த மன வருந்தம் குறைய, தங்களுக்குள் பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

விதுரர்: தங்கள் சௌக்யத்திற்காக மக்கள் உழைக்கிறார்கள். அவர்களுக்கு சுகம் கிடைக்கிறதா? அல்லது வேறு விதமாக நலன் பெறுகிறார்களா?  அவர் அனுக்ரஹத்தால் ஜீவன்கள் வழக்கம் போல வாழ்கின்றனர். நாம் என்ன செய்வோம்? மனிதர்களின் ஹ்ருதயத்தில் வசிக்கும் பகவான்,  பக்தி செய்யும் அடியார்களுக்கு ஞானத்தைத் தருகிறான்.  அவருடைய அவதார கதைகளைச் சொல்லும் பாகவத புராணம் பற்றி சொல்லுங்கள். உலகை ஸ்ருஷ்டித்து, காத்து பின் கலைத்து பின் எதற்காக  திரும்ப ஏன்  எந்த பொறுப்பும், செயலும் இன்றி, தற்சமயம்   தூங்குகிறான்?  யோகாதீஸ்வரன், அனைத்து ஜீவன்களிலும் அம்சமாக இருந்தவன், யாருமறியாத குகையில் தனித்து இருப்பானேன்?  விளையாட்டாக, வேதம் அறிந்த  ப்ராம்மணர்கள், பசுக்கள், தேவலோக வாசிகள் என்று அனைவரின் க்ஷேமமே – நலனே தன் அவதாரத்தின்  காரணம் என்றான். எவ்வளவு கேட்டாலும் அலுக்காத அவன் சரித்திரம்,

லோக நாதன் அவன்.  . லோக பாலர்களையும்,  வித விதமான தத்வங்களை பயன் படுத்தி பூ லோகம் மட்டுமல்ல சகல லோகங்களையும் ஒவ்வொன்றையும் தனித்தன்மையுடனும், உருவத்துடனும் அமைத்தான். பிரஜைகளுக்கு ,  தன் ரூபம், செயல், பெயர்கள் என்பதையும் அறிவித்தான்.  நாராயணன் தான் விஸ்வஸ்ருட்- விஸ்வத்தை ஸ்ருஷ்டித்தவன், தன் கர்பத்தில் தாங்குபவன் என்பதை சற்று விவரமாக சொல்லுங்கள், முனிவரே. நீங்கள் வியாசரிடமிருந்து நிறைய கேட்டிருக்கிறீர்கள்.  ஏதேதோ விரதங்கள்,  அவரிடம் தெரிந்து கொண்டோம். எதிலும் மனம் ஈடுபடவில்லை. செய்தாலும் திருப்தியில்லை. ஸ்ரீ க்ருஷ்ண கதை தான் பிடிக்கிறது.  தீர்த்தங்கள், யாகங்கள், பெரிய அறிவாளிகளால் தொழப்படும் துதிகள் இவை க்ருஷ்ண கானத்திற்கு முன் பயனற்றவையே. இது தான், காதின் வழி மனதை சென்றடைந்து, வீடு வாசல்களில் ஈடுபாட்டைக் குறைக்கிறது.  உன் சகா வியாசர், பாரதமும் தான் சொன்னார். அரசர்களின் சராசரி மனித குணங்கள், கேளிக்கைகளை வர்ணித்து என்ன பலன்? ஹரி கதைக்கு ஈடு ஆகுமா?  சிரத்தையுடன் கேட்பவர்களின் மற்ற உலகியலில் நாட்டம் குறைகிறது. நிவ்ருத்தி மார்கம் (ஞானமார்கம்-) , சகல துக்கங்களையும் உடனே அழிக்கும் சக்தி வாய்ந்தது. ஹரியின் சரித்திரத்தில் நாட்டமில்லாமல்  பலவிதமாக யோசித்தும், திரும்பத் திரும்ப ஏதோ புதிதாக கண்டு கொள்வதாகச் சொல்வதும் பயனற்றதே. இமைக்காமல் பார்க்கும் தேவர்களின் ஆயுளும் வீணே. ஸ்ம்ருதிகளை நம்பாமல் வெறும் வாதத்திற்காக  படிப்பதும் வீணே.

அதனால்,   ஹரியின் கதையே கதைகளின் சாரம்.  பொறுக்கி எடுத்த புஷ்பங்கள் போல எங்கள் நன்மைக்காக  அவரது கீர்த்தியையே சொல்லுங்கள். உலகை படைத்தும், காத்தும் பின் கலைப்பதுமான தன் செயலுக்காகவே அவதாரங்கள் எடுத்து, மனிதன் போலவே வாழ்ந்து காட்டியதை சொல்லுங்கள்.

 அதன் படியே முனிவரும் மனிதர்களின் நலனுக்காக சொல்ல ஆரம்பித்தார். மைத்ரேய முனிவர் “சாதோ! சரியாக கேட்டாய்.  உலக நன்மைக்காக அதோக்ஷஜன் எனும் ஸ்ரீ க்ருஷ்ணனின் கதையை விவரித்தால் நமக்கும் நல்லதே. க்ஷத்ரியனாக வழ்ந்தாலும், பாதராயன – பராசரரின் மகன் அல்லவா?  நீ இவ்வாறு நினப்பது அதிசயமல்ல.  முழு மனதோடு, ஈஸ்வரனான ஹரியை வணங்குகிறாய்.  மாண்டவ்ய முனிவரின் சாபத்தால், பிரஜைகளை சம்ஹாரம் செய்யும் யமன், பூமியில் பிறக்க வேண்டியிருந்தது.  சத்யவதியின் மகனாக பிறந்தார்.  அதன் பின் பாரத கதை. பணிப் பேண்ணிடம் பிறந்தவன் நீ. ( விதுரர் பராசர முனிவருக்கும்  அரண்மனை பணிப் பெண்ணிற்கும் மகனாக மூன்றாவது குழந்தையாக பிறந்ததாக பாரத கதை.) அரண்மனையில் அனைவருக்கும் பிரியமானவனாக ஆனாய்.  பாகவதன் ஆனதால் உனக்கு உபதேசம் செய்கிறேன். தவிர, பகவானே, கிளம்பும் முன் என்னிடம் சொல்லியிருக்கிறார். உனக்கு உபதேசம் செய்ய சொல்லி. ஆகவே, நீ விரும்பிய படியே, பகவானின் சரித்திரத்தை  சொல்கிறேன். “ என்றார்.

பகவான் ஒருவனே தன்னில் தானே லயித்து இருப்பவன்.

இதன் பின் ஸ்ருஷ்டி பற்றிய விவரங்களை சொல்கிறார். (முன் அத்யாயங்களில் சொன்ன மஹத் தத்வம் முதலானவை)

தேவர்கள் துதி செய்கின்றனர்:

சரணமடைந்தவர்களின் தாபத்தை குறைக்கும் குடை போன்ற உன் பாதக் கமலங்களை வணங்குகிறோம்.  அந்த பாதங்களை யதிகள் வணங்கி தங்கள் சம்சார துக்கத்தை விட்டு விலகி உன் பதத்தை அடைகின்றனர்.

ப்ரும்மா, ஈசன்,  போன்றோரும் எந்த பாதத்தை ஆஸ்ரயித்து, மேன்மையடைந்தனரோ, அதே போல சகல வித்யைகளுடன் கூடிய  உன் பாதத்தின் சாயையில் நாங்களும் சரணடைகிறோம்.   வேதங்களையும், அதன் சாகைகளையும் ரிஷிகள், உன்னிடமிருந்து கற்றார்கள்.  சிரத்தையுடனும், பக்தியுடனும் கேட்டு, தங்கள் ஹ்ருதயத்தில் நிலை நிறுத்திக் கொண்டார்கள்.  வைராக்ய பலத்தாலும், தங்கள் ஞானத்தாலும் வளர்த்துக் கொண்டார்கள். அவர்கள் தீரர்கள் எனப்படுகின்றனர்.  அதனால் நாங்களும் உன் பாத கமலங்களைச் சரணடைகிறோம்.

உலகில் ஸ்ருஷ்டி,ஸ்திதி, சம்ஹாரம் என்ற செயல்களை திறம்பட செய்வதற்காக அவதாரம் செய்தாய். நீ உன்னை சரணடைந்தவர்கள் நினைத்த மாத்திரத்தில் அருளுவாய் என்று அறிவோம். சரீரமே தான்,   தான் என்றும், தன் சுற்றத்தார் என்றும் நம்பும் உலக மக்களிடம் இருந்து நாங்கள் தொலைவில் இருந்தாலும், பகவானே, நீயே எங்களுக்கு சரணம்.

எங்களை உன் ஸ்ருஷ்டி காரியத்தில் சில பொறுப்புகளை கொடுத்து பங்கேற்கச்  சொல்கிறாய்.  ஆணையை சிரமேற்கொள்கிறோம்.   பிறவியற்றவனே! (யாகங்களில்) ஹவிஸ் பெறுவதையும், பதிலுக்கு நாங்களும் உலக ஜீவன்களுக்கு  உணவு தருவதையும் (மழை பொழிதலும், தாவரங்கள் வளருவதுமான செயல்கள்) செய்கிறோம். தேவர்களான எங்களுக்கும் ஆதி தேவன் நீயே.  எங்கள் கண்களில் இருந்து எங்கள் கடமைகளை சரி வரச் செய்ய அனுக்ரஹம் செய்.  

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், ஐந்தாவது  அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-50

அத்யாயம்6

மைத்ரேய ரிஷி சொன்னார்:  இவ்வாறு தன் சக்திகளை அவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு,லோக தந்திரங்களை பற்றியும் சொல்லி அவர்கள்  செய்ய வேண்டிய செயல்களையும் சொன்னார்.

“கால’ என்ற தேவியை  மிகுந்த செயல் திறனுடைய முப்பத்து மூன்று தத்வங்களும் கூட்டமாக உடனே சென்றடைந்தன.  தானும் சேஷ்டா என்ற ரூபத்தில் அந்த கணத்துள் நிழைந்து கொண்டார்.  அது வரை செயலற்றிருந்த அந்த கணம்-கூட்டம் – அனைத்து தத்வங்களும் – உயிர் பெற்றன.  அந்த முப்பத்து தத்வங்களும், பரம புருஷனான பகவானின் சக்தியில் ஒரு அம்ச செயல்திறனை தாங்களும் பெற்றன.

பரபுருஷனாலேயே ஆணையிடப் பெற்ற அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து விஸ்வ ஸ்ருஷ்டியை செய்ய அந்த  தத்வங்களின் கணம்,  பலவிதமாக வெளிப்பட்டு சராசரங்களை உருவாக்க வந்து சேர்ந்தன. (தனியாக இருந்தால் ஒரு திறன், அதுவே மற்ற தத்வங்களோடு சேரும் பொழுது மற்றொரு திறன் என்பதாக)

ஹிரண்மயமான பகவான், ஆயிரம் வருடங்கள், அண்டகோசத்தில் வசித்தார். அண்டம் நீரில் மிதந்து கொண்டிருந்தது.  அவர் தன்னுள் உலகை படைக்க தேவையான சக்தியை, கருவாக வைத்துக் கொண்டிருந்தார். தேவ , மற்றும் தன் சக்திகள் அனைத்தையும் உள்ளடக்கி, தன்னைத் தானே ஒருமுறை, பத்து முறை, மூன்றாக என்று பிரித்தார். இது தான் அனைத்து உயிரினங்களுக்கும் ஆத்மாவாக பரமாத்மா தன் அம்சத்தைக் கொடுத்த நிகழ்ச்சி. எனவே இதுவே முதல் அவதாரம்.  இது தான் அடிப்படை அல்லது ஆரம்பம் என்று கருதப் படுகிறது.

ஆத்மாவின் செயல்திறம், தேவ அல்லது மாறாத இயற்கையின் செயல்திறம், உயிரினங்களின் செயல் திறம் என்ற மூன்று முறை. விராட் ப்ராணன் பத்து முறை,  ஹ்ருதயம் ஒருமுறை- தன்னையே பலவாக ஆக்கிக் கொண்டது. விஸ்வத்தை படைக்க உதவியாக, அவைகளின் விஸ்தீர்ணம் அதிகமாகவும், பரவலாக ஆகும் பொருட்டும், தெளிவான உருவில் இருந்த கோளத்தை, அதோக்ஷஜன்(விஷ்ணு பகவான்) தன் தேஜஸால்

வெப்பமூட்டினார்.  (நீரில் மிதந்த கோளம் அச்சமயம் மற்றொரு மஹத் தத்துவமான அக்னி சேர்ந்தது. ) இந்த வெப்பத்தால் தேவர்களிடம் பல யாக சாலைகள் (பவித்திரமான அக்னி இருக்கும் இடம்)  புதிதாகத் தோன்றின.  வரிசையாக சொல்கிறேன் கேள்.

அந்த அக்னி -ஜீவன்களின்- வாயில் குடி கொண்டது. அக்னி தேவனாக,  லோக பாலனாக பொறுப்பேற்றது.  தன் அம்சத்தின் பலத்தால், வாய் பேசுதல் என்ற செயலை செய்ய, அந்த சொற்கள் மூலம் அவர் யார் என்பதை அறிவிப்பதாகவும் நியமித்தார்.  

அதன் பின் தாலு- வாயின் அடி பாகம், வெளிப்பட்டது. அதற்கு லோக பாலனாக வருணனை பகவான் நியமித்தார்.  அதன் பின்  நாக்கு என்ற உறுப்பு இணைந்தது. இதனால் ரஸம் என்பதையறிய முடிந்தது .

அஸ்வினி தேவதைகள் என்ற  இரட்டையர், பகவானின் கட்டளைப் படி,  மூக்கு என்ற அவயவத்தில் குடி புகுந்தனர்.  நுகர்தல் என்பதை அவர் அம்சத்தால் வாசனையை அறியச் செய்வது அவர்களின் செயலாயிற்று. முச்சு விடுதல் மற்றொன்று..

கண்கள் வெளிப்பட்டன. த்வஷ்டா இதன் அதிகாரியாக நியமிக்கப் பட்டார்.   அவரும் லோக பாலனாக பொறுப்பேற்றார்.  பகவானுடைய அம்சமாக கண் உருவங்களை காண முடிந்தது. 

உயிரினங்களின்  தோலாக காற்று நியமிக்கப் பட்டது.  ஒன்று ப்ராணன், மற்றொன்று ஸ்பரிசம் என்று இரண்டு செயல்கள்.  காற்று-வாயு என்ற தேவனும் லோக பாலனாக நியமிக்கப் பட்டான்.

காதுகள் இணைந்தன.  திசைகள் தங்கள் பொறுப்பாக பதவி ஏற்றனர். ஸ்ரோத்ரம்- காது என்ற அவயவத்தால், சப்தத்தின் தன்மை அறியப் படுகிறது.

 த்வக்- என்ற மேல் தோல்,  ரோமங்களுடனும், இணைந்தது.  அரிப்பு போன்ற உணர்வுகளை அறிய உதவும். இவை  தாவரங்களின் அறியும் திறன் கொண்டவை.

ப்ரும்மா தானே ஜனன  உறுப்பான மேட்ரம் என்ற அவயவத்தில் இணைந்தார். தன் அறிவை அதில் பிரயோகித்தார். ரேதஸ் என்ற அம்சத்துடன் ஆனந்தம் என்பதை வெளிப் படுத்துவதாக அமைந்தது.

குதம் என்ற அவயவத்தில் மித்ரன் என்ற லோக பாலன் பொறுப்பேற்றார். பாயு என்ற அம்சத்துடன் வெளியேற்றம் என்ற செயலை ஏற்றார்.

கைகள் தோன்றின. அவைகளில் தேவ லோக நாயகனான இந்திரன் இணைந்தான்.  பரம புருஷனின் கைகளின் அம்சமாக செயல்கள்  கைகளுக்கு அமைந்தன.  பாதங்கள் தோன்றின. அதில் லோக நாயகனான விஷ்ணு பொறுப்பேற்றார். நடை என்ற தன் அம்சத்தால், அடைய வேண்டிய இலக்கை அடைவது என்பது சாத்யமாயிற்று.

புத்தி தோன்றியது. வாகீசன் என்ற ப்ரும்மாவின் அம்சம் இதில் இணைந்தது. அறிவு என்பதன் அம்சமாக அறிய வேண்டியவைகளை அறிய தேவையான சக்தி வந்தது.

ஹ்ருதயம் என்ற அவயவம் இணைந்தது. இதன் தலைமையை சந்த்ரமா ஏற்றது. மனஸ் என்பதன் அதிகாரியாக சந்திரன் ஆனான்.  மாற்று எண்ணங்கள், பேதங்கள் கொண்ட மனஸ் என்பதின் செயல்களை சந்திரன் நிர்வஹிக்கிறான்.  ஆத்மானம் – தான், தன்னுடைய, தன்னியல்பு என்ற அபிமானம் மனதில் குடி கொண்டது.  கர்மாவின் பலனாக, செய்ய வேண்டியவைகள்  என்பவை இதன் பொறுப்பு.

பரம புருஷனின் தலையிலிருந்து வானம், பாதங்களிலிருந்து பூமி, நாபியிலிருந்து அண்டவெளி  தோன்றின. 

சத்வம் என்ற குணம், மிகச் சிறந்த அறிவு.  சித்தம் என்ற அம்சத்துடன் இணைந்து இது விக்ஞானம் -மேம்பட்ட அறிவு என்ற தகுதியை தருகிறது.  மிகவும் சத்வமான தேவலோகத்தை தேவர்கள் பெற்றனர். ரஜஸ் என்ற குணத்தை பூமியும்,    மூன்றாவது குணமான தமஸ், பகவானின் நாபியில் அடைக்கலம் கொண்ட ருத்ர பார்ஷதர்கள், (ருத்ரனின் உடன் வசிப்பவர்கள் – ஏவலர்கள்) வானத்தையும் இடமாக கொண்டனர்.

முகத்திலிருந்து ப்ரும்மம் தோன்றியது.  அதனால் வர்ணங்களில் முக்யமானது ப்ராம்மணர் என்று ஆயிற்று.  குரு எனப்பட்டனர்.  புஜங்களிலிருந்து வெளிவந்தனர் க்ஷத்ரம்- அதன் வம்சத்தினர் க்ஷத்திரியர்கள் ஆனார்கள். காப்பாற்றுவதே இவர்கள் தொழில், குணம். மற்ற வர்ணத்தினரை பாதுக்காக்கும் பொறுப்பு ,அவர்களின் இடர்களை நீக்கும் வேலை இவர்களுடையது.  நேர்மையான  குணம், சமயோசிதமான செயல் இவைகளுடன்,உலக வாழ்க்கைக்கு பயன் படும் வகையில் வைஸ்யர்களை உத்பத்தி செய்தார். இவர்கள் அவரது துடைகளிலிருந்து தோன்றினர். இவர்கள் அரசர்களுக்கு உதவியாக வாணிபம் முதலியன செய்வர்.

பகவானின் பாதங்களிலிருந்து அடுத்த வர்ணத்தினர் தோன்றினர். தர்ம காரியங்களில் சிறு உதவிகளைச் செய்பவர்கள், இவர்களின் செயல்களால் ஹரி சந்தோஷப் படுகிறார்.

இந்த வர்ணத்தினர் தங்கள் செயல், தொழில் தர்மங்களால் ஹரியை பூஜிக்கின்றனர். எந்த வர்ணத்தில் பிறந்தனரோ அந்த குல தர்மத்தையே சிரத்தையாக அனுஷ்டித்து வந்தனர்,  இதில் க்ஷத்திரியர்கள், பகவானின் தெய்வீக கர்மத்தை செய்ய அவருக்கு இணையானவர்கள்.

தன் யோக மாயா பலத்தில் பகவான் செய்யும் செயலுக்கு நாம் எந்த விதத்தில் சேவை செய்ய முடியும்? இருந்தாலும் சொல்கிறேன். தெரிந்த வரை, நான் கேட்டபடி சொல்கிறேன்.  என் வார்த்தைகள் மற்ற இடத்தில் பொருளில்லாமல், அதாவது அதற்கு மதிப்பு இல்லாமல் போகலாம். அதை ஈடு கட்ட ஹரியின் கீர்த்திகளைப் பாடுகிறேன்.  இப்படி பாடுவதன் ஒரே லாபம், மனிதனுடைய வார்த்தைகள்,  பகவானின் குணங்களை பேசுவது தான் என்று சொல்வர்.  அதை ஸ்ருதி என்ற வேதமே, நிறைய சொல்லியிருக்கிறது.  ஆதி கவி ப்ரும்மாவே, தன் மனதில் பல ஆண்டுகளாக இந்த எண்ணத்தை வைத்திருந்தார்.  யோக மார்கத்தில் பல காலம் பயின்ற பிறகு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வெளியில் சொன்னார்.  ஆகவே, பகவானின் மாயா, மாயை அறிந்தவர்களுக்கும் புரிந்து கொள்ள முடியாது. அவருக்கே தெரியாது தான் என்ன செய்யப் போகிறோம் என்பது, மற்றவர்கள் என்ன சொல்ல., நானும் மற்ற தேவர்களும் எங்கும் தேடியும்,  எங்கள்  வாக்கும், மனமும்,  எதையும் காணாமல் திரும்பியதோ, அந்த பகவானுக்கு நமஸ்காரம்.

 (இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த    காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், ஆறாவது  அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-40

அத்யாயம்7

மைத்ரேய முனிவர் சொன்னதைக் கேட்டு,  த்வைபாயனன்  என்ற பராசரரின்  மகன், விதுரர், பதில் சொன்னார்.  “ப்ரும்மன்!  சின்மாத்ரன் – சித் என்ற உயர்ந்த நிலையில் இருப்பவன் பகவான் என்பர்.  மாறுதல்கள் இல்லாத பரம் பொருள்.  லீலை தான் என்றாலும், நிர்குணன் என்று பெயர் பெற்றவன் குணங்களுக்கு, அதன் செயல் பாடுகளுக்கு ஏன் உடன் படுகிறான் ?  சிறுவர்கள் போல விளையாட்டு.  உலக வாழ்க்கை முறைகளை ஏன் ஏற்க வேண்டும்? நிவ்ருத்தி மார்கம் என்ற ஞான மார்கம் தானே அவருடையது?   ஸ்வத: த்ருப்த: என்பர்- தன்னில் தானே லயித்து இருப்பவர். அதற்கு எதிரான தன் மாயையால் உலகை சிருஷ்டி செய்தார் என்று சொன்னீர்கள். பின் அதே மாயையால் காத்தும் பின் கலைத்தும் ஏன் செய்ய வேண்டும்?  தேசம், காலம் இவற்றைக் கொண்டு தன்னிலிருந்து வேறாக ஒரு உலகை ஏன் படைக்க வேண்டும். நிறைவான அவபோதம்- அறிவும் ஆற்றலும் உள்ளவனுக்கு இது தேவையா?  ஒரே பகவான், எங்கும் நிறைந்திருப்பவன், அவனுக்கு கர்ம பலன் ஏது? செய்த வினையால் துன்பம் என்பதும் ஏது?  பகவானே ! எனக்கு பகவானே இப்படி உலக மாயையில் உழல்வது உவப்பாக இல்லை.  என் மனம் சங்கடப் படுகிறது. “

ஸ்ரீ சுகர் சொன்னார். இதைக் கேட்டு முனிவர் சிரித்தார்.  கேட்டவர் க்ஷத்திரியராக இருந்தாலும் அறிவு தாகம் உடையவர்.  பிறவி ஞானி.  பகவானின் சித்தம் என்பதை எப்படி சொன்னால் இவர் மனம் சமாதானம் அடையும் என்று யோசித்தவர் போல பதில் சொன்னார்.

“நான் என்ன சொல்ல, பகவானின் விருப்பம், அவருடைய மாயை.  பந்தமே இல்லாத ஈஸ்வரனுடைய  தயை. அதனால் கட்டுபடுகிறான்.

நீரில் சந்திரனின் பிம்பம் அலை பாய்வது போல தெரிவது சந்திரனின் தவறா? அவ்வாறே இல்லாத ஒன்று இருப்பதாக தெரிவது காண்பவரின் குணம்.  அது போலத் தான் ஆத்மா, பரமாத்மா என்ற பேதமும். அவனே ஞான மார்கத்தை உபதேசித்தான்.  வாசுதேவனாக வந்த பொழுது கருணையால் அதை பக்தி யோகம் என்பதால் மெள்ள மெள்ள மறைத்தான்.

சுய கட்டுப்பாடின்றி  தன் புலன் களின் வழியே செல்வதையே குணமாக கொண்டவன் கூட தன்னிலிருந்து வேறாக ஹரியை நினைத்து ஈடுபாட்டுடன் பக்தி செய்தால், அவன் கஷ்டங்கள் விலகுவதை கண் கூடாக காண்பான்.  தூங்கி எழுந்தவன் போல அவன் துன்பம் மறைந்து விடும்.

முராரி தன்னைப் பற்றி பாடும் அடியார்களின் அனைத்து கஷ்டங்களையும் தீர்த்து வைக்கிறான்.  ஆத்ம தத்துவம் அறிந்தவர்கள் அவனுடைய பாத தூளியை சேவிப்பதால் எதைத் தான் அடைய முடியாது?

விதுரர்  “நீங்கள் சொல்வது சரியே. என் சந்தேகம் விலகியது. இரு மார்கங்களுமே எனக்கு ஏற்றவையே. ஹரியின் மாயையே.  சரியாக சொன்னீர்கள்.  அடி மட்டத்தில் இருக்கும் மூடனோ,  அறிவிற்சிறந்தவனோ, இருவருக்கும் நன்மையே பக்தி யோகம்.  அதை மறந்தவன் தான் சிரமப் படுவான்.  பொருள் வேண்டுமென பக்தி செய்பவன் கூட,  அவனுடைய சரண சேவையால் அதை அடைவான்.  மது என்ற அரக்கனை அழித்த பகவானின் பாத சேவை எதைத் தான் தராது? நித்யம் ஜனார்தனனை வணங்கி வழிபடுவர்களுக்கு அடைய முடியாதது என்று எதுவுமே இல்லை.

மஹத் போன்ற இயற்கை சக்திகளை தானே சிருஷ்டி செய்தவன்,  நாளடைவில் அதில் சில மேன்மைகளை கூட்டி தானே அதில் பிவேசித்தான்.  அதனாலேயே முதல் புருஷன் என்று சொல்லப் படுகிறான்.  ஆயிரம் பாதங்கள், துடைகள், புஜங்கள் என்று விஸ்வரூபமாக வந்தவனிடம் உலகங்கள் அடைக்கலமாயின.  எவனிடத்தில் பத்து வித ப்ராணங்கள்,  ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் மூன்றாக ஆனதும், வர்ணங்கள் பற்றி சொன்னதையும் மறுமுறை சொல்லுங்கள்.  தன் புத்திரர்கள், பேரன்கள், மருமகன்கள், மற்றும் தாயாதிகள் என்று ப்ரஜைகள்  பல்கி பெருகி பலவிதமாக இருந்தார்களே, யார் இதற்கு மூலமாக இருந்தார்கள் அதைச் சொல்லுங்கள்.  ப்ரஜாபதிகள் என்பவர்களை யார் நியமித்தார்? எப்படி தேர்ந்தெடுத்தார்?  சர்கம், அனுசர்கம் என்பதையும், மனு, மன்வந்தரங்கள், இவர்களின் தலைவர்கள் பற்றியும் சொல்லுங்கள். இவர்களின் வம்சங்கள், வம்ச சரித்திரங்களையும்,  பூமியின் மேல் உலகம், கீழுலகம்  இந்த விவரங்களைச் சொல்லுங்கள்.

இவைகளின் இருப்பு, ப்ரமாணம், பூவுலகம் என்பதையும் வர்ணித்துச் சொல்லுங்கள். கால் நடைகள், மனித, தேவர்கள், ஊர்வன, பறவைகள், இவைகளின் கட்டமைப்பு என்ன என்பதையும், கர்பத்தில் தோன்றுபவை எவை, வியர்வையில் பிறப்பவை, முட்டையிலிருந்து தோன்றும் த்விஜ-இரட்டை பிறப்புடைய பறவைகள். தானே இரண்டாக பிளந்து தோன்றும் ஜீவன்கள், இவை பற்றியும், உலகில் குணாவதாரம் என்பதையும், ஸ்ருஷ்டி,ஸ்திதி,சம்ஹாரம் என்பதையும், ஏற்படுத்திய ஸ்ரீநிவாசனின் உதார, பெருமை மிக்க பராக்ரமத்தையும் விவரித்துச் சொல்லுங்கள்.

வர்ணாஸ்ரம விபாகங்கள், ரூபம்,சீலம் போன்ற ஸ்வபாவங்கள், ரிஷிகளின் தோற்றம், வேலைகள், வேதத்தின் அறிவுரைகள், யாக கர்மாக்கள், அவைகளை சரிவர செய்ய வேண்டிய நியமங்கள். யோக முறைகள், கார்யம் (பலன்) இல்லாத கர்ம யோகம்,  சாங்க்யம் என்ற ஞான யோகம், தந்திரம், இதை பகவானே சொல்லியிருக்கிறார்.

இது தவிர, பாகண்டம் என்ற நாஸ்திக வாதம், அதன் குறைகள், கீழ் நோக்கிச் செல்லும் விஷயங்கள், ஜீவன்கள் செல்லும் வழிகள், எவைகள், எந்த அளவில் குணம், கர்மம் இவைகளிலிருந்து தோன்றுகின்றன,

தர்மார்த்த காம மோக்ஷம் என்ற நான்கு ,  இதன் நிமித்தங்கள், விரோதங்கள், சட்டங்கள், தண்ட நீதி, , விதியின் போக்கு, வேதம் காட்டும் வழி இவைகளையும்,

சிரார்தம் செய்வதன் விதி முறைகள், ப்ரும்மன்! பித்ருக்களின் சர்கம் என்பது என்ன?  க்ரஹ நக்ஷத்திர தாரைகள், இவைகள் காலத்தின் அங்கங்கள் என்று பார்த்தோம், இவை பற்றியும்,

தானம் செய்வதும், தவம் செய்வதும், குளம் வெட்டுவது போன்ற பூர்த்த செயல்கள், அதன் பலன், வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும் பொழுது, மனிதனுக்கு என்ன தர்மம், பெரும் ஆபத்து வந்த காலத்தில் என்ன செய்ய வேண்டும்?

தர்மத்தின் பிறப்பிடமே என்று பகவானைச் சொன்னீர்கள்,  ஜனார்தனன் எந்த தர்மத்தை செய்தால் மிகவும் மகிழ்வான் ? யாரிடம் மிகவும் சந்தோஷமடைவான் என்பதைச் சொல்லுங்கள். தன் சிஷ்யர்கள், மற்றும் உடன் அனுசரித்து இருக்கும் பிள்ளைகள்,  இவர்கள் கேட்காமலே இவர்களுக்கு உபதேசம் செய்யலாம். நிறைய தத்வங்கள் சொன்னீர்கள். பலவிதமாக பரிணமிப்பவை. இவைகளை எப்படி அறிவது, பயன் படுத்துவது?

புருஷன் என்பவனின் உடலமைப்பு, சரியான இருப்பு என்பது என்ன? ஞானம், வேத பரமான அறிவு, இவைகளை குரு சிஷ்யர்களுக்கு எப்படி போதிப்பது?

நிமித்தங்கள் பற்றியும் சில அறிஞர்கள் சொல்லியிருக்கின்றனர்.  தானாக மனிதர்கள் ஞானம் பெற முடியாதா? சுயமான அறிவு எங்கிருந்து வரும்?  பக்தியோ, வைராக்யமோ, தானாக வருமா?

பல சந்தேகங்கள் நான் கேட்டு தெரிந்து கொள்ள விரும்புவது ஹரியிடம் உள்ள பற்றுதலால் தான், எந்த விதமாக தன் செயல்களை செய்கிறான் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். வயதானதால் புத்தி மழுங்கி விட்டது. எல்லா வேதங்களும், யாகங்களும் தவம்,தானம் முதலியவைகளும், ஜீவனுக்கு அபய ப்ரதானம் செய்யும் பகவானுக்கு எதிரில் ஒன்றுமேயில்லை.

ஸ்ரீ சுகர் சொன்னார்: கௌரவ குலத்தின் ப்ரதானமாக இருந்தவன், முனிவர்களில் ப்ரதானமாக இருந்தவரிடம் கேட்டார். பகவத் கதையை சொல்ல வாய்ப்பு கிடைத்தது என்றெண்ணியோ, அவர் மிக்க மகிழ்ச்சியுடன் சிரித்தபடி சொல்லலானார்.  

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், ஏழாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-42  

அத்யாயம்8

மைத்ரேய முனிவர்  பாகவதத்தைச் சொல்கிறேன் என்று ஆரம்பித்தார்.

உலகில் முதன் முதலான ஆதி புருஷனான சங்கர்ஷணன் என்ற தேவன் மிகச் சிறந்த குணங்களுடையவன் என்று பெயர் பெற்றவனாக இருந்தான். சனக, சந்தன என்ற குமாரர்கள், அவரிடம் பர தத்வம் என்பது பற்றி தெரிந்து கொள்ள வந்து சேர்ந்தனர். அவர்களே நல்ல அறிவுடையவர்களே.  கண் முன் பகவான் வாசுதேவனின் அம்புஜாக்ஷம் -தாமரை போன்ற கண்கள் சிறிதளவே திறந்து ஆசிர்வதித்து, பெரும் அறிஞர்களைத் தோற்றுவித்ததைக் கண்டவர்கள்.

தேவ நதியில் ஸ்நானம் செய்து ஈரத்தலையுடன், ஜடை முடி தரித்த தபஸ்விகள் வந்து அவர் பாதத்தில் வணங்கி நிற்பதையும், ஆதிசேஷன் கன்னிகள்  பத்மங்களால் அர்ச்சிப்பதையும்,  கண்டவர்கள்.

அனுராகத்துடன் பாடுபவர்கள். அவர் சஹஸ்ர கிரீடங்களும் ஆதிசேஷனின் படங்களில் ப்ரதிபலிப்பதைப் பார்த்தவர்கள்,  சங்கர்ஷணர் நிவிருத்தி என்ற ஞான மார்கம் என்பதை  ஏற்றுக் கொண்டவர் என்பதை பாகவதர்கள்- பகவத் பக்தர்கள்  அறிவார்கள்.  சனத் குமாரர் கேள்விக்கு அவர் பதில் சொன்னார். தன் வாழ் நாளையே சாங்க்யம் என்ற துறையிலேயே செலவழித்தவர் அவர்.  அதே விரதமாக இருப்பவர்.

சாங்க்யாயனர் என்ற அவர், பரமஹம்ஸர்கள் எனப்படும் உயர்ந்த பண்டிதர்களில் முதல்வராக எண்ணப்படுபவர்.  பகவானின் விபூதிகளை அந்த குமாரர்களுக்கு போதித்தார். அதை அவர்கள் என் தந்தை பராசரருக்கு போதித்தனர்.   பின்னர் ப்ருஹஸ்பதிக்கும் போதித்தார். என் தந்தை, இந்த முதல் புராணம் என்பதை எனக்கு அருளினார். அதை உனக்குச் சொல்கிறேன். வத்ஸ! சிரத்தையுடன் கேட்கிறாய். ஆசார சீலன் என்று அறிவேன். கேள்.

உலகமே ப்ரளய ஜலத்தில் மூழ்கி இருந்தது.   ஆதிசேஷன் என்ற  பாம்புகளின்  அரசனே படுக்கையாக, அதில் பகவான் தூங்கிக் கொண்டிருந்தார்.   அசையாது கிடந்தார்.   மஹா பிரளய காலத்தில் உலகியல் சூக்ஷ்மங்களை, பஞ்ச பூதங்கள் முதலானவைகளை காலம் முதலிய சக்திகளை,  அந்த மாபெரும் வெள்ளத்தில் வீணாகாமல் காக்க தன்னுள் வைத்திருந்தார். , அக்னி மரக்கட்டையில் அடங்கி கிடப்பது போல தன் சக்திகளை மறைத்து இருந்தார்.  நான்கு யுகங்கள், அதே போன்ற ஆயிரம் யுகங்கள், தண்ணீரில் கிடந்தார்.  அதன் பின்  விழித்தவர், தன் சக்தியால் காலா என்ற தேவியை உயிர்ப்பித்தார். அவளிடம் கர்ம தந்திரங்கள் என்பவைகள் இருந்தன.  தன் உடலில் உலகங்கள் நீல வண்ணமாக இருப்பதையும் கண்டார்.

சூக்ஷ்மமான,  பொருள் நிறைந்த தன் கடாக்ஷத்தால்,  உடலினுள் இருந்த ரஜோ குணத்தை, இந்த கால என்ற சக்தியுடன் இணைத்து, உலரச் செய்து, தன் நாபியில் பிளந்தார். அதில் பத்ம கோசம் ( மகரந்தம் நிறைந்த தாமரை மலர்)) உடனடியாக எழுந்தது. காலா என்ற சக்தியின் தூண்டுதலால் தன் பிரகாசத்தால், விசாலமான அந்த நீர் நிலையை சூரியன் ப்ரகாசிப்பது போல. (ஆத்ம யோனி – தானே இரு பாலாராகவும் இருந்து) அந்த லோக பத்மம் – அதில் விஷ்ணுவின் அம்சமாக தானே ப்ரவேசித்தார். அதனுள் தானே வேதமயமான விதாதா- படைப்பவர் -ப்ரும்மா வாக ஆனார். அதனால் அறிஞர்கள் அவரை ஸ்வயம்புவம் – தானே தோன்றியவர் என்கிறார்கள்.

அந்த தாமரை பூவின்  நுனியில் விதை கூட்டில் இருந்தபடி உலகை பார்த்துக் கொண்டிருந்தார். நாலா திசையிலும் கண்களைச் சுழற்றி  பார்த்துக் கொண்டிருந்தவரின் முகம் – திசைக்கு ஒன்றாக நான்காக ஆயின.  அதில் இருந்தபடி யுக முடிவில், அலை வீசும் மாபெரும்  வெள்ளத்தின் நீரால்,  முழுதுமாக தடைப்பட்ட மூச்சுக்  காற்றை நீரின் வேகத்திலிருந்து வலுக் கட்டாயமாக விடுவித்துக் கொண்டு பத்மத்தில் இருந்த சமயம் தன்னையோ, தான்  ஆதி தேவன் என்பதையோ,  தானே ஏற்படுத்திய உலகியல்-லோக தத்வம் என்பதையோ  உணரவில்லை.

யாரது? நான் யார்? பத்மத்தில் இருக்கிறேன்? இந்த பத்மம் எங்கிருந்து வந்தது? எல்லையில்லாத நீர் பரப்பு, இதன் அடியில் என்னதான் இருக்கிறது?  எதன் மேல் இந்த பத்மம் நிலைத்து நிற்கிறது, எதுவுமே புரியவில்லை, என்று இவ்வாறு எண்ணியபடி அந்த பத்மத்தின் தண்டுகளின் வழியாக தண்ணீரை. அடைந்தார். அதன் மூலம் மூலமான நாபியை கண்டு பிடித்தார்.  ஒரே இருட்டு. தேடித் தேடி, அலுத்தார். திரும்பி வந்தார். தன் இடத்துக்கே, பத்மத்திலேயே வந்து யோசித்தார்.  மெள்ள மெள்ள ஸ்வாசம் திரும்பி வரவும் அறிவும் வந்தது. நீள உள் மூச்சு, வெளி மூச்சு வரவும், புத்தி வேலை செய்தது.  அந்த பத்மத்திலேயே சமாதி யோகத்தில் வசதியாக அமர்ந்து கொண்டார்.

காலம் சென்றது. அந்த அஜன், பிறவியற்றவன்,  யோக சாதனையால் ஓரளவு தெளிவு பெற்று, தன்னுள் நோக்கி தேடிப் பார்த்தது. எதுவும் புலப்படவில்லை.  முன் போலவே தாமரைத் தண்டினுள் நுழைந்து புறப்பட்டு, வெண்ணிறமான சேஷ படுக்கையைப் பார்த்து, அதன் வழியே பார்வையைச் செலுத்தி யாரோ அதில் படுத்திருப்பதையும் கண்டது.  யுகாந்த வெள்ளம், படம் எடுத்த பாம்பின் தலையில் இருந்த மணி பிரகாசமாக ஒளி விட, சூழ்ந்திருந்த இருட்டு விலகி , கண்கள் கூச, கீழ் நோக்கி ஆழ்ந்து நோக்கினார். பசுமையான கல் நிறைந்த மலை போன்ற உருவம், சந்த்யா கால வானம் போல, ரத்னங்களின் ஓளி பல வண்ணங்களைச் சிதறியடிக்க, அதிலிருந்து மணம் நிறைந்த பூக்களின் வாசனையுடன் வன மாலை,வேணு, இவைகளை கையில் ஏந்தி, கால்களில் மூவுலகையும் சுருக்கி விசித்ரமான திவ்யாபரணங்களை தரித்தவராக, அருகில் லக்ஷ்மி தேவி அமர்ந்திருக்கும் தேகத்தைக் கண்டார்.

மனிதர்கள், தங்கள் பலவிதமான தேவைகளை நிறைவேற்ற வேண்டி பலவிதமாக அர்ச்சனைகள், வேண்டுதல்கள் செய்து கொண்டும்,  எவருடைய பாத பத்மங்களை சேவிக்கிறார்களோ, அவர்களுக்கு கருணையுடன், சந்திரனின் ஒளிக்கு சமமான தன்  பாதங்களின் நகங்களின் ஒளி விரல்களிடையில் பரவியிருக்கும் அத்புதமான தரிசனத்தை தரும் பகவான்.

முகத்தில் மென்முருவல், அதுவே போதும் பக்தர்களின் தாபத்தை தீர்க்க, குண்டலங்களின் ஒளி கன்னங்களில் ப்ரதிபலிக்க, சிவந்த அதரங்கள், நாசியும், புருவங்களும், கதம்பம், கிஞ்ஜல்கம் , பிசங்கம் என்ற புஷ்பங்கள், போன்ற மஞ்சள் நிற ஆடையுடன், தன்னையே அலங்கரித்துக் கொண்டது போல மேகலை இடுப்பில் அணியும் நகை,  ஒட்டியானம் பளபளக்க, அனந்த தனம் என்ற மாலை, ஸ்ரீவத்ஸம் என்ற மணி மார்பில் துலங்க, மிகச் சிறந்த கேயூரங்கள், ஆயிரம் புஜங்களிலும் துலங்க, வெளியில் தெரியாத மூலம், புவனாங்க்ரிபேந்த்ர,(பூமியின் பாதங்கள்- பாதாளம் அதன் தலைவன் ஒரு நாகம்)  மஹீந்த்ர (தேவ லோகத்து நாகம்)  என்ற போகங்கள், நாகங்கள் சூழ்ந்து மறைத்திருக்க,  சராசரத்திற்கும் ஆதாரமான பகவான்,  நாலாபுறமும் தண்ணீரால் சூழப்பட்டவராக,  பூமியைத் தாங்கும் யானைகள் -திக் கஜங்கள் அருகில் தெரிய,  ஆயிரம் கிரீடங்களால், பொன்மயமான ஸ்ருங்கம், உச்சி பாகம், (தலை) கௌஸ்துப ரத்னத்தை தாங்கியபடி ஆவிர்பவித்தது.

 வேதங்களின் சாரமான தேன் வண்டுகளின் ரீங்காரமே தன் கீர்த்தியை பாடுவது போல லக்ஷ்மீகரமான வனமாலையுடன் ஹரியை, சூரியனோ, சந்திரனோ, வாயுவோ, அக்னியோ காண முடியாத த்ரிதாமம்- என்ற பிரகாசம் சுற்றிலும் சூழ்ந்து இருந்ததைக் கண்டார்.

அதே சமயம், அதன் நாபியிலிருந்து வந்த சரோஜம்- தாமரைப் பூ, நீரில் மூச்சு விட்டது போல, சிறிய சலனம்- அதைக் கண்டார், உலகை படைக்கப் போகும் விதாதா-ப்ரும்மா- அதுவே முதல் வெளிப்பாடு என்று உணர்ந்தார்.  கர்மபீஜம் – ஒரு செயலின் ஆரம்பம், ரஜோ குணத்துடன் கூடியது, ப்ரஜைகளை ஸ்ருஷ்டி செய்ய முதல் அடி எடுத்து வைத்தது போல, பார்த்தவுடன் துதி செய்தார்.  அந்த சிறு சலனத்தையே தனக்கு வழிகாட்டியாக அவர் எடுத்துக் கோண்டார்.  வெளியில் தெளிவாகத் தெரியாத பகவானின் அத்புதமான ஆற்றலை எண்ணி, அவரிடம் தன் மனதை செலுத்தியவராக ஆனார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், எட்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-33

 அத்யாயம்9

ப்ரும்மா நா தழ தழக்க  துதி செய்யலானார்: பகவானே!  இன்று நான் உன்னைத் தெரிந்து கொண்டேன். வெகு நாட்களுக்குப் பிறகு, சாதாரண மனிதர்களுக்கு அரிதான காட்சி, இது தான் என்று சுட்டிக் காட்ட முடியாத உன் ஸ்வரூபம். உன்னையன்றி வேறு யார் இருக்கிறார்கள்?   அப்படி ஒருவர் இருந்தாலும்  உன் மாயையின் பல ரூபங்களை  அறிந்தவன் நீ ஒருவனே.

எனக்கு அனுக்ரஹம் செய்யவே வந்தாய். தமஸ் என்ற இருட்டை விட்டு தெளிவு என்பதன் உதயத்தால், என்னை வெளிக் கொணர்ந்து விட்டாய்.  ஆயிரக் கணக்கான அவதாரங்களில் இது முதல் அவதாரம். உன் நாபி என்ற பவனத்தில் நான் பிறந்தேன். இதை விட அதிகமாக, உன் ஸ்வரூப தரிசனம்.  சற்றும் குறைவில்லாத ஆனந்தம் மட்டுமே ஆனது. விஸ்வத்தை ஸ்ருஷ்டி செய்பவனை நான் நேரில் காண்கிறேனா என்று நம்பவே கூட முடியவில்லை.  பஞ்ச பூதங்கள், இந்திரியங்கள் என்ற அனைத்தும் என்னை வந்தடைந்தன.   புவன மங்களா! என் மங்களத்திற்காக என் த்யானத்தில் வந்து தரிசனம் தந்தாய்.  அதை உன் உபாசகர்களுக்கு தருவாய் என்று அறிந்திருக்கிறேன். அந்த பகவானுக்கு நமஸ்காரம்.  உன்னையே வணங்கி வேண்டுகிறன். நீ தயை செய்.

உன் சரணாரவிந்தத்தில் அன்றலர்ந்த தாமரையின் மணம்.  இதை நுகர்பவர்கள், ஸ்ருதியையே கேட்டு பழகிய காதுகள் உடைய பெரியோர்.  அவர்கள் பக்தியுடன் உன்  சரணங்களை வந்தடைந்திருக்கிறார்கள். அவர்களை உன் ஹ்ருதயம் என்ற அம்புஜத்தில் வைத்து பாதுகாக்கிறாய்.  மனிதர்கள் மனதில் பயம் வர காரணம் செல்வம், தன் தேகம், நண்பர்கள் இவர்கள் விஷயமாக கவலை, பிரியம், அவமானம், அதிகமான லோபம்- பேராசை. நான்,  எனது என்ற எண்ணம்- இவையே துன்பங்களின் ஆணிவேர்.   உன் பாதம் தான் அபயம் அளிக்கும். பயத்தைப் போக்கும்.

விதி வசத்தால் புத்தியை இழந்த சிலர் தான் உன்னிடம் பாராமுகமாக இருப்பர்.  உன்னை வந்தடையும் வரை அவர்கள் நம்பும் உலகியல் சுகங்கள் துக்கமே. நாள் முழுதும் பொருள் ஈட்டுவது போன்ற வேலைகள், இரவில் நித்ரை,  இப்படியும் சிலர் உலகில் சஞ்சரிக்கின்றனர்.  இவர்கள் உன்னைப் பற்றி பேசுவது கூட இல்லை.

நீ  வேதம் சொன்ன வழியில் செல்லும் அன்பர்களுக்கு அவர்களின் பாவம், யோகம் இவற்றை உன் ஹ்ருதயத்தில் தரிக்கிறாய்.  எந்த விதமாக உன்னை வழிபடுகிறார்களோ, அதே வழியில் அவர்களுக்கு அனுக்ரஹம் செய்கிறாய்.  தன் காரியமாக உன்னை ஆராதிப்பவர், தேவர்களேயானலும் உன் அருள் அவர்களுக்கு எளிதில் கிடைப்பதில்லை.  சர்வ உயிரினங்களையும் அன்புடன் அரவணைக்கும் ஒருவன் உனக்கு அந்தரங்க சினேகிதனாகிறான்.  சிலர் பலவிதமான யாக கர்மாக்களைச் செய்தும், தானம், தவம் இவைகளையும் உக்ரமான விரதங்களை அனுஷ்டித்தும், பகவத் ஆராதனம் என்றும் பல செயல்களை செய்வர்.

உன் லீலைகளுக்கு நமஸ்காரம். உன் அவதார குண, பெயர்கள், இவற்றை அறியாமல் சொன்னாலும் அதன் பலன் உடனே கிடைத்து விடுகிறது. பிறவியின் துன்பத்தை உடனே கடந்து விடுவார்கள். அந்த அஜன்-பிறப்பில்லாத பரம் பொருளுக்கு நமஸ்காரம்.

 நான், கிரிசன் என்ற மஹேஸ்வரன், தாங்களும் சேர்ந்து இந்த ஸ்ருஷ்டி, ஸ்திதி,லயம் என்ற உன் செயல்களைச் செய்கிறோம். இதையும் பிளந்து ஒரே விருக்ஷமாக- மரமாக- நிற்கிறாய். புவனத்ருமம் ஆன உனக்கு நமஸ்காரம்.

உலகம் தன் சுக சௌகர்யத்திற்காகவே முனைந்து தன் செயல்களை செய்கிறது.  உன்னை அர்ச்சனை செய்வதை விட இந்த ஆசையின் தாக்கம்  பலமாக இருந்தாலும் சிறிதே நினைத்தாலும் அந்த இடரை களைந்து நற்கதி அளிக்கிறாய். அந்த உனக்கு நமஸ்காரம்.

நானும் பயந்தேன். இரவும் பகலும் உன்னை ஆராதித்தேன். பல காலம் தவம் செய்தேன். யாகங்கள் செய்தேன். அந்த அதிமகாய (யாக ரூபன்) உனக்கு நமஸ்காரம்.

உயிரினங்களின் ஜீவன் நீ.  நீயே விரும்பி எடுத்துக் கொண்ட சரீரம் உன் அவதாரங்கள். அந்த புருஷோத்தமனுக்கு நமஸ்காரம்.

உலக க்ஷேமம் என்பதற்காக நீரில் மூழ்கி கிடந்தாய்.  அலை வீசும் பயங்கர பிரளய ஜலம்.  உன் நாபி பத்மத்தில் வந்தவன் நான். எனக்கு உன் அனுக்ரஹத்தால் மூவுலகும் படைப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.  ப்ரும்மாண்டத்தையும் வயிற்றில் சுமந்த உனக்கு நமஸ்காரம். யோக நித்ரையில் ஆழ்ந்த உனக்கு நமஸ்காரம். இன்று நான் சகல ஜகத்துக்கும் ஆத்மாவான உன்னை, பவன் பவ்யமாக வணங்கும் உன்னை,  உன் கடாக்ஷ பலத்தில்,  முன் போல் உலகை சிருஷ்டிக்க ஆரம்பிக்கிறேன்.   அடைக்கலம் என்று வந்தவனுக்கு அருளும் உன் துணையுடன் படைக்கும் தொழிலில் மன தூய்மையுடன் செய்கிறேன். வேறு எந்த வித கெட்ட எண்ணமோ, கர்வமோ, என்னை அண்டாதிருக்கட்டும். உன் நாபி குகைக்குள் நான் இருந்த சமயம், அந்த சக்தியின் மேம்பட்ட அறிவாக நான் இருந்தேன். அன்று நான் கண்ட உன் உருவம், என்னால் விவரிக்க இயலாதது.

புராண புருஷணனான  நீ  எல்லையில்லாத கருணையே உருவானவன்,  உலகை புனர் நிர்மாணம் செய்ய எழுந்தவன்,  அன்புடன் கண்களாகிய தாமரையால் தடவிக் கொடுப்பது போல என்னைப் பார்த்து,    மதுரமான சொல்லால் என்னை ஆட்கொண்டாய்.  

மைத்ரேயன் சொன்னார்: தான் உருவானதை விவரித்த பின், மனதார ஸ்ரீ க்ருஷ்ணரை துதி செய்து விட்டு நிறுத்தினார்.  மது சூதனனும், கல்ப பிரளய ஜலத்தில் தான் கிடந்ததை  அவர் மிக வருத்தத்துடன் சொன்னதை புரிந்து கொண்டு, ப்ரும்மாவைப் பார்த்து சொன்னார். “வேத கர்ப, (வேதங்கள் உன்னிடம் அடைக்கலமாகி உள்ளன) ஸ்ருஷ்டி செய்வதை ஆரம்பி. நீ தற்சமயம் கேட்டது அனைத்தையும் உனக்கு முன்பே தந்து விட்டேன்.  திரும்பவும் நிறைய தவம் செய். என் சம்பந்தமான வித்யைகளையும் கற்றுக் கொள். அவைகளைக் கொண்டு மனதின் ஆழத்தில், எப்படி உலகங்கள் அமைய வேண்டும் என்பதைக் காண்பாய்.  அதன் பின், உன் உள்ளும், உலகிலும் பக்தியுடன், ஒரு முகமாக இருந்து என்னைக் காண்பாய். ப்ரும்மன்!  இந்த லோகங்களும், நீயும், என்னில் என்றும் இருப்பவர்கள், என்னைச் சார்ந்தவர்களே.

மரக் கட்டையில் அக்னி போல சர்வ பூதங்களிலும் நான் உறைந்து இருப்பதை, உலகம் அறியட்டும். அதனால் கவலையை விடு.  வகை வகையான செயல் பாடுகளுடன், ஏராளமான பிரஜைகளை ஸ்ருஷ்டி செய். உன் ஆத்மா அதனால் வருந்தாது. பல ஆண்டுகள் என் அனுக்ரஹத்துடன் தொடர்ந்து செய்வாய்.  நீ முதல் ரிஷி. உன்னை ரஜோ குணம் பாதிக்காது.  உன் மனம் என்னிடத்தில் நிலைத்து நிற்குமாதலால், பிரஜைகளை உத்பத்தி செய்யும் சமயத்திலும் பாதிக்கப் பட மாட்டாய்.   உயிரினங்கள், அவர்கள் தேகம் என்பன பற்றி எதுவுமே தெரியாதே என்று தயங்க வேண்டாம்.  என்னை பார். பஞ்ச பூதங்கள், முக்குணங்கள் இவைகளுடன் ஆத்மாவும் சேர்ந்து உருவாக்கு.  ஏற்கனவே நான் காட்டியிருக்கிறேன். தாமரைத் தண்டில் நீ  அடி வரை தேடி வந்தாயே, அந்த சமயம் காட்டினேன்.  நீ இப்பொழுது சொன்னாயே, என் சரித்திரம், துதி செய்தாயே, அதுவும், தவம் செய்தாயே, யோக நிஷ்டையில் ஆழ்ந்து இருந்தாயே, இவையும் என் அனுக்ரஹமே.  உலகங்களை படைத்து ஜயிக்க வேண்டும் என்று என்னை வேண்டி துதி செய்தாய். அதனால் மகிழ்ந்தேன்.  பத்ரமஸ்து தே- உனக்கு நன்மைகள் உண்டாகட்டும். என்னை நிர்குணன் என்றும் குணமயன் என்றும் சொன்னாய்.  இந்த துதி நிலைத்து நிற்கும். 

பூர்த்தம்- குளம் வெட்டுதல் போன்ற சமூக சேவைகள், தவம் – மனதை அடக்கி தன் மேன்மைக்காக தியானம் செய்தல், யாக காரியங்கள், தானம், யோக சமாதிகள், இப்படி பல விதமாக மனிதர்கள் இவை என்னை சந்தோஷப் படுத்தும் என்று விஷயம் அறிந்தவர்கள் சொல்வார்கள்.  ஆத்மா வின் ஆத்மா நான்.  சரீரம் உடைய ஜீவன் களின் உள்ளுறையும் ஆத்மா நானே.   சர்வ வேதமயமான ஆத்மயோனியான நான் அனைத்து உலகிலும் பரவியிருப்பவன் என்பதை நினைத்து உன் ஸ்ருஷ்டி என்ற தொழிலை ஆரம்பி முன் போலவே உலகம் நிறையட்டும். ப்ரதான புருஷன், லோகேஸ்வரன் தன் சுய ரூபத்தையும் காட்டி அனுக்ரஹம் செய்து விட்டு, மறைந்தான்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், ஒன்பதாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-44

அத்யாயம்10

விதுரர் ஒரு சந்தேகம் என்றார்.   பகவான் மறைந்த பின் ப்ரும்மா தன் படைப்புத் தொழிலை எப்படிச் செய்தார்.  லோக பிதாமஹர் – உலகிற்கே பாட்டனார் ஸ்தானத்தில் என்பர்.  எப்படி பிரஜைகள், எந்த விதமாக, உடல், மனம் என்ற வித்தியாசமான உயிரினங்கள் எப்படி தோன்றின.  வரிசையாக சொல்லுங்கள். உங்களுக்கு தெரியாதது இல்லை.

 மைத்ரேய முனிவர்: விரிஞ்சி – ப்ரும்மா அதன் பின் நூறு ஆண்டுகள் தவம் செய்தார்.  பகவான் சொன்னபடியே, தன் ஆத்மாவை பரமாத்மாவில் வைத்து, கடும் தவத்தில் ஈடு பட்டார்.   நாளடைவில் நீரில் விளையும் தாமரை, இதுவரை அசையாதிருந்தது, வாயு லேசாக தொட்டவுடன்,  மெள்ள நடுங்கியது. இவருடைய தவம் தன்னுள் தான் என்று லயித்து இருந்த சமயம் அவரைச் சுற்றி ஏதோ ஒரு சக்தி வீர்யம் மிக்கதாக தோன்றி வாயுவுக்கு வேகத்தை கொடுத்து, நீரிலும் சலனத்தை ஏற்படுத்தி விட்டது.  அதை பார்த்த அந்த நீர் நிலை, பழைய நினைவு வந்தாற்போல் இப்படித்தான் நானும் ஒரு சக்தியால் அசைக்கப் பட்டேன் என்றது.  பத்ம கோசம் பகவானின் தூண்டுதலால், தன்னைத் தானே உலுக்கி இரண்டாக, மூன்றாக, பதினான்காக,  பிரிந்தது.  இப்படித்தான் உலகில் ஜீவன்கள் பல்கி பெருகின. பரமேஷ்டி- பரம புருஷனுடைய உத்தேசம், சங்கேதமாக சொன்னது போல  இந்த நிகழ்ச்சி அமைந்தது.

விதுரர் ஆச்சர்யத்துடன்,  ஹரியினுடைய அத்புதமான செயல். பின்  காலத்தை எப்படி கணக்கிட முடிந்தது? என்றார்.

முக்குணம் என்பதன் பாதிப்பு அதன் ஒன்றுடன் ஒன்றான சம்பந்தம் ஒரு ஒழுங்கில் வரவில்லை. பகவான்  சுலபமாக, தானே அதை ஒதுக்கீடு செய்து காட்டினர்.  விஸ்வம் ப்ரும்மம் – தன்மாத்ரம் என்ற உணர்வுகள் (பார்வை,கேள்வி,மணம்,ருசி,ஸ்பரிசம்)  விஷ்ணுவின் மாயையால் ஏற்படுவது.   வெளிப்படாத ஈஸ்வர சக்தியால் காலம் பிரிக்கப் பட்டது.  இந்த சமயம் (நிகழ்)  முன்னால்,(கடந்த) பின்னால் (வரும்) என்று பிரித்தார்.  படைப்பும் ஒன்பது விதமாக ஆயிற்று. ஒன்று இயற்கை, மற்றது செயற்கை என்பதாக.

காலம், பௌதிக பொருள்,(த்ரவ்யம்- அடிப்படையான கச்சா பொருள்), குணம் என்பன மூன்று மூன்று விதமாக ஆயின. இரண்டாவது அஹம் என்ற பாவம் (தன்னியல்பு) இதில் பௌதிகமான பொருள், ஞானம் (அறிவு), செயல் – இவைகளின் வெளிப்பாட்டினால் உண்டாவது.

மூன்றாவது உயிரினம் தோன்றுவது, தன்மாத்ரம் என்ற உணர்வுகளும், த்ரவ்யம் என்ற பௌதிக பொருளுடன் சேர்ந்து உண்டாவது. (த்ரவ்யம்- மாறாத இயற்கைத் தத்துவங்கள்)  இதன் சக்தி இணைந்து தோன்றும்.

நாலாவது, இந்திரியங்களுடனான கூட்டு. இது ஞானமும், செயலும் சேர்ந்து ஏற்படும். வைகாரிகம் என்பது தேவர்களின் ஸ்ருஷ்டி. ஐந்தாவது மனம் என்ற தத்துவத்தின் ஆளுமையில் அமையும். 

ஆறாவது தமஸ் என்ற குணம். புத்தியின் உதவியின்றி, படைப்பது. – இந்த ஆறும் ப்ராக்ருத (இயற்கை) என்பன.

வைகாரிகோ என்பவை- ரஜஸ் என்ற குணம் பிரதானமானவை.   ஹரியின் எண்ணத்தில் உதிப்பது. ஏழாவது என்பதில் முக்கியமான படைப்பு, ஆறு பகுதிகளாக உள்ளன.  வனஸ்பதி (காடுகளில் தானே வளரும் மரங்கள்) ஓஷதி எனும் செடிகள், கொடிகள், தடிமனான வெளிப்புறம் (த்வக்- மேல் தோல்) நிறைந்த திடமான மரங்கள், – இவைகளின் உள் புறம் ஈரமாக இருக்கும், புத்தி அல்லது மனம் என்ற தத்துவம் மட்டும் இல்லாதவை. தமஸ் என்ற குணம் விசேஷம்.  உள்ளூற ஸ்பரிசம் என்ற உணர்வு உடையவை.

எட்டாவது படைப்பு குறுக்காக உடலமைப்பு உள்ளவை. (கால் நடைகள்- நிமிர்ந்து நிற்காமல் சஞ்சரிப்பவை) இதில் இருபத்தியெட்டு விதங்கள் என்பது ஒரு கணக்கு.  இவைகளுக்கு அறிவு இல்லை, மிக தாமசமானவை. உணர்வு என்ற தத்துவத்தால் மட்டுமே அறியப் படுபவை.  வாசனை மற்றும் ருசியை அறிபவை. தேனீ  போன்றவை.

காளை, மஹிஷம்,(எருமை), மான், பன்றி, பசுக்கள், (antelope) ஒரு வகை மான், இரட்டை நகங்கள் உடைய மிருகங்கள், ஒட்டகங்கள், குதிரை, கழுதை, கோவேறு கழுதை, காளையில் ஒருவகை, எட்டு கால்களுடன் பனி நிறந்த மலைப் பிரதேசங்களில் காணப்படுவது, யாக் என்ற வளர்ப்பு மிருகம், இவைகள் ஒரு நகம் உடையவை. பாலூட்டிகள்.  

ஐந்து நகங்கள் உடையவை:  நாய், குள்ள நரி, ஓனாய், புலி, பூணை, முயல், முள்ளம் பன்றி, சிங்கம், குரங்கு, ஆடு, ஆமை, உடும்பு, முதலை வகைகள்,  கழுகு, கருடன், கொக்கு,கழுகு ஜாதி ஸ்யேன-பாஸ முதலியன,  கரடி, மயில், ஹம்சம்,  பொதுவான பறவைகள், சக்ரவாகம், காகம், ஆந்தை முதலியன- இவைகள் ஆகாயத்தில் பறக்கும் பறவைகள்.

கீழ் நோக்கி நகருபவை ஒன்பதாவது.  ஊர்வன.

பாலூட்டிகளில் ஒருவித ஜனங்கள், ரஜோ குணமே அதிகமானவர்கள், தன் வேலையே கவனமாக, துக்கத்திலும் சுகமாக இருப்பவர்கள்,

வைக்ருதர்கள் என்பதில் மூன்றுவகையினர். தேவ சர்கம் என்பவர்- பிறப்பில் தேவர்கள், இதிலும் எட்டு வகையினர்.  இவர்கள் அறிவுடையோர். 

பித்ருக்கள், அசுரர்கள்,கந்தர்வர்கள், அப்சரஸ் என்ற ஜாதியினர், சித்தர்கள், யக்ஷ, ராக்ஷஸர்கள், சாரணர்கள், பூத ப்ரேத பிசாசங்கள், வித்யாதரர்கள், கின்னரர்கள், என்ற பத்து பிரிவினர், விஸ்வஸ்ருக் என்ற பகவானால் படைக்கப் பட்டவர்கள். 

 அடுத்து, வம்சங்கள், மன்வந்தரங்கள் பற்றி சொல்கிறேன். ஆத்மபூ என்ற ஹரி தன் ரஜோ குணத்தினால் ஒவ்வொரு கல்பத்திலும்-யுகத்திலும் தன்னைப் போலவே, எல்லையில்லாத தன் சங்கல்பத்தால், தன் ஆத்ம ஸ்வரூபமாக –(தன்னையே நகல் எடுத்தது போல) ஸ்ருஷ்டித்திருக்கிறார்.  

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், பத்தாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-29

அத்யாயம்11 

மைத்ரேயர் தொடர்ந்தார்:   நல்ல விஷயங்கள் எல்லையின்றி இருக்கின்றன. முடிவாக அனைத்தையும் இணைப்பது,பரமாணு என்று சொல்லலாம்.   பொருள்களின் அடிப்படை அதுவே. ஒரு பொருளின் உருவம், அதன் செயல்படும் போக்கு இதை எது நிர்ணயிக்கிறது?  ஏதோ ஒன்று இது தான் என்று வரையறுக்க முடியாமல்  மறைந்து அல்லது தொக்கி நிற்கிறது. அதை தான் பரமாணு என்பர்.

இவ்வாறே காலமும், சூக்ஷ்மமோ, ஸ்தூலமோ,  தீர்மானமாக இது தான் என்று அனுமானம் செய்ய இயலாது. பகவானும் அவ்வாறே. வ்யக்தமாக- தெளிவாக கண்ணுக்கு புலப்படாது ஆனால் இருப்பதை அறிய முடியும். காலமும் பரமாணுவே. (அணுவிலும் மிகச் சிறிய அணு)  சத்- மூலப் பொருள் (கச்சா பொருள்-அடிப்படை வஸ்து-எந்த உருவமும் அமைய அதன் மிகச் சிறிய பாகம்  மண் குட த்திற்கு மண் தேவை என்பது போல) காலத்தின் அளவு கோல் பரமாணு என்ற மிகச் சிறிய பாகம்.  

அணு, பரமாணு என்ற இரண்டு. த்ரஸரேணூ – சூரிய ஒளிக் கற்றையில் தூசிகளின் துகல்கள் போல மிகச் சிறிய அளவு.  இதில் மூன்று வகை: வலையில் விழும் சூரிய ஒளி, வானத்திலிருந்து ஆகாயத்தின் ஒரு துளி விழுந்தது போல, – இதிலும் மூன்று வகைகள்: ஒன்று वेध:  लव निमेष  என்பன. त्रुटि -நொடி- இதன் நூறில் ஒன்று வேத:, மூன்று வேதங்கள் லவ, மூன்று லவங்கள் நிமேஷம் – இவைகளின் மூன்று பங்கு ஒரு க்ஷணம். ஐந்து க்ஷணங்கள் – லகு -இவைகளின் கூட்டுப் பகுதி, காஷ்டா (काष्ठा) எனப்படும்.  लघु என்பதன் பதினைந்து பங்கு  ‘ நாடிகா’. அதன் இரு மடங்கு முஹூர்தம்.  ப்ரஹரம், ஷட்யாமம், சப்தயாமம் என்று எண்ணிக்கை தொடரும். பன்னிரண்டின் பாதி -ஆறு என்பது நான்கு விரல்களின் நான்கு பங்கு.  ஒரு லிட்டர் தண்ணீர் உள்ள பாத்திரத்தில், ஒரு உளுந்து அளவு துவாரத்தில் பொன்னாலான குண்டு (mudhdhu) ஒன்றால் தடைக்கல்கொடுத்து, தண்ணீர் முழுவதும் வெளியாக எடுக்கும் நேரம் ஒரு யாமம். நான்கு யாமங்கள், அதன் நான்கு பங்கு அதாவது பதினாறு யாமங்கள் ஒரு நாள்.  ஒரு பக்ஷம்   பதினைந்து நாட்கள்.  இவை சுக்லம் என்றும் க்ருஷ்ண என்றும் இரண்டும் சேர்ந்து மாதம்.  பித்ருக்களுக்கு அது பகலும் இரவும்.  இரண்டு மாதங்கள் ஒரு ருது – பருவ காலம்.  ஆறு அயனங்கள்- தக்ஷிணம், உத்தரம் என்று.  இரண்டும் சேர்ந்து வருஷம் ஆகும்.  நூறு ஆண்டுகள் மனிதனின் ஆயுட்காலம் – பரமாயுள் – என்பர்.

க்ரஹ, உப க்ரஹங்கள், நக்ஷத்ர , என்ற சக்கரம் பரமாணுவிலிருந்து எண்ணப்படும்.   வருஷம், சம்வத்ஸரம், பரிவத்ஸர, இடா வத்ஸர , அனு வத்ஸர, வத்ஸரம் என்று பேச்சு வழக்கு.

க்ருதம், த்ரேதா, த்வாபரம், கலி என்று நான்கு யுகங்கள். தேவர்களின் இருபத்திரண்டு வருஷங்கள் சாவதானம் எனப்படும். நான்கு, மூன்று இரண்டு, ஒன்று என்று க்ருத யுகத்திலிருந்து வரிசையாக எண்ணப்படும். இரண்டு ஆயிரம், இரு பங்கு, நூற்றுக் கணக்கான என்று எண்ணிக்கைகள். சந்த்யா கால இடைவெளிகளில் காலம் கணக்கிடப்பட்டு நூறு நூறு என்ற வகையில் கணக்கிட்டு யுகங்களை நிர்ணயிக்கிறார்கள். க்ருத யுகத்தில் தர்மம் நான்கு கால்களுடன் இருக்கும்.  (அடுத்து வரும் யுகங்களில் குறைந்து கொண்டே வந்து கலி யுகத்தில் ஒரு காலுடன் நிற்கும்) 

 மூன்று உலகிலும் ஆயிரம் யுகங்கள், ப்ரும்மாவின் தோற்றத்திலிருந்து நாளாகவும், விஸ்வக்ருக்- உலகை படைத்தவர் கண் மூடி இருக்கும் காலம் வரை இரவு என்றும் வகைப் படுத்தினர்.  இரவு முடியும் சமயம் லோக கல்பம் ஆரம்பிக்கும்.  மநு என்பவர்கள்  பதினான்கு பகல்களை ஆளுவர். தங்கள் கால நியமங்களை .  அவர்களே நிர்ணயித்துக் கொள்வர். மன்வந்தரங்களிலிருந்து மனிதர்கள். அவர்கள் வம்சத்தினர் ரிஷிகள், தேவர்கள் எனப்படுவர்.  ஒவ்வொரு மன்வந்தரத்திற்கும் தேவேந்திரன் என்ற பதவியை ஒருவர் ஏற்பார், மற்ற தேவர்களும் அதே போல தேர்ந்தெடுக்கப் படுவர்.

ஸ்ருஷ்டியின் தினசரி என்று ப்ரும்மாவில் தொடங்கி மூவுலகிலும்  நடைமுறையில் உள்ளது. கால் நடைகள்., பித்ருக்கள், தேவர்கள்- இவர்களின் தோற்றம், அவர்கள் கர்ம பலன்.

மன்வந்தரங்களில் பகவான், சத்வமான தன் மூர்த்திகளுடன், உலகை காக்கிறார்.  தாமஸமான குணம் மட்டுமாக, தன்னை அடக்கிக் கொண்டு தின முடிவில் மௌனமாக, செயலின்றி இருப்பார். அவரை அனுசரித்து பூ முதலான மூன்று உலகத்தினரும், நிசி என்ற இரவு வந்தவுடன், சூரிய சந்திரர்களும் இன்றி, சங்கர்ஷண என்ற அக்னி தகிக்கும் அதில் இருப்பர். அச்சமயம் ப்ருகு முதலானோரை, மஹர் லோகம் செல்ல வேண்டுவார்கள்.  

உடனடியாக கல்ப முடிவு என கடல்கள் ஒன்றாக பொங்கி எழுந்து, சண்ட மாருதங்கள் தட தடக்க, ப்ரும்மாண்டமான அலைகள் மேலெழ ப்ரளயமாக மூழ்கடிக்கும். அதன் முடிவில் அனந்தனை படுக்கையாக கொண்டு பகவான் யோக நித்ரையில் ஆழ்வார்.  ஜனங்களும் அலை அலையாக வந்து  துதி செய்வர்.  கால கதி இவ்வாறு தினம் இரவு என்று மாறி மாறி வரவும், இன்று வரை நூறு மனித ஆயுள், அதாவது ஒரு மனித ஆயுள் நூறு ஆண்டுகள், அது போல நூறு பரமாயுள் எனப்படும். அதை முதல் பாதி, பின் பாதி என்று பிரித்தனர். தற்சமயம் நாம் இருப்பது இந்த இரண்டாவது – பரார்தம்- பின் பாதி.

முதல் பரார்தத்தில்- முன் பகுதியில், , ப்ராம்மோ என்ற ஒரு மகான் இருந்தார்.  அச்சமயம் தோன்றிய கல்பம் – அதற்கான ப்ரும்மா சப்த ப்ரும்மா எனப்பட்டார்.  அதன் முடிவில் அடுத்த கல்பம் பாத்மம் எனப்பட்டது.  அந்த சமயம் தான் ஹரியின் நாபி கமலத்திலிருந்து உலகம் என்ற தாமரை உதயமாயிற்று.   அதன் பின் வாராஹ என்ற கல்பம் வந்தது.  அச்சமயம் ஹரி ஸூகர என்ற பன்றி வடிவில் தோன்றினார்.   இதன் மறு பாதியில்,  ஆதியும் அந்தமும் இல்லாத, ஜகதாத்மாவான  பகவானுக்கு பணி செய்ய நிமேஷ என்பவரை நியமித்தனர்.   இந்த சமயம் அல்லது காலம், பரமாணு  முதலியவைகள், இதன் இரண்டாவது பாதியில்  பூமியின் பெருகி வளர்ந்த விஸ்தீர்ணம்,  பல வித மாறுதல்களுடன் விசேஷங்களுடன் சூழப்பட்ட அண்ட கோசம்,  வெளிப்புறமாக ஐம்பத்தைந்து  கோடி வளர்ந்து விட்டிருந்தது.  பத்திற்கும் மேலான பரமாணுவாக அவர் ப்ரவேசித்த அண்ட கோசம், பல கோடி அண்ட ராசிகளாக பெருகி விட்டிருந்தன.  இந்த காரணங்களால், அதை அக்ஷரம் ப்ரும்ம என்றனர்.  இது தான் மஹாத்மாவான பரம புருஷனின் விஷ்ணுவின் தாமம்- இருப்பிடம் ஆயிற்று.  

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், பதினொன்றாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-49

அத்யாயம்12

மைத்ரேயர் தொடர்ந்தார்.  பரமாத்மாவின்  வழி காட்டலில் பகவானின்  காலம்  என்பதைப் பற்றி இதுவரை சொன்னேன்.  வேத கர்ப – தன்னுள் வேதம் அனைத்தையும் வைத்திருப்பவன் என்ற பகவானின் குணம் என்பதை நான் அறிந்தவரை விவரிக்கிறேன்.

படைத்தல் தொழிலை முதன் முதலில் ஆரம்பித்த சமயம், அவித்யா வ்ருத்தி:- அறியாமையின் வெளிப்பாடு என்ற தாமஸம் நிறைந்த உயிரினங்களே தோன்றின.  மஹா மோஹம், போகத்தில் நாட்டம், க்ரோதம், கண்மூடித் தனமான க்ரோதம் , அதன் முடிவில் தானே அழிவேன் என்ற பயம் இத்துடன் தன் முதல் படைப்பைப் பார்த்து ப்ரும்மாவே மகிழ்ச்சியடையவில்லை. பகவானையே நினைத்து மற்றொரு புதிய பிறவிகளை உருவாக்கினார்.  சனகன், சனந்தன், சனாதனன் மற்றும் சனத்குமாரன் என்ற நால்வர்  – பிறவியிலேயே துறவிகளாக, உலக வாழ்வில் நாட்டமில்லாதவர்களாக பிறந்தனர்.  அவர்களைப் பார்த்து ஸ்வயம்பூவான ப்ரபு சொன்னார்,  புத்திரர்களே!  பிரஜைகளை உருவாக்குங்கள், என்றார்.  அவர்கள் அதை விரும்பவில்லை.  பிறவியிலேயே வாசுதேவ பராயணர்களாக இருந்தனர். மறுத்தனர். இதை தனக்கு செய்த அவமானமாக கருதிய அவர், அந்த நிமிஷம் தோன்றிய கோபத்தை அடக்கவே முயன்றார். ஆனால் அது அவர் புருவத்தில் ஒன்றாக கூடி அந்த  கோபமே நீல லோஹிதனான குமாரன் தோன்றி விட்டான். அந்த சிசு  பலமாக அழ ஆரம்பித்தது. தேவர்களுக்கு முன்னோடியான பவன் என்ற பகவான் அவர்தான். ஜகத்குரோ, எனக்கு நிறைய பெயர்கள் வேண்டும்.  தங்கும் இடங்கள் வேண்டும்.  அதைச் சொல்லுங்கள் என்றார்.   

அதைக் கேட்டு பாத்மபுவர்- பத்மத்தில் தோன்றிய ப்ரும்மா, சமாதானமாக பதில் சொன்னார்.  நீ வேண்டியதை அவசியம் செய்கிறேன், என்று அன்புடன் சொல்லி, பெயர் வைக்கிறேன், பிறந்த உடனேயே அழுதாயா, அதையே உனக்கு பெயராக வைக்கிறேன்.  தேவர்களில் சிறந்தவனே, என் மகனே, ஆரவாரித்து அழுதாய், (ரோதனம்-அழுகை) அதனால் உலகில் உன்னை ருத்ரன் என்றே அழைப்பர் என்றார். இந்திரியங்கள், வாயு, ஆகாசம் முதலான பஞ்ச பூதங்கள், சூர்ய சந்திர, அக்னி இவர்களும்,  முன்னமேயே என்னால் ஏற்படுத்தப் பட்டனர் என் மனதில் ஏற்பட்ட, மன்யு-மநு, மஹினசோ, (அசு:-ப்ராணன்), மஹேசான அல்லது மஹான்சிவ,ருத த்வஜ:, உக்ர ரேதஸ், ( தாங்க முடியாத வீர்யம்) பவன், காலன், வாம தேவன், த்ருத வ்ரதன் ,- இவை உன் பெயர்கள்.

ருத்ரனே! உனக்கு,  புத்தி, வ்ருத்தி, உஸனோமா, நியுத்சு:, ஸர்ப்பி, இலா, அம்பிகா, இராவதீ, சுதா, தீக்ஷா, ருத்ராணீ என்று  ஸ்த்ரீகள்.  

இந்த பெயர்களையும்  பதவிகளையும், இந்த பெண்களையும் ஏற்றுக் கொள்.  இவர்களுடன் படைப்பு செயலைச் செய்.  நீ ப்ராஜபதி. நிறைய பிரஜைகளை உருவாக்கு.  இவ்வாறு ப்ரும்மாவின் வழிகாட்டலில், பகவான் நீல லோஹிதன் தன் சத்வ குணத்தால் தனக்கு சமமான பிரஜைகளை படைத்தார். ருத்ரர்கள், ருத்ரனால் படைக்கப் பட்டவர்கள் இவர்களால் உலகம் நிரம்பியது. கணக்கில்லாமல்  இப்படி ருத்ர கணங்கள் தோன்றவும் ப்ரஜாபதி யோசித்தார்.  சுரோத்தமா!  (ருத்ரன் முதல் தேவன் என்பதால்) போதும், போதும். இது போன்ற பிரஜைகள் போதும். சற்று நிறுத்து. நீயும் தவம் செய். உனக்கு நன்மையுண்டாகட்டும். உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை உண்டாகட்டும். தவத்தால் தான் முன் ஒருமுறை நீயே உலகை படைத்தாய். தவம் தான் விளக்கு. பரம் ஜோதி. தவத்தால் தான் சகல ஜீவ ராசிகளிலும் அந்தர்யாமியாக இருக்கும் அதோக்ஷஜன் எனும் அவரை மனிதன் அடைகிறான்.

மைத்ரேயர் தொடர்ந்தார்: இவ்வாறு வாகீசன் (ப்ரும்மா) வேண்டிக் கொண்டபின் அவரும் தவம் செய்ய புறப்பட்டார்.  அதன் பின் ப்ரும்மா தன் ஆழ்ந்த தியானத்தால் பத்து பிள்ளைகளைப் பெற்றார்.  உலகில் நல்ல பிரஜைகள் உருவாகவேண்டும் என்பதற்காக. பகவானைப் போலவே சக்தியுடையவர்களாக பிறப்பித்தார். மரீசி, அத்ரி, ஆங்கிரஸ், புலஸ்த்யர், புலஹ:, க்ரது:, ப்ருகு, வசிஷ்டர், தக்ஷன், பத்தாவதாக நாரதர். 

துடையிலிருந்து நாரதர், தக்ஷன் கட்டை விரலில் இருந்து, ஸ்வயம்பூவின் ப்ராணனில் இருந்து வசிஷ்டர், அவருடைய சருமத்திலிருந்து ப்ருகு, கையிலிருந்து க்ரது:, நாபியிலிருந்து புலஹர், காதுகளிலிருந்து புலஸ்தியர், ஆங்கிரஸ் ரிஷி முகத்திலிருந்து, கண்களிலிருந்துஅத்ரி, மரீசி மனசிலிருந்து  என்று பத்து பிள்ளைகள் பிறந்தனர். தர்மம் ஸ்தனங்களிலிருந்து – அந்த இடத்தில் நாராயணர் இருந்தார். அதர்மம் பின் பகுதியில் – அதிலிருந்து உலகம் பயப்படும் ம்ருத்யு வந்தான். ஹ்ருதயத்தில் காமன், புருவத்தில் க்ரோதம், கீழ் உதடுகளில் லோபம், வாயிலிருந்து வாக்கு, கடல்கள் மேட்ரம் என்ற ஜனன உறுப்பிலிருந்து,  நிருரிதி: பாயுவிலிருந்து, நிழலில் இருந்து கர்தமர், இவர் தேவஹூதி என்பவளை மணந்தார்.  மனசிலிருந்தும், தேகத்திலிருந்தும் இவ்வாறு மக்களைப் பெற்றார்.  வாக்கு மகள் தான் ஆனாலும் ஸ்வயம்பூ அவளை விரும்பினார். அவள் விரும்பாவிட்டாலும் அவளை வேண்டினார் என்று கேள்வி.  அதர்மமாக இச்செயலைச் செய்த  தந்தையை, பிள்ளைகள் மரீசி முதலானோர், கண்டித்தனர்.  இது நியாயம் அல்ல. இதுவரை நடந்தது இல்லை, இனியும் நடக்கப் போவதில்லை.  உனக்குப் பிறந்த மகள், அவளை நிர்பந்திக்காதே. ஜகத்குரு என்று பெயர் பெற்ற நீங்கள், உங்கள் மதிப்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம்  இது தகாது என்றனர்.  உலகம் உங்களைப் பார்த்து தாங்களும் செய்யத் துணிவர். அது நல்லதல்ல. 

அதன் பின் அவர்கள் பகவானை துதித்தனர்.  ஆத்மாவில் உறையும் பகவான் தான் தன் சங்கல்ப ரூப ஞானத்தால் அவர் மனதில் அதர்மமாக தோன்றிய காமத்தை அடக்கினார்.  தர்மத்தை காக்க வேண்டும் என்று உணர வைத்தார். தன் சந்ததிகள் முன் அவமானப் பட்ட ப்ரும்மா, ப்ரஜாபதியாக இருந்த தன் உடலை தியாகம் செய்தார்.  அதை திசைகள் ஏற்றுக் கொண்டன.

அதன் பின் பகவானின் அனுக்ரஹத்தால் வேதங்களை தன் நான்கு முகங்களிலிருந்தும் வெளிவரச் செய்தார். நான் பழையபடி உலகங்களை எப்படி படைப்பேன் என்று யோசித்தார். நான்கு வேதங்கள், உபவேதங்கள், கர்ம தந்திரம், இவைகளுடன் தர்மம் தன்  நான்கு கால்களுடன் (ஸத்யம், தபோ, தயா, தானம் என்று தர்மத்தில் கால்களாக சொல்வர்) ஆஸ்ரமங்கள் நான்கும் அவரை அடைந்தன.

விதுரர்  எந்த முகத்திலிருந்து வேதத்தின் எந்த பகுதி  வந்தது? என்று  வினவியதிற்கு பதிலாக மைத்ரேயர் தொடர்ந்தார்.  ருக், யஜுர்,சாம, அதர்வ வேதங்கள் கிழக்கு முகங்களிலிருந்து, யாக சாஸ்திரங்கள்,  ஸ்தோத்திரங்கள், ப்ராயச்சித்தம் போன்றவைகளை வரிசைக் கிரமமாக விவரமாகச் சொன்னார்.  ஆயுர்வேதம், தனுர்வேதம், காந்தர்வம், தன் வேத ஸ்தாபனம், இந்த முகத்திலிருந்து வந்தன.  இதிகாச புராணங்கள், ஈஸ்வரனின் ஐந்தாவது வேதம் , எல்லா முகங்களிலிருந்தும் வந்தன. இவைகள் பலவிதமான தத்துவங்களைச் சொல்லும் .

பதினாறு வித்யைகள் கிழக்கு முகத்திலிருந்து, மேற்கு முகத்திலிருந்து சில, அதிராத்ரௌ என்ற சில , சகோசவம் வாஜபேயம் என்பவைகளைப் பற்றி விவரித்தார்.  வித்யா, தானம், தவம், சத்யம் தர்ம என்ற பதங்கள், ஆசிரமங்கள்,  அதனுடன் உள்ள கார்ய க்ரமங்கள் இவற்றையும் விவரித்தார்.

சாவித்ரம்,(ப்ரும்மசர்யம்)  ப்ராஜாபத்யம் இல்லறம்- சந்ததி தோன்றுதல்- , ப்ராஹ்ம(உபனயனம் ஆன ஒரு வருஷ முடிவு விரதத்தை முடித்தல்) , ப்ருஹத் (வேதம் சொன்னபடி ப்ரும்மசர்யம் நைஷ்டிகி) , வார்த-சொல். அதன் பாகுபாடுகள், வைகானசா,(சமைக்காமல் கிடைத்ததை உண்பவர்) வாலகில்யா: (புதிய உணவு கிடைத்தால், பழையதை தியாகம் செய்பவர்) உதும்பரா:காலையில் எழுந்தவுடன் எந்த திசையை முதலில் காண்கிறார்களோ அந்த திசையில் கிடைத்த பழங்களை மட்டும் உண்பவர்.  .ஃபேனபா: (  பசியை ஜயித்தவர்கள்).  வனம், வன வாசிகள்.

ந்யாசம்,- துறவு.    குடீசகர்கள், (ஆசிரம வாசிகள்) ப்ரும்ஹவாதோ,(ஞான ப்ரதானிகள்)  ஹம்ஸ (ஞானத்தை அடைய  பயிற்சியில் இருப்பவர்கள்) நிஷ்க்ரியர்கள்,(ஆத்ம தத்துவத்தை உணர்ந்தவர்கள்)

 ஆன்வீக்ஷிகீ, (ஆத்ம விசாரம்) த்ரயீ (கர்ம வித்யா), வார்தா (ஸுவர்கம் முதலான பலங்கள்), தண்டநீதி (பொருளாதாரம்) என்பவை பற்றி சொன்னார்.

பூ: புவ:ஸ்வ – என்பவை வ்யாஹ்ருதிகள் எனப்படும்.   ப்ரணவத்துடன் சேர்த்து  சொல்வது முறை.

காயத்ரி, உஷ்ணிக் என்ற சந்தஸ் – காவ்ய அலங்காரம் பற்றி சொல்கிறார்.   அதற்கான கட்டுபாடுகள்.

சப்தங்கள் ஏழு விதமாக வெளிப் படும் என்பதைச் சொல்கிறார். ஒவ்வொரு எழுத்தும் அதன் உச்சரிப்பு சரீரத்தின் எந்த பாகத்திலிருந்து வரும் என்பது பற்றி விவரிக்கிறார். (க முதலான ஐந்து வரிசைகள்) ஸ்பர்சம் , அகாரம் முதலான உயிரெழுத்துக்கள்- ஸ்வர வர்ணங்கள்; ஊஷ்ம என்பவை ஷஶ்ஸஹ- என்ற நான்கு, அந்தஸ்த என்பவை ய ர ல வ)

நிஷாத, ருஷப, காந்தார, ஷட்ஜ, மத்யம, தைவத பஞ்சம – என்ற ஏழு ஸ்வரங்கள் வந்தன. ப்ரும்மா சப்த ப்ரஹ்ம ஸ்வரூபன்.  வைகரி- வாய் வார்த்தையில் தெரியும் படியும், ஓங்கார ரூபத்தில் வெளியில் தெரியாதவராகவும் இருப்பார்.  

மறுபடியும் ஸ்ருஷ்டி என்ற தன் படைப்புத் தொழிலை எப்படி செய்வேன் என்று யோசித்தார். முன் அத்ரி முதலானவர்களை படைத்தது போலவே மேலும் பலவிதமான ஜீவ ராசிகளை படைக்க ஒரு பெண் பால் வேண்டும் என்பதை நினைத்து தன்னையே இருபாலாருமாக ஆக்கிக் கொண்டார்.  அதில் ஆண் மனு என்ற ஸ்வாயம்புவ மனு,(ஸ்வயம்பூவின் மகன்)  முதல் பிரஜாபதி. அதில் பெண்ணாக தோன்றியவள் சதரூபா.

 சதரூபா என்பவள்  மனுவின் மனைவியானார். அவளிடம் மிதுன தர்மத்தால், ஐந்து பிள்ளைகளைப் பெற்றார்.  ப்ரியவ்ரதன், உத்தான பாதன், மூன்று பெண்கள், ஆகூதி, தேவஹூதி, ப்ரசூதி என்றுபெயர்கள். ருசி என்ற முனிவருக்கு ஆகூதியைக் கொடுத்தார். கர்தமருக்கு தேவஹூதியையும், தக்ஷன் என்ற முனிவருக்கு ப்ரசூதிம் என்பவளையும் கொடுத்தார்.  உலகில் ப்ரஜைகள் நிறைய வேண்டும் என்று விரும்பினார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், பன்னிரண்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-29

அத்யாயம்13

விதுரர் கேட்டார்:   ஸ்வயம்பூ வின் பிரிய புத்ரன் ஸ்வாயம்புவன் சம்ராட்- சக்ரவர்த்தி, மனைவியுடன் எங்கு எப்படி இருந்தான்? ஆதி ராஜா அவன் சரித்திரத்தையும் சொல்லுங்கள் முனிவரே – அவரும் ஹரியை ஆராதிப்பவன் தானே.  (விஷ்வக்-விஸ்வமே, சேனா- ஞான லக்ஷணா)  

தன் மனைவியுடன் , ஸ்வாயம்புவ மனு வேதகர்பன் என்றழைக்கப்படும் ப்ரும்மாவிடம் சென்றார். தந்தையே, தாங்கள் தான் உலகத்துக்கெல்லாம் பிறப்பைத் தருபவர்.  அவர்கள் வாழ்க்கையின் போக்கை நிர்ணயிப்பவர், உங்களுக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்வோம்? என , ப்ரும்மா சொன்னார்.

“மகனே! மிக்க மகிழ்ச்சி. உங்கள் இருவருக்கும் நன்மை உண்டாகட்டும். நீ இப்பொழுது பூமியின் நாயகன்.  குற்றம் குறையின்றி நியாயமாக ஆட்சி செய். மனப்பூர்வமாக உன்னை ஆசிர்வதிக்கிறேன். முதல் கடமை உன் சந்ததி வளரட்டும். அது தான் மிகப் பெரிய சக்தி.  அவர்களை உனக்கு சமமான குணவான்களாக தயார் செய். பூமியை தர்மமே பிரதானமாக ஆட்சி செய். யாக காரியங்களால் பரம புருஷனான ஸ்ரீ ஹரியை ஆராதித்து வா. இது தான் எனக்கு நீ செய்யும் மிகப் பெரிய கைங்கர்யம்.  பிரஜைகளை நல்ல முறையில் பரி பாலனம் செய்து வந்தாலே, ஹ்ருஷீகேசன் (விஷ்ணுவின் பெயர்) மகிழ்ச்சியடைவார்.  அவரே ஜனார்தனன் யாகமே அவர் அடையாளம். அவர் ஆத்மா திருப்தியடையவில்லையெனில் அனைத்து சிரமங்களும் வீணே.

கட்டளையிடுங்கள், பகவான் விருப்பப் படியே செய்கிறேன். எங்களுக்கு வசிக்க இடம் வேண்டுமே. பூமி அனைத்து ஜீவராசிகளுக்கும் இருப்பிடமாக இருந்து வந்தது. இப்பொழுது நீரில் மூழ்கி விட்டதே. அதை எப்படி வெளிக் கொணர்வேன்? என்றார் மனு.

ப்ரும்மாவும் பூமியை எப்படி வெளிக் கொணர்வோம் என்று சிந்தித்தார்.  நான் தேவ அசுரர்களை படைக்கும் வேலையில் மும்முரமாக இருந்த சமயம் பெருகிய ஜலத்தில் மூழ்கி பூமி ரஸாதளம் சென்று விட்டாள். நான் என்ன செய்வேன்? பகவான் தான் வழி காட்ட வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே அவரது நாசியில் இருந்து, கட்டை விரல் அளவு சிறிய வராகம் ஒன்று வெளி வந்தது. பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, அந்தரத்தில் இருந்த அந்த வராகம், யானை அளவு வளர்ந்தது.  அத்புதமான காட்சி.மரீசி முதலிய ரிஷிகள், குமாரர்கள், இவர்களுடன் மனுவும், அந்த பன்றி ரூபத்தைப் பார்த்து தங்களுக்குள் என்னவாக இருக்கும் என்று பேசிக் கோண்டனர்.  ப்ரும்மாவும், அஹோ, என்ன இது? என் நாசியிலிருந்து வந்தது, அடுத்த க்ஷணத்தில் பெரிய மலை போல நிற்கிறது, பகவனே தானோ, யக்ஞ ரூபனான ஸ்ரீ ஹரியே, என் வருத்தத்தை உணர்ந்து வந்திருக்கிறார் போலும் என்று வியந்தார். இப்படி தன் பிள்ளைகளுடன் வியந்து அவர் பார்த்துக் கொண்டிருக்கையிலேயெ, பெரிய கர்ஜனை கேட்டது. மலையரசன் போல ஓங்கி வளர்ந்து நின்ற யக்ஞ புருஷன்,  அவரையும், அவர் பிள்ளைகளையும், மற்றும் அங்கு கூடியிருந்த மரீசி முதலான , ரிஷி முனிவர்களையும் ஆறுதல் அடையச் செய்தான். ஜன, தப, சத்ய லோகங்களில் வசித்தவர்கள்,அந்த உறுமலைக் கேட்டு, தங்கள் குறையைத் தீர்க்க வந்து விட்டான் என்று எண்ணி, துதி செய்யலானார்கள். மலைகளின் இடையே தொடர்ந்து கேட்கும் எதிரொலி போல பகவானின் கர்ஜனை அண்ட முழுதும் எதிரொலித்தது.  வேதத்தை முழுமையாக அத்யயனம் செய்து அதன் படியே வாழ்க்கையை நடத்தும் ஞானிகள்,  அவர்களின் எதிர் பார்ப்பை  நியாயப் படுத்துவது போல, யக்ஞ புருஷன் ஜலத்தில் குதித்தான்.  

உயர தூக்கிய வால், வலிமையான உடல், நீண்ட கூர்மையான ரோமங்கள் அடர்ந்த முதுகு பாகம், அதிவெண்மையான பள பளக்கும் பற்கள், பகவான் தன் அழகிய சுய ரூபத்தை மறைத்துக் கொண்டு ஒரு மிருகமாக, ரிஷிகளின் துதிகளை கேட்டபடி, ஒரே தாவலில் ஆகாயத்தை அடைந்து பயனித்தார்.  தன் மூக்கினால் நுகர்ந்து பூமியை தேடுவது போல, இருந்தது. தடாலென்று கடலில்  விழுந்த வேகத்தில் சமுத்திரம் அலறியது. என் மடியில் ஏராளமான ஜீவராசிகள் தவிக்கின்றன. இது என்ன என்று ஆர்பரித்த தன் அலைகளால் கேட்பது போல இருந்தது. யக்ஞேஸ்வரா, பாஹி மாம் என்று அலறுவது போல.

தன் குளம்புகளால் நீரைக் கிழித்து உட் புகுந்த வராகம் பூமியைக் கண்டவுடன், தன் கூரான பற்களால் பூமியை தூக்கிக் கொண்டு நீரை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கையில் பயங்கர கோபத்துடன் சிங்கம் போல கர்ஜித்துக் கொண்டு தாக்க வந்த ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனை தாக்கி கொன்றார்.  தமால புஷ்பம் போன்ற நீல வண்ணன், வெண்மையான பல் நுனியில் பூமியை அனாயாசமக ஒரு யானை விளையாடுவது போல தூக்கிக் கொண்டு வருவதை பார்த்த விரிஞ்சி முதலானோர், வாழ்த்துப் படல்களை பாடியபடி அவரை எதிர்கொள்ள வந்தனர்.

ரிஷிகள் வாழ்த்துகின்றனர். ஜிதம் ஜிதம்- வெற்றி, வெற்றி – யக்ஞ பாவன- யாக ருபியான நீ, மூன்று வேதங்களுமே உன் சரீரம்.  ரோமத்தின் அடர்த்தியில் அவைகளை மறைத்துக் கொண்டு, நிஜ  சரீரம் அல்லாமல், காரண (முக்கியமான காரணத்திற்காக) சூகரன்- பன்றி உருவம் எடுத்த உனக்கு நமஸ்காரம்.  

துஷ்டர்கள் உன்னைக் காண்பது கூட அரிது.  இந்த சரீரமோ அவர்கள் பார்த்து நடுங்கும்படி உள்ளது. யாகமூர்த்தியே! உன் சருமத்தின் ரோமங்கள் சந்தஸ் (வேத மந்திரங்கள்) என்றால், . ஆஜ்யம்(நெய்)  உன் கண்கள், பாதங்கள், நான்கு  முக்கிய புரோஹிதர்கள். (யாகத்தில் நால்வர், நான்கு பக்கங்களிலும் அமர்ந்து செய்வது சாதுர்ஹோத்ரம்).  உன் தலையே யாக குண்டம்.   உன் வயிறு அக்னி, காதுகள் (துவாரத்துடன்) கரண்டிகள்,  ஹவிஸ் மீதி உன் வாய், நாசியில் கிரஹங்கள், நீ மெல்லுவது சாதுர்ஹோத்ரம் என்ற யாகம். 

சூகர (பன்றி) உருவமே யாக ஸ்வரூபம் என்று வர்ணிக்கிறார்.

சர்வ யாக கர்த்தாவான உனக்கு நமஸ்காரம். அனைத்து மந்திரங்களுக்கும் அடிப்படையான செயலே பிரதானமான இந்த உன் அவதாரத்துக்கு நமஸ்காரம்.  வைராக்யம், பக்தி இவைகளால், தன்னையே வென்றவர்கள் பெறும் உத்தமமான ஞானமே நீ தான்.  வித்யா குருவும் நீயே.  உனக்கு நமஸ்காரம்.

பல்லின் ஒரு நுனியால் தண்ணீரிலிருந்து வெளிக் கொணர்ந்த பூமி, பிரகாசமாக தெரிகிறாள். வனத்திலிருந்து வெளிவரும் கஜேந்த்ரன் கையில் பூவை ஏந்தியிருப்பது போல உன் கையில் பூதரா-   பூ மாதா தெரிகிறாள்.  (பூதரா – மலைகளையும், மரங்களையும் தாங்குபவள்)  

 இவ்வாறு பலவிதமாக துதி செய்கின்றனர்.  அதை கேட்டபடியே, பகவான் தன் குளம்புகளால் சமுத்திர நீரை சற்று விலக்கி பூமியை ஸ்தாபனம் செய்கிறார்.

ரிஷிகளும் மற்றவர்களும், உலக மக்களுக்கு என்றும் நன்மையை செய்வாயாக என்று  வேண்டிக் கொள்கின்றனர். வராகமாக வந்து பூதேவியை காத்த இந்த வரலாறு படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் பல நன்மைகளைத் தரும் என்று  பலஸ்ருதி (பலன்) சொல்லப் படுகிறது.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், (பதின்மூன்றாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-50 

அத்யாயம்14

காரண சூகரன்- காரியத்திற்காக பன்றி உருவம் எடுத்தவன்  எனும் பொருள் பட பகவான் பன்றியாக -வராஹமாக வந்த கதையை விதுரர் – மைத்ரேய முனிவர் சொல்லக் கேட்டார். ஆனால் அவருக்கு சில சந்தேகங்கள் இருந்தன. அதை முனிவரிடம் சொன்னார்.

முனிஸ்ரேஷ்ட! யக்ஞ மூர்த்தியான ஹரியால் முதல் தைத்யன் ஹிரண்யாக்ஷன் கொல்லப் பட்டான் என்று கேட்டிருக்கிறோம். பூமியை தூக்கிக் கொண்டு  பகவான் வெளிவருகிறார், அசுரன் எதிர்படுகிறான், அவர்கள் இடையில் என்ன காரணத்தால்  சண்டை நடந்தது?  

மைத்ரேயர் விளக்குகிறார்.  அது தான் ஹரியின் அவதார கதை. நீ விரும்பி கேட்கிறாய், சொல்கிறேன் கேள். மனிதர்களின் மரண பயத்தை ஒழிக்கும். ம்ருத்யுவின் பாசம் என்பதை (கயிறு)  அறுக்கும்.

இந்த ஹரியின் சரித்திரத்தைச் சொல்லி, குழந்தையாக இருந்த  உத்தான பாதரின் மகன் துருவனை,  பாடும் முனி நாரதர் , அனேகமாக மரணத்தின் வாயிலை எட்டி இருந்த நிலையில் ஸ்ரீ ஹரியின் பதமாகிய வைகுண்ட லோகத்துக்கு போகச் செய்தார்.  இன்றளவும் இந்த இதிகாசம் வர்ணிக்கப் படுகிறது. நானும் ப்ரும்மாவே தேவ தேவர்கள் மத்தியில் சொல்லி கேட்டிருக்கிறேன்.

தக்ஷனின் மகளான திதி, மரீசி முனிவரின் மகனான காஸ்யபர் என்ற தன் கணவரிடம் சந்ததி வேண்டும் என்று வேண்டினாள். சந்த்யாகாலம் என்பதையும் பாராமல் நிர்பந்தித்தாள். அவரோ இன்னமும் தன் அக்னி ஹோத்ர காரியத்தை முடிக்காமல் அந்த யாக சாலையிலேயே இருந்தார்.

திதி கணவனிடம் உரிமையுடன் சொன்னாள்: வித்வன், வாழைத் தோட்டத்தை யானைக் கூட்டத் தலைவன் அலைக்கழிப்பது போல, என்னை காமன் அலைக்கழிக்கிறான்.  மற்ற மனைவிகள் மத்தியில் என்னை நீங்கள் உயர்வாக எண்ணுவது தெரியும். புத்ரனுக்காகத் தானே மணம் செய்து கொண்டீர்கள் என்று வெட்கத்துடன், கீழ் நோக்கி பார்த்தபடியே சொன்னாள்.  என் தந்தை எங்களைத் தனித்தனியாக விசாரித்தார். “குழந்தாய்! யாரை விரும்புகிறாய்” என்றார்.  நாங்கள் பதின்மூன்று பேர். யாருக்கு யாரைப் பிடிக்கிறதோ அவருக்கே மணம் செய்து கொடுத்தார்.  எந்த விதமான ஆசையானாலும் தீர்த்துவைப்பது தானே பதியின் கடமை- என்று இவ்வாறு நிறைய பேசும் மனைவியை, சமாதானப் படுத்தினார்.   நான்கு ஆஸ்ரமங்களில் இல் வாழ்வை தேர்ந்தெடுத்த பின், அதன் கஷ்ட நஷ்டங்களை ஏற்கத் தான் வேண்டும். கடலை நீரில் செல்லும் வாகனத்தில் கடப்பது போல.  மானினீ! நீ என்னில் பாதி – இருவருமாகத்தான் இந்த வாழ்க்கை என்ற வண்டியை ஓட்ட வேண்டும்.  உனக்கும் நான் செய்ய வேண்டிய கடமை உள்ளது. அதனால் நீ விரும்பும் மகனைத் தருகிறேன் என்று சம்மதித்தார்.  ஆனால் இது கோரமான வேளை. நாலா புறமும் பயங்கரமான காட்சிகளைக் காண்கிறேன்.  இது போல சந்த்யாவேளையில் பகவான் பூதபாவன: தன்னுடைய பரிவாரத்துடன், பூதங்களாகிய ஏவல் செய்யும் பூதங்களுடன்,  வ்ருஷபாரூடனாக  சஞ்சரிக்கிறான். அவர் வேஷமே தனி. விரித்த கேசமும், ஜடையும், ஸ்மசான பஸ்மம் பூசிய உடலும்,  மூன்று கண்களாலும் உலகை பார்க்கிறார்.  உன் மைத்துனன் தானே – (தக்ஷனுடைய மற்றொரு பெண் தாக்ஷாயணி பார்வதி, அவளை மணந்தவர் என்பதால் – (ஒரே குடும்பத்தின் மாப்பிள்ளைகள் ஒருவருக்கொருவர் சகோதர்கள் என்பது வழக்கு ) அவருக்கு தன் ஜனங்கள், பிறர் என்ற எண்ணமே கிடையாது.  யாரையும் கொண்டாடவும் மாட்டார், யாரையும் அதிகமாக வெறுக்கவும் மாட்டார். அவரை வணங்குவோம்.  இவருடைய சரித்திரம் தூய்மையானது.  சூழ்ந்து இருக்கும் அவித்தையை அகற்ற புத்திமான்கள், கல்வியில் கரை காண விரும்புபவர் இவரை வணங்கி வேண்டுவர்.  இவர்களைப் பொறுத்தவரை அதிசயமானவர். தன்னைப் பொறுத்தமட்டில் இப்படி அலங்கோலமாக திரிகிறார். என்று சிரிப்பவர்கள் அசத்துக்கள்.  அறிவில்லாதவர்கள். தன்னிலேயே தன்னைக் காணும் இவரை விவரம் தெரியாதவர்கள் வஸ்திர, போஜன, ஆபரண, அனுலேபனம், மாமிச பக்ஷிணிகள் என்று தங்களிஷ்டப் படி இருப்பவர்கள் எப்படி அறிவார்கள் ? விஸ்வமே மாயை தானே.  இதற்கு ப்ரும்மாதிகள் காவலாளிகளாக இருக்கிறார்கள்.  இவருடைய ஆக்ஞை படி  புது ஸ்ருஷ்டி தோன்றுகிறது.  பிசாச வேஷம். ஆனால், செயலோ சரித்திரமோ  நினைத்து கூட பார்க்க முடியாதது.

கர்பவதியான திதி பயந்தாள்.  ப்ராணா யாமம், ஜபம், தபம் என்று இருந்த கணவரிடம் வேண்டினாள். அகாலத்தில் ஜனித்த என் குழந்தையை பூத கணங்கள் எதுவும் செய்து விடக் கூடாது என்று. ருத்ரனை நமஸ்கரித்தாள்.

नमो रुद्राय महते देवायोग्राय मीढुषे । शिवाय न्यस्तदण्डाय धृतदण्डाय मन्यवे| |

மகானான ருத்ரனுக்கு நமஸ்காரம்.  துக்கத்தை நீக்குபவர் – दु:खं द्रावयतीति -रुद्र:  

मीढुषे -सकामेषु फल सेचनकर्त्रे  – பொருளை வேண்டுபவர்களுக்கு பலன்களை வாரி வழங்குபவர்

எதையும் வேண்டாதவர்களுக்கு சிவாய – மங்களமானவர், ந்யஸ்த தண்டாய – ஆயுதங்களை எடுக்க மாட்டார் அதே சமயம் துஷ்டர்களிடம் கையில் ஆயுதத்துடன் காட்சி தருவார்.  சம்ஹாரம் அவரது செயல். அவருடைய மன்யு – கோபத்திற்கு நமஸ்காரம்.  என்று துதித்தா ள்.

 உமை சகோதரி யானதால், அவள் கணவரான பகவான் என்று உரிமையுடன் அனுக்ரஹம் செய்ய வேண்டும் என்றாள்.   சதி பதிகள் நலனை காப்பவர் என்பதால் தம்பதிகள் ருத்ரனை வணங்குவது வழக்கம்.

இப்படி தன்னைத் தானே நொந்து கொள்ளும் மணைவியை கஸ்யபர் சமாதானப் படுத்தினார்.  பிறக்கும் குழந்தைகள் உலகில் துன்புறுத்தும் குணங்களோடு பிறப்பார்கள். அதனால் என்ன? நாம் பகவானை வேண்டுவோம்.   அவர்கள் அக்ரமம் அதிகமானால் பகவான், தானே அவதரித்து அவர்களை அழிப்பார்.

திதியின் வருத்தத்துக்கு எல்லையே இல்லை. எனினும் ஒரு சமாதானம் பகவான் கையால் வதம் செய்யப் படுவார்கள் என்பது.  “அப்படியே இருக்கட்டும். மறு பிறவியாவது நன்மையாக  இருக்கும்”  என்று தன்னை தேற்றிக் கொண்டாள்.

கஸ்யபர் அவள் வருத்ததைப் போக்கும் உத்சாக வார்த்தைகளைச் சொன்னார்.  இந்த புத்திரர்களின் வழி வரும் நம் சந்ததிகள் புடம் போட்ட தங்கம் போல ஞானிகளாக, பக்தர்களாக இருப்பார்கள் என்றார்.  பகவான் கைவிட மாட்டார். நம் பேரன் மகா பாகவதனாக இருப்பான்.  உலகிலும் புகழ் பெறுவான்,  உலகை துறந்து  வைகுண்டம் செல்வான்.  பேராசை இல்லாமல், அடம்பரம் எதுவுமின்றி, நல்ல குணவானாக, எப்பொழுதும் மகிழ்ச்சியாக, மற்றவர்கள் துன்பப் படுவதை சகிக்காதவனாக, இருப்பான். அவனுக்கு சத்ருவே இருக்க மாட்டார்கள்,  கோடை காலத்து கடும் தாபத்திலும் சந்திரன் குளிர்ந்து இருப்பது போல இருப்பான்.  உள்ளும் புறமும் சுத்தமானவனாக, தாமரை மலர் போன்ற கண்களுடன், பகவானே அனுக்ரஹித்த அழகிய ரூபத்துடன்,  உன் பேரன்,  ஸ்ரீயின் பதியான வைகுண்ட வாசியை காணும் அருள் பெற்றவனாக இருப்பான். 

இதைக் கேட்டு திதி சமாதானம் அடைந்தாள்.  தன் துஷ்ட பிள்ளைகளும் ஸ்ரீ க்ருஷ்ணரால் வதம் செய்யப்படுவார்கள் என்பதும் அவள் துக்கத்தைக் குறைத்தது. அமோகமான பேரனின் பிறப்பை எதிர் நோக்கலானாள். 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், (பதிநாலாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-50    

 அத்யாயம்-15

 ஸ்ரீ சுகர் சொன்னார்:  

திதி மிகவும் பயந்தாள். தன் மகன் உலகத்தில் துன்பத்தையே விளைவிப்பான் என்பது அவளைக் கவலைக்குள்ளாக்கியது. அதனால் பிள்ளைப் பேற்றை தானே தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தாள். தேவர்களும் கலங்கினர். என்ன ஆகும்? பலசாலியாக பிறக்கப் போகும் குழந்தை சூரிய சந்திரர்களை கூட மறைத்து விடக் கூடும். இருளில் மூழ்குவோம். இந்திராதி தேவர்கள் தங்கள் செயல்களைச் செய்ய முடியாது என்று சந்தேகித்தனர். எனவே  உலகை சிருஷ்டித்த பகவானை துதி செய்ய ஆரம்பித்தனர்.

“விபோ! நாங்கள் கவலைப் படுவது எதனால் என்று அறிவீர்கள்.  காலத்தால் அழியாத ப்ரபாவம் தங்களுடையது.  கஸ்யபருடைய சந்ததி எங்களை அழிக்கும் என்று பயப்படுகிறோம்.

விக்ஞான வீர்யாய –சிறந்த ஞானியான நீங்கள் உங்கள் மாயையால், முக்குணங்களை உண்டாக்கினீர்கள்.  அவ்யக்தரான- வெளிப் படையாகத் தெரியாத மறை பொருளான-  உங்களுக்கு வணக்கம்.

உங்களைப் போலவே மனதில் எண்ணி புவனத்தை உருவாக்கினீர்கள். நல்லதும் கெட்டதுமாக கலந்து தான்   என்பதை அறிவோம். யோகிகளுக்கும், ப்ராணாயாமம் முதலியன செய்து புலன்களை வென்றவர்களுக்கும் உங்கள் அருளைப் பெற்றவர்களுக்கும் என்றுமே தலை குனிவு ஏற்பட்டதில்லை.

உங்கள் சொல்லால், கயிற்றால் கட்டி வைத்த பசுவைப் போல நாங்கள் கட்டுப் படுகிறோம். லோகத்தில் யாக காரியங்களில் செய்யும் பலி- ஹவிஸ்  – என்பதை பெறுகிறோம்.

ஆகவே, எங்களுக்கு நன்மையை செய்ய வேண்டுகிறோம்.  உலகம் தாமஸ குணத்தில் மூழ்கி விட்டால்,  யாக கர்மாக்கள் நின்று விட்டால், என்ன செய்வோம் என்று கவலைப் படுகிறோம்.

திதியின் கர்பத்தில் வளரும் ப்ரஜாபதி காஸ்யபரின் குழந்தை உலர்ந்த கட்டையில் தீ பிடித்தது போல வேகமாக வளர்ந்து வருகிறது.”

மைத்ரேயர் சொன்னார்:  ப்ரும்மா பலமாக  சிரித்தார்.  சப்த கோசரன் அல்லவா?  பிரியமாக, அவர்களுக்கு ஆறுதலாக பதில் சொன்னார். என் மானஸ புத்திரர்கள்,  உங்களுக்கு முன் பிறந்தவர்கள்.  சனகன் முதலானோர்.  அவர்களுக்கு எதிலும் பற்றில்லை. உலகைச் சுற்றி வந்தவர்கள் ஒரு சமயம் வைகுண்டம் சென்றனர்.   அனைவரும் வணங்கும் இடம் அது. அங்கு இருப்பவர்கள் அனைவரும் வைகுண்ட மூர்த்தி மஹா விஷ்ணு  போலவே உடைகள் ஆபரணங்களுடன் இருப்பார்கள்.  ஹரி ஆராதனை, தர்மத்தை அனுசரித்தல் போன்ற தங்கள் செயல்களால், அந்த இடத்தில் இடம் பிடித்தவர்கள். அங்கு தான், ஆதி புருஷனான விஷ்ணுவுடன் பவனும், வாகீசனும் இருப்பர்.  காமதேனு, மற்றும் பருவ காலம் இன்றியும் பழுக்கும் வித விதமான மரங்களும்  சுகமே உருவாக இருந்த இடம். அந்த இடத்தில் சனகாதி நால்வரும் மெதுவாக ரசித்து ஒவ்வொன்றையும் பார்த்து வியந்தபடி சென்றனர்.

தங்கள் துணைவியருடன் விமானத்தில் சஞ்சரிக்கும் போதும் பாடிக் கொண்டே செல்கின்றனர். வைகுண்டவாசியான மஹா விஷ்ணு அவர்களின் தலைவன். அதே போல ஜலத்தின் அடியில் இன்னும் மலராத மது மாதவி புஷ்பங்களிலிருந்து நல்ல வாசனை வீசுகிறது.  புறாக்கள், சாரஸ, சக்ரவாக, தாத்யூஹ, ஹம்ச, கிளி, தித்திரி, பர்ஹிணீ -மயில்  -என்ற பறவைகளின் கூக்குரல் கோலாஹலமாக இருக்கிறது. நடுவில் ஒரு ப்ருங்கராஜன்- ராஜா தேனீ ஹரிகதையை பாட ஆரம்பித்த சமயம் அவையும் தங்கள் கூக்குரலை நிறுத்தி பாட்டைக் கேட்பது போல இருக்கிறது.

·         மந்தாரம், குந்த (மல்லிகை), குரப, உத்பல, ஸ்தபக, அர்ண, புன்னாக, நாக பகுல, அம்புஜ, பாரிஜாதா: என்ற மலர்கள் துளசி மாலையை அணிந்தவனுக்கு அர்ச்சனை செய்யப் படும்பொழுது, தங்களை தாங்களே பெருமித்துடன் உணர்கின்றன.

ஹரியின் பாதங்களை கண்ட மாத்திரத்தில்,  வைதூர்ய, மரகத, பொன் இவை நிரம்பிய விமானங்களில் வருபவர்கள்,  (அவர்கள் இடுப்பும், உடலும் பெரிதாக இருந்தாலும்,) புன்னகையுடன், வருகின்றனர். மனதில் ஸ்ரீ க்ருஷ்ணனே நிறைந்திருக்கும் சமயம், உடலழகை  பெரிதாக நினைக்கவில்லை போலும்.

லக்ஷ்மி தேவியின் இருப்பிடம்  என்பது எங்கும் தூய்மையாய் இருப்பதில் தெரிகிறது.  பணியாளர்கள் கூட மிக விருப்பத்துடன் பணியை செய்கின்றனர். ஏதோ ஒரு விதத்தில் அங்கு இருப்பதே பாக்யம் என்று நினைப்பது போல.  கிணறுகளில் அம்ருதம் போன்ற தெளிவான நீர் நிறைந்திருக்கிறது.  துளசி வனத்தைப் பார்த்து  அங்கு வரும் லக்ஷ்மி தேவி பகவானை நினைக்கிறாள். அர்ச்சனைக்கு பயன் படுத்துகிறாள்.  இந்த வைகுண்டத்தை காணாதவர்களும், கேளாதவர்களும் ஏதோ வேண்டாத கதைகளை கேட்டு பொழுதை வீணடிக்கின்றனர்.

தங்கள் யோக மாயா பலத்தினால்  சனகன் முதலான குமாரர்கள் அந்த வைகுண்டம் வந்து சேர்ந்தனர்.   விஸ்வகுரு வசிக்கும் இடம். புவனங்களில் உள்ள அனைவரும் வணங்கும் பகவான் இருப்பதாலேயே, விசித்ரமாக மனதை கவர்ந்த அந்த இடத்தை கண்டு அவர்கள் பிரமித்தனர்.  மிக்க மகிழ்ச்சியுடன்  ஒவ்வொரு அறையாக பார்த்துக் கொண்டே நிதானமாக நடந்தனர். ஆறு நடைகளைக் கடந்து ஏழாவது நடையை அடைந்த பொழுது, இரு தேவர்கள் நின்றிருப்பதைக் கண்டனர். ஒத்த வயதினர், கையில் கதையுடன், விலையுயர்ந்த கேயுரம், குண்டலங்கள், கிரீடங்களுடன் அழகிய அலங்காரங்களுடன் நின்றிருந்தனர்.  மதம் கொண்ட யானையின் மத்தகத்து முத்துக்களால் ஆன வன மாலை தரித்து, உரமேறிய நான்கு புஜங்கள், கைகளை இடுப்பில் வைத்த படி, முகத்தில் புருவம் நெரிய, சிவந்த கண்கள்,  சற்று எதிர்ப்பை காட்டும் முகபாவத்துடன்  தென்பட்டனர்.

முதல் ஆறு நடைகளிலும் தடையின்றி நுழைந்தவர்கள், இங்கும் அதே போல நினைத்து ஏழாவது நடையின் அறையிலும் அதே போல எந்த தயக்கமும் இன்றி நுழைய முற்பட்டனர்.  யாருமே அவர்களை வெளியாளாக பார்க்கவில்லை. அங்கிருந்த முனிவர்களும் மற்றவர்களும் சிறுவர்கள் என்று எண்ணியோ, தடுக்கவில்லை. அங்கும் பெரிய வஜ்ர கதவுகள் இருந்தன. கத்தியால் தடுத்த காவலர்களைப் பார்த்து சிரித்தனர்.  பகவானின் அறை வாசலில் அவருக்கு ப்ரதிகூலமாக நடந்து கொள்கிறார்கள் என்று எண்ணினர்.  அந்த சிரிப்பு காவலர்களை வெகுள வைத்தது.   குமாரர்களும் தங்களை தடுத்த காவலர்களை சற்றே சினத்துடன் நோக்கினர்.

அவர்களைப் பார்த்து, “யார் நீங்கள்? ஏன் எங்களை தடுக்கிறீர்கள்? பகவானை தரிசிக்க வந்த அடியார்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் என்ன காவலர்கள் நீங்கள் ?இங்கு இருப்பவர்களும் தர்மத்தைக் கடை பிடிக்கும் உயர்ந்த ஞானிகள்.  ப்ரசாந்தமான – மிக அமைதியான பர புருஷனின் வாசலில் நிற்கும் நீங்கள் உங்களைப் போலவே எங்களையும் அறிவிலிகள் என்று நினைத்தீர்களா? “

பகவான் இருக்கும் இடத்தில்  தகுதியுள்ளவன், இல்லாதவன் என்ற பாகுபாடே கிடையாது.  உயிரினங்கள் அனைத்தையும் தன் வயிற்றில் வைத்திருப்பவன், மண் பானையில் இருக்கும் ஆகாசமே தான் வானத்திலும் என்று உணர்ந்த தீரர்கள், இங்கு இருப்பவர்கள்.  பூலோக  அரசர்கள் வேண்டுமானால், தன், தனது என்று பேதம் பார்க்கலாம்.  பயம் தான்  பாகுபாடு செய்வதின் அடிப்படை. இங்கு பயம் ஏது? தேவர்களுக்கு சமமான உங்கள் உடைகளும், ஆயுதங்களும், எதற்கு? அவைகளுக்கு ஒரு பயனும் இல்லை. வைகுண்ட நாதனான பகவானின் சன்னிதானத்தில் நின்று கொண்டே தவறு செய்யும் உங்களுக்கு என்ன அபராதம் விதிக்கலாம்? யோசிக்கிறோம்.  காம க்ரோதங்கள் நிறைந்த இடம் பூலோகமே. அங்கு அரசர்களும் தங்கள் உடமைகளை காக்க உங்களைப் போன்ற காவலாளிகளை நியமிப்பர். அங்கு செல்லுங்கள். தன்னுடைய, பிறருடைய என்று என்று வித்தியாசம் பாராட்டுவர். காம, க்ரோத லோபங்கள் தலைவிரித்தாடும் இடம் அது.  இதற்குள் தங்கள் தவறை உணர்ந்த காவலர்கள்,  பயந்து நடுங்கிஅவர்கள் காலில் விழுந்தனர். தவறு செய்விட்டோமே என்று பரிதவித்தவர்கள், குமாரர்களைப் பார்த்து வேண்டினர். “  உங்களை தடுத்தது எங்கள் தவறு.  அதற்கு நீங்கள் சினம் அடை ந்ததும் இயல்பே. பக்தர்களான நீங்கள் தரும் தண்டனையை ஏற்கிறோம்.  எந்த  மட்டமான நிலையில் இருக்க நேர்ந்தாலும், பகவானின் நினைவு மட்டும் எங்களை விட்டு அகலாமல் இருக்கும் படி அனுக்ரஹிக்க வேண்டும்” என்றனர்.

இதற்குள் பகவானே, லக்ஷ்மி தேவியுடன் அங்கு வந்து விட்டார்.  பரம ஹம்ஸ முனிவர்கள் அந்த குமாரர்கள்.  தேடிப் போய் அழைக்க வேண்டியிருக்க, தானே வந்தவர்களை வரவேற்க வந்து விட்டார்.

அப்படி வந்தவரை தங்கள் சமாதி யோக சாதனைகளின் பலனாக கண்ணாரக் கண்டனர். தன் ஏவலர்கள், மரியாதைக் குறைவாக நடந்து கொண்டார்கள் என்று அறிந்து உடனே தானே வரவேற்க வந்தவர்.  ஹம்ஸம் போன்ற வெண்ணிற சாமரங்கள் அனுகூலமாக வீச,   சந்திரனின் குளுமையை ஒத்த வெண்மையான குடை, முத்து மாலைகளின் மேல் குளிர்ந்த நீர்த் திவலைகளை தெறித்த படி, த்வாரபாலர்களையும் சுமுகமாகவே பார்த்தபடி,  எல்லா நல்ல குணங்களும் இவரிடம் தான் உள்ளன எனும்படியான முக பாவம்,  அன்புடன் பார்க்கும் பார்வையே மனதை தொட்டு வருடுவது போல சுகமாக இருக்க, சத்ய லோக பர்யந்தம் பரவிய உலகங்களில் சூடாமணி போல ப்ரகாசிக்கும் வைகுண்டம் என்ற தன் நிவாச ஸ்தானத்தை தன் இருப்பினாலேயே பிரகாசிக்கச் செய்பவராக விளங்குபவர், பீதாம்பரமும், வனமாலையும், புஜங்களில் வளையமும், கருடனின் மேல் வைத்த கையும், மற்றொன்றில் தாமரை மலரை சுழற்றிக் கொண்டும்  வந்தவரைக் கண்டனர்.

மின்னலை பழிக்கும் ப்ரகாசமான மகர குண்டலங்கள் கன்னங்களில் ஒளியைச் சிதற, மணிமயமான கிரீடம், தோள்களில் விலையுயர்ந்த ஹாரமும், மார்பில் கௌஸ்துப மணியும், தன் பக்தர்கள் விரும்பிய வண்ணம் காட்சி தருவதால், இந்த சௌந்தர்யம் அவருடன் இணை பிரியாது இருக்கும் ஸ்ரீ தேவியின் அருகாமையினால் என்பது ஒரு பக்கமிருக்க, என் சௌந்தர்யம் என்று பக்தர்கள் நினைப்பது அவரவர் மனோ பாவமே என்று சொல்வது போல மென் நகையுடன் கூடிய முகம், கண்டவுடன் பணிய வைக்கும் காம்பீர்யம் உடைய அவரைக் கண்டனர்.  இன்னமும் திருப்தியடையாத கண்களுடனேயே அவரை நமஸ்கரித்தனர். 

பாதங்களில் நமஸ்கரித்தவர்களை துளசி மணம் கவர்ந்தது.   அங்கு வீசிய மென் காற்றில் அவர்கள் நாசியை துளைத்தது. தங்கள் சாதனைகளால் புலன்களை வென்றவர்கள் என்ற பிரசித்தி பெற்றிருந்த முனி குமாரர்களும் அந்த மணத்தால் கிளர்ச்சியடைந்தனர் போலும்.  ஒரு நிமிஷ நேரம் பிரமித்தனர். அருண வர்ண அதரங்களில் வெண்மையான மல்லிகை மலர் போன்ற தூய மென்முறுவல் –          ( கவியின் வர்ணனை)  அதுவே ஆசிகளை அள்ளி வீசியது என நினைத்தபடியே குனிந்து அவரது பாதங்களில் வணங்கினர்.  நகங்கள் மணி போல ஒளிர்ந்தன. முழு அழகையும் நம்மால் ஒரே சமயத்தில் கண்ணால் காண முடியாது என்று நினைத்தோ, மனதால் தியானிக்க ஆரம்பித்தனர்.  யோக மார்கத்தில் சாதகர்கள் தியானத்தில் காணும் பரப்ரும்மத்தை நேரில் காணும் பொழுது, அஷ்டைஸ்வர்யம் நிறைந்தவராக அவரை துதி செய்தனர்.

ஹே அனந்த ! தன்  ஹ்ருதயத்திலேயே உறையும் உன்னை அறியாதவர்கள் நீ இருப்பதாக உணர மாட்டார்கள்.  நாங்கள் உணர்ந்திருந்தும் இன்று நேரில் காட்சி தருகிறாய், அஹோ பாக்யம் – என்ன தவம் செய்தோமோ. உங்களிடம் உண்டான எங்கள் தந்தை உபதேசம் செய்தார்.  காணவே முடியாத, ஆத்ம தத்வம்  என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.  எங்கள் காதுகளின் வழியாக அந்த உருவம் எங்கள் உள்ளத்தில் பிரவேசித்து இருப்பதை உணர்வினால் அறிந்தோம். அந்த பரமாத்ம தத்வத்தை இன்று காண்கிறோம்.  தன்னில் லயித்த முனிவர்கள் கூட ஹரியின் விஷயமாக பேசுவதை விரும்புவர்.  அதிலேயே பரமானந்தம் அடைவதாகச் சொல்வார்கள்.  சாலோக்ய, சாமீப்ய என்ற அருகில் இருபதற்கான பதவிகளையும் கூட மறுதலிக்க கூடியவர்கள்.  அதை விட உன் புகழை பாடுவதே சிறந்த அனுபவம் என்று சொல்வார்கள்.  

(காவலர்களை கடிந்து கொண்டது மனதை உறுத்தியது போல மேலும் வேண்டுகின்றனர்)

வண்டு தேனில் மயங்குவது போல இந்த காவலர்களும் உன் பாத பக்தியை என்றும் அனுபவிக்கட்டும்.  எங்கள் வாக்கும் உன் பாத துளசியைப் போலவே தூய்மையானதாக  இருக்கட்டும்.  அளவில்லாத மகிமையுடைய உங்களை நேரில் காணக் கிடைத்த வாய்ப்பு, அதை காண அனுக்ரஹித்ததாலேயே, எங்கள் கண்கள் புனிதமடைந்து விட்டன.  நாங்கள் என்ன கைம்மாறு செய்வோம். இந்த நமஸ்காரங்கள் தான் – திரும்பத் திரும்ப நமஸ்கரிக்கிறோம் என்றனர்.  

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், (பதினைந்தாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-50    

 அத்யாயம்16

இவ்வாறு முனி குமாரர்கள் துதி செய்து பாடியதைக் கேட்ட  வைகுண்ட வாசியான பகவான் ஸ்ரீ ஹரி, அவர்களை வரவேற்றார். 

இந்த இருவரும் என் பார்ஷதர்கள்.  (எப்பொழுதும் அருகில் இருக்கும் காவலாளிகள்)  ஜயன், விஜயன் என்று பெயர்.  எனக்கு உதவியாக என்னை அனுசரித்து இருப்பவர்கள் தான். இன்று உங்களால் கண்டிக்கப்பட்டார்கள்.  அது சரிதான். தன் தகுதியை மீறினால் அபராதம் விதிப்பது தான் நியதி. பெரியவர்களை அவமதித்ததால் நாங்கள் அதை ஏற்கிறோம்.  என் விருந்தினர்களை அவமதித்தால் எனக்கு செய்தது போலத்தான்.  எஜமானரின் நல்ல பெயரை இது போன்ற ஏவலர்களின் தவறான அணுகுமுறை கெடுத்துவிடுகிறது.  வியாதிகள் சருமத்தை நாசம் செய்வது போல.

கேட்கவே அம்ருதம் போல இருக்கும் நிர்மலமான இந்த வைகுண்டத்தின் புகழை கெடுக்கும் இச்செயலை கண்டிக்கிறேன். தபஸ்விகளின் பாத தூளி அனைத்து வித  பாபங்களையும் போக்கும், நற்கதியைத் தரும் என்று நானே அறிவுறுத்தியிருக்கிறேன்.   ஸ்ரீ தேவி என்னை விட்டு அகலாமல் இருக்கிறாள் என்றால் அதற்கு இதுவும் ஒரு காரணம்.  தன் கர்ம பலனையே எனக்கு சமர்ப்பித்து விட்டு பற்றின்றி இருக்கும் அந்தணர்களை திருப்தி என்று சொல்லும் வரை நான் உபசரிப்பது வழக்கம்.  யாக காரியங்களில் தேவர்களுக்கு தரும் ஆஹுதியை ஏற்கும் சமயம் கூட அந்த நிறைவு வருவதில்லை.  என் பக்தர்கள் என்னை நம்பி பலவிதமான அழகான சொற்களால் பூஜிக்கின்றனர். என்னை அழைக்கும் பல பெயர்களை சொல்லி பாடுகின்றனர். எனவே என் ஏவலர்கள் உங்கள் தண்டனையை ஏற்கச் செய்கிறேன். அத்துடன் எனக்கு அருகில் அனுகூலமாக இருந்து வந்தவர்கள், என்னிடம் மதிப்பும் மரியாதையும் உடையவர்கள் ஆதலால் தண்டனை காலம் முடிந்து திரும்ப என் சேவகத்துக்கு வரட்டும் என்று ஆணையிடுகிறேன்.

ரிஷிகள் ப்ரவாஹமாக வேத மந்த்ரங்களை ஓதுவது போலவும், அழகிய,  அன்புடன் சொல்லப் படுவது போல தோற்றமளிக்கும் அவரது மதுரமான சொற்கள், தங்கள் செயலை அங்கீகரிக்கிறாரா அல்லது நிந்திக்கிறாரா என்று சந்தேகம் தோன்ற  ரிஷி குமாரர்கள் தடுமாறினர்.  ஏற்கனவே தங்கள் சினத்தை வெளிப் படுத்தியதற்காக வருந்திக் கொண்டிருந்தவர்கள். பின்னர், அவர் சொல்லில் ஒளிவு மறைவு இல்லை, உண்மையாகத்தான் சொல்கிறார் என்று நம்பிக்கை வர தாங்களும் மகிழ்ந்தார்கள்.

“தேவ, நீங்கள் என்ன சொல்ல வந்தீர்கள் என்பது எங்களுக்கு புரியவில்லை. சர்வேஸ்வரன் தாங்கள்.  உங்கள் காவலர் எங்களுக்கு நல்வரவு அளிக்காதது, உங்களுக்கே செய்த அவமானம் என்றும், எனக்கு அனுக்ரஹம் என்றும் நீங்கள் சொல்வது பொருந்தவில்லை. எளிய ரிஷி சிறுவர்கள் நாங்கள்.  ப்ரும்மண்யம் என்பதற்கே தெய்வம் ப்ராம்மணர்கள், அவர்களுக்கும், பகவானான தாங்கள் தான் ஆத்ம தெய்வம்.  சனாதன தர்மம் என்பது உங்களிடமிருந்தே ஆரம்பிக்கிறது, உங்களால் ரக்ஷிக்கப் படுகிறது. தர்மத்தின் பலனே தாங்கள் தான், அதனால் மிகவும் போற்றத்தகுந்த, சக்தி வாய்ந்த அதிகாரி,   சுவர்கம் போன்ற சாதாரண பலன்களை தருபவராக மட்டும் உங்களை நினைக்கவில்லை. நிர்விகாரி- நிலையானவர்.  மாற்றங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று சொல்லப் படுபவர். அதனால் இந்த வார்த்தைகள், லோக சிக்ஷா- உலகினருக்கு சொல்லப் பட்ட அறிவுரையாகக் கொள்கிறோம் என்றனர்.

உங்கள் தயவால், மரணத்தையும்  அனாயாசமாக வெற்றிக் கொள்கிறார்கள். அதே சமயம் உங்கள் தயவின்றி என்னதான் போராடினாலும் அந்த பரம ஞானம் கிடைப்பதில்லை. அப்படியிருக்க நீங்கள் ‘அனுக்ரஹிக்கப்பட்டேன்’ என்று சொல்வது என்ன நியாயம். யார் உங்களை ஆசிர்வதிக்க முடியும்?  ஒவ்வொரு வேளையும், பொருளை விரும்பும் பக்தர்கள் வந்து சேவிக்கிறார்கள், உங்கள் பாதத்தில் புது துளசியை அர்ப்பணம் செய்கிறார்கள்.  மார்பில் ஸ்ரீ தேவியை தரித்து இருப்பவர், உங்களிடம் மற்றவர்கள் என்ன குறை காண முடியும்?  (ஏதோ அந்தணர்கள் ஆசிர்வாதத்தால் என்று சொன்னால், அவளை தாயாக, தங்களுக்கு முன்னோடியாக வணங்கும் அனைவரும் வருந்துவர்.  அது அந்தணர்களை பாதிக்கும்.) சராசரங்களை மூன்று குணங்களாலும் மனித, தேவர்கள், நன்மைக்காக ஏற்படுத்தி, சத்வ குணத்தால் வரதனாக இருக்கும் தாங்களே அந்தணர்களையும் ரக்ஷிக்க வேண்டும்.  அவர்களை கைவிட்டால், மற்றவர்களும் அதை பின் பற்றுவார்கள்.

உலகத்தில் அனைவருக்கும்  நன்மையே உண்டாக வேண்டும் என்பது உங்கள் விருப்பம். வேத விற்பன்னர்கள் உங்களைப் போலவே சத்வ குணமே பிரதானமாக கொண்டவர்கள்.  வேத மார்கம் அழிந்து விடக் கூடாது என்று இருப்பவர்கள்.   உண்மையாக சிரத்தையுடன் அவர்களை உயர்வாக நினைப்பதில் தவறில்லை. ஆனால் தன்னையே தாழ்த்திக் கொள்ள வேண்டாம். இந்த பிரச்னையை ஆரம்பித்த எங்களுக்கு  தண்டனை கொடுங்கள், என்றனர்.  அல்லது உங்கள் காவலர்கள் தன் கடமையைத் தான் செய்தார்கள், தவறு செய்யவில்லை என்றால் எதுவும் நடக்காதது போல விட்டு விடுங்கள்.   உங்கள் இஷ்டம்.

பகவான் சொன்னார்: இவர்கள் அசுரர்களாக உடனடியாக ஒரு வேலை செய்ய வேண்டியுள்ளது. அந்தணோத்தமர்களே, என் சங்கல்பம் உங்கள் வாயால் தண்டனையாக வந்துள்ளது. அதை புரிந்து கொள்ளுங்கள். பூமியில் பிறந்து இவர்கள்,சமாதி, யோகம் இவைகளை பயின்று சில காலம் இருந்து விட்டு திரும்ப என்னிடமே வருவார்கள். 

ரிஷி குமாரர்களும் சமாதானமாகி, கண்ணுக்கு இனியதான வைகுண்டத்தில் அதில் ஸ்வயம் பிரகாசமாக விளங்கும் வைகுண்ட வாசியான பகவானுடன் இருந்து மகிழ்ச்சியாக இருந்தனர். பின் அவரை ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து விடை பெற்றனர்.  சந்தோஷமாக அந்த கோலாஹலமான அனுபவத்தை தங்களுக்குள் பேசிக் கொண்டே சென்றனர்.  பகவானும் காவலர்களைப் பார்த்து, பயப்பட வேண்டாம், நல்லதே நடக்கும் என்றார். அவர்களை கௌரவித்து அனுப்பி விட்டு ஸ்ரீ தேவியுடன் தன் வாசஸ்தலம் சென்றார். 

ஹரியின் லோகத்திலிருந்து காவலர் இருவரும் முகம் வாடி வெளியேறினர்.  எங்கும் ஹா ஹா என்ற கோஷம் கேட்டது. அவர்கள் தான் தற்சமயம் திதியின் கர்பத்தை அடைந்துள்ளனர். காஸ்யபரின் மகனாக அசுரராக, உண்மையில் யம படர்கள் போல கொடூரமான குணங்களோடு பிறப்பர்.  பகவானின் சங்கல்பம் இது.

விஸ்வத்தை ஸ்ருஷ்டி, ஸ்திதி , லயம் என்று மூன்று விதமாகவும் பரிபாலிக்கும் யோகேஸ்வரன்,  நம்மால் அனுமானிக்க முடியாத மாயை அவனுடையது.   வேத நாயகன் நிச்சயம் நமக்கு நன்மையே செய்வார்.  நாம் விமரிசித்து பேசி என்ன ஆகப் போகிறது.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், (பதினாறாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-37  

அத்யாயம் 17 

நூறு ஆண்டுகள் கர்பத்தை தாங்கிய திதி இரட்டையர்களை பிரசவித்தாள்.  அவர்கள் பிறந்த சமயம் நிறைய கெட்ட சகுனங்கள் தோன்றின.  தேவலோகத்திலும், பூமியிலும், ஏதோ மிக பயங்கரமாக நடக்கப் போவதை அறிவிப்பது போல.  மலைகளுடன் பூமி நடுங்கியது.  திசைகள் வெப்பத்தைக் கக்கின.  தூமகேது எனும் உபக்ரஹங்கள் விழுந்தன. இவை கெடுதலை விளைவிக்கும் என நம்பப் படுபவை. வாயு  புயலாக  வீசி பெரிய மரங்களை வீழ்த்தியது.  கருமேகம் சூழ்ந்து வானத்தை மறைத்தது. பெரிய அலைகளின் ஆர்ப்பாட்டம்  தாங்காமல்  கடல் கதறியது.  நதிகளில் நீர் வெப்பத்தின் காரணமாக தள தள என கொதிக்க பங்கஜங்கள் வாடி உதிர்ந்தன.  சுற்றிலும் தூசி படலமாக சூரியனின் ஓளி ராஹு கேதுவினால் தடுத்தது போல மங்கலாக காணப்பட்டது.  மலைகளின் குகைகளிலிருந்து அருவிகள் பொங்கி பெருகின.  கிராமங்களில் ஓனாய்களும், குள்ள நரிகளும் ஊளையிட்டன.  சிங்கங்கள் கூட, அழுவது போலவோ, பாடுவது போலவோ, தலையை மேல் நோக்கி தூக்கி விசித்திரமான ஓசையை வெளியிட்டன.  கழுதைகளின் கர கரவென்ற குரல், கூட்டம் கூட்டமாக சேர்ந்து அலறியது நாராசமாக இருந்தது.  இந்த சத்தத்தைக் கேட்டு பறவைகள் கூட்டிலிருந்து விழுந்தன. அடர்ந்த காடுகளில் பசுக்கள் அடிக்கடி சிறுநீர் கழித்தன.   பசுக்கள் பயந்து பால் வெளிறி நீராக கொட்டியது.  பல பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன. புயலைக் கூட எதிர்த்து நிற்கும் மரங்கள் அவை.  நல்ல க்ரஹங்கள் என்று நம்பப் பட்டவை கூட ஒன்றோடொன்று முரண்டு காணப் பட்டன.  

இந்த சகுனங்கள் என்ன சொல்கின்றன என்பது புரியாமல் நிறைய குழந்தைகள் உள்ள பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நலனை எண்ணி கவலைப் பட்டனர். பிரளயமோ என்ற பயம் மேலோங்கியது. இதற்கிடையில் திதி பெற்ற பிள்ளைகள் மலையளவு வளர்ந்து விட்டனர்.  வானளாவி வளர்ந்த தைத்யர்கள் (திதியின் மைந்தர்கள்) பொன் மயமான கிரீடமும், திடமான சரீரமும், கைகளில் அங்கதங்கள் பள பளக்க, எடுத்த அடி ஒவ்வொன்றும் பூமியை அதிரச் செய்ய, இடையில் ஒளி வீசிய காஞ்சீ என்ற ஒட்டியானம், சூரிய ஓளியை மிஞ்ச,  நடந்தனர்.  பிரஜாபதி அவர்களுக்கு நாம கரணம் செய்வித்தார்.  முதலில் பிறந்தவன் ஹிரண்ய கஸ்யபன் என்றும் அடுத்தவன் ஹிரண்யாக்ஷன் என்றும் அழைக்கப் பட்டனர்.

ஹிரண்ய கசிபு சீக்கிரமே லோக பாலர்களை தன் வசப் படுத்திக் கொண்டான்.  மரண பயம் இல்லாமல் இருக்க ப்ரும்மாவிடம் வரம் பெற்றான். அவன் இளையவன் ஹிரண்யாக்ஷன், சகோதரனுக்கு  மிகப் பிரியமானவனாக ஆனான். கையில் கதையை எடுத்துக் கொண்டு  உலகைச் சுற்றி வந்தான் எங்கே சண்டை போடலாம் என்பதே குறியாக. அவனைக் கண்ட தேவர்கள் நடுங்கினர்.  அவனுடைய  நடையின் வேகம் மற்றவர்களால் எண்ணியே பார்க்க முடியாமல், அதன் காரணமாக அவன் இடையாபரணங்களும் கால் நூபுரங்களும் அலறுவது போல பெரும் ஓசையை வெளியிட, வைஜயந்தி மாலை ஆட ,  பெரிய கதையை சுழற்றியபடி, மனோ பலம் என்பதை வரமாக பெற்றவன்,  பயமே இன்றி, சற்றும் தயவின்றி அடிக்க கூடியவன் என்பதால் எதிரில் யாரும் நிற்காமல் ஓடி ஒளிந்தனர்.

யாரை போருக்கு அழைக்கலாம் என்றே கதையுடன் கிளம்பியவன் யாருமே எதிர்க்காதலால் கோபம் கொண்டான்.  அவர்களை பலமாக கூவி அழைத்தான். இந்திரன் முதலான தேவர்களை அழைத்தும் வராததால், சமுத்திர ஜலத்தில் மதம் கொண்ட யானை போல நடந்தான்.  அவன் கால் வைத்தவுடன், வருணனின் சேனைகள், கடல் வாழ் பிராணிகள், வந்து சேரும் பெரு நதிகள்,  அவன் அடிக்காமலே, பயந்து ஓடினர்.

பல நாட்கள், வருஷங்கள், இவ்வாறு சென்றன. சமுத்திர ஜலம் அவன்  இடுப்பளவே வந்தது.  அந்த ஜலத்தில் நடை போட்டபடி,கதையை சுழட்டிக் கொண்டு ப்ரசேதஸ் என்ற நீரின் தலவனின் ஊர் வந்து சேர்ந்தான்.   லோக பாலகனான அந்த தேவனை,   கடல் வாழ் உயிரினங்களின் தலைவனை பிடித்து, சிரித்துக் கொண்டே இழுத்து வந்து என்னுடன்  போர் செய்ய வா என்றான்.  அந்த ப்ரசேதஸ் என்ற லோகபாலகன் நல்ல வீரன். தானும் பலமுறை போரில் வெற்றி வாகை சூடியவன். தைத்ய தானவர்களுக்குள் மதிப்பாக இருந்தவன். ராஜ சூய யாகம் செய்து தன் புகழை நிலை நாட்டியவன்.

தற்சமயம் வெறும் உடல் பலத்தால் மதம் கொண்டு போருக்கு அழைத்தவனை பொறுமையாக புத்தி பூர்வமாக பதில் சொன்னான். உடல் பலத்தில் நாம் சமமானவர்கள் இல்லையே. புராண புருஷனான மகா விஷ்ணுவைத் தவிர வேறு யாரும் உனக்கு ஈடாக போர் புரிய தகுதியுள்ளவர்கள் இல்லை.  அவரிடம் போரிடு. போர் விதிகள் தெரிந்தவர்,  உனக்கு சமமாக போரிட சந்தோஷமாக வருவார்.  சம பலம் உள்ளவர்களிடம் தான் உன் திறமையை காட்ட வேண்டும் என்றான்.

அப்படி ஒரு வீரன் இருக்கிறானா என்று ஆச்சர்யத்துடன், நாளைக்கே அவனை வீர சயனத்தில் தள்ளுகிறேன் – ஏன் தெரியுமா, உன்னைப் போன்ற அசத்துக்களை இது போல உயர்ந்த பதவிகளில் வைத்திருக்கிறானே, தனக்கு சமயத்தில் உதவுவான் என்று நினைத்தானோ,  என்று எகத்தாளமாக சொன்னபடி அகன்றான்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், (பதினேழாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்- 39    

அத்யாயம்18 

ஜலேசன், நீரின் நாயகன், ப்ரசேதஸ், பேசியதை கேட்ட ஹிரண்யாக்ஷன் அவனை விட்டு விட்டு, ஹரியை தேட ஆரம்பித்தான். நாரதர் வாயிலாக அவர் ரஸாதளத்தில் இருப்பதாக அறிந்து அங்கு வேகமாகச் சென்றான். அங்கு பூமியை தன் பல்லின் நுனியில் தாங்கியபடி வந்தவரை பார்த்து  பலமாக சிரித்துக் கொண்டு,  அஹோ, காட்டு மிருகம் என்றான்.  அவரை பார்த்து, அறிவிலியே, வா வா, பூமியை கீழே வை. சமமான என்னுடன் போரிடு. இங்கிருந்து நலமாக திரும்ப மாட்டாய். தேவர்களுக்காக இப்படி ஒரு  பன்றி ரூபம் எடுத்தாயா? எங்களுடைய சபத்னி குமார்கள், (தேவர்கள்) – சுய பலம் இல்லாதவர்கள். மாயையால் அசுரர்களை வெல்வார்கள்.  யோக மாயா என்ற அல்ப பௌருஷம் உள்ளவன் நீ அவர்களுக்கு சகாயம்.   உன்னை நம்பி பெரிய பொறுப்பை ஒப்படைக்கிறார்கள். இப்பொழுது பார். என் கதையால் தலை அறுந்து விழப் போகிறாய். அதன் பின் யாகத்தில் பாகம் பெறும் தேவர்களோ, ரிஷிகளோ, யாருமே இருக்கப் போவதில்லை. 

தன் கையில் இருந்த பூமி பயந்து நடுங்குவதைக் கண்டு,  தண்ணீரின் மத்தியிலிருந்து வெளி வந்தார்.  முதலை வாயில் அகப்பட்ட குட்டி யாணை போல  வந்தார்.  அவரை பின் தொடர்ந்து சென்ற ஹிரண்யாக்ஷன் ( ஹிரண்ய கேசன் என்றும் பெயர்) யானையை மீன் குஞ்சு தொடருவது போல இருந்தான்.  கொடூரமான பற்கள், கடுமையான குரல், இவைகளுடன் லஜ்ஜையின்றி, பகவானைப் பார்த்து ஏன் பயந்து ஒளிந்து கொள்கிறாய் என்றான்.

தன் கையிலிருந்து பூமியை நீரின் மேல் வைத்து விழாமல் இருக்க தன் சக்தியை அளித்து நிலை நிறுத்தி விட்டு,   எதிர் நின்ற அசுரன் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, ப்ரும்மா வியந்து பூமாரி பொழிய, பெரிய கதையை கையில் ஏந்தி, நெருப்பின் மறு உருவம் போல,  பொன்னாலான சித்ரங்களுடன் இருந்த ஆயுதத்துடன், பல்லைக் கடித்தபடி அளவற்ற கோபத்துடன் தரமில்லாத வார்த்தைகளைப் பேசும்,  அசுரனைப் பார்த்து சிரித்துக் கொண்டே பதில் சொன்னார், பகவான்.

நாங்கள் வனத்தில் திரியும் மிருக இனமே. உங்களைப் போன்ற கிராமத்து சிங்கங்களை வேட்டையாடுவோம்.  வீரர்களான எங்களுக்கு ம்ருத்யு – மரணம் ஒரு பொருட்டல்ல. உன் வீண் பேச்சைக் கேட்டு பயப்பட.  அல்பனே! நாங்கள்,  இந்த சமுத்திரத்து உயிரினங்களை காக்கும் பொறுப்பை ஏற்றவர்கள். உன்னைப் போல் கையில் கதையை வைத்துக் கொண்டு விரட்டுபவர்கள் அல்ல.   எந்த விதத்திலும் உன்னை பாதிக்காத எளிய உயிரினங்கள்- அவர்களை உன் கதையைக் காட்டி ஓட வைக்கிறாய். இது என்ன வீரம்?  நாங்கள் எதிர்த்து நிற்கிறோம், மஹா பலசாலியான ஒருவனை எதிர்த்து விட்டு எங்கே ஓடி ஒளிய முடியும்.  நீயோ பாதசாரிகளின் (கால்களே ரதமாக நடந்து செல்லும் படை- காலாட்படை) படைத் தலைவன். இனி தோல்வியை சந்திக்க தயாராகிக் கொள்.   உன் பதவியை இழந்து நிற்பாய்.

பகவான் அவனை மட்டம் தட்டி பேசியது பொறுக்காமல் கோபத்தை தூண்டி விட்டது போல கொதித்து எழுந்தான் ஹிரண்யாக்ஷன்.  தன் கதையால் பகவானை அடிக்க ஆரம்பித்தான்.  பெரு மூச்சு விட்டபடி, அடிபட்ட நாகம் போல வேகமாக எதிர்த்து ஓடி வந்தான்.  இருவரும் மதயானைகள் போல ஒருவரையொருவர் தாக்கினர்.  தைத்ய ராஜனும், யக்ஞ புருஷனும் சண்டையிடுவதைப் பார்க்க ப்ரும்மா அங்கு வந்தார்.  ஆதி சூகரம்- பன்றி ரூபத்தில் இருந்தவரைப் பார்த்து, “பகவானே, இவன் மாயாவி. அறிவிலி.  துஷ்டன். எங்கள் யாகங்களை கெடுக்கிறான்.  உலகத்தை சுற்றி சுற்றி வருகிறான். யாரை அடிக்கலாம் என்பதே குறியாக.சிறுவன் பாம்பின் வாலை தூக்கி விளையாடுவது போல இது என்ன காரியம். சந்த்யா காலமானால் இவன் பலம் அதிகரிக்கும். அதற்கு முன் வதம் செய்து விடுங்கள்,  இவன் உங்களை எதிர்த்த நிமிஷத்திலேயே உயிரிழந்தவன் போலத் தான்.  அபிஜித் என்ற இந்த முஹூர்தத்தில் யுத்தத்தை முடித்து உலகில் உயிரினங்களை பயமின்றி வாழச் செய்யுங்கள்.” என்றார்.

 (இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த    காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், பதினெட்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-28

அத்யாயம்19 

ப்ரும்மா அன்புடன் தன் கவலையைச் சொல்லவும், பகவான் கடைக்கண்ணால் ஜாடை மூலம் அதை அங்கீகரித்தார்.  அதன் பின் எதிரில் பயமின்றி நின்றவன் ஒருவகையில் உறவினன், ஆனாலும் தற்சமயம் எதிரி, அசுரன் ஹிரண்யாக்ஷன் வராக உருவத்தின்  தாடையில் ஓங்கி அடித்தான்.  அந்த அடி தாங்காமல் பகவானின் கையில் இருந்த கதை கீழே விழுந்தது.  யுத்த தர்மத்தை நினைத்து அசுரனான ஹிரண்யாக்ஷன் இதை நல்வாய்ப்பு என்று நினைக்காமல், கையில் ஆயுதம் இல்லாமல் இருக்கும் எதிரியை அடிக்கக் கூடாது என்ற நியதியின் படி,  பகவானை எதிர்க்காமல், கதையை திரும்ப எடுத்துக் கொள்ளும்வரை காத்திருந்தான். பகவானின் கதை கீழே விழுந்தவுடன் உலகம் திகைத்தது. பகவானோ எதிரியானாலும், தர்மத்தை கை பிடித்தவனை  பாராட்டினார்.

வானத்தில் நலம் விரும்பும் தேவ ரிஷிகளின் ஆசிகளும், இந்த அசுரனை சம்ஹாரம் செய் என்ற வேண்டுகோளும் நிறைந்தன.   தன்னுடைய சக்ரத்தை நினைத்து பகவான் தியானம் செய்யவும் அது அவர்  கைக்கு வந்தது. அவருடைய ஆயுதமான  சக்கரத்தை கண்டதும் கண்கள் நெருப்பாக ஜொலிக்க, பற்களை கடித்தபடி, அதிக கோபத்துடன் அசுரன் அடித்தான். தன் சக்தி தெரியாமல் போருக்கு வந்து விட்டான் என்று நினைத்தோ பகவான் உடனே பதிலடி கொடுத்தார். அவன் கதையும் விழுந்தது.  எடுத்துக் கொள், என்னை ஜயிக்கத்தானே வந்தாய்  என்று சொல்லி சிரித்தார்.  இதை அவமானம் என நினைத்து அந்த வீரன், கதையை விட்டு சூலத்தை எடுத்துக் கொண்டான்.  அந்த அடியை வாங்கிக் கொண்டவர்,  இனியும் காலம் தாழ்த்தக் கூடாது என்று தன் சக்கரத்தால் அதை தாக்கி நொறுங்கச் செய்தார். தன் முஷ்டியை இறுக்கிக் கொண்டு பலமாக அலறிக் கொண்டும் முன்னேறி வந்த அசுரனை பகவான் அசையாமல் நின்று எதிர் கொண்டார். யானையை பூ மாலையால் தாக்கியது போல – அசுரன் தன் மாயா பலத்தால் அந்தர்தானமானான். என்ன நடக்கிறது என்று தெரியாமல் உலகை தூசி படலம் சூழ்ந்தது. ப்ரளயமோ என்று உலகத்தினர் திகைத்தனர்.   பயங்கர புயல் ஒரு புறம், கற்கள் விழுவது போல மழை, அத்துடன் மின்னலும், இடியும் சேர்ந்தால் எப்படி இருக்கும்?  இதனிடையிலும் முஷ்டியால் தொடர்ந்து அடித்த அசுரனின் காதுகளின் அடியில் தன் சக்கரத்தால் அடித்தார். அத்துடன் அவன் மாயையால் ஸ்ருஷ்டித்தவைகளும் அகன்றன. தைத்யன் விழுந்தான்.

திதியின் உள்ளுணர்வு தன்மகனின் முடிவை எண்ணி வருந்தியது. கூடவே பகவான் கையால் மரிப்பான் என்ற வார்த்தைகளும் நினைவுக்கு வந்தன. வராக உருவத்தில் வந்த பகவான் தன் முன்னங்கால்களால் அவனை கிழித்து வதம் செய்தார்.   ப்ரும்மா முதலான தேவர்கள் பகவானின் பாதம் பட்டு இந்த அசுரன் நல்கதியடைந்தான்.  தங்கள்  அறியாமையால் வருவித்துக் கொண்ட  தண்டனையாக  இந்த துர்கதியை அடைந்த அசுரன், மும்முறை தன்னுடன் போரிட்ட  பின்னரே  தன்னையடைவான் என்பது பகவானின் சங்கல்பம். என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

नमो नमस्तेऽखिलयज्ञतन्तवे-स्थितौ गृहीतामलसत्त्वमूर्तये ।                      दिष्ट्या हतोऽयंजगतामरुन्तुदः-त्वत्पादभक्त्या वयमीश निर्वृत

நல்ல வேளை. இந்த அசுரன் மடிந்தான். யக்ஞ புருஷனான உனக்கு நமஸ்காரம்.  உன் பாத பக்தியால் அவனும் நல்ல கதியடைந்தான். பகவானே, நாங்களும் காப்பாற்றப் பட்டோம்

ஆதி சூகரன் ஹரி, இவ்வாறு ஹிரண்யாக்ஷணை வதம் செய்து உலகை காத்தார் என்று மைத்ரேயர் சொல்லவும் கேட்டுக் கொண்டிருந்த விதுரர் மகிழ்ச்சியடைந்தார். மேலும் ஹரியின் அவதார கதைகளைக் கேட்க தயாரானார்.  கஜேந்திரன், முதலை வாயில் அகப்பட்ட கதையை சொல்லுங்கள் என்றார்.

இந்த காரண சூகரன் என்ற வராஹ அவதார கதையை கேட்பவர்களும் பாடுபவர்களும் ஸ்ரீ ஹரியின் ஆசிகளைப் பெறுவர் என்று சொல்லி இந்த பகுதியை முடிக்கிறார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், பத்தொன்பதாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-38

 அத்யாயம்20 

சௌனகர் கேட்டார்:  ஸ்வாயம்புவ மனு மற்ற ஸ்ருஷ்டிகளை எப்படி செய்தார்?  விதுரர் மகா பாகவதர்.    ஸ்ரீ க்ருஷ்ணருக்கு பக்தனாக, நெருக்கமாக இருந்தவர். ஆதலால் மூத்த சகோதரனையும் அவன் சந்ததிகளையும் த்யாகம் செய்து விட்டு விலகி விட்டார்.   மைத்ரேயரிடம் வந்து ஹரி கதையை சொல்ல கேட்கவும், அவருடன் ஸ்ரீ க்ருஷ்ணனின் அவதார கதைகளை கேட்க நமக்கும் வாய்ப்பு கிடைத்தது.  மேலே சொல்லுங்கள்.

மைத்ரேயர் சொன்னார்.  ப்ரும்மா ப்ரஜாபதிகளை உருவாக்கினார்.   மரீசி முதலானோர்களும், ஸ்வயம்புவ மனுவும் ப்ரும்மாவின் வழிகாட்டலில் பூமியில் உயிரினங்களை படைத்தனர். அதை சற்று விவரமாக சொல்லுங்கள். மனைவிமார்களுடன் இருந்தார்கள். ( ப்ரும்மா தான் ஒருவராக முன் யக்ஷாதிகளை ஸ்ருஷ்டி செய்ததை நினைவு படுத்துவது போல, மானச புத்திரர்கள், சரீரத்திலிருந்து தோன்றியவர்கள் என்பது போல)

உயிரினங்களின் நல்ல காலம், பகவான் சிருஷ்டியை தொடங்க நினைத்து, எப்படி செய்வது என்று சிந்திக்கையில், அவருடைய எண்ணங்களில் தோன்றிய சலனம் சத்வ ரஜஸ்,தமஸ் என்ற முக்குணங்களாகின.

முதலில் சத்வ குணம், மஹத் என்ற என்றும் மாறாத இயற்கை சக்தி. ரஜோ குணம் அதனுடன் சேர்ந்து பஞ்ச பூதங்களை ஆகாயம் முதலான ஐந்து தோன்றின. ஒவ்வொன்றும் தனித் தனியாக பௌதிகத்தில் எதையும் செய்ய முடியாது. தேவ யோகத்தால் ஹிரண்மயமான அண்டத்தை ஸ்ருஷ்டித்தன.  உயிரற்ற , அல்லது சலனமற்ற அதை சமுத்திர ஜலத்தில் கிடக்கச் செய்தனர்.  ஆத்மா இல்லாமல். அதில் ஆயிரம் வருஷங்கள் ஈஸ்வரன் வசித்தார்.  அதன் பின் அவரது நாபியில் தோன்றிய பத்மம் ஆயிரம் சூரியனின் ஒளியைக் கொண்டிருந்தது.  அனைத்து ஜீவன்களின் இருப்பிடமான பகவான் தானே அதில் இருந்தார். பகவான் உள்ளே நித்திரையில் இருந்த சமயம் லோகத்தை பழைய படி ஸ்தாபிக்க வேண்டி தன் நிழலில் இருந்து ஐந்து பர்வங்களை உருவாக்கினார். தாமஸ குணங்கள் தாமிஸ்ரம், அந்த தாமிஸ்ரம், தமம், மோகம், மஹா தம: அதனுள் தானே வாசம் செய்தார். அவருக்கு தாமஸ குணம் பிடிக்கவில்லை. அதில் இருந்தபடி படைத்தவர்கள் தான் யக்ஷ ரக்ஷசர்கள், ராத்ரி, பசி தாகம் முதலியவை.  இரவை விரும்பும் தேவர்கள் என்பர்.

தன்னுடைய எந்த உருவத்தில் இந்த நிழல் தோன்றியதோ அதை களைந்தார்.  அதை விட்டு வெளி வந்தார். யக்ஷ ,ரக்ஷஸ என்ற அந்த பிறவிகள், தாமஸ குணம் மேலோங்கி, பசி தாகம், அதிகமாகவும், ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர். 

ப்ரும்மாவின் மனதில் சத்வ குணம் மேலோங்கி இருந்த சமயம் தேவர்கள் பிறந்தனர். சத்வமயமான உடலுடன் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து தினம்- பகல் வந்தது.

அவர்  மனதில் காமம் தோன்றிய சமயம் அசுரர்கள் பிறந்தனர். அது சந்த்யா காலம். அதை அசுரர்கள் பறித்துக் கொண்டனர்.  ஸ்த்ரீ ரூபம் அந்த சமயத்தில் தோன்றவும் அசுரர்கள் ப்ரும்மாவை  துரத்தலானார்கள். அவர்களின் அட்டகாசம் தாங்காமல், ப்ரும்மா பகவானை சரணடைந்தார்.  அந்த பெண் உருவம் அழகிய கண்களும், இடையும் வெண் பட்டு உடையும், ஸ்தனங்களும், ஒவ்வொரு அவயவமும் நளினமாக காண அழகாகவும் ஆயிற்று.  அவளைக் கண்ட அசுரர்கள் அனைவரும் அவளை விரும்பினர்.  அஹோ ரூபம், அஹோ தைர்யம், இளம் வயது என்று காமத்துடன் அனுகியவர்களை அவள் கண்டு கொள்ளவேயில்லை. சந்த்யா என்ற அந்த பெண் உருவை, சூழ்ந்து கொண்டு யார் நீ எங்கிருந்து வந்தாய் என்று வினவினர். மேலும் பலவிதமாக அவளை விசாரித்தனர்.   அங்கம் அங்கமாக வர்ணித்தனர். ஒரு நிலையில் அறிவிலிகள் பெண் தானே என்று அவளை பலாத்காரமாக இழுத்தனர். பலமாக சிரித்து, பகவான் அந்த உருவைத் தியாகம் செய்தார். சந்த்யா காலத்தில்  கந்தர்வ அப்சர கணங்களை ஸ்ருஷ்டி செய்தார்.  அந்த அழகிய பெண் –  சந்த்யா என்பவளை விஸ்வாவசு என்பவர் தலைமையிலான கந்தர்வர்கள் கைப்பற்றினர். 

பூத பிசாசங்களை படைத்தார்.  திசைகளே ஆடைகளாக. தலையை விரித்து போட்டபடி, வந்த அவர்களைக் கண்டு தானே கண்களை மூடிக் கொண்டார்.  ப்ரபுவின் ஜ்ரும்பனா என்ற பெண்ணை அவர்கள் பறித்துக் கொண்டனர். (ஜ்ரும்பனம்- கொட்டாவி விடுதல்)  தூக்கம், தாறுமாறான இந்திரியங்களின் போக்கு இந்த பூதங்களின் அடையாளம்.  அதன் பின் பலவந்தமாக தன்னை மறைத்துகொண்டு ஸ்ருஷ்டியை செய்தார். அதனால் தான் பித்ரு காரியங்கள் என்பவை துவங்கின.  ஹவ்யம், கவ்யம் என்பன தங்கள் குல முன்னோர்களை முன்னிட்டு செய்ய ஆரம்பித்தனர். முன்னோர்கள் கண்ணுக்கு தெரியாவிட்டாலும் அவர்கள் அவைகளை ஏற்றுக் கொள்வர்  என்பது நம்பிக்கை.

சித்தர்களையும், வித்யாதரர்களையும் தன்னைப் போலவே  எதிரில் காணவும் முடியும் திடுமென மறையவும்  முடியும் என்ற திரோதான சக்தியால் படைத்தார். .  கின்னரர்கள் கிம்புருஷர்கள் என்பவர்களை தன்னுடைய ப்ரதி பிம்பமாகவே படைத்தார்.  அவர்கள் இருவர் இருவராக பாடுவதும் ( ப்ரதி பிம்பத்தை பார்த்து தானே ரசித்ததால் அதே குணத்தோடு பிறந்தனர் ) உடலை அனுபவிப்பது, மிகவும் எதிர்பார்ப்புகளொடு உறங்கியும் சந்ததி இல்லை என்பதால், கோபத்துடன் அந்த தேகத்தை விட்டனர்.  அச்சமயம் அவர்கள் உடல்களிலிருந்து விழுந்த ரோமங்கள் க்ரூரமான பாம்புகளாக ஆயின.  நாகா: என்ற பெயர் (ஸர்பத: வேகமாக செல்வதால்) வந்தது.

அதன் பின் திருப்தியடைந்தவராக, தன் மனதால் தன்னைப் போலவே மானச புத்திரர்களாக மனு என்பவர்களை ஸ்ருஷ்டி செய்தார். அவர்களுக்கு புருஷாகாரமான தனது உடலையே (புரம்-தேகம்) என்பதையே கொடுத்தார்.  அவர்களும் மகிழ்ந்து நீங்கள் செய்தது மிகச் சிறந்த காரியம் என்று புகழ்ந்தனர்.

அக்னி ஹோத்ரம் முதலான செயல்களைச் செய்து நாங்களும் அன்னம் முதலியவைகளை உண்போம் என்று மகிழ்ந்தனர்.

அதன் பின் தன் தவத்தாலும், வித்யையாலும், யோகம், சமாதி இவைகளைக் கொண்டு ஹ்ருஷீகேசன் ரிஷிகளை தங்களுக்கு பிடித்தமானவர்களான பிரஜைகளாக ஸ்ருஷ்டித்தார்.  அவர்கள் ஒவ்வொருவருக்கும் தன் தேகத்தின் ஒரு அம்சத்தை கொடுத்தார். அவையாவன, சமாதி, யோகம், ருத்தி- அமானுஷமான சக்தி மற்றும், நிறைவு,  ஐஸ்வர்யம், தபஸ், வித்யா, விரக்தி என்பன.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், இருபதாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-52

அத்யாயம்21 

விதுரர் ஸ்வாயம்புவ மனுவின் வம்சம் வளர்ந்த கதையைச் சொல்லுங்கள் என்றார்.  ப்ரியவ்ரதன், உத்தான பாதன்  என்று இரண்டு பிள்ளைகள் பிறந்தனர்.   சப்த த்வீபங்கள் உடைய தன் பூமியை நன்றாக ஆண்டு வந்தார்.  அவர்  மகள் தேவஹூதி.  கர்தமர்  என்ற ரிஷிக்கு மணம் செய்து கொடுத்தார். அவர்களுக்கு நிறைய குழந்தைகள் என்று தெரியும். . அந்த கதையைச் சொல்லுங்கள் என்றார்.

மைத்ரேயர் ஆரம்பித்தார். இது நடந்தது  க்ருத யுகத்தில்.  ப்ரும்மா கர்தமரிடம் ப்ரஜைகளை உருவாக்குங்கள் என்று சொல்லி இருந்தார்.  அந்த சமயம், அவர் சரஸ்வதி நதிக் கரையில் தவம் செய்து கொண்டிருந்தார். பல காலம் சென்றபின்  அவருக்கு ஸ்ரீ ஹரியின்  தரிசனம் கிடைத்து.  பகவானின் சப்த ப்ரும்மம் – சப்த ரூபமான அந்த ரூபத்தை கண்டு பரவசமானார். சூரியன் போன்ற பிரகாசமான அவரை உள்ளன்புடன்  துதி செய்தார்.    – வெண்மையான சரீரத்தில் கருங்குழல் ,  வெண், நீல உத்பல புஷ்பங்களாலான மாலையுடன், கிரீடமும், குண்டலமும், மார்பில் கௌஸ்துப மணியும்,  சங்க சக்ர கதா தாரியாக,  கருட வாகனத்தில் ஆகாயத்தில் நின்றவரின் கண்களின் குளுமையான பார்வை மனதை தொட வீழ்ந்து சேவித்தார். “பகவானே!  கண்கள் செய்த பாக்கியம் உங்கள் தரிசனம் கிடைத்தது. யோகத்திலேயே வாழ் நாளை கழித்த யோகிகளுக்கும்  கிடைக்காத  தரிசனம்.  உன் பாத தரிசனம் சம்சார கடலைக் கடக்க உதவும் படகு போன்றது.  நான் எனக்கு சமமான சீலம் உடைய ஒரு பெண்ணை மணந்து பிரஜைகளை பெருக்க வேண்டும் என்பது ப்ரஜாபதியின் ஆதேசம்-கட்டளை.  எனவே,  உலக ரீதியில் வாழ்ந்து உன் நினைவாகவே தேக தர்மத்தை நிறைவேற்றுவேன்.  சிலந்தி தன் கூட்டைக் கட்ட உடலின் உள்ளே இருந்தே சக்தியைப் பெறுவது போல நானும் என் வம்சத்தை விருத்தி செய்வேன். எனக்கு இடப்பட்ட பொறுப்பு அது. உன் அனுக்ரஹமாகவே இதை ஏற்றுக் கொள்கிறேன். உன்னிடம் நான் வேண்டுவது ஒன்றே. அனுபவித்து அதன் படி உலக நியதிகளை ஏற்படுத்தியவன் நீ. அதனால் உனக்குத் தெரியும்.  ரிஷியாக வாழ்ந்த எனக்கு ஒரு சிறிது காமத்தைக் கொடு. வணங்கத் தகுந்த உன் பாத சரோஜத்தில் இந்த அல்ப விஷயத்தைக் கேட்கிறேன். இப்படி மிகவும் சங்கோசத்துடன் பகவானிடம் வேண்டிய ரிஷியைப் பார்த்து பகவான் அம்ருதம் போன்ற தன் வாக்கால், கண்களால் அன்புடனும், மென் சிரிப்புடனும் சொன்னார்.

“உன் வாழ்க்கை முறையைத் தெரிந்து தான் உன்னிடம் இந்த செயலை ஒப்படைக்கிறேன். எனக்கு சமமாக ப்ரஜாபதியின் மகன் சப்த த்வீபம் என்ற ப்ரும்மாவர்தம் -பூ உலகை  ராஜ்ய பரிபாலனம் செய்து வருகிறான்.  அவன் தன் மனைவி சதரூபா என்பவளுடன் நாளை மறு நாள் இங்கு வருவான். அவனுடைய மகள் நல்ல அழகி. நல்ல சீலமும் குணங்களும் உள்ளவள்.  அவளுக்கு தகுந்த மணாளனைத் தேடிக் கொண்டிருக்கிறான்.  உன்னை அவளுக்கு ஏற்றவனாக நினைக்கிறான். இது வரை மனதை அடக்கி பல காலமாக  தவம் செய்த உனக்கு அந்த ராஜகுமாரி, நல்ல மனைவியாக இருப்பாள். ஒன்பது குழந்தைகளை உனக்குப் பெற்றுத் தருவாள்.  வேத விற்பன்னரான நீ அவளிடம் ஒத்து வாழ்ந்து வருவாயாக. பிறக்கும் குழந்தைகளிடம் தயையுடன் நடந்து கொள். அவர்களுக்கு பாதுகாப்பாக இரு.  என்னிடம் வைத்த உன் மனதுடன் உலகை ரக்ஷிப்பாய்,  உன் உள்ளத்தில் என்னையும் ஸ்மரித்து இருப்பாய். என் அம்சமாக உன் க்ஷேத்ரமான தேவஹூதியிடம், உன் வீர்யத்துடன் மகனாக பிறக்கிறேன்.  சில தத்வங்களை உலகுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு சொல்லி, பகவான் சரஸ்வதி நதியின் பிந்து சரஸ் என்ற இடத்திலிருந்து கிளம்பி விட்டார்.

மனு ஒரு வாகனத்தில் -ரதத்தில் தன் மனைவி, மகளுடன் யாத்திரையாக பூமியை சுற்றிக் கொண்டு வந்து ஒரு நல்ல நாளில், பகவான் சொன்னபடி, சாந்தமாக இருந்த அந்த ஆசிரமத்தையடைந்தார். அந்த இடத்தில் பகவானின் கண்ணீர் விழுந்ததால்  பிந்து சரஸ் என்ற பெயர் வந்ததாக சொல்வர்.  சிவாம்ருத ஜலம் எனப்படும் சரஸ்வதி நதி தீரம். மகரிஷிகள் நிறைய வசித்த இடம். புண்யமான மரங்கள், செடி கொடிகளோடு  பசுமையாக இருந்த இடம்.  மான்களும் மற்ற மிருகங்களும் வளைய வந்தன. எல்லா பருவ காலங்களிலும் புஷ்பங்களோடு வன ராஜ்யம் என லக்ஷ்மீகரமாக விளங்கியது. மதம் கொண்ட யானைகள் கூட்டம், அதே போல மதம் கொண்ட வண்டுகள் ரீங்காரம் செய்தன.  ஆனந்தமாக மயில்கள் ஆட, கோகிலங்கள் அதற்கு இசைய பாடுவது போல இருந்தது. கதம்ப புஷ்பங்களும், சம்பக, அசோக, காரஞ்ச்ச, ஜாபா, பகுல, மல்லிகை மந்தார, குடஜம் . மாம்பூ, இவைகள் அலங்காரமாக இருந்தன. குளங்களில், காரண்டவ, ஹம்ஸ பக்ஷிகள், ப்லவ, குரரம், ஜலத்தில் வசிக்கும் கோழிகள், சாரஸ, சக்ரவாக, இவையனைத்தும் கூச்சலாக கூவின. அதே போல சில மிருகங்கள்- மான்கள், க்ரோட, நாய்கள், பசுக்கள், கவயம் எனும் வகை பசுக்கள், பசு வாலுடன்  சில மான்கள், குள்ள நரிகள், கஸ்தூரி மான் இவைகள் நிறைய தென்பட்டன. 

அந்த தீர்த்த ஸ்தானத்தில் நுழைந்த ஆதி ராஜன், தவ வலிமையால் நெருப்பு போல ஜொலித்த முனிவரைக் கண்டார். பல நாட்களாக தவம் செய்து கொண்டிருப்பதை அவரது உடல் நிலையே காட்டியது. அவர் மனம் மகிழ்ந்தது மெலிந்த உடல், தயை ததும்பும் கடைக்கண் பார்வை,   அம்ருதம் போன்ற வாக்குகள் காதில் தேனைப் பாய்ச்சின,   அவருடைய மலினமான மரவுரி உடையும், பார்த்த மாத்திரத்தில் வணங்கச் செய்யும் சரித்திரமும் அரசனை கவர்ந்தன.  ரிஷி கர்தமர் தன் குடிசைக்கு வந்த அரசனை தகுதியான உபசாரங்கள் செய்து வரவேற்றார். அர்க்யம் முதலின கொடுத்தபின் பகவான் சொன்னது நினைவுக்கு வந்தது. தானாகவே அரசனிடம் தெரிவித்தார். “ அரசனே, பிரஜைகளை பாதுகாக்க நீ செய்யும் நல்ல செயல்களை அறிவேன். சத்தான- நல்ல குடிகளை பாதுகாப்பது போலவே,அசத்தான பிரஜைகளை கண்டிப்பதும் அவசியமே. சூரிய சந்திரர்கள்,அக்னி, வாயு இவர்களை சம தர்மத்துடன் அவர்களுக்கு ரூபங்களையும் ஸ்தானங்களையும் கொடுத்த உனக்கு நமஸ்காரம்.   மணிகணங்கள் அலங்கரிக்கும் உன் தோள்களில்  கோதண்டத்தை தாங்கி,ரதத்தில் மற்ற அசத்துக்களை பயமுறுத்துகிறாய். உன் சைன்யங்கள் உலகை சுற்றி வருகின்றன. சூரியனின் கதியைப் போலவே உள்ளன.  பகவானே ஏற்படுத்திய வர்ணாஸ்ரம தர்மங்கள், ஒருவகையில் பாதுகாப்பான கட்டுப்பாடுகள்.  திருடர்கள்  அதை கலைக்கவே முயலுவார்கள்.  அப்படி செய்ய இடம் கொடுத்தால் அதர்மம் மேலோங்கும்.  காத்துக் கொண்டிருக்கும் மற்ற அரசர்கள் நீ சற்று அசந்தாலும் உன் ராஜ்யத்தை அபகரித்து விடுவர், உலகமே அந்த திருடர்களால் அழியும். அது கிடக்கட்டும், அரசனே! நீ இங்கு வந்த காரணம் என்ன?  தெளிவாக நாம் அதைப் பற்றி மனம் விட்டு  பேசுவோம்.”

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின்,  இருபத்து ஒன்றாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-54

அத்யாயம்22 

முனிவரை பார்த்து அரசன் திகைத்தான். தன்னுடைய அனுஷ்டானத்தில் ஈடுபாட்டுடன் தவம் செய்து வருபவரிடம், லௌகிகமான தன் எண்ணத்தை எப்படி தெரிவிப்பது என்ற யோசனை வந்தது. பின் சமாளித்துக் கொண்டு பின் வருமாறு சொன்னார். “ப்ரும்மா தன் முகத்திலிருந்து தங்களை உருவாக்கினார். வேதத்தை காப்பாற்ற,  சந்தோ -வேதமே உருவாக,  தவம், வித்யா, யோகம் இவை அனைத்தும் ஒரு சேர, தனக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்.  நெருப்பு போன்ற தூய்மையான ரிஷி தாங்கள். அதே போல எங்களையும்  உருவாக்கினார். சஹஸ்ர பாத் என்ற பெயருடைய அவர் (ஆயிரம் கைகளும், கால்களும் உடையவர்) அவருடைய இருபது புஜங்களிலிருந்தும்  க்ஷத்திரியர்களாகிய நாங்கள் தோன்றினோம். எனவே தான் ரக்ஷிப்பது அதாவது காப்பாற்றுவது என்ற செயலில் நாங்கள் இருவரும் அன்யோன்யமாக இருக்கிறோம்.  ப்ரும்ம ஞானிகளையும் அவரே தான் உருவாக்கினார்.  உங்களைப் பார்த்தவுடனேயே என் சந்தேகங்கள் விலகி விட்டன. நீங்கள் அந்த பகவானுக்கு சற்றும் குறைந்தவரில்லை.  என் பாக்கியம் உங்களை கண்டு கொண்டேன்.  சாதாரண ஜனங்களுக்கு காணக் கிடைக்காத உங்கள் பாத தரிசனம்,  மங்களகரமான அதில் என் தலை வைத்து வணங்குகிறேன்.  உங்கள் மதுரமான வார்த்தைகள் என் கவலையை தீர்த்து விட்டன.

எனக்கு மிகவும் பிரியமான மகள் விஷயமாக உங்களைக் காண வந்தேன்.   என் மகளை நல்ல முறையில் குணசாலியாக வளர்த்து இருக்கிறோம்.   நாரதர் உங்களைப் பற்றி சொன்னார்,  இவளை உங்களுக்கு கொடுக்கலாம் என்றும் அவர் சொன்னதால் வந்தோம்.  அதனால் மகாமுனிவரே, உங்களுக்கு எல்லாவிதத்திலும் அனுரூபமான மனைவியாக இருப்பாள். இவளை ஏற்றுக் கொள்ளுங்கள்.  இல்லறத்தில் நாட்டமில்லாதவர் என்பதும் தெரியும். பகவானே அனுக்ரஹித்து உங்களை இல்லறத்தில் ஈடுபடவும் உலகியலை அனுசரித்து  நல்ல பிரஜைகளை உருவாக்கச் சொன்னதாகவும் அறிவேன்.   எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் இந்த விவாகத்தை நடத்த விரும்புகிறேன்”

முனிவர் பதில் சொன்னார். எனக்கு சம்மதமே. உங்கள் மகளை மணந்து கொள்கிறேன்.  எனக்கு அனுரூபமான பெண் உங்கள் அழகிய மகள்,  நீங்கள் விவாக ஏற்பாடுகளைச் செய்யுங்கள், என்றார்.  எனக்கு பல பெண்கள் பிறப்பார்கள் என்றும், உங்கள் மகளை மறுக்காதே என்றும் பகவானே சொல்லியிருக்கிறார்.  விவாகம் விமரிசையாக நடந்தது.  மஹாராணியான சதரூபா, ஏராளமான ஆடை ஆபரணங்களையும், பணியாட்களையும்  மகளுக்கு உதவியாக இருக்க பணியாட்களையும் தந்தாள்.  மகளும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து அரசர் மன நிம்மதியுடன் அவளை அனைத்து ஆசீர்வதித்தார்.  எல்லா தந்தைகளையும் போலவே அவரும் மகளை அனுப்ப கலங்கினார்.  பின் தன் பரிவாரங்களோடு விடைபெற்று சென்றார். 

கர்தமரும் பர்ஹிஷ்மதீ என்ற இடத்தில் குசம், காஸம் என்ற பசுமையான புல் நிறைந்த சூழ்நிலையில் தன் மனைவியுடன் வசிக்கலானர்.  நாளடைவில் குழந்தைகளுடனும் மனைவியுடனும் வசிக்கும் பொழுதும் பாடுபவர்களும் வந்து ஹரி கதைகளைச் சொல்ல நாட்கள் சுகமாக கழிந்தன.  இல்வாழ்க்கை அவரது யோக சாதனைகளையோ, சுய கட்டுபாடுகளையோ பாதிக்கவிடாமல் பகவானின் தியானத்துடனேயே வாழ்ந்தார்.

பகவத் கதைகளை கேட்பதிலும், த்யானம் செய்வதிலும், விஷ்ணு பூஜைகள் செய்வதிலும் பல நாட்கள்

சென்றன.  சரீரமோ, மனசோ, பௌதிகமான தடைகளோ அந்த தவ சீலரை பாதிக்கவில்லை.  கூடியிருந்த சிஷ்யர்களுக்கும், மற்ற முனிவர்களுக்கும் பலவிதமாக பலவிதமான தர்மங்களையும், அரச நீதியையும், வர்ணாஸ்ரம கட்டுப்பாடுகளையும்  விவரித்து உபதேசங்கள் செய்து வந்தார்.  இது தான் ஆதி ராஜனான மனுவின் கதை.  கர்தமரின் குழந்தைகளைப் பற்றி சொல்கிறேன் கேள். 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின்,  இருபத்து இரண்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-39

அத்யாயம்23 

பெற்றோர்கள் திரும்பிச் சென்ற பின்  இருவரும் பவனும் பவானியையும் போல ஒருவருக்கொருவர் அனுசரித்து வாழ்ந்தனர். பிரியமாக பேசியும், சுய கட்டுப்பாடு -நடத்தை, கௌரவம் கொடுத்தும் பெற்றும், அடக்கத்துடனும், உதவிகள் செய்து கொண்டும், நட்பாக இருந்தனர். காமம், ஆடம்பரம், துவேஷம், லோபம், குற்றம், மதம் – சோம்பல், இவைகள் பாதிக்காத குறைவில்லாத உழைப்பு  இவற்றுடன் தேஜஸே உருவான பகவானை சந்தோஷிக்கச் செய்தனர்.   கர்தமரோ  தேவ ரிஷிகளிலும் முதல்வராக போற்றப் படுபவர் என்பதால் ஏற்படும்  மரியாதையுடனும் சேவைகள் செய்து ஆசிகளைப் பெற்றாள்.  பல காலம் சென்றது. ஓயாத விரதங்கள், வேலைகள் இவற்றால் மெலிந்து விட்ட மனைவியைப் பார்த்து கர்தமர் பிரியத்துடன், குற்ற உணர்வால் வருந்தினார்.   தயையுடன் குரல் தழ தழக்க அவளிடம் சொன்னார். “ உன் சேவைகளாலும் பக்தியாலும் மகிழ்ந்தேன்.  மானிடப் பெண்ணே!  உன் அனுசரனையால்  நான் கௌரவிக்கப் பட்டேன். தன் உடல் நலத்தை தான் பெரிதும் விரும்புவர். அப்படியிருக்க நீ  என் காரணமாக உன்னையே கூட அதிகம் போஷித்துக் கொள்ளவில்லை. ஒரு விதத்தில் நான் என்னுடைய தவம், தர்மம், தவம், சமாதி, வித்யா, ஆத்ம யோகம் என்று அதிலேயே மூழ்கி இருந்து விட்டேன்.  நீயோ எனக்கு சேவை செய்வதே போதும் என்று இருந்து விட்டாய்.

பகவானின் புருவம் நெரிந்ததால் உண்டான  சில தத்வங்கள், உலகியல் சுகத்துக்காகவும் ஏற்பட்டவை,  அந்த சுகமான அனுபவங்களையும் நீயும் குறைவறப் பெறுவாய். சாதாரண மனிதர்களுக்கு நினைத்தே பார்க்க முடியாத,, அரசர்களின் விக்ரமங்களாலும்  கூட பெற முடியாத பல அனுபவங்களையும் அனுபவிப்பாய்.  . அகில யோக மாயா வித்யா விற்பன்னர் என்று பெயர் பெற்ற கணவனா இப்படி பேகிறார் என்று நம்ப முடியாமல் தேவஹூதி ஏறிட்டுப் பார்த்தாள்.

நான் பாக்கியம் செய்தவள். உங்களை கணவனாக அடைந்த நான் வேண்டுவது ஒன்றே. ப்ரும்ம ரிஷி, அமோகமான யோக சாதனைகள் செய்தவர் என்ற பெருமைகள் உடையவர். ஒரு சிறிது உடல் உறவும் இருந்தால் மிகப் பெருமையாக உணர்வேன். பெண்கள் மிக உயர்வாக எண்ணும் தாய்மை வேண்டும்.

பிரியமான மனைவியின் நியாயமான கோரிக்கையை ஏற்று, கர்தமர் தன் யோக பலத்தால் விருப்பப்படி எங்கும் செல்ல உதவும் ஒரு விமானத்தை தயாரித்தார். திவ்யமான, பல விதமான மணிகளால் அலங்கரிக்கப் பட்ட எல்லா பருவ காலங்களிலும் மிதமான தட்ப வெட்பங்களுடன்  கூடிய அழகிய விமானம் அது.  அதையும் விசித்ரமான பட்டு தோரணங்களும்,  மாலைகளும், என அதில் நிறைத்தார்.  பல தளங்கள் உள்ள அந்த விமானத்தில், படுக்கைகளும், சிறு ஆசனங்கள் மென்மையான உறையுடன் தயாராக இருந்தன. பல கலையழகு நிரம்பிய சில்பங்கள் ஆங்காங்கு வைக்கப் பட்டிருந்தன. மகா மரகதம் என்பதால் ஆன தரை.  முத்தும், பவளமும், இந்த்ர நீல மணிகள் பொன் மயமான சிகரத்தில் பதிக்கப் பட்டிருந்தன.  இவைகளைப் பார்த்தும் அவள் அதிகமாக மகிழ்ந்ததாக தெரியவில்லை.  இந்த குளத்தில்குளித்து விட்டு வா, இந்த விமானத்தில் ஏறிக் கொள் என்று அழைத்த பின், அவள் சரஸ்வதி நதியில் குளிக்க இறங்கினாள். அவளை திடுமென பத்து பணிப் பெண்கள் சூழ்ந்து நாங்கள் உனக்கு பணிப் பெண்கள். என்ன செய்ய வேண்டும் என்று ஆணையிடுங்கள் என்றனர். அந்த பெண்கள் தேவஹூதியை ஸ்னானம் செய்வித்து, நன்கு அலங்கரித்து, புதிய ஆடைகள், புது ஆபரணங்கள் அணிவித்து,  அம்ருதம் போன்ற அன்னமும், உயர்ந்த  பானமும் அளித்து, கொண்டு வந்து  சேர்த்தனர்.  ஆகாயத்தில் தாரா கணங்களுடன் இருக்கும் சந்திரன் போல வித்யாதர ஸ்த்ரீகள் பணிவிடை செய்ய பதியுடன் அமர்ந்தாள். 

அந்த விமானத்தில் அஷ்ட லோக நாயகன் விளையாடும் குலாசலம் என்ற மலைப் பகுதிகள், தென்றல் வீசும் சுகமான இடங்களில் சித்தர்கள் வணங்க, பல பனித் துளியால் நிறைந்த ரமணீயமான இடங்களையும் ரசித்தபடி, தனதன் போல மகிழ்ந்தாள்.  தேவர்களின் நந்தன வனத்திலும், புஷ்ப பத்ரம் எனும் இடத்திலும் தடையின்றி உலாவி மகிழ்ந்தனர். பளபளத்த அந்த விமானத்தில் விரும்பியபடி பல இடங்களுக்கு அதை செலுத்தி காற்று உலகில் பரவுவது போல உலகை சுற்றி வந்தனர். பகவானை அனவரதமும் எண்ணி வணங்கும் மனிதர்களுக்கு எது தான் அடைய முடியாத தூரம், அல்லது கஷ்டம்.  பூமி உருண்டையாக இருப்பதை மனைவிக்கு காட்டினார். அவளுடைய ஆச்சர்யத்திற்கு அளவேயில்லை. பலவிதமான இடங்களையும் கண்டு மகிழ்ந்து விட்டு தங்கள் ஆசிரமம் வந்து சேர்ந்தனர். 

தன்னையே ஒன்பது விதமாக பிரித்துக் கொண்டு அவள் ஆசைப்பட்டபடியே இல்லற இன்பங்களை அனுபவித்தார். வருஷங்கள் நிமிஷமாக கடந்தன.  தேவஹூதியும் ஒன்பது பெண்களைப் பெற்றாள்.  அனைவரும் நல்ல அழகிய உடல் வாகும் சிவந்த உத்பலம் போன்று மென்மையாகவும் வளர்ந்தனர். மீண்டும் தன் தவத்தை தொடர கிளம்பிய பதியைப் பார்த்து தேவஹூதி, என் விருப்பத்தை நிறைவேற்றி பெண்களை பெற்றோம். இவர்களுக்கு தகுதியான வரன் பார்த்து மணமுடிப்பதும் நமது கடமையே என்று நினைவுறுத்தினாள்.  இவ்வளவு நாள் பொறுத்தீர்கள். உங்கள் சாதனை தடைபட்டது. எனக்கு உங்களுடைய உயர்ந்த சாதனைகளும் பரமார்த்தம் என்பதும் தெரியாமலே போய் விட்டது. இப்பொழுது உணருகிறேன். ஜீவனின் வாழ்க்கை தீர்தபதன் எனும் பகவானின் பாத சேவையின்றி உயிருடன் இருந்தாலும் மரித்தது போல் தான் என்பதை. பகவானின் மாயை என்னை மறைத்தது போலும். உங்களையும் என்னைப் போலவே பந்தத்தில் ஆழ்த்தி விட்டேன். என்று வருத்தத்துடன் சொன்னாள்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், இருபத்து மூன்றாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-57

அத்யாயம்24

இவ்வாறு தன்னையே நொந்துகொள்ளும் மனைவியைப் பார்த்து கர்தமர் சொன்னார். வருத்தப் படாதே. ராஜபுத்ரி நீ, உன்னையே ஏன் தாழ்த்திக் கொள்கிறாய்.  பகவானே உன் கர்பத்தில் வருவார்.  நீயும் பல விரதங்களை செய்து வந்திருக்கிறாய்.  இப்பொழுதும் பொறுமையுடனும், சாந்தமாக ஈஸ்வரனைக் குறித்து தவம் செய்.  பொருள்கள் தானமும் செய்து  வா.  எனக்கு மகனாக வருவதாக சொல்லியிருக்கிறான்.  ப்ரும்ம பாவனமான மகன்  பிறப்பான். உன் மன க்லேசம் விலகட்டும்.  பல காலம் தேவஹூதியும் அதே போல அவர் சொன்ன விஷயங்களை சிரத்தையுடன் செய்து வந்தாள். கர்தமருடைய வீர்யத்தில் மரத்தில் அக்னி இருப்பது போல இருந்து அவளுக்கு மகனாக பிறந்தார்.  அச்சமயம் வானத்தில் துந்துபி முழங்கியது. வாத்யங்கள் இசைக்கப் பட்டன. கந்தர்வர்கள் பாடினர்.  அப்சரஸ்கள் ஆடினர். எங்கும் மகிழ்ச்சி நிறைந்தது. பூமாரி பொழிந்தது.  திசைகள் சுகமாக நீர் நிறைந்து குளிர்ந்தன. ஜனங்களுடைய மனமும் மகிழ்ந்தன. கர்தமருடைய ஆஸ்ரமம் இருந்த சரஸ்வதி தீரத்திற்கு ப்ரும்மாவும், மரீசி முதலிய ரிஷி கணங்களும் வந்து சேர்ந்தனர். பரப்ரும்மமான பகவானை, சத்வாம்சம் நிறைந்தவனாக, சத்ருக்களை அழிக்கும் வீரனாக, தத்வ ஞானம் அளிக்கும் பொருட்டு பிறந்தவனை  காண வந்து சேர்ந்தனர். அவருடைய எண்ணத்தை உள்ளபடி உணர்ந்து அதை மதிப்பவர்களாக மகிழ்ச்சியுடன்  கர்தம ரிஷியை வாழ்த்தினர்.

ப்ரும்மா சொன்னார்: மகனே,  என்னை கௌரவித்து விட்டாய்.  என் சந்ததியை வளர்த்து பெருகச் செய் என்று  நான் வேண்டியதை நிறைவேற்றி விட்டாய்.  தந்தைக்கு மகன் இப்படித்தான் இருக்க வேண்டும்.  தந்தை சொல்வதை ஏற்று அவர் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.  இந்த பெண்களும் நாகரீகம் தெரிந்தவர்களாக அழகிகளாக இருக்கிறார்கள். தகுதியுடைய வரன்களுக்கு அவர்கள் மனம் விரும்புவது போல் மணம் செய்து கொடு. உலகில் பிரஜைகள் பெருகட்டும்.   தன் மாயையால் பகவான் ஆதி புருஷன் அவதரித்திருப்பதை நான் அறிவேன்.  மனித உடலில்  கபிலனாக வருகிறான்.  ஞான விக்ஞான யோகத்தால் கர்ம மார்கத்தை மட்டுமே நம்பியிருக்கும் மனிதர்களை தூக்கி விட, ஹிரண்ய கேசன், பத்மம் போன்ற கண்களையுடையவன், பத்மம்  என்ற முத்ரையுடன், பத்மபாதங்களுடன்  வருவான்.

 மனித பெண்ணே! உன் கர்பத்தில் தோன்றியுள்ளவன்  கைடபாரி என்ற மஹாவிஷ்ணுவே.  அவித்யை என்ற சந்தேக சிக்கலை அவழ்த்து பூமியில் ப்ரசாரம் செய்வான். 

இவன் சித்தர்கள் கணங்களின் தலைவன். சாங்க்யம் என்ற ஞான மார்கத்தைச் சொல்லும் ஆசார்யர்களின் சம்மதத்தை பெற்றவன். உலகில் கபிலன் என்ற பெயருடன் உன் புகழை பரப்புவான். 

இவ்வாறு தம்பதியரை சமாதானப் படுத்தி விட்டு குமாரர்கள், நாரதர் முதலானோர், ஹம்ஸ விமானங்களில் தங்கள் இருப்பிடம் சென்றனர். அவர்கள் சென்றபின், கர்தமர் தன் பெண்களை ரிஷிகளுக்கு மணம் செய்வித்தார்.  மரீசிக்கு கலா என்பவளை, அனசூயாவை அத்ரிக்கு, ஸ்ரத்தா என்பவளை ஆங்கிரசுக்கு, ஹவிர்புவா என்பவளை புலஸ்தியருக்கு,கதி என்பவளை புலஹர் என்ற ரிஷிக்கு,  க்ருது என்பவருக்கு சதீ என்ற பெண்ணை, ப்ருகு முனிவருக்கு க்யாதி என்பவளை, அருந்ததி என்பவளை வசிஷ்டருக்கு , அதர்வணர் என்ற ரிஷிக்கு சாந்தி என்பவளை – என்றிவ்வாறு தன் பெண்களை சிறந்த ப்ராம்மணர்களான ரிஷிகளுக்கு மணம் செய்து கொடுத்து அவர்களை தம்பதிகளாக  அனுப்பி வைத்தார்.  விவாக சம்பந்தமான நாந்தி என்ற விடை பெறுதல் என்ற சடங்கையும் முடித்து அவர்கள் தங்கள் இருப்பிடம் சென்றனர். 

பகவானே தன் மகனாக அவதரிக்கப் போகும் விஷயத்தை அறிந்து பலவிதமான உணர்ச்சிகளுக்கு ஆளானார். க்ராம்யமான என் க்ருஹத்தில் உதிக்கப் போகிறார்.  பல ஜன்மங்களில் தவம் செய்து அறிய வேண்டிய பகவான், நமது எளிமையை பொருட்படுத்தாமல் வருகிறான்.  நல்ல சாதனைகள் செய்து யோகம், சமாதி என்று யதிகள் பகவானை தரிசிக்க தவிக்கின்றனர், அவர் என் சூன்யமான குடிலுக்குள் வருகிறார்.  தேவர்கள் மகிழ்ந்து கொண்டாடுவார்கள். உலகில் மங்களம் நிறையும்.

பகவானே, உன் சொல்லை காப்பாற்ற என் இல்லத்தில் அவதரிக்கிறாய். பக்தர்கள் பெருமையை காப்பாற்ற அவர்களுக்கு ஞானோபதேசம் செய்ய வருகிறாய்.  உன்  பக்தர்கள் விரும்பும் ரூபங்கள் எதுவானாலும், அந்த  அந்த ரூபத்தில் காட்சியளிக்கிறாய்.   அறிவுடையோர் உயரிய தத்வங்களை அறிய எப்பொழுதும் வணங்கத் தகுந்த உன் பாதங்களை சரணடைகின்றனர். ஐஸ்வர்ய, வைராக்யம், புகழ், அவபோதம் – தெளிந்த அறிவு, வீர்யம், ஸ்ரீ  இவை நிரம்பிய உன்னை சரணடைகிறேன்.

பர புருஷன், ப்ரதான், மஹான், காலம், கவி, மூன்றாக தெரிபவன், லோக பாலன், தன் அனுபவத்தால் ஏற்படுத்திய இந்த ப்ரபஞ்சம், சுதந்திரமான சக்தியுடைய கபிலனை ஆராதிக்கிறேன். ப்ரஜாபதி நீ அவதாரம் செய்யப் போகிறாய் என்பதை அறிந்து மகிழ்ச்சியுடன் சொன்னார்.  எனக்கு இந்த உயரிய தந்தை பதவி உன்னால் கிடைத்தது. உன் நினைவை மனதில் சுமந்து  கொண்டு  சற்றும் துக்கமில்லாமல் நான் நடமாடுவேன்.

ஸ்ரீ பகவான் பதில் சொன்னார்:  நான் முன் சொன்ன சொல் தான்  சத்ய லோகத்திற்கு ப்ரமாணம். அதனால் உன்னில் அவதரிக்கிறேன்.  முக்தியடைய விரும்பும் சாதகர்களுக்கு கூட அரிதாகவே கிடைக்கும் இந்த வாய்ப்பு, உலகில் சாங்க்ய யோகம் என்பதை பரப்புவதற்காக, உலகில் அதன் சிறப்புகளை சொல்வதற்காகவும்,  ஆத்ம தரிசனம் என்பதை சாதகர்களுக்கு அளிக்கவும் இந்த அவதாரம்.   இந்த ஆத்மா பற்றிய அறிவு, வெளியில் தெளிவாக தெரியாத வழி. பல காலமாக யாரும் முயற்சி செய்யாமல் இந்த துறை வெகுவாக நஷ்டமாகி விட்டது.  அதை புனருத்தாரணம் செய்யவே இந்த உடலை நான் தரிக்கிறேன்.  எங்கு வேண்டுமானாலும் போ. என்னிடம் பொறுப்பை ஒப்படைத்து உன் சாதனைகளை தொடர்ந்து செய்.   என்னை பூஜித்து , மரணமில்லாத அமரத் தன்மையை அடைவாய்.

நான் ஸ்வயம் ஜோதியான ஆத்மா, அனைத்து உயிரினங்களிலும் அவர்களது ஹ்ருதய குகையில் வசிக்கிறேன். உன்னிடத்தில் உன்னையே காணும் ஆத்ம வித்யா என்பதை அறிந்து கொள், அதன் பின் உனக்கு சோகமோ, பயமோ தோன்றாது. இந்த ஆத்யாத்மிகா – ஆதி ஆத்மாவான என்னை அறிவது- என்ற வித்யா எல்லா செயல்களுக்கும் பின்னால் உள்ள பயத்தை போக்கும்.  பயத்தை வெற்றி கொள்வாய்.

மைத்ரேயர் சொன்னார்: இவ்வாறு அபயமளித்த கபிலரிடம் விடை பெற்று,  கர்தமர் தென் திசை நோக்கி பயணம் செய்து வனம் சென்றார்.  மௌன விரதம் மேற்கொண்டு திடமான விரதங்களுடன், தனிமையில் துறவியின் நியமங்களை அனுசரித்தபடி இருந்தார்.  மனதில் தியானம் செய்து வந்தார். நல்லது, அல்லாதது எதிலும் பட்டுக் கொள்ளாமல் குணங்களையும் வென்றவராக, பக்தி ஒன்றே என பாவித்து இருந்தார். தானே, அஹம்பாவம் (தன்னியல்பு) அகன்றது.  என்னுடையது என்ற எண்ணமே இல்லாமல் போனது. உயிரினங்கள் அனைத்தையும் சமமாக பார்த்தார். ப்ரசாந்தமான புத்தியுடன் தீரனாக, சமுத்திரத்தின் சாந்தமான  அலை போல இருந்தார்.

சர்வக்ஞன் எனும் பகவான் வாசுதேவனிடத்தில் முழுமையான பக்தி பாவத்துடன், பந்தங்கள் அறுபட்டவராக, தன்னையறிந்தவராக  ஆனார்.

आत्मानं सर्वभूतेषु भगवन्तमवस्थितम् ।अपश्यत्सर्वभूतानि भगवत्यपि चात्मनि ॥ ४६॥

என்றபடி அனைத்து ஜீவராசிகளிடமும் தன்னையே காண்பவராக, உலகில் எல்லா உயிரினங்களிடமும் உள்ளது ஒரே பரமாத்மாவின் அம்சமான ஆத்மாவே என்ற உண்மையை உணர்ந்து அறிந்தார்.

ஆசையோ, வெறுப்போ, இல்லாமல் சமமாக அணுகும் குணம் வந்து சேர்ந்தது.  தன் பக்தி நெறியாலேயே பரம பாகவதர் என்ற தகுதியை அடைந்தார். 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின்,  இருபத்து நாலாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-57

|| ஸ்ரீமத் பாகவதத்தில் காபிலோபாக்யானம் என்ற மூன்றாவது ஸ்கந்தம் நிறைவுற்றது || 

ஓம் தத் சத் ||

Subscribe to continue reading

Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.

 

 

முன்னுரை

ஸ்ரீ மத் வால்மீகி ராமாயணத்தின்  பாலகாண்டத்தில் ஒரு செய்தி.   விஸ்வாமித்திரின் யாகசாலையில் அவருடைய விரதங்களுடன் யாகத்தை நடக்க விடாமல் ராக்ஷஸர்கள் துன்புறுத்தினர். மௌன விரதம் ஏற்றவர், கோபம் கொள்வது தவறு என்ற காரணங்களால் சமர்த்தராக இருந்தும் விஸ்வாமித்திரர்  ராஜா தசரதரிடம் உதவியை வேண்டி பெற்றார்.   ஸ்ரீ ராமன் சகோதரனுடன் அவருக்கு உதவியாக இருந்து தாடகை முதலானவர்களை அழித்தார்.  யாகம் நல்ல முறையில் முடிந்த பின் ரிஷி அவர்களுடன் புறப்பட்டார்.  செல்லும் வழிகளில் எல்லாம் சிறுவர்களுக்கு கதைச் சொல்லிக் கொண்டே வந்தார். அந்த சமயம் குமார சம்பவம் எனும் முருகனின் பிறப்பு என்ற காவியத்தின் தலைப்பு அவராலேயே கொடுக்கப் பட்டது.  அவருடைய மேலும்  சில சொற்றொடர்கள் பிரபலமாகி உள்ளன.  கௌசல்யா சுப்ரஜா என்று அவர்  அழைத்ததும் ஒன்று.

தாரகாசுரன் என்ற அசுரனைக் கொல்ல பரமேஸ்வரன் – கிரிஜாவான பார்வதி தம்பதிகளின் மகனே வர வேண்டும் என்று தேவர்கள் யாசிக்கிறார்கள் என்று ஆரம்பித்து அவர் சொன்ன வரலாற்றை கவி காளிதாஸன், தன் கவித்வம், காவ்யாலங்காரங்களுடன்   அழகிய காவ்யமாக செய்ததே   ‘குமார சம்பவ மகா காவ்யம்’ 

மொழி பெயர்பு மூல கவியின் பாவங்களை முழுதும் கொண்டு வர முடியாது என்பர்.  அதிலும் காளிதாசன் போன்ற மகா கவிகளின் காவ்யங்களை மொழி அறியாதவர்களும் ரசிக்க முடியும்.  தெரிந்த கதை, சொல்லும் விதம் தான் அழகு.    மூல காவ்யத்தை சம்ஸ்க்ருத உரையுடன் படித்து மொழி பெயர்த்துள்ளேன்.

கவி தன் படைப்பை, பாதியில் நிறுத்தி விட்டதாகச் சொல்வார்கள்.  சஞ்சீவினீ என்ற உரை எழுதிய மஹா மஹோபாத்யாய கோலாசல மல்லினாத ஸுரி அவர்களும் தன் உரையில் அதை குறிப்பிட்டிருக்கிறார்.  கீரீச-கிரிஜா வின் திருமணம் வரை எழுதிய பின் அவர் எதனாலோ, போர் செய்திகளை மற்ற ஒருவரைக் கொண்டு எழுத வைத்தார் என்பர்.  

சில இடங்களில் சிறு மாறுதல்களுடன் அவருக்கே உரிய அழகிய சம்ஸ்க்ருத பாஷையில் எழுதியுள்ளார். நான் அதையே  தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். சம்ஸ்க்ருதம் படிக்காதவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதால்.  இதை படித்த பின் அந்த மொழியின் அழகுக்காக கற்றுக் கொள்ளத் தோன்றினால் ஆச்சர்யமில்லை. ‘உபமா காளி தாசஸ்ய’ என்று போற்றப் படுபவர் காளிதாஸ கவி. இந்த உவமைகளை அறிந்து ரசிக்கவே படிக்கலாம்.

இமய மலையின் வர்ணனையோடு காவ்யம் ஆரம்பிக்கிறது.

 ஜானகி க்ருஷ்ணன்.

******************

 

|| குமார சம்பவம் மஹா காவ்யம் ||

|| முதல் அத்யாயம் ||

இந்த தேசத்தின் வடக்கு திசையில், தேவதைகளின் ஆத்மா போன்ற ஹிமாலயம் என்ற பர்வதம் உள்ளது. நகாதி ராஜ: மலைகளின் அரசன் எனப்படும் உன்னதமான மலை.  முன்னும் பின்னும் ஜலம் ஸூழ்ந்த ப்ரதேசம். உலகில் மானதண்டம்- நடு நாயகமான தண்டம் போன்றது.

ப்ருது என்ற அரசன் ஒரு முறை மழையின்றி வறட்சியாக இருந்த நிலத்தை மீண்டும் சுபிக்ஷமாக ஆக்க பூமியையே வேண்டினான்.  அவள் அனுக்ரஹத்தால் வேண்டியவர் வேண்டியதை அவளிடம் கறந்து கொண்டனர் என்பது பாகவதம் விவரமாக சொல்கிறது. இந்த சரித்திரத்தை நினைவுறுத்துவது போல இமய மலையே பசுவாகவும், இதர மலைகள் அதனிடம் ரத்தினங்களைக் கறந்து கொண்டதாகவும் கவியின் கருத்து. அதன் படி, விலை உயர்ந்த ரத்னங்களையும், ஓஷதிகள் என்ற சிறப்பான தாவரங்களையும் பெற்றன. எந்த உயர்ந்த ரத்னமானாலும், தாவரமோ  இந்த இமய மலையிலிருந்தே உத்பத்தியாகின.

அப்படி இருந்தும், பனி மூடிய மலை சிகரங்கள், அதனால் பனியின் – நடுக்க வைக்கும் குளிர் என்பதன் பாதிப்பை மட்டும் இமாலய மலையால் தடுக்க முடியவில்லை.  ஒரே ஒரு சிறிய தோஷம், களங்கமாக சந்திரனின் இருந்தாலும், அது, சந்திரனின் குளுமைக்கும் பெருமைக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை.

தன் சிகரங்களில் நடமாடி மகிழும் அப்சரஸ்களை மகிழ்விக்க அகாலத்தில் சந்த்யா காலம் வரும்படி செய்கிறதாம். எப்படி என்றால், மலையில் தாது பொருட்கள் பல வண்ணங்களில் உள்ளன, குங்கும வண்ணம், கௌர-வெண்மை என்பது போன்ற பல வணங்களில் தாதுப் பொருட்கள், மலையின் இடை வெளிகளில் பாய்ந்து வரும் நீரின் வெண்மையுடன் சேர்ந்து சந்த்யா போன்ற தோற்றத்தை தருகின்றன என்பது கவியின் காவ்ய அலங்கார வர்ணனை.

இமயமலையின் உயரம் காரணமாக மேகங்கள் அதன் இடை பாகத்தில், நடு பாகத்தில் சஞ்சரிக்கின்றன, மேக மண்டலத்தையும் தாண்டி அதன் உயரம் இருப்பதால், மேல் சிகரங்கள் ஸூரிய ஒளியுடன் ப்ரகாசமாகத் தெரிகின்றன.  மேகலை என்ற ஒட்டியானம்- மனிதர்கள் இடையில் அணியும் நகை போல மேகங்கள் தெரிகின்றன. சித்தர்கள் என்பவர்கள் அணிமாதி சித்திகள் கை வரப் பெற்றவர்கள், மேல் பகுதிக்குச் செல்கிறார்கள்.  நல் கதியடைகின்றனர். சாமான்ய ஜனங்களால் அது முடியாது.

அந்த மலையில் சிங்கங்களை வேட்டையாடுபவர்கள் இருந்தனர்.  கிராதர்கள் என்ற பெயர் பெற்ற அவர்கள் அந்த செயலில் திறன் வாய்ந்தவர்கள். அடிபட்ட சுவடு தெரியாமல் எடுத்துச் சென்று விடுவர் போலும்.  அதனால் ரத்தம் தோய்ந்த நகங்களே அடையாளம், அதைக் கொண்டு அடிபட்டது எது என்று அறிவார்களாம்.

திவ்யாங்கனா- தேவ மகளிர் அங்கு நடமாடும் சமயம் அந்த அடிபட்ட யானைகளின் மத ஜலத்தில் பெருகி வரும் முத்துக்களையும், போஜ பத்ரங்களையும் எடுத்துச் செல்வர்.

குகையிலிருந்து வெளிவரும் காற்றே வேணு கானம் போல இருக்குமாம். பாடுபவர்கள் அந்த ஒலியை அனுசரித்து தங்கள் வாத்யங்களின் சுருதியை சரி செய்து கொள்வார்களாம். யானைகள் தங்கள் கழுத்தை உரசி உரசி தேவ தாரு மரங்களை பால் வடியச் செய்து விடுமாம். அந்த பாலின் மணம் அலாதியானது என அங்கு வரும் தேவர்கள் மலையுச்சி வரை அந்த மணம் பரவி இருப்பதாகச் சொல்வார்கள்.

பச்சிலைகள் நிரம்பிய மலை ஹிமாலய மலை. இரவில் அவை பளிச்சிடும் குணம் கொண்டவை. காட்டு மிருகங்கள்  அதை அறிந்து தங்கள் வழியை அறிந்து கொள்ளும்.  எண்ணெய், திரியின்றி எரியும் விளக்குகள் அந்த மருத்துவ குணம் கொண்ட இலைகள்.

 அந்த குகைகள் திவாகரன் என்ற – பகல் பொழுதை நிர்வஹிப்பவன் என்ற ஸூரியனிடம் பயந்து தங்களிடம் அடைக்கலமாக வந்த இருட்டை பாதுகாக்கின்றன. என்னதான் சிறிய ஜந்து என்றாலும் பெரியவர்கள் தங்களிடம் அடைக்கலமாக வந்தவர்களை கைவிடுவதில்லை அல்லவா, அது போல.

சமரீ என்ற மான்கள் தங்கள் வெண்மையான தோகைகளை விரித்து மலையின் மேல் சஞ்சரிக்கின்றன. அவைகள் கொடி போலவும், சாமரம் போலவும் தெரிவது, இமய மலைக்கு சாமரம் வீசுவது போலவும், சக்ரவர்த்திகளின் ராஜ்யத்தில் வெண்ணிற கொடிகள் அலங்காரமாக கட்டப் பட்டிருப்பது போலவும் தெரிகின்றன. கிரி ராஜன், கிரிகளுக்கு அரசன் இமவான் – அதனால் அது பொருத்தமே.

அடர்ந்து விழும் அருவிகள் வீடுகளில் மறைவாக தொங்கும் திரைச் சீலைகள் போல உள்ளன. அங்கு உலாவ வரும் கின்னர ஸ்த்ரீகள்,  அந்த குகைகளில் வசிப்பது போலவும், அதற்கான திரைச் சீலையாக மேகங்களே உள்ளன என்றும் வர்ணனை.

அருவி நீர் வேகமாக விழும் சமயம் நீர் துளிகளாக சிதறுவதை வாயு கொண்டு செல்கிறது.  கரையில் உள்ள தேவ தாரு மரங்கள் அசைந்து தன் மேல் படிந்த நீர் துளிகளை உதறுகிறது. இதனால் மழை என்று நினைத்து மயில்கள் மகிழ்ந்து ஆடுகின்றன.

சப்த ரிஷிகள் இங்குள்ள குளங்களில் இருந்து தாமரை மலர்களை பறித்துச் செல்கின்றனர்.  பறிக்கப் படாத மலர்கள் மேல் நோக்கியே இருப்பதைக் காண அவை ஸூரியனை தேடுவது போல உள்ளன.  அதனால் மேல் நோக்கிச் செல்லும் ஸுரிய கிரணங்கள் தாங்களாகவே அவைகளை நெருங்கிச் சென்று  மலர்ந்தே இருக்கச் செய்கின்றன.  

சப்த ரிஷி மண்டலம் த்ருவ நக்ஷத்திற்கும் மேல் உள்ளவை. எனவே இந்த குளங்கள் அதையும் தாண்டி                வான வெளிக்கும் மேல் உள்ளவை போலும். அதனால் ஸூரியன் அவைகளை மலரச் செய்ய தன் கிரணங்களை மேல் முகமாக செலுத்துகிறான் என்று அறியலாம்.

சோம லதா போன்ற ஓஷதிகள், இமய மலையில் வளருகின்றன. இவை யாகத்தில் பங்கு பெறுபவை. ஆனதால் இந்த மலைக்கு யாகத்தில் பங்கு என்ற பொருளில் யக்ஞாங்கா எனப்படுகிறது. அது மட்டுமல்ல மலைகள் பூமியை தாங்குவதாக धरित्री धरण क्षमम् – ஒரு பொருள். அதனாலும் ப்ரஜாபதி ஹிமவானுக்கு யாகத்தில் பங்கு கொடுத்ததோடு, மலைகளின் அரசன் என்ற பட்டமும் கொடுத்தார்.

ஹிமவான், பித்ருக்களின் மானச புத்ரியான மேனா என்ற பெண், முனிவர்கள் மதிக்கும் படியான சுபமான பெண், தனக்கு அனுரூபமாக, குலம், சீலம், சௌந்தர்யம் உள்ளவளாக இருக்கக் கண்டு தன் குலம் விளங்க – அவளை மணந்து கொண்டார்.  இருவரும் இளம் வயதினர். சம மான யோக்யதாம்சங்கள் கொண்டவர். எனவே நாட்கள் இனிமையாக கடந்தன.  நாளடைவில் பூதரன் -பூமியை தாங்குபவன்- அந்த ராஜனின் மனைவியான மேனா கருத்தரித்தாள்.  மைனாகம் என்ற பர்வதத்தை பெற்றாள். பின்னால், இவன் நாக கன்யாவை மணந்தான். சமுத்திரத்துடன் நட்பு கொண்டான். மலைகளின் இறக்கையை வெட்டி வீழ்த்திய இந்திரனின் வஜ்ரம் என்ற ஆயுதமும் இவனை எதுவும் செய்யவில்லை.  மேனாவின் மகன் பாக்யசாலி எனக் கொண்டாடப் பட்டான்.  மற்றொரு சிறப்பான விஷயம் இந்த மைனாகம், பார்வதியின் சகோதரன் ஆவான்.  சகோதரன் உடைய பெண்ணையே மணந்து கொள்ள வேண்டும் என்று ஒரு வழக்கம் இருந்த து.

அந்த சமயம் தக்ஷனின் மகளான சதி, மகாதேவரின் மணைவியானாள்.  ஒரு சமயம் தந்தையான தக்ஷன் மிகப் பெரிய யாகம் செய்த பொழுது, மகாதேவருக்கு செய்ய வேண்டிய மரியாதைகளைச் செய்யாமல் அவமதித்தான். அதை தாங்கமாட்டாமல், யாக சாலையிலேயே (தக்ஷனின் மகள் என்ற பெயரைத் துறக்க)   யோக முறையில் தன் சரீரத்தை தியாகம் செய்திருந்தாள்.  திரும்ப பிறந்து மகாதேவரையே பதியாக அடைய வேண்டும்.  அதன் பொருட்டு  சைல -மேனகா தம்பதிகளை தனக்கு தகுதியான பெற்றோராக இருக்க தேர்ந்தெடுத்தாள்.  பர்வத ராஜனான ஹிமவானின் மகளாக பிறந்தாள்.

அவள் பிறந்த சமயம் திசைகள் நிர்மலமாக இருந்தன. சங்கத்வனி கேட்டது.  பூ மாரி பொழிந்தது.  உயிருடைய தாவர ஜங்கம எனும் அசையும் அசையா பொருட்கள் அனைத்தும் மகிழ்ந்தன. அவர்கள் மிகப் பெரிய நன்மையை அடைய காரணமாக அந்த சிசு அறியப் பட்டது.

அழகிய அந்த பெண் மகவின் பிறப்பால் தாயான மேனகா மிகவும் மகிழ்ந்தாள்.  பார்க்க பார்க்க தெவிட்டாத லக்ஷணம்.  வெகு தூரத்தில் கேட்ட மேக நாதம் போன்று இனிமையான அனுபவமாக இருந்தது.   நாள் தோறும் வளர வளர, புது புது அழகுடன் விளங்கினாள். சந்திரனின் கலைகள் வளருவது போல மேலும் மேலும் அழகுற தாயை மகிழ்ச்சியில் மூழ்கடித்தாள்.  அவளை பார்வதி என்று அழைத்தனர்.  பந்துக்கள் அனைவரும் அவளை பிரியமாக அழைத்தனர். தாயார் மேனகா அவளை உமா என்றாள்.  அவள் சொன்னது வேண்டாம், தவம் செய்ய வேண்டாம் என்ற பொருளில். ஆனால் அதுவே மிக சிறந்த புகழ் பெற்ற உமா என்ற பெயராயிற்று.  (உ – ஹே- சம்போதனம், அழைத்தல், வத்ஸ குழந்தாய்,  மா-வேண்டாம் )

பர்வத ராஜன், ஒரு மகனுக்கு தந்தையானவன் தான்.  இருந்தாலும் இந்த குழந்தையிடம் அதிக ஈடுபாடு கொண்டான். குழந்தை பார்வதியை கொஞ்சி குலாவியது போதும் என தோன்றவேயில்லை.  வசந்த காலத்தில் பல மலர்களில் தேடித் தேடி சென்று தேனை சேகரிக்கும் வண்டுகள் தாங்களும் தொடுத்து வைத்த மாலை போல வரிசை வரிசையாக பறந்து செல்லும். மற்ற மலர்களை விட அந்த பருவத்தில் பூக்கும் மாமரத்தின் மலர்களை அதிகம் விரும்புவது போல.

மந்தாகினி நதி த்ரிபதகா என்றும் அழைக்கப் படுவாள்.  தீபத்தின் ஒளி மூன்று கிரணங்கள்- சிகா शिखा-  தீபத்தின் எரியும் திரி மூன்று ஜ்வாலையாகத் தெரியும்.  த்ரிதிவம் – என்பது சுவர்கத்தின் பெயர். இலக்கணத்தை கற்று தேர்ந்தவன் சுத்தமான பதங்களை பிரயோகிப்பது போல, புத்தி உடையவன் வித்வான் என்று ஆவது போலவும், பார்வதியினால் ஹிமவான் தானும் சுத்தமாக (தவறில்லாத பதம் போலவும்), புனிதனாக ( மந்தாகினி நதி போல சுவர்கத்துக்கு செல்ல வழி வகுப்பது போல) தீபத்தின் ப்ரகாசம் போலவும் ப்ரகாசமாக ஆனான்.

மந்தாகினி நதியின் கரையில் மணல் படுகைகளில் பார்வதி சகிகளுடன் விளையாடிக் களித்தாள்.  பொம்மைகளுடனும், பூ பந்துகள் வைத்து விளையாடும் பொழுது நடுவில் ப்ரதானமாக பார்வதியே இருப்பாள்.  சரத்காலத்தில் ஹம்ஸங்கள் கூட்டமாக கங்கையில் செல்வது போலவும், இரவில் மூலிகைச் செடிகள் தங்கள் இலைகளின் பள பளப்பால் தங்களை வெளிப் படுத்திக் கொள்வது போலவும், இருந்தாள். உபதேசங்களை உடனடியாக கிரஹித்துக் கொள்வதில் திறமையுடையவளாக இருந்தாள். தன் தனித்தன்மை எந்த பொருளானாலும் மிகுந்து தெரியும் என்பதை உவமானத்தால் சொல்கிறார்.

மெள்ள மெள்ள அவள் வளர வளர அங்கங்களில் பொலிவும்,  எந்த வித செயற்கையான அலங்காரங்கள் இன்றியும், இயல்பாகவே ஆபரணங்கள் அணிந்தவள் போல, மதுவோ, மயக்கும் பொருள்களோ இல்லாமலே கண்டவரை தன் பால் இழுக்கும் வசீகரம் இயல்பாகவே அவளிடம் தோன்றியது. யௌவனம் அடைந்தாள். ஆதவனைக் கண்ட தாமரை மலர் போல அழகு அவளிடம் மலர்ந்தது.  சித்திரம் வரைபவன் தன் தூரிகையால் கவனமாக மலரின் இதழ்களை  கவனமாக வரைவான். எந்த இதழும், இலையும்,  கூடவும் கூடாது. குறையவும் கூடாது என்று அந்த பாகங்களை கவனமாக வரைவது போலவும், இயற்கையிலேயே  அவள் தேகத்தில் ஒவ்வொரு அங்கமும் செதுக்கி வைத்தாற் போன்ற ஒழுங்குடன் அமைந்திருந்தது.

நடக்கும் சமயம், பாதங்களின் நகங்கள் மேல் நோக்கி வளர்ந்து பாதத்தின் இளம் சிவப்பு நிறத்தைக் காட்டுவது போல இருக்கும். பாதங்கள் பதியும் இடங்கள் அடையாளமிட்டபடி செல்லும். நீரில் மலரும் பத்மங்கள் பூமியில் வந்து விட்டனவா என்று ஐயம் வரச் செய்யும்.  ராஜ ஹம்ஸம் அவள் நூபுரங்களின் இனிய நாதத்தைக் கேட்டு அவள் பாதங்களில் வந்து இருந்து கொண்டு அவள் நடையை தனக்கு சமமான மென்மையான  உல்லாசமான நடையாகச் செய்ததோ,

ப்ரும்மா தன் சக்தி, படைக்கும் திறன் இவற்றை முழுமையாக பிரயோகித்து அவளுடைய  கனுக்கால்கள் முதல் முழங்கால் வரை ஏற்ற இறக்கத்துடன் கண் கவர் வனப்புடன் படைத்தாரோ, அதனால் அவருடைய கற்பனைத் திறனே அவளுடைய மற்ற அங்கங்கள் விஷயத்தில் போதாமல் போயிற்றோ எனும்படியும்,
தொடைகளுக்கு உவமிக்க முடியாமல் யானையின் துதிக்கைகள் கரடு முரடான மேல் தோல் காரணமாக விடுபட்டு போயிற்று என்றால் வாழைத் தண்டு அதிக குளிர்ச்சி என்பதால் அதுவும் சரி வராமல் போகவே, அதற்கு அதுவே உவமானம் என்றபடி அழகிய தொடைகள்.

பின்னால் கிரீசனின் பிரிய பத்னியாக அவருடைய மடியில் அமர ஏதுவாக இருக்கவே என்பது போல இடை பாகமும் பின்னழகும் விளங்கின. அடுத்து அழகிய நாபியும், அதைச் சுற்றி ரோம ராசியும், மேகலையில் பதித்த மணி போலவும், வளித்ரயம் என்ற கோடுகள், அழகிய ஸ்தனங்கள், உத்பலம் போன்ற கண்கள் என  ஒவ்வொரு அங்கமும் யௌவனம் வந்து விட்டதை பறை சாற்றின போலும்.   மன்மதன் தோற்றானே, திரும்ப வந்து விட்டானா என்பது போன்ற சிரீஷ புஷ்பம் போன்ற சுகுமாரமான புஜங்கள், தங்கள் அமைப்பினால்  கிரீசனிடம் அவனுக்கு இருந்த விரோதத்தை விரட்டி விட்டதோ,  உயர்ந்த  முத்துமாலைகள் அவள் கழுத்தில் அணிந்த தாலேயே புகழும் பெருமையும் பெற்றன போலும்.  பொதுவாக அலங்காரம் என்றே முத்து மாலையை கழுத்தில் அணிவது வழக்கம்.

லக்ஷ்மி தேவிக்கு பத்ம குணா, பத்மாசனஸ்தா என்று பெயர்கள். அவள் சந்திரனின் அழகில் தன் பங்கை- லக்ஷ்மீகரமாக இருப்பது தான் அதன்  குணம் என்பதால் இந்த பெயர்களைப் பெற்றவள்.  சந்திரனிடம் அவளுக்கு பத்ம சம்பந்தமான பெயர்கள் பயன் படுத்த முடியவில்லை, அதனால் உமா முகத்தில் வந்து குடி கொண்டாள். இரண்டு பதவிகளையும் அடைந்து விட்டாள். ( சஞ்சலமான லக்ஷ்மி இரவுகளில் சந்திரனிலும், காலையில் பத்மத்திலும் இருப்பாள் என்பது அனைவரும் அறிந்ததே.   பகலில் பத்மத்தில் இருப்பவள் சந்திரனின் குளிர்ச்சியையும், கவர்ச்சியையும் பெற முடியவில்லையோ, என்ற குறை, சந்திரனை ஒத்த முகத்தினளான உமையிடம் வந்து இரு வகையிலும் அவள் அதனுடைய குணங்களை பெற்று விட்டாள்.)

புத்தம் புது தளிர்கள், பவழம் இவைகளின் சோபையை அவள் அதரங்கள் எடுத்துக் கொண்டு விட்டன போலும்.  அதில் வெண் நிறத்தை அவளுடைய மென் முறுவல் கொண்டு சேர்த்தது.

அமுதம் போன்ற அவள் குரல். பேசும்பொழுது எவரும் மீட்டாமலே அதில் வீணையின் நாதம் எழுந்தது.

நீலோத்பலம் போன்ற நீண்ட கண்களில் மானின் கண்கள் போன்ற சாயை அவளிடம் இயல்பாகவே வந்து விட்டனவா அல்லது  பெண் மான்கள் அந்த குணத்தை அவளைப் பார்த்து தாங்களும் விரும்பி அவளிடம் யாசித்து மருட்சியைப் பெற்றனவா?

அவளுடைய புருவங்களில் தீட்டிய அஞ்சனம் எனும் மையுடன் இருந்த அழகையும் நேர்த்தியையும், கண்டவுடன் கவர்ந்திழுக்கும் கவர்ச்சியையும் பார்த்த  மன்மதன் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு தன்னுடைய வில்லின் காந்தியை இழந்து விட்டான் போலும். தன்னுடைய வில் தான் மிகச் சிறந்தது  என்ற அபிமானத்தையும் விட்டு விட்டான்.

சமரீ என்ற விலங்கு தன் அடர்த்தியான கேசத்திற்கு புகழ் பெற்றது. பர்வத ராஜ புத்ரியின் கேசத்தைப் பார்த்து மிகுந்த லஜ்ஜை அடைந்து விட்டது போலும். இந்த கேசத்தின் அழகுக்கும் அடர்த்திக்கும் எதிரில் தான் மிகவும் விரும்பும் தன் அடர்ந்த கேச பாசம் பற்றி கொண்டிருந்த கர்வம் அதை  விட்டு விலகி விட்டது.

விஸ்வஸ்ருட்- உலகத்தை படைத்தவன் மிக நேர்த்தியான அவளுடைய அங்கங்களை வைத்து உண்மையில் எப்படி அழகிய உருவத்தை படைப்பது என்று கற்றுக் கொண்டார் போலும்.  சந்திர, அரவிந்த, எள், பூ  என்று உவமானம் சொல்லும் வஸ்துக்களில் எவைகள் எந்தெந்த அளவில் பயன் படுத்த வேண்டும் என்பதை கணக்கிட்டுக் கொண்டாரோ.

தன் இஷ்டம் போல மூவுலகிலும் சஞ்சரிப்பவரான நாரதர் யதேச்சையாக அங்கு வந்தார். இந்த சிறுமியைப் பார்த்தவுடன் புரிந்து கொண்டு விட்டார். இவள், பகவான் சங்கரனின் அர்தாங்கீ- சரீரத்தில் ஒரு பாகம் கொண்ட சதி, அவருடைய மனைவி தான் என்று ஊகித்தவர், தானாகவே அவளுடைய எதிர்காலம் பற்றிச் சொன்னார்.  மந்திரங்கள் ஓதி, ஆஹுதி- யாகத் தீயில் போடப் படும் பொருளை அக்னி தான் ஏற்றுக் கொள்ள முடியும்.  வேறு யாராலும் முடியாது. அது போல இந்த சிறுமி, தற்சமயம் பர்வத ராஜ புத்ரியாக ஜனித்திருந்தாலும், இவளுக்கு மணவாளன் அந்த சங்கரனே.  பர்வத ராஜன் பலவான்.  அவன் அனுமதியின்றி அவன் மகளை தானாக சங்கரன் கவர்ந்து சென்றோ, யாசித்தோ பெற முடியாது.  பெண் கேட்டு வந்து வரன் பக்கத்திலிருந்து பெரியவர்கள் அல்லது பெற்றவர்கள் வராத வரை இவள் தந்தைக்கு மகள் தான். என்ன செய்யலாம், காரியமும் நடக்க வேண்டும், அதார்மிகமாகவும் செய்யக் கூடாது. வேறு உபாயம்  செய்ய யோசித்தபடி அங்கேயே நின்றார்.

இந்த பெண், சதியாக தக்ஷணிடம் விரோதம் வந்ததால், கோபத்துடன் தானாக அந்த தாக்ஷாயணி என்ற பெயரையே வெறுத்தவளாக, சரீரத்தை விட்டவள்.  பசுபதியான இவள் கணவன் அன்றிலிருந்து எதிலும் பற்றில்லாமல், யாரையும் அருகில் அண்ட விடாமல், தவமே செய்கிறான். கஜசர்மம்- யானை தோலை ஆடையாக, கங்கையின் கரையில் உள்ள தேவ தாரு மரம், அதனடியில், கங்கையின் ப்ரவாகத்தில் வரும் நீர்த் துளிகளால் அந்த மரமும் வளருகிறது, அதன் அடியில் அமர்ந்து விட்டார்.  கஸ்தூரி மிருகங்கள் வளைய வருவதால் சுகந்தமான இடம் அது.  கின்னர தம்பதிகள் அங்கு வந்து உல்லாசமாக இருப்பர். பாடுவர். ரமணீயமான இமய மலையின் ஒரு சிகரம், அதிலேயே வசிக்கிறார்.

ப்ரமத கணங்கள் வந்து வணங்குவர். தேவ புங்க மரத்தின் பூக்கள் மிக அழகானவை. அதையே தங்கள் அலங்காரமாக தரித்துக் கொண்டு, ம்ருதுவான போஜ (பூர்ஜ) என்ற இலைகளைக் கொண்டு தங்களுக்கு ஆடைகள் தயாரித்துக் கொண்டு ப்ரசித்தமான  மணம் உள்ள  மன:ஸிலா என்ற தாது, அதை உடலில் பூசிக் கொண்டு,  அவர் அருகில் பாறைகளில் அமர்ந்திருப்பர்.

பகவான் சங்கரனின் அணுக்கத் தொண்டனான நந்தியும் தன் கூரிய கால் நகங்களால் பாறைகளை பிளந்து வழி செய்து கொண்டு, தன் இயல்பான ஓங்கார நாதம் செய்தபடி அங்கு வந்து சேர்ந்தார்.  கீழிருந்து பசுக்கள் பயத்துடன் ஏறிட்டு நோக்கின. பயங்கரமான சிங்கம் கர்ஜித்ததை லட்சியம் செய்யாமல், தானும் அதே போல பயங்கரமாக கர்ஜனை செய்தபடி தன் பெரிய ககுத்-திமில் தெரிய, ஏறி அருகில் வந்து நின்றார்.

மற்றவர்கள் செய்யும் தவத்தின் பலனே அவர். வேண்டியவர்களுக்கு வேண்டியபடி வரமளிப்பவர். எதைக் குறித்து தவம்? தானே அஷ்ட மூர்த்தியானவர்.  விதாதா – இந்திராதி தேவர்களை படைத்தவர்.  ‘அக்னிர்வை ருத்ர’ – என்ற படி அவரே அக்னியாக இருப்பவர்.  அவாப்த சமஸ்த காமன்- தான் விரும்பியது அனைத்தையும் குறைவற பெற்றவர்.  அக்னியின் நடுவில் அமர்ந்து தவம் செய்வது எதற்காக?

ஹிமவான் அதை அறிந்து, பரம பூஜ்யரான பகவான் சங்கரனுக்கு அர்க்யம் முதலிய மரியாதைக்குகந்த பொருட்களை எடுத்துக் கொண்டு பத்னியுடன் வந்து வணங்கினான். சகிகளுடன் பார்வதியை அவருடைய பணிவிடை செய்ய நியமித்து விட்டுச் சென்றான்.

உள்ளுணர்வால் கிரீசன் அவள் அங்கு இருப்பதை உணர்ந்தார்.  பணிவிடைகள் செய்வதை ஏற்றுக் கொண்டார். வெளிக் காட்டிக் கொள்ளவும் இல்லை, தன் தவத்திலிருந்து வெளி வரவும் இல்லை. தீரர்கள் என்பவர்கள் அவர்களே. அத்யதிகமான சபலங்களிலும் மாட்டிக் கொள்ளாமல் தன் சாதனையை தொடருபவனே தீரன்.

பார்வதி, தினமும் பூஜைக்கான பூக்களை பறித்துக் கொண்டு வந்து வைப்பாள். யாகத்தின் தேவையான வேதி என்பதை தயாராக சுத்தம் செய்து வைப்பாள்.  தினசரி தேவைக்கான தண்ணீர், குசம், இவைகளை கொண்டு வந்து சதாசிவனுக்கு சிரத்தையுடன் தேவையான பணிவிடைகளைச் செய்தாள். அவர் தலையில் இருந்த சந்திரனின் குளுமையால் தானும் சிரம பரிகாரம் செய்து கொண்டவள் போல உத்சாகமாக இருந்தாள்.

(இது வரை ஸ்ரீ காளி தாசரின் குமார சம்பவ மகா காவ்யத்தின் உமோத்பத்தி என்ற முதல் அத்யாயம்)

அத்யாயம்-2

இதனிடையில், தேவ லோக வாசிகள், தாரகாசுரனால் அதிக துன்பம் அனுபவித்தனர்.  வஜ்ரனகன் என்பவனின் மகனான தாரகன் பலவானாக இருந்தான். அவனை எதிர்த்து நிற்கத் திறனின்றி அவர்கள் இந்திரனை முன்னிட்டுக் கொண்டு ப்ரும்மாவை சந்திக்கச் சென்றனர். 

ப்ரும்மா அவர்கள் எதிரில் தோன்றினார். முகம் வாடி இருந்த தேவர்களைப் பார்த்தார்.  விடியற்காலையில் தாமரைக் குளத்தில் மலர்கள் தூங்குவது போல இருந்தது. அவரை அனைவரும் வணங்கினர்.  நான் முகனான அவர் வித்யைகளுக்கும் ஈசன்- தலைவன் என்பதால் வாகீசன் எனப்படுபவர்.  தாங்களும் பொருள் பொதிந்த சொற்களால் வேண்டினர்.

பகவானே! த்ரிமூர்த்தியான உங்களுக்கு நமஸ்காரம்.  முதன் முதலாக ஒரு முகமாக இருந்தவர். கேவலாத்மன்! முக்குணங்களையும் கொண்டு உலகை படைக்கவே சதுர்முகமானவர்.  பிரளய கால ஜலமே எங்கும் நிரம்பி இருந்த சமயம் நீங்கள் விதைகளை விதைத்தீர்கள். சராசரமும் தோன்றியது.  நாங்கள் தோன்றவும் தாங்களே காரணம். ஆயிரம் ஸூரியங்களின் ப்ரகாசத்தோடு ப்ரும்மாண்டம் உருக் கொள்ள காரணம் தாங்களே.

முதலில் ஸ்ருஷ்டி மட்டுமே என்று இருந்தவர் பின்னால் தேவை அதிகரிக்கவும், ஹரி ஹர ப்ரும்மா என்ற மூவராக பிரிந்து லோக க்ஷேமத்தை செய்ய உங்கள் சக்தியை பகிர்ந்து கொண்டீர்கள்.  அதனால் பிறந்த உயிரினங்கள் வாழ்வும், பின் காலகதியடையவும் காரணம் நீங்களே.

ப்ரும்மா தாம்பத்யம் என்பதை உண்டாக்கி, ப்ரஜைகளை பெருக்க வழி வகுத்ததை சொல்கின்றனர்.

தாங்களே பெண்ணாகவும், ஆணாகவும் பிரிந்து கொண்டு  தாம்பத்யம் என்ற முறை தோன்றவும், பின்னால், உலகில் பல விதமான உருவங்கள் தோன்றக் காரணமானவர்.  உங்களுடைய நோக்கமும் படைப்புத் தொழில் வளர வேண்டும் என்பதே. எனவே தான் உங்களை பெற்றோர்- தாயும் தந்தையுமானவர் என்கிறார்கள். ‘तस्य रूपमभूद्वेधा’  என்று பாகவதம். இரண்டாக பிரிந்த உருவத்தினரானார்.

காலத்தின் கணக்கும் உங்களைச் சார்ந்ததே என்பர்.  இரவு பகல் என்ற பிரிவினையும் சதுர் யுகம் – நான்கு யுகங்கள்,ஆயிரம் முறை கடந்த நேரம் -அது உங்களுக்கு பகல். அதன் பின் உங்கள் இரவு.  அந்த சமயம் ப்ரளயம் வரும். ப்ராணிகள் மூழ்கி மறைவர்.  இரவு முடிந்து அடுத்த பகல் அவை விழித்தெழும், அதாவது மறு படி பிறக்கும். இதையே ப்ராணிகளின் ஸ்ருஷ்டி காலம் என்பர்.

தாங்கள் அயோனி, பிறவி இல்லாதவர்.  ஜகத்தே உங்கள் பிறப்பிடம். ஜகத் மறையும். உங்களுக்கு அந்தம்-முடிவு இல்லை. ஜகத்தின் ஆதியானவர், ஆனால் தாங்களோ அனாதி- ஆதி அந்தம் அற்றவர்.   ஜகதீசன் -ஜகத்தை நிர்வஹிப்பவர், தாங்கள் நிரீசன்- உங்களுக்கு மேல் ஆணயிட மற்றொருவர் இல்லை.  உங்களை நீங்களே  நன்கு அறிந்தவர். ஆத்மானம் ஆத்மனா வேத்சி- தன்னையறிந்தவர்.  தன்னையே பலவிதமாக படைத்துக் கொள்கிறீர்கள்.- ஸ்ருஜஸ்யாத்மானம் ஆத்மனா  தன் செயல்களால் தனக்குள்ளேயே அடங்கி விடுவீர்கள். स्वे महिम्नि प्रतिष्ठितं – என்று வேத வாக்யம்.

आत्मानं आत्मना वेत्सि सृजस्यात्मानं आत्मना | आत्मना कृतिना च त्वमात्मन्येव प्रलीयसे || காளிதாஸனின் வாக்கு.

ஹே பகவன்! திரவமாக, சிறு குளம் முதல் சமுத்திரம் வரை வியாபித்தவர். ரஸாத்மகர் – நீரின் குணம் ரஸம். கடினமாக பானை முதலிய ஜட வஸ்துக்களாக இருப்பவர் தாங்கள்.  ஸ்தூலமாக மனிதனின் புலன்களுக்கு தெரியும் படியான ரூபமும், ஸூக்ஷ்மமாக பரமாணுவாகவும் உள்ளவர்.  கைகளால் பந்தாடக் கூடிய அளவு எடையற்றவர்,  அதே சமயம் அசைக்கவே முடியாத ஹிமாத்ரியும் உங்கள் ரூபமே. செயல்களில் உங்களைத் தெளிவாக காணவும் முடியும், கண்களுக்கு புலனாகாத காரணமாகவும் உள்ளவர் தாங்கள்.   அணிமாதி சித்திகளில் ப்ராகாம்யம் என்பது உங்கள் அருளே.

உங்கள் முகத்திலிருந்து ப்ரணவம் வந்தது.  சொல்லும் பொருளும் அதிலிருந்து வந்தது. யாகம் முதலிய செயல்களுக்கு இவையே அடிப்படை.  யாகங்கள் செய்வதன்  பலன் சுவர்கம். இங்கு உச்சரிப்பு மிக கவனமாக கையாளப் படும். அந்த வாக்கு உங்கள் அருளே.  வேதமயமான உங்களுக்கு நமஸ்காரம்.

அடுத்து சாங்க்யம் என்ற ஞான மூர்த்தியாக துதிக்கின்றனர்.

பகவானே! உங்களை ப்ரக்ருதி என்பர். புருஷார்தம் – என்ற பிறவிப் பலன் தருபவர். அந்த கொள்கையும் அதை தெளிவு படுத்துபவரும் தாங்களே. மறை பொருளாக எளிதில் உணர முடியாத தத்வமாகவும் இருப்பவர்.  அதனால் உங்களை புருஷன் என்பர். 

உலகில் பித்ருக்களுக்கும் பிதாவானவர். மூத்தவர். தேவர்களின் தேவன். பரம் – அப்பாற்பட்டது எனும் பொழுது அதற்கும் அப்பாற்பட்டவர்.  எட்ட முடியாது என்பவைகளையும் தாண்டி இருப்பவர்.  தக்ஷன், மரீசி முதலானவர்களை படைத்தவர்.

சாஸ்வதமானவர். நிரந்தரமாக இருப்பவர்.  யாகங்களில் பயன் படும் புரோடாசம் முதலிய பொருட்களும் நீங்களே.  அன்னமாக புஜிக்கப் படுபவர். அதே அன்னம் தோன்றக் காரணமும் நீங்களே.  உங்களை நேருக்கு நேர் காணவே சாதனைகள் செய்வர். உங்கள் அருளாலேயே அந்த தரிசனமும் இயலும்.  தியானமும் நீங்களே, தியானம் செய்விப்பவனும் நீங்களே. ( யாகத்தில் அக்னியில் போடும் முன் அன்னத்தை கையால் உருட்டி வைப்பது ஆமையின் வடிவத்தில் இருக்கும் -அதன் பெயர் தான் புரோடாசம்)

இப்படி அவர்கள் துதி செய்ததைக் கேட்டு, ப்ரும்மா, பதில் சொன்னார்.  மனப் பூர்வமான அவர்களின் துதியில் அவர் உண்மையான  நிலைமையை புரிந்து கொண்டார்.  சமாதானமாக நம்பிக்கை அளித்து பதில் சொன்னார். வாக்கின் நான்கு பிரிவுகள், ஜாதி,குணம்,த்ரவ்யம், யத்ருச்சா என்று ஒரு வகைப் பிரிவு அல்லது பரா,பஸ்யந்தீ, வைகரீ, மத்யமா என்ற சப்தத்தின் தோற்றத்திலிருந்து வாயிலிருந்து வரும் சொல் வரையான பாகுபாடு, இரண்டுமே வாகீசன் அவர் அதீனத்தில் தான் என்பதால் அவர் சொன்ன பதில் முக்யத்வம் பெறுகிறது.

பகவான் சொன்னார்:  உங்கள் வரவு நல்வரவாகுக- ஸ்வாகதம்.  நீங்கள் அனைவருமே சமர்த்தர்கள், திறமையுடன் உங்கள் பொறுப்பை நிர்வஹிப்பவர்கள்.  அனைவரும் சேர்ந்து வந்திருப்பதில் வந்த காரணம் மிக முக்யமானது என்று அறிந்து கொண்டேன்.  அனைவருமே ஆஜானுபாஹு- ஆஜானுபாஹுத்வம் பாக்ய லக்ஷணம் – அது உங்களிடம் இருக்கின்றன.- முழங்கால் வரை நீளமான கைகள் -அதுவே ஆற்றலை தரும் என்றார்.

குழந்தைகளே!  வழக்கமான உத்சாகம் எங்கே? பனி மூடிய நக்ஷத்திரங்கள் போல வாடிய முகத்துடன் வர என்ன காரணம் ?

விருத்திரனை வதைத்த உயர்ந்த வஜ்ரம் என்பதை மறந்து விட்டீர்களா?  அதன் நுனி மழுங்கி விட்டதா? வருணனின் பாசம் எதிரியை நிலை குலைக்கச் செய்யும், அது எங்கே?  கருட மந்திரத்தால் கட்டுப்பட்ட சர்ப்பம் போல நீங்களும் செயலிழந்து போக என்ன காரணம்?

குபேரனுடைய மன:ஸல்யம் என்ற ஆயுதம், அவன் கைகளில் க3தை யம தண்டம் போல இருக்கும்.  அவனும் கிளைகள் உடைந்த மரம் போல நிற்கிறான்.  அதுவே ஏதோ சத்ருவிடம் தோற்று விட்டு வந்திருக்கிறான் என்பதைச் சொல்கிறது. 

யமன் ஏன் தரையில் கால்களால் கோலம் போட்டுக் கொண்டு நிற்கிறான். அவன் தண்டத்தின் சக்தி மறைந்து விட்டதா? அதுவும் அணைந்த நெருப்பு போல தன் தேஜஸை இழந்து விட்டதா?

ஆதித்யர்கள் பன்னிருவரும் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? தபனம்-சுடுவது தான் அவர்கள் இயல்பு. படத்தில் வரைந்து வைத்தவர்கள் போல காணப் படுகிறார்கள்.

மருத் கணங்களுக்கு அவர்களுடைய வேகமே குணம்.  வேகமாக பெருகி அந்த நதி நீர் திடுமென தடைப்பட்டு, திரும்பி சுழித்துக் கொண்டு வருவது போலவும், அந்த தடையால் வேகத்தை இழந்த நதி போலவும் இந்த சப்த மருத் கணங்கள் இருக்கிறார்கள்.

பதினோரு ருத்ர கணங்களுக்கும் என்ன கஷ்டம்?  ஜடைகளும் மகுடங்களும் நழுவி விழுந்து விடும் போலவும், சந்திர கிரணம் எங்கோ தொங்கிக் கொண்டிருக்க முகம் வாடி இருக்கிறார்கள். அவர்கள் ஹூங்காரமே எதிரிகளை விரட்டுமே.  ‘ஹூங்கார சஸ்த்ரா ஹி ருத்ரா:’

உங்கள் அனவருக்குமே நல்ல பதவி இருந்தது. பலவானாக மற்றவர்களுக்கு அபயம் அளிக்கும் நிலையில் இருந்தவர்கள். கையில் அஸ்திரம் இருக்கிறது என்பதற்காக யாரை வேண்டுமானாலும் அடிக்கக் கூடாது என்ற நியமம் தன் புஜ பலத்தில் அதீத நம்பிக்கை வைத்து நிரபராதிகளை அடித்து விடக் கூடாது என்பதற்காக ஏற்பட்டது.  இது ஒரு எச்சரிக்கை மட்டுமே. இந்த நியமத்தை முன்னோடியாக வைத்து அழிக்க வேண்டிய சத்ருக்களையும் அடிக்காமல் விட்டு விட்டீர்களா.

குழந்தைகளே, சொல்லுங்கள்.  என்ன கஷ்டம், எதை நாடி இங்கு வந்தீர்கள்?  என் வேலை படைத்தல். அதிலேயே என் கவனம், ஆற்றல் எல்லாம். என் ஸ்ருஷ்டியில் வந்த ஜீவன்களை சதா காப்பாற்றும் வேலையில் உங்களை நியமித்து இருந்தேன்.  அது தானே உங்கள் பொறுப்பும்.

வாஸவன் மெள்ளச் சொல்ல ஆரம்பித்தான். மந்தமாக அடித்த காற்றிலேயே வாடி விட்ட கமலம் போன்ற முகத்துடன், தன் ஆயிரம் கண்களால் குருவான ப்ரும்மாவைப் பார்த்து பதில் சொன்னான்.   பொதுவாக சஹஸ்ர நயனன் என்றாலும் வெளிப்படையாக அவை தெரியாது. மற்றும் மரியாதை நிமித்தமாகவும் குருவான வாசஸ்பதி, ப்ரும்மாவிடம் தன் இயல்பான இருகண்களுடன் பேசினான்.  அவரும் ஜலஸாசனன்- ஜலஜ நீரில் மலரும் மலர், இங்கு பத்மம்.  கை கூப்பி வணங்கியபடி அவரிடம்  தங்கள் கஷ்டத்தைச் சொல்ல ஆரம்பித்தான். 

பகவானே! நீங்கள் சொன்னது சரியே. எங்களை பொறுப்பு கொடுத்து பதவிகளில் அமர்த்தினீர்கள். அவைகளை எதிரிகள் அபகரித்துக் கொண்டு விட்டனர்.  ஒவ்வொரு உயிரிலும் உங்கள் ஆத்மா உள்ளதே, எப்படி இது வரை நீங்கள் அறியாமல் இருந்தீர்கள்.  உங்களிடம் வரம் பெற்றவன் தான் தாரகன் என்ற அசுரன். மூவுலகையும் ஆட்டி வைக்கும் தூம கேதுவாக வளர்ந்து விட்டான்.  அவன் செய்யும் உபத்ரவம் தாங்க முடியவில்லை.

தாரகனிடம் பயந்து ஆதவனின் வெப்பம் கூட கமலங்கள் மலரத் தேவையான அளவே அவன் தாபம் வெளிப் படுகிறது.  கடோர கிரணன்- அவனுடைய கதிர்கள் கடுமையான வெப்பத்துடன் கூடியது என்று பெயர் தான். தற்சமயம் மந்தோஷ்ணம் – மிக குறைவாகவே அவனுடைய சக்தியை காட்டுகிறான்.

சந்திரனின் கலைகள் இப்பொழுது இல்லை. சதா சர்வ காலமும் அவன் தாரகனுக்கு அனுகூலமாக க்ருஷ்ண பக்ஷம் என்பதையே விட்டு விட்டான்.  மகா தேவனின் தலையில் அலங்கரித்த சந்திர லேகா- சந்திரனின் கலை என்பதே இல்லை.

உப வனங்களில் மலர்கள் உதிர்ந்து விழுந்து விடாமல் கவனமாக வாயு வீசுகிறான். தாள மரங்களின் பெரிய இலைகளை மட்டுமே அசைக்கிறான். விசிறி வீசுவது போல.

நதிகளின் அரசன்  சமுத்திரம். அவனுக்கு உபாயனம்-பரிசாக கொடுக்க ரத்னங்களை உத்பத்தி செய்வதிலேயே முனைந்திருக்கிறது. சமுத்திர ராஜனுக்கு இதுவே கவலை.  முழுமையாக வளர்ந்து பரிசுப் பொருளாக கொடுக்க தயாராக வேண்டுமே என்பதே. 

வாசுகி முதலானவர்கள், தங்கள் முடியில் உள்ள மணிகளால் இரவை பகலாக்கும் வண்ணம் ஒளி விட்டபடி நிற்கின்றன. அணையா விளக்கு, தூண்டவும் தேவையில்லை.

இந்திரன் தானே அவனுக்கு பரிசாரகம் செய்கிறான். -கல்ப வ்ருக்ஷத்தின் பொருட்களை அவன் கேட்ட போதெல்லாம் விபூஷணங்களோ, மற்றும் எந்த உயர்ந்த பொருளோ கொடுக்கத் தவறுவதே இல்லை. இவ்வளவு உபகாரங்கள் தேவர்கள் செய்த போதிலும் பதிலுக்கு அவன் அபகாரமாகவே தண்டிக்கிறான். அவன் செயல்களால் மூவுலகையும் வாட்டி எடுக்கிறான்.

நந்தன வனத்தில் புத்தம் புது தளிர்களுடன் இருக்கும் பூக்களையும், இளம் தளிர்களையும்  தேவ லோக பெண்கள் அலுங்காமல் பறிப்பார்கள். அதை கோடாலியால் வெட்டி சாய்க்கிறான். அவசியமே இன்றி இந்த தேவர்களை வேலை வாங்கவே அவர்களை இரவு முழுவதும் சாமரம் வீச வைக்கிறான். வந்திகள்- இந்திர சபையில் பாடும் பாடகர்கள், அவர்கள் கண்களில் நீருடனே பாடுகிறார்கள்.

மேரு மலை தன் மாளிகையை விட உயரமாக இருக்க பொறுக்காமல், அதன் சிகரத்தை உடைத்து தன் மாளிகைகளில் உத்யான வனங்களில் விளையாட்டுப் பொருளாக வைத்திருக்கிறான். மந்தாகினீ நதியில் திக் கஜங்கள் மூழ்கி விளையாடும். அதுவும் அவனுக்கு பொறுக்கவில்லை. மந்தாகினி நதியில் மட்டுமே மலரும் பொன் நிற கமலங்களை தன் வீட்டு கிணற்றில் போட்டு வைத்திருக்கிறான்.

தேவ லோக வாசிகள் பூ மண்டலத்தைச் சுற்ற விமானங்களில் செல்வதில்லை. அதனால் ப்ரபோ! நாங்கள் விரும்புவது இது தான். அவனை அடக்குங்கள். அது தான் எங்களுக்கு சாந்தியை, அமைதியைத் தரும். மோக்ஷம் வேண்டுபவர்கள், கர்ம பந்தனம் என்பதிலிருந்து விடுவிக்குக் சேனானீ, சேனைத் தலைவன் என்பவனை தாங்கள் படைக்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுதல்.

தேவ சைன்யத்தை முன்னின்று நடத்த தகுதியான வீரன், சேனாபதி வேண்டும். எந்த அசுரன் எங்கள் குலங்களை அழிப்பதே நோக்கமாக எங்கள் வீரர்களை அபகரித்து, கட்டி வைத்து தானே வெற்றி வீரன் என்று கோஷமிடுகிறானே, அவனிடமிருந்து  வெற்றி என்ற ஜயலக்ஷ்மியை மீட்டுத் தரவேண்டும்.

ப்ரும்மா பதில் சொன்னார். பொறுக்கி எடுத்த பதங்களால் அவர்களுக்கு ஆதரவாக, அவர்களின் நன்மைக்கான வாக்குறுதியை அளித்தார்.  மேகம் கர்ஜித்தபின் மழைத் தூறல் போல அந்த வாக்குறுதி தேவ சமூகத்தை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தது.  உங்கள் விருப்பம் கண்டிப்பாக நிறைவேறும். சிறிது காலம் பொறுங்கள். உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற எனக்கு ஒரு ஸ்ருஷ்டி-படைப்புத் தொழிலை செய்ய வேண்டியுள்ளது.

இந்த தைத்யாசுரன், தன் பாக்யத்தின் உச்சத்தில் இருக்கிறான், விஷ வ்ருக்ஷமேயானாலும் ஏதோ காரணத்திற்காக தானே வளர்த்து விட்டது. உடனடியாக சாய்க்க முடியாது. வரம் கொடுத்தவனே நான் தானே.

இந்த அசுரன் தவம் செய்து என்னிடம் என்னை யாரும் கொல்லக் கூடாது என்ற வரம் கேட்டான்.  நியமங்களுடன் ஒரே நினைவாக தவம் செய்தான். உலகமே  அதன் உஷ்ணத்தால் தவித்தது. அந்த சமயம் உலகையும் காக்க வேண்டும் அவன் தவம் செய்வதையும் நிறுத்த வேண்டும் என்ற நிர்பந்தம். அதனால் சம்மதித்தேன்.  அதன் பின் தவம் செய்வதை விட்டு சாந்தமானான்.

தாரகனை யாராலும் ஜயிக்க முடியாது. தூர்ஜடி- மகாதேவனின் மற்றொரு பெயர். அவருடைய தேஜஸுடன் பிறக்கப் போகும் அவர் மகனால் தான் அவன் முடிவு வரும்.  முதன்மையான தேவர் அவருடைய  ஜோதிக்கு விஷ்ணுவோ, நானோ, நிகராக மாட்டோம்.  தமஸ் என்பதே இல்லாத சுத்த சத்வமான பரமாத்மா அவரே. அவரால் முடியாது என்பதே எதுவும் இல்லை.

அவர் வம்சம் வளர என்ன செய்வோம் என்ற வினா எழ பதில் சொல்கிறார்.  உமா ஹிமாத்ரியின் பெண்ணாக வளருகிறாள். அவளை அவரிடம் சேர்ப்பிக்க முயற்சி செய்யுங்கள். மகாதேவரும் தவத்தில் ஆழ்ந்து இருக்கிறார். கட்டை போன்ற அசையாத நிலையில் அவரிடம் யாராலும் நெருங்க முடியாது.  உமாவை அவர் மனதில் ஈடுபாடு கொள்ளும்படி செய்யுங்கள். காந்தம் இரும்பை இழுப்பது போல இழுக்கச் செய்வது தான் ஒரே உபாயம்.   அவள் தான் அவர் மகனைத் தாங்க சக்தியுள்ளவள். ஜலமயமான அவளுடைய சக்தி தாங்கும்.

சிதிகண்டனுடைய ஆத்மா அவளிடம் பிறக்கட்டும். தேவ சேனாபதியாக பதவி ஏற்கட்டும். அசுரனால் சிறை வைக்கப் பட்ட  தேவ ஸ்த்ரீகளின் மற்றும்  தேவர்களுக்கு உண்டான தளையை அறுத்து அனைவரையும் விடுவிப்பான். வருங்கால நன்மை அதில் தான் உள்ளது. இப்படிச் சொன்னவர் உடனே மறைந்து விட்டார்.

தேவர்கள் கூடிப் பேசி கந்தர்பன் என்ற காம தேவனை நினைத்தனர்.  புஷ்ப தனுஷ்- பூக்கள் சுற்றிய அவனுடைய வில். அதனால் அவன் புத்ப தன்வா என்றே அழைக்கப் படுபவன். அந்த வில்லே அழகிய பெண்களின் புருவம் போல வளைந்து இருக்கும். அவன் மனைவி ரதி. அவள் கங்கணங்களே வில். தன் பரம மித்ரனான வசந்தனுடன் (வசந்த பருவ காலம்) மரத்தின் பூவை தன் வில்லில் வைத்துக் கொண்டு அருகில் வந்து நின்றான்.

(இது வரை ஸ்ரீ காளிதாசனின் குமார சம்பவம் என்ற காவ்யத்தின் ப்ரும்மா சாக்ஷாத்காரம் என்ற இரண்டாவது அத்யாயம்)

அத்யாயம்-3

தேவர்களுடன் இருந்த இந்திரன் காமனை வரவேற்றான். மரியாதை நிமித்தமாக ஆனாலும் வந்தவரை வரவேற்பது ஒரே போல இருக்காது என்பது நாம் அறிவோம்.  வாஸவன் ஆசனம் கொடுத்து இங்கு அமர் எனச் சொல்லவும், வணங்கி விட்டு அந்த ஆசனத்தில் அமர்ந்தான்.

ஆணையிடுங்கள் தலைவரே! நீங்கள் விவரம் அறிந்தவர். மனித உலகில் உங்களுக்காக நான் என்ன செய்ய வேண்டும்?  நீங்களோ அந்த:கரணம், மனதில் நினைப்பதை அறிந்து கொள்ளும் சக்தி உடையவர். என்னை நினைத்து அழைத்த காரணம் எதுவானாலும் செய்ய சித்தமாக இருக்கிறேன்.

உங்கள் பதவியை அபகரிக்கும் எண்ணத்துடன் யார் தவம் செய்கிறார்களோ, அவர்களை நான் திசை திருப்பி விடுவேன்.  பொறாமையால் அல்லது பேராசையால் எவர் கடுமையான தவம் செய்து வருகிறனோ, அவன் பெயரைச் சொல்லுங்கள், ப்ரபோ!  யாரானாலும் என் அத்புதமான இந்த வில்லில் அம்பை பூட்டி காயப் படுத்தி உங்களை சரணடையச் செய்கிறேன்.
 உங்கள் சம்மதம் இல்லாமல் யார் அது?   மறு பிறவி வேண்டேன் என்று பயத்துடன் வணங்கி நிற்கிறானா, முக்தி மார்கத்தை தேடுகிறானா? அவனை பெண்களின் அழகிய புருவங்களில் மயங்கி பவம் என்ற இந்த உலக வாழ்க்கையிலேயே உழலச் செய்து விடுகிறேன்.

ஹே ப்ரபோ! சுக்ராசார்யரிடம் நீதி சாஸ்திரம் படித்த ஞானியோ, (அசுரர்களின் குரு சுக்ராசாரியர் – இப்படிச் சொன்னதால் சுக்ராசாரியாரின் மதிப்பு தெரிகிறது. அவரை எதிர்த்து நிற்பதே ஒரு சவால் தான் என அறியலாம் )  எந்த சத்ருவை, அர்த்த, தர்மங்களை நாசம் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள், மழை காலத்து நதி நீர் கரையை உடைத்துக் கொண்டு போவது போல செய்து விடுகிறேன்.

தன் கணவனுடன் மனம் ஒருமித்து வாழும் எந்த கற்புக்கரசியான பெண்ணை அவள் அழகில் மயங்கி அபகரிக்க வேண்டும், அவளே வந்து உங்களை ஆலிங்கணம் செய்து ஏற்றுக் கொள்ளச் செய்கிறேன். இதே போல இந்திரனை புகழ்ந்து பேசுவது போலவே அவனது மோகத்தைப் பறை சாற்றுவது போல அவன் பேசினான்.  வீரனே, தயக்கமின்றி ஆணையிடுங்கள். உங்கள் வஜ்ராயுதம் தேவையில்லை. அதற்கு ஓய்வு கொடுங்கள். என் புஜ பலத்தால் எந்த அசுர சக்தியானாலும் நடுங்கச் செய்து விடுகிறேன். என் வில்லும் அம்பும் அசுரனுடைய வீட்டுப் பெண்களையும் பயந்து நடுங்க செய்து விடுகிறேன்.

ஹே ப்ரபோ! என் பாணங்கள் பூக்களால் ஆனது. மென்மையானது. ஆனால் அதற்காக யோசிக்க வேண்டாம். என் மித்ரன் வசந்தன். அவனுடன் பினாக பாணியான ஹரனையே எதிர்த்து ஜயித்து விடுவேன் (பினாக பாணி உண்மையில் ஈசனுடைய பல ரூபங்களில் மிக பயங்கரமானவர் )  அவருக்கே என் எதிரில் நிற்க தைரியம் வராது மற்றவர்கள் எம்மாத்திரம், என்று தற் பெருமை பேசிக் கொண்டே போனான்.

இந்திரன் செய்வதறியாது ஆசனத்தில் காலை மாற்றி வைத்துக் கொண்டு பதில் சொன்னான். காமனின் அறிவற்ற பேச்சினால் அலுப்படைந்தவன் போல இருந்தான்.

சகே! நீ அனைவருக்கும் சகா என்றே சொல்லப் படுபவன். உன்னை யார் வெறுப்பார்கள் அல்லது எதிர்ப்பார்கள். நீ சொல்வது சரியே.  உன் வில்லுக்கு சமமான வில் யாரிடமும் இல்லைதான். என் வஜ்ரமோ, உன் அஸ்திரமோ,  கடுமையாக  தவம் செய்து பெற்ற வீர்யம் உள்ள  ரிஷிகளிடம் கூட குறி தவறாது அடிக்கக் கூடியதே. அதிலும் உன் அஸ்திரம் சர்வதோ காமி- எங்கும் செல்லக் கூடியது. தன் செயலை தவறாது முடிக்காமல் திரும்பாது என்று அறிவேன். அதனால் தான் ஒரு பெரிய காரியத்தை உன்னிடம் ஒப்படைக்கிறேன்.  எனக்கு சமமானவன் என்பதாலும், நீ இந்த செயலை செய்வாய் என்பதில்  எனக்கு நம்பிக்கை இருப்பதாலும் தான்  உன்னை வரவழைத்தேன்.   மஹா விஷ்ணு சேஷத்தின் தலையில் பூ பாரத்தை அது தாங்கக் கூடியதே என்று தெரிந்து தானே வைத்துள்ளார்.

விருஷாங்கபாணி, – ஹரனின் ஒரு பெயர். நீ மறுக்க மாட்டாய் என்று நம்பிக்கையுடன் சொல்கிறேன். உன் பாணத்தை அவர் மேல் பிரயோகி. நமக்கான யாக பாகம் திரும்பப் பெற இந்த உபாயம் செய்ய வேண்டியிருக்கிறது. (   பூமியில் யாகம் செய்பவர்கள் ஹவிஸாக போடும் யாக பாகத்தை வாங்கிச் செல்ல  தேவர்களின் பெயர் சொல்லி அழைப்பர்.  அந்த ஹவிஸை பெறுவது  தேவர்களின் உரிமை) அதையும் தாரகாசுரன் அபகரித்துக் கொண்டு விட்டான்.  நீயாக சங்கரனின் பெயரைச் சொல்லி விட்டாய் என்பதால் நீ ஒத்துக் கொண்டு விட்டாய் என்றே ஆகிறது.  தாரகாசுரனை அடக்க இதுவே வழி.

உன் வீர்யம் பற்றிச் சொன்னாயே, இந்த தைரியமும், தன்னம்பிக்கையும் தான் ஹரனை நம் நன்மைக்காக திசை திருப்ப பயன் பட வேண்டும். அவரிடம் நமக்காக சேனானி- சேனைத் தலைவன் பிறக்க வேண்டும். தேவர்களை வழி நடத்திச் செல்லக் கூடியவன் நமக்கு தலைவனாக வர வேண்டும். ப்ரும்மா படைக்க சித்தமாக இருக்கிறார். உன் உதவியால் தான் அதுவும் சாத்யமாகும்.  ஹரனோ, சத்யோ ஜாதம் முதலான மந்த்ரங்கள், அங்கம், ஹ்ருதய  நியாசங்களோடு  சங்கல்பம் செய்து கொண்டு தவம் செய்கிறார்.  சமாதி நிலையில் இருக்கிறார். அவருடைய  சமாதியை உன் பாணம் தான் கலைக்கக் கூடியது. 

ஹிமாத்ரியின் மகளாக சதி அங்கு தோன்றியிருக்கிறாள். அவளிடம் அவர் மனம் ஈடுபட வேண்டும். அவர்கள் சேர்ந்தால் தான் நமக்கு சேனானி கிடைப்பான்.  ஆத்மபூவான ப்ரும்மா, அவள் தான் பரமேசனின் மனைவி, அவள் தான் அந்த வீர்யத்தை தாங்குவாள் என்று சொன்னார்.  அதனால் அவர்களிடையில் சம்பந்தம் ஏற்படுத்துவது உன் பொறுப்பு. அவரோ சுத்தமான மனதுடன் தவம் செய்வதில் கட்டையாக அமர்ந்திருக்கிறார்.

குரு- அவள் தந்தையே அவளை மகேசனுக்கு பணிவிடை செய்ய நியமித்திருக்கிறார். ஸ்தாணு- அசைவில்லாதவர் என்று ஈசனைச் சொல்வர். சலனம் இன்றி திடமாக இருப்பவர்.   அப்சர ஸ்த்ரீகள் மூலம் இந்த செய்தி எனக்குத் தெரிய வந்தது.  அதனால் நீ கிளம்பு. தேவ காரியத்தை செய்.  இது தான் உன்னை நான் வரவழைத்த காரணம். இதன் பலன் நம் அனைவருக்கும் என்பதால் நீ உத்சாகமாக போ.  பூமியில் தான் பீஜம் முளைக்கிறது, வளருகிறது என்றாலும் அந்த பீஜம் முளைக்க நீரைத்  தானே வேண்டுகிறது. (பார்வதி அவர் அருகில் இருந்தாலும், பரம சிவனுடைய மனதைக் கவர அவளே போதுமென்றாலும், தற்சமயம்  தேவர்கள் அது வரை பொறுத்திருக்க முடியாமல் தாரகனால் வருந்துகிறோம். அதனால் தான் அவர்களிடையில் உன்னை அனுப்புகிறேன்.  அவர் மனதில் பார்வதியிடம் ஈடுபாடு வரச் செய்.)  

தற்சமயம் தாரகாசுரனிடமிருந்து நம்மை காக்க சக்தியுள்ளவர் பரமேஸ்வரனான ஸ்ரீ ஹரனே.  அவர் மகன் தான் இதைச் சாதிக்க வல்லவன். உன்னை அனுப்பும் நோக்கமும் அவர் மனதில் இந்த உணர்வு வரும்படிச் செய்ய உன் அஸ்திரங்களால் மட்டுமே முடியும். இதற்கு முன்பும் தேவ காரியமாக நீ செய்தாய்.  உனக்கு அபகீர்த்தி என பயப்படாதே. சாதாரணமான செயல்களை செய்பவர் கிடைப்பர். ஆனால் அசாதாரணமான செயல்களைச் செய்பவர் குறைவு, அவர்கள் தான் புகழ் பெறுவார்கள்.

தேவர்கள் அனைவருமாக யாசிக்கிறோம். உன் பாணம் வதைக்காது. அதன் பலன் மூவுலகிலும் உள்ள அனைவருக்கும் நன்மை தரும். உன் வீர்யம் ஆச்சர்யமானது.  இதன் விளைவால் உன் செயல் பாராட்டப் படும் என்பதில் சந்தேகமேயில்லை.  கவலைப்படாதே.

 ஹே மன்மதா! (மனதை மதனம்- கடைவது போல அலைகழிப்பவன் என பதத்தின் பொருள்) உனக்கு துணையாக, மது, மற்றும் உதவி செய்ய மாருதனும் வசந்தனும்  உடன் வருவர்.  நீ அழைக்க கூட வேண்டாம். அவர்களாகவே வருவார்கள்.  ‘ஹே வாயோ, நீ அக்னிக்கு சஹாயம் செய்’ என்று சொல்ல வேண்டுமா என்ன?  சொல்லாமலே அக்னிக்கு வாயு சஹாயம் செய்வது போல.

இந்த செயல் நம்மால் முடியுமா என்ற சந்தேகம் வந்தாலும், உடன் அந்த நண்பர்கள், அன்புடைய பத்னி ரதி இவர்களும் உடன் வர, இது தேவ காரியம், என் உயிரே போனாலும் செய்து முடிக்க வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டவனாக புறப்பட்டான். ஹிமாலய மலையில் ஸ்ரீ சங்கரின் ஆசிரமம்  இருந்த இடம் நோக்கிச் சென்றான்.

அந்த வனத்தில் பல முனிவர்கள் தவம் செய்து கொண்டிருந்தனர். சிலர் சமாதி நிலையில், மற்றும் சிலர் புலனடக்கம் கொண்டவர்களாக சாதனைகளை செய்து கொண்டிருந்தனர். இவர்களுக்கு எதிராக நாம் என்ன செய்யப் போகிறோம்?  தான் எடுத்துக் கொண்ட சங்கல்பம் நிறைவேறும் என்ற நம்பிக்கையே இழந்த நிலையில், வசந்தன் கர்வத்துடன்  அந்த ஸூழ்நிலையை கலைக்கும் விதமான பரவினான்.  பூக்கள் மலர்ந்தும், கோகிலங்கள் கூவியும், ப்ரமரங்கள் ஜங்காரம் செய்வதும் மன்மதனை வசந்தன் வரவேற்பதாக வசந்தனின் செயல்கள். வசந்த காலம் என்பது அகாலத்தில் அங்கு வந்தது.

ஸூரியன் தன் மதிப்பைக் குறைத்துக் கொண்டு ஏன் அகாலத்தில் வட திசை செல்கிறான் என்பதைக் கண்டு தக்ஷிணா ( தென் திசை) பெருமூச்சு விட்டாள் – விருப்பமின்றி மலயமாருதம் – தென்றலை அனுமதித்தாள்.

 வசந்தனின் தர்மமே-இயல்பு – வேணில் காலத்தில், ஸூரியன் சாகசிக நாயகன் எனப்படுவான்.  ஸூரியனின் தாபம் மிக அதிகமாக தெரியும் பருவம் அது.  தக்ஷிணாயனம் என்ற பருவம் தான் – ஸூரியன் தென் திசையில் இருந்த சமயம் ஜீவ ராசிகள் சங்கம காலம் எனப்படும் சமயம் அவன் குபேர திசை என்ற வட திசையில் சஞ்சரித்த சமயம் பஞ்ச பூதங்களின் இயல்பை எதிர்த்து, அதை  வசந்த காலமாக மாற்றியது தவறான செயல் என்பது மட்டுமல்ல மிகவும் அபாயகரமானது. அது எப்படி என்றால்,

ஸூரியன் சாகசம் மிகுந்த நாயகனாக இருக்கும் குபேர திசை வடக்கு. அது குபேரன் பாலிப்பது. அங்கு யக்ஷர்கள் அதிக உயரமோ, அழகோ இல்லாத மக்கள் என்பது பொதுவான கருத்து.  அந்த இடம்  பெண்களுக்கு அனுமதியில்லாத இடங்கள் என்று ப்ரசித்தம்.  மிகவும் கவனமாக ரக்ஷிக்கப் படும் இடம்.  ஏதோ ஒரு பெண், அங்கு போக கிளம்பியவளை, தென் திசையின் காவல் தேவதை, தடுத்தாள். தன் கணவனை வேறு ஒருவள் அடைய முயற்சி செய்தால் சாதாரணமான மனைவிகள் வாயால் தூற்றுவது போல ‘ உத்தராயணே , மலயானிலம் –  உத்தராயணத்தில் மலய மாருதம் எப்படி வரலாம்’ ஸூரியன் வடக்கில் சஞ்சரிக்கும் சமயம் இது, அவன் தக்ஷிணாயனம் -தென் திசையில் மந்தமாக இருக்கும் சமயம் வருவது,தென்றல்.  மலய மலை யிலிருந்து வரும் காற்று அது.    அதனால் மலயானிலம் தக்ஷிணாயனத்துக்கு உரியது. அதை உத்தராயணம் தவறாக அணுகுவதாக காட்சி.  தக்ஷிணா என்பதன் இரு பொருள், சாதுவான  நேர்மையான பெண்,  மற்றொன்று தென் திசை.  அவள் வசந்தனின் மனைவி. தக்ஷிணாயன பருவத்தில் வருவதை  விட்டு உத்தர திசைக்கு செல்வது நியாயமல்ல – இது கவி காளிதாசனின் உவமை.

அசோக மரம் தன் கிளைகளிலிருந்து பூக்களை உதறியது போல எங்கும் மலர்களின் மணம் பரவியது. துணையாக இளம் தளிர்களும் அழகூட்ட வந்து சேர்ந்தன. அழகிய பாதங்களுடன் பெண்கள் வந்து மிதிக்க விரும்புவது போல, அந்த பாதங்களைக் காணத் துடிப்பது போலவும்.  பெண்களின் பாதம் பட்டு அசோகம் பூக்கும் என்பது தாவரவியல்.

மன்மதனுக்கு வசந்தன் வில், மாம்பூ பாணம் என்பது வழக்கு. வசந்தன் வந்து விட்டானே என்று மாமரம் பூக்கவும், வண்டுகள் திகைத்து தாங்களும் அவசரம் அவசரமாக மாம்பூக்களை வட்டமிட்டன.

கர்ணிகாரம் என்ற பூ. வாசனையில்லாத வர்ண மயமான மலர் அது.  அது தனக்கு மணம் இல்லையே என்று வருந்தியதாம். படைத்தவன் பார பக்ஷமாக குணங்களை பார்க்காமல் தோன்றியபடி தகுதி இல்லாதவர்களுக்கு (இங்கு மணம்) செல்வத்தை கொடுத்து விடுகிறான் என்று புலம்பின.  சந்திரனின் களங்கம், கர்ணிகார புஷ்பத்தில் மணம் இன்மை, என்பவை சில ப்ரும்மாவின் பக்ஷபாதங்கள்.

 பலாச மரத்தின் இலைகள் தான் சிறப்பு. இடையில் சிவந்த நிறத்தில் புஷ்பங்கள் கிம்சுகம் எனப்படும். வசந்தன் வந்து விட்டான் என்று வனம் முழுவதும் பூக்கள் மலர்ந்தும் மனோஹரமாக இருந்தன. உவமானம்:பலாச புஷ்பங்கள் வனதேவதையாக வசந்தனை வரவேற்க காத்திருக்கும் சமயம், கணவனை எதிர் பார்த்திருக்கும் நாயிகா, பொறுமையின்றி நகத்தை கடிப்பது போல.

மாமரங்கள் பூத்துக் குலுங்கின. செந்நிற வண்டுகள் மொய்க்க சிவந்த அதரங்களுடன் இருக்கும் பெண் போல இருந்தன.  ப்ரியால என்று ஒரு மரம். ராஜதனம் என்பது அதன் மற்றொரு பெயர். அதன் மஞ்சரி, கொத்தாக இருக்கும் மகரந்தம் நிறைந்த பூக்கள்,  இலையின்றி இருப்பதைக் கண்டு மான்கள் திகைத்தன. அந்த பருவத்தில் காணாத அதிசயம் என்பதால். கோகிலங்கள் மதுரமாக கூவின. அது தான் மன்மதனின் குரல். அதுவரை பனியினால் அடிபட்ட இலைகள், நீர்த் துளிகளால் நிரம்பின.

தபஸ்விகள், ஸ்தாணுவின் அருகில் இருந்து தவம் செய்யும் நோக்கத்தோடு அங்கு இருந்தவர்கள் இந்த அகாலத்தில் வசந்த பருவம் வந்ததைக் கண்டு திகைத்தனர்.  அது நல்லதல்லவே. எனவே மனக்லேசம் அடைந்தவர்களாக ஆனார்கள்.

மதனன் தன் மனவி ரதியுடன் வந்து தன் வில்லில் பாணத்தைக் கோர்த்ததுமே அந்த இடமே அங்கிருந்த அசையும் அசையா பொருட்கள் அனைத்தும் அவன் வசம் ஆகின.  ஸ்த்ரீ புருஷ ஜாதிகள், விலங்குகளோ, மற்றவைகளோ இணைந்தவைகளாகவே  தென்பட்டன.

த்விரேஃபம்- இரண்டு இறக்கைகள் மட்டுமே உள்ள வண்டுகள், பூக்களில் நிரம்பிருந்த தேனைக் குடித்து மயங்கின. க்ருஷ்ண சார என்ற மான்கள் தங்கள் பெண் மானைத் தொடர்ந்து சென்றன.  ஆண் யானைகள் கண்டூஷ ஜலம், அவைகளின் மத ஜலம் பெருக, பெண் யானையான கரேணு என்பவைகளைத் தேடின. யானைகளின் மதஜலம் பங்கஜத்தின் மகரந்த வாசனையைக் கொண்டிருக்கும் என்பது ஒரு செய்தி.

கிம்புருஷர்கள் என்பவர்கள், பாதி பாடிக் கொண்டிருந்தவர்கள் தொடர முடியாமல் நிறுத்தி விட்டனர். மரங்கள் தங்களைச் சுற்றியிருக்கும் கொடிகள் திடுமென பூத்து கனமாக மேலே விழுவதாக உணர்ந்தன.

பகவான் ஹரன் திடுமென அப்சர பெண்கள் பாடுவதைக் கேட்டும் தன் சமாதி கலையாமலே இருந்தார். தன்னை அடக்கியவர்கள், அனிச்சையாக எதுவும் செய்வதில்லை என்பர். நந்திகேஸ்வரர் லதா க்ருஹத்தின் வாயிலில் வந்து நின்றபடி வாயில் விரலை வைத்து, சபலத்துக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று ஆணையிடுவது போல நின்றது.  அதைக் கண்டு ப்ரமத கணங்கள் மட்டுமல்ல, வண்டுகள் மாமரத்தை விட்டு விலகின, முட்டையிடும் வர்கங்கள் பக்ஷிகள், ஊர்வனவைகளும் ஸ்தம்பித்து நின்றன. மிருகங்களும் சாந்தமாயின. நந்திகேஸ்வரனின் ஆணையை சிரமேற் கொண்டு அந்த வனமே, சித்திரத்தில் வரையப் பட்டது போல் ஜீவராசிகள் அசைவின்றி நின்றன. 

காமன் நந்தியின் கண்ணில் படாமல் ஒதுங்கிச் சென்று, பூத பதி இருந்த மேரு சிகரம் என்ற இடத்தை நோக்கிச் சென்றான். யாத்திரையில் எதிரில் சுக்ரனைக் கண்டால் விலகிப் போவது போல நகர்ந்தான்.  ‘சுக்ரன்,புதன், அங்காரன் இவர்கள் எதிர் பட்டால் இந்திரனுக்கு சமமான அரச சைன்யமும் திருப்பி விடப் படும்’ என்றும், அதை தவிர்க்க வேண்டும் என்பது நியதி. சுக்ரனுக்கு சமமான  நந்தியை வணங்கி விட்டு ஹரனை வணங்குவது இருக்க, அவரை தவிர்த்து சென்றதற்கு காரணம் இதுவே.

தேவதாரு மரங்களின் நடுவே, சதுரமான  மேடையில் சார்தூல என்ற புலித் தோலையணிந்து, சமாதியில் மனம் ஒன்றி இருந்த பகவான் த்ரயம்பகனைத் தரிசித்தான். தன் ம்ருத்யு சமீபத்தில் உள்ளது என்பதை அறியாதவனாக.

அடுத்த ஆறு ஸ்லோகங்களும் பகவானின் தவக் கோலத்தை வர்ணிப்பது.

வீராசனத்தில், சலனமின்றி நேராக கோடு போல நிமிர்ந்து அமர்ந்த நிலையில், தோள் பட்டைகள் விசாலமாக  விரிந்து கீழ் நோக்கிய முகமும், மடித்த கால்களில் பத்மம் போன்ற கைகளை கோர்த்தபடி இருந்தவரைக் கண்டான். (வீராசனம்: வலது  பாதம் இது துடையிலும், இடது பாதம் வலது துடையிலும் ஸ்திரமாக வைத்து அமருதல்.  அதே போல மேல் நோக்கி விரித்த கைகளை ஒன்றின் மேல் ஒன்றாக மடி மேல் வைத்து,  திடமாக தியானம் செய்தல் – யோக சாரம் என்ற வசிஷ்டரின் நூல்)

ஸர்ப்பங்கள் அலைவது போன்ற ஜடைகள், காதுகளில் அக்ஷமாலை, கழுத்தின் நீல நிறம் அதில் ப்ரதி பலித்து ஒளி விட, ம்ருக சர்மம் க்ருஷ்ண ம்ருகத்தின் தோலையே உடையாக கழுத்தில் முடிச்சாக கட்டியவராக, 

புருவங்களின் மத்தியில் இமைகள் தாழ மூடிய கண்கள் மூன்றும்  கீழ் நோக்கி நாஸிகாக்ரம் – மூக்கின் நுனியை குறியாக வைத்து கீழ் பார்வையாக வைத்தபடி இருந்தவர். (மனம் அலை பாயாமல் ஒரே புள்ளியை நோக்க வசதியாக கீழ் நோக்கிய பார்வை, மூக்கின் நுனி வழியாக பார்ப்பது போன்ற நிலையில் நிறுத்திக் கொண்டு தன்னையே தன் ஹ்ருதயத்தில் தியானம் செய்ய வேண்டும்  என்பது யோக சாரம்)

மழையே இன்றி ப்ரவாஹம் போன்ற ஓசையுடன் செல்லும் மேகங்கள் போல, ப்ராண அபான வாயுக்களை தன் வசமாக்கிக் கொண்டு விட்டதால் மழை பொழியும் வேலை இல்லாத  மேகங்கள் போல் என்றார்.  அதே போல கரு மேகம் போல நிறைந்த நீருண்ட  மழை மேகங்கள் போலவும்,  அலைகளை நிறுத்தி அசையாமல் இருக்கும் தடாகம் போலவும், அபான வாயுவை நிறுத்தி காற்றே இல்லாத அசையாது இருக்கும் விளக்கு போலவும்  அவர் சரீரம் இருக்கக் கண்டான்.  ( உள் மூச்சு தடைபட்டதால் சரீரத்தில் வாயுவின் கதிகள் இரண்டுமே பாதிக்கப் படும்.  ப்ராணவாயு உள் நுழைந்து வெளி வருவது அபான வாயுவை கீழ் நோக்கி வெளியேறச் செய்ய வேண்டும்.  அதனால் இரண்டும் தங்கள் செயலைச் செய்ய முடியாமல் தேங்கின என்பதாக).

கபாலத்துக்கும் கண்களுக்கும் இடையிலான வழியில் ஜோதி – தீப்பறக்கும் தலையின் கேச ரோமங்கள், தாமரைத் தண்டைப் போல சுகுமாரமாக இருந்தன.  இளம் சந்திரனின் ப்ரகாசத்தில் ஒளிக் கற்றைகளாக தெரிந்தன.  ( சிரஸில் ப்ரும்ம ரந்த்ரம்- என்று உள்ளது. அதன் வழியாக ஜோதி வெளிப்படும் என்பது யோக முறையில் சொல்லப் படும் ஒன்று. அந்த ஜோதி சந்திரனின் மங்கிய ஒளியை பரிகசிப்பது போல என்று வர்ணனை)

நவத்வாரம் உடைய சரீரத்தில் மனம் என்பதை முழுவதுமாக அடக்கி, சமாதிக்கு அனுகூலமாக எந்த அக்ஷரத்தை வேதம் அறிந்தவர்கள் அறிவார்களோ, அந்த ஆத்மாவை தன் ஆத்மாவுடன் கலந்து காண்பவராக – ( சரீரத்தில் மனம் தான் சலனத்துக்கும், செயல்களுக்கும் காரணம். அதை தன் வசப் படுத்திக் கொள்ளாத வரை மனதின் செயலான சுக துக்கங்கள் என்ற இரட்டைகளின் பாதிப்பை தவிர்க்க முடியாது. இப்படி மனோ நிக்ரஹம்- மனதை வசப் படுத்தியவர்களுக்கே தன்னிடமே உள்ள ஆத்மா நிதர்சனமாகத் தெரிய வரும் என்பது யோக முறை).

இப்படி யோக நிஷ்டையில் இருந்தவரை ஸ்மரன் என்ற காமன் பார்த்தான்.  இந்த ரூபத்தில் இவ்வளவு அருகாமையில் இருந்து காண்பது மனசால் நினத்துக் கூட பார்க்க முடியாது என்பதால் காமனின் கைகள் நடுங்கின. பயத்தால் திகைத்தவன் கை நழுவி விழுந்த தன் வில்லையும் அம்பையும் கூட அறியவில்லை. இனி எந்த ஆற்றலும் பயன் தராது என்று நம்பிக்கையிழந்த  மன நிலையில் இருந்தவனை,  அந்த வனத்தின் தேவதை போல இருந்த பார்வதி, தன் சகிகளுடனும், பணிப் பெண்களுடனும் வந்து கொண்டிருந்தவள் கண்டாள்.  அவன் யார் என்பதை அடையாளம் கண்டு கொண்டாள்.

அவள் உயர் மணியான பத்ம ராகம் என்பதை தோற்கடிக்கும் அசோக புஷ்பத்தை ஆபரணமாக அணிந்திருந்தாள். பொன்னின் நிறத்தை எடுத்துக் கொண்டு விட்ட கர்ணிகார புஷ்பங்கள், முத்துக்களுக்கு சம மான நிர்குண்டீ என்ற புஷ்பம், இவைகள் அவளை அலங்கரித்தன.  பூக்கள் குவியலாக மலர்ந்த கொடிகள் போல அவள் ஸ்தனங்களைச் சுற்றி அணிந்திருந்த ஆடை அவளை கொடியாகவே காட்டியது. இளமையின் ராகம், இளம் சூரியனுடைய ஒளியைக் கொண்டு இருந்தது.  நடமாடும் கொடி போல இருந்தாள்.

கீழே விழுந்த மன்மதனனின் வில்லின் மறு பாதி போல கேஸர புஷ்பங்களால் செய்த அவளது இடையில் மேகலா என்ற ஒட்டியாணம் என்ற ஆபரணம் நடக்க நடக்க நழுவியதை கைகளால் தூக்கிக் கட்டியபடி இருந்தவளைக் கண்டான்.

அவள் அருகில் வந்து அவள் மூச்சின் வாசனையை நுகருவது போல வண்டுகள் மொய்த்தன.  அவன் மனைவி ரதியை விட அழகானவள் எனவே ரதி தான் தோற்றதாக நினைத்து வெட்கினாள். ஸூலி- ஸூலத்தை ஆயுதமாக உடைய ஸ்ரீ ஹரன், ஜிதேந்திரியன். தன்னை வென்றவன்.  அவரிடம் தன் செயல் பலிக்குமா என்ற ஐயம் கொண்டிருந்த  மன்மதன் சிறிது நம்பிக்கை வரப் பெற்றான்.

அவள் தன் மணாளனாக வரித்த பரம் பொருள், தன் யோக சித்தியின் முடிவில் இருப்பவர், தானே ஜோதி மயமாக விளங்குவதைக் கண்டாள். தியானத்தின் முடிவான சமாதி நிலையில் ஜோதியை அடைந்தவர் மெள்ள இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அதே சமயம் பூமியைத் தாங்கிக் கொண்டிருந்த சேஷ நாகங்கள், ஏதோ காரணத்தால் லேசாக ஆடின. மெள்ள மெள்ள தன் சமாதியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த பகவான் ஸ்ரீ ஹரன், தன் வீராசனம் என்பதை விடுவித்தார். ப்ராணனை மேல் எழுப்பிய ரீதியிலேயே வரிசையாக கீழ் முகமாக கொண்டு வந்து சகஜ நிலைக்கு வரவேண்டும் என்பது யோக முறை. அவர் சுய நிலை அடைந்தவுடன்,  நந்திகேஸ்வரர் வந்து வணங்கினார். பார்வதி தேவி வந்திருப்பதை தெரிவித்தார்.  அவரும் தன் புருவ அசைப்பால் அனுமதி அளிக்க வெளியில் சென்று பார்வதி தேவியை அழைத்து வந்தார்.

தானே பறித்து கொண்டு வந்த இளம் தளிர்களையும், மலர்களையும் சகிகள் கையிலிருந்து வாங்கி அவருடைய பாதங்களில் சமர்ப்பித்து விட்டு சிரசால் வணங்கி எழுந்தாள். நீல நிற குழல் கற்றைகள், அதில் ஸூடியிருந்த

கர்ணிகாரம் நழுவியது.  தலை குனிந்து வ்ருஷபத்வஜன் என்ற பகவான் பாதங்களில் வணங்கினாள். தலையில் சூடியிருந்த மலர்களும் தளிர்களும் அவர் பாதங்களில் தானே விழுந்தன. அவரும் ஆசீர்வதித்தார். ‘அனன்யபாஜம் பதிமாப்னுஹி’ உன்னைத் தவிர மற்றொரு பெண்ணை ஏறிட்டு கூட பார்க்காத பதியை அடைவாய் என்ற ஆசீர்வாதம்  பொதுவாக பெரியவர்கள் இளம் பெண்களுக்குச் சொல்வது. மகாத்மாக்கள் யதேச்சையாக சொன்னால் கூட அது சத்யமாகவே ஆகி விடும் என்பது கண்கூடு.

காமன் இது தான் சமயம் என்று தானாகவே நெருப்பில் விழும் விட்டில் பூச்சி போல உமாவுடன் சேர்த்து ஸ்ரீ ஹரனை குறி வைத்து தன் வில்லில் அம்பை பொறுத்த சரியான தருணம் வரும் என்று எதிர் பார்த்தவனாக, தயாராக நின்றான்.

கௌரி, கிரீசனுக்கு அணிவிக்க மந்தாகினி நதியில் மலர்ந்த மலர்களிலிருந்து பீஜங்களை எடுத்து தயாரித்த ஜப மாலையை சமர்ப்பித்தாள். அந்த பீஜங்கள் ஆதவனின் கிரணங்களால் உலரச் செய்யப் பட்டிருந்தன- (தாமரை விதைகளை எடுத்து உலர்த்தி ஜப மாலை தயாரிப்பார்கள்.)  அவள் கரங்களின் தாம்ர வர்ணமும் அத்துடன் சேர்ந்து வண்ணக்கலவையாக இருந்தது என்று கவியின் வர்ணனை.

முக்கண்ணன் அதை ஏற்றுக் கொள்ள முனைந்த அதே சமயம் காமனின் சம்மோஹனம் என்ற  பாணத்தை தன் வில்லில் பொருத்தி விட்டான்.  ஹரனும் ஒரு நொடி சபலத்துக்கு ஆளானது போல அவன் நினைத்தான்.   கௌரியின் அழகிய அதரங்களைப் பார்த்தும் ஹரன் சலனமடையாமல் இருப்பாரா என்ற அவனது நம்பிக்கை, அவர் கண்கள் கௌரியை அன்புடன் பார்த்ததாக எண்ண வைத்தது.  சந்திரோதயம் கடல் அலைகளை  துள்ளி குதிக்கச் செய்வதில்லையா, அது போல.  அவர் தன் முக்கண்களாலும் கௌரியைப் பார்த்தார்.

கௌரியும் சற்று வெட்கத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.  நேருக்கு நேர் கண்டதால் வந்த நாணமும் மகிழ்ச்சியுமாக.(இதுவரை  கட்டையாக சமாதி நிலையில் இருந்தவர் தன் நிலைக்குத் திரும்பியதை இப்பொழுது தான் காண்கிறாள் என்பதால்)  இருவருமே சலனம் அடைந்தனர் என்பது பொருள்.

இதற்குள் ஸ்ரீ ஹரன் உடனே தன் உணர்வுகளை கட்டுப் படுத்திக் கொண்டு, என்ன காரணம் என்று அறிய தன் விழிகளைச் சுழல விட்டார்.  நால் திசைகளிலும் தேடுவது போல பார்த்தார்.

ஆத்மயோனி-மனோ பவம் -இவை மன்மதனின் பெயர்கள். மனதில் தோன்றுபவன், ஜீவன்களுடன் அவர்கள் பிறவியிலேயே உடன் இருப்பவன் என்ற பொருளில். அவனைக் கண்டார். இடது கண் பார்க்கும் இடத்தில் தன் வில்லில் முஷ்டியை வைத்தவனாக, தன் இடது கால் முட்டியில் வில்லை சாய்த்து வைத்துக் கொண்டு,   சற்றே வணங்கிய உடலுடன், அழகிய வில் சக்ரமாக சுற்றி அம்புகளை பிரயோகிக்க வசதியாக வைத்துக் கொண்டு, சௌம்யமான கோதண்டத்துடன் எய்யத் தயாராக இருந்தவனைக் கண்டார்.

இதுவரை தவமே ப்ரதானமாக இருந்தவர், அடக்கி வைத்திருந்த மன்யு-கோபம் அவருடைய புருவ வளைவில் தெரியக் கண்ட மூன்றாவது   நெற்றிக் கண் தானாகவே க்ருசாணு என்று அழைக்கப் படும் அக்னியை வெளி விட்டதோ,  பள பளவென்ற ஜ்வாலையுடன் அக்னி தேவன்  அதிலிருந்து வெளிப் பட்டான்.

வானத்தில் மருத் கணங்கள் ப்ரபோ! இந்த கோபம் வேண்டாம், சம்ஹர, அடக்குங்கள், அடக்கிக் கொள்ளுங்கள் என்று அலறினர்.  இந்த எச்சரிக்கையை அவர் செவி மடுக்கும் முன்பேயே அந்த ஜ்வாலை மன்மதனை பஸ்மமாக ஆக்கி விட்டது.

இந்த ஆரவாரங்களில் ரதி மூர்ச்சையானாள். எதிர் பாராத நிகழ்வுகள், அதன் பலா பலன்கள் எதையும் உணரும் முன் அவள் மூர்ச்சையானதே ஒரு விதத்தில் அவளைக் காப்பாற்றி விட்டது போலும்.

தீவிரமான தன் தவம் தடை பட்டதால் அந்த க்ஷணமே ஹரன் கண்ணுக்கு புலப் படாமல் மறைந்தார்.   அவருடன் பூத கணங்கள், ப்ரமத கணங்களும் மறைந்தன.

சைலாத்மஜாவை வெட்கம் ஸூழ்ந்தது. தந்தையின் பெருந்தன்மையும், தன் பிறப்புமே அவமதிக்கப் பட்டதாக வருந்தினாள்.  கொடி போன்ற தன் உடலையே வெறுத்தாள். சகிகளுக்கு முன்னால் என்பதால் லஜ்ஜை மிக அதிகமாகியது. எதுவும் பேசாமல் வீட்டை நோக்கி நடந்தாள்.  ருத்ரனின் நடவடிக்கையால் பயந்து விட்ட மகளை அணைத்து தந்தை ஹிமவான் ஆறுதல் கூறினார்.  தேவ லோகத்து யானை தாமரை மலரை கொய்து  கையில் வைத்திருப்பது போல பூவினும் மென்மையான தன் மகளைத் தாங்கிய படி வேகமாக அந்த இடத்தை விட்டு விலகினார்.

(இதுவரை  ஸ்ரீ காளிதாசனின் குமார சம்பவம் என்ற மகா காவ்யத்தில், மதன தஹனோ என்ற மூன்றாவது அத்யாயம்.) 

அத்யாயம்-4

மூர்ச்சையடைந்த ரதி கண் விழித்ததும், தாங்க முடியாத வேதனை அடைந்தாள். கண்கள் பார்க்கும் சக்தியையே இழந்தாற் போல இருந்தன. நடந்ததை எண்ணிப்பார்த்தவள், காமனும் கூட மரிப்பானா என்ற நம்பவே முடியாமல் திகைத்தாள். ஹா என் உயிருக்குயிரான நாதா!  சுற்று முற்றும் பார்த்தவள் கண்ணில் பட்டது மனித  உடலின் வடிவில் கிடந்த காமனின் பஸ்மம் மட்டுமே.  ஹரன் விழித்து எழுந்த பின் நடந்ததை மனதில் கொண்டு வர முயற்சித்தாள்.  புழுதியியிலே விழுந்து புரண்டாள். பூமியை அணைத்தபடி ஓவென்று கதறினாள்.  அழகனான காமன் தன் கணவனாக இருக்க சுகமாகவே இருந்து பழகியவள், இந்த நிலையில் உன்னைப் பார்த்தும் என் ஹ்ருதயம் வெடிக்கவில்லையே, ஆ பெண்களின் மனம் என்ன கல்லால் ஆனதா என்றாள்.

உன்னை அண்டியே வாழ்ந்தவள். உலகில் வேறு எதையும் அறிந்து கொள்ளவில்லையே,  எப்படி வாழ்வேன்?  வேகமாக வந்த வெள்ளம், நதியின் கரைகளை உடைத்துக் கொண்டு போகும் பொழுது அதில் இருந்த கமலங்களையா விட்டு வைக்கும் ? க்ஷண நேரத்தில் நான் அந்த கமலங்கள் போல தூக்கி எறியப் பட்டு விட்டேன்.

எந்த நிலையிலும் என் கோரிக்கையை நீ நிறை வேற்றாமல் இருந்ததில்லையே. நானும் தவறாக எதுவும் செய்யவில்லையே.  ஏன் என் எதிரில் வராமல் என்னை வருத்துகிறாய்.

வேறு ஒருவள் பெயரைச் சொன்னாய் என்பதற்காக என் மேகலா -ஒட்டியானம் என்ற ஆபரணத்தால் கட்டியதாலா, என் குண்டலங்கள் உன் மேல் காயப்படுத்தினவா, அதனால் கோபித்தாயா? உன் ஹ்ருதயத்தில் வசிப்பவள் என்று மற்றவர்களிடம் சொல்வாயே, அது வெறும் வார்த்தைக்காக சொன்னதா? தற்சமயம்  உடலே இன்றி அனங்கனாக கிடக்கிறாயே. பரலோகத்தில் புது பெண்கள் கிடைப்பார்கள் என்று என்னைத் துறந்து விட்டாயா?  நான் மட்டுமா, உலகம் முழுவதும் உன் அதீனத்தில் தானே சுகம் அனுபவிக்கிறார்கள்.

உன்னை நம்பித்தானே இளம் பெண்கள் தங்கள் நாயகர்களைத் தேடிச் செல்வர்.  இருளானாலும் பயப்படாமல் செல்வர். இனி இந்த ஆண் பெண் பரஸ்பரம் அன்பு செலுத்துவது கூட இயலாதே. உலகம் என்ன ஆகும்?

காமன் என்று ஒருவன் இருந்தான் என்று உன் பெயர் மட்டுமே உலகில் எஞ்சி இருக்கப் போகிறது. உனக்கு ஈடாக வேறு எவர் வரமுடியும்?  பசுமையும், இளம் சிவப்புமாக மாமரத்தில் பூத்துக் குலுங்கும் பூக்கள் உன்னைத் தேடப் போகின்றன.  உன் வில்லின் நாணாக இருக்கும் வண்டுகள் எங்கு செல்லும்?  என்னிடம் வந்து கேட்டால் என்ன சொல்வேன்?  நினைத்து நினைத்து நான் இழந்தது என் வாழ்வு மட்டுமா, ஒவ்வொரு நாளும் நாம் வாழ்ந்த வாழ்க்கையை அணு அணுவாக நினைவில் வைத்திருக்கிறேனே,  அதுவே என்னை வாட்டுகிறதே. நீ சூட்டி விட்ட மலர்கள் என் தலையில் இன்னமும் இருக்கின்றன. கைகளிலும் மற்ற அங்கங்களிலும் நீ பூட்டி விட்ட ஆபரணங்கள் அந்தந்த சந்தர்பத்தை நினவுறுத்துகின்றன.

எந்த அளவு மென்மையாக என்னை அரவணைத்தாய் என்பதை நினைத்தால் என் மனமே உடைந்து விடும் போல வலிக்கிறது. என்னை வருந்தும் படியாக நீ விட்டதேயில்லையே. பாதங்களில் லாக்ஷா ரஸம் இல்லாமல் நான் இருந்ததேயில்லையே. இனி யார் அதை கவனிக்கப் போகிறார்கள்.

இதோ நானும் தீக்குளித்து உன் அருகில் வந்து விடுகிறேன். விட்டில் பூச்சிகள் செய்வதில்லையா. தெரிந்தே தன்  பிரியமான நெருப்பில் விழுகின்றனவே. மற்றவர்கள் இறந்தால் உடல் இருக்கும். அது கூட இல்லையே.

வளைந்த வில்லை சீராக்கி கொண்டு, கால் முட்டியில் வைத்துக் கொண்டு, வசந்தனைப் பார்த்து, பின் என்னையும் பார்த்து சிரித்தாயே, அது கண் முன் நிற்கிறது. உனக்காக பூக்களைத் தொடுத்து வில்லை செய்து கொடுத்து அனவரதமும் உடன் இருக்கும் வசந்தன், அவனையும் காணோமே,  பிரிய சகா, உன்னை பிரியமுடியாமல் உடன் வந்து விட்டானா?  இதை கேட்ட வசந்தன் வந்தான். பதியை இழந்து வருந்தி புலம்பும் அவளுக்கு சமாதானம் சொல்ல முயன்றான்.

அவனைக் கண்டதும் ரதி வாய் விட்டு அழுதாள்.  மார்பில் அடித்துக் கொண்டு அலறினாள். தன் மனதிற்கு உகந்த உறவினர்களைக் கண்டால், வடிகால் கிடைத்தது போல  துக்கம் அதிகமாவது உலகில் இயல்பே.  வசந்தா! இதோ பார்,  உன் சகாவின் நிலைமையைப் பார்.   வெறும் சாம்பலாக, பறக்கிறது.  பூமியில் இறைகிறது.  நினைவில் இருப்பவன் ஸ்மர என்றும் மனோபவன் என்றும் உன் பெயர். உன் சகா வந்திருக்கிறானே பார்த்து வரவேற்று பேசு.  மனைவி மக்களை விட நண்பன் அதிக நெருக்கமானவன். இப்படி ஒரு நெருங்கிய நண்பன் யாருக்கு கிடைப்பான்?  இவன் அருகில் இருந்ததால் தானே உன்னால் உலகம் முழுவதும் தாமரைத் தண்டு போன்று மருதுவான உன்  ஆயுதத்தை கையில் வைத்துக் கொண்டு உலகையே ஆக்ரமிக்க முடிந்தது.  

வசந்தா! உன் சகா போனவன் தான்.  இனி திரும்பப் போவதில்லை. என் மேல் அவன் தூசி தான் படிந்திருக்கிறது.  எரியும் விளக்கை அணைத்து விட்ட காற்று  திரியை விட்டுச் செல்வது போல என்னை விட்டு விட்டு போய் விட்டான்.  வசந்தா! விதி இவ்வளவு வலியதா? காமன், மதனன்  என்று  உயர்வாக சொல்லியும், என்னில் பாதி என் மனைவி என்றும் சொல்லி என்னை நம்ப வைத்து, உதறி விட்டுப் போவானா ? மிகவும் நம்பி சால விருக்ஷத்தை சுற்றிப் படர்ந்திருந்த கொடி, மரத்தை யானை அசைத்து தள்ளிய பொழுது கீழே கிடப்பது போல என் கதி ஆகி விட்டதே.  வசந்தா! நீ ஒரு உதவி செய்வாயா? என்னையும் என் பதியிடம் சேர்ப்பித்து விடு. உறவினனாக இந்த உதவியைச் செய். 

சந்திரிகா – சந்திரனின் கிரணம் சந்திரனின் ஒளியால் தானும் ஒளி பெற்று புகழப் படுகிறது.  சந்திரன் அஸ்தமித்தால் தானும் உடன் சென்று விடுகிறது.  மின்னல் மேகத்தினால் தோன்றி அத்துடனேயே மறைகிறது. பெண்கள் மட்டும் என்ன விதி விலக்கா? பதியையே நம்பி வாழும் பத்னிகளும் உடன் செல்வது தானே நியாயம்?  நானும் என் பிரியமான பதியினால் அனுபவிக்கப் பட்டவள். அவனாலேயே, அவனுக்காகவே வாழ்ந்தவள். இந்த அக்னி என் கண்ணுக்கு புத்தம் புது தளிர் போல தெரிகிறது. இதில் வீழ்ந்து என் உடலை தியாகம் செய்கிறேன்.

வசந்தா! நீ அறிவாய். எங்கள் மண வாழ்க்கையில் நீ நிறைய உபகாரம் செய்திருக்கிறாய். அதே போல இப்பொழுது என் விருப்பத்தை நிறைவேற்று.  எனக்கான சிதையை தயார் செய்.  நான் இல்லாமல் உன் சகா என்ன செய்வான். அவனுக்காக செய். உனக்கும் ஒரு வசதி, இருவருக்கும் சேர்த்து ஜலாஞ்சலி செய்வாய்.  அந்த நீர்க் கடனை பரலோகத்திலும் இருவருமாக ஏற்போம்.  சிரார்தம் செய்யும் பொழுது, மாம்பூவை கண்டிப்பாக சேர்த்துக் கொள்.  அது அவனுக்கு பிடித்தமானது.

இப்படி சொல்லிக் கொண்டே, தன் தேகத்தை தியாகம் செய்யத் துணிந்து விட்டவளை வானத்தில் இருந்து ஒரு குரல் கலைத்தது.  வற்றி விட்ட குளத்தில் இருக்கும் மீன், உயிரே  போகும் நிலையில் மழை ஜலம் ஒரு துளி தன் மேல் விழுந்தால் எப்படி மகிழுமோ அது போல மகிழ்ந்தாள்.

‘குசுமாயுத பத்னி! ரதே! உன் கணவன் வெகு நாட்கள் இப்படி அணுக முடியாதவனாக இருக்க மாட்டான். சற்று பொறு. உன்னிடம் வந்து விடுவான்.  உன் கணவன் ஸ்ரீ ஹரனின் கண்களின் ஜ்வாலையில் விழுந்தான். விட்டில் பூச்சி போல். இது ப்ரும்மாவின் செயல். பரமேஸ்வரனுடைய மகன் தேவ காரியத்திற்காக பிறக்கச் செய்ய வேண்டும். அதனால் இந்திரிய நிக்ரஹம் செய்து தவமே செய்து கொண்டிருந்தவரை  எழுப்ப உன் பதியை அனுப்பினார்.  அகாலத்தில் எய்த செயல் அதனால் ஈஸ்வரன் தண்டித்தார்.  ப்ரக்ருதி என்ற இயற்கையை மீறக் கூடாது என்பதும் ஒரு காரணம்.

அவர் பார்வதியை மணந்து கொள்வார்.  அவளும் தவம் செய்து அவரை பெறுவார். இப்படி மனம் ஒருமித்து அவர்கள் இணையும் சமயம் காமன் உயிர் பெறுவான்.  மேகத்தில் மின்னல் இணைந்து மழையை பொழிவிக்கிறது. அது போல மன அடக்கத்துடன்  உறுதியாக இருப்பவரும், மனதில் கருணை உடையவரே. (கல்லுக்குள் ஈரம் என்பதன் காளிதாஸனின் சம்ஸ்க்ருத சொல் -अशनेरमृतम् ) அதனால் ஸோபனே! பெண்ணே! உன்னை ரக்ஷித்துக் கொள்.  ஸூரியன் குடித்த ஜலமே, தபித்த வேணிற்காலம் முடிந்த பின்,  மழையாக பின் நதியாக ப்ரவஹித்து உலகுக்கு நன்மையைச் செய்கிறது.

இவ்வாறு கண்ணுக்குத் தெரியாத அசரீரியைக் கேட்ட  வசந்தனும் மனம் மகிழ்ந்தான்.   ரதியை தகுந்த வார்த்தைகளால் சமாதானப் படுத்தினான்.  அவளை தேகத் தியாகம் செய்வதில் இருந்து திசை திருப்ப முடிந்தது. மதனனின் பத்னியான ரதியும் ஆதவனின் ஓளியில் மறைந்து தெளிவாகத் தெரியாத சந்திரனின் கிரணங்கள் அஸ்தமயம் ஆன பின், பிரகாசமாகத் தெரிவதை எதிர்பார்ப்பது போல  தன் வாழ்விலும் வசந்தம்- நல்ல காலம் வரும் என்ற நம்பிக்கை வரப் பெற்றாள்.

(இது வரை ஸ்ரீ காளிதாஸனின் குமார சம்பவம் என்ற மகா காவ்யத்தில், ரதி விலாபோ என்ற நான்காவது அத்யாயம்)

அத்யாயம்-5

தன் கண் முன்னாலேயே காமன் எரிந்து பஸ்மானதைக் கண்ட பார்வதி மிகவும் வருந்தினாள். பினாகி- மஹேஸ்வரன் தன் மணாளனாக வேண்டும் என்ற அவள் விருப்பம் நிறைவேறுமா என்ற கவலை உண்டாயிற்று. தன்னையே நிந்தித்துக் கொண்டாள். உடல் அழகு எதற்கு? மனதுக்கு பிரியமானவர்கள் பாராட்டினால் தானே சிறப்பு.

தானும் தவம் செய்து என் விருப்பத்தை அடைவேன் என தீர்மானித்தாள்.  ஸ்ரீ சங்கரன் போன்ற பதி கிடைக்க ஒன்று அவனிடம் மனதொன்றி பிரியமாக இருத்தல், மற்றொன்று தவம். தவம் செய்வது என்று தீர்மானித்துவிட்ட மகளிடம் தாயார் மேனா வந்தாள். அவளை மார்போடு அனைத்து அரவணைத்து தவம் செய்வது எளிதல்ல மகளே, உன்னால் தாங்க முடியாது என்று தடுத்தாள். கிரீசனே பதியாக வரவேண்டும் என்று அவள் விரும்புவது தெரிந்திருந்தாலும், தாயாராக தவம் செய்வதன் கடினத்தை எடுத்துச் சொன்னாள்.

எல்லா தேவதைகளும் நம் வீட்டிலேயே இருக்கின்றன. மகளே, உன் கோமளமான உடல் எங்கே, கடினமான தவம் செய்யும் விரதங்கள் எங்கே.  தளிர்கள் ப்ரமரம்- வண்டின் பாரத்தை தாங்கும். ஒரு பக்ஷி வந்து அமர்ந்தால் தாங்குமா?  எவ்வளவு தடுத்தும் பார்வதி தன் செயலில் உறுதியாக இருப்பதை மாற்ற முடியவில்லை. மனம் ஒரு விஷயத்தில் பற்று கொண்டு விட்டால் திடமாக அதை அடையவே முயலும்.  திடமான மன உறுதி நீர் போன்றது. கீழ் நோக்கி பிரவஹித்து போவது என்று நீரின் இயற்கை. அதை எப்படி தடுத்து நிறுத்த முடியாதோ, மன உறுதியும் அவ்வாறே.

தந்தையிடம் ஒரு நெருங்கிய சகியை அனுப்பி தவம் செய்ய அனுமதி வேண்டினாள். வனம் செல்லவும், தன் மனோரதம் நிறைவேறும் வரை தவம் செய்யப் போவதாக தீர்மானித்து இருப்பதை தெரிவித்தாள். கிரிராஜன் அவள் விருப்பத்தை அறிந்தவன் ஆனதால் அனுமதித்தார்.  மதிப்புக்குரிய தந்தையே அனுமதித்த பின், கௌரி மகிழ்ச்சியுடன் மலையின் ஒரு சிகரத்தை தேர்ந்தெடுத்தாள்.   பின்னால் அது கௌரி சிகரம் என்றே வழங்கலாயிற்று.

சலனமின்றி தன் குறிக்கோளில் திடமாக இருந்த பார்வதி வல்கலை- மரவுரி ஆடையை உடுத்திக் கொண்டு,  ஜடையை தரித்தாள். முன் அழகிய கேசமாக அலங்காரமாக இருந்தது போலவே இந்த ஜடையிலும் அவள் முகத்தின் அழகு மாறவில்லை. மௌஞ்சி என்ற விரதம் ஏற்றுக் கொண்டதைக் குறிக்கும் முப்புரி நூலை அணிந்தாள்.  மேகலையாக அதுவும் அவள் இடுப்பில் கட்டியதில் கோமளமான அந்த பாகம் சிவந்து விட்டது.  கைகளில் குசம் என்ற கூரான புல்லை பூமியிலிருந்து பிடுங்கி எடுத்து வந்ததில், விரல்கள் சிவந்தன.  காயம்    பட்டது கூட,  ருத்ரனின் கையில் அக்ஷ சூத்ரம்- ருத்ராக்ஷ மாலை இருப்பது போல விளங்கியது. அரச போகங்களான, உயர்தர படுக்கை போன்றவைகள் மட்டுமல்ல தன் கேசத்தின் அலங்காரமான மலர்கள் கூட தூங்கும் சமயம் புரண்டு படுத்தால் குத்துவதாக உணர்ந்தவள், தற்சமயம்  தரையில் படுத்து, கைகளில் தலை வைத்து உறங்கினாள்.

இது தவம் செய்வதின் நியமங்கள் மட்டுமே. என் தவப் பலன் கிடைத்தவுடன் திரும்ப மீட்டுக் கொள்வேன் என்பது போல, கொடிகளில் தன் நளினமான தன்மையையும், பெண் மான்களிடம் சஞ்சலமான பார்வையையும் அடைக்கலமாக வைத்து விட்டாள் போலும்.  சிறு செடிகளுக்குத் தானே நீர் விட சிறு குடங்களை பயன் படுத்தினாள். அவள் சரீரம் அதற்கு மேல் தூக்க போதுமானதாக இல்லை.  தானே வளர்த்த செடிகளை, பின்னால் பெறப் போகும் கார்த்திகேயனை நினைத்தோ தாயன்புடன் பரிபாலித்தாள்.  அதனால் கார்திகேயன் பிறந்த பின்பும் இந்த செடிகளை பராமரிப்பதை விட மாட்டாள்.

காட்டில் கிடைத்த தானியங்களை கொடுத்து மான் குட்டிகளை தன் பக்கம் வரச் செய்தாள். அவைகளும் அன்புடன் அந்த தானியங்களைப் பெறும் சாக்கில் அவள் அருகில் ஆவலுடன் வந்தவை அவளருகிலேயே சுற்றின.  முன்பு தன் சகிகளின் விசாலமான கண்களை ரசித்தவள், இவைகள் அந்த இடத்தை எடுத்துக் கொண்டன.  அலுக்கவே அலுக்காமல்  அந்த கண்களைப் பார்த்து குதூகலம் அடைந்தாள்.

ரிஷி கணங்கள் இதைக் கேள்விப் பட்டு  தரிசிக்க வந்தனர். தினமும் ஸ்னானம் செய்து, அக்னியில் ஹோமம் செய்கிறாள், பர்வத ராஜ குமாரி, தவம் செய்வதின் நியமம் என்பதால்  மரவுரியை தரித்துக் கொண்டிருக்கிறாள், துதிப் பாடல்களை பாடுகிறாள் என்று கேள்விப் பட்டதை நேரில் கண்டு  வியந்தனர்.   தர்ம வ்ருத்தர்கள்- அனுதினமும் தர்ம காரியங்களை செய்து வந்தவர்கள், மரியாதை நிமித்தம் வந்தனர். அவர்களுக்கு வயது ஒரு தடையா என்ன? தர்மம் எங்கிருந்தாலும் பாராட்டுபவர்கள்.

அந்த இடத்தில் மத்சரம்- பொறாமை என்பது இருக்கவில்லை. அந்த தபோ வனத்தில் இயல்பான பகை கூட இல்லாமல் பசுவும் புலியும்  ஒன்றாக வளர்ந்தன.  அதிதிகளை வரவேற்கவும்  உபசரிக்கவும் அங்கிருந்த மரங்களே பூவாகவும், பழமாகவும் கொடுத்தன.  குடிலுக்குள் பாதுகாத்து இருந்த அக்னி அணையாமல் இருந்து உதவியது. பாவனமான தபோவனம்.  நாளடைவில் தன் தவத்தின் தீவிரத்தை அதிகரிக்க நினைத்து கோமளமான தன் உடலால் முடியாது என்று தயங்கிய  கடினமான தவம் செய்வதில் முனைந்தாள்.  முன்பு விளையாட்டில் பந்தை வீசினால் கூட வருந்திய கைகள், இப்பொழுது முனிவர்கள் போல சரீர சிரமத்தை பாராட்டாமல் இருக்க அறிந்தாள். அவள் உடல் பசும் பொன்னால் ஆன தாமரை மலர் போலும்.   அந்த ம்ருதுவான மலரால் பொன் போல கடினமாகவும் இருக்க முடியும் என்று காட்டுவது போல.

நாற்புறமாக அமைந்த  வேதிகளில் நெருப்பு ஜ்வாலையாக எரிய நடுவில் அமர்ந்து தியானம் செய்தாள்.  இடை சிறுத்த சிறுமி அப்பொழுதும் மென் முறுவலோடு காணப் பட்டாள்.  கண்களை ஆதவனின் ஜோதியிலேயே நிலை நிறுத்தி அந்த ஒளி வெள்ளத்தால் பாதிக்கப்படாமல், இடைப் பட்ட இடர்களைத் தவிர்த்து  மற்ற எதையும் பாராமல் ஒரே நோக்காக வைத்து ஆதவனை கண்களால் ஜயித்தாள். தபனன் – தகிப்பவன் என்றே பெயர் பெற்ற ஆதவன், அவள் முகத்தை தாமரை மலரை நோகச் செய்வது போல ஓரங்களில் மட்டுமே கருமையாக்க முடிந்தது.  அழைக்காமலே வந்த அம்ருத மயமான சந்திர கிரணங்கள், அவளுக்கு குளுமையாக  அவள் விரும்பி பாரணையாக பருக உதவியது.  (பகல் முழுவதும் உண்ணா விரதம் இருந்தவள், இரவில் விரத முடிவாக பாரணையை சந்திர கிரணங்களின் குளுமையிலேயே அடைந்தாள்)

வேணிற் கால ஆதவனின் கடுமையான வெப்பமும், சுற்றிலும் ஜ்வாலையாக தானே வைத்துக் கொண்ட தீயாலும் வாட்டமடைந்திருந்தவள், முதல் மழைத்துளி மேலே பட்டதும் பெரிதும் ஆஸ்வாசமடைந்தாள். பூமி முதல் மழை தாரையால்  நனைந்து சூடான ஆவி பறப்பது போல தெரிவது போல, அவள் கண்களிலும் கண்ணீர் பெருகியது.  மழைத் துளி அவள் மேல் விழுந்து அதரங்களில் ஒரு விநாடி நின்று கீழ் நோக்கி விழும் சமயம் அவள் ஸ்தனங்களில் பட்டு சிதறி, வழிந்து,  இடைப் பகுதியின் வளையங்களில் வழி நாபியை அடைந்து  நிலைத்து நின்று விட்டது.  

பாறையில் உறங்கியவளை, உறுதியான மனதோடு எந்த நிலையிலும் தன் தவத்தை விடாமல் இருப்பவளை ஆச்சர்யத்துடன் தன் மின்னல் என்ற கண்களால் மேகங்கள் பார்த்தனவோ, எனும்படி மின்னல் பளிச்சிட்டது. இவ்வாறு மழைகாலத்திலும்  தொடர்ந்து தவம் செய்து கொண்டிருந்தவள், ஹேமந்த ருது வந்தவுடன், பனிப் பொழிவும் அதனுடன் தாங்க முடியாத குளிர் காற்றிலும் சற்றும் பாதிக்கப் படவில்லை.  தை மாத இரவுகள், மிகவும் சீதளமாக இருக்கும். சக்ரவாக பக்ஷிகள்  மாற்றி மாற்றி கூவிக் கொண்டிருக்கும். ஏன் இப்படி தவிக்கின்றன. அந்த பறவைகள் இணையைப் பிரிந்தால் இரவு முழுவதும் கூவிக் கொண்டே இருக்கும் என்று சொல்வர்.  அதைக் கண்டு கருணையுடன் பார்த்தாள்.

கமலங்களுடன், அவைகளைப் போலவே இருந்தாள். பூவின் இலைகள் மெள்ள அசைவது போல அவள் அதரங்களும் பனியின் வேகம் தாங்காமல் துடித்தன. இதுவரை மரங்களிலிருந்து தானே விழுந்த இலைகள் தான் அவள் ஆகாரமாக இருந்து வந்தன. இதன் பின் அதையும் விட்டு விட்டாள். பர்ணம் -இலை, அதையும் துறந்தவள் என்ற பொருளில் அபர்ணா. என்று அழைக்கலாயினர்.  தாமரைப் பூவின் தண்டு போன்ற அவள் உடல் அதே போல குளுமையும்  மென்மையையும் உடையதாக இருந்தபோதிலும், ஞானிகளான ரிஷிகள் செய்வதை விட அதிக கடினமான தவ விரதங்களை பூர்த்தி செய்தாள்.

மான் தோலாடை  அணிந்து ப்ரும்ம மயமான தேஜஸுடன், கண்ணியமான தோற்றமும் கொண்ட வயதான ஒருவர், தவம் செய்து உடல் மெலிந்து இருந்த ப்ரும்மசாரி – இன்னமும்  முதல் ஆசிரமம் என்பதில் இருப்பவர் போல ( ப்ரும்ம சர்யம், க்ருஹஸ்தம், வான ப்ரஸ்தம், சன்யாசம் என்பதில் முதல்)  அப்பொழுதுதான் அந்த இடத்துக்கு வந்தவர் போல புதியவர், அவளுடைய ஆசிரமத்துக்கு வந்தார். 

யாரோ அதிதி, அவருக்கு விருந்தோம்பல் என்பதைச் செய்ய வேண்டும் என்று பார்வதி எழுந்து வந்தாள்.  மரியாதையுடன் வரவேற்று முறைப் படி உபசரித்தாள்.   அதை ஏற்றுக் கொண்ட புதியவர், தன் சிரமம் நீங்கியது போன்ற பாவனையுடன், தன்னை நிலை நிறுத்திக் கொண்டு, அவளைப் பார்த்தார்.  நேர் பார்வையாக, கண்ணியத்துடன் பார்த்து, குசலம் விசாரித்தார்.

சுற்றிலும் பார்த்தவர், உன் தவம் தடையின்றி நடக்கிறதா, ஹோமம் செய்கிறாய் போலும். சமித் குசங்கள் கிடக்கின்றன.  அவை சுலபமாக கிடைக்கின்றனவா.  ஸ்னானம் செய்ய வசதிகள் இருக்கின்றனவா?  அதிக தீவிரமாக இல்லாமல் உன் சக்திக்கேற்ப தவ நியமங்களை அனுசரிக்கிறாயா? ஏன் சொல்கிறேன் என்றால், சரீரமாத்யம் கலு தர்ம சாதனம்- இது ஒரு ப்ரசித்தமான சொல் வழக்கு. சரீரம் தானே முதல் தர்ம சாதனம்- தர்மத்தைச் செய்ய மனமிருந்தாலும், வசதியிருந்தாலும் சரீரம் திடமாக இருந்தால் தானே செயலில் ஈடுபட முடியும் என்பது ப்ரசித்தமான அறிவுரை.  

இந்த செடி கொடிகளை பாத்திகள் கட்டி நன்றாக வளர்த்து வருகிறாய்.  புது தளிர்கள் செந் நிறமாக காண்கின்றன. தொடர்ந்து நீயும் தவத்தில் மூழ்கி இருந்ததால் நீரின்றி இவைகளும்  உன் அதரம் போலவே உலர்ந்து விட்டன போலும்.  மான்கள் கூட்டம் உன் கையிலிருந்து புல்லை வாங்கிக் கொள்ள வந்து நிற்கின்றனவே, உத்பலம் போன்ற கண்களையுடையவளே!  இந்த ஜீவன்கள் உன்னுடன் போட்டி போடுகின்றன போலும். பார் இவைகளின் கண்கள் எவ்வளவு கவர்ச்சியாக இருக்கின்றன. பார்வதி!  பர்வத ராஜனின் பெண். ரூபத்தை  மட்டும் வைத்து மனிதர்களின் குணத்தை எடை போட கூடாது, அது சரியாகவும் இருக்காது.  உதார தர்சனே! கண்களின் தயை உடையவள் அல்லது விசாலமான கண்களுடையவள்.  உன் நன்னடத்தையும், குணமும் மற்ற தபஸ்விகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது.  முனிவர்கள் கூட உன்னைப் பார்த்து தன்னை மேம்படுத்திக் கொள்கின்றனர்.

ஆஹா இந்த ஹிமாலய பர்வதம் சப்த ரிஷிகள் உபசாரமாக அர்ப்பித்த உயர்தரமான பூக்களுடன் அழகாக இருக்கிறது.  பவித்ரமான கங்கை ப்ரவஹித்து இதை மேலும் பாவனமாக்கி உள்ளது. ஆனாலும் அவை உனக்கு ஈடாகாது. உன்னுடைய தவம், சீலம் இவைகளால் பெற்றோரை, அவர்களின் புத்ர பௌத்ரர்களுடன் பவித்ரமாக்கி விட்டாய்.

இவைகளைப் பார்த்து உன் தர்ம சிந்தனையை அறிந்து கொண்டேன். த்ரிவர்கம் என்ற அர்த்த,காமங்கள், மோக்ஷம் இவைகளை பெற மட்டுமா இந்த தவமும், சாதனைகளும்?  உன்னிடத்தில் இந்த மூன்றும் தானாகவே வந்து புகழ் பெறும்.  அப்படியிருக்க, என்ன காரணம்?  உன் எதிர்பார்ப்பு அல்லது தேவை, இந்த சிறிய விஷயங்கள் அல்ல என்று ஊகிக்கிறேன். எதை தேடுகிறாய்?  தர்மம் மட்டுமே என்றால் அனைவருக்கும் இதனால் நன்மையே.

நீ விவரம் அறிந்தவள். எனக்கு செய்த அதிதி சத்காரத்தினாலேயே புரிந்து கொண்டேன். கொடி போன்றவளே, நல்லவர்களின் சக்யம், ஏழு காலடி தூரம் நடந்தாலே அடையலாம். ஏழு வாக்கியங்கள் கூட போதுமானது. அதனால் நம்மிருவரிடையே நட்பு என்பது உறுதியாகி விட்டதாக எண்ணுகிறேன். (ஸப்த பதி என்ற பதம், ஏழு பதம்-காலடி என்றும் பதம் -பதங்கள், வார்த்தை என்றும் இரு பொருள் உடையது)

த்விஜாதி – அந்தணர்கள் விஷயங்கள் அறிந்து கொள்வதில் ஆர்வமுள்ளவர்கள். அதனால், என் மனதிலும் முழு விவரங்களையறிந்து கொள்ள ஆவல் மேலிடுகிறது. பொறுமையே உருவானவள் நீ.  தபோதனே! ரகஸ்யம் எதுவும் இல்லையெனின் என்னிடம் சொல்லலாம். நல்ல குலத்தில் பிறந்தவள். ஹிரண்ய கர்பனுடைய வம்சத்தில் வந்த ஹிமவானின் மகள்.   மூவுலகிலும் உள்ள சௌந்தர்ய தேவதையே போன்ற சௌந்தர்யம்.-அழகு.  ஐஸ்வர்யம் பற்றி கேட்கவே வேண்டாம். உன் தந்தையிடம் இல்லாததா? விலை மதிப்பற்ற பல பொருட்கள் இவரிடம் உள்ளன. இளம் வயது. இதை விட வேறு என்ன வேண்டும்? எதற்காக இந்த கடினமான தவ வாழ்க்கை.  ஏதாவது விருப்பமில்லாமல் நடந்து மனம் வெறுத்து போனால் பெண்கள் இப்படி தன்னை வருத்திக் கொள்வது உண்டு. உன்னைப் பார்த்தால் அப்படியும் தெரியவில்லை.  பயம் உன்னை அண்டாது.  நீ விரும்பி கிடைக்காமல் போகவும் வழியில்லை.

உன் புருவங்களும் எவ்வளவு அழகு? பதியினால் அல்லது மற்ற எவரோ, அவமதிக்கும் படி பேசியோ, செய்தோ உன்னை மறுத்தோ பேசினார்களா?  அதுவும் சாத்யமேயில்லை. தந்தையின் வீட்டில், அவருடைய செல்ல மகள், உன்னை யார் அவமதிக்க முடியும்?  உயிருடன் உள்ள சர்ப்பத்தின் தலையில் இருந்து மணியை பறிக்க யாராவது சாகஸம் செய்வார்களா? அந்த தைரியம் யாருக்காவது உண்டா?

எதற்காக இந்த யௌவன வயதில் ஆபரணங்களை துறந்து வாழ்கிறாய். வல்கலம் என்ற மரவுரி வயதானவர்களுக்குத் தான் அழகு.  ப்ரதோஷ காலத்தில் சந்திரனும் தாரகைகளும்  அழகுற இருக்கும் இரவு, அதை விட்டு, ஸூரியனின் அருண நிறம் வேண்டும் என்று விரும்புமா என்ன?

உன் வேண்டுதல் என்ன, சுவர்கமா? தேவ லோக வாசமா? அது வீண்.  உன் தந்தையின் மாளிகையில் அது உனக்கு சுலமாக கிடைக்கும் வசதிகளை, மரியாதைகளை விட அது அதிகமல்ல. நல்ல கணவன் வேண்டும் என்று தவமா? அதுவும் தேவையேயில்லை.  ரத்னங்கள் தானே தேடிப் போவது இல்லை. அதை வேண்டி மக்கள் தான்  தேடிச் செல்வார்கள்.

நல்ல வரனைத் தேடி தவம் செய்கிறாயா என்றவுடன் பார்வதியிடம் ஒரு மாறுதல் தோன்றவுடன் அந்த புதியவர் நிறுத்தி ஒரு நிமிஷம் அவளைக் கூர்ந்து பார்த்து தானாகவே தொடர்ந்தார். ஹே கௌரி!  உன் மனம் நினைப்பதை முகமே சொல்லி விட்டது. இந்த வயதில் அது இயல்பே.  வேண்டினாலும் கிடைக்காத அத்புதமான பொருள், தானே வந்து, என்னை எடுத்துக் கொள் என்று வேண்டுமா என்ன?  உனக்கு சம மானவன் என்று நான் அறிந்த வரை யாரும் இருப்பதாகத் தெரியவில்லையே.

அஹோ! அப்படி ஒருவன் இருந்தால் அவன் அறிவிலியே. கடின சித்தம் உள்ளவனாக இருப்பான். இது வரை உன்னை வாடச் செய்வானா? குண்டலங்களுக்கு அழகாக இருக்கும் உன் கன்னங்கள், நீல மணிகளின் சாயை ப்ரதி பலிக்க இருக்க வேண்டியிருக்க, தானியங்கள் உலர்ந்தபின் மீதியான  வைக்கோல் நிறமாக ஆகும்வரை விட்டிருப்பானா?

கடினமான முனி விரதங்கள். வெய்யிலில் வாட்டப் பட்டு இளைத்து, கறுத்து, பகலில் தென்படும் சந்திர கலை போல ஆக்கியிருப்பானா?  இந்த நிலையில் உன்னைப் பார்க்கும் எவர் மனம் தான் வாடாது.  யாராயிருந்தாலும் பச்சாதாப்படுவர்.

நீ விரும்பும் உன் மணாளன்  மிகுந்த செல்வந்தனாக அதனால் வந்த மதம் கொண்டவனாக இருப்பான் போலும். அந்த கர்வத்தினால் தகுதி வாய்ந்த உன்னை  மதிக்காமல் இருந்திருக்கலாம்.  அல்லது, உன்னைக் கண்டபின், அவன் முகம்  வாடியிருந்திருக்கும். நீ அவனை ஏற்பாய் என்ற நம்பிக்கையை இழந்திருப்பான்.

கௌரீ!  எவ்வளவு நாள் இப்படி உன்னை வாட்டிக் கொள்ளப் போகிறாய். இதைக் கேள். எனக்கும் முன் ஆசிரமத்தில் சேமித்த தவப் பலன் உண்டு. அதில் பாதியைத் தருகிறேன். நீ உன் விருப்பமான வரனை அடைவாய்.  அது சரி,அவன் யார்? அதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.  ஆவலுடன் கேட்கிறேன், சொல்.

இப்படி தானே வந்து அறிமுகப் படுத்திக் கொண்டு விவரங்கள் அறிய முயலும் புதியவரை பார்வதி சந்தேகிக்கவில்லை. மிகவும் நெருங்கிய நண்பன் போல கேட்பதை மறுக்கவும் முயலவில்லை. லஜ்ஜையினால் தயங்கி, அருகில் இருந்த சகியை அழைத்துச் சொன்னாள். மையிடாத மலர்க் கண்களின் வழியே அதைப் புரிந்து கொண்டு சகி அருகில் வந்தாள்.

மஹானுபாவா! பெரியவரே! ஆவலுடன் உண்மையான அக்கறையுடன் கேட்பதால் சொல்கிறேன்.  யாரை நினைத்து என் சகி, தாமரை மலரை விட கோமளமானவள், அந்த மலரே இவளுக்கு குடையாக இருக்க விரும்பும். அவளே உடல் வருத்தி இந்த சாதனையை ஏன் செய்கிறாள், கேளுங்கள்.  இவள் மிகவும் சுய கௌரவம் உடையவள். (மானினீ) – திடமான கொள்கையுடையவள். நால் திசைகளுக்கும் அதிபர்கள் ஸூழ வந்த மதனனை மஹேந்திரனை முன்னிட்டுக் கொண்டு வந்த தேவ லோக வாசிகள், இவர்களுடன் வந்தவன் இந்த காமன் என்ற மன்மதன், அசைக்கமுடியாத தவ பலம் உடைய பினாக பாணியை தன் வில்லால் மோஹிக்கச் செய்ய வேண்டும் என்ற  குறிக்கோளோடு தேவர்கள் சகாயமாக பின் நிற்க, தைரியமாக முன் வந்தான். அவருடைய கண் பார்வையால் பொசுங்கினான். அவரைத் தான் தன் பதியாக வரித்து எங்கள் சகி தவம் செய்கிறாள்.

தாங்கமுடியாத அவருடைய ஹூங்காரம் அதிலேயே முன் ஒரு சமயம் த்ரிபுரங்களை அழித்தவர். மன்மதன் எந்த தைரியத்தில் அவர் முன் வந்தானோ, எங்கள் சகியின் ஒப்பில்லா  சௌந்தர்யத்தை நம்பி அவர் மேல் புஷ்ப பாணத்தை தொடுத்தான் போலும்.  அவரிடம் பலிக்கவில்லை, என் சகியை ஹ்ருதயத்தில் தாக்கி அந்த பாணம் தன் வேலையை செய்கிறது.  அதிலிருந்து இவள் தன் தந்தையின் வீட்டில் பொருந்தாமல் அந்த பினாக பாணியை எப்படி அடைவது என்று சிந்தித்து, எந்த வித சுக போகங்களிலும் மனம் ஈடுபடாமலும், தன் சௌந்தர்யமோ, தந்தையின் ஐஸ்வர்யமோ அவரிடம் எடுபடாது என்பதால் தவம் செய்ய வந்து விட்டாள். பனி பொழியும் இரவுகளில் கூட பாறைகளின் குளிர்ச்சி அவளுக்கு உரைப்பதில்லை.

கின்னர, கிம்புருஷ பெண்கள் வந்து ஹரனின் துதிகளைப் பாடுவர். அவர்களுடன் சேர்ந்து பாட முயலுவாள். தொண்டை அடைக்கும். கண்களில் நீர் பெருகும். அந்தப் பெண்கள் பாவம், செய்வதறியாது திகைப்பர்.

இரவின் பின் பகுதியில் தான் தூக்கம் வரும்.  ஒரு சமயம் க்ஷண நேரம் மூடிய கண்களுடன் தூங்குபவள் திடுமென விழித்து எழுந்து ஹே நீலகண்ட, எங்கு போகிறாய் என்று கேட்டாள்.  அல்லது நீலகண்டனுடன் இருப்பது போல கனவுகள் கண்டு ஏதோ பேசுவாள்.  ஹே நீலகண்ட,  அறிவிற் சிறந்தவன் நீ. ஞானிகளும் வணங்கும் பேறு பெற்றவன். என் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாதா என்ன? இப்படி இவளை என்ன என்று சொல்வது. சந்திர சேகருக்கு ஒரு கடிதம் எழுதி தன்னிடமே வைத்திருக்கிறாள்.

இவ்வாறு தவித்தவள், வீட்டில் பெரியவர்களிடம் அனுமதி பெற்று முடிவாக தவம் செய்வது என்று இங்கு வந்து விட்டாள். சகிகள் நாங்களும் உடன் வந்தோம். இங்கு வந்த சமயம் இலைகள் மட்டுமாக இருந்த மரங்கள் இப்பொழுது பழுங்கள் நிறைந்து காணப் படுகின்றன.  இவள் மனோரதம் நிறைவேறும் அறிகுறியே தென் படவில்லை.  சசி மௌளி- சந்திர சேகரன் –எனும் மகேஸ்வரனை விரும்பி இவள் தன்னை வருத்திக் கொண்டு இருக்கிறாள் என்பதை அவரும்  அறிந்து கொண்டதாகவே தெரியவில்லை.

பலவிதமாக ப்ரார்த்தனைகள் செய்தாலும் சுலபமாக அவரை அடைய முடியாது என்பர்.  எங்கள் சகி இந்த அளவு தவம் செய்து உடல் இளைத்து உழுது வைத்த விளை நிலம் போல இருக்கிறாள். அந்த நிலம் இந்திரனை மழைக்காக எதிர் நோக்கி தவம் இருப்பது போல சந்திர சேகரனை எதிர்பார்த்து காத்திருக்கிறாள்.

நைஷ்டிக ப்ரும்மசாரி – வாழ்நாள் முழுவதும் ப்ரும்ம மார்கத்தில் செல்பவன் என்று பெயர் பெற்ற சுந்தரன் -அழகிய தோற்றம் கொண்ட அந்த விருந்தாளியாக வந்த அந்தணன், எந்த உணர்ச்சியையும் வெளிக் காட்டாமல் இருந்த உமாவைப் பார்த்து, சகியின் வார்த்தைகளை தடுக்காததால், அவள் சொன்னது உண்மையே என்று சூசகமாக தெரிந்து கொண்ட பின், நேராக உமாவைப் பார்த்து, ‘அயி, உமே!  உமையே இது என்ன உண்மையா இல்லை விளையாட்டாக அல்லது பரிகாசமாக சொல்வதா? 

கிரி ராஜனின் மகள், தன் கையில் ஸ்படிகத்தால் ஆன அக்ஷமாலையை மூடி வைத்துக் கொண்டு, ஜபம்  செய்வதை நிறுத்தி, தன்னை ஒரு முகப் படுத்திக் கொண்டு, அளவான சொற்களால் பதில் சொன்னாள்.  தாங்களோ வேத வித்து. நீங்கள் அறியாதது அல்ல. கேள்வியும், சாதனையும் உங்களுக்கு தெரிவித்திருக்கும் உண்மைதான்.   இந்த எளிய பெண் அடையக் கூடிய பதமா என்று வியக்கிறீர்கள் போலும். அந்த உயர்ந்த பதம் தான் நான் வேண்டுவது. மனம் வைத்தால் அடைய முடியாத து எதுவும் இல்லை. மனதில் உறுதி வேண்டும் அவ்வளவே.

ப்ரும்மசாரி சொன்னார்: நான் அறிந்தவரை மகேஸ்வரன் வயதில் மூத்தவர். அவர் முன் ஒருசமயம் உன்னை அலட்சியப் படுத்தியதாக கேள்வி.  இருந்தும் அவரை விரும்புவதாகச் சொல்கிறாய். எனக்கு சந்தேகம் – அமங்களமான தோற்றம்.  காமனை எரித்தவர் என்பதால் கோபம் அதிகம் உடையவர் என்று தெரிகிறது.  மேலும் அவர் சம்பந்தப் பட்ட சில விஷயங்கள் அமங்களமே.  மிகவும் துச்சமாக நினைக்கும் விஷயங்கள் அவரிடம் உள்ளன. எப்படி நீ அவரை சகிப்பாய்?  விவாகம் என்று வந்தால் கைகளில் மங்களமான ரக்ஷை கயிறு கட்டுவார்கள். அவர் கையில் சுற்றிக் கொண்டிருப்பது சர்ப்பங்களை. எப்படி கை பிடிப்பாய்?  நீயே யோசித்துப் பார். இந்த சம்பந்தம் நல்லது தானா?

கல ஹம்ஸம் போன்ற வெண் பட்டு ஆடை உடுத்தி மண்மகன் வருவான்,இவரோ அமங்களமாக உதிரம் சொட்டும் யானைத் தோலைக் கட்டிக் கொண்டு வருவார்.  யோசித்துப் பார்.

ராஜ குமாரி நீ. மாளிகையில் பூக்களை இரைத்து வைத்திருப்பர், நீ நடக்கும் பொழுது ம்ருதுவான உன் கால்கள் நோகக் கூடாது என்று. இவருடன் மயான பூமியில் எப்படி நடமாடுவாய்.  விரோதி கூட அங்கு போக மாட்டான். பிரேத பூதங்கள் இருக்கும் இடம். கபாலங்கள் கிடக்கும்.

முக்கண்ணன், உன் அழகிய கண்களுக்கு எதிரில் எப்படி இருக்கும் தெரியுமா?   பஸ்மத்தை தான் வாசனைப் பொடியாக, பூச்சுகளாக பயன் படுத்த வேண்டியிருக்கும். இந்த திருமணம் நடந்தால்,  பார்ப்பவர்கள் சிரிப்பார்கள். இந்த கிழவனுக்கா மாலையிட்டாள் என்பர்.

சந்திரனின் கலை அவர் தலையில் அமர்ந்து தன் ஒளியை இழந்தது. அது போல நீ இரண்டாவதாக ஆவாய். உன் பெருமை என்ன ஆகும்?  கண்ணுக்கு விருந்து உன்னைக் காண்பதே என்றவர்கள்,  காந்திமதி என அழைத்தவர்கள் வருந்துவார்கள்.

கன்யா வரயதே என்று ஒரு ஸ்லோகம். கன்னிப் பெண் மணாளனாக வருபவன் அழகனாக இருக்க வேண்டும் என்பாள். தாய் செல்வம், சம்பத்து என்ன என்று பார்ப்பாள். தந்தை கல்வியை, பந்துக்கள் நல்ல குலத்தை, மற்றவர்கள் நல்ல விருந்தை எதிர்பார்ப்பார்கள். அதை நினைவுறுத்துவது போல சொல்கிறார்.  அழகனா என்றால், விரூபாக்ஷன். பிறப்பு பற்றித் தெரியாது. உடையே சரி இல்லை  திகம்பரன்- செல்வம் இல்லை என்பதை காட்டுகிறது.  பெண் மான் குட்டி போன்ற மருட்சியுடன் உன் கண்கள், இப்படி உயர்வாக சொன்ன ஒரு விஷயமும் நீ சொல்லும் வரனில் இல்லையே.

இந்த தவறான ஆசையை விடு. புண்ய லக்ஷணங்கள் உடைய நீ எங்கே, காணவே  அருவருப்பான மயானத்தில் ஸூலத்துடன் நிற்கும் பினாகி எங்கே? உன் கொள்கையை கை விடு.  யாராவது அந்த ஸூலத்தை சுபமான  யாக சாலையில் கொண்டு வருவார்களா?

இப்படி அவர் சொல்லிக் கொண்டே போகவும் பார்வதி தன் புருவங்களின் நெரிப்பால் கோபத்தை காட்டியவளாக முகத்தை திருப்பிக் கொண்டாள்.  சமாளித்துக் கொண்டு பதில் சொன்னாள்.

பெரியவரே, பரமார்த்தமாக பினாகியை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை. அதனால் தான் இப்படி சொல்கிறீர்கள். லோகத்தில் சாமன்யமான பேச்சு இது. ஸ்ரீ ஹரன் இதற்கு அப்பாற்பட்டவர்.  நினைத்து பார்க்க முடியாத பராக்ரமம் உடையவர்.  மஹாத்மா. மந்த புத்தி உள்ளவர்கள்   தான் த்வேஷம் கொள்வர்.

ஜகத் சரண்யன்- உலகமே அவரை சரணடைகிறது. அவருக்கு செல்வம் இல்லை என்றீர்கள்.  இவருக்கு தேவை என்பதே இல்லை. தான் வரங்களை கொடுப்பவர், இவரே மங்கள ஸ்வரூபி, வெளி வேஷங்கள் எதற்கு?

மூவுலக நாதன், தரித்ரன் அல்ல. செல்வத்தையே தன் பொறுப்பில் வைத்திருப்பவர்.   ஆதி புருஷன், கோத்ரமே இவரிடமிருந்து ஆரம்பிக்கிறது. சிவம்- மங்களம் என்பதே இவரது மற்றொரு பெயர். இவரிடம் உள்ளது எது தோஷம்,  எப்படி இருந்தாலும் இவர் தூய்மையானவரே. வெளி வேஷம் எதற்கு? ஆபரணங்களோ, போக- பாம்புகளை அணிந்தவரோ, வெண் பட்டோ, யானைத் தோலோ, கபாலியோ, இந்து சேகரனோ, இவர் விஸ்வாத்மா, விஸ்வமூர்த்தி, இவரை அண்டியவை பெருமை பெறும்.  

நடனம் ஆடும் பொழுது விழுந்த விபூதியை இந்திராதி தேவர்கள்  நெற்றியில்  அணிகிறார்கள். காலில் விழுந்து வணங்கும் பொழுது, அவர்களின் வாசனைப் பூச்சுக்களோ, மலர்களோ அல்ல விபூதி தான் அவர்களை அவர்கள் மகுடங்களில் விழுந்து ஆசீர்வதிக்கிறது.  ருஷப வாகனம் என்ன மட்டமா? திக்கஜங்கள் அதற்கு முன் ஒன்றுமே இல்லை. விருஷப வாகனத்தில் பவனி வரும் பொழுது,  திக் கஜங்கள் வந்து சேவிக்கின்றன.  இந்த அளவு அவருடைய குறைகளை சொன்னவர் ஒரு விஷயத்தில் உண்மையைச் சொல்லி விட்டீர்கள். அவர் எளிதில் அடைய முடியாதவர். ப்ரும்மாவும் கூட வணங்கி தன் குறைகளைச் சொல்லி நிவர்த்திக்க வேண்டுகிறாரோ, அவரை அடைவது எளிதா என்ன?  இது ஒன்று போதும் அவர் பெருமையைச் சொல்ல.

அது சரி, எதற்கு விவாதம். நீங்கள் சொல்வதைக் கேட்டும் என் மனம் மாறவில்லை. மனப் பூர்வமாக நம்பி ஏற்றுக் கொண்ட பின் மனதை மாற்றிக் கொள்வது அரிது.  மனம் தான் விருப்பு வெறுப்புகளுக்கு காரணம். அதை வெளியிலிருந்து மாற்றுவது முடியாது.  ந காம வ்ருத்திர் வசனீயமீக்ஷதே, – மனது ஒருவரிடம் ஈடுபட்ட பின் பிறர் அதை மற்றவர் விமரிசித்துச் சொல்ல வேண்டும் என்று எதிர் பார்ப்பதில்லை.

இதோ போகிறேன். அல்லது என்றவள் திடுக்கிட்டுத் திரும்பினாள். வல்கலையை யாரோ பிடித்து இழுப்பது போல இருந்தது.  தன் சுய ரூபத்தில் மென் முருவலோடு சாக்ஷாத் விருஷ கேதனன் – ருஷப வாகனன் – நின்றிருந்தார்.

அவரைக் கண்டதும் வேர்வை பெருக, பதற்றத்துடன் வணங்குவதற்காக காலெடுத்தவள்,  எடுத்த காலை விடவும் முடியாமல்,  வேகமாக சென்று கொண்டிருந்த நதி திடுமென ஏற்பட்ட தடையால் திகைப்பது போல, சைல ராஜ குமாரி செல்லவும் இல்லை நிற்கவும் இல்லை. ( இது காளிதாசனின் விசேஷமான பதங்களில் ஒன்று ந  யயௌ ந தஸ்தௌ)

இன்றிலிருந்து  கொடி இடையாளே! உன் தாஸன் நான்.  உன் திடமான கொள்கையாலும், பொறுமையாலும் என்னை வென்று விட்டாய்.  இவ்வாறு கூறிய சந்திர மௌளியை கண்டவுடன் இதுவரை இருந்த நியமங்கள், சாதனைகள் என்ற கஷ்டங்கள் நொடியில் மறைந்து விட்டன.  பலனடைந்த பின் அதைப் பெற பட்ட சிரமங்கள் சிரமங்களே அல்ல.

(இது  வரை ஸ்ரீ காளி தாஸனின் குமார சம்பவம் என்ற மகா காவ்யத்தில் தப:பலோதயோ என்ற ஐந்தாவது அத்யாயம்)

அத்யாயம்-6

கௌரி, தன் சகிகளை அழைத்து விஸ்வாத்மாவை அறிமுகம் செய்து வைத்தாள்.  இவருக்குத் தான் என்னைத் தர வேண்டும் என்பதை தன் பெற்றோரிடம் ப்ரார்த்தனை செய்யச்  சொன்னாள்.  இதைக் கேட்ட அந்த சகி மிகவும் மகிழ்ந்தவளாக சகியை அணைத்துக் கொண்டாள்.  அவள் மூலம் செய்தியை அனுப்பி விட்டு பார்வதி மன நிம்மதி அடைந்தாள்.  மாமரத்தின் கிளையில் அமர்ந்து கோகிலம், தன் பிரியமான வசந்தனை கூவி வசந்த காலத்தை அறிவிப்பது போல.  

 சகி மூலம் செய்தி அனுப்பியதையறிந்து சங்கரன்,  தானும் சப்த ரிஷிகளைத் தியானம் செய்தார். பின் கௌரியிடம் விடை பெற்று கிளம்பினார். அவளை விட்டுப் பிரியும் மனம் சஞ்சலப்பட்டது.

அருந்ததியும் உடன் வர, சப்த ரிஷிகளும் உடனேயே மஹேஸ்வரனின் எதிரில் ப்ரகாசமாக வந்து நின்றனர்.  அடுத்த ஏழு ஸ்லோகங்களால் சப்த ரிஷிகளை வர்ணிக்கிறார்.

ஆகாய கங்கையில் ஸ்னானம் செய்துவிட்டு கல்ப வ்ருக்ஷத்தின் மலர்களை தள்ளிக் கொண்டுச் செல்லும் கங்கையின் வேகம்,  திக் கஜங்களின் மத ஜலம் விழுந்து அதன் மணமும் கலந்து சுகமான அனுபவத்தைத் தரும் கங்கை நீரின் ப்ரவாஹம் போலவும் இருந்தனர்.  முப்புரி நூலும் பொன் நிற மரவுரி ஆடையும் அணிந்தவர்கள்,  ரத்னங்களால் ஆன அக்ஷமாலைகள் இவைகளுடன் அண்டியவர்களுக்கு ஆசிகள் அளிக்கும் கல்ப வ்ருக்ஷம் போன்றவர்கள்.  

ஸூர்ய மண்டலத்திற்கும் மேல் உள்ளது சப்த ரிஷி மண்டலம். அதனால் அவர்கள் கீழ் நோக்கிப் பார்த்து ஸுரியனின் உதயம் ஆகி விட்டதையும்,  குதிரைகள் பூட்டிய ரதத்தின் த்வஜத்தை தானாகவே தழைத்து அவர்கள் செல்ல வழி விட்ட சஹஸ்ரகிரணன் எனப்படும் ஸூரியனை வாழ்த்தியபடி இறங்கினர்.

மகா ப்ரளய காலத்தில் தன் ஒற்றைக் கொம்பினால் பூமியை தூக்கி காப்பாற்றிய வராக பெருமானை வணங்கி, அந்த சமயம் தாங்களும் அந்த ஒற்றைக் கொம்பில் விஸ்ராந்தியாக அமர்ந்து இருந்ததை நினைவு கூர்ந்தவர்களாக  பூமியில் இறங்கினர்.  வியாசர் முதலான ரிஷிகள், புராணங்களில் விஸ்வயோனி, விஸ்வத்தை படைப்பவர் என்ற பொருளில் விதாதா என்று  ப்ரும்மாவுடன் சப்த ரிஷிகளையும்  அழைத்தனர்.  அத்தகைய பெருமை மிக்க ரிஷிகள் வந்தனர்.

முன் பிறவிகளில் செய்த தவங்களின் பலனாக சப்த ரிஷி மண்டலத்தில் வாசம் செய்யக் கிடைத்தும் தங்கள் தவம், நியமங்களை கை விடாத உத்தமர்கள். பகவான் சங்கரனின் எதிரில் வந்து நின்றனர்.  அவர்களுடன் வந்த அருந்ததி- வசிஷ்டர் தம்பதி, மற்ற ரிஷிகளுடன் மத்தியில் நின்றனர்.  தப:ஸித்தி, என்பதே நேரடியாக வந்து விட்டது போல அவளைக் காணவே, காண்பவர் மனதில் மரியாதை தோன்றியது.  அவளுடன் சேர்த்து முனிவர்களை வணங்கினார்.  ‘गुणा: पूजास्थानम् गुणिषु न स लिन्गम् न स वय: ‘ மரியாதைக்குரியது ஒருவரின் குணமே. ஆண், பெண் என்பதோ, வயதோ அல்ல. அருந்தியைக் கண்டதும் ஸ்த்ரீ ஜாதியிடமே தனக்கு மிகவும் மதிப்பும் நல்ல எண்ணமும் தோன்றி விட்டதாக உணர்ந்த பகவான் சங்கரனுக்கு,  இல்லறத்தில் ஈடுபாடும் வந்தது.  காமனோ முன்னால் தான் அபராதப் பட்டதும் வீண் அல்ல, தன் காரியம் ஜயமே என்று மகிழ்ந்தான்.  

ரிஷிகள் எதையும் வெளிப்படையாக பேசாமலே ஆசீர்வதித்தனர்.

இன்று, ப்ரும்மா வேதங்களை உபதேசித்ததும், நாங்கள் அக்னியில் நியமங்களுடன் ஹோமங்கள் செய்ததும், தவம் முதலான சாதனைகளைச் செய்ததும் பரி பூர்ணமாக பலனைக் கொடுத்து விட்டது என்றனர்.  என்ன பலன்?

உலகில் எங்களை தலைமை பொறுப்பில் இப்பொழுது நியமித்து விட்டாய்.  உன் மனோரதம் நிறவேற எங்களை அழைத்து மிகப் பெரிய அனுக்ரஹம் செய்து விட்டாய். தேடிச் சென்று அடைய வேண்டியவன், தானாக எங்களை அருகில் வரச் செய்த உன் அரிய செயலை பாராட்டுகிறோம்.  இதை மிகப் பெருமையாக உணர்கிறோம்.

உன்னை மனதில் ஸ்மரிப்பவர்கள் புண்யம் செய்தவர்கள். அதை விட உன் மனதில் நீயாக நினைக்கும் பேறு பெற்றவர்கள் அதை விட மேலான புண்யசாலிகள்.  ப்ரும்மயோனி, ப்ரும்மாவையே படைத்த பரம் பொருள் மனதில் எங்களுக்கு இடம் கிடைத்ததே மகா பாக்யம்.  எங்கள் இருப்பிடம் தான் ஸூரிய சந்திர மண்டலங்களுக்கு மேல் இருந்தது. தற்சமயம் மதிப்பிலும் அவர்களை விட உயர்ந்த ஸ்தானம் கிடைத்து விட்டது.  நீங்கள் ஸ்மரித்த ஸ்மரணானுக்ரஹம் – எங்களை மனதில் நினைவு கூர்ந்த அனுக்ரத்தால்.  ஹே ப்ரபோ!  பெரியவர்களிடம் சம்மானம் பெறுவது தங்களிடமே பாராட்டு பெறுவதற்கு சமம்.  பாராட்டு பெறுபவனும் தன்னம்பிக்கை பெறுகிறான்.

ஹே விஸ்வ நாதா!  நீங்களே அழைத்த பின், எங்கள் மனதில் உத்சாகம் பெருகி உள்ளது. எதைச் சொன்னாலும் செய்ய சித்தமாக இருக்கிறோம்.  எங்களால் ஊகிக்க முடியவில்லை. அதனால் ப்ரசீத, தயவு செய்து சொல்.  மஹேஸ்வரா!  உன் உயரம் எங்களுக்கு எட்டாதது. அதனால் சந்தேகமின்றி சந்தோஷமாக சொல்.  கண் எதிரே நாங்கள் கண்டு மகிழும் உருவம் தான் ஸ்ருஷ்டி செய்கிறது. பாலனம் செய்கிறது, பின் சம்ஹாரம் செய்கிறது -அவற்றில் இது எந்த ரூபம்?

அல்லது, இதில் என்ன விவாதம். எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். மிகப் பெரிய வேண்டுதல் ஏதோ உள்ளது. பகவானே! நீங்கள் மனதால் எங்களை எண்ணியதால் வந்தோம்.  ஆணையிடுங்கள். என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்.  அவரும் சொல்ல ஆரம்பித்தார்.

சந்திரனின் ஒளிக்கும் மேலான அவர் பற்களின் ஒளி திகைக்க வைத்தது. உங்களுக்குத் தெரியும். என சுயநலம் எதுவும் இல்லை.  அதனால் என் எட்டு வித மூர்த்திகளால் இதை தெளிவாக்கி இருக்கிறேன். ஒவ்வொரு ரூபமும் என்னை ஒவ்வொரு விதமாக அறிவிக்கும். தாகத்துடன் தவிக்கும் சாதக பக்ஷிகளின் தாகத்தை தீர்க்க மழை தான் வேண்டும். வேறு எந்த வித உபாயமும் செல்லாது. எதிரிகளால் தோற்கடிக்கப் பட்டு செல்வ சம்பத்துகளை, பதவிகளை இழந்த தேவர்கள் என் மகனை வேண்டுகிறார்கள்.  அதனால் பார்வதியை விவாஹம் செய்து கொள்ள விரும்புகிறேன். யாக அக்னி வேண்டி  அந்த யஜமானர்களாக உள்ளவர்கள் அரணிக் கட்டையைக் கடைவது போல என் மகன் பார்வதியிடம் தோன்றவேண்டும்.

ஹிமவானின் மகள். அதனால் நீங்கள் என் சார்பாக அவரிடம் பெண் கேட்டுச் செல்ல வேண்டும்.  பரஸ்பரம் பெரியவர்கள் பேசி நிச்சயம் செய்த சம்பந்தங்கள் இடையூறின்றி சிறப்பாக அமையும்.

உன்னதமான, திடமான மலையாக உருவம் கொண்டுள்ள ஹிமவான் உலகனைத்தையும் தாங்குபவன்.  அவருடன் சம்பந்தம் செய்து கொள்வது எனக்கு பல விதத்திலும் நன்மையே.  இப்படி பேசுங்கள், கன்யாவை யாசியுங்கள் என்று உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.  உங்கள் பெருமையை அறிந்தவர்கள் தான். நீங்களே  அனுசரித்து காட்டியவைகளே ஆசார நியமங்கள்.   ஆர்யா- மதிப்புக்குரிய பெண், அருந்ததியும் வந்திருப்பதால் என்ன செய்ய வேண்டுமோ, அவள் அறியாததா,  அதன் படி செய்யுங்கள். இது போன்ற   மங்கள காரியங்களில் பெண்களை  முன்னிட்டுக் கொண்டு செய்வது சிறப்பு.

அதனால் கிளம்புங்கள். ஔஷதி ப்ரஸ்தம் எனப்படும் இமயமலையின் மகா கோசி என்ற அந்த ப்ரதேசத்து நதியை வைத்து வழி அறிந்து கொள்ளுங்கள். அது அருவியாக விழும் இடம்.  நீங்கள் பேசி முடித்து விட்டு வாருங்கள். நான் இங்கேயே இருக்கிறேன் என்றார்.  அவர்களும் அப்படியே என்று சொல்லி, கிளம்பினர்.

அந்த ரிஷிகள், தன்னடக்கம் மிகுந்தவர் எனப்படும் மஹாதேவனே இல்லறத்தை நாடும் சமயம் நாம் அதை குறைவாக எண்ண வேண்டியதில்லை என்று தங்களைத் தாங்களே சமாதானம் செய்து கொண்டவர்களாக பேசிக் கொண்டே சென்றனர். சற்றுப் பொறுத்து மஹா தேவனும் மஹாகோஸீ என்ற அந்த அருவி இருக்கும் இடம் சென்றார்.

மனோ வேகத்தில் பரம ரிஷிகளான அவர்கள் நீல வானைக் கடந்து ஹிமாலயத்தின் ராஜதானியை அடைந்தனர். 

அடுத்து வரும் பத்து ஸ்லோகங்களும் ஹிமாலயத்தின் வர்ணனை.

அலகா என்ற அந்த நகரம். பலவிதமான ஐஸ்வர்யங்கள் உடையது. குபேரனுடைய  அந்த வாசஸ்தலத்தில் நுழைந்து வெளி வந்தனர். மனதில் தங்கள் இருப்பிடமான  சுவர்கத்துடன் ஒப்பிட்டு பேசியபடியே சென்றனர். அலகா நகரை விட ஔஷதிப்ரஸ்தம் என்ற ஹிமவானின் ராஜதானி மற்றொரு சுவர்கம் போலவே இருப்பதாக உணர்ந்தனர்.  கங்கையின் ப்ரவாஹம் நகரை  ஸூழ்ந்து ப்ராகாரம் போல ஔஷதிகள்- தாவரங்கள் செழித்து வளரச் செய்திருந்தன.  இரவில் அந்த பச்சிலைகளின் பளபளப்பே தாரகைகள் போல கண் சிமிட்டின.  பெரும் சிலைகள் மாணிக்கம் என்ற மணிகள் போல பளிச்சிட்டன. அவை பாதுகாப்பு அரண்கள் போலும்.

யானைகளும் சிங்கங்களும் அதிகமாக தென்பட்டன. ஒன்றோடொன்று விரோதம் இல்லாமல் வளைய வந்தன.  அஸ்வங்கள் बिल सम्भवा: – வேறு எங்கும் இல்லாத அதிசயமாக குகைகளில் தென்பட்டன. யக்ஷர்களும், சித்தர்களும், ப்ரசித்தமாக இருந்தனர். கிம்புருஷர்கள், கின்னரர்கள் என்று ஊர் ஜனங்கள்.  வனதேவதைகளோ எனும் படி  பெண்கள் அனைவருமே வனப்புடன் இருந்தனர்.  

மாளிகைகளின் மேல் மண்டபங்களில் மேகம் பரவி நின்றது. அதன் இடியோடு போட்டியிடுவது போன்று மாளிகைகளின் உள்ளே இருந்து ம்ருதங்க பணவ வாத்யங்கள் இசைப்பது கேட்டது.  கல்ப வ்ருக்ஷங்களும் அதைச் சுற்றியிருந்த கொடிகளும் கொடி ஸ்தம்பமும் அதில் கட்டிய கொடியும் போல இருந்தன.  இரவு முழுவதும் ஸ்படிக மண்டபங்களில் பான பூமி எனப்படும் மதிராலயங்கள், கேளிக்கைஸ்தலங்கள்,   அவைகளும் பூக்களால் தோரணங்களுடன் விளங்கின.

வழிகாட்டுவது போல பச்சிலைச் செடி கொடிகளே ஒளி விட்டன.  இரவில் சஞ்சாரம் செய்வது மிக எளிதாக இருந்தது.  இரவின் அந்தகாரம் என்பதே இல்லை போலும்.  அந்த நகரில்  அனைவரும் இளைஞர்களாகவே இருந்தனர்.  நரை திரை அங்கு தோன்றுவதே இல்லை போலும்.  எந்த வித கவலையுமின்றி நீண்ட நேரம் உறங்கி எழுந்தனர்.  தம்பதிகளின் ப்ரணய கலஹம் மட்டுமே கலஹம்.

ஊரைச் சுற்றி உபவனம் அதன் நல்ல மணம் நிறைந்த மலர்களால் கந்த மாதனம் – வாசனையால் மயக்கும் என்று பெயர் பெற்றது.  ( ராமாயணத்தில் வரும் கந்த மாதன மலை வேறு – உரையாசிரியர்)  யாத்ரீகர்களும், வித்யாதரர்களும் அந்த வனத்திலேயே உறங்கினர்.  கல்ப வ்ருக்ஷத்தின் நிழல் போல இருப்பதாகச் சொல்வர்.  அந்த முனிவர்கள் ஊரை சுற்றி வலம் வந்து அதிசயித்து சுவர்கம் கூட வேண்டாம், இந்த ஔஷதி ப்ரஸ்த நகரிலேயே இருந்திருக்கலாம்.  சுவர்கம் எதற்கு.  நமது புண்ய பலன்கள் காரணமாக சுவர்கம் அடைந்ததாக  நினைத்தோமே என்றனர்..   

அரண்மனை வாசலுக்கு வந்து சேர்ந்தனர்.  திடுமென ப்ரகாசமாக இறங்கிய ஒளி போல வந்தவர்களைக் கண்டு ஹிமவான் அர்க்யம் முதலியவைகளை எடுத்துக் கொண்டு எதிர் கொண்டு வரவேற்றார்.

ஹிமவானை ஜங்கம-ஸ்தாவர – அசையும் அசையா பொருட்களாக வர்ணித்து மற்ற சாதாரண மக்களைப் போல அல்லாமல் விசேஷமானவர் என்று சொல்கிறார்.  கவியின் கற்பனை.

தாது தாம்ரதர:- தாதுக்களினால் சிவந்த நிறம் -மலை, சிவந்த அதரங்கள் கொண்டவர் அரசர் ஹிமவான்.

தேவதாரு மரம் நிறைந்த மலை. அந்த மரத்தின் கிளை போன்ற புஜங்கள் உடையவர் அரசர்.   பாறை போன்ற மார்பு ப்ரதேசம், மலையின் பக்ஷத்தில் இயல்பான பெரும் பாறைகள் கொண்டது.

இப்படி இருந்த ஹிமவான் எதிரில் வந்து நின்றார்.

முறைப்படி அதிதி சத்காரங்களைச் செய்து தானே வழி காட்டி மாளிகையின் சுத்தாந்தம்- உட் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.   தூய்மையான  இடம், தூய்மையான செயல்களுடன்  உள்ளவர் மட்டுமே ப்ரவேசிக்க அனுமதிக்கப் படும்  அரச குடும்பத்தினர் வாழும் இடம் சுத்தாந்தம் -அந்த:புரம்.

மனதால் எண்ணி கூட பார்க்க முடியாத எதிர் பாராத அனுபவம். மேகமே இன்றி திடுமென மழை பெய்தால் வரும் சந்தோஷம் இந்த இடத்திற்கு வந்த ரிஷிகள் அனுபவித்தனர்.  அதே போல ஹிமவானும்  உங்கள் வரவும், தரிசனமும் எங்களுக்கு பூத்த உடனேயே மரங்களில் பழங்கள் வந்தது போன்ற அதிசயமான சற்றும் எதிர்பாராத அனுபவம் என்றார்.

இந்த அனுபவம் சாதாரணமானதல்ல.  மூடன்- அறியாதவன் எனப்பட்டவன் திடுமென புத்திமானாக ஆகி மதிப்பு பெறுவது போலவும், இரும்பு பொன்னானது போலவும், பூலோகத்திலிருந்து அனாயாசமாக சுவர்கம் கிட்டியது போலவும்  ஞானிகளான உங்கள் காலடி பட்டு இந்த ப்ரதேசமே பெருமை பெற்று விட்டது என்றார்.

இன்றிலிருந்து இந்த தேசம் புண்ய க்ஷேத்ரமாக அறியப் படும்.  இங்கு யாத்திரையாக வருவதே பெரும் பயன் என்று மக்கள் உணருவார்கள்.  சஜ்ஜனங்கள் நடமாடி பூமியை புனிதமாக்குகிறார்கள். அது தான் தீர்த்தம்.

இதுவரை என் மேல் கங்கை ப்ரவஹிப்பதால் நான் சுத்தமானதாக நினைத்திருந்தேன். தற்சமயம்  தங்கள் வரவால் இரட்டிப்பு மகிழ்ச்சி. உங்கள் பாதங்களில் விடும் நீர் இந்த பூமியை மேலும் பாவனமாக்கும்.

ஹே முனிவர்களே! எனக்கு இரண்டு ரூபம். அசையும் அசையா பொருட்களாக நான் ப்ரசித்தமானவன். அசையும் ஜீவனாக ஹிமவானாக எனக்கு அனுக்ரஹம் செய்யுங்கள்.   உங்களை மூவுலகும் அறியும்.  அதனால் உங்கள் வரவினால் என் மகிழ்ச்சி பல மடங்காகிறது.  இருண்டு கிடக்கும் குகைகள் போல மனித மனம். உங்கள் வரவு எங்கள் மனதின் அந்தகாரம்-  அறியாமை என்ற இருட்டு அதையும் நீக்கட்டும்.

பெருமை மிக்க உங்களுக்கு நான் செய்யக் கூடியது என்னவோ?  என்னிடம் எதுவும் பயனுள்ளத்தாக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.  ஆணையிடுங்கள்.  உங்கள் தவப் பலனே அனைத்தையும் தர வல்லது. என்னை உய்விக்க வந்ததாகவே கருதுகிறேன். சேவகனுக்கு யஜமானனின் ஆணையே அருள்.  அது அவர் அவனிடம்  ப்ரசன்னமாக இருக்கிறார் என்பதன் அறிகுறி.

இதோ என் மனைவிகள். என் மகள். எங்கள் குல விளக்கு. எங்கள் அனைவருக்கும் உயிரானவள்.  பற்றுகளைத் துறந்தவர்கள் நீங்கள். இருந்தும் ரத்னங்களோ, உலகியல் பொருட்களோ எதுவானாலும் சொல்லுங்கள்.   இப்படி அவர்கள் எதிரில் சொன்னதே குகைகளில் எதிரொலி கேட்பது போல தங்கள் மனதில் சொல்ல வந்ததைச்  சொல்லி விட்டது போல அந்த முனிவர்கள் அதிசயித்தனர்.

தங்கள் முன்னோடியான ஆங்கிரஸ முனிவரை மற்ற ரிஷிகள் வேண்டினர். ஹிமவானுக்கு பதில் சொல்ல அவரே ஏற்றவர்.

உன் சிகரங்களின் உயரம் போலவே உன் சொற்களும் எண்ணமும் உயர்வாகவே இருக்கின்றன. அது தகுந்ததே. இந்த  உயர்ந்த ஸ்தானம் உனக்கு ஏற்றதே என்று பகவான் விஷ்ணுவே அங்கீகரித்து  சராசரங்களின் மடியான (குக்ஷி-வயிறு) பூமிக்கு ஆதாரமாக நியமித்திருக்கிறார்.  (கோளமான  உருண்டை வடிவமான ப்ரும்மாண்டத்தை நடுவிலிருந்து தாங்குவதாக. )

ரசாதளம் – பாதாளத்தில் நாகங்கள் தங்கள் ம்ருதுவான ஃப2ணம் – படங்களால் பூமியைத் தாங்குகின்றன.   அவைகளுக்கு உதவும் விதமாக, வேர் பாகம் போன்ற பாதாளத்தின் அடியிலிருந்தே  தண்டம் போல  நீயும் நடுவில் நின்று தாங்குவதால் தான் பூமி ஸ்திரமாக நிற்கிறாள்.    

உன்னிடம் தோன்றி மலைச் சரிவுகள் வழியாக பூமியில் இறங்கி பரவாஹமாக சென்று பூமியை வளம் செய்தபடி சமுத்திரத்தில் கலக்கும் நதிகள், கங்கை போன்றவை உலகை பாவனமாக ஆக்குவது போலவே உன் கீர்த்தியும் லோக பாவனமே. கங்கை முதலிய புண்ய நதிகளில் ஸ்னானம் செய்து பெரும் நன்மையை உன் சிகரங்களில் யாத்திரை செய்தும் அடைவர்.  பகவானின் பாதத்தில் இருந்து வந்தவள் என்று கங்கையை புகழுவது போலவே உன் தலையிலிருந்து இறங்குகிறாள் என்றும் புகழப் படுகிறாள்.

சர்வ வ்யாபியான பகவான், குறுக்கும், நெடுக்கும், மேல் நோக்கியும் பாதங்களால் அளந்தார். அது ஒரே ஒரு சமயம் தான். எப்பொழுதும் இல்லை.  இயல்பாகவே நீ வ்யாபகமாக- பரவி நிற்கிறாய்.    இந்திராதிகளின் மத்தியில் பொன் மயமான சிகரத்துடன் நீயும் பதம் வகிக்கிறாய். அசையா பொருட்களில் கடினமான தன்மை உன்னிடம் முழுமையாகவே இருக்கிறது.  வணங்காத தன்மை உன் இயல்பு. அதுவே தற்சமயம் உன்னுடைய அசையும் உருவமாக ஹிமவானாக பக்தியினால் வணங்கி நிற்கிறது.

எனவே நாங்கள் வந்த காரியத்தைச் சொல்கிறோம். கேள். உண்மையில் உன் பொறுப்பே.  நாங்கள் அதில் பங்கு ஏற்பவர்களே.   சுப காரியங்கள்  நடை பெறும் பொழுது அதன்  பலன்கள் பலரையும் நன்மை பெறச் செய்கிறது.  உன்னைச் சார்ந்த சுப காரியம் நாங்கள் இடையில் உபதேசம் அல்லது தூது வந்தவர்களே.

அணிமாதி குணங்கள் என்று சொல்லப் படும் சித்திகள், அஷ்டைஸ்வர்யம் முதலியவை எவரை சார்ந்து அமைந்துள்ளனவோ,  தனக்குவமை இல்லாதான்,  பரம ஈஸ்வரன், சந்திரனைச் தலையில் ஸூடியவன்,

த்ருதி- உறுதி முதலான குணங்கள் ஒன்றோடொன்று இணைந்து அவைகளின் திறமைகளை பகிர்ந்து கொண்டு அஷ்ட மூர்த்தியாக  தானே எட்டு விதமான உருவங்கள் எடுத்துக் கொண்டு படைத்த  மஹேஸ்வரன், தானே  அந்த லோகங்களை காத்தும் வருகிறான்.   பொதுவாக சாலைகள்  பிரயாணம் செய்ய பயன்படுபவை.  அவைகளில் மனிதர்கள்,  குதிரைகள் மற்றும் வாகனங்கள் அனைத்தையும் அவை தாங்குகின்றன என்பது வெளிப்படையாக தெரியாதது  போல.

யோகிகள் இவரைத் தேடுகிறார்கள், ஒவ்வொரு புண்ய க்ஷேத்திரத்திலும் இருப்பவன்.  சம்பூ என்ற இவரின் பதம் சுலபமாக கிடைக்காது என்று விவரம் அறிந்தவர்கள் சொல்வார்கள்.  பிறவியற்ற நிலையை பெறுவதே இவரை அடையும் வழி.  அதற்கான சாதனைகளை விடாமல் செய்வர்.

அவர் உன் மகளை  தன் விஸ்வ பாலனம் என்ற செயலுக்கு சாக்ஷியாக, உடன் இருப்பவளாக வர வேண்டும் என்று விரும்புகிறார். அவரே வரதன் – வரம் அருளுபவர்.  தன் விருப்பத்தை எங்கள் மூலம் சப்த ரூபமாக சொல்லி உன் மகள் பார்வதியை விவாகம் செய்து கொடுக்கும் படி வேண்டச் சொல்லியிருக்கிறார்.

இந்த சொல், அவருடையதே. அதனால் யோசிக்காமல்  உன் மகளையும் அவரையும் இணைத்து வை.  உன் மகள் நல்ல கணவனை அடைந்து சௌபாக்யவதியாக இருப்பாள்.  மகளைப் பெற்றவர்கள்  தங்கள் பிரியமான  மகளை தகுந்த வரனுக்கு கொடுத்தே அதிக  திருப்தியும் மகிழ்ச்சியும் அடைவார்கள். அது இயல்பு. (  वागर्थाविव संपृक्तौ – रघुवंशम्  – சொல்லும் பொருளும் போல இணை பிரியாமல் இருப்பவர்கள்)

மேலும், அவர் இந்த சரா சரங்கள், பஞ்ச பூதங்கள் உட்பட உள்ள ஜகத்தின் பிதா – தந்தை ஸ்தானத்தில் உள்ளவர்.  அதனால் உன் மகள் ஜகன்மாதா எனப் பெருமை பெறுவாள்.  தேவலோக வாசிகள், தந்தையான சிதிகண்டனை வணங்கி விட்டு தாயாக இவளை வணங்குவர். அவர்களுடைய கிரீடங்களின் மணிகளின் ஒளிக் கிரணங்களால்  இவள் பாதங்கள் அலங்கரிக்கப் படட்டும். 

உமா வதூ- மணப் பெண் ஆனால், நீ கொடுப்பவன், நாங்கள் தான்  யாசிப்பவர்கள் ஆவோம்.  மணமகன் சம்பூ, போதாதா, உன் குலத்தையே இந்த சம்பந்தம் மேம்படுத்தும்.  விஸ்வ குருவுக்கே குருவாக ஆவாய்.  அனைவரும் துதிக்கும் , பாடகர்களுக்கு பாடு பொருளாக உள்ளவனை சம்பந்தியாக, பெண் கொடுத்தவன் என்ற பெருமையால் அவரே உன்னை வணங்கும் தகுதியை அடைவாய்.

இந்த சம்பாஷனைக் கேட்டுக் கொண்டிருந்த பார்வதி எதுவும் பேசாமல் தன் கையிலிருந்த கமல பத்ரங்களை எண்ணியபடி இருந்தாள்.  கேட்டுக் கொண்டிருந்தாலும் வந்தவர்கள் ரிஷிகள், மரியாதைக்குரியவர்கள் என்பதால் தங்கள் உணர்ச்சிகளை காட்டக் கூடாது என்ற நியமத்தை கடை பிடித்தாள்.

சைலேந்திரன் தனக்கு பூரண சம்மதமே என்றாலும் மேனா முகத்தைப் பார்த்தார்.  கன்யாவின் மனதை அறிந்தவள் தாயாரே என்பது இல்லறத்தார் அறிந்ததே.  அவளும் தன் சம்மதத்தை கண்களாலேயே தெரிவித்தாள்.  மேலும் மேலும் யோசித்து இது பல வகைகளிலும் நியாயமே, நன்மையே என்று நினைத்து மங்கல அலங்காரங்கள் செய்வித்து மகளை  அழைத்து வந்து தருவதாக வாக்களித்தார்.

அதன் பின் மகளை அழைத்தார் ஹிமவான். மகளே! வா, விஸ்வாத்மனே  உன்னை வேண்டுகிறார். நாங்களும் சம்மதிக்கிறோம்.  முனிவர்கள் வந்து யாசிக்கிறார்கள். இல்லறத்தானுடைய கடமை இது.  தகுதி வாய்ந்தவர்களுக்கு வேண்டியதை தருவது எனப்படும். அதிலும் உத்தமமான  கன்யா தானம் என்ற மிகப் பெரிய பாக்யம் கிடைத்துள்ளது. பின் ரிஷிகளைப் பார்த்துச் சொன்னார், இவள் த்ரயம்பகனுடைய வருங்கால மனைவி. உங்கள் அனைவரையும் நமஸ்கரிக்கிறாள், என்றார்.

மகத்தான செயல் நல்லபடியாக முடிந்ததில் மகிழ்ந்த ரிஷிகள், ஹிமவானை பாராட்டினர்.  பார்வதியையும் ஆசீர்வதித்தனர்.  அருந்ததி அவளை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டாள்.  கண் கலங்க நின்றிருந்த தாயார் மேனாவையும் ஆசீர்வதித்தார்.   அவள் மகளிடம் கொண்ட பாசத்தால் பிரிய மனமின்றி இருப்பதையறிந்து,  குணவானான வரனுக்கு மகளைத் தருகிறாய். வருந்தாதே என்று  சொல்லி சமாதானம் செய்தாள்.   

விவாக தேதியைப் பற்றி பேசினர்.  ரிஷிகள், அடுத்து வரும்  நாலாவது நாள் நன்றாக இருப்பதாகச் சொல்லி விடை பெற்றனர். திரும்பி வந்து ஸூலதாரியான பகவான் மகேஸ்வரனிடம், விவரங்களைச் சொல்லி விட்டு ஆகாய மார்கமாக தங்கள் இருப்பிடம் சென்றனர்.

பசுபதியும், மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டுமே என்பது போல பொறுமையிழந்தவராக ஆனார்.

(இது வரைஸ்ரீ காளிதாஸரின் குமார சம்பவம் என்ற மகா காவ்யவத்தின்  உமா ப்ரதானோ என்ற ஆறாவது அத்யாயம்)

அத்யாயம்-7

அதன் பின், ஹிமவான், தன் பந்துக்களுடனும், பெரியவர்களுடனும் கலந்து ஆலோசிக்கலானார். சுக்ல பக்ஷம்.  லக்னத்திலிருந்து ஏழாவது இடத்தில் இருந்த திதியில்,  விவாஹ காரியங்களை ஆரம்பித்தார்.  ராஜ்யத்தில் ஒவ்வொரு வீடும் தோரணங்களாலும், கொடிகள், விளக்குகள் இவைகளால் அலங்கரிக்கப் பட்டன.  உத்சாகமாக ஊர் ஜனங்களும், அரச பரிவார பெண்களும் இணைந்து ஊரையே அழகு படுத்தினர்.  

பூக்களும் பட்டு வஸ்திரங்களும், கொடிகளும் மாலைகளும், பொன் மயமான தோரணங்களும், ஔஷதிப்ரஸ்த நகரமே ஜோதி மயமாக ஆயிற்று.  நகரமே மேரு சிகரத்திலிருந்து சுவர்கம் வரை சென்று விட்டது போல இருந்தது. பலர் பார்வதிக்கு முன்னும் பின்னுமாக உடன் பிறந்தவர்கள் இருந்தனர். அதில் முதன் முதல் திருமணம் பார்வதியுடையது என்பதால் அனைவரும் மகிழ்ந்தனர்.  மாற்றி மாற்றி அவளை வீட்டுப் பெரியவர்கள் தழுவிக் கொண்டும், உச்சி முகர்ந்தும் ஆசீர்வதித்தனர்.  வித விதமான ஆடையலங்காரங்கள் அன்பளிப்பாக வந்து சேர்ந்தன.  அந்த மாளிகையே அன்பில் மூழ்கியது போல திகழ்ந்தது.

உத்தர பால்குண முஹூர்த்த நாளில். ஸுரிய உதயத்திற்குப் பின் மூன்றாவது முஹூர்த்தம், நல்ல நேரம் என்று பதி புத்ரர்களுடன் கூடிய பந்துக்கள், பெண்கள் மங்களமாக பார்வதிக்கு அலங்காரம் செய்ய வந்தனர்.  கௌசேயம் என்ற உயர்ந்த பட்டு வஸ்திரம் பூக்களும் தூர்வாங்குரம் என்ற மங்கள பொருட்களும் சேர்த்து இடுப்பில் கட்டினர்.  சுக்ல பக்ஷ சந்திரனை மிஞ்சிய அழகியாக அவளை ஒவ்வொருவரும் வர்ணித்தனர். வாசனைப் பொருட்கள் கலந்த ஸ்னானத்துக்குரிய எண்ணெய்  தடவி பின் உலர்ந்த மணம் மிகுந்த பொடிகளும் சேர்த்து ஸ்னானத்திற்கான வஸ்திரங்களுடன் முழுக்காட்டினர்.   ஸ்னான க்ருஹமும் முத்து மாலைகள் கட்டி நான்கு ஸ்தம்பங்களுடன் இருந்து.  மேடையில் அமர்த்தி, வாத்யங்கள் இசைக்க தாங்களும் பாடிக் கொண்டே  எட்டு தங்கத்தால் ஆன கும்பங்கள் நிரம்ப  முன்னரே மந்திரங்களாலும் பரிசுத்தமாக்கப் பட்ட ஜலத்தால் முழுக்காட்டினர்.

கேசத்தை துடைத்து, தூபங்களால் உலர்த்தி, பின் புஷ்பங்கள் ஸூட்டினர்.  அகரு, சந்தன  மணம் கமழ்ந்தது.முதல் மாலையாக தூர்வா முதலிய குறிப்பிட்ட பச்சிலைகளும், மதூக பூவுமாக அணிவித்தனர். சரீரம் முழுவதும் வெண்ணிற அகரு பூசி, கோரோசனா என்ற பொருளால் சித்ரங்கள் வரைந்தனர்.  கங்கையின் ப்ரவாஹம் போன்ற கேசத்தில் மலர்கள் அணிவித்தனர்.  சந்திர பிம்பம் போன்ற முகத்தில்  கருமையான புருவங்கள். கண்களில் மையிட்டு திருஷ்டி கழித்தனர்.  கன்னங்களில் பிரதி பலிக்கும் படி உயர் மணிகளால் காதுகளில் குண்டலங்களை பூட்டினர்.  அதரங்களில் வண்ணம் சேர்த்தனர்.  இயல்பாகவே அழகிய அதரங்கள்.  அத்யந்த அழகியான அவளுக்கு அதற்கும் மேல் அலங்கரிக்க ஏற்ற வஸ்துவே இருக்கவில்லை.    

பாதங்களில் லாக்ஷா ரஸம் எனும் செங்குழம்பை பூசிய சகிகள், அயி சகே, இந்த பாதங்கள் உன் மணாளன் தலையில் உள்ள சந்திரனை தோற்கடிக்கட்டும், (உதைக்கட்டும்) என்று பரிகசித்தனர்.  எதுவும் சொல்லாமல் பார்வதி பூ மாலையால் அவளை செல்லமாக  தட்டினாள்.  

புது பட்டாடைகள், ஆபரணங்கள், பூமாலைகள் என்று மணமகளுக்குரிய அலங்காரங்களைச் செய்தனர்.

பூத்துக் குலுங்கும் கொடி போலவும், இரவில் நக்ஷத்திரங்கள் ப்ரகாசிக்க இருக்கும் வானம் போலவும் , சக்ரவாக பக்ஷிகள் மெள்ள ஊர்ந்து செல்லும் குளங்கள் போலவும், ( பத்மராக, இந்த்ர நீல என்ற உயர்ந்த மணிகள்- பூக்கள் நிறைந்த கொடி எனவும், இரவின் தாரகைகள் வெண்மையான முத்துகள் எனவும், சக்ரவாக பக்ஷிகள்- பொன்னிறமுடையவை- சுவர்ண ஆபரணங்கள், எனவும் உவமைகள்) 

 தன்னையே கண்ணாடியில் பார்த்து சகிகளின் கை வண்ணத்தை பாராட்டினாள்.  ஹரனை அடைய அவள்  மனம் நிறைந்த அன்பே போதும், இவை சகிகளின் ஆசைக்காக.  அவர்கள் அன்புடன் செய்த அலங்காரம், அவர்கள் திருப்தியும் தன்னிடம் நெருங்கி இருந்தவர்கள் என்பதால் ஏற்பட்ட ஒட்டுதலுமே காரணம்.

 தாயார் மேனா கையில் மங்கள் பொருட்கள் நிறைந்த தாம்பாளத்துடன் வந்தாள்.  ஆரத்தி (மஞ்சளும் சிவப்பும் கலந்த நீர்) மன:ஸிலா என்ற விசேஷமான தாது, இவைகளை சுட்டு விராலாலும்  நடு விரலாலும் தொட்டு அவள் முகத்தை நிமிர்த்தி  விவாஹ தீக்ஷா என்ற திலகத்தை நெற்றியில் இட்டாள்.  சிறுமியாக இருந்த நினைவும், அவள் குமரியாக ஆனதும், அந்த நிலையிலேயே அவள் மனோரதத்தை தான் அறிந்து கொண்டதும் அவள் நினைவில் நிறைந்தன.  அவள் மனோ ரதம் நிறைவேற வேண்டும் என்று ஆசீர்வதித்து திலகத்தை இட்டாள்.

கண்களில் பெருகிய நீர் மறைக்க அவள் இட்ட திலகத்தை அருகில் இருந்த தாத்ரி- பணிபெண் சீராக்கினாள்.

சகிகள், வெண் பட்டாடை அணிந்திருந்த மணமகள் சரத் கால பூர்ண சந்திரன் போல இருப்பதாக பேசிக் கொண்டனர்.  குல தேவதையை வணங்க  அழைத்துச் சென்றனர்.  அவளை கொண்டு சென்ற பெண்கள் இயல்பான அழகே மேல், இந்த அலங்காரங்களால் அவளுக்கு சிறப்பாக எதுவும் நாம் செய்ய முடியவில்லை என்று பேசிக் கொண்டனர்.    குல தேவதையை புஷ்பங்களால் ஆராதிக்கச் செய்து, கூடியிருந்த மூத்த ஸ்த்ரீகளையும் வணங்கி ஆசிகள் பெறச் செய்தாள்.  மேனா இந்த வழிபாட்டு முறைகளை நன்கு அறிந்தவள் என்பதால் மணமகளாக பார்வதி  செய்ய வேண்டியவைகளை செய்வித்தாள்.

தங்களை வணங்கியவளை, அவர்களும் குறைவில்லாத பதியின் அன்பைப் பெறுவாய், தீர்க சுமங்கலி பவ என்றும் ஆசிகள் வழங்கினர்.  பின்னால் அவள் பதியின் அங்கமாக அர்த்த நாரியாக இருக்கப் போகிறாள் என்பதை யார் அறிவர்?

அறிஞர்களும், ஹிமவானுக்கு நெருங்கிய பந்துக்களும் குடும்ப சகிதமாக வந்து நிறைந்த சபையில் , ஸ்ரீ சங்கரனின் வரவை எதிர் பார்த்து அமர்ந்திருந்தனர்.  குபேர சைலம் என்ற இடத்தில் பவன் – வந்து பார்வதியை பாணி க்ரஹணம் செய்ய லௌகீகமான மங்கள் பொருட்கள் மூத்த பெண்கள் பார்த்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.

மணமகனும் வந்தார்.. உபசாரமாக வைக்கப் பட்டிருந்த மங்கள பொருட்களை கைகளால் தொட்டார். எடுக்க வில்லை.  இயல்பான அவருடைய பஸ்மமும், கபாலமும் கூடிய ரூபமே அவருக்கு அலங்காரமாக ஆயிற்று. வைத்திருந்த அங்க ராகம் முதலியவைகளே இவ்வாறாக மாறி விட்டன.

தவ முடிவில் பார்வதிக்கு காட்சி கொடுத்த அதே ரூபமும் வேஷமும். வெண் நிற பஸ்மம் பூசிய உடலில் கஜ சர்மா- யானைத் தோலாடை,, சங்கத்தின் உள் புறம் போன்ற மூன்றாவது கண் திலகத்தின் இடத்தை எடுத்துக் கொண்டது. எப்பொழுதும் போல் புஜங்கங்களும்- சர்ப்பங்கள், கைகளுக்கு கங்கணம் என்ற  ஆபரணங்களாக ஆயின.  அவைகளின் தலையில் இருந்த ரத்னங்களே ஒளி வீசியபடி இருந்தன.   சந்திரனே தலையில் ப்ரகாசமாக இருக்க ஸூடாமணிகள் எதற்கு? அருகில் வந்த பூத கணங்களின் கையில் இருந்த வாளில் தன் ப்ரதி பிம்பத்தை பார்த்தார்.  (வீர புருஷர்கள் அப்படித்தான் செய்வார்களாம்- கவியின்  சொல்) தன் வ்ருஷப வாகனத்தில், நந்திகேஸ்வரர் பக்தியுடன் கொண்டு வந்து கொடுத்த சால்வையை அணிந்து கொண்டு ருஷபத்தில் ஏறிக் கொண்டு கைலாசத்தில் இருப்பது போலவே இருந்தார்.  அவர் பின்னே சப்த மாதாக்கள் -ஏழு தாய் மார்கள் என புகழ் பெற்ற பெண்களும் வந்தனர். அவர்கள் வாகனங்களும், அவர்களின் உடைகளும் அதே போல கைலாசத்தில் இருப்பது போலவே இருந்தன.

கனக ப்ரபா- பொன் போன்று ஒளியுடன் இருந்த அவர்களுக்குப் பின்னால், தேவி மகா காளி, தன் கரு நிற வஸ்திரங்களுடன்,  பெரிய பற்களுடன் கூடியவள் – அவளும் வந்தாள்.  தூரத்தில் பளிச்சிடும் மின்னல் போன்று இருந்தாள்.  ஸுலங்களை ஏந்திய பூத கணங்கள்,  மங்கள வாத்யங்களை வாசித்தபடி முன்னால் சென்றனர். 

தேவர்கள் வந்தனர். அவரவர் தங்களுடைய மதிப்பு மிக்க பொருட்களை பரிசாக கொடுத்தனர். ஸூரியன், த்வஷ்ட்ர- விஸ்வகர்மா – அவரால் தயாரிக்கப் பட்ட புதிய குடையை கொடுத்தார்.  அது பகவானின் தலையில் மற்றொரு கங்கா போல அழகிய பட்டு வஸ்திரம் அவருடைய கிரீடத்தை ஸூழ்ந்து நின்றது.

கங்கா யமுனா உருவத்துடன் வந்தனர்.  சாமரங்களை வீசியபடி உடன் வந்தனர்.  சமுத்திரம் நோக்கிச் செல்லும் தங்கள் பிரயாணத்தைக் கூட சற்று நிறுத்தி வைத்தனர் போலும்.  அதன் பின் முதல் ப்ரும்மா, ஸ்ரீ வத்ஸ அடையாளத்துடன் புருஷோத்தமனும் நேரிடையாக வந்தார். ஜய சப்தம் எங்கும் நிறைந்தது.  நெய் விழுந்தவுடன் பளிரென்று ஜ்வாலை எழுவது போல ஜய சப்தமும் வாழ்த்துக்களும் எழுந்தன.

ஒரே மூர்த்தி, படைத்தல், காத்தல், மறைத்தல் என மூன்று விதமாக ரூபம் எடுத்து மூன்றாக காட்சி தருகிறார்.  

லோக பாலர்கள், முக்யமான புரோஹிதர்கள், அவரை வணங்கினர். , சத்ர சாமரங்கள், மற்ற தங்கள் செல்வ சம்பத்தைக் குறிக்கும் எதுவும் இல்லாததால், நந்திகேஸ்வரரை  அழைத்து இந்த்ரன் முதலான தேவர்கள் தங்களை சபையில் இவர் இன்னார் என்று அறிமுகப்படுத்தச் சொன்னார்கள்.  மகேஸ்வரனிடம் சென்று அவரை வணங்கினர். .

அவரும் நான்முகனை தலையசைத்தும், ஸ்ரீ ஹரியை வாக்கினால், இந்திரனை மென் முறுவலால், மற்ற தேவர்களை கண்ணால் பார்த்தே சன்மானம் செய்தார்.

ஜய கோஷம் வானளாவ எழுந்தது.  சப்த ரிஷிகள் ப்ரதானமாக இருந்தனர். அவர்களை தன் விவாக காரியங்களை செய்ய பணித்தார்.  மெள்ள சிரித்தபடி நீங்கள் தானே ஆரம்பித்து வைத்தீர்கள், அப்பொழுதே தீர்மானித்து விட்டேன் நீங்கள் தான் என் பக்ஷத்து அத்வர்யூ- தலைமை புரோஹிதர்கள் என்றார்.

விஸ்வாவசு முதலான கந்தர்வர்கள் பாடிக்கொண்டும், வீணை வாசித்துக் கொண்டும் முன் சென்றனர்.  பின்னால் மணமகன் சிவ பெருமானும், அவருடன் மற்ற தேவதைகளும் சென்றனர்.  ஸ்ரீ சங்கரருடைய வாகனம், மேகங்களுடன் விளையாடுவது போல தன் கழுத்தில் கட்டியிருந்த சிறு மணிகளை அசைத்து கிங்கிணி நாதம் செய்து மகிழ்ந்தபடி சென்றது.

முஹூர்த்த நேரத்தில் அந்த ஊர்வலம் ஹிமவானின் ஊரை அடைந்தது. நீலகண்டனும், குதூஹலத்துடன் கூடியிருந்த ஊர் ஜனங்களை பார்த்தபடி வந்து பூமியில் இறங்கினார்.  பந்து ஜனங்கள் அனைவருமே செல்வ செழிப்புடன் கிரி சக்ரவர்த்தியின் ஆட்சியில் நல்ல முறையில் பாதுகாப்பாக வளமாக வாழ்கிறார்கள் என்பது கண்ட உடனேயே தெரிந்தது. வரவேற்க யானைகளின் அணிவகுப்பும் காணப் பட்டது.  ஹிமவானும் நல்ல வஸ்திரங்கள், ஆபூஷணங்கள் தரித்தவராக முன்னால் வந்தார்.

தேவ சமூகத்தின் கோலாஹலம் ஒருபுறம், ஹிமவானின் வரவேற்பு வைபவங்களால் எழுந்த வாத்ய மற்றும் மக்களின் ஆராவாரம் ஒருபுறம் இரண்டும், இரண்டு நதிகள் பிரவாஹமாக ஓடி வந்தவை ஓரிடத்தில் இணைந்து ஒன்றானது போல் கோட்டை வாசலில் சந்தித்தனர்.  பரஸ்பரம் அறிமுகங்கள்,  வாழ்த்துக்கள், வரவேற்புக்கள் என்று அந்த இடமே மகிழ்ச்சி நிறைந்ததாக காணப் பட்டது.

மூவுலகமும் வணங்கும் ஸ்ரீ ஹரன் பெண்ணின் தந்தை என்ற மரியாதை நிமித்தம் வணங்கினார். ஹிமவான் அதனால் லஜ்ஜை, அடைந்தார், (ஹிமவான்-ஹ்ரீ-வெட்கம் காரணமாக ஹ்ரீமான் ஆனார்)  தானும் முன்னரே தலை வணங்கி நின்றிருந்தார்.  இருவரும் முகத்திலேயே பரஸ்பரம் மதிப்பும் அன்பும் தெரிய நின்றனர். கிரி ராஜன் மணமகனை சபைக்குள் அழைத்துச் சென்றார்.

வழி முழுவதும் மலர்களும் அலங்கார பொருட்களுமாக நிறைந்திருந்தன. அதன் வழியே, ஊரில் இருந்த அழகிய பெண்கள் அவரைக் காணும் பொருட்டு மற்ற வேலைகளை விட்டு அங்கு கூடியிருந்தனர்.  மாளிகைகளின்  மேல் பகுதிகள் நிறைந்து இருந்தன. மணமகனைக் காணும் ஆசையால் கிடைத்த இடங்களில் ஊரார் நின்று பூக்களை மழையாக பொழிந்தனர்.   தங்களும் தங்களை நன்றாக அலங்கரித்துக் கொண்டு போக விரும்பியவர்கள் பாதியில் விட்டு ஓடி வந்தார்கள்.  கேசத்தை முடிந்து கொண்டிருந்தவர்கள், காலில் பாதி செம்குழம்பு பூசிக் கோண்டிருந்தவர்கள்,  எதிரில் வராமல் ஜன்னல்கள் அருகிலேயே நின்றபடி  ஊர்வலத்தைக் கண்டனர்.   பரபரப்பும் ஆவலுமாக ஆண்களும் பெண்களுமாக அனைவரும் வந்து சேர்ந்தனர்.  சதாசிவனும் அந்த கோலாஹலத்தில் பங்கெடுப்பது போல ப்ரசன்னமான முகத்துடன் அவர்களைப் பார்த்து அங்கீகரித்த படிச் சென்றார். பகல் பொழுதேயானாலும் அவர் தலையில் இருந்த பிறைச் சந்திரன் தன் பங்குக்கு குளுமையாக காந்தியை பரவ விட்டான். ஒரு க்ஷணம் கூட கண்களைத் திருப்பாமல் அந்த ஊர்வலத்தையும், மணமகனான ஸ்ரீ சதா சிவனையும் கண்டபடி இருந்தவர்களின் கண்  என்ற புலன் ஒன்றே பெரும் பயன் பெற்றது, மற்ற புலன்கள் இருப்பதே தெரியாமல் அடங்கி விட்டன.

அபர்ணா – தேவி உமா, செய்த தவம் பலித்தது. ஏற்ற கணவன் அவளுக்கு வாய்த்து விட்டான் என்று பேசிக்கொண்டே கலைந்தனர்.  இருவரும் ஒருவருக்கொருவர் என்றே அமைந்தவர்கள்.  ப்ரும்ம தேவன் இந்த இருவரையும் இப்படி சிறந்த ரூப, குணங்களுடன் படைத்து விட்டு சேர்த்து வைக்காமல் விட்டிருந்தால், இவர்களின் இந்த அழகும், சிறப்பும் வீணாக போய் இருக்கும் என்று பேசிக் கொண்டனர்.   

இவர் கோபத்துடன் காமனை எரித்தார் என்பர். ஆனால் இவர் அப்படி செய்யக் கூடியவரில்லை. அவனுக்கே வெட்கமாக இருந்திருக்கும். இவருடைய சுந்தரமான ரூபத்தைப் பார்த்து  வெட்கம் ஸூழ்ந்திருக்கும். அதனால் தானே யோக அக்னியில் மாண்டிருப்பான்.

நம் அரசன் ஹிமவான்  பிரிய மகளுக்கு அவளும் விரும்பி, தனக்கும் பிடித்தமான  உயர்ந்த சம்பந்தம் கிடைத்து விட்டதால் மகிழ்ச்சியில் மேலும் உயரம் அதிகமாக ஆவார். பூமியைத் தாங்குபவர் அல்லவா?

இதற்கிடையில் ஔஷதிப்ரஸ்த நகரில் ஊர்வலம் அரச மாளிகையை எட்டியது. மங்களமாக அவர் மேல் தூவப் பட்ட லாஜ- அரிசிப் பொரிகள், கூட்டத்தில் விழுந்து பொடியாயின. அச்யுதன் கை கொடுக்க,  சரத் கால மேகம் போன்ற வெண் நிற ருஷபத்தில் இருந்து இறங்கி அவருடன் ப்ரும்மா முதலானோரும் முன்னரே ஏற்பாடு செய்திருந்த மாளிகையினுள் நுழைந்தார்.  இந்திராதி தேவர்களும், சப்த ரிஷிகளும், மற்ற கணங்களும்  அவரை பின் தொடர்ந்து சென்றனர்.

ஹிமவான் வந்து உபசரித்து ஆசனத்தில் அமரச் செய்தார்.  ரத்னங்கள் நிறைந்த ஆசனம், தேன் கலந்த தயிர், இரண்டு புது வஸ்திரங்கள் இவற்றை அளித்தார்.  வேத மந்திரங்களுடன் விவாக முறைப்படி அவைகளை ஈஸ்வரனும் பெற்றுக் கொண்டார்.  பட்டாடைகளை அவர்  அணிந்த பின், மணமகள் இருந்த மணமேடையை அடைந்தார்.  சந்திர கிரணங்கள் தன் மேல் விழவும், , சமுத்திரம்  நுரைகளை அலைகளால் கரையை நோக்கி தள்ளுவது போல இருந்தது அந்த சபை.

பார்வதியைக் கண்டதும் ஈஸ்வரனின் முகம் மலர்ந்தது.  அவளும் பூர்ண சந்திர முகி. குமுதம் மலருவது போல இவர் முகமும் மலர்ந்தது என்று கவியின் வர்ணனை. தந்தையான ஹிமவான் அவள் கரத்தை பற்றி அழைத்து வந்து அஷ்டமூர்த்தியான ஈஸ்வரனுக்கு அளித்தார்.  காமன் நிம்மதி பெருமூச்சு விட்டான்,  அவன் ஆரம்பித்த செயல்,  தாமிர நிற ஈஸ்வரனின் விரல்கள், சிவந்த பார்வதியின் கைகளைப் பற்றிய சமயம் அவனை தூது அனுப்பிய தேவர்களின் விருப்பம்  சீக்கிரமே நிறைவேறும் என்ற நம்பிக்கையை அளித்து விட்டது.  இருவருக்கும், தங்கள் மனோரதம் நிறைவேறியது என்ற மகிழ்ச்சி அவர்கள் முகத்திலும், உடலிலும் தெரிந்தது.

இருவருமாக அக்னியை ப்ரதக்ஷிணம் செய்தனர்.  இரவும் பகலும் ஒன்றானது போல இருந்தது. (மேரு மலையின் ஒரு பாகம் இரவும், மறு பக்கம் பகலுமாக இருப்பது போல )

மூன்று முறை அக்னியை வலம் வந்த பின், புரோஹிதர்கள் அவைகளை லாஜ ஹோமம் என்பதை செய்ய வைத்தனர்.  (புகையாலோ, கைப் பற்றி சுற்றி வந்ததால் வெட்கத்தாலோ என்று கவியின் கற்பனை) லாஜம்-பொரியைப் போட்டதும் அக்னி குபீரென்று எழுந்து முகத்தை சிவக்கச் செய்தது. (புரோஹிதர் சொன்னதால் பொரியின் மணத்தை முகர்ந்து பார்த்தாள் பார்வதி – அந்த சமயம் ஜ்வாலை அவள் கன்னங்களை ப்ரகாசிக்கச் செய்யும் குண்டலங்கள் போல ஆயிற்று)

சிவ-பார்வதி இருவரையும் சேர்த்து நினைத்த மாத்திரத்திலேயே வ்ருத்தி-வளர்ச்சி யை பெறுவார்கள் எனும் பொழுது இருவரும் கைகளை கோர்த்துக் கொண்டு நின்ற பொழுது அதன் சோபையை வர்ணிக்கவா முடியும்.மேரு மலையே தன் அனைத்து பாகங்களும் பகலா இரவா என அறிய முடியாதடி பிரகாசமாக ஆக்கிக் கொண்டு  விட்டதோ- அப்படி அலங்கரிக்கப் பட்டிருந்தது.

புரோஹிதர் பார்வதியைப் பார்த்துச் சொன்னார்: வத்ஸ! குழந்தாய், அக்னி சாக்ஷியாக நீ ஸ்ரீ சங்கரனின் பத்னியாகி விட்டாய். ஸஹ தர்ம சாரிணீ- தர்ம காரியங்களில் அவருடன் சேர்ந்து இருக்க அனுமதி பெற்று விட்டாய், என்று சொல்லி வாழ்த்தினார்.  (ப்ராஜாபத்ய விவாகம் என்பது எட்டு விதமான திருமணங்களில் ஒன்று.) இதைக் கேட்டு பார்வதி கடும் கோடைக்குப் பின் பூமி மழைத் துளியை பெற்று மகிழ்வது போல மகிழ்ந்தாள்.

அதன் பின் த்ருவ நக்ஷத்திரத்தை காண புரோஹிதர் அவர்களை அழைத்துச் சென்றார். வானத்தை நோக்கிய முகத்துடன் த்ருவ நக்ஷத்திரத்தை இருவருமாக கண்டனர்.  பார்த்து விட்டோம் என்றனர்.  இவ்வாறு விவாக விதிகளை புரோஹிதர் சொன்னபடி செய்து இருவருமாக அவரையும், பிதாமஹரான ப்ரும்மாவையும் வணங்கினர்.

விதாதா அவளை’ஹே! கல்யாணி, வீர ப்ரஸவா பவ’ ஹே! கல்யாணி, வீரனான மகனுக்குத் தாயாவாய் என்று ஆசீர்வசித்தார்.  வாசஸ்பதியாக தான் இருந்தும், அஷ்டமூர்த்தியான பரமசிவனுக்கு தான் யார் ஆசி அளிக்க என்று எண்ணி சிரித்தபடி சொன்னார்.

விவாக மேடையை வேதியை ப்ரதக்ஷிணம் செய்த படி இருவரும் கனகாசனம் – பொன்னால் ஆன ஆசனத்தில் அமர்ந்தனர். உற்றாரும் உறவினரும் வந்து  அக்ஷதைகள் தூவியும், நெற்றியில் திலமிட்டும் வாழ்த்தினர்.  லக்ஷ்மி தேவி, தளிருடனும் தண்டுடன் கூடிய வெண் நிற தன் பத்மம் போன்ற வடிவிலேயே இருந்த வெண் குடையைக் கொடுத்தாள்.    சரஸ்வதி, சம்ஸ்க்ருத ப்ராக்ருத மொழிகளில் தன் வாழ்த்துச் செய்தியை வாசித்தாள்.  அவள் வாழ்த்து துதியாகவே அமைந்தது. சுத்தமான மொழியும், (இலக்கண விதி மாறாமல்),பலவிதமான ராக சஞ்சாரங்களுடன் (ஸ்ருங்காரம் முதல் உணர்ச்சிகளை விளக்கும் ராகங்களுடன்) உடன் வந்த அப்சரஸ்கள் அதை நாட்டியமாக ஆட (நாடக மாகவும்) இயல், இசை, நாடகம் மூன்றும் வெளிப்பட மதுரமான வாக்குகள். – இரண்டு மணி நேரம் அந்த நிகழ்ச்சி நீண்டது.

அதன் பின் தேவர்கள் வந்தனர். கிரீடங்கள் தரையில் பட விழுந்து வணங்கினர்.  சாபம் கொடுத்ததால் உருவின்றி ஆன மன்மதனுக்கு சாப விமோசனம் தர ப்ரார்த்தித்தனர்.   பகவானும் அந்த வேண்டு கோளை ஏற்றுக் கொண்டார்.  விவாகம் ஆகி ப்ரசன்னமாக இருந்த சமயம்  அதை விட நல்ல சமயம் வேறு ஏது? தன் விருப்பம் நிறைவேற வேண்டுமானால், கொடுப்பவர் மகிழ்ச்சியுடன் இருக்கும் நேரமாக போய் கேட்க வேண்டும் என்பது பொதுவான நியதி.

அவர்களை அனுப்பி விட்டு பகவானும் பார்வதியை கரம் பற்றி அழைத்துக் கொண்டு, அலங்கரிக்கப் பட்ட சயண க்ருஹம் சென்றார். அந்த அறை பலவித பூக்களாலும், பொன் கலசங்களுமாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. புது மனைவி, வெட்கமும், மகிழ்ச்சியுமாக, வேடிக்கையும் விளையாட்டுமாக  சகிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து அனுப்பி விட்டு ஹரனிடம் வந்தாள்.

(இது வரை ஸ்ரீ காளிதாஸரின் குமார சம்பவம் என்ற மகா காவ்யத்தின் உமா பரிணாமோ என்ற ஏழாவது அத்யாயம்)

 

அத்யாயம்-8

(விவாகத்திற்கு பிறகு தனிமையில் தம்பதிகளின் இடையே நடக்கும் சம்பவங்களையும் விவரிக்க விரும்பி காளிதாச கவி, ஸ்ருங்கார பரமாக தொடருகிறார்)

இளம் பிராயத்தினளான பார்வதி முதல் நாள் அனுபவங்களை பயத்துடனே எதிர் கொண்டாள்.  சங்கரன் கேட்ட கேள்விகளுக்கும் சரியான பதில் சொல்ல முடியாத தயக்கமே மேலோங்கியது, முகத்தை மூடிக் கொண்டு படுத்தாள்.  மெள்ள மெள்ள இருவரும் ஒருவரையொருவர் நெருங்கி அமரவும், நேருக்கு நேர் பார்க்கவும் துணிவு பெற்றாள். 

சகிகள் சொன்னபடி பணிவிடை செய்ய துணிந்தாலும், நேர் எதிரே கணவனைக் கண்டால் பதற்றமே மிகுந்தவளாக சகிகள் சொன்னதெல்லாம் மறந்து போனது.

அவளை அவள் போக்கிலேயே விட்டுப் பிடிக்கலாம் என் எண்ணியவராக அவரும் அனாவசிய விஷயங்களையும் கூட ஹாஸ்யமாக பேசி சகஜநிலைக்கு கொண்டு வந்தார்.

புது மண தம்பதிகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் விவரமாக ஸம்போக ஸ்ருங்காரம் என்ற முறையில் காளிதாசர் எழுதியது.  அதரங்களில் முத்தமிடும் பொழுது பற்கள் பட்டாலோ,  ஸ்தனங்களில் விரல் நகங்கள் பட்டாலோ அவளால் ஏற்றுக் கொள்ள முடியாமல் பயந்தாள்.  விடிந்ததும் சகிகள் வந்து விசாரித்தனர்.  அவர்களுடன் தாயாரும் வந்து விசாரித்தாள். புது மணப் பெண் கணவனுடன் முதல் நாள் அனுபவம் என்பதால் அந்தரங்கமாக  விசாரித்தார்கள். 

சில நாட்கள் இவ்வாறு சென்றன.  அவளும் மெள்ள மெள்ள கூடலை ரசிக்கத் தெரிந்து கொண்டு விட்டாள். எதிர்பார்ப்பும்,  பலமாக கட்டி அணைத்தாலும், தன் சரீரத்தில் அதன் தாக்கமாக அயர்வு, வலிப்பதாக இருந்தாலும்  தானும் முழு  ஈடுபாட்டோடு மண வாழ்க்கையை சுகமாக உணரலானாள்.   உடன் இருக்கும் சமயங்களில் முழு ஆதரவுடன் தன் உடலை அனுபவிக்க இடம் கொடுத்தாள்.  மண வாழ்க்கை இருவருக்குமே பிடித்தமாகவும், ஒவ்வொரு நொடியும் அருகிலேயே இருக்கும் ஆவலையும் உண்டாக்கியது.இயல்பாக அணு அணுவாக ரசிக்கத் தொடங்கிய பின் பிரிவு என்பது சில நொடிகளே ஆனாலும் தாங்க முடியாததாக ஆயிற்று. கங்கை சாகரத்தை அடைவதே குறிக் கோளாக ப்ரவஹித்து ஓடி சாகரத்தில் கலந்து விடுகிறாள்.  சாகரம் அவளை தன்னுள் அரவணத்து கொண்டு விடுகிறது போல  பரஸ்பரம் அவர்களின் அனுராகமும் அதே போல ஆழ்ந்த தாக இருந்தது.

இரவும் பகலும் இணை பிரியாமல் இருந்தாலும் பேசிக் கொள்ள விஷயங்கள் இருந்தன.  ஒருவருக்கொருவர் தவிர உலகில்  எதுவே இல்லை என்பது போல.  மகளை பிரிய தயங்கிய ஹிமவானுக்காக  ஒரு மாதம் அங்கு தங்கியிருந்தார்.  மாத  முடிவில் ஹிமவானின்  மாளிகையில் பார்வதியுடன் இருந்த சங்கரர் புறப்பட்டார்.  நந்தி வாகனத்தில் ஹிமாலய பர்வதத்தைச் சுற்றிவந்து, பார்வதியுடன் மந்தராசலம் என்ற இடம் வந்தார். பாற்கடலைக் கடைந்த சமயம் இந்த மந்தராசலம் தான் மத்தாக நின்றிருந்தது. அதனால் அவ்வப்பொழுது தெறித்த அம்ருதத்தின் சுவையை பருகியிருந்தது என்பர்.  மலயுச்சியில் நின்று மனைவியின் கமலம் போன்ற முகத்தை ரசித்தார்.  வண்டாக அந்த கமலத்தை அவர் கண்கள் அதை வட்டமடித்தன.

அங்கிருந்து கிளம்பி குபேர பவனம் சென்றனர்.  குபேர பவனம் அலகாபுரி என்ற இடம். அங்கு வந்து சேர்ந்தனர். அங்கு திடுமென ஒருநாள் ராவணன் மலையை அசைத்து பயங்கரமாக கர்ஜித்ததில் பயந்து அவர் கழுத்தை இறுக கட்டிக் கொண்டவள், உடலோடு உடலாக ஒன்றி விட்டாள்.  குபேர பவனத்தில்  சந்திரன் மிக அருகில் இருப்பது போல உதயமாயிற்று.  அதன் குளுமையான கிரணங்களில் அதிக ப்ரகாசத்தையும், அதன் குளிர்ந்த அனுபவத்தையும் வெகுவாக ரசித்தனர். ( சந்திரனின் அருகாமையால் அந்த இடம் பொன் நிறம் பெற்றது. அதனால் குபேர புரியே பொன்னால் ஆனது என்று பெயர் பெற்றது)

(குபேரன் அதை அருகில் இருந்து கண்டான். சற்றே பொறாமை கொண்டான் என்று அவன் கண்கள் பார்வையை இழந்தன. பின்னர் பகவான் சங்கரரின் அருளால்  பார்வையை திரும்ப பெற்றான் ஆனால் ஒரு கண் மஞ்சள் நிறமாயிற்று என்பது வரலாறு. அதனால் குபேரன் பெயரே ஏகபிங்களன் என்றாயிற்று. அதனால் குபேர பவனம் ஏகபிங்கள கிரி என்றே அறியலாயிற்று) 24.

தென் திசையில் இருந்து காற்று லவங்க வாசனையும், சில சமயம் கேஸர வாசனையும் சுமந்து வந்தது.  அந்த காற்றில் எந்த வித உடல் அலுப்பையும், சோர்வையும்  நீக்கும் தன்மை இருக்கவே அங்கு சில நாட்கள் தங்கினர். ஆகாய கங்கையில் மூழ்கி ஸ்னானம் செய்தனர். மனோ ரஞ்சக மான சூழ்நிலையும் ஏகாந்தமான இடம். எனவே அவர்கள் எந்த வித கவலையுமின்றி  நீரில் விளையாடி மகிழ்ந்தனர். செந்தாமரை தண்டுகளால் ஒருவரையொருவர் சீண்டியும், நீரை வாரியடித்தும், விளையாடி மகிழ்ந்தனர்.  நந்தன வனத்தில் இருந்து பாரிஜாத புஷ்பங்களை பறித்துக் கொண்டு வந்தனர்.  தேவ லோக பெண்கள், இந்திராணி போன்றோர்  அங்கு வந்து இவைகளை பயன் படுத்தி இருப்பார்கள்.  இவ்வாறு கணவனின் பரி பூர்ண அன்புக்கு பாத்திரமான பார்வதி அதற்கு சற்றும் குறையாத அன்புடன் பிரிய சகியாக, மனைவியாக இருந்து பல இடங்களுக்கும் சென்று திரும்பி கந்தமாதன பர்வத வனத்தில் நுழைந்தனர்.  அங்கு பொன் மயமான பாறையில் அமர்ந்து அஸ்தமன ஸூரியனின் பொற் கிரணங்களைக் காண, தர்ம பத்னியான பார்வதியை அணைத்தபடி அமர்ந்திருந்தவர்  அவளிடம் சொன்னார்:

ஹே ப்ரியே! இந்த ஆதவன் என்ன செய்கிறான் தெரியுமா?  கமலத்தின் இதழ்கள் விரிந்து இருப்பதை  தோற்கடிக்கும் உன் கண்களைப் பார்த்து அவசரமாக பகல் பொழுதை முடித்துக் கொண்டு திரும்புகிறான். அது எப்படி இருக்கிறது என்றால், ப்ரஜாபதியான பகவான் ப்ரளய காலத்தில் மூவுலகையும் சுருட்டி தூக்கிக் கொண்டு போவது போல இருக்கிறது.  

ஹே! பார்வதி, கொடி போன்ற  உன் சரீரத்துடன் போட்டி போடுவது போல  இந்த  இந்திர சாபம்- வான வில், வளைந்து நிற்கிறது பார்.  எப்படி வந்தது தெரியுமா ? சூரியனுடைய கிரணங்கள் ஜல கணம்- நீர் துளிகளில் வழியே நுழைந்து வெளி வந்தது.  அதே ஸுரியனின் ப்ரகாசம் அதிகமானதும் கலைந்து விட்டது பார்.  இதோ உன் தந்தை ஹிமவானின் மலையில் இறங்கி வரும் அருவிகள் அந்த வான வில்லின் ஒளியை ப்ரதி பலித்தன. அது மறைந்தவுடன்,ஏன் வந்தது. எப்படி மறைந்தது என்று  எதுவும் புரியாமல் அமைதியாக இருக்கின்றன போலும்.

இதோ பார், சக்ரவாக பக்ஷிகள் தாமரையின் தண்டில் முகத்தை வைத்து எம்பி மகரந்தத்தை உண்கின்றன. திரும்பி பார்த்தால் அதன் இணையான மற்றொரு சக்ரவாகம் சற்று தூரத்தில் இருக்கிறது. அதை அழைக்க கடுமையான அதன் குரலில் சத்தமாக அழைக்கிறது பார்.  அதிக தூரம் கூட இல்லை. கத்துவானேன்.

யானைகள் தாகத்துடன் வேகமாக வந்து நீரை பருகு கின்றன. இவ்வளவு தூரம் வருவானேன்.  சல்லகி என்ற நீர் அல்லி தாமரை போலவே யானைகளுக்கு பிடிக்குமாம். सल्लकी स्याद् गजप्रिया- என்பது ஒரு செய்தி. இந்த மலர்களின் மணம் அவைகளை எங்கு இருந்தாலும் இழுக்கும் போலும். யானைகள் ஒரு முறை மாலையில்  ஒரே முறையில் வேண்டிய அளவு நீரை பருகி விடும் என்பது ப்ரசித்தம்.

மித பாஷிணீ!  அளவாக பேசத் தெரிந்தவள்.  மேற்கு திசையில் ஸுரியன் அஸ்தனமாக தயங்கிக் கொண்டு இருக்கிறான். ஏன் தெரியுமா? இந்த குளத்தில் பார். அவனுடைய வண்ண மயமான கிரணங்களின் ப்ரதி பிம்பம்  குளத்து நீரில் பல விதமான  கோலங்களை போட்டிருக்கிறது. அதை ரசித்துக் கொண்டிருக்கிறான் போலும்.

தாமரைத் தண்டின் ம்ருதுவான பாகங்களை கடித்து குதறும் இந்த வன – நீர் வராகங்களைப் பார். (வனம்-காடு,நீர்  இரு பொருள் உடையது) இவைகள் கூட்டமாக வந்து நிறைந்துள்ளன. இரவில் நிலத்தில் வாழ்பவை. அதன் தலைவன் கரையேறியதும் மற்றவை அனைத்தும் உடன் வந்து விட்டன.

ஹே! அழகியே! இந்த மரத்தின் நுனியில் பார்.  மஞ்சள் நிறத்தில் மயில்கள் வந்துள்ளன. இவைகளின் தோகை எப்படி பொன் வண்ணம் பெற்றன? அவைகளும் அஸ்தமன ஸூரியனையே பார்த்துக் கொண்டிருக்கின்றன.

வானமும் சில இடங்களில் தெளிவாக அதன் நீல நிறத்திலும், சில இடங்களில் மேகம் மறைக்க சாம்பல் நிறமாகவும் இருட்டு மெள்ள மெள்ள நிழைவது போல இருக்கிறது.  சிறிதளவே நீர் அதுவும் சேறாகி கிடக்கும் குளம் போல காணப் படுகிறது.

பர்ண சாலைகளில் அக்னி மூட்டப் பட்டுள்ளது பார்.  பசுக்கள் வந்து சேர்ந்து விட்டன. கிழங்குகளை சுடும் வாசனை வருகிறது.   இந்த பசுக்கள் தான் ஆசிரமங்களில் அக்னி ஹோத்ரம் செய்யத் தேவையான பொருட்களைத் தருபவை. பால், நெய் போன்றவை, அதனாலே அவை இருக்குமிடம் லக்ஷ்மிகடாக்ஷம் பெறுகின்றன.

இரவு நெருங்குகிறது. தாமரை மலர்கள் இதழ்களை மூடிக் கொண்டிருக்கின்றன. உள்ளே நுழைந்து விட்ட வண்டு வெளி வர சிறிது இடைவெளி விட்டிருக்கிறதா? சிறிதே திறந்த வாசல் போல அந்த இடைவெளி தெரிகிறது.  ஆதவனும் அனேகமாக மறைந்து விட்டான். தூரத்தில் பெண்ணின் நெற்றியில் உள்ள திலகம் போல ஒரு ஒளி கோடு போல தெரிகிறது.  அவனுடைய சஹ சரர்கள் பாலகில்யர்கள் எனப் படுபவர். இவர்களும் மகரிஷிகளே. அக்னி ஸ்வரூபம்- அக்னி க்கு சமமான தேஜஸ் இவர்களுடையது. இரவில் ஆதித்யனின் தேஜஸ் அக்னியில் ப்ரவேசிக்கிறது என்பது ஸ்ருதி. இரவில் அக்னி ஆதவனின் பொறுப்பை ஏற்று வெப்பமும், ஒளியும் தருகிறது.  ஆதவன் அக்னியிடம் பொறுப்பை ஒப்படைக்கும் மாலை நேரத்தில் இவர்கள் சாம கானம் செய்கிறார்கள்.  மந்த்ர பூர்வமாக பொறுப்பு கை மாறுகிறது என்று ஸ்ருதி.   அந்த இதயத்தை தொடும் இனிய கானம்.  ஆதவனின் குதிரைகள் கனைப்பது போல ஒலிக்கும் மந்திரங்கள், ஆயிரக் கணக்கான இந்த வாலகில்ய ரிஷிகள் பாடுகிறார்கள்.

மகான் இந்த ஆதித்யன். நாள் முழுவதும் ஒளியைத் தந்தவன். அவன் குதிரைகளும் களைத்தவை போல முகத்தை கவிழ்த்துக் கொண்டு காதுகள் காற்றில் விசிறி போல விரிந்து நிற்க, அன்றைய செயல்களை முடித்து திரும்பும் இல்லறத்தார்கள் போல அஸ்தமன பர்வதத்தில் இறங்குகின்றன.   இரவு முழுவதும் வானமும் ஓய்ந்து தூங்கும்.  ஓளியின் இயல்பே அது தானே. தான் இருக்கும் இடத்தை பிரகாசமாக ஆக்கும், தன்னுடனே அந்த ஒளியை எடுத்துச் சென்று விடும். மீதி அந்த காரம்- இருட்டே.  இந்த இருட்டும் சந்த்யா காலத்தில் ஆதித்யனை- ஓளியை  வழி அனுப்புவது போல கூடவே சென்று அஸ்தமனம் ஆன பின் காத்திருந்து சூரியோதயம் ஆகும் சமயம் முன்னால் வழி காட்டுவது போல, அணுக்க சேவகர்கள் போல உடன் வரும்.

மீதி இருக்கும் மேகங்கள்,  அஸ்தமன வெய்யிலில், சுருள் சுருளான உன் கேசங்களைப் பார்த்து சந்த்யா கால வானத்தில் தூரிகைகளைக் கொண்டு வண்ணமயமாக ஆக்கி விட்டது போலும்.  அதுவும் உன்னை மகிழ்விக்கவே முயலுகிறது.  சிங்கத்தின் கேஸரி- பிடறி மயிரின் நிறம், சுத்தமான அருவி நீரின் வெண்மை, துளிர்களின் சிவந்த வண்ணம், மரங்கள், மலைகளின் சரிவில் தாதுக்களின் பெயர் அறியாத பல வண்ணங்கள், இவைகளுடன் சந்த்யா காலமே அழகாக ரசிக்கும் படி இருக்கிறது பார்.

நதிக் கரைகளில் தபஸ்விகள், சந்த்யா வந்தனம் செய்கிறார்கள். காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பது ரஹஸ்யமாக ஏதோ சொல்வது போல கேட்கிறது பார்.  வா, கிளம்பலாம். எனக்கும் என் நியமங்களை செய்ய வேண்டும். நீ அழகாக பேசி இந்த இடங்களை வர்ணித்துச் சொல்வதைக் கேட்க உன் சகிகளும் காத்திருப்பார்கள். போகலாம் என்றபடி, எழுந்தார்.  சகி விஜயாவும் அருகில் வந்தாள். அனைவருமாக கிளம்பினர். மந்த்ர பூர்வமாக தினாவசானம்- தினம் முடிந்த சந்த்யாகால நியமங்களை அவர் செய்து முடிக்கும் வரை காத்திருந்த அவ்விருவரும் வந்து சேர்ந்து கொண்டனர்.

பேசாமலே சற்று தூரம் நடந்தனர். சஹ தர்ம சாரிணீ, நீ. நான் சந்த்யா வந்தனம் செய்யும் நேரம் நீ பேசாமல் இருந்த வரை சரி. இனி எதற்கு மௌன விரதம்.  சுதனு! அழகிய உடலுடையவளே!  சந்த்யா காலம் என்ற காரணத்தால் நாம் மந்திர பூர்வமாக நம்மை படைத்தவர்களுக்கு, ப்ரும்மா முதல், நம் முன்னோர்கள் இவர்களை நினைத்து வணங்குகிறோம். ப்ரும்மா,  அக்னிஷ்வாதா முதலிய பித்ருக்களுக்கு கொடுத்த வாக்கு இது. ‘அவர்கள் தியாகம் செய்த ஸ‌ரீர ரூபியாக  இந்த ப்ரும்ம சரீரத்தை வகிக்கிறேன்.’  உலகில் ஜீவன்களுக்கு ப்ரும்மாவின் வாக்கு இது. ‘சந்த்யா கால நியமங்களை அனுசரிப்பவர்கள், தீர்காயுளும், வியாதி இன்றி உடல் நலமும் பெறுவார்கள்’ என்பது.  நாம் என்ன சக்ரவாக பக்ஷிகளா ? ஒருவரையொருவர் சந்தேகப் பட.  ஒன்று சற்று அகன்றால் மற்றொன்று கூக்குரல் போடும்.

(படைக்கும் தொழிலைச் செய்யும் ப்ரும்மா, அடுத்தடுத்து புது உடல்கள் தோன்றச் செய்வார் என்பது தெரியும்.ஜீவன்களின் மறு பிறவி அவரிடமே இருந்து வருவதாக பொருள். அதனால் பழைய உடல்களை தன்னிடமே வைத்து பாதுகாப்பதாக பித்ருக்களுக்கு உறுதி அளிக்கிறார்.  வம்சம் வளரச் செய்ய பித்ருக்கள் ஆசீர்வதிப்பார்கள் என்பது நம்பிக்கை)

ஹே மானினீ,  ப்ரும்மா வழியாக, நமது முன்னோர்கள் உடலின்றி சூக்ஷ்ம ரூபமாக  காலை மாலை சந்த்யா ஜபங்களை செய்து வருவதால், எனக்கும் இங்கு விசேஷமான கௌரவம் உள்ளது.  சரி, வா, போகலாம். இரவு நேரம். தமால வ்ருக்ஷங்கள் அடர்த்தியாக இருந்தால் அதிக அந்தகாரமாகத் தெரியும். மேற்கு திசையில் ஸூரிய அஸ்தமனம் ஆன பின் சந்த்யாகாலத்தின்  வண்ண மயமான வானமும் தற்சமயம் கண்ணுக்கு புலனாகாமல் இருளில் மூழ்கி விட்டது.  திசைகள் தோறும் பரவிக் கொண்டு செல்லும் இருள், மேரு மலையையே மறைத்து விட்டது பார்.  தாயின் கர்பத்தில் இருக்கும் சிசு போல எதுவும் அறியாத நிலைக்கு உலகமே சென்று விட்டது போலும்.

இந்த இருளின் சக்தியைப் பார். உருவங்களா, அசையும் அசையா பொருளா, நேரான வழியா, குறுக்குத் தெருவா, அனைத்தையும் ஒன்றாக்கி விட்டது.  துஷ்டர்கள் அனைவரையும் அடக்கி ஆள்வதைப் போல.

புண்டரீகம் என்ற கமலம் போன்ற முகத்தையுடையவளே,  யாகம் செய்யும் அந்தணர்களின் தலைவன் சந்திரன், இந்த இருட்டிலிருந்து பாதுகாக்க தன் கிரணங்களுடன்  தலை எடுத்து விட்டான்.  கீழ் திசையில் பார். தாழம்பூ நிறத்தில், ப்ரகாசமாக ஒளி வீசிக் கொண்டு வந்து விட்டான்.  

உன் சகியும், நாம் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டே சந்திரன் பின்னாலேயே வந்து விட்டான் பார். இரு மலைகளுக்கிடையில் அவன் தாரகைகளுடன் சேர்ந்து கொண்டு  நம்மை நோக்கியே வருவது போல தெரிகிறது பார்.  ரஹஸ்யமாக திசைகளுடன் சம்பாஷித்துக் கொண்டு வருகிறான் போலும். திசைகளின் முகம் ப்ரகாசமாகிறது பார். ( ராத்ரியும், திசைகளும் சம்ஸ்க்ருதத்தில் பெண் பால். அதை வைத்து அந்த பெண்களுடன் பேசுவதாக கவியில் அலங்காரம் என்ற வர்ணனை)

இந்த குளத்தில் முழு சந்திரனின் உருவம் தெரிகிறது பார். இரண்டும் ஒன்றே போல தோற்றம் அளிப்பதால் குளத்தில் பிம்பம் தான் என்று அறியாமல் பழம் என்று நினைத்து சக்ரவாகங்கள் பிடிக்க முயலுகின்றன.

சந்திரனின் ஒளியே நாயகன். ராத்ரி தான் நாயிகா. இவர்களை வைத்து ஸ்ருங்கார பரமாக வர்ணிக்கிறார்.

ஹே! பார்வதி, திடுமென அந்தகாரம் மறைந்து வானம் சந்திரனின் ஒளி நிரம்பி நிர்மலமாகத் தெரிவதைப் பார். யானைகள் குளித்து குளத்தை சேறாக்கி விட்டு சென்ற பின் சற்று நேரத்தில் குளத்து ஜலம் சுத்தமாக ஆவது போல இருள் சேறு போல வானத்தை மறைத்திருந்தது.  சந்திரனின் வரவால் தூய்மையாகி விட்டது. தூய்மையான எண்ணங்கள் கொண்ட நல்லவர்கள் கால வசத்தால் கஷ்டங்கள் அனுபவிப்பதும், பின் நன்மை அடைவதும் போல இருக்கிறது.  அதிலும் செக்கச் சிவக்க வந்தவன் இப்பொழுது பொன் நிறமாக குளுமையாக ஆகி விட்டான். இதுவும் நல்லவர்களின் குணமே. கால வசத்தால் நியமங்களை விடும் படி சோதனைகள் வந்தாலும் அவர்கள் அதையும் தாண்டி தன் இயல்பு நிலைக்கு வந்து விடுவார்கள் என்பதற்கு இது ஒரு சான்று. ப்ரும்மாவின் படைப்பிலேயே நல்ல குணங்கள் மேலாகவும், மற்ற தீய குணங்கள் படிப் படியாக குறைந்து கொண்டே வந்து அடியில் வந்து விடும். 

சந்திர காந்த கல் தெரியுமா? சந்திரனின் ஒளி பட்டால் அதில் நீர் வரும். இந்த மயில்கள் பாவம், அதையறியாமல் மரத்தடியில் தூங்கின. சந்திரகாந்த கற்கள் உள்ள பாறையிருந்து நீர் மரத்தில் விழுந்து கிளைகள் அசைய, நீர் வழிந்து இவைகளின் மேல் பட்டு எழுப்பி விட்டு விட்டன. 

கல்ப வ்ருக்ஷங்கள் இந்த மலையில் நிரம்ப காணப் படுகின்றன.  அதன் புஷ்பங்கள் இரைந்து கிடக்கின்றன.  யானைகள் படுத்துக் கிடப்பது போல இன்னமும் அடி வாரம் இருண்டே தெரிகிறது. வண்டுகள் ரீங்காரம் செய்வது கேட்கிறதா? இவைகளுக்காக குமுத மலர்கள் மலர்ந்திருக்கின்றவா? சந்திரன் ஒளியில் குமுதம் மலரும் என்று வண்டுகளுக்கு தெரியும் போலும்.

சற்று நேரத்தில் சந்திரனின் பவனி வானத்தை வியாபித்து காணும் இடமெல்லாம் சந்திர ஒளி நிறைந்து  கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், வெண் நிறமாகவும் பரவியது. அவர்களின் உத்சாகம் அதைக் கண்டு மேலும் அதிகரிக்க அங்கிருந்து செல்ல மனமின்றி சுற்றிக் கொண்டே இருந்தனர். பூக்கள் குவியலாக விழுந்த இடங்களில் வித்தியாசம் தெரியாமல், ஒளியா, மலரா என்பது கூட கூர்ந்து கவனித்தால் தான் புரிந்தது. உன் சகிகளிடம் இந்த பூக்களை பறித்து மாலையாக கட்டி  தலையில் ஸூடிக் கொள்.   உன் கண்களின் வழியே கன்னங்களில் ப்ரதி பலிக்கும் சந்திரனின் ஒளிக்கு அவை ஈடாக இருக்கும் என்றார்.

கந்த மாதன மலையின் தேவதை உன்னை வரவேற்க காத்திருக்கிறாள்.  தேடுகிறாள் போலும். உன் இயல்பான சௌந்தர்யமே இந்த மலையின் கேசர மணத்தையும், அருண நிறத்தை கண்களிலும் காண விழைகிறாள்.  இதற்குள் சகிகள் மதுவைக் கொண்டு வந்து கொடுத்தனர். இந்த மனோகரமான சூழ் நிலைக்கு ஏற்ற பானமே இது. இதை ஏற்றுக் கொள். உத்சாகமும், கிளர்ச்சியும் வரும் என்று சொல்லி தானே வாங்கி அவளை குடிக்க வைத்தார்.   வசந்த காலம் வந்ததுமே ப்ரும்ம தேவனின் கிருபையால் மாமரத்தில் தோன்றும் வித விதமான மாறுதல்கள், இனிமையான மாம்பூ வாசனையும் கொண்டு மன்மதனுக்கு ஊழியம் செய்வது போல இருந்தாலும் அதன் பலன் அனைவருக்குமே.   

உடல் அயர்வும் மதுவை குடித்து உண்டான ராகமும், வெட்கமும் சயனத்தை நாடின.  ஸூலியும்  அதே உணர்ச்சியுடன் இருப்பது தெரிந்து, இருவரும் ஏகாந்தமான மணி சிலா என்பதைக் கொண்டு நிர்மாணிக்கப் பட்ட குடிலுக்குள் நுழைந்தனர். சந்த்ரனின் கிரணங்கள், சரத் கால மேகங்களின் இடையில் ரோஹிணியைத் தேடிக் கண்டு விஸ்ராம்- ஓய்வு கொள்கிறானோ, அது போல, ஹம்ஸம் போன்ற வெண் நிற விரிப்புகளுடன் இருந்த கட்டிலில் தன் ப்ரியதமாவான பார்வதியுடன் படுத்தார்.

 இருவரும் மனம் ஒருமித்து கொண்ட உடல் உறவு.  திடமான தேகமும், உள்ளத்தில் அன்பும் நிறைந்த இருவரும் பரஸ்பரம் அறிந்து விழைந்த செயல் ஆனதால் ரசித்து மகிழ்ந்தனர்.  இரவு நகர்வதே தெரியாமல் நகர்ந்தது. பின் களைத்து உறங்கினர்.  துதி பாடல்களும், கந்தர்வர்களின் வீணா கானமும், கமலங்கள் மலர்ந்து வீசிய மணமும் அவர்களை எழுப்பியது.  கந்தமாதன மலையின் சுகந்தமான மென் காற்றும் சுகமாக வீசியது.

பக்த ஜனங்கள் தரிசனம் செய்ய வந்து விட்டார்கள்.  அவர்களை வரவேற்க தயாராக ஆனார். இவ்வாறு நூறு சரத் ருதுக்கள் ஒரு இரவு போல கடந்தது. அவர்களிடையே தாம்பத்ய உணர்வு சற்றும் குறையவில்லை.  ஜ்வாலை போல வளருவது தானே காமனின் இயல்பு.

(இது வரை ஸ்ரீ காளிதாசனின் குமார சம்பவம் மகா காவ்யத்தில் உமா சுரத வர்ணனம் என்ற எட்டாவது அத்யாயம்)

அத்யாயம்-9  

ஒரு நாள், சர்வாந்த்ர்யாமியான பகவான், தன் அறையில் அன்னிய ஜீவன் ஏதோ ஒன்று வந்திருப்பதை உணர்வால் அறிந்தார்.  ஒரு புறா தன் சிறகுகளை விரித்துக் கொண்டு அப்பொழுது தான் வந்து இறங்கியது போல தென் பட்டது. பார்த்தவுடன் தெரிந்து கொண்டார் யார் என்று.   புறாவின் வேஷத்தின் வந்திருப்பது அக்னியே.  அதைக் கண்டதும், அகாலத்தில், எந்த முன்  அறிவிப்பும் இன்றி வந்து நின்றதால் பயங்கரமாக கோபம் கொண்டார்.   அக்னி தன் ஸ்வரூபத்தை எடுத்துக் கொண்டான். பயத்தால் நடுங்கியவன், அழும் குரலில் தான் வந்த தூது செய்தியைச் சொன்னான். ஸ்மராரி அவர். காமனையே தகித்தவர். தடுமாறியபடி பேசலானான்.

ப்ரபோ! உலக நாயகன் தாங்களே. தேவ லோக வாசிகளின் கஷ்டங்களையும் தீர்ப்பவர். அதனால் தான் சுரேந்திரன் முதலானோர் உங்களிடம் என்னை அனுப்பி உள்ளார்கள். தைத்யர்களால் துன்புறுத்தப் பட்டு உங்களை சரணடைகிறார்கள்.  ஆபத்பாந்தவன், ஆபத்து வந்தால் பந்துவாக காப்பவன் தாங்களே.

மனைவியுடன் நீங்கள் இருக்கும் இடம் தெரியாமல் தேடித் தேடி கண்டு கொண்டோம். நூறு ருதுக்கள் கடந்து விட்டன. (நூறு வருஷங்கள்)  உங்கள் தரிசனம் பெறாமல் தேவர்கள் தவிக்கிறார்கள். தீனர்களாக உங்களுக்கு செய்யும் சேவைகளும் செய்யாமல் இந்திரன் முதலான அனைவரும் வருந்துகிறார்கள்.  நேரில் காண்போமா என்று எதிர் நோக்கி என்னை இந்த புறா வேடத்தில் உங்களிடம் தூது அனுப்பி இருக்கிறார்கள்.  ஹே வித்வன்! இது தான் காரணம், நான் முன் அறிவிப்பின்றி இங்கு வந்து சேர்ந்தேன்.

ப்ரபோ! பகவன்! க்ஷமஸ்வ. பொறுத்தருள வேண்டும். தேவேந்திரனின் ஆணையை ஏற்று செயல்படும் தூதனாக வந்த நானும் உங்களையே சரணடைகிறேன்.  தவறான காலத்தில், அனுமதியின்றி வந்த என்னையும் பொறுத்தருள  வேண்டும்.

பகவானே! எங்கள் வேண்டுகோளையும் கேளுங்கள். உங்கள் மகனை வேண்டுகிறோம்.  இந்திரன் படைக்கு சேனானி- தலைவனாக இருந்து தேவலோகத்தை காக்க அவனால் தான் முடியும். தேவ லோக தலைவனாக, தேவ ஐஸ்வர்யத்தை ராஜ்ய லக்ஷ்மியை அவன் பொறுப்பில் விட தேவராஜன் காத்திருக்கிறான். மூவுலக நாயகனாக, காக்கும் பொறுப்பை உங்கள் மகன் தான் ஏற்று செய்ய வேண்டும்.  உங்கள் அருளால் தான் இவையனைத்தும் சாத்யமாகும்.

ஜாதவேதன் எனப்படும் அக்னியின் வேண்டுகோளைக் கேட்டு பகவான் ஸ்ரீ சங்கரன் மகிழ்ந்தார்.  தகுதியான வேண்டுகோளை தகுதியான சொற்களுடன் சொன்னதாக பாராட்டினார்.  அழகிய சொற்களால், தங்கள் தலைவர்களை  விவரங்கள் அறிந்தவர்கள் மகிழச் செய்கின்றனர்.   காரியத்தின் சித்தி- நிறைவேறுதலும் அதைச் சார்ந்தே இருக்கும் என்பதாக.

மதனனை வென்றவர் எனப் புகழப் படும் பகவான் ஈசன், மனம் நிறைந்து வாழ்த்தினார். தாரகாசுரனை வெற்றி கொள்ள வேண்டும் என்பது தானே அவர்கள் எதிர்பார்ப்பு.  சக்ரன்-இந்திரனின் சேனாபதியாக, வெற்றி வீரனாக, அகில லோக நாயகனாக விளங்கப் போகும் தன் மகனை மனதிலேயே திட்டமிட்டுக் கொண்டார்.

யுகாந்தாகால அக்னி போன்ற தன் வீர்யத்தை அக்னியிடம் அளித்தார்.  (மனைவியுடன் கூடலுக்குக் பின் வெளி வந்த ரேதஸ்) மற்ற எவராலும்  தாங்க முடியாத அமோகமான அவருடைய வீர்யம். (ஊர்த்வ காமினி – மேல் நோக்கிச் செல்வது அவருடைய வீர்யம், கீழே விழாது எனப்படுகிறது- அக்னியின் கதி மேல் நோக்கியே செல்லும் என்பதாலும்)

அதை அக்னி மிகுந்த பயத்துடனும், கவனத்துடனும் ஏற்றுக் கொண்டான். தன்னுடைய மூச்சுக் காற்று பட்டே மலினமான கண்ணாடியை, தூக்கிச் செல்பவன் போல, தன்னையே மலினமாக்கிய சங்கரரின் தேஜஸை கவனமாக பாதுகாத்து வைத்துக் கொண்டான்.

சர்வபக்ஷன்- கிடைத்ததை உடனடியாக முழுவதுமாக உண்பவன் என்று அக்னிக்கு பெயர். பகவான் சொன்னார், சர்வபக்ஷ! மிகப் பெரும் செயலை உன்னிடம் ஒப்படைக்கிறேன்.   என்றார். தேவி மலைமகளோ சபித்தாள்.  எனக்குரியது என் மகனைப் பெறுவது என்ற செயல், அதைப் பறித்த உன்னை குஷ்டம் வந்து ஸூழட்டும் (புகை அக்னியுடன் இணைந்தே இருப்பது) 

தேவியின் சாபத்தை ஏற்றுக் கொண்ட அக்னி, தன் இயல்பான ரூபம் இல்லாமல், பனி ஸூழ்ந்து மனினமாக சரோஜ மலரின் கோசம் மகரந்தங்களுடன் இருப்பது போல, அக்னி ரூபமே போல உக்ரமான சங்கர வீர்யத்தை மறைத்து எடுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு விலகிச் சென்றான்.  தக்ஷணின் சாபத்தினால் க்ஷயம்- குறையும் தன்மையை- பெற்ற சந்திரன் போல ஒளி இழந்து வெளியேறியது போல என்று உதாஹரணம்.

கிரிஜா- மலை மகள் பலவிதமான உணர்ச்சிகளுக்கு ஆளானவளாக இருந்தாள். தனிமையில் இருந்த தங்கள் இருவருக்கும் இடையில் வருவதாவது என்று அக்னியிடம் வெட்கம், அதனால் கோபம்,  அவளைச் சமாதானப் படுத்த கிரீசன் முயன்றார்.

அவள் கண்ணீரை தன் மேலாடையால் துடைத்து, சந்திரனுடன் ஒப்புவமையாகச் சொல்லப் படும் அவள் முகத்தை தன் கையில் ஏந்தி, கண்ணீரால் கலைந்து வழிந்த அஞ்சனம் -கண் மை- துடைத்து பலவாறாக சமாதானம் செய்தார்.

சமாதானமாக சொல்லாலும், செயலாலும் அவள் மனக் குறையைத் தீர்த்தார்.  காற்று வீசி தாபம் குறைவது போல. (காளிதாசனை’ உபமா காளிதாஸஸ்ய’ என்பர். உவமைகள் அவருடைய சிறப்பு)

கேசமும், அதில் ஸுடியிருந்த மலர் மாலைகளும் அவிழ்ந்து தொங்கின.  அதை சரி செய்தபடியே பேச்சுக் கொடுத்தார்.  சந்திரனை தன் தலையில் ஸுடிய பெருமான், பாரிஜாத மலர்கள் தரையில் சிதறிக் கிடப்பது போல அவள் கேசத்தின் மலர்கள் உடல் முழுவதும் இரைந்து பாதங்களில் வணங்கி கிடக்கும் பக்தர்கள் போல பாதங்களின் விழுந்து கிடந்ததாக கவியின் வர்ணனை.

கன்னங்களின் வாசனை திரவியங்கள் பூசியிருந்தது, அதன் மேல் வழிந்த கண்ணீரால் கலைந்து கிடந்ததை கை விரல்களால் அளைந்தது மந்த்ராக்ஷரங்களை எழுதுவது போல இருந்ததாம். இதுவும் காவ்யாலங்காரம். இவரால் சபிக்கப் பட்டு மறைந்திருந்த காமன், இது தான் சமயம் என்று அவள் முகமாகிய சக்கரத்தில்  வந்து இறங்கியது போல் இருந்ததாம்.

காங்கேயன் எனப்படும் ஹரன், மேரு மலையின் மகள் அவள் என்பதையும், குரல் வளைவில் ஸ்வர ப்ரஸ்தாரங்கள் இருப்பதையும் சுட்டிக் கேட்டு, திடமான ஸ்தனங்களையும் புகழ்ந்து பேசி சமாதானம் செய்தார். கங்கா ப்ரவாஹம் போல அழகின் பெருக்கு லக்ஷ்மீ கரமாக இருப்பதாகச் சொன்னார்.  மனோ பவன் எனும் மன்மதனின் பாசத்தால் கட்டப் பட்டவர் போல ஒவ்வொரு அங்கமாக வர்ணித்தார்.

தன் மூன்றாவது கண் அக்னியே என்பதைச் சொல்லி, புத்தம் புது நீலோத்பல புஷ்பம் போன்ற அவள் கண்களில் இயல்பான சோபையை வரவழைத்தார்.  தன் உயிருக்குயிரான வாழ்க்கைத் துணைவி, அவள் முகம் வாட பொறுக்காத சாதாரண ஆண் மகன் போல அவளை சமாதானப் படுத்தினார்.  சௌபாக்யவதி சதி, மெள்ள மெள்ள இயல்பானவள் ஆனாள்.  சதி பதிகள் அன்யோன்யமாக இருப்பவர்களில்  அம்பாவான சதிக்கு இணை யாரும் இல்லை என்பது பொதுவான கருத்து.  அதைத் தான் கவி சௌபாக்யவதீஷு துர்யாம் என்று வர்ணிக்கிறார்.

அவள் சகிகள் விஜயா, ஜயா என்பவர்கள் வந்தனர்.  வழக்கமாக செய்யும் பணிவிடைகளைச் செய்தனர். நீராடவும், அலங்கரித்துக் கொள்ளவும் உதவினர்.  ராஜ சபைக்கு செல்லத் தயாராக ஆனவளை வந்திகள் பாடியும், வாத்யங்கள் வாசித்தும் வரவேற்றனர்.  தாள வாத்யங்களுடன் கந்தர்வர்கள் வந்தார்கள். சங்க த்வனியும், பினாக  பாணியை துதிக்கும் சுப்ரபாதங்களும் சுஸ்வரமாக  கேட்டன.   

தேவர்கள் அனைவரும் கூடியிருந்தனர். வாசலில் காவல் இருந்த நந்தி அவர்களை கிரமமாக உபசரித்து அழைத்து வந்தார்.  அவர்கள் தங்கள் வணக்கத்தை தெரிவிக்க வந்திருப்பதை பகவான் ஹரனிடம் வந்து தானும்  கை கூப்பி வணங்கியபடி தெரிவித்தார்.

மஹேஸ்வரன், தன் மானஸ ராஜ ஹம்ஸீ என ஹிமாத்ரி மகளை கைப் பற்றி அழைத்துக் கொண்டு வந்திருந்த தேவர்களை சந்திக்க சபைக்கு வந்தார்.  மஹேந்திரன் முதலான தேவர்கள் தலையில் கூப்பிய கைகளை வைத்த படி வந்து வணங்கி மூவுலகத்துக்கும் தாயான பார்வதி தேவியையும் வணங்கி நின்றனர்.

அவர்களிடம் குசலம் விசாரித்து விட்டு அவர்கள் அகன்றதும்,  தன் வ்ருஷப வாகனத்தில் நந்தியின் உதவியுடன் சைல புத்ரியும் ஏறிக் கொண்ட பின் புறப்பட்டார்.  மனோ வேகத்தில் இருவருமாக வானத்தில் செல்லும் சமயம் எதிர் பட்ட மற்ற தேவர்களும், கந்தர்வர்களும் தங்கள் விமானங்களில் சஞ்சரித்தவர்கள் வணங்கியதை ஏற்றுக் கொண்ட படி சென்றார்.

உடல் ஆயாசங்களை நீக்கும் சக்தி வாய்ந்த ஆகாய கங்கை ஜலத்தில் மூழ்கி எழுந்து, பாரிஜாதம் முதலான மலர்களின் மணத்தையும் ஏந்தியபடி வந்த காற்றை அனுபவித்தபடி கிரிஜா,கிரீச என்ற இருவரும் சென்றனர். கைலாச மலை, ஸ்படிகம் போல தெரிந்தது. மலையரசன் என்படும் கைலாச மலை.  வானத்தை தொட்டு விடும் போன்ற உயர்ந்த மலை.  சந்திரனை சிரஸில் தரித்த பகவான் ஹரனைப் போலவே, அதன் முடியிலும் சந்திர பிம்பம் தெரிந்தது.  இவர் போகி- பாம்புகளை தரித்திருப்பது போல அந்த மலையின்  சாரலில் உல்லாசமாக பொழுதைக் கழிக்க வந்த போகிகள் நிரம்பியிருந்தனர்.  பஸ்மத்தை -விபூதியை தரித்த பகவான் ஹரன் போலவே வெண்மையான பனி மூடிய சிகரத்தோடு மலையும் காணப்பட்டது. ஸ்படிக மலையில் தங்கள் பிம்பத்தைப் பார்த்து அந்த உல்லாச பயணிகள் ஒருவரையொருவர் சீண்டி மகிழ்ந்தனர்.  அதில் சந்திரனின் தோற்றம் மேலும் ப்ரகாசமாகத் தெரிவதைக் கண்டு மகிழ்ந்தனர்.  அதன் களங்கமும் கஸ்தூரியின் கருமையுடன் மணமும் உள்ளதா என்று சோதித்து பார்ப்பது போல பார்த்தனர்.  அவர்கள் ஏறி வந்த யானைகளும் தங்கள் பிரதி பிம்பத்தைக் கண்டு ப்ரமித்தன.  சித்தர்களும், அவர்களைச் சார்ந்த பெண்களும் அந்த ஸ்படிக மலையில் சாரலில் இருந்தவர்கள், இரவில்  தாரகைகளைப் பார்த்து தங்களுடைய முத்து மாலைகளோ என சந்தேகம் தோன்ற தங்களுடைய உடலில் அவை இருக்கின்றனவா என பார்த்துக் கொண்டனர். அத்புதமான அந்த காட்சியை கண்டும் மன நிறைவை அடையாதவர்கள், இரவில் தலையில் சூடாமணி போல மலையுச்சியில் சந்திரன் உதித்ததைப் பார்த்து பரவசமானார்கள்.  தம்பதிகள் அந்த இரவின் அழகில் சுற்றி வந்தபடி இருந்தனர்.  தேவர்கள் பிரிய மனைவிகளுடன் ப்ரதி பிம்பங்களைப் பார்த்தபடி ஒன்றே பலவாக தெரிகிறது, அதுவே இந்த ஸ்படிக மலையின் விசேஷம் என பேசிக் கொண்டனர்.  அவர்களுடன் தேவ தேவனும், கௌரியுடன் அவர்களின் சேஷ்டைகளை ரசித்தபடி சென்றனர்.  நந்தி முன்னால் வழி காட்டுவது போல செல்ல, மெதுவாக பின் தொடர்ந்தனர்.  முன் நெற்றியில் குழல்கள் அலைய சுகமான அந்த ஸூழ்நிலையை இருவரும் அனுபவித்தனர்.  காலிகா வாக கபால மாலை தரித்து ஆடும் தேவி, நடனமாடினாள்.  அவளை அணைத்தபடி ஈசனும் உடன் ஆடி, காமனை வென்றவரே, காம வசம் ஆனது போல ஆனார்.  

அந்த மலைச் சாரலில் அத்புதமான இயற்கை எழில் கொஞ்சும் இடம், அந்த சமயம்  நந்தி முதலான மற்றவர்களும் அனுசரணையாக  பாடியும், தாளங்கள் இசைத்தும், வாத்யங்களை வாசித்தும் ஆடலுக்கு துணை போவது போலவும்  மனோஹரமாக விளங்கியது.

(இது வரை ஸ்ரீ காளிதாஸரின் குமார சம்பவ காவ்யத்தின் கைலாஸ கமனம் என்ற ஒன்பதாவது அத்யாயம். )

அத்யாயம்-10

அக்னி தேவன், தாங்கமுடியாத மஹேஸ்வர வீர்யத்தை தாங்கியபடி, தேவர்கள் அனைவரும் இருந்த , மஹேந்திரன் தலைமை தாங்கிய சபையில் நுழைந்தான். பத்து திசைகளின் தலைவர்களும் புகை மூடிய அக்னி மண்டலத்தை ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.  தன் ஆயிரம் கண்களால் இந்திரன் கண்டான்.  அந்த நிலையில் அக்னியைக் கண்டதும் அவன் மனதில் முதலில் தோன்றிய எண்ணம் காமதகனான – காமனை எரித்த, பகவானிடம் சென்றவன், எளிதில் வெகுளும் பரமேஸ்வரனிடம் சாபம் பெற்று விட்டானோ என்றே ஐயமே. அவசரமாக  ஆசனம் அளித்து அக்னியை அமரச் செய்தான். அனைவரும் கண் கொட்டாமல் பார்த்தபடி இருந்தனர்.

ஹவ்யவாஹ! அக்னியின் பெயர்- யாகத்தில் பெறும் ஹவ்யத்தை கொண்டு செல்பவன் என்ற பொருளில்-என்ன நேர்ந்தது ? உன்னைக் காண மிகவும் வேதனையுடன் இருப்பவன் போல தெரிகிறது.  என்ன நடந்தது என்று சுரேந்திரன் வினவினான். அக்னி தேவன் தன்னை ஆஸ்வாச படுத்திக் கொண்டு பதில் சொன்னான்.

சுர நாயக! உன் ஆணையின் படி நான் ஒரு புறாவின் உருவில் ப்ரபுவின் அந்த:புரத்தில் நுழைந்து விட்டேன். 

பயத்துடன் என்ன சொல்வாரோ என்று கவலையுடன் நின்றேன். தேவி கௌரி அறையில்  இருந்தார், இருவருமாக அறைக்குள் கூடியிருந்திருக்க வேண்டும். பாதியில் ப்ரபு ஏதோ சந்தேகித்து எழுந்து வந்து விட்டார்.  அவர் முன் நான் என்ன செய்ய முடியும்? என் சுய ரூபத்திலேயே பதில் சொன்னேன்.

என் வேஷம் அவர் முன் எடுபடவில்லை. கண்டு கொண்டு விட்டார்.   இந்திரனே, விநாடி நேரம் அவர் கோபத்தால் தகித்து விடுவது போல் இருந்தார். அவரை சரணடைந்தேன். ஒரே மூச்சில் உன் கட்டளை, என்ன காரணம் அனைத்தையும் ஒப்பித்தேன்.  துதி செய்யலானேன். அதைக் கேட்டபின் அவர் சாந்தமாக என்ன என்று விசாரித்தார்.  மகா காருண்யம் மிகுந்த ப்ரபு, வணக்கத்துடன் முறையாக பேசினால் யார் தான் கேட்காமல் இருப்பார்கள்.

பயப்படாதே, சொல் என்றார். சரண்யன்- அடி பணிந்தவர்களை காப்பவர்.  இதோ தகித்து விடுவார் என்று இருந்தவர், என்னிடம் சாதாரணமாக பேசியதால் நானும் தைரியம் பெற்று வந்த காரியத்தைச் சொன்னேன்.

அசந்தர்பமாக நான் அவரை சயனத்திலிருந்து எழுப்பி மகா அபராதம் செய்திருந்தேன். ஆனால் அவர் எதையும் காட்டிக்கொள்ளாமல் கௌரி தேவி அறையில் இருந்தவரை திரும்பி பார்த்துவிட்டு சற்று யோசிப்பவர் போல இருந்தார்.

அந்தரங்கமாக மனைவியுடன் இருந்தவர்,  கூடலின் முடிவில் வெளியான தனது ரேதஸ் என்ற வீர்யத்தை என்னிடம் அளித்தார். அமோகமான வீர்யம், யாராலும் தாங்க முடியாத, மூவுலகையும் எரித்து அழிக்கக் கூடிய அவரது வீர்யம், என்னிடம் அளித்து விட்டார்.   அந்த தேஜஸை பெற்ற நான் தவித்தேன். என் உடலே பற்றி எரிவது போல ஆயிற்று. புகை ஸூழ்ந்து சக்தியின்றி இதோ உன்னிடம் வந்து விட்டேன். வாஸவ! என்னை காப்பாற்று. ருத்ர வீர்யம், என்னையே தகிக்கிறது.  நான் இதை நிர்வகித்துத் தான் ஆக வேண்டும்.

இந்திரன் என்ன செய்யலாம் என்று யோசித்தான்.  அக்னியின் தாபத்தை போக்கக் கூடியவர் யாருண்டு?  தீயின் சாதாரணமாக தீக் காயம் பட்டு அல்லது தீயில் எரிந்த உடல்களை நீரால் சரி செய்வோம். மிக அரிய செயலை செய்தவன் நீ. உன்னை எப்பாடு பட்டும் காப்பாற்றவே முயலுவோம். பயப்படாதே என்று ஆதரவாக தடவிக் கொடுத்தான்.

அடுத்த ஏழு ஸ்லோகங்களால் அக்னியை பாராட்டினான் இந்திரன். அக்னியே, நான் மிகவும் மகிழ்ந்தேன். ஸ்வாஹா ஸ்வதாஹந்த காரம் என்பதால் நீ தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள் என்ற அனைவருக்கும் பிரியமானதைச் செய்பவன்.  அதனால் அவர்களின் முகமாக சொல்லப் படுகிறாய்.

யாகம் செய்பவர்கள் பொருட்களை உன்னிடம் அளித்து ஹோமம் செய்கிறார்கள்.  அவை உன்னிடம் தூய்மையாகின்றன.  அவர்களும் சுவர்கம் அடைகின்றனர். அப்படி ஸ்வர்கம் என்ற நல்கதியை அடைய நீ அனைவருக்கும் உதவி செய்கிறாய்.

தபஸ்விகளும், மந்திரங்களால் பாவனமாக்கிய பின் பொருள்களை யாக குண்டத்தில் சமர்ப்பிக்கிறார்கள்.   அவர்களும் தவத்தின் பலனை சித்தியை அடைகிறார்கள். ஒரு வகையில்,  நீ தான் அவர்கள் தவத்தின் பலனைப் பெற்றுத் தரும் ப்ரபு.

ஸூரியனுக்கு என்று அவர்கள் அளிப்பதை கொண்டு சேர்க்கிறாய். அதை பெற்ற ஸூரிய பகவான் மழை என்பதன் மூலம் பூமியில் பொழிகிறான். அதிலிருந்து அன்னம் விளைகிறது. அதன் மூலம் ஜீவன்கள் ஜீவிக்கின்றன.

பஞ்ச பூதங்கள் என்ற இயற்கை தத்வங்களும்  உள்ளூற நீ இருந்து இயக்குவதாலேயே தங்கள் கடமைகளைச் செய்ய முடிகிறது.  எனவே உலகில் அனைத்துக்கும் உயிரை தருபவன் நீயே.

( உரையாசிரியரின் விளக்கம்:  உயிரினங்களின் உள் இருந்து அவைகளின் செயல்களை ஊக்குவிக்கிறாய்.  அவைகளின் சந்ததி உருவாகவும் நீயே காரணமாகிறாய்.  இப்படி இருவிதமாகவும் அவைகள் ஜீவிக்கவும், தங்கள் ப்ரஜைகளை அவை பெருக்கவும் காரணமாவதால் நீ உலகில் ப்ராணன்-உயிர் தருபவன் நீயே.  அக்னி இருப்பதாலேயே ப்ராணிகள் உயிருடன் உலவுகின்றன. உள்ளூற இருப்பது உடன் இருந்து உதவுவது என்றும்,  அக்னி சம்பந்தம் விடாமல் இருந்து கர்பத்தில் உள்ள சிசுக்கள் வளர்ச்சிக்கும் உதவுகிறாய்.  (குயவன் மண் பாண்டம் செய்வது போல)   

உபகாரம் செய்வதில் உன்னைப் போல மற்றொருவர் இல்லை. எங்களுக்கும் தற்சமயம் தேவையான நன்மையை செய்யவும் உன்னையே தேர்ந்தெடுத்திருக்கிறார்.   

அனைத்து தேவர்களிலும் நீ ஒருவனே செயல் வீரன். விபத்துகளும் உன் போன்ற வீரர்களுக்கு, ஸ்லாக்யமே- வரவேற்கத் தக்கதே. ஹே அக்னியே! நீயும் உபகாரம் செய்யவே துடிப்புடன் இருப்பவன்.  பரோபகாரி நீயே.

தேவி பாகீரதியை காலம் காலமாக  நாம் அனைவரும் பக்தியுடன் உபாசித்து வந்திருக்கிறோம்.  மிக சக்தி வாய்ந்த உன்னால் தாங்க முடியாத இந்த தாபத்தை அவள் தான் ஏற்றுக் கொள்ள தகுதி உடையவள். அந்த ப்ரவாஹத்தில் மூழ்கி உன் பொறுப்பைஅவளிடம் அளித்து விடு. ஹவ்யவாஹனா! தாமதிக்காதே, உடனே செல். அவசியமான செயல்களை தள்ளிப் போடக் கூடாது.  சுபஸ்ய சீக்ரம்- என்பது ஒரு வசனம். நற்காரியங்களை உடனடியாக செய்வதே நல்லது.

போ அக்னியே! சம்புவின் தேவி அம்போ மயி- நீர் ரூபமாக ப்ரவஹிக்கும் சுராபகா – தேவ லோக நதியே கங்கை.  உன்னிடமிருந்து காம விரோதியான சம்புவின் பீஜத்தை அவள் தாங்குவாள்.  அவள் வேகம் அதற்கு ஈடு கொடுக்கும்.   

இவ்வாறு இந்திரன் சொல்லவும், அக்னி தேவனும் உடனே புறப்பட்டான்.  கங்கையை சென்றடைந்தான்.

தன் நீரில்  மூழ்கி நீராடின மாத்திரத்தில், ஜீவன்களின் அனைத்து பாபங்களையும் நாசம் செய்யும் பாவனமான கங்கா தேவியைக் கண்டான். சுவர்கத்தில் இருந்து இறங்கி வருபவள்,  மோக்ஷம் அளிப்பவள், உதார குணமுள்ள தேவதா, உடனடியாக பலன் தருபவள், துர்கதாரிணி- துன்பங்களை கடக்கச் செய்பவள்,

மஹேஸ்வரனின் ஜடையில் வசிப்பவள், பாப நாசினி, அன்புடன் பாலிப்பவள், நிர்வாணம் என்ற மோக்ஷம் தருபவள், தர்ம சாரிணீ,

விஷ்ணுவின் பாதத்தில் இருந்து ப்ரவஹித்தவள், ப்ரும்ம லோகத்தில் இருப்பவள், மூன்று கிளைகளாக பிரிந்து பூமியில் ஓடும் சமயம், சுற்றி இருப்பவர்களின் களைப்பை நீக்கி, புத்துயிர் அளிப்பவள், மூவுலகையும் பாவனமாக்கும் பாவனி என்று பலவாறாக என்று துதி செய்தான்.

கங்கா தேவி,  அக்னியைக் கண்டவுடன் தன் அலைகளே கையாக உயர எழுந்த அலைகளால் எடுத்த காரியம் நலமாக நிறைவேறட்டும் என்று ஆசீர்வதிப்பது போல,  வரவேற்றாள்.

நீர் வாழ் பறவைகள் மதம் கொண்டு கூச்சலிட்டன. அதன் வழியாக நன்மையே நடக்கும், வா, என்று அழைப்பது போலவும், அபயம் அளிக்கிறேன், உன் துன்பம் நீங்கும் என் சமாதானமாக சொல்வது போலவும் இருந்தன.

அலைகள் மேலும் உத்சாகமாக நீரை வாரியடித்தன.  கரையைத் தொட்டு திரும்பி வரும் அலைகள் மேலும் வேகம் கொண்டது போல இருந்தன. பிரியமான பந்துக்களை வரவேற்கும் மனிதர்கள் போலவே சுரலோக கங்கை, ஜாத வேதஸ் என்ற அக்னியை வரவேற்றாள்.

குளிர்ந்த நீரில் இறங்கிய அக்னி தேவன், தன் தாபம் தீர அளைந்து களைப்பும், பயமும் நீங்கப் பெற்றான். பெரும் விபத்திலிருந்து மீண்டவர்கள் செய்வது தானே.  ஆபத்தை நீக்கும் என ஏதோ ஒரு  துரும்பை கூட பிடித்துக் கொள்வது இயல்பு.

கங்கா வாரிணி, கல்யாண காரிணி, ஸ்ரம ஹாரிணீ.- எனப் படும் கங்கையிலிருந்து வெளிவர மனமில்லாதவன் மூழ்கியே இருந்தான்.  புண்ய பாரிணீ- புண்யம் நிரம்பியவள், பவ தாரிணியான கங்கை அக்னிக்கு அமைதியை அளித்தாள்.

தன்னிடம் ஒப்படைக்கப் பட்ட மாஹேஸ்வரனின் பீஜத்தை நீரில் வைத்தான்.  உடனே கங்கையின் ப்ரவாஹமும், அலைகளின் ஆர்பாட்டமும் மிக அதிகமாக ஆயின.  கங்கா தேவி மரியாதையுடன் ஏற்றுக் கொண்டு விட்டாள் என்று ஆஸ்வாஸம் அடைந்த ஹவ்ய வாஹனன், மன நிம்மதியோடு நீரிலிருந்து வெளியேறினான்.  அம்ருத மயமான கங்கையால் குளிப்பாட்ட பட்டவன் போல மகிழ்ந்தவன் எடுத்த காரியம் முடிந்த திருப்தியுடன் தன் வழியில் சென்றான்.

கங்கையால் அந்த பாரத்தை தாங்க முடியவில்லை.  காமனை ஜயித்தவனின் மிகப் பெரிய, அளவிடமுடியாத சக்தி அது.  அறியாமல்  ஏற்றுக் கொண்டு விட்டோமே என்று பரிதவிக்கச் செய்தது.  ஆகாயத்தில் ப்ரவஹிக்கும் கங்கையே தடுமாறினாள்.

ஜலம் கொதிப்பது போல இருக்கவும், நீர் வாழ் ஜந்துக்கள் அலை பாய்ந்தன. யுக முடிவில் வரும் ப்ரளயமோ என பயந்தன. பல நூறு சிகைகளால் அக்னியின் வேகமோ, நீரினுள் அக்னியின் வெப்பம் எப்படி சாத்யம் ?

ஸ்ரீ ருத்ரனின் வீர்யம்.  சாதாரணமாக அக்னியை அணைக்கும் நீரையே கொதிக்க வைத்து விட்டது.  கங்கை சண்ட மாருதமாக மாறி விட்ட அலைகளால் கங்கை செய்வதறியாது திகைத்தாள்.

மாக-மாசி மாதம் அது. ஸூரியன் மெள்ள உதிக்கும் நேரம். தன் சண்ட கிரணங்களை மெள்ள எழுப்பி, பூமியின் கண்கள் போன்ற ஸூரியன் மலை அடிவாரத்திலிருந்து தலையைத் தூக்கியது போல ஓரளவு தெரிந்த சமயம், திசைகளும் ப்ரகாசமாயின. ஆறு க்ருத்திகா பெண்கள் கங்கையில் ஸ்னானம் செய்ய வந்தனர்.

சுவர்கத்தில் வசிப்பவர்கள், தூய வெண் நிற கங்கை நீரில் வழக்கமாக செய்யும் ஆசமனங்கள் செய்த பின்,  ஆழ்ந்து நீராடத் தயாராக வந்தவர்கள், அலைகளின் வேகத்தாலேயே தன் துக்கத்தை கங்கா தேவி சொல்வது போல இருக்க தயங்கி நின்றனர்.

வழக்கமாக சப்த ரிஷிகள் ஸ்னானம் செய்து, புஷ்பங்களையும், தூர்வா என்ற புல்லையும் வைத்து அர்ச்சனை செய்தவை மட்டுமே கண்டவர்கள், நதியின் வெண் மணலையே கண்டனர்.  யோக சாதனகள் செய்பவர் மூடிய கண்களுடன் தங்கள் தியானத்தில் ஆழ்ந்து இருந்ததையும் கண்டனர்.  பாதங்களின் கட்டை விரல் மட்டுமே பூமியை தொடுவதாக நின்றபடி ஸூரியனையே நோக்கியபடி ப்ரும்ம ரிஷிகள் தவம் செய்தபடி நின்று கொண்டு இருந்ததைக் கண்டனர்.

திரும்பி நதியைப் பார்த்து வாழ்த்துச் சொல்ல ஆரம்பித்தவர்கள், அம்ருத மயமானவள் ஏன் பதில் வணக்கம் சொல்லவில்லை என்று யோசித்தனர்.  சந்திரனை ஸூடியவன் தலையில் இருந்து ப்ரவஹித்து வருபவள்.  கண்ணால் காண்பதே புண்யம் என்பர்.  இவளை சாதுக்கள் போற்றி புகழ்ந்து பேசுவர்.  அலைகளுடன் இவளைக் காணவே மகிழ்ச்சியாக இருக்கும்.

மகா விஷ்ணுவின் பாதங்களில் இருந்தவள். அவர் பாதங்களைப் பணிந்தவர்களே மோக்ஷம் பெறுவர். தானும் தூய்மையானவள்.  நீராடுபவர்களின் பாபம் என்ற களங்கத்தையும் நீக்குபவள் என்பர். முதலில் வணங்கி விட்டுத் தானே நீரில் இறங்குவோம் என்று சொல்லிய படியே தலை வணங்கினர்.

பக்தியுடன் துதித்தனர். உன்னில் நீராடுவதே ஒரு சௌபாக்யம்.  மோக்ஷம் பெறுவது போல ஆனந்தம் அளிப்பது. சதி நீ. சுவர்க லோக நதியே! என பாடினர்.  பின் நதியில் மூழ்கி நீராடினர். நம் நல் வினைப் பயனே இந்த நதியில் நீராடும் பாக்யத்தை கொடுத்தது என்பது போல அலுக்கும் வரை நீரில் இருந்து விட்டு எழுந்து வந்தனர்.  க்ருஸாணு- மகேஸ்வரனின் பெயர். அவருடைய பீஜத்தின் உஷ்ணத்தால் ஜலமே வற்றி அடி மணல் ஒட்டிக் கொண்டு விட்டதோ என்பது போல தங்கள் சரீரத்தில் மணல் துகள் போல பரவி இருந்ததைக் கண்டனர்.  கங்கையிடமிருந்து விலகி அவை க்ருத்திகா ஸ்த்ரீகளின் உடலில் ப்ரவேசித்து விட்டன.

ரௌத்ரம்- ஸ்ரீ ருத்ரனின் வீர்யம், இவர்களையும் தாங்க முடியாத வெப்பத்துடன் தாக்கியது.  என்ன ஏது என்று புரியாமல் திகைத்தனர்.

பர பரப்புடன் வெளியேறி வந்து உடலின் உள் தகிக்கும் அக்னியால் தாக்கப் பட்டது போல தவித்தனர். திடுமென தாங்கள் கர்பவதிகளாக ஆனதை உணர்ந்தனர்.  கங்கையிடமிருந்து நடந்த விவரங்களைத் தெரிந்து கொண்டார்கள். சம்புவின் சந்ததி என்று அறிந்து மகிழ்ச்சியும், திடுமென தோன்றியதால் லஜ்ஜையும், மறுத்து பேச பயமும்,  இது நியாயமா, உலகில் ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகமும் ஒரு பக்கம் இருக்க, கர்பத்தின் கனத்தால் உடல் வருத்தமும் அனுபவித்தனர்.

அதன் பின் அவர்கள்  சரவண பொய்கையை அடைந்தனர்.  பயமும் வெட்கமும் அவர்களை வாட்டியதை அந்த பொய்கையில், தங்கள் கர்பத்தை  தியாகம் செய்து விட்டு சென்று விட்டனர். 

( ஸரவண பொய்கையாக இருந்தது தேவி கௌரியே மஹா பெரியவா- தெய்வத்தின் குரல். சிதைந்த ஸ்கந்த – துண்டுகளாக இருந்தை இணைத்து ஓருருவாக ஆக்கினாள்- ஸ்கந்தன் என்ற பெயர் வரக் காரணமும் அதுவே )

அந்த க்ருத்திகா பெண்கள் சரவணத்தில் விடப்பட்ட நளினமான இளம் கர்பத்தின் பாகங்கள், சந்திரனின் முதல் கலை போல காண குளுமையாகவும், அதி கோமளமுமாக இருந்தவைகள்,  ஆறு முகங்களும், நூறு ஸுரியங்களுக்கு  சமமான ப்ரகாசமும், ஸ்மர ஹர குரு- குருவான காமனை எரித்த பகவான் (தக்ஷிணா மூர்த்தி) , உனக்கு நாலு தானே, எனக்கு ஆறு என்று ப்ரும்மாவைப் பார்த்து ஏளனம் செய்வது போலவும்,  ஒரு சிசுவாக உருக் கொண்டன.

|| குமாரோத்பத்தி என்ற பத்தாவது அத்யாயம் நிறைவுற்றது.||

பாகம் – 2

அத்யாயம்-11

ப்ரும்மா முதலான தேவர்கள் கங்கையிடம் வந்தனர்.  அவளிடம் விவரங்களைச் சொல்லி அந்த சிசுவை, மனித உருவில் உன் மகனாக ஏற்றுக் கொள். தாயாக அதற்கு உன் பாலைக் கொடு. மாகேஸ்வரனின் மகன் வளர வேண்டும் என்றனர்.  கங்கையும் சம்மதித்து பெண் உருக் கொண்டு தன் மார்போடு அணைத்து பாலூட்டினாள். அந்த பாலைக் குடித்த சிசு நொடிக்கு நொடி வளர்ந்தது.  க்ருத்திகா பெண்களும் சீராட்ட வந்தனர்.  உலகத்தில் மிகச் சிறந்த அழகிய வடிவம் உடையவனாக வளர்ந்து விட்டான்.

பாவனமான பாகீரதியும். க்ருத்திகா பெண்கள் அரவணத்தும் செய்த உபசாரங்களாலும்  உலகத்தோர் அனைவரும் கொண்டாடி மகிழும் அந்த குழந்தையை போட்டி போட்டுக் கொண்டு பெருமிதத்தோடு தங்களுக்குள் ரசித்து பேசியபடி வளைய வந்தனர்.  ஆனந்த பாஷ்பம், ஆனந்த கண்ணீர் பெருக திவ்யமான குல நந்தனான  குழந்தையை சீராட்டினர்.

அந்த சமயம், பர்வ ராஜ குமாரியுடன், மகேஸ்வரன், விமானத்தில் ஆகாய மார்கமாக அங்கு வந்து சேர்ந்தார்.

இருவரும் இயல்பான அன்பினால் கண்களில் நீர் பெருக , மகிழ்ச்சியுடன், கிரிஜா கீரீச என்ற இருவரும் ஆறுமுகம் கொண்ட பிறந்து ஆறே தினங்களில் குமாரனாக  வளர்ந்து விட்டவனைக் கண்டனர்.

தேவி, சந்திரனை தலையில் ஸூடிய மகேஸ்வரனைப் பார்த்து, யார் இந்த குழந்தை, திவ்யமான உடலுடன், எந்த பெற்றோர் பாக்யசாலிகள்,  யார் இவன் தாய், அவள் மகா பாக்யசாலியாக இருப்பாள், என்றாள்.  அக்னி, கங்கா, இந்த க்ருத்திகா பெண்கள் அனைவரும் தங்களுடையதாக போட்டி போட்டுக் கொண்டு உரிமை கொண்டாடுகிறார்களே என்பது போல பார்த்தாள்.  இவர்களில் யார் இந்த குமாரனின் தாய்? தந்தை?  ஈசனே! இவர்கள் அல்லாமல், தேவ, கந்தர்வ,சித்த, உரக ,ராக்ஷஸர்கள் இவர்களில் யாரோ இதன் பெற்றோர்களா ?

தெரிந்து கொண்டே கேட்கிறாள் என்பதால் மெள்ள சிரித்த படி, பிரியமான மனைவியை நோக்கிய சந்திர மௌளியான மாகேஸ்வரன், தன் மனதின் மகிழ்ச்சி வெளிப்பட குதூகலத்துடன் பதில் சொன்னார்.

கல்யாணி! இந்த வீரன், மூவுலக நந்தனன். சிறந்த வீர நங்கையான உன் மகனே.  தேவர்களுக்கு மிகப் பெரிய நன்மை செய்யவே அவதரித்திருக்கிறான்.  உன்னையன்றி வேறு யாரால் இப்படி ஒரு மகனை பெற முடியும்?

தேவீ! நீதான் இதன் தாய்.  இவன் பிறக்க காரணமானவள். சமுத்திரத்தை ரத்னாகரம் எங்கிறோம். அதில் விளையும் ரத்னங்களை வைத்து சமுத்திரம் ரத்னாகரம் ஆவது போல், உன்னில் விளைந்த இந்த சிசுவை, உலகம் புகழும் . உலக மக்களின்  பாட்டின் பொருளாவான்.  காவ்யங்கள், கீதங்கள் இவைகள் இவன் புகழை பரப்பவே இயற்றப் படும். 

தேவி, பொறுமையாக கேள். நடந்ததைச் சொல்கிறேன்.  உன்னுடன் இருந்த நான் தான், இந்த பீஜத்தை அக்னியிடம் கொடுத்தேன்.  அவன் தாங்க முடியாமல் கங்கையில் விட்டான். கங்கையிடமிருந்து இவை க்ருத்திகா பெண்களின் உடலில் பரவி அவர்கள் கர்பம் தரித்தனர்.  அமோகமான வீர்யத்துடன் இருந்த கர்பத்தை அவர்களாலும் நிர்வஹிக்க முடியவில்லை. சரவண பொய்கையில் விட்டனர். ஆறு பிண்டங்களாக இருந்தவை  ஒன்றாகி இந்த சிசுவாக  உருவாகியது. சராசரமும் கொண்டாடும் படி இந்த பாலகன் வந்துள்ளான். தந்தை தனயனின் இடையில் உள்ள சம்பந்தத்தால், அந்த சிசு ஜீவித்துள்ளது,  உலகமே கொண்டாட வேண்டிய மஹோத்சவம் இது என்றார்.

அசலராஜபுத்ரீ! மலை மகளே இனியும் ஏன் யோசிக்கிறாய். நன் மக்களை பெற்ற தாயார்களின் வரிசையில் நீ முதலாக எண்ணப் படுவாய்.  உலகமே இவனைக் கண்டு பரவசமாகி நிற்கிறது. பிர்ய தர்சனன்-  அழகன்,  தயங்காதே.  உன் மகன், அள்ளி அணைத்துக் கொள், என்றார்.

அதன் பின், சைல ராஜ புத்ரி, அம்ருத மயமான சந்த்ர மௌளியின் வார்த்தைகளால் மகிழ்ந்தவள், வேகமாக குழந்தையை எடுத்து அணைத்துக் கொண்டாள்.  பரமேஸ்வரனின் மகனை வாழ்த்திக் கொண்டு வந்த தேவலோக வாசிகள், தலை மேல் வைத்த கூப்பிய கைகளோடு வந்து நமஸ்கரித்தனர்.  பரபரப்புடன் விமானங்களில் வந்திறங்கியவர்கள், ஒருவரையொருவர் முந்திக் கொண்டு குழந்தையைக் காண ஆவலுடன் வந்தனர்.

தேவலோக பாவனமான கங்கா நதியும், க்ருத்திகா பெண்களையும் வணங்கினர். மகன் பிறந்தால் உத்சாகத்துக்கு அளவேது.  பார்வதி தேவியோ, கண்ணெதிரில் இருந்த குமாரனைக் காணக் கூட முடியாமல் கண்களில் நீர் பெருக நின்றிருந்தாள்.  அதன் மேல் இருந்த  கை விரல்களை எடுக்கவே மனமில்லாமல், உணர்ச்சி வசத்தில் இருந்தாள்.  அபூர்வமான அந்த அனுபவத்துக்கு ஈடு ஏது.

குரல் கம்ம, ஆச்சர்யமும், ஆனந்தமுமாக, மேன் மேலும் பெருகி வளர்ந்த வாத்சல்யம், இவைகளுடன் தேவி தன் மகனைப் பார்த்தாள்.  பல்லாயிரம் கண்கள் இருக்காதா விடாமல் கண்டு கொண்டே இருக்க என்பது போல பார்த்து கொண்டேயிருந்தாள். பிறந்த குழந்தையைக் காண ஒவ்வொரு க்ஷணமும் புது புது உணர்ச்சிகளுடன்  தாய் மார்களுக்கு அலுப்பே இல்லாமல் இருப்பது இயல்பே.

வணங்கி முடித்த தேவர்கள் கூட்டத்தை விலக்கி சுகுமாரனான குமாரனை தன் கையில் எடுத்து மடியில் கிடத்திக் கொண்டாள்.  உதயமான பௌர்ணமி சந்திரன் போன்று அழகிய தன் மகனை தன் மலர் போன்ற கைகளால் வருடி மகிழ்ந்தாள்.

ஜகதேக வீரன், உலகில் வீரன் என்றால் இவன் தான் எனும் படி வரப் போகும் தன் மகனை தன் சிசுவாகவே மட்டுமே நினைத்து, அம்ருத்தை வர்ஷிக்கும் கண்களின் கருணாமயமான பார்வையால் பார்த்தாள்.  மூவுலகிலும் முதன்மையான தாயாராக  மதிக்கப்படுபவள்,  தற்சமயம் தன் மடியில் இருப்பவன் தன் மகன் என்றே பெருமிதத்தோடு நோக்கினாள்.

இயல்பான தாய் பாசம்.  அதனால் பெருகிய தாய் பாலை புகட்டினாள். பார்த்துக் கொண்டிருந்த தேவி, கங்கா, க்ருத்திகா பெண்களும் இந்த குமாரனை நாமும் க்ஷண நேரம் கையிலேந்தி தாயாக உணர்ந்தோமே என்பதிலேயே பெருமை கொண்டனர்.  தேவியோ, ஒவ்வொரு முகமாக ஆறு முகங்களையும் கவனமாக பார்த்து ஒவ்வொன்றையும் முத்தமிட்டாள்.  ஒரே தண்டில் மலர்ந்த ஐந்து தாமரை மலர்கள் லக்ஷ்மீகரமாக தெரிவது போல ஆறு முகனை,   அவளுடன் ம்ருகாங்க மௌலி- மிருகத்தை அடையாளமாக கொண்ட சந்திரனை தலையில் தரித்த சந்திர மௌளி தானும் ரசித்து பார்த்தார்.

ஹிமய மலையில் ஒரு கொடி, ஸ்வர்ண மயமாக தெரிவது போல தேவி கௌரியும், அங்கு ப்ரவஹிக்கும் கங்கா நதியில் மலர்ந்து பரவி இருப்பது போலவும், கிழக்கில் அப்பொழுது தான் உதித்த சந்திரனின் குளுமையையும் ஒரு சேர காண்பது போல இருந்தாள்.

சசி சேகரன் கை லாகு கொடுக்க, அதைப் பற்றிக் கொண்டு குழந்தையுடன் சேர்ந்து எழுந்து விமானத்தில் ஏறிக் கொண்டாள்.  மஹேஸ்வரனும்,அவள் வசதியாக அமரும் வரை மகனை தன் கையில் அன்புடன் வைத்திருந்தார்.  விமானம் வேகமாக சென்று அவர்களை பத்ரமாக வீட்டில் சேர்த்தது.

ஸ்படிக பாறைகளால் ஆன அந்த கைலாஸ மலை வாசஸ்தலத்தில் முக்யமான ப்ரமதர்கள், சிவனடியார்கள் கூடியிருந்தனர்.  சம்புவிடம் அன்புடைய பலரும் வந்து மகோத்ஸவமாக கொண்டாடினர்.  பூ தேவி வந்தாள். சமஸ்த தேவ கணங்களும், வ்ருஷ வாஹனன்-பார்வதி தம்பதியை வாழ்த்தியும், மகனை ஆசீர்வதித்தும் மகிழ்ச்சியோடு வலம் வந்தனர்.

அவர்களுடைய ப்ரதான கணங்கள் அனைவருமாக மகனின் ஜன்மோத்ஸவத்தை கொண்டாட ஏற்பாடுகளைச் முனைப்புடன் செய்தனர்.  பட்டாலும்  பொன்னாலும், கல்ப வ்ருக்ஷத்தின் இலைகளாலும்,  தோரணங்கள் கட்டினர்.  கந்தர்வ, வித்யாதர சுந்தரிகள் வந்தனர். மங்கள கீதங்களைப் பாடினர். கிரி ராஜ புத்ரி அவர்களுக்கு தகுதியான சன்மானங்கள் அளித்தாள்.  அவர்களும் தாங்கள் பெற்ற மகனைக் கொண்டாடுவது போலவே அக்ஷதைகள்,தூர்வா எனும் புல் இவைகளை தலையில் போட்டு ஆசீர்வதித்தனர்.  தூக்கி மடியில் போட்டுக் கொண்டு மகிழ்ந்தனர்.

தூர்ய கோஷங்கள், வாத்யங்களுடன் அப்சர ஸ்த்ரீகள் பாட பலர் நடனமாடினர்.  வாயு சுகமாக வீசியது. திசைகள் ப்ரகாசமாக இருந்தன. அக்னியும் புகையின்றி மங்களமாக இருந்தான். தண்ணீர் சுத்தமாக, தெளிவாக இருந்தது.  அந்தரிக்ஷமும் உத்ஸவத்தில் கலந்து கொண்டது போல நிர்மலமாக இருந்தது.

சங்க த்வனி கம்பீரமாக கேட்டது.  துந்துபிகள் அத்துடன் இணைந்து இசைக்கப் பட, தேவ லோக வாசிகள், தங்கள் விமானங்களில் வந்து பூமாரி பொழிந்தனர்.  மகேச-மலைமகளின் மகன், அவனுடைய ஜன்மோத்ஸவம், சராசரமும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.  தராகாசுரனின் ராஜ்ய லக்ஷ்மி தான் கவலை கொண்டாள்.

பாலகன் வளர்ந்தான். ஒவ்வொரு நாளும் புது புது விளையாட்டுகள், லீலைகளால் பெற்றோரை. மன மகிழச் செய்தான். அது இயல்பானதே. மஹேஸ்வரனும், சைல சுதா என்ற பார்வதியும் ஒரே சமயத்தில், பற்கள் இன்னமும் பல் முளைக்காத பாலகனின் முகத்தில் முத்தமிட்டு மகிழ்ந்தனர்.  மழலையான பேச்சினாலும், தடுமாறி இளம் நடை பயிலுவதிலும் அவர்களை சதா ஆச்சர்யமும், ஆனந்தமும் அடைய செய்தபடி வளர்ந்தான்.  காரணமின்றி சிரிப்பான். வீட்டின் பல இடங்களிலும் ஓடியும், புழுதியில் புரண்டும் குழந்தைகளுக்கே உரிதான சேட்டைகள்.  மடியில் அமர்ந்தபடி ஏதாவது சம்பந்தமின்றி சொன்னால் கூட பெற்றோர் பெரிதும் மகிழ்வர்.   

மகேசனின் கண்டத்தில் உள்ள பாம்பின் பற்களை எண்ணி சிரிப்பான். பத்து ஐந்து என எண்ணத் தெரிந்து கொண்டான். அவர் கழுத்தில் கிடக்கும் கபால மாலையின் கண்களில் விரலை விட்டு வேடிக்கை பார்ப்பான். எதைச் செய்தாலும் கொண்டாடியே மகிழ்ந்த பெற்றோர், மறுக்காமல் அதையே பெரிதாகச் சொல்லி மகிழ்வர். ஜடைகளின் இடையில், சந்திர கலையை எட்டிப் பிடித்து மகிழ்ந்தால், தந்தையும் உடன் ரசித்து மகிழ்வார். அதற்காக அவர் ஜடையை பிடித்து இழுப்பான்.

இவ்வாறு இளம் குமாரனின் விளையாட்டுகளுடன் நாட்கள் வேகமாக நகர்ந்ததைக் கூட பெற்றோர் அறியவில்லை.  லலித லலிதம்- அழகிய ரசிக்கத் தகுந்தவை, சாந்த்ரானந்தம்- அத்யந்த மனோகரமான பால க்ரிடைகள், இவைகளே கவனமாக இருந்தவர்கள் அடுத்த ஆறு நாட்களில் மகன் வளர்ந்து நவ யௌவன தாருண்யம் என்ற – யுவனாக நின்றதைக் கண்டு திகைத்தனர்.  அனைத்து சஸ்திரங்கள் பற்றியும் அறிந்து கொண்டு விட்டான்.  சாஸ்திரங்களையும் அதே போல அறிந்து கொண்டு விட்டான். மஹேஸ்வரனின் மகனுக்கு எது தான் எட்டாதது.( குமாரோத்பத்தி என்ற பதினொன்றாவது அத்யாயம் நிறைவுற்றது )

 

 

அத்யாயம் 12

இந்த்ராதி தேவர்கள் சாதக பக்ஷி மழை நீருக்காக காத்திருப்பது போல குமரன் வளர்ந்து போர் புரியும் தகுதியை அடைவதை எதிர் நோக்கியிருந்தனர்.  அபிமானி- கர்வம் மிகுந்த அசுரன்  தாரகனின் அதிகாரமும் அட்ட ஹாஸமும் அளவு மீறி போய் விட்டிருந்தன.  அவனால் பாதிக்கப் பட்ட அனைவரும், இந்திரன் அவன் பரிவாரங்கள், மற்ற தேவர்களுடன் ஸ்ரீ ஹரனைக் காண வந்தனர்.

அசுரன் கண்ணில் படாமல் மேகங்களுக்குள் மறைந்தபடி பிரயாணித்து கைலாஸ மலை வந்து சேர்ந்தனர்.  கௌரியும், கிரீசனும் நடமாடிய பவித்ரமான மலை ப்ரதேசத்தில் இறங்கினர்.  மேகாத்மா – மேக ரூபத்தில் மாதலி என்ற சாரதி கை கொடுக்க, பினாகியின் ஆலயம் என்பதால் தூய்மையான உடல், உடை, எண்ணங்களுடன் அவரைக் காண வந்தனர்.  கடும் கோடையில் தாகத்தால் தவிக்கும் மனிதர்கள் ஜலம் உள்ள இடத்தை நோக்கி வேகமாக வருவது போல வந்தனர்.

அந்த நிலையிலும், ஸ்படிக மலையில். எங்கும் தங்கள் ப்ரதி பிம்பங்கள் தெரிவதை வினோதமாக ரசித்தனர்.  தங்களையே பலவாக காட்டிய அந்த ப்ரதி பிம்பங்களால் மனம் இளகி பதட்டம் குறைந்தவர்களாக விபுவின் இடத்தை அடைந்தனர்.

வழியில் துவார பாலகனான நந்தி எதிர்ப் பட்டார். அவர் உடலில் பலவிதமான உயர் மணிகளும் ரத்னங்களும் பதித்த கண்டா- பெரும் ஆலய மணி, அருகில் பொன்னாலான விசித்ரமான தண்டம் இவைகளுடன் அனங்க சத்ருவான ஸ்ரீ ஹரனின் ஆலய பாதுகாப்பை தான் ஏற்றிருப்பதாக பறை சாற்றுவது போல அமர்ந்து இருந்தவரை வணங்கினர்.  அவர் அனுமதியின்றி ஆலயத்தினுள் ப்ரவேசிப்பது முடியாது என்பதால் அருகில் சென்றனர்.

அவர்களைக் கண்டதும் தண்டத்தை தன் இடையில் செருகிக்  கொண்டு சுரேந்திரன் என்ற மதிப்பினால் அருகில் வந்து வாழ்த்தி, வரவேற்று விட்டு, ஈஸ்வரனிடம் தெரிவிக்கச் சென்றார்.

அதைக் கேட்ட ஜகதீஸ்வரனின் புருவத்தின் அசைவால் அனுமதியைப் பெற்று,  தேவ லோகத்து ப்ரதி நிதிகளுடன் தானும் உள்ளே வந்தார். ப்ருங்கி முதலானோர்களும் வந்து சேர்ந்தனர். பலவிதமான உடல் அமைப்பு உள்ள அடியார்கள். ஆயிரம் கண்கள் உடைய- சஹஸ்ர நேத்ரன்- இந்திரனுக்கு ஒரு பெயர். அவன் பகவானை ரத்ன மயமான ஆசனத்தில் அமர்ந்திருப்பவராகக் கண்டான்.

அடுத்த பதின் மூன்று ஸ்லோகங்கள் மூலம் பகவான் ஸ்ரீ ஹரனை இந்திரன் துதித்தான்.

  1. வாசுகி முதலான சர்ப்பங்கள் தலையில் கிரீடம் போல எந்த கட்டும் இல்லாமலேயே ஸ்திரமாக இருக்கின்றன. அதன் மணிகளே ப்ரகாசமாக தங்களைக் காட்டிக் கொடுத்துக் கொள்கின்றன. ஜடைகளின் இடையில், இந்த நாக மணிகளின் ஒளி, சுமேரு மலையில், தாதுக்கள் தனிப் பட்டு ப்ரகாசமாக தெரிவது போல உள்ளன.
  2. உன்னதமான கங்கை நதி பொங்கி ப்ரவாஹமாக ஓடுபவள். இவருடைய ஜடையில், தன் சீறும் அலைகளை அடக்கி வைத்துக் கொண்டு, வெண்மையான அதன் நுரைகளே, கைகளாக,  ஸ்ரீ ஹரனின் அங்கத்தில் இணைந்துள்ள பார்வதி தேவியை சீண்டி விளையாடுவது போல இருக்கிறது.  என்ன இருந்தாலும் சபத்னி அல்லவா?
  3. கங்கையின் ப்ரவாஹத்தில், இளம் சந்திரனின் கலை, பலவாக தெரிகிறது. அதன் கிரணங்கள் வெண் மேகம் படர்ந்த பனி படர்ந்து முன்னிலும் அதிகமான வெண் நிறமாகத்  தெரிவதை, ரசித்தனர்.
  4. நெற்றிக் கண்ணின் ஒளியின் முன் சந்திர ஸூரியர்கள் -இங்கு அவருடைய மற்ற இரு கண்கள் – ஓளி குறைந்து காணப் படுகின்றன.  அதன் ப்ரளய காலத்து அக்னிக்கு சமமான தேஜஸ்- வெப்பம் அதனால் தான் மீனத்வஜன் எனப்படும் மன்மதன் எரிந்தான்.
  5. குண்டலங்கள் உயர்ந்த மணிகளால் ஆனவை. அவைகளும் சேர்ந்து முகத்தின் காந்தியோடு போட்டி போட்டுக் கொண்டு ஸூரிய சந்திரர்களுடன்  தாங்களும் வணக்கத்தை பெறுகின்றன.
  6. அலங்காரமாக ஆகி விட்ட நீல கண்டம். தேவி கௌரி அணிந்துள்ள கண்ட பூஷணம், கழுத்தின் அலங்காரமான நீல மணி மாலையுடன் சேர்ந்து ஒளி வீசுகிறது போலும்.
  7. வெண்மையான புகை பரவி உள்ளது.  அதைக் காண ஹிமவானுடைய பனி மூடிய சோபையை ஒத்திருப்பதாக உணர்கிறோம்.  ப்ரபோ! முப்பத்து மூன்று தேவர்களும் அசுரர்களால் பெரும் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்.  தேவ லோகத்து இயல்பான அமரத்வம் என்பதே அழியும் நிலையில் உள்ளதோ என பயப்படுகிறோம்
  8. தங்கள் கையில் வைத்திருக்கும் ப்ரும்ம கபாலம் அதை  வைகுண்டத்தில் உள்ளவர்கள் கூட மதிப்புடன் வணங்குகிறார்கள்.  ஆபரணமோ யுத்த முடிவில், நர- மனித அஸ்தி எலும்புகளாலான மாலையும்,  த்ரிஸூலமும் அபயம் அளிக்கும் தங்கள் கைக்கு அலங்காரமே.
  9. சந்திரனின் குளுமையான அம்ருதம் போன்ற காந்தியால் முழுக்காக்கப் பட்டு அந்த ப்ரம்ம கபாலம் உயிர் பெற்று எழுந்து விட்டதோ, என்ற ஐயம் எழும் படி  வேத கானம் அங்கு நிறைந்துள்ளது.  இந்த விதமாக இந்திரன் பகவான் ஸ்ரீ ஹரனைக் கண்டான்.
  10. பொற்கொடி போன்ற தேவி அங்கு வந்து,  இயல்பாக அவர் அருகில் வந்து நிற்கவும் அந்த இடமே மங்களமயமாக ஆனது.  சரத் காலத்து மேகம் போன்றவளும், மஹேஸ்வரனின் வெண்மையும் மின்னலுடன் கூடிய மழைக் கால மேகத்தை நினைவுறுத்தியது.
  11. கர்வம் கொண்டதால் மன்மதனை மஹேஸ்வரன் அழித்தார்.  பினாக பாணியான பகவானுடைய கையில் இருக்கும்  பினாகம் என்ற வில் மற்ற எவராலும் தொட்டு தூக்கக் கூட முடியாத சக்தி வாய்ந்தது.
  12. தேவ தேவனின் பத்ராஸனம் என்ற கால் வைக்கும் பீடம் மாணிக்க மணியால் ஆனது. சாமரங்கள் வீசும் சமயம் சந்திர சூரியர்களின் ஒளி பட்டு தானும் வெண்மை கலந்து தென்படுகிறது போலும். இவ்வாறு அவர்கள் கேசாதி பாதம் என்ற முறையில் போற்றித் துதித்துக் கொண்டிருந்த  சமயம் குமாரன் அங்கு வந்தான். சஸ்த்ரங்களின் பயிற்சி முடிந்து தன் சகாக்களுடன் வந்தவன், அவர்களைக் கண்டதும் தேவர்கள் மகிழ்ச்சியுடன்  கண் கொட்டாமல் பார்த்தபடி இருந்தனர்.

சைல புத்ரியின் மகன் இப்படித் தான்  இருப்பான் என்று ஓரளவு எதிர்பார்த்து இருந்தாலும் அந்த தேஜஸ், அழகுக்கே அழகூட்டுவதாக அமைந்த உடல் வாகும், கம்பீரமும், ஒரு நிமிடம், இந்திரன் திகைத்தான். கண்களைக் கூசும் ப்ரகாசத்தில் மனம் தடுமாறுவது இயல்பே.   கண்கள் ஆயிரம் வேண்டும் என்று சொல்வோம். ஆனால் ஆயிரம் கண்களுடைய தேவர் தலைவனே,  மயிர் கூச்செரிய , பருவ காலத்தில் பூத்த மாமரம் தளிர்கள் தெரியாமல் பூவே மரத்தை மறைத்து  நிறைந்து தெரிவது போல ரோமங்கள் குத்திட்டு நிற்க, நின்றான் என்று உவமை சொல்கிறார்.  பரவசம் அடங்கி, தன் நிலைக்கு வந்து பகவான் ஸ்ரீ ஹரனையும் பார்த்து தான் கண் பெற்ற பலனை அடைந்ததாக நினத்தான். 

பொன் மலையின் சாரம் போன்றவன், கைகளில் அஸ்த்ர சஸ்த்ரங்களையும் வைத்துக் கொண்டு எதிரில் நின்ற குமாரனை, தந்தையின் அருகில் சென்று அமர்ந்து விட்டவனைப் பாத்து, இனி நம் சத்ருக்களை ஜயிப்பதில் எந்த தடங்கலும் இல்லை என்பதாக மனதினுள்  நிம்மதியடைந்தான்.

ஸ்ரீ நீல கண்டனின்  நந்தி தன் பரிவாரங்களோடு வந்தான். பகவானிடம் தன் பொன்னால் ஆன தடி, (அதுவே அவரது ஆயுதம்) வந்து வணங்கி, சஹஸ்ர நேத்ரன் எனும் இந்திரன் வந்திருப்பதையும் கண்டான்.   நந்தியின் வரவால் அந்த இடம் புத்துணர்வு பெற்றது போலாயிற்று. தான் வந்த காரணத்தையும் தெரிவிக்கலானான்,  அதற்கு முன் வந்திருந்த விருந்தாளியான இந்திரனை ,  திரிபுராரியான ஹரனும் கண்களால் அனுக்ரஹித்தார்.  இந்திரனும் ஜகதேக- உலகமே வணங்கும்  ஈஸ்வரனை சாஷ்டாங்கமாக  மகுடங்கள் காலில் பட வணங்கினான்.

மஹேஸ்வரனை வணங்கியதால்,  தானே பலனடைந்தவனாக உணர்ந்த இந்திரன் பக்தியுடன் அவர் முன் அடக்கத்துடன் நின்றான்.  அவர் எதிரில் இருப்பதாலேயே அனுக்ரஹிக்கப் பட்டவனாக மகிழ்ந்தான்.  அருகில் இருந்த அவரது பரிவாரங்கள், கணங்கள் அனைவரையும் மரியாதையுடன் கை கூப்பி வணங்கினான்.   அதற்குள் பரிவாரங்களால் இந்திரனுக்கான ஆசனம் கொண்டு வரப் பட்டது.  பொன்னால் ஆன அந்த உயரிய ஆசனத்தில் அமரவே தயங்கிய இந்திரன் ப்ரபுவின் அருள் அது என்றெண்ணி உவகையும் அடைந்தான். யார் தான் அந்த மரியாதையை மறுப்பார்கள்.

மென் முறுவலோடு ஈஸ்வரன் உடன் வந்திருந்த மற்றவர்களையும் பார்த்து, வசதியாக அனைவரையும் காணவும் வசதியாக , அமரும் இருக்கைகளை அளிக்கச் செய்தார்.  அவர்களும் வந்த பின்.  வந்த காரியம் பற்றி விசாரித்தார்.  அனைவரும் சுர நாயகர்கள், அசுர விரோதிகள்.என்று அறிவேன்.  முகமே அவர்கள் அசுர வீர்களால் படும் பாட்டை தெரிவிப்பதாக உள்ளதே என்றார்.  தங்கள் இயல்பான தேஜஸும், கௌரவமும் அடிபட்டு, வாடி வருந்தி இருப்பதாக கண்டார். 

அஹோ! அனைவரும் ஏராளமான ப்ராக்ரமங்களுடன் இருந்தவர்களே.  வீரர்களாக, உயர்ந்த அஸ்த்ர சஸ்த்ரங்களுடன், வெற்றியே கண்டவர்கள், பனி விழுந்த பத்மத்தின் இதழ்கள் போல வாட்டத்துடன் காணப் படுகிறீர்கள் என்றார்.  உங்கள் முயற்சியாலும் நல் வினையாலும் சுவர்கத்தை அடைந்த நீங்கள் அதனால் அமையப் பெற்ற சத்ர சாமரங்களை, அந்தந்த பிரிவில் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் உங்கள் உரிமையான இந்த அடையாளங்களை எக்காரணம் கொண்டும் விடாதீர்கள் என்றார்.  நீங்களும் தேவ வாசிகளாக இருந்தும், பூ உலகில் எதை தேடி அலைகிறீர்கள்?   ஏதோ அபசாரம் செய்ததால், தங்கள் புண்யங்களை இழந்தீர்களா? பாடு பட்டு பெற்ற சுவர்க பதவிகள்.  திடுமென விட்டு வெளியேற என்ன காரணம்? சித்தர்கள் கூட எளிதில் பெற முடியாத தேவ லோகம். சகல வசதிகளும் தேவைகளையும் நிறைவேற்றும் ரம்யமான இடம்.  உயர்ந்த தெய்வீகமான இருப்பிடம் அதிலிருந்து  ஏன் வெளியேறினீர்கள்? அதற்கு சமமான மற்றொரு இடம் உண்டா?

அதன் பின், தானே, அதற்கான காரணத்தை  ஊகித்தவர் போல பேசுகிறார்.  தேவர்களே! தேவர்கள் தலைவனுடன் வந்து இங்கு கூடியிருக்கும்  அனைவருமே,  ஒரே விதமாக அடிபட்டவர்கள் போல, மன வருத்தம் தெரிய இருப்பவர்களே, சொல்லுங்கள். என்ன கஷ்டம் உங்களுக்கு? மஹாசுரன் தாரகன் மூவுலகையும் ஜயித்து  விட்டான் என அறிந்தோம். அவனுடன் முரண் பட்டீர்களா?  அவனால் அவமதிக்கப் பட்டீர்களா? அசுரனானாலும் அவனும் பலசாலியே. தாவானலம் எனும் ப்ரளய கால அக்னி வனத்தையே அழிக்கும்.  மேகம் வர்ஷித்தால் மட்டுமே அது அடங்கும்.  நான் மட்டுமே  அந்த மகாசுரனை அடக்க சக்தியுடையவன்.

அவரே இப்படி சொன்னதால்,  நம்பிக்கையிழந்திருந்த  தேவர்கள், அவர் முகத்தை ஏறிட்டு பார்த்தவுடன் அவருடைய உள் மனதை, முகம் மலர இருந்ததை வைத்து புரிந்து கொண்டு, உடனடியாக தங்கள் துன்பம் விலகும் என்ற ஆஸ்வாஸத்தை அடைந்தனர்.

கிடைத்த இடைவெளியில் இந்திரன் தங்கள் கோரிக்கையைச் சொல்ல இதுவே சரியான சமயம் என நினைத்தவன் போல பேசினான்.  சரியான சமயத்தில் சொல்லும் சரியான சொல். நற் பலன்களைத் தரும் என்பது உலக வழக்கு.  தகுதியான ஒரு சொல், மிகப் பெரிய  மேன்மையை அடையச் செய்யும் என்று பெரியவர்கள் சொல்வார்களே என்று நினைத்தானோ என்பது போல இருந்தது.

நம்பிக்கை தரும் ஈஸ்வரனுடைய வாக்கால்,  இழந்த நிம்மதியை திரும்ப பெற்றது போலவும், புத்துயிர் பெற்றது போலவும்,   இந்திரன் முதலானோர், மகிழ்ச்சி பெருக்கு கண்களில் நீராக வெளிப்பட, முகத்திலேயே மகிழ்ச்சி தெரிய சொன்னர்கள். இந்திரன் சொன்னான்: ப்ரபோ! ஞானமே ஒளியாக, அந்தகார இருட்டை அழிக்கும் தீபமாக, அழியாத ஒன்று, எந்த நிலையிலும் தவறாத ப்ரபை- ப்ரகாசத்தை உடையவன்,  சர்வக்ஞ! அனைத்தையும் அறிந்தவர் நீங்கள். எது, எந்த அளவு, என்றும் கடந்த காலம், மற்றும் நிகழ், வருங்காலத்தையும் அனைத்தும் உங்கள் கண் முன் காணக் கூடியவர் நீங்கள்.

எங்களுக்கு தற்சமயம் பெரும் கவலையைக் கொடுக்கும் தாரகாசுரன், தானே மூவுலக தலைமையை ஏற்றுக் கொண்டு விட்டான். அவன் இரு புஜங்களின் பலம் அளப்பரியது.  அவன் ஆட்சியில், நாங்கள் படும் பாடு, பகவானே, தாங்கள் அறியாததா?  விதி-ப்ரும்மாவின் அமோகமான வரம் பெற்றவன். மூன்று உலகையும் ஜயித்தவன் மேலும் மேலும் தண்ட சண்டனாக, தேவர்களை ஒட்டு மொத்தமாக அழிக்கவே முனைந்து நிற்கிறான்.  என்னையும் என்னைச் சார்ந்தவர்களையும் தான் அவன் எதிர்க்கிறான்.  மற்றவர்களை புல் பூண்டு போல அலட்சியமாக பார்க்கிறான்.

பிதாமஹர்- ப்ரும்மா அவரிடம் வணங்கி முறையிட்டோம்.  எங்களுக்கு சமாதானம் சொல்கிறார். ஸேனாபதி பிறக்கப் போகிறான். ஸ்மர- மன்மதனை வாட்டியெடுத்த பகவான் சங்கரனின் மகனாக வருவான்.  அவன் நிச்சயம் இந்த அசுரனை அடக்குவான்.  பார்க்கப் போனால் தாரகனின் வளர்ச்சிக்கு காரணமே ப்ரும்மா தந்த வர தானமே.

அஹோ! அவர் சொல்லி தற்சமயம் வரை நாங்கள் தாங்க முடியாத பராபவம்- அவமானம் அடைந்து விட்டோம். பல விதமான கஷ்டங்கள். ஹ்ருதயத்தில் குத்தியது போல தவிக்கிறோம்.   தேவர்கள் அனைவருமே இனி பொறுக்க முடியாது என்ற நிலைக்கு வந்துள்ளோம்.

  • மூவுலகிலும் ஐஸ்வர்ய லக்ஷ்மியை அவனே அடைந்து விட்டான். அதனால் பெரும் கர்வத்துடன் எங்களை எதிர்க்கிறான். மகாசுரன்- அவனை அடக்கி, பகவானே!  நேருக்கு நேர் யுத்தத்தில் அவனை வெற்றி கொள்ள முடியாமல் தவிக்கிறோம். உங்கள் குலனந்தனன் தான் எங்களை காக்க சக்தியுடையவன்.
  •  
  • மிகப் பெரும் யுத்த பூமியில் உங்கள் மகனின் கூர்மையான சஸ்திரங்கள் அவர்கள் தலைகளை கொய்யட்டும். மஹாசுரனின் அடியாட்களின் ஓலம் பத்து திக்குகளிலும் எதிரொலிக்கட்டும்.
  •  
  • பெரும் யுத்தத்தில் அந்த அசுர படையை அடக்கி தேவலோக சிறையில் அடைக்கப் பட்ட பெண்கள் விடுவிக்கப் பட்டு முகம் மலரட்டும்.  சுரேந்திரன் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த ஸ்மராரி- காமனை எதிர்த்தவர், தேவர்களுக்கு எதிராக அசுரனின் அடக்கு முறையாலும், பலவிதமான துன்புறுத்தலாலும் அவர்கள் பாடும் பாட்டை புரிந்து கொண்டார்.  அவர்களிடம் இரக்கம் கொண்டார்.  பூத நாயகன், பதில் சொன்னார்.
  • அஹோ! அஹோ! தேவ கணங்களே! சுரேந்திரனை முன்னிட்டுக் கொண்டு வந்துள்ள மற்ற தேவர்களே கேளுங்கள்.  உங்கள், உங்கள் வாரிசுகள் அனைவரும் நன்மை பெற நானும் என் சந்ததியினரும்  கண்டிப்பாக உதவுவோம். இந்த வினாடியே என் மகனை உங்கள் சேனாபதியாக நியமித்துக் கொள்ளுங்கள். இவன் அந்த பதவியைப்  பெற சக்தியுடையவனே. சத்ருவை ஜயித்து, தேவ லோகத்தை நீங்கள் அனைவரும் திரும்பப் பெறுவீர்கள்.  இதைச் சொல்லி விட்டு பகவான்  தன் மகனைப் பார்த்தார். அவனோ மகா உத்ஸாகமாக இருந்தான். மிகப் பெரிய உக்ரமான யுத்தம் அதில் பங்கு பெறுவேன் என மகிழ்ந்தான். மகனே! அந்த தேவ விரோதியான அசுரனை வதைத்து விடு என்று சொன்னார்.
  • பசுபதியின் சாஸனம்-ஆணை. குமாரன் உடனே ஏற்றுக் கொண்டான். தலை வணங்கினான். தந்தையிடம் அன்பும், மரியாதையும் வெளிப்பட இருந்தது அவன் செயல். உலகில் பெற்றோரிடம் அன்புள்ள தனயர்களுக்கு இது தானே தர்மம்.
  •  
  • மகனே! யுத்த விதிகளை சொல்கிறேன். அசுரன் பலசாலி என்று ஆரம்பித்தார்.  கிரிஜாவும் அங்கு வந்தாள். மகன் ப்ராக்ரமம் பற்றி அறிந்தவள் ஆதலால் தயக்கமின்றி சம்மதம் தெரிவித்தாள்.  தன் மகன் வெற்றி வீரனாக இருப்பதையறிந்த எந்த தாய் தான் மகிழ்ச்சியடைய மாட்டாள்.
  •  
  • தேவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பெற்றொரும் சம்மதித்து சக்திசாலியான மகனை அனுப்பி வைக்கிறார்கள். என்ன பெருமை.  தேவ விரோதிகளின் கர்வத்தை அடக்கி, உலகுக்கே அபயம் அளிக்க வல்லவன்.  உடனடியாக சம்மதித்த ஈஸ்வரன் அனுக்ரஹித்ததால் பெரும் ஆஸ்வாஸமும், மன நிம்மதியும் அடைந்தனர்.    சந்தேகம், கேட்பது சரியா என்பது போன்ற பல கேள்வி சமாதானங்கள், இவைகளுக்கிடையில், கேட்ட உடனே தர சம்மதித்ததும் அல்லாமல்,  மகனும் உத்சாகமாக உடன் வந்தது பெரும் பாக்யம் என்று மகிழ்ந்தனர்.

|| இது வரை  ஸ்ரீ காளி தாஸரின் குமார சம்பவ மகா காவ்யத்தில் ‘குமார சேனாபத்ய வர்ணனை ‘என்ற பன்னிரெண்டாவது அத்யாயம் ||

  அத்யாயம்-13

அதன் பின் குமாரன், வெளியில் செல்ல வசதியான ஆடை அலங்காரங்களுடன் வந்து மூவுலக நாயகனான தந்தை மகேஸ்வரனை வணங்கி இந்த்ராதி தேவர்களுடன் புறப்பட்டான்.

அப்படி வணங்கிய மகனை  அவர் ஆசீர்வதித்தார். மகனே,  யுத்தத்தில் ஸ்திரமாக இரு.   இந்திர சத்ருவை வதைத்து விடு, என்றவர் அன்புடன் அவனை அனைத்து உச்சி முகர்ந்து வழி அனுப்பி வைத்தார்.

தாயாரையும் அவள் பாதங்களைத் தொட்டு குமாரன் வணங்கினான்.  அவளும் மகனை அணைத்து தன்  ஆனந்த கண்ணீரால் முழுக்காட்டியவளாக மகிழ்ச்சியுடன் விடை கொடுத்தாள். வீரனை பெற்றவள் மகிழ்வது இயல்பே.  மடியில் இருத்திக் கொண்டு, உச்சி முகர்ந்து, ‘சத்ருக்களை வெற்றி கொண்டு, செயல் வீரனாக திரும்பி வா மகனே, என்னை உலகில் மா வீரனைப் பெற்றவள் என்று புகழும்படி செய்’ என்றாள். 

கர்வத்துடன்  தைத்யேசன் உலகினரை துன்பம் அடைய செய்து கொண்டிருந்தானே, அவனை அடக்க தங்களால் முடியாமல் ஈசனின் மகனை யாசிக்க வந்த இந்திரன் முதலான தேவர்கள் பக்தியுடன் கிரீசனையும் கிரிஜாவையும் சேர்த்து  வணங்கி குமாரனோடு கிளம்பினர். மனதில் நம்பிக்கையுடன்  குமாரனிடம் பய பக்தியும், மரியாதையும் இயல்பாக தோன்றின.

வானமே இதனால் மகிழ்ந்தது போல இருந்தது.  பகலில் நக்ஷத்திர கணங்களும் வந்து ஸூரியனுடன் கூடி நின்றது போல ப்ரகாசம்.  அனைத்து தேவர்களும் சேர்ந்து ஒரே சமயத்தில் தென்பட்டதை கொண்டாடியது போல இருந்தது.  அவர்கள் நடுவில் குமாரன் தனித்து தெரிந்தான். அதிகமான காந்தியுடன்,  நள்ளிரவின்   மூன்றாவது யாமத்தில் நக்ஷத்திர, தாரா கணங்கள் இடையில் சந்திரன் ஒளி மிகுந்து தெரிவது போல.

கிரீச கௌரி தனயனுடன் செல்வதே தங்கள் பாக்யமாக எண்ணியது போல புலோம புத்ரியின் கணவனான இந்திரன், தன் பரிவாரத்தோடு நக்ஷத்திர மார்கத்தைக் கடந்து, முஹூர்த்த நேரத்தில், தன் லோகத்தை சென்றடைந்தான்.  தங்கள் இருப்பிடமான சுவர்கத்தையே பல காலமாக காணாமல் இருந்தவர்கள், அந்த அளவு பயம் மஹாசுரனான தாரகனிடம். அதை அவன் கைப்பற்றிய பின்  கால் வைக்கத் தயங்கியவாறே நுழையாமல் நின்றனர்.

நீ முன் செல், நான் பின்னால் வருகிறேன் என்று ஒவ்வொருவரும் மற்றவரை வேண்டினர்.  சுவர்கலோக வாசிகளே அந்த சமயம் தங்களுக்குள் இப்படி ஒரு கலகத்தை தோற்றுவித்து விட்டனர்.  ஒருமுகமாக அனைவரும் குமாரனை நோக்கினர். அவனோ மென் முறுவலோடு புதியதைக் காணும்  இளம் பாலகனாக, ஆவலுடன்  குதூகலமாக இருந்தான்.  அந்த மலர் முகத்தைக் கண்ட தேவர்கள் பயம் சற்று விலகியது போலவும், தாரகனை மறந்தது போலவும் ப்ரகாசமாயிற்று. 

குமாரனோ அந்த இடத்தை ரசித்தபடி முன்னேறினான்.  வரும் காலத்தில் அவன் தாரகனை வதம் செய்யப் போவதையே ஆவலுடன் அதிகமாக தேவ கணங்கள் நினைவில் இருந்தது போலும்.    தாங்களே வீரர்களாக இருந்தவர்கள், இந்த சிறுவன் விளையாட்டும், சிரிப்புமாக வளைய வருவதில் மகிழ்ச்சி ஒரு பக்கம் கவலை ஒரு புறமாக,   மெல்ல சிரித்தபடி நினைவூட்டினர்.

அதைக் கண்டு கொண்ட பாலகன், பயப்பட வேண்டாம், தேவர்களே, நீங்கள் அனைவரும் கவலையின்றி ஊருக்குள் நுழையுங்கள்.  நான் இங்கேயே இருந்து சத்ரு தென் படுகிறானா என்று பார்த்துக் கொள்கிறேன்,   முன் கண்டவர்கள்  நீங்கள் அவனை அறிவீர்கள் தானே, என்றான்.

இந்த அழகிய சுவர்க லோகம், அழகிய லக்ஷ்மி கடாக்ஷம் பெற்றது, அதைக் கேசத்தை கலைத்து நாசம் செய்வது போல கலைத்து அழித்த துஷ்டனான அசுரன் வரட்டும். உங்கள் எதிரிலேயே என் சரங்களால் வதம் செய்கிறேன்.

என் கையில் உள்ள சக்தி என்ற ஆயுதம் வலிமையானது. துல்லியமாக அடிக்கக் கூடியது.  நிம்மதியாக அதன் சக்தியை கண்டு கொள்வீர்கள்.  சுவர்க லக்ஷ்மி எதிர் கொண்ட விபத்துகள்  அனைத்தும் என் சரங்களால் விலகுவதைக் காணுங்கள்.  இந்த சக்தி ஆயுதம் உங்களுக்கு நன்மையே தரும் பயப்பட வேண்டாம் என்று சமாதானம் செய்தான்.

இந்த அழகிய வசனங்களால் தங்கள் பயம் தெளிய,  தாங்களும் யுத்தம் செய்ய வலிமையையும், உத்சாகத்தையும் பெற்றவர்களாக தாமரை மலரை பழிக்கும் குமாரனின் முகத்தில் மென் முறுவலால் மேலும் நம்பிக்கை பெற்றவர்களாக, தேவர்கள் கூட்டம் மனம் மகிழ்ந்தது.  

அறியாமை என்ற அந்தகாரத்தை அழிக்கும் தேவனின் மகன்,  தைத்ய வதத்தின் பொருட்டு வேண்டி அழைத்து வந்திருக்கிறோம், நம் நல்ல காலம் சிறுவனானாலும் யுத்தம் செய்வதில் மகிழ்ச்சியே கொண்டிருக்கிறான், அரவிந்தம் போன்ற முகத்தில் சதா மென்முறுவலுடன் இருப்பவனைக் காணக் காண கீர்வானர்கள் எனும் தேவ கூட்டம் மனம் மகிழ்ந்தது.  அந்த மகிழ்ச்சி அவர்கள் அன்புடன் பேசியதில் தெரிந்தது.

விசாலமான கண்கள் அப்பொழுது தான் மலர்ந்த உத்பல மலர் போல இருக்க, உடலில் ஆயிரம் கண்களாலும் கண்டும்  இந்திரன், மனம் நிறைவுறாமல் பார்த்தபடியே இருந்தான்.  தன் உத்தரீயத்தை அவனுக்கு அணிவித்தான். (ஸகோதரர்கள் இடையில் உத்தரீயம் என்ற மேல் வஸ்திரம் மற்றிக் கொள்வது உண்டு. பந்து -உறவினால் வந்த உரிமை என்பதால். மற்றபடி லோகாயத த்தில் அது சம்ப்ரதாயமாக பார்க்கப் படும் என்று உரையாசிரியர்)

முதியவரான ப்ரும்மா வந்தார். நான் முகன் – முகம் நாலும் மலர கண்களில் ஆனந்த பாஷ்பம் பொங்க சிறுவனின் உச்சந்தலையை முகர்ந்து ஆசீர்வதித்தார்.   அவனும் ஷடானனன் ஆறு முகத்தான்.  தனித் தனியே ஆறு முகத்தையும் நோக்கி ஆசிகள்  அளித்தார்.  அருகில் இருந்தவர்கள் சாது சாது என்றனர்.  திரிபுராரி மகன் நீ, ஜய ஜய, மேன் மேலும் வெற்றி பெறுவாய் என்றனர்.  கந்தர்வ, சித்த, வித்யாதரர்கள், சங்கத்தினர் அனைவரும் வந்து ஜய கோஷம் செய்தனர்.

திவ்ய ரிஷிகள் வந்தனர். நாரதர் முதலானோர் வந்து வாழ்த்தி வரவேற்றனர்.  சத்ருவை ஜயிக்க வந்ததை பாராட்டினர்.   நல் ஆடைகள், பொன் மயமான உத்தரீயங்கள், தங்கள் வல்கலைகள் இவற்றை தாங்கள் பந்து என்பதை தெரிவிக்கும் வகையில் கொடுத்தனர்.

சக்தி தரன், சக்தி என்ற ஆயுதம் உடையவன், நம்மிடையே இருக்கிறான் என்பதால் உத்சாகம் பெற்று, அசுரனிடம் இருந்த பயமின்றி அனைவருமாக தலைவனான யானையின் பின், எந்த விதமான பயமோ, சிந்தனையோ இன்றி குட்டி யானைகள் பின் தொடருவது போல சென்றனர். (சக்தி தரன்- அளவில்லாத சக்தி உடையவன்)

த்ரிபுரத்தை எரித்த சமயம் ப்ரமத கணங்கள், பகவான் பரமேஸ்வரனை பின் தொடர்ந்து சென்றது போல சென்றனர்.   மந்தாகினீ நதிக் கரையை அடைந்தனர்.  தேவ லோக பெண்கள் ஸ்னானம் செய்த இடம். அதில் திக் கஜங்கள் எனும் யானைகளும் வந்து நீரில் மூழ்கி இளப்பாறும்.  விளையாட்டாக கைகளால் நீரை அளையும் சமயம் அலைகள் விசிறி அடிக்கும்.  கரையில் இருக்கும் மரங்களுக்கு நீர் விடுவது போல இருக்கும்.

தேவ லோக பெண்கள் தங்கள் கைகளால் செய்த அழகிய பொன் நிற வேதிகா எனும் யாக பூமிகள் காணப் பட்டன.  வாசனையால் கவரப் பட்டு வரும் வண்டுகள், பாடிக் கொண்டே வருவது போல ரீங்காரம் செய்யும். வாசனை அந்த நீரில் பெண்கள் பயன்படுத்தும் வாசனை திரவியங்களே என்பதை அறியாமல் மலர்களைத் தேடும்.  

நதியின் மறு கரையில் வந்து நின்றபடி குமாரனை காண நின்ற தேவலோக பெண்களின் பிம்பங்கள் நதியின் நீரில் பலராகத் தெரிந்ததும் ரசிக்கத் தகுந்த  காட்சியாக இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் நதியையும், சுற்றுப்புறத்தையும் பார்த்து இந்திரன் மகிழ்ந்தான். கார்த்திகேயனுக்கு அந்த அழகிய இடங்களைப் பற்றி விவரித்தான்.  தேவர்கள் உடன் வர அந்த இடங்களை முதன் முறையாக கண்ட கார்த்திகேயனும்  ஆச்சர்யத்துடன் கண்கள் விரிய பார்த்தபடி வந்தான்.  அவர்களுடன் தானும் தேவ நதி என்று வணங்கினான்.

தாங்களும் ஏதோ உபசாரமாக செய்ய எண்ணியோ, நதியின் அலைகளின் மேல் பரவி தன்னை  குளுமையாக செய்து கொண்டு  கார்த்திகேயனை  சுகமான காற்று வரவேற்றது.

ஜம்பன் என்ற அசுரனை  வென்றவன் இந்திரன் என்பதால் ஜம்பஜிதன்.   உல்லாசமாக பொழுது போக்க என்றே கவனமாக அமைத்த நந்தன என்ற உப வனம்.  தேவர்கள் விளையாடும் இடம்.  கவனிப்பாரற்று சால மரங்கள் உடைந்து கிடந்தன.  அசுரர்கள் படையெடுத்து அழித்திருக்கின்றனர், என்பது தெளிவாக தெரிந்தது.

சிதிலமான உப வனங்கள், ராஜ வீதிகளில் உடைந்தும் இடிந்தும் கிடந்த மாளிகைகள்,  மேல் தளங்கள் உடைந்த விமானங்கள் என்ற மாளிகையின் உயர்ந்த வேலைபாடமைந்த கோபுரங்கள்.  அமராவதி என்று புகழ் பெற்ற அந்த தேவ லோக ராஜதானி பரிதாபமாக காட்சியளித்தது.

குமாரனும் அதைக் கண்டு கருணை மிகுந்தவனாக ஆனான். விரோதம் மட்டுமே காரணமாக நகரத்தையே ஸூறையாடி அழித்திருப்பதையறிந்து அசுரனிடம் கோபமும் எழுந்தது.  தேவ விரோதி என்று அசுரனை வதைத்து தான் ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.  சுரேஸ்வர ராஜதானி என்று மதிப்புடன் இருந்த இடம் சிதைந்து உருத் தெரியாமல் கிடந்ததை பார்த்து பரிதாப பட்டான்.  வரிசை வரிசையாக மாளிகைகள் ஸ்படிகங்கள் கொண்டு அலங்கரிக்கப் பட்டிருக்க வேண்டும்.  

நல்ல நிலையில் அந்த இடங்களை அறிந்திருந்த தேவர்கள் தற்சமயம் அதனுடைய வீழ்ச்சியைக் கண்டு அங்கலாய்த்தனர்.  தாமரைகள் வடிவில், வைடூரியங்கள் பதித்த சிலைகள்,  என்று அவர்கள் தங்கள் நினைவில் இருந்த பொருட்களையும் இடங்களையும் சுற்றி வந்தனர்.

இந்திரனின் முன்னோர்கள் நிர்மாணித்த மாளிகைகளை தாரகனின் யானைகள் பல்லால் கடித்து விழச் செய்திருக்கின்றன. வைஜயந்தம் என்ற ப்ரசித்தமான மாளிகை அதன் கலையழகு மிக்க சுவர்கள் தரை மட்டமாகியிருந்தன. அதில் அழகுக்காக பதிக்கப் பட்டிருந்த ரத்னங்கள், வேலைப் பாடமைந்த ஜன்னல்கள், வலை போல அமைந்த ஜாலங்கள் என்று இந்திரன் ஒவ்வொன்றாக நினைவில் வர, அனைத்தும் தற்சமயம் மண் குவியலாக  கிடப்பதைக் காட்டினான்.  

தேவர்கள் தலைவன், ஐஸ்வர்யம் நிரம்பியன் எனும் தேவேந்திரனும், மற்ற தேவர்களும் இடி பாடுகளுடன் இருந்த ஒரு மாளிகையைக் காட்டவும், குமாரன் அதன் படிகளில் ஏறி மீதமிருந்த பகுதிகளைப் பார்க்க ஏறினான்.   கல்ப வ்ருக்ஷங்கள் தோரணம் கட்டியது போல வரிசையாக இருந்தன.  பாரிஜாத மரங்களின்  மலர்கள் தூவியது போல இருந்த தரை, அதில் வசித்த  கஸ்யபர் முதலான ரிஷிகள் வாழ்த்துச் சொல்லி வரவேற்றனர்.  வீட்டுப் பெண்கள் நடு கூடத்திலேயே நின்றபடி வரவேற்றனர்.

மகரிஷியின் பாதங்களில் வீழ்ந்து வணங்கிய பின், சுர, அசுர இரு குலத்துக்கும் முன் முதலானவர்,  குல விருத்தர்  என்பதால் ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்தான்.

தேவ மாதா-அவருடைய மனைவி என்பதால் இருவரையும் சேர்ந்து வணங்கினான். சைல சுதாவின் மகன் என்று அவர்களும் ஆதரவுடனும், அன்புடனும் கனிவுடனும் பார்த்தனர்.   கஸ்யபரும், தேவர்களின் தாயார் அதிதியும்,  இருவருமாக  ஆசீர்வதித்தனர்.  உக்ர வீர்யனான தாரகனை வெற்றி கொள்வாய், அதனாலேயே மூவுலகையும் ஜயித்தவன் ஆவாய் என்றனர். 

அதே போல தங்களை வணங்கிய தன் மைந்தர்களையும் ஆசீர்வதித்தனர்.  அனைவரும் இதனால் மன நிறைவு பெற்றவர்களாக ஆனார்கள்.

புலோம என்பவரின் மகள் சசீ என்ற இந்திரனின் மனைவியும் வந்து  வரவேற்றாள்.  அவளும், அதன் பின்  காஸ்யபரின் மற்ற ஏழு மனைவிகளும் வந்து மகேஸ்வர புத்ரனை வணங்கி வாழ்த்தினர்.  அனைவருமாக மிக்க மகிழ்ச்சியுடன், குமாரனை தேவ சேனாபதியாக அபிஷேகம் செய்வித்தனர்.  எங்கும் மகிழ்ச்சி நிலவியது. தங்கள் சோகங்கள் எல்லாம் இதோ விலகி விடும் என்பது போல நிம்மதியடைந்தனர்.  யுத்தம் செய்யும் ஆவலும் அவர்களைத் தொற்றிக் கொண்டன.  அவர்களுக்கு,  வீர்யவானான ஹரனின் மகன், நமக்கு இழந்த ஐஸ்வர்யங்களை மீட்டுத் தருவான் என்று நம்பிக்கை வந்தது. 

(இது வரை காளிதாஸரின் குமார சம்பவம் என்ற மகா காவ்யத்தில் குமார சைனாபத்யாபிஷேகோ என்ற பதின் மூன்றாவது அத்யாயம்)

அத்யாயம்-14

அந்தகனின் சத்ரு என்று மகேஸ்வரனுக்கு ஒரு பெயர்.  அவர் மகன் கார்த்திகேயன் தலைமையில் முப்பத்து மூவர் எனப்படும் தேவர்கள், மகா சுரனை வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை வெளிப்பட, விரைவாக யுத்த ஏற்பாடுகளைச் செய்தனர்.

கார்த்திகேயனும் தன் தனுஷ், மற்றும் சக்தி என்ற ஆயுதம் இவைகளுடன், சேனையின் முன் நின்றான். மனோ வேகத்தில் செல்லக் கூடிய  விஜித்வரம் என்ற மகா ரதம் தயாராக வந்து நின்றது. தன் ஆயுதங்களுடன் அதில் ஏறினான்.

தேவ லோக சம்பத்தை பறித்து அவர்களை தவிக்க விட்ட தேவ விரோதி தாரகன்.   அவர்கள் இழந்த லக்ஷ்மீகரமான சம்பத்தை, முழுவதுமாக மீட்டு தேவர்களுக்கு தர வேண்டும் என்பதே நோக்கமாக குமாரன் அசுரர்களிடம் வைரத்தை வரவழைத்துக் கொண்டது போல் இருந்தது.  தர்ம விரோதமாக செய்பவர் யாரானாலும் தண்டனை தேவையே.

சரத் கால சந்திரனின் வெண்மையான கிரணங்கள் போன்ற சாமரங்கள்.  சாமரம் வீசிக் கொண்டு வரும் கின்னரர்களும், சித்தர்களும், சாரணர்களும் மங்கள வாழ்த்துக்களையும், போற்றி பாடும் வாசகங்களையும்,  உரக்க சொல்லியபடி  முன்னால் சென்றனர்.

இந்திரனும் தான் யுத்த சமயம் அணியும் ஆடைகள், கவசங்களுடன், ஆயுதங்களுடனும் தயாராக  வந்தான். கைலாச மலையின் சகோதரனோ எனும்படி வெண்மையான ஐராவதம் வந்தது. அதில் ஏறி சேனாபதியான குமாரனை பின் தொடர்ந்தான்.  அக்னி தேவனும் தன் மகா மேட்ரம்- பெரும் மேஷம் என்ற வாகனத்தில். வந்து சேர்ந்தான். மகா தேஜஸ் வாய்ந்த ஆயுதமும் ஏந்தியவனாக  வந்தான்.

அடுத்து, வைவஸ்வதன்-யமன் , தன்னுடைய இந்திர நீலம் எனும் கருமையான சண்ட விக்ரமனான,  பெரிய கொம்புகளுடன் பயங்கரமாக தோற்றம் அளித்த மகிஷ வாகனத்தில் வந்தான்.  அவன் தன் கையில் தண்டம் என்ற ஆயுதத்தை தாங்கியிருந்தான்.  நைருதன் என்ற திக் பாலன், அசுரனை வதைக்க வேண்டுமே என்பதை மனதில் உருவேற்றிக் கொண்டு அதே நினைவில் ரோஷத்துடன் வந்தவன் போல இருந்தான்.  அவன் வாகனம் ப்ரேதம்.  வருணன், அதிசயமான நீண்ட உடலுடன் மகரம்- முதலை வாகனத்தில் வந்தான், நீருக்கு அதிபதி, கரு மேகம் போன்ற உடலும், பாசம் அவன் ஆயுதம், இவற்றுடன் தேவ விரோதியான தாரகனை மனதில் நினைத்தபடியே வந்து சேர்ந்து கொண்டான்.  த்ரிபுராந்தகனுடைய  மகனுடன் போரிடச் செல்வதே ஒரு பெருமை.

வாயு மூலையின் அதிபதி, மருத் பவனன், ம்ருக வாகனத்தில் பரபரப்புடன் வந்து  சேர்ந்து கொண்டான்.  நர வாகனன், குபேரனும் வந்தான். க3தா யுத்தம் செய்வதில் சாமர்த்யம் மிக்க தன் சேனை வீரர்களான யக்ஷர்களுடன்  கடல் போன்ற பெரும் படையுடன் வந்து சேர்ந்து கொண்டான்.  பரம சிவனுடைய மகனைக் காண ஆவலுடன் இருந்தான்.

ருத்ர கணங்கள், ஈசான திசையின் அதிபதி, பெரும் சர்ப்பங்கள்  இவைகளைக் கோண்டு ஜடைகளை முடிந்து கொண்டவர்களாக தாரகனை நிச்சயம் ஜயித்து விடுவோம், என்று சொல்லிய படி த்ரிஸூலங்களுடன் , பனி மலையின் சகாக்கள் போன்ற ருஷபங்களுடன் வந்தனர்.

மேலும் பலர், சிறப்பான ஆயுதங்கள்,  ஏற்பாடுகளுடன், இது வரை கண்டிராத அளவில் பெரும் யுத்தம் என ஆவலுடன் எதிர்பார்த்தவர்கள்  போல தேவ லோக கணங்கள்,  தங்களுடைய உயர் தரமான, பயனுள்ள ஆயுதங்களும், வாகனங்களுமாக மகிழ்ச்சியுடனும், திகிலுடனும் கலந்து கொள்ள வந்தனர்.

பினாகபாணியின் மகன் முன்னின்று செய்யப் போகும் மாபெரும் யுத்தம் என்பதால்,  ஓங்கி உயர்ந்த பொன் மயமான த்வஜஸ்தம்பம், சஞ்சலமான குதிரை படைகளும்,  யானைகள் மேல் ப்ரகாசமான குடைகளும், ரதங்கள் பலவிதமாக, யானைகள் பயங்கரமாக பிளிறும் ஓசையும், அவைகளின் கழுத்தில் கட்டியிருந்த மணிகளின் ஓசையும் திசைகள் எங்கும் பரவி எதிரொலிக்க,   விசித்ரமான ஆயுதங்கள் உரசிக் கொள்வதால் எழுந்த நாதம், அவைகளின் ஒளியும் போட்டியிடுவது போல  திசைகளை ப்ரகாசமாக்க.தேவர்களின் அந்த மகா சமூ- மிகப் பெரும் படை, ஆரவாரமாக கிளம்பியது.

வான மண்டலமே மூச்சு விடத் திணறியது போல  அந்த தேவர்களின்  எண்ணிலடங்கா சைன்ய த்வஜங்கள் வானத்தை  முற்றுகையிடுவது போல இருக்கவும், வான மண்டலமே கண்ணுக்கு தெரியாமல் போனது. வானமா? பூமியா? திசைகளா, எதுவும் தெரியவில்லை. அத்தகைய கோலாஹலம். ‘ஏகமேவாத்விதீயம் ப்ரும்ம’ என்ற அத்வைத வாதிகளின், ப்ரும்ம தத்வம் நிதர்சனமாக தெரிவது போல.  

தேவ லோக வாசிகளின் செல்வத்தை அபகரித்துச் சென்ற தாரகனை உலுக்கி எடுப்பது போல பயங்கரமான பேரி வாத்யகளின் முழக்கம் எழுந்தது.  அந்த ஓசை திசைகளில் எதிரொலித்ததால் மேலும் பயங்கரமாகியது. அந்த நாதம் மேலேழுந்து வான மண்டலத்தையும் தாண்டி நபோ மண்டலம் என்ற ப்ரும்மாண்டத்திலும்  நுழைந்து பரவியது போல இருந்தது. நாதம் எதுவானாலும் நபோ மண்டலத்தை அடையும் என்பது இயல்பு.    அதன் காரணமாக நீருண்ட மேகங்களும் ப்ரதி த்வனி – பதில் கொடுப்பது போல இடியாக வெளிப்பட்டன.  மேக நாதம் எழவும், படஹம்- நகாடம் என்ற வாத்யங்கள் யுத்த ஆரம்பத்தில் வாசிக்கப் படுவை இவையனைத்தும் ஒன்றாக கேட்கவும் கர்பிணி பெண்கள் பயந்தனர்.

வரிசை வரிசையாக  ரதங்கள் வேகமாக ஓடவும் அவைகளின் தடங்கள் குழி பறித்தது போல வீதிகளில் தெரிய, யானைகள் அதன் மேல் நடந்து சென்று புழுதியைக் கிளப்பி,  காஞ்சன சைலம் என்பதன் பொன் வண்ண மண் துகள்கள் கொடிகளில் படிந்து பொன் வண்ணமாக காட்ட, காற்று அந்த புழுதியை தள்ளிக் கொண்டு வான மண்டலத்தை நிரப்ப -என்று ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்று என்ற நியதி – (கவியின் வர்ணனை) அங்கு நிறைவேறியது போல இருந்தது.

வான வெளியை அவை நிரப்பியது போதாமல், திசைகளிலும் பரவின.  அங்கிருந்து அதே வாயுவின் செயலால் தள்ளப் பட்டு காஞ்சன மலையின் அடிவார சமவெளியில்  விழுந்தன.  ஸூரிய ஒளியில் அந்த பொன் வண்ணம் அதிக அழகாக விளங்கியது. அதைக் கண்டவர்கள் இது என்ன? அகாலத்தில் சந்த்யா காலம் போல வானம் வண்ணமயமாக தெரிகிறது என்று வியந்தனர்.  இதனால் யானைகள் தடுமாறி சுற்றிலும் நோக்க, தங்கள் நிழலே சுவர்ண மயமாக இருக்கவும் பாதாளத்திலிருந்து யானைகளும் வந்துள்ளன என்ற சந்தேகத்தை அடைந்தன போலும்.

இவ்வாறு கோலாகலமாக அந்த அமர சைன்யம் காஞ்சன மலையில் இருந்து இறங்கி வந்தன.  இந்த அதிசயமாக நடமாட்டமும் அதன் காரணமாக இரைச்சலும் குகைகளில் தூங்கிக் கொண்டிருந்த சிங்கங்களை எழுப்பி விட்டன.  தேவ சைன்யம் கூட்டமாக செல்வதைக் கண்டு ம்ருக ராஜா என்ற தங்கள் பதவியை நினவில் கொண்டது போல, பெருமிதத்தோடு வளைய வந்தன. பயந்து ஓடி வரும் சிறு விலங்குகளுக்கு தாங்கள் தான் பாதுகாப்பு தர வேண்டும் என்று எண்ணியது போல காட்டின் எல்லைகளை காத்தன.

அமராவதியின் பொது ஜனங்கள் தூரத்திலிருந்த படியே சைன்யம் செல்வதைப் பார்த்து குதூகலம் அடைந்தனர்.  பல வண்ணங்களுடன் வானமும் கடல் போல ரத்னாகரம்- வண்ண மயமான ரத்னங்களுடன் தெரிவதாக சொல்லி மகிழ்ந்தனர். அந்த கலப்படமான இரைச்சல், காதுகளை துளைத்து விடும் போல ஆனது.  திடுமென வந்த புயலும் வெள்ளமும் கடலில் அலைகள் ஓங்கி அடிக்க பயங்கரமாக ஆனது போல உலகமே அந்த ஒலியால் நிறைந்தன.  இந்த அமர்க்களத்தில் முன் கேட்ட படஹம் என்ற யுத்த வாத்ய ஒலி கூட மறைந்து விட்டது போல ஆயிற்று. 

அசுர சைன்யம் விழித்துக் கொண்டு சைன்யம் வேகமாக முன்னேறுவதைக் கண்டு திகைத்தனர்.  சைன்யம் கிளப்பிய புழுதியிலேயே அதன் அளவை ஊகித்து விட்டனர்.  அவர்கள் உடல் முழுவதும் கண்கள், கேசம், கொடிகள், யானைகள், குதிரைகள் என்று அனைத்தையும் அந்த புழுதி முழுக்காட்டி விட்டது.  நீருண்ட மேகங்கள்  போல அந்த புழுதி படிந்த கொடிகள் பறக்கும் சமயம் இடை இடையே வண்ண மயமான புழுதியால் மின்னல் போல காணப் பட்டது.

வானத்துக்கும் பூமிக்கும் இடையில் அடர்ந்து பரவிய புழுதியால், எது மேல், எது கீழ் என்பது தெரியாமல், எங்கிருந்து வருகிறது  எனத் தேடும் நிலை வந்து விட்டது.  கண்களின் சக்தி எட்டிய வரையில், மேல், கீழ்,  முன்னால், பின்னால், மேல், கீழ், அருகில், தூரத்தில் என்று அனைவரும் தேடினர்.  ப்ராணிகள் அனைத்துமே மிரண்டு போய் தங்கள் இனத்தாரையே அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் தவித்தன.

சற்று பொறுத்து வாத்யங்கள் ஓசை கேட்டன. எதிரொலி போலவும், இடி இடிப்பது போலவும் இனம் தெரியாத குழப்பமான ஓசைகள். ஒரு வழியாக வானத்திலிருந்து வருவதை புரிந்து  கொண்டனர்.  இதற்குள் தேவ சேனை பூமியில் இறங்கியது. முழுவதும் இறங்க முடியாமல் பூமியே நிரம்பி இடம் இல்லாமல் கிளம்பிய இடத்திலிருந்த (ஸுவர்கத்திலிருந்த)  சேனைகளின் ஒரு பகுதி இன்னமும் கிளம்பாமல் அங்கேயே தங்கி விட்டன.

மூச்சு விடக் கூட இடம் இல்லை என்பது போல, மதம் கொண்ட யானைகள் படை, உயர்ந்த குதிரைகளின் படை, ஓசை எழுப்பியபடி வந்த ரதங்கள்,  பூ ப்ரதேசத்தை நிரப்பி விட்டன.  அது போதாது என்பது போல, மகா கஜங்கள் பிளிறுவதும், இடை விடாமல் ஒலித்த யுத்தத்துக்கு  அழைக்கும் பேரி வாத்யங்களும், காலாட் படையினரின் உரத்த குரலில் வீர முழக்கங்களும், திசைகளே ஒலியால் நிரம்பின.  நதிகளில் திடுமென வெள்ளம் வந்து கரைகளை உடைத்துக் கொண்டு வர, அதன் மேல் யானை, குதிரைகள், மனித நடமாட்டமும் சேர்ந்து சேறாக்கின.  அதில் சிக்கி ரதங்கள் அசையாமல் நின்றன.

ஒரு புறம் பள்ளங்கள் நிரம்பி தரையாக ஆயின,  மறு புறம் மேடான ப்ரதேசங்கள் சரிந்து விழுந்து தரை மட்டமாயின, இப்படி சமதளமாக ஆயின.  சேனைகள் வேகமாக முன்னேற அதுவே வசதி ஆயிற்று.

திடுமென, பேரி வாத்யங்களால் ஆட்டம் கண்ட மலைகளில் காட்டுத் தீ பரவியது. அதன் வெப்பத்தால் கடல் நீர் வெப்பம் மிகுந்து கொதிக்கலாயிற்று. இது என்ன, முன் கண்டிராத புது தாக்குதல்  என உலகமே கவலை கொண்டது.

கொடிகள் விழுந்து பூமியில் நிரம்பி, புழுதியோ, கடலோ, நீர் நிலையோ எது என்ன என்று புரியாமல்  திசைகள் ஆக்ரமிக்கப் பட்டன. வழிப் போக்கர்கள் சாதாரணமாக திசையை அறிந்து கொள்ளும் ஒரு உபாயமும் பயன் படாதது போல ஸ்தம்பித்தனர்.  யானைகளின் கழுத்து மணிகள் தாறு மாறாக ஆடி, கர்ஜனையாக ஒலிக்க, பெரு வெள்ளம் வந்த நதியின் இரைச்சல் போல கேட்டன.  இதற்கிடையில் ஸூரியனும் அஸ்தமித்தான்.  (இரு பொருளுடைய பதங்கள், பாஷையின் அலங்காரங்கள் படித்து ரசிக்கத் தக்கவை)

திசைகள் என்ற பெண்கள், அவர்களை புழுதி என்ற முரடர்கள் சூழ்ந்து நிற்கிறார்கள் என்று நினைத்த ஆகாயம் தன் மேகங்களால் இடி இடித்து அவர்களை விரட்டலாயின.  பெரும் காற்றில் ஆடும் மரங்கள் போல யானைகள் ககனம்- வானத்தில் அலை பாய்ந்தன.  வேகமான மழை தாரை போல ரதங்கள் பூமியில் இறங்கின.

ப்ரளய ஜலம் சூழ்ந்த பூ மண்டலம் போல அசுர ராஜ தானியை இந்த படை வீரர்களும், வாகனங்களும், போர் முரசு கொட்டும் வீர்களும், பேரி முதலிய வாத்யங்களை இசைப்பவர்களுமாக முற்றுகை இட்டனர்.

(இது வரை ஸ்ரீ காளிதாஸரின் குமார சம்பவம் என்ற மகா காவ்யத்தில் தேவ சேனா ப்ரயாணம் என்ற பதினான்காவது  அத்யாயம். )

அத்யாயம்-15

சேனாபதியாக வந்திருப்பவன் அந்தகன் எனும் பரமேஸ்வரனுடைய மகன் என்ற செய்தியே தைத்யர்களின் உத்சாகத்தை வடியச் செய்தது.  குமாரனை முன்னிட்டுக் கொண்டு தேவர்கள் இந்திரனின் படை வீரர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் – இந்த செய்தியைக் கேட்டு அவர்கள் எட்டிப் பார்த்து அந்த சேனையின் அளவைக் கண்டு திகைத்தனர்.

மன்மதனை எரித்தவன் மகனா? எதிரிகளை நிச்சயம் வெல்லக் கூடியவனே, அவனிடம் நாம் யுத்தம் செய்வது எந்த அளவு பலன் தரும் என்ற சிந்தனையும் எழ,  யோசித்தனர். இதுவரை வெற்றியே கண்டு வந்துள்ளோர்.  இவர்களை வெற்றி கொண்டு நமது ஐஸ்வர்யம் பெருகவும், விஜய ஸ்ரீ நம்மிடையே இருக்கிறாள் என்று நம்பினோம். இந்த பெரும் படையுடன் வந்து நிற்பவர்கள் தாயாதிகளான இந்திராதி தேவர்கள். 

செய்தியை தைத்யாதி பதியான தாரகனிடம் வந்து, பணிவுடன் கை கூப்பி வணங்கி,  மன்மத சத்ருவின் மகன் வெற்றி கொள்ளும் நோக்கத்துடன் வந்து நிற்கிறான். அவனை பின் தொடர்ந்து ஏவல் செய்பவர்கள் போல பணிந்து ஜம்ப சத்ரு என்று புகழ் பெற்ற இந்த்ராதி தேவர்களும் வருகிறார்கள்.   இது வரை நமக்கு அடங்கி தாஸர்களாக இருந்தவர்கள், பல முறை நம்மிடம் தோற்றவர்கள் தைரியமாக வந்து நிற்கிறார்கள் என்றால், பின் பலமாக மகேச புத்ரன் இருக்கிறான் என்பது தான் உண்மை என்றனர்.  அதனால் என்ன, அவனையும் சேர்த்து ஜயிப்போம் என்றவன் ஹா ஹா ஹா என்று சிரித்தான். இப்படிச் சொன்னாலும் கோபம் மேலிட, தன் பலத்தில் கர்வம் கொண்டவன் பல்லைக் கடித்தபடி,  , மூவுலகையும் யுத்தம் செய்து ஜயித்தவன் நான் என்ற கர்வமே மிகுந்து தெரிய, தன்  சேனாபதிகளிடம் எதிர்த்து போரிட ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னான்.

பெரிய சேனைகளின் தலைவர்கள், தங்களுக்குள் கூடி பேசி, உடனடியாக ஆயுதங்களுடன் அந்த மாளிகையின் முற்றத்தில் வந்து கூடினர்.  வாயில் காப்போன், ஏற்கனவே தாரகனிடம்  இந்திரனின் பெரும் படை எதிர்க்க வந்துள்ளதையும், சேனைத் தலைவனாக இருப்பது மகேசனின் குமாரன் என்பதையும் தெரிவித்திருந்தான்.   அதையும் அறிந்த சேனைத் தலைவர்களும் கடல் போல பரந்த சேனை, வீரர்களுடன் வேக வேகமாக வந்து இணைந்து கொண்டனர்.

தானும் (பலசாலி) பலி, எதிரியும் பலாராதி (பலிஎன்ற தைத்யனை வென்றவன்), அவனுடன் மோத

திக்கஜங்களுக்கு இணையான தன் யானைப் படையுடன்,  பூ லோக பெரும் கடல் போன்ற தன் வீரர்களுக்கு முன்னோடியாக ரதத்தில் ஏறினான் தாரகன்.

யுக முடிவில் வரும் ப்ரளயம் போல இரைச்சலும், அலை அலையாக நகர்ந்த வீரர்களும், அவர்களின் கொடிகள் உயரத்தில்  போட்டி போட்டுக் கொண்டு உரசி கவனத்தை ஈர்ப்பதாகவும் இருந்த இடையிடையே பெரிய குடைகள், இவைகளுடன் கிளம்பி சேனை கிளப்பிய புழுதியும் ஆதவனை மறைத்தன.  தலைவனையே நோக்கியபடி படை வீரர்கள் முன்னேறினர்.  இவர்களின் வேகமும், ஆரவாரமும் திக்கஜங்களை ஆட்டுவித்தன. அவர்களின் வெண்மையான தந்தங்கள், இந்த புழுதிகளால் மலினமடைந்தன.

மலைகளின் இடை வெளிகளில் பாறைகள் உரசி தாங்களாகவே காட்டுத் தீ பரவுவது போல,தாரக சேனையின் படஹ வாத்யங்கள் கிளப்பிய நாதம் பெரும் ஓசையாகி  ஆகாய கங்கையையே திடுமென ப்ரவாஹமாக ஓடி, அதனால் வெள்ளக் காடாக ஆயிற்று.   அதனுடன் போட்டியிடுவது போல அவளும் தன் நீர் பெருக்கையும், ஆரவாரத்தையும் அதிகரித்து விட்டது போல இருந்தது.  அந்த வேகத்தில் சுவர்கத்தின் மாளிகைகளையும் முழுக்காட்டி விட்டாள்.

தாரகனுடைய சேனைகள் கிளம்பி நின்றவைகள் இந்த நதியின் வேகத்தால் ஒரு க்ஷணம் ஸ்தம்பித்து நின்றது போல நிற்கவும், ஹே! தாரக!  என்னுடன் நீயும் கீழ் நோக்கி போகும் நாள், (பாதாளம் – தைத்யர்களின் இருப்பிடம்) போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று சொல்வது போல இருந்தது.

திடுமென கழுகுகளும், புறாக்களும் கூட்டமாக ஆகாயத்தில் வட்டமிட்டன. ஆதவனின் ஒளியையே மறைத்து விடும் அளவு அதிக எண்ணிக்கையில் பறந்தன. பெரும் போர்,  தோற்கப் போகும் தைத்யர்கள் மடிந்து விழுவர் என்று மாமிச பக்ஷிகளான அவை எண்ணியதோ.  இரண்டாவது துர் நிமித்தம்.

குதிரைகளும், யானைகளும், ஸூரியனின் ஒளி குறையவும் தடுமாறின. ஏற்கனவே புழுதியால் கண்கள் பாதிக்கப் பட்டவை, உள்ளுணர்வால் அஸ்தமிக்கும் நேரம் ஆகவில்லையே என்று நினைத்தோ, குடைகளும், த்வஜங்களும் காற்றின் போக்கை மாற்றி விட்டதால் இயற்கையின் போக்கில் மாற்றங்கள் வந்து விட்டனவா என்றும் மயங்கின போலும்.  இது மூன்றாவது தடை.

இயல்பான தங்கள் விஷ வாயுவால், சுற்றுப் புறத்தையே பயங்கரமாக ஆக்கியபடி தாரகனின் படைகளுடன் சர்ப்பங்கள் மலையிலிருந்து உருண்டு விழும் பாறைகள் போல வந்து விழுந்தன.  காற்றினால் அவதியுற்ற தேவ படையினரும், விலங்குகளும், திடுமென வந்த  தீயின் நாக்குகள்  தங்கள் மேல் பட்டது போல உணர்ந்தனர்.  இது நாலாவது தடை.

ஆதவனைச் சுற்றி கரு வளையம் தெரிந்தது. இதுவும் ஒரு உத்பாதம் வரப் போகும்  கெடுதலை அறிவிக்கும் என்பர்.  இது ஐந்தாவது சகுனத் தடை.

இயற்கைக்கு மாறாக ஆதவனின் ஒளி மண்டலத்தில் கரு வளையம் தோன்றியதைக் கண்ட குள்ள நரிகள் ஆதவனை நோக்கிய முகத்துடன் பயங்கரமாக ஊளையிட்டன.   இப்படி விலங்குகள் ஊளையிடுவதும் அபசகுனமாக சொல்லப் படுகிறது. ஆறாவது, ஏழாவது தடைகள்.

பகல் வேளையிலேயே தாரா கணங்கள் வேகமாக வந்து விழுந்தன. தாரகனின் சேனையைச் சுற்றி  நாலா புறமும் விழுந்தன.  வரும் கெடுதலைச் சொல்லும் இதுவும் உத்பாதம் எனப்படும். இது எட்டாவது.  மேகமே இன்றி மின்னல்கள் தென் பட்டன.  பளீரென்ற ஒளிக் கற்றைகளுடன் மின்னல்கள் மழைக் காலத்தில் நீருண்ட மேகங்கள் நிறைந்திருக்கும் சமயங்களில் தோன்றுவது இயல்பு.  இதுவும் ஒரு கெடுதலே.  மின்னல் அகாலத்தில் தோன்றியதே ஒரு உத்பாதம், கீழ் நோக்கி பாய்வது போல தென் பட்டதும் இயல்பாக இல்லாததால் இவை ஒன்பதாவது, பத்தாவது சகுனத் தடைகள், தாரகனின் தோல்வியை குறிக்கின்றன  என  ஊகித்தனர். 

அந்த சமயம் ஆகாயத்தில் மேகங்கள் எதுவுமில்லாமல் நிர்மலமாக இருந்தது திடுமென பல கழுதைகள் ஓலமிடுவது போல ஆரவாரத்துடன் கற்கள் விழுவது போலவும், நெருப்புத் துண்டுகள் போலவும்  மழை பெய்யலாயிற்று.  நீரில்  ரத்தம் தோய்ந்த உடல் பாகங்கள், எலும்புத் துண்டுகளுடன்   தகிக்கும் தணல் போல எங்கிருந்து வருகிறது என்பதே தெரியாமல் மழை நீருடன் கலந்து விழுந்தன.  இது பதினொன்றாவது.

ரத்தம் தோய்ந்த (சிவந்த அல்லது கலங்கிய நீர்) எலும்புகள்  போல கனமான நீர் தாரைகளுடன்  மழை  என்பது   (சிலேடையான இரு பொருளுடைய பதங்கள் ) பன்னிரெண்டாவது.

கழுதையின் குரல் போன்ற மழை ஓசை  என்றது பதின் மூன்றாவது உத்பாதம்.

மலை முகடுகளில் வீசி அடித்த மழை கர்ஜனையாக கேட்டது. மலையின்  குகைகளில் எதிரொலித்து மலை சிகரங்கள் பெயர்ந்து விழுவது போன்ற ப்ரமையை அளித்தன. காதுகள் கிழிந்து விடும் போன்ற பேரிரைச்சல்.  இது பதினாலாவது உத்பாதம்.

தாரகனின் படை நடுவில் கடையப் பட்ட கடல் போல கொந்தளிக்கலாயிற்று. பூ கம்பம் – பூமி ஆட்டம் கண்டது.  பெரிய மரங்கள் ஆடுவது போல பெரிய யானைகள் ஆடி விழுந்தன. குதிரைகள் தடுமாறின. படை வீர்கள் மரங்கள் சாய்வது போல இருந்த இடத்திலேயே விழுந்தனர்.  இது பதினைந்தாவது.

முகத்தை தூக்கி ஆதவனைக் கண்ட அசுரர்கள் என்ன நடக்கிறது என்பது புரியாமல், உரத்த குரலில் அழ ஆரம்பித்தனர். ஒருவரையொருவர் கருணையுடன் பார்த்தபடி  ஊர் திரும்பினர்.  பதினாறாவது உத்பாதம்.

தாரகாசுரன் அவர்களைத் தடுத்து, திரும்ப  யுத்த களத்திற்கே செல்லப் பணித்தான்.  வினாச காலே விபரீத புத்தி: என்பது இது தான். சகுனங்கள் சாதகமாக இல்லை என்பதை பொருட் படுத்தாமல் கோபித்தான். எடுத்த காரியத்தை எப்பாடு பட்டாலும் தொடர்வதே வீரம் என்றான். 

ஆலோசகர்களான மந்திரிகள் சந்தேகப் பட்டனர். இந்த அளவு விபரீதமான சகுனங்கள் நல்லதல்லவே என நினைத்தாலும் ஆத்திரத்தால் அறிவை இழந்தவன் போல தடுப்பவனை நல்வழி படுத்த முடியாது என்பதால் உடன் யுத்த களம் திரும்பினர்.  கண் மூடித் தனமான ஆத்திரம்.  அத்துடன் ஆணையிடுகிறான்.  இந்த சமயம் அவனுக்கு செய்யும் நல் உபதேசம் வீணே.

எதிர் காற்று வீசி அடித்து பொன் மயமான தாரகாசுரனுடைய குடை விழுந்தது. பெரிய சுவர்ண பாத்திரம் போன்ற அது தலை கீழாக விழுந்ததைக் காண, பின்னால் யுத்த முடிவில் யமன் பூமிக்கு பாரணை- உபவாசம் முடிந்து செய்யும் உணவு- அனுப்ப ஏதுவாக இருக்கும் என்று கவியின் கல்பனை.

அசுரனுடைய மௌளி- கிரீடம் பின்னால் தலையே விழப் போகிறது என உணர்ந்தது போல,  அதில் பதித்திருந்த உயர் மணிகளை உதிர்த்தது போலவும்,  அவை விழுவது கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் விழுவது போலவும் இருந்த தாக கவியின் கற்பனை.  மகுடம் விழுவது நல்லதல்ல, தோல்விக்கு அறிகுறி என்பதால் வருத்தப் பட்டு கண்ணீர் சிந்துவதாக காவ்ய அலங்காரம்.

கழுகுகளை துரத்தினாலும் அவை பின் தொடர்ந்தன.  யுத்தத்தில் தாரக படையினர் மாள்வார்கள், நல்ல உணவு என்று நினத்தோ, அவை அகலுவதாக இல்லை.

த்வஜங்களின் நடுவில் திட்டு திட்டாக  கருமையாக ஏதோ வரைந்தது போல காணப்பட்டன.  படம் விரித்து ஆடும் சர்ப்பங்களுக்கு இணையாக அவை ஆடும் சமயம் ரத்னங்களும்  அவைகளின்  முகங்கள் நடுவில் கருமையாக தெரிவது போலவும் இருந்ததாக கவியின்  வர்ணனை.

படையின் ஒழுங்கு கலைந்ததாலோ,  காற்று வேகமாக வீசியதாலோ, ரதத்தில் பூட்டியிருந்த குதிரைகளின் பிடரி மயிர் பின் பக்கமாக விசிறி போல பறந்தன. செந்நிற கேசம், அக்னி ஜ்வாலை போல காணப்பட்டன.  இதுவும் கவியின் வர்ணனையே.

இந்த அப சகுனங்களால் சற்றும் பாதிக்கப் படாமல் தாரகாசுரன் முன்னேறினான். அந்த சமயம் அச‌ரீரி வாக்கு கேட்டது. ‘ ஹே! மதாந்த! புஜ பலத்தால் கர்வம் கொண்டு யாரிடம் போர் என்பதை மறக்காதே. இந்திராதி தேவர்களை தலைமை தாங்குபவன் புராரியின் மகன் என்பதை எண்ணி போருக்கு செல்வதை நிறுத்து’

குஹன்- மகேஸ்வரனின் மகன் பிறந்து ஆறு நாட்களே ஆகின்றன. இருட்டை கிழித்துக் கொண்டு வரும் ஒளி போல இருக்கிறான். அவனை எதிர் கொள்வது உனக்கு நல்லதல்ல.  இந்த குமாரனுடன் உனக்கு என்ன த்வேஷம்?  வானத்தை தொட்டுவிடும் போல இருந்த க்ரௌஞ்ச மலையின் நூறு சிகரங்களுடன் அதன் மலைச் சாரல்களுடன் பிளந்து விட்டான்.  அவன் பாணம் அந்த அளவு கூர்மையானது, குறி தவறாதது. அவனுடன் மோதுவது உனக்கு நன்மையும் அல்ல, உசிதமும் அல்ல.’

 ஜமதக்னி மகன் பரசுராமர் யாரிடம் தனுர் வேதம் கற்றாரோ, எதிர்த்த அரச குலங்களை அழித்து, அவர்கள் ரத்தம் நிறைந்த குளத்தில் தர்ப்பணம் செய்தாரோ அவருக்கு உபதேசம் செய்தவரே,  பரமேஸ்வரன் தான். அந்த பரசுராமரே கூட, தற்சமயம் அவருடைய குமாரன் குஹனோடு மோத மாட்டார்.  கர்வப் படாதே, உன் பலம் அவருக்கு முன் ஒன்றுமில்லை.  குஹனிடம் விரோதம் வேண்டாம்’

நான் யுத்த பூமியிலிருந்து திரும்பி போனால் மட்டும் விடுவாரா, என்னை வதம் செய்ய மாட்டார் என்று என்ன நிச்சயம்? என்று கேட்பாயோ,  புராரி மகன் கருணை மிக்கவன். அவனை சரணடைந்து நீண்ட காலம் வாழ்வாய். அவன் ஜகத் சுவீரன், உலகிலேயே ஏக வீரன். அதில் தான் உன் நன்மை உள்ளது.  அவன் கையில் உள்ளது உயர்ந்த சக்தி ஆயுதம், அதற்கு பலியாகாதே.  சரணடைந்தவனை காப்பவன் அவன்.

இதைக் கேட்ட பின்னும் தாரகன் பின் வாங்குவதாக இல்லை. மூவுலகையும் என் பலத்தால் ஆட்டம் காண வைத்தவன் நான்,  இச்சிறுவனுடைய சக்தி ஆயுதம் எம்மாத்திரம் என நினைத்து உரத்த குரலில் பதில் இறுத்தான்.

 ஆகாயத்தில் மறைந்து அசரீரியாக உபதேசம் செய்பவர்களே, கேளுங்கள். நீங்கள் என்ன சொல்வது?  தேவர்கள் அனைவரும் கேளுங்கள்.  பிறந்து ஆறே நாளான  ஸ்மராரி மகன் உங்களுடன் இருப்பதால் புதிய பலம் பெற்று விட்டீர்களோ, இங்கு எதிரியாக நிற்கும் எங்களிடம் அடி பட்டு ஓடி ஒளிந்ததை மறந்து விட்டீர்களா? அந்த சமயம் , உடல் முழுவதும் காயங்களுடன் தப்பி ஓடினீர்களே,  அதே கதி தான் இப்பொழுதும் வரப் போகிறது, நினைவு இருக்கட்டும். என்றான்.

ஹே தேவர்களே! அந்த சிறுவன் உங்களுடன் சேர்ந்ததால் பரிதாபமாக வாழ் நாள் முழுவதும் துன்பம் அனுபவிக்கப் போகிறான் என்பது நிச்சயம். அல்லது  சிவ குமாரன் என்பதால்  பாலனாக இருப்பவன் உடனே தபஸ்வியாக ஆவான்.  திருடனுடன் சேர்ந்தால் என்றும் திருடனாகவே அறியப் படுவான் என்பது போல. அல்லது வீரனானால் முதலில் உங்களையே அழிப்பான். அதனால் உங்கள் அனைவரையும் அழித்தபின் அவனையும் ஒரு கை பார்ப்பேன் என்றான்.

இப்படி க்ரோதத்துடன் தன் பலத்தின் பெருமையில் பேசியவனிடம் பயந்து தேவர்கள் வெகு தூரம் விலகிச் சென்றனர்.  அவனிடம் பயங்கரமான வாள் இருக்கிறது.  அது ஒன்றே போதுமானது. நம்மை அடியோடு அழிக்க.  ஒருவரையொருவர் முட்டிகளால் இடித்து தள்ளிக் கொண்டு ஓடினர்.

பலமாக சிரித்த தாரகன், தன் சிறப்பான ஆயுதமான வாளை உறையிலிருந்து எடுத்து கையில் எடுத்துக் கொண்டான்.  சாரதியைப் பார்த்து, வாஸவன்-இந்திரன் இருக்குமிடம் போ என்று கட்டளையிட்டான்.   வேகமாக ஓட்டு.

மனோ வேகத்தில் ரதத்தை ஓட்டிய சாரதி, கடல் போல திரண்டிருந்த தேவ சேனைகளின் அருகில் சென்றான். வீரன், அதிலும் யுத்தம் விரும்புபவன், தன்  தோள்களின் பலத்தால் எதிரிகளை வீழ்த்தும் ஆற்றல் உடையவன்,  எதிரில் ஒழுங்காக வகுக்கப் பட்ட பெரும் சேனையைக் கண்டதும் குதூகலமாக உடல் புல்லரிக்க, உத்சாகமான போர் விளையாட்டை விளையாட தயாரானான்.  வீர்களுக்கு தங்களுக்கு சமமான வீரனைக் கண்டால் உத்சாகம் வருவது இயல்பு. அதனால் வரும் ஆனந்தம். அவர்களைப் பார்த்து ஏன் தாமதிக்கிறீர்கள், தொடங்குவோம் யுத்தம் தொடங்கட்டும், என்று அறை கூவினான்.

தாரகாசுரனின் வீரர்கள் இந்திரனின் தேவ படையினரை நெருங்கினர். தங்கள் பெயரையும் பதவியையும் சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டு விரைவாக முன்னேறினர்.  தேவர்கள் கூட்டம் நேருக்கு நேர் தாரகனுடைய பலசாலிகளான போர் வீரர்களையும், காணவே பயங்கரமாக இருந்த பெரு உருவங்களையும், ஆற்றலுடன் தன்னம்பிக்கையுடனும் இருந்தவர்கள், யார் அந்த சிவ குமாரன் என்று ஓரக் கண்ணால் பார்த்த படியே வருவதைக் கண்டு பயந்தனர்.

கார்த்திகேயன், எதிரி பலத்தையும் கவனித்துக் கொண்டான். தன் பக்ஷத்து வீரர்களின் பயத்தையும் பார்த்தான். அம்ருதம் பொழியும் தன் கடைக் கண்ணால் அனைவரையும் பார்வையாலேயே வருடி ஆட்கொண்டு பயப்பட வேண்டாம் என்று அபயம் அளித்து,  கவலையின்றி யுத்தம் செய்வோம் என்று ஆறுதலாக சொன்னான்.    அதனால் பெற்ற உத்சாகம், சக்தி தரனான குமாரன் இருக்கிறான் என்ற தைரியமும், போர் செய்ய தூண்டுதலையும் பெற்றனர்.  நமக்கும் சக்தி இருக்கிறது எதிர் நின்று போர் புரிய என்ற நம்பிக்கையுடன் கிளம்பினர்.

இரு பக்கமும் சமமான பலமும், உயர்ந்த ஆயுதங்களும் வைத்துக் கொண்டு போர் தொடங்கியது. தாரகனின் ஆஸ்தான பாடகர்கள், அவனுடைய பெருமைகளை, தீர செயல்களை பாட்டாக பாடினர்.  அதே போல தேவ சைன்யத்திலும் தங்கள் பெருமைகளையும், சாதனைகளையும் பட்டியலிட்டு பாடினர்.

லோக சம்ஹாரம் எனும் ப்ரளய காலம் போல இருந்தது. யுத்தம் செய்வதே குறியாக இருந்தவர்கள் அதன் பலா பலன்களை நினைக்கவேயில்லை.  இரு பக்ஷத்தினரும் தர்மத்தை மீறாமலே யுத்தம் தொடர்ந்தது.  தங்கள் திறமைகளை காட்டவே முயன்றனர்.  இரு பக்கமும் கடல் போன்ற சேனை, அணி வகுத்து நின்ற போர் வீரர்கள். ஒருவருக் கொருவர் சளைத்தவரில்லை என்ற மனப்பாங்கு,  கோலாஹலமான ஆரவாரமும், மலைகளின் உச்சியில் இருக்கும் பெரிய பழைய மரங்கள் விழுந்தாற் போல, கல கல  சப்தமும், காலம் என்ற அதிதியை வரவேற்கும் விதமாக ப்ரும்மாண்டமே வயிறாக அதையே கிழித்து வீசுவது போன்ற பயங்கரமான அட்டஹாஸம்.

 (இது வரை ஸ்ரீ காளிதாஸரின் குமார சம்பவம் என்ற மகா காவ்யத்தில் தேவ சேனா ப்ரயாணம் என்ற பதினைந்தாவது  அத்யாயம். )

அத்யாயம்-16

அதன் பின்  இரு பக்கமும் சம பலமும், அஸ்த்ர சஸ்திரங்களும் இருக்கவே, பயங்கரமான யுத்தம் ஆரம்பமானது.  இந்திரனும், தாரகனும் முன் நிற்க அவர்கள் படையினர்  பலவிதமாக தங்கள் திறமையை காட்டலாயினர்.    பாத சாரிகள், பாத சாரிகளான காலட்படையுடன், ரதங்களின் இருந்தவர்கள், ரதங்களின் வருபவர்களுடன், குதிரை வீரர்கள் அதேபோல, குதிரையில் வந்த வீரர்களுடன், யானை மேல் ஏறி வந்தவர்களும் தங்களுக்கு இணையான யானை மேல் வந்த வீரர்களுடன் என்று போரிட்டனர்.

இரு பக்கமும் இருந்த  வீரர்கள் பரபரப்புடன்  ஓடிக் கொண்டு இருக்க, இரு பக்கமும் நடப்பதைச் சொல்வதற்காக இருக்கும் வந்திகள் – அரண்மனையின் துதி பாடகர்கள்- (இவர்கள் தான் அன்னாட்களின் செய்தி அறிவிப்பாளர்கள்)  ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி, இன்னார் இன்ன செய்கிறான், இந்த சஸ்திரங்களோ, அஸ்திரங்களோ உடையவன்  என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். இவர்களை  வைதாலிகா:  என்பர்.  

இதன் மூலம் வீரர்கள் ஒவ்வொருவருடைய விக்ரமங்களையும் சொல்லச் சொல்ல போர் வீரர்கள்  நிதானித்து தங்கள் செயல்களை மேற் கொண்டு எடுத்துச் செல்ல வசதியாயிற்று. இரு பக்கமும் அவர்கள் யுத்தம், அதன் முறைகள் ,தங்கள் திறமை இவைகளுடன் அதே முனைப்பாக செய்யலாயினர். இதுவும் ஒரு விதத்தில் ரசிக்கத தக்கதாகவே ஆயிற்று.  யார் எந்த பக்ஷம் என்பது கூட முக்யம் இன்றி சமமான வீர்களுடன்  நேருக்கு நேர்  நடக்கும்  ஒரு போட்டி போலவே ஆயிற்று.  கவசங்கள் பிளந்து சில இடங்களில் ரத்தம் பெருகுவதும் அதை பொருட்டாக நினைக்காமல் தொடர்ந்து போரிடுவதுமாக இருந்தனர்.

புஜங்கம்- சர்ப்பங்களின் முகத்திலிருந்து ஜ்வாலை போல வெளிப் படும் பெரு மூச்சுகள் போல அவர்கள் கைகளிலிருந்து கூர்மையான பளபளக்கும் பாணங்கள்  வெளிப்பட்டன.

இரு பக்கத்து வீர்களும் திடமான சரீரம் உடையவர்கள் ஆனதால், அந்த பாணங்கள் பட்டு உதிரம் பெருகி வழிந்தாலும் கீழே விழாமல் தாக்கு பிடித்தபடி போரைத் தொடர்ந்தனர்.  வேகமாக வந்த பாணங்கள் மேலே பட்டு தெறித்து விழச் செய்தனர்.  அந்த கூர்மையான பாணங்கள் யானைகளை துளைத்து விழச் செய்தன, அவ்வளவே.  யுத்த மஹோத்ஸவம் என்று வீரர்கள் குதூகலம் அடைந்தனர்.

இடைவெளி விடாது சர மாரியாக வந்த பாணங்கள், அக்னியை ஏந்தி வருவது போல கூர்மையாகவும் ப்ரகாசமாகவும் இருந்தன.  வான வெளியில் விமானங்களில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவர்கள், அசுரர்கள், இவர்களின்  பக்ஷ பாதிகள் வேகமாக அங்கிருந்து நகர்ந்தனர்.  பாடகர்களுக்கு கழுகுகள் வட்டமடித்ததைத் தவிர பாடு பொருளே இல்லையென்றாகி விட்டது போலும்.

ஒவ்வொருவருவரும் தங்கள் காது வரை வில்லை இழுத்து முடிந்த அளவு வேகமாக அம்புகளை  ப்ரயோகம் செய்தனர்.  உதிரத்தைக் குடிக்கும் ஆவலுடன் பர பரப்பாக ஓடும் ப்ராணிகள் போல அந்த பாணங்கள் சென்றனவாம்.  யம ராஜனுடைய படர்களின் நாக்குக்கு ரண பூமியில் மரணித்து விழுந்தவர்கள் ருசிகரமான உணவானார்கள். 

சந்த்ர ஸூரியர்களின் ப்ரகாசமான சக்கரங்கள், அவர்களின் கதி செல்வது போல, அதே அளவு ப்ரகாசமாகவும், கூர்மையாகவும் இருந்த ஆயுதங்களோடு வீரர்கள் ரதங்களில் மண்டலமாக சஞ்சரித்தனர்.

நேருக்கு நேர் நின்று போரிட்டவர்கள் எதிரில் நிற்பவரின் கம்பீரமான ஆக்ருதியையும் ஆற்றலையும் உணர்ந்து சிலர் மூர்ச்சையானர்கள். சிலர் எதிர்த்து நின்றனர், சிலர் தங்கள் வீரமோ, புத்தியோ ஸ்தம்பித்து போக செய்வதறியாது நின்றனர்.  ஆஹவம்- யுத்தம் – சிலர் மல் யுத்தம் போல யுத்தமும் இவர்களுக்கு விளையாட்டு போலவே மனதுக்கு பிடித்தமானதாக இருக்கவும், இவ்வாறு திகைத்து நிற்பவர்களை அடிக்கவும் முடியாமல் ஏமாற்றமே அடைந்தனர்.  (யுத்த தர்மம் என்பதால்). இவர்கள் தனக்கு சம மான  எதிரிகளைத் தேடி ரண பூமியில் சுற்றினர்.

மல் யுத்தம் செய்பவர்கள், மதம் கொண்டவர்கள் போல புஜ பலம் உள்ளவர்களையே விரும்பினர்.  வில் அம்பு என்று ஆயுதங்கள் அவர்களுக்கு தேவையாகவும் இல்லை, அதில் ஈடுபாடும் இல்லை.  சஸ்திரங்களால் அடிபட்ட யானைகளின் முகத்திலிருந்து முத்துக்கள் சிதறின.  அப்பொழுது தான் நாற்று நடவு முடிந்த வயல்கள் போல யுத்த பூமி காணப் பட்டது.  தங்கள் புஜ பலத்தால் தங்கள் பெருமையை நிலை நாட்ட விரும்பிய வீரர்கள், கடுமையான போட்டியையே மதித்தனர்.

அங்குசத்தால் குத்தி யானைகளை கட்டுப் படுத்த வேண்டியிருந்தது.  அவைகளும் கூச்சலும் ஆரவாரமுமாக இருந்த போர்க் களத்தை விட்டு விலகவே விரும்பியது போல இதே காரணமாக ஓடி விட்டன.  அடிபட்ட வீரர்களின் உடல்களும், உதிரமும் சேறாக்கி வைத்திருந்த ரண பூமி, அவர்களை வேகமாக செல்ல விடாமல் திணற அடித்தன.  இதற்கிடையில் ரதங்களில் செல்வோர், எக்காளமிட்டு உரத்த குரலில் எதிரிகளை அழைத்தபடி இருந்தனர்.  தலை துண்டிக்கப் பட்ட போர் வீரர்களை குதிரைகள் சுமந்த படியே ஓடின.  ஆயுதம் இன்றி, உடல் பாகங்களும் இழந்த சிலர் பற்களால் கடித்து எதிரிகளை அழித்தனர்.

கீழே விழுந்த உடல் பாகங்கள், முகமோ, அங்கங்களோ, கழுகுகள் உடனடியாக தூக்கிச் சென்றன. குழப்பமாக யார் என்ன செய்கிறார்கள் என்பது கூட புரி படாமல் ரண களம் சடலங்களால் நிரம்பியது. காலாட் படையினர், குதிரை, யானை மேல் சென்ற வீரர்கள்,  அனைவருமே யுக முடிவில் சண்ட மாருதத்தால் தள்ளப் பட்டவர் போல இங்கும் அங்குமாக அலைக்கழிக்கப் பட்டனர்.   எதிரில் நிற்பவர் யார் என்று கூட பார்க்க நேரமின்றி அடித்துக் கொண்டனர். 

யானைகளின் நிலை பரிதாபமாயிற்று. விரட்டப் பட்டு முன்னேறி வரும் சமயம் தன் பக்கத்து வீர்களாலேயே வாளால் அல்லது ஏதோ ஆயுதத்தால் அடி பட்டன.   அந்த வீரர்களை அவை தங்கள் துதிக்கையால் தூக்கி வீசின. முக்தியோ, பூமியில் அங்க ஹீனமான வாழ்வோ அவர்களுக்கு எது விதிக்கப்பட்டதோ அதை  அந்த போர் வீரர்கள் அடைந்தனர்.  அதே சமயம் தங்கள் ஆயுதத்தால் யானைகளைத் தாக்க தயங்கியும், தவிர்க்கமுடியாமல் தாக்கி விட்டால் அதற்காக வருத்தமும் அடைந்தனர்.

கையில் திவ்யமான ஆயுதங்களுடன் குதிரையில் வந்த போர் வீரர்கள், இந்த காட்சிகளால் கலக்கம் அடைந்தனர்.   சமயோசிதமாக சிலர் யானைகளின் துதிக்கை வழியாகவே மேலே அமர்ந்து பாதுகாப்பாக ஆயினர். உடனே எதிர் பக்ஷத்து வீரர்கள் தந்தங்களை வேரோடு பிடுங்கி விட்டனர்.

குதிரை படையினர், எதிரி பக்ஷத்து குதிரைகளை தாக்கினர். அவை விழுந்தாலும் அதிகமாக கவலைப் படவில்லை. பல வீரர்கள் திடமாக குதிரையின் முதுகில் கட்டப் பட்ட ஆசனங்களில் அமர்ந்த படியே யுத்த வேகத்தில் தலை துண்டிக்கப் பட்டவர்களாக அதன் மேலேயே உடல் தங்கி விட  விழுந்தோம் என்ற அபவாதம் இன்றி பிழைத்தனர்.  தூக்கிய கையில் வாளுடன் பார்த்தவர்கள் உயிருள்ளவனா இல்லையா என்ற ப்ரமையை அடைந்தனர்.  அருகில் இருந்த சிலர் பார்த்து கீழே விழச் செய்தாலும், குதிரைகள் அருகில் கண்ணீர் வடித்தபடி அருகிலேயே நின்றன.  அதுவே தன் மேல் அடிபட்டு விழுந்தாலும் மூர்ச்சையாகாமல் எழுந்து போரில் கலந்து கொண்டன.

பூமியில் விழுந்தாலும் உடனடியாக எழுந்து நின்று பல குதிரை வீரர்கள் போரிடவே முயன்றனர்.  அவைகளும் தங்கள் ஜாதி குதிரைகளுடன் முட்டிக் கொண்டன.

ரதங்களில் வந்தவர்கள் நிலையும் அதுவே. உயிருடன் இருக்கிறார்களா என்பதே தெரியாமல் தான் பரஸ்பரம் அடித்துக் கொண்டனர்.  கைகளில் வில்லும் அம்பும் ஏந்தியபடியே பலர் உயிர் துறந்திருந்தார்கள்.  ஆனால் அடிபட்டவர்களை அடிப்பதில்லை என்ற யுத்த தர்மம் முழுவதுமாக பாலிக்கப் பட்டது. தேவனோ, அசுரனோ, யுத்த களத்தில்  விழுந்தவன், அடித்தவனும், அடிபட்டவனும் சுவர்க லோகத்தில் சந்தித்தித்துக் கொண்டார்களோ, அங்கு அப்சரஸ்களின் உபசாரத்தால் மகிழ்ந்து இருந்தனரோ எனும் சந்தேகம் வருவது நியாயமே.  

இவ்வாறு தேவர்கள் த்வேஷியான தாரகனின் சைன்யங்களும், தங்கள் சைன்யத்தில் ஏராளமான யானைகள், குதிரைகள், பாத சாரிகள்  என்பவர்களை இழந்தாலும்  யுத்தத்தை நிறுத்தவில்லை.

(இது வரை ஸ்ரீ காளிதாஸரின் குமார சம்பவம் என்ற மகா காவ்யத்தில் தேவ சேனா ப்ரயாணம் என்ற பதினாறாவது  அத்யாயம். )

அத்யாயம்-17

தாரகாசுரன் நேர் எதிரின் வந்து நிற்கவும், இந்திரன் முதலான தேவர்களும் தாங்களும் உத்சாகம் பெற்றவர்களாக, யுத்தம் செய்யும் ஆவல் மேலிட  எட்டு திக் பாலர்களும் உடன் வர சங்க்ராமம்- பெரும் யுத்தம் செய்ய ஆயத்தமாக புறப்பட்டனர்.   தங்கள் முயற்சியால்  மட்டும் இதை சாதிக்க முடியாது என்பதை அறிந்தவர்கள்.  பெரிய மலைகள் போல உடல் வாகு கொண்ட தேவ விரோதிகளான அசுரர்கள் இவர்களின் பதட்டத்தைக் கண்டு பலமாக சிரித்தனர்.  சரமாரியாக பாணங்களை மழையாக பொழிந்தனர்.  தேவர்கள் சைன்யமே தெரியாதபடி நாலா புறமும் பாணங்களாக நிரப்பி விட்டனர்.

அவர்களும் அதே போல தங்களை விடுவித்துக் கொண்டு கூர்மையான சக்தி வாய்ந்த பாணங்களால் பதிலடி கொடுத்தனர்.   சீறி எழும் சர்ப்பங்களை அதே வேகத்தில் கருடன் உடனடியாக கவர்ந்து செல்வது போல, அசுரர்களின் ஆயுதங்களை பொடிப் பொடியாக்கி விட்டனர்.   வான மண்டலம் முழுவதும் மறைத்திருந்த பாணங்கள், ஹவ்ய வாஹன என்ற அக்னி  கும்பலாக வைக்கப் பட்ட புல்லை பொசுக்குவது போல.

தன் பலத்தில் அசாத்ய நம்பிக்கையுடன் வந்திருந்த அசுரன் சற்று அலட்சியமாக பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தவன், திடுமென,  ரோஷத்துடன்  பயங்கரமான நாகாஸ்திரத்தை பிரயோகித்தான்.  அது  தேவ சைன்யத்தை கட்டி விட்டது.

எதிர்பாராத திடீர் தாக்குதலால், தேவ சைன்யத்தினர் மூச்சு முட்டி திகைத்தனர்.  ரண களத்திலிருந்து புற முதுகிட்டு ஓடி  சங்கரன் மகனான கார்த்திகேயனை சரணடைந்தனர்.  அவருடைய அருகில் சென்று வேண்டிய சமயம் அவருடைய  குளிர்ந்த பார்வையிலேயே  நாக பாசத்தால் பட்ட கட்டப் பட்டவர்கள் விடுபட்டார்கள். அனைவருமாக துதி செய்தனர்.

தாரகாசுரன் இதைக் கண்டான். இது என்ன, என் அமோகமான அஸ்திரத்தால் கட்டி செயலிழக்கச்  செய்த எதிரிகளை பார்வையாலேயே காப்பாற்றி விட்டானே இந்த தூர்ஜடி-மகேஸ்வரனின் ஒரு பெயர்- மகன். இனி இவர்களுடன் போர் இல்லை. நேரடியாக அந்த குமாரனுடன் போர் புரியப் போகிறேன்.  சாரதியே, என் ரதத்தை அவனுக்கு அருகில் கொண்டு செல் என்றான்.

அவ்விதமே சாரதி, ரதத்தை கார்த்திகேயனுடைய அருகில் கொண்டு போய் நிறுத்தினான்.  பெரும் ஆரவாரத்துடன், வேகமாக சமர பூமியில் கிடந்த உடைந்த உடல் பாகங்கள், ரதங்களும், ஆயுதங்களுடன்  உதிரம் வழிந்து சேறாகி கிடந்த ரண பூமியில் சக்கரங்கள் அழுந்துவதையும் சமாளித்தபடி வேகமாக ஓட்டினான்.  

ப்ரளய கால சண்ட மாருதம் போலவும், அதில் அலைகழிக்கப் பட்ட கிரி ராஜன் போலவும், கல்ப முடிவே நெருங்கி விட்டது போலவும் மகா பயங்கரமாக வந்த அசுர ராஜன், ரௌத்ரமான அவன் உருவத்தைக் கண்டதும் தேவ சைன்யத்தினர்  பயத்தால்  வேர்வை பெருக நடு நடுங்கி விட்டனர்.  ரதத்தைக் கண்டே கவலைக் கொண்டவர், நேரடியாக எதிரில் கண்டதும் சோகமே உருவாக ஆயினர்.

தாரகாசுரன் யாரையும் லட்சியம் செய்யாமல் நேரடியாக கார்த்திகேயன் அருகில் சென்றான்.  பெரிய வில்லும், அம்பையும் கையிலேந்தி, போர் புரிவதே குதூகலமாக ஏதோ விளையாட்டு போட்டியை எதிர் கொள்பவன்  போல அட்டகாசமாக பேசினான்.

ரே! சம்புவின் தவப் புதல்வனே!  சொல், மூவுலக நாயகர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இந்த தேவர்களுக்காக வந்து நிற்கிறாயே, உன் ஆயுதங்களை எடுத்து ப்ரயோகம் செய்.  வீணாக தோள் தட்டி வீரன் என்று சொல்லிக் கொள்ளாதே.  பாலகன், கோமளமான புஜங்களும், உடலும்,  இந்த செயலுக்கு சற்றும் பொருத்தமாகவே இல்லையே.  சின்னஞ் சிறுவன் பாவம். சுமக்க முடியாத பெரும் பாரத்தை சுமந்து நிற்பவன் போல காண்கிறேன்.  என் வாளோ, மற்ற அஸ்த்ர சஸ்திரங்களோ உன்னிடம் நான் எடுக்கப் போவதில்லை. அவைகளால் என்ன பயன்?

கிரீச, கௌரி இவர்களின் மகன். எதற்காக என் சரங்களால் அடிபட்டு மடிய விரும்புகிறாய். மகனே, நீண்ட ஆயுளுடன்  பெற்றோருக்கு ஆதரவாக இரு.  இந்த போர் முனையில் இருந்து விலகு. தாய் மடியில் இருக்க வேண்டிய பாலகன், அதைச் செய். அல்லது யோசித்து பார். ஜம்பனை அடித்ததாக சொல்லிக் கொள்ளும் இந்த இந்திரனை விட்டு என் பக்ஷத்துக்கு வா.  ஏற்கனவே இந்த கடக்க முடியாத யுத்தம் என்ற கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறான். உன்னையும் மூழ்கடிப்பான்.  அவன்  கடலைக் கடக்க வைத்திருப்பது கல்லால் ஆன படகு. அது மூழ்கத்தான் போகிறது.  உன்னையும் சேர்த்து மூழ்குவான்.  அதனால், மகனே, போ, உன் பெற்றோரிடமே போ. உயிரைக் காப்பாற்றிக் கொள்.

தாரகனின் தற் பெருமையைக் கேட்ட குமாரன் பதில் சொன்னான்.  நீ பாலகன், உன்னால் யுத்தம் செய்ய முடியாது, போ என்று அலட்சியமாக பேசியதைக் கேட்டு, அதற்கு பதில் சொல்வது போல தன் சக்தி           ஆயுதத்தை கண்ணால் பார்த்தான். ‘தைத்யாதி ராஜனே!  நீ சொன்னது சரியே. கர்வத்துடன் சொன்னாய். அது உனக்கே தகும். உன் பலத்தை நான் பார்த்து விட்டேன்.  உன் புஜ பலம் பராக்ரமம் அனைத்தையும் அறிந்து கொண்டேன்.   உன் ஆயுதங்களை எடுத்துக் கொள். நேருக்கு நேர் நாமிருவரும் மோதிப் பார்ப்போம். உன் வில்லையும் அம்பையும் தயார் செய்து கொள்.

தாரகன் கோபத்தில் உதடுகள் துடிக்க, திரிபுராரி புத்ரன் என்பதையும் மறந்தான். யுத்தம் செய்ய தயாராக இருக்கிறாய் போலும். உன் புஜ பலத்தில் அவ்வளவு நம்பிக்கையா?  என் பாணங்களைத் தாங்குவாயோ, என் எதிரில் நிற்க மாட்டாமல்  பலர்  புறமுதுகிட்டு ஓடியிருக்கிறார்கள்.  சிறு பிள்ளைத் தனமாக நீ பேசினாலும் நான் எப்படி ஏற்பேன். சமமானவரோடு தான் யுத்தம் செய்ய வேண்டும்.  உன்னால் முடியாது, விலகு. என்றான்.

குமாரன் கார்த்திகேயன் தன் வில்லில் பயங்கரமான அம்பை பூட்டிய பொழுது, சிறுவனானாலும் ஏற்பாடோடு வந்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்ட தாரகன்,  தானும்  தன் வில்லில் அஸ்திரங்களைப் பூட்டி குமாரனை அடித்தான்.  இது வரை எவரும் எதிர் கொண்டு பதிலடி கொடுத்ததில்லை என்பதால்,  தன் சிறப்பான ஆயுதங்களையே பயங்கரமான புஜங்கங்கள்- சர்ப்பங்கள் போல சீறிப் பாயும் அம்புகளையே பிரயோகித்தான்,

காது வரை வில்லின் நாணை  இழுத்து தைத்யன் விட்ட அம்பு. திசைகளில் பரவும் போதே பயங்கரமான ஓசையும் கொண்டதாக இருந்தது. கணக்கில்லாத அம்புகள் வில்லிலிருந்து தொடுக்கப் பட்டு இடை விடாமல் வெளி வந்து தீப்பொறி பறக்க, பல விதமான கிரணங்களாக வலை விரித்தாற் போல தேவ சைன்யமே அதனடியில் மறைந்து விட்டது.   அசுரனின் பக்ஷத்தினரே அந்த ஒளி வளையத்தில் அகப்பட்டு கொண்டவர்களாக குமாரன் கார்த்திக்கேயனையே கூட காணாமல், அவன் வெளியேறி விட்டான் போலும் என நினைத்து விட்டனர்.   குமாரன் எங்கே என்று பரஸ்பரம் வினவினர்.  அனைவரையும் பயம் ஆட்கொண்டது. தாரகனோ நகைத்தான். சிறுவன், வீணாக தான் வீரன் எனக் காட்டிக் கொண்டான். பயந்து ஓடி விட்டான் என்றான்.  திடுமென வாயவ்யம் என்ற அஸ்திரத்தை பிரயோகித்தான்.

அந்த அஸ்திரத்தை தொடுத்த மாத்திரத்தில், யுகாந்த காலமே வந்து விட்டது போல தோற்றமளித்தது.  மனிதர்கள், பஞ்ச பூதங்களால் ஆன உயிரினங்கள் அனைத்தும்,  பயங்கரமான சத்தம், பெரும் கோஷமாக வருவதைக் கேட்டனர்.   தூசி படலம் எழுந்து வானத்தை மறைத்து, ஸூரியனுடைய கிரணங்களையும் மறைத்து விட்டது.  எங்கும் காற்றின் கோர விளையாட்டாகவே இருந்தது.

தேவ சைன்யத்தினரின், மல்லிகை மலர் போன்ற வெண்மையான குடைகள், சாமரங்களுடன் இருந்த சைன்யத்தினர் பிடியிலிருந்து விடுபட்டு வானத்தில் பறந்தன. முன் கண்டறியாத வாயுவின் வேகம். தூசியின் பின் புலத்தின் வெண் குடைகளும் சாமரங்களும் வானத்தில் பறக்கும் கல ஹம்ஸங்கள் போல இருந்தன.  தேவ சைன்யத்தினரின் கொடிகளும் அதே போல வெண்ணிறமானவை.  சுவர்க நதியில் பெருகி வரும் நீரில் விழுந்த மலர்ந்த மல்லிகை போன்றே, வான வெளியில் மிதந்தன. 

தேவ சைன்யத்தின் மகா கஜங்கள், நூற்றுக் கணக்கானவை, முன் ஒரு சமயம் இந்திரன்  இறக்கைகளுடன் இருந்த மலைகளின் இறக்கைகளை வெட்டியதும், அவைகள்  விழுந்ததையும் நினைவுறுத்தின.  பெரிய ரதங்கள், ரத ராஜா எனபடும் விசாலமான ரதங்கள், அதில் பூட்டியிருந்த குதிரைகள் விழவும் தாங்களும் இழுத்துச் செல்லப் பட்டன.  சாரதிகள் இன்றி ஓடிக் கொண்டிருந்த ரதங்கள் பூமியில் நதி ப்ரவாகத்தில் அடித்துச் செல்லப் பட்டன.

புயல் காற்றில் அகப்பட்டுக் கொண்டவை போல குதிரை வீரர்கள் வழி தடுமாறி தங்கள் ஆயுதங்களை எடுக்க முடியாமல் பூமியில் விழுந்தனர்.  காலாட் படைகள் பற்றி என்ன சொல்ல. அவர்கள் கையில் வைத்திருந்த ஆயுதங்கள் தானே பறந்தன.  காற்றினால் தள்ளிச் செல்லப் பட்டு, வெகு தூரம் சென்றவர்கள், வானத்திலிருந்து பூமியில் விழுந்தன.

இந்த நிலையில், ப்ரும்மாவை முன்னிட்ட தேவர்கள் முழுவதும் தைத்யேஸ்வரனின் முற்றுகையை எதிர் கொள்ள மாட்டாமல் திணறியதைக் கண்ட தேவன் கார்த்திகேயன் பவனாஸ்திரம் என்பதைக் கொண்டு அந்த வாயவ்யம் என்ற அசுரனின் அஸ்திரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தார்.  உடனே சத்யத்துக்கு கட்டுப் பட்டது போல அந்த அசுரனின் ஆயுதம் தன் வேகத்தை இழக்கவும், தேவ சைன்யம் தன் நிலையை அடைந்தது.

அதைக் கண்ட அசுர ராஜன், பெரும் கோபத்துடன் அடுத்த நொடியே தஹனம் என்ற அக்னி மயமான அஸ்திரத்தை பிரயோகித்தான்.  அவன் கோபமே அக்னியாக வெளிப்பட்டது போல.  அந்த அஸ்திரம் கிளப்பிய புகை, கரு நிற  மண்டலங்களாக வானத்தை நிரப்பியது. மழை கால மேகம் போல தோற்றம் ஆனால், வெப்பத்தையும், கருமையான நிறத்தால் ஸூரியனை மறைத்து இருட்டையும் கொண்டு வந்தது போல எங்கும் இருள் பரவியது.  நீல உத்பலம் போலவோ, மழைக் கால மேகம் போலவோ ப்ரபஞ்சமே நீல நிறம் கொண்டதாக ஆயிற்று.

நீல மேகத்தையும், நிர்மலமான வானத்தையும் கண்டு ராஜ ஹம்ஸங்கள் மகிழ்ந்தன. மழைக்கு முன்னதான குளிர்ந்த சீதோஷ்ணம் அவைகளுக்கு பிடித்தமானது. ஆங்காங்கு இருந்த குளங்களை நோக்கி சென்றன.

தேவர்களும், சைன்யத்தைச் சேர்ந்தவர்களும் ப்ரளய காலத்தை நினைவுறுத்தும்  அந்த வெப்பத்தில் திணறினர்.  ஜ்வாலையாக, தீயின் பிழம்புகள், மேல் நோக்கி உயர்ந்து உயர்ந்து போவது போல இருக்க, கபிலன்- நிறம் – கரு நீல நிறம், கபிலர்- முனிவர் – போல வான வெளி நீலமாக ஆயிற்று. கண் முன்னால் தீயின் நாக்குகள் காணவே கண்கள் கூசின.  எந்த வித இடையூறும் இன்றி தன் பல் கரங்களால் அக்னி தேவன் விஸ்வத்தையே அணைத்துக் கொள்வது போல பரவி, மேகங்கள் போல இருந்த புகை மண்டலங்களும் மேலும் பயங்கரமாக காட்சியளிக்க, தங்கள் வாழ்வு முடிந்து விட்டது போலும் என் உயிரினங்கள் அனைத்தும் மயங்கின.

எந்த வித இடையூறுமின்றி வேகமாக கொழுந்து விட்டு பரவிய தீயின் நாக்குகள் மழை தாரை போல அகிலமெங்கும் பரவி அதனுடன் புகை மண்டலமும் வான மண்டலத்தையே மறைத்தபடி, கரு மேகங்களின் இடையில் பளிச்சிடும் மின்னல் போலவும், இடி போன்ற ஓசையுடனும் இருந்தது. பயத்தால் முகம் வெளிற, தேவ சைன்யத்தினர், சிவ குமாரன், கார்திகேயனை சரணடைந்தனர்.  இதற்குள் நிலைமையை கண்டு தானாகவே  கார்த்திகேயன் வருணாஸ்திரம் என்பதை பிரயோகித்து விட்டு,  மென் முறுவலுடன்  தேவர்களை பார்த்து அவர்களை ஆஸ்வாசம் அடையச் செய்து விட்டான்.

நீரின் அதிபதியான வருணனின்  அஸ்திரம் உடனடியாக அந்த தீயின் அதனுடன் எழுந்த புகை மண்டலங்கள் இவைகளை விலக்கி விட்டு தன் கரு மேகங்களால் அண்ட சரா சரங்களையும் குளிர்வித்துக் கொண்டு மூவுலகையும் காத்தது. மலை முகடுகளில் இருந்து வேகமாக விழுந்த மழை நீர் ப்ரவாஹமாக ஓடி புவனமெங்கும் பரவியது.  இயல்பான மின்னல், அதனுடன் கர்ஜித்த  மேகம் இவற்றை தேவ சைன்யம் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.  மாலைகள் போல அடுக்கடுக்காக மேகங்கள் வானத்தில் அலைந்தன. அதனால் இருண்டு விட்டது போல இருந்தாலும், வானத்தில் வருணாஸ்திரத்தின் ப்ரகாசம் ஒளி கூட்டியது.  தொடர்ந்து மழை தாரைகள் பெரும் தூண்கள் போல விழுந்தன.

தைத்ய ராஜன் தாரகனின் கோபம் கார்திகேயனின் மேல் திரும்பியது.  சிதறி ஓடிய தேவ சைன்யத்தை திரும்பக் கூட்டியுதும் அல்லாமல் தன் அஸ்திரங்களை பலனில்லாமல் போகச் செய்தவன் ஈசன் மகனான  அவன் தான்  என்பதால் தன் முழு கவனத்துடன் கார்திகேயனை தாக்க ஆரம்பித்தான்.  சுலபமாக தன் மாயையால் ஜயித்து விடுவோம் என்ற அவனது எண்ணம் நிறைவேற விடாமல் இவன் தடுத்து விட்டானே என்று ஆத்திரப் பட்டான்.  பராஜயம்  தோல்வி என்பதை சகிக்க முடியாத வீரனாக இதுகாறும் மதிக்கப் பட்டவன்.

இதற்குள் தேவ சைன்யம் சுதாகரித்துக் கொண்டு விட்டனர். பின் பலம் கொடுத்த தைரியத்தால்,  தாங்களும் உயர்ந்த அஸ்திரங்களை அசுர சைன்யத்தின் மேல் பிரயோகித்தனர்.  யோக சாதனைகள் செய்வோர், யோக விதிகளை கிரமமாக அனுசரித்து, படிப் படியாக, சம்சார விஷய சுகங்களை விடுவது போல அவர்களும் மனதளவில் பலம் பெற்றவர்கள் போல ஆனார்கள்.

அசுர சக்ரவர்த்தி ஆத்திரத்தில் மதியிழந்தவனாக,  ரதத்திலிருந்து இறங்கி த்ரிபுராரி மகனையே, கார்திகேயனையே குறி வைத்து அடிக்கும் எண்ணத்துடன் பயங்கரமான ஆயுதம் ஏந்தி அவர் இருந்த திக்கில் ஓடினான்.  தன்னை நோக்கி வேகமாக ஓடி வருபவனை ஈசன் மகன், கார்த்திகேயன் தூரத்திலிருந்தே பார்த்து, அவன் புஜ பலத்தையும், கோபத்தால் யுகாந்த அக்னி போல ஜொலித்தவனை ,  தன் சக்தி ஆயுதத்தை எடுத்துக் கொண்டான்.  அந்த நிலையிலும் மலர்ந்த தாமரை போன்ற முகத்தில் சிரிப்பே இருந்தது. அனேக கிரணங்களுடன் கூடிய சக்தி ஆயுதம் பலமாக அசுரேந்திரன் மார்பில் தாக்கியதும்  அவன் வீழ்ந்தான்.            

தேவ சமூகத்தினர் ஆராவாரத்துடன், மகிழ்ச்சியுடன் பெருக்கிய ஆனந்த பாஷ்பமும்,  அசுர கூட்டத்தினரின் சோகத்துடன் கூடிய கண்ணீரும் ஒன்றாக கலந்தன.

பெரிய மலையின் சிகரம் கல்பாந்த கால வாயுவினால் அடித்து தள்ளப் பட்டது போல கிடந்த அசுரனின் உடலைக் கண்டு, தேவர்கள் இது வரை பட்ட கஷ்டங்களை மறந்தனர்.  இந்திரன் முதல் அனைவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

அசுரனின் ப்ரும்மாண்ட சரீரம் விழுந்த வேகம், பூமியை ஆட்டம் காண வைத்து  அதைத் தாங்கி நின்ற சேஷ நாகங்களும் தடுமாறின. சிரமத்துடன் பூமியை சீராக நிலை நிறுத்த முயன்றன.  ஆகாய கங்கையின் ப்ரவாஹம் கல்ப வ்ருக்ஷம் பூமாரி பொழிந்தது போல கார்த்திகேயனின் சிரஸில் விழுந்தது. தாரகனின் அம்புகள் மற்றும் பல விதமான அஸ்திரங்களால்  இது வரை மிகுந்த துன்பங்களை அனுபவித்த தேவர்கள் முகம் மலர வெற்றியை ரசித்தனர்.

இந்திரனும் தன் சுவர்க அதிபதி என்ற பதவியைத் திரும்ப பெற்றான்.  உயர் மணிகளால் அலங்கரிக்கப் பட்ட முகுடத்தை அணிவித்தனர்.  மகேஸ்வரனின் புத்ரன்,  தாரகாசுரனை வதைத்து மூவுலகத்தினரையும் பெரும் கஷ்டங்களிலிருந்து விடுவித்து விட்டான் என்று எங்கும் புகழ் பரவியது. இந்திரன் தன் இழந்த பதவியை எந்த வித இடையூறும் இன்றி அடைந்தான்.

இந்த காவ்யத்திற்கு சஞ்சீவனீ என்ற உரை எழுதிய  ஆசிரியர் பெற்றோர், சகோதரன் இவர்களை நினைவு கூறுகிறார்.  தாயார் சுஹீரா, சிறந்த புத்திமானான, புத்திமான்களின் தலவராக விளங்கியவர் தந்தை ஸ்ரீ லக்ஷ்மணர் என்பவர்,   சகோதர்கள் இருவரும் மகத்தான பண்டிதர்கள்.  1570 ம் ஆண்டு அங்காத்ரி புராண வருஷம், அனங்கனின் திதி, அஜீவ வாரம், சீதா ராம கவி என்ற இதன் ஆசிரியர்,  குமாரனின் சரித்திரத்திற்கு டீகா என்ற உரையை எழுதி முடித்தார்.  கசடற கற்ற பெரியவர்கள், இதை படித்து அனுக்ரஹிக்க வேண்டுகிறேன். இதில் நல்லதை ஏற்று, குறைகளைக் களைந்து இந்த என் முயற்சியை பாராட்ட வேண்டுகின்றேன்.  காவ்யங்கள்  அதற்கான டீகா- உரையும் சேர்ந்தே ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளன.அந்த முறையில் என் முயற்சியும் சாஹித்யம் என்ற மாலையில் இடம் பெறட்டும். 

(இதுவரை ஸ்ரீ காளி தாஸரின் குமார சம்பவம் என்ற காவ்யத்தின் தாரகாசுர வதம் என்ற பதினேழாவது அத்யாயம்)

மஹா மஹோபாத்யாய கோலாசல மல்லினாதா ஸுரி அவர்களின் சஞ்சீவனி வ்யாக்யா

******************